©
GOVERNMENT OF TAMIL NADU 2021
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 115A] சென்னை, வியாழக்கிழமை, பிப்ரவரி 25, 2021 மாசி 13, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
பொருளடக்கம் பொருளடக்கம்
சட்டமுன்வடிவுகள்:சட்டமுன்வடிவுகள்:
பக்கங்கள்.
எண் 9/2021—பாரதியார் பல்கலைக்கழக (திருத்தச் சட்டம்) .. .. .. 2-3 எண் 10/2021 —தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய (திருத்தச் சட்டம்) .. 4-6 Ex-IV-115A—1
[1]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 25-ஆம் நாளன்று தமிழ்நாடு
சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,
நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக
வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 9/20212021 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 9
1981 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகச் சட்டத்தை மேலும் 1981 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்ட முன்வடிவுதிருத்துவதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு
மற்றும் தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2021-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
24ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
1 /1982.
2. 1981 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகச் சட்டத்தில் 24 ஆம் பிரிவில், (b) கூறில், "வகை II- பிற உறுப்பினர்கள்.", என்ற தலைப்பின் கீழ், (7)வது இனத்திற்குப் பிறகு, பின்வரும் இனமானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(8) இணைவு பெற்ற கல்லூரிகளின் (உதவிபெறும் மற்றும் சுயநிதி)
நிருவாகத்திலிருந்து, அரசால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள்.".
3 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை.
நீதிப்பேராணை மனு எண். 12478/2019 மற்றும் நீதிப்பேராணை (பல்வகை) மனு எண். 12752/2019 ஆகியவற்றில் மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தின் 01-07-2019 தேதியிட்ட ஆணையின் அடிப்படையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவில் போதிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளின் சங்கத்தின் முறையீடானது ஆட்சிக்குழுவின் முன்பு வைக்கப்பட்டது. 20.08.2019 தேதியிட்ட ஆட்சிக்குழுவின் இது பற்றிய தீர்மானத்தையும், பாரதியார் பல்கலைக்கழக பதிவாளரின் (பொறுப்பு) கருத்துருவினையும் கவனமுடன் கருத்தில் கொண்டு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவில், இணைவு பெற்ற கல்லூரிகளின் (உதவி பெறும் மற்றும் சுயநிதி) நிருவாகத்திலிருந்து இரண்டு உறுப்பினர்களை சேர்த்துக்கொள்வதற்காக 1981 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகச் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 1/1982) திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது.
2. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.
கே. பி. அன்பழகன்,கே. பி. அன்பழகன்,
உயர் கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
செயலாளர்.
சென்னை-600 009, 25, பிப்ரவரி 2021.
4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு2021-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 25-ஆம் நாளன்று தமிழ்நாடு
சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,
நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக
வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 10/20212021 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 10
2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தை மேலும் திருத்தம் 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும்
1. (1) இந்தச் சட்டமானது 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில
தொடக்கம்.
சிறுபான்மையினர் ஆணைய (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
21/2010.
2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக்குறிப்பிடப்படுவதான), 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தின் 2-ஆம் பிரிவில்,-
(i) (c) ஆம் கூறில், 'தலைவர்' எனும் சொற்றொடருக்காக, "தலைவர், துணைத் தலைவர்கள் " எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) (d) ஆம் கூறிற்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(d)" "சிறுபான்மையினர்" என்பது, சிறுபான்மையினர் என அரசு அறிவிக்கையினால் ஏற்பளிப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு மாநிலத்தில் வசித்து வரும் மதவாரியான அல்லது மொழி வாரியான சிறுபான்மை சமுதாயங்களைச் சார்ந்த நபர்கள் என்று பொருள்படும்".
3ஆம் பிரிவிற்கான
3. முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவிற்காக பின்வரும்
திருத்தம்.
உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(2) ஆணையமானது சிறப்பான, திறமையான மற்றும் நேர்மையான
நபர்களுக்கிடையேயிருந்து, அரசால் பெயர் குறித்து நியமிக்கப்பட வேண்டிய -
(a) (i) சிறுபான்மை சமுதாயங்களிலிருந்து ஒரு தலைவர்;
மற்றும்
(ii) மதவாரியான சிறுபான்மை சமுதாயங்களிலிருந்து எட்டும், மொழிவாரியான சிறுபான்மை சமுதாயங்களிலிருந்து ஐந்துமாக, பதின்மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
(b) ஒரு மதவாரியான சிறுபான்மை சமுதாயத்திலிருந்து ஒருவரும், ஒரு மொழிவாரியான சிறுபான்மை சமுதாயத்திலிருந்து மற்றொருவருமாக உறுப்பினர்களுக்கிடையேயிருந்து பெயர் குறித்து நியமிக்கப்பட வேண்டிய இரண்டு துணைத் தலைவர்கள்; மற்றும்
(c) சிறுபான்மையினர் நல ஆணையர் உறுப்பினர்- செயலாளர்;
5 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு4ஆம் பிரிவிற்கான 4. முதன்மைச் சட்டத்தின், 4ஆம் பிரிவில், -
திருத்தம்.
(i) ஓரத்தலைப்பில், 'தலைவர்' எனும் சொற்றொடருக்காக, "தலைவர், துணைத் தலைவர்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) (1)ஆம் உட்பிரிவில், "தலைவர்" எனும் சொற்றொடருக்காக, "தலைவர், துணைத் தலைவர்கள் " எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(iii) (2)ஆம் உட்பிரிவில், இரண்டு இடங்களில் வருகின்ற "தலைவர்" எனும் சொற்றொடருக்காக, "தலைவர், துணைத் தலைவர்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(iv) (3)ஆம் உட்பிரிவில், "தலைவர்" எனும் சொற்றொடருக்காக, "தலைவர், துணைத் தலைவர்கள் " எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(v) (4)ஆம் உட்பிரிவில், இரண்டு இடங்களில் வருகின்ற "தலைவர்" எனும் சொற்றொடருக்காக, "தலைவர், துணைத் தலைவர்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(vi) (5)ஆம் உட்பிரிவிற்கான வரம்புரையில், "தலைவர்", எனும் சொற்றொடருக்காக, "தலைவர் அல்லது துணைத் தலைவர்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
6ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
5. முதன்மைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில் "தலைவர்", எனும் சொற்றொடருக்காக, "தலைவர், துணைத் தலைவர்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
9ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவில் (3) ஆம் உட்பிரிவில், "தலைவர்", எனும் சொற்றொடருக்காக, "தலைவர், துணைத் தலைவர்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
13ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
7. முதன்மைச் சட்டத்தின் 13 ஆம் பிரிவில் "தலைவர்", எனும் சொற்றொடருக்காக, "தலைவர், துணைத் தலைவர்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
16ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
8. முதன்மைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், (a) ஆம் கூறில், "தலைவர்", எனும் சொற்றொடருக்காக, "தலைவர், துணைத் தலைவர்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை
2010 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/2010), 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையமானது, சிறப்பான, திறமையான மற்றும் நேர்மையான நபர்களுக்கிடையேயிருந்து, அரசால் பெயர் குறித்து நிமிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர் மற்றும் ஒன்பது பிற உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். கூறப்பட்ட ஆணையத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒன்பது உறுப்பினர்களிலிருந்து பதிமூன்று உறுப்பினர்களாக அதிகரிக்கவும் அவர்களுள், மதவாரியான சிறுபான்மை சமுதாயங்களிலிருந்து எட்டு நபர்களையும் மொழிவாரியான சிறுபான்மை சமுதாயங்களிலிருந்து ஐந்து நபர்களையும் மற்றும், மேலும் அவ்வுறுப்பினர்களுக்கிடையேயிருந்து ஒரு மதவாரியான சிறுபான்மை சமுதாயத்திலிருந்து ஒருவரும், ஒரு மொழிவாரியான சிறுபான்மை சமுதாயத்திலிருந்து மற்றொருவருமாக, இரண்டு நபர்களைத் துணைத் தலைவராக பெயர் குறித்து நியமிக்கவும் அரசானது முடிவு செய்துள்ளது. மேற்சொன்ன நோக்கத்திற்காக கூறப்பட்ட தமிழ்நாடு சட்டமானது 21/2010 திருத்தம் செய்யப்படல் வேண்டும்.
2. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
சீ. வளர்மதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
செயலாளர்.
சென்னை-600 009, 25, பிப்ரவரி 2021.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.