Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT - Re-admitting Eight Villages in Vilathikulam and Ettaiyapuram in Thoothukkudi District

Published 01 June 2020

Type
Extraordinary
Gazette no.
220
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2020-06-01.Extraordinary_220_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2020

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 220] cHENNAI, MONDAY, JUNE 1, 2020 Vaikasi 19, Saarvari, Thiruvalluvar Aandu–2051

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIfICATIONS bY GOVERNMENT

வணிகவரி மற்றும் பதிவுத் துறை

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களிலிருக்கும் எட்டு கிராமங்களை 1982-ஆம் ஆண்டிற்கு முன்பு புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததைப்போல மீண்டும் புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைத்து ஆணை வெளியிடப்படுகிறது.

[அரசாணை (நிலை) எண்.89, வணிகவரி மற்றும் பதிவு(ஜி)த் துறை, 01-06-2020,

வைகாசி 19, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051]

No. II(2)/CTR/360(e-1)/2020.

பதிவுத்துறைத் தலைவர், மேலே படிக்கப்பட்ட 03-02-2020 நாளிடப்பட்ட கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகங்களிலிருக்கும் சங்கரலிங்கபுரம், கவுண்டன்பட்டி, செங்கோட்டை, பட்டிதேவன்பட்டி, வெளவால்தொத்தி, நாகலாபுரம், மேலக்கல்லூரணி மற்றும் கே.துரைச்சாமிபுரம் ஆகிய எட்டு கிராமங்களை 1982-ஆம் ஆண்டிற்கு முன்பு புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததைப்போல மீண்டும் அந்த எட்டு கிராமங்களை புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கலாம் எனத் தெரிவித்து இது தொடர்பான உரிய ஆணையினை வழங்குமாறு அரசிடம் கேட்டுக்கொண்டார்.

2. மேலும் இந்நேர்வு தொடர்பாக, பாளையங்கோட்டை மாவட்டப் பதிவாளர், தூத்துக்குடி மாவட்டப் பதிவாளர் மற்றும் திருநெல்வேலி துணைப் பதிவுத்துறைத்தலைவர் ஆகியோரின் அறிக்கைகளின் அடிப்படையில் பின்வரும் விவரங்களை பதிவுத்துறைத் தலைவர் அரசுக்குத் தெரிவித்துள்ளார்:-

(i) தூத்துக்குடி பதிவு மாவட்டத்திலுள்ள விளாத்திக்குளம் சார்பதிவாளர் அலுவலகத்துடன் கவுண்டன்பட்டி, செங்கோட்டை, பட்டிதேவன்பட்டி, வெளவால்தொத்தி, நாகலாபுரம், மேலக்கல்லூரணி மற்றும் கே.துரைச்சாமிபுரம் ஆகிய 7 கிராமங்கள் இணைந்துள்ளன. மீதமுள்ள 1 கிராமமான சங்கரலிங்கபுரம் பாளையங்கோட்டை பதிவு மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைந்துள்ளது.

(ii) விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள மொத்தம் 67 கிராமங்களில், 7 கிராமங்களை எடுத்து புதூர் சார்பதிவகத்துடன் இணைப்பதால் விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவகத்திற்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படாது. புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மொத்தம் உள்ள 21 கிராமங்களுடன் மேற்படி 7 கிராமங்கள் மற்றும் எட்டையபுரத்திலிருந்து 1 கிராமம் ஆக கூடுதல் 8 கிராமங்களை புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைப்பதால் புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறிய அளவில் வருவாய் கூடும் வாய்ப்பு உள்ளது. மேற்குறிப்பிட்ட எட்டு கிராமங்களையும் புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைப்பது பொதுமக்களுக்கு உகந்ததாக இருக்கும். இரு சார்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து இந்த 8 கிராமங்களை பிரிப்பதினால் இரு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வருவாய் அடிப்படையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படாது என்பதால் மேற்குறிப்பிட்ட 8 கிராமங்களையும் புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கலாம்.

(iii) சங்கரலிங்கபுரம் கிராமம் புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகாமையில் அமைந்துள்ளதால், இக்கிராமத்தினை பொதுமக்களின் நலன் கருதி புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கலாம்.

[ 1 ]

II-2 Ex. (220)2 TAMIL NADU GOVERNMENT GAzETTE ExTRAORDINARY (iv) மேற்குறிப்பிட்ட 8 கிராமங்களில் சராசரியாக ஆண்டுதோறும் 200 ஆவணங்களும் அதன் மூலம் ரூ.18,00,000/- வருவாயும் கிடைக்கிறது. மேற்குறிப்பிட்ட 8 கிராமங்களை புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைப்பதால் எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகங்களின் ஆவணப்பதிவு மற்றும் வருவாய் சிறிய அளவில் குறையும் போதிலும் மேற்படி வருவாய் குறைவு புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தால் ஈடு செய்யப்படும். மேற்குறிப்பிட்ட 8 கிராமங்கள் புதூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அருகிலும் போக்குவரத்திற்கு ஏதுவாகவும் உள்ளதாலும் பொது மக்கள் நலன் கருதி புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கலாம்.

(v) எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலக அதிகார வரம்பிற்குட்பட்ட கிராமமான சங்கரலிங்கபுரத்தினை புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைப்பதால், மேற்படி எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவகத்திற்கு ஏற்படும் ஆண்டு சராசரி ஆவண பதிவு குறைவு 14 மற்றும் ஆண்டு சராசரி வருவாய் வித்தியாசம் ரூ.1,86,500/- ஆகும். எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து சங்கரலிங்கபுரம் கிராமம் 25 கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால் மேற்படி கிராமம் புதூர் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

(vi) விளாத்திக்குளம் சார்பதிவாளர் அலுவலக அதிகார வரம்பிற்குட்பட்ட கிராமங்களான கவுண்டன்பட்டி, செங்கோட்டை, பட்டிதேவன்பட்டி, வெளவால்தொத்தி, நாகலாபுரம், மேலக்கல்லூரணி மற்றும் கே.துரைச்சாமிபுரம் ஆகிய 7 கிராமங்களை புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைப்பதால், விளாத்திக்குளம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஏற்படும் ஆண்டு சராசரி ஆவண பதிவு குறைவு 174 மற்றும் ஆண்டு சராசரி வருவாய் வித்தியாசம் ரூ.16,08,150/- ஆகும். விளாத்திக்குளம் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து மேற்படி 7 கிராமங்கள் 13-23 கி.மீ. தொலைவில் உள்ளன. ஆனால், புதூர் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து மேற்படி கிராமங்கள் 5 முதல் 18 கி.மீ. தொலைவில் மட்டுமே அமைந்துள்ளன.

(vii) விளாத்திக்குளம் சார்பதிவாளர் அலுவலகத்தின் ஆண்டு சராசரி ஆவண பதிவு 3,124 மற்றும் ஆண்டு சராசரி வருவாய் ரூ.4,08,59,208/- ஆகும். மேற்படி எழு கிராமங்களை புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கும் நிலையில் விளாத்திக்குளம் சார்பதிவாளர் அலுவலக ஆவண பதிவில் 5.5% குறையும். ஆனால் வருவாய் 3.9% மட்டுமே குறையும்.

(viii) மேற்குறிப்பிட்ட எட்டு கிராமங்களை எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் சார்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து பிரித்து புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைப்பதால், மேற்குறிப்பிட்ட இரு அலுவலகங்களுக்கும் வருவாய் அடிப்படையில் பெரிய அளவிளான மாற்றம் ஏற்படாது என்பதனையும், குறைவான தொலைவினை கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதியும், எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திலுள்ள சங்கரலிங்கபுரம் கிராமம் மற்றும் விளாத்திக்குளம் சார்பதிவாளர் அலுவலகத்திலுள்ள கவுண்டன்பட்டி, செங்கோட்டை, பட்டிதேவன்பட்டி, வெளவால்தொத்தி, நாகலாபுரம், மேலக்கல்லூரணி மற்றும் கே.துரைச்சாமிபுரம் ஆகிய ஏழு கிராமங்கள் உள்ளிட்ட மொத்த எட்டு கிராமங்களையும் தூத்துக்குடி பதிவு மாவட்டம் புதூர் சார்பதிவாளர் அலுவலகத்்துடன் இணைக்கலாம் என தெரிவித்து இது தொடர்பாக உரிய ஆணையினை வழங்குமாறு பதிவுத்துறைத் தலைவர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

3. மேற்படி பதிவுத்துறைத்தலைவரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து, அதனை ஏற்று, எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திலுள்ள சங்கரலிங்கபுரம் கிராமம் மற்றும் விளாத்திக்குளம் சார்பதிவாளர் அலுவலகத்திலுள்ள கவுண்டன்பட்டி, செங்கோட்டை, பட்டிதேவன்பட்டி, வெளவால்தொத்தி, நாகலாபுரம், மேலக்கல்லூரணி மற்றும் கே.துரைச்சாமிபுரம் ஆகிய ஏழு கிராமங்கள் உள்ளிட்ட கீழ்க்காணும் மொத்த எட்டு கிராமங்களையும் தூத்துக்குடி பதிவு மாவட்டம் புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கலாம் என்று அரசு தீர்மானித்து அவ்வாறே ஆணையிடுகிறது:

வ . எண் பதிவு மாவட்டம் கிராமத்தின் பெயர்
( 1 ) ( 2 ) ( 3 )
1. பாளையங்கோட்டை 21 சங்கரலிங்கபுரம்
2. தூத்துக்குடி 22 கவுண்டன்பட்டி
3. தூத்துக்குடி 07 செங்கோட்டை
4. தூத்துக்குடி 06 பட்டிதேவன்பட்டி
5. தூத்துக்குடி 24 வெளவால்தொத்தி
6. தூத்துக்குடி 25 நாகலாபுரம்
7. தூத்துக்குடி 20 மேலக்கல்லூரணி
8. தூத்துக்குடி 19 கே.துரைச்சாமிபுரம்

4. மேற்கூறப்பட்ட 8 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய பணியிடங்கள் எதுவும் தோற்றுவிக்கப்படமாட்டாது என்றும் அதனால் பகராண்மை (க்ஷீமீபீமீஜீறீஷீஹ்னீமீஸீt) மூலம் பணியிடங்களை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிலை எழவில்லை என்றும் பதிவுத்துறைத்தலைவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

நா. முருகானந்தம், அரசு முதன்மைச் செயலாளர் (முகூபொ).

TAMIL NADU GOVERNMENT GAzETTE ExTRAORDINARY 3

cOMMERcIAL TAxES AND REGISTRATION DEPARTMENT

[அரசாணை (நிலை) எண்.89, வணிகவரி மற்றும் பதிவு (ஜி)த் துறை, 01-06-2020,

வைகாசி-19, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051]

No. II(2)/CTR/360(e-2)/2020.

Under sub-section (1) of Section 5 of the Registration Act, 1908 (central Act xVI of 1908), the Governor of Tamil Nadu hereby, with effect on and from 01-06-2020 alters the limits of the Registration Sub-District of Vilaathikulam in the Registration District of Tuticorin by transferring the villages Goundanpatti, Sengottai, Pattithevanpatti, Vowalthothi, Nagalapuram, Melakalloorani and K.Duraisamypuram which form part of the Registration Sub-District of Vilaathikulam in the Registration District of Tuticorin to the Registration Sub-District of Puthur in the Registration District of Tuticorin.

Table

Sl. No. Name of the Registration Districts Name of the Villages Existing Registration Sub-District Registration Sub-District now attached
(1) (2) (3) (4) (5)
1. Tuticorin 22 Goundanpatti Vilaathikulam Puthur
2. Tuticorin 07 Sengottai Vilaathikulam Puthur
3. Tuticorin 06 Pattithevanpatti Vilaathikulam Puthur
4. Tuticorin 24 Vowalthothi Vilaathikulam Puthur
5. Tuticorin 25 Nagalapuram Vilaathikulam Puthur
6. Tuticorin 20 Melakalloorani Vilaathikulam Puthur
7. Tuticorin 19 K.Duraisamypuram Vilaathikulam Puthur

NOTIFIcATION-II

[அரசாணை (நிலை) எண்.89, வணிகவரி மற்றும் பதிவு (ஜி)த் துறை, 01-06-2020,

வைகாசி-19, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051]

No. II(2)/CTR/360(e-3)/2020.

Under sub-section (1) of Section 5 of the Registration Act, 1908 (central Act xVI of 1908), the Governor of Tamil Nadu hereby, with effect on and from 01-06-2020 alters the limits of the Registration Sub-District of Ettayapuram in the Registration District of Palayamkottai by transferring the Village Sankaralingapuram which forms part of the Registration Sub-District of Ettayapuram in the Registration District of Palayamkottai to the Registration Sub-District of Puthur in the Registration District of Tuticorin.

Table

Sl. No. Name of the Registration District Name of the Village Existing Registration Sub-District Registration Sub- District now attached
(1) (2) (3) (4) (5)
1. Palayamkottai 21 Sankaralingapuram Ettayapuram Puthur

N. MURUGANANDAM, Principal Secretary to Government (FAC).

PRINTED AND PUBLISHED BY THE cOMMISSIONER OF STATIONERY AND PRINTING, cHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 01 June 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-06-01.Extraordinary_220_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2020-06-01.Extraordinary_220_Part-II_Section-2.