© தமிழ்நாடு அரசு 2021
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 2.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 20] சென்னை, புதன்கிழமை, மே 19, 2021 வைகாசி 5, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2052
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 32, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 17 பிப்ரவரி 2021.] 1970 ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 37/1970) பிரிவு (6)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 10-12-2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii பிரிவு-2-இல் 784 ஆம் பக்கத்தில் (ஆங்கிலம்) வெளியிடப்பட்டுள்ள தொழிலாளர் (ம) வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ(ம)வே/741/2014 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழே விவர அட்டவணையின் நெடும்பத்தி (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை மேற்சொன்ன சட்டத்தின் அத்தியாயம்-iii-இன் செயல் நோக்கங்களுக்காக பதிவு செய்ய அலுவலர்களாக இதனால் நியமனம் செய்வதோடு, அந்த விவர அட்டவணையின் நெடும்பத்தி (3)-இன் 'நிகரான பதிவுகளில், குறிப்பிடப்பட்டுள்ளவாறு மேற்சொன்ன சட்டத்தின்கீழ் அல்லது சட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயற்படுத்தக்கூடிய எல்லைகளையும் இதனால் வரையறை செய்கிறார்.
அட்டவணை.
| தொடர் எண் ( 1 ) | நபர்கள் ( 2 ) | உள்ளூர் எல்லைகள் ( 3 ) |
| 1. | தொழிலாளர் துறை இணைஆணையர்-i-இன் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், சென்னை. | காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் வருவாய் மாவட்டங்களின் வரையறைக்குள் வரும் பகுதிகள் நீங்கலாக உள்ள சென்னை மாநகராட்சி. |
| 2. | தொழிலாளர் துறை இணைஆணையர்-ii-இன் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், சென்னை. | காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் கடலூர் வருவாய் மாவட்டங்கள். |
| 3. | தொழிலாளர் துறை இணைஆணையர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், வேலூர். | வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை வருவாய் மாவட்டங்கள். |
| 4. | தொழிலாளர் துறை இணைஆணையர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், திருச்சிராப்பள்ளி. | திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டங்கள். |
| 5. | தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், மதுரை. | மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் வருவாய் மாவட்டங்கள். |
| 6. | தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், திண்டுக்கல். | திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள். |
| 7. | தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், திருநெல்வேலி. | தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி வருவாய் மாவட்டங்கள். |
| 8. | தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், கோயம்புத்தூர். | கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி வருவாய் மாவட்டங்கள். |
| 9. | தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், சேலம். | சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் நாமக்கல் வருவாய் மாவட்டங்கள். |
அறிவிக்கை&II
[அரசாணை (நிலை) எண். 32, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 17 பிப்ரவரி 2021.] 1970 ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 37/1970) பிரிவு (11)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 22-5-1991 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii, பிரிவு-2-இல் 351 ஆம் பக்கத்தில் (ஆங்கிலம்) வெளியிடப்பட்டுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ(ம)வே/2685/1991 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழே விவர அட்டவணையின் நெடும்பத்தி (2)-இல் குறிப்பிட்டுள்ள நபர்களை மேற்சொன்ன சட்டத்தின் அத்தியாயம்-iV-இன் செயல் நோக்கங்களுக்காக கீழே விவர அட்டவணை நெடும்பத்தி (2)இன் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகளுக்குள் மேற்சொன்ன சட்டத்தின்கீழ் அல்லது அச்சட்டத்தின் வாயிலாக அதில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத்த வேண்டி உரிமம் வழங்கும் அதிகாரிகளாக இதனால் நியமனம் செய்கிறார்.
| தொடர் எண் ( 1 ) | நபர்கள் ( 2 ) | நிறுவனங்கள் ( 3 ) | உள்ளூர் எல்லைகள் ( 4 ) |
| 1. | தொழிலாளர் துறை உதவி ஆணையர் (செயலாக்கம்) | 1948 தொழிற்சாலை சட்டம் (1948 இன் மத்தியச் சட்டம் LXiii மலைத்தோட்டங்கள் தொழிலாளர் சட்டம், 1951 ஆம் ஆண்டு (1951 இன் மத்தியச் சட்டம் LXiX )இன் கீழ் வரும் தொழிற்சாலைகளைத் தவிர அனைத்து நிறுவனங்களும் | 2009 ஆம் ஆண்டு சட்டப்படியான எடையளவுகள் விதி (மத்தியச் சட்டம், 1/2010) இன் கீழ் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உள்ளூர் எல்லைகள். |
| 2. | தொழிலாளர் துறை உதவி ஆணையர் (தோட்டப்பயிர்கள்) | 1951 ஆம் ஆண்டு தோட்டப் பயிர்கள் தொழிலாளர் சட்டம் (1951 ஆம் ஆண்டு மத்தியச் சட்டம் LXiX)இன் கீழ் வரும் தோட்டப் பயிர்கள் | 1951 ஆம் ஆண்டு மலைப்பயிர்கள் தொழிலாளர் சட்டம் (1951 ஆம் ஆண்டு மத்தியச் சட்டம் LXiX) இன் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள உள்ளூர் எல்லைகள் |
| 3. | தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலத் துணை இயக்குநர்கள். | 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் வரும் அனைத்துத் தொழிற்சாலைகளும் (1948 ஆம் ஆண்டின் மத்தியச் சட்டம் LXiii) | 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் பிரிவு 8 இன் உட்பிரிவு (1) (1948 ஆம் ஆண்டு சட்டம் மத்தியச் சட்டம் LXiX) இன் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள உள்ளூர் எல்லைகள் |
அறிவிக்கை&III [அரசாணை (நிலை) எண். 32, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 17 பிப்ரவரி 2021.] 1970 ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 37/1970) 15ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 15-07-2015 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii, பிரிவு-2-இல் 478 ஆம் பக்கத்தில் (ஆங்கிலம்) வெளியிடப்பட்டுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ(ம)வே/388/2015 ஆம் எண் அறிவிக்கையில் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழே விவர அட்டவணையின் நெடும்பத்தி (2)-இல் ட்டுள்ள நபர்களை அந்த அட்டவணையின் நெடும்பத்தி (3)-இன் "நிகரான பதிவுகளில்" குறிப்பிடப்பட்டுள்ளவாறு பகுதிகளுக்கு மேல்முறையீட்டு அலுவலர்களாக நியமனம் செய்கிறார்.
3அட்டவணை.
| தொடர் எண் ( 1 ) | நபர்கள் ( 2 ) | உள்ளூர் எல்லைகள் ( 3 ) |
| 1. | தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர்-ii. சென்னை. | காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கடலூர் வருவாய் மாவட்டங்கள் |
| 2. | தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், வேலூர். | வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை வருவாய் மாவட்டங்கள். |
| 3. | தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், திருச்சிராப்பள்ளி. | திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டங்கள். |
| 4. | தொழிலாளர் நலத்துறை இணைஆணையர், மதுரை. | மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் வருவாய் மாவட்டங்கள். |
| 5. | தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், திண்டுக்கல். | திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள். |
| 6. | தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், திருநெல்வேலி. | தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி வருவாய் மாவட்டங்கள். |
| 7. | தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், கோயம்புத்தூர். | கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் வருவாய் மாவட்டங்கள். |
| 8. | தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், சேலம். | சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் வருவாய் மாவட்டங்கள். |
| 9. | தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், குன்னூர். | நீலகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு வருவாய் மாவட்டங்கள். |
அறிவிக்கை&IV
[அரசாணை (நிலை) எண். 32, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 17 பிப்ரவரி 2021.] 1970 ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்பு) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 37/1970) 28ஆம் பிரிவைச் சேர்ந்த பிரிவு (1)-உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 15-07-2015 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii பிரிவு-2-இல் 479 ஆம் பக்கத்தில் (ஆங்கிலம்) வெளியிடப்பட்டுள்ள தொழிலாளர் (ம) வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ(ம)வே/389/2015 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழே விவர அட்டவணையின் நெடும்பத்தி (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை மேற்சொன்ன சட்டத்தின் அத்தியாயம்-iii-இன் செயல் நோக்கங்களுக்காக மேலும், அந்த விவர அட்டவணையின் நெடும்பத்தி (3)-இன் 'நிகரான பதிவுகளில்' குறிப்பிடப்பட்டுள்ளவாறு உள்ளூர் பகுதிகளை வரையறை செய்து, மேற்சொன்ன சட்டத்தில் அல்லது சட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயற்படுத்தக்கூடிய ஆய்வாளர்களை இதனால் நியமனம் செய்கிறார்.
அட்டவணை.
| தொடர் எண் ( 1 ) | நபர்கள் ( 2 ) | உள்ளூர் எல்லைகள் ( 3 ) |
| 1. | தொழிலாளர் துறை ஆணையர், சென்னை. | தமிழ்நாடு மாநிலம் முழுமைக்கும் |
| 2. | தொழிலாளர் துறை இணை ஆணையர் (ஆய்வுகள்), சென்னை. | |
| 3. | தொழிலாளர் துறை துணை ஆணையர் (ஒப்பந்தத் தொழிலாளர்கள்) சென்னை. | |
| 4. | தொழிலாளர் துறை இணை ஆணையர்-i, சென்னை, | காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் வருவாய் மாவட்டங்களின் வரையறைக்குள் வரும் பகுதிகள் நீங்கலாக உள்ள சென்னை மாநகராட்சி |
| 5. | தொழிலாளர் துறை இணை ஆணையர்-ii, சென்னை. | காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கடலூர் வருவாய் மாவட்டங்கள் |
| 6. | தொழிலாளர் துறை இணை ஆணையர், வேலூர். | வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் வருவாய் மாவட்டங்கள். |
| 7. | தொழிலாளர் துறை இணை ஆணையர் திருச்சிராப்பள்ளி. | திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டங்கள். |
| 8. | தொழிலாளர் துறை இணை ஆணையர், மதுரை. | மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் வருவாய் மாவட்டங்கள். |
| 9. | தொழிலாளர் துறை இணை ஆணையர், திண்டுக்கல். | திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள். |
| 10. | தொழிலாளர் துறை இணை ஆணையர், திருநெல்வேலி. | தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி வருவாய் மாவட்டங்கள். |
| 11. | தொழிலாளர் துறை இணை ஆணையர், கோயம்புத்தூர். | கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் வருவாய் மாவட்டங்கள். |
| 12. | தொழிலாளர் துறை இணை ஆணையர், சேலம். | சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டங்கள். |
| 13. | தொழிலாளர் துறை இணை ஆணையர், குன்னூர். | நீலகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு வருவாய் மாவட்டங்கள். |
| 14. | தொழிலாளர் துறை இணை ஆணையர்-i அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், சென்னை. | காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் வருவாய் மாவட்டங்களின் வரையறைக்குள் வரும் பகுதிகள் நீங்கலாக உள்ள சென்னை மாநகராட்சி. |
| 15. | தொழிலாளர் துறை இணை ஆணையர்-ii அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், சென்னை. | காஞ்சிபுரம், செங்கல்பட்டு. திருவள்ளூர் மற்றும் கடலூர் வருவாய் மாவட்டங்கள். |
| 16. | தொழிலாளர் துறை இணைஆணையர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், வேலூர். | வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் வருவாய் மாவட்டங்கள். |
| 17. | தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர். திருச்சிராப்பள்ளி. | திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டங்கள். |
| 18. | தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், மதுரை. | மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் வருவாய் மாவட்டங்கள். |
| 19. | தொழிலாளர் துறை இணை ஆணையர், அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர். திண்டுக்கல். | திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள். |
| 20. | தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், திருநெல்வேலி. | தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி வருவாய் மாவட்டங்கள். |
| 21. | தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், கோயம்புத்தூர். | கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி வருவாய் மாவட்டங்கள். |
| 22. | தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்திலுள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர், சேலம். | சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் வருவாய் மாவட்டங்கள். |
| 23. | தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (தோட்டப் பயிர்கள்) | 1951 ஆம் ஆண்டு தோட்டப் பயிர்கள் தொழிலாளர் சட்டம் (1951 ஆம் ஆண்டு மத்தியச் சட்டம் LXiX) இன் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள உள்ளூர் எல்லைகள் |
| 24. | தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (மகளிர் நலம்), சென்னை. | சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவள்ளூர் வருவாய் மாவட்டங்கள். |
| 25. | தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (மகளிர் நலம்), திருநெல்வேலி. | திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் வருவாய் மாவட்டங்கள் |
| 26. | தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (மகளிர் நலம்), கோயம்புத்தூர். | கோயம்புத்தூர், மற்றும் நீலகிரி வருவாய் மாவட்டங்கள் |
| 27. | தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் (செயலாக்கம்) | 2009 ஆம் ஆண்டு சட்ட எடையளவுகள் விதி (மத்தியச் சட்டம், 1/2010) இன்கீழ் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உள்ளூர் எல்லைகள் |
| 28. | தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர்கள் | |
| 29. | தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர்கள் |
முகமது நசிமுத்தின்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழி பெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.