Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Department

Published 23 December 2020

Type
Ordinary
Gazette no.
52
Part
Part II
Notifications
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT - Notifications
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2020-12-23.Ordinary_52_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2020

[விலை : ரூ. 0.80 காசு[விலை : ரூ. 0.80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 52] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 23, 2020 மார்கழி 8, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2051

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண்.182, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J2)த் துறை, 11 நவம்பர் 2020] தரவு பதிவு செயற்பாடுகளில் வேலைவாய்ப்பு தொடர்பாக (அரசு அல்லாத), 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 11/1948) கீழ், குறைந்தளவு ஊதிய வீதங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என தமிழ்நாட்டு ஆளுநர் கருதுவதால், 2. எனவே தற்போது மேற்சொன்ன சட்டத்தின் 27ஆம் பிரிவில் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன பிரிவில் கோரப்பட்டவாறாக, மேற்சொன்ன சட்டத்தின் விவர அட்டவணையின் பகுதி I-ல் மேற்சொன்ன வேலைவாய்ப்பினைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்திற்கான அறிவிப்பை இதனால் தெரிவிக்கிறார்.

3. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு முன்னர், உத்தேசிக்கப்பட்ட சேர்த்தல் தொடர்பாக, வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை, தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படும், மறுப்புரை அல்லது கருத்துரை, ஏதேனுமிருப்பின், அதனை சென்னை - 600 006, தேனாம்பேட்டை என்ற முகவரியிலுள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக, சென்னை - 600 009, தலைமைச் செயலகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, அரசு கூடுதல் தலமைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

இ. சுபாமதி,இ. சுபாமதி, இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP-II-2-(52) (T Sup)—1

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 23 December 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-12-23.Ordinary_52_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2020-12-23.Ordinary_52_Part-II_Section-2-T-Sup.