Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 21 October 2020

Type
Ordinary
Gazette no.
43
Part
Part II
Notifications
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT - Notification
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2020-10-21.Ordinary_43_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2020

[விலை : ரூ. 1.60 காசு[விலை : ரூ. 1.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 43] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 21, 2020 ஐப்பசி 5, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2051

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண்.126, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (UD4(2))த் துறை, 21 ஆகஸ்ட் 2020] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர-நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தேனி அல்லிநகரம் உள்ளூர் அமைப்புத் திட்டப் பகுதியில், சில வருவாய் கிராமப் பகுதிகளைச் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் 17-04-1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 218-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II(2)/RUL/2139/74 ஆம் எண் அறிவிக்கையில் அதனைத் தொடர்ந்து திருத்தம் செய்யப்பட்டவாறான பின்வரும் திருத்தத்தை மேற்கொள்வதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.

2, இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், இது தொடர்பாக, மேற்சொன்ன உள்ளூர் பகுதியிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகாரி அல்லது நிறுவனத்திடமிருந்து மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனும் வரப்பெற்றால், தமிழ்நாடு அரசு அதனை உரியவாறு கருதிப்பார்க்கும் என்றும் இதனால் அறிவிக்கபபடுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை எழுத்து வாயிலாக, அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில் உள்ள, ''அட்டவணை'' என்பதற்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது;-

தொடர் எண் உள்ளூர் அமைப்புத் திட்டப் பகுதியின் பெயர் வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
( 1 ) ( 2 ) ( 3 )
1. தேனி & அல்லிநகரம் நகராட்சி 02. தேனி அல்லிநகரம்

[ 1 ]

DTP-II-2-(43) (T Sup)—12

தொடர் எண் உள்ளூர் அமைப்புத் திட்டப் பகுதியின் பெயர் வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
( 1 ) ( 2 ) ( 3 )
பேரூராட்சி 04. பூதிப்புரம் 03. வீரபாண்டி பழனிச்செட்டிப்பட்டி
பெரியகுளம் வட்டம் 15. வடவீரநாய்க்கன்பட்டி
போடிநாயக்கனூர் வட்டம் 05. கோடாங்கிபட்டி
தேனி வட்டம் 16. ஊஞ்சாம்பட்டி
24. தாடிச்சேரி
25. கொடுவிலார்பட்டி பெருமாள்கோவில் கரடு (காப்புவனம்) வால்கரடு (காப்புவனம்)
18. சிலையம்பட்டி 20. கோட்டூர் 22. உப்பார்பட்டி 27. தப்புக்குண்டு 07. பூமலைக் குண்டு ஆண்டிப்பட்டி வட்டம் 19. குன்னூர்

ராஜேஷ் லக்கானி,

அரசு முதன்மைச் செயலர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.

அறிவிக்கை

[அரசாணை (ப) எண்.427, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J2)த் துறை, 9 செப்டம்பர் 2020] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 9-ஆம் பிரிவு மற்றும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தையல் தொழிற்சாலையில் பணியமர்த்தப்படுபவர்களுக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை திருத்தியமைப்பது தொடர்பாக, மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் விசாரணைகளை மேற்கொள்ளவும் பின்வரும் உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை இதனால் நியமிக்கிறார்.

தனிப்பட்ட நபர்கள்:-

(1) தொழிலாளர் துறை இணை ஆணையர், கோயமுத்தூர் தலைவர்
(2) தொழிலாளர் துறை உதவி ஆணையர், (செயலாக்கம்) திருப்பூர் செயலாளர்
(3) புள்ளியியல் துறை, உதவி இயக்குநர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, திருப்பூர் கோட்டம் திருப்பூர் உறுப்பினர்

வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்:-

(1) திரு. R. கார்த்திகேயன் பென்குயின் அப்பேரல்ஸ் பிரவேட் லிமிடெட், 2/65A, காமாட்சி நகர், முனியாண்டிபுரம், உச்சபட்டி, மதுரை-625 004. உறுப்பினர்
(2) திரு. G. உதயகுமார், மலையப்பா கார்மென்ட்ஸ், 29, ராம் கார்டன், உடையாம்பாளையம், கோயம்புத்தூர்-28. உறுப்பினர்
(3) திரு. K. அஜய் அகர்வால், அப்பேரல்ஸ் அண்ட் ஹேண்ட்லூம் எக்ஸ்போர்ட்டர்ஸ் B.7/C-7, அசோசியேஷன், எண். இரண்டாம் தளம், பார்சன் வணிக வளாகம், எண்.1, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600 006. உறுப்பினர்
3

தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-

(1) திரு. L.G. ஜெகதீஷ், அண்ணா தொழிற்சங்கப் பேரவை, எண்.54/81, பெரியார் வீதி, ஈரோடு 638 001. உறுப்பினர்
(2) திருமதி. M. ஐடா ஹெலன், இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியூ), எண்.10/3,வெள்ளப்ரவிளை, செரப்பலூர் அஞ்சல், குலசேகரன், கன்னியாகுமரி-629 161. உறுப்பினர்
(3) திரு. M. ஆறுமுகம், இந்திய தேசிய தொழிற் சங்க காங்கிரஸ் (ஐஎன்டியூசி), எண்.2/4, தேவி பராசக்தி நகர், முதல் தெரு, காரப்பாக்கம், போரூர், சென்னை - 600 116. உறுப்பினர்

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 21 October 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-10-21.Ordinary_43_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2020-10-21.Ordinary_43_Part-II_Section-2-T-Sup.