Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specifi c character or of particular interest to the public issued by Secretariat Departments.

Published 03 February 2021

Type
Ordinary
Gazette no.
5
Part
Part II
Notifications
AGRICULTURE DEPARTMENT - Notification
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-02-03.Ordinary_5_Part-II_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2021

[விலை : 0.80 காசு.விலை : 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 5] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 3, 2021 தை 21, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு–2052

பகுதி II—பிரிவு 1 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வேளாண்மை துறைவேளாண்மை துறை

அறிவிக்கைஅறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 287, வேளாண்மை (AP3) துறை, நாள் 4 டிசம்பர் 2020.]

1985 ஆம் ஆண்டு உரக்கட்டுப்பாட்டு ஆணையின் 27 ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 02-03-2011 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் - II பிரிவு (1)-இல் 12 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வேளாண்மைத் துறையின் II(1)/AG/8/2011 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.

திருத்தங்கள்

மேற்சொன்ன அறிவிக்கையின் அட்டவணையில், நெடும்பத்தி (1)-இல் 'அலுவலர்கள்' என்ற தலைப்பின் கீழ், (1) ''8 வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாட்டு பிரிவு) என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "8 வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு)'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்படவேண்டும்;

(2) ''9. வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாட்டு பிரிவு), திருவள்ளூர்'', என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ''9. வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு), திருவள்ளூர்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அறிவிக்கை&II

[அரசாணை (நிலை) எண் 287, வேளாண்மை (AP3) துறை, நாள் 4 டிசம்பர் 2020.]

1985 ஆம் ஆண்டு உரக்கட்டுப்பாட்டு ஆணையின் 26A ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 02-03-2011 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் - II பிரிவு (1)-இல் 13 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வேளாண்மைத் துறையின் II(1)/AG/10/2011 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார்.

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில் ''வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாட்டு பிரிவு)'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ''வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு)'' என்ற சொற்றொடர் அமைத்து கொள்ளப்பட வேண்டும்;

அறிவிக்கை&III

[அரசாணை (நிலை) எண் 287, வேளாண்மை (AP3) துறை, நாள் 4 டிசம்பர் 2020.]1985 ஆம் ஆண்டு உரக்கட்டுப்பாட்டு ஆணையின் 32A ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 02.03.2011 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் - II பிரிவு (1)-இல் 13 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வேளாண்மைத் துறையின் II(1)/AG/11/2011 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். [ 1 ] DTP—II-1 (T-Sup.) (5) 2

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில் ''வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாட்டு பிரிவு)'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ''வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு)'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

ககன்தீப் சிங் பேடி, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

இ. சுபாமதி,இ. சுபாமதி, இயக்குநர் (முகூபொ), தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையர் அவர்களால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 03 February 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-02-03.Ordinary_5_Part-II_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-02-03.Ordinary_5_Part-II_Section-1-T-Sup.