Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

General Statutory Rules, Notifi cations, Orders, Regulations, etc., issued by Secretariat Departments

Published 07 October 2020

Type
Ordinary
Gazette no.
41
Part
Part III
Notifications
AGRICULTURE DEPARTMENT - LABOUR AND EMPLOYMENT DEPARTMENT - Notifications
Section
Section 1a-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2020-10-07.Ordinary_41_Part-III_Section-1a-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2020

[விலை : 2.40 காசு[விலை : 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 41] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 7, 2020 புரட்டாசி 21, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வேளாண் துறைவேளாண் துறை

[அரசாணை (நிலை) எண் 195, வேளாண்(AP-5)த் துறை, 26 ஆகஸ்ட் 2020.]

தமிழ்நாடு 2020 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 11/2020) 23-ஆம் பிரிவைச் சேர்ந்த (1)- உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் விதிகளை இதனால் இயற்றுகிறார்.

1. குறுந்தலைப்பு. இந்த விதிகள், தமிழ்நாடு 2020-ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் விதிகள் என அழைக்கப்பெறும்.

2. பொருள் விளக்கங்கள். (1) இந்த விதிகளில் சந்தர்ப்பம் வேறு பொருள் குறித்தாலன்றி மற்றபடி,-

(a) "சட்டம்" என்பது தமிழ்நாடு 2020ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 11/2020) என பொருள்படும்;

(b) "துறை" என்பது மாநிலத்தின் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை எனப் பொருள்படும்;

(c) "மாவட்ட அளவிலான குழு" என்பது இச்சட்டத்தின் 9ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒரு குழு எனப் பொருள்படும்;

(d) "படிவம், என்பது இந்த விதிகளுடன் இணைக்கப்பட்ட ஒரு படிவம் எனப் பொருள்படும்;

(2) இந்த விதிகளில் பயன்படுத்தப்பட்டு, ஆனால் பொருள் விளக்கம் அளிக்கப்படாத சொற்களும் சொற்றொடர்களும், சட்டத்தில் முறையே அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்.

3. வேளாண் மேம்பாடு. (1) இத்துறை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை துறைகளுடன் கலந்தாலோசித்து, விரிவான திட்டம் ஒன்றை தயாரித்து, ஒவ்வோராண்டும் மார்ச்சுத் திங்க்ள் 31ஆம் நாளுக்கு முன்னர், அதிகார அமைப்பிடம் அளிக்கும்.

(2) இத்துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் கலந்தாலோசித்து, வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் அது தொடர்பான துறைகளில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தேவை அடிப்படையிலான திட்ட வரைபடங்களையும் அளிக்கலாம்.

(3) இத்துறை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேளாண் மேம்பாடு தொடர்பாக, ஜீன் மாதம் 30ஆம் நாள் மற்றும் டிசம்வர் மாதம் 31ஆம் நாளுடன் முடிவடையும் காலக்கட்டங்களுக்கான அரையாண்டு பணி முன்னேற்ற நிலை அறிக்கைகளை அளிக்கும்.

III-1a-(41) (T Sup)—1

[ 1 ]2 4. அதிகார அமைப்பின் பணிகள். இந்த அதிகார அமைப்பு, இச்சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டபணிகளுடன், பின்வரும் பணிகளையும் மேற்கொள்ளும், அவையாவன:-

(a) இயற்கை மேற்பரப்பு, மண் மற்றும் நீர் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளுக்கு பரிந்துரைத்தல்.

(b) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளுக்கு பரிந்துரைத்தல்.

(c) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், பகுதியினை சேர்ப்பதற்கு பரிந்துரைத்தல்; மற்றும்

(d) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், அமைக்கப்படக்கூடிய வேளாண் அடிப்படையிலான மற்றும் அது தொடர்பான தொழிலகங்களுக்கு பரிந்துரைத்தல்.

5. நேமக உறுப்பினர்களுக்கான அமர்வு கட்டணம் மற்றும் பயணப்படி. அதிகார அமைப்பு மற்றும் மாவட்ட அளவிலான குழுவின் நேமக உறுப்பினர்கள், அரசு அவ்வப்போது வரையறை செய்தவாறாக, முறையே, அரசின் முதல் வகுப்பு குழுக்கள் மற்றும் இரண்டாம் வகுப்பு குழுக்களின் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு பொருந்தத்தக்கவாறான நிபந்தனைகளுக்குட்பட்ட விகிதத்தில், அத்தகைய உறுப்பினராக, அவர்கள் பணி நிமித்தம் மேற்கொள்ளும் யாதொரு பயணத்திற்கான அமர்வுக் கட்டணம் மற்றும் பயணப்படிகள் பெறுவதற்கு உரிமையுடையவராவர்.

6. தொழில்நுட்ப குழு ஏற்படுத்துதல்.- இச்சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் யாதொரு திட்டப் பணியை விட்டுவிடுவதற்கு அல்லது சேர்ப்பதற்கு அரசுக்கு பரிந்துரைப்பதில் அதிகார அமைப்பிற்கு உதவும் தொழில்நுட்ப குழுவில், பின்வரும் உறுப்பினர்கள் இடம்பெறுவர்:-

(a) வேளாண் உற்பத்தி ஆணையாளர் மற்றும் அரசு செயலாளர், வேளாண்துறை - தலைவர், அலுவல் நிலை;

(b) வேளாண் இயக்குநர்-உறுப்பினர்-செயலாளர், அலுவல் நிலை;

(c) தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இயக்குநர்-உறுப்பினர், அலுவல் நிலை;

(d) தலைவர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் - உறுப்பினர், அலுவல் நிலை;

(e) தொழில் வணிக இயக்குநர் - உறுப்பினர், அலுவல் நிலை;

(f) கால்நடை பராமரிப்பு இயக்குநர் - உறுப்பினர், அலுவல் நிலை;

(g) இயக்குநர் (ஆராய்ச்சி), தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் - உறுப்பினர், அலுவல் நிலை;

7. அதிகார அமைப்பின் நிதிச் செயல்பாடு.- அதிகார அமைப்பின் நிதிச் செயல்பாடு, அதிகார அமைப்பின் உறுப்பினர் - செயலாளரால் மேற்கொள்ளப்படும்.

8. கணக்குகள் மற்றும் பதிவேடுகளை வைத்து வருதல் . (1) இந்த அதிகார அமைப்பு, தமிழ்நாடு கருவூல விதித் தொகுப்பு மற்றும் தமிழ்நாடு நிதி விதித்தொகுப்பில் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளையும், அவ்வப்போது அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளையும், மாதாந்திர சம்பளப்பட்டி மற்றும் ஏனைய பணியாளரமைப்பு பட்டிகளை தயாரிப்பது, தொகை பெற்று வழங்குவது முதலியவற்றுக்கு, வரையறக்கப்பட்ட படிவங்களை பின்பற்றும்;

(2) இந்த அதிகார அமைப்பின், வரவினங்ங்ள் மற்றும் செலவினங்கள் குறித்த மாதாந்திர கணக்கு மற்றம் வரவினங்கள் மற்றும் செலவினங்களின் ஆண்டு கணக்கு விவர அறிக்கை, முறையே படிவம் I மற்றும் படிவம் II-இல் வைத்து வரப்படும்;

(3) இந்த அதிகார அமைப்பு, அடுத்து வரும் மாதத்தின் இறுதி நாளுக்கு முன்னர், மாதாந்திர கணக்குகளின் நகல் ஒன்றையும், ஒவ்வோராண்டும் மே திங்கள் 31ஆம் நாளுக்கு முன்னர் ஆண்டு கணக்குகளின் நகல் ஒன்றையும், தணிக்கையாளரிடம் அளிக்கும்;

(4) தணிக்கையாளர், ஒவ்வோராண்டும் ஆகஸ்டு திங்கள் 31ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்னர், கணக்குகளை தணிக்கை செய்து சான்றளிப்பார்;

(5) அதிகார அமைப்பின் குறிப்புரைகளுடன், தணிக்கை அறிக்கையுடன் கூடிய தணிக்கையாளரால் சான்றளிக்கப்பட்டவாறான அதிகார அமைப்பின் கணக்குகள், தணிக்கை அறிக்கை பெறப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் அதிகார அமைப்பின் உறுப்பினர்-செயலாளரால் அரசுக்கு அனுப்பப்படும்.

9. ஆண்டறிக்கை. அதிகார அமைப்பின் உறுப்பினர்-செயலாளர், முந்தைய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் நடபப்பு நிதியாண்டில் அதிகார அமைப்பால் மேற்கொள்ளப்படவிருக்கின்ற செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கை ஒன்றை தயாரித்து, ஒவ்வோராண்டும் மே திங்கள் 31ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்னர் அரசுக்கு அளிப்பார்.

ககன்தீப் சிங் பேடி, ககன்தீப் சிங் பேடி,

வேளாண் உற்பத்தி ஆணையாளர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர்.

3

[அரசாணை (நிலை) எண் 195, வேளாண்(AP-5)த் துறை, 26 ஆகஸ்ட் 2020.]

பிற்சேர்க்கை

படிவம் I

(காண்க விதி 8(2),

.......... மாதத்திற்கான வரவினங்கள் மற்றும் செலவினங்கள் குறித்த மாதாந்திர கணக்கு

தொடர் எண் விவரங்கள் வரவினம் (ரூபாயில்) தொடர் எண் விவரங்கள் செலவினம் (ரூபாயில்

ககன்தீப் சிங் பேடி, ககன்தீப் சிங் பேடி, வேளாண் உற்பத்தி ஆணையாளர் மற்றும்

அரசு முதன்மைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண் 195, வேளாண்(AP-5)த் துறை, 26 ஆகஸ்ட் 2020.]

படிவம் II

(காண்க விதி 8(2),

.......... ஆண்டிற்கான வரவினங்கள் மற்றும் செலவினங்கள் குறித்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை

தொடர் எண் கணக்குத் தலைப்பு வரவினங்களின் விவரங்கள் (ரூபாயில்) செலவினங்களின் விவரங்கள் (ரூபாயில்) குறிப்புரைகள்

ககன்தீப் சிங் பேடி, ககன்தீப் சிங் பேடி, வேளாண் உற்பத்தி ஆணையாளர் மற்றும்

அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், ந. அருள், இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

4

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை(நிலை) எண்: 128, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M2)த் துறை, 06 ஆகஸ்ட் 2020] 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச்சட்டம் 63/1948) 19 ஆம் பிரிவைச் சேர்ந்த (3) உட்பிரிவிலும், 112 ஆம் பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கக்ை கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகளில், பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 115 ஆம் பிரிவில் கோரியுள்ளவாறு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,

(1) விதி 40-இல், பகுதி (b)-க்குப் பின்னர், பின்வரும் பகுதிகள் சோத்துக்கொள்ளப்பட வேண்டும். அவையாவன::-

"(c) பெண்கள் கழிவறைகளில், அவர்களின் பயன்பாட்டிற்காக, இந்திய தர நிர்ணய அமைப்பால் உருவாக்கப்பட்ட தொடர்புடைய இந்திய தரங்களுக்கு ஒத்திசைவான போதிய எண்ணிக்கையிலான சானிடரி நாப்கின்களுக்கு (Sanitary Napkin) வகை செய்யப்பட்டு வைத்து வரப்பட வேண்டும். அவை தீர்ந்து போகும் நேர்வில் நாள் அடிப்படையில் அவ்விடத்தில் நிரப்பி வைக்கப்பட வேண்டும்.

(d) பயன்படுத்தப்பட்ட சானிடரி நாப்கின்களை சேகரிப்பதற்காக பெண்கள் கழிவறையில் குப்பைகள் அகற்றத்தக்க மூடியுடன் வடிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட வேண்டும். பயன்படுத்தப்பட்ட சானிடரி நாப்கின்கள் தகுந்த மின் எரி தொட்டியைப் பயன்படுத்தி பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத முறையில் ஒருவகை செய்யப்பட வேண்டும்.

(2) விதி 61-N விட்டுவிடப்படவேண்டும்;

(3) விதி 61-O விற்குப் பதிலாக, பின்வரும் விதி அமைத்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"61-O தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள்.- (1) மேற்சொன்ன சட்டம் அல்லது விதிகளின் யாதொரு விதித்துறைகளின் கீழ், கோரியுள்ளவாறாக, அனைத்து தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களுக்கு கட்டாயமாக வகை செய்யப்பட வேண்டும்.

அத்தகைய தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அத்தகைய தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களை தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டுமென உடைமையாளர் கேட்டுக்கொள்ள வேண்டும். மேலும், தொழிற்சாலை உரிமையாளர், முறையான செயல்பாட்டு நிலையில் அத்தகைய சாதனங்களை வைத்து வர வேண்டும். அத்தகைய தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களின் முறையான பயன்பாடு குறித்து அனைத்து தொழிலாளர்களுக்கும் போதிய பயிற்சி வழங்கப்பட வேண்டும். அத்தகைய தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களை தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கான அவர்களிடமிருந்து யாதொரு கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது.

(2) துணை விதி (1)-இன் பொதுத்தன்மைக்கு எவ்வித பாதிப்புமின்றி, இந்த விதிகளின்படி தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதறக்ான பல்வேறு வகையிலான தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள் பின்வருமாறு இருக்க வேண்டும். அவையாவன:-

(i) பாதுகாப்பு தலைக்கவசம்- பாதுகாப்பு தலைக்கவசம்- தலைக்காயம் ஏற்படுத்தக்கூடிய யாதொரு ஆபத்தான பகுதிகளில் பணியாற்றக்கூடிய அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பினால் வரையறுக்கப்பட்ட பொருத்தமான இந்திய தர நிர்ணயங்களுக்கு ஒத்திசைவாக உள்ள பாதுகாப்பு தலைக்கவசங்கள் வழங்கப்பட வேண்டும். உயரமான இடங்களில் பணிபுரியும்போது கழுத்துப்பட்டையுடன் கூடிய அத்தகைய பாதுகாப்பு தலைக்கவசம் வழங்கப்பட வேண்டும். தலையைப் பாதுகாக்க இயலாத யாதொரு பாதுகாப்பு தலைக்கவசமும் மறுமுறை பயன்படுத்தப்படக் கூடாது, தலைக்கவசத்தின் அளவு அல்லது வடிவத்தின் மாற்றத்தை சரிபார்ப்பதற்காகஇ காலமுறை தோறும் அவற்றை சுத்தப்படுத்தி நேரடியாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

(ii) பாதுகாப்பு காலனி.- பாதுகாப்பு காலனி.-தொழிலாளர்களின் பாதம் அல்லது கால் நகங்களில் பொருட்கள் விழுவதால் அல்லது அவர்களின் உள்ளங்கால்களில் எனைய கூர்மையான சாதனங்கள் துளைப்பதால் காயங்கள் ஏற்படக்கூடிய ஆபத்தான பகுதிகளில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு காலணிகள் வழங்கப்பட வேண்டும். அத்தகைய பணியிடங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய பணியின் தன்மையின் அடிப்படையில் தொழிற்சாலை உரிமையாளர் அத்தகைய பணியிடங்களில் பயன்படுத்தப்பட வேண்டும் காலணியின் வகையையும் தன்மையையும் முடிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட உடற்பகுதிகளில் தோல் தடிப்பு நோய், குதிகால் வாதம் (தோல் உரிதல்) மற்றும் தோல் அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் தோல் பூஞ்சை தொற்று நோய்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக முறையான நோய்த் தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு காலணிகள் அணைந்த பின்னர் ஏற்படும் நோய்களிலிருந்து (உள்ளே வளர்ந்த நகங்கள், உள்ளங்கால் வலி (Metatarsolgia), குதிகால் வெடிப்பு, ஆணிகால் மற்றும் நரம்பு பாதிப்பு) தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான முறையான மருத்துவ கவனம் செலுத்த வேண்டும்.

(iii) பாதுபாப்பு கண்ணாடிகள்.-பாதுபாப்பு கண்ணாடிகள்.-காற்றில் பறக்கும் சிறு தூசு துரும்புகள், தெறித்துச் சிதறும் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய உருக்கப்பட்ட உலோகங்களிலிருந்து வெளிவரும் தீங்கு விளைவிக்கக்கூடிய உருவாக்கப்பட்ட உலோகங்களிலிருந்து வெளிவரும் தூசுகள், வாயுக்கள் அல்லது நீராவிகள், தூசுப்படலம் மற்றும் கண்பார்வைக்கு அல்லது கண்களுக்கு பாதிப்பு எற்படுத்தக்கூடிய5 கதிர்வீச்சுகள் போன்றவை வெளியாகக்கூடிய ஆபத்து நிறைந்த பகுதிகளில் பணியாற்றுகிற தொழிலாளர்களின் கண்களுக்கான கூடுதல் பாதுகாபபைக் கருத்தில் கொண்டு தொழிலகங்களில் பயன்படுத்துவதற்கான விழி-பாதுகாப்பிற்காக இந்திய தர நிர்ணய அமைப்பால் வரையறுக்கப்பட்ட இந்திய தர நிர்ணயங்களுடன் ஒத்திசைவான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிற கண்ணாடிவில்லைகளின் முறையான அமைப்பை/நிலைத்தன்மையை இப்பாதுகாப்பு கண்ணாடிகள் பாதிக்கவில்லை என்பதை உறுதி செய்து, பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடி வில்லைகளுடன் கூடுதலாக கண்களுக்கான இப்பாதுகாப்பு கண்ணாடிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

(iv) பற்றவைக்கும் பணியின்போது கண் மற்றும் முகத்தை பாதுகாப்பதற்கான சாதனம்.-

பற்றவைக்கும் பணியின்போது கண் மற்றும் முகத்தை பாதுகாப்பதற்கான சாதனம்.-பற்றவைத்தல், வெட்டுதல் போன்ற பணிகள் மற்றும் வாயு சுவாலை அல்லது இருமுனைகளுக்கிடையே வெளிப்படும் வெந்தழல போன்றவற்றுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட பணிகளில் பணிபுரியும்போது எதிர்கொள்கிற ஆபத்தான கதிர்வீச்சுகள், தீப்பொறி மற்றும் வெப்ப உலோகதுகள்களிடமிருந்து தொழிலாளர்களின் தோள்பட்டைகளுக்கு மேலே உள்ள பாகங்களை பாதுகாக்கின்ற வகையிலான கண்ணாடிகள், கை பாதுகாப்பு கவசம் மற்றும் தலைக்கவசம் ஆகியவைகளை பயன்படுத்துகையில் இந்திய தர நிர்ணய அமைப்பால் வரையறுக்கப்பட்ட பொருத்தமான இந்திய தர நிர்ணயங்கள் பின்பற்றப்பட வேண்டும்.

(v) கையுறை மற்றும் பாதுகாப்பு ஆடைகள்.- கையுறை மற்றும் பாதுகாப்பு ஆடைகள்.- தொழிலாளர்களின் கைகள் காயமடைவதை தவிர்ப்பதற்காக, இந்திய தர நிர்ணய அமைப்பால் வரையறுக்கப்பட்ட பொருத்தமான இந்திய தர நிர்ணயங்களுடன் ஒத்திசைவாகவுள்ள பொருத்தமான கையுறைகள், தோலிலான கவச கையுறைகள் மற்றும் இரு பிரிவுகளைக் கொண்ட கையுறைகள் ஆகியவை பயன்படுத்தப்பட வேண்டும் கேடுவிளைவிக்கும் பொருட்கள் தோலினுள் செல்லுதல், ஆழமான வெட்டுக் காயங்கள் அல்லது சிராய்ப்புகள், கடுமையான உராய்வுகள், கீறல்கள் இரசாயன தீப்புண்கள், வெப்ப நிலையின் காரணமாக எற்படக்கூடிய காயங்கள் மற்றும் தீங்கிழைக்கும் அதிக வெப்ப நிலைகளிடமிருந்து ஆபத்தான பணிகளில் பணியாற்றுகிற நபர்களின் கைகளை பாதுகாப்பதற்காக அத்தகைய பாதுகாப்பு கையுறைகள் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் தோலில் காயம் ஏற்படத்தக்ககூடிய ஆபத்தான பணிகளில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பு ஆடைகள் (இரப்பராலான, அமிலம் மற்றும் காரத்திற்கு எதிரான) இந்திய தர நிர்ணய அமைப்பால் வரையறுக்கப்பட்ட இந்திய தர நிர்ணயங்ளின்படி பொருத்தமான பாதுகாப்பு ஆடைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

(vi) செவிகளை இரைச்சலிருந்து பாதுகாத்தல்.-

செவிகளை இரைச்சலிருந்து பாதுகாத்தல்.-வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான ஒலி அளவுகள் இருக்கும்போதெல்லாம் இரைச்சல் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். தகுந்த செவிப் பாதுகாப்பு சாதனங்களை தெரிவு செய்யும்போது, இந்திய தர நிர்ணய அமைப்பால் வரையறுக்கப்ட்ட இந்திய தர நிர்ணய அளவீடுகள் பின்பற்றப்பட வேண்டும். காதுகளில் ஏற்படும் நோய்த்தொற்று, நீர் கசிவு, வலி முதலியவைகளால் ஏற்படும் செவித்திறன் இழப்பை தவிர்ப்பதற்காக, மீண்டும் பயன்படுத்தத்தக்க செவி பாதுகாப்பு சாதனங்களுக்கான காலமுறையான தொற்று தடைக்காப்பு செயல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

(vii) சுவாசப் பாதுகாப்பு.- சுவாசப் பாதுகாப்பு.-தூசு, புகை, வாயுக்கள், துகள்கள் முதலியவைகளிடமிருந்து தொழிலாளர்களின் சுவாச உறுப்புகளை பாதுகாப்பதற்காக இந்திய தர நிர்ணய நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட இந்திய தர நிர்ணய அளவீடுகளின்படி, தீமையினுடைய தன்மையின் அடிப்படையில் சுவாச பாதுகாப்பு சாதனங்களை, தொழிற்சாலை விவகாரங்களுக்கும் பொறுப்பு வகிப்பவர். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். சுவாசம் தொடர்பான தனிப்பட்ட பாதுகாப்பு சானங்களை நீண்ட நாட்கள் பயன்படுத்தியதன் விளைவாக ஏற்படுகிற எரிச்சலுடன் கூடிய தோல் அழற்சி, மூக்கு தண்டு காயங்களை தடுப்பதற்காக மருத்துவ ஆய்வு மற்றும் உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.

(viii) ஏனைய பாதுகாப்பு சாதனங்கள்.- ஏனைய பாதுகாப்பு சாதனங்கள்.-இந்திய தர நிர்ணய நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட பொருத்தமான இந்திய தர நிர்ணய அளவீடுகளை கொண்ட, ஆபத்துகளின் தன்மையின் அடிப்படையில் பின்வரும் உரிய தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களை தொழிற்சாலையின் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிப்பவர் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். அவையாவன:-

(a) ஏனைய, உரிய முறையில் வழங்கவியலாத கீழே விழுவதை தடுப்பதற்கான தனிப்பட்ட முறையிலான, பாதுகாக்கப்பட்ட உயிர் காப்பான்களுடன் கூடிய பாதுகாப்பு கவசங்கள்

(b) நீரில் விழுந்துவிடக்கூடிய ஆபத்து நிறைந்த இடங்களில், உயிர் காக்கும் பட்டைகள் மற்றும் உயிர்காப்பான்கள் (c) நகர்ந்து சென்றுகொண்டிருக்கும் வாகனங்களினால் ஆபத்து ஏற்படக்கூடிய தொடர் வாய்ப்புகள் இருக்கும்போது, தனிப்பட்ட ஆடை அல்லது பிரதிபலிக்கும் உபகரணங்கள் அல்லது ஏனைய வகையில் தெளிவாகத் தெரிகிற பொருட்கள்.

(3) மேற்கொள்ளப்படுகின்ற பணியிலும் செயல்முறைகளிலும் உள்ள ஆபத்துகளின் தன்மையின் அடிப்படையில், குறிப்பிட்ட ஆபத்து ஏற்படக்கூடிய இடங்களில் பணியாற்றுகிற தொழிலாளர்களுக்கு அவசியமானதென கண்டறியப்பட்டவாறாக, இந்திய தர நிர்ணய அமைப்பால் வரையறுக்கப்பட்ட இந்திய தர நிர்ணய அளவீடுகளுக்கு ஒத்திசைவாகவுள்ள யாதொரு தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களை வழங்குவதற்கு தொழிற்சாலை உரிமையாளர் அல்லது மேலாளருக்கு எழுத்துப்பூர்வமாக ஆய்வாளர் தெரிவிக்கலாம்.

முகமது நசிமுத்தின், முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், ந. அருள்,

இயக்குநர், (மு.கூ.பொ.) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 07 October 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-10-07.Ordinary_41_Part-III_Section-1a-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2020-10-07.Ordinary_41_Part-III_Section-1a-T-Sup.