Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances

Published 09 December 2020

Type
Ordinary
Gazette no.
50
Part
Part IV
Notifications
Act No. 17 of 2020 - Tamil Nadu Co-operative Registration Act, 1983
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2020-12-09.Ordinary_50_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2020

[விலை : ரூ. 16.80 காசு[விலை : ரூ. 16.80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 50]

சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 9, 2020 கார்த்திகை 24, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் போரவையின் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 16 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 17/2020

1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தை மேலும் திருத்தம்

செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

1. (1) இந்தச் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

89 ஆம் பிரிவிற்கான 30/1983.

திருத்தம்.

2. (இதன்பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 89 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவிற்கு பின்வரும் வரம்புரைகள் சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"வரம்புரையாக, அத்தகைய ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவானது, பதிவாளரால் எழுத்து மூலம் பதிவு செய்யப்பட வேண்டிய சிறப்புக் காரணங்களுக்காக அவ்வப்போது நீட்டிக்கப்படலாகும் ஆனால் அத்தகைய நீட்டிக்கப்படலாகும் கால அளவானது மொத்தத்தில் ஓர் ஆண்டிற்கு மிகாது இருத்தல் வேண்டும் :

மேலும் வரம்புரையாக, இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவினைக் கணக்கிடுவதில் நீதிமன்றம் எவற்றினாலும் ஆணையிடப்பட்ட தடை அல்லது உறுத்துக்கட்டளை எவற்றின் காரணமாக தேர்தலை நடத்த முடியாத போது, அந்தக் காலம் எதுவும் விலக்கிக் கொள்ளப்படுதல் வேண்டும். ".

3. முதன்மைச் சட்டத்தின் 94-ஆம் பிரிவில், "நிர்வாகக் குழுமத்தினால்" எனும் சொற்றொடருக்குப் பின்பு "அல்லது குழுமம் இல்லாத போது பொதுக்குழுவினால்" எனும் சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்.

94 ஆம் பிரிவிற்கான திருத்தம்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

[1]

DTP-IV-2- (T Sup)—502 3 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு

ஜூலை திங்கள் 28 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்

அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 18/2020.

2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமைச் சட்டத்தை

மேலும் திருத்துவதற்கான தொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஒன்றாவது ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்

பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமை குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறித்திடலாகும் அத்தகைய

தேதியன்று நடைமுறைக்கு வரும்.

தமிழ்நாடு சட்டம்

4 ஆம் பிரிவிற்கான 16/2003.

திருத்தம்.

2. 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமைச் சட்டத்தின் 4-ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (a) எனும் கூறுக்காக பின்வரும் கூற்றை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும் :-

"(a) 2002-2003 ஆம் நிதியாண்டில் தொடங்கி, ஒவ்வோர் ஆண்டிலும் அந்த ஆண்டில் நிலவும் பொருளாதாரச் சூழலுக்கேற்ப வருவாய் வரவினத்திற்கும் வருவாய்ப் பற்றாக்குறைக்கும்

உள்ள விகிதத்தை நூற்றுக்கு மூன்று விழுக்காட்டளவு முதல் ஐந்து விழுக்காட்டளவு வரை

ஆண்டுதோறும் குறைத்துக் கொண்டே வந்து, 2012-2022 ஆம் ஆண்டு வாக்கில் வருவாய்ப்

பற்றாக்குறையை அறவே நீக்குவதோடு அதன்பின் அதே நிலையைத் தொடர்ந்து பின்பற்றுதல்

வேண்டும்.,"

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

4 5

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையியினால் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு

அக்டோபர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. மற்றும்

அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 26/2020

1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தை மேலும்

திருத்துவதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தியொன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தின்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார (திருத்தச்) சட்டம்

தொடக்கம்.

என்று வழங்கப் பெறும்.

(2) 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 25 ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

74-ஆம் பிரிவிற்கான 2. 1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் 74-ஆம் பிரிவில்,

III/ 1939.

திருத்தம்.

பின்வரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது :-

"(6) தானாகவோ அல்லது ஒரு குழுவின் உறுப்பினராகவோ இருந்து

அறிவிக்கை செய்யப்பட்ட நோயினால் பாதிக்கப்படும் போது இறந்து போன

எந்தவொரு நபரின் உடலை புதைப்பதை அல்லது எரியூட்டுவதை தடுக்கும் அல்லது

இடையூறு செய்யும் அல்லது தடுக்க அல்லது இடையூறு செய்ய முயற்சிக்கும் நபர்

எவரும் பண தண்டத்துடன் கூடிய ஓர் ஆண்டிற்குக் குறையாத, ஆனால் மூன்று

ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாகும் ஒரு கால அளவிற்கு சிறைத் தண்டனை விதித்துத்

தண்டிக்கப்படுதல் வேண்டும்."

நீக்கறவு மற்றும் காப்புரை 3. (1) 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார (திருத்த) அவசரச் சட்டம் இதன்

தமிழ்நாடு அவசரச் சட்டம் 1/2020.

மூலம் நீக்கறவு செய்யப்படுகிறது.

(2) அத்தகைய நீக்கறவு இருந்த போதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தால்

திருத்தம் செய்யப்பட்டவாறான 1939-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரச்

சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்,

இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான மேற்சொன்ன அவசரச்

சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக்

கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

6 7

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையியினால் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு

அக்டோபர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது

அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 27/2020

1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தை மேலும்

திருத்துவதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தியொன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2020ஆம் ஆண்டு, தமிழ்நாடு பொது சுகாதார

தொடக்கம்.

(இரண்டாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப் பெறும்.

(2) இது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 4-ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

3ஆம் பிரிவிற்கான தமிழ்நாடு சட்டம் III /1939. 2. (இதன்பின்பு முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான) 1939 ஆம் ஆண்டு

திருத்தம்.

தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் 3-ஆம் பிரிவில் ,

(1)ஆம் கூறானது (1-A) ஆம் கூறாக மறு எண்ணாக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு மறு எண்ணாக்கப்பட்ட(1-A) ஆம் கூறின் முன்பு, பின்வரும் கூறானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது :-

"(1) "வன்முறைச்செயல்" என்பது தொற்று நோய்களின் கட்டுப்பாடு, சிகிச்சை

மற்றும் கட்டுப்படுத்துதலில் ஈடுபடும் காவல் பணியாளர் உள்ளடங்கிய பணியாளர்

எவருக்கும் எதிராக நபரொருவரால் செய்யப்பட்ட, பின்வரும் செயல்கள் எதுவும் உட்பட,

எதையும் விளைவிக்கும் அல்லது விளைவிக்கலாகும்- (a) அத்தகைய பணியாளரின் வாழ்க்கை முறை அல்லது பணிநிலைகளில் தாக்கம் ஏற்படுத்துகிறது மற்றும் அவர்களின் கடமைகளை நிறைவேற்றுதலிலிருந்து

அவர்களை தடுக்கிறது; (b) அத்தகைய பணியாளரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தும் அல்லது ஆபத்து விளைவிக்கும் தீங்கு, காயம், ஊறு; (c)அத்தகைய பணியாளர்கள் அவர்களின் கடமைகளை நிறைவேற்றுதலில் தடை அல்லது இடையூறு ஏற்படுத்துதல்; (d) அத்தகைய பணியாளர்களின் காப்புப் பொறுப்பிலுள்ள அல்லது தொடர்பிலுள்ள உடைமை அல்லது ஆவணங்கள் எவற்றிற்கும் இழப்பு அல்லது ஊறு;"

(2) (17) ஆம் கூறின் பின்பு, பின்வரும் கூறானது புகுத்தப்படுதல் வேண்டும்,

அதாவது:- "(17-A) "தனிமைப்படுத்துதல்" என்பதற்கு தொற்று நோயின் பரவுதலை நேரடியாக அல்லது மறைமுகமாக தடுப்பதற்காக அல்லது வரையறுப்பதற்காக, அந்நோயின்

தொற்றுத்தன்மையின் பெருமளவாக அறியப்பட்ட கால அளவினை மிகாது கால

அளவிற்கு அல்லது அந்நபர் நோயிலிருந்து குணமடையும் காலம் வரை தொற்றுநோயினால்

துன்பம் அடைந்த நபர் ஒருவரை பிறரிடமிருந்த முழுமையாக பிரித்தல் மற்றும் அதற்காக

ஒதுக்கப்பட்ட இடத்தில் காப்பில் வைத்தல் என்று பொருள்படும்; " ;

(3) (30) ஆம் கூறின் பின்பு, பின்வரும் கூறானது புகுத்தப்படுதல் வேண்டும்;

அதாவது:- "(30-A) "காவல் அலுவலர்" என்பது காவல் துணை ஆய்வாளரின் படிநிலைக்கு குறையாத ஓர் அலுவலர் என்று பொருள்படும்;";

(4) (32) ஆம் கூறின் பின்பு, பின்வரும் கூறானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:- "(32-A) "தொற்று தடைக்காப்பு" என்பதற்கு அந்நோய் பிறருக்கு பரவுதலுக்கான நிகழ்வினை தடுப்பதற்காக, அந்நோயின் அடைகாத்தலுக்கான பெருமளவாக அறியப்பட்ட காலத்திற்கு மிகாது ஒரு கால அளவிற்கு, தொற்று நோய்க்கு வெளிப்பட்டதாக நியாயமாக நம்பப்படலாகும் நபரொருவரின் நடமாட்ட உரிமையை வரைறுத்தல் அல்லது கட்டுப்படுத்துதல் என்று பொருள்படும்;";

8

(5) (33) ஆம் கூறின் பின்பு, பின்வரும் கூறானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:- "(33-A) "சமூக இடைவெளி" என்பதற்கு சமுதாயத்தில் நோயின் பரவும் வீதத்தை குறைக்கும் பொருட்டு, தங்கள் வீட்டின் வெளியே மக்களுக்கு இடையிலான உடல்சார்ந்த இடைவெளி அல்லது விலகலை பெருக்குவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை எதுவும் என்று பொருள்படும் மற்றும் உள்ளடங்கும்;";

65ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

3. முதன்மைச் சட்டத்தின் 65ஆம் பிரிவில் உட்பிரிவு (1)-ல் "சுகாதார அலுவலர் அல்லது இதன் பொருட்டு அவரால் அதிகாரமளிக்கப்பட்ட நபரொருவர்" என்ற சொற்றொடருக்கு பதிலாக "சுகாதார அலுவலர் அல்லது இதன் பொருட்டு அவரால் அதிகாரமளிக்கப்பட்ட நபரொருவர் அல்லது காவல்துறை அலுவலர்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

76ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 76ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவிற்கு பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

(2) (1) ஆம் உட்பிரிவின் (a) ஆம் கூறு அல்லது (b) ஆம் கூறின் கீழ் ஒரு சாற்றுரையானது நடைமுறைக்கு வருகையில் மற்றும் அது திரும்பப் பெறும் வரையில், மாவட்டத்தின் ஆட்சியர் அல்லது அவரால், பொது ஆணையினாலோ சிறப்பு ஆணையினாலோ தக்கவாறு அதிகாரமளிக்கப்பெற்ற நபரொருவர் அல்லது இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விதிகளின் பொருட்டு உரிமையளிக்கப்பட்டிருந்தால், சுகாதார அலுவலர் அல்லது தொடர்பான உள்ளூர் அதிகார அமைப்பின் ஏனைய பிற அலுவலர் அல்லது காவல்துறை அலுவலர் எவரும், அல்லது மாவட்ட ஆட்சியர் தவிர்த்து அரசின் பிற அலுவலரெவரும், விலக்குகள், தடைகள், வரையறைகள் நிபந்தனைகள் மற்றும் பொதுவாகவோ சாற்றுறை தொடர்புடைய அறிவிக்கப்பட்ட நோயின் நேர்விலோ வகுத்துரைக்கப்படலாகும். அத்தகைய கட்டுப்பாடுகளுக்குட்பட்டு பின்வரும் அதிகாரங்களை செயற்படுத்தலாம், அதாவது:-

(a) நோய்த் தொற்றிய வீடுகள் மற்றும் அவற்றிற்கு அடுத்திருக்கும் அல்லது அருகாமையிலிருக்கும் வீடுகள் அல்லது பொதுவாக நோய் தொற்றிய பகுதியொன்றில் இருக்கும் அனைத்து வீடுகளில் வெளியேற்றலை ஒழுங்குப்படுத்துல்;

(b) (3) ஆம் உட்பிரிவின் வழிவகைகளுக்கு உட்பட்டு தடுப்பூசியிடுதல் மற்றம் நோய்க் காப்பு மருந்தளித்தலை கட்டாயமாக்குதல்;

(c) (i) உள்ளூர் பகுதிக்கு வெளியிடங்களிலிருந்து வரும் அல்லது நோய்த் தொற்றிய கட்டிடமொன்றிக்கு அடுத்துள்ள அல்லது அருகாமையிலுள்ள கட்டிடத்தில் வசிக்கும் நபர்களை மருத்துவ அதிகாரியால் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்;

(ii) தனிமைப்படுத்துதலிலுள்ள அல்லது தொற்றுத் தடைக் காப்பிலுள்ள அந்நபர்கள் மருத்துவ அதிகாரியினால் பரிசோதனை செய்யப்பட அல்லது தேவையான சோதனைக்குள்ளாக வேண்டும்;

(iii) நோய்த் தொற்றிற்கு அவர்கள் வெளிப்பட்டிருக்கலாமென ஐயம்கொள்ள காரணம் இருக்கையில், அத்தகைய நபர்களின் உடைகள், படுக்கை அல்லது பிற பொருட்களை தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும்;

(iv) அத்தகைய நபர் தன் முகவரியை கொடுக்க வேண்டும் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் மற்றும் இடத்தில், பதினான்கு நாட்களுக்கு மிகாது கால அளவிற்கு, மருத்துவ பரிசோதனைக்கு தினமும் வந்திருத்தல் வேண்டுமென கட்டளையிடுதல்;

9

(d) தேவைப்படலாகும் அத்தகைய நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம்-

(i) அறிவிக்கப்பட்ட நோயொன்றிலிருந்து தொற்றுக்கு வெளிப்பட்ட நபர்கள் குறித்த அல்லது தொடர்பிலுள்ள அல்லது அத்தகைய நோயினை பிற நபர்களுக்கு தொற்றளிக்கக் கூடியவை தொடர்பாக; மற்றும்

(ii) அறிவிக்கப்பட்ட நோயொன்றிலிந்து தொற்றிற்கு வெளிப்பட்ட பொருட்கள் குறித்த அல்லது தொடர்பிலுள்ள அல்லது அத்தகைய நோயினை பிற நபர்களுக்கு தொற்று ஏற்படுத்தக் கூடியவை தொடர்பாக, இதில் உள்ளடக்கம், நேர்வு (i), அத்தகைய நபரது நடமாட்டத்தில் தடை ஏற்படுத்துதல், நேர்வுக்கேற்ப அத்தகைய நபரை தனிமைப்படுத்துதல் அல்லது தொற்றுத் தடைக்காப்பில் வைத்தல், மற்றும் நேர்வு (ii), அத்தகைய பொருட்களை அழித்தல் மற்றும் உள்ளூர் பகுதியில் அவற்றின் ஏற்றுமதி, இறக்குமதி அல்லது போக்குவரத்தில் தடை ஏற்படுத்துதல்;

(e) உள்ளூர் பகுதிக்கு உட்பட்ட அல்லது வெளியிலுள்ள இடம் எவற்றிலும், அப்பகுதியில் தண்டவாளம், சாலை அல்லது மற்றவகையில் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் தானியத்தின் அனுப்புச் சரக்கு எவற்றையும் குறிப்பிட்ட முறை எதிலும் ஆய்வு செய்தல், மற்றும், தேவையெனில் சுமையிறக்கம் மற்றும் தொற்று நீக்கம் செய்தல் வேண்டும்;

(f) தற்போதுள்ள சந்தை எல்லாவற்றையும் அல்லது எவற்றையும் மூடுதல் மற்றும் சந்தைகள் இயங்க சிறப்பு இடங்களை அமர்த்துதல்;

(g) பொது மற்றும் தனியார் போக்குவரத்து இயங்கும் முறையில் தடைகளை விதித்தல்;

(h) பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு தேவையான சமூக இடைவெளி நெறிமுறைகள் அல்லது பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய முக கவசம் அணிதல் மற்றும் பொது இடங்களில் உமிழ்தலுக்கான தடை உள்ளடங்கிய பிற அறிவுரைகளை உறுதி செய்தல்;

(i) அழகு நிலையம் மற்றும் ஸ்பா, உடற்பயிற்சிக்கூடம் மற்றும் அத்தகைய பிற பொது இடங்களில் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை வழங்குதல்;

(j) அரசினால் வெளியிடப்பட்ட, கட்டுப்பாட்டு மண்டலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களின் கடைபிடித்தலை உறுதி செய்தல்; és¡f".- இக்கூறின் நோக்கத்திற்காக "கட்டுப்பாட்டு மண்டலம்" என்பதற்கு நேர்வுக்கேற்ப மாவட்ட ஆட்சியரால், அல்லது மாநகரத்தின் மாநகராட்சி ஆணையரால் தெரிவிக்கப்பட்ட, திரள் நோய் தொற்று நேர்வுகளின் அடிப்படையில் அத்தகைய வழியில் எல்லை வரையறுக்கப்பட்ட பகுதி எனப் பொருள்படும்;

(k) பொது இடங்களில், மதம் சார்ந்த நிலையங்களில் மற்றும் வழிபாட்டு இடங்களில் நபர்கள் கூடுதலை தடை செய்தல் அல்லது விலக்களித்தல்;

(l) அரசு அல்லது மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்களின்படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களின் செயல்பாடுகளை உறுதி செய்தல்;

(m) அரசு அல்லது மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்களின்படி கடைகள், வணிகப் பயனுடைய நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், பட்டறைகள், கிடங்கு முதலியவற்றின் செயல்பாடுகளில் தடை அல்லது விலக்களித்தலை உறுதி செய்தல்;

(n) அரசு அல்லது மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்களின் படி வங்கிகள், ஊடகம், சுகாதார நலன், உணவு வழங்குதல், மின்சாரம், குடிநீர் வழங்குதல், எரிபொருள் முதலியவை போன்ற கட்டாய அல்லது அவசர கால சேவைகளின் சேவைகளுக்கான கால அளவினை உறுதி செய்தல்;

(o) உள்ளூர் பகுதியில் புறப்பாடு, வருகை அல்லது கடந்து செல்லும் வாகனம் எதையும், கப்பல், அல்லது ஏனைய பிற போக்குவரத்தின் ஆய்வு மற்றும், தேவையெனில் காப்பில் வைத்தலுக்கு ஏற்பாடு செய்தல்;

10

(p) பொது சுகாதார அவசர காலங்களில் தோன்றும் நேர்வுகளை அனுமதிக்க, தனிமைப்படுத்த மற்றும் நிருவகிக்க வகுத்துரைக்கப்படலாகும். அத்தகைய வடிவத்திலும் மற்றும் அத்தகைய முறையிலும் அறிக்கை அல்லது விவர அறிக்கை அளித்தல் மற்றும் வழிகாட்டியபடியான அத்தகைய சேவைகளை வழங்க தனியார் மருத்துவ நிறுவனம் எதற்கும் வழிகாட்டுதல். விளக்கம்.- இக்கூறின் நோக்கத்திற்காக "தனியார் மருத்துவ நிறுவனம்" என்பதற்கு 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 4 / 1997)-இன் 2-ஆம் பிரிவில் (a) கூறில் பொருள் வரையறுக்கப்பட்டதொரு தனியார் மருத்துவ நிறுவனம் என்றும் பொருள்படும்;

(q) பொது சுகாதாரத்திற்கு எதிர்மாறாகப்படக்கூடிய நடவடிக்கை எதையும் தடை செய்தல்;

(r) பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நோய்கள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முதலியவை தொடர்பான தகவலை பரப்புதலை உறுதி செய்தல் மற்றும் பொது ஊடகங்களில் தவறான தகவல் பரவுதலை தடை செய்தல்; மற்றும்

(s) அறிவிக்கப்பட்ட நோய்களின் ஒழுங்குப்படுத்துதல், கட்டுப்பாடு மற்றும் தடுப்பதற்கான அரசு அல்லது மாவட்ட ஆட்சியரால் வழிகாட்டப்படலாகும் அத்தகைய பிற செயல்கள் அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்;

77-A எனும் புதிய

பிரிவினைப் புகுத்துதல்.

5. முதன்மைச் சட்டத்தின் 77-ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"77-A. வன்முறை செயல்களுக்கான தடை- (1) தொற்று நோய்களின் தடுப்பு, சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள பணியாளர் ஒருவருக்கெதிராக, எந்தவொரு நபரும் ஏதேனும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

(2) இந்தப் பிரிவின் படி ஏதேனும் குற்றச் செயலினை செய்த அல்லது செய்வதற்கு உடந்தையாயிருந்த நபரெவரும், மூன்று மாதங்களுக்குக் குறையாத, ஆனால் இரண்டாண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு கால அளவுக்கு சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் பத்தாயிரம் ரூபாய்க்கு குறையாத, ஆனால் ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் பணத்தண்டம் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்".

128-ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

6. முதன்மைச் சட்டத்தின் 128ஆம் பிரிவில், பின்வரும் உட்பிரிவுகள் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:- "(3) (a) இந்தச் சட்டத்தின் படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி, அவ்வாறு அவை வெளியிடப்பட்ட அந்த நாளன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்; (b) இந்தச் சட்டத்தின் படி வழங்கப்பட்ட அனைத்து அறிவிக்கைகளும், ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி, அவ்வாறு அவை வெளியிடப்பட்ட அந்த நாளன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(4) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை, அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடியவிரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும். மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்டக் கூட்டத் தொடர் அல்லது அந்தக் கூட்டத் தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை ஏதொன்றிலும் மாறுதல் எதையும் சட்டமன்றப் பேரவை செய்யுமாயின் அல்லது அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை செய்யப்படுதல் ஆகாது அல்லது பிறப்பிக்கப்படுதல் ஆகாது என சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின் அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும். அல்லது நேர்வுக்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும் அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம் எதுவும் அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை முன்னதாகச் செய்யப்பட்ட செயல் எதனின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்."11 130-ஆம் பிரிவினை 7. முதன்மைச் சட்டத்தின் 130 ஆம் பிரிவினை விட்டுவிடப்படுதல் வேண்டும்.

விட்டுவிடுதல்.

135-ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

8. முதன்மைச் சட்டத்தின் 135 ஆம் பிரிவில், "அல்லது சுகாதார அலுவலர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, அது வருகின்ற இரு இடங்களிலும், "அல்லது சுகாதார அலுவலர் அல்லது காவல் அலுவலர்" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

135-A எனும் புதிய

பிரிவினைப் புகுத்தல்.

9. முதன்மைச் சட்டத்தின் 135 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"135-A. நிறுமங்களால் செய்யப்படும் குற்றங்கள் – (1) இந்தச் சட்டத்திற்கெதிரான குற்றச் செயல் ஒன்று, ஒரு நிறுமத்தால் செய்யப்படுகிறவிடத்து, அந்தக் குற்றச் செயல் செய்யப்பட்ட நேரத்தில் அந்த நிறுமத்தின் அலுவலை நடத்தி வருவதற்குப் பொறுப்பாயிருந்து வரும், பொறுப்பிலிருந்தவருமான நபர் ஒவ்வொருவரும், அத்துடன் அந்த நிறுமமும் அந்தக் குற்றச் செயலை செய்ததாகக் கொள்ளப்படுதல் வேண்டும். மேலும், அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கிணங்கிய வகையால் தண்டிக்கப்படுவதற்கு உள்ளதாலும் வேண்டும்.

வரம்புரையாக, ஆனால் நபர் எவரும், அத்தகைய குற்றச் செயல் தமக்குத் தெரியாமல் செய்யப்பட்டதென்று அல்லது அந்தக் குற்றச்செயல் செய்யப்பட்டதைத் தடுப்பதற்குத் தாம் உரிய முயற்சி அனைத்தையும் எடுத்தார் என்று மெய்ப்பிப்பாராயின், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும் தண்டனை எதற்கும் அவரை உள்ளாக்காது.

(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், அத்தகைய குற்றச்செயலானது ஒரு நிறுமத்தால் செய்யப்பட்டு அந்த நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின் இசைவுடனோ அல்லது மறைமுக ஆதரவுடனோ செய்யப்பட்டு இருக்கிறது அல்லது அவர்பாலுள்ள கவனக்குறைவு எதற்கும் சாட்டத்தக்கதாயிருக்கிறது என்று மெய்ப்பிக்கப்படுமிடத்து,அந்த இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் அந்தக் குற்றச் செயலைச் செய்ததாகக் கொள்ளப்படுதலும், அதற்கெதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கிணங்க தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும் வேண்டும்.

விளக்கம். - இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக, - (a) "நிறுமம்" என்பது, கூட்டுக்குழுமம் எதுவும் என்று பொருள்படும் மற்றும் தனியாட்களின் ஒரு நிறுவகம் அல்லது பிற கழகம் எதனையும் உள்ளடக்கும்; மற்றும் (b) ஒரு நிறுவகம் தொடர்பாக "இயக்குநர்" என்றால், அந்த நிறுவகத்தின் கூட்டாளி ஒருவர் என்று பொருள்படும்.

138-ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

10. முதன்மைச் சட்டத்தின் 138 ஆம் பிரிவில், (1) "காவலரால்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "காவல் அலுவலரால்" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும். (2) வரம்புரையில் "1898 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டம், (மையச் சட்டம் V/1898)" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டம், (மையச் சட்டம் 2/1974)" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

138A-ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

11. முதன்மைச் சட்டத்தின் 138- A ஆம் பிரிவில், "செயலாட்சி அதிகாரி அல்லது சுகாதார அலுவலர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "செயலாட்சி அதிகாரி அல்லது சுகாதார அலுவலர் அல்லது காவல் அலுவலர்" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

142-ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

12. முதன்மைச் சட்டத்தின் 142 ஆம் பிரிவில்,- (1) (1) ஆம் உட்பிரிவில், "அல்லது அரசின்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "அல்லது அரசின் அல்லது காவல் அலுவலரின்," என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும். (2) (2) ஆம் உட்பிரிவில், "அல்லது அரசின்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "அல்லது அரசின் அல்லது காவல் அலுவலரும் இல்லை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்12 143-ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

13. முதன்மைச் சட்டத்தின் 143 ஆம் பிரிவில், "அல்லது அரசின்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "அல்லது அரசின் அல்லது காவல் அலுவலரின்" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்,

அட்டவணை I-ற்கானத்

திருத்தம்.

14. முதன்மைச் சட்டத்தின் 1 வது அட்டவணையில் (1)-வது வரிசையில் 76-வது பிரிவிற்கு தொடர்புடைய (4)-வது வரிசையில் "ஓராயிரம் ரூபாய்" என்ற சொற்களுக்கு பதிலாக "ஐந்தாயிரம் ரூபாய்" என்ற சொற்கள் அமைக்கப்படுதல் வேண்டும்.

நீக்கறவு மற்றும் காப்பு.

தமிழ்நாடு அவசரச் சட்டம் 15. (1) 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார (இரண்டாம் திருத்த) அவசரச் சட்டம், இதன் மூலம் நீக்கறவு செய்யப்படுகிறது.

10/2020.

(2) அவ்வாறு நீக்கறவு செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தின் படி 1939ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் இந்த சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாகவோ, அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

13

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையினால் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர்

திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது அது பொதுத் தகவலுக்காக

இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 28/2020

குறித்த சில சட்டங்களின் வகைமுறைகளில் தளர்விற்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய

அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்கு வகை செய்வதற்கானதொரு

சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால்

பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு வரிவிதிப்புச் சட்டங்கள் (குறித்த சில

தொடக்கம்.

வகைமுறைகளின் தளர்வு) சட்டம் என அழைக்கப்பெறும்.

(2) இது 2020-ஆம் ஆண்டு மே திங்கள் 23-ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

2. இந்தச் சட்டத்தில், தருவாயின் தேவை வேறுபொருள் குறித்தாலன்றி,- பொருள் வரையறைகள்.

(a) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;

(b) "அறிவிக்கை" என்பது தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையாக வெளியிடப்பட்டது

என்று பொருள்படும்.

தமிழ்நாடு சட்டம்

86A-எனும் புதிய 3. 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் 86-ஆம் பிரிவிற்குப் பின்பு,

32/2006.

பிரிவினைப் பின்வரும் பிரிவானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

புகுத்துதல்.

"86A. சிறப்பு சூழ்நிலைகளில் கால வரம்பை நீட்டிக்க அரசுக்கான அதிகாரம்.- (1) இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், அரசானது, அறிவிக்கையின்

வாயிலாக, பேரிடரின் காரணமாக நிறைவு செய்யவோ அல்லது உடன்படவோ முடியாத

செயல்களைப் பொறுத்தவரை இந்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்ட அல்லது

வகுத்துரைக்கப்பட்ட அல்லது குறித்துரைக்கப்பட்ட கால வரம்பை நீட்டிக்கலாம்.

(2) உட்பிரிவு (1)-இன் படி அறிவிக்கை வெளியிடுவதற்கான அதிகாரமானது, இந்தச்

சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு முன்னதாக அல்லாத ஒரு தேதியிலிருந்து அத்தகைய

அறிவிக்கைக்குப் பின்னோக்கிய விளைவை அளிக்கும் அதிகாரத்தையும் உள்ளடக்குதல்

வேண்டும்.

விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, "பேரிடர்" எனும் சொற்றொடரானது போர்,

தொற்றுநோய், வெள்ளம், வறட்சி, தீ, புயல், நிலநடுக்கம் அல்லது இயற்கையால் ஏற்படும்

வேறு ஏதேனும் பேரிடர் அல்லது இந்தச் சட்டத்தின் எந்தவொரு வகைமுறைகளின்

செயல்பாட்டினையும் பாதிக்கும் வேறு எதுவும் எனப் பொருள்படும்.".

(தமிழ்நாடு சட்டம்

4. 1935-ஆம் ஆண்டு தமிழ்நாடு பந்தைய வரிச் சட்டம், 1939-ஆம் ஆண்டு தமிழ்நாடு

XX/1935)

கேளிக்கைகள் வரிச் சட்டம், 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆடம்பரங்கள் மீதான வரிச்

சட்டம், 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளம்பர வரிச் சட்டம், 1990-ஆம் ஆண்டு தமிழ்நாடு

(தமிழ்நாடு சட்டம்

குறித்த சில இயற்றுச் சட்டங்களின் படி கால வரம்பைத் தளர்த்துதல்.

உள்ளூர் பகுதிகளில் இயக்கூர்திகள் நுழைதல் மீதான வரிச் சட்டம், 2001-ஆம் ஆண்டு

X/1939)

தமிழ்நாடு உள்ளூர் பகுதிகளில் சரக்குகள் நுழைதல் மீதான வரிச் சட்டம், 2017-ஆம்

(தமிழ்நாடு சட்டம் 6/1981)

ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 174-ஆம் பிரிவின் மூலம்

(தமிழ்நாடு சட்டம்

அதனை நீக்கறவு செய்வதற்கு முன்பாக இருந்தபடி, ஆகிய சட்டங்களில் அடங்கியுள்ள

22/1983)

எது எவ்வாறிருப்பினும், 2020 மார்ச் 20-ஆம் நாளிலிருந்து 2020 ஜுன் 29-ஆம் நாள்

(தமிழ்நாடு சட்டம்

வரையிலான கால அளவில் அல்லது 2020 ஜுன் 29-ஆம் நாளுக்குப் பின்பு, அத்தகைய

13/1990)

நடவடிக்கை நிறைவு செய்தவற்காக அல்லது உடன்படுத்துவதற்காக, அரசு, அறிவிக்கையின்

(தமிழ்நாடு சட்டம்

வாயிலாக, குறித்திடலாகும், அத்தகைய பிற தேதியின் கீழ் வரும் கால அளவில், கூறப்பட்ட

20/2001)

சட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்ட, அல்லது வகுத்துரைக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட,

(தமிழ்நாடு சட்டம்

கால வரம்பானது-

19/2017)14 (a) நடவடிக்கை எதையும் நிறைவு செய்தல் அல்லது அதிகார அமைப்பு, ஆணையம், தீர்ப்பாயம் எவற்றினாலும், எந்த பெயரால் அழைக்கப்பட்டாலும், ஆணை, அறிவிப்பு,

தகவல், அறிவிக்கை அல்லது ஒப்பளிப்பு அல்லது ஏற்பு எவற்றையும், எந்த பெயரால்

அழைக்கப்பட்டாலும், வழங்குதல்; அல்லது

(b) மேல்முறையீடு, பதில் அல்லது விண்ணப்பம் எவற்றையும் தாக்கல் செய்தல் அல்லது, நேர்விற்கேற்ப, ஏதேனும் அதிகார அமைப்பு அல்லது வணிகர், எந்தப் பெயரால்

அழைக்கப்பட்டாலும், அறிக்கை, ஆவணம், கணக்கு விவர அறிக்கை அல்லது விளக்க

அறிக்கை எவற்றையும் அளித்தல்,

எது எவ்வாறிருப்பினும், அத்தகைய நடவடிக்கையின் அந்த நிறைவு அல்லது உடன்பாடு

போன்றவற்றை அத்தகைய காலத்திற்குள்ளாக செய்யப்படவில்லை என்றாலும், 2020 ஜுன்

30-ஆம் நாள் அல்லது 2020 ஜுன் 30-ஆம் நாளுக்குப் பின்பு அரசு, அறிவிக்கையின்

வாயிலாக, இதன்பொருட்டு குறிப்பிடப்படலாகும், அத்தகைய பிற தேதி வரையில்

நீட்டிக்கப்டுதல் வேண்டும்:

வரம்புரை:- கூறு (a) அல்லது கூறு (b)-இன் படி வெவ்வேறு நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக அல்லது உடன்படுத்துவதற்காக அரசானது வெவ்வேறு தேதிகளை

குறிப்பிடலாம்.

தமிழ்நாடு அவசரச் 5. (1) 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு வரிவிதிப்புச் சட்டங்கள் (குறித்த சில வகைமுறைகளின்

நீக்கறவு மற்றும் காப்புரை.

சட்டம் 5/2020.

தளர்வு) அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.

(2) அத்தகைய நீக்கறவு இருந்தபோதிலும், கூறப்பட்ட அவசரச் சட்டத்தின்படி

செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தின்படி

செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

15

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர்

திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது அது பொதுத் தகவலுக்காக

இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 29/2020

2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள்

வரிச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்ற

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—

1. (1) இந்தச் சட்டம், 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(இரண்டாம் திருத்தச்) சட்டம் என அழைக்கப்பெறும்.

(2) (i) 11 மற்றும் 14 ஆகிய பிரிவுகள் 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் நாளன்று

நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்;

(ii) 12-ஆம் பிரிவானது 2020-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்;

(iii) 2 மற்றும் 13 ஆகிய பிரிவுகள் 2020-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் நாளன்று

நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்;

(iv) 16-ஆம் பிரிவானது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்;

மற்றும்

(v) இந்தச் சட்டத்தின் பிற வகைமுறைகள், மாநில அரசு, அறிவிக்கையின்

வாயிலாக, குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

2-ஆம் பிரிவிற்கானத் 19/2017.

திருத்தம்.

2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் என்று குறிப்பிடுவதான) 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 2-ஆம் பிரிவில், (114)-ஆம் கூறில், (c) மற்றும் (d)-ஆம் உட்கூறுகளுக்குப் பதிலாக, பின்வரும் உட்கூறுகளானது அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

"(c) தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டயூ;

(d) லடாக்;".

10-ஆம் பிரிவிற்கானத்

திருத்தம்.

3. முதன்மைச் சட்டத்தின் 10-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், (b), (c) மற்றும் (d)-ஆம் கூறுகளில் "சரக்குகளின்" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது சேவைகள்" என்ற சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்.

16-ஆம் பிரிவிற்கானத் 4. முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவில், (4)-ஆம் உட்பிரிவில், "தொடர்பான

விலைப்பட்டியல்" என்ற சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

திருத்தம்.

29-ஆம் பிரிவிற்கானத் 5. முதன்மைச் சட்டத்தின் 29-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில், (c) கூறுக்குப் பதிலாக,

பின்வரும் கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

திருத்தம்.

"(c) வரி விதிக்கத்தக்க நபர், 22-ஆம் பிரிவு அல்லது 24-ஆம் பிரிவின் கீழ் பதிவு பெறுவதற்கு அல்லது 25-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின் கீழ் தன்னிச்சையாக பதிவு பெற்றதிலிருந்து வெளியேற இனிமேலும் பொறுப்புடையவராகமாட்டார் தேர்வு செய்ய".

30-ஆம் பிரிவிற்கானத் 6. முதன்மைச் சட்டத்தின் 30-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில் வரும் வரம்புரைக்குப்

பதிலாக, பின்வரும் வரம்புரையானது அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

திருத்தம்.

"வரம்புரை.- போதுமான காரணங்கள் காண்பிக்கப்படுமாயின் மற்றும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, அத்தகைய கால அளவானது நீட்டிக்கப்படலாம்,—

(a) கூடுதல் ஆணையர் அல்லது இணை ஆணையரால், நேர்விற்கேற்ப, முப்பது

நாட்களுக்கு மிகாத கால அளவிற்கு;

16

(b) ஆணையாளரால், (a) கூறில் குறிப்பிடப்பட்ட கால அளவிற்கு மேற்பட்டு மேலும்

முப்பது நாட்களுக்கு மிகாத கால அளவிற்கு.".

31-ஆம் பிரிவிற்கானத்

7. முதன்மைச் சட்டத்தின் 31-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில் வரும் வரம்புரைக்குப்

பதிலாக, பின்வரும் வரம்புரையானது அமைக்கப்டுதல் வேண்டும், அதாவது:—

திருத்தம்.

"வரம்புரை.- அரசானது, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கையின்

வாயிலாக,—

(a) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய காலத்திற்குள், வழங்குகைகளின் வகைகளை அல்லது எந்த சேவைகளைப் பொருத்து வரி விலைப்பட்டியல் வழங்குதல் வேண்டுமென குறிப்பிடுதல்;

(b) குறிப்பிடப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு, சேவைகளின் வகைகளை குறிப்பிட்டு,

அவற்றுள்—

(i) வழங்குகை தொடர்பாக வழங்கப்பட்ட பிற ஆவணம் எதுவும் வரி விலைப்பட்டியல்

எனக் கருதப்பட வேண்டும்; அல்லது

(ii) வரி விலைப்பட்டியல் வழங்கப்படாதிருக்கலாம்.".

51-ஆம்

8. முதன்மைச் சட்டத்தின் 51-ஆம் பிரிவில்,—

பிரிவிற்கானத்

(a) (3)-ஆம் உட்பிரிவிற்குப் பதிலாக, பின்வரும் உட்பிரிவானது அமைக்கப்படுதல்

திருத்தம்.

வேண்டும், அதாவது:—

"(3) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் மற்றும் அத்தகைய படிவத்திலும்

ஆதாரத்தில் வரி பிடித்த சான்றிதழ் ஒன்றை வழங்குதல் வேண்டும்.";

(b) (4)-ஆம் உட்பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

122-ஆம்

9. முதன்மைச் சட்டத்தின் 122-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும்

உட்பிரிவானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:—

பிரிவிற்கானத்

திருத்தம்.

"(1A) (1)-ஆம் உட்பிரிவின் (i), (ii), (vii) மற்றும் (ix)-ஆம் கூறுகளின் கீழ் உள்ளடக்கப்பட்ட பரிமாற்றத்தின் பயனை தக்க வைத்துக்கொள்ளும் நபர் எவரும் மற்றும் அத்தகைய பரிமாற்றம் எவருடைய வேண்டுதலின் பேரில் நடத்தப்படுகிறதோ, ஏய்க்கப்பட்ட வரிக்கு அல்லது பயன்படுத்திக் கொள்ளப்பட்ட அல்லது வழங்கப்பட்ட உள்ளீட்டு வரிவரவுக்கு சமமான தொகையை தண்டத் தொகையாக செலுத்த அவர் பொறுப்புடையவராகுதல் வேண்டும்."

132-ஆம்

10. முதன்மைச் சட்டத்தின் 132-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில்,—

பிரிவிற்கானத்

திருத்தம்.

(1) "பின்வரும் குற்றச் செயல்கள் எவற்றையும் செய்கிற எவரேனும்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "பின்வரும் குற்றச் செயல்கள் எவற்றையும் எவரேனும் செய்தாலும், அல்லது நிகழ்த்தல் செய்தாலும் மற்றும் அச்செயல்களின் மூலம் தோன்றும் பயன்களை தக்கவைத்துக் கொண்டாலும்" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (c) கூறுக்குப் பதிலாக, பின்வரும் கூறானது அமைக்கப்படுதல் வேண்டும்,

அதாவது:—

"(c) (b) கூறில் சுட்டப்பட்ட விலைப்பட்டியல் அல்லது பட்டியைப் பயன்படுத்தி உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துகிறவிடத்து அல்லது விலைப்பட்டியல் அல்லது பட்டி எதுவும் இல்லாமல் மோசடியாக உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துகிறவிடத்து;";

(3) (e) கூறில் "உள்ளீட்டு வரிவரவை மோசடியாக பயன்படுத்துதல்" என்ற

சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

17

140-ஆம் 11. முதன்மைச் சட்டத்தின் 140-ஆம் பிரிவில்,—

பிரிவிற்கானத் (1) (1)-ஆம் உட்பிரிவில், "தற்போதைய சட்டம்" என்ற சொற்றொடருக்குப் பின்பு,

திருத்தம்.

அத்தகைய காலத்திற்குள்" மற்றும் என்ற சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்;

(2) (2)-ஆம் உட்பிரிவில், "குறித்திட்ட நாள்" என்ற சொற்றொடருக்கு பின்பு, "மற்றும்

அத்தகைய காலத்திற்குள்" மற்றும் என்ற சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்;

(3) (3)-ஆம் உட்பிரிவில், "அதற்குட்பட்டு குறித்திட்ட நாளில் இருப்பில் வைக்கப்பட்ட சரக்குகள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "அதற்குட்பட்டு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய காலத்திற்குள் குறித்திட்ட நாளில் இருப்பில் வைக்கப்பட்ட சரக்குகள்" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;

(4) (5)-ஆம் உட்பிரிவில், "தற்போதைய சட்டம்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய காலத்திற்குள் தற்போதைய சட்டம்" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;

(5) (6)-ஆம் உட்பிரிவில், "அதற்குட்பட்டு குறித்திட்ட நாளில் இருப்பில் வைக்கப்பட்ட சரக்குகள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "அதற்குட்பட்டு வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய காலத்திற்குள் குறித்திட்ட நாளில் இருப்பில் வைக்கப்பட்ட சரக்குகள்" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

168-A எனும் புதிய 12. முதன்மைச் சட்டத்தின் 168-ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:—

பிரிவினைப்

புகுத்துதல்.

"168-A. சிறப்பு சூழ்நிலைகளில் கால வரம்பை நீட்டிக்க அரசுக்குள்ள அதிகாரம்.— (1) இந்த சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், அரசானது, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அறிவிக்கையின் வாயிலாக, பேரிடரின் காரணமாக நிறைவு செய்யவோ அல்லது உடன்படவோ முடியாத செயல்களை பொருத்தவரை, இந்த சட்டத்தின் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்ட அல்லது வகுத்துரைக்கப்பட்ட அல்லது குறித்துரைக்கப்பட்ட காலவரம்பை நீட்டிக்கலாம்.

(2) உட்பிரிவு (1)-இன் படி அறிவிக்கை வெளியிடுவதற்கான அதிகாரமானது, இந்த சட்டத்தின் தொடக்க தேதிக்கு முன்னதாக அல்லாத ஒரு தேதியிலிருந்து அத்தகைய அறிவிக்கைக்கு பின்னோக்கிய விளைவை அளிக்கும் அதிகாரத்தையும் உள்ளடக்குதல் வேண்டும்.

விளக்கம்.— இந்த பிரிவின் நோக்கத்திற்காக, "பேரிடர்" என்ற சொற்றொடரானது போர், தொற்றுநோய், வெள்ளம், வறட்சி, தீ, புயல், நில நடுக்கம் அல்லது இயற்கையால் ஏற்படும் வேறு ஏதேனும் பேரிடர் அல்லது இந்த சட்டத்தின் எந்தவொரு வகைமுறைகளின் செயல்பாட்டினையும் பாதிக்கும் வேறு எதுவும் எனப் பொருள்படும்.".

172-ஆம்

பிரிவிற்கானத் 13. முதன்மைச் சட்டத்தின் 172-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில் உள்ள வரம்புரையில், "மூன்று ஆண்டுகள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ஐந்து ஆண்டுகள்" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

திருத்தம்.

II-ஆம் இணைப்புப் பட்டியலுக்கான திருத்தம்.

14. முதன்மைச் சட்டத்தின் II-ஆம் இணைப்புப் பட்டியலில், 4-ஆம் பத்தியில், "மறுபயனுக்காகவாயினும் அல்லது இல்லாவிடினும்" என்ற சொற்றொடர் வரும் இரண்டு இடங்களிலும், அது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

குறித்த சில

நேர்வுகளில் மாநில

வரியிலிருந்து

பின் தேதியிட்டு

விலக்களித்தல்,

அல்லது வரி 15. (1) 2017 ஜூன் 29-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பு வெளியீட்டின் பாகம் II-பிரிவு 2-ல், பக்கங்கள் 3 முதல் 68-இல் வெளியிடப்பட்ட 2017 ஜூன் 29-ஆம் நாளிட்ட II(2)/வவப/532(d-4)/2017-ஆம் எண்ணுள்ள வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் அறிவிக்கையில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், மன்றத்தின் பரிந்துரையின் பேரில், முதன்மைச் சட்டத்தின் 9-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் அதிகாரங்களை செயல்படுத்துவதில்,—

விதித்தல் அல்லது

வசூலித்தல்.

18

(i) 2017 ஜூலை 1-ஆம் நாள் தொடங்கிய காலம் முதல் 2019 செப்டம்பர் 30-ஆம் நாள் முடியும் வரையுள்ள (இரு தேதிகளும் உள்ளடங்கலான) காலத்தில், (2301-ஆம் தலைப்பின் கீழ் வரும்) மீன் உணவு வழங்குதல் தொடர்பாக எந்தவொரு மாநில வரியும் விதிக்கப்படுதல் அல்லது வசூலிக்கப்படுதல் கூடாது;

(ii) 2017 ஜூலை 1-ஆம் நாள் தொடங்கிய காலம் முதல் 2018 டிசம்பர் 31-ஆம் நாள் முடியும் வரை (இரு தேதிகளும் உள்ளடங்கலான) (8483-ஆம் தலைப்பின் கீழ் வரும்) கப்பி, சக்கரங்கள் மற்றும் பிற பாகங்களின் வழங்குதல் தொடர்பாக மற்றும் (8432, 8433 மற்றும் 8436-ஆம் தலைப்பின் கீழ் வரும்) வேளாண் இயந்திரங்களின் பாகங்களாக பயன்படுவன தொடர்பாக ஆறு சதவிகிதம் மாநில வரி விதித்தல் வேண்டும் அல்லது வசூலித்தல் வேண்டும்.

(2) (1)-ஆம் உட்பிரிவானது அனைத்து நேரங்களிலும் இருந்திருக்குமே எனில், அவ்வாறு வசூலிக்கப்படாமல் இருந்திருக்கக்கூடிய, வசூலிக்கப்பட்ட அத்தகைய அனைத்து வரியையும் திரும்ப வழங்கப்படமாட்டாது.

நீக்கறவு மற்றும்

தமிழ்நாடு அவசரச் காப்புரை.

சட்டம் 4/2020.

16. (1) 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்த) அவசரச் சட்டம் மற்றும் 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (இரண்டாம் திருத்த) அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அவசரச்

சட்டம் 9/2020.

(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும், கூறப்பட்ட அவசரச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட எதுவும் இந்த சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான மேற்படிச் சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

19

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர்

திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத்

தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 30/2020

1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச்

சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும்

தொடக்கம்.

உரிமை வழக்குகள் மதிப்பீட்டு (திருத்த)ச் சட்டம் என்று அழைக்கப்பெறும்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

61, 63 மற்றும் 72 ஆம் 2. 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள்

XIV/1955.

பிரிவுகளுக்கான மதிப்பீட்டுச் சட்டத்தின் (இதன் பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 61, 63

திருத்தம்.

மற்றும் 72 ஆம் பிரிவுகளில் "வருவாய் வாரியம்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக அது

வருகின்ற இடங்களிலெல்லாம் "1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு வருவாய் வாரிய ஒழிப்புச்

சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 36/1980) 4 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் படி வெளியிடப்பட்ட

அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய அதிகார அமைப்பு'' என்ற சொற்றொடரானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

73, 75, 80, 81 மற்றும் 82 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 73, 75, 80, 81 மற்றும் 82 ஆம் பிரிவுகளில் "புனித ஜார்ஜ்

பிரிவுகளுக்கான கோட்டை இதழ்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, அது வருகின்ற இடங்களிலெல்லாம்,

திருத்தம்.

"தமிழ்நாடு அரசிதழ்'' என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

68 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 68 ஆம் பிரிவில், "II ஆம் அட்டவணையின் 11 (g) மற்றும் (u) உறுப்பு'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "II ஆம் அட்டவணையின் 11 (g) மற்றும் 11 (s) உறுப்பு'' என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

72 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

5. முதன்மைச் சட்டத்தின் 72 ஆம் பிரிவில், (xiv) ஆம் கூறில், "மாநில இருப்பூர்தி'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "இந்திய இருப்பூர்தி'' என்ற சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

75ஆம் பிரிவிற்கான 6. முதன்மைச் சட்டத்தின் 75 ஆம் பிரிவானது, அந்தப் பிரிவின் (1) ஆம் உட்பிரிவாக

திருத்தம்.

மறு எண்ணிடப்படுதல் வேண்டும், மற்றும் அவ்வாறு மறு எண்ணாக்கம் செய்யப்பட்ட (1) ஆம்

உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2) இந்தப்பிரிவு மற்றும் 74 ஆம் பிரிவின் நோக்கத்திற்காக''

(a)" முத்திரை வில்லை'' என்பது மாநில அரசால் உரியவாறு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள ஏதேனும் முகவாண்மை அல்லது நபர் எவராலும்

செய்யப்படும் குறியீடு, முத்திரை அல்லது ஏற்பிசைவு என்று பொருள்படும்;

(b) "மின்னணு – முத்திரை வில்லை'' என்பது இணைய வழிவாயிலாக அல்லது மாநில அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்துரைக்கப்படலாகிறவாறான

வகையில் அதனை ஒத்த மென்பொருள் வாயிலாக கட்டணம்

செலுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு தனித்தன்மையுடைய எண் என்று

பொருள் படும்.

(c) "முத்திரையிடப்பட்ட முத்திரை வில்லை'' என்பது மாநில அரசால் உரியவாறு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள ஏதேனும் முகவாண்மை அல்லது நபர்

எவராலும், மின்கட்டண அஞ்சல் முத்திரைப் பொறி அல்லது பிற பொறி

எவற்றினாலும் செய்யப்படும் முத்திரை என்று பொருள் படும்.''

தமிழ்நாடு அவசரச்

7. (1) 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் நீக்கறவு மற்றும் காப்புரை.

சட்டம் 2/2020. மதிப்பீட்டு (திருத்த) அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.

20

(2) அத்தகைய நீக்கறவு இருந்த போதிலும், மேற்சொன்ன அவசரச்சட்டத்தால்

திருத்தம் செய்யப்பட்டவாறான 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதி மன்றக் கட்டணங்கள்

மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தின் படி செய்யப்பட்ட எதுவும் அல்லது

எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான

மேற்சொன்ன அவசரச்சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக்

கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

21

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 31/2020

1987 ஆம் ஆண்டின் தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல்

(முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

குறுந்தலைப்பு மற்றும் இந்தியக் குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்

தொடக்கம்.

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1 (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள்

சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.

(2) 6,7,8,9, 10 மற்றும் 15 ஆகிய பிரிவுகள் 2019 ஆம் ஆண்டு மே திங்கள் 29 ஆம் நாளன்று

நடைமுறைக்கு வந்து விட்டதாக கொள்ளப்பட வேண்டும் மற்றும் மீதமுள்ள பிரிவுகள், மாநில

அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு

வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

2 ஆம் பிரிவிற்கான 2. (இதன்பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1987 ஆம் ஆண்டு

27/1989.

திருத்தம் தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் 2

ஆம் பிரிவில்,-

(1) (8)-ம் கூறின் இறுதியில் "அறிவிக்கையில் குறிப்பிடப்படலாகும் அத்தகைய

பகுதிக்காக" என்ற சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(2) தற்போதுள்ள (8-a) எனும் கூறு (8-b) கூறாக மறு எண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு (8-b) ஆம் கூறு என மறு எண்ணிடப்படுவதற்கு முன்பு பின்வரும் கூறு புகுத்தப்படுதல்

வேண்டும், அதாவது:-

"(8-a) வேளாண் விளைபொருள் தொடர்பான "நேரடி சந்தைப்படுத்துதல்" என்பது

சந்தைகளுக்கு வெளியே, சிறப்பு மற்றும் துணைச் சந்தைகள், தனியார் சந்தை துணை

முற்றங்களில் பதப்படுத்துபவர்கள், அல்லது ஏற்றுமதியாளர்கள் அல்லது மொத்தமாக

வாங்குபவர்களால் உற்பத்தியாளர்களிடமிருந்து வேளாண் விளைபொருளை நேரடியாக

மொத்த விற்பனைக் கொள்முதல் செய்தல் என்று பொருள்படும்".

(3) (16)-ஆம் கூறுக்குப்பிறகு பின்வரும் கூறுகள் புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

(16-a) "தனியார் சந்தை துணை முற்றம்" என்பது 7-B ஆம் பிரிவின் கீழ் தனியார் சந்தை

துணை முற்றமாக செயல்படுவதற்கென அறிவிக்கப்பட்ட இடம் எதுவும் என்று பொருள்படும்.

(16-b) "தனியார் சந்தை முற்றம்" என்பது 7-A ஆம் பிரிவின் கீழ் நிறுவப்பெற்ற ஒரு

தனியார் சந்தை முற்றம் என்று பொருள்படும்.

(4) (23) ஆம் கூறுக்குப்பிறகு, பின்வரும் கூறானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

24) "சந்தைப்பகுதி" என்பதற்கு 6 ஆம் ஒருங்கிணைந்த பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்

கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிக்கை வெளியிடப்பட்ட சந்தைப் பகுதியை தவிர தமிழ்நாடு மாநிலம்

முழுவதும் என்று பொருள்படும்.

3. முதன்மைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவிற்குப் பிறகு, பின்வரும் பிரிவுகள் புகுத்தப்படுதல்

வேண்டும், அதாவது-

7-A,7-B,7-C "7-A. தனியார் சந்தை முற்றத்தினை நிறுவுதல்- (1) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

வரையறைகளுக்குட்பட்டு, வேளாண் விளைபொருளின் வணிகத்திற்காக ஒருங்கிணைந்த

சந்தைப் பகுதியில் எங்கேனும் ஒரு தனியார் சந்தை முற்றத்தை நிறுவ நபர் எவரொருவருக்கும்

மற்றும் 7-D எனும் புதிய பிரிவுகளை புகுத்துதல் இயக்குநர் உரிமம் அளிக்கலாம்.

(2) இப்பிரிவின் கீழ் உரிமம் வழங்குவதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும் வகுத்துரைக்கப்

படலாகும் அத்தகைய படிவத்திலும் முறையிலும் அத்தகைய கட்டணத்துடன் ஒன்றிணைத்து

இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

22

(3) உட்பிரிவு (1)-ன் கீழ் அளிக்கப்பட்ட ஓர் உரிமமானது மூன்றாண்டுகள் கால அளவிற்கு

செல்லுந்தன்மையுடையதாகுதல் வேண்டும்.

(4) இயக்குநர், அத்தகைய மறுப்பு அல்லது இடைநீக்கத்திற்கான காரணங்களை

பதிவு செய்வதன் மூலம், வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய அடிப்படையில், உரிமத்தை

அளிக்கலாம் அல்லது வழங்க மறுக்கலாம் அல்லது உரிமத்தை புதுப்பிக்கலாம் அல்லது

புதுப்பிக்க மறுக்கலாம் அல்லது உரிமத்தை இடைநிறுத்தம் செய்யலாம்.

(5) உட்பிரிவு (4)-ன் கீழ் உருவாக்கப்பட்ட ஒர் ஆணையினால் இடருற்ற நபர் எவரும்

ஆணை பெற்றுக் கொள்ளப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் அரசிடம் மேல்முறையீடு

ஒன்றினை அளிக்கலாம்.

வரம்புரையாக, மேல்முறையீட்டாளர் போதுமான காரணங்களினால் அத்தகைய

மேல்முறையீடு செய்வதிலிருந்து தடுக்கப்பட்டால் மேல்முறையீடு அளிப்பதற்கு மேலுமொரு

முப்பது நாட்கள் காலஅவகாசத்தினை அரசு வழங்கலாம்.

(6) தனியார் சந்தை முற்றத்தின் உரிமம் பெற்றவர் அல்லது அதன் மேலாண்மைக்குழு

என எப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும், தனியார் சந்தை முற்றத்தில் இயங்க

வகுத்துரைக்கப் படலாகிறவாறான அத்தகைய கட்டணத்துடன் வணிகர்கள் உட்பட சந்தை

செயல்பாட்டாளர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

(7) தனியார் சந்தை முற்ற உரிமம் பெற்றவர் அல்லது அதன் மேலாண்மைக்குழு,

வகுத்துரைக்கப் படலாகிறவாறான விகிதத்திற்கு மிகாமல் விலை மதிப்பீட்டின்படியான

விகிதத்தில், தனியார் சந்தை முற்றத்தில் வணிகம் செய்யப்படும் வேளாண் விளைபொருளின்

மீது பயனாளர் கட்டணத்தை தண்டல் செய்யலாம்.

வரம்புரையாக இவ்வுட்பிரிவின் கீழ் அவ்வாறு வகுத்துரைக்கப்படும் வீதமானது

24-ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் வகுத்துரைக்கப்பட்ட வீதத்தை விட குறைவாக

இருக்கக்கூடாது.

மேலும் வரம்புரையாக, வேளாண் விளைபொருள் எதையும் விற்பனை செய்யும்

உற்பத்தியாளரிடமிருந்து பயனாளர் கட்டணத்தை தண்டல் செய்யப்படுதல் கூடாது:

மேலும் வரம்புரையாக, ஒருங்கிணைந்த சந்தைப் பகுதியில் வாங்கப்படும் அல்லது

விற்கப்படும் வேளாண் விளைபொருள் எதன் மீதும் ஒன்றிற்கு மேற்பட்ட முறை பயனாளர்

கட்டணம் தண்டல் செய்தல் கூடாது.

(8) தனியார் சந்தை முற்றத்தின் உரிமம் பெற்றவர், 45 ஆம் பிரிவின் கீழ் உருவாக்கப்பட்ட

சந்தை வளர்ச்சி நிதிக்கு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய விழுக்காட்டில், அத்தகைய

பயனாளர் கட்டண தண்டலையும், பதிவுக் கட்டணத்தையும் பங்களித்தல் வேண்டும்.

(9) வகுத்துரைக்கப்படலாகும் விதிகளுடன் இணங்கி, தனியார் சந்தை முற்றத்தில், தனியார்

சந்தை முற்றத்தின் உரிமம் பெற்றவர் தொழில் மற்றும் அதன் எஞ்சியுள்ள செயல்பாடுகளை

நடத்துவதற்கான நிலையான இயங்கு வழிமுறைகளை வடிவமைத்தல் வேண்டும்.

(10) உட்பிரிவுகள் (2) மற்றும் (3)-இல் உள்ளடங்கிய எதுவும்-

(a) வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய அளவிற்கு மிகாமல் எந்தவொரு

அளவிலும் தனது வீட்டுப் பயன்பாட்டிற்காக வேளாண் விளைபொருள் எதையும் கொள்முதல்

செய்யும் நபர் ஒருவருக்கு;

(b) வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய அளவிற்கு மிகாமல் எந்தவொரு

அளவிற்கும் தனது சொந்த விதை நோக்கத்திற்காக வேளாண் விளைபொருள் எதையும்

கொள்முதல் செய்யும் நபர் ஒருவருக்கும் பொருந்துதல் ஆகாது.

7(B) தனியார் சந்தை துணை முற்றத்தினை நிறுவுதல்.— (1) அரசு, அறிவிக்கையின் வாயிலாக, சேமிப்புக்கிடங்கு, பதகை குழி, குளிர் வைப்பறை, வகுத்துரைக்கப்படலாகும்

வசதிகள் மற்றும் அத்தகைய பிற கட்டமைப்பு அத்தகைய உட்கட்டமைப்புடன் கூடிய அல்லது

இடம் ஆகியவற்றை தனியார் சந்தை துணை முற்றமாக செயல்படுவதற்கு அறிவிக்கலாம்.

விளக்கம்.- 'இடம்' எனும் சொற்றொடரானது சிப்பம் கட்டுமிடம்/ தூய்மைப்படுத்துதல்,

தரம்பிரித்தல் அல்லது பதனிடுதல் அலகு உட்பட ஏதேனும் கட்டமைப்பு, இணைப்பு,

திறந்தவெளிப்பகுதி, தொகுப்பு வீடு, தெரு ஆகிவற்றை உள்ளடக்குதல் வேண்டும்.

23

(2) அறிவிக்கப்பட்ட தனியார் சந்தை துணை முற்றம் ஒன்றின் உரிமையாளர்,

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வடிவத்திலும், அத்தகைய முறையிலும், அத்தகைய

கட்டணத்துடன் ஒன்று சேர்த்து இயக்குநரிடம் உரிமத்திற்காக விண்ணப்பித்தல் வேண்டும்.

(3) தனியார் சந்தை துணை முற்றம் ஒன்றிற்காக அளிக்கப்பட்ட உரிமமானது

மூன்றாண்டுகள் கால அளவிற்கு செல்லுந்தன்மையுடைதாகுதல் வேண்டும்.

(4) இயக்குநர், அத்தகைய மறுப்பு அல்லது இடைநீக்கத்திற்கான காரணங்களை

பதிவு செய்வதன் மூலம் வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய அடிப்படையில், உரிமத்தை

அளிக்கலாம் அல்லது வழங்க மறுக்கலாம் அல்லது உரிமத்தை புதுப்பிக்கலாம் அல்லது

புதுப்பிக்க மறுக்கலாம் அல்லது உரிமத்தை இடைநீக்கம் செய்யலாம்.

(5) உட்பிரிவு (4)இன் படி உண்டாக்கப்பட்ட ஆணை ஒன்றினால் இடருற்ற நபர் எவரும்,

ஆணை பெற்றுக் கொள்ளப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் அரசிடம் மேல்முறையீடு

அளிக்கலாம்.

வரம்புரையாக, மேல்முறையீட்டாளர் போதுமான காரணங்களுக்காக அத்தகைய

மேல்முறையீடு செய்வதிலிருந்து தடுக்கப்பட்டால், மேல்முறையீடு செய்வதற்கு மேலுமொரு

முப்பது நாட்கள் காலஅவகாசத்தினை அரசு நல்கலாம்.

(6) தனியார் சந்தை துணை முற்றத்தின் உரிமம் பெற்றவர், வகுத்துரைக்கப்படலாகும்

வீதத்திற்கு மிகாது, விலைமதிப்பீட்டின்படியான வீதத்தில், சந்தை துணை முற்ற வணிகம்

செய்யப்படும் வேளாண் விளைபொருளின் மீது நுகர்வோர் கட்டணத்தை தண்டல் செய்தல்

வேண்டும்.

வரம்புரையாக, வேளாண் விளைபொருள் எவற்றையேனும் விற்பனை செய்யும்

உற்பத்தியாளர் ஒருவரிடமிருந்து பயனாளர் கட்டணம் தண்டல் செய்யப்படுதல் கூடாது.

(7) தனியார் சந்தை துணை முற்ற உரிமம் பெற்றவர், 45 ஆம் பிரிவின்படி உருவாக்கப்பட்ட

சந்தை வளர்ச்சி நிதிக்கு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய விழுக்காட்டில், அத்தகைய

பயனாளர் கட்டண தண்டல்களை பங்களித்தல் வேண்டும்.

7 (C) நேரடி சந்தைப்படுத்துதல்.—

(1) உற்பத்திப் பகுதி ஒன்றின் அருகாமையில் அல்லது நியமிக்கப்பட்ட உணவுப் பூங்கா

ஒன்றிற்குள், வகுத்துரைக்கப்படலாகும் உட்கட்டமைப்புடன் கூடிய சேமிப்பு அல்லது திரட்டுதல்

மையம், நபர் ஒருவரால், வேளாண் விளைபொருள் எவற்றையேனும் சந்தைப்படுத்துவதற்காக,

வகுத்துரைக்கப் படலாகிறவாறு சில்லறைத் தொடரி, அல்லது பதப்படுத்துதல்/ ஏற்றுமதி

அலகு/வளாகம் அல்லது ஏதேனும் பிற அத்தகைய அலகு / வளாகங்கள் ஆகியவற்றின்

இணைப்புகளுடன் அமைக்கப்படலாம்.

விளக்கம்- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக "நியமிக்கப்பட்ட உணவுப் பூங்கா"

என்பது இந்திய அரசின் உணவுப்பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தினால், நன்கு

வரையறுக்கப்பட்ட வேளாண் அல்லது தோட்டக்கலை மண்டலத்தில் அமைக்கப்பட்டதும் மற்றும்

அத்தகையவாறு நிறுவப்பட்டதுமான உணவுப்பதப்படுத்தும் அலகுகள் என்று பொருள்படும்.

(2) உட்பிரிவு (1)-இல் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், வகுத்துரைக்கப்பட்டலாகிறவாறு

சேமிப்பு அல்லது திரட்டுதல் மையம் எவற்றையும் நிறுவாமல், அத்தகைய கொள்முதலுக்கான

இடத்தினை அறிவிப்பதன் மூலம், சந்தை, தனியார் சந்தை முற்றம், அல்லது தனியார்

சந்தைப்படுத்துதலானது மேற்கொள்ளப்படலாம்.

(3) எந்தவொரு நபரும் நேரடி சந்தைப் படுத்துதலுக்கான உரிமத்திற்காக, வகுத்துரைக்கப்

படலாகும் அத்தகைய படிவத்திலும், அத்தகைய முறையிலும், அத்தகைய கட்டணத்துடன்

ஒன்றுசேர்த்து இயக்குநரிடம் விண்ணப்பிக்கலாம்.

(4) நேரடி சந்தைப்படுத்துதலுக்காக அளிக்கப்பட்ட உரிமமானது மூன்றாண்டுகள் கால

அளவிற்கு செல்லுந்தன்மையுடையதாகுதல் வேண்டும்.

(5) இயக்குநர், அத்தகைய மறுப்பு அல்லது இடைநீக்கத்திற்கான காரணங்களை பதிவு

செய்வதன் மூலம் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அடிப்படைகளின் பேரில் உரிமத்தினை

அளிக்கலாம் அல்லது வழங்க மறுக்கலாம் அல்லது உரிமத்தினை புதுப்பிக்கலாம் அல்லது

உரிமத்தினை புதுப்பிப்பதற்கு மறுக்கலாம் அல்லது உரிமத்தினை இடைநிறுத்தம் செய்யலாம்.

24

(6) உட்பிரிவு (5) இன் படி உண்டாக்கப்பட்ட ஆணை ஒன்றினால் இடருற்ற நபர் எவரும்,

ஆணை பெற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் அரசிடம் மேல் முறையீடு

ஒன்றினை அளிக்கலாம்.

வரம்புரையாக, மேல்முறையீட்டாளர் போதுமான காரணங்களுக்காக அத்தகைய

மேல்முறையீடு செய்வதிலிருந்து தடுக்கப்பட்டால், மேல்முறையீடு அளிப்பதற்கு மேலுமொரு

முப்பது நாட்கள் காலஅவகாசத்தினை அரசு வழங்கலாம்.

(7) நேரடி சந்தைப்படுத்துதல் உரிமம் பெற்றவர், அன்றாட வணிக நடவடிக்கைகள்

தொடர்புடைய ஆவணங்களையும், கணக்குகளையும் பேணுதல் வேண்டும் மற்றும்

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மாத அறிக்கையினை இயக்குநருக்கு

அனுப்புதல் வேண்டும்.

(8) இயக்குநர், நேரடி சந்தைப்படுத்துதல் உரிமம் பெற்றவரிடமிருந்து ஏதேனும் கூடுதல்

தகவலை விரும்பலாம் மற்றும் ஆய்வு மேற்கொள்ளலாம் மற்றும் அத்தகைய மொத்த விற்பனைக்

கொள்முதல் மற்றும் அதற்கு இடை நிகழ்வுடைய செயல்களின் நிகழ்வுகள் தொடர்புடையவற்றில்

கட்டளையிடலாம்.

(9) நேரடி சந்தைப்படுத்துதல் உரிமம் பெற்றவர் மொத்த விற்பனைக் கொள்முதல்கள்

கட்டணத்தை ஒரு ரூபாய்க்குக் குறையாமல், ஆனால் வேளாண் விளைபொருள்கள் வாங்கப்பட்ட

அல்லது விற்கப்பட்ட மொத்த தொகையின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கு

மிகாத வீதத்தில் செலுத்தப் பொறுப்புடையவராக்குதல் வேண்டும். கூறப்பட்ட கட்டணமானது

45 ஆம் பிரிவின் படி உருவாக்கப்பட்ட சந்தை வளர்சசி நிதிக்கு வரவு வைக்கப்படுதல் வேண்டும்.

7.D. தகராறு தீர்வு -மின்னணு வணிகம், நேரடி சந்தைப்படுத்துதல், தனியார் சந்தை

முற்றம் அல்லது தனியார் சந்தை துணை முற்றம் ஆகியவற்றின் உரிமம் பெற்றவர்களுக்கிடையே

அல்லது இடையில் எழும் தகராறு எதுவும் தீர்வுக்காக இயக்குநருக்கு அனுப்பப்படுதல்

வேண்டும்.

8 ஆம் பிரிவிற்கான

4. முதன்மைச் சட்டத்தின் 8 ஆம் பிரிவில்,-

திருத்தம்

(1) ஓரத்தலைப்பிற்காக, பின்வரும் ஓரத்தலைப்பு மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்,

அதாவது:-

"அறிவிக்கப்பட்ட சந்தைப்பகுதியில் அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருளில்

வணிகம்."-

(2) உட்பிரிவு (1) -இல் "எந்தவொரு நபரும், அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்" -எனும்

சொற்றொடருக்கு மாற்றாக "எந்தவொரு நபரும், அறிவிக்கப்பட்ட சந்தை பகுதிக்குள்" எனும்

சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

8-A ஆம் பிரிவிற்கான

5. முதன்மைச் சட்டத்தின் 8-A ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில், "ஏதேனும் அறிவிக்கப்பட்ட

திருத்தம்

சந்தைப் பகுதியில் ஏதேனும் அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருள்" எனும் சொற்களுக்குப்

மாற்றாக "ஏதேனும் வேளாண் விளைபொருள்" எனும் சொற்களானது அமைக்கப்படுதல்

வேண்டும்.

6. முதன்மைச் சட்டத்தின் 14 ஆம் பிரிவிற்கு பின்வரும் பிரிவானது மாற்றாக

14-ஆம் பிரிவினை மாற்றியமைத்தல்

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது.—

"14. வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), அலுவல்வழி

உறுப்பினராகுதல்.—

அறிவிக்கப்பட்ட பகுதியின் மீது அதிகார வரம்புரையைக் கொண்ட சந்தைப்படுத்துதல்

பொறுப்பிலுள்ள வேளாண்மை துணை இயக்குநரோ (வேளாண் வணிகம்), அல்லது

அறிவிக்கப்பட்ட பகுதியின் பல்வேறு பாகங்களின் மீது அதிகார வரம்பைக் கொண்ட

சந்தைப்படுத்துதல் பொறுப்பில் உள்ள இரண்டு அல்லது அதிகமான வேளாண்மை துணை

இயக்குநர்கள் (வேளாண் வணிகம்) இருக்குமிடத்தில், இதன் பொருட்டு அரசு குறிப்பிடலாகும்

அத்தகைய ஒரு வேளாண்மை துணை இயக்குநரோ (வேளாண் வணிகம்), அத்தகையப்

பகுதியில் நிறுவப்பட்டுள்ள சந்தைக்குழுவின் அலுவல்வழி உறுப்பினராகுதல் வேண்டும்".

25

17- ஆம் பிரிவிற்கான 7. முதன்மைச் சட்டத்தின் 17-ஆம் பிரிவில் "1894 ஆம் ஆண்டு நில கையகப்படுத்துதல்

திருத்தம் சட்டம்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "2013 ஆம் ஆண்டு நியாய இழப்பீடு மற்றும் நிலம்

கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றத்திற்கான

உரிமைச் சட்டம் (மையச்சட்டம் 30/2013)" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல்

வேண்டும்.

24- ஆம் பிரிவிற்கான 8. முதன்மைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவில்,-

திருத்தம் (1) உட்பிரிவு (1)-க்கு பதிலாக பின்வருவன மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்,

அதாவது:-

"(1) ரொக்கத் தொகை அல்லது காலந்தாழ்ந்த பணக்கொடுப்பு அல்லது பிற மதிப்புடை

மறுபயனுக்காகவோ வாங்கப்படும் அல்லது விற்கப்படும் அறிவிக்கப்பட்ட வேளாண்

விளைபொருட்களில் வகுத்துரைக்கப்படலாகிறவாறான மொத்தத் தொகையில் ஒவ்வொரு

நூறு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கு மிகாத வீதத்தில் அறிவிக்கப்பட்ட சந்தைப் பகுதியில்

வாங்கப்பட்ட அல்லது விற்கப்பட்ட எந்தவொரு அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருளின்

மீதும் சந்தைக்குழு கட்டணத்தை விதிக்கலாம்;

விளக்கம்.— இச்சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையை முடிவு செய்கையில் ஐம்பது பைசாவிற்கு குறைவான பின்னமானது புறக்கணிக்கப்படுதல் வேண்டும் மற்றும் ஐம்பது பைசாவின் பின்னம் எதுவும் அல்லது ஐம்பது பைசாவிற்கு அதிகமான பின்னம் எதுவும் ஒரு ரூபாய் எனக்கருதப்படுதல் வேண்டும்.";

(2) உட்பிரிவுகள் (3) மற்றும் (4) விட்டுவிடப்படுதல் வேண்டும்:

(3) உட்பிரிவு (5)-க்கு பதிலாக பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும், அதாவது:-

"(3) வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய அளவிற்கும் அதிகமான அறிவிக்கப்பட்ட ஒரு சந்தைப்பகுதியிலிருந்து எடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்ட யாதொரு அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருளும் சந்தைக்குழுவால் இதன் பொருட்டு அமைக்கப்பட்ட துணைவிதிகளுக்குட்பட்டு சந்தைக்குழுவின் செயலாளரால் வழங்கப்பட்ட அனுமதி துணையுடன் இருத்தல் வேண்டும்".

33-ஆம் பிரிவிற்கான 9. முதன்மைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவில்,—

திருத்தம் (1) உட்பிரிவு (1) இல் உள்ள வகைமுறையில் "ஒன்பது ஆண்டு" என்ற சொற்களுக்கு மாற்றாக "ஒன்பது ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" என்ற சொற்கள் அமைக்கப்படுதல் வேண்டும்.

(2) உட்பிரிவு (5) இன் (c) கூறுக்கு மாற்றாக பின்வரும் கூறு அமைக்கப்படுதல்

வேண்டும், அதாவது:-

"(c) 14 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கப்பட்ட பகுதியின் மீது அதிகார வரம்பு கொண்ட சந்தைப்படுத்துதல் பொறுப்புடைய வேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்)".

35-ஆம் பிரிவிற்கான

திருத்தம் 10. முதன்மைச் சட்டத்தின் 35 ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில், (b) கூறில் "1894 ஆம் ஆண்டு நில கையகப்படுத்துதல் சட்டம் (மையச் சட்டம் I/1894)," என்ற சொற்றொடருக்கு மாற்றாக "2013 ஆம் ஆண்டின் நியாய இழப்பீடு மற்றும் நிலக் கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றத்திற்கான உரிமைச் சட்டம் (மையச் சட்டம் 30/2013)" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

37-ஆம் பிரிவிற்கான 11. முதன்மைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவில், (4) ஆம் உட்பிரிவானது விட்டுவிடப்படுதல்

திருத்தம் வேண்டும்.

37-A ஆம் பிரிவினைப் 12. முதன்மைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது

புகுத்துதல்.

புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"37-A. முதன்மைச் செயல் அலுவலரின் அதிகாரங்களும் செயல்பாடுகளும்:-

வாரியத்தின் கண்காணிப்பிற்குட்பட்டு, முதன்மைச் செயல் அலுவலர்-

i. வாரியத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது மேற்பார்வை மற்றும்

கட்டுப்பாடு செய்தல்;

26

ii. வாரிய கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்தல் மற்றும் வாரிய கூட்டங்களின்

நடவடிக்கைகளின் ஆவணங்களை பேணுதல் வேண்டும்;

iii. வாரியத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையெனக் கருதும்

அத்தகைய நடவடிக்கைகளை எடுத்தல்;

iv. சந்தைக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட கட்டடங்களின் கட்டுமானம் அல்லது

பழுதுபார்க்கும் பணிகளை மேற்பார்வை மற்றும் ஆய்வு செய்தல்; மற்றும்

v. வாரியத்தால் அவ்வப்போது இசைவளிக்கப்படலாகும் அத்தகைய பிற

செயல்பாடுகளை நிறைவேற்றுதல் வேண்டும்.

46-ஆம் பிரிவிற்கானத்

13. முதன்மைச் சட்டத்தின் 46 ஆம் பிரிவில் (5) கூறுக்குப்பின்பு,

திருத்தம்.

பின்வரும் கூறுகள் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது :-

(6) "தனியார் சந்தை முற்றம், சந்தை துணை முற்றம் மற்றும் நேரடிச் சந்தைப்படுத்துதலுக்காக உரிமத்தை வழங்குதல், புதுப்பித்தல், இடைநிறுத்தம் அல்லது நீக்கம் செய்தல்;

(7) 7A, 7B அல்லது 7C பிரிவுகளின் வழிவகைகள் அல்லது ஈங்கதனில் உருவாக்கப்பட்ட விதிகளை மீறுதலுக்காக குற்ற வழக்கைத் தொடங்குதல்; தொடர முயற்சித்தல்;

(8) சந்தைக் குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் வாரியத்தின்

துணைத்தலைவர் ஆகியோரின் தேர்தல்களை சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில்

நடத்துதலை உறுதி செய்தல்,

(9) சந்தைக் குழுவின் தலைவர் அல்லது துணைத் தலைவரின் பதவி விலகலை

ஏற்றுக் கொள்ளுதல்"

50-ஆம் பிரிவிற்கானத்

14. முதன்மைச் சட்டத்தின் 50 ஆம் பிரிவில் "சந்தைக்குழு" என்ற சொற்களுக்கு

திருத்தம்

மாற்றாக "சந்தைக்குழு அல்லது இயக்குநர், நேர்வுக்கேற்ப" என்ற சொற்கள் அமைக்கப்படுதல்

வேண்டும்.

52-ஆம் பிரிவிற்கானத்

15. முதன்மைச் சட்டத்தின் 52 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவிற்கு மாற்றாக பின்வரும்

திருத்தம்

உட்பிரிவு அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(1) இச்சட்டத்தின் அனைத்து அல்லது ஏதேனும் வகைமுறைகள் எதனையும்

நிறைவேற்றுவதற்காக அரசு விதிகளை உருவாக்கலாம்".

55-ஆம் பிரிவிற்கானத்

16. முதன்மைச் சட்டத்தின் 55 ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) உட்பிரிவு (1)-இல் "வாரியம்" என்ற சொல்லிற்கு மாற்றாக "வாரியம் அல்லது

இயக்குநர் " என்ற சொற்கள் அமைக்கப்படுதல் வேண்டும்.

(2) உட்பிரிவு (2)-இல்,-

(i) (a) கூறில் "சந்தைக்குழு" என்ற சொற்களுக்கு மாற்றாக "சந்தைக்குழு அல்லது

இயக்குநர்" என்ற சொற்கள் அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) (b) கூறில் "வாரியம்" என்ற சொற்களுக்கு மாற்றாக "வாரியம் அல்லது இயக்குநர்"

என்ற சொற்கள் அமைக்கப்படுதல் வேண்டும்.

57-ஆம் பிரிவிற்கானத்

17. முதன்மைச் சட்டத்தின் 57ஆம் பிரிவில் "வாரியம்" என்ற சொல்லிற்கு மாற்றாக

திருத்தம்.

"வாரியம் அல்லது இயக்குநர்" என்ற சொற்கள் அமைக்கப்படுதல் வேண்டும்.

58-ஆம் பிரிவிற்கானத்

18. முதன்மைச் சட்டத்தின் 58ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில் "இயக்குநர்" என்ற

திருத்தம்.

சொல்லிற்கு மாற்றாக "சந்தைக்குழு அல்லது இயக்குநர்" என்ற சொற்கள் அமைக்கப்படுதல்

வேண்டும்.

27

59-ஆம் பிரிவிற்கானத் 19. முதன்மைச் சட்டத்தின் 59ஆம் பிரிவானது அப்பிரிவின்

திருத்தம்.

(1) ஆம் உட்பிரிவாக மறு எண்ணிடப்படுதல்வேண்டும் மற்றும் அவ்வாறு (1) ஆம்

உட்பிரிவாக மறு எண்ணிட்ட பிறகு, பின்வரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும்,

அதாவது:-

"(2) தனியார் சந்தை முற்றம், தனியார் சந்தை துணை முற்றம், மின் வணிகம் அல்லது

நேரடி சந்தைப்படுத்துதலின் உரிமை பெற்றவரிடமிருந்து பெற வேண்டிய தொகையும் கட்டண

வழியாகவோ, அல்லது மற்ற வகையிலோ நிலுவையில் உள்ள நில வருவாயை திரும்பப்பெறும்

அதே முறையில் இச்சட்டத்தின் படி அல்லது விதிகளின்படி திரும்பப் பெறலாம்."

20. (1) 2020 ஆம் ஆண்டின் தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல்

தமிழ்நாடு அவசரச் சட்டம் 6/2020

(முறைப்படுத்துதல்) இரண்டாம் அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.

நீக்கறவு மற்றும் காப்புரை (2) அத்தகைய நீக்கறவு இருந்த போதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தால்

தமிழ்நாடு சட்டம் 27/1989

திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின் படி செய்யப்பட்ட எதுவும் அல்லது

எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்த சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான

மேற்சொன்ன அவசரச் சட்டத்தின் படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக்

கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

28 29

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு

அக்டோபர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத்

தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 32/2020

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள (மறைந்த) தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்

புரட்சித்தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்து வந்த "வேதா நிலையத்தை",

அறக்கட்டளையாக மாற்றுவதற்காக நீண்ட கால ஏற்பாடுகள் செய்து நினைவில்லத்தை

நிறுவுவதற்கும் அதனைப் பேணிக்காத்து மேலாண்மை செய்வதற்கும், அது தொடர்பான

அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்கும் வகை செய்வதற்கானதொரு

சட்டம்.

சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள, (மறைந்த) முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்கள் வசித்த இடமான "வேதா நிலையத்தை", தமிழ்நாடு மக்களுக்காக, அவர்களின் சாதனைகள் மற்றும் தியாகங்களின் நினைவாக,

நினைவிடமாக மாற்றப்படுவதற்கும் பொதுமக்களுக்காக திறக்கப்படுவதற்கும் 17.08.2017 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டதாலும்;

மற்றும் 2013ஆம் ஆண்டு, நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான இழப்பீடு மற்றும்

வெளிப்படையாக நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தச் சட்டத்தின்

(மத்திய சட்டம் 30/2013) கீழ் மாநில அரசால் மேற்சொன்ன நிலம் மற்றும் கட்டிடத்தை

கையகப்படுத்தப்பட்டுள்ளதாலும்;

மற்றும் மேற்சொன்ன நிலம் மற்றும் அறைகலன்கள், புத்தகங்கள், அணிகலன்கள்

முதலிய அசையும் பொருட்கள் உள்ளடங்கலான கட்டடம் போன்றவை மூன்று

ஆண்டுகளுக்கு மேலாக பயனற்று இருப்பதாலும்; அவை உரிய முறையில்

பராமரிக்கப்படாமலிருப்பதால் அவை சேதமடைவதிலிருந்தும் அழிவடைவதிலிருந்தும் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டியது அவசியமாக இருப்பதாலும்;

மற்றும் ஒரு அறக்கட்டளையை நிறுவுவதற்கும், அதனை ஒரு நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, நீண்டகால ஏற்பாடுகளைச் செய்து "வேதா நிலையத்தை" ஒப்படைக்கவும், அதனைப் பேணிக்காத்து பராமரிப்பதற்காக மாநில அரசிற்கு மேற்சொன்ன அசையும் பொருட்களை உடைமைமாற்றம் செய்வதற்கு மாநில அரசானது முடிவு செய்துள்ளதாலும்;

இந்திய குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டமானது, 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு புரட்சித்தலைவி டாக்டர்

தொடக்கம்.

ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளைச் சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) இது, 2020ஆம் ஆண்டு மே திங்கள் 22ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

2. இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,- பொருள் வரையறைகள்.

(a) "உரிமை கோரும் ஆணையர்" என்பது 10ஆம் பிரிவின் கீழ் நியமனம்

செய்யப்பட்ட உரிமை கோரும் ஆணையர் என்று பொருள்படும்;

(b) "அறக்கட்டளை" என்பது, 4-ஆம் பிரிவின் கீழ் நிறுவப்பட்ட புரட்சித்தலைவி

டாக்டர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை என்று பொருள்படும்;

(c) "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்;

(d) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது, இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட

விதிகளின் கீழ் வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்;

30

(e) "சொத்து" என்பது, சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள (மறைந்த) முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்கள் வசித்த இடமான "வேதா நிலையம்" ஆகும். மேலும் குறிப்பாக, இணைப்புப் பட்டியலின் பகுதி- அ-வில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் இணைப்புப் பட்டியலின் பகுதி-ஆ-வில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள், அறைகலன்கள், அணிகலன்கள் மாதிரியான அசையும் சொத்துக்கள் உள்ளடங்கலான மற்றும் பிற பொருட்கள் என்று பொருள்படும்;

(f) "இணைப்புப் பட்டியல்" என்பது, இந்தச் சட்டத்தின் இணைப்புப் பட்டியல்

என்று பொருள்படும்.

சொத்தின் உரிமை

மையச் சட்டம் 30/2013.

மாற்றம்.

3. (1) இணைப்புப் பட்டியலின் பகுதி-ஆ-வில் குறிப்பிடப்பட்டுள்ள அசையும் சொத்துக்கள் தொடர்பான நபர் எவரின் உரிமை, உரிமை மூலம் மற்றும் உரித்தமானது.

இந்தச் சட்டத்தின் காரணமாக அரசிடம் உரிமை மாற்றம் செய்யப்பட்டு அதனிடம்

உற்றமைந்திருத்தல் வேண்டும்.

(2) அரசானது, அறிவிக்கையின் வாயிலாக 2013ஆம் ஆண்டு நிலம்

கையகப்படுத்துவதில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையாக நிலம்

கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தச் சட்டத்தின்படி அரசினால் கையகப்படுத்தப்பட்ட இணைப்புப் பட்டியலில் பகுதி-அ-வில் குறிப்பிடப்பட்டுள்ள அசையாச் சொத்து மற்றும் பகுதி-ஆ-வில் குறிப்பிடப்பட்டுள்ள அசையும் சொத்துக்களை அறக்கட்டளைக்கு உரிமை மாற்றம் செய்யலாம்.

(3) அரசானது, இணைப்புப் பட்டியலின் பகுதி-ஆ-வில் குறிப்பிடப்பட்டுள்ள

அசையும் சொத்துக்களை மதிப்பீடு செய்து உரிமை கோரும் ஆணையரிடம் தொகையினை

வைப்பீடு செய்தல் வேண்டும்.

அறக்கட்டளையை

நிறுவுதல்.

4. (1) அரசானது, அறிவிக்கையின் வாயிலாக இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காக, புரட்சித்தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா அறக்கட்டளை என்று அழைக்கப்படும் ஒரு

நினைவு அறக்கட்டளையை நிறுவலாம்.

(2) அறக்கட்டளையானது, மேற்சொன்ன பெயரில் தொடர்ந்த நிலைப்பாடும், தனியுறு இலச்சினையும் கொண்டு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களாகிய

இரண்டையும் ஈட்டுவதற்கு, வைத்திருப்பதற்கு மற்றும் அயலடைவு செய்வதற்கான மற்றும்

ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான அதிகாரத்துடன் ஒரு கூட்டுருக்குழுமமாக இருத்தல்

வேண்டும் மற்றும் மேற்சொன்ன பெயரால் வழக்கிடுதலும், வழக்கிடப்படுதலும் வேண்டும்.

(3) அறக்கட்டளையானது பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல்

வேண்டும், அதாவது:-

(a) மாண்புமிகு முதலமைச்சர் -தலைவர்;

(b) மாண்புமிகு துணை முதலமைச்சர்;

(c) மாண்புமிகு அமைச்சர் (செய்தி மற்றும் விளம்பரம்) ;

(d) அரசு தலைமைச் செயலாளர்;

(e) நிதித்துறை அரசுச் செயலாளர் ;

(f) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர்;

(g) பொதுப்பணித்துறை, தலைமைப் பொறியாளர்(கட்டடங்கள்);

(h) அருங்காட்சியகத்தின் இயக்குநர்;

(i) (மறைந்த) முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையேற்றிருந்த அரசியல் கட்சியின்

உறுப்பினர்களுக்கிடையிலிருந்து, அக்கட்சியுடன் ஆலோசனை செய்து அரசால் நியமிக்கப்படக்கூடிய ஆறு உறுப்பினர்கள்;

31

(j) செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் - உறுப்பினர்

செயலாளர்.

(4) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்றாண்டுகள் ஆகும் மற்றும் அவர்கள் மறு நியமனத்திற்கு

தகுதியுடைவராகுதல் வேண்டும்.

(5) (a) அறக்கட்டளையானது,-

(i) இணைப்புப் பட்டியல் பகுதி-அ-வில் குறிப்பிடப்பட்டுள்ள அசையாச் சொத்துக்களை நல்ல நிலையில் நிர்வகிக்க மற்றும் மேலும் தேவைப்படும்போதெல்லாம் பழுதைச் சரிசெய்ய நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்;

(ii) இணைப்புப் பட்டியலின் பகுதி-ஆ-வில் குறிப்பிடப்பட்டுள்ள அசையும் சொத்துக்கள் அனைத்தையும் பராமரித்து பேணிக்காத்து பாதுகாத்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்;

(iii) சொத்தினைத் திருட்டு, தீ விபத்து அல்லது பிற சேதங்களிலிருந்து பாதுகாப்பதற்கு தகுதியானது என்று கருதும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்;

(iv) நினைவிடமாக சொத்துக்களை மாற்றம் செய்வதற்கான செயல்

திட்டம் தயாரித்தல் மற்றும் அதனை அரசின் ஒப்புதலுக்காக அனுப்புதல் வேண்டும்;

(v) 3ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் நினைவிடச் சொத்தினை அறக்கட்டளையாக உரிமை மாற்றம் செய்யும்போது சொத்தினை உரிமை மாற்றத்தின்

மற்றும் செயல்திட்டத்தின் ஒப்புதலுக்காகவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்;

(b) அறக்கட்டளையானது நன்கொடைகள் பெறவும் மற்றும் நபர் எவரிடமிருந்தும் அரசு உள்ளடலங்கலாக மானியங்கள் பெறவும் உரிமையுடையதாகும்

மற்றும் அது தக்கதெனக் கருதும் முறையில் நிதியைத் திரட்டுவதற்கும்

உரிமையுடையதாகும்.

ஊதியம் மற்றும் படிகள்.

5. அறக்கட்டளையின் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் ஊதியம் மற்றும் படிகள்

எவற்றையும் பெற உரிமையற்றவராவர்;

வரம்புரையாக, நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், வகுத்துரைக்கப் படலாகும்

அத்தகைய கட்டணம் மற்றும் படிகளைப் பெறுவர்.

கூட்டங்கள்.

6. (1) அறக்கட்டளையானது, தலைவரால் நிர்ணயிக்கப்படலாகும் அத்தகைய

நேரத்தில் ஆண்டிற்கொரு முறையாவது கூடுதல் வேண்டும்.

(2) அறக்கட்டளையின் கூட்டம் எதிலும் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும்,

வந்திருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மையினால் எடுக்கப்படுதல்

வேண்டும்.

வரம்புரையாக, வாக்குகள் சமமாக இருக்கும் நேர்வில், அறக்கட்டளையின் தலைவர்

அறுதி செய்யும் வாக்கினை அளிக்கலாம்.

7. அறக்கட்டளையின் செயல் அல்லது நடவடிக்கைகளானது,

அதன் உறுப்பினர்களிடையே ஏதேனும் காலியிடம் அல்லது அதன்

அமைத்துருவாக்கத்தில் ஏதேனும் குறைபாடு ஆகியவை இருப்பதன் காரணத்தினாலோ

மட்டுமே செல்லா நிலையது ஆகாது.

காலியிடங்கள் முதலியவை அறக்கட்டளையின் நடவடிக்கைகளை செல்லா நிலையதாக்காது.

32

8. (1) அரசானது, அறக்கட்டளை தலைவரின் கீழ் வகுத்துரைக்கப்படலாகும்

அல்லது தலைவரால் அவருக்கு ஒப்படைக்கப்படலாகும் அத்தகைய கடமையை

அறக்கட்டளையின் அலுவலர்கள்.

நிறைவேற்றுவதற்கும், அத்தகைய அதிகாரங்களைச் செலுத்துவதற்கும் அரசு இணைச்

செயலாளர் பதவிக்குக் குறையாத அலுவலர் ஒருவரை அறக்கட்டளைக்குச் செயலாளராக

நியமிக்கலாம்.

(2) செயலாளரின் பதவிக்காலம் மற்றும் பிற பணி நிபந்தனைகள் அத்தகைய

வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.

(3) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டுப்பாடுகள், வரையரைகள்

நிபந்தனைகளுக்குட்பட்டு அறக்கட்டளையானது அதன் செய்கடமைகளை திறம்பட

நிகழ்த்துவதற்காக தேவைப்படலாகும் அத்தகைய பிற அலுவலர்கள் மற்றும்

பணியாளர்களை பணியமர்த்தலாம்.

நிர்வாகக் குழு.

9. (1) அறக்கட்டளையின் அலுவல்களை நிர்வாகிக்கும் நோக்கத்திற்காக,

அறக்கட்டளையானது, கூட்டம் ஒன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நிர்வாகக்

குழுவை நியமித்து அத்தகைய தீர்மானத்தில் குறித்துரைக்கப்படலாகும் மற்றும் அத்தகைய

அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பணிகளை அவற்றிற்கு ஒப்படைக்கலாம்.

(2) அறக்கட்டளையானது, தீர்மானத்தின் மூலம், எந்தவொரு

நபரையும், அத்தகைய நபர், அறக்கட்டளையின் உறுப்பினராக இருந்தாலும்

இல்லாவிட்டாலும், நிர்வாகக் குழுவின் உறுப்பினராக நியமிக்கலாம் மற்றும் அவ்வப்போது,

இந்தப் பிரிவின் கீழ் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு தீர்மானத்தையும் வேறுபடுத்தலாம்

அல்லது ரத்து செய்யலாம்.

10. (1) அரசானது, பகுதி-ஆ-வில் குறிப்பிடப்பட்ட அசையும் சொத்துகளின் மீது நபர் எவரும் உரிமை கோருவதை முடிவு செய்யும் நோக்கத்திற்காக அறிவிக்கையின் வாயிலாக,

உரிமை கோரும் ஆணையரை நியமித்தல்.

ஓர் உரிமை கோரும் ஆணையரை நியமித்தல் வேண்டும்.

(2) உரிமை கோரும் ஆணையரானவர், உரிமை கோரிக்கைகளை

பெறுவதற்காகவும் முடிவு செய்வதற்காகவும் தன்னுடைய சுய நடைமுறையை

முறைப்படுத்தலாம்.

(3) கூறப்பட்ட அசையும் சொத்துக்களின் மீது உரிமை கோரும் நபர் எவரும்

(1) ஆம் உட்பிரிவின் கீழ் நியமனம் செய்யப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு

நாட்களுக்குள் உரிமை கோரும் ஆணையரிடம் கோரிக்கை ஒன்றினை வைக்கலாம்.

வரம்புரையாக, உரிமைகோருபவர் கூறப்பட்ட தொண்ணூறு நாட்களுக்குள்

உரிமை கோரிக்கை செய்வதிலிருந்து போதிய காரணத்தினால் தடுக்கப்பட்டிருந்தார் என

உரிமை கோரும் ஆணையர் மனநிறைவு அடைவாரானால், அவர் மேலும் அறுபது நாட்கள்

கால அளவிற்குள் உரிமை கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளலாம் மற்றும் அதன்பின்பு

உரிமைகோர முடியாது.

அறக்கட்டளையின்

மத்திய சட்டம் XLV 1860.

11. அறக்கட்டளையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அறக்கட்டளையின்

உரிமை கோரும் ஆணையர், செயலாளர் மற்றும் பிற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்,

இச்சட்டத்தின் ஏதேனும் வகைமுறைகளின் பின்பற்றுதலைச் செய்யும்போது அல்லது

தலைவர் உறுப்பினர்கள் முதலானோர் அரசுப் பணியாளர்கள் ஆவர்.

செய்ய முற்படும்போது, இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின்

பொருளின்படி அரசுப் பணியாளர்களாகக் கருதப்படுவர்.

அரசுப் பணியாளர்

12. உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும், இந்த

சட்டத்தின் கீழ் நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட எதற்காகவும்

அரசுப் பணியாளருக்கெதிராக, அவரின் அலுவல் கடமையாற்றுகையில் அல்லது அவரின்

அதிகாரங்களைச் செலுத்துகையில் தொடரப்படுதல் ஆகாது.

எவராலும் நல்லெண்ணத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.

விதிகளை செய்வதற்கான

13. (1) அரசானது, அறிவிக்கையின் வாயிலாக இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குச்

அதிகாரம்.

செயல்திறம் அளிப்பதற்காக விதிகளைச் செய்யலாம்.

33

(2) இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட விதிகள் மற்றும் பிறப்பிக்கப்பட்ட

அறிவிக்கைகள் அல்லது ஆணைகள் அனைத்தும்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல்

வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென

வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட

நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(3) இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட விதிகள் அல்லது பிறப்பிக்கப்பட்ட

அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும், அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது

பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல்

வேண்டும், மற்றும் அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடரின் காலமுடிவிற்கு முன்னர்

அல்லது அடுத்த கூட்டத் தொடரில் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது

ஆணை எவற்றிலும் பேரவை மாற்றம் எதையும் ஏற்படுத்தினால், அல்லது அவ்விதி

அல்லது அறிவிக்கை அல்லது ஆணை ஏற்படுத்தப்பட அல்லது வழங்கப்பட கூடாதென

பேரவையானது முடிவு செய்தால், அதன்பின்பு, அவ்விதி அல்லது அறிவிக்கை

அல்லது ஆணையானது, நேர்வுக்கேற்ப, அவ்வாறு மாற்றிய வடிவத்தில் செயல்வடிவம்

கொண்டிருத்தல் வேண்டும் அல்லது செயல்வடிவம் பெறாது போதல் வேண்டும்.

எனவே, எனினும், அவ்விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணையின் கீழ் முன்னதாக

செய்யப்பட்ட எவற்றின் செல்லுந்தன்மைக்கு ஊறுபயக்காதவாறு அத்தகைய மாற்றம்

அல்லது நீக்கம் இருத்தல் வேண்டும்.

இடர்பாடுகளை

நீக்குவதற்கான அதிகாரம்.

14. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயல்படுத்துவதில் இடர்பாடு எதுவும் எழுமானால், அரசானது, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணை ஒன்றின் மூலமாக இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில் இந்த

இடர்பாட்டை நீக்குவதற்குத் தேவையானதாகவோ அல்லது உகந்ததாகவோ தோன்றுகிற

அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்.

வரம்புரையாக, இந்தச் சட்டம் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள்

கால அளவு முடிவடைந்த பின்னர், அத்தகைய ஆணை எதுவும் பிறபிக்கப்படுதல் ஆகாது.

பணிப்புரைகளை 15. அரசானது, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு செயல்வடிவம் அளிப்பதற்காக

தனக்கு தக்கதெனத் தோன்றும் அத்தகைய பணிப்புரைகளை அவ்வப்போது வழங்கலாம்.

வழங்குவதற்கு அதிகாரம்.

தமிழ்நாடு அவசரச் சட்டம்

நீக்கறவு மற்றும் காப்புரை.

16. (1) 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு புரட்சித்தலைவி டாக்டர்

3/2020

ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு

செய்யப்படுகிறது.

(2) அத்தகைய நீக்கறவு இருந்தபோதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தின்படி

செய்யப்பட்ட எதுவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், அல்லது பிறப்பிக்கப்பட்ட கட்டளை

எதுவும் இச்சட்டத்தின்கீழ் செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாக அல்லது

பிறப்பிக்கப்பட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

34

இணைப்புப் பட்டியல்

(3ஆம் பிரிவைக் காண்க)

பகுதி –அ

அசையாச் சொத்து

வட்டம் மயிலாப்பூர்

நகரம் மயிலாப்பூர் I

வட்டார எண் மற்றும் நில வட்டார எண்.31, நில அளவை எண் 1567/50.

அளவை எண்

நகராட்சிக் கதவு எண் 36/81.

நிலத்தின் வகைப்பாடு இரயத்துவாரி மனை உரிமைத் துறப்பு வரி.

பரப்பளவு 0.22.60.0 ஹெக்டேர்

எல்லைகள் வடக்கு 1567/1

கிழக்கு 1567/1, 1567/63, 1567/64 மற்றும் 1567/43

தெற்கு 1567/73

மேற்கு 1567/1

கட்டமைப்புகள் 3 அடுக்கு கட்டடம் (தரைத்தளம் +2 தளங்கள்)

மரங்கள் மாமரங்கள்-2, பலாமரம்-1, தென்னை மரங்கள்-5, வாழை மரங்கள்-5

உரிமையாளர் (மறைந்த) முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா35

பகுதி - ஆ

அசையும் சொத்துக்கள்

வ.எண் இனங்களின் பெயர் மொத்த எண்ணிக்கை

1. தங்கம்

14 இனங்கள் = 4 கிலோ மற்றும்

372 கிராம்கள்.

2. வெள்ளி 867 இனங்கள்= 601 கிலோ மற்றும்

424 கிராம்கள்.

3. வெள்ளி இனங்கள் (சிறு பாத்திரங்கள்)

162 இனங்கள்

4. தொலைக்காட்சிகள்

11

5. குளிர்பதனப்பெட்டி

10

6. காற்று கட்டுப்பாட்டு கருவிகள் 38

7. அறைகலன் (சமையல் அறை அலமாரிகள் நீங்கலாக) 556

8. சமையலரைப் பாத்திரங்கள் 6514

9. சமையலரை அலமாரிகள் மற்றும் அறைகலன்கள் 12

10. வெட்டுக் கருவிகள் (காட்சிப்பெட்டி)

1055

11. பூஜைப் பாத்திரங்கள்

15

10438

12. துணி வகைகள்/துண்டுகள்/படுக்கை விரிப்பு/பிற துணி

வகைகள்/தலையணை உறைகள்/ திரைச்சீலைகள்/

காலணிகள்

13. தொலைபேசிகள்/கைபேசி

29

14. சமையலறை மின்சாதனப் பொருள்கள் 221

15. மின் தொடர்பு சாதனங்கள் 251

16. நூல்கள்

8376

17. நினைவுப் பரிசுகள்

394

18. உரிமம், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் வருமான வரி

653

அறிக்கை போன்ற ஆவணங்கள்

19. எழுது பொருட்கள்

253

20. அலங்கரிக்கப்பட்ட துணைப்பொருட்கள் 1712

21. சுமந்து செல்லும் பெட்டி (உடைப்பெட்டி)

65

22. அழகு சாதனப் பொருட்கள் 108

23. கடிகாரங்கள்

6

24. கெனான் நகலெடுக்கும் இயந்திரம் 2525

1

25. ஒளி அச்சுப்பொறி T 1588

1

26. இதர இனங்கள்

959

மொத்தம்

32721

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப் பிரிவு)த் துறை.

36 37

தமிழ்நாடு சட்டமன்றப் போரவையினால் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர்

திங்கள் 20 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத்

தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 33/2020

2009 - ஆம் ஆண்டு தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்தை மேலும்

திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின் வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு திருமணங்கள் பதிவு

தொடக்கம்.

செய்தல் (திருத்த)ச் சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

5 ஆம் பிரிவின் 2. 2009- ஆம் ஆண்டு தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்தின்

தமிழ்நாடு சட்டம்

திருத்தம். 21/2009.

5 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில் "அந்த திருமணம் நடைபெற்றுள்ள இடத்தின்" என்ற

சொற்றொடருக்கு பின்பு "அல்லது திருமணத்தின் ஒரு அல்லது இரு தரப்பினருக்கும்

தங்களின் நிரந்தரத் தங்குமிடத்தைக் கொண்டுள்ள அந்த அதிகார வரம்பிற்குள்" என்னும்

சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப் பிரிவு)த் துறை.

38 39

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 34/2020

அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் தகுதியான

மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும்

ஓமியோபதியில் இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கையில் முன்னுரிமை

வழங்குவதற்கான ஒரு சட்டம்.

1956ஆம் ஆண்டு இந்திய மருத்துவ குழுமச் சட்டம் (மையச் சட்டம் 102 / 1956),

நாடு முழுவதும் இளநிலை அளவிலான அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களில்

சேர்க்கைக்கான பொது நுழைவு தேர்வினை நடத்த ஆணையிடுகிறது என்பதாலும்;

அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் பொது நுழைவுத் தேர்வானது

எம்.பி.பி.எஸ் படிப்பின் சேர்க்கைக்கான தகுதித் தேர்வு மட்டுமே என்பதாலும்;

அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களின் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான

சேர்க்கையானது பொது நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்

மட்டுமே இருந்திட வேண்டுமென்பதாலும்;

அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தகுதித் தேர்வின் குறைந்த

மதிப்பெண்களால் எம்.பி.பி.எஸ் படிப்பின் சேர்க்கையில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான

இடங்களையே அடைந்துள்ளனர் என்பதாலும்;

நீதியரசர் பி.கலையரசன் (ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி) தலைமையின் கீழ்

மூத்த அலுவலர்கள் அடங்கிய ஆணையம் ஒன்று எம்.பி.பி.எஸ் படிப்பின் சேர்க்கையில்

அரசுப்பள்ளி மாணவர்களின் குறைவான எண்ணிக்கைக்கான காரணங்களை

மதிப்பீடு செய்ய மற்றும் பகுத்தாய்வதற்காக மற்றும் அரசுக்கு தீர்வு நடவடிக்கைகளை

அறிவுறுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டது என்பதாலும்;

சாதி, பெற்றோரின் தொழில், பெற்றோரின் கல்வி, பெற்றோரின் வருமானம், பாலினம் போன்ற அத்தகைய சமூக–பொருளாதார காரணிகளால் உருவாக்கப்பட்ட அறிவாற்றலின் இடைவெளியை கருத்தில் கொண்டு கூறப்பட்ட

ஆணையமானது, அரசுப்பள்ளி மாணவர்கள் தனிப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் மற்றும்

தனியார் பள்ளி மாணவர்களை ஒப்பிடுகையில் குறைபாடான நிலையிலுள்ளனர் என முடிவு

செய்தது மற்றும் இதனால், மாநில அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மேல்நிலை

படிப்பு வரையில் படித்து மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதியான

மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சேர்க்கையில்

பத்து விழுக்காடு இடங்கள் ஒதுக்கி வைக்க முடியுமென பரிந்துரை செய்தது என்பதாலும்;

கூறப்பட்ட ஆணையமானது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை தகுதிக்கான

அளவுகோலாக வகுத்துரைக்கப்பட்டுள்ள அனைத்து படிப்புகளுக்கும் மேற்சொன்ன

ஒதுக்கீடானது நீட்டிக்க முடியுமெனவும் பரிந்துரை செய்துள்ளது என்பதாலும்;

புரிந்து கொள்ளத்தக்க வேறுபாடாலான நியாயமான வகைபாட்டினை

அரசியலமைப்பின் 14 மற்றும் 15 ஆம் உறுப்புகள் அனுமதித்து மற்றும் அதன்மூலம்

சமமற்றவர்களுக்கு வேறுபாடான நடத்துமுறையை அனுமதிக்கிறது என்பதாலும்;

அரசானது, கூறப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை கவனமாகக் கருத்தில்

கொண்ட பின்பு, மாநில அரசுப் பள்ளிகளின் கூறப்பட்ட தேர்வில் தகுதியடைந்துள்ள

மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு

தகுதித் தேர்வாக வகுத்துரைக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் படிப்பு மற்றும் பிற மருத்துவ

படிப்புகளின் சேர்க்கையில் ஏழரை விழுக்காடு இடங்களை ஒதுக்க முடிவு செய்துள்ளது

என்பதாலும்;

இந்தியக் குடியரசின் எழுபத்து ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு இயற்றப்படுவதாகுக;

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின்

தொடக்கம்.

மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி

ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கு முன்னுரிமையின் அடிப்படையிலான சேர்க்கைச்

சட்டம் என வழங்கப் பெறும்.

40

(2) இது மாநில அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய

தேதி முதல் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பொருள் வரையறைகள். 2. இந்தச்சட்டத்தின் தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி.-

(a) 'அரசு' என்பது மாநில அரசு என்று பொருள்படும்.

(b) 'அரசு இடங்கள் ' என்பது ,-

(i) அனைத்து இந்திய ஓதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர, அரசு கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ்,

பி.யூ.எம்.எஸ் மற்றும் பி.எச்.எம்.எஸ். படிப்புகளில் அனைத்து இடங்கள் மற்றும்

(ii) சிறுபான்மையினர் அல்லாத கல்வி நிறுவனங்களில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.யூ.எம்.எஸ், மற்றும் பி.எச்.எம்.எஸ். படிப்புகளில் 65

விழுக்காடு இடங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 விழுக்காடு இடங்கள்

அல்லது அத்தகைய நிறுவனங்கள் மற்றும் அரசிற்கு இடையேயான கருத்தொற்றுமைக்கு

இணங்கிய வகையிலான இடங்கள் என்று பொருள்படும்;

(c) 'அரசுப்பள்ளிகள்' என்பது அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர்

சீர்திருத்தப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் மற்றும் அரசுத் துறைகளினால்

நிர்வகிக்கப்படும் பிற பள்ளிகள் ஆகியவற்றை உள்ளடக்கும் என்று பொருள்படும்;

(d) 'அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்' என்பது ஓர் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் மேல்நிலைப் பள்ளி படிப்பு வரை பயின்ற குழந்தைகள் மற்றும் தேசிய

தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதியானவர்கள் என்று பொருள்படும்.

மையச் சட்டம் 35/2009.

விளக்கம் - இந்த பொருள் வரையறையின் நோக்கத்திற்காக, 2009ஆம் ஆண்டு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் 12ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் (c) ஆம் கூறின்படி ஒரு குறிப்பிட்ட வகையிலான பள்ளி அல்லது ஓர் உதவி பெறாத பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்ற நலிவுற்ற பிரிவினர் மற்றும்

குறைபாடுடைய பிரிவினைச் சார்ந்த குழந்தைகள் மற்றும் அரசுப் பள்ளியில் மேனிலைப்

படிப்பு வரை மீதமுள்ள அனைத்து வகுப்புகளையும் பயின்ற மற்றும் தேசிய தகுதி மற்றும்

நுழைவுத்தேர்வில் தகுதிபெற்றவர்கள் 'அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களாக'

கருதப்படுதல் வேண்டும்;

(e) 'சிறுபான்மையினர் கல்வி நிறுவனம்' என்பது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வரையறைகளுக்குட்பட்டு, அரசால் அத்தகையவாறு அறிவிக்கப்பட்ட அல்லது

இசைவேற்பு பெற்ற ஒரு கல்வி நிறுவனம் என்று பொருள்படும்;

(f) 'எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.யூ.எம்.எஸ், மற்றும் பி.எச்.எம்.எஸ். படிப்புகள்' என்பது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளநிலை

பட்டம், பல் மருத்துவ அறுவை சிகிச்சையில் இளநிலை பட்டம், சித்த மருத்துவம் மற்றும்

அறுவை சிகிச்சையில் இளநிலை பட்டம், ஆயூர்வேத மருத்துவம் மற்றும் அறுவை

சிகிச்சையில் இளநிலை பட்டம், யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில்

இளநிலை பட்டம் மற்றும் ஒமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளநிலை

பட்டம் ஆகியவற்றின் முதலாம் ஆண்டு என்று பொருள்படும்;

மைய சட்டம் 102/1948 மைய சட்டம் xvi/1948 (g) 'தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு' என்பது முறையே 'எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.யூ.எம்.எஸ், மற்றும் பி.எச்.எம்.எஸ். ஆகிய

படிப்புகளுக்கான சேர்க்கைக்காக 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ குழுமச் சட்டம்,

1948ஆம் ஆண்டு பல் மருத்துவச் சட்டம், 1986 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ மைய குழும

(இந்திய மருத்துவத்தில் கல்வியின் குறைந்தபட்ச தரங்கள்) ஒழுங்குமுறை விதிகள் மற்றும்

1983ஆம் ஆண்டு ஓமியோபதி (பட்டப்படிப்பு) ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றின் கீழ்

பதவியமர்த்தப்பட்ட அதிகார அமைப்பினால் நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்

தேர்வு என்று பொருள்படும்.;

(h) 'தனியார் பள்ளி' என்பது ஓர் அரசுப் பள்ளி அல்லாத ஒரு பள்ளி என்று

பொருள்படும்.

41

முன்னுரிமை

அடிப்படையிலான சேர்க்கை.

3. தற்போது நடைமுறையிலுள்ள சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும் மற்றும் 5ஆம் பிரிவிற்குட்பட்டு, அரசு இடங்களின் ஏழரை விழுக்காடானது அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.

பாதிக்கப்படாத பிற இடங்களுக்காக போட்டியிடும் உரிமை.

4. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுடனிணைந்து. முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களைத் தவிர, அரசு இடங்களுக்காக போட்டியிட உரிமையுடையவராகுதல் வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான

இட ஒதுக்கீடு.

5. 3ஆம் பிரிவின் கீழ் முன்னுரிமையின் அடிப்படையிலான அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கையானது நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி இட ஒதுக்கீட்டினை பின்பற்றி செய்யப்படுதல் வேண்டும்.

முன்னுரிமை இடங்களை

நிரப்புதல்.

6. பிரிவு 3இல் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கான சேர்க்கைக்காக, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கையானது போதுமானதாக இல்லாதவிடத்து, அத்தகைய நிரப்பப்படாத இடங்களானது, தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுதல் வேண்டும்.

விதிகளைச் 7. (1) அரசு, அறிவிக்கையின் வாயிலாக, இந்தச் சட்டத்தின் ஏனுேம் நோக்கங்களை

நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.

செய்வதற்கான அதிகாரம்.

(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட அந்த நாளன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் அவை ஒரு குறிப்பிட்ட நாளன்று செயலாற்றலுக்கு வரும் என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட அந்த நாளான்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவைகளின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்டக் கூட்டத் தொடர் அல்லது அந்தக் கூட்டத் தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்ததைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஏதொன்றிலும் மாறுதல் எதையும் சட்டமன்றப் பேரவை செய்யுமாயின் அல்லது அந்த விதி அல்லது அறிவிக்கை செய்யப்படுதல் ஆகாது அல்லது பிறப்பிக்கப்படுதல் ஆகாது என சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின் அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்வுக்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும் அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம் எதுவும் அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை முன்னதாகச் செய்யப்பட்ட செயல் எதனின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.

இடர்பாடுகளை

நீக்குவதற்கான அதிகாரம்.

8. இந்தச் சட்டத்தின் ஏதேனும் வகைமுறைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இடர்பாடு ஏதேனும் எழுமானால், அரசு, தமிழ்நாடு அரசிதழில் ஆணை ஒன்றினை வெளியிடுவதன் மூலமாக, அந்த இடர்பாட்டை நீக்குவதற்காக தேவையானதென்று அல்லது உகந்ததென்று தனக்குத் தோன்றக் கூடிய, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக அல்லாத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்.

வரம்புரையாக, அத்தகைய ஆணை எதுவும், இந்தச் சட்டம் தொடங்கப்பட்ட

தேதியிலிருந்து இரண்டாண்டுகள் முடிவடைந்ததற்குப் பின்பு செய்யப்படுதல் ஆகாது.

கட்டளைகள்

வழங்குவதற்கான அதிகாரம்.

9. அரசு, அவ்வப்போது, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக, அது உகந்ததென்று கருதலாகும் அத்தகைய கட்டளைகளை பிறப்பிக்கலாம்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப் பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 09 December 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-12-09.Ordinary_50_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2020-12-09.Ordinary_50_Part-IV_Section-2-T-Sup.