©
GOVERNMENT OF TAMIL NADU 2020
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 48] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 25, 2020
Karthigai 10, Saarvari, Thiruvalluvar Aandu–2051
Part VI—Section 2
Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.Pages.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடு ஒழுங்குமுறை விதிகளின் திருத்தம். 166-168166-168
[165]
DTP—VI-2 (48)[Part VI—Sec. 2 166 TAMIL NADU GOVERNMENT GAZETTE
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடு ஒழுங்குமுறை விதிகளின் திருத்தம்
(Lr.No.TNERC/Legal/2050/D.No.1126/2020 dated. 10-11-2020)
(அறிவிக்கை எண்.தமிஒஆ/புகொக/19-5/ நாள்: 24.07.2020)
No.VI(2)/55/2020.
2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 36/2003) 181 ஆம் பிரிவுடன் சேர்த்துப் படிக்கப்படும் பிரிவுகள் 61 (h), 66 மற்றும் 86 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவின் (e) கூறின்படி தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மற்றும் இதன் பொருட்டு அதனை இயல்விக்கும் அனைத்துப் பிற அதிகாரங்களையும் செலுத்தி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இதன் மூலம், 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடு) ஒழுங்குமுறை விதிகளுக்கு பின்வரும் திருத்தத்தை செய்கிறது. இத்திருத்தத்தின் வரைவானது மேற்சொன்ன 181 ஆம் பிரிவின் (3)ஆம் உட்பிரிவின்படி வேண்டுறுத்தப்பட்டவாறு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன ஒழுங்குமுறை விதிகளின் 3 ஆம் ஒழுங்குமுறை விதியில் (1A) உள் ஒழுங்குமுறை விதியில் :-
(அ) அட்டவணையில், வரிசை எண் (3) க்குப்பின்பு (1) ஆம் பத்தியில் மற்றும் அது தொடர்பான பதிவுகள் (2) லிருந்து (4) வரை உள்ள பத்திகளில், கீழ்கண்டவை முறையே புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
| 4 | 2018-19 | 14.00% | 5.00% |
| 5 | 2019-20 | 14.00% | 5.00% |
| 6 | 2020-21 | 18.25% | 8.00% |
| 7 | 2021-22 | 21.00% | 10.50% |
(ஆ) அட்டவணையின் கீழ் தற்போதுள்ள 'விளக்கம்', என்பதை 'விளக்கம்(1)' என்று மறு எண்ணிடப்படுதல் வேண்டும். அவ்வாறு மறு எண்ணிடப்பட்ட 'விளக்கம் (1)'ற்க்கு பின்பு, பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது :-
(2) உள் ஒழுங்குமுறை விதி 1(A)யில் குறித்துரைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடுகள், மின்பகிர்மான உரிமதாரர்கள் அல்லாத பிற கடப்பாடுடைய நிறுவனங்களுக்கு பொருந்துதல் குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நீதிப்பேராணை மனுக்களின் முடிவுகள் பொறுத்திருக்கும்.
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சென்னை-600 032, 2020 ஜூலை 24.
சு. சின்னராஜலு, செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
விளக்கவுரை
2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் 86ஆம் பரிவின் (1) ஆம் உட்பிரிவின் (2) கூறின்படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாட்டை (பு.கொ.க) வரையறுக்க ஆணையம் கட்டளையிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப, 2017-18 நிதியாண்டு வரை உள்ள பு.கொ.க ஆணையம் அதனுடைய புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடப்பாடு ஒழுங்குமுறை விதியில் வெளியிட்டுள்ளது. மின் பகிர்மான உரிமம்தாரர், திறந்த நுழைவுரிமை நுகர்வோர்கள் மற்றும் சுய உபயோக நுகர்வோர்கள், மேற்கண்ட ஒழுங்குமுறை விதிகளின் கீழ் கடப்பாடுடைய நிறுவனங்களாகும். 2017-18 ஆம் நிதியாண்டிற்காக, ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடப்பாடு, ஆணையத்தின் புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடப்பாடு ஒழுங்குமுறை விதிகளின்படி ஆணையத்தினால் மாற்றியமைக்கப்படும் வரையில் அது மேலுமான கால அளவிற்கு தொடர்ந்து பொருந்தும்.
எரிசக்தித்துறை அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள், அந்தந்த மாநிலங்களில் பு.கொ.க வரையறுக்க கருதி சூரிய சக்தி மற்றும் சூரிய சக்தி அல்லாத புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடுகளின் செல்வழியின் நீண்டகால வளர்ச்சியை 14-06-2018 நாளிட்ட ஆணையில் வரையறுத்துள்ளது.
எரிசக்தித்துறை அமைச்சகத்தின் ஆணையை கருத்திற்கொண்டும், தூய்மையான மின்வளங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்துதலுக்குNov. 25, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 167 ஆதரவளித்தும் 2019-20, 2020-21, 2021-22, ஆகிய நிதியாண்டுகளுக்கான பு.கொ.க வளர்ச்சிக்கான செல்வழியானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடு ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்பட்ட பு.கொ.க இலக்கு தற்போது மின்பகிர்மான உரிமம்தாரருக்கும் மட்டும் பொருந்தக்கூடும். எனினும் பிற கடப்பாடுடைய நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை விதிகளில் குறைத்துரைக்கப்பட்ட விழுக்காட்டின்படியான செயலாக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு நிலுவையிலுள்ள நீதிப்பேராணை மனுக்களின் முடிவுக்கு உட்பட்டிருக்கும்.
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சென்னை-600 032, 2020 ஜூலை 24.
சு. சின்னராஜலு, செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
இருந்துவரும் வகைமுறையையும் திருத்தம் செய்யப்பட்ட வகைமுறையையும் காட்டு விவரவுரை
| இருந்துவரும் வகைமுறை | திருத்தப்பட்ட வகைமுறை |
| 3. புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடப்பாடு:- (1) கடப்பாடுடைய நிறுவனம் ஒவ்வொன்றும், கீழே குறித்துரைக்கப் பட்டவாறு, ஓர் ஆண்டின்போது புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடப்பாட்டின்படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து தன்னுடைய மின்நுகர்வில் குறைந்தபட்ச விழுக்காட்டிற்கு குறையாமல் கொள்முதல் செய்தல் வேண்டும். *** (1A) புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடப்பாடு கீழ்கண்ட விழுக்காட்டில் வரையறுக்கப்படுகின்றன: 3) ஆம் கட்டத்தில் வரிசை ஆண்டு மொத்த குறிப்பிடப்பட்ட எண். புதுப்பிக்கத் மொத்த தக்க கொள்முதல் புதுப்பிக்கத்தக்க கடப்பாட்டின் கொள்முதல் குறைந்தபட்ச கடப்பாட்டிடல் அளவு சூரியசக்தி விழுக்காட்டில் புதுப்பிக்கத்தக்க (கிலோவாட் கொள்முதல் மணியில் கடப்பாட்டின் மின்சாரத்தின் குறைந்தபட்ச அளவு அளவு) விழுக்காட்டில் (கிலோவாட் மணியில் மின்சாரத்தின் அளவு) (1) (2) (3) (4) 1 2015-16 9.50% 0.50% 2 2016-17 11.50% 2.50% 3 2017-18 14.00% 5.00% | 3. புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடப்பாடு:- (1) கடப்பாடுடைய நிறுவனம் ஒவ்வொன்றும், கீழே குறித்துரைக்கப் பட்டவாறு, ஓர் ஆண்டின்போது புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடப்பாட்டின்படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து தன்னுடைய மின்நுகர்வில் குறைந்தபட்ச விழுக்காட்டிற்கு குறையாமல் கொள்முதல் செய்தல் வேண்டும். *** (1A) புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடப்பாடு கீழ்கண்ட விழுக்காட்டில் வரையறுக்கப்படுகின்றன: 3) ஆம் கட்டத்தில் வரிசை ஆண்டு மொத்த குறிப்பிடப்பட்ட எண். புதுப்பிக்கத் மொத்த தக்க கொள்முதல் புதுப்பிக்கத்தக்க கடப்பாட்டின் கொள்முதல் குறைந்தபட்ச கடப்பாட்டிடல் அளவு சூரியசக்தி விழுக்காட்டில் புதுப்பிக்கத்தக்க (கிலோவாட் கொள்முதல் மணியில் கடப்பாட்டின் மின்சாரத்தின் குறைந்தபட்ச அளவு அளவு) விழுக்காட்டில் (கிலோவாட் மணியில் மின்சாரத்தின் அளவு) (1) (2) (3) (4) 1 2015-16 9.50% 0.50% 2 2016-17 11.50% 2.50% 3 2017-18 14.00% 5.00% 14.00% 5.00% 4 2018-19 5 2019-20 14.00% 5.00% 6 2020-21 18.25% 8.00% 7 2021-22 21.00% 10.50% |
| விளக்கம் : (1)ஆம் உள்ஒழுங்குமுறை விதியில் 2011-12 ஆம் ஆண்டிற்காக குறித்துரைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடப்பாடுகள் 2012-13, 2013-14, மற்றும் 2014-15 ஆம் ஆண்டுகளுக்கும் மின்பகிர்மான உரிமம்தாரருக்கு பொருந்தக் கூடியதாகும். (2) xxx (3) xxx | விளக்கம் (1) : (1)ஆம் உள்ஒழுங்குமுறை விதியில் 2011-12 ஆம் ஆண்டிற்காக குறித்துரைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடப்பாடுகள் 2012-13, 2013-14, மற்றும் 2014-15 ஆம் ஆண்டுகளுக்கும் மின்பகிர்மான உரிமம்தாரருக்கு பொருந்தக் கூடியதாகும். (2) ஆம் உள்ஒழுங்குமுறை விதி 1(A)யில் குறித்துரைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடுகள், மின்பகிர்மான உரிமதாரர்கள் அல்லாத பிற கடப்பாடுடைய நிறுவனங்களுக்கு பொருந்துதல் குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நீதிப்பேராணை மனுக்களின் முடிவுகள் பொறுத்திருக்கும். (2) மாற்றம் இல்லை. (3) மாற்றம் இல்லை. |
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சென்னை-600 032, 2020 ஜூலை 24.
சு. சின்னராஜலு, செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU