Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances

Published 11 November 2020

Type
Ordinary
Gazette no.
46
Part
Part IV
Notifications
Act No. 19 of 2020
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2020-11-11.Ordinary_46_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2020

[விலை : ரூ. 11.20 காசு[விலை : ரூ. 11.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 46]

சென்னை, புதன்கிழமை, நவம்பர் 11, 2020 ஐப்பசி 26, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 23 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 19/2020.

1994 -ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம்

செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (மூன்றாம் திருத்தச்)

தொடக்கம்.

சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது 2020 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

261-A ஆம் தமிழ்நாடு சட்டம்

பிரிவிற்கான 21 / 1994.

திருத்தம்.

2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 261-A ஆம் பிரிவில், "2017ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம் தொடங்கப்பட்ட நாளுக்குப் பின்பு அல்லது 2020 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" கூறப்பட்ட ஊராட்சிகளுக்கு என்ற சொற்றொடருக்குப் பதிலாக "2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம் தொடங்கப்பட்ட நாளுக்குப் பின்பு அல்லது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கூறப்பட்ட ஊராட்சிகளுக்கு" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு அவசரச்

நீக்கறவு மற்றும் 3. (1) 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (மூன்றாம் திருத்த) அவசரச் சட்டம்

சட்டம் 7/2020

காப்புரை.

ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகின்றது.

தமிழ்நாடு சட்டம்

21/1994

(2) அத்தகைய நீக்கறவு செய்யப்பட்டிருந்த போதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறான 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான மேற்சொன்ன அவசரச் சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

[1]

DTP-IV-2- (T Sup)—462 3 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 23 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 20/2020

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை

மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

பகுதி-I.

முன்னுரை.

குறுந்தலைப்பு மற்றும்

தொடக்கம்.

1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் (மூன்றாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

பகுதி-II.

1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

414-B ஆம் IV/1919.

பிரிவிற்கான திருத்தம்.

2. 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்தின் 414-B ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-III.

1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

375-B ஆம் V/1920.

பிரிவிற்கான திருத்தம்.

3. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 375-B ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-IV.

1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

510-AAAஆம் 15/1971.

பிரிவிற்கான திருத்தம்.

4. 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 510-AAA ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-V.

1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

511-AAAஆம் 25/1981.

பிரிவிற்கான திருத்தம்.

5. 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின் 511-AAA ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-VI.

1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

10-Aஆம் பிரிவிற்கான 27/1994.

திருத்தம்.

6. 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-VII.

1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

10-Aஆம் பிரிவிற்கான 28/1994.

திருத்தம்.

7. 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

4

பகுதி-VIII.

1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10-Aஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்

29/1994. .

8. 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-IX.

2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

7/2008.

9. 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-X.

2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

9-A ஆம் பிரிவிற்கான திருத்தம்.

திருத்தம்.

10. 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XI.

2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

26/2008.

11. 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XII.

2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

27/2008.

12. 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XIII.

2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

24/2013.

13. 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XIV.

2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

25/2013.

14. 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XV.

2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10 ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

10/2019.

15. 2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின்,(4) ஆம் உட்பிரிவில் ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XVI.

2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10 ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்

10/2019.

16. 2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின்,(4) ஆம் உட்பிரிவில் ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

5

பகுதி-XVII.

2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம் 10 ஆம் பிரிவிற்கான

24/2019.

திருத்தம்.

17. 2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின்,(4) ஆம் உட்பிரிவில் ''2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

நீக்கறவு மற்றும்

தமிழ்நாடு அவசரச் சட்டம் 8/2020.

காப்புரை.

18. (1) 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் (மூன்றாம் திருத்தம்) அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு சட்டம்

IV/1919.

(2) அத்தகைய நீக்கறவு இருந்த போதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான 1919 ஆம் ஆண்டு சென்னை

தமிழ்நாடு சட்டம் மாநகராட்சிச் சட்டம், 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1971 ஆம்

V/1920.

ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டம், 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச்

தமிழ்நாடு சட்டம் சட்டம், 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டம், 1994 ஆம் ஆண்டு 15/1971.

தமிழ்நாடு சட்டம் திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டம், 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டம்,

25/1981.

2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு ஈரோடு

தமிழ்நாடு சட்டம் மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டம், 2008

27/1994.

ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டம், 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர்

தமிழ்நாடு சட்டம் மாநகராட்சிச் சட்டம், 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டம், 28/1994.

தமிழ்நாடு சட்டம் 2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டம், 2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சிச்

29/1994.

சட்டம் மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டம் ஆகியவற்றின்படி செய்யப்பட்ட

தமிழ்நாடு சட்டம் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம்

7/2008.

செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

8/2008.

தமிழ்நாடு சட்டம்

26/2008.

தமிழ்நாடு சட்டம்

27/2008.

தமிழ்நாடு சட்டம்

24/2013.

தமிழ்நாடு சட்டம்

25/2013.

தமிழ்நாடு சட்டம்

10/2019.

தமிழ்நாடு சட்டம்

11/2019.

தமிழ்நாடு சட்டம்

24/2019.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

6 7

தமிழ்நாடு சட்டப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு செப்டம்பர்

திங்கள் 25 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக

இதன் மூலம் வெளியிடப்படுகிறது.-

சட்ட எண் 21/2020.

2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமைச் சட்டத்தை மேலும்

திருத்துவதற்கானதொரு சட்டம் .

இந்தியக் குடியரசின் எழுபத்து ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால்

பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமை

தொடக்கம்.

(இரண்டாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

4-ஆம் பிரிவிற்கான 2. 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமைச் சட்டத்தின்

16/2003.

திருத்தம். 4- ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில் (b) ஆம் கூறிற்காக பின்வரும் கூறானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும் ;- அதாவது

(b) "மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் நிதிநிலை பற்றாக்குறை விகிதத்தை 2022-ஆம்

ஆண்டு மார்ச்சு மாதம் 31-ஆம் தேதி வாக்கில் மூன்று விழுக்காட்டளவிற்கு மிகாதவாறு

வைத்திருந்து அதன் பின்னர் அதே நிலையில் அதனைப் பின்பற்றுதல் வேண்டும் ;".

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

8 9

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு

செப்டம்பர் திங்கள் 28 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத்

தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:—

சட்ட எண் 23/2020.

2010 ஆம் ஆண்டு சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்புச்

சட்டத்தினை திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2020 ஆம் ஆண்டு சென்னை ஒருங்கிணைந்த

தொடக்கம்.

பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பு (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

4 ஆம் பிரிவிற்கான 44/2010.

திருத்தம்.

2. இதன் பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான 2010 ஆம் ஆண்டு சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்புச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில்.

(1) (1)ஆம் உட்பிரிவில், (a), (b) மற்றும் (c) ஆம் கூறுகளுக்குப் பதிலாக பின்வரும்

கூறுகள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(a) முதலமைச்சர், பதவி வழித் தலைவராக இருப்பார்;

(b) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையைப் பொறுப்பில் கொண்ட அமைச்சர்,

பதவி வழித் துணைத் தலைவராக இருப்பார்;

(c) போக்குவரத்துத் துறையைப் பொறுப்பில் கொண்ட அமைச்சர்,

பதவி வழி;

(cc) அரசு தலைமைச் செயலாளர், பதவி வழி;

(ccc) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் துணைத் தலைவர், பதவி வழி;";

(2) (3) ஆம் உட்பிரிவில், "இரண்டு துணைத் தலைவர்களில் ஒருவர், முதுநிலையில்

உள்ளவர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "துணைத் தலைவர்" என்ற சொற்றொடரானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

3. முதன்மைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவில் "துணைத் தலைவர்கள்" என்ற 22 ஆம் பிரிவிற்கான திருத்தம்.

சொற்றொடருக்குப் பதிலாக, "துணைத் தலைவர்" என்ற சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

10 11

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு செப்டம்பர்

திங்கள் 30-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத்

தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:—

சட்ட எண் 24/2020.

1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தினை மேலும்

திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் (திருத்தச்)

தொடக்கம்.

சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

20-ஆம் பிரிவிற்கான 2. 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (இதன் பின்பு முதன்மைச்

35/1972.

திருத்தம்.

சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 20-ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,-

(1) (b) - ஆம் கூறானது விட்டுவிடப்படுதல் வேண்டும்:-

(2) (c) - ஆம் கூறிற்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும், அதாவது

(c) திட்டத்தினால் உள்ளடக்கப்பட்ட பகுதி:."

21 ஆம் பிரிவிற்கான திருத்தம்.

3. முதன்மைச் சட்டத்தின் 21 ஆம் பிரிவில் " பகுதியில் உள்ள நிலங்கள் மற்றும் கட்டடங்களின் உரிமையாளர்களுடன் வகுத்துரைக்கப்பட்ட முறையில் கலந்தாலோசித்த பின்பு'' என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்:-

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன்,

உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

12 13

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு அக்டோபர்

திங்கள் 9 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது அது பொதுத் தகவலுக்காக

இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 25/2020.

தமிழ்நாடு மாநிலத்தில் பொருளியல், அதனுடன் தொடர்புடைய பாடங்கள் மற்றும் மேலாண்மை

துறைகளில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்தினை பதிவு செய்தல் மற்றும் அதைச்

சார்ந்த அல்லது அதனுடன் தொடர்புடைய சில பிற பொருட்பாடுகளுக்கும் வகை செய்வதற்கான

தொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்ற பேரவையால் பின்வருமாறு இயற்றப்படுவதாகுக :-

அத்தியாயம்- 1

முன்னுரை

1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளிச் சட்டம் என குறுந்தலைப்பு மற்றும்

தொடக்கம்.

வழங்கப்படும்.

(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாக குறிக்கப்படலாகும் அத்தகைய நாளில்

நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

2. இச்சட்டத்தின் தருவாய் வேறுபொருள் குறித்தாலன்றி:-

பொருள் வரையறைகள்.

(a) "கல்வி மன்றம்" என்பது , 20 ஆம் பிரிவின் படி அமைக்கப்பட்ட கல்வி மன்றம் என்று

பொருள்படும்;

மையச் சட்டம் 52/1987.

(b) " ஏஐசிடிஇ" என்பது, 1987 ஆம் ஆண்டு அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி மன்றச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் படி நிறுவப்பெற்ற அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி மன்றம் என்று பொருள்படும்;

(c) " குறிக்கப்பட்ட நாள்" என்பது, இச்சட்டத்தின் தொடக்கத்திற்காக குறிக்கப்பட்ட

நாள் என்று பொருள்படும்;

(d) "அதிகாரஅமைப்புகள்" என்பது, நிறுவனத்தின் அதிகார அமைப்புகள் என்று

பொருள்படும் ;

(e) "பொது நிதி மையம் " என்பது, பொது நிதி மற்றும் அதனோடு தொடர்புடைய பாடங்களில் கல்விசார் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி நடைபெறும் நிறுவனத்தின் மையம் ஒன்று என்று பொருள்படும்;

(f) " புல தலைவர்" என்பது, நிறுவனத்தின் மையம் அல்லது பள்ளியின் துறையின் தலைவர் அல்லது அவர் இல்லாதிருந்தால் அவ்வாறு செயல்படும் நோக்கத்திற்காக அமர்த்தப்பட்ட நபர் என்று பொருள்படும்;

(g) "துறை" என்பது, நிறுவனத்தின் ஆய்வுக்கான துறை ஒன்று என்று பொருள்படும்

மற்றும் ஆய்வுக்கான மற்றும் ஆராய்ச்சிக்கான மையத்தை உள்ளடக்கியது;

(h) "பணியாளர்" என்பது, நிறுவனத்தால் அமர்த்தப்பட்ட நபரெவரும் என்று பொருள்படும், மற்றும் நிறுவனத்தின் ஆசிரியர் அல்லது ஊழியர்களின் பிற உறுப்பினர் எவரையும் உள்ளடக்கியது;

(i) "செயலாட்சி மன்றம்" என்பது, 19 ஆம் பிரிவின் படி அமைக்கப்பட்ட செயலாட்சி

மன்றம் என்று பொருள்படும்;

(j) "புலப் பேராசிரியர்" என்பது, நிறுவனத்தின் புலப் பேராசிரியர் என்று பொருள்படும்;

(k) "ஆட்சிக்குழு" என்பது, 18 ஆம் பிரிவின் படி அமைக்கப்பட்ட ஆட்சிக் குழு என்று

பொருள்படும்;

14

(l) "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்;

(m) "விடுதி" என்பது, நிறுவனத்தால் பேணப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட

நிறுவனத்தின் மாணவர்களுக்கான குடியிருப்பு ஒரு அலகு என்று பொருள்படும்;

(n) "நிறுவனம்" என்பது, மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளி, சென்னை என்று

பொருள்படும்;

(o) "வகுத்துரைக்கப்பட்டது" என்பது, நிலைச் சட்டங்கள் மற்றும் அவசரச் விதிகளால்

வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்;

(p) "தகுதித் தேர்வு" என்பது, நிறுவனத்தின் படிப்பு எதற்கும் அனுமதிக்காக விண்ணப்பிக்க, கல்வி மன்றத்தால் நிபந்தனையாகக் குறிப்பிடப்படலாகும் அத்தகைய மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டிய சோதனை அல்லது தேர்வு என்று பொருள்படும்;

(q) "ஒழுங்கு முறை அமைப்பு" என்பது, உயர்கல்வியின் தரங்களை பேணுதலுக்காக உருவாக்கப்பட்ட பல்கலைகழக மானியக் குழு, அனைத்து இந்திய தொழில் நுட்பக் கல்வி மன்றம் போன்ற அத்தகைய அமைப்பு என்று பொருள்படும் மற்றும் உள்ளடங்கும்;

(r) "சங்கம்" என்பது, 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் படி

பதிவு செய்யப்பட்ட மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளி என்று பொருள்படும்;

தமிழ்நாடு சட்டம்

27/1975.

(s) "நிலைச் சட்டங்கள்" மற்றும் "அவசர விதிகள்" என்பது, இச்சட்டத்தின் படி முறையே

அமைக்கப்பட்ட நிலைச் சட்டங்கள் மற்றும் அவசர விதிகள் என்று பொருள்படும்;

(t) "மாணவன்" என்பது, நிறுவனத்தின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு மாணவன்

என்று பொருள்படும்;

(u) "ஆசிரியர்கள்" என்பது, பேராசிரியர்கள் உட்பட மதிப்புறு / மாண்பமை / தொடரடை பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் / உதவிப் பேராசிரியர்கள் அல்லது

அதன்பொருட்டு நெறிமுறைகளை பயிற்றுவிக்க நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட நபரெவரும் என்று பொருள்படும்;

மையச் சட்டம் 3/1956.

(v) "யுஜிசி" என்பது, 1956 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்தின் 4

ஆம் பிரிவின்படி நிறுவப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழு என்று பொருள்படும்;

அத்தியாயம்-II

நிறுவனம்

3. (1) குறிக்கப்பட்ட நாளில் மற்றும் அதிலிருந்து, மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியானது

அதே பெயரைக் கொண்ட கூட்டாண்மை அமைப்பாகுதல் வேண்டும்.

நிறுவனத்தினைப் பதிவு செய்தல்.

(2) நிறுவனமானது, இச்சட்டத்தின் வழிவகைகளுக்குட்பட்டு சொத்தினை அடைவதற்கும்

மற்றும் வைத்துக் கொள்வதற்கும், ஒப்பந்தம் செய்வதற்கும் இச்சட்டத்தின் நோக்கத்திற்குத்

தேவையான அத்தகைய பிறவற்றை செய்தலுக்கான அதிகாரங்களுடன் கூடிய தொடர்ந்த

நிலைப்பாடு மற்றும் குறிப்பிட்ட இலச்சினையும் கொண்டிருக்கும் மற்றும் கூறப்பட்ட பெயரால்

வழக்கிடுதலும் மற்றும் வழக்கிடப்படுதலும் வேண்டும்.

(3) நிறுவனமானது, வட்டார மையங்கள், கூடுதல் வளாகங்கள் மற்றும் கல்வி

மையங்களை பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் பிற முறைப்படுத்துதல் அமைப்புகளின்

விதிகளுக்குட்பட்டு இம்மாநில அரசானது பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய இடங்களில்

நிறுவலாம்.

(4) தமிழ்நாடு, சென்னையில் நிறுவனத்தின் தலைமையகம் இருத்தல் வேண்டும்.

4. (1) நிறுவனத்தின் நோக்கங்களானவை:

நிறுவனத்தின்

நோக்கங்கள்.

(a) தேசிய வளர்ச்சியில் ஒரு பங்கு வகிப்பதற்காக பொருளியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாடங்களில் மற்றும் மேலாண்மை பாடத்தில் கல்வி மற்றும் அறிவினை மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல்;

(b) பொருளியல், அதன் தொடர்பான பாடங்கள் மற்றும் மேலாண்மை பாடங்களை முன்னிறுத்திய உயர்கல்வி துறையில் உலகளாவிய புகழ்பெற்ற சீர்மிகு நிறுவனம் ஆக்குதல்;

15

(c) கற்பித்தல், ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கொள்கை பரப்புதலுக்கான மேம்பட்ட

மையமாக நிறுவனத்தை வளரச் செய்தல்;

(d) கொள்கை உருவாக்குபவர்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறையிலிருந்து பிறருக்கான பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ளுதல்;

(e) பொருளியல், அதனுடன் தொடர்புடைய பாடங்கள் மற்றும் மேலாண்மை துறைகளில் ஆலோசனை வழங்குதல் மற்றும் ஆதரவு பெற்ற திட்டங்களை ஏற்றுக் கொள்ளுதல்;

(f) மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்களில், உயர்கல்வித் துறையில் சமுதாயத்தில் பெரிய அளவில் சேவை செய்யும் பொறுப்புணர்வை

வளர்த்தல் மற்றும் அறிவு வளரச் செய்ய சொற்பொழிவுகள், கருத்தரங்குகள்,

கலந்தாய்வுகள் மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்தல் மற்றும் சமுதாய

வளர்ச்சிக்கான திறமை வாய்ந்த கருவிகளாக பொருளாதார உத்திகளை அமைத்தல்;

(g) தேர்வுகளை நடத்துதல் மற்றும் பட்டங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு

தகுதிகளை வழங்குதல்;

(h) சமுதாய மற்றும் பொருளாதார வளர்ச்சியினை பொறுத்தவரையில், ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்காக அத்தகைய அனைத்து

நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் அத்தகைய அனைத்து கல்வி

நடவடிக்கைகளை நடத்த மற்றும் தேவையெனக் கருதும் அத்தகைய பிற கல்வி செயல்களை மேற்கொள்ளுதல்; மற்றும்

(i) பொருளாதாரம், மேலாண்மை, கல்வி மற்றும் தொடர்புடைய அம்சங்களின் துறைகளில் அவ்வப்போது, மாநில அரசு அல்லது மைய அரசு அல்லது பிற

அரசு முகமைகள் பொது அல்லது தனியார் கூட்டாண்மை அமைப்புகளால்

ஒப்படைக்கப்படலாகும் பணிகளை எடுத்துக்கொள்ளுதல்.

5. நிறுவனம் பின்வரும் அதிகாரங்களை செயலாக்கம் செய்யலாம் மற்றும் பின்வரும் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறைவேற்றலாம், அதாவது:-

அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்.

(a) நிறுவனத்தின் நோக்கங்களை மேற்கொள்ள தேவைப்படலாகும் ஆராய்ச்சி, கல்வி மற்றும் நெறிமுறைகளுக்கான அத்தகைய மையங்களை நிர்வகித்தல் மற்றும்

மேலாண்மை செய்தல்;

(b) நிறுவனமானது அவ்வப்போது தீர்மானிக்கலாகும் அத்தகைய கல்விக்கான பிரிவுகளில் நெறிமுறைகளை வழங்குதல் மற்றும் ஆராய்ச்சி மற்றும்

முன்னேற்றத்திற்கான வழிவகைகளை ஏற்படுத்துதல் மற்றும் அறிவு மற்றும் திறமைகளை செயற்படுத்துதல்;

(c) பொருளியல் கல்வி மற்றும் தொடர்புடைய பாடங்கள் மற்றும் மேலாண்மை படிப்புகளை வளாகத்திற்குள், வளாகத்திற்கு வெளியேயான மற்றும் துணை மையங்கள் அல்லது தொலைதூர கல்வித் திட்டங்கள் மூலம் பயிற்றுவித்தல் மற்றும் வளரச்செய்தல்;

(d) கல்வி வல்லுநர்கள் மற்றும் கல்வியில் சிறப்புடையவர்களை மாண்பமை

பேராசிரியராக அலங்கரித்து நன்மதிப்பளித்தல்;

(e) நிறுவனம் தீர்மானிக்கலாகும் மற்றும் அளிக்கலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பட்டயங்கள், சான்றிதழ்கள், பட்டங்கள் அல்லது பிற கல்வி சிறப்புத்

தகுதிகளை தேர்வுகள், மதிப்பாய்வு அல்லது பிற சோதனை முறைகள் எவற்றின்

அடிப்படையில் வழங்குதல் மற்றும் நல்ல மற்றும் போதுமான காரணங்களுக்காக

அத்தகைய பட்டயங்கள், சான்றிதழ்கள், பட்டங்கள் அல்லது பிற கல்வி சிறப்புத் தகுதிகளை திரும்பப் பெறுதல்;

(f) அவசர விதிகளில் விதிக்கப்பட்டுள்ள முறையில் மாண்பமை பட்டங்கள் அல்லது

சிறப்புத் தகுதிகளை நபர்களுக்கு அளித்தல்;

(g) நிறுவனத்தின் உறுப்பினர்களல்லாத நபர்களாக தீர்மானிக்கப்படலாகும் அத்தகைய நபர்களுக்கு அஞ்சல்வழி மற்றும் அத்தகைய பிற படிப்புகள் உட்பட கல்வி மற்றும்

பயிற்சி அளித்தல்;

16

(h) நிருவாக, அமைச்சுப்பணி மற்றும் பிற பணியிடங்களை உருவாக்குதல் மற்றும்

அதற்கு பணியமர்த்தம் செய்தல்;

(i) பார்வையிடும் பேராசிரியர்கள், மாண்பமை பேராசிரியர்கள், ஆலோசகர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், படிப்பு எழுத்தாளர்கள் மற்றும்

நிறுவனத்தின் நோக்கங்களின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கலாகும் அத்தகைய

பிற நபர்களை ஒப்பந்த அடிப்படையில் அல்லது பிற வகையில் பணி அமர்த்தம் செய்தல்;

(j) பிற பல்கலைக்கழகங்கள் அல்லது அமைப்புகள் எதிலும் பணிபுரியும் சிறப்புடைய நபர்களை நிரந்தரமாக அல்லது குறிப்பிட்ட கால அளவிற்கு பணி அமர்த்துதல் அல்லது பணியில் ஈடுபடுத்துதல்;

(k) இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் உள்ள பிற பல்கலைக்கழகம் அல்லது அதிகாரஅமைப்பு அல்லது நிறுவனம் எவற்றுடனும் நிலைச் சட்டத்தில்

அமைக்கப்பட்டுள்ள அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய நோக்கங்களுக்காக கூட்டமைத்தல், ஒத்துழைத்தல் மற்றும் சேர்தல்;

(l) நிறுவனத்தின் கருத்துப்படி அதன்நோக்கங்களை மேற்கொள்ள தேவையான ஆராய்ச்சி மற்றும் நெறிமுறைகளுக்கான பள்ளிகள், மையங்கள், சிறப்பு ஆய்வகங்கள் அல்லது பிற அமைப்புகளை நிறுவுதல் மற்றும் பேணுதல்;

(m) தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு ஆய்வுதவிகள், படிப்புதவித்தொகை, மாணவருதவித் தொகைகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை நிறுவுதல் மற்றும்

வழங்குதல்;

(n) மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வசிப்பிடங்கள், விடுதிகளை நிறுவுதல், பேணுதல் மற்றும் கண்காணித்தல் மற்றும் உடல்நல மற்றும் பொதுநல

நடவடிக்கைகளை வளரச் செய்தல் மற்றும் மாணவர்களுக்கான வசிக்கும் இடங்களை அங்கீகரித்தல்;

(o) ஆராய்ச்சி மற்றும் கலந்தாய்வுக்கு வழிவகைகள் செய்தல் மற்றும் அந்த நோக்கத்திற்காக பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் நிறுவனம் தேவையெனக் கருதலாகும் அத்தகைய ஏற்பாடுகளை பதிவு செய்தல்;

(p) நிலைச்சட்டங்களுக்கிணங்கி நேர்வுக்கேற்ப, ஒரு மையத்தை, ஒரு நிறுவனம், துறை

அல்லது பள்ளியென விளம்புகை செய்தல்;

(q) தேர்வு மதிப்பீடு அல்லது பிறவகை சோதனை எதையும் உள்ளடங்கி நிறுவனத்திற்குள்

சேர்க்கைக்கான தரங்களை தீர்மானித்தல்;

(r) கட்டணங்கள் மற்றும் பிற செலவுகளின் செலுத்துதலை வகுத்துரைத்தல், கேட்டல்

மற்றும் பெற்றுக் கொள்ளுதல்;

(s) பெண்கள் மற்றும் பிற குறைபாடுள்ள மாணவர்களின் வசிப்பிடம், ஒழுக்கம் மற்றும் கற்பித்தல் தொடர்பாக நிருவாகம் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்தல்;

(t) பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான ஒழுக்க நெறிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் மற்றும் நிறுவனத்தால் அவசியமெனக் கருதலாகும் ஒழுங்கு நடவடிக்கையை எடுத்தல்;

(u) படிப்புக்கு வெளியே கற்பித்தல் மற்றும் விரிவாக்க சேவைகளை அமைத்தல் மற்றும்

மேற்கொள்ளுதல்;

(v) நிறுவனம் அதன் நோக்கங்களை மேற்கொள்ளத் தேவையெனக் கருதுகிறவாறான அத்தகைய சிறப்பு மையங்கள், தனித்தன்மை வாய்ந்த ஆய்வு மையங்கள் அல்லது ஆராய்ச்சி மற்றும் நெறிமுறைகளுக்கான பிற அலகுகளை நிறுவுதல்;

(w) நிறுவனத்திற்குத் தேவையான பேராசிரியர் பணிகள், இணைப் பேராசிரியர் பணிகள், உதவிப் பேராசிரியர் பணிகள் மற்றும் பிற கற்பித்தல், கல்வி அல்லது ஆராய்ச்சிப் பணிகளை நிறுவுதல்;

17

(x) நிறுவனத்தின் நோக்கங்களுக்காக மற்றும் நோக்கங்களுக்கு உறுதுணையாகும் மானியங்கள், அறக்கட்டளை நிதியங்கள், பங்குத் தொகைகள், அன்பளிப்புகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளுதல்;

(y) ஆட்சிக்குழுவின் முந்தைய ஏற்புடன், நிறுவனத்தின் நலத்திற்காக அசையும் அல்லது அசையாச் சொத்து எதையும் அடைய, வைத்துக்கொள்ள, மேலாண்மை செய்ய மற்றும் விற்பனை செய்தல்;

வரம்புரையாக: அரசு வழங்கிய எந்த நிலத்தையும் அரசின் முன்

அனுமதியின்றி விற்பனை செய்தல் கூடாது:

(z) ஆட்சிக்குழுவின் ஏற்புடன், பிணையமின்றி அல்லது நிறுவனத்தின் சொத்துக்கு எதிராக பிணையம் அல்லது அடைமானம் முறையில் பணக் கடன் வாங்குதல்;

(aa) நிறுவனத்தின் நோக்கங்கள் அனைத்திற்கும் அல்லது எதற்கும் தேவைப்படும், இடைநிகழும் அல்லது அடைதலுக்கு இணங்கலாகும் அனைத்து அத்தகைய பிற செயல்களையும் பொருட்களையும் செய்தல்;

6.நிறுவனம் சுயநிதி நிறுவனமாக இருக்கும்:

மானியங்கள்.

வரம்புரையாக: தேவையெனக் கருதலாகும் குறிப்பிட்ட நோக்கம் எதற்காகவும் மானிய உதவி அல்லது பிற நிதியுதவிக்கு அரசு ஒப்பளிக்கலாம்.

7. (1) நிறுவனமானது, இச்சட்டத்திற்கு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் சேர்க்கை மற்றும்

தரங்கள்.

பொருத்தமான விதிகள் மற்றும் ஒழுங்குமுறை நெறிகளுக்குட்பட்டு நேர்வுக்கேற்ப இனம்,

சமயம், சாதி அல்லது வகுப்பு அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து நபர்களுக்கும்

பொதுவாக்குதல் வேண்டும்.

(2) நிறுவனத்தின் பட்டங்கள் அல்லது சிறப்புப்பட்டங்கள் அல்லது பட்டயங்களுக்கான

தேர்வுகளின் சேர்க்கைக்காக நிறுவனத்தின் படிப்புக்கு பின்வரும் நபரெவரும்

(i) அதற்கென வகுத்துரைக்கப்பட்ட தேர்வில் அவர் தேர்ச்சியடைந்தாலன்றி; மற்றும்

(ii) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற கல்வி நிபந்தனைகளை

நிறைவேற்றினாலின்றி அனுமதிக்கப்பட மாட்டார்.

(3) (1) மற்றும் (2) உட்பிரிவுகளில் அடங்கிய எதுவும்,-

(a) வகுத்துரைக்கப்பட்ட கல்வித் தகுதி அல்லது தரத்தை பெற்றிருக்காத நபர்

எவரையும் படிப்புப் பிரிவில் அனுமதித்தல்;

(b) ஒரு பட்டம் அல்லது பிற கல்வி சிறப்புத் தகுதிகளை வழங்குவதற்கு தேவையான குறைந்தபட்ச தரத்திற்கு குறைவான கல்வி பதிவுரு கொண்ட மாணவர் எவரையும் நிருவாகத்தின் பட்டியலில் வைத்திருத்தல்;

(c) நிருவாகத்தின் உறித்தமுடைமை அல்லது பிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளுக்கு முரணான

நடத்தை கொண்டிருக்கும் நபர் எவரையும் அனுமதித்தல் அல்லது மாணவர் எவரையும் வைத்திருத்தல்; மற்றும்

(d) படிப்பிற்கு வகுத்துரைக்கப்பட்ட தேவையான கட்டணங்களை செலுத்தத் தவறிய மாணவர் எவரையும் நிறுவனத்தின் பட்டியலில் வைத்திருத்தல்

ஆகியவற்றை நிறுவனத்திடம் வேண்டக் கூடாது.

(4) (1), (2) மற்றும் (3)ஆம் உட்பிரிவுகளின் வழிவகைகளுக்கு மற்றும்

வகுத்துரைக்கப்படலாகும் நிறுவனத்தின் நிலையான சேர்க்கை நடைமுறைகளுக்குட்பட்டு,

தமிழ்நாட்டை வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு படிப்புப் பிரிவிலும்

முப்பத்தைந்து விழுக்காடு இடங்களை நிறுவனம் இட ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.

(5) (4)ஆம் உட்பிரிவின் படி தமிழ்நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட மாணவர்களுக்காக,

ஒதுக்கீடு செய்யப்பட்ட முப்பத்தைந்து விழுக்காடு இடங்களுக்கு மாணவர்களின்

சேர்க்கையானது, நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி பின்பற்றப்படுகிற இடஒதுக்கீட்டின் படி

ஏற்படுத்தப்படுதல் வேண்டும்.

18

விளக்கம்–இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, "தமிழ்நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட

மாணவர்கள்" என்பது –

i. தகுதித் தேர்வுக்கு முன்னதாக, ஐந்தாண்டுகளுக்குக் குறையாததொரு கால அளவிற்கு தமிழ்நாடு மாநிலத்தில் குடியிருந்து வருகிற ஒரு மாணவர் அல்லது

அவரின் பெற்றோரின் ஒருவர்; அல்லது

ii. தகுதித் தேர்வுக்குச் செல்லும் ஐந்தாண்டுகளுக்கு குறையாததொரு கால அளவிற்கு, தமிழ்நாடு மாநிலத்தில் ஏதேனுமொரு கல்வி நிறுவனத்தில் படித்து

வருகிற ஒரு மாணவர்.

(6) (4) மற்றும் (5)ஆம் உட்பிரிவுகளில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்,

சேர்க்கைக்காக, தமிழ்நாட்டை வசிப்பிடமாகக் கொண்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை

போதுமானதாக இல்லாதவிடத்து, அத்தகைய மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள்,

தகுதியின் பேரில் மீதமுள்ள மாணவர்களால் நிரப்பப்படும்.

8. (1) நிறுவனத்தினால் நடத்தப்படும் தேர்வு ஒன்றிற்காக, ஒவ்வொரு தேர்வு நாடுநரும், தேர்வுகளுக்கான

சேர்க்கை.

கல்விக்குழுவின் பரிந்துரையின் பேரில் செயலாட்சி மன்றத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு

சிறப்பாணையினால் இந்த உட்பிரிவின் வழிவகைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டாலன்றி,

நிறுவனத்தின் உறுப்பினராக பெயர் பதிவு செய்தல் வேண்டும். செயலாட்சி மன்றம்

பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய வரையறைகளுக்குட்பட்டு, ஏதேனும் அத்தகைய

விலக்களிப்பானது ஏற்படுத்தப்படலாம்.

(2) கல்விக் குழுவின் பரிந்துரையின் பேரில், நிறைவேற்றப்பட்ட, செயலாட்சி மன்றத்தின் ஆணை

ஒன்றினால், அவர் நிறுவனத்தின் உறுப்பினராக பெயர் பதிவு செய்தும், அதற்காக தேவைப்படுகிற

வருகைப் பதிவு போன்ற தேவைகளில் மனநிறைவடைந்தாலன்றி அல்லது அத்தகைய

பெயர் பதிவு செய்தலுக்கான தேவைகள் அல்லது வருகை அல்லது இரண்டிலிருந்தும் அவர்

விலக்களிக்கப்பட்டாலன்றி தேர்வு நாடுநர், நிறுவனத்தினால் நடத்தப்படும் ஏதேனும் தேர்விற்கு

அனுமதிக்கப்பட மாட்டார். இந்த பிரிவின் கீழ் வழங்கப்பட்ட விலக்களிப்பு எதுவும், செயலாட்சி

மன்றம் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய வரையறைகளுக்குட்பட்டதாகும்.

(3) தேர்வு ஒன்றிற்காக, தேர்வுக் கட்டுப்பாட்டாளரின் ஆணை ஒன்றினால் நிறுவனத்தின்

பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட அல்லது ஓராண்டுக்கும் மேலாக

தேர்வெழுதுவதிலிருந்து தடைசெய்யப்பட்ட மாணவர் அல்லது தேர்வு நாடுநர் எவரும் அத்தகைய

ஆணையினைப் பெற்ற நாளிலிருந்து பத்து நாட்களுக்குள், இயக்குநரிடம் மேல்முறை செய்யலாம்.

(4) இது தொடர்பாக, இயக்குநரால் எடுக்கப்படும் முடிவு எதுவும் இறுதியானதாகுதல்

வேண்டும்.

அத்தியாயம் - III

நிறுவனத்தின் அலுவலர்கள்

நிறுவனத்தின் 9. பின்வருபவர்கள், நிறுவனத்தின் அலுவலர்களாக இருப்பர், அதாவது:-

அலுவலர்கள்.

(a) இயக்குநர்;

(b) நிருவாக அலுவலர்;

(c) தேர்வுக் கட்டுப்பாட்டாளர்;

(d) நிதி அலுவலர்;

(e) புலத் தலைவர் (கள்) ; மற்றும்

(f) நிறுவனத்தின் அலுவலர்களாக நிலைச் சட்டத்தினால் அறிவிக்கப்படலாகும்

நிறுவனத்தின் அத்தகைய பிற அலுவலர்கள்.

இயக்குநர் 10. (1) இயக்குநர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் ஆட்சிக் குழுவினால்

பணியமர்த்தப்படுதல் வேண்டும் மற்றும் மூன்றாண்டுகள் கால அளவிற்கு பதவி வகித்தல்

வேண்டும் மற்றும் மேலும் மூன்றாண்டுகள் கால அளவிற்கு மறு பணியமர்த்தத்திற்காக

தகுதியுடையவராகுதல் வேண்டும்.

19

(2) இயக்குநரானவர் பொருளியல், நிதி மேலாண்மை, சமூக அறிவியல், கணிதவியல்,

புள்ளியியல், வங்கியியல் அல்லது பிற தொடர்புடைய, ஆகிய ஏதேனும் பாடங்களில்

நிபுணத்துவமுடைய சிறந்த கல்வியாளராக இருத்தல் வேண்டும்.

(3) இயக்குநரானவர், நிறுவனத்தின் முழு நேர அலுவலராகவும் கல்வித் தலைவராகவும்

மற்றும் முதன்மைச்செயல் அலுவலராகவும் இருத்தல் வேண்டும்.

(4) இயக்குநரானவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்களைச்

செயல்படுத்துதலும், அத்தகைய பணிகளை நிறைவேற்றுதலும் வேண்டும்.

11. விடுப்பு, உடல்நலக் குறைவு அல்லது பிறவற்றின் காரணத்தினால் இயக்குநர் இயக்குநரின் இல்லாதிருக்கும் போது, ஆட்சிக் குழுவானது, நிறுவனத்தின் மூத்த பேராசிரியரை அல்லது

இயக்குநராக நியமிக்கப்படத் தகுதியுயை ஏதேனும் பிற நபரை இயக்குநரின் அதிகாரங்களைச்

செயல்படுத்துவதற்காகவும், கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும் தேவையான ஏற்பாடுகளை

பதவி காலியாக உள்ளபோது பணியின் ஏற்பாடுகள்.

ஆட்சிக் குழு உருவாக்கும் வரையில், நிறுவனத்தின் பொறுப்பு வகுக்கக்கூடிய இயக்குநராகப்

பணியிலமர்த்தலாம்.

12. (1) நிருவாக அலுவலர், நிறுவனத்தின் முழு நேர சம்பளம் நிருவாக அலுவலர்.

பெறுகிற அலுவலராக இருத்தல் வேண்டும். நிருவாக அலுவலரின் பணியமர்த்தத்தின்

நெறிமுறைகளும் பணியின் வரையறைகளும், வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகையவாறு

இருத்தல் வேண்டும்.

(2) நிருவாக அலுவலர், நிறுவனத்தின் சார்பாக உடன்படிக்கையினை ஏற்படுத்த,

ஆவணங்களில் ஒப்பிமிட மற்றும் பதிவுறுகளைச் சான்றுறுதியிட அதிகாரங்களைக்

கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்களைச்

செயல்படுத்துதலும், அத்தகைய பணிகளை நிறைவேற்றுதலும் வேண்டும்.

(3) நிருவாக அலுவலர், செயலாட்சி மன்றம் மற்றும் கல்விக்குழுவின் பதவி வழி

செயலாளராக இருத்தல் வேண்டும்.

(4) நிறுவனத்தினால் அல்லது நிறுவனத்திற்கெதிரான அனைத்து வழக்கு மற்றும் பிற

சட்ட நடவடிக்கைகளில், வாதுரைகளானது, நிருவாக அலுவலரால் ஒப்பமிடப்படுதலும் ஒப்பாய்வு

செய்யப்படுதலும் வேண்டும் மற்றும் அத்தகைய வழக்குகள் மற்றும் நடவடிக்கைகளில் அனைத்து

செயல்முறைக் கட்டளைகளும், நிருவாக அலுவலருக்கு வழங்கப்படுதலும் கொடுக்கப்படுதலும்

வேண்டும்.

(5) நிருவாக அலுவலர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்களைச்

செயல்படுத்துதலும், அத்தகைய பணிகளை நிறைவேற்றுதலும் வேண்டும்.

13. (1) தேர்வுக்கட்டுப்பாட்டாளர், நிறுவனத்தின் முழு நேர அலுவலராக இருத்தல் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்.

வேண்டும். வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் அத்தகைய நெறிமுறைகளுக்கும்

வரையறைகளுக்கும் உட்பட்டு நியமனஞ் செய்யப்படுதல் வேண்டும்.

(2) தேர்வுக் கட்டுப்பாட்டாளர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்களைச்

செயல்படுத்துதலும், அத்தகைய பணிகளை நிறைவேற்றுதலும் வேண்டும்.

நிதி அலுவலர்.

14. (1) நிதி அலுவலர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் நியமனஞ்

செய்யப்படுதலும், அத்தகைய அதிகாரங்களைச் செயல்படுத்துதலும் அத்தகைய பணிகளை

நிறைவேற்றுதலும் வேண்டும்.

15. (1) நிறுவனத்தின் ஒவ்வொரு புலத்திற்காகவும், தொடர்புடைய புலத்தின் முதன்மைக் புலத் தலைவர்.

கல்வி அலுவலராக இருக்கும் ஒரு புலத் தலைவர் இருத்தல் வேண்டும்.

(2) புலத்தலைவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் நியமனஞ்செய்யப்படுதலும்,

அத்தகைய அதிகாரங்களைச் செயல்படுத்துதலும், அத்தகைய பணிகளை நிறைவேற்றுதலும்

வேண்டும்.

16. வகுத்துரைக்கப்படலாகும் அத்தகையவாறு நிறுவனத்தின் பிற அலுவலர்களின் பணியமர்த்தம்

பிற அலுவலர்கள் மற்றும் பணிகள் மற்றும் கடமைகளின் விதமானது இருத்தல் வேண்டும்.

20

அத்தியாயம்–IV

நிறுவனத்தின் அதிகார அமைப்புகள்நிறுவனத்தின் அதிகார அமைப்புகள்

17. பின்வருவன, நிறுவனத்தின் அதிகாரஅமைப்புகளாக இருத்தல் வேண்டும்:-

நிறுவனத்தின் அதிகார அமைப்புகள்.

(1) ஆட்சிக் குழு;

(2) செயலாட்சி மன்றம்;

(3) கல்விக் குழு;

(4) நிதிக் குழு;

(5) திட்டக் குழு; மற்றும்

(6) நிறுவனத்தின் அதிகாரஅமைப்புகளாக நிலைச் சட்டத்தினால் அறிவிக்கப்படலாகும்

நிறுவனத்தின் அத்தகைய பிற அதிகார அமைப்புகள்.

ஆட்சிக் குழு.

18. (1) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் சங்கத்தின் ஆளுநர்கள் குழுவினால்

ஆட்சிக் குழுவானது அமைக்கப்படுதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

ஆட்சிக்குழுவின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இருத்தல் வேண்டும்.

(2) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு, ஆட்சிக் குழு பின்வரும் அதிகாரங்களையும் செயற்பணிகளையும் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-

(a) நிறுவனத்தின் செயற்பாடுகளின் மீது அதன் நோக்கங்களுக்கு இசைவாக முழு

கண்காணிப்பினையும் செயல்படுத்துதல்;

(b) நிறுவனத்தின், குழுக்கொள்கை மற்றும் செயல்முறைத் திட்டங்களை,

அவ்வப்போது மறு ஆய்வு செய்யவும், நிறுவனத்தின் வேலை, மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக நடவடிக்கைகளை அறிவுறுத்துதல்;

(c) நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் ஆண்டுக் கணக்குகளின் மீது

தீர்மானங்களை நிறைவேற்றவும் பரிசீலனை செய்யவும் மற்றும் அத்தகைய கணக்குகளின் அறிக்கையை தணிக்கை செய்யவும்;

(d) அறிவுரைக்காக அதில் குறிப்பிடப்படலாகும் ஏதேனும் பொருள் குறித்து

இயக்குநரிடம் அறிவுறுத்தல்; மற்றும்

(e) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற பணிகளை நிறைவேற்றுதல்.

செயலாட்சி மன்றம்

19. (1) செயலாட்சி மன்றம், நிறுவனத்தின் முதன்மை செயலாட்சி அமைப்பாக இருத்தல்

வேண்டும்.

(2) செயலாட்சி மன்றமானது, பத்து உறுப்பினர்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

அதன் மூன்று உறுப்பினர்கள்:-

(a) நிதித்துறையை பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளர், பதவி-வழி;

(b) திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையைப் பொறுப்பில்

கொண்டுள்ள அரசு செயலாளர், பதவி-வழி; மற்றும்

(c) உயர்கல்வித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளர், பதவி-

வழி;

-ஆக இருத்தல் வேண்டும்.

(3) செயலாட்சி மன்றத்தின் மீதமுள்ள ஏழு உறுப்பினர்கள், பொருளியல் மற்றும்

தொடர்புடைய பாடங்களின் துறையிலும், மேலாண்மையிலும் சிறந்தவர்களுக்கிடையேயும்

நிறுவனத்தின் பேராசிரியர்களுக்கிடையேயும் வகுத்துரைக்கப்படலாகிறவாறான முறையில்

நியமிக்கப்படுதல் வேண்டும்.

(4) உறுப்பினர்களின் பதவிக் காலமும் செயலாட்சி மன்றத்தின் அதிகாரங்களும்,

செயற்பணிகளும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகையவாறு இருத்தல் வேண்டும்.

21

கல்விக் குழு.

20. (1) கல்விக்குழு, நிறுவனத்தின் முதன்மை கல்வி அமைப்பாக இருத்தல் வேண்டும் மற்றும்

நிலைச் சட்டங்கள் மற்றும் அவசர விதிகளின் வகைமுறைகளுக்குட்பட்டு, நிறுவனத்தின் கல்விக்

கொள்கைகளின் மீது பொதுக் கண்காணிப்பினை ஒருங்கிணைக்கவும், செயல்படுத்தவும்

வேண்டும்.

(2) கல்விக் குழுவின் அமைப்பு, அதன் உறுப்பினர்களின் பதவிக் காலம் மற்றும் அதன்

அதிகாரங்களும், செயற்பணிகளும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகையவாறு இருத்தல்

வேண்டும்.

நிதிக் குழு.

21. (1) நிதிக் குழு, நிதி தொடர்புடையவற்றினை கவனித்துக் கொள்ள, நிறுவனத்தின்

முதன்மை நிதி அமைப்பாக இருத்தல் வேண்டும்.

(2) நிதிக் குழுவின் அமைப்பு, அதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் மற்றும் அதன்

அதிகாரங்களும், செயற்பணிகளும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகையவாறு இருத்தல்

வேண்டும்.

திட்டக் குழு.

22. (1) திட்டக் குழு, நிறுவனத்தின் முதன்மை திட்டமிடும் அமைப்பாக இருத்தல் வேண்டும்.

திட்டக் குழுவானது, உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான ஆதரவு அமைப்பு, ஒழுங்குமுறை

அமைப்புகளின் நெறிமுறைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்தல் வேண்டும்.

(2) திட்டக்குழுவின் அமைப்பு, அதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் மற்றும் அதன்

அதிகாரங்களும், செயற்பணிகளும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகையவாறு இருத்தல்

வேண்டும்.

23. நிறுவனத்தின் அதிகார அமைப்புகளாக, நிலைச்சட்டத்தினால் அறிவிக்கப்படலாகும் பிற குழுமங்கள்.

பிற குழுமங்கள், குழுக்கள் மற்றும் மன்றங்களின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் குழுக்கள் மற்றும் மன்றங்கள்.

செயற்பணிகளானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகையவாறு இருத்தல் வேண்டும்.

அத்தியாயம்–V

நிலைச்சட்டங்கள் மற்றும் அவசர விதிகள்

24. (1) செயலாட்சி மன்றமானது, ஆட்சிக் குழுவின் ஒப்புதலுக்குட்பட்டு, இந்த சட்டத்தின்

நோக்கங்களை மேற்கொள்வதற்காக நிலைச் சட்டங்களை செய்தல் வேண்டும்.

நிலைச் சட்டங்களைச் செய்வதற்கான அதிகாரம்.

(2) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு, நிலைச் சட்டங்களானது, பின்வரும் நிறுவனம்

ஒன்றிற்கு தொடர்புடைய பொருட்பாடுகள் அனைத்திற்கும் அல்லது அவற்றுள் எதற்கும் வழிவகை செய்யலாம், அதாவது:-

(a) அவ்வப்போது அறிவிக்கப்படலாகும் நிறுவனத்தின் அதிகாரஅமைப்புகளுடைய

அமைப்பு, அதிகாரங்கள், செயற்பணிகள் மற்றும் கடமைகள்;

(b) கூறப்பட்ட அதிகாரஅமைப்பின் உறுப்பினர்களின் பணியமர்த்தம் பதவியைத் தொடர்தல் அல்லது திரும்பப் பெறுதல் அல்லது நீக்குதல், உறுப்பினர்களின்

காலியிடங்களை நிரப்புதல் மற்றும் அதிகாரஅமைப்புகளுக்குத் தொடர்புடைய பிற பொருட்பாடுகள் அனைத்தும்;

(c) நிறுவனத்தின், அலுவலர்களுடைய பணியமர்த்தம் மற்றும் அதிகாரங்கள் மற்றும்

கடமைகள் மற்றும் அவர்களின் ஊதியங்கள்;

(d) பணியமர்த்தத்தின் முறை மற்றும் ஆசிரியர்கள் பிற கல்வி மற்றும் நிருவாகப்

பணியாளர்களின் பணியமர்த்தம் மற்றும் அவர்களின் ஊதியங்கள்;

(e) பணியாளர்களின் பணி நிபந்தனையானது, பணியாளர்களின் பணி மூப்பு, அவர்களின் ஊதியம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை உள்ளடக்கியது;

(f) பணியாளர்களின் ஓய்வூதிய பலன்கள், காப்பீடுகள் மற்றும் வருங்கால வைப்பு

நிதிகளுக்கான வழிவகைகள்;

(g) பணியாளர்களின் பணி மூப்பினை நிர்வகிக்கும் கொள்கைகள்;

(h) பணியாளர்கள் அல்லது மாணவர்கள் மற்றும் நிறுவனத்திற்கிடையேயான

பூசல்களை தீர்ப்பதற்கான நடைமுறை;

22

(i) நிறுவனத்தின் அதிகாரி அல்லது அலுவலர் எவரின் நடவடிக்கைக்கு எதிராக பணியாளர் அல்லது மாணவர் எவராலும் நிர்வாகக் குழுவுக்கு மேல்முறையீடு செய்வதற்கான நடைமுறை;

(j) கெளரவப் பட்டங்களை வழங்குதல்;

(k) பட்டங்கள் மற்றும் பட்டயங்களை வழங்குவதற்கான பட்டமளிப்பு விழாவினை நடத்துதல் மற்றும் பட்டமளிப்பு விழாவிற்கு முன்னர் அவசரம் ஏற்பட்டால் பட்டப் படிப்பு சான்றிதழ்களை வழங்குதல்;

(l) பட்டம், பட்டயம் , சான்றிதழ் அல்லது பிற கல்வி சிறப்பு தகுதிகளை திரும்பப்

பெறுதல்;

(m) துறைகள், மையங்கள் மற்றும் இதர நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் ஒழித்தல்;

(n) ஆய்வு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாணவர் உதவித்தொகை, பொருட்காட்சிகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் போன்றவற்றை நிறுவுதல்;

(o) சேர்க்கைகள், நிறுவனத்தின் கட்டண முறைகள் மற்றும் நிறுவனத்தின்

சேர்க்கைக்கு பட்டயம், பட்டயங்கள், தேர்வுகளை முறைப்படுத்துதல்;

(p) நிறுவனத்தால் சேவைகளுக்காக வழங்கும் சேவைக் கட்டணத்தை வசூலித்தல்;

(q) நிறுவனத்தில் உதவி பெற்ற ஆராய்ச்சி, ஆலோசனை, காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை, தொடர் கல்வி மற்றும் பிற விரிவாக்க சேவைகளை நிர்வகிக்கும் முறை;

(r) நிறுவனத்தின் அலுவலர்கள் அல்லது அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட

அதிகாரங்களை ஒப்படைத்தல்;

(s) ஆய்வு மையங்கள், ஆய்வுக் குழுமம், பல துறைகளின் ஒருங்கிணைந்த கல்வி, சிறப்பு மையங்கள், தனித்திறனுள்ள ஆய்வகங்கள் மற்றும் பிற குழுக்களை நிறுவுதல்;

(t) கற்றறிந்த அமைப்பு அல்லது கழகம் உள்ளிட்ட பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மற்றும் ஒத்துழைப்பு முறையில் செயல்படுதல்;

(u) நிறுவனத்தின் மாணவர்களின் குடியிருப்புக்கான வரையறை ;

(v) நிறுவனத்தினால் பராமரிக்கப்படாத விடுதிகளின் அங்கீகாரத்திற்கான

வரையறை;

(w) நிறுவனத்தின் மாணவர்களின் உடல் நலம் மற்றும் ஒழுக்கம் மற்றும் ஒழுங்கு

நடவடிக்கைகள்;

(x) மாணவிகளின் குடியிருப்பு, ஒழுக்கம், கற்பித்தல் மற்றும் கற்பித்தலுக்கான மற்றும் நிறுவனத்திற்குள் அவர்களுக்கு சிறப்பு படிப்பு ஏதேனும் இருந்தால் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தல்;

(y) இந்தச் சட்டத்தினால் வகுத்துரைக்கப்படலாகும் அல்லது வகுத்துரைக்கப்படும்

மற்ற எல்லா பொருட்கூறுகள்;

25. (1) செயலாட்சி மன்றமானது, அவ்வப்போது சட்டங்களை செய்யலாம் மற்றும் இந்தப்

நிலைச் சட்டங்கள்

பிரிவில் வழங்கப்பட்ட முறையில் இதன் பின்பு சட்டங்களைத் திருத்தலாம் அல்லது நீக்கம் செய்யலாம்:

எவ்வாறு செய்யப் படுகின்றன என்பது.

(2) செயலாட்சி மன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட நிலைச்சட்டம் ஒன்று அல்லது

நிலைச் சட்டம் ஒன்றின் திருத்தம் அல்லது நீக்கம் குறித்து ஆட்சிக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட

வேண்டும். ஆட்சிக்குழு அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது அதன் ஒப்புதலை நிறுத்தி

வைக்கலாம். செயலாட்சி மன்றத்தினால் உருவாக்கப்பட்ட நிலைச்சட்டம் ஒன்றின் அல்லது அதன்

திருத்தம் அல்லது நீக்கம் செய்வது குறித்து ஆட்சிக்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கின்ற

வரையிலும் அது செல்லுபடியாகாது. சட்டத்தின் நகலானது தகவலுக்காக அரசுக்கு அனுப்பி

வைக்கப்பட வேண்டும்.

23

அவசர விதிகள்.

26. (1) இந்தச் சட்டம், நிலை விதிகள் ஆகியவற்றின் வகை முறைகளுக்குட்பட்டு,

கல்விக்குழுவின் பரிந்துரை பேரில் செயலாட்சி மன்றமானது அவசர விதிகளை உருவாக்க

வேண்டும், ஆட்சிக்குழுவின் ஒப்புதலுக்குட்பட்டு, பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்கும் அல்லது அவற்றில் எதற்கேனும் வகை செய்யலாம், அதாவது:-

(a) நிறுவனத்தில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் அவர்களின் பெயரை பதிவு

செய்தல் போன்றவை;

(b) நிறுவனத்தின் அனைத்து பட்டங்கள், பட்டயங்கள் சான்றிதழ்

போன்றவைகளுக்கு அமைக்கப்படும் கல்விக்கான படிப்புகள்;

(c) பயிற்று மொழி மற்றும் தேர்வு;

(d) பருவ முறை திட்டம், நவீன தர நிர்ணய நடைமுறைகள் மற்றும் மாணவர்களின்

செயல்திறனை மதிப்பிடுவதில் பிற புதிய முறைகள்;

(e) பட்டங்கள், பட்டயங்கள், சான்றிதழ் மற்றும் பிற கல்வி சிறப்பு தகுதிகள், அதற்கான தகுதிகளை வழங்குதல் மற்றும் வழங்குவது மற்றும் பெறுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பொருட்கூறு;

(f) நிறுவனத்தில் படிப்பதற்கான படிப்புகள் மற்றும் நிறுவனத்தின் சான்றிதழ்கள், பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் தேர்வுகள் ஆகியவற்றிற்கு உட்படுத்தப்பட வேண்டிய கட்டணங்கள்;

(g) ஆய்வு உதவித்தொகைகள், கல்வி உதவித்தொகைகள், மாணவர் உதவித்தொகை, பதக்கங்கள் மற்றும் பரிசுகள் ஆகியவற்றை வழங்குவதற்கான வரையறைகள்;

(h) நிறுவனத்தின் கல்வி பயணத்தொலைவை மேம்படுத்துவதற்காக தேவையானதாகக் கருதப்படும் வேறு அமைப்பு அதனின் உருவாக்கம், உட்கூறு மற்றும் செயல்பாடுகள்;

(i) பதவிக்காலம், நியமன முறை மற்றும் தேர்வு நடத்தும் அமைப்பு, தேர்வாளர்கள் மற்றும் நடுவர் ஆகியோரின் கடமைகள் உள்ளிட்ட தேர்வுகளின் நடத்தை;

(j) தேர்வாளர், நடுவர், மதிப்பீட்டாளர்கள் மற்றும் வரிசைப்படுத்துபவர்

ஆகியோர்களுக்கு செலுத்த வேண்டிய மதிப்பூதியம்;

(k) நிலைச்சட்டங்களில் செய்யப்பட்டுள்ள வழிவகைகளைத் தவிர்த்து பிற நபர்களின்

பணியமர்த்தம் மற்றும் ஊதியங்கள்;

(2) செயலாட்சி மன்றத்தினால் இயற்றப்படும் அவசர விதிகள் அனைத்து அது நிர்ணயிக்கும்

தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.

அத்தியாயம்-VI

நிதி மற்றும் கணக்குகள்நிதி மற்றும் கணக்குகள்.

ஆண்டறிக்கை.

27. இப்பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை செயலாட்சி மன்றத்தின் வழகாட்டுதல்களின் படி தயாரிக்க வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய தேதியிலோ அல்லது

அதற்கு முன்போ ஆட்சிக் குழுவிற்கு பணிந்தனுப்பப்படுதல் வேண்டும் மற்றும் ஆட்சிக்

குழுவினால் அதன் ஆண்டுக் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படுதல் வேண்டும்.

ஆண்டுக் மையச் சட்டம் XXXVIII/1949.

கணக்குகள் 28. (1) நிறுவனத்தின் ஆண்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பு ஆகியன செயலாட்சி மன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி தயாரிக்கப்பட வேண்டும், ஆட்சிக்குழுவினால்

ஒப்புதல் பெறப்பட வேண்டும் மற்றும் 1949 ஆம் ஆண்டு பட்டயக் கணக்காளர் சட்டத்தின்

வழிவகைகளின் படி தணிக்கை செய்ய தகுதியான பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தால்

குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை மற்றும் பதினைந்து மாதங்களுக்கு மிகாத

இடைவெளியில் தணிக்கை செய்யப்பட வேண்டும்.

(2) ஆண்டுக் கணக்குகளின் நகல், அதன் தணிக்கை அறிக்கையுடன், ஆட்சிக்குழுவிற்கு

அவர்களின் ஒப்புதலுக்காக குழுவின் குறித்துரையுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்24

அத்தியாயம்-VII

பணியாளர்கள்பணியாளர்கள்

29 (1) நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளரும் நிலைச் சட்டத்தின் வழிவகைகளின் படி

பணியாளர்களின்

நியமனம் செய்ய அல்லது ஈடுபடுத்தப்பட வேண்டும்.

பணி வரையறைகள்.

(2) நிறுவனம் மற்றும் கணிசமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் எவருக்கும் இடையே எழும்

பூசல் எதுவும், பணியாளருக்கு குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வாய்ப்பு

ஒன்றை வழங்கிய பின்னர் பூசலைத் தீர்க்கும் இயக்குநரிடம் பரிந்துரைக்கப்படுவார்.

(3) இயக்குநரின் ஆணைக்கு எதிரான மேல்முறையீடு ஒன்றில் ஆட்சிக்குழுவிற்கு தாக்கல்

செய்யலாம். மேல்முறையீட்டின் மீது ஆட்சிக்குழுவின் முடிவே இறுதியானதாகும்.

(4) தற்காலிக அல்லது இடைக்கால அல்லது பகுதிநேர அல்லது ஒப்பந்த அடிப்படையிலான

பணியாளர்கள் எவரையும் பொறுத்த நேர்வில் பூசல் எதுவும் எழுந்தால் தொடர்புடைய

துறைத்தலைவரால் கேட்கப்படும் மற்றும் தீர்மானிக்கப்படும் முடிவே இறுதியானதாகும்.

பணியாளர்களின்

30. நிறுவனம் தனது பணியாளர்களின் நலனுக்காக செயலாட்சி மன்றத்தினால் முடிவு

செய்யப்படலாகும், அத்தகைய வரையறைகளுக்குட்பட்டு மற்றும் அத்தகைய முறையில்

பொருத்தமெனக் கருதலாகும், அத்தகைய ஓய்வூதியம் அல்லது நலத்திட்டங்கள் அல்லது

வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியங்கள்.

வருங்கால வைப்புநிதி அல்லது காப்பீட்டு திட்டங்களை வழங்குதல் போன்றவற்றை

உருவாக்கலாம்.

அத்தியாயம்-VIII

நிதிகள்

31. (1) நிறுவனமானது குறைந்தபட்சம் இருபத்து ஐந்து கோடி ரூபாய்க்கு நிரந்தர

நிரந்தர அறக்கட்டளை

நிதி.

அறக்கட்டளை நிதியை நிறுவ வேண்டும்.

(2) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் நிரந்தர அறக்கட்டளை நிதியில்

முதலீடு செய்ய நிறுவனத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

(3) நிறுவனம் தொகை எதையும் பொது நிதி அல்லது வளர்ச்சி நிதியிலிருந்து நிரந்தர

அறக்கட்டளை நிதிக்கு மாற்றம் செய்யலாம்.

(4) (1) ஆம் உட்கூறில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தொகையை விட அதிகமான

தொகை எதையும் நிறுவனத்தின் வளர்ச்சி நோக்கத்திற்காக நிறுவனத்தினால் நிரந்தர

அறக்கட்டளையிலிருந்து திரும்பப் பெறலாம்.

32. (1) நிறுவனம் ஒரு பொது நிதியை நிறுவி, அதற்கு பின்வரும் தொகையை வரவு வைக்க

பொது நிதி.

வேண்டும், அதாவது:-

(a) கட்டணங்களிலிருந்து நிறுவனத்தால் பெறப்பட்ட வருமானம்;

(b) தனிநபர்கள் அல்லது நிறுவனங்களால் வழங்கப்பட்ட விருப்பவண வழிக்கொடை, நன்கொடைகள், அறக்கட்டளை நிதியம் அல்லது பிற மானியங்கள் எதுவும்;

(c) தொழில் முனைவோர், வர்த்தகர்கள், தொழிலகங்களிலிருந்து விருப்பாவண

வழிக்கொடைகள் அல்லது பங்களிப்பு எதுவும்;

(d) பிற மூலம் எதிலிருந்து பெறப்பட்ட அனைத்து தொகைகள்;

(e) சங்கத்தினால் அளித்த அனைத்து பங்களிப்புகள்; மற்றும்

(f) இந்த சட்டத்தினால் நடைமுறையிலிருக்கும் சட்டம் எதனாலும் தடைசெய்யப்படாத பிற நபர் அல்லது அமைப்பு எதனாலும் இதன் பொருட்டு வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்புகள்;

(2) பொதுநிதியில் வரவு வைக்கப்பட்ட தொகைகளானது நிறுவனம் சந்திக்கும்

அனைத்து தொடர் செலவினங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

வளர்ச்சி நிதி

33. (1) நிறுவனம் ஒரு வளர்ச்சி நிதியையும் நிறுவி, அதற்கு பின்வரும் தொகைகளை

வரவு வைக்க வேண்டும், அதாவது:-

25

(a) மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படலாகும் வளர்ச்சி கட்டணங்கள்;

(b) நிறுவனத்தின் வளர்ச்சி நோக்கத்திற்காக பிற மூலங்களிலிருந்து பெறப்படும்

அனைத்து தொகைகள்;

(c) சங்கத்தினால் உருவாக்கப்பட்ட அனைத்து பங்களிப்புகள்;

(d) நடைமுறையிலிருக்கும் சட்டம் எதனாலும் தடைசெய்யப்படாத பிற நபர் அல்லது அமைப்பு எதனாலும் இதன் பொருட்டு வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்புகள்; மற்றும்

(e) நிரந்தர அறக்கட்டளை நிதியிலிருந்து பெறப்படும் அனைத்து வருமானம்;

(2) அவ்வப்போது வளர்ச்சி நிதிக்கு வரவு வைக்கப்படும் தொகைகள் நிறுவனத்தின்

வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

34. 31, 32 மற்றும் 33-ஆம் பிரிவுகளின்படி நிறுவப்பட்ட நிதிகள் ஆட்சிக் குழுவின் நிதியைப் பராமரித்தல்.

பொதுவான மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டுக்குட்பட்டு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

முறையில் முறைபடுத்துதல் மற்றும் பராமரிக்கப்படுதல் வேண்டும்.

அத்தியாயம்-IX

நிறுவனத்தைக் கலைத்தல் அல்லது அங்கீகாரம் மறுத்தல்

நிறுவனத்தைக் கலைத்தல் அல்லது அங்கீகாரம் மறுத்தல்

நிறுவனத்தைக் கலைத்தல்.

35. (1) காரணம் எதற்காகவும் அதன் கலைப்பை நிறுவனமானது முன்மொழிந்தால், அது அரசிற்கு குறைந்தது ஆறு மாதங்களுக்குள் எழுத்துப்பூர்வமான அறிவிப்பினை கொடுக்க வேண்டும்.

(2) (1)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கை கிடைக்கப்பெற்றதன் பேரில், அரசு வகுத்துரைக்கப்பட்ட அத்தகைய முறையில் வழக்கமான படிப்புகளின் இறுதி தொகுதி மாணவர்கள் அவர்களின் படிப்புகளை அல்லது ஆய்வுகளை நிறைவு செய்யும்வரை, நிறுவனத்தின் கலைப்பின் தேதியிலிருந்து நிர்வாகத்திற்காக அத்தகைய ஏற்பாடுகளை அரசானது செய்தல் வேண்டும்.

கலைப்பின்போது நிறுவனத்தின் செலவினங்கள்.

36. (1) 35-ஆம் பிரிவின் அதன் கலைப்பின் போது நிறுவனத்தின் நிர்வாகத்திற்கான செலவானது நிலையான அறக்கட்டளை நிதிகள், பொது நிதி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து செலவிடப்படுதல் வேண்டும்.

(2) (1)-ஆம் உட்பிரிவின்படி குறிப்பிடப்பட்ட நிதிகள் நிறுவனத்தின் செலவினங்களை எதிர்கொள்ளப் போதுமானதாக இல்லையெனில், நிறுவனத்தின் சொத்துகள் அல்லது உடைமைகளை அரசால் விற்பனை செய்வதின் மூலம் அத்தகைய செலவினங்களை சந்திக்கலாம்.

அரசால்

நிறுவனத்தின் அங்கீகாரத்தை மறுத்தல்.

37. (1) இந்த சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்கிய வகையில் நிறுவனமானது செயல்படவில்லையென தேவையான மற்றும் போதிய அளவிலான குற்றச்சாட்டை அரசானது பெறுகிறவிடத்து, நிறுவனத்தின் அங்கீகாரத்தை ஏன் மறுத்தல் கூடாது என்ற புகாரின் நகலை குறிப்பிட்டு இரண்டு மாதங்களுக்கு மிகாமல் அத்தகைய நேரத்திற்குள் அது நிறுவனத்திடம் காரணம் கேட்கும் குறிப்பாணை ஒன்றினைக் கோரலாம்.

(2) (1)-ஆம் உட்பிரிவின்படி வழங்கப்பட்ட அறிவிப்பிற்கு நிறுவனத்தின் பதில் கிடைக்கப் பெற்றதும், நிறுவனத்தின் செயல்முறைகளில், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின் மீறுகை அல்லது தவறான மேலாண்மை உருவாகியுள்ளது என முதல் நோக்கி அரசானது மனநிறைவடைந்தால், அது தேவையெனக் கருதும் அத்தகைய விசாரணைக்கு ஆணையிடுதல் வேண்டும்.

(3) (2)-ஆம் உட்பிரிவின்படி ஒரு விசாரணையின் நோக்கத்திற்காக, அரசானது அறிவிக்கையின் வாயிலாக, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின் மீறலின் குற்றத்தின் விசாரணைக்கு விசாரணை அதிகாரியாக ஓர் அலுவலர் அல்லது அதிகாரி நியமிக்கப்படுதல் வேண்டும்.

(4) (3) ஆம் உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட ஒவ்வொரு விசாரணை அதிகாரியானவர், இந்தச் சட்டத்தின்படி, அதன் செயல்முறைகளை நிகழ்த்தும் போது வழக்கினை நடத்துவதற்கு 1908-ஆம் ஆண்டு உரிமையியல் தொகுப்புச் சட்டத்தின்படி உரிமையியல் நீதிமன்றத்தின் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருப்பார் மற்றும் குறிப்பாக பின்வரும் பொருட்கூறுகளினைப் பொறுத்த வகையில் அதாவது:-

26

(a) சாட்சி எவரையும் அழைப்பாணை செய்து அவரின் வருகையை உறுதி

செய்தல் மற்றும் உறுதிமொழியின் பேரில் அவரை விசாரணை செய்தல்;

(b) ஆவணம் எதனையும் அளித்தல் மற்றும் கண்டுபிடிப்பினை வேண்டுதல்;

(c) அலுவலகம் எதனிலுமிருந்து பொது பதிவுரு அல்லது அதன் நகலை

கோருதல்;

(d) ஆணை உறுதி ஆவணங்களில் சான்றுகளைப் பெறுதல்;

(e) வகுத்துரைக்கப்பட்ட பிற பொருட்பாடுகள் எதுவும்;

(5) விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றதும், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள்

எதனையும் நிறுவனம் மீறியதாக அரசானது மனநிறைவடைந்தால், அது தேவையான

முன்னேற்றங்களை செய்யவும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை முறையாக செயற்படுத்த

பரிந்துரைக்கவும், நிறுவனத்திற்கு கட்டளையிடுதல் வேண்டும்.

(6) நிறுவனம் சட்டத்தை தொடர்ச்சியாக மீறுவதனால் நிறுவனத்தின் கல்வி தரத்தை

அச்சுறுத்தும் தவறான நிதி மேலாண்மை மற்றும் நிறுவனத்தின் முறைகேடான நிர்வாகத்திற்கு

வழிவகுக்குமானால் அது ஒரு நிருவாகியை நியமிக்கலாம்.

(7) (6)-ஆம் பிரிவின்படி நியமிக்கப்பட்ட நிருவாகியானவர் இந்தச் சட்டத்தின்படி

ஆட்சிக்குழுவின் அனைத்து அதிகாரங்களையும் செயல்படுத்தலாம் மற்றும் அனைத்து

கடமைகளையும் நிறைவேற்றலாம் மற்றும் முறைப்படியான படிப்புகளின் இறுதி தொகுதி

மாணவர்கள் அவர்களின் படிப்புகள் / பாடத்திட்டத்தினை நிறைவு செய்யும்வரை மற்றும்

நேர்விற்கேற்ப அவர்கள் பட்டம், பட்டயப் படிப்புகள் அல்லது பிற கல்வி சிறப்புத் தகுதிகளுடன்

வழங்கப்படும் வரையிலும் நிறுவனத்தின் விவகாரங்களை நிருவகிக்கலாம்.

(8) முறைப்படியான படிப்புகளின் இறுதி தொகுதி மாணவர்களுக்கு நேர்விற்கேற்ப பட்டம்,

பட்டயங்கள் அல்லது கல்வி சிறப்பு தகுதிகள் ஆகியவை வழங்கப்பட்ட பிறகு நிருவாகி அது

குறித்து அரசிற்கு அறிக்கை கொடுக்கப்படுதல் வேண்டும்.

(9) (8)-ஆம் உட்பிரிவின்படி அறிவிக்கை கிடைக்கப்பெற்றதும், அரசு உரிய கவனத்திற்கு பிறகு, ஒத்த நோக்கங்களைக் கொண்ட பிற அமைப்பு அல்லது சங்கம் அல்லது அறக்கட்டளை

எதிலும் ஆட்சிக்குழுவின் அதிகாரங்கள் உரிமை அளிக்கப்பெறுவதால் அல்லது பல்கலைக்கழக

மானியக் குழுவின் முன் ஒப்புதலுடனாலும் மற்றும் அங்கீகாரம் மறுக்கப்பட்ட நிறுவனம்

தொடர்பான பிற ஒழுங்குமுறை அமைப்புகளினாலும் நிறுவனத்தின் செயல்பாடுகளை

தொடரலாம்.

(10) (9)-ஆம் உட்பிரிவின்படி அங்கீகாரம் மறுத்தல் செயல்பாட்டின் போது அரசானது

நிறுவனத்தின் விவகாரங்களின் மேலாண்மைகளின் நோக்கத்திற்காக நிரந்தர அறக்கட்டளை

நிதி பொது நிதி அல்லது வளர்ச்சி நிதி ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிறுவனத்தின் தேவையான செலவினங்களை சந்திக்க நிறுவனத்தின் விதிகள் போதுமானதாக

இல்லையெனில் அரசானது கூறப்பட்ட செலவினங்களை சந்திப்பதற்கு நிறுவனத்தின்

சொத்துகள் அல்லது உடைமைகளை விற்பனை செய்யலாம்.

38. நிறுவனத்தின் கலைப்பு அல்லது அங்கீகார மறுத்தலின் நேர்வில், அனைத்து சொத்துகள்

கலைத்தல் அல்லது

மற்றும் நிலையான அறக்கட்டளை நிதி, பொது நிதி, வளர்ச்சி நிதி அல்லது பிற நிதி எவற்றையும்

உள்ளடக்கிய அனைத்து உடைமைகள் மற்றும் நிதியத்தின் பொறுப்புகளும் சங்கத்திற்கு

உரியதாக்குதல் வேண்டும்.

அங்கீகாரம் மறுத்தலில் சொத்துக்கள் பொறுப்புக்களின் நிலை.

அத்தியாயம்-X

பல்வகை மற்றும் மாறுதற்கான வகைமுறைகள்பல்வகை மற்றும் மாறுதற்கான வகைமுறைகள்.

39. இந்தச் சட்டத்தில் மற்றும் நிலைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்,-

நிலையற்ற

வகைமுறைகள்.

i. குறிப்பிட்ட நாளில், சங்கத்தின் அனைத்து கற்பித்தல் செயல்பாடுகள், மனித வளங்கள் சொத்துகள் மற்றும் பொறுப்புகளானது இந்தச் சட்டத்தின்படி

நிறுவப்பட்ட நிறுவனத்திற்கு மாற்றியமைத்தல், ஒப்படைத்தல் வேண்டும்,

மற்றும்27 ii. இயக்குநர், ஆட்சிக்குழுவின் முந்தைய ஒப்புதலுடன் மற்றும் நிதியின் இருப்பிற்கு உட்பட்டு இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை நிறைவேற்றுவதன்

நோக்கத்திற்காக நிறுவனத்தின் அனைத்து அல்லது செயற்பாடுகள்

எதனையும் விட்டுவிடாமல் மற்றும் இந்தச் சட்டம் நிலைச் சட்டங்கள்

மற்றும் அவசர விதிகளினால் வழங்கப்பட்ட அத்தகைய அதிகார அமைப்பு

நடைமுறைக்கு வரும்வரை இந்தச் சட்டத்தினால் நிலைச்சட்டங்களினால்

மற்றும் அவசர விதிகளால் நிறுவனத்தின் அதிகார அமைப்பு எதனினாலும்

செயல்முறைப்படுத்த அல்லது நிகழ்த்தப்பட வேண்டிய அதிகாரம்

எதனையும் செயல்முறைப்படுத்தலாம் அல்லது கடமைகள் எதனையும் அந்த

நோக்கத்திற்காக நிகழ்த்தலாம்.

iii. குறிப்பிட்ட நாளில், நிறுவனத்தில் இதுவரையில் பதிவுசெய்த மாணவர்கள், நிறுவனத்தின் மாணவர்களாகத் தொடருவர் மற்றும் கல்வி ஆண்டின்

தொடர்ச்சியிலோ அல்லது நிறைவு செய்யப்பட்ட பகுதியிலோ அவர்களின்

படிப்பை நிறைவு செய்தல் வேண்டும்.

ஈட்டுறுதி.

40. இந்தச் சட்டம் அல்லது நிலைச்சட்டங்கள் எதையும் அல்லது அவசர

விதிகளுக்கிணங்கிய வகையில் நிறுவனம், நிறுவனத்தின் அதிகாரிகள், இயக்குநர் அல்லது

பிற அலுவலர்கள் அல்லது பிற நபர் எவரும் நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது

செய்யப்பட்டதாகக் கருதிய எதனையும் பொறுத்து அவர்களுக்கெதிரான உரிமை வழக்கு

அல்லது குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் தொடரப்படுதல் மற்றும் இழப்பீடுகள்

எதுவும் கோரப்படுதல் கூடாது

தகவல் மற்றும் 41. (1) அரசானது அழைப்பு விடுக்கலாகும்போது நிறுவனத்தின் நிர்வாகம் அல்லது நிதி

மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பான அத்தகைய தகவல்கள் அல்லது பதிவுறுக்களை

அளிப்பதற்கு நிறுவனத்தின் அலுவலர் அல்லது அதிகார அமைப்பு எதனின் அல்லது நிறுவனத்தின்

கடமையாக இருத்தல் வேண்டும்.

பதிவுருக்காக அழைப்பாணை விடுக்கும் அரசின் அதிகாரம்.

(2) அரசு, சட்டம் அல்லது நிலைச் சட்டங்கள் அல்லது அவசர விதிகளின் விதிமுறைகள்

ஏதேனும் மீறப்படுவதாகக் கருதினால், அது தேவையெனக் கருதும் 42-ஆம் பிரிவின் படி

நிறுவனத்திற்கு அத்தகைய பணிப்புரைகளை வழங்கலாம்.

கொள்கை 42. அரசு இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுடன் கொள்கை பொருட்பாடுகளின் மீது

பொருந்தாத நிறுவனத்திற்கு அவ்வப்போது அது தேவையெனக் கருதலாகும் அத்தகைய

பணிப்புரைகளை வழங்கலாம். அத்தகைய பணிப்புரைகள் நிறுவனத்துடன் இணங்கப்படுதல்

வேண்டும்.

பொருட்பாடுகளில் பணிப்புரைகள் வழங்குவதற்கு அரசின் அதிகாரம்.

அதிகார அமைப்புகள் 43. நிறுவனத்தின் அதிகார அமைப்பு எதனின் அல்லது பிற அமைப்பின் ஒரு உறுப்பினராக

ஏற்றவாறு நபர் எவரும் தேர்ந்தெடுக்கப்பட்டாரா அல்லது நியமிக்கப்பட்டாரா அல்லது

அதிகாரமளிக்கப்பட்டாரா என வினா எழுந்தால் அந்த விவகாரங்கள் ஆட்சிக்குழுவிற்கு

பரிந்துரைக்கப்படுதலும், அதன் முடிவுகள் இறுதியனாதாக இருத்தலும் வேண்டும்.

மற்றும் அமைப்புகளை நிறுவி அமைத்தலுக்கான பூசல்கள்.

குழுக்களை நிறுவி 44. இந்தச் சட்டத்தின் அல்லது நிலைச் சட்டங்களின் படி அதிகாரமளிக்கப்பட்ட

அமைத்தல்.

நிறுவனத்தின் அதிகார அமைப்பு ஏதேனும் குழுக்களை நிறுவி அமைப்பதற்கு, அத்தகைய

குழுக்களானது பிறவற்றில் வழங்கப்பட்ட அதிகாரஅமைப்பு தொடர்பான உறுப்பினர்களைக்

கொண்டிருக்கும் மற்றும் அது ஒவ்வொரு நேர்விலும், பொருத்தமானதாகக் கருதலாகும்

அதிகாரஅமைப்பின் பிற நபர்களைக் கொண்டிருக்கும்.

காலியிடங்களை 45. நிறுவனத்தின் அதிகாரஅமைப்பு எதனின் அல்லது பிற அமைப்பின்

நிரப்புதல்.

உறுப்பினர்களுக்கிடையேயான அனைத்து காலியிடங்களானது, அவர் நியமிக்கப்பட்ட அல்லது

தேர்ந்தெடுக்கப்பட்ட எஞ்சியுள்ள காலத்திற்கு காலியாகிவிட்ட உறுப்பினர்களை நியமிக்கலாகும்

அல்லது தேர்ந்தெடுக்கலாகும் நபரால் அல்லது அமைப்பால் கூடிய விரைவில் நிரப்பப்படுதல்

வேண்டும்.

46. நிறுவனத்தின் அதிகாரஅமைப்பு எதனின் அல்லது பிற அமைப்பின் செயல் அல்லது

நடவடிக்கையானது, ஒரு காலியிடம் இருக்கும் காரணத்தினால் அல்லது நிறுவனத்தின்

அதிகாரஅமைப்பு எதனின் அல்லது பிற அமைப்பின் உறுப்பினரின் நியமனத்தில் குறைபாடு

அல்லது முறைகேடு எதனாலும் அல்லது வழக்கின் தகுதிகளை பாதிக்காத அத்தகைய செயல்

அல்லது நடவடிக்கைகளில் குறைபாடு அல்லத முறைகேடு எதனினாலும் அல்லது இந்தச்

சட்டத்தின்படி வேண்டிய அத்தகைய இடைவெளியை நிறுவனத்தின் அதிகார அமைப்பு எதனின்

நிறுவன அதிகார அமைப்புகள் மற்றும் அமைப்புகளின் நடவடிக்கைகள் காலியிடங்களால் செல்லத்தகாதது ஆகாது.

28

அல்லது பிற அமைப்பானது சந்திக்கவில்லை என்ற அடிப்படையில் செல்லாததாக ஆக்கப்படுதல்

ஆகாது.

47. (1) செயலாட்சி மன்றமானது, செயலாட்சி மன்றத்தின் மொத்த உறுப்பினர்களின்

பெரும்பான்மையினால் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றப்படுவதன் மூலம் மற்றும் தற்போதுள்ள

செயலாட்சி மன்றத்தின் கூட்டத்திற்கு வந்திருந்து வாக்களித்த உறுப்பினர்களில் மூன்றில்

நிறுவனத்தின் உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்குதல்.

இரண்டு பங்கிற்கு குறையாத பெரும்பான்மையினால், மன்றத்தின் கருத்தில் ஒழுக்கக்கேட்டிற்கு

உட்படுத்தும் ஒரு குற்றத்திற்காக அத்தகைய நபர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவராயிருப்பின்

இதன் பொருட்டு உருவாக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான ஆணை ஒன்றின் மூலம், நிறுவனத்தின்

அதிகார அமைப்பு எதனின் உறுப்பினர் தகுதியிலிருந்தும் நபர் எவரையும் நீக்கலாம்.

(2) செயலாட்சி மன்றமானது, மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரானால் அல்லது ஒரு

நொடித்த நிலையராக தீர்ப்பளிக்கப்பட்டவரானால் அதன்பொருட்டு எழுத்துப் பூர்வமானதொரு

ஆணையினால் நிறுவனத்தின் அதிகார அமைப்பு எதனின் உறுப்பினர் தகுதியிலிருந்தும் நபர்

எவரையும் நீக்கலாம்.

(3) தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கையினை எடுப்பதற்கெதிராக, காரணம் கேட்கும்

குறிப்பாணைக்கு ஒரு நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டாலன்றி நபர் எவருக்கும் எதிராக இந்தப்

பிரிவின் படி நடவடிக்கை எடுக்கப்படுதல் கூடாது.

(4) நேர்வுக்கேற்ப (1) ஆம் உட்பிரிவு அல்லது (2) ஆம் உட்பிரிவின் படி ஏற்படுத்தப்பட்ட

ஒவ்வொரு ஆணையின் படியானது, அது ஏற்படுத்தப்பட்ட பிறகு, வகுத்துரைக்கப்பட்ட முறையில்

தொடர்புடைய நபருக்கு அளிக்கப்படுதல் வேண்டும்.

48. நிறுவனத்தின் ஏதேனும் அதிகார அமைப்பு அல்லது குழுவின் ரசீது, விண்ணப்பம்,

நிறுவனத்தின்

அறிவிக்கை, செயல்முறை ஆணை, தீர்மானம் அல்லது நிறுவனத்தின் உடைமையிலுள்ள

பதிவுருக்களின் சான்று முறை.

பிற ஆவணங்கள் ஆகியவை நிருவாக அலுவலரால் சான்றளிக்கப்பட்டால் அத்தகைய ரசீது,

விண்ணப்பம், அறிக்கை, ஆணை, செயல்முறை ஆணை அல்லது தீர்மானம், ஆவணங்கள்

அல்லது பதிவேட்டில் உள்ள இருப்பு ஆகியவை முதல் நோக்குச் சான்றாக பெறப்படுதல்

வேண்டும் மற்றும் ஏற்புடைச் சாட்சியாக அளிக்கப்பட்டால் மூலத்தில் உள்ள பொருண்மைகள்

மற்றும் நடவடிக்கைகளின் சான்றாக ஒப்பு கொள்ளப்படுதல் வேண்டும்.

இடர்பாடுகளை

49. (i) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் அல்லது நிறுவனத்தின் அதிகார அமைப்பு எதனின் நிறுவுதல் அல்லது மறு நிறுவுதலுக்கு இடர்பாடு ஏதேனும் எழுமானால்,

நீக்குவதற்கான அதிகாரம்.

அரசு அறிவிக்கையின் மூலம் அந்த இடர்பாட்டை நீக்குவதற்கு தேவையானதாகவோ அல்லது

உகந்ததாகவோ அதற்குத் தோன்றுகிறவாறான இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு

முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்.

வரம்புரையாக: அத்தகைய அறிவிக்கை எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டு ஆண்டு காலஅளவு முடிவடைந்ததற்கு பின்னர் வழங்கப்படுதல்

கூடாது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 11 November 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-11-11.Ordinary_46_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2020-11-11.Ordinary_46_Part-IV_Section-2-T-Sup.