[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2020
[விலை : ரூ. 12.80 காசு[விலை : ரூ. 12.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 35]
சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 26, 2020 ஆவணி 10, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019 ஆம் ஆண்டு
ஜூலைத் திங்கள் 30 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 31/2019
மாநிலத்தில் மாட்டின இன பெருக்கத்தை மேம்படுத்துவதற்காக எருதுகளை
செயற்கைமுறையில் கருவூட்டல், மாட்டினங்களின் விந்தினை உண்டாக்குவதற்குகாக
மாட்டின இனப்பெருக்க காளைகளை பயன்படுத்துதல், உண்டுபண்ணுதல், உருவாக்குதல்,
சேகரித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் மாட்டினங்களின் உறைவிந்துகளை
விநியோகத்தில், மாட்டினங்களின் செயற்கையான இனப்பெருக்கப் பணிகளில்
ஈடுபடுத்துதல் ஆகியவற்றிற்காகவும், அது தொடர்பான பொருட்பாடுகளுக்காகவும்,
மாட்டின இனப்பெருக்க காளைகளை பயன்படுத்துதல் உள்ளடங்களான மாட்டின
இனப்பெருக்க நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கானதுமான சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால், பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக-
அத்தியாயம் I
முன்னுரை
குறுந்தலைப்பு மற்றும் 1 (1) இந்தச்சட்டம், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்கச் சட்டம்
தொடக்கம்.
என்று வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசு, அறிவிக்கை வாயிலாக குறித்திடலாகும் நாளன்று
நடைமுறைக்கு வரும்.
2. இந்தச் சட்டத்தில், தருவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
(அ) 'செயற்கையாக இனப்பெருக்கம் செய்தல்' அல்லது 'செயற்கைமுறை பொருள் வரையறைகள்.
கருவூட்டல்' என்பது, மாட்டின விந்தினை, கருவுறுச் செய்யும் எண்ணத்துடன்
முதிர்ச்சியடைந்த பெண்மாட்டின் உடம்பிலுள்ள கருப்பையில் வைப்பதற்கான செய்முறை
என்று பொருள்படும்;
DTP-IV-2- (T Sup)—35
12 (ஆ) 'செயற்கைமுறை கருவூட்டலாளர்' என்பது, வகுத்துரைக்கப்படலாகும் முறையில்,
மாட்டினங்களில் செயற்கைமுறை இனப்பெருக்கத்தை செய்வதற்கு தேவையான தகுதி,
திறமை மற்றும் அனுபவம் கொண்டுள்ள நபர் என்று பொருள்படும்;
(இ) செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குநர் என்பது, மாட்டினங்களின்
செயற்கைமுறை கருவூட்டல் சேவை மேற்கொள்கிற நிறுவகம், வரையறுக்கப்பட்ட கடப்பாடுடைய கூட்டாண்மை, நிறுமம், உற்பத்தி நிறுமம், நிலையம், அரசு – சாரா அமைவனம், இனப்பெருக்க கழகம், பொறுப்புக் கட்டளை, மைய அல்லது மாநில அரசுத்
துறை, கூட்டுறவு சங்கம், கால்நடை வளர்ச்சி வாரியம் அல்லது எதேனும் முகமை,
வேளாண் அல்லது கால்நடை பல்கலைக்கழகம் உள்ள உள்ளடங்களான நபர் எவரும்
என்று பொருள்படும்.
(ஈ) "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்பது, 15 ஆம் பிரிவின்படி
குறித்துரைக்கப்பட்ட மேல்முறையீட்டு அதிகார அமைப்பு என்று பொருள்படும்;
(உ) 'அதிகார அமைப்பு' என்பது, 3 ஆம் பிரிவின்படி அமர்த்தப்பட்ட மாட்டின
இனப்பெருக்க அதிகார அமைப்பு என்று பொருள்படும்;
(ஊ) 'மாட்டினம்' என்பது, பொருள் தந்து உள்ளடக்குவதாவது பசு , காளை, ஆண்மை
நீக்கப்பட்ட எருது மற்றும் எருமை ஆகும்;
(எ) 'மாட்டின இனப்பெருக்கம்' என்பது, மாட்டினங்களை, விந்து உற்பத்தி, உற்பத்தி
செய்முறை, சேகரித்து வைத்தல் மற்றும் கால்நடையின் உறைவிந்தினை விநியோகித்தல்
ஆகியவற்றிற்கு காளைகளை பயன்படுத்துதல், செயற்கைமுறை கருவூட்டல் சேவை
செய்தல் உள்ளடங்களான கால்நடைகளின் இனப்பெருக்க நடவடிக்கைகள் என்று
பொருள்படும்;
(ஏ) 'இனப்பெருக்க கொள்கை' என்பது, மாநிலத்தின் மாறுப்பட்ட
வேளாண் - தட்பவெப்ப மண்டலங்களில் பசு, காளை, ஆண்மை நீக்கப்பட்ட காளை,
எருமை ஆகியவற்றின் வேறுபட்ட இனப்பெருக்கத்தை பேணி வருவதற்காகவும்,
மேம்படுத்துவற்காகவும், அவ்வப்போது, அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட மாநில
இனப்பெருக்க கொள்கை என்று பொருள்படும்;
(ஐ) 'சான்றளிக்கப்பட்ட காளை' என்பது, விந்து உற்பத்திக்காக வகுத்துரைக்கப்பட்ட
தரத்தினை பூர்த்தி செய்துள்ள எருதுகாளை என்று பொருள்படும் மற்றும் விந்து
நிலையத்தின் பதிவுச்சான்றிதழில் அல்லது அவ்வப்போது, அதிகார அமைப்பினால்
விந்து உற்பத்திக்காக வகுத்துரைக்கப்பட்ட தரத்தில் சான்றளிக்கப்பட்ட காளை எதுவும்
சான்றளிக்கப்பட்ட காளையாக உள்ளடக்கப்பட்டிருக்கிற காளை என்று பொருள்படும்;
(ஒ) 'அரசு' என்பது, மாநில அரசு என்று பொருள்படும்;
(ஓ) 'இயற்கை முறை இனப்பெருக்கம்' என்பது, இயற்கையான சேர்க்கை
மூலம், பெண் எருதுகளை கருவுறச் செய்வதற்கான இனப்பெருக்கம் செய்யத்தக்க,
உடல்நலமுடைய எருதுகளைப் பயன்படுத்துதல் என்று பொருள்படும்;
(ஒள) 'வளாகம்' என்பது, எருதின் உறைவிந்து உற்பத்திக்காகவும், மாட்டின
செயற்கைமுறை கருவூட்டல் சேவை அளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் ஏதேனும்
நிலப்பகுதி, முற்றம், கட்டிடம் அல்லது கலம் அல்லது வாகனம் அல்லது ஏதேனும் பிற
வட்டராப்பகுதி என்று பொருள்படும்.
(க) 'வகுத்துரைக்கப்பட்ட' என்பது, இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகளால்
வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்படும்;
(ங) 'வகுத்துரைக்கப்பட்ட தரங்கள்' என்பது, அவ்வப்போது அதிகார அமைப்பினால்
வகுத்துரைக்கப்பட்ட மற்றும் பதிவுச்சான்றிதழ் நாடுவதை பின்பற்ற வேண்டிய தரங்கள்
என்று பொருள்படும், அவையாவன-
(i) வகுத்துரைக்கப்படலாகும் முறைகள் மற்றும் அளவுருக்களுக்குக்கிணங்க உறைவிந்து உற்பத்திக்காக மாட்டினங்களைப் பயன்படுத்துவதற்கு கருதியுள்ள விந்து
நிலையங்கள்,3 (ii) வகுத்துரைக்கப்படலாகும் நடைமுறைகள் மற்றும் அளவுருக்களுக்கிணங்க மாட்டின உறைவிந்து உற்பத்தி, செய்முறை செய்தல், சேகரித்து வைத்தல் மாட்டின
உறைவிந்தை விநியோகிக்க கருதியுள்ள விந்து நிலையங்கள்; மற்றும்
(iii) வகுத்துரைக்கப்படலாகும் நடைமுறைகள் மற்றும் அளவுருக்களுக்கிணங்க, செயற்கைமுறை கருவூட்டல் சேவைகள் வழங்கக் கருதியுள்ள செயற்கைமுறை கருவூட்டல்
சேவை வழங்குநர்
(ச) 'பதிவு பெற்ற கால்நடை மருத்துவத் தொழிலாற்றுநர்' என்பது, 1984 ஆம்
ஆண்டு கால்நடை மன்றச் சட்டத்தின்படி பதிவு பெற்ற கால்நடை அறிவியலில் பட்டம்
பெற்றவர் என்று பொருள்படும்;
மையச் சட்டம் 52/1984 (ஞ) 'விந்துநிலையம்' என்பது, மாட்டின உறைவிந்தினை உற்பத்தி செய்வதற்கான,
செய்முறை செய்வதற்கான, சேகரித்து வைப்பதற்கான கட்டமைப்பு வசதி இருக்கிற
வளாகம் என்று பொருள்படும்;
(ட) 'விந்து வங்கி' என்பது, மாட்டின உறைவிந்தினை சேகரித்து வைப்பதற்கும்
விநியோகம் செய்வதற்குமான கட்டமைப்பு வசதி இருக்கிற வளாகம் என்று பொருள்படும்;
(ண) 'மாநிலம்' என்பது, தமிழ்நாடு மாநிலம் என்று பொருள் படும்.
அத்தியாயம் II
அதிகார அமைப்பின் அமர்த்துகை மற்றும் செயற்பணிகள்
அதிகார அமைப்பின் 3 (1) அரசு, அறிவிக்கை வாயிலாக, இந்தச் சட்டத்தின்படி அதற்கு வழங்கப்பட்ட
அமர்த்துகை.
அதிகாரங்களை செலுத்துவதற்கும் குறித்தளிக்கப்பட்ட செயற்பணிகளைப் புரிவதற்கும்
மாட்டின இனப்பெருக்க அதிகார அமைப்பினை நியமித்தல் வேண்டும்.
(2) அதிகார அமைப்பு, இந்தச் சட்டத்தின்படி செயற்கைமுறை கருவூட்டல்
சேவை வழங்குதல், செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி நிறுவனங்களை
விசாரணை செய்யும் ஆய்வு செய்யும் நோக்கத்திற்காகவும் பிற செயற்பணிகளைப்
புரிவதற்காகவும் புகழ் பெற்ற கால்நடை நிறுவனம் எதிலும் விலங்கு
இனப்பெருக்கம் அல்லது பராமரிப்புத்துறையில் குறைந்தது பத்தாண்டுகள்
தொடர்புடைய தொழிலில் அனுபவம் பெற்ற வல்லுநர் குழுக்களை நியமித்தல் வேண்டும்.
(3) அந்த அதிகார அமைப்பு, பின்வரும் செயற்பணிகளைப் புரிதல்
வேண்டும்,அவையாவன:-
(அ) தன்னுடைய செயற்பணிகளை திறம்பட புரிவதற்கு அவசியமெனக் கருதலாகும்
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்தல் வேண்டும்.
(ஆ) இந்தச் சட்டத்தின் III ஆம் அத்தியாயத்தில் அடங்கியுள்ள வகைமுறைகளின்படி விந்து நிலையங்களை மற்றும் செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குநர்களைப் பதிவு
செய்தல் மற்றும் பதிவைப்புதுப்பித்தல்;
(இ) செயற்கைமுறை கருவூட்டல் சேவை நடைபெற்றுக் கொண்டிருத்தல்
தொடர்பான நடவடிக்கைகள் நடைபெறும் வளாகங்களில் எதனையும் ஆய்வு செய்தல்,
அளவை செய்தல் மற்றும் சோதனையிடுதல்;
(ஈ) செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குநர்களிடமிருந்து ஆண்டு
அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் பதிவுருக்கள் மற்றும் அதன் தரவுகளைப் பேணி வருதல்;
(உ) செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சி நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல்;
(ஊ) செயற்கைமுறை கருவூட்டலாளர்கள் சேவை வழங்குநர்கள் செயற்கைமுறை
கருவூட்டல் பயிற்சி நிலையங்கள் ஆகியோரின் நடவடிக்கைகள் பொறுத்த தகவல் மற்றும்
புள்ளி விவர தரவுகளை சேகரித்தல் மற்றும் பேணி வருதல்;
(எ) இயற்கைமுறை மாட்டின இனப்பெருக்கத்தை ஒழுங்குமுறைப்படுத்துதல்;
(ஏ) மாட்டின இனப்பெருக்க நடவடிக்கை தொடர்பான பொருட்பாடு எதிலும்
அரசுக்கு ஆலோசனை வழங்குதல்;
4(ஐ) பொதுவாக மாட்டின இனப்பெருக்க நடவடிக்கைகளுக்கான திட்டம் மற்றும்
செயற்திட்டத்தை நிறைவேற்றச் செய்தல் மற்றும் உள்நாட்டின பசு, காளை, ஆண்மை
நீக்கப்பட்ட காளை அல்லது எருமையின் இனப்பெருக்கங்களை பாதுகாத்தல், பேணுதல்,
இனப்பெருக்கம் செய்தல்;
(ஒ) மற்றவற்றிற்கிடையில் உள்நாட்டின இனப்பெருக்கங்களைப் பாதுகாத்தல்
சமுதாய அடிப்படையிலான செயற்திட்டம், மாட்டினத்தின் உள்நிலப்பரப்பு பொறுத்த
களநிலைமைகள் மற்றும் உள்நாட்டின இனப்பெருக்கத்திற்கான இனப்பெருக்க
சங்கங்களை நிறுவுதல்;
(ஓ) உள்நாட்டினஇனப்பெருக்கத்தை வளர்பவர்களுக்கான ஊக்க செயலமைவுத்
திட்டத்தை ஏற்படுத்த அரசுக்கு ஆலோசனை வழங்குதல்;
(ஒள) அவ்வப்போது, அரசால் வகுத்துரைக்கப்படலாகும் பிற அதிகாரங்களை
செலுத்துதல் மற்றும் பிற நடவடிக்கைகள் மற்றும் செயற்பணிகளைப்புரிதல்.
4. அதிகார அமைப்பானது, இந்தச்சட்டத்தின்படி செயற்பணிகளை ஆற்றுகையில்
அரசால் பணிக்கலாகும் அத்தகைய பணிப்புரைகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
தகவல் பெறுவதற்கு
4 (1)அதிகார அமைப்பு, இந்தச் சட்டத்திலோ அல்லது அதன்வழியாலோ அதற்கு
அதிகாரம்.
வழங்கப்பட்ட செயற்பணிகளையும் புரியும் நோக்கத்துடன் அதிகார அமைப்பு அல்லது
விந்து நிலையம் செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குதல், செயற்கைமுறை
கருவூட்டல் பயிற்சி நிலையம் அல்லது செயற்கைமுறை கருவூட்டலாளரிடமிருந்து தகவல்
எதனையும் பெறும் பொருட்டு அவசியமாகலாகும் நடவடிக்கைகள் எடுக்க அதனால்
அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவரும் அவசியமாகலாகும் நடவடிக்கைகளை
எடுக்கலாம்.
(2) அதிகார அமைப்பு, மாட்டின இனப்பெருக்கம் தொடர்பான நடவடிக்கை
எதுவும் நடைபெறும் நிறுவனம், வளாகம் எதனையும் பொறுப்பில் கொண்டுள்ள நபர்
எவருக்கும் அல்லது தன்னுடைய தெரிவின்பேரில், வகுத்துறைக்கப்படலாகும் தகவலை,
அளிப்பதற்கு அத்தகை படிவத்திலும், அத்தகைய முறையிலும் இந்தச் சட்டத்தின் மற்றும்
அதன்படி செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகளில் எதனையும் மீறுகிற எவருக்கும்
பணிப்புரைகளை வழங்கலாம்.
அத்தியாயம் III
காளைகளுக்கு சான்றளித்தல், விந்து நிலையங்கள் மற்றும் செயற்கைமுறை கருவூட்டல்
சேவை வழங்குநர்களையும் பதிவு செய்தல்
காளைகளுக்கு
5 (1) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்றும், அது முதற்கொண்டும், நிறுவகம்,
வரம்புக்குட்பட்ட கடப்பாடுடைய கூட்டாண்மை, நிறுமம், உற்பத்தி நிறுமம், நிலையம், அரசு
சாரா அமைவனம், இனப்பெருக்கத்தினர் சங்கம், பொறுப்புக் கட்டளை, மைய அல்லது
மாநில அரசுத்துறை, கூட்டுறவு சங்கம், கால்நடை வளர்ச்சி வாரியம் அல்லது முகமை
சான்றளித்தல் மற்றும் விந்து நிலையங்களைப்பதிவு செய்தல்.
உள்ளடங்கலான நபர் எவரும், அதிகார அமைப்பிடமிருந்து பதிவுச் சான்றிதழ் பெறாமல்
செயற்கைமுறை கருவூட்டலுக்கான உறை விந்தளவு உற்பத்திக்கான விந்து நிலையத்தை
நிறுவுதல் மற்றும் செயற்படுத்துதல் வேண்டும்.
(2) தற்போதுள்ள விந்து நிலையங்கள், இந்தச் சட்டத்தின் தொடக்கத்
தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் உறைவிந்து உற்பத்திக்கான சான்றிதழ்
பதிவினை வழங்குவதற்கு அதிகார அமைப்பிடம் விண்ணப்பித்தல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்றும் அது முதற்கொண்டும்,
விந்துநிலையம் எதுவும், அதிகார அமைப்பினால் விந்து உற்பத்திக்காக வகுத்துரைக்கப்பட்ட
தரமுடையதாக சான்றளிக்கப்பட்டவை அல்லாத பிற காளை எதனிடமிருந்து விந்து
உற்பத்தியை செய்தலாகாது.
(4) விந்து உற்பத்தி நிலையப்பதிவிற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும்,
வகுத்துரைக்கப்படலாகும் படிவத்திலும் முறையிலும் அதிகார அமைப்பிற்கு செய்யப்படுதல்
வேண்டும் மற்றும் அது வகுத்துரைக்கப்படலாகும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்படாத
கட்டணத்துடன் சேர்ந்து போதல் வேண்டும்.
5(5) காளையின் பதிவிற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும்
படிவத்திலும் முறையிலும் அதிகாரஅமைப்பிடம் செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அது
வகுத்துரைக்கப்படலாகும் இருநூறு ரூபாய்க்கு மேற்படாத கட்டணத்துடன் சேர்ந்து
போதல் வேண்டும்.
(6) 4 மற்றும் 5 ஆம் உட்பிரிவுகளின்படியான விண்ணப்பத்தைப்பெற்றதன்பேரில்,
அதிகார அமைப்பு, அவசியமெனக்கருதும் விசாரனையைச் செய்த பின்பு, ஒன்று
பதிவுச் சான்றிதழை வழங்கலாம் அல்லது வழங்க மறுக்கலாம். பதிவு ஒவ்வொன்றும்,
வகுத்துரைக்கப்படலாகும் படிவத்திலும் முறையிலும் மற்றும் அத்தகைய வரையுரைகள்
மற்றும் வரைக்கட்டுகளுக்கு உட்பட்டும் இருத்தல் வேண்டும் மற்றும் பதிவுச் சான்றிதழ்
வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகள் காலஅளவிற்கு செல்லத்தக்கதாகும்.
வரம்புரையாக: அதிகார அமைப்பு, பதிவுச் சான்றிதழ் வழங்க மறுப்பதற்கு முன்பு
விண்ணப்பதாரருக்கு கேட்கப்படுவதற்கு நியாயாமான வாய்ப்பு நல்குதல் வேண்டும்.
செயற்கைமுறை 6 (1) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்றும் அது முதற்கொண்டும் செயற்கை
கருவூட்டல் சேவை வழங்குநர் எவரும் அதிகார அமைப்பிடமிருந்து பதிவுச் சான்றிதழ்
பெறாமல் செயற்கைமுறை கருவூட்டல் சேவைகளை வழங்குதல் ஆகாது.
கருவூட்டல் சேவை வழங்குநரைப் பதிவு செய்தல்.
(2) இருந்து வரும் செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குநர்கள், இந்தச்
சட்டத்தின் தொடக்கத்தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் செயற்கைமுறை
கருவூட்டல் வழங்குவதற்கான பதிவுச்சான்றிதலுக்காக அதிகார அமைப்பிற்கு
விண்ணப்பித்தல் வேண்டும்.
(3) பதவிற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும்
படிவத்திலும் முறையிலும், அதிகாரஅமைப்பிற்கு செய்யப்படுதல் வேண்டும் மற்றும்
வகுத்துரைக்கப்படலாகும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேற்படாத கட்டணத்துடன் சேர்ந்து
போதல் வேண்டும்.
(4) (3) ஆம் உட்பிரிவின்படியான விண்ணப்பம் ஒன்றைப் பெற்றதன்பேரில்,
அதிகார அமைப்பு, அது அவசியமெனக் கருதும் விசாரணையைச்
செய்தபின்பு, ஒன்று பதிவுச் சான்றிதழை வழங்கலாம் அல்லது வழங்க
மறுக்கலாம். பதிவுச்சான்றிதழ் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் படிவத்திலும்,
முறையிலும் மற்றும் அத்தகைய வரையுரைகள் மற்றும் வரைக்கட்டுகளுக்கு உட்பட்டும்
இருத்தல் வேண்டும்:
வரம்புரையாக: அதிகாரஅமைப்பு, பதிவுச்சான்றிதழ் வழங்க மறுப்பதற்கு முன்பு,
விண்ணப்பதாரருக்கு கேட்கப்படுவதற்கு நியாயமான வாய்ப்பு நல்குதல் வேண்டும்.
7 (1) இந்தச் சட்டத்தின் தொடக்கத்தன்றும் அது முதற்கொண்டும், நபர் எவரும்,
செயற்கைமுறை கருவூட்டலாளராகச் செயற்படுதல் வேண்டும் மற்றும் செயற்கைமுறை
கருவூட்டல் சேவை வழங்குநர் எவருக்காகவும் தம்பணிகளை வழங்குதல் வேண்டும்,
அவர்&
செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்ப பணியாளர்களை பதிவு செய்தல்.
(அ) வகுத்துரைக்கப்படலாகும் தகுதி மற்றும் அனுபவம் பெற்றிருந்தாலன்றி,
(ஆ) வகுத்துரைக்கட்படலாகும் அங்கீகரிக்கப்பட்ட செயற்கைமுறை கருவூட்டல்
பயிற்சி நிலையங்கள் எவற்றிலிருந்தும் பயிற்சி பெற்றிருந்தாலன்றி,
(இ) விந்து நிலையம் அல்லது செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குநர் பதிவு
செய்யப்பட்டிருந்தாலன்றி,
(2) பதிவுக்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும்
படிவத்திலும் முறையிலும் அதிகார அமைப்பிற்குச் செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அது
வகுத்துரைக்கப்படலாகும் ஐந்நூறு ரூபாய்க்கு மேற்படாத கட்டணத்துடன் சேர்ந்து போதல்
வேண்டும்.
6(3) (2) ஆம் உட்பிரிவின் படியான விண்ணப்பத்தைப் பெற்றதன்பேரில், அது
அவசியமெனக் கருதும், விசாரணையைச் செய்த பின்பு, ஒன்று பதிவுச் சான்றிதழை
வழங்கலாம் அல்லது வழங்க மறுக்கலாம். பதிவுச் சான்றிதழ் ஒவ்வொன்றும்,
வகுத்துரைக்கப்படலாகும் படிவத்திலும் முறையிலும் மற்றும் அத்தகைய வரையுரைகள்
மற்றும் வரைக்கட்டுகளுக்கு உட்பட்டும் இருத்தல் வேண்டும்.
வரம்புரையாக: அதிகார அமைப்பு, பதிவுச் சான்றிதழ் வழங்க மறுப்பதற்கு முன்பு,
விண்ணப்பதாரருக்கு கேட்கப்படுவதற்கு நியாயமான வாய்ப்பு நல்குதல் வேண்டும்.
செயற்கைமுறை
8(1) ஏதேனும் நிறுவகம், வரம்புக்குட்பட்ட கடப்பாடுடைய கூட்டாண்மை,
நிறுமம், உற்பத்தி நிறுமம், நிலையம், அரசு சாரா அமைவனம், இனப்பெருக்க சங்கம்,
பொறுப்புக்கட்டளை, மைய அல்லது மாநில அரசின் துறை, கூட்டுறவுச் சங்கம், கால்நடை
கருவூட்டல் பயிற்சி
நிலையங்களுக்கு
அங்கீகாரம் வழங்குதல்.
வளர்ச்சி வாரியம் அல்லது முகமை, வேளாண் அல்லது கால்நடை பல்கலைக்கழகம்
உள்ளடங்கலான நபர் எவரும், செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சி நிலையமாக
அங்கீகாரம் வழங்குவதற்கு அதிகார அமைப்பிற்கு விண்ணப்பித்தல் வேண்டும்.
(2) (1)ஆம் உட்பிரிவிரின்படி அங்கீகாரம் வழங்குவதற்கான விண்ணப்பம்
ஒவ்வொன்றும், அதிகார அமைப்பிற்கு, வகுத்துரைக்கப்படலாகும் படிவத்திலும் முறையிலும்
செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அது வகுத்துரைக்கப்படலாகும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு
மேற்படாத கட்டணத்துடன் சேர்ந்து போதல் வேண்டும்.
(3) (2)ஆம் உட்பிரிவின்படியான விண்ணப்பத்தைப் பெற்றதன்பேரில், அதிகார
அமைப்பு, அது அவசியமெனக் கருதும் விசாரணையைச் செய்த பின்பு, ஒன்று அங்கீகாரம்
அளிக்கலாம் அல்லது அங்கீகார அளிக்க மறுக்கலாம் மற்றும் அங்கீகாரம் ஒவ்வொன்றும்
வகுத்துரைக்கப்படலாகும் படிவத்திலும் முறையிலும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும்,
வரையுரைகள் மற்றும் வரைக்கட்டுகளுக்கு உட்பட்டும் இருத்தல் வேண்டும் மற்றும் பதிவுச்
சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டு கால அளவிற்கு செல்லத்தக்கதாகும்;
வரம்புமுறையாக – அதிகார அமைப்பு பதிவுச் சான்றிதழ் அளிக்க மறுக்கும் முன்பு,
விண்ணப்பதாரருக்கு கேட்கப்படுவதற்கு நியாயமான வாய்ப்பு நல்குதல் வேண்டும்.
புதுப்பித்தல் 9 (1) இந்தச் சட்டத்தின்படி பதிவுச் சான்றிதழை அல்லது, நேர்வுக்கேற்ப, அங்கீகார
சான்றிதழை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும் அத்தகைய பதிவுச் சான்றிதழ்
அல்லது, நேர்வுக்கேற்ப, அங்கீகாரச் சான்றிதழ் கால அளவு முடிவடைந்த தேதியிலிருந்து
குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பு அளிக்கப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக- அந்த அதிகார அமைப்பு, விண்ணப்பதாரர், உரிய நேரத்தில்
புதுப்பிப்பதற்காக விண்ணப்பதிலிருந்து போதிய காரணத்தினால் தடுக்கப்பட்டிருந்தார்
என்று அந்த அதிகார அமைப்பு திருப்தியடையுமானால், அத்தகைய விண்ணப்பத்தை
அனுமதிக்கலாம்.
(2) இந்தச் சட்டத்தின் வகைமுறைகள், எந்த அளவுக்குக் கூடுமோ அந்த அளவுக்கு,
அவை பதிவுச் சான்றிதழ் அல்லது அங்கீகாரச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக
பொருந்துவது போன்றே, பதிவுச் சான்றிதழின் அல்லது அங்கீகாரச் சான்றிதழின்
புதுப்பித்தல் தொடர்பாகவும் பொருந்தும்.
10. (1) விந்து நிலையம் எதுவும் அல்லது செயற்கைமுறை கருவூட்டல் சேவை
வழங்குநர் எவரும், பதிவு பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குநர்
விந்து விற்பனையை ஒழுங்குமுறைப் படுத்துதல்.
அல்லது பதிவு பெற்ற செயற்கைமுறை கருவூட்டலாளர் அல்லது அதிகார அமைப்பினால்
அதிகாரமளிக்கப்படலாகும் நபர் அல்லது நிலையம் அல்லாத பிற நபர் எவருக்கும் உறை
விந்து விற்றலோ அல்லது விநியோகித்தலோ ஆகாது.
(2) விந்து நிலையம் எதுவும் அல்லது செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குநர்
மாநிலத்தின் இனப்பெருக்க கொள்கைக்கு முரணாக உறைவிந்துத் துளியை விற்றல்
ஆகாது.
7விதிவிலக்குகள் 11. ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது
கால்நடை பல்கலைக்கழகத்தினால் ஏதேனும் விந்து உற்பத்தி கட்டமைப்பு வசதியானது,
விந்து நிலையமானது, தம்சொந்த உபயோகத்திற்காக உள்ள விலங்குகளுக்கு மட்டுமே
விந்து துளிகளை பயன்படுத்துகிற மற்றும் அவை விந்துத்துளிகளை விற்பனை
செய்யும் அல்லது விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதிருக்கிற அல்லது வணிக
செயற்கைமுறை கருவூட்டல் ஒப்புவிப்பு பணிகள் அளிக்கும் அத்தகைய ஆராய்ச்சி
நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் எந்த அளவுக்கு கூடுமோ அந்த அளவுக்கு,
விந்து நிலையத்திற்கான பதிவுச் சான்றிதழை வைத்திருக்கும் கடமைப்பொறுப்பிலிருந்து
விலக்களிக்கப்படுதல் வேண்டும்.
இயற்கைமுறை 12. (1) இயற்கைமுறை மூலமான மாட்டின இனப்பெருக்கம், உள்நாட்டின
இனப்பெருக்கங்களுக்கு மட்டுமே வரம்பிடப்பட்டதாகும்.
(2) இயற்கைமுறை மூலமான இனப்பெருக்கத்திற்கு ஆண் எருதினை வைத்து
வாயிலாக மாட்டின இனப்பெருக்கத்திற் கான ஒழுங்குமுறை விதிகள்.
வரும் விவசாயிகள் அனைவரும் ஒன்று தம்முடைய சொந்த மந்தைக்காக அல்லது
பிற விவசாயிகளின் எருதுகளுக்கு கிடைக்கக்கூடிய சேவை முறையை செய்தற்காக,
வகுத்துரைக்கப்படலாகும் முறையில் அதிகார அமைப்பினால் அடையாளங் காணப்படும்
நபருடன் எருதினை பதிவு செய்தல் வேண்டும்.
(3) பதிவு இரண்டு ஆண்டுகள் கால அளவிற்கு இருக்கும் மற்றும் பதிவினை
புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் ஒவ்வோர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
அனுப்பப்படுதல் வேண்டும்.
(4) (2)ஆம் உட்பிரிவின்படி அடையாளங் காணப்பட்ட நபர், ஆண் எருதினையும்,
அது தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்பு நாற்பத்தைந்து நாட்களுக்குள்
இயற்கைமுறைக்காக ஆண் எருதினைப் பயன்படுத்துவதற்கான பதிவுச் சான்றிதழை
வழங்குதல் வேண்டும்.
(5) இயற்கை முறைக்காக உறுதி செய்யப்பட்ட ஆண் எருது அனைத்தும், தேசிய
பால்வள வாரியத்தின் மூலம் ஒப்புதலளிக்கப்பட்டதாக காது அடையாளக் குறி சீட்டு மூலம்
அடையாள காணப்படுதல் வேண்டும்.
(6) இனப்பெருக்கத்திற்கு முழு நலமுடையதற்கான சான்றிதழ், இயற்கை
முறையிலான இனப்பெருக்கத்திற்கு ஆண் எருதினை ஈடுப்படுத்தும் முன்பு அதிகார
அமைப்பினால் அடையாளங் காணப்படலாகும் உரிய அதிகார அமைப்புகளிடமிருந்து
பெறப்படுதல் வேண்டும்.
(7) விவசாயிகள், அடையாளங் காணப்படும் நபரால் நோய்களுக்கான காலமுறை
சோதனைக்கு உட்பட்ட இயற்கைமுறைக்காக ஆண் எருது பயன்படுத்தப்பட்டது
அல்லது அவ்வப்போது, வகுத்துரைக்கப்படக்கூடும் என்று செயற்கைமுறை கருவூட்டல்
முறைகளுக்காக ஆண் எருது பயன்படுத்தப்பட்டது என்று அதிகார அமைப்பினால்
பொது ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று உறுதி செய்தல் வேண்டும். நோயில்லை என்ற
சான்றிதழ், அடையாளங்காணப்படும் அதிகார அமைப்புகளால் கோரப்படும்போது,
முன்னிலைப்படுத்தப்படுதல் வேண்டும்.
(8) விவசாயிகள், அடையாளங்காணப்படும் நபரால் நோய்களுக்கான காலமுறை
அம்மைக்குத்தலுக்கு உட்பட்ட இயற்கைமுறைக்காக ஆண் எருது பயன்படுத்தப்பட்டது
என்று அல்லது அவ்வப்போது வகுத்துரைக்கப்படக் கூடிய செயற்கைமுறை கருவூட்டல்
முறைகளுக்கு ஆண் எருது பயன்படுத்தப்பட்டது என்று அதிகார அமைப்பினால் வயது
ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று உறுதி செய்தல் வேண்டும். அம்மைக்குத்துக்கான
சான்றிதழ், அதிகார அமைப்பினால் அடையாளங்காணப்பட்ட நபரால் கோரப்படும்போது
முன்னிலைப்படுத்தப்படுதல் வேண்டும்.
(9) (2)ஆம் உட்பிரிவின்படி அடையாளங்காணப்படும் நபர், இந்தச் சட்டத்தின்படி
அவற்றின் இனப்பெருக்கத் தகுதி மற்றும் இணக்கத்திற்காக விலங்குகளை சோதனை
செய்வதற்காக இயற்கைமுறை இனப்பெருக்கத்துக்கான ஆண் எருது பேணி
வளர்க்கப்படுமிடத்து, வளாகத்திற்கு நுழைவதற்கு அதிகார உடையவராவார்.
(10) இனப்பெருக்கத்திற்கு தகுதியற்றது அல்லது நோய் பாதிப்புக்கு உள்ளானது
என்று விளம்பப்படும் ஆண் எருது வகுத்துரைக்கப்படலாகும் முறையில் விவசாயினால்
அகற்றப்படுதல் வேண்டும்.
8(11) விவசாயிகள், வகுத்துரைக்கப்படலாகும் படிவத்திலும் முறையிலும் இயற்கைமுறை
இனப்பெருக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆண் எருதின் பதிவுருக்களை பேணி
வருதல் வேண்டும்.
(12) நிலையம் எதுவும் அல்லது தனிப்பட்டவர் எவரும் அதனுடைய அல்லது
அவருடைய சொந்த விலங்குகளின் அல்லது பிறருடைய விலங்குகளின்
இனப்பெருக்கத்திற்காக உள்நாட்டின காளையின் நீர்ம வடிவிலானவிந்தை பயன்படுத்தக்
கருதுமிடத்து, வகுத்தரைக்கப்படலாகும் நடைமுறை அனைத்திற்கும் இணங்கி நடத்தல்
வேண்டும்.
இரட்டைப்படியிலான
13. இந்தச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் அல்லது அங்கீகாரச்
சான்றிதழ்
சான்றிதழ் உருக்குலைக்கப்பட்டோ, தொலைக்கப்பட்டடோ அல்லது அழிக்கப்பட்டோ
இருக்குமானால், அந்த அதிகார அமைப்பு திருப்பதியடையுமானால், விண்ணப்பதாருக்கு
(i) விந்து நிலையங்களுக்கு, செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குநர்களுக்கு, செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்ப
பணியாளர்களுக்கு இரட்டைப்படி பதிவுச் சான்றிதழுக்காக ஆயிரம்
ரூபாய்க்கு மேற்படாத கட்டணத்தைச் செலுத்துவதன்பேரில்,
(ii) செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சி நிலையங்களுக்கு இரட்டைப்படி அங்கீகாரச்சான்றிதழுக்காக ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத கட்டணத்தைச்
செலுத்துவதன்பேரில், மற்றும்
(iii) காளையின் இரட்டைப்படி பதிவுச் சான்றிதழுக்காக ஐம்பது ரூபாய்க்கு மேற்படாத கட்டணத்தைச் செலுத்துவதன்பேரில், பதிவுச் சான்றிதழை அல்லது அங்கீகாரச்
சான்றிதழை இரட்டைப்படியில் வழங்கலாம்.
14. அதிகாரஅமைப்பு, ஒன்று, இதன் பொருட்டு தம்மிடம் செய்யப்பட்ட
சுட்டுகைகயின்பேரில் அல்லது விசாரணை அறிக்கையின் பேரில் அல்லது பிறவாறு-
பதிவு மற்றும் அங்கீகாரச் சான்றிதழை அறவு செய்தல்.
(i) இந்தச் சட்டத்தின்படி அதனால் வழங்கப்பட்ட பதிவுச்சான்றிதழ் அல்லது அங்கீகாரச் சான்றிதழ் விந்து நிலையம் செயற்கைமுறை இனப்பெருக்க சேவை வழங்குநர்,
செயற்கைமுறை இனப்பெருக்க பயிற்சி நிலையம், அல்லது செயற்கைமுறை கருவூட்டல்
தொழில்நுட்ப பணியாளரால் திரித்துக்கூறுகை மோசடி மூலம் பெறப்பட்டுள்ளது என்று,
அல்லது
(ii) பதிவுச்சான்றிதழ் அல்லது அங்கீகாரச் சான்றிதழ், வைத்திருப்பவர் காரணம் இல்லாமல், வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் அல்லது அங்கீகாரம் எந்த நிபந்தனைகளுக்கு
உட்பட்டு இணங்கி நடக்கத் தவறியிருக்கிறார் அல்லது இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படி
செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகளில் எதனையும் மீறியுள்ளார் அல்லது அதிகார
அமைப்பினால் வகுத்துரைக்கப்படலாகும், நிபந்தனைகளுக்கு இணங்கி நடக்கவில்லை
என்றால், அப்போது சான்றிதழ் உடையவர் இந்தச் சட்டத்தின்படி உள்ளாகக்கூடிய பிற
நடவடிக்கைகள் எதற்கும் குந்தகமில்லாமல், அதிகார அமைப்பு, பதிவு அல்லது அங்கீகாரச்
சான்றிதழ் உடையவருக்கு காரணம் காட்டுவதற்கு வாய்ப்பு நல்கியபின்பு-
(அ) அத்தகைய அறவுக்கான காரணங்களை அளித்து, பதிவு அல்லது அங்கீகாரச்
சான்றிதழை அறவு செய்யலாம், அல்லது
(ஆ) சான்றிதழ் உடையவர் அதிகார அமைப்பிற்கு திருப்தி ஏற்படும் வகையில்,
தேவைப்படும் நிபந்தனைகள் அனைத்திற்கும் இணங்கி நடக்கும் வரையில், பதிவு அல்லது
அங்கீகாரச் சான்றிதழை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம், அல்லது
(இ) பதிவு அல்லது அங்கீகாரச் சான்றிதழ் உடையவர் இணங்கி நடப்பதற்கு பிற
நிபந்தனைகளை விதிக்கலாம், அல்லது
(ஈ) பதிவு அல்லது அங்கீகாரச் சான்றிதழ் உடையவரிடமிருந்து, இந்தச் சட்டத்தின்
மற்றும் விதிகளின் வகைமுறைகளுக்கு இணங்கி நடப்பதற்குரிய ஏற்புறுதியை வாங்கலாம்.
9மேல்முறையீடு.
15. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி பதிவு அல்லது அங்கீகாரச் சான்றிதழை
வழங்க அல்லது புதுப்பிக்க மறுக்கும் அல்லது பதிவு அல்லது அங்கீகாரச் சான்றிதழை அறவு
செய்யும் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அதிகார அமைப்பின் ஆணையினால்
குறையுற்ற நபர் எவரும், அவருக்கு அந்த ஆணை தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது
நாட்களுக்குள், அரசால் குறித்துரைக்கப்படலாகும் மேற்முறையீட்டு அதிகார அமைப்பின்
முன்பு, மேல்முறையீடு தாக்கல் செய்யலாம்.
(2) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, உரிய நேரத்தில் மேல்முறையீடு தாக்கல்
செய்வதிலிருந்து போதிய காரணத்தால் மேல்முறையீட்டாளர், தடுக்கப்பட்டிருந்தார் என்று
திருப்திடையுமானால், மேற்சொன்ன முப்பது நாட்கள் காலஅளவு முடிவடைந்த பின்பு
மேல்முறையீட்டினை ஏற்றுக்கொள்ளலாம்.
(3) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, மேல்முறையீட்டாளருக்கு கேட்கப்படுவதற்கு
நியாயமான வாய்ப்பு நல்கிய பின்பு, மூன்று மாதங்களுக்குள் அல்லது சாத்தியமான
அளவுக்கு விரைவில் மேல்முறையீட்டில் முடிவு செய்தல் வேண்டும்.
(4) மேல்முறையீடு முடிவு செய்யப்பட்டும்வரை மேல்முறையீட்டு அதிகார அமைப்பு,
சான்றிதழை வழங்க அல்லது புதுப்பிக்க மறுக்கும் ஆணை அல்லது பதிவு அல்லது
அங்கீகாரச் சான்றிதழை அறவு செய்யும் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்
ஆணை, இந்த மேல்முறையீடு முடிவு செய்யப்படும் வரைவில், நடைமுறைக்கு வராது என்று
உத்தரவிடலாம்.
அத்தியாயம் -IV
பதிவுருக்களை ஆய்வு செய்வதற்கு, சோதனையிடுவதற்கு மற்றும் பேணிவருவதற்கு
அதிகாரம்.
16. (1) அதிகார அமைப்பு அல்லது அலுவலர் அல்லது இதன்பொருட்டு அவரால்
அதிகாரமளிக்கப்பட்ட வல்லுநர் குழுவின் உறுப்பினர் எவரும், பதிவு அல்லது அங்கீகார
வரையுரைகள் மற்றும் வரைக்கட்டுகளுக்கும் இந்தச்சட்டத்தின் மற்றும் அதன்படி
ஆய்வு செய்வதற்கும், சோதனையிடு- வதற்கும், கைப்பற்று வதற்குமான அதிகாரம்.
செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகள் எவற்றிக்கும் இணங்கியிருக்குமாறு செய்யும்
நோக்கத்துடன் அல்லது ஆய்வு மற்றும் விசாரணை நோக்கத்திற்காக-
(அ) எந்த விந்து நிலையம் அல்லது செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குநர்
அல்லது பயிற்சி நிலையம் இந்தச் சட்டத்தின் மற்றும் அதன்படி செய்யப்பட்ட விதிகளின்
வகைமுறைகளுக்கு மீறுதலாக நடவடிக்கை எதனையும் செய்துள்ளது அல்லது இந்தச்
சட்டத்தின் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகளின் மீறுகை எதுவும்
அல்லது இந்தச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட பதிவு அல்லது அங்கீகார நிபந்தனைகளுக்கு
மீறுதலான நடவடிக்கைகளை செய்துள்ளது என்று நம்பக்காரணம் பெற்றுள்ளதோ
அந்த விந்து நிலையம் அல்லது செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குநர் அல்லது
பயிற்சி நிலையம் எதனின் அலுவல் இடம் அல்லது வளாகம் எதிலும் நுழையலாம், ஆய்வு
செய்யலாம் மற்றும் சோதனை செய்யச் செய்யுமாறு அல்லது நடத்துமாறு செய்யலாம்.
(ஆ) விந்து நிலையம் அல்லது செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குநர் அல்லது
பயிற்சி நிலையம் எதினின் வளாகங்களிலிருந்து விந்து, ரத்தத்தின் மாதிரிகளை அல்லது
விந்து உற்பத்தியில் அல்லது செயற்கைமுறை கருவூட்டல் சேவைகளில் பயன்படுத்தப்படும்
பிற பொருட்கள் எவற்றையும் சேகரித்தல் மற்றும் அத்தகைய மாதிரிகள் அதிகார
அமைப்பினால் இதன் பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட ஆய்வகத்தின் மூலம் பகுப்பாய்வு
செய்யப்பட்டுள்ளன மற்றும் விந்து உற்பத்திக்காக உரியவாறு சான்றளிக்கப்படாதிருக்கிற
மேற்சொன்ன நிறுவனங்களிலுள்ள எருதுகள் எவற்றையும் கைப்பற்றலாம் அல்லது பதிவு
அல்லது அங்கீகார சான்றிதழ் உடையவரின் மற்றும் அத்தகைய வளாகங்களில் பணிபுரியும்
பிற நபர்களின் விவரவுரைகள் பெற தேவைப்படலாகும் பிற விசாரணையை செய்யலாம்
மற்றும் அதன் பதிவுருக்களை சரிபார்க்கலாம்.
மையச்சட்டம் 2/1974 (2) சோதனை மற்றும் கைப்பற்றுகை தொடர்பான 1973 ஆம் ஆண்டு குற்றவியல்
நடைமுறைத் தொகுப்பு சட்டத்தின் வகைமுறைகள், எந்த அளவுக்கு கூடுமோ
அந்த அளவுக்கு, (1)ஆம் உட்பபிரிவின்படி செய்யப்படும் சோதனைகள் மற்றும்
கைப்பற்றுகைகளுக்கும் பொருந்தும்10 (3 ) இந்தச் சட்டத்தின்படி விந்து நிலையத்திற்கான சான்றிதழ் அல்லதுசெயற்கைமுறை
கருவூட்டல் சேவை வழங்குநர் அல்லது பயிற்சி நிலையத்திற்கான அங்கீகாரச் சான்றிதழ்
வைத்திருக்கிற நபர் ஒவ்வொருவரும் அல்லது செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சி
நிலையம் அல்லது செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குநர் இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளில் எதனையும் தொடர்ந்து அதிகார அமைப்பினால் வழங்கப்பட்ட
பணிப்புரை அல்லது ஆணை எதற்கும் கட்டுப்பட்டதாகும் மற்றும் அத்தகைய பணிப்புரை
அல்லது ஆணைக்கு இணங்கி நடத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய பணிப்புரை அல்லது
ஆணைக்கு இணங்கி நடக்க அவர்பாலுள்ள தவறுகை எதுவும், இந்தச் சட்டத்தின்
மீறுகையாகக் கருதப்படுதல் வேண்டும்.
பதிவுருக்களை பேணி
17. (1) இந்தச் சட்டத்தின்படியான பதிவுச் சான்றிதழ் அல்லது அங்கீகாரச் சான்றிதழ்
வைத்திருக்கிற நபர் ஒவ்வொருவரும், வகுத்தரைக்கப்படலாகும் படிவத்திலும் முறையிலும்
அவருடைய அலுவல் தொடர்பான புத்தகங்கள், கணக்குகள் மற்றும் பதிவுருக்களை
வருதல் மற்றும் விவர அறிக்கைகளைத் தாக்கல் செய்தல்.
வைத்து வருதல் வேண்டும்.
(2) விந்து நிலையம் ஒவ்வொன்றும் மற்றும் செயற்கைமுறை கருவூட்டல் சேவை
வழங்குநர் ஒவ்வொருவரும் பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள் மற்றும் அதனிடம் பதிவு
பெற்ற அந்த செயற்கைமுறை கருவூட்டாளர்கள் அனைவரின் தகுதி மற்றும் அனுபவம்
அடங்கிய பதிவேட்டை பேணி வருதல் வேண்டும். அவ்வாறு பேணி வரப்படும் பதிவேடு
மற்றும் விண்ணப்பம், செயற்கைமுறை கருவூட்டலாளர்களின் விண்ணப்பம் மற்றும்
அனுபவம் தொடர்பான ஆதார ஆவணங்கள் மற்றும் தகுதி ஆகியவை அதிகார அமைப்பின்
ஆய்வின்போது கிடைக்க கூடியதாக செய்தல் வேண்டும். அத்தகைய செயற்கைமுறை
கருவூட்டலாளர்கள் அனைவரின் பட்டியல், அதிகாரஅமைப்பிற்கு அதனால் அனுப்பப்படும்
அரையாண்டு விவர அறிக்கைகளுடன் சேர்த்து அனுப்பப்படுதல் வேண்டும்.
(3) விந்து நிலையத்திற்கான பதிவுச் சான்றிதழ் வைத்துள்ள நபர் ஒவ்வொருவரும்,
வகுத்துரைக்கப் படலாகும் படிவத்திலும் முறையிலும் விந்து நிலையம் பொறுத்து மற்றும்
பதிவிற்காக உத்தேசிக்கப்பட்ட புதிய காளைகள் பொறுத்து இரட்டைப்படியில் அரையாண்டு
விவர அறிக்கையை அதிகார அமைப்பிற்கு அனுப்புதல் வேண்டும்.
(4) செயற்கைமுறை கருவூட்டல் சேவை வழங்குநராக பதிவுச் சான்றிதழ்
வைத்திருக்கிற நபர் ஒவ்வொருவரும், வகுத்துரைக்கப்படலாகும் படிவத்திலும், முறையிலும்
அதில் ஈடுபட்டுள்ள செயற்கைமுறை கருவூட்டலாளரின் எண்ணிக்கை மற்றும் செய்து
முடிக்கப்பட்ட கருவூட்டல்களின் எண்ணிக்கையை பொறுத்து இரட்டைப்படியில்
அரையாண்டு விவர அறிக்கையை அதிகார அமைப்பிற்கு அனுப்புதல் வேண்டும்.
(5) செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சி நிலையத்தின் அங்கீகாரச் சான்றிதழ்,
வைத்துள்ள நபர் ஒவ்வொருவரும், வகுத்துரைக்கப்படலாகும் படிவத்திலும் முறையிலும்
பயிற்சிபெற்ற செயற்கைமுறை கருவூட்டலாளரின் பட்டியல் மற்றும் கொடுக்கப்பட்ட பயிற்சி
எவருடைய மேற்பார்வையின் கீழ் கொடுக்கப்பட்ட அந்த பதிவு பெற்ற கால்நடை மருத்துவத்
தொழிலாற்றுநரின் பெயரை இரட்டைப்படிகளில் அரையாண்டு விவர அறிக்கையுடன்
அதிகார அமைப்பிற்கு அனுப்புதல் வேண்டும்.
பணிப்புரைகள்
18. சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்த போதிலும், ஆனால், இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கு உட்பட்டு மற்றும் இதன் பொருட்டு, அரசால் வழங்கலாகும் பணிப்புரை
வழங்குவதற்கு அதிகாரம்
எதற்கும் உட்பட்டு, அதிகார அமைப்பு, இந்தச் சட்டத்தின்படி தன்னுடைய அதிகாரங்களை
செலுத்துகையிலும் தன்னுடைய செயற்பணிகளைப் புரிகையிலும் நபர் அல்லது அலுவலர்
எவருக்கும் எழுத்து வடிவில் பணிப்புரை எதனையும் வழங்கலாம் மற்றும் அத்தகைய நபர்
அல்லது அலுவலர் அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடக்க கட்டுப்பட்டவராவார்
பின்வருவன தொடர்பாக பணிப்புரையிடுவதற்கான அதிகாரம் உள்ளடங்களான
இந்தப்பிரிவின்படியான பணிப்புரைகளை வழங்குவதற்கான அதிகாரங்கள்:-
(i) மாட்டின இனப்பெருக்கம், செயற்கைமுறை கருவூட்டல் சேவைகள், பயிற்சி தொடர்பான இயக்கம், செய்முறை அல்லது நடவடிக்கை எதனையும் முடிவு செய்தல், தடை
அல்லது ஒழுங்குமுறைப்படுத்துதல், அல்லது
(ii) மின்சாரம், தண்ணீர் அல்லது பிற சேவை எதுவும் வழங்குவதை நிறுத்துதல்
அல்லது ஒழுங்குமுறைப்படுத்துதல்.
11இந்தச் சட்டத்திற்கு 19. (1) நபர் அல்லது நிலையம் அல்லது கருவூட்டல் சேவை வழங்குநர் எவரும் இந்தச்
சட்டத்தின் மற்றும் அதன்படி செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகளுக்கு மீறுதலாக
மாட்டின இனப்பெருக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார் அல்லது செயற்கைமுறை
கருவூட்டல் சேவைகள் அல்லது செயற்கைமுறை பயிற்சி அளிக்கிறார் என்று அதிகார
அமைப்பினால் கருதப்படுமிடத்து, மேற்சொன்ன நடவடிக்கையை நிறைவேற்றுவதிலிருந்து,
மேற்சொன்ன நபர் அல்லது நிலையம் அல்லது சேவை வழங்குநரை தடுப்பதற்காக
முரணான மாட்டின இனப்பெருக்க நடவடிக்கைகளை தடுப்பதற்காக நீதிமன்றங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்குள்ள பெரு நகர குற்றவியல் நடுவர் அல்லது நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திடம்
அதிகாரம்.
விண்ணப்பம் செய்யலாம்.
(2) விண்ணப்பம் பெற்றதன்பேரில், அந்த நீதிமன்றம், மேற்சொன்ன நடவடிக்கையை
நிறைவேற்றுவதற்கு நபர் அல்லது நிலையம் அல்லது சேவை வழங்குநர் எவரையும்
தடுப்பதற்கான ஆணை பிறப்பிக்கலாம் அல்லது அது தக்கதென கருதும் பணிப்புரைகளை
வழங்கலாம் அல்லது ஆணையைப் பிறப்பிக்கலாம்.
தண்டனைகள்.
20. (1) வளாகம், இடம் அல்லது மையம் அல்லது விந்து நிலையம், எதிலும் உறைவிந்து
உற்பத்தி செய்கிற அல்லது செல்லத்தக்க பதிவுச் சான்றிதழ் வைத்திராமல் செயற்கைமுறை
கருவூட்டல் சேவையைச் செய்கிற அல்லது காலாவதியான பதிவுச் சான்றிதழ் வைத்திருக்கிற
அல்லது சான்றிளிக்கப்பட்ட காளைகள் அல்லாத பிறவற்றிலிருந்து உறைவிந்து உற்பத்தி
நடவடிக்கையைச் செய்கிற அல்லது இந்தச் சட்டத்தின் வகைமுறைகளில் எதனையும்
மீறுகிற எவராயினும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீடிக்கலாகும், அபராதம் செலுத்தவதற்கு
ஆளாதல் வேண்டும்.
(2) இந்தச் சட்டத்தின்படி விந்து நிலையம் அல்லது செயற்கைமுறை சேவை வழங்குநர்
என்ற நிலையில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள அல்லது மற்றும் இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளில் எதனையும் மீறியுள்ள அல்லது இந்தச்சட்டத்தில் விதிக்கப்பட்ட
வகுத்துரைக்கப்பட்ட தரங்களை பேணிவரத்தவறியுள்ள எவராயிலும், ஒரு லட்சம் ரூபாய்
வரை நீடிக்கலாகும் அபராதம் செலுத்துவதற்கு ஆளாதல் வேண்டும்.
(3) நீதிமன்றத்தினைால் வழங்கப்பட்ட பணிப்புரையில் குறித்துரைக்கப்படலாகும்
காலத்திற்குள் வழங்கப்பட்ட பணிப்புரை எதற்கும் இணங்கி நடக்கத் தவறுகிற அல்லது
வழங்கப்பட்ட ஆணை எதற்கும் அல்லது வழங்கப்பட்ட பணிப்புரை எதற்கும் இணங்கி
நடக்கத் தவறுகிற எவராயினும், அத்தகைய தவறுகை ஒன்றைப் பொறுத்து மற்றும்
தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதன்பேரில், ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாகும்
வெறுங்காவல் தண்டனைக்கு ஆளாதல் வேண்டும் அல்லது ஐம்பதாயிரம் ரூபாய் வரை
நீடிக்கலாகும், கூடுதல் அபராதம் செலுத்துவதற்கும் அல்லது இரண்டிற்கும் ஆளாாதல்
வேண்டும். அவ்வாறு சுமத்தப்பட்ட தண்டனைகள் அல்லது அபராதம், நில வருவாய்
நிலுவை அல்லது பொது மக்கள் கோரிக்கை போன்று தொடர்புடைய நபரிடமிருந்து
வசூலிக்கப்படலாம்.
(4) எந்தச் சேவைகளின் வகை மற்றும் இயற்கைமுறைகள் குறித்து அவருக்கு பதிவு
அல்லது அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதோ அந்த சேவைகளின் வகை மற்றும்
இயற்கைமுறைகள் குறித்து பொருண்மைக்களை திரித்துக்கூறும் விளம்பரம் அல்லது
பொது விளம்பரத்தின் வகை எதனையும் துணையாக நாடுகிற எவராயினும் , ஆறு
மாதங்கள் வரை நீடிக்கும். வெறுங்காவல் தண்டனைக்கு ஆளாதல் அல்லது இரண்டு
லட்சம் ரூபாய்கள் வரை நீடிக்கலாகும் கூடுதல் அபராதம் செலுத்துவதற்கு அல்லது
இரண்டிற்கும் ஆளாதல் வேண்டும்.
(5) அதிகார அமைப்பினால் வெளிப்படையாக பரிந்துரை செய்யாத நிலையம்
அல்லது தனிப்பட்டவரால் செய்யப்படும் விலங்குகளின் பாகுபாடற்ற இனப்பெருக்கம்
குற்றமாகும் மற்றும் குற்றம் செய்பவர் ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீடிக்கலாகும் அபராதம்
செலுத்துவதற்கு ஆளாதல் வேண்டும்.
(6) அவ்வாறு செய்வதற்கு அதிகார அமைப்பினால் வெளிப்படையாக
அனுமதிக்கப்பட்ட ஒன்று அல்லாத பிற நிலையம் அல்லது தனிப்பட்டவர் எவரும், விலங்கின்
மறு உற்பத்தி தொடர்பான நடவடிக்கை அல்லது ஆராய்ச்சியின் வகை எதிலும், ஈடுபடுதல்
மற்றும் அத்தகைய அதிகாரமளிக்கப்படாத நடவடிக்கை அல்லது ஆராய்ச்சி குற்றமாகும்
மற்றும் அத்தகைய நிலையம் அல்லது தனிப்பட்டவர் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதன்
பேரில், ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீடிக்கலாகும் அபராதம் செலுத்துவதற்கு ஆளாதல்
வேண்டும் அல்லது ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாகும் சிறைத் தண்டனை அல்லது
இரண்டிற்கும் ஆளாதல் வேண்டும்.
12நிறுமங்களால்
21. (1) இந்தச் சட்டத்தின்படியான குற்றம் ஒரு நிறுமத்தினால்
செய்யப்பட்டிருக்கிறவிடத்து, அந்தக் குற்றம் செய்யப்பட்ட நேரத்தில், அந்தநிறுமத்தின்
செய்யப்படும் குற்றங்கள்.
அலுவலை நடத்தி வருவதற்கு அந்த நிறுமத்தின் பொறுப்பைக் கொண்டிருந்த வரும்
அதற்குப் பொறுப்பாயிருந்த வருமான நபர் ஒவ்வொருவரும், அதோடு அந்த நிறுமமும்,
அந்தக் குற்றத்தினைச் செய்ததாகக் கருதப்படுத்தலும், அதற்கிணங்க நடவடிக்கை
எடுக்கப்படுதலும், தண்டிக்கப்படுதலும் வேண்டும்.
வரம்புரையாக - ஆனால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அந்தக் குற்றம்
தமக்குத் தெரியாமல் செய்யப்பட்டதாக அல்லது அத்தகைய குற்றம் செய்யப்படாமல்
தடுக்கத்தாம் உரிய முயற்சி அனைத்தையும் மேற்கொண்டதாக நபர் எவரும்
மெய்பிப்பாரானால், அவரை தண்டனை எதற்கும் உள்ளாக்காது.
(2) (1) ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், குற்றம் எதுவும் ஒரு
நிறுமத்தினால் செய்யப்பட்டிருந்து, அந்நிறுமத்தின் எவரேனும் இயக்குநரின், மேலாளின்,
செயலாரின் அல்லது பிற அலுவலரின் இசைவுடனோ, மறைமுக ஆதரவுடனோ அந்தக்
குற்றம் செய்யப்பட்டிருக்கிறது அல்லது அவர்பாலுள்ள கவனக்குறைவு எதற்கும்
சாட்டத்தக்கதாக இருக்கிறது என்று மெய்ப்பிக்கப்படுகிறவிடத்து, அந்த இயக்குநர்,
மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் அந்தக் குற்றதைச் செய்திருப்பதாகக்
கருதப்படுதலும், அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு
உள்ளதாலும் வேண்டும்.
விளக்கம் - இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக-
(அ) 'நிறுமம்' என்பது கூட்டமைப்பு எதுவும், என்று பொருள்படும் மற்றும் ஒரு
நிறுவகத்தை, சங்கத்தை அல்லது பிற தனிநபர்களின் கழகத்தை உள்ளடக்கும் மற்றும்
(ஆ) 'இயக்குநர்' என்பது, ஒரு நிறுவகத்தைப் பொறுத்தவரையில், அந்த
நிறுவகத்திலுள்ள ஒரு கூட்டாளி என்று பொருள்படும்.
குற்றங்களை
22. (1) நீதிமன்றம் எதுவும் இந்தச் சட்டத்தின்படியான குற்றம் எதனையும் அதிகார
அமைப்பினால் அல்லது அதனால் இதன் பொருட்டு, அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல்.
எவராலும் செய்யப்பட்ட முறையீட்டின்பேரில் அன்றி, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல்
ஆகாது.
(2) இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றங்களுக்கான குற்ற
வழக்கு எதுவும், அறிவிக்கை வாயிலாக அதிகார அமைப்பின் அல்லது அதிகார
அமைப்பினால் இதன்பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரின் முன்
ஒப்பளிப்புடனன்றி, தொடரப்படுதல் ஆகாது.
அத்தியாயம் - V
பல்வகைப்பட்டவை
23. அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தினால் கையொப்பமிடப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட
அறிக்கையாகப் புலப்படுகிற ஆவணம் எதுவும், இந்தச் சட்டத்தின் படியான நடவடிக்கைகள்
அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தின் அறிக்கை.
எவற்றிலும் அதில் கூறப்பட்ட பொருண்மைகளின் சான்றாகப் பயன்படுத்தப்படலாம்.
வட்டார அதிகார
24. வட்டார அதிகார அமைப்புகள் அனைத்தும், தன்னுடைய செயற்பணிகளை
ஆற்றுவதற்காக தேவையாகலாகும் உதவி மற்றும் துணை செய்தல் வேண்டும் மற்றும்
அமைப்புகளுக்கு உதவி செய்தல்.
தகவலை அதிகார அமைப்பிற்கு அளித்தல் வேண்டும் மற்றும் அவசியமாகும் பதிவுருக்கள்
அல்லது ஆவணங்களை ஆய்வு செய்வதற்கும் மற்றும் பரிசீலனை செய்வதற்கும்
கிடைக்கத்தக்கதாக செய்தல் வேண்டும்.
விவர அறிக்கை மற்றும்
25. அதிகார அமைப்பு அவ்வப்போது, அரசு கோரலாகும் அறிக்கைகள், விவர
அறிக்கைகள்
அறிக்கைகள், புள்ளி விவரங்கள், மற்றும் பிற தகவலை வகுத்துரைக்கப்படலாகும்
முறையில் அரசிற்கு அளித்தல் வேண்டும்.
உரிமையியல்
26. உரிமையியல் நீதிமன்றம் எதுவும், எந்த பொருட்பாடு பொறுத்து
அதிகாரமளிக்கப்பட்டு, இந்தச் சட்டத்தின்படி மேல்முறையீட்டு அதிகார அமைப்பு
அமைத்துருவாக்கப்பட்டதோ அந்த பொருட்டு பொறுத்த உரிமைக்கு அல்லது நடவடிக்கை
நீதிமன்றங்களின் அதிகாரவரம்பிற்குத் தடை
எதனையும் ஏற்றுக்கொள்வதற்கு அதிகார வரம்பு உடையது ஆகாது.
1327. உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள், எவையும்,
அதிகார அமைப்பின் அலுவலர் அல்லது பணியாளர் எவரும், இந்தச்சட்டத்தை அல்லது
அதன்படி செய்யப்பட்ட விதி அல்லது ஆணையை ஒட்டி நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட
நல்லெண்ணத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைக்கும் பாதுகாப்பு அல்லது செய்யக் கருதப்பட்ட எதனையும் பொறுத்து அதிகார அமைப்பிற்கு எதிராக
தொடரப்படுதல் ஆகாது.
அதிகாரங்களை 28. (1) அரசு, அறிவிக்கை வாயிலாக, இந்தப்பிரிவினாலும் 3,30,31 ஆகிய
ஒப்படைவு, செய்தல்.
பிரிவுகளினாலும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் அல்லாத பிற, இந்தச் சட்டத்தின்படியான
அதிகாரங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதுவும் அதனால் செலுத்தத்தக்கது
என்று பணிக்கலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி அதிகார ஒப்படைவு எதுவும் செய்யப்படும் போதெல்லாம்,
எந்த நபருக்கு அத்தகைய அதிகார ஒப்படைவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நபர், அரசின்
பணிப்புரை, கட்டுப்பாடு மேற்பார்வை ஆகியவற்றின்படி செயற்படுதல் வேண்டும்.
ஒரு சில நபர்கள் மையச்சட்டம் XLV / 1860 29. இந்தச் சட்டத்தின்படி அதிகாரம் எதனையும் செலுத்துகையில் அல்லது கடமை எதனையும் புரிகையில், அரசால் அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பின் உறுப்பினர்
பொதுப்பணியாளர்கள் ஆவர்.
அல்லது அலுவலர் எவரும், இந்தியத்தண்டனைத் தொகுப்புச்சட்டத்தின் 21 ஆம் பிரிவின்
பொருளின்படி பொதுப்பணியாளராகக் கருதப்படுதல் வேண்டும்.
இடர்ப்பாடுகளை 30. இந்தச்சட்டத்தின் வகைமுறைகள் எவற்றிக்கும் செய்திறமளிக்கையில்,
நீக்குவதற்கு அதிகாரம்.
இடர்ப்பாடு எதுவும் எழுமானால், அரசு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட பொது
அல்லது சிறப்பு ஆணைவாயிலாக, அத்தகைய இடர்ப்பாட்டினை நீக்கும் நோக்கத்திற்காக
அவசியமாகும் அல்லது உகந்ததாகும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக
இராத வகைமுறைகளைச் செய்யலாம்.
வரம்புரையாக – அத்தகைய ஆணை எதுவும், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து மூன்றாண்டுகள் கால அளவு முடிவடைந்த பின்பு பிறப்பிக்கப்படுதல்
ஆகாது.
விதிகள் செய்வதற்கு 31 (1) அரசு, அறிவிக்கை வாயிலாக, இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும்
அதிகாரம் அல்லது அவற்றில் எவற்றையும் நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
(2) (அ) இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதிகள் அனைத்தும்,
தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்ட நாளில்
நடைமுறைக்கு வரும் என்று இயம்பப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட
நாளன்று நடைமுறைக்கு வரும்.
(ஆ) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும்,
குறிப்பிட்டுள்ளவாறு நடைமுறைக்கு வரும் என்று இயம்பப்பட்டிருந்தாலன்றி, அவை
அவ்வாறு வெளியிடப்பட்ட தேதியன்று நடைமுறைக்கு வரும்.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி, பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது
ஆணை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட பின்பு, அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்பு,
எவ்வளவு விரைவில் சாத்தியமோ அவ்வளவு விரைவில், சட்டமன்ற பேரவையின் முன்பு
வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ
அல்லது அதற்கு அடுத்துவரும் கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்பு, சட்டமன்றப்
பேரைவை அத்தகைவிதி, ஆணை அல்லது அறிவிக்கை எதிலும் மாறுதல் எதனையும்,
செய்யுமாயின், அல்லது சட்டமன்றப்பேரவை அந்தவிதி, ஆணை அல்லது அறிவிக்கை
செய்யப்படுதல் ஆகாது என்று முடிவு செய்யுமாயின், அந்த விதி, ஆணை அல்லது
அந்த அறிவிக்கை அதன் பின்பு, அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே
நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது, நேர்வுக்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல்
வேண்டும். எனினும், அத்தகைய மாறுதலோ அல்லது நீக்கமோ, அந்த விதி, ஆணை
அல்லது அறிவிக்கையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட எதனின் செல்லுந்தன்மைக்கும்
குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர். சட்டத்துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப் பிரிவு)த் துறை.
14 15தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020ம் ஆண்டு
ஜனவரி திங்கள் 20ம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத்
தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 1/2020
2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழகச் சட்டம்
மற்றும் 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்)
சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
பகுதி-I.
முன்னுரை
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை
தொடக்கம்.
பல்கலைக் கழகம் மற்றும் தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச்
சட்டம் என வழங்கப்பெறும்.
(2) பிரிவுகள் 2, 6 மற்றும் 7 ஆகியவை 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள்
18 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்து விட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும்
இந்தச் சட்டத்தின் பிற வகைமுறைகள் மாநில அரசானது அறிவிக்கையின் வாயிலாகக்
குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பகுதி – II.
2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழகச்
சட்டத்திற்கான திருத்தம்.
1-ஆம் பிரிவிற்கான தமிழ்நாடு சட்டம்
2. (இதன் பின்பு இந்தப் பகுதியில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான)
30/2020
திருத்தம். 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழகச் சட்டத்தின்
1-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவிற்குப் பதிலாக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) இந்தச் சட்டமானது 2013-ஆம் ஆண்டு, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா
இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழகச் சட்டம் என வழங்கப்பெறும்."
15-ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 15-ஆம் பிரிவில், (a) கூறில், "இசை அல்லது கவின்கலை அல்லது நிகழ்த்துக் கலை ஆகியவற்றில் இளங்கலை பட்டத்துடன் கூடிய" எனும்
சொற்றொடருக்குப் பதிலாக, "இசை அல்லது கவின்கலை அல்லது நிகழ்த்துக் கலையில்
முதுகலைப் பட்டத்துடன் கூடிய" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
22-ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 22-ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "வகை 1-பதவி வழி உறுப்பினர்கள்", எனும் தலைப்பின் கீழ், இனம் (h)-ற்கு பின்பு, பின்வரும் இனமானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(i) சென்னை, எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி
நிறுவனத்தின் முதல்வர்."
5. முதன்மைச் சட்டத்தின் அட்டவணையில், "பகுதி I" எனும் தலைப்பின் கீழ், இணைப்புப் 8-ஆம் இனத்திற்கு பின்பு, பின்வரும் இனமானது சேர்க்கப்பட வேண்டும், அதாவது:-
பட்டியலுக்கானத்
திருத்தம்.
"9. சென்னை, எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்"16 6. முதன்மைச் சட்டத்தில், "தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை
"தமிழ்நாடு இசை
பல்கலைக் கழகம்" என்ற சொற்றொடர் வருகின்ற இடங்களிலெல்லாம், "தமிழ்நாடு
மற்றும் கவின்
டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்" என்ற
கலை பல்கலைக்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
கழகம்" என்ற
சொற்றொடருக்கான
மாற்றீடு.
7. எந்தவொரு சட்டத்திலும் அல்லது எந்தவொரு விதி, அறிவிக்கை, செயல்முறை,
"தமிழ்நாடு இசை
ஆணை, ஒழுங்குமுறைவிதி, துணைவிதி அல்லது அத்தகைய சட்டம் அல்லது
மற்றும் கவின்
நிலைவிதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட பிற ஆவணம் மற்றும்
கலை பல்கலைக்
முதன்மைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அல்லது தொடர்ந்து நடைமுறையில் உள்ள
கழகத்தின்" மற்றும்
ஒழுங்குமுறைவிதிகள் ஆகியவற்றில், "தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்
"தமிழ்நாடு இசை
கழகம்" மற்றும் "தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகச் சட்டம்"
மற்றும் கவின்
ஆகியவற்றின் சுட்டுகைகளானது, முறையே, "தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை
கலை பல்கலைக்
மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம்" மற்றும் "தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை
கழகச் சட்டத்தின்"
மற்றும் கவின்கலை பல்கலைக்கழகச் சட்டம்" ஆகியவற்றின் சுட்டுகைகளாகப் பொருள்
சுட்டுகையின்
கொள்ளப்படுதல் வேண்டும்.
பொருள்கோள்.
பகுதி– III.
முதன்மைச் சட்டம் 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்
19/1976
சட்டத்திற்கான திருத்தம்.
8. (இதன் பின்பு இந்தப் பகுதியில் முதன்மைச் சட்டம் 19/1976-என
குறிப்பிடப்படுவதான), 1976-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள்
55&A எனும் புதிய பிரிவினைப் புகுத்துதல்.
(ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தின் 55-ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது
புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
தமிழ்நாடு சட்டம்
30/2013 "55-A இசை, கவின் கலை மற்றும் நிகழ்த்துக் கலைக் கல்லூரிகள் சட்டத்திற்கான பொருந்துகை.- இந்தச் சட்டத்தின் எந்த ஒரு வகைமுறைகள் மற்றும் அதன்படி செய்யப்பட்ட
விதிகள் ஆகியவை இசை, கவின்கலை மற்றும் நிகழ்த்துக் கலைக் கல்லூரிகளுக்கு அந்த
அளவிற்கு பொருந்தும் என்றும் மற்றும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய
மாற்றங்கள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டவை என்றும் அரசானது, அறிவிக்கையின்
வாயிலாக பணிக்கலாம்."
தமிழ்நாடு சட்டம் செல்லுந்தன்மை. 9. முதன்மைச் சட்டம் 19/1976-இல் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும்,
30/2013 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழகச் சட்டம்
தொடங்கப்பட்ட நாளிலிருந்து, தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்
கழகத்தினால் இசை, கவின் கலை மற்றும் நிகழ்த்துக் கலைக் கல்லூரிகளுக்கு இணைப்பு
வழங்கப்பட்டதாக, முதன்மைச் சட்டம் 19/1976-இன் கீழ் தமிழ்நாடு அரசிதழில் தொடர்புடைய
குறிப்பிட்ட நேரத்தில், அனைத்து நோக்கங்களுக்காகவும், தமிழ்நாடு அரசிதழில் இந்தச்
சட்டம் வெளியிடும் நாள் வரை அரசால் அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும்
மற்றும் கூறப்பட்டுள்ள கல்லூரிகள் 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு இசை மற்றும் கவின்
கலை பல்கலைக் கழகச் சட்டத்தின் கீழ் கூறப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலம்
செல்லுந்தன்மையுடன் இணைப்பு வழங்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர்
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
17தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு
தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு
பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது ற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது
சட்ட எண். 2/2020சட்ட எண். 2/2020
19871987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல்
(ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம். (ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால்
பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) திருத்தச்சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளன்று நடைமுறைக்கு
வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
33 ஆம் பிரிவிற்கான தமிழ்நாடு சட்டம் 27/1989. 2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல்
திருத்தம்.
(ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தின் 33 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில் உள்ள வரம்புரையில்
"எட்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "ஒன்பது
ஆண்டுகள்" என்ற சொற்றொடர் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அவசரச் சட்டம்
3. (1) 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல்
9/2019.
நீக்கறவு மற்றும் காப்புரை.
(ஒழுங்கு முறைப்படுத்துதல்) மூன்றாம் திருத்த அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கம்
செய்யப்படுகிறது.
தமிழ்நாடு சட்டம் 27/1989. (2) அத்தகைய நீக்கம் எவ்வாறு இருந்த போதிலும், மேற்சொன்ன அவசர சட்டத்தால்
திருத்தம் செய்யப்பட்டவாறான 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச்
சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது
எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான
மேற்சொன்ன சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாக
கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
18 19தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு
தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு
பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது ற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 3/2020சட்ட எண். 3/2020
2017&ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின்
உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைபடுத்துதல் சட்டத்தை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்
இந்தியக் குடியரசின் எழுபதாவது ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள்
தொடக்கம்.
மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் (திருத்தச்)
சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது, 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 20-ஆம் நாளன்று நடைமுறைக்கு
வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
4-ஆம் பிரிவிற்கான தமிழ்நாடு சட்டம் 42/2017 2. 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும்
திருத்தம்.
வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டத்தின்
4-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவில் உள்ள "இருநூற்றுப் பத்து நாட்கள்" எனும்
சொற்றொடருக்குப் பதில் "ஐநூற்று எழுபத்தைந்து நாட்கள்" எனும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அவசரச் சட்டம்
3. (1) 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும்
5/2019
நீக்கறவு மற்றும் காப்புரைகள்.
வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல்
(இரண்டாம் திருத்த) அவசரச் சட்டம் இதன்மூலம் நீக்கறவு செய்யப்படுகிறது.
(2) அவ்வாறு நீக்கறவு செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், மேற்சொன்ன
அவசரச் சட்டத்தின் படி 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும்
வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ்
செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் இந்தச் சட்டத்தின் படி
செய்யப்பட்டிருப்பதாகவோ அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
20 21தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பி பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு ன்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு
பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது ற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது. பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 4/2020சட்ட எண். 4/2020
1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தை மேலும்
திருத்துவதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்
ெதாடக்கம்.
(திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) 10 ஆம் பிரிவின் (b) கூறு 2019 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 12 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச்
சட்டத்தின் எஞ்சியுள்ள வகைமுறைகள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள்
6-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
3ஆம் பிரிவிற்கானத் தமிழ்நாடு சட்டம் V/1920. 2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடுவதான) 1920 ஆம்
திருத்தம்.
ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 3 ஆம் பிரிவில்,-
(a) (7-A) எனும் கூறில் உள்ள, "மூன்றாம் நிலை நகராட்சி" எனும் சொற்றொடர்
விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(b) (12-C) எனும் கூறில் உள்ள, "மூன்றாம் நிலை நகராட்சி" எனும் சொற்றொடர்
விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(c) (29-A) கூறில் உள்ள "மூன்றாம் நிலை நகராட்சி அல்லது" எனும்
சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(d) (29-AA) எனும் கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்.
3. முதன்மைச் சட்டத்தின் 1-A எனும் அத்தியாயம் விட்டு விடப்படுதல் வேண்டும். 1-A எனும்
அத்தியாத்தை விட்டுவிடுதல்.
24-A ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 24-A ஆம் பிரிவில் "மூன்றாம் நிலை நகராட்சி" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "பேரூராட்சி" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
28 ஆம் பிரிவிற்கானத் 5. முதன்மைச் சட்டத்தின் 28 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறுக்குப் பதிலாக
திருத்தம்.
பின்வரும் கூறு மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(a) பேரூராட்சிகளைப் பொருத்த நேர்வில், 3-Q ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில்,
சுட்டப்பட்ட நபர்கள்.".
30ஆம் பிரிவிற்கானத் 6. முதன்மைச் சட்டத்தின் 30 ஆம் பிரிவில், விளக்கம் II-ல் (a) 'கூறுக்குப் பதிலாக
திருத்தம்.
பின்வரும் கூறு மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(a) பேரூராட்சிகளைப் பொருத்த நேர்வில் 3-Q ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில்
சுட்டப்பட்ட நபர்கள்.".
43-Bஆம் பிரிவிற்கானத் 7. முதன்மைச் சட்டத்தின் 43-B ஆம் பிரிவில் ,-
திருத்தம்.
(a) ஓரத்தலைப்பில், "மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "பேரூராட்சிகள்" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (1) ஆம் உட்பிரிவில், "மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "பேரூராட்சிகள்" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
2243-BBஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
8. முதன்மைச் சட்டத்தின் 43-BB-ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "பேரூராட்சி" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
49-Aஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
9. முதன்மைச் சட்டத்தின் 49-Aஆம் பிரிவில், "மூன்றாம் நிலை நகராட்சி" எனும் சொற்றொடருக்குப் பதிலாக, "பேரூராட்சி" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
50ஆம் பிரிவிற்கானத்
10. முதன்மைச் சட்டத்தின் 50 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில்,-
திருத்தம்.
(a) "3-C ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில் (b) மற்றும் (c)-ஆம் கூறுகள்
அல்லது" எனும் சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(b) "(a) மனநிலை பாதிக்கப்பட்டவராகுதல்" எனும்சொற்றொடருக்குப்
பதிலாக பின்வரும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(b) மனநிலை பாதிக்கப்பட்டவராகுதல்,"
68ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
11. முதன்மைச் சட்டத்தின் 68 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், அட்டவணையில் "III நிலை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "பேரூராட்சிகள்" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
124-B ஆம்
பிரிவிற்கானத் திருத்தம்.
12. முதன்மைச் சட்டத்தின் 124-Bஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "மூன்றாம் நிலை நகராட்சி" எனும் சொற்றொடர் வருகின்ற இடங்களிலெல்லாம், "பேரூராட்சிகள்" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
223-Aஆம்
பிரிவிற்கானத் திருத்தம்.
13. முதன்மைச் சட்டத்தின் 223-A ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில்,"மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி அல்லது நகராட்சி" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "பேரூராட்சி அல்லது நகராட்சி" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
223-Bஆம்
பிரிவிற்கானத் திருத்தம்.
14. முதன்மைச் சட்டத்தின் 223-B ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில்"மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி அல்லது நகராட்சி" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "பேரூராட்சி அல்லது நகராட்சி" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
285-C-ஆம்
பிரிவிற்கானத் திருத்தம்.
15. முதன்மைச் சட்டத்தின் 285-C ஆம் பிரிவில், (5) ஆம் உட்பிரிவில், "நகராட்சி, பேரூராட்சி அல்லது மூன்றாம் நிலை நகராட்சி" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "நகராட்சி அல்லது பேரூராட்சி" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
285-CC ஆம்
16. முதன்மைச் சட்டத்தின் 285 -CC ஆம் பிரிவில்,-
பிரிவிற்கானத் திருத்தம்.
(a) (1) ஆம் உட்பிரிவில் அட்டவணையில் "மூன்றாம் நிலை நகராட்சிகள்" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "பேரூராட்சிகள்" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(b) (2) ஆம் உட்பிரிவில் "நகராட்சி, பேரூராட்சி அல்லது மூன்றாம் நிலை நகராட்சி" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "நகராட்சி அல்லது பேரூராட்சி" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
357-Aஆம் பிரிவிற்கானத்
திருத்தம்
17. முதன்மைச் சட்டத்தின் 357 -Aஆம் பிரிவில், ஓரத்தலைப்பு உள்ளடங்கலாக, "மூன்றாம் நிலை நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளடங்கலாக" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "பேரூராட்சி உள்ளடங்கலாக" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
370 ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
18. முதன்மைச் சட்டத்தின் 370 ஆம் பிரிவில், (3) ஆம் உட்பிரிவில், "மூன்றாம் நிலை நகராட்சி" எனும் சொற்றொடர் வருகின்ற இரு இடங்களிலும் "பேரூராட்சி" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
23373 ஆம் பிரிவிற்கானத் 19. முதன்மைச் சட்டத்தின் 373 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(a) ஓரத்தலைப்பில், "மூன்றாம் நிலை நகராட்சி" எனும் சொற்றொடருக்குப் பதிலாக
"பேரூராட்சி" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) தொடக்கப்பகுதி மற்றும் (d) மற்றும் (j) கூறுகளில் "இடைநிலைப் பரப்பிடம்" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "ஊராட்சி நகர்" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) (b)கூறில் "ஊராட்சி பகுதிக்கு ஒரு மூன்றாம் நிலை நகராட்சி" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "ஊராட்சி நகருக்கு ஒரு பேரூராட்சி" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(d) (c), (f), (g) , (h), (i) மற்றும் (j) கூறுகளில் "மூன்றாம் நிலை நகராட்சி" எனும் சொற்றொடர் வருகின்ற இடங்களிலெல்லாம் "பேரூராட்சி" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
374 ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
20. முதன்மைச் சட்டத்தின் 374 ஆம் பிரிவில், "மூன்றாம் நிலை நகராட்சி" எனும் சொற்றொடருக்குப் பதிலாக "பேரூராட்சி" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
21. முதன்மைச் சட்டத்தின் 375 ஆம் பிரிவை விட்டுவிடப்படுதல் வேண்டும். 375 ஆம் பிரிவை
விட்டுவிடப்படுதல்.
22. முதன்மைச் சட்டத்தில் 376 ஆம் பிரிவை விட்டுவிடப்படுதல் வேண்டும். 376 ஆம் பிரிவை
விட்டுவிடப்படுதல்
குறிப்பிட்ட
சொற்றொடர்களை விட்டுவிடப்படுதல்.
23. இந்த முதன்மைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட எந்தவொரு விதிகள், துணைவிதிகள், அறிவிக்கைகள், ஆணைகள் ஆகியவற்றில் வருகின்ற "மூன்றாம் நிலை நகராட்சி", "மூன்றாம் நிலை நகராட்சிகள்", "அல்லது மூன்றாம் நிலை நகராட்சிகள்", "அல்லது ஒரு மூன்றாம் நிலை நகராட்சி", "அல்லது மூன்றாம் நிலை நகராட்சி", "அல்லது ஒரு மூன்றாம் நிலை நகராட்சி" மற்றும் "மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும்" என்னும் சொற்றொடர்களானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அவசரச் சட்டம்
நீக்கறவு மற்றும் காப்புரை.
24. (1) 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்த) அவசரச்
6/2019.
சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.
தமிழ்நாடு சட்டம் ஏ/1920
(2) அத்தகைய நீக்கறவு இருந்தபோதிலும், மேற்சொன்ன அவசரச்
சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்ட
எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம்
செய்யப்பட்டவாறான மேற்சொன்ன அவசரச் சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது
எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
24 25தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் மின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் மின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு
பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் எற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் எற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது. பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 5/2020சட்ட எண். 5/2020
தமிழ்நாடு மாநிலத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
பகுதி-I.
முன்னுரை.
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் (திருத்தச்)
தொடக்கம்.
சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது 2019 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 19 ஆம் நாளன்று நடைமுறைக்கு
வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
பகுதி-II.
1919 ஆம் ஆண்டு சென்னை நகர மாநகராட்சி சட்டத்திற்கானத் திருத்தம்.
28 ஆம் பிரிவிற்கான
மாற்றீடு..
தமிழ்நாடு சட்டம் IV/1919 2. (இதன் பின்பு இந்தப் பகுதியில் 1919 ஆம் ஆண்டு சட்டம் என குறிப்பிடப்படுவதான)
1919 ஆம் ஆண்டு சென்னை நகர மாநகராட்சிச் சட்டத்தின் 28 ஆம் பிரிவிற்குப் பதிலாக
பின்வரும் பிரிவு மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"28 மேயருக்கான தேர்தல்.- (1) மாமன்றமானது, மாமன்றத்திற்கான ஒவ்வொரு
சாதாரண தேர்தலுக்குப் பின்பும் அதனுடைய முதல் கூட்டத்தில் மாமன்றத்தின்
உறுப்பினர்களில் ஒருவரை மேயராகத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
(2) மேயர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள்
காலத்திற்குப் பதவி வகிப்பார் மற்றும் அவர் அத்தகைய மேயராகத் தொடருவார், வரம்புரையாக
இடைப்பட்ட காலத்தில் அவருடைய மாமன்ற உறுப்பினர் பதவி அற்றுப்போகாது.
(3) மேயர் பதவியில் ஏற்படும் தற்செயல் காலியிடம் எதுவும் புதிய தேர்தல்
மூலம் நிரப்பப்படவேண்டும் மற்றும் அவ்வாறு ஏற்பட்ட காலியிடம் எதிலும் மேயராகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் ஒருவர், உடனடியாகப் பதவியேற்றல் வேண்டும் மற்றும் அவர்
எவருடைய காலியிடத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரோ, அந்நபர் அக்காலியிடம்
ஏற்படாதிருந்தால் எவ்வளவு காலம் வரை பதவியில் இருப்பதற்கு உரிமைத் தகுதிப்
பெற்றிருப்பாரோ அவ்வளவு காலம் வரையிலும் மட்டுமே அவர் பதவி வகித்தல் வேண்டும்.
(4) மேயர் ஒருவர் அப்பதவியை வகிப்பதற்கு அவர் தகுதியற்றவராக ஆவதன் பேரில்
அல்லது அவர் பதவியிலிருந்து அகற்றப்படுவதன் பேரில் அல்லது அவரது பதவிக்காலம்
முடிவுறுவதன் பேரில் அல்லது பிறவாராக மேயராகத் தாம் இருப்பது அற்றுப்போவதன் பேரில்
தம் பதவியை விட்டகன்றிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.".
44&AC ஆம் 3. 1919 ஆம் ஆண்டு சட்டத்தின் 44-AC ஆம் பிரிவில்,-
(1) ஓரத் தலைப்பில் , "துணை மேயர்" என்ற சொற்றொடருக்குப்
பிரிவிற்கானத் திருத்தம் பதிலாக "மேயர் அல்லது துணைமேயர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(2) (1) ஆம் உட்பிரிவில், "துணை மேயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மேயர்
அல்லது துணைமேயர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (12) ஆம் உட்பிரிவில், "துணை மேயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மேயர் அல்லது துணைமேயர், நேர்விற்கேற்ப" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
26(4) (13) ஆம் உட்பிரிவில் , "துணை மேயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மேயர்
அல்லது துணைமேயர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(5) (14) ஆம் உட்பிரிவில், "துணை மேயர் ஒருவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மேயர் ஒருவர் அல்லது துணைமேயர் ஒருவர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
53 ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
4. 1919 ஆம் ஆண்டு சட்டத்தின் 53 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "(a) மனநலம் பாதிக்கப்பட்டவராகுதல்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக பின்வரும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(b) மனநலம் பாதிக்கப்பட்டவராகுதல்;".
59 ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
5. 1919 ஆம் ஆண்டு சட்டத்தின் 59 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், (c) கூறில், "மாமன்ற உறுப்பினர் அல்லது மேயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாமன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி III.
1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கான திருத்தம்.
3-T ஆம் பிரிவிற்கானத்
தமிழ்நாடு சட்டம் V/1920 திருத்தம்.
6. (இதன் பின்பு இந்தப் பகுதியில் 1920 ஆம் ஆண்டுச் சட்டம் எனக் குறிப்பிடுவதான) 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 3-T ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "(அதன் தலைவரைத் தவிர)" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல்
வேண்டும்.
7 ஆம் பிரிவிற்கானத்
7. 1920 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 7 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "(அதன்
திருத்தம்.
தலைவரைத் தவிர)" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
7-A ஆம் பிரிவிற்கான
8. 1920 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 7-Aஆம் பிரிவிற்குப் பதிலாக பின்வரும் பிரிவு
மாற்றீடு.
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"7-A. தலைவருக்கான தேர்தல்.- (1) மன்றமானது மன்றத்திற்கான ஒவ்வொரு
சாதாரண தேர்தலுக்குப் பின்பும் அதனுடைய முதல் கூட்டத்தில் மன்றத்தின் உறுப்பினர்களில்
ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
(2) தலைவர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள்
காலத்திற்குப் பதவி வகிப்பார் மற்றும் அவர் அத்தகைய தலைவராகத் தொடருவார்,
வரம்புரையாக இடைப்பட்ட காலத்தில் அவருடைய மன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகாது.
(3) தலைவர் பதவியில் ஏற்படும் தற்செயல் காலியிடம் எதுவும் புதிய தேர்தல்
மூலம் நிரப்பப்பட வேண்டும் மற்றும் அவ்வாறு ஏற்பட்ட காலியிடம் எதிலும் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் ஒருவர், உடனடியாக பதவியேற்றல் வேண்டும் மற்றும் அவர்
எவருடைய காலியிடத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரோ, அந்நபர் அக்காலியிடம்
ஏற்படாதிருந்தால், எவ்வளவு காலம் வரை பதவியில் இருப்பதற்கு உரிமைத் தகுதிப்
பெற்றிருப்பாரோ அவ்வளவு காலம் வரையிலும் மட்டுமே அவர் பதவி வகித்தல் வேண்டும்.
(4) தலைவர் ஒருவர் அப்பதவியை வகிப்பதற்கு அவர் தகுதியற்றவராக
ஆவதன் பேரில் அல்லது அவர் பதவியிலிருந்து அகற்றப்படுவதன் பேரில் அல்லது அவரது
பதவிக்காலம் முடிவுறுவதன் பேரில் அல்லது பிறவாராகத் தலைவராகத் தாம் இருப்பது
அற்றுப்போவதன் பேரில் தம் பதவியை விட்டகன்றிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.".
8 ஆம் பிரிவிற்கானத்
9. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 8 ஆம் பிரிவில், -
திருத்தம்.
(1) ஓரத்தலைப்பில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்கள்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (1) ஆம் உட்பிரிவில், "தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்கள்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (2) ஆம் உட்பிரிவில், "தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்கள்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
27(4) (2-A) எனும் உட்பிரிவு விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(5) (3) ஆம் உட்பிரிவில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(6) (4) ஆம் உட்பிரிவில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(7) (5) ஆம் உட்பிரிவில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர் ஒருவர்" மற்றும் "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, முறையே "மன்ற உறுப்பினர் ஒருவர்" மற்றும் "மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
9 ஆம் பிரிவிற்கானத் 10. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 9 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) ஓரத் தலைப்பில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடருக்குப்
பதிலாக "மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (1) ஆம் உட்பிரிவில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்" என்ற
சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (3) ஆம் உட்பிரிவில், "(1) ஆம் உட்பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்
ஒருவர் அல்லது மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "(1) ஆம்
உட்பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
12 ஆம் பிரிவிற்கானத் 11. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 12 ஆம் பிரிவில் (4) ஆம் உட்பிரிவானது
திருத்தம்.
விட்டுவிடப்படுதல் வேண்டும்.
12-A ஆம் பிரிவிற்கான 12. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 12-A ஆம் பிரிவிற்குப் பதிலாக பின்வரும் பிரிவு
மாற்றீடு.
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"12-A. தலைவர் அல்லது துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படாதபோது நடைமுறை.- 7-A ஆம் பிரிவின் கீழ் அல்லது 12 ஆம் பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்தலில் தலைவர் அல்லது நேர்விற்கேற்ப துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில் ஒரு புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.".
14 ஆம் பிரிவிற்கான 13. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 14 ஆம் பிரிவிற்குப் பதிலாக பின்வரும் பிரிவு மாற்றாக
மாற்றீடு.
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"14. தலைவர் மன்றத்தின் ஒவ்வொரு குழுவிலும் உறுப்பினாயிராயிருத்தல்.- தலைவர்
தனது பதவியின் காரணமாக மன்றத்தின் ஒவ்வொரு குழுவின் உறுப்பினராவார்.".
30 ஆம் பிரிவிற்கானத் 14. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 30 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) ஓரத்தலைப்பில், "தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (1) ஆம் உட்பிரிவில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
40 ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
15. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 40 ஆம் பிரிவில், ஓரத்தலைப்பு உட்பட, "துணைத் தலைவர்" என்ற சொற்றொடர் வருகின்ற இடங்களிலெல்லாம் "தலைவர் அல்லது துணைத் தலைவர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
2840-A ஆம் பிரிவிற்கானத்
16. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 40-A ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) ஓரத் தலைப்பில், "துணைத் தலைவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "தலைவர் அல்லது துணைத் தலைவர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (1) ஆம் உட்பிரிவில், "துணைத் தலைவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "தலைவர் அல்லது துணைத் தலைவர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (12) ஆம் உட்பிரிவில், "துணைத் தலைவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "தலைவர் அல்லது துணைத் தலைவர், நேர்விற்கேற்ப" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(4) (13) ஆம் உட்பிரிவில், "துணைத் தலைவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "தலைவர் அல்லது துணைத் தலைவர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(5) (14) ஆம் உட்பிரிவில் "துணைத் தலைவர் ஒருவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "தலைவர் ஒருவர் அல்லது துணைத் தலைவர் ஒருவர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
40-B ஆம் பிரிவினை
17. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 40-B ஆம் பிரிவினை விட்டுவிடப்படுதல் வேண்டும்.
விட்டுவிடுதல்.
43-C ஆம் பிரிவிற்கானத்
18. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 43-C ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில்,-
திருத்தம்.
(1) "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக
"மன்ற உறுப்பினர்கள்"என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக
"மன்ற உறுப்பினர்"என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
48 ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
19. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 48 ஆம் பிரிவில், இரு இடங்களில் வருகின்ற "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர் ஒருவராக" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
49 ஆம் பிரிவிற்கானத்
20. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 49 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (2) ஆம் உட்பிரிவில்,-
(a) தொடக்கப் பகுதியில், "தலைவர் ஒருவராக அல்லது மன்ற உறுப்பினர் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர் ஒருவராக" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (e) கூறில், இரு இடங்களில் வருகின்ற "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
50 ஆம் பிரிவிற்கானத்
21. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 50 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) ஓரத்தலைப்பில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்கள்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (1) ஆம் உட்பிரிவில்,-
(a) தொடக்கப்பகுதியில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
29(b) (f) கூறில், "தலைவரின் அல்லது பிற மன்ற உறுப்பினர் எவரின்"
என்ற சொற்றொடருக்குப் பதிலாக "பிற மன்ற உறுப்பினர் எவரின்" என்ற சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) (i) கூறில்,-
(i) "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடருக்குப்
பதிலாக "மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(ii) வரம்புரையில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற
சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (4) ஆம் உட்பிரிவில்,-
(a) "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற சொற்றொடருக்குப்
பதிலாக "மன்ற உறுப்பினர் ஒருவர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(b) "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடருக்குப்
பதிலாக "மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
51 ஆம் பிரிவிற்கானத் 22. 1920 ஆம் ஆண்டு சட்டத்தில் 51 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) ஓரத்தலைப்பில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்" என்ற
சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (1) ஆம் உட்பிரிவில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர் ஒருவர்", "தலைவர்
அல்லது மன்ற உறுப்பினர் எவரும் "மற்றும் "அத்தகைய தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்"
என்ற சொற்றொடர்களுக்குப் பதிலாக, முறையே "மன்ற உறுப்பினர் ஒருவர்", "மன்ற
உறுப்பினர் எவரும்" மற்றும் "அத்தகைய மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடர்களானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (3) ஆம் உட்பிரிவில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்" என்ற
சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்.
368 ஆம் பிரிவிற்கானத் 23. 1920 ஆம் ஆண்டு சட்டத்தின் 368 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (2) ஆம் உட்பிரிவில், "தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள்" என்ற
சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்கள்" என்ற சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (5) ஆம் உட்பிரிவில், "தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள்" என்ற
சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்கள்" என்ற சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (6) ஆம் உட்பிரிவில், "தலைவர் அல்லது மன்ற உறுப்பினர்கள்"என்ற
சொற்றொடருக்குப் பதிலாக "மன்ற உறுப்பினர்கள்" என்ற சொற்றொடரனது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்.
30பகுதி IV.
1971 ஆம் ஆண்டு மதுரை நகர மாநகராட்சி சட்டத்திற்கானத் திருத்தம்.
29 ஆம் பிரிவிற்கானத்
தமிழ்நாடு சட்டம் 15/1971.
மாற்றீடு.
24. (இதன் பின்பு இந்தப் பகுதியில் 1971 ஆம் ஆண்டு சட்டமாக குறிப்பிடப்படுவதான) 1971 ஆம் ஆண்டு மதுரை நகர மாநகராட்சிச் சட்டத்தின் 29 ஆம் பிரிவிற்குப் பதிலாக பின்வரும் பிரிவு மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"29. மேயருக்கான தேர்தல்.- (1) மாமன்றமானது, மாமன்றத்திற்கான ஒவ்வொரு
சாதாரண தேர்தலுக்குப் பின்பும் அதனுடைய முதல் கூட்டத்தில் மாமன்றத்தின் உறுப்பினர்களில் ஒருவரை மேயராகத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
(2) மேயர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் காலத்திற்குப் பதவி வகிப்பார் மற்றும் அவர் அத்தகைய மேயராகத் தொடருவார், வரம்புரையாக இடைப்பட்ட காலத்தில் அவருடைய மாமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகாது.
(3) மேயர் பதவியில் ஏற்படும் தற்செயல் காலியிடம் எதுவும் புதிய தேர்தல்
மூலம் நிரப்பப்பட வேண்டும் மற்றும் அவ்வாறு ஏற்பட்ட காலியிடம் எதிலும் மேயராகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் ஒருவர், உடனடியாக பதவியேற்றல் வேண்டும் மற்றும் அவர்,
எவருடைய காலியிடத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரோ, அந்நபர் அக்காலியிடம்
ஏற்படாதிருந்தால் எவ்வளவு காலம் வரை பதவியில் இருப்பதற்கு உரிமைத் தகுதிப்
பெற்றிருப்பாரோ அவ்வளவு காலம் வரையிலும் மட்டுமே அவர் பதவி வகித்தல் வேண்டும்.
(4) மேயர் ஒருவர் அப்பதவியை வகிப்பதற்கு அவர் தகுதியற்றவராக ஆவதன் பேரில் அல்லது அவர் பதவியிலிருந்து அகற்றப்படுவதன் பேரில் அல்லது அவரது பதவிக்காலம்
முடிவுறுவதன் பேரில் அல்லது பிறவாராக மேயராக தாம் இருப்பது அற்றுப்போவதன் பேரில் தம் பதவியை விட்டகன்றிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.".
48-AB ஆம்
25. 1971 ஆம் ஆண்டு சட்டத்தின் 48-AB ஆம் பிரிவில்,-
பிரிவிற்கானத் திருத்தம்.
(1) ஓரத்தலைப்பில், "துணை மேயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மேயர் அல்லது துணை மேயர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (1)ஆம் உட்பிரிவில், "துணை மேயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மேயர் அல்லது துணை மேயர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (12) ஆம் உட்பிரிவில், "துணை மேயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மேயர் அல்லது துணை மேயர், நேர்விற்கேற்ப" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(4) (13) ஆம் உட்பிரிவில், "துணை மேயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மேயர் அல்லது துணை மேயர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(5) (14) ஆம் உட்பிரிவில் "துணை மேயர் ஒருவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மேயர் ஒருவர் அல்லது துணைமேயர் ஒருவர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
66 ஆம் பிரிவிற்கான
மாற்றீடு.
26. 1971 ஆம் ஆண்டு சட்டத்தின் 66 ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில் (b) கூறில் "மாமன்ற உறுப்பினர் அல்லது மேயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாமன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி V.
1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகர மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
29 ஆம் பிரிவிற்கானத்
தமிழ்நாடு சட்ட எண் மாற்றீடு.
25/1981.
27. (இதன் பின்பு இந்தப் பகுதியில் 1981 ஆம் ஆண்டு சட்டமாக குறிப்பிடப்படுவதான) 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகர மாநகராட்சிச் சட்டத்தின் 29 ஆம் பிரிவிற்குப் பதிலாக பின்வரும் பிரிவு மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"29. மேயருக்கான தேர்தல்.- (1) மாமன்றமானது, மாமன்றத்திற்கான ஒவ்வொரு
சாதாரண தேர்தலுக்குப் பின்பும் அதனுடைய முதல் கூட்டத்தில் மாமன்றத்தின்
உறுப்பினர்களில் ஒருவரை மேயராகத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
31(2) மேயர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் காலத்திற்குப் பதவி வகிப்பார் மற்றும் அத்தகைய மேயராகத் தொடருவார், வரம்புரையாக இடைப்பட்ட காலத்தில் அவருடைய மாமன்ற உறுப்பினர் பதவி அற்றுப்போகாது.
(3) மேயர் பதவியில் ஏற்படும் தற்செயல் காலியிடம் எதுவும் புதிய தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும் மற்றும் அவ்வாறு ஏற்பட்ட காலியிடம் எதிலும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் ஒருவர், உடனடியாகப் பதவியேற்றல் வேண்டும் மற்றும் அவர், எவருடைய காலியிடத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரோ அந்நபர் அக்காலியிடம் ஏற்படாதிருந்தால் எவ்வளவு காலம் வரை பதவியில் இருப்பதற்கு உரிமைத் தகுதி பெற்றிருப்பாரோ அவ்வளவு காலம் வரையிலும் மட்டுமே அவர் பதவி வகித்தல் வேண்டும்.
(4) மேயர் ஒருவர் அப்பதவியை வகிப்பதற்கு அவர் தகுதியற்றவராக ஆவதன் பேரில் அல்லது அவர் பதவியிலிருந்து அகற்றப்படுவதன் பேரில் அல்லது அவரது பதவிக்காலம் முடிவுறுவதன் பேரில் அல்லது பிறவாராக மேயராக தாம் இருப்பது அற்றுப்போவதன் பேரில் தம் பதவியை விட்டகன்றிருப்பதாகக் கொள்ளப்படுவார்.".
50-C ஆம் பிரிவிற்கானத் 28. 1981 ஆம் ஆண்டு சட்டத்தின் 50-Cஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) ஓரத்தலைப்பில் "துணை மேயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக
"மேயர் அல்லது துணைமேயர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (1)ஆம் உட்பிரிவில், "துணைமேயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக
"மேயர் அல்லது துணைமேயர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (12) ஆம் உட்பிரிவில், "துணை மேயர்" என்ற சொற்றொருக்குப் பதிலாக "மேயர் அல்லது துணை மேயர், நேர்விற்கேற்ப" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(4) (13) ஆம் உட்பிரிவில், "துணை மேயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக
"மேயர் அல்லது துணைமேயர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(5) (14) ஆம் உட்பிரிவில் "துணை மேயர் ஒருவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மேயர் ஒருவர் அல்லது துணை மேயர் ஒருவர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
68 ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
29. 1981 ஆம் ஆண்டு சட்டத்தின் 68 ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில் (b) கூறில் "மாமன்ற உறுப்பினர் அல்லது மேயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாமன்ற உறுப்பினர்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அவசரச் சட்டம்
நீக்கறவு மற்றும் காப்புரை.
30. (1) 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (ஐந்தாம் திருத்த) அவசரச்
08/2019.
சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.
தமிழ்நாடு சட்டம் IV/1919. தமிழ்நாடு சட்டம் V/1920. தமிழ்நாடு சட்டம் 15/1971. தமிழ்நாடு சட்டம் 25/1981
(2) அத்தகைய நீக்கறவு இருந்தபோதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான 1919 ஆம் ஆண்டு சென்னை நகர மாநகராட்சி சட்டம் , 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1971 ஆம் ஆண்டு மதுரை நகர மாநகராட்சி சட்டம், 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் ஆகிய சட்டங்களின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான மேற்சொன்ன அவசரச் சட்டத்தின்படி செவய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.