Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances

Published 10 March 2021

Type
Ordinary
Gazette no.
10
Part
Part IV
Notifications
Tamil Nadu Act No. 12 of 2020 to 13 of 2020 and 36 of 2020 to 39 of 2020
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-03-10.Ordinary_10_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2021 [விலை : ரூ. 8.00 காசுவிலை : ரூ. 8.00 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 10]

சென்னை, புதன்கிழமை, மார்ச் 10, 2021 மாசி 26, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

2020 டிசம்பர் 29 அன்று ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்ட பின்வரும் அவசரச் சட்டமானது ஈங்கிதனால் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-

தமிழ்நாடு அவசரச் சட்டம் எண் 12/2020.

1994&ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும்

திருத்தம் செய்வதற்கானதொரு அவசரச் சட்டம்.

தமிழ்நாடு சட்டமன்றமானது, அமர்வில் இல்லாதிருப்பதால் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் தற்போதுள்ள சூழ்நிலைகள் இதில் இதன்பின்பு காணப்படுகின்ற நோக்கங்களுக்காக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக அவருக்காக அவசியமானதாக இருப்பதாக அவர் மனநிறைவடைந்திருப்பதால்;

தற்போது, ஆகையால் அரசமைப்பின் 213ஆம் உறுப்பின் (1)-ஆம் கூறால் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் ஈங்கிதனால் பின்வரும் அவசரச் சட்டத்தைப் பிரகடனம் செய்கிறார்:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்த அவசரச் சட்டம், 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு

தொடக்கம்.

ஊராட்சிகள் (நான்காவது திருத்த) அவசரச் சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

261-A ஆம் 21 / 1994.

பிரிவிற்கான

திருத்தம்.

2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 261-A ஆம் பிரிவில், "2020ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" எனும் சொற்றொடருக்காக, "2021ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

[1]

IV-2(10)(T-Sup)-12

விளக்கவுரை

2016 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4 ஆம் தேதியிட்ட, நீதிப்பேராணை மனு எண் 33984/2016-ல் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். மூன்றடுக்கு ஊராட்சிகளில் கூறப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலமானது, அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு, இறுதியாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31 ஆம் நாள்வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

2. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 ஆம் தேதியிட்ட நீதிப் பேராணை (உரிமையியல்) மனு எண் 1443/2019 உடனிணைந்த, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 6 ஆம் தேதியிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு வழக்கு எண்கள் 5467-5469/2017 இல் இடைக்கால மனு எண் 182868/2019 இல் மாண்பமை இந்திய உச்சநீதிமன்றமானது, மற்றவற்றுடன் புதியதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகியவை நீங்கலாக கிராம, இடைநிலை மற்றும் மாவட்ட அளவிலான ஊராட்சிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்துவதற்கு எதிர் மனுதாரர்-அதிகார அமைப்புகளுக்கு கட்டளையிட்டது. அதற்கிணங்கிய வகையில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமானது மேற்சொன்ன புதியதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைத் தவிர கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைவர் பதவிக்கான சாதாரண தேர்தல்கள் நடத்தி முடித்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 06.01.2020 அன்று தங்களின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்கள்.

3. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 ஆம் தேதியிட்ட நீதிப் பேராணை (உரிமையியல்) மனு எண் 1443/2019 உடனிணைந்த, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 6 ஆம் தேதியிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு வழக்கு எண்கள் 5467-5469/2017 இல் இடைக்கால மனு எண் 182868/2019 இல் மாண்பமை இந்திய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தமிழ்நாடு மாநில தொகுதி வரையறை ஆணையமானது புதியதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைப் பொறுத்தவரையில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் தொகுதி மறுவரையறையை இறுதி செய்வதற்காக மறுவரையறை அலுவலர்களுடன் தொடர் கூட்டங்களை நடத்தியது. அதன் பரிந்துரைகளை அரசிற்கு சமர்ப்பித்து அவை அரசின் பரிசீலனையில் உள்ளது. மேலும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமானது கூறப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பொருட்டு உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியல்களை தயாரித்தல், வாக்குச் சாவடிகளை அடையாளம் காணுதல், சில குறிப்பேடுகளை திருத்தம் செய்தல், தேர்தல்களை நடத்துவதற்காக அலுவலர்களுக்கு பயிற்சியளித்தல் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் தோராயப்படுத்துதலுக்கான மென்பொருளினை உருவாக்குதல் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது.

4. இதற்கிடையில், கோவிட்-19 என்ற பெருந்தொற்று நோயின் திடீர்த் தோன்றலின் காரணமாக, உச்ச எச்சரிக்கை / பொது முடக்கமானது, மைய அரசு மற்றும் மாநில அரசுகளினால் அறிவிக்கப்பட்டது மற்றும் 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (மையச் சட்டம் 2/1974) 144 ஆம் பிரிவின்படியான ஆணை ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் விளைவாக, அலுவலகங்களில் அரசின் வரையறுக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் அரசு இயந்திரங்களானது, கோவிட்-19 நோய்த் தொற்று திடீர் தோன்றலின் காரணமாக மக்களின் துன்பத்தினை தணிப்பதற்காக, போர்க்கால அடிப்படையில் தடுப்பு, பாதுகாப்பு, துயர் தணிப்பு மற்றும் நலன் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஈடுபட்டது. சில கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளது மற்றும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, புதியதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் மூன்றடுக்கு ஊராட்சிகளின் வட்டார எல்லைக்குட்பட்ட தொகுதிகளை வரையறை செய்வதற்கான அறிவிக்கையையும் முன்னேற்பாடான பணிகளையும் திட்டமிடப்பட்ட நடவடிக்கை பட்டியலின்படி நிறைவு செய்ய இயலவில்லை.

5. மேலும், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் வட்டார எல்லைக்குட்பட்ட தொகுதிகளை வரையறுப்பதற்கான அறிவிக்கைக்குப் பின்னர், அனைத்து மூன்றடுக்கு ஊராட்சிகளிலும் பட்டியலின வகுப்பினர், பட்டியலின பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான தொகுதி இட ஒதுக்கீடானது, அறிவிக்கப்படுதல் வேண்டும். அதன்பின்பு, அனைத்து மூன்றடுக்கு ஊராட்சிகளிலும் பட்டியலின வகுப்பினர், பட்டியலின பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான தலைமைப் பதவியின் ஒதுக்கீடானது, அரசால் அறிவிக்கப்படுதலும் வேண்டும். அதன் பின்பு மட்டுமே தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமானது, இடையூறு ஏதும் இல்லாமல் தேர்தல் செயல்பாட்டில் திறம்பட பங்கேற்பதற்காக மககள் / வாக்காளர்கள் / வேட்பாளர்கள் / தேர்தல் இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொள்வதற்கு உகந்த சூழ்நிலையை உறுதி செய்த பின்னர், மாண்பமை உச்ச நீதிமன்றத்தினால் ஆணையிடப்பட்டவாறு, மறு சீரமைக்கப்பட்ட புதிய ஒன்பது மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தல்களை நடத்துவதற்கான அட்டவணையை அறிவிப்பு செய்திட முடியும். மேற்சொன்னதன் காரணமாக, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக முன்னேற்பாடான பணிகளை முடிப்பதற்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் கால அவகாசமானது தேவைப்படுகிறது. அதன் விளைவாக, மாண்பமை உச்சநீதிமன்றமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 4ஆம் தேதியிட்ட, அதன் ஆணையில், நீதிப் பேராணை (உரிமையியல்) மனு எண் 1443/2019-ல் வழங்கப்பட்ட 11-12-2019-ஆம் தேதியிட்ட நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்குவதற்கு ஆறு மாத காலம் நீட்டிப்புக் கோரிய இடைக்கால மனு எண் 114726/2020-ஐ அனுமதித்துள்ளது.

3

6. மேற்கண்ட சூழ்நிலைகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31 தேதியன்று முடிவடைகிறது. அதன் காரணமாக தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை 2021 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 30 ஆம் தேதி வரை மேலும் ஆறு மாத காலத்திற்கு அல்லது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான சாதாரண தேர்தல்களுக்குப் பின்பு நடத்தப்படும் முதல் கூட்டம் வரை, இதில் எது முந்தையதோ அது வரையில் நீட்டிப்பதற்காக, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 261-A ஆம் பிரிவினை திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது.

7. இந்த அவசரச் சட்டம் மேற்சொன்ன முடிவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார்,

அரசுச் செயலாளர்,

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

4 5

2020 டிசம்பர் 29 அன்று ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்ட பின்வரும்

அவசரச் சட்டமானது ஈங்கிதனால் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-

தமிழ்நாடு அவசரச் சட்டம் எண் 13/2020.

தமிழ்நாடு மாநிலத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சட்டத்தை

மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு அவசரச் சட்டம்.

மாநிலச் சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறாததாலும், இதன்பின்பு காணுகின்ற நோக்கங்களுக்காகத் தான் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதைத் தேவையானதாக்குகின்ற சூழ்நிலைகள் இருந்து வருகின்றன என்று தமிழ்நாடு ஆளுநர் தெளிவுறக் காண்பதாலும்;

எனவே அரசமைப்புச் சட்டத்தின், 213ஆம் உறுப்பின் (1)ஆம் கூறின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, ஆளுநர் பின்வரும் அவசரச் சட்டத்தை இப்போது இதன் மூலம் பிறப்பிக்கிறார்:-

பகுதி-I.

முன்னுரை.

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் அவசரச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி

தொடக்கம்.

சட்டங்கள் (நான்காம் திருத்த) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பகுதி-II.

1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

414-B ஆம் IV/1919.

பிரிவிற்கான திருத்தம்.

2. 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்தின் 414-B ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-III.

1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

375-B ஆம் V/1920.

பிரிவிற்கான திருத்தம்.

3. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 375-B ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாகஅமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-IV.

1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

15/1971.

510-AAA ஆம் பிரிவிற்கான திருத்தம்.

4. 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 510-AAA ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-V.

1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

511-AAA ஆம் 25/1981.

பிரிவிற்கான திருத்தம்.

5. 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின் 511-AAA ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

6

பகுதி-VI.

1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10-Aஆம்

தமிழ்நாடு சட்டம்

27/1994.

பிரிவிற்கான திருத்தம்.

6. 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-VII.

1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10-Aஆம்

தமிழ்நாடு சட்டம்

28/1994.

பிரிவிற்கான திருத்தம்.

7. 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-VIII.

1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10-Aஆம்

தமிழ்நாடு சட்டம்

29/1994.

பிரிவிற்கான திருத்தம்.

8. 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-IX.

2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம்

தமிழ்நாடு சட்டம் பிரிவிற்கான திருத்தம்.

7/2008.

9. 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-X.

2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம்

தமிழ்நாடு சட்டம்

8/2008.

பிரிவிற்கான திருத்தம்.

10. 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XI.

2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம்

தமிழ்நாடு சட்டம்

26/2008.

பிரிவிற்கான திருத்தம்.

11. 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XII.

2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம்

தமிழ்நாடு சட்டம்

27/2008.

பிரிவிற்கான திருத்தம்.

12. 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

7

பகுதி-XIII.

2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

9-Aஆம் பிரிவிற்கான 24/2013.

திருத்தம்.

.

13. 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XIV.

2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

9-A ஆம் பிரிவிற்கான 25/2013.

திருத்தம்.

14. 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XV.

2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

10 ஆம் பிரிவிற்கான 10/2019.

திருத்தம்.

15. 2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின்,(4) ஆம் உட்பிரிவில் ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XVI.

2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

10 ஆம் பிரிவிற்கான 11/2019.

திருத்தம்.

16. 2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின்,(4) ஆம் உட்பிரிவில் ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XVII.

2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

10 ஆம் பிரிவிற்கான 24/2019.

திருத்தம்.

17. 2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின்,(4) ஆம் உட்பிரிவில் ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

8

விளக்கவுரை.

2016 அக்டோபர் 4 ஆம் தேதியிட்ட நீதிப்பேராணை மனு எண் 33984/2016-ல் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்கி பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் தனி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் கூறப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலமானது அவ்வப்போது நீட்டிக்கப்பட்டும், இறுதியாக 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

2. புதிதாக மறுசீரமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில், அதாவது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசியில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் சிற்றொகுதிகளின் எல்லை மறுவரையறை தொடர்பாக 2019 டிசம்பர் 11ஆம் தேதியிட்ட நீதிப்பேராணை (உரிமையியல்) எண் 1443/2019 உடனிணைந்த, 2019 டிசம்பர் 6 ஆம் தேதியிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு வழக்கு எண்கள் 5467-5469/2017இன் இடைக்கால மனு எண் 182868/2019 இல் மாண்பமை இந்திய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தமிழ்நாடு மறுவரையறை ஆணையமானது புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் சிற்றொகுதிகளை இறுதி செய்வதற்காக மாவட்ட மறுவரையறை அமைப்புடன் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியது மற்றும் அதன் பரிந்துரைகளை அரசிற்கு சமர்ப்பித்தது மற்றும் அவை அரசின் தீவிர பரிசீலனையின் கீழ் உள்ளன. மேலும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்களை நடத்துவதற்காக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமானது, உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல், வாக்குச் சாவடிகளை அடையாளம் காணுதல், சில சிற்றேடுகளைத் திருத்தம் செய்தல், மின்னணு வாக்கு இயந்திரங்களை கையாளுவதற்கு அலுவலர்களுக்கு பயிற்சியளித்தல் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் தோராயப்படுத்துதலுக்காகவும், மின்னணு வாக்கு இயந்திரங்களுக்காகவும் மென்பொருளினை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கான விரைவான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

3. இதற்கிடையில், கோவிட்-19 என்ற பெயருடைய தொற்றுநோயின் திடீர் பரவலின் காரணமாக, தீவிர எச்சரிக்கை / பொது முடக்கமானது, மைய அரசு மற்றும் மாநில அரசுகளினால் அறிவிக்கப்பட்டுள்ளன மற்றும் 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் 2/1974) 144 ஆம் பிரிவின் படியான ஆணை ஒன்றும் வெளியிடப்பட்டது. மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, அரசு அலுவலகங்களில் அரசின் குறிப்பிட்ட அளவு ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், அரசு இயந்திரம் மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள், கோவிட்-19 இன் திடீர் பரவலின் காரணமாக, மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தினை தணிப்பதற்காக, போர்க்கால அடிப்படையில் தடுப்பு, பாதுகாப்பு, துயர் தணிப்பு மற்றும் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகள் இப்போதும் நடைமுறையில் உள்ளது. மற்றும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மறுசீரமைக்கப்பட்ட புதிய ஒன்பது மாவட்டங்களில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் சிற்றொகுதிகளின் எல்லைகளை வரையறுப்பதற்கான அறிவிக்கையையும் சாதாரண தேர்தல்களை நடத்துதலுக்கான முன்னேற்பாடான பணிகளையும் திட்டமிட்டபடி நிறைவு செய்ய இயலவில்லை.

4. மேலும், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் சிற்றொகுதிகளின் எல்லை மறுவரையறை அறிவிக்கைக்குப் பின்னர், புதிதாக மறுசீரமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களின் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் சிற்றொகுதிகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடானது அறிவிக்கப்படுதல் வேண்டும். அதன்பின்பு மட்டுமே, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமானது இடையூறு ஏதுமில்லாமல் தேர்தல் செயல்பாட்டில் திறம்பட பங்கேற்பதற்காக மக்கள் / வாக்காளர்கள் / வேட்பாளர்கள் / தேர்தல் இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொள்வதற்கு உகந்த சூழ்நிலையை உறுதிசெய்த பின்னர், சாதாரண தேர்தல்களை நடத்துவதற்கான அட்டவணையை அறிவிக்கை செய்ய இயலும் . மேற்சொன்னதன் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக முன்னேற்பாடான பணிகளை பூர்த்தி செய்ய தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் கால அவகாசமானது தேவைப்படுகிறது. அதன் விளைவாக, மாண்பமை உச்சநீதிமன்றமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியிட்ட, அதன் ஆணையில், நீதிப்பேராணை (உரிமையியல்) மனு எண் 1443/2019-ல் வழங்கப்பட்ட 11-12-2019-ஆம்- தேதியிட்ட நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்குவதற்கு ஆறு மாத காலம் நீட்டிப்புக் கோரிய இடைக்கால மனு எண் 114726/2020-ஐ அனுமதித்துள்ளது.

5. மேற்கண்ட சூழ்நிலைகளில், தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 2020 டிசம்பர் 31 ஆம் தேதியன்று முடிவடைவதன் காரணமாக, தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2021 ஜூன் 30 வரையிலான மேலும் ஆறு மாத காலத்திற்கு அல்லது பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான சாதாரண தேர்தல்களுக்கு பின்பு நடத்தப்படும் மன்றத்தின் முதல் கூட்டம் வரை, இதில் எது முந்தையதோ அது வரையில் நீட்டிப்பதற்காக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்ய அரசானது முடிவு செய்தது.

9

6. இந்த அவசரச் சட்டமானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார்,

அரசுச் செயலாளர்,

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

10 11

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.

சட்டம் எண் 36/2020.

1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தை

மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்ட மன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்

தொடக்கம் வழங்கல் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, 2018 ஆம் ஆண்டு மே 27 ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

12 ஆம் பிரிவிற்கான XX / 1951

திருத்தம் 2. 1951 ஆம் ஆண்டு தமிழ் நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தின் (இதன் பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 12-ஆம் பிரிவில், (3) ஆம் மற்றும் (3-a)-ஆம் உட்பிரிவுகளுக்காக பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும் அதாவது:-

"(3). (1)-ஆம் உட்பிரிவில், "குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும், மாநில அரசினால் உருவாக்கப்பட்ட விதிகளினால் தீர்மானிக்கலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு ஒரு மாதத்திற்கு இருநூற்று ஐம்பது ரூபாய் வாடகை செலுத்துவதன் பேரில் ஒரு அடுக்குக் குடியிருப்பின் ஒதுக்கீட்டிற்கு உரிமையுடையவராகுதல் வேண்டும்".

3. முதன்மைச் சட்டத்தின் 12-D ஆம் பிரிவிற்கு பின்பு பின்வரும்

பிரிவானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

12E-எனும் புதிய பிரிவினைப் புகுத்துதல் "12-E முன்னாள் உறுப்பினர்களுக்கு விடுதி இடவசதி.- சட்டமன்றப் பேரவை அல்லது சட்டமன்ற மேலவையின் உறுப்பினராக இருந்த அனைத்து நபரும், மாநில அரசினால் உருவாக்கப்பட்ட விதிகளினால் தீர்மானிக்கலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விதிகளில் வகுத்துரைக்கலாகிறவாறான அத்தகைய வீதங்களில் வாடகையைச் செலுத்துவதன் பேரில் விடுதியில் இடவசதிக்கு உரிமையுடையவராகுதல் வேண்டும்:

வரம்புரையாக: சென்னையில் சுதந்திர தின விழாவில் மற்றும் குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக பணம் செலுத்தாமலேயே இலவசமாக விடுதியில் இடவசதி வழங்குதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், . கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர்,

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

12 13

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 37/2020சட்ட எண் 37/2020

குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டம்.

இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் வழக்கத்திலிருந்தவை அல்லது மற்றபடி வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற அல்லது குறித்த வகையில் மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன் மூலம் தவிர பிறவாறு நடைமுறையில் இருக்கக்கூடியது அற்றுபோகக் கூடியவையான இருப்பவை கட்டாயமாக நீக்கறவு செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதாலும்;

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்

பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு.

1. இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல் (இரண்டாம்)

சட்டம் என்று வழங்கப்பெறும்.

2. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த சில இயற்றுச் சட்டங்களின் நீக்கறவு.

காப்புரைகள்.

3. இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படும் இயற்றுச் சட்டம் எதுவும் பிற இயற்றுச் சட்டம் எதனையும் பாதிக்காது. அதில் நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிற போதும், சேர்க்கப்பட்டிருக்கிற போதும் அல்லது சுட்டப்படும் போதும்;

மற்றும் இந்தச் சட்டம் செல்லுந்தன்மையையோ, செல்லாத் தன்மையையோ அல்லது செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும் அல்லது பாதிக்கப்பட்டதை அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையையோ அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டினை அதிகப்படியானதையோ அல்லது ஏற்படுத்தப்பபட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும் அல்லது தொடர்பான நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும் அல்லது பற்றினை விடுவிப்பதை, தண்டம், உதவியையோ, கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது தேவையையோ ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும் கடந்தகால செயல் அல்லது விசயம் எதனையும் பாதிக்காது;

கொள்கை எதனையும் அல்லது சட்டத்தின் ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட அதிகாரவரம்பை அல்லது அமைவுமுறையையோ அல்லது வாதுரையின்போதோ, வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும் பழக்கவழக்கத்தையோ, வழக்காறையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அலுவலகத்தையோ அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும் அவை முறையே எந்த முறையிலும் ஈங்கிதனால் இயற்றுச் சட்டத்தில் அல்லது இயற்றுச் சட்டம் எதிலிருந்தும் எந்த முறையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதன்மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றிருக்கிற எதுவும் பாதிக்காத வகையில் இருக்கும்;

இயற்றுச் சட்டம் எதுவும் புத்துயிரளித்தல் அல்லது அதிகாரவரம்பு எதனையும் மீட்டெடுத்தல், அலுவலகம், பழக்கவழக்கம், பொறுப்பு, உரிமை, உரிமை மூலம், சலுகை, தடை, விலக்கு, பயன்படுத்துதல், செய்தொழில், நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது தற்பொழுது இல்லாமல் இருக்கும் பொருள் அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகாது.

14

இணைப்புப் பட்டியல்.

நீக்கறவுகள்.

(2ஆம் பிரிவைக் காண்க.)

வ.எண் ஆண்டு எண் குறுந்தலைப்பு

(1) (2) (3)

(4)

குடியரசுத் தலைவரின் சட்டம்.

1. 1988 6 1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

தமிழ்நாடு சட்டங்கள்

2. 1957 X 1957 ஆம் ஆண்டு கூலி கொடுத்தல் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.

3. 1958 XVI 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகப்பேறுச் சலுகை (திருத்தச்) சட்டம்.

4. 1958 XVII 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம்.

5. 1959 7 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

6. 1960 9 1960 ஆம் ஆண்டு தமிழ்நாடு நாணயமடித்தல் (குறிப்பினை மாற்றுதல்) சட்டம்.

7. 1960 24 1960 ஆம் ஆண்டு தொழிலக வேலைவாய்ப்பு (நிலை ஆணைகள்)

(தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.

8. 1964 10 1964 ஆம் ஆண்டு நில மேம்பாட்டுக் கடன்கள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.

9. 1965 1 1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

10. 1969 17 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

11. 1975 7 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

12. 1975 33 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய

(இரண்டாம் திருத்தச்) சட்டம்.

13. 1981 28 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

14. 1982 5 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

15. 1982 21 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய

(இரண்டாம் திருத்தச்) சட்டம்.

16. 1982 44 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய

(மூன்றாம் திருத்தச்) சட்டம்.

17. 1983 31 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

18. 1985 30 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

19. 1986 67 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

20. 1987 4 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

21. 1987 40 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய

(இரண்டாம் திருத்தச்) சட்டம்.

22. 1989 9 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

23. 1989 32 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய

(இரண்டாம் திருத்தச்) சட்டம்.

15

வ.எண் ஆண்டு எண் குறுந்தலைப்பு

(1) (2) (3)

(4)

24. 1990 5 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

25. 1992 4 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

26. 1992 49 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய

( இரண்டாம் திருத்தச்) சட்டம்.

27. 1993 12 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார். கோபி ரவிக்குமார்,

அரசுச் செயலாளர்,

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

16 17

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 38/2020சட்ட எண் 38/2020

1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்களுடைய எழுத்தர்கள்

நல நிதியச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.

குறுந்தலைப்பு இந்தியக் குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்

பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

மற்றும் தொடக்கம்.

1. (1) இந்தச் சட்டம், 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்களுடைய

எழுத்தர்கள் நல நிதியத் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறிக்கக்கூடிய அத்தகைய

தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு

12-ம் சட்டம் 25/1999.

பிரிவிற்கான திருத்தம்.

2. 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்களுடைய எழுத்தர்கள் நல நிதியச்சட்டத்தின் (இதன் பின்பு முதன்மைச்சட்டம் என குறிப்பிடப்படுவதான) 12ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் "இரண்டு ரூபாய்" என்ற சொற்றொடருக்கு "பத்து ரூபாய்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

15-ம் 3. முதன்மை சட்டத்தின் 15-ஆம் பிரிவில்,

பிரிவிற்கான திருத்தம்.

(1) (3)-ஆம் உட்பிரிவில் "நூறு ரூபாய்" என்கின்ற சொற்றொடருக்காக "ஐநூறு

ரூபாய்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(2) (4)-ஆம் உட்பிரிவில் "நூறு ரூபாய்" என்கின்ற சொற்றொடருக்காக "ஐநூறு

ரூபாய்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(3) (5)-ஆம் உட்பிரிவில் "இரண்டாயிரம் ரூபாய்" என்கின்ற சொற்றொடருக்காக "ஐந்தாயிரம் ரூபாய்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

16-ம்

பிரிவிற்கான திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவில் (2)-ஆம் உட்பிரிவில் "இரண்டு இலட்சம் ரூபாய்" என்கின்ற சொற்றொடருக்காக "நான்கு லட்சம் ரூபாய்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச.. கோபி ரவிக்குமார்கோபி ரவிக்குமார்,

அரசுச் செயலாளர்,

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

18 19

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 39/2020சட்ட எண் 39/2020

2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தினை மேலும்

திருத்துவதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி

(திருத்தச்) சட்டம் என அழைக்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது 2020-ஆம் ஆண்டு மே திங்கள் 4-ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

இரண்டாம் 2. 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் இரண்டாம்

32/2006.

இணைப்புப்பட்டியலில்,—

இணைப்புப் பட்டியலுக்கான திருத்தம்.

(1) வரிசை எண் 6-க்கு எதிராக, (4)-ஆம் நெடும்பத்தியில், "34 விழுக்காடு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "15 விழுக்காடு உடன் லிட்டருக்கு 13.02 ரூபாய்கள்" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) வரிசை எண் 7-க்கு எதிராக, (4)-ஆம் நெடும்பத்தியில், "25 விழுக்காடு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "11 விழுக்காடு உடன் லிட்டருக்கு 9.62 ரூபாய்கள்" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச.. கோபி ரவிக்குமார்கோபி ரவிக்குமார்,

அரசுச் செயலாளர்,

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 10 March 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-03-10.Ordinary_10_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-03-10.Ordinary_10_Part-IV_Section-2-T-Sup.