[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2020
[விலை : ரூ. 12.80 காசு[விலை : ரூ. 12.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 37]
சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 9, 2020 ஆவணி 24, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 6/2020.
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான
சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
பகுதி-I.
முன்னுரை.
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள்
தொடக்கம்.
(இரண்டாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாளன்று நடைமுறைக்கு
வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
பகுதி-II.
1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
414-B ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
தமிழ்நாடு சட்டம் IV/1919. 2. 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்தின் 414-B ஆம் பிரிவில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-III.
1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கான திருத்தம்.
375-B ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
தமிழ்நாடு சட்டம் V/1920. 3. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 375-B ஆம் பிரிவில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர்
அமைக்கப்படுதல் வேண்டும்.
DTP-IV-2- (T Sup)—372 பகுதி-IV.
1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
510-AAA ஆம்
தமிழ்நாடு சட்டம் 15/1971.
பிரிவிற்கான திருத்தம்.
4. 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 510-AAA ஆம் பிரிவில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர்
அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-V.
1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
511-AAA ஆம்
தமிழ்நாடு சட்டம் 25/1981.
பிரிவிற்கான திருத்தம்.
5. 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின் 511-AAA ஆம் பிரிவில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர்
அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-VI.
1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
10-Aஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் 27/1994.
திருத்தம்.
6. 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர்
அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-VII.
1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
10-Aஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் 28/1994 திருத்தம்..
7. 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர்
அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-VIII.
1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
10-Aஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் 29/1994.
திருத்தம்.
8. 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப்
பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர்
அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-IX.
2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
9-A ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் 7/2008.
திருத்தம்.
9. 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-X.
2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
9-A ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் 8/2008.
திருத்தம்.
10. 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
3பகுதி-XI.
2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
9-A ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
தமிழ்நாடு சட்டம் 26/2008. 11. 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-XII.
2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
9-A ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
9-A ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
9-A ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
10 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
10 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
10 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
4தமிழ்நாடு அவசரச் சட்டம் நீக்கறவு மற்றும் காப்புரை. 18. (1) 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் (ஆறாம் திருத்தம்)
13/2019.
அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு சட்டம் IV/1919. தமிழ்நாடு சட்டம் V/1920. தமிழ்நாடு சட்டம் 15/1971. தமிழ்நாடு சட்டம் 25/1981. தமிழ்நாடு சட்டம் 27/1994. தமிழ்நாடு சட்டம் 28/1994. தமிழ்நாடு சட்டம் 29/1994. தமிழ்நாடு சட்டம் 7/2008. தமிழ்நாடு சட்டம் 8/2008. தமிழ்நாடு சட்டம் 26/2008. தமிழ்நாடு சட்டம் 27/2008. தமிழ்நாடு சட்டம் 24/2013. தமிழ்நாடு சட்டம் 25/2013. தமிழ்நாடு சட்டம் 10/2019. தமிழ்நாடு சட்டம் 11/2019. தமிழ்நாடு சட்டம் 24/2019.
(2) அவ்வாறு நீக்கறவு செய்யப்பட்டிருந்த போதிலும் 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டம், 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டம், 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டம், 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டம், 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டம், 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு திருப்பூர் நகர மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டம், 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டம், 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டம், 2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டம், 2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சிச் சட்டம் மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் செய்யப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் மற்றும் அவற்றின் அவசரச் சட்டங்களினால் ஏற்பட்ட திருத்தங்கள் யாவும் இந்த சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
5தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம்
ஆண்டு பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 7/2020.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
தொடக்கம்.
(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது 2019 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 19 ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
53 ஆம் பிரிவிற்கானத் 21/1994.
திருத்தம்.ம 2. (இதன்பின்பு முதன்மைச் சட்டம் என வழங்கப்படுவதான) 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் (b) ஆம் கூறில்,
"ஊராட்சி ஒன்றியக் குழுவின் உறுப்பினர் ஒருவராக" எனும் சொற்றொடருக்குப்
பின்பு "அல்லது ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்"
எனும் சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்.
57-A எனும் 3. முதன்மைச் சட்டத்தின் 57ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது
புகுத்தப்படுதல் வேண்டும். அவையாவன: -
புதிய பிரிவைப் புகுத்துதல் 57-A. தேர்தலில் வாக்களிப்பதற்கான இயந்திரம்.—இந்தச் சட்டத்தில்
அல்லது இதனடிப்படையில் இயற்றப்பட்ட விதிகளில் கூறப்பட்டுள்ள எது எவ்வாறு
இருப்பினும், வாக்களிப்பதற்கான இயந்திரம் மூலம் வாக்குகளை செலுத்துவதும்
பதிவு செய்வதும் அத்தகைய சிற்றொகுதி அல்லது கிராம ஊராட்சி, ஊராட்சி
ஒன்றியம் அல்லது மாவட்ட ஊராட்சி ஆகியவற்றின் சிற்றொகுதிகளில்
மேற்கொள்ளப்படலாம் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையம், அத்தகைய கிராம
ஊராட்சி அல்லது கிராம ஊராட்சிகளின் தலைவர் தேர்தலுக்காக ஒவ்வொன்றின்
சூழ்நிலைகள் தொடர்பானவற்றை கருத்தில் கொண்டு குறிப்பிடலாம்.
விளக்கம்.—இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, "வாக்களிப்பதற்கான
இயந்திரம்" என்பது, மின்னணு முறையில் இயங்கும் அல்லது மற்ற வகையில்
வாக்குகளை செலுத்துவதற்காக அல்லது பதிவு செய்யப்படுவதற்காகப்
பயன்படுத்தப்படும் எந்த ஒரு இயந்திரம் அல்லது கருவி மற்றும் இந்தச் சட்டம்
அல்லது இதன் அடிப்படையில் இயற்றப்பட்ட விதிகளில் குறிப்பிடப்பட்ட ஒரு
வாக்குப்பெட்டி அல்லது வாக்குச்சீட்டு குறித்த குறிப்பு ஏதேனும், எந்தவொரு
தேர்தலிலும் அத்தகைய வாக்குப்பதிவு இயந்திரம் எங்கு பயன்படுத்தப்பட்டாலும்
அத்தகைய வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பற்றிய குறிப்பை உள்ளடக்கியதாகக்
கருதப்படும்.".
தமிழ்நாடு அவசரச்
நீக்கறவு மற்றும் 4. (1) 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (நான்காவது திருத்த)
சட்டம் 07/2019.
காப்புரை.
அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.-6 (2) அத்தகைய நீக்கறவு இருந்தபோதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான மேற்சொன்ன அவசரச் சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
7தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு
பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 8/2020.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம்
தொடக்கம்.
திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாளன்று நடைமுறைக்கு
வந்துவிட்டிருப்பதாக கொள்ளப்பட வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
261-A ஆம் பிரிவுக்கான 21/1994.
திருத்தம்.
2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 261-A ஆம் பிரிவில், "2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள்வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம்
ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அவசரச்
நீக்கறவு மற்றும் காப்புரை.
3. (1) 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (ஐந்தாம் திருத்த) அவசரச் சட்டம்
சட்டம் 12/2019 ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.
தமிழ்நாடு சட்டம்
21/1994.
(2) அவ்வாறு நீக்கறவு செய்யப்பட்டிருந்த போதிலும், மேற்சொன்ன அவசர சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறான 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறான மேற்சொன்ன சட்டத்தின்படி செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டுள்ளதாக கொள்ளப்பட வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
8 9தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம்
ஆண்டு பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 9/2020.
1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகச்
சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்
தொடக்கம்.
பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் நாளன்று நடைமுறைக்கு
வந்துவிட்டதாக கொள்ளப்பட வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
15 ஆம் பிரிவிற்கானத் 43/1997.
திருத்தம்.
2. 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின் 15-ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில், (a) ஆம் கூறுக்குப் பதிலாக பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
"(a) பதிவாளர் பதவியைக் கொண்டிருப்பவர்,-
(i) 55 விழுக்காட்டிற்குக் குறையாத மதிப்பெண்களுடன் சட்டத்தில் முதுகலைப் பட்டத்தைக் கட்டாயமாகப் பெற்றிருத்தல் வேண்டும் அல்லது தர நிர்ணயமுறை பின்பற்றப்படும் இடங்களில் புள்ளி அளவில் அதற்கு நிகரானத் தரத்தினைப் பெற்றிருத்தல் வேண்டும்; மற்றும்
(ii) A. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அல்லது மாநிலத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியராக 3 ஆண்டுகள் அனுபவம் அல்லது இணைப்பேராசிரியராக 8 ஆண்டுகள் அனுபவம் அல்லது உதவிப்பேராசிரியராக, கல்விநிலை 11 மற்றும் அதற்கு மேலான நிலையில் 15 ஆண்டுகள் அனுபவம் கட்டாயமாகப் பெற்றிருத்தல் வேண்டும் அல்லது ஆராய்ச்சி நிறுவனம் அல்லது பிற உயர்கல்வி நிறுவனங்களில் ஒப்பிடத்தக்க அளவில் அனுபவம்; அல்லது
B. மாநிலத்தின் அரசு சட்டக் கல்லூரியில் முதல்வராக 3
ஆண்டுகள் அனுபவம் கட்டாயமாகப் பெற்றிருத்தல் வேண்டும்; அல்லது
C. நிர்வாகத்தில் 15 ஆண்டுகள் அனுபவம் கட்டாயமாகப் பெற்றிருத்தல் வேண்டும், அதில் 8 ஆண்டுகள் துணைப் பதிவாளராக அல்லது மாநிலத்தின் பிற பல்கலைக்கழகங்கள் அல்லது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அதற்கு நிகரான பதவியைப் பெற்றிருத்தல் வேண்டும்; அல்லது
D. சட்டத்துறையின், அரசு துணைச் செயலாளர் பதவிக்குக் குறையாத அரசுப் பணியாளராக 3 ஆண்டுகள் அனுபவம் கட்டாயமாகப் பெற்றிருத்தல் வேண்டும்.".
தமிழ்நாடு அவசரச்
நீக்கறவு.
3. 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக
சட்டம் 11/2019.
(திருத்த) அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர். சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
10 11தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 10/2020.
2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தினை
மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும்
தொடக்கம்.
சேவைகள் வரி (திருத்தச்) சட்டம் என அழைக்கப்பெறும்.
(2) பிரிவு 13 ஆனது 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின் எஞ்சியுள்ள வகைமுறைகள் அனைத்தும் மாநில அரசினால் அறிவிக்கை வாயிலாகக் குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2-ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
தமிழ்நாடு சட்டம் 19/2017 2. 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2-ஆம் பிரிவில், (4)-ஆம் கூறில், "முன்னதாகத் தீர்மானிக்கும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "முன்னதாகத் தீர்மானிக்கும் தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" எனும் சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்.
3. முதன்மைச் சட்டத்தின் 10-ஆம் பிரிவில்,— 10-ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
(1 (1)-ஆம் உட்பிரிவில், இரண்டாம் வரம்புரைக்குப் பின்பு, பின்வரும்
விளக்கமானது புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—
"விளக்கம்.- இரண்டாம் வரம்புரையின் நோக்கங்களுக்காக, வட்டி அல்லது தள்ளுபடி வாயிலாக குறிப்பிடப்படுவதான சலுகைகளாக இருக்கும் பட்சத்தில், வைப்பீடுகள், கடன்கள் அல்லது முன்பணங்களை நீட்டிப்பதன் மூலம் வழங்கப்படும் விலக்களிக்கப்பட்ட சேவைகளின் மதிப்பானது மாநிலத்திற்குள்ளான மொத்த விற்பனை அளவின் மதிப்பினை நிர்ணயிக்க எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.";
(2) (2)-ஆம் உட்பிரிவில்,—
(a) (d)-கூறில், இறுதியாக வருகின்ற "மற்றும்" எனும்
சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(b) (e)-கூறில் "மன்றம்" எனும் சொற்றொடருக்குப் பதிலாக,
"மன்றம்; மற்றும்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) (e)-கூறிற்குப் பின்பு, பின்வரும் கூறானது புகுத்தப்படுதல்
வேண்டும், அவையாவன:—
"(f) அவர் ஒரு தற்செயல் வரிவிதிக்கத்தக்க நபராகவோ அல்லது
ஒரு குடியிராத வரி விதிக்கத்தக்க நபராகவோ இல்லாதிருத்தல்:";
(3) (2)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது
புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—
"(2A) இந்தச் சட்டத்தில் முரண்பாடாக கூறப்பட்டுள்ள எது எவ்வாறிருப்பினும், ஆனால் 9-ஆம் பிரிவின் (3)-ஆம் மற்றும் (4)-ஆம் உட்பிரிவுகளின் வகைமுறைகளுக்குட்பட்டு, (1)-ஆம் மற்றும் (2)-ஆம் உட்பிரிவுகளின் கீழ் வரி செலுத்தத் தகுதியானவர் அல்லாத, பதிவு செய்யப்பட்ட நபர், அவருடைய முந்தைய நிதியாண்டின் ஒட்டு மொத்த விற்பனை அளவு ஐம்பது இலட்ச ரூபாய்க்கு மேற்படாமல் இருக்கையில், 9-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் அவரால் செலுத்தத்தக்க வரிக்குப் பதிலாக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வீதத்தில் கணக்கிடப்படும் வரித் தொகையை, ஆனால் மாநிலத்திற்குள்ளான மொத்த விற்பனை அளவில் 3 சதவீதத்திற்கு மேற்படாமல் இருக்கும் வகையில், கீழ்க்கண்ட இனங்களில் தொடர்புடையவராக இல்லாமல் இருக்கும் பட்சத்தில், செலுத்துவதற்கு தெரிவு செய்துக் கொள்ளலாம்—
12(a) இந்தச் சட்டத்தின் கீழ் வரிவிதிப்பிற்குள்ளாகாத சரக்குகள்
அல்லது சேவைகள் வழங்குவதில் ஈடுபட்டுள்ளவர் இல்லை எனில்;
(b) மாநிலங்களுக்கிடையேயான வெளிப்புற சரக்குகள் அல்லது
சேவைகள் எதனையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளவர் இல்லை எனில்;
(c) 52-ஆம் பிரிவின் கீழ் ஆதாரத்தில் வரி வசூலிக்க வேண்டிய ஒரு மின்னனு வணிகம் இயக்குபவர் மூலம் சரக்குகள் அல்லது சேவைகள் எதனையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளவர் இல்லை எனில்;
(d) மன்றத்தின் பரிந்துரையின் பேரில் அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட அத்தகைய சரக்குகளின் உற்பத்தியாளர் அல்லது அத்தகைய சேவைகளை வழங்குபவர் இல்லை எனில்; மற்றும்
(e) தற்செயல் வரி விதிக்கத்தக்க நபராகவோ அல்லது குடியிராத
வரி விதிக்கத்தக்க நபராகவோ இல்லை எனில்:
மையச்சட்டம் 43/1961.
வரம்புரை:- ஆனால், 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டதின்கீழ் வழங்கப்பட்ட நிரந்திரக் கணக்கு எண்ணைக் கொண்டிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நபர்களாக இருக்கும் பட்சத்தில், அத்தகைய பதிவு செய்யப்பட்ட நபர் அனைவரும் இந்த உட்பிரிவின் கீழ் வரி செலுத்தத் தேரிவு செய்தாலன்றி, பதிவு செய்யப்பட்ட நபர் இந்த உட்பிரிவின் கீழ் திட்டத்தைத் தேரிவு செய்ய தகுதியுடையவராக இருக்கமாட்டார்.";
(4) (3)-ஆம் உட்பிரிவில், இரண்டு இடங்களில் வரும் "(1)-ஆம் உட்பிரிவின் கீழ்" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது (2-A)-ஆம் உட்பிரிவு, நேர்விற்கேற்ப," என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;
(5) (4)-ஆம் உட்பிரிவில், "(1)-ஆம் உட்பிரிவின்" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது (2-A)-ஆம் உட்பிரிவு, நேர்விற்கேற்ப," என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;
(6) (5)-ஆம் உட்பிரிவில், "(1)-ஆம் உட்பிரிவின் கீழ்" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது (2-A)-ஆம் உட்பிரிவு, நேர்விற்கேற்ப," என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;
(7) (5)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் விளக்கங்கள் புகுத்தப்படுதல்
வேண்டும், அவையாவன:—
"விளக்கம்-1.- இந்தப் பிரிவின் கீழ் வரி செலுத்தத் தனது தகுதியை நிர்ணயிக்கும் பொருட்டு ஒரு நபரின் ஒட்டு மொத்த விற்பனை அளவை கணக்கிடும் நோக்கத்திற்காக, "ஒட்டு மொத்த விற்பனை அளவு" என்ற சொற்றொடர், இந்தச் சட்டத்தின் கீழ் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அவர் பதிவு செய்யப்படப் பொறுப்புடைமையாகும் நாள் வரை அத்தகைய நபரால் மேற்கொள்ளப்பட்ட வழங்குகைகளின் மதிப்பை உள்ளடக்கும், ஆனால் வட்டி அல்லது தள்ளுபடி வாயிலாக குறிப்பிடப்படுவதான சலுகைகளாக இருக்கும் பட்சத்தில், வைப்பீடுகள், கடன்கள் அல்லது முன்பணங்களை நீட்டிப்பதன் மூலம் வழங்கப்படும் விலக்களிக்கப்பட்ட சேவைகளின் மதிப்பினை உள்ளடங்காது.
விளக்கம்-2.- இந்தப் பிரிவின் கீழ் ஒரு நபரின் வரிச் செலுத்தத்தை நிர்ணயம் செய்யும் நோக்கங்களுக்காக, "மாநிலத்திற்குள்ளான மொத்த விற்பனை அளவு" என்ற சொற்றொடர் பின்வரும் வழங்கல்களை உள்ளடக்காது, அவையாவன:–
(i) நிதியாண்டின் ஏப்ரல் முதல் நாளிலிருந்து இந்தச் சட்டத்தின் கீழ் அத்தகைய நபர் பதிவு செய்யப்படப் பொறுப்புடைமையாகும் நாள் வரையுள்ள வழங்குகைகள்; மற்றும்
(ii) வட்டி அல்லது தள்ளுபடி வாயிலாக குறிப்பிடப்படுவதான சலுகைகளாக இருக்கும் பட்சத்தில் வைப்பீடுகள், கடன்கள் அல்லது முன்பணங்கள் நீட்டிப்பதன் மூலம் வழங்கப்படும் விலக்களிக்கப்பட்ட சேவைகள்.".
1322-ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 22-ஆம் பிரிவில் (1)-ஆம் உட்பிரிவின், இரண்டாம் வரம்புரைக்குப் பின்பு, பின்வரும் வரம்புரை மற்றும் விளக்கம் புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—
"மேலும் வரம்புரை:- ஆனால், அரசானது, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கையின் வாயிலாக, அத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, சரக்குகளின் வழங்கலில் பிரத்தியேகமாக ஈடுபட்டுள்ள வழங்குநரின் நேர்வில் ஒட்டு மொத்த விற்பனை அளவினை இருபது லட்சம் ரூபாயிலிருந்து நாற்பது லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உயர்த்தலாம்.
விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கங்களுக்காக, வட்டி அல்லது தள்ளுபடி வாயிலாக குறிப்பிடப்படுவதான சலுகைகளாக இருக்கும் பட்சத்தில் வைப்பீடுகள், கடன்கள் அல்லது முன்பணங்கள் நீட்டிப்பதன் மூலம் வழங்கப்படும் விலக்களிக்கப்பட்ட சேவைகளில் அவர் ஈடுபட்டிருந்தாலும் கூட, சரக்குகள் வழங்கலில் பிரத்தியேகமாக ஈடுபட்டுள்ளவராகக் கருதப்படுவர்.".
25-ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
5. முதன்மைச் சட்டத்தின் 25-ஆம் பிரிவில் (6)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவுகள் புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—
"(6A) பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும், வகுத்தரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும் மற்றும் முறையிலும் மற்றும் அத்தகைய காலத்திற்குள்ளும், உண்மையென சான்றளித்தளுக்கு உள்ளாதல் வேண்டும், அல்லது ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான சான்றை வழங்குதல் வேண்டும்:
வரம்புரை:- ஆனால், பதிவு செய்யப்பட்ட நபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படவில்லை எனில், மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அரசால் வகுத்துரைக்கப்படும் அத்தகைய முறையில் அத்தகைய நபருக்கு, மாற்றான மற்றும் நிலையான அடையாளம் காணும் வழிமுறைகள் வழங்கப்படுதல் வேண்டும்:
மேலும் வரம்புரை:- ஆனால், உண்மையென சான்றளித்தளுக்கு உள்ளாக தவறும் பட்சத்தில் அல்லது ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான சான்றுகளை வழங்கவோ அல்லது மாற்றான மற்றும் நிலையான அடையாளம் காணும் வழிமுறைகளை வழங்கவோ தவறும் பட்சத்தில், அத்தகைய நபருக்கு ஒதுக்கப்பட்ட பதிவானது செல்லாது எனக் கருதப்படும் மற்றும் இச்சட்டத்தின் பிற வகைமுறைகள் அத்தகைய நபர் பதிவு பெறாத போது உள்ளவாறு பொருந்தும்படி ஆகும்.
(6B) அறிவிக்கை தேதியன்று மற்றும் அது முதற்கொண்டு, ஒவ்வொரு நபரும், பதிவு செய்வதற்குத் தகுதியுடையவர்களாக இருக்க, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அரசால் குறித்துரைக்கப்படும் அத்தகைய முறையில், மேற்சொன்ன அறிவிக்கையில் குறித்துரைக்கப்படும் வகையில், உண்மையென சான்றளித்தலுக்கு உள்ளாதல் வேண்டும், அல்லது ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான சான்றை வழங்குதல் வேண்டும்:
வரம்புரை:- ஆனால், ஒரு நபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படவில்லை எனில், மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அரசால் வகுத்துரைக்கபடும் அத்தகைய முறையில், மேற்சொன்ன அறிவிக்கையில் குறித்துரைக்கப்படும் வகையில், மாற்றான மற்றும் நிலையான அடையாளம் காணும் வழிமுறைகள் அத்தகைய நபருக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
(6C) அறிவிக்கை தேதியன்று மற்றும் அது முதற்கொண்டு, தனிப்பட்ட நபரைத் தவிர, ஒவ்வொரு நபரும், பதிவு செய்வதற்குத் தகுதியுடையவர்களாக இருக்க, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அரசால் வகுத்துரைக்கப்படும் அத்தகைய முறையில், மேற்சொன்ன அறிவிக்கையில் குறித்துரைக்கப்படும் வகையில், உண்மையென சான்றளித்தலுக்கு உள்ளாதல் வேண்டும், அல்லது குடும்பத் தலைவர், நிர்வாக இயக்குநர், முழு நேர இயக்குனர், அத்தகைய பங்குதாரர்கள், சங்கத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள், அறங்காவலர் குழு, அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் மற்றும் பிற வகை நபர்களின் ஆதார் எண்ணை ஆதாரமாக வைத்திருப்பதற்கான ஆதாரத்தை வழங்குதல் வேண்டும்.
14வரம்புரை:- ஆனால், அத்தகைய நபர் அல்லது குறிப்பிட்ட வகை நபர்களுக்கு ஆதார் எண் ஒதுக்கப்படவில்லை எனில், மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அரசால் குறித்துரைக்கப்படும் அத்தகைய முறையில், மேற்சொன்ன அறிவிக்கையில் குறித்துரைக்கப்படும் வகையில், மாற்றான மற்றும் நிலையான அடையாளம் காணும் வழிமுறைகள் அத்தகைய நபருக்கு அல்லது குறிப்பிட்ட வகை நபர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
(6D) (6A)-ஆம் உட்பிரிவு அல்லது (6B)-ஆம் உட்பிரிவு அல்லது (6C)-ஆம் உட்பிரிவானது அத்தகைய நபர் அல்லது குறிப்பிட்ட வகை நபர்களுக்கு அல்லது மாநிலத்தின் எந்த பகுதிக்கும் பொருந்தாது என, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அரசால், அறிவிக்கையின் வாயிலாக குறிப்பிடப்படலாம்.
மையச் சட்டம் 18/2016.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக, "ஆதார் எண்" என்ற சொற்றொடர் 2016-ஆம் ஆண்டு ஆதார் சட்டத்தின் (நிதி மற்றும் பிற மானியங்கள், சலுகைகள் மற்றும் சேவைகளை இலக்கு ஒப்படைப்பு) சட்டத்தின் 2-ஆம் பிரிவில் (a)-கூறில் வழங்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்.".
31-A எனும் புதிய
6. முதன்மைச் சட்டத்தின் 31-ஆம் பிரிவுக்கு பின்பு, பின்வரும் பிரிவு
பிரிவைப் புகுத்துதல். புகுத்தப்படுதல் வேண்டும், அவையானவன:—
"31A. பெறுநருக்கான மின்னணு முறையில் பணம் செலுத்தம் மேற்கொள்ள வசதி.- அரசானது, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், குறித்துரைக்கப்படும் அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, குறித்துரைக்கப்படலாகும் பதிவு செய்யப்பட்ட நபர்களின் வகையினர், அவர்களால் மேற்கொள்ளப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் அல்லது இரண்டின் வழங்குகைக்கு, பெறுநருக்கு குறித்துரைக்கப்பட்ட மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கு வகை செய்ய வேண்டும் மற்றும் அத்தகைய பெறுநருக்கு அவ்வாறே பணம் செலுத்த அத்தகைய வாய்ப்பினை அளித்தல் வேண்டும்.".
39-ஆம் பிரிவிற்கான
7. முதன்மைச் சட்டத்தின் 39-ஆம் பிரிவில்,—
திருத்தம்.
(1) (1)-ஆம் மற்றும் (2)-ஆம் உட்பிரிவுகளுக்காக பின்வரும் உட்பிரிவுகள்
அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—
"(1) ஓர் உள்ளீட்டுச் சேவை விநியோகிப்பவராக அல்லது ஒரு குடியிராத வரிவிதிக்கத்தக்க நபராக அல்லது 10-ஆம் பிரிவின் அல்லது 51-ஆம் பிரிவின் அல்லது 52-ஆம் பிரிவின் வகைமுறைகளின் கீழ் வரி செலுத்துகிற நபராக அல்லாத, பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் அல்லது அதன் பகுதிக்கும், சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது அவை இரண்டின் உள்வரு மற்றும் வெளிப்புற வழங்குகைகள், துய்க்கப்பட்ட உள்ளீட்டு வரிவரவு, செலுத்த வேண்டிய வரி, செலுத்தப்பட்ட வரி மற்றும் அத்தகைய பிற விவரங்கள் அடங்கிய கணக்கு விவர அறிக்கை ஒன்றை, மின்னணுவியலாக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில், மற்றும் அத்தகைய காலத்திற்குள், அளித்தல் வேண்டும்:
வரம்புரை:- ஆனால், அரசானது, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, ஒவ்வொரு காலாண்டிற்கும் அல்லது அதன் பகுதிக்கும் கணக்கு விவர அறிக்கை ஒன்றை அளிக்க வேண்டிய பதிவு செய்யப்பட்ட நபர்களின் சில வகுப்பினரை அறிவிக்கை செய்யலாம்.
(2) 10–ஆம் பிரிவின் வகைமுறைகளின் கீழ் வரி செலுத்தும் பதிவு செய்யப்பட்ட நபர் ஒருவர் ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் அல்லது அதன் பகுதிக்கும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது அவை இரண்டின் உள்வரு வழங்குகைகள், செலுத்த வேண்டிய வரி, செலுத்தப்பட்ட வரி மற்றும் அத்தகைய பிற விவரங்கள் அடங்கிய, கணக்கு விவர அறிக்கை ஒன்றை, மின்னணுவியலாக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் விதத்தில், மற்றும் அத்தகைய காலத்திற்குள், அளித்தல் வேண்டும்.";
(2) (7)-ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது
அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—
15"(7) (1)-ஆம் உட்பிரிவின் கீழ், ஆனால் அதன்கீழான வரம்புரையில் குறிப்பிடப்பட்ட நபரை தவிர, அல்லது (3)-ஆம் உட்பிரிவின் கீழ் அல்லது (5)-ஆம் உட்பிரிவின் கீழ், கணக்கு விவர அறிக்கை ஒன்றை அளிக்க வேண்டுறுத்தப் பட்டிருக்கும் பதிவு பெற்ற நபர் ஒவ்வொருவரும், அத்தகைய கணக்கு விவர அறிக்கைக்கு இணங்க செலுத்த வேண்டிய வரியினை, அத்தகைய கணக்கு விவர அறிக்கையை அளிப்பதற்கு அவர் வேண்டுறுத்தப்பட்டுள்ள கடைசி தேதிக்கு முன்னர் அரசுக்கு செலுத்துதல் வேண்டும்:
வரம்புரை:- ஆனால், (1)-ஆம் உட்பிரிவின் வரம்புரையின் கீழ், கணக்கு விவர அறிக்கை அளிக்க வேண்டிய பதிவு பெற்ற நபர் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதத்தின் போதான சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது அவை இரண்டின் உள்வரு மற்றும் வெளிப்புற வழங்குகைகள், துய்க்கப்பட்ட உள்ளீட்டு வரிவரவு, செலுத்த வேண்டிய வரி, மற்றும் அத்தகைய பிற விவரங்களை கணக்கில் கொண்டு, குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில், மற்றும் அத்தகைய காலத்திற்குள், அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய வரியினை செலுத்துதல் வேண்டும்:
மேலும் வரம்புரை:- ஆனால், (2)-ஆம் உட்பிரிவின் கீழ் கணக்கு விவர அறிக்கை அளிக்க வேண்டிய பதிவு பெற்ற நபர் ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலாண்டின் போதான மாநிலத்திற்குள்ளான மொத்த விற்பனை அளவு, சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது அவை இரண்டின் உள்வரு வழங்குகைகள், மற்றும் அத்தகைய பிற விவரங்களை கணக்கில் கொண்டு, குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில், மற்றும் காலத்திற்குள், அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய வரியினை செலுத்துதல் வேண்டும்.".
44-ஆம் பிரிவிற்கான 8. முதன்மைச் சட்டத்தின் 44–ஆம் பிரிவின் (1)–ஆம் உட்பிரிவில் பின்வரும்
திருத்தம்.
வரம்புரையானது புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—
"வரம்புரை:- ஆனால், மன்றத்தின் பரிந்துரையின் பேரில் மற்றும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படுவதற்கான காரணங்களுக்காக, ஆணையர், அறிவிக்கையின் வாயிலாக, அதில் வகுத்துரைக்கப்படலாகும் பதிவு செய்யப்பட்ட நபர்களின் அத்தகைய வகையினர் ஆண்டறிக்கையினை அளிப்பதற்கான கால வரம்பை நீட்டிக்கலாம்:
மேலும் வரம்புரை:- ஆனால், மைய வரி ஆணையரால் அறிவிக்கப்பட்ட எந்தவொரு வரம்பின் நீட்டிப்பும் ஆணையரால் அறிவிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.".
49-ஆம் பிரிவிற்கானத் 9. முதன்மைச் சட்டத்தின் 49–ஆம் பிரிவில் (9)-ஆம் உட்பிரிவிற்கு பின்பு,
திருத்தம்.
பின்வரும் உட்பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—
"(10) பதிவுபெற்ற நபர் ஒருவர், பொதுவான இணைய முகப்பில், இந்தச் சட்டத்தின் கீழ் மின்னணுப் பணப்பேரேட்டில் இருக்கக்கூடிய வரி, வட்டி, தண்டத்தொகை, கட்டணம் அல்லது பிற தொகை எதனையும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில் மற்றும் அத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட வரி, மைய வரி, மாநில வரி அல்லது மேல்வரிக்கான மின்னணுப் பணப் பேரேட்டிற்கு மாற்றம் செய்திடலாம் மற்றும் அத்தகைய மாற்றமானது, இந்தச் சட்டத்தின் கீழ் மின்னணுப் பணப் பேரேட்டிலிருந்து திருப்பி செலுத்தப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.
(11) இந்தச் சட்டத்தின் கீழ் மின்னணுப் பணப் பேரேட்டிற்கு மாற்றப்பட்ட தொகையானது, (1)-ஆம் உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள கூறப்பட்ட பேரேட்டில் வைப்பீடு செய்யப்பட்டது எனக் கருதப்படுதல் வேண்டும்.".
50-ஆம் பிரிவிற்கானத் 10. முதன்மைச் சட்டத்தின் 50-ஆம் பிரிவின், (1)-ஆம் உட்பிரிவில், பின்வரும்
திருத்தம்.
வரம்புரை புகுத்ததப்படுதல் வேண்டும், அவையாவன:—
"வரம்புரை:- ஆனால், ஒரு வரிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வழங்குகைகள் பொறுத்தவரை மற்றும் 39-ஆம் பிரிவின் வகைமுறைகளின் படி, உரிய தேதிக்குப் பிறகு வழங்கப்பட்ட கணக்கு விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை, அத்தகைய காலத்திற்கு பொறுத்தவரை, 73-ஆம் பிரிவு மற்றும் 74-ஆம் பிரிவின் கீழ் எந்தொவொரு நடவடிக்கைகளையும் தொடங்கப்படுவதற்கு முன் அத்தகைய கணக்கு விவர அறிக்கையானது வழங்கப்பட்டிருந்தாலன்றி, செலுத்த வேண்டிய வரி மீதான வட்டியானது, மின்னணு பணப் பேரேட்டில் பற்று வைத்தலின் மூலம் செலுத்தப்படும் வரியின் அந்தப் பகுதியின் மீது விதிக்கப்படும்.".
1652-ஆம் பிரிவிற்கான
11. முதன்மைச் சட்டத்தின் 52-ஆம் பிரிவில்,—
திருத்தம்.
(1) (4)-ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரைகள் புகுத்தப்படுதல்
வேண்டும், அவையாவன:—
"வரம்புரை:- ஆனால், மன்றத்தின் பரிந்துரையின் பேரில் மற்றும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படுவதற்கான காரணங்களுக்காக, ஆணையர், அறிவிக்கையின் வாயிலாக, அதில் வகுத்துரைக்கப்படலாகும் பதிவு செய்யப்பட்ட நபர்களின் அத்தகைய வகையினர் அறிக்கையை அளிப்பதற்கான கால வரம்பை நீட்டிக்கலாம்:
மேலும் வரம்புரை:- ஆனால், மைய வரி ஆணையரால் அறிவிக்கப்பட்ட எந்தவொரு கால வரம்பின் நீட்டிப்பும் ஆணையரால் அறிவிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.";
(2) (5)-ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரைகள் புகுத்தப்படுதல்
வேண்டும், அவையாவன:—
"வரம்புரை:- ஆனால், மன்றத்தின் பரிந்துரையின் பேரில் மற்றும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படுவதற்கான காரணங்களுக்காக, ஆணையர், அறிவிக்கையின் வாயிலாக, அதில் வகுத்துரைக்கப்படலாகும் பதிவு செய்யப்பட்ட நபர்களின் அத்தகைய வகையினர் ஆண்டறிக்கையை அளிப்பதற்கான கால வரம்பை நீட்டிக்கலாம்:
மேலும் வரம்புரை:- ஆனால், மைய வரி ஆணையரால் அறிவிக்கப்பட்ட எந்தவொரு கால வரம்பின் நீட்டிப்பும் ஆணையரால் அறிவிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.".
53A என்ற பிரிவினைப்
12. முதன்மைச் சட்டத்தில் 53-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் பிரிவு
புகுத்துதல்.
புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—
"53A. குறிப்பிட்ட தொகைகளின் பரிமாற்றம்.- இந்தச் சட்டத்தின் கீழ் மின்னணு பணப்பேரேட்டிலிருந்து எந்தவொரு தொகையும், மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் அல்லது சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் (மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குதல்) சட்டத்தின் கீழ் மின்னணு பணப்பேரேடுக்கு மாற்றப்பட்டால், அரசானது, மின்னணு பணப்பேரேட்டிலிருந்து மாற்றப்பட்ட தொகைக்குச் சமமானதொரு தொகையை, மைய வரிக் கணக்கு அல்லது ஒருங்கிணைப்பட்ட வரிக் கணக்கு அல்லது மேல்வரிக் கணக்கிற்கு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் மற்றும் அத்தகைய காலத்திற்குள்ளும், மாற்றுதல் வேண்டும்.".
54-ஆம் பிரிவிற்கானத்
13. முதன்மைச் சட்டத்தின் 54-ஆம் பிரிவில் (8)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு,
திருத்தம்.
பின்வரும் உட்பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—
"(8-A) மைய அரசானது, திரும்ப கொடுக்கப்பட வேண்டிய மாநில வரியினை பிரித்துக் கொடுக்கும் நேர்வில், அரசானது திரும்ப கொடுக்கப்பட்ட தொகைக்கு சமமானதொரு தொகையை மைய அரசிற்கு மாற்றுதல் வேண்டும்.".
95-ஆம் பிரிவிற்கானத்
14. முதன்மைச் சட்டத்தின் 95-ஆம் பிரிவில்,—
திருத்தம்.
(1) (a) கூறில்,—
(a) "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்;
17(b) "100-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 101C-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;
(2) (e)-கூறுக்கு பின்பு, பின்வரும் கூறு புகுத்தப்படுதல் வேண்டும்,
அவையாவன:—
(f) "தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்பது 101A-ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முன்னதாகத் தீர்மானிக்கும் தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு என்று பொருள்டும்.".
101A எனும் புதிய 15. முதன்மைச் சட்டத்தின் 101-ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவு
பிரிவினைப் புகுத்துதல்.
புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—
"101A. மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் முன்னதாகத் தீர்மானிக்கும் தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது, இந்தச் சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாகும்.- இந்த அத்தியாயத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 101A ஆம் பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட முன்னதாகத் தீர்மானிக்கும் தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது, இந்தச் சட்டத்தின் கீழ் முன்னதாகத் தீர்மானிக்கும் தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பாகக் கருதப்படுதல் வேண்டும்.".
102-ஆம் பிரிவிற்கானத் 16. முதன்மைச் சட்டத்தின் 102-ஆம் பிரிவில்,
திருத்தம்.
(1) இரண்டு இடங்களில் வரும், "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;
(2) "அல்லது 101-ஆம் பிரிவு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "அல்லது இந்தச் சட்டத்தின் 101-ஆம் பிரிவு அல்லது மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 101C-ஆம் பிரிவு" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) "அல்லது மேல்முறையீட்டாளர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மேல்முறையீட்டாளர், அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
103-ஆம் பிரிவிற்கானத் 17. முதன்மைச் சட்டத்தின் 103-ஆம் பிரிவில்,—
திருத்தம்.
(1) (1)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவு புகுத்தப்படுதல்
வேண்டும், அவையாவன:—
"(1A) இந்த அத்தியாயத்தின் கீழ் தேசிய மேல்முறையீட்டு அதிகார
அமைப்பினால் அறிவிக்கப்பட்ட முன் தீர்மானமானது—
மையச் சட்ட எண் 43/1961
(a) விண்ணப்பதாரர்கள், தனித்துவமான நபர்களாக இருக்கையில், மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 101B–ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் தீர்ப்பை நாடியவர்கன் மற்றும் 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிரந்தரக் கணக்கு எண்ணைக் கொண்டுள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட நபர்களும்;
மையச் சட்ட எண் 43/1961
(b) கூறு (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் அதிகார வரம்பு அலுவலர்கள் மற்றும் 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரே நிரந்தரக் கணக்கு எண்ணைக் கொண்டுள்ள பதிவு செய்யப்பட்ட நபர்களும்.".
(2) (2)-ஆம் உட்பிரிவில் "(1)-ஆம் உட்பிரிவில்" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "மற்றும் (1-A)-ஆம் உட்பிரிவு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.
18104–ஆம் பிரிவிற்கானத்
18. முதன்மைச் சட்டத்தின் 104-ஆம் பிரிவில் (1)-ஆம் உட்பிரிவில்,—
திருத்தம்.
(1) "அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;
(2) "101 -ஆம் பிரிவின்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "இந்தச் சட்டத்தின் 101-ஆம் பிரிவின் அல்லது மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 101ஊ-ஆம் பிரிவு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.
105 ஆம் பிரிவிற்கானத்
19. முதன்மைச் சட்டத்தின் 105–ஆம் பிரிவில்,—
திருத்தம்.
(1) ஓரத் தலைப்பிற்குப் பதிலாக, பின்வரும் ஓரத் தலைப்பு அமைக்கப்படுதல்
வேண்டும், அவையாவன:—
"அதிகார அமைப்பு, மேல்முறையீட்டு அதிகார அமைப்பு மற்றும் தேசிய
மேல்முறையீட்டு அதிகார அமைப்பு ஆகியவற்றின் அதிகாரங்கள்.";
(2) (1)-ஆம் உட்பிரிவில், "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;
(3) (2)-ஆம் உட்பிரிவில், இரண்டு இடங்களில் வரும் "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.
106-ஆம் பிரிவிற்கானத்
20. முதன்மைச் சட்டத்தின் 106-ஆம் பிரிவில்,—
திருத்தம்.
(1) ஓரத்தலைப்பிற்குப் பதிலாக, பின்வரும் ஓரத்தலைப்பு அமைக்கப்படுதல்
வேண்டும், அவையாவன:—
"அதிகார அமைப்பு, மேல்முறையீட்டு அதிகார அமைப்பு மற்றும் தேசிய
மேல்முறையீட்டு அதிகார அமைப்பு ஆகியவற்றின் நடைமுறை.";
(2) "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.
171-ஆம் பிரிவிற்கானத்
21. முதன்மைச் சட்டத்தின் 171-ஆம் பிரிவில், (3)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு,
திருத்தம்.
பின்வரும் உட்பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—
"(4) (2)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள, அதிகார அமைப்பு, கூறப்பட்ட துணைப் பிரிவின் கீழ் தேவைப்பட்டப்படியான ஆய்வினை நடத்திய பின்னர் பதிவு செய்யப்பட்ட நபர் எவரும் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் இலாபம் ஈட்டியதாக முடிவிற்கு வருகையில், அத்தகைய நபர் இலாபம் ஈட்டிய தொகையில் பத்து விழுக்காட்டிற்கு சமமான அபராதத்தை செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கும்:
வரம்புரை:- ஆனால், அதிகார அமைப்பினால் ஆணை நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் இலாபம் ஈ.டிய தொகை வைப்பீடு செய்யப்பட்டால் எந்தவொரு அபராதமும் விதிக்கப்பட மாட்டாது.
விளக்கம்.- இப்பிரிவின் நோக்கங்களுக்காக, "இலாபம் ஈட்டிய" என்ற சொற்றொடர் என்பது சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது அவை இரண்டின் வழங்குகை மீதான வரிவீதத்தில் குறைப்பினால் அல்லது உள்ளீட்டு வரிவரவின் பயனினை சரக்குகள் மற்றும் சேவைகள் அல்லது அவை இரண்டின் விலையில் சரிசமமான வீதத்தில் குறைப்பு செய்வதன் மூலமான பயனினை வழங்காமல் இருத்தல் எனப் பொருள்படும்.".
19அறிவிக்கைக் கான
திருத்தம்.
22. (1) 2017-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 14-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பு வெளியீட்டின் பாகம் II-பரிவு 2-ல் பக்கங்கள் 20-22ல் வெளியிடப்பட்ட II(2)/CTR/917(e-2)/2017-ஆம் எண்ணுள்ள வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் அறிவிக்கை மூலம் 2017-ஆம் ஆண்டு ஜீன் திங்கள் 29-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பு வெயிட்டின் பாகம் II-பிரிவு 2-ல் பக்கங்கள் 68-75–இல் வெளியிடப்பட்ட II(2)/CTR/532(d-5)/2017-ஆம் எண்ணுள்ள வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் அறிவிக்கையின் அட்டவணையில் புகுத்தப்பட்ட பின்வரும் வரிசை எண் மற்றும் அதன் தொடர்பான பதிவுகள், 2017-ஆம் ஆண்டு ஜீலைத் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும், அவையாவன:—
| (1) | (2) | (3) |
| "103 A | 26 | செறிவூட்டப்பட்ட யுரேனியத் தாது.". |
(2) (1)-ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக, எல்லா இன்றியமையா நேரங்களிலும், தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 11-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் கூறப்பட்ட அறிவிக்கை முன் தேதியிட்ட பயனுடன் திருத்துவதற்கு அரசிற்கு அதிகாரம் உள்ளதைப்போன்று, (1)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கை முன் தேதியிட்ட பயனுடன் திருத்தம் செய்ய அரசிற்கு அதிகாரம் இருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.
(3) வசூலிக்கப்பட்ட அத்தகைய வரி அனைத்தும், ஆனால் (1)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையானது, எல்லா இன்றியமையா நேரங்களிலும் நடைமுறையில் இருந்திருந்தால் அவ்வாறு வசூலிக்கப்படாமல் இருந்திருப்பவை, திரும்பப் வழங்கப்பட இயலாது.
தமிழ்நாடு அவசரச் சட்டம்
நீக்கறவு மற்றும் காப்பு.
23. (1) 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி
10/2019.
(திருத்த) அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.
தமிழ்நாடு சட்டம் 19/2017. (2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான மேற்படிச் சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர். சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
20 21தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 21 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 11/2020.
தமிழ்நாடு மாநிலத்தின் காவேரி ஆற்றுப்படுகை மண்டலத்திலுள்ள வேளாண்
நிலங்களைப் பாதுகாப்பதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட
மற்றும் வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பொருள் 2. இந்தச் சட்டத்தில் தறுவாயின் தேவை வேறு பொருள் குறித்தாலன்றி,-
வரையறைகள்.
(a) "வேளாண்மைவேளாண்மை" என்பது உணவு, தீவனம், நார்ப்பொருள், உயிரி எரிபொருள் மற்றும் வேளாண்-தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றின் நோக்கத்திற்காக தாவரங்கள் அல்லது பயிர்கள் சாகுபடி, வேளாண்மை, தோட்டக்கலை அல்லது தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு அல்லது காடு வளர்ப்பு அல்லது பிற செயற்பாடுகள் மூலம் உற்பத்தி எதுவும் என்று பொருள்படும்;
(b) "வேளாண் நிலம்வேளாண் நிலம்" என்பது, வேளாண் பயன்பாட்டிலுள்ள அனைத்து
நிலங்களும் என்று பொருள்படும்;
(c) "அதிகாரஅமைப்புஅதிகாரஅமைப்பு" என்பது, 5-ஆம் பிரிவின் கீழ் அமைத்துருவாக்கப்பட்ட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு என்று பொருள்படும்;
(d) "மாவட்டம்மாவட்டம்" என்பதுஎன்பது வருவாய் மாவட்டம் என்று பொருள்படும்;
(e) "மாவட்ட ஆட்சியர்மாவட்ட ஆட்சியர்" என்பது மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகளைச் செய்ய அரசால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள வேறு அலுவலர் எவரும் என்று பொருள்படும்;
(f) "அரசுஅரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;
(g) "வகுத்துரைக்கப்பட்டவகுத்துரைக்கப்பட்ட" என்பது விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது
என்று பொருள்படும்;
(h) "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்" என்பது முதலாம்
இணைப்புப் பட்டியலில் உள்ள குறிப்பிட்ட பகுதி என்று பொருள்படும்;
(i) "இணைப்புப்பட்டியல்இணைப்புப்பட்டியல்" என்பது இந்தச் சட்டத்தில் இணைக்கப்பட்ட
இணைப்புப் பட்டியல் என்று பொருள்படும்;
(j) "மாநிலம்மாநிலம்" என்பது, தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்;
வேளாண்மையின் 3. அரசு,
மேம்பாடு.
(a) வேளாண்மையின் நிலையான வளர்ச்சிக்கு, இருக்கின்ற வேளாண் நிலங்களைப் பயன்படுத்தவும் மற்றும் வேளாணற்ற பயன்பாடு அல்லது பிற வளர்ச்சியில் தேவையற்ற முறையில் வேளாண் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தவும்;
(b) பயிர்கள் மற்றும் பண்ணைகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் மேம்பட்ட சாகுபடி முறைகள் மூலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மேம்படுத்தவும்;
(c) வேளாண் துறையில் வெள்ள நீர் மேலாண்மை மற்றும் பிற இடுபொருட்கள் உள்ளடங்கலான நீரின் உகந்த பயன்பாட்டின் வளர்ச்சிக்காகவும்;
22(d) நிலையான வேளாண் மேம்பாட்டிற்காக வேளாண் சார்ந்த மற்றும்
அதனுடன் தொடர்புடைய தொழில்களை மேம்படுத்துவதற்காகவும்;மற்றும்
(e) வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் திறன்
மேம்பாடு உள்ளிட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் வளர்ச்சிக்காகவும்.
தடைசெய்தல். 4. (1) எந்தவொரு நபரும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இரண்டாம் இணைப்புப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள எந்த ஒரு புதிய திட்டத்தையோ அல்லது புதிய செயற்பாட்டையோ மேற்கொள்ளுதல் ஆகாது.
(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும்,-
a) இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்பாட்டிலுள்ள செயல்கள் அல்லது திட்டங்களை பாதித்தலாகாது;
b) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலைத் தொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் மற்றும் பிற பயன்பாடுகள் போன்ற உள்கட்டமைப்பு ஆகியவற்றை பாதித்தலாகாது.
அதிகார
அமைப்பின்
அமைத்
5. (1) இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கிய தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு என்ற பெயரில் ஓர் அதிகார அமைப்பு இருத்தல் வேண்டும்:-
துருவாக்கம்.
i. முதலமைச்சர்
- தலைவர்;
ii. துணை முதலமைச்சர் - உறுப்பினர்;
iii. நிதித் துறை அமைச்சர் - உறுப்பினர்;
iv. சட்டத் துறை அமைச்சர் - உறுப்பினர்;
v. வேளாண்மைத்துறை அமைச்சர் - உறுப்பினர்;
vi. சுற்றுச் சூழல் துறை அமைச்சர் - உறுப்பினர்;
vii. நகராட்சி நிர்வாகம் மற்றும் - உறுப்பினர்;
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
viii. தொழில் துறை அமைச்சர் - உறுப்பினர்;
ix. ஊரக தொழில் துறை - உறுப்பினர்;
அமைச்சர்
x. கால்நடை பராமரிப்புத் துறை - உறுப்பினர்;
அமைச்சர்
xi. மீன்வளத் துறை அமைச்சர் - உறுப்பினர்;
xii. அரசுத் தலைமைச் செயலாளர் - பதவி வழி உறுப்பினர்;
xiii. வேளாண் உற்பத்தி ஆணையர் - பதவி வழி
மற்றும் அரசு செயலாளர், உறுப்பினர்- வேளாண்மைத் துறை செயலாளர்;
xiv. அரசுச் செயலாளர், நிதித் துறை - பதவி வழி உறுப்பினர்;
xv. அரசுச் செயலாளர், கால்நடை - பதவி வழி பராமரிப்பு, பால்வளம் மற்றும் உறுப்பினர்; மீன்வளத் துறை
துறை
xvi. அரசுச் செயலாளர், தொழில் - பதவி வழி உறுப்பினர்
xvii. அரசுச் செயலாளர், ஊரக வளர்ச்சி - பதவி வழி மற்றும் ஊராட்சித் துறை உறுப்பினர்;
23துறை
xviii. அரசுச் செயலாளர், சுற்றுச் சூழல் - பதவி வழி மற்றும் வனத் துறை உறுப்பினர்; xix. அரசுச் செயலாளர், வீட்டு வசதி - பதவி வழி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உறுப்பினர்; xx. அரசுச் செயலாளர், பொதுப்பணித் - பதவி வழி உறுப்பினர்; xxi. துணை வேந்தர், தமிழ்நாடு - பதவி வழி வேளாண்மைப் பல்கலைக்கழகம். உறுப்பினர்;
xxii. அரசால் முன்மொழியப்படலாகும் - உறுப்பினர்கள்;
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை எடுத்துரைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்
xxiii. அரசால் முன்மொழியப்படலாகும் - உறுப்பினர்கள்;
மூன்று விவசாயப் பிரதிநிதிகள்
xxiv. அரசால் முன்மொழியப்படலாகும் - உறுப்பினர்கள்;
வேளாண் அறிவியல், தோட்டக் கலை அறிவியல், கால்நடை மற்றும் விலங்கியல் துறையில் ஒவ்வொன்றிலும் ஒரு நிபுணர்
(2) அதிகார அமைப்பின் தலைமையிடமானது சென்னையில் இருத்தல்
வேண்டும்.
(3) அதிகார அமைப்பானது கூட்டுரும அமைப்பாக இருத்தல் வேண்டும். தொடர்ந்த நிலைப்பாடும் தனித்த ஓர் இலச்சினையும் கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் மேற்சொன்ன பெயரில் தான் வழக்கிடுதலும் வழக்கிடப்படுதலும் வேண்டும்.
6. (1) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர், அவருடைய நியமனத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் காலம் பதவியிலிருப்பார் மற்றும் அவர் மறுநியமனம் செய்வதற்கு தகுதியுடையவராவர்;
வரம்புரையாக, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓர் ஆண்டு காலத்திற்கு அல்லது அவரது பதவிக்காலம் காலாவதியாகும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை பதவியிலிருப்பர் மற்றும் மறு நியமனத்திற்கு தகுதியுடையவராவர்.
அதிகார அமைப்பிற்கு நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் பணியமர்த்தத் திற்கான வரையறைகள் மற்றும் வரைக்கட்டுகள்.
(2) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் அரசுக்கு முகவரியிட்டு அவருடைய கைப்பட எழுதிய கடிதம் மூலமாக பதவியிலிருந்து விலகலாம். ஆனால் அவருடைய பதவி விலகல் கடிதம் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் வரை அவர் தொடர்ந்து பதவியிலிருத்தல் வேண்டும்.
(3) நியமனம் செய்யப்பட்ட ஓர் உறுப்பினர் பதவி விலகல், இறப்பு, பதவி நீக்கம், தகுதியிழப்பு அல்லது பிறவாறான வகையில் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவரின் பதவி காலியாகும் பொழுது அரசு அத்தகைய காலியிடத்தை நிரப்புவதற்காக புதிய உறுப்பினர் ஒருவரை இரண்டு மாதங்களுக்குள் நியமனம் செய்ய வேண்டும்.
(4) அரசானது, கீழே குறித்துரைக்கப்பட்ட தகுதியிழப்புகளில் ஏதாவதொன்றினை நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் செய்திருக்கிறாரென்றால் அவரது பதவியிலிருந்து அவரை நீக்கலாம். அதாவது:-
(a) விடுவிக்கப்படாத நொடிப்பு நிலையராகுதல் அல்லது
(b) குற்றம் ஒன்றிற்காக தண்டிக்கப்பட்டு சிறைத் தண்டனைக்காக
தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவரானால்; அல்லது
(c) மனநலம் பாதிக்கப்பட்டவராகுதல் மற்றும் தகுதியுடைய
நீதிமன்றமொன்றினால் அவ்வாறாக விளம்புகை செய்யப்பட்டிருத்தல்.
24(5) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் வகுத்துரைக்கப்பட்டவாறான அத்தகைய விகிதத்தில் பணி செய்வதற்கான கட்டணத்தை மற்றும் பயணப்படியைப் பெறுவதற்கு தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
அதிகார அமைப்பின் கூட்டங்கள்.
7. (1) அதிகார அமைப்பு தேவைப்படலாகின்றவாறான அத்தகைய நேரத்தில் மற்றும் இடத்தில் கூடுதல் வேண்டும் மற்றும் தலைவரால் தீர்மானிக்கப்படலாகும் நடைமுறைகளின் விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
வரம்புரையாக அதிகார அமைப்பானது குறைந்தபட்சம் வருடத்திற்கு
இரண்டு முறையாவது கூடுதல் வேண்டும்.
(2) தலைவர், அதிகார அமைப்பின் கூட்டத்திற்கு தலைமை வகித்தல்
வேண்டும்.
(3) தலைவர் கலந்து கொள்ள இயலாத நிலையில், கலந்து கொள்ளும் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் ஒருவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
(4) கூட்டத்திற்காக குறைவெண் வரம்பானது அதிகார அமைப்பின்
உறுப்பினர்களில் ஐம்பது விழுக்காடு இருத்தல் வேண்டும்.
(5) அதிகார அமைப்பின் கூட்டங்களின் அறிவிப்பு மற்றும் அதிகார அமைப்பின் அலுவல் நடவடிக்கை தொடர்பான இடம் மற்றும் நடைமுறைகள் தலைவரால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.
8. அதிகார அமைப்பு பின்வரும் செயற்பணிகளை செய்தல் வேண்டும்,
அதாவது:-
அதிகார அமைப்பின் செயற்பணிகள்
a) உணவுப் பாதுகாப்பிற்கான உள்கட்டமைப்புகளை வளர்ப்பதற்கான
நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்;
b) வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பிற்காகவும் மேம்பாட்டிற்காகவும் கொள்கைகளை பரிந்துரைத்தல்;
c) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பாசனம் மற்றும்
வெள்ள நீர் மேலாண்மைத் திட்டங்களை பரிந்துரைத்தல்;
d) வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக
தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்;
e) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் அடிப்படையிலான மற்றும் அது சார்ந்த தொழிலகங்களின் மேம்பாட்டினை எளிதாக்குதல்;
f) வேளாண்மை மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளுக்காக வேளாண் நிலங்களைப் பாதுகாத்து விவசாயப் பொருளாதாரத்திற்கு நிலைத்தன்மையை வழங்குவதற்கு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்;
g) போதுமான நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல், தனியார் நிலங்களில் பண்ணை குட்டைகளை உருவாக்குதல் மற்றும் தடுப்பு அணைகள் போன்ற திறன் மிகுந்த மழைநீர் சேகரிப்பு முறைகளின் மூலம் நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்காக நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்;
h) வேளாண்மையில் குறிப்பாக நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களில் சொட்டு நீர்ப்பாசனம் உள்ளடங்கலாக திறன் மிகுந்த நீர் பயன்பாட்டிற்காக நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்;
i) ஒருங்கிணைந்த பண்ணைய முறை, பசுந்தாள் உரமிடுதல், மண் சோதனை அடிப்படையிலான உரப் பயன்பாடு, மாற்று பயிர் சாகுபடி, நெல் தரிசு நிலங்களில் பயறு சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை நடைமுறைகள் மேற்கொள்ளுதல் போன்றவற்றினால் மண்ணின் வளத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்;
25j) பாசனம் மற்றும் மதிப்புக் கூட்டுதல் ஆகியவற்றின் நோக்கத்திற்காக சூரிய சக்தியை திறம்பட பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்;
k) பண்ணை வருமானத்தை அதிகரிக்க உழவர் சந்தைகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான புற விற்பனையகம் போன்ற வேளாண் விளை பொருட்களின் நேரடி விற்பனை குறித்த பரிந்துரைகளை வழங்குதல்;
l) வேளாண்மை மற்றும் அது தொடர்புடைய துறைகளுக்குத் தொடர்பான இடுபொருட்களை வழங்குதல் மற்றும் வேளாண் விளைபொருட்களை பதப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தல்;
m) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டும் உணவு பூங்காக்கள் மற்றும் வேளாண் பதப்படுத்தும் தொதிகளை நிறுவுவதை ஊக்குவிப்பதற்கான பல்வேறு வழிகளை கண்டுபிடித்தல்;
n) வேளாண் நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் இயந்திரங்களின் உகந்த பயன்பாட்டை ஊக்குவித்தல்;
o) வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கு பங்களிப்பதற்கான காரணிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகளின் விளைவு குறித்து பல்வேறு ஆய்வுகளைத் மேற்கொள்ளுதல்;
p) வேளாண் தொழிலாளர்களுக்கு போதுமான, நிலையான
வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்;
q) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் காடு வளர்ப்பு
மற்றும் சமூகக் காடு வளர்ப்பினை ஊக்குவித்தல்;
r) மேற்சொன்ன வேளாண் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை
வகுத்தல் மற்றும் அத்தகைய திட்டங்களுக்காக நிதி திரட்டுதல்; மற்றும்
s) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற செயல்பாடுகளைச்
செய்தல்.
9. (1) அதிகார அமைப்பிற்கு உதவுவதற்காக பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்ட ஒரு மாவட்ட அளவிலான குழு இருத்தல் வேண்டும், அதாவது:-
a) மாவட்ட ஆட்சியர் - பதவி வழித்
மாவட்ட அளவிலான குழுவின் அமைத்துரு வாக்கம்.
தலைவர்;
b) வேளாண்மை துறை இணை - பதவி வழி
இயக்குநர்
ஒருங்கிணைப்பாளர்;
c) கால்நடை பராமரிப்புத் துறை - பதவி வழி
இணை இயக்குநர்
உறுப்பினர்;
d) தோட்டக்கலைத் துறை துணை - பதவி வழி
இயக்குநர்
உறுப்பினர்;
e) வேளாண்மை விற்பனை மற்றும் - பதவி வழி
வேளாண் வணிகத் துறை துணை உறுப்பினர்; இயக்குநர்
f) மீன்வளத் துறை துணை - பதவி வழி
இயக்குநர்
உறுப்பினர்;
26g) மாவட்ட வன அலுவலர் - பதவி வழி
உறுப்பினர்;
h) செயற்பொறியாளர் (வேளாண்மை - பதவி வழி
பொறியியல்)
உறுப்பினர்;
i) மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் - பதவி வழி
உறுப்பினர்;
j) செயற்பொறியாளர், நீர்வள ஆதார - பதவி வழி
அமைப்பு
உறுப்பினர்;
k) மேற்பார்வை பொறியாளர், - பதவி வழி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் உறுப்பினர்; பகிர்மானக் கழகம்
l) மாவட்ட ஆட்சியாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளின்
இரண்டு பிரதிநிதிகள்
(2) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் அவர் நியமனம்
செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று வருட காலத்திற்கு பதவியில் இருப்பார் மற்றும் அவர் மறு நியமனம் பெற தகுதியுடையவர் ஆவார்.
(3) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர், அவரது கைப்பட மாவட்ட ஆட்சியருக்கு முகவரியிட்டு எழுதிய கடிதம் மூலமாக பதவியிலிருந்து விலகலாம். ஆனால் அவருடைய பதவிவிலகல் கடிதம் மாவட்ட ஆட்சியரால் ஏற்றுக் கொள்ளப்படும் வரை அவர் தொடர்ந்து பதவியில் இருத்தல் வேண்டும்.
(4) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் பதவி விலகல், இறப்பு, பதவி நீக்கம், தகுதி நீக்கம் அல்லது பிறவாறான வகையில் உறுப்பினர் ஒருவரின் பதவி காலியாகும் போது, மாவட்ட ஆட்சியர் அத்தகைய காலியிடத்தை நிரப்ப புதிய உறுப்பினர் ஒருவரை இரண்டு மாதங்களுக்குள் நியமனம் செய்ய வேண்டும்.
(5) கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தகுதியின்மைக்கு அவர் உள்ளானால், மாவட்ட ஆட்சித் தலைவர் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரை அவருடைய பதவியிலிருந்து நீக்கலாம், அதாவது:-
(a) விடுவிக்கப்படாத நொடிப்பு நிலையராக ஆகியிருக்கிறா
ரென்றால்;
(b) குற்றம் ஒன்றிற்காக தண்டிக்கப்பட்டுள்ளார் மற்றும் சிறைத் தண்டனைக்காக தண்டனைத் தீர்ப்பினைப் பெற்றவராக இருக்கிறாரென்றால்; அல்லது
(c) மனநிலை பாதிக்கப்பட்டவராக மற்றும் தகுதியுடைய
நீதிமன்றமொன்றினால் அவ்வாறு அறிவிக்கப்பட்டு இருக்கிறாரென்றால்
(6) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய விகிதத்தில் அமர்வு கட்டணம் மற்றும் பயணப்படியைப் பெறுவதற்கு தகுதியுடையவராக இருப்பர்.
மாவட்ட
10. (1) மாவட்ட அளவிலான குழுவானது, அதிகார அமைப்பினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நிறைவேற்றுதல் வேண்டும் மற்றும் மாவட்டத்தில் அதன் செயல்பாடுகளை நிறைவேற்ற அதிகார அமைப்பிற்கு உதவ வேண்டும்.
அளவிலான குழுவின் செயல்பாடுகள்.
(2) மாவட்ட அளவிலான குழுவானது, அதன் செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் தேவையானதாகக் கருதப்படும் தொடர்புடைய துறைகளில் நிபுணர்களின் கருத்தினை வேண்டலாம்.
27அதிகார 11. (1) தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு நிதியம்
என்றழைக்கப்படும் நிதியம் ஒன்று அதிகார அமைப்பிற்கு இருத்தல் வேண்டும்.
அமைப்பின் நிதியம்.
(2) மாநில அரசுத் தொகுப்பு நிதியிலிருந்து அரசினால் செலுத்தப்படும்
அனைத்து பணங்களும் நிதியத்தில் வரவு வைக்கப்பட வேண்டும்.
(3) அதிகார அமைப்பினால் பெறப்பட்ட அனைத்து பணங்களும் நேர்விற்கேற்ப பாரத ஸ்டேட் வங்கி அல்லது ஏதேனும் பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கியில் வைப்பீடு செய்யப்பட வேண்டும்.
செலவினம்.
12. அதிகார அமைப்பின் கீழ் பணியாற்றும் பணியாளரின் எதிர்பாராச் செலவினம் உள்பட சம்பளங்கள் மற்றும் படிகளுக்காக அதிகார அமைப்பினால் உட்படுத்தப்படும் செலவினம் நிதியத்திலிருந்து ஈடுசெய்யப்படுதல் வேண்டும்.
தணிக்கை.
13. (1) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும் முறையிலும்
அதிகார அமைப்பின் கணக்குகள் பேணப்பட வேண்டும்.
(2) அதிகார அமைப்பானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும் முறையிலும் கணக்குகளின் ஆண்டறிக்கையை தயார் செய்ய வேண்டும்.
மையச்சட்டம் 18/2013
(3) 2013 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின் கீழ் ஒரு நிறுமத்தின் தணிக்கையாளராக செயல்பட தகுதியான நபர் ஒருவரால் ஆண்டிற்கு ஒரு முறை அதிகார அமைப்பின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
(4) தணிக்கையாளரால் சான்றளிக்கப்பட்ட அதிகார அமைப்பின் கணக்குகள், தணிக்கை அறிக்கையுடனும், அதன் மீதான அதிகார அமைப்பின் கருத்துருக்களுடனும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள் அரசிற்கு அனுப்பப்பட வேண்டும்.
(5) குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய காலத்திற்குள் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் தணிக்கை அறிக்கையில் வெளிப்படுத்தலாம் மற்றும் அத்தகைய பணிப்புரைகளுக்கு, அதிகார அமைப்பானது உடன்படுதல் வேண்டும். அரசு, ஆணையினால், தீர்வு காணும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய நடவடிக்கையை எடுக்குமாறு அதிகார அமைப்பிற்கு பணிப்புரை பிறப்பிக்கலாம்.
ஆண்டறிக்கை.
14. (1) அதிகார அமைப்பானது, ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிற்குப் பின்பு இயன்ற வரை விரைவில் அத்தகைய தேதிக்கு முன்பும் பரிந்துரைக்கப்பட்ட அத்தகைய வடிவத்திலும் முந்தைய ஆண்டில் அதன் செயல்பாடுகள் குறித்த கணக்கினைத் தெரிவிக்கும் ஓர் அறிக்கை மற்றும் நடப்பு நிதியாண்டில் அதிகார அமைப்பினால் மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், அந்த நடவடிக்கைக் கணக்கைப் பற்றிய அறிக்கை ஆகியவற்றை அரசுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
(2) அரசானது, (1) ஆம் உட்பிரிவின் கீழ் அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பின்பு இயன்றவரை விரைவில் அத்தகைய ஒவ்வொரு அறிக்கையையும் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்தல் வேண்டும்.
15. அதிகார அமைப்பு அல்லது மாவட்ட அளவிலான குழுவின் செயல் அல்லது நடவடிக்கை எதுவும், அதன் உறுப்பினர்களுக்கிடையே காலியிடம் எதுவும் இருக்கிறது அல்லது அதன் அமைத்துருவாக்கத்தில் குறைபாடு எதுவும் இருக்கிறது என்ற காரணத்தால் மட்டுமே செல்லத்தகாததாக ஆக்குதல் கூடாது.
அதிகார அமைப்பு அல்லது மாவட்ட அளவிலான குழுவின் நடவடிக்கைகளை செல்லத்தகாதது ஆக்குதல் கூடாது.
28தண்டத்தொகை. 16. 4-ஆம் பிரிவின் வகைமுறைகளை மீறுகிற எவரொருவரும், ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் ஆனால் ஆறு மாதங்களுக்கு குறையாத ஒரு கால அளவிற்கு சிறைத் தண்டனையும் மற்றும் ஐம்பது லட்சம் ரூபாய் வரை நீடிக்கலாகும், ஆனால் பத்து லட்சம் ரூபாய்க்கு குறையாத மற்றும் தொடர்ச்சியான மீறலைப் பொறுத்த வகையில் கூடுதல் அபராதத்துடன், அத்தகைய மீறலின் ஒவ்வொரு நாளும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தும் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
நிறுமங்களால்
செய்யப்படும்
குற்றச்
செயல்கள்.
17. (1) நிறுமம் ஒன்றினால் இந்தச் சட்டத்தின் படியான குற்றம் ஒன்று செய்யப்படுகிறவிடத்து குற்றத்தை செய்த நேரத்தில் இருந்த நபர் ஒவ்வொருவரும் மற்றும் அதற்கு பொறுப்பாக இருந்துள்ள நபரும் மற்றும் நிறுமத்தின் அலுவலரால் பணிகளைச் செய்வதற்கான அலுவலர் ஒவ்வொருவரும் அதே போல் நிறுமமும் அந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் அதன்படி தண்டிப்பதற்கும் கட்டுப்பாடுடையதாக இருத்தல் வேண்டும்.
ஆனால் இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும் அத்தகைய நபர் எவரும் அந்தக் குற்றம் அவருடைய அறிவுக்கு எட்டாத வகையில் நடைபெற்றிருக்கிறவிடத்து அல்லது அத்தகைய குற்றம் நடைபெறாத வண்ணம் அனைத்து உரிய நடவடிக்கைகளையும் அவர் எடுத்திருக்கிறார் என்று நிரூபிக்கிறாரென்றால் அவரை தண்டனைக்கு உள்ளாக்குதல் ஆகாது.
(2) உட்பிரிவு (1) ல் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பின் இந்தச் சட்டத்தின் படியான குற்றம் ஒன்று நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரும் பங்கு கொண்டிருப்பதன் பேரில் அவர் இசைவுடன் அல்லது மறைமுக ஆதரவுடன் அல்லது கவனமின்மை இருக்கத்தக்கதாக அந்தக் குற்றம் செய்யப்பட்டிருக்கிறதென்று நிரூபிக்கப்பட்டிருக்கிறதென்றால், அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் குற்றவாளி என்று கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டு மற்றும் அதனடிப்படையில் தண்டிக்கப்படுதலும் வேண்டும்.
விளக்கம்.-விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக,-
(a) "நிறுமம்" என்பது கூட்டுருமம் எதுவும் மற்றும் ஒரு நிறுவகம்
அல்லது பிற தனி நபர்களின் கழகம் என்று பொருள்படும்; மற்றும்
(b) ஒரு நிறுவகம் தொடர்பாக "இயக்குநர்" என்பது நிறுவகத்திலுள்ள
ஒரு கூட்டாளி என்று பொருள்படும்.
நுழைதல்,
18. (1) வருவாய்த் துறையின் வருவாய் கோட்டாட்சியர் பதவிக்குக்
குறையாத எந்தவொரு அலுவலரும் அல்லது இது தொடர்பாக அரசால்
தேடுதல் மற்றும் பற்றுகைக்கான அதிகாரம்.
அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவரும் அல்லது துணைக் காவல்
கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத காவல்துறை அலுவலர் எவரும்,
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டத்தின் வகைமுறைகளுக்கு
முரணாக, சட்டத்தின் வகைமுறைகளின் இணக்கத்தை உறுதிசெய்யும் நோக்கில்
எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என நம்புவதற்கான
காரணத்தைக் கொண்டிருந்தால், அவர் எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து
தேடலாம்; மற்றும் அத்தகைய செயலுக்காக பயன்படுத்தியதாகக் கருதப்படும்
எந்தவொரு பொருள், இயந்திரங்கள், உபகரணங்கள் போன்றவற்றையும்
கைப்பற்றலாம்; மற்றும் அத்தகைய கைப்பற்றுதல் தொடர்பானதொரு
அறிக்கையை, நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும்
அத்தகைய கைப்பற்றுகை செய்யப்பட்ட நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள்,
அந்தப் பகுதியின் அதிகார வரம்பைக் கொண்டுள்ள மாவட்ட அளவிலான
குழுவுக்கு அறிவிப்பு செய்தல் வேண்டும்.
(2) இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் அனைத்துத் தேடுதல்களும், மையச்சட்டம் 2/1974.
1972 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கிணங்கிய வகையில் செய்யப்படுதல் வேண்டும்.
2919. (1) 18 ஆம் பிரிவின் கீழ் கைப்பற்றுகை தொடர்பான அறிக்கை பெறப்பட்ட பின்னர், மாவட்ட அளவிலான குழுவானது, தான் பொருத்தமெனக் கருதினால், கைப்பற்றுதல் செய்த பொருள்களை பறிமுதல் செய்ய ஆணையிடலாம்.
பொருள், இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தல்.
(2) உரிமையாளருக்கு விசாரணைக்கான வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டாலன்றி, மாவட்ட அளவிலான குழுவினால் (1) ஆம் உட்பிரிவின் கீழ் பறிமுதலுக்கான ஆணை பிறப்பிக்கப்படுதல் கூடாது.
(3) (2) ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்பில் ஏதேனும் குறைபாடு அல்லது முறைகேடு இருக்கின்ற, வெறும் காரணத்தினால், வகைமுறைகள் போதிய அளவு பின்பற்றப்பட்டிருந்தால், (1) ஆம் உட்பிரிவின் கீழ் பறிமுதல் செய்வதற்கான ஆணையானது, செல்லா நிலையது ஆகாது.
மீதூர்ந்தியங்கும் தன்மை.
20. இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அப்போதைக்கு நடைமுறையிலுள்ள மாநிலச் சட்டம் எதிலும், இதற்கு முரணாக என்ன அடங்கியிருந்த போதிலும், செயல்பாட்டிற்கு வருதல் வேண்டும்.
நல்லெண்ணத்தில்
எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
21. உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும், இந்தச் சட்டத்தின் கீழ் நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட எதற்காகவும் அதிகார அமைப்பு, மாவட்ட அளவிலான குழு அல்லது அதன் உறுப்பினர்கள் அல்லது ஏதேனும் அலுவலர் அல்லது அதிகார அமைப்பின் பணியாளருக்கெதிராக தொடரப்படுதல் ஆகாது.
இணைப்புப் பட்டியல்களை திருத்துவதற்கான அதிகாரம்.
22. (1) அரசு, அறிவிக்கை வாயிலாக முதலாம் இணைப்புப் பட்டியலிலுள்ள எந்தவொரு பகுதியையும் சேர்க்கலாம் அல்லது விட்டுவிடலாம், மற்றும் அத்தகைய அறிவிக்கை வெளியிடப்பட்டால், அதன்படி முதலாம் அட்டவணையானது திருத்தம் செய்யப்பட்டது எனக் கருதப்படுதல் வேண்டும்.
(2) அரசானது, அதிகார அமைப்பின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கை வாயிலாக, இரண்டாவது அட்டவணையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாய முன்னேற்றங்களை மிகவும் பாதிக்கும் வேறு எந்த திட்டத்தையும் சேர்க்கலாம் அல்லது விட்டுவிடலாம் மற்றும் அத்தகைய அறிவிக்கை வெளியிடப்பட்டால் அதன்படி இரண்டாம் அட்டவணையானது திருத்தம் செய்யப்பட்டது எனக் கருதப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக, அதிகார அமைப்பானது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய உறுப்பினர்களையுடைய தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அத்தகைய பரிந்துரைகளைச் செய்யலாம்.
விதிகளைச் 23. (1) அரசு, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குச் செயல்திறம்
அளிப்பதற்காக, விதிகளைச் செய்யலாம்.
செய்வதற்கான அதிகாரம்.
(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின் படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின் கீழ், அரசால் செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது அறிவிக்கை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அடுத்தக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பு அத்தகைய விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை ஏதொன்றிலும் மாறுதல் எதையும் சட்டமன்றப் பேரவை செய்யுமாயின் அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும் அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம் எதுவும் அந்த விதி அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட செயல் எதனின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
30இடர்பாடுகளை
நீக்குவதற்கான அதிகாரம்.
24. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயல்படுத்துவதில் இடர்ப்பாடு எதுவும் எழுமானால், அரசு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணை ஒன்றின் மூலமாக இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில் இந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையானதும் உகந்ததுமான அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்.
வரம்புரையாக, இந்தப் பிரிவின் கீழ் ஆணை எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டு ஆண்டு கால அளவு முடிவடைந்த பின்னர் பிறப்பிக்கப்படுதல் ஆகாது.
முதலாம் இணைப்புப் பட்டியல்
[2(h) மற்றும் 22(1) ஆம் பிரிவுகளைக் காண்க]
பகுதி
1. தஞ்சாவூர் மாவட்டம்.
2. திருவாரூர் மாவட்டம்.
3. நாகப்பட்டினம் மாவட்டம்.
4. கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள்.
5. புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கறம்பக்குடி வட்டாரங்கள்.
இரண்டாம் இணைப்புப் பட்டியல்.
[4(1) மற்றும் 22 (2) ஆம் பிரிவுகளைக் காண்க.]
திட்டங்கள்.
1. துத்தநாக உருக்காலை.
2. இரும்புத் தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இளகு இரும்பு ஆலை .
3. செம்பு உருக்காலை.
4. அலுமினியம் உருக்காலை.
5. விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை பதப்படுத்துதல்.
6. தோல் பதனிடுதல்.
7. எண்ணெய் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோகார்பன்கள் உள்ளடங்கலான இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல்.
8. கப்பல் உடைக்கும் தொழிற்சாலை.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர். சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
31தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம்
ஆண்டு பிப்ரவரி திங்கள் 25 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 13/2020.
1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தினை மேலும்
திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாவது ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்படும்.
(2) இச்சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும்
தமிழ்நாடு சட்டம்
புதிய பிரிவு 76/A ஐ
புகுத்துதல். 30/1983.
2. 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டப் பிரிவு 76 க்கு பின்பு பின்வரும் பிரிவைப் பகுத்துதல் வேண்டும், அதாவது:-
"76-A குறித்த சில சூழ்நிலைகளில் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் தலைவர்
அல்லது துணைத்தலைவரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்தல்:-
(1) பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் தலைவர் அல்லது துணைத்தலைவர் கையாடலுக்கு முழு பொறுப்பாளராக இருந்தாலோ, கையாடல் செய்திருந்ததாகவோ அல்லது நம்பிக்கை மோசடி அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் ஒட்டு மொத்த தவறான நிருவாகம் செய்திருந்ததாகவோ அல்லது ஏதாவது குற்றத்தவறான நடத்தை அல்லது ஒழுக்கக்கேடான குற்றச் செயல் செய்திருந்ததாகவோ புகார் மூலமாகவோ அல்லது வேறு வகையாகவோ பதிவாளரின் கவனத்திற்கு கொண்டு வருகிறவிடத்து, முதல் நோக்கில் தலைவர் அல்லது துணைத்தலைவருக்கு எதிரான சாட்சியம் இருக்கிறது என பதிவாளர் கருதினால், பிரிவு 81 ன்படி விசாரணை அல்லது பிரிவு 82ன்படி ஆய்வு அல்லது புலன் விசாரணை அல்லது குற்றத் தவறான நடத்தை அல்லத ஒழுக்கக்கேடு குற்றம் சம்பந்தப்பட்ட புலன் விசாரணை முடிவாகமலிருந்து, சங்கத்தின் நலன் அல்லது பொதுநலன் கருதி, தலைவர் அல்லது துணைத்தலைவரை பதிவாளர் ஒரு ஆணை பிறப்பித்து அவரை ஆறு மாதங்களுக்கு மிகாமல் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யலாம்.
(2) உட்பிரிவு (1) இல் என்ன சொல்லியிருப்பினும் பிரிவு 36 ன்படி ஒரு நடவடிக்கை தலைவர் அல்லது துணைத்தலைவர் மீது தொடங்கப்பட்டிருந்தால் தற்காலிக பதவி நீக்கத்தை பதிவாளர், அதற்கான காரணத்தை எழுத்து வடிவில் பதிவு செய்து, மேலும் ஆறு மாதங்கள் அல்லது பிரிவு 36 ன் கீழ் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை இதில் எது முந்தியதோ அதுவரை அவ்வப்போது கால நீட்டிப்பு செய்யலாம்" .
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர். சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.