©
GOVERNMENT OF TAMIL NADU 2020
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Rs. 6.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 53] CHENNAI, WEDNESDAY, DECEMBER 30, 2020
Margazhi 15, Saarvari, Thiruvalluvar Aandu–2051
Part VI—Section 2
Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.Pages.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை
தமிழ்நாடு மின்சார வழங்கல் விதித்தொகுப்பிற்கான திருத்தம். .. .. 234-236234-236 தமிழ்நாடு மின்சார வழங்கல் விதித்தொகுப்பிற்கான திருத்தம். .. ..
தமிழ்நாடு மின்சார பகிர்மான விதித்தொகுப்பிற்கான திருத்தம் .. 236&247236&247 தமிழ்நாடு மின்சார பகிர்மான விதித்தொகுப்பிற்கான திருத்தம் ..
GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS
Loss of Certifi cates Loss of Certifi cates
.. .. .. .. .. 248248 .. .. .. .. ..
[233]
DTP—VI-2 (53)[Part VI—Sec. 2 234 TAMIL NADU GOVERNMENT GAZETTE
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை
தமிழ்நாடு மின்சார வழங்கல் விதித்தொகுப்பிற்கான திருத்தம்
(ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டதன் தமிழாக்கம்)
(16-07-2020 நாளிட்ட அறிவிக்கை எண்.த.மி.ஒ.ஆ/மின்.வ.வி.தொ/7-43)
(20-07-2020 நாளிட்ட கடித எண்.த.மி.ஒ.ஆ/சட்டம்/1950/2020)
(Lr.No.TNERC/Legal/2690/D.No. 1298/2020)
No.VI(2)/68/2020.
2003ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 36/2003) 50ஆம் பிரிவுடன் சேர்த்துப் படிக்கப்படும் 181ஆம் சட்ட பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மற்றும் இதன்பொருட்டு அதனை இயல்விக்கும் அனைத்துப் பிற அதிகாரங்களையும் செலுத்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வழங்கல் விதித்தொகுப்பிற்கான பின்வரும் திருத்தங்களை இதன்மூலம் செய்கிறது. அதன்வரைவு மேற்சொன்ன 181 ஆம் பிரிவின் (3)ஆம் உட்பிரிவின்படி கோரப்பட்டவாறு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்
மேற்சொன்ன மின்வழங்கல் விதித்தொகுப்பில் 5 ஆம் ஒழுங்குமுறைவிதியின் (6)ஆம் உள் ஒழுங்குமுறைவிதியில் (3)ஆம் கூறுக்கும் பதிலாக பின்வரும் கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது :-
3 (1) வேளாண்மின்னிணைப்பு அல்லாத பிற, மின் இணைப்புகளில் கதவு எண் அல்லது துணை கதவு எண் அல்லது நில அளவைப் புல எண் மாற்றுதல் உள்ளடங்கலான காரணங்களுக்காக தற்போதுள்ள மின்னிணைப்பினை இடமாற்றம் செய்தல் புதிய மின்னிணைப்பாகவே கருதப்படும்.
2 (i) தற்போதுள்ள வேளாண் மின்னிணைப்பினை இடமாற்றம் செய்தல், உரிமதாரரின் அதிகார எல்லைக்குள் அனுமதிக்கப்படலாம்; இருந்துவரும் இடத்திலிருந்து பிரித்தெடுப்பதற்கான கட்டணங்கள் மற்றும் இடமாற்றம் செய்தல் பொருட்டு புதியதாக உத்தேசிக்கப்பட்ட இடத்தில் நிறுவுவதற்கான கட்டணங்கள் வைப்புத்தொகை பங்களிப்புப்பணி அடிப்படையில் நுகர்வோரால் ஏற்கப்பட வேண்டும்.
(ii) தற்போது இணைப்பில் உள்ள வேளாண்மின்னிணைப்பினை இடமாற்றம் செய்தல் பின்வரும் நிபந்தனைகளின்படி மட்டுமே பரிசீலிக்கப்படுதல் வேண்டும்:-
(அ) இருந்து வரும் இடத்திலிருந்து மின்னிணைப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து அல்லது முந்தைய இடமாற்றம் செய்திருந்தால் அந்த தேதியிலிருந்து ஓஓராண்டிற்குப் பின்பே இடமாற்றம் செய்தல் அனுமதிக்கத்தக்கதாகும்;
(ஆ) விண்ணப்பதாரர், தற்போதுள்ள கிணறு மற்றும் கிணற்றிலுள்ள மின்னிணைப்பின் உடைமையுரிமை மற்றும் உத்தேசிக்கப்பட்ட இடத்திலுள்ள கிணற்றின் உடைமையுரிமை உடையவராக இருத்தல் வேண்டும்;
(இ) கூட்டு உரிமையாளருக்கு(களுக்கு)ச் சொந்தமாக தற்போதுள்ள கிணறு தனிப்பட்ட மின்னிணைப்பு(கள்) கொண்டிருக்க வேண்டும். தற்போதுள்ள கிணறு கூட்டு உரிமையாளருக்கு(களுக்கு)ச் சொந்தமானதாக இருந்து, ஆனால் கூட்டு உரிமையாளருக்கு(களுக்கு) தனித்தனி மின்னிணைப்பு(கள்) இல்லாதிருக்குமானால், கூட்டு உரிமையாளரின்(களின்) சம்மதம் பெறப்பட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
(ஈ) தற்போதுள்ள கிணறு மற்றும் மின்னிணைப்பு, விண்ணப்ப தேதியன்று விண்ணப்பதாரர்(களுக்கு) உரிமையுடையதாக இருக்க வேண்டும்; மேலும், புதிய இடத்திற்கு மின்னிணைப்பு இடமாற்றம் செய்யப்படும் தேதிவரையில் அவை தொடர்ந்து விண்ணப்பதாரர்(களுக்கு) சொந்தமானதாக இருத்தல் வேண்டும்;
(iii) மின் இணைப்பு இடமாற்றம், நுகர்வோர் முன் வைக்கும் காரணங்களைப் பொருட்படுத்தாமல் பரிசீலிக்கப்படும்.
(iv) கிணறு / ஆழ்குழாய்க்கிணறு தற்போது இல்லையெனினும் இடமாற்றம் செய்ய பரிசீலிக்கப்படும்.
(v) கிணறு மற்றும் மின்னிணைப்பினைத் தக்கவைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட நிலம் வேளாண் அல்லாத பிற தேவைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தால் கூட மின்னிணைப்பு இடமாற்றம் பரிசீலிக்கப்படும்.
(vi) மின்னிணைப்பு இடமாற்றத்திற்கான கோரிக்கை மனுவானது, தமிழ்நாடு மின்சார பகிர்மான விதித்தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ள III ஆம் பின்னிணைப்பின் படிவம் 2 லான புதிய விண்ணப்பத்துடனும், தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் பதிவுக்கட்டணத்துடன் சேர்ந்து விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
(vii) உத்தேசிக்கப்பட்ட புதிய இடத்தில் பணி செய்யப்படுவதற்கு முன்பு, விண்ணப்பதாரர் மின்னிணைப்பு இடமாற்றத்திற்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்; மற்றும் நீர் இறைப்பியை உரிய நிறுவுகையோடு புதிய இடத்தில் மின்வழங்கலை பெறுவதற்கு நிறுவுதல் வேண்டும்; மற்றும் புதிய இடத்திற்கான மின்பகிர்மான உரிமதாரருடன் தமிழ்நாடு மின்சார பகிர்மான விதித்தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 6 இல் உள்ள ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். இது முடிந்தவுடன், உரிமதாரர் பணியை முடித்து, மின்சாரம் வழங்கி, சோதனை அறிக்கையை அளித்தல் வேண்டும்.
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சென்னை-600 032, சு. சின்னராஜலு, 2020 டிசம்பர் 14. செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
Dec. 30, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 235விளக்கவுரை
தற்போதைய மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான முந்தைய தமிழ்நாடு மின்சார வாரியத்தில், மிக நீண்ட காலத்திற்கு முன்பு வேளாண் மின்னிணைப்பு இடமாற்றத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மற்றும் அது தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த விதித்தொகுப்பில் வேளாண் மின்னிணைப்பின் இடமாற்றலுக்கான எளிய நடைமுறையை உருவாக்குவதும் அதனை ஒரே மாதிரியாக உரிய நேரத்தில் நிறைவேற்றுவதுமாக ஏற்ற நடைமுறைகளை பொருத்தமான திருத்தங்களை செய்வதன் மூலம் அவசியமாகிறது.
இந்தத் திருத்தங்கள் மேற்கண்ட முடிவிற்கு செயல்விளைவு கொடுக்க விழைகிறது.
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சென்னை-600 032, சு. சின்னராஜலு, 2020 டிசம்பர் 14. செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
இருந்துவரும் வகைமுறை மற்றும் திருத்தத்தை உள்ளடக்கிய வகைமுறையைக் காட்டுகின்ற விவரவுரை
தமிழ்நாடு மின்சார வழங்கல் விதித்தொகுப்பு
| வரிசை எண். | இருந்துவரும் வகைமுறை | திருத்தத்தை உள்ளடக்கிய வகைமுறை |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1. | 5.பல்வகை கட்டணங்கள்:- (1) *** (2) *** (3) *** (4) *** (5) *** (6) (1) *** (2) *** ( 3 ) மி ன் னி ை ண ப் பு க் க ா ன இடமாற்றத்தில் கதவிலக்கமோ, கதவுத் துணையிலக்கமோ, நில அளவைப் புல எண்ணோ fi eld number) (survey மாறினால், அந்நிகழ்வு புதுமின்னிணைப்பு தருவதற்கு நிகராகக் கருதப்பட வேண்டும். | 5.பல்வகை கட்டணங்கள்:- (1) *** (2) *** (3) *** (4) *** (5) *** (6) (1) *** (2) *** (3) (1) வேளாண்மின்னிணைப்பு அல்லாத பிற, மின் இணைப்புகளில் கதவு எண் அல்லது துணை கதவு எண் அல்லது நில அளவைப் புல எண் மாற்றுதல் உள்ளடங்கலான காரணங்களுக்காக தற்போதுள்ள மின்னிணைப்பினை இடமாற்றம் செய்தல் புதிய மின்னிணைப்பாகவே கருதப்படும். 2 (i) தற்போதுள்ள வேளாண் மின்னிணைப்பினை இடமாற்றம் செய்தல், உரிமதாரரின் அதிகார எல்லைக்குள் அனுமதிக்கப்படலாம்; இருந்துவரும் இடத்திலிருந்து பிரித்தெடுப்பதற்கான கட்டணங்கள் மற்றும் இடமாற்றம் செய்தல் பொருட்டு புதியதாக உத்தேசிக்கப்பட்ட இடத்தில் நிறுவுவதற்கான கட்டணங்கள் வைப்புத்தொகை பங்களிப்புப்பணி அடிப்படையில் நுகர்வோரால் ஏற்கப்பட வேண்டும். (ii) தற்போது இணைப்பில் உள்ள வேளாண்மின்னிணைப்பினை இடமாற்றம் செய்தல் பின்வரும் நிபந்தனைகளின்படி மட்டுமே பரிசீலிக்கப்படுதல் வேண்டும்:- (அ) இருந்து வரும் இடத்திலிருந்து மின்னிணைப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து அல்லது முந்தைய இடமாற்றம் செய்திருந்தால் அந்த தேதியிலிருந்து ஓஓராண்டிற்குப் பின்பே இடமாற்றம் செய்தல் அனுமதிக்கத்தக்கதாகும்; (ஆ) விண்ணப்பதாரர், தற்போதுள்ள கிணறு மற்றும் கிணற்றிலுள்ள மின்னிணைப்பின் உடைமையுரிமை மற்றும் உத்தேசிக்கப்பட்ட இடத்திலுள்ள கிணற்றின் உடைமையுரிமை உடையவராக இருத்தல் வேண்டும்; (இ) கூட்டு உரிமையாளருக்கு(களுக்கு)ச் சொந்தமாக தற்போதுள்ள கிணறு தனிப்பட்ட மின்னிணைப்பு(கள்) கொண்டிருக்க வேண்டும். தற்போதுள்ள கிணறு கூட்டு உரிமையாளருக்கு(களுக்கு)ச் சொந்தமானதாக இருந்து, ஆனால் கூட்டு உரிமையாளருக்கு(களுக்கு) தனித்தனி மின்னிணைப்பு(கள்) இல்லாதிருக்குமானால், கூட்டு உரிமையாளரின்(களின்) சம்மதம் பெறப்பட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். |
| (ஈ) தற்போதுள்ள கிணறு மற்றும் மின்னிணைப்பு, விண்ணப்ப தேதியன்று விண்ணப்பதாரர்(களுக்கு) உரிமையுடையதாக இருக்க வேண்டும்; மேலும், புதிய இடத்திற்கு மின்னிணைப்பு இடமாற்றம் செய்யப்படும் தேதிவரையில் அவை தொடர்ந்து விண்ணப்பதாரர்(களுக்கு) சொந்தமானதாக இருத்தல் வேண்டும்; (iii) மின் இணைப்பு இடமாற்றம், நுகர்வோர் முன் வைக்கும் காரணங்களைப் பொருட்படுத்தாமல் பரிசீலிக்கப்படும். (iv) கிணறு / ஆழ்குழாய்க்கிணறு தற்போது இல்லையெனினும் இடமாற்றம் செய்ய பரிசீலிக்கப்படும். (v) கிணறு மற்றும் மின்னிணைப்பினைத் தக்கவைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட நிலம் வேளாண் அல்லாத பிற தேவைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தால் கூட மின்னிணைப்பு இடமாற்றம் பரிசீலிக்கப்படும். (vi) மின்னிணைப்பு இடமாற்றத்திற்கான கோரிக்கை மனுவானது, தமிழ்நாடு மின்சார பகிர்மான விதித்தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ள III ஆம் பின்னிணைப்பின் படிவம் 2 லான புதிய விண்ணப்பத்துடனும், தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் பதிவுக்கட்டணத்துடன் சேர்ந்து விண்ணப்பிக்கப்பட வேண்டும். (vii) உத்தேசிக்கப்பட்ட புதிய இடத்தில் பணி செய்யப்படுவதற்கு முன்பு, விண்ணப்பதாரர் மின்னிணைப்பு இடமாற்றத்திற்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்; மற்றும் நீர் இறைப்பியை உரிய நிறுவகையோடு புதிய இடத்தில் மின்வழங்கலை பெறுவதற்கு நிறுவுதல் வேண்டும்; மற்றும் புதிய இடத்திற்கான மின்பகிர்மான உரிமதாரருடன் தமிழ்நாடு மின்சார பகிர்மான விதித்தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 6 இல் உள்ள ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். இது முடிந்தவுடன், உரிமதாரர் பணியை முடித்து, மின்சாரம் வழங்கி, சோதனை அறிக்கையை அளித்தல் வேண்டும். |
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சென்னை-600 032, சு. சின்னராஜலு, 2020 டிசம்பர் 14. செயலாளர்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
தமிழ்நாடு மின்சார பகிர்மான விதித்தொகுப்பிற்கான திருத்தம்
(16-07-2020 நாளிட்ட அறிவிக்கை எண்.த.மி.ஒ.ஆ/மின்.ப.வி.தொ/8-27)
(20-07-2020 நாளிட்ட கடித எண்.த.மி.ஒ.ஆ/சட்டம்/1960/2020)
(Lr.No.TNERC/Legal/2690/D.No. 1298/2020)
No.VI(2)/69/2020.
2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 36/2003) 46 ஆம் பிரிவுடன் சேர்த்துப்படிக்கப்படும் 181 ஆம் சட்ட பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மற்றும் இதன்பொருட்டு அதனை இயல்விக்கும் அனைத்துப் பிற அதிகாரங்களையும் செலுத்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வழங்கல் விதித்தொகுப்பிற்கான பின்வரும் திருத்தங்களை இதன்மூலம் செய்கிறது. மேற்சொன்ன 181 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்படி கோரப்பட்டவாறு அதன் வரைவு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்
மேற்சொன்ன மின்சாரபகிர்மான விதித்தொகுப்பில் –
(1) 27 ஆம் ஒழுங்குமுறை விதியின் இருந்துவரும் (2) ஆம் உள் ஒழுங்குமுறை விதி, (2) ஆம் உள் ஒழுங்குமுறை விதியின் (அ) கூறாக மறு எண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் மறு எண்ணிடப்பட்டு காணப்படும்.
(அ) கூறுக்குப் பின்பு, பின்வரும் உள் ஒழுங்குமுறை விதிகள் சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
(ஆ) விண்ணப்பம் முறைப்படியானதாக இருக்கும்போது, அது பதிவு அலுவலரால் வரிசை கிரம எண்ணோடு பதிவு செய்தல் வேண்டும் மற்றும் விண்ணப்பதாரரிடமிருந்து எழுத்து வடிவில் உரிய முறையிலான ஒப்புகையைப் பெற்று அவர் வரிசை கிரம எண்ணோடு பதிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை விண்ணப்பதாரருக்குத் தெரிவித்தல் வேண்டும்.
Dec. 30, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 237(இ) விண்ணப்பதாரரின் முறை, வரிசை கிரம எண் வரிசையில் வரும்போது, உரிமதாரர், கிணற்றின் மற்றும் நிலத்தின் உடைமையுரிமை குறித்து விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், நில அளவைப் புல எண்கள் ஆகியவை அந்தத்தேதியில் மாறாமல் உள்ளதா என்று கண்டறிவதற்கு விண்ணப்பதாரருக்கு 90 நாட்கள் அறிவிப்பு வழங்குதல் வேண்டும். அறிவிப்பைப் பெற்றுக் கொண்டதற்காக விண்ணப்பதாரரிடமிருந்து உரிய ஒப்புகையைப் பெற்று பாதுகாத்தல் வேண்டும். நீர் இறைப்பி (motor), மின்கொண்மி (capacitor) ஆகியவை இந்த நிலையில் வற்புறுத்தப்படமாட்டாது விண்ணப்பதாரரிடமிருந்து விவரங்களைப் பெற்றதன் பேரில், பிரிவு அலுவலர், விவரங்களை உறுதி செய்வதற்காக கள ஆய்வு செய்தல் வேண்டும்; மற்றும் பிரிவு அலுவலகத்தில் உள்ள ஆயத்த நிலைப் பதிவேட்டில் அந்த விவரங்களைப் பதிதல் வேண்டும். ஆயத்த நிலைப் பதிவேட்டில் விவரங்களைப் பதிவு செய்யும் தேதி மதிப்பீட்டைத் தயார் செய்வதற்கு உண்டான வரிசை கிரம எண்ணாக கடைபிடிக்கப்படும்.
(ஈ) உடைமையாளரின் பெயரில் மற்றும் / அல்லது நில அளவைப் புல எண், நிலத்தின் அளவு, கிணற்றின் / ஆழ்குழாய்க் கிணற்றின் இடமாற்றம் எதிலும் மாற்றம் இருக்குமானால், புதிய விண்ணப்பம் அளிக்கப்படுதல் வேண்டும். மாற்றத்திற்கு அவசியமான ஒப்புதலளிப்பு, பதிவு செய்யும் அலுவலரால் இசைவளிக்கப்படுதல் வேண்டும். அதன்பின்பு, பிரிவு அலுவலர் இடத்தை ஆய்வு செய்து, அந்த விவரங்களை ஆயத்தநிலை பதிவேட்டில் பதிதல் வேண்டும்.
(உ) விண்ணப்பதாரர் அல்லது தற்போதைய உரிமையாளர், அறிவிப்புக் கால அளவிற்குள் மேற்கூறிய விவரங்களை அளிக்க இயலாதிருப்பாரானால், பதிவு செய்யும் அலுவலரிடமிருந்து காலநீட்டிப்புப் பெறலாம். நீட்டிக்கப்படும் காலம், அறிவிப்புப் பெற்றத் தேதியிலிருந்து அதிகபட்சகால அளவான ஐந்தாண்டுகள் வரை வழங்கப்படலாம். நீட்டிப்புக் காலத்திற்காக விண்ணப்பதாரரால் கோரிக்கை மனு எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், பகிர்மான உரிமதாரர், ஐந்தாண்டுகள் கால அளவிற்கு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை செல்லுபடியாகவுள்ளதாக வைத்திருத்தல் வேண்டும். ஐந்தாண்டுகள் முடிந்தவுடன், அந்த விண்ணப்பம் செல்லாது போனதாகவும், ரத்து செய்யப்பட்டதாகவும் கருதப்படும்.
(ஊ) உரிமதாரர், ஒவ்வொரு நேர்விலும் உள்ளாகக்கூடிய பணியின் மதிப்பீடு செய்து பின்வரும் மூன்று வகைகளின் கீழ் அந்தப் பணியினைப் பிரித்து, ஒவ்வொருவகையின் கீழும் முன்னுரிமைப்பட்டியலைத் தயாரித்து பிரிவு அலுவலகத்தில் உள்ள முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும்.
வகை 1 – மின்னிணைப்பு மட்டும்;
மின்தொடர் நீட்டிப்பு / மேம்பாடு / மின்மாற்றி கொள்திறனை அதிகரித்தல் / புதிய மின்பகிர்மான மின்மாற்றியை நிறுவுதல், போன்ற எதையும் உள்ளடக்காத பணி.
வகை 2 – சிறியளவு நீட்டிப்பு;
மின்தொடர் நீட்டிப்பு / மேம்பாடு அல்லது இரண்டினையும் உள்ளடக்கிய, மின்பகிர்மான மின்மாற்றியை உள்ளடக்காத பணி.
வகை 3 – பெரியளவு நீட்டிப்பு;
புதிய மின்பகிர்மான மாற்றியின் கொள்திறன் அதிகரித்தல் / புதிய மின்மாற்றி நிறுவுதல் உள்ளடக்கிய மின் தொடருடன் இணைந்த பணி.
(எ) 'மின்னிணைப்பு மட்டும்' வகையில் பணி எதுவும் ஈடுபடாததினால், உரிமதாரர், மின்கொண்மியுடனான நீர் இறைப்பியை நிறுவி உரிமதாரரிடம் ஒப்பந்தம் எழுதிக்கொடுத்து மின்சாரம் பெறுவதற்கு, இந்த வகை முன்னுரிமை வரிசையில் நுகர்வோராகக்கூடிய வாய்ப்புடையவருக்கு 30 நாட்கள் அறிவிப்பை வழங்குவார்.
சிறிய மற்றும் பெரிய நீட்டிப்புகளின் வகைகளை பொருத்தமட்டில், மின்சாரம் பெறுவதற்குரிய 30 நாட்கள் அறிவிப்பு ஒவ்வொரு வகையின் முன்னுரிமை வரிசையிலும், பணி நிறைவடைந்த பின்பு வழங்கப்படும்.
மேற்கூறிய அறிவிப்பு நீர் இறைப்பி, மின்கொண்மி ஆகியவை, இந்தியச் தர நிர்ணய நிறுவனம் (Bureau of Indian Standard) / ஆற்றல் திறன் நிறுவனம் (Bureau of Energy Effi ciency) இவற்றால் சான்றளிக்கப்பட்ட / ஒப்புதலளிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் எனவும் மற்றும் உற்பத்திசெய்தவரின் பெயர் பொறிப்புத்தகட்டில் இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் (ISI) குறியீடு, மதிப்பீடு மற்றும் திறன் முதலியவை அதன் மீது நிரந்தரமாக பதிக்கப்பட்டிருக்க வேண்டும், எனவும் குறித்துரைக்க வேண்டும்.
(ஏ) மின் இணைப்பு வேண்டிய நுகர்வோர், அறிவிப்புக்கால அளவிற்குள் மின்வழங்கலை பயன்படுத்தத் தவறுவாரானால், இரண்டாம் அறிவிப்பு அதிகபட்சம் ஐந்து மாதக் கால அளவிற்குள் மின்வழங்கலைப் பெற்றுக்கொள்ளுமாறு வழங்கப்படும். முதல் அறிவிப்பு பெற்ற தேதியிலிருந்து ஒட்டுமொத்தமாக ஆறுமாத கால அளவிற்குள் மின்வழங்கல் பயன்படுத்தப்படவில்லை என்றால், தடுக்க முடியாத வலுக்கட்டாய நிலையின் பொருட்டுதவிர, உரிமதாரரின் மூலதனத்தினால் நிறுவப்பட்ட பணிகள் பிறபணிகளில் நன்மையுடையதாகப் பயன்படுத்துவதற்கு பிரித்தெடுக்கப்படும். சம்பந்தப்பட்ட விண்ணப்பம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
(ஐ) நுகர்வோராகக்கூடிய வாய்ப்புடையவர், அறிவிப்பு கால அளவிற்குள் அவருக்கு நிறுவுகையை நிறுவி மின்வழங்கலை பெறுவதற்கு அவருடைய ஆயத்த நிலை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும்; மற்றும் நீர் இறைப்பி மற்றும் மின்கொண்மி பற்றிய விவரங்களை அளித்தல் வேண்டும். இந்த விதித்தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ள III ஆம் பின்னிணைப்பின் 7 ஆம் படிவத்திலுள்ள ஒப்பந்தத்தை எழுதிக்கொடுத்தல் வேண்டும்.
(ஒ) நுகர்வோராகக்கூடிய வாய்ப்புடையவரிடமிருந்து ஆயத்த நிலை அறிக்கை பெற்றவுடன், மின்பகிர்மான உரிமதாரர், சோதனை அறிக்கையை பெற்று மூன்று நாட்களுக்குள் நிறுவுகைக்கு மின்சாரம் வழங்குதல் வேண்டும். சோதனை அறிக்கையின் நகல் ஒன்று, மனையிடத்திலேயே நுகர்வோருக்கு வழங்கப்படும்.
(ஓ) மாவட்டக் குற்றவியல் நடுவர் / மாவட்ட ஆட்சியருக்குச் சுட்டியனுப்பப்பட்ட வழி உரிமை பூசல்கள் அல்லது நீதிமன்றத்தில் நடப்பிலுள்ள வழக்கு அல்லது நிலைப்பயிர்கள், நீர்தேங்கியிருத்தல் போன்ற கள நிலவரத்தை பொறுத்து,[Part VI—Sec. 2 238 TAMIL NADU GOVERNMENT GAZETTE உரிமதாரர், ஏதேனும் வகைகளின் முன்னுரிமையை தற்காலிகமாக புறக்கணிக்கலாம்; மற்றும் முன்னுரிமைப்பட்டியலின் படி மற்றவர்களுக்கு மின்சாரம் வழங்கலாம். மேற்கூறிய தடை தீர்வு செய்யப்பட்டவுடன் தலையாய முன்னுரிமையின் பேரில், புறக்கணிக்கப்பட்டவருக்கு மின்சாரம் வழங்குதல் வேண்டும்.
விளக்கம் :–மேலே குறிப்பிடப்பட்ட நடைமுறையானது, வழக்கமான வேளாண் வகை விண்ணப்பங்களுக்கானதாகும். உரிமதாரர், மேற்கூறிய ஒழுங்குமுறை விதியில் குறிப்பிடப்பட்ட பொதுவான நடைமுறை நிபந்தனைகளை பிற வேளாண் வகைகளுக்கும் தனித்தனியான நடைமுறையை உருவாக்க வேண்டும்.
(II) 29 ஆம் ஒழுங்குமுறை விதியின் (2) ஆம் உள்-ஒழுங்குமுறை விதியானது, (2) ஆம் உள்-ஒழுங்குமுறை விதியின் (அ) கூறாக மறு எண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் மறு எண்ணிடப்பட்டு காணப்படும் (அ) கூறுக்குப் பின்பு, பின்வரும் உள்- ஒழுங்குமுறை விதிகள் சேர்க்கப்படுத்தல் வேண்டும்; அவையாவன:-
"(ஆ) கிணறுகள் / ஆழ்குழாய்க் கிணறுகள், தனித்தனியாக வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ள நிலையில், ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் / ஆழ்குழாய்க் கிணற்றிலிருந்தும் நீர்பாசனம் செய்ய வேண்டிய நிலத்தின் பரப்பளவு குறைந்தது 0.5 ஏக்கராக இருக்கும் பட்சத்தில், ஒரு நில அளவை புல எண்ணில் அல்லது பிரிக்கப்பட்ட ஒரு புல எண்ணில், ஒரு நபருக்கு ஒவ்வொரு கிணற்றிற்கும் / ஆழ்குழாய் கிணற்றிற்கும் ஒரு வேளாண் மின் இணைப்பு வழங்கலாம்.
(இ) கூட்டு உரிமைதாரர்கள் ஒரு மின் இணைப்பிற்கு குறைந்த பட்சம் 0.5 ஏக்கர் நீர்பாசன நிலத்தினை சொந்தமாக கொண்டிருக்கும் பட்சத்தில், ஒரு நில அளவைப் புல எண்ணில் அல்லது பிரிக்கப்பட்ட ஒரு புல எண்ணில் அமைந்துள்ள ஒரே கிணற்றில் / ஆழ்குழாய் கிணற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வேளாண் மின் இணைப்பை கூட்டு சொந்தக்காரர்(கள்) பெயரில்(ர்களில்) வழங்க அனுமதிக்கப்படும்.
(ஈ) வேளாண் மின்னிணைப்பு உள்ள கிணறு / ஆழ்குழாய்க் கிணற்றிலிருந்து, வேளாண்மை அல்லாத பிற உபயோகத்திற்கு நீர் இறைக்க, அந்தந்த உபயோகத்திற்கு பொருத்தமான வீதப்பட்டியலின் கீழ் தனியான மின் இணைப்பு வழங்கலாம்.
(உ) ஒரு வேளாண் மின் இணைப்பில், இணைப்பு முறை மாற்றல் (change over switch) மூலம், மற்றொரு கிணறு / ஆழ்குழாய்க் கிணற்றிலிருந்து, நீர் இறைப்பி–விசைக்குழாய் (motor-pump set) அல்லது நீர் இறைப்பி – காற்றமுக்கி (mo- tor – compressor set) மூலமாக நீர் இறைப்பதற்கு வேளாண் மின் இணைப்பு மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படும்; நிபந்தனையாக, ஒரே சமயத்தில், நீர் இறைப்பியையோ (motor) அல்லது நீர் இறைப்பி–விசைக்குழாய் (motor-pump set) அல்லது நீர் இறைப்பி–காற்றமுக்கி (motor – compressor set) இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும், அனுமதிக்கப்பட்ட மின் பளுவிற்குள், வேளாண் சம்பந்தப்பட்ட உபயோகங்களுக்காக உபயோகிக்க வேண்டும்.
இணைப்பு முறை மாற்றல் விசைக்கான கோரிக்கைக் கடிதம் பெற்ற பதினைந்து நாட்களுக்குள், மின் பகிர்மான ஆய்வு செய்யப்பட்டு, முத்திரையிடப்பட்டு, சோதனை அறிக்கை பெறப்பட்டு, ஒப்புதலளிப்பு அளிக்கப்படும். நீர் இறைப்பி (motor) / மின் கொண்மி (capacitor) விவரங்கள் தவிர இதர ஆவணங்கள் வற்புறுத்தப்படமாட்டாது. ஒரு வேளை, உரிமதாரர் மேற்சொன்ன கால அளவிற்குள் ஒப்புதலளிப்பு வழங்கவில்லை எனில், விண்ணப்பதாரர், உரிமதாரரிடமிருந்து பெறப்பட வேண்டிய ஒப்புதலளிப்பு நடப்பிலிருக்கையில், தன்னுடைய அவசரத் தேவைக்காக, இணைப்பு முறை மாற்றலை பயன்படுத்திக் கொள்ளலாம். நுகர்வோர், இந்த நோக்கத்திற்காக செய்யும் கூடுதல் மின் தொடர் இணைப்புகளில், தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்த வேண்டும். நுகர்வோர் தன்னுடைய தேவைக்காக எந்த நேரத்திலும் மேற் கூறப்பட்ட நோக்கங்கள் அனைத்திற்கும் இணைப்பு முறை மாற்றல் மூலம் மின் வழங்கலைப் பயன்படுத்தலாம்.
(III) 31 ஆம் ஒழுங்குமுறை விதியின், (2) ஆம் உள்-ஒழுங்குமுறைவிதிக்குப் பின்பு பின்வரும் (2அ) உள்-ஒழுங்குமுறை விதி சேர்க்கப்படும், அதாவது :-
" (2 அ) வாய்ப்புடைய வேளாண் நுகர்வோருக்கு வழங்க வேண்டிய, மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு இந்த விதித்தொகுப்பின் 27 ஆம் ஒழுங்குமுறை விதியின் (2) ஆம் உள்-ஒழுங்குமுறை விதியிலுள்ள வகைமுறைகளின் படி இருக்கும்.
(IV) III ஆம் பின்னிணைப்பின் படிவம் -2க்குப்பதிலாக, பின்வருமாறு மாற்றப்படுகிறது,
அதாவது:-
வேளாண் மின் இணைப்பு விண்ணப்ப படிவம் (ஒழுங்குமுறைவிதி 27(2) பார்க்க)
பெறுநர்
குறிப்பிட்ட பதவிப் பொறியாளர் (குறிப்பிட்ட பதவி பொறியாளரின் அலுவலக முகவரி)
அலுவலக உபயோகத்திற்கு மட்டும் பதிவு எண் : பதிவுத் தேதி : பதிவுக்கட்டண எண். மற்றும் தேதி : வரைவு காசோலை எண். மற்றும் தேதி : பதிவு செய்யும் அதிகாரியின் கையொப்பம் :
1. விண்ணப்பதாரர்(கள்) பெயர்(கள்) தந்தை பெயருடன் /பெயர்களுடன் (விண்ணப்பதாரர்(கள்) பாஸ்போர்ட் அளவு புகைப்படம்(ங்கள்) இணைக்கவும்) :
2. விண்ணப்பதாரர்(கள்) முகவரி(கள்) அஞ்சல் குறியீடுடன் :
Dec. 30, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 2393. தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி / கைபேசி : எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி (இருப்பின்)
4. தேவைப்படும் மோட்டர் பம்புசெட்டின் குதிரைத்திறன் :
5. கிணற்றின் உரிமையாளர் ஒருவர் மட்டும் தானா? : ஆம் / இல்லை*
இல்லையென்றால், பங்குதாரர்களின் பெயர்கள், அவர்களுடைய தந்தை பெயர்கள் மற்றும் கிணற்றின் பங்கு சதவீதம் :
வரிசை எண். பெயர் தந்தை பெயர் கிணற்றின் பங்கு சதவீதம்
6. கிணறு / ஆழ்குழாய்க் கிணறு மற்றும் நிலத்திற்கான : உரிமைச் சான்று, நிலத்தின் புல எண்(கள்), நிலபரப்பு, கிராமம், வட்டம், மாவட்டம் போன்ற விவரங்களுடன்
கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் உரிமைச் சான்றிதழ் : இணைக்கப்பட்டுள்ளது (குறிப்பு: வேறு ஆவணங்கள் கேட்க அவசியமில்லை. தேவைப்பட்டால் விண்ணப்ப பதிவு அலுவலர் கூடுதல் ஆவணங்களை தகுந்த காரணங்களுக்காக கேட்கலாம்)
7. அ. கிணற்றின் உரிமையாளர்கள் / சட்ட ரீதியான வாரிசுதாரர்கள் : ஆம் / இல்லை* இணைந்து விண்ணப்பித்திருக்கிறீர்களா?
ஆ. இல்லையெனில், கூட்டு பங்குதாரர்(கள்) / வாரிசுதாரர்(கள்) : ஆம் / இல்லை* சம்மத கடிதம் இணைக்கப்பட்டுள்ளதா?
இ. இல்லையெனில் பிணை முறிவுப் பத்திரம் இணைக்கப்பட்டுள்ளதா? : ஆம்
8. அ. நிலத்தின் புல எண் / புல எண்கள் (ஒன்றுக்கு மேற்பட்ட புல எண்கள் இருந்தால்)
ஆ. நிலம் தொடர்ச்சியாக உள்ளதா? : ஆம் / இல்லை*
இ. இல்லையெனில், தடையில்லா சான்று / வழித்தட அனுமதி : ஆம் இணைக்கப்பட்டுள்ளதா?
ஈ. மின் இணைப்பு கோரும் கிணறு / ஆழ்குழாய்க் கிணறு உள்ள : நில புல எண்
உ. பாசனம் செய்வதற்கான நிலப்பரப்பு (குறைந்த பட்சம் 0.5 ஏக்கர்) :
ஊ. கிராமத்தின் பெயர் :
எ. வட்டத்தின் பெயர் :
ஏ. மாவட்டத்தின் பெயர் :
9. அரசுத்துறையின் தடையில்லாச் சான்று தேவைப்படுகிறதா? : ஆம் / இல்லை*
ஆம் எனில், தடையில்லாச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா? : ஆம்
10. அ. விண்ணப்பத்திருக்கும் நிலத்தில் வேறு கிணறு உள்ளதா? : ஆம் / இல்லை*
ஆ. ஆம் எனில், அந்தக் கிணற்றில் மின் இணைப்பு உள்ளதா? : ஆம் / இல்லை*
இ. ஆம் எனில், மின் இணைப்பின் விவரங்கள்
பெயர்
:
மின் இணைப்பின் எண், நில புல எண் : மற்றும் மின்பகிர்மானம்[Part VI—Sec. 2 240 TAMIL NADU GOVERNMENT GAZETTE மோட்டார் பம்புசெட்டின் குதிரைத்திறன், வீதப்பட்டியல் :
பிரிவு அலுவலகம் :
11. அ. தற்போது மின் இணைப்பு கோரும் கிணற்றில் ஏற்கனவே வேறு மின் இணைப்பு உள்ளதா? : ஆம் / இல்லை*
ஆ. ஆம் எனில், அதன் விவரங்கள்
பெயர்
:
மின் இணைப்பு எண், நில புல எண்
:
மற்றும் பகிர்மானம்
மோட்டார் பம்புசெட்டின் குதிரைத்திறன், வீதப்பட்டியல் :
பிரிவு அலுவலகம்
:
12. விண்ணப்பதாரர் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை : ஆம் / இல்லை* மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் விண்ணப்பதாரருக்கு சொந்தமான எந்த மின் இணைப்பிலாவது நிலுவையில் உள்ளதா?
ஆம் எனில், மின் இணைப்பு எண், வீதப்பட்டியல், பகிர்மானம் மற்றும் பிரிவு அலுவலகம் :
குறிப்பு: ஆம் / இல்லை* இவற்றில் தேவையற்ற வார்த்தையின் மேல் கோடிடவும்
நான் / நாங்கள், மேலே கொடுத்துள்ள அனைத்து விவரங்களும் நான் / நாங்கள் அறிந்த வரை உண்மை என உறுதியளிக்கிறேன்/றோம்.
தேதி : விண்ணப்பதாரர்(கள்) கையொப்பம் இடம் : பெயர்(கள்)
இணைப்பு : 1. ________(வரிசை எண் 6 ன்படி)
2. ________( வரிசை எண்.7 ன்படி பொருந்தும் பட்சத்தில்)
3. ________( வரிசை எண்.8 ன்படி பொருந்தும் பட்சத்தில்)
4. ________( வரிசை எண்.9 ன்படி பொருந்தும் பட்சத்தில்)
உரிமதாரரின் பயன்பாட்டிற்கு மட்டும்
ஒப்புகை
விண்ணப்பதாரரின் பெயர் :
முகவரி :
பெற்ற தேதி :
சுட்டுகை எண் :
மின்வழங்கல் வகை :
மின்பகிர்மான உரிமதாரரின் கையொப்பம் மற்றும் முத்திரை
பெயர் மற்றும் பதவிப்பெயர் (தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சென்னை-600 032. சு. சின்னராஜலு, 2020 டிசம்பர் 14. செயலாளர்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
Dec. 30, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 241விளக்கவுரை
வேளாண் விண்ணப்பங்களின் தற்போதைய நடைமுறைகள் செயல்முறைக்கு ஏற்றதாகவும் உகந்ததாகவும் இல்லை. அதிக அளவு எண்ணிக்கையிலான ஆவணங்களைக் கோருதல் விண்ணப்பம் செய்யும் நடைமுறையானது எளிதில் கையாள முடியாத நிலையிலுள்ளது. மேலும், உரிமதாரர் வேளாண் விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பு வழங்கும், தொடக்க நிலையிலேயே நீர் இறைப்பியை ஆயத்தநிலை பற்றி அறிக்கை செய்யுமாறு கோரப்படுகிறது. பெரும்பாலான நேர்வுகளில் முன்னுரிமையைப் பேணுவதற்கு அத்தகைய அறிவிப்பு வழங்க பல ஆண்டுகள் ஆன பின்பே பணி எடுத்துக்கொள்ளப்பட்டு முடிக்கப்படுகிறது. விண்ணப்பதாரரால் நீர் இறைப்பியின் ஆயத்தநிலை பற்றி அறிக்கை அளிப்பதற்கும் உரிமதாரரால் மின்வழங்கலை செயற்படுத்துவதற்குமிடையே நீண்ட இடைவெளி இருந்து வருகிறது. இவ்வாறாக, நீர் இறைப்பியை மிகுந்த பொருட்செலவில் வாங்கிய பிறகும், அவர் மின் வழங்கல் பெறும்வரையில் பல ஆண்டுகள் அவற்றை உபயோகமில்லாமல் வைத்திருக்கும் நிலை உள்ளது.
மேலும், விண்ணப்பதாராகக் கூடிய வாய்ப்புடையவர் பணி முடிவடைந்த பின்பு, உரிய காலத்தில் மின்வழங்கலைப் பயன்படுத்தாதிருப்பாரானால், உரிமதாரரால் நிறுவப்பட்ட மின்மாற்றிகள் மற்றும் மின்தொடர்களுக்காக செய்யப்படும் மூலதனத்தை நலன் தருமாறு பயன்படுத்துவது தொடர்பான நிபந்தனைகள் எவையும் இல்லை. இது உரிமதாரர் தரப்பில் உபயோகமற்ற முதலீடாக விளைவாகிறது.
மேற்கூறிய தேவைப்பாடுகள், வேளாண் விண்ணப்பங்களை பதிவு செய்கையில் ஏற்ற மற்றும் நிலையான நடைமுறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் நலன்கருதி மின்பகிர்மான விதித்தொகுப்பில் பொருத்தமான திருத்தங்களை செய்வதன் மூலம் அவற்றின் வழிமுறையைச் செயற்படுத்துவதற்கு எளிமையான நடைமுறையாக உருவாக்குதல், அவசியமாகிறது.
இந்தத் திருத்தம் மேற்சொன்ன முடிவிற்கு செயல் விளைவு கொடுக்க விழைகிறது.
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சென்னை-600 032. சு. சின்னராஜலு, 2020 டிசம்பர் 14. செயலாளர்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
இருந்துவரும் வகைமுறை மற்றும் திருத்தத்தை உள்ளடக்கிய வகைமுறையைக்காட்டுகின்ற விவரவுரை
தமிழ்நாடு மின்சார பகிர்மான விதித்தொகுப்பு
இருந்துவரும் வகைமுறை திருத்தத்தை உள்ளடக்கிய வகைமுறை
வரிசை எண்
27.மின்னாற்றலை வழங்குவதற்கான கோரிக்கைகள்:- 27. மின்னாற்றலை வழங்குவதற்கான கோரிக்கைகள்:-
(1) * * * * * *
(1) * * * * * *
(2) வேளாண்மை வகையின மின் வழங்கல்:
(3) (அ) வேளாண்மை வகையின மின் வழங்கல்:
வேளாண்மை வகையின மின் வழங்கலுக்கு, பின்னிணைப்பு– III இல் உள்ள படிவம் -2 இல் விண்ணப்பத்தைத் தரவேண்டும். வேளாண்மை வகையினத்தைப் பொருத்தவரையில் (சட்டத்தின் 86 ஆம் சட்டப்பிரிவில் உள்ள துணைப்பிரிவு (4) இன்படி) இப்பொருள் தொடர்பாகத் தேசிய மின்சாரக் கொள்கை வழிகாட்டுதலையும், சட்டத்தின் 108 ஆவது சட்டப்பிரிவில் உள்ள துணப்பிரிவு (1) இன்படி, மாநில அரசு பொதுமக்கள் நலங்கருதி வெளியிடும் கொள்கை நெறிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
வேளாண்மை வகையின மின் வழங்கலுக்கு, பின்னிணைப்பு–III இல் உள்ள படிவம்-2 இல் விண்ணப்பத்தைத் தரவேண்டும். வேளாண்மை வகையினத்தைப் பொருத்தவரையில் (சட்டத்தின் 86 ஆம் சட்டப்பிரிவில் உள்ள துணைப்பிரிவு (4) இன்படி) இப்பொருள் தொடர்பாகத் தேசிய மின்சாரக் கொள்கை வழிகாட்டுதலையும், சட்டத்தின் 108 ஆவது சட்டப்பிரிவில் உள்ள துணப்பிரிவு (1) இன்படி, மாநில அரசு பொதுமக்கள் நலங்கருதி வெளியிடும் கொள்கை நெறிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
(ஆ) விண்ணப்பம் முறைப்படியானதாக இருக்கும்போது, அது பதிவு அலுவலரால் வரிசை கிரம எண்ணோடு பதிவு செய்தல் வேண்டும் மற்றும் விண்ணப்பதாரரிடமிருந்து எழுத்து வடிவில் உரிய முறையிலான ஒப்புகையைப் பெற்று அவர் வரிசை கிரம எண்ணோடு பதிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை விண்ணப்பதாரருக்குத் தெரிவித்தல் வேண்டும்.
(இ) விண்ணப்பதாரரின் முறை, வரிசை கிரம எண் வரிசையில் வரும்போது, உரிமதாரர், கிணற்றின் மற்றும் நிலத்தின் உடைமையுரிமை குறித்து விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், நில அளவைப் புல எண்கள் ஆகியவை அந்தத்தேதியில் மாறாமல் உள்ளதா என்று கண்டறிவதற்கு விண்ணப்பதாரருக்கு 90 நாட்கள்[Part VI—Sec. 2 242 TAMIL NADU GOVERNMENT GAZETTE அறிவிப்பு வழங்குதல் வேண்டும். அறிவிப்பைப் பெற்றுக் கொண்டதற்காக விண்ணப்பதாரரிடமிருந்து உரிய ஒப்புகையைப் பெற்று பாதுகாத்தல் வேண்டும். நீர் இறைப்பி (motor), மின்கொண்மி (capacitor) ஆகியவை இந்த நிலையில் வற்புறுத்தப்படமாட்டாது. விண்ணப்பதாரரிடமிருந்து விவரங்களைப் பெற்றதன் பேரில், பிரிவு அலுவலர், விவரங்களை உறுதி செய்வதற்காக கள ஆய்வு செய்தல் வேண்டும்; மற்றும் பிரிவு அலுவலகத்தில் உள்ள ஆயத்த நிலைப் பதிவேட்டில் அந்த விவரங்களைப் பதிதல் வேண்டும். ஆயத்த நிலைப் பதிவேட்டில் விவரங்களைப் பதிவு செய்யும் தேதி மதிப்பீட்டைத் தயார் செய்வதற்கு உண்டான வரிசை கிரம எண்ணாக கடைபிடிக்கப்படும்.
(ஈ) உடைமையாளரின் பெயரில் மற்றும் / அல்லது நில அளவைப் புல எண், நிலத்தின் அளவு, கிணற்றின் / ஆழ்குழாய்க் கிணற்றின் இடமாற்றம் எதிலும் மாற்றம் இருக்குமானால், புதிய விண்ணப்பம் அளிக்கப்படுதல் வேண்டும். மாற்றத்திற்கு அவசியமான ஒப்புதலளிப்பு, பதிவு செய்யும் அலுவலரால் இசைவளிக்கப்படுதல் வேண்டும். அதன்பின்பு, பிரிவு அலுவலர் இடத்தை ஆய்வு செய்து, அந்த விவரங்களை ஆயத்தநிலை பதிவேட்டில் பதிதல் வேண்டும்.
(உ) விண்ணப்பதாரர் அல்லது தற்போதைய உரிமையாளர், அறிவிப்புக் கால அளவிற்குள் மேற்கூறிய விவரங்களை அளிக்க இயலாதிருப்பாரானால், பதிவு செய்யும் அலுவலரிடமிருந்து காலநீட்டிப்புப் பெறலாம். நீட்டிக்கப்படும் காலம், அறிவிப்புப் பெற்றத் தேதியிலிருந்து அதிகபட்சகால அளவான ஐந்தாண்டுகள் வரை வழங்கப்படலாம். நீட்டிப்புக் காலத்திற்காக விண்ணப்பதாரரால் கோரிக்கை மனு எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், பகிர்மான உரிமதாரர், ஐந்தாண்டுகள் கால அளவிற்கு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை செல்லுபடியாகவுள்ளதாக வைத்திருத்தல் வேண்டும். ஐந்தாண்டுகள் முடிந்தவுடன், அந்த விண்ணப்பம் செல்லாது போனதாகவும், ரத்து செய்யப்பட்டதாகவும் கருதப்படும்.
(ஊ) உரிமதாரர், ஒவ்வொரு நேர்விலும் உள்ளாகக்கூடிய பணியின் மதிப்பீடு செய்து பின்வரும் மூன்று வகைகளின் கீழ் அந்தப் பணியினைப் பிரித்து, ஒவ்வொருவகையின் கீழும் முன்னுரிமைப்பட்டியலைத் தயாரித்து பிரிவு அலுவலகத்தில் உள்ள முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும்.
வகை 1 – மின்னிணைப்பு மட்டும்;
மின்தொடர் நீட்டிப்பு / மேம்பாடு / மின்மாற்றி கொள்திறனை அதிகரித்தல் / புதிய மின்பகிர்மான மின்மாற்றியை நிறுவுதல், போன்ற எதையும் உள்ளடக்காத பணி.
வகை 2 – சிறியளவு நீட்டிப்பு;
மின்தொடர் நீட்டிப்பு / மேம்பாடு அல்லது இரண்டினையும் உள்ளடக்கிய, மின்பகிர்மான மின்மாற்றியை உள்ளடக்காத பணி.
வகை 3 – பெரியளவு நீட்டிப்பு;
புதிய மின்பகிர்மான மாற்றியின் கொள்திறன் அதிகரித்தல் / புதிய மின்மாற்றி நிறுவுதல் உள்ளடக்கிய மின் தொடருடன் இணைந்த பணி (எ) 'மின்னிணைப்பு மட்டும்' வகையில் பணி எதுவும் ஈடுபடாததினால், உரிமதாரர், மின்கொண்மியுடனான நீர் இறைப்பியை நிறுவி உரிமதாரரிடம் ஒப்பந்தம் எழுதிக்கொடுத்து மின்சாரம் பெறுவதற்கு, இந்த வகை முன்னுரிமை வரிசையில் நுகர்வோராகக்கூடிய வாய்ப்புடையவருக்கு 30 நாட்கள் அறிவிப்பை வழங்குவார்.
Dec. 30, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 243சிறிய மற்றும் பெரிய நீட்டிப்புகளின் வகைக- ளை பொருத்தமட்டில், மின்சாரம் பெறுவதற்குரிய 30 நாட்கள் அறிவிப்பு ஒவ்வொரு வகையின் முன்னுரிமை வரிசையிலும், பணி நிறைவடைந்த பின்பு வழங்கப்படும்.
மேற்கூறிய அறிவிப்பு நீர் இறைப்பி, மின்கொண்மி ஆகியவை, இந்தியச் தர நிர்ணய நிறுவனம் (Bureau of Indian Standard) / ஆற்றல் திறன் நிறுவனம் (Bureau of Energy Effi ciency) இவற்றால் சான்றளிக்கப்பட்ட / ஒப்புதலளிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் எனவும் மற்றும் உற்பத்திசெய்தவரின் பெயர் பொறிப்புத்தகட்டில் இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் (ISI) குறியீடு, மதிப்பீடு மற்றும் திறன் முதலியவை அதன் மீது நிரந்தரமாக பதிக்கப்பட்டிருக்க வேண்டும், எனவும் குறித்துரைக்க வேண்டும்.
(ஏ) மின் இணைப்பு வேண்டிய நுகர்வோர், அறிவிப்புக்கால அளவிற்குள் மின்வழங்கலை பயன்படுத்தத் தவறுவாரானால், இரண்டாம் அறிவிப்பு அதிகபட்சம் ஐந்து மாதக் கால அளவிற்குள் மின்வழங்கலைப் பெற்றுக்கொள்ளுமாறு வழங்கப்படும். முதல் அறிவிப்பு பெற்றத் தேதியிலிருந்து ஒட்டுமொத்தமாக ஆறுமாதங்கள் கால அளவிற்குள் மின்வழங்கல் பயன்படுத்தப்படவில்லை என்றால், தடுக்க முடியாத வலுக்கட்டாய நிலையின் பொருட்டுதவிர, உரிமதாரரின் மூலதனத்தினால் நிறுவப்பட்ட பணிகள் பிறபணிகளில் நன்மையுடையதாகப் பயன்படுத்துவதற்கு பிரித்தெடுக்கப்படும். சம்பந்தப்பட்ட விண்ணப்பம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
(ஐ) நுகர்வோராகக்கூடிய வாய்ப்புடையவர், அறிவிப்பு கால அளவிற்குள் அவருக்கு நிறுவுகையை நிறுவி மின்வழங்கலை பெறுவதற்கு அவருடைய ஆயத்த நிலை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும்; மற்றும் நீர் இறைப்பி மற்றும் மின்கொண்மி பற்றிய விவரங்களை அளித்தல் வேண்டும். இந்த விதித்தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ள IIIIII ஆம் பின்னிணைப்பின் 7 ஆம் படிவத்திலுள்ள ஆம் பின்னிணைப்பின் 7 ஆம் படிவத்திலுள்ள ஒப்பந்தத்தை எழுதிக்கொடுத்தல் வேண்டும். ஒப்பந்தத்தை எழுதிக்கொடுத்தல் வேண்டும்.
( ஒ ) நு க ர் ே வ ா ர ா க க் கூ டி ய வ ா ய் ப் பு ை ட ய வ ரி ட மி ரு ந் து ( ஒ ) நு க ர் ே வ ா ர ா க க் கூ டி ய வ ா ய் ப் பு ை ட ய வ ரி ட மி ரு ந் து ஆயத்த நிலை அறிக்கை பெற்றவுடன், மின்பகிர்மான ஆயத்த நிலை அறிக்கை பெற்றவுடன், மின்பகிர்மான உரிமதாரர், சோதனை அறிக்கையை பெற்று மூன்று உரிமதாரர், சோதனை அறிக்கையை பெற்று மூன்று நாட்களுக்குள் நிறுவுகைக்கு மின்சாரம் வழங்குதல் நாட்களுக்குள் நிறுவுகைக்கு மின்சாரம் வழங்குதல் வேண்டும். சோதனை அறிக்கையின் நகல் ஒன்று, வேண்டும். சோதனை அறிக்கையின் நகல் ஒன்று, மனையிடத்திலேயே நுகர்வோருக்கு வழங்கப்படும். மனையிடத்திலேயே நுகர்வோருக்கு வழங்கப்படும்.
(ஓ) மாவட்டக் குற்றவியல் நடுவர் / மாவட்ட ஆட்சியருக்குச் (ஓ) மாவட்டக் குற்றவியல் நடுவர் / மாவட்ட ஆட்சியருக்குச் சு ட் டி ய னு ப் ப ப் ப ட் ட வ ழி உ ரி ை ம பூ ச ல் க ள் அ ல் ல து சு ட் டி ய னு ப் ப ப் ப ட் ட வ ழி உ ரி ை ம பூ ச ல் க ள் அ ல் ல து நீ தி ம ன் ற த் தி ல் ந ட ப் பி லு ள் ள வ ழ க் கு அ ல் ல து நீ தி ம ன் ற த் தி ல் ந ட ப் பி லு ள் ள வ ழ க் கு அ ல் ல து நி ை ல ப் ப யி ர் க ள் , நீ ர் ே த ங் கி யி ரு த் த ல் ே ப ா ன் ற க ள நி ை ல ப் ப யி ர் க ள் , நீ ர் ே த ங் கி யி ரு த் த ல் ே ப ா ன் ற க ள நி ல வ ர த் ை த ெ ப ா று த் து , உ ரி ம த ா ர ர் , ஏ ே த னு ம் நி ல வ ர த் ை த ெ ப ா று த் து , உ ரி ம த ா ர ர் , ஏ ே த னு ம் வ ை க க ளி ன் மு ன் னு ரி ை ம ை ய த ற் க ா லி க ம ா க வ ை க க ளி ன் மு ன் னு ரி ை ம ை ய த ற் க ா லி க ம ா க புறக்கணிக்கலாம்; மற்றும் முன்னுரிமைப்பட்டியலின் புறக்கணிக்கலாம்; மற்றும் முன்னுரிமைப்பட்டியலின் ப டி ம ற் ற வ ர் க ளு க் கு மி ன் ச ா ர ம் வ ழ ங் க ல ா ம் . ப டி ம ற் ற வ ர் க ளு க் கு மி ன் ச ா ர ம் வ ழ ங் க ல ா ம் . மேற்கூறிய தடை தீர்வு செய்யப்பட்டவுடன்மேற்கூறிய தடை தீர்வு செய்யப்பட்டவுடன் தலையாய முன்னுரிமையின் பேரில், புறக்கணிக்கப்பட்டவருக்கு மின்சாரம் வழங்குதல் வேண்டும்.
விளக்கம் :–மேலே குறிப்பிடப்பட்டநடைமுறையானது, வழக்கமான வேளாண் வகை விண்ணப்பங்களுக்கானதாகும். உரிமதாரர், மேற்கூறிய ஒழுங்குமுறை விதியில் குறிப்பிடப்பட்ட பொதுவான நடைமுறை நிபந்தனைகளை பிற வேளாண் வகைகளுக்கும் தனித்தனியான நடைமுறையை உருவாக்க வேண்டும்.
[Part VI—Sec. 2 244 TAMIL NADU GOVERNMENT GAZETTE29. மின்னிணைப்பு மின்தொடர்கள்:- 29. மின்னிணைப்பு மின்தொடர்கள்:-
(1) ***
(1) ***
(2) பண்ணை வீட்டில் வீட்டுப் பயன்பாட்டுக்காகத் தண்ணீர் ஏற்றவும், வானொலி மற்றும் பிற பயன்பாட்டுக் கருவிகளுக்குப் பயன்படுத்தவும் தனி மின்னிணைப்பு தேவையென, ஒரு வேளாண் மின்னிணைப்போடு கேட்டால், ஒரே புல அளவை எண்ணில் (survey fi eld number) / துணைப்பிரிவு புல எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னிணைப்புக்கள் தரப்படும்.
(2) (அ) பண்ணை வீட்டில் வீட்டுப் பயன்பாட்டுக்காகத் தண்ணீர் ஏற்றவும், வானொலி மற்றும் பிற பயன்பாட்டுக் கருவிகளுக்குப் பயன்படுத்தவும் தனி மின்னிணைப்பு தேவையென, ஒரு வேளாண் மின்னிணைப்போடு கேட்டால், ஒரே புல அளவை எண்ணில் (survey fi eld number) / துணைப்பிரிவு புல எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னிணைப்புக்கள் தரப்படும்.
(ஆ) கிணறுகள் / ஆழ்குழாய்க் கிணறுகள், தனித்தனியாக வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ள நிலையில், ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் / ஆழ்குழாய்க் கிணற்றிலிருந்தும் நீர்பாசனம் செய்ய வேண்டிய நிலத்தின் பரப்பளவு குறைந்தது 0.5 ஏக்கராக இருக்கும் பட்சத்தில், ஒரு நில அளவை புல எண்ணில் அல்லது பிரிக்கப்பட்ட ஒரு புல எண்ணில், ஒரு நபருக்கு ஒவ்வொரு கிணற்றிற்கும் / ஆழ்குழாய்க் கிணற்றிற்கும் ஒரு வேளாண் மின் இணைப்பு வழங்கலாம்.
(இ) கூட்டு உரிமைதாரர்கள் ஒரு மின் இணைப்பிற்கு குறைந்த பட்சம் 0.5 ஏக்கர் நீர்பாசன நிலத்தினை சொந்தமாக கொண்டிருக்கும் பட்சத்தில், ஒரு நில அளவைப் புல எண்ணில் அல்லது பிரிக்கப்பட்ட ஒரு புல எண்ணில் அமைந்துள்ள ஒரே கிணற்றில் / ஆழ்குழாய்க் கிணற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வேளாண் மின் இணைப்பை கூட்டு சொந்தக்காரர்(கள்) பெயரில்(ர்களில்) வழங்க அனுமதிக்கப்படும்.
(ஈ) வேளாண் மின்னிணைப்பு உள்ள கிணறு / ஆழ்குழாய்க் கிணற்றிலிருந்து, வேளாண்மை அல்லாத பிற உபயோகத்திற்கு நீர் இறைக்க, அந்தந்த உபயோகத்திற்கு பொருத்தமான வீதப்பட்டியலின் கீழ் தனியான மின் இணைப்பு வழங்கலாம்.
(உ) ஒரு வேளாண் மின் இணைப்பில், இணைப்பு முறை மாற்றல் (change over switch) மூலம், மற்றொரு கிணறு / ஆழ்குழாய்க் கிணற்றிலிருந்து, நீர் இறைப்பி–விசைக்குழாய் (motor-pump set) அல்லது நீர் இறைப்பி – காற்றமுக்கி (motor – compressor set) மூலமாக நீர் இறைப்பதற்கு வேளாண் மின் இணைப்பு மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படும்; நிபந்தனையாக, ஒரே சமயத்தில், நீர் இறைப்பியையோ (motor) அல்லது நீர் இறைப்பி– விசைக்குழாய் (motor-pump set) அல்லது நீர் இறைப்பி – காற்றமுக்கி (motor – compressor set) இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும், அனுமதிக்கப்பட்ட மின் பளுவிற்குள், வேளாண் சம்பந்தப்பட்ட உபயோகங்களுக்காக உபயோகிக்க வேண்டும்.
இணைப்பு முறை மாற்றல் விசைக்கான கோரிக்கைக் கடிதம் பெற்ற பதினைந்து நாட்களுக்குள், மின் பகிர்மான ஆய்வு செய்யப்பட்டு, முத்திரையிடப்பட்டு, சோதனை அறிக்கை பெறப்பட்டு, ஒப்புதலளிப்பு அளிக்கப்படும். நீர் இறைப்பி (motor) / மின் கொண்மி (capacitor) விவரங்கள் தவிர இதர ஆவணங்கள் வற்புறுத்தப்படமாட்டாது. ஒரு வேளை, உரிமதாரர் மேற்சொன்ன கால அளவிற்குள் ஒப்புதலளிப்பு வழங்கவில்லை எனில், விண்ணப்பதாரர், உரிமம்தாரரிடமிருந்து பெறப்பட வேண்டிய ஒப்புதலளிப்பு நடப்பிலிருக்கையில், தன்னுடைய அவசரத் தேவைக்காக, இணைப்பு முறை மாற்றலை பயன்படுத்திக் கொள்ளலாம். நுகர்வோர், இந்த நோக்கத்திற்காக செய்யும் கூடுதல் மின் தொடர் இணைப்புகளில், தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்த வேண்டும். நுகர்வோர் தன்னுடைய தேவைக்காக எந்த நேரத்திலும் மேற் கூறப்பட்ட நோக்கங்கள் அனைத்திற்கும் இணைப்பு முறை மாற்றல் மூலம் மின் வழங்கலைப் பயன்படுத்தலாம்.
Dec. 30, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 24531. ஆய்வுகள், சோதனையிடுதல் மற்றும் மின்வழங்கலைச்
செயற்படுத்துதல்:-
(1) *** (2) ***
படிவம்–2 வேளாண் மின்னிணைப்பு விண்ணப்ப படிவம் (27ஆம் ஒழுங்குமுறை விதியின் (2) ஆம் உள் ஒழுங்குமுறை விதியைப் பார்க்கவும்) வேளாண் நீர்விசை இறைப்பிகளுக்கான (Pumpsets) மின்வழங்கல் விண்ணப்பப் படிவம் (குறிப்பு : விண்ணப்பம் கிணற்றின் உரிமையாளரால் கையொப்பமிடப்பட வேண்டும். பங்குதாரர்கள் இருப்பின், அனைத்து பங்குதார்களும் கையொப்பமிட வேண்டும் அல்லது கூட்டு உரிமையாளர்களால் இசைவு அளிக்கப்பட வேண்டும்)
பெறுநர்,
31. ஆய்வுகள், சோதனையிடுதல் மற்றும் மின்வழங்கலைச் செயற்படுத்துதல்:-
(1) *** (2) *** (2) அ) வாய்ப்புடைய வேளாண் நுகர்வோருக்கு வழங்க வேண்டிய, மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு இந்த விதித்தொகுப்பின் 27 ஆம் ஒழுங்குமுறை விதியின் (2) ஆம் உள்-ஒழுங்குமுறை விதியிலுள்ள வகை முறைகளின் படி இருக்கும்.
படிவம்–2 வேளாண் மின் இணைப்பு விண்ணப்ப படிவம் (ஒழுங்குமுறைவிதி 27(2) பார்க்க)
பெறுநர் குறிப்பிட்ட பதவிப் பொறியாளர் (குறிப்பிட்ட பதவி பொறியாளரின் அலுவலக முகவரி) அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
பதிவு எண் :
பதிவுத் தேதி :
பதிவுக்கட்டண எண்.
மற்றும் தேதி :
வரைவு காசோலை எண்.
மற்றும் தேதி :
விண்ணப்பதாரரின்
நிழற்படம்
குறிப்பிட்ட பதவிப் பொறியாளர் (உரிமம்தாரரின் மின்பகிர்மான மையத்தின் முகவரி) 1. கிணற்றின் உரிமையாளர் அல்லது பங்குதாரர்களின் பெயர்கள் : 2. உரிமையாளர், பங்குதாரர்களின் வீட்டு முகவரி : 3. தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் : 4. கிணறு அமைந்துள்ள நிலத்தின் புல எண்: 5. வருவாய் கிராமத்தின் பெயர், வட்டம் : மற்றும் மாவட்டம் 6. மின்வழங்கலின் நோக்கம் : 7. இந்த கிணற்றால் பாசனம் செய்யவுள்ள நிலப்பரப்பும்,வகையும்(நன்செய்/புன்செய்) : 8. நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள மின்னோடி நீர்விசை இறைப்பியின் குதிரைத்திறன் :
9. நீர் விசை இறைப்பியின் வகை (மையநோக்கு வகை(centrifugal) / அமிழ் நீர்வகை (submersible)/ காற்றமுக்கி வகை (Air compressor) :
10. மின்வழங்கல் காலம் தொடர்பான : உரிமதாரரின் வரையறை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இணங்கியிருப்பதற்கான இசைவு
11. விண்ணப்பதாரருக்கு தற்போது : மின்னிணைப்புகள் ஏதாவது இருந்தால், அவற்றின் விவரங்கள்
பதிவு செய்யும் அதிகாரியின்
கையொப்பம் :
1. விண்ணப்பதாரர்(கள்) பெயர்(கள்) தந்தை
பெயருடன் / பெயர்களுடன்
(விண்ணப்பதாரர்(கள்) பாஸ்போர்ட் அளவு
புகைப்படம்(ங்கள்) இணைக்கவும்) : 2. விண்ணப்பதாரர்(கள்) முகவரி(கள்) அஞ்சல் குறியீடுடன் : 3. தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி /
கைபேசி :
எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
(இருப்பின்)
4. தேவைப்படும் மோட்டர் பம்புசெட்டின்
குதிரைத்திறன் :
5. கிணற்றின் உரிமையாளர் ஒருவர் மட்டும்
தானா? : ஆம் / இல்லை*
இல்லையென்றால், பங்குதாரர்களின் பெயர்கள், அவர்களுடைய தந்தை பெயர்கள் மற்றும் கிணற்றின் பங்கு சதவீதம் :
வரிசை பெயர் தந்தை பெயர் கிணற்றின் எண்.
பங்குசதவீதம் 6. கிணறு / ஆழ்குழாய்க் கிணறு மற்றும் நிலத்திற்கான :
உரிமைச் சான்று, நிலத்தின் புல எண்(கள்),
நிலபரப்பு, கிராமம், வட்டம், மாவட்டம் போன்ற
விவரங்களுடன்
கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் உரிமைச் சான்றிதழ் :
இணைக்கப்பட்டுள்ளது[Part VI—Sec. 2 246 TAMIL NADU GOVERNMENT GAZETTE கிணற்றுக்கு நான் ஒரே உரிமையாளர்/ இந்த விண்ணப்பம் (குறிப்பு: வேறு ஆவணங்கள் கேட்க அவசியமில்லை.
எல்லா பங்குதாரர்களாலும் கையொப்பமிடப்பட்டுள்ளது என
தேவைப்பட்டால் விண்ணப்ப பதிவு அலுவலர் கூடுதல் ஆவணங்களை தகுந்த காரணங்களுக்காக கேட்கலாம்) சான்றளிக்கப்படுகிறது.
7. அ. கிணற்றின் உரிமையாளர்கள் / சட்ட ரீதியான
வாரிசுதாரர்கள்
இணைந்து விண்ணப்பித்திருக்கிறீர்களா? : ஆம் /
இல்லை*
இடம் :
ஆ. இல்லையெனில், கூட்டு பங்குதாரர்(கள்) / வாரிசுதாரர்(கள்) நாள் :
சம்மத கடிதம் இணைக்கப்பட்டுள்ளதா?: ஆம் / இல்லை*
இ. இல்லையெனில் பிணை முறிவுப் பத்திரம்
விண்ணப்பதாரரின் / பங்குதாரர்களின்
இணைக்கப்பட்டுள்ளதா? : ஆம்
கையொப்பம்
8. அ. நிலத்தின் புல எண் / புல எண்கள் (ஒன்றுக்கு மேற்பட்ட
புல எண்கள் இருந்தால்)
பெயர்(கள்) பெரிய எழுத்துகளில்
ஆ. நிலம் தொடர்ச்சியாக உள்ளதா? : ஆம் / இல்லை* தேதி :
இ. இல்லையெனில், தடையில்லா சான்று /
வழித்தட அனுமதி இணைக்கப்பட்டுள்ளதா? : ஆம்
குறிப்பு : விண்ணப்பத்துடன் கிணற்றின் அமைவிடத்தைக் காட்டும் நில அளவைப் புத்தக வரைபடம், பட்டா, சிட்டா, அடங்கல்
ஈ. மின் இணைப்பு கோரும் கிணறு / ஆழ்குழாய்க் கிணறு முதலியன இணைத்தனுப்பப்பட வேண்டும்.
உள்ள நில புல எண் :
உ. பாசனம் செய்வதற்கான நிலப்பரப்பு (குறைந்த பட்சம் 0.5 பொறியாளர் அலுவலகத்தில் பெறப்பட்ட தேதி:
ஏக்கர்) :
ஊ. கிராமத்தின் பெயர் :
எ. வட்டத்தின் பெயர் :
ஏ. மாவட்டத்தின் பெயர் :
.......................வட்டம், ................கிராமம்.............. புல
9. அரசுத்துறையின் தடையில்லாச் சான்று தேவைப்படுகிறதா?
எண்ணில்...........ஏக்கர்.........சென்ட் பரப்பளவுள்ள
: ஆம் / இல்லை* நிலம் மற்றும் அந்நிலத்தில் அமைந்துள்ள ஆம்எனில், தடையில்லாச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா?
திறந்த கிணறு/குழாய் கிணறு.............கிராமம். : ஆம்* திரு..............த/பொ..................என்பவருக்கு தனிப்பட்ட 10. அ. விண்ணப்பத்திருக்கும் நிலத்தில் வேறு கிணறு உள்ளதா? : ஆம் / இல்லை* வகையில் சொந்தமானது என்று சான்றளிக்கப்படுகிறது.
ஆ. ஆம் எனில், அந்தக் கிணற்றில் மின் இணைப்பு கூட்டாக சொந்தமாகவுள்ளது.
உள்ளதா?
: ஆம் / இல்லை* 1) ......................த/பெ.................
இ. ஆம் எனில், மின் இணைப்பின் விவரங்கள் 2) ......................த/பெ................
பெயர் :
மின் இணைப்பின் எண், நில புல
3) ......................த/பெ................
எண் மற்றும் மின்பகிர்மானம் :
திரு.........த/பெ.........என்பவர்(கள்)சிறிய/பெரிய உழவர்(கள்) எனச்
மோட்டார் பம்புசெட்டின் குதிரைத்திறன், சான்றளிக்கப்படுகிறது.
வீதப்பட்டியல் :
பிரிவு அலுவலகம் :
கிராம நிருவாக அலவலர்
11. அ. தற்போது மின் இணைப்பு கோரும் கிணற்றில்
ஏற்கனவே வேறு மின் இணைப்பு உள்ளதா? : ஆம் /
இல்லை*
ஆ. ஆம் எனில், அதன் விவரங்கள்
பெயர் :
மின் இணைப்பு எண்,Dec. 30, 2020] TAMIL NADU GOVERNMENT GAZETTE 247 ஊரிமம்தாரரின் பயன்பாட்டிற்கு மட்டும்
நில புல எண் :
ஒப்புகை
மற்றும் பகிர்மானம் :
விண்ணப்பதாரர் பெயர் :
மோட்டார் பம்புசெட்டின் :
முகவரி :
குதிரைத்திறன், வீதப்பட்டியல் :
பெறப்பட்ட நாள் :
பிரிவு அலுவலகம் :
கடித எண் :
மின் வழங்கல் வகையினம் :
12. விண்ணப்பதாரர் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் விண்ணப்பதாரருக்கு சொந்தமான எந்த மின் இணைப்பிலாவது நிலுவையில் உள்ளதா? : ஆம் / இல்லை*
ஆம் எனில், மின் இணைப்பு எண்., வீதப்பட்டியல்,
பகிர்மானம் மற்றும் பிரிவு அலுவலகம் :
மின்பகிர்மான உரிமதாரரின் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை
குறிப்பு: ஆம் / இல்லை* இவற்றில் தேவையற்ற வார்த்தையின் மேல் கோடிடவும்
பெயர் மற்றும் பதவிப்பெயர்
நான் / நாங்கள், மேலே கொடுத்துள்ள அனைத்து விவரங்களும் நான் / நாங்கள் அறிந்த வரை உண்மை என உறுதியளிக்கிறேன்/றோம்.
தேதி : விண்ணப்பதாரர்(கள்) கையொப்பம்
இடம் : பெயர்(கள்)
இணைப்பு : 1. ________ (வரிசை எண் 6 ன்படி)
2. ________ (வரிசை எண்.7 ன்படி பொருந்தும் பட்சத்தில்)
3. ________ (வரிசை எண்.8 ன்படி பொருந்தும் பட்சத்தில்)
4. ________ (வரிசை எண்.9 ன்படி பொருந்தும் பட்சத்தில்)
உரிமதாரரின் பயன்பாட்டிற்கு மட்டும்
ஒப்புகை
விண்ணப்பதாரரின் பெயர் :
முகவரி :
பெற்ற தேதி :
சுட்டுகை எண் :
மின்வழங்கல் வகை :
மின்பகிர்மான உரிமதாரரின் கையொப்பம் மற்றும் முத்திரை
பெயர் மற்றும் பதவிப்பெயர் (தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சென்னை-600 032. சு. சின்னராஜலு, 2020 டிசம்பர் 14. செயலாளர்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
[Part VI—Sec. 2 248 TAMIL NADU GOVERNMENT GAZETTEGOVERNMENT EXAMINATIONS/EDUCATIONAL OFFICERS
LOSS OF CERTIFICATES
It is hereby notifi ed that the Original Higher Secondary Certifi cates / Matriculation Certifi cates / Diploma Certifi cates / School Certifi cates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certifi cates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:– Register
Month
Name of the
Details of
Reference
Number and
C.N.C.
and Year
Candidate and
Examination
Number and Date
Certifi cate
Number
Institution
Number
(1) (2)
(3) (4) (5)
(6) No. VI(2)/70/2020.
Dharmarajan, R.
157041
August 2019 Typewriting
கடித எண் 110426/ட்டி3/2020, (28-07-1980)
456999
Tamil Senior
10-12-2020.
First Class
மா. அருளரசு,
மா. அருளரசு,
கூடுதல் இயக்குநர் (தேர்வுகள்), தேர்வு வாரியம்,
தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை-600 025.
No. VI(2)/71/2020.
ஈரோடு
N. விஜயகுமார், 904493 April 2016 எட்டாம் வகுப்பு ந.க.எண் 007740/டி/2020,
15-12-2020.
பொன். குமார், பொன். குமார், இணை இயக்குநர் (பணியாளர்), அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU