©
GOVERNMENT OF TAMIL NADU 2021
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 15] CHENNAI, WEDNESDAY, APRIL 14, 2021 Chithirai 1, Pilava, Thiruvalluvar Aandu–2052
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை Pages.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம்
.. .. .. 28-31 மற்றும் அதற்கான பொறுப்பாளர்களை நியமித்தல். .. .. ..
[27]
DTP—II-1 (15)28 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1
NOTIFICATIONS BY GOVERNMENT
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
தலைமைச் செயலகம், 14 ஏப்ரலா 2021.
No.II(1)/ADTW/7/2021.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் & தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மற்றும் அதற்கான [ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் & தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மற்றும் அதற்கான பொறுப்பாளர்களை நியமித்தல் & ஆணை வெளியிடப்படுகிறது.] பொறுப்பாளர்களை நியமித்தல் & ஆணை வெளியிடப்படுகிறது.]
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:
[அரசாணை (நிலை) எண் 30, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந-6)த் துறை, 25 பிப்ரவரி 2021, மாசி 13, சார்வரி, திருவள்ளுவர் ஆண்டு-2052.]
படிக்கப்பட்டது:-
1. அரசாணை (நிலை) எண்.71, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள்: 11.6.2007.
2. அரசாணை (நிலை) எண்.129, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள்: 03.11.2010.
3. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு நாள்: 15.2.2021.
4. மாண்புமிகு அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் அவர்களின் குறிப்பு நாள்: 23.02.2021.
5. ஆணையர், ஆதிதிராவிடர் நலம் அவர்களின் ந. க. எண். ஏ1/2034/2020, நாள்: 24.02.2021
6. தாட்கோ, மேலாண்மை இயக்குநர் அவர்களது கடிதம் எண்.எஸ்.2/4007/2009, நாள்: 24.02.2021.
ஆணை: எண். 30, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந6)த் துறை, 25 பிப்ரவரி 2021
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் தூய்மைப் பணிபுரிவோருக்கு கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கென அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணித்து, அவற்றின் முன்னேற்றத்தை உறுதி செய்யவும், 13 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 11 அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டு ''தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம்'' அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.
2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தின் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 13 பேரும் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களாக 12 பேர்களையும் கொண்டு இவர்களின் பதவிக் காலமானது 11.06.2007 முதல் 10.06.2010 வரையிலான மூன்றாண்டுகள் நிறைவுற்ற நிலையில், மேலும் ஓராண்டு காலம் அதாவது 10.06.2011 வரை நீட்டித்து ஆணைகள் வெளியிடப்பட்டது.
3. தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் வசதி போன்ற மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அதன் மூலம் ஏராளமான தூய்மை பணியாளர்கள் மறு வாழ்வு பெற்று வருகின்றனர். எனவே, தூய்மை பணி ஆற்றுவோரின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட ''தூய்மை பணியாளர் நல வாரியத்திற்கு'' புதிதாக உபதலைவர் மற்றும் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டு இவ்வாரியம் அமைக்க அரசு உத்தேசித்து அவ்வாறே ஆணையிடுகிறது.
4. இந்த தூய்மை பணியாளர் நல வாரியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகவும், திரு.கு.கோவிந்தராஜ், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்களை உபதலைவராகவும், கீழ்க்கண்ட அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களையும் கொண்டு செயல்படும்.
அலுவல் சார்ந்த உறுப்பினர்கள்
1. செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சென்னை-9 2. செயலாளர், நிதித்துறை, சென்னை-9 3. செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை-9 4. செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சென்னை-9 5. செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை, சென்னை-9 6. செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை-9 7. செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சென்னை-9 8. ஆணையர், ஆதிதிராவிடர் நலம், சென்னை-5 9. இயக்குநர், பழங்குடியினர் நலம், சென்னை-5 10. மேலாண்மை இயக்குநர், தாட்கோ, சென்னை-18 11. இயக்குநர், பேரூராட்சிகள், சென்னை-28 12. ஆணையர், நகராட்சி நிர்வாகம், சென்னை-28 13. இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள், சென்னைApr. 14, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 29
அலுவல் சாரா உறுப்பினர்கள்
1. திரு. S. ஆனந்தன், வழக்கறிஞர், 19, நேதாஜி நகர், அனுப்பர்பாளையம், திருப்பூர் மாவட்டம், கைப்பேசி எண்.9488051527.
2. திரு. கொ. வரதராஜன், B.E., ஓய்வு பெற்ற உதவி பொது மேலாளர், (SAIL), C-37/13, மோகன் நகர், சேலம்&636 030. கைப்பேசி எண்.9443242872.
3. திரு. S.T. கல்யாண சுந்தரம், மாநகராட்சி குடியிருப்பு, அவனியாபுரம் (Post), மதுரை, மதுரை மாவட்டம், கைப்பேசி எண்.9360688258
4. திரு. R. சாமிநாதன், த/பெ. இராமன், 77A, அன்பு நகர், இராயனூர், தோரணகல்பட்டி, (Post), கரூர்&639 003, கரூர் மாவட்டம் கைப்பேசி எண்.9443868877
5. திரு. M. காமராஜ், B.Sc., த/பெ. மருதை, 318, காமராஜர் நகர், லாலாபேட்டை (Post), கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம். கைப்பேசி எண்.9345275631
6. திரு. என்.டி.ஆர். நடராஜ், த/பெ. இராமசாமி, 4/481, கார்த்திக் நகர், கோவில் வழி, மேற்கு முத்தனம்பாளையம் (போஸ்ட்), திருப்பூர்&641 606. திருப்பூர் மாவட்டம்.
7. திரு. செல்வகுமார், MSW 29, இராஜு நாயுடு லே அவுட், வீரகேரளம், சுகர்கேன் (Post), கோயம்புத்தூர்-7. கைப்பேசி எண்.9843039910
8. திரு. இஸ்ரேல், தலைவர் (TAAMS) சென்னை. கைப்பேசி எண்.9791845306
9. திரு. வி. இராமச்சந்திரன், த/பெ. வேலுச்சாமி, No. 25, அமுது இல்லம், பெத்தானியபுரம், மதுரை-16. கைப்பேசி எண். 9655651098
10. திரு. உக்கடம் நாகேந்திரன், த/பெ. முருகன், 222, ஆதிமுலம் காலனி, தெற்கு உக்கடம், கோவை-641 001. கைப்பேசி எண். 9488051527.
30 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 111. திரு. நந்தகோபால், த/பெ. ரெங்கசாமி, 5/60, எம்.வி.கே. வீதி, இடையார் பாளையம், குனியம்முத்தூர், கோயமுத்தூர். கைப்பேசி எண். 9894247117.
12. திரு. ஏ. பாலசுப்பிரமணியம், த/பெ. ஆறுமுகம், 9/350ஏ, சத்தியா நகர், 6-வது தெரு, பழனி தாலுகா, திண்டுக்கல் மாவட்டம். கைப்பேசி எண். 90035 50084.
13. திரு. கோ. ராஜமாணிக்கம், த/பெ. கருப்பையா, எண் 12, கே.கே. நகர், ராமநாதபுரம் மாவட்டம், கைப்பேசி எண். 93445 11807.
14. திரு. யுவராஜ் (எ) அருண், த/பெ. ஆறுமுகம், 17, திருமலைசாமி தெரு, சித்தாபுதூர், கோயம்புத்தூர் - 641 044. கைப்பேசி எண். 94431 00006.
5. தூய்மை பணியாளர் நல வாரியமானது ஒரு முதல்நிலை குழுவாக செயல்படும். இந்த வாரியத்தின் உபதலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக மேலாண்மை இயக்குநர், தாட்கோ அவர்களே தொடர்ந்து செயல்படுவார்.
6. ஆதிதிராவிடர் நல ஆணையர் மற்றும் தாட்கோ மேலாண்மை இயக்குநர் ஆகியோரது கருத்துருவினை அரசு நன்கு பரிசீலனை செய்து புதிதாக நியமனம் செய்யப்படும் உபதலைவருக்கான பணிகள் இணைப்பில் கண்டவாறு ஒதுக்கீடு செய்து இதன்மூலம் அரசு ஆணையிடுகிறது.
7. புதிதாக நியமிக்கப்படும் உபதலைவருக்கான தேவையான குறைந்தபட்ச அலுவலக வசதி, மகிழுந்து மற்றும் மதிப்பூதியம் தாட்கோ மூலமாக வழங்கலாம்.
8. இவ்வாரியத்தின் உபதலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் அவ்வப்போது நடைமுறையில் இருக்கும் விதிகளுக்குட்பட்டு பயணப்படி மற்றும் தினப்படி பெற அனுமதி அளிக்கப்படுகிறது. அலுவல் சாரா உறுப்பினர்களின் பயணப்படி / தினப்படி பட்டியல்களை பெற்று வழங்க ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
9. இச்செலவினம் "2225 ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - 01 ஆதிதிராவிடர் நலன் - 001 நெறியப்படுத்துதலும் நிருவாகமும் - AC தலைமையிடப் பணியாளர்கள் - ஆதிதிராவிடர் நலத்துறை - 304 பயணச் செலவுகள் - 01 சுற்றுப் பயணப்படிகள் (IFHRMS த.தொ.கு. 2225 01 001 AC 30401)" என்ற தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும்.
10. இவ்வாணைக்கு அரசாணை (நிலை) எண்.1177, நிதி (படிகள் 1), நாள் 19-9-97இன்படி நிதித்துறையின் இசைவு தேவையில்லை.
(ஆளுநரின் ஆணைப்படி)
ஷம்பு கல்லோலிகர்,ஷம்பு கல்லோலிகர், அரசு முதன்மைச் செயலாளர் (முகூ.பொ).
இணைப்புஇணைப்பு
உபதலைவர் அவர்களின் பணிகள் கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு செய்யப்படுகிறது உபதலைவர் அவர்களின் பணிகள் கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு செய்யப்படுகிறது
(i) ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கென அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணித்து இப்பிரிவினரின் முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும்.
(ii) புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னேற அவ்வப்போது ஆலோசனை வழங்க வேண்டும்.
(iii) அரசு நலத் திட்டங்களை உறுப்பினர்களுக்கு பெற்றுத் தருதல்.
(iv) தூய்மை பணியாளர்கள் பெருவாரியாக உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி துறையினை சார்ந்த பணியாளர்கள் நலம் பேணுதல், அரசு மருத்துவ மனையில் உள்ள தூய்மை பணியாளர்கள், அரசு கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் பணியாற்றிடும் தூய்மை பணியாளர்கள் நலம் பேணுதல், தொழிலாளர்கள் மற்றும் வேலை வாய்ப்புத் துறையில் கண்டறியப்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பிற அரசு துறைகளில் பணியாற்றிடும் தூய்மை பணியாளர்களுக்காக அரசு மற்றும் பிற அரசு சார்ந்த அமைப்புகளால் இவர்களது நலம் பேணிட ஒதுக்கீடு செய்யப்படும் நிதியொதுக்கீடு, இவர்களது மேம்பாட்டிற்காகவும் நலம் பேணுவதற்காகவும் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து இது தொடர்பாகApr. 14, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 31 மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அரசுக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் அவ்வப்போது அறிக்கை அனுப்பும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
(v) தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு நலத்திட்டங்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
ஷம்பு ம்பு கல்ல்ேலோலிகர்லாலிகர்,
அரசு முதன்மைச் செயலாளர் (முகூ.பொ).
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU