Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 09 September 2020

Type
Ordinary
Gazette no.
37
Part
Part II
Notifications
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT - Notifications
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2020-09-09.Ordinary_37_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2020

[விலை : ரூ. 1.60 காசு[விலை : ரூ. 1.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 37] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 9, 2020 ஆவணி 24, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2051

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண்.87, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (UD4(2))த் துறை, 9 ஜூலை 2020] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த 1 உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 17-04-1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் சிறப்பு வெளியீட்டில் பாகம் II பிரிவு 2இல் 220ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II (2)/RUL/2152/74 ஆம் எண் அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளை தென்காசி உள்ளூர் திட்டப் பகுதியில் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். 2, இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், இது தொடர்பாக மேற்சொன்ன பகுதியிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகாரி அல்லது நிறுவனத்திடமிருந்து, சேர்க்கக் கருதப்பட்டவை குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை, எழுத்து மூலமாக அரசுக்கு அளிக்கலாம் என்றும், மேற்சொன்ன கால அளவிற்குள் பெறப்பபட்ட அத்தகைய மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின்படி மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னர் கருதிப்பார்க்கப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அவற்றை 'அரசு முதன்மை செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவுத் திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில், ''அட்டவணை'' என்பதற்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அதாவது;-

"அட்டவணை''

தொடர் எண் உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
( 1 ) ( 2 ) ( 3 )
1. தென்காசி நகராட்சி 0332 தென்காசி தென்காசி வட்டம் 642757 குத்துக்கல் வலசை 642764 பாட்டப்பத்து 642762 குணராமநல்லூர் 642763 மின்னடிசேரி 642746 ஆயிரப்பேரி 642767 மத்தளம்பாறை 642758 பாட்டகுறிச்சி 642756 கொடிக்குறிச்சி 627818 குன்னக்குடி

[ 1 ]

DTP-II-2-(37) (T Sup)—12

தொடர் எண் உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
( 1 ) ( 2 ) ( 3 )
பேரூராட்சி 803848 இலஞ்சி 803850 மேலகரம் 803845 ஆயக்குடி

ராஜேஷ் லக்கானி,

அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (நிலை) எண்.88 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (UD4(2))த் துறை, 9 ஜூலை 2020] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 17-04-1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் பாகம் II பிரிவு 2-இல் 220ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II (2)/RUL/2150/1974 ஆம் எண் அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளை திருப்பத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியில் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதியிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகாரி அல்லது நிறுவனத்திடமிருந்து, சேர்க்கக் கருதப்பட்டவை குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை, எழுத்து மூலமாக அரசுக்கு அளிக்கலாம் என்றும், மேற்சொன்ன கால அளவிற்குள் பெறப்பட்ட அத்தகைய மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின்படி மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னர் கருதிப்பார்க்கப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அவற்றை 'அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவுத் திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில் ''அட்டவணை'' என்பதற்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அதாவது;

தொடர் எண் உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
( 1 ) ( 2 ) ( 3 )
1. திருப்பத்தூர் நகராட்சி திருப்பத்தூர் திருப்பத்தூர் வட்டம் 17 தாமலேரிமுத்தூர் 10 பாச்சல் 27 காசிநாயக்கன்பட்டி 26 சு. பள்ளிபட்டு 20 பல்நாங்குப்பம் 11 அச்சமங்கலம் 09 கதிரிமங்கலம் 46 ஆதியூர் 50 ராச்சமங்கலம் 47 வெங்களபுரம் 23 கதிரம்பட்டி 24 மடப்பள்ளி 21 தடவள்ளி 25 திருப்பத்தூர் கிராமம் 48 கோனேரிகுப்பம்

ராஜேஷ் லக்கானி,

அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை. 3

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.

அறிவிக்கைகள்

[அரசாணை (ப) எண்.280, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J2)த் துறை, 3 ஜூன் 2020] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 9-ஆம் பிரிவு மற்றும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்னலாடை தொழிற்சாலையில் பணியமர்த்தப்படுபவர்களுக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை நிர்ணயிப்பது தொடர்பாக, விசாரணைகளை மேற்கொள்வதற்கும் மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கும் பின்வரும் உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை இதனால் நியமிக்கிறார்.

தனிநபர்கள்

(1) தொழிலாளர் துறை இணை ஆணையர், கோயமுத்தூர் தலைவர்
(2) தொழிலாளர் துறை உதவி ஆணையர், (செயலாக்கம்) கோயமுத்தூர் செயலாளர்
(3) உதவி இயக்குநர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, திருப்பூர் கோட்டம் உறுப்பினர்

வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்

(1) திரு. S. கோவிந்தப்பன் கீதாஞ்சலி நிட்டர்ஸ், 34, TSR லே அவுட், 2வது தெரு, கொங்கு முதன்மைச் சாலை, திருப்பூர்-641 607. உறுப்பினர்
(2) திரு. K.M. சுப்ரமணியம், K.M. நிட்வேர் பிரைவேட் லிமிடெட், 14 DEF, லக்ஷ்மி நகர், முதல் தெரு, சிட்டி கார்டன், திருப்பூர்-641 602. உறுப்பினர்
(3) திரு. விஜயகுமார், C.B.C. ஃபேஷன் ஏசியா M.R. பிரைவேட் லிமிடெட், 11. நகர், (CBC. கட்டடம்), KNP காலனி போஸ்ட், தாராபுரம் சாலை, திருப்பூர்-641 608. உறுப்பினர்

தொழிலாளர்களின் பிரதிநிதிகள்

(1) திரு. M. கண்ணப்பன், த/பெ K.S. மணி, 10, ராஜீவ் நகர், காங்கேயம் குறுக்கு சாலை, திருப்பூர்-641 604. செயலாளர், திருப்பூர் சிட்டி அண்ணா பொது தொழிலாளர்கள் சங்கம் உறுப்பினர்
(2) திரு. P. குணசேகரன், த/பெ பழனிசாமி, 3, திரு.வி.க. நகர், முதல் தெரு, பெரிச்சிபாளையம், திருப்பூர்-641 608, செயலாளர், திருப்பூர் பனியன் அண்ணா தொழிலாளர்கள் சங்கம் உறுப்பினர்
(3) திரு. C. பழனிசாமி, த/பெ. சென்னிமலை, 1-சியான்காடு, கருமராம்பாளையம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர்-641 607, தலைவர், அனைத்திந்திய காங்கிரஸ் வணிக சங்கம் (AITUC), திருப்பூர் மாவட்டம்.

முகமது நசிமுத்தீன்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை. 4 [அரசாணை (ப) எண்.308, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J2)த் துறை, 16 ஜூன் 2020] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 9-ஆம் பிரிவு மற்றும் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கல் மற்றும் ஏனைய பொருட்களைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் செய்வதற்கு பணியமர்த்தப்படுபவர்களுக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை நிர்ணயிப்பது தொடர்பாக, விசாரணைகளை மேற்கொள்வதற்கும் மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கும் பின்வரும் உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை இதனால் நியமிக்கிறார்.

தனி நபர்கள்

(1) தொழிலாளர் துறை இணை ஆணையாளர், சரகம் II, சென்னை. தலைவர்
(2) தொழிலாளர் துறை உதவி ஆணையாளர், (செயலாக்கம்), காஞ்சிபுரம். செயலாளர்
(3) புள்ளியியல் அதிகாரி/ உதவி இயக்குநர், (முழு கூடுதல் பொறுப்பு) பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, காஞ்சிபுரம் கோட்டம், செய்யாறு. உறுப்பினர்

வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்

(1) திரு. C. சங்கர், இளங்கோ சிற்பக் கலைக்கூடம், மெயின் ரோடு, மொடையூர், போளூர் அஞ்சல், திருவண்ணாமலை மாவட்டம் உறுப்பினர்
(2) திரு. S. சிதம்பரம், ஸ்ரீமூகாம்பிகா சிற்ப கலைக்கூடம் மற்றும் கட்டடக் கலைக்கூடம், எண். 22, திருக்குல தெரு, மாமல்லபுரம் உறுப்பினர்
(3) திரு. எம். ஜெயராம், வைகுண்ட சாலை, மயிலாடி புதூர், மயிலாடி அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம் உறுப்பினர்

தொழிலாளர்களின் பிரதிநிதிகள்

(1) திரு. J. ராஜன், அண்ணா தொழிற்சாலைப் பேரவை, 44, காந்தி தெரு, பரமசிவம் நகர், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்-603 109. உறுப்பினர்
(2) திரு. S. குமார், அனைத்திந்திய மத்திய வணிக சங்கங்களின் மன்றம், 1/10,11 ஆவது தெரு, கருணாநிதி நகர், அயனாவரம், சென்னை-600 023. உறுப்பினர்
(3) திரு. P. கணேசன், இந்து மஸ்தூர் சபா, 10/437, இராஜாஜி தெரு, சூரமங்கலம் அஞ்சல், சேலம்-636 005. உறுப்பினர்

முகமது நசிமுத்தீன்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை. தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 09 September 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-09-09.Ordinary_37_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2020-09-09.Ordinary_37_Part-II_Section-2-T-Sup.