Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 11 November 2020

Type
Ordinary
Gazette no.
46
Part
Part II
Notifications
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT - Notification
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2020-11-11.Ordinary_46_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2020

[விலை : ரூ. 1. 60 காசு[விலை : ரூ. 1. 60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 46] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 11, 2020 ஐப்பசி 26, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2051

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை.

அறிவிக்கைகள்

[அரசாணை (ப) எண்.437, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J2)த் துறை, 17 செப்டம்பர் 2020] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 9 ஆம் பிரிவு மற்றும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், துணி ஆலையில் தனியாக அல்லது கூட்டாகச் சேர்ந்து பணி மேற்கொள்ளப்படுகிற ஆலைகள், நெசவாலைகள், நூற்பாலைகள், முன்வரையற்ற ஆலைகள் உட்பட துணி ஆலைகளில் பஞ்சடிக்கும் அறை, சிக்கெடுத்தல், நூலாக இழுத்தல், கைவிசைச் சட்டங்களின் மூலம் நூற்றல், நூலிழைத்தல், முறுக்கேற்றுதல், சுற்றுதல், சிப்பம் செய்தல், பாவு போடுதல் போன்ற மேற்சொன்ன ஆலைகளில் பல்வேறு செயல்முறைகளிலும், துணி ஆலைகளில் ஏனைய செயல்முறைகளிலும், பணியமர்த்தப்படுபவர்களுக்கான (தொழில் பழகுநர்கள் தவிர) குறைந்தளவு ஊதிய வீதங்களை திருத்தியமைப்பது தொடர்பாக, மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி விசாரணைகளை மேற்கொள்ள பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை இதனால் நியமிக்கிறார்.

தனிப்பட்ட நபர்கள்:—

(1) தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், கோயம்புத்தூர் தலைவர்
(2) தொழிலாளர் துறை உதவி ஆணையர், (செயலாக்கம்) கோயம்புத்தூர் செயலாளர்
(3) புள்ளியியல் துறை உதவி இயக்குநர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, கோயம்புத்தூர் உறுப்பினர்
(4) இணை இயக்குநர்-(துணி), கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநரகம், குறளகம் இரண்டாவது தளம், சென்னை-600 108 உறுப்பினர்
(5) இணை இயக்குநர்-2, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், கோயம்புத்தூர்-1 உறுப்பினர்

[ 1 ]

DTP-II-2-(46) (T Sup)—12

வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்:-

(1) டாக்டர். K. செல்வராஜு எண் 41, ரேஸ் கோர்ஸ், கோயம்புத்தூர்-641 018 செகரட்டரி ஜெனரல் (Secretary General) தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (SIMA) கோயம்புத்தூர். உறுப்பினர்
(2) திரு. S. ஜெகதீஷ் சந்திரன் பிளாட் எண் 103, 'A' பிளாக், முதல் தளம், ரஹேஜா சென்டர், 1073&1074, அவினாசி சாலை, கோயம்புத்தூர்-641 018, துணைத் தலைவர்,தென்னிந்திய நூர்பாலைகள் சங்கம், கோயம்புத்தூர். உறுப்பினர்
(3) டாக்டர். K. வெங்கடாசலம், எண், 2, மாடர்ன் நகர், கரூர் சாலை, திண்டுக்கல்-624 001, தலைமை ஆலோசகர். தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம், திண்டுக்கல். உறுப்பினர்
(4) திரு. K. மாணிக்கம், 2-D. எல்டோராடோ கட்டடம் (இரண்டாவது தளம், எண் 112, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600 034, செகரட்டரி ஜெனரல் (Secretary General) தென்னிந்திய வேலையளிப்பவரின் கூட்டமைப்பு (EFSI) சென்னை. உறுப்பினர்
(5) திரு. N. நாகராஜன், எண் 5/28D, சுதர்சனம் கார்டன், பொன்னகரம், PSK நகர் அஞ்சல், இராஜபாளையம், AVP-HR, இராஜபாளையம் மில்ஸ் லிமிடெட், இராஜபாளையம், உறுப்பினர்

தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-

(1) திரு. V.ஜெயராமன், மாவட்ட செயலாளர், எண் 68/A, செல்லாண்டியம்மன் கோயில் 3வது தெரு, திண்டுக்கல்-1 அண்ணா தொழிற்சங்கப் பேரவை (ATP) உறுப்பினர்
(2) திரு. M. ஆறுமுகம், பொதுச் செயலாளர், கோவை மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கம், எண் 99, ரங்கன் தெரு, காட்டூர், கோயம்புத்தூர்-641 009. அனைத்திந்திய வர்த்தக சங்க காங்கிரஸ் (ஏஐடியூசி) உறுப்பினர்
(3) திரு. T.S. ராஜாமணி, தலைவர், கோவை மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கம், எண் 28, ராணி கார்டன், ஏரோடிரம் சாலை, சிங்கநல்லூர், கோயம்புத்தூர்-641 005. இந்து மஸ்தூர் சபை (HMS) உறுப்பினர்
(4) திரு. G. சீனிவாசன், தலைவர், தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கம், 1848, திருச்சி சாலை, இராமநாதபுரம், கோயம்புத்தூர்-641 045. இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் உறுப்பினர்
(5) திரு. M. கோபால், 4/42, காத்தசாமி வீதி, புளியகுளம், கோயம்புத்தூர்-641 045. செயலாளர், கோயம்புத்தூர் மாவட்ட பஞ்சாலை அண்ணா தொழிலாளர் சங்கம், கோயம்புத்தூர் உறுப்பினர்
3

முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

இ. சுபாமதி,இ. சுபாமதி, இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (நிலை) எண்.157, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1))த் துறை, 28 செப்டம்பர் 2020] 2019 ஆம் கணக்கு வைப்பிற்குரிய ஆண்டின் யாதொரு நாளில், 1996 ஆம் ஆண்டு கட்டடம் மற்றும் ஏனைய கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்) சட்டத்தின் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த 1 உட்பிரிவின் (j) பகுதியின் பொருண்மைக்குட்பட்ட இருபதுக்கு குறைவான மற்றும் பத்துக்கு குறையாத தொழிலாளர்கள் பணிபுரிகின்ற அல்லது பணிபுரிந்த நிறுவனங்களுக்கு 1965 ஆம் ஆண்டு மிகை ஊதியம் வழங்கல் சட்டத்தினை (மத்தியச் சட்டம் 21/1965) பயன்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு கருதுவதாலும்;

எனவே, தற்போது, 1965 ஆம் ஆண்டு மிகை ஊதியம் வழங்கல் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 21/1965) 1-ஆம் பிரிவைச் சேர்ந்த, 3-உட்பிரிவின் வரம்பு நிபந்தனையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 2019 ஆம் ஆண்டின் யாதொரு நாளில் தொடங்குகிற கணக்கு வைப்பிற்குரிய ஆண்டிலிருந்தும், அடுத்துவரும் ஒவ்வொரு கணக்கு வைப்பிற்குரிய ஆண்டுகளை பொறுத்தவரையிலும், மேற்சொன்ன நிறுவனங்களுக்கு, மேற்சொன்ன சட்டத்தின் விதித்துறைகளைப் பயன்படுத்த வேண்டுமென்ற அவர்களின் நோக்கத்திற்கான அறிவிப்பு, மேற்சொன்ன நிறுவனங்களுக்கு மேற்சொன்ன சட்டத்தின் விதித்துறைகளைப் பயன்படுத்தும் அரசின் நோக்கத்திற்கான அறிவிப்பு, மேற்சொன்ன விதித்துறைகளின் கீழ் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது என்பதை இதனால் அறிவிக்கிறார்.

முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

இ. சுபாமதி,இ. சுபாமதி, இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 11 November 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-11-11.Ordinary_46_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2020-11-11.Ordinary_46_Part-II_Section-2-T-Sup.