| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 33] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 12, 2020 ஆடி 28, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2051
பகுதி II—பிரிவு 1 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிக்கைகள்அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண் 39, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (H1)த் துறை, நாள் 21 மார்ச் 2020.]
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் (நுகர்வோர் விவகாரங்கள் துறை), அறிவிக்கை புது தில்லி, 13 மார்ச் 2020. (நுகர்வோர் விவகாரங்கள் துறை), அறிவிக்கை புது தில்லி, 13 மார்ச் 2020.
S.O.1087(E)–1955-ஆம் ஆண்டு இன்றியமையாப் பொருட்கள் சட்டத்தின் (10/1955) 2A ஆம் பிரிவின் (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மத்திய அரசு கோவிட்-19 வைரசால் ஏற்படுகிற தொற்றுகளை தடுப்பதற்காக முகக்கவசங்களின் (அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு முகக்கவசங்கள், N 95 முகக்கவசங்கள்) மற்றும் கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிகளின் தயாரிப்பு, தரம், விநியோகம், போக்குவரத்து ஆகியவற்றை முறைப்படுத்துவதற்காக பின்வரும் ஆணையை இதனால் பிறப்பிக்கிறது, அதாவது:-
1. (1) இந்த ஆணை, 2020 ஆம் ஆண்டு இன்றியமையாப் பொருட்கள் ஆணை என்று அழைக்கப்படும்.
(2) இந்த ஆணை அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
2. 1955-ஆம் ஆண்டு இன்றியமையாப் பொருட்கள் சட்டத்தில் உள்ள அட்டவணையில், தொடர் எண் (7)-க்குப் பின்னர், பின்வரும் இனம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
''(8) முகக்கவசங்கள் (அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு முகக்கவசங்கள், N 95 முகக்கவசங்கள்) மற்றும் கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிகள்".
3. இந்த அறிவிக்கை, அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து 30-06-2020 ஆம் நாளன்று வரையிலான காலத்திற்கு செயலில் இருக்கும்.
[F.No. S-26/1/2020-ECR&E]
A.K. செளதிரி, பொருளாதார ஆலோசகர்.
தயானந்த் கட்டாரியா,தயானந்த் கட்டாரியா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்) 2 [அரசாணை (நிலை) எண் 40, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (H1)த் துறை, நாள் 24 மார்ச் 2020.]
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் (நுகர்வோர் விவகாரங்கள் துறை), அறிவிக்கை புது தில்லி, 21 மார்ச் 2020. (நுகர்வோர் விவகாரங்கள் துறை), அறிவிக்கை புது தில்லி, 21 மார்ச் 2020.
S.O.1197(E)–1955-ஆம் ஆண்டு இன்றியமையாப் பொருட்கள் சட்டத்தின் (10/1955) 3 ஆம் பிரிவு மற்றும் 2A உட்பிரிவில் வழங்கபட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மத்திய அரசு கோவிட்-19 வைரசால் ஏற்படுகிற தொற்றுகளை தடுப்பதற்காக 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு முகக்கவசங்களின், விலைகள், 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு முகக்கவசங்கள் தயாரிப்பதற்கு மூலப் பொருளாக பயன்படுத்தப்படும் உருகாத-நெய்யாத துணி மற்றும் கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி ஆகியவற்றின் விலைகளை முறைப்படுத்துவதற்காக பின்வரும் ஆணையை இதனால் பிறப்பிக்கிறது, அதாவது:-
1. (1) இந்த ஆணை, 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு முகக்கவசங்கள் உருகாத-நெய்யாத துணி மற்றும் கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி ஆகியவற்றின் விலையை நிர்ணயிப்பதற்கான ஆணை என்று அழைக்கப்படும்.
(2) இந்த ஆணை அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
2. (1) 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு முகக்கவசங்கள் தயாரிப்பதற்கு பயன்படும் உருகாத-நெய்யாத துணியின் சில்லறை விலையானது, 13-03-2020 ஆம் நாளுக்கு ஒரு மாதத்திற்கு முந்தைய நாளன்று, அதாவது 12-02-2020 அன்றுள்ளவாறான விலையை விட அதிகமாக இருக்கக்கூடாது.
(2) அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் 3 அடுக்கு முகக்கவசங்களின் சில்லறை விலையானது, 13-03-2020 ஆம் நாளுக்கு ஒரு மாதத்திற்கு முந்தைய நாளன்று, அதாவது 12-02-2020 அன்றுள்ளவாறான விலையை விட அதிகமாக அல்லது எண்ணிக்கை (Piece) ஒன்றுக்கு ரூ. 10 க்கு அதிகமாக (இவற்றில் எது குறைவானதோ) இருக்கக்கூடாது. 2 அடுக்கு முகக்கவசம் எண்ணிக்கை (Piece) ஒன்றுக்கு ரூ. 8 க்கு அதிகமாக இருக்கக்கூடாது.
(3) 200 மி.லி கொண்ட கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி பாட்டில் ஒன்றின் சில்லறை விலையானது ரூ. 100/- மேல் இருக்கக்கூடாது, மற்ற அளவிலான கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிகளின் விலை, இந்த விலைகளின் விகிதத்தின்படி நிர்ணயிக்கப்படும்.
3. இந்த அறிவிக்கை, அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து 30-06-2020 ஆம் நாளன்று வரையிலான காலத்திற்கு செயலில் இருக்கும்.
[F.No. S-26/1/2020-ECR&E]
A.K. செளதிரி, பொருளாதார ஆலோசகர்.
(ஆளுநரின் ஆணைப்படி மீண்டும் வெளியிடப்படுகிறது.)
தயானந்த் கட்டாரியா,தயானந்த் கட்டாரியா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
ந. அருள்,ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.