| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 284A] சென்னை, செவ்வாய்க்கிழமை, ஜூன் 22, 2021 ஆனி 8, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
2021-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 22-ஆம் நாளன்று தமிழ்நாடு
சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,
நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக
வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 17/20212021 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 17
2003 -ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமைச்
சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில்
தொடக்கம்.
பொறுப்புடைமை (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
4-ஆம் பிரிவிற்கான 2. 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமைச்
16/2003.
திருத்தம்.
சட்டத்தின் 4 -ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,-
(1) (a) ஆம் கூறில், "2021 2022" எனும் சொற்றொடருக்காக,
"2023-2024" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (b) ஆம் கூறில், "2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதி" எனும் சொற்றொடருக்காக, "2024 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை
15 ஆம் நிதிக்குழுவானது தனது 2021-2026-க்கான அறிக்கையில், எரிசக்தி துறை குறித்த சில செயல்திறன் அளவுகோலின் அடிப்படையில், 2021-2022 முதல் 2024-2025 வரையிலான கால அளவினை உள்ளடக்கிய பரிந்துரைக் காலத்தின் முதல் நான்கு ஆண்டுகளில் மாநிலங்கள், ஆண்டொன்றிக்கு மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 0.05 விழுக்காடு அளவு கூடுதல் கடன் பெறுவதற்கான வழிவகைக்கு பரிந்துரைத்துள்ளது. மேலும், நிதிக்குழுவானது, மொத்த மாநில உற்பத்தி மதிப்பீட்டிற்கு நிகர கடன்பெறுதலுக்கான வரம்பினை 2021-2022, 2022-2023 மற்றும் 2023-2024 முதல் 2025-2026 ஆண்டுகளில் முறையே 4 விழுக்காடு, 3.5 விழுக்காடு மற்றும் 3 விழுக்காடாக பரிந்துரைத்துள்ளது.
2. நிதிக்குழுவின் மேற்சொன்ன பரிந்துரைகளின் அடிப்படையில், வருவாய் பற்றாக்குறையை நீக்குவதற்கும், நிதிநிலை பற்றாக்குறையை மொத்த மாநில உற்பத்தி மதிப்பீட்டில் மூன்று விழுக்காடு வரை குறைப்பதற்குமான காலவரம்பினை குறித்தபடி 2024 மார்ச்சு 31 வரை நீட்டிக்க, 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமைச் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 16/2003) திருத்தம் செய்ய அரசானது முடிவு செய்துள்ளது.
3. இந்தச் சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
முனைவர்.பழனிவேல் தியாக ராஜன்,
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன், சென்னை-600 009, 22 ஜூன் 2021.
செயலாளர்.