© தமிழ்நாடு அரசு 2020
[விலை : ரூ. 0.80 காசுவிலை : ரூ. 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 52] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 23, 2020 மார்கழி 8, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2051
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
[அரசாணை (நிலை) எண்.181, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1H1))த் துறை நாள்: 10 நவம்பர் 2020.] தமிழ்நாடு 1970 ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்தலும் ஒழித்தலும்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 37/1970) 35 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1975 ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்தலும் ஒழித்தலும்) விதிகளில், பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 35 ஆம் பிரிவைச் சேர்ந்த, (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்,-
(1) 80 ஆம் விதிக்குப் பின்னர், பின்வரும் விதி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்,
அவையாவன:-
"80A. இந்த விதிகளில் என்ன சொல்லியிருப்பினும், அதனை கருத்தில் கொள்ளாமல், முதன்மை வேலையளிப்பவரால்/ ஒப்பந்ததாரரால் வைத்துவரப்பட வேண்டிய பதிவேடுகளும்் பதிவுருக்களும் மின்னணு வடிவத்திலும் வைத்துவரப்பட வேண்டும்''.
(2) 82 ஆம் விதியில், 2 ஆம் துணை விதியின் வரம்பு நிபந்தனையில், "தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகள்'' என்ற சொற்றொடருக்குப் பின்னர், "அல்லது தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு கட்டடம் மற்றும் ஏனைய கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்) விதிகளைச் சேர்ந்த 242 ஆம் விதியில் கோரியுள்ளவாறாக, அட்டவணை XIII-இன் கீழ், படிவம் XXV-இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை'' என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
முகமது நசிமுத்தின், முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
இ. சுபாமதி, இ. சுபாமதி,
இயக்குநர், (மு.கூ.பொ.) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
III-1a-(52) (T Sup)