Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances

Published 20 January 2021

Type
Ordinary
Gazette no.
3
Part
Part IV
Notifications
Tamil Nadu Act No. 11 of 2020
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-01-20.Ordinary_3_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2021 [விலை : ரூ. 3.20 காசுவிலை : ரூ. 3.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 3]

சென்னை, புதன்கிழமை, ஜனவரி 20, 2021 தை 7, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

2020 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாளன்று ஆளுநரால் பிறப்பிக்கப்பட்ட பின்வரும் அவசரச் சட்டமானது இதன் மூலம் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-

தமிழ்நாடு அவசரச் சட்டம் எண். 11 /2020.

1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம், 1888 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம் மற்றும் 1859 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றை மேலும் திருத்தம் செய்வதற்கானதோர் அவசரச்சட்டம்.

மாநிலச் சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறாததாலும், இதன் பின்பு காணுகின்ற நோக்கங்களுக்காகத் தாம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியதைத் தேவையானதாக்குகின்ற சூழ்நிலைகள் இருந்து வருகின்றன என்று தமிழ்நாடு ஆளுநர் தெளிவுறக் காண்பதாலும்;

எனவே, அரசமைப்புச் சட்டத்தின் 213 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, ஆளுநர் பின்வரும் அவசரச் சட்டத்தை இப்போது இதன் மூலம் பிறப்பிக்கிறார்:-

பகுதி –I.

முன்னுரை.

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்த அவசரச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம்

தொடக்கம்.

மற்றும் காவல் சட்டங்கள் (திருத்த) அவசரச்சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பகுதி –II.

1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டத்திற்கான திருத்தங்கள்.

தமிழ்நாடு சட்டம்

2 மற்றும் 3 ஆம் III/1930.

பிரிவுகளுக்கான

மாற்றீடு.

2. 1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டத்தில், (இதன் பின்பு இந்தப் பிரிவில் 1930 ஆம் ஆண்டு சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 2 மற்றும் 3 ஆம் பிரிவுகளுக்காக பின்வரும் பிரிவுகள் மாற்றாகமைக்கப்படுதல் வேண்டும், அதாவது : -

[1]

IV-2(3)(T-Sup)-12 "2. அளாவுகை. - இந்தச் சட்டம், தமிழ்நாடு மாநிலம் முழுவதையும்

அளாவி நிற்கும்.

3. பொருள் வரையறைகள். - இந்தச் சட்டத்தில், பொருளுக்கு அல்லது

சூழ்நிலைக்கு முரணாக எதுவும் இருந்தாலன்றி,-

(a) "பொது சூதாட்ட – விடுதி" என்பது, சூதாட்டக் கருவிகளை அல்லது வீட்டை, அறையை, கூடாரத்தை, அடைப்பினை, வாகனத்தை, கலத்தை, இணையக் கூடத்தை அல்லது இடத்தைப் பயன்படுத்துவதற்காக, கட்டணமின்றியோ அல்லது கட்டண வாயிலாகவோ அத்தகைய வீட்டை, அறையை, கூடாரத்தை, அடைப்பினை, வாகனத்தை, கலத்தை, இணையக் கூடத்தை அல்லது இடத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறவரின், நேரடி அனுபோகத்தில் கொண்டிருப்பவரின், பயன்படுத்துகிறவரின் அல்லது வைத்திருப்பவரின் இலாபத்திற்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ, சூதாட்டக் கருவிகள் வைத்து வரப்படுகிற அல்லது பயன்படுத்தப்படுகிற ஏதேனும் வீடு, அறை, கூடாரம், அடைப்பு, வாகனம், கலம், இணையக்கூடம் அல்லது வேறு இடம் எதுவாயினும் என்று பொருள்படும்; மற்றும் சூதாடும் நோக்கத்திற்காகத் திறந்து வைக்கப்பட்ட, வைக்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட, அல்லது திறந்து வைக்கப்படுவதற்காகவோ, வைக்கப்படுவதற்காகவோ அல்லது பயன்படுத்தப்படுவதற்காகவோ அனுமதிக்கப்பட்ட வீடு, அறை,கூடாரம், அடைப்பு, வாகனம், கலம், இணையக்கூடம் அல்லது இடம் எதனையும் உள்ளடக்கும்;

(b) "சூதாட்டம்" என்பது, பரிசுச் சீட்டை உள்ளடக்காது. ஆனால் நேரிலோ அல்லது இணையவெளியிலோ பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதலை உள்ளடக்கும்.

விளக்கம்.- (b) ஆம் கூறு மற்றும் 3-A ஆம் பிரிவின் நோக்கத்திற்காக, பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதலானது பந்தயப் பொருளை வசூலிப்பதையோ, கேட்டுப்பெறுவதையோ, பணயம் அல்லது பந்தயம் எதனையும் பொறுத்து மின்னணு வழிப் பணப் பரிமாற்றம் உள்ளடங்கலான பணமாகவே மற்றபடியோ வெற்றிப்பொருள்களை அல்லது பரிசுகளைப் பெற்றுக் கொள்வதை அல்லது விநியோகம் செய்தலை அல்லது பணயம் வைப்பதற்கு அல்லது பந்தயம் கட்டுவதற்கு அல்லது அவ்வாறு வசூலிப்பதற்கு, கேட்டுப்பெறுவதற்கு, பெற்றுக் கொள்வதற்கு அல்லது விநியோகம் செய்வதற்கு உதவும், தூண்டும், வேண்டுகின்ற அல்லது அவற்றிற்கு வசதி செய்கின்ற கருத்தோடு செய்யப்பட்ட செயல் எதனையுமோ உள்ளடக்குவதாகக் கொள்ளுதல் வேண்டும்;

(c) "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்;

(d) "சூதாட்டக் கருவிகள்" என்பது, சூதாட்டப் பொருளாக அல்லது சூதாடுவதற்கான உபாயமாகப் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக் கருதப்பட்ட ஆட்டச் சீட்டுகள், பகடைக் காய்கள், சூதாட்ட மேசை அல்லது துணி, பலகை, கணினிகள், கணினி அமைப்பு, கணினி வலையமைப்பு, கணினி வளம், தொடர்பு சாதனம் எதையும் அல்லது பிற பொருள் எதையும்,சூதாட்டம் எதற்குமான பதிவேடாக, பதிவுறு அல்லது சான்றாக பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக் கருதப்பட்ட பதிவேடு அல்லது மின்னணு பதிவுறு எதையும், சூதாட்டம் எதிலிருந்தும் கிடைக்கும் பணத் தொகையையும், சூதாட்டம் எதனையும் பொறுத்து விநியோகம் செய்யப்பட்ட அல்லது விநியோகம் செய்யக் கருதப்பட்ட பணமாகவோ, அல்லது மின்னணு வழிப்பணப்பரிமாற்றம் உள்ளடங்கலான மற்ற படியாகவோ உள்ள வென்ற பொருட்கள் அல்லது பரிசுகள் எவற்றையும் உள்ளடக்கும்;

மையச் சட்டம்

21/2000.

(e) இச்சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 'கணினி', 'தொடர்பு சாதனம்', 'கணினி வலையமைப்பு', 'கணினி வளம்', 'கணினி அமைப்பு', 'இணையக் கூடம்' மற்றும் 'மின்னணு பதிவுறு' ஆகிய சொற்கள், 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில் நுட்பச் சட்டத்தில் அவைகளுக்கு முறையே வழங்கப்பட்டிருக்கும் பொருளை கொண்டிருக்கும்.

3

3-A இணைய வெளியில் பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதல்- (1) கணினிகள், கணினி அமைப்பு, கணினி வளம், தொடர்பு சாதனம் எதுவும் அல்லது சூதாடுதலுக்கான பிற கருவி எதையும் பயன்படுத்தி, ரம்மி, போக்கர் அல்லது பிற சூதாட்டம் எதையும் இணையவெளியில் விளையாடுவதன் மூலம் நபரெவரும் பணயம் வைத்தலோ அல்லது பந்தம் கட்டுதலோ கூடாது.

(2) இணையவெளியில் பணயம் வைக்கும் அல்லது பந்தயம் கட்டும் நபரெவரும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் சிறைதண்டனையுடன் அல்லது பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாது தண்டத்தொகையுடன் அல்லது இவ்விரண்டுடனும் தண்டிக்கப்படுதல் வேண்டும்.".

4 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

3. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (b), (c) மற்றும் (d) கூறுகளில், "அடைப்பு, வாகனம், கலம்" என்ற சொற்றொடருக்கு பின்பு "இணையக் கூடம்" என்ற சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

5 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

4. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "இரண்டாம் வகுப்பு நீதித்துறை நடுவருக்கு கீழ்நிலையற்ற அல்லது காவல் துணைக் கண்காணிப்பாளர் படிநிலைக்குக் குறையாத காவல் அலுவலர் எவரும்" என்ற சொற்றொடருக்காக, "அல்லது நேர்வுக்கேற்ப காவல் துணை கண்காணிப்பாளர் அல்லது காவல் உதவி ஆணையர் படிநிலைக்குக் குறையாத காவல் அலுவலர் எவரும்" என்ற சொற்றொடரானது மாற்றாகமைக்கப்படுதல் வேண்டும்.

6 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

5. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில், "ஆட்டச்சீட்டுகள், பகடைக் காய்கள், சூதாட்ட மேசை அல்லது துணி, பலகை எதுவும்" என்ற சொற்றொடருக்கு பின்பு, "மின்னணு பதிவுறு, கணினிகள், கணினி அமைப்பு, கணினி வலையமைப்பு, கணினி வளம் அல்லது தொடர்பு சாதனம் எதுவும்" என்ற சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

8 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

6. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவில், "ஐநூறு ரூபாய்" மற்றும் "மூன்று மாதங்கள்" என்ற சொற்றொடர்களுக்காக, முறையே "பத்தாயிரம் ரூபாய்" மற்றும் "இரண்டு ஆண்டுகள்" என்ற சொற்றொடர்களானது மாற்றாகமைக்கப்படுதல் வேண்டும்.

9 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

7. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 9 ஆம் பிரிவில், "இருநூறு ரூபாய்" மற்றும் "ஒரு மாதம்" என்ற சொற்றொடர்களுக்காக, முறையே "ஐந்தாயிரம் ரூபாய்" மற்றும் "ஆறு மாதங்கள்" என்ற சொற்றொடர்களானது மாற்றாகமைக்கப்படுதல் வேண்டும்.

11 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

8. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில், " 5 முதல் 10 ஆம் பிரிவுகள் வரை " என்ற சொற்றொடருக்காக, "3-A ஆம் பிரிவு மற்றும் 5 முதல் 10 ஆம் பிரிவுகள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாகமைக்கப்படுதல் வேண்டும்.

12 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

9. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 12 ஆம் பிரிவில், "ஒரு நூறு ரூபாய்" மற்றும் "மூன்று மாதங்கள்" என்ற சொற்றொடர்களுக்காக, முறையே "ஐந்தாயிரம் ரூபாய்" மற்றும் "ஆறு மாதங்கள்" என்ற சொற்றொடர்களானது மாற்றாகமைக்கப்படுதல் வேண்டும்.

13 –B எனும் 10. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 13 –A ஆம் பிரிவிற்கு பின்பு,

புதிய பிரிவினை பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது

உட்புகுத்துதல்.

"13–B நிறுமங்களால் செய்யப்படும் குற்றங்கள்.-– (1) இந்தச் சட்டத்தின்படியான குற்றம் ஒரு நிறுமத்தினால் செய்யப்படிருக்கிறவிடத்து, அந்த குற்றம் செய்யப்பட்ட நேரத்தில், அந்த நிறுமத்தின் அலுவலை நடத்தி வருவதற்கு அந்த நிறுமத்தின் பொறுப்பைக் கொண்டிருந்தவரும் அதற்குப் பொறுப்பாயிருந்தவருமான நபர் ஒவ்வொருவரும், அதோடு அந்த நிறுமமும், அந்தக் குற்றத்தினைச் செய்ததாகக் கருதப்படுதலும் அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படுதலும், தண்டிக்கப்படுதலும் வேண்டும்:

4

வரம்புரையாக- ஆனால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அந்தக் குற்றம் தமக்குத் தெரியாமல் செய்யப்பட்டதாக அல்லது அத்தகைய குற்றம் செய்யப்படாமல் தடுக்கத் தாம் உரிய முயற்சி அனைத்தையும் மேற்கொண்டதாக நபரெவரும் மெய்ப்பிப்பாரானால், அவரை தண்டனை எதற்கும் உள்ளாக்குதல் ஆகாது.

(2) (1) ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், குற்றம் எதுவும் ஒரு நிறுமத்தினால் செய்யப்பட்டிருந்து, அந்நிறுமத்தின் எவரேனும் இயக்குநரின், மேலாளரின், செயலாளரின் அல்லது பிற அலுவலரின் இசைவுடனோ அல்லது மறைமுக ஆதரவுடனோ அந்தக் குற்றம் செய்யப்பட்டிருக்கிறது அல்லது அவர்பாலுள்ள கவனக்குறைவு எதற்கும் சாட்டத்தக்கதாக இருக்கிறது என்று மெய்ப்பிக்கப்படுகிறவிடத்து, அந்த இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் அந்தக் குற்றத்தைச் செய்திருப்பதாகக் கருதப்படுதலும், அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும் வேண்டும்.

விளக்கம்- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக-

(a) "நிறுமம்" என்பது, கூட்டமைப்பு எதுவும், என்று பொருள்படும் மற்றும் ஒரு நிறுவகத்தை அல்லது பிற தனிநபர்களின் கழகத்தை உள்ளடக்கும்; மற்றும்

(b) "இயக்குநர்" என்பது, ஒரு நிறுவகத்தைப் பொறுத்தவரையில், அந்த

நிறுவகத்திலுள்ள ஒரு கூட்டாளி என்று பொருள்படும்.".

பகுதி – III.

1888 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டத்திற்கானத்

திருத்தங்கள்.

தமிழ்நாடு சட்டம்

3ஆம் பிரிவிற்கான III/1888.

திருத்தம்.

11. (இதன் பின்பு இப்பகுதியில் 1888ஆம் ஆண்டுச் சட்டமெனக் குறிப்பிடப்படுவதான) 1888 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டத்தின் 3 ஆம் பிரிவிலுள்ள, "குற்றத் தீர்ப்பு, சிறைப்படுத்தல், பொது சூதாட்ட விடுதி, சூதாடுதல், சூதாட்டக் கருவிகள்" ஆகியவற்றின் பொருள் வரையரைகள் விட்டுவிடப்படுதல் வேண்டும்.

குறித்த சில பிரிவுகளை

விட்டுவிடுதல்.

12. 1888 ஆம் ஆண்டுச் சட்டத்தின், 40–A , 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 49–A, 49–B, 50, 51 மற்றும் 52 ஆம் பிரிவுகள் விட்டுவிடப்படுதல் வேண்டும்.

79 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

13. 1888 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 79 ஆம் பிரிவில், "ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்துஸ்தானி" என்ற சொற்றொடருக்காக, "ஆங்கிலம் மற்றும் தமிழ்" என்ற சொற்றொடரானது மாற்றாகமைக்கப்படுதல் வேண்டும்.

80 –A எனும் 14. 1888 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 80 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும்

புதிய பிரிவினை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது ;-

உட்புகுத்துதல்.

"80 A. நிறுமங்களால் செய்யப்படும் குற்றங்கள். –(1) இந்தச் சட்டத்தின்படியான குற்றம் ஒரு நிறுமத்தினால் செய்யப்படிருக்கிறவிடத்து, அந்த குற்றம் செய்யப்பட்ட நேரத்தில், அந்த நிறுமத்தின் அலுவலை நடத்தி வருவதற்கு அந்த நிறுமத்தின் பொறுப்பைக் கொண்டிருந்தவரும் அதற்குப் பொறுப்பாயிருந்தவருமான நபர் ஒவ்வொருவரும், அதோடு அந்த நிறுமமும், அந்தக் குற்றத்தினைச் செய்ததாகக் கருதப்படுதலும் அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படுதலும், தண்டிக்கப்படுதலும் வேண்டும்.

வரம்புரையாக- ஆனால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அந்தக் குற்றம் தமக்குத் தெரியாமல் செய்யப்பட்டதாக அல்லது அத்தகைய குற்றம் செய்யப்படாமல் தடுக்கத் தாம் உரிய முயற்சி அனைத்தையும் மேற்கொண்டதாக நபரெவரும் மெய்ப்பிப்பாரானால், அவரை தண்டனை எதற்கும் உள்ளாக்குதல் ஆகாது.

5

(2) (1) ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், குற்றம் எதுவும் ஒரு நிறுமத்தினால் செய்யப்பட்டிருந்து, அந்நிறுமத்தின் எவரேனும் இயக்குநரின், மேலாளரின், செயலாளரின் அல்லது பிற அலுவலரின் இசைவுடனோ, மறைமுக ஆதரவுடனோ அந்தக் குற்றம் செய்யப்பட்டிருக்கிறது அல்லது அவர்பாலுள்ள கவனக்குறைவு எதற்கும் சாட்டத்தக்கதாக இருக்கிறது என்று மெய்ப்பிக்கப்படுகிறவிடத்து, அந்த இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் அந்தக் குற்றத்தைச் செய்திருப்பதாகக் கருதப்படுதலும், அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும் வேண்டும்.

விளக்கம்- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக-

(a) "நிறுமம்" என்பது, கூட்டமைப்பு எதுவும், என்று பொருள்படும் மற்றும் ஒரு நிறுவகத்தை அல்லது பிற தனிநபர்களின் கழகத்தை உள்ளடக்கும்; மற்றும்

(b) "இயக்குநர்" என்பது, ஒரு நிறுவகத்தைப் பொறுத்தவரையில், அந்த

நிறுவகத்திலுள்ள ஒரு கூட்டாளி என்று பொருள்படும்.".

பகுதி – IV.

1859 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்திற்கானத் திருத்தம்.

மையச் சட்டம்

குறித்த சில XXIV/1859.

சொற்றொடர்களை

விட்டுவிடுதல்.

15. 1859 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்தின் இணைப்புப்பட்டியலில், "3 ஆம் பிரிவில் உள்ள 'சிறைப்படுத்துதல்', 'சூதாடுதல்', 'சூதாட்டக் கருவிகள்', 'பொது சூதாட்ட விடுதி' மற்றும் 'குற்றத்தீர்ப்பு' ஆகியவற்றிற்கான பொருள் வரையறைகள் மற்றும் "48, 50" ஆகியவை விட்டுவிடப்படுதல் வேண்டும் "6

விளக்கவுரை.

1888 ஆம் ஆண்டு சென்னை மாநகர் காவல் சட்டம் (தமிழ்நாடு சட்டம் III/1888) அதனுடனிணைந்த தமிழ்நாடு சட்டம் 32/1987 மற்றும் தமிழ்நாடு சட்டம் 51/1997 இன் மூலம் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும், 1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் III/1930) மூலம் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஆட்டச் சீட்டுகள், பகடைக் காய்கள் முதலியவற்றினால் பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதலின் முறையிலான சூதாடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. பணத்திற்காக அல்லது பிற பணயப்பொருளுக்காக அடிமையாகும் தன்மை கொண்ட ரம்மி, போக்கர் முதலியன போன்றவைகளை கணினிகள் அல்லது கைப்பேசிகளைப் பயன்படுத்தி சூதாட்டம் ஆடுதல் சமீப காலங்களில் பன்மடங்கு பெருகியுள்ளது. இதன் விளைவாக அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் மற்றும் தற்கொலை சம்பவங்களும் பதிவாகின்றது. இதன் பொருட்டு அத்தகைய தற்கொலை சம்பவங்களைத் தடுப்பதிற்கும் இணையவழி சூதாட்டத்தின் தீமைகளிலிருந்து அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கும், தொடர்புடைய சட்டங்களைத் தக்கவாறு திருத்துவதன் மூலம் இணையவெளியில் பந்தயம் கட்டுதல் அல்லது பணயம் வைத்தலை தடை செய்வதற்கு முடிவு செய்துள்ளது. அதற்கிணங்க, 1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் III/1930) பொருந்துகையை மாநிலம் முழுவதும் நீட்டிப்பதற்குத் திருத்தம் செய்வதெனவும், 1888 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம் (தமிழ்நாடு சட்டம் III/1888) மற்றும் 1859 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்திற்கு (தமிழ்நாடு சட்டம் XXIV/1859) அடுத்தடுத்து திருத்தங்களைச் செய்யவும், அரசானது, முடிவு செய்துள்ளது.

2. இந்த அவசரச் சட்டம் மேற்சொன்ன முடிவுகளுக்கு செயல் வடிவம்

கொடுக்க விழைகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. கோபி ரவிக்குமார்,

அரசுச் செயலாளர்,

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

7

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பினவரும் சட்டமானது.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 07 ஆம் நாளன்று ஆளுநரின்

ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம்

வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 35/2020

2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை

அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம்

செய்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டமானது, 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு

தொடக்கம்.

தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில்

முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் (திருத்தச்) சட்டம்

என வழங்கப்பெறும்.

(2) இந்தச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

2-ஆம் பிரிவிற்கான 2. 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களை

40/2010.

திருத்தம்.

அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டத்தின் 2-ஆம் பிரிவின் (d) கூறுக்கு மாற்றாக பின்வரும் கூறு அமைக்கப்படுதல் வேண்டும். அதாவது:-

"(d) "தமிழ்வழியில் கல்வி பயின்ற நபர்" என்பது, அரசின் கீழ்

வரும் பணிகளில் உள்ள பணி நியமனம் எவற்றிற்கும் பொருந்தக் கூடிய

விதிகள் அல்லது ஒழுங்குமுறை விதிகள் அல்லது ஆணைகளில் நேரடி

ஆட்சேர்ப்புக்கு வகுத்துரைக்கப்பட்ட கல்வித் தகுதி வரை தமிழ்வழியின்

மூலம் கல்வி பயின்ற நபர் என்று பொருள்படும்.

விளக்கம்.-இந்தக் கூறின் நோக்கத்திற்காக,-

(i) எஸ்.எஸ்.எல்.சி யானது வகுத்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியாக

இருக்கும் நேர்வில், ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி வரை தமிழ்வழிக் கல்வி மூலம்

கல்வி பயின்றிருத்தல் வேண்டும்;

(ii) மேல்நிலைக் கல்வியானது வகுத்துரைக்கப்பட்ட

கல்வித்தகுதியாக இருக்கும் நேர்வில் ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி மற்றும்

மேல்நிலைக் கல்வியை தமிழ்வழிக் கல்வி மூலம் கல்வி பயின்றிருத்தல்

வேண்டும்;

(iii) பட்டயப்படிப்பானது வகுத்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியாக

இருக்கும் நேர்வில், ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பட்டயப்படிப்பை

தமிழ்வழிக் கல்வி மூலம் கல்வி பயின்றிருத்தல் வேண்டும் அல்லது

பட்டயப்படிப்பானது மேல்நிலைக்கல்வி பயின்ற பிறகு பெற்றிருந்தால் ஒருவர்

எஸ்.எஸ்.எல்.சி, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டயப்படிப்பை தமிழ்வழிக்

கல்வி மூலம் கல்வி பயின்றிருத்தல் வேண்டும்;

(iv) பட்டப்படிப்பானது வகுத்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியாக

இருக்கும் நேர்வில், ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி, மேல்நிலைக்கல்வி மற்றும்

பட்டப்படிப்பை தமிழ்வழிக் கல்வி மூலம் கல்வி பயின்றிருத்தல் வேண்டும்;

8

(v) பட்ட மேற்படிப்பானது வகுத்துரைக்கப்பட்ட கல்வித் தகுதியாக

இருக்கும் நேர்வில், ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு

மற்றும் பட்டமேற்படிப்பைத் தமிழ் வழிக்கல்வி மூலம் கல்வி பயின்றிருத்தல்

வேண்டும்."

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. கோபி ரவிக்குமார்,

அரசுச் செயலாளர்,

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 20 January 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-01-20.Ordinary_3_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-01-20.Ordinary_3_Part-IV_Section-2-T-Sup.