Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

BILLS - No. 18 of 2021 - The Tamil Nadu Municipal Laws (Second Amendment) Act, 2021 - No. 19 of 2021 - The Tamil Nadu Panchayats (Second Amendment) Act, 2021 (Tamil)

Published 23 June 2021

Type
Extraordinary
Gazette no.
285
Part
Part IV
Extraordinary Type
Tamil Nadu Bills
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2021-06-23.Extraordinary_285_Part-IV_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2021

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs.4.00 Paise.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 285A] சென்னை, புதன் கிழமை, ஜூன் 23, 2021 ஆனி 9, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

பொருளடக்கம் பொருளடக்கம்

சட்டமுன்வடிவுகள்:சட்டமுன்வடிவுகள்:

பக்கங்கள்.

எண் 18/2021—தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம் .. .. .. 2-6 எண் 19/2021— தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம் .. .. .. 7-9 Ex-IV-1—(285A)

[ 1 ]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2021 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 23 ஆம் நாளன்று தமிழ்நாடு

சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,

நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்

பேரவை விதிகளின் 130 ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக

வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 18/20212021 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 18

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான

சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

பகுதி-I.

முன்னுரை.

குறுந்தலைப்பு மற்றும்

1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள்

தொடக்கம்.

(இரண்டாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பகுதி-II.

1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

414-B ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் IV/1919.

திருத்தம்.

2. 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்தின் 414-B ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-III.

1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கான திருத்தம்.

375-B ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் V/1920.

திருத்தம்.

3. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 375-B ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-IV.

1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

510-AAA ஆம்

தமிழ்நாடு சட்டம் 15/1971.

பிரிவிற்கான திருத்தம்.

4. 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 510-AAA ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-V.

1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

511-AAA ஆம்

தமிழ்நாடு சட்டம் 25/1981.

பிரிவிற்கான திருத்தம்.

5. 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின் 511-AAA ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

3 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

பகுதி-VI.

1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 27/1994.

திருத்தம்.

6. 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-VII.

1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 28/1994.

திருத்தம்.

7. 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-VIII.

1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 29/1994.

திருத்தம்.

8. 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-IX.

2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 7/2008.

திருத்தம்.

9. 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-X.

2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 8/2008.

திருத்தம்.

10. 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XI.

2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 26/2008.

திருத்தம்.

11. 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XII.

2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 27/2008.

திருத்தம்.

12. 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

பகுதி-XIII.

2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 24/2013.

திருத்தம்.

13. 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XIV.

2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 25/2013.

திருத்தம்.

14. 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XV.

2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10 ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 10/2019.

திருத்தம்.

15. 2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின், (4) ஆம் உட்பிரிவில் ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XVI.

2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10 ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 11/2019.

திருத்தம்.

16. 2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின்,(4) ஆம் உட்பிரிவில் ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-XVII.

2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10 ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 24/2019.

திருத்தம்.

17. 2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின், (4) ஆம் உட்பிரிவில் ''2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

5 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்கக் காரண விளக்கவுரை.

2016 அக்டோபர் 4ஆம் தேதியிட்ட நீதிப்பேராணை மனு எண் 33984/2016-ல் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்கி பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் தனி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் கூறப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலமானது அவ்வப்போது நீட்டிக்கப்பட்டும், இறுதியாக 2021 ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

2. புதிதாக மறுசீரமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில், அதாவது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசியில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் சிற்றொகுதிகளின் எல்லை மறுவரையறை தொடர்பாக 2019 டிசம்பர் 11ஆம் தேதியிட்ட நீதிப்பேராணை (உரிமையியல்) எண் 1443/2019 உடனிணைந்த, 2019 டிசம்பர் 6ஆம் தேதியிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு வழக்கு எண்கள் 5467-5469/2017இன் இடைக்கால மனு எண் 182868/2019 இல் மாண்பமை இந்திய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தமிழ்நாடு மறுவரையறை ஆணையமானது புதிதாக உருவாக்கப்பட்ட மேற்சொன்ன ஒன்பது மாவட்டங்களில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் சிற்றொகுதிகளை இறுதி செய்வதற்காக மாவட்ட மறுவரையறை அமைப்புடன் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியது மற்றும் அதன் பரிந்துரைகளை அரசிற்கு சமர்ப்பித்தது மற்றும் அவை அரசின் தீவிர பரிசீலனையின் கீழ் உள்ளன. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்களை நடத்துவதற்காக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமானது, உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல், வாக்குச் சாவடிகளை அடையாளம் காணுதல், சில சிற்றேடுகளைத் திருத்தம் செய்தல், மின்னணு வாக்கு இயந்திரங்களை கையாளுவதற்கு அலுவலர்களுக்கு பயிற்சியளித்தல் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் தோராயப்படுத்துதலுக்காகவும், மின்னணு வாக்கு இயந்திரங்களுக்காகவும் மென்பொருளினை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கான விரைவான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

3. இதற்கிடையில், கோவிட்-19 என்ற பெயருடைய தொற்றுநோயின் திடீர் பரவலின் காரணமாக, தீவிர எச்சரிக்கை / பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது மற்றும் 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் 2/1974) 144ஆம் பிரிவின்படியான ஆணை ஒன்றும் வெளியிடப்பட்டது. மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, அரசு அலுவலகங்களில் அரசின் குறிப்பிட்ட அளவு ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், அரசு இயந்திரம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கோவிட்-19 இன் திடீர் பரவலின் காரணமாக, மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தினை தணிப்பதற்காக, போர்கால அடிப்படையில் தடுப்பு, பாதுகாப்பு, துயர் தணிப்பு மற்றும் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, மறுசீரமைக்கப்பட்ட புதிய ஒன்பது மாவட்டங்களில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் சிற்றொகுதிகளின் எல்லைகளை வரையறுப்பதற்கான அறிவிக்கையையும் சாதாரண தேர்தல்களை நடத்துதலுக்கான முன்னேற்பாடான பணிகளையும் திட்டமிட்டபடி நிறைவு செய்ய இயலவில்லை.

4. மேலும், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் சிற்றொகுதிகளின் எல்லை மறுவரையறை அறிவிக்கைக்குப் பின்னர், புதிதாக மறுசீரமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சிற்றொகுதிகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடானது அறிவிக்கப்படுதல் வேண்டும். அதன்பின்பு மட்டுமே, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமானது கோவிட் 19 பெருந்தொற்றின் தாக்கம் காரணத்தினாலான இடையூறு ஏதுமில்லாமல் தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக மக்கள்/வாக்காளர்கள்/ வேட்பாளர்கள்/தேர்தல் இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களின் உடல்நலம் மற்றம் பாதுகாப்பைக் கருத்தில் கொள்வதற்கு உகந்த சூழ்நிலையை உறுதிசெய்த பின்னர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்களை நடத்துவதற்கான அட்டவணையை அறிவிக்கை செய்ய இயலும். மேற்சொன்னதன் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்களை நடத்துவதற்கு முன்னேற்பாடான பணிகளை பூர்த்தி செய்ய தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் கால அவகாசமானது தேவைப்படுகிறது. மாண்பமை உச்சநீதிமன்றமானது நீதிப்பேராணை (உரிமையியல்) மனு எண். 1443/2019-இல் இடைக்கால மனு எண்.114726/2020ல் வழங்கப்பட்ட 2020 டிசம்பர் 4 ஆம் தேதியிட்ட அதன் ஆணையில் அனுமதிக்கப்பட்ட கால நீட்டிப்பானது 2021 ஜூன் 3ஆம் தேதியன்று காலாவதியாவதை முன்னிட்டு, அதன்விளைவாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமானது, 2019 டிசம்பர் 11 ஆம் தேதியிட்ட நீதிமன்றத்தின் ஆணையினை நிறைவேற்ற 2021 ஜூன் 3ஆம் தேதிக்குப் பிறகு மேலும் ஆறு மாத கால நீட்டிப்பு கோரி ஒரு மனுவினை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது மற்றும் கூறப்பட்ட மனுவானது, 2021 ஜூன் 3 ஆம் தேதியிட்ட குறிப்பேடு எண் 12959/2021 என எண்ணிடப்பட்டுள்ளது.

5. மேற்கண்ட சூழ்நிலைகளில், தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 2021 ஜூன் 30ஆம் தேதியன்று முடிவடைவதன் காரணமாக, தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2021 டிசம்பர் 31 வரையிலான மேலும் ஆறு மாத காலத்திற்கு அல்லது6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான சாதாரண தேர்தல்களுக்கு பின்பு நடத்தப்படும் மன்றத்தின் முதல் கூட்டம் வரை, இதில் எது முந்தையதோ அது வரையில் நீட்டிப்பதற்காக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்ய அரசானது முடிவு செய்துள்ளது.

6. இந்தச் சட்ட முன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

கே.என். நேரு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்.

கி. சீனிவாசன், சென்னை-600 009, 2021 ஜூன் 23.

செயலாளர்.

7 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

2021-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு

சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,

நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்

பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக

வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 19/20212021 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 19

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம்

செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம்

தொடக்கம்.

திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

261-A ஆம் 21 / 1994.

பிரிவிற்கான

திருத்தம்.

2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 261-A ஆம் பிரிவில், "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" எனும் சொற்றொடருக்காக, "2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்கக் காரண விளக்கவுரை

2016 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4 ஆம் தேதியிட்ட, நீதிப்பேராணை மனு எண்.33984/2016-ல் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையின் பேரில், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். மூன்றடுக்கு ஊராட்சிகளில் கூறப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலமானது, அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு, இறுதியாக 2021 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 30 ஆம் நாள்வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

2. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 ஆம் தேதியிட்ட நீதிப் பேராணை (உரிமையியல்) மனு எண்.1443/2019 உடனிணைந்த, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 6 ஆம் தேதியிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு வழக்கு எண்கள்.5467-5469/2017 இல் இடைக்கால மனு எண்.182868/2019 இல் மாண்பமை இந்திய உச்சநீதிமன்றமானது, மற்றவற்றுக்கிடையில் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகியவை நீங்கலாக கிராம, இடைநிலை மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்துவதற்கும் மேலும், சட்டத்திற்கு இணங்கிய வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களை மறுவரையறை செய்யவும் அதன் பின்பு மூன்று மாதங்கள் கால அளவிற்குள் கிராம, இடைநிலை மற்றும் மாவட்ட அளவிலான மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்துவதற்கும் எதிர் மனுதாரர்- அதிகார அமைப்புகளுக்கு கட்டளையிட்டது. அதற்கிணங்கிய வகையில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமானது மேற்சொன்ன புதியதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைத் தவிர கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைவர்கள் பதவிக்கான தேர்தல் அட்டவணை அறிவிக்கையை வெளியிட்டது.

3. அதற்கிணங்க, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமானது மாநிலத்திலுள்ள பிற 27 மாவட்டங்கள் அனைத்திற்குமான கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலை நடத்தியது மற்றும் தேர்தல்களுக்கான முழு நிகழ்வுகளும் 2020 ஜனவரி 11 ஆம் தேதியன்று நிறைவுற்றது. மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களை பொறுத்தவரையில், தொகுதி மறுவரையறை ஆணையமானது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான கருத்துருக்களை அரசுக்கு அனுப்பியுள்ளது. அது அரசின் பரிசீலனையின் கீழ் உள்ளது.

4. இதற்கிடையில், கோவிட்-19 என்ற பெருந்தொற்று நோயின் இரண்டாம் அலை கடுமையின் காரணமாக மாநிலத்தில் முழு பொதுமுடக்கமானது 2021 மே 24 அன்றிலிருந்து விதிக்கப்பட்டது மற்றும் சில தளர்வுகளுடன் பொது முடக்கமானது இன்னும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நடவடிக்கைகளின் விளைவாக, அலுவலகங்களில் வரையறுக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் அரசு இயந்திரங்களானது, கோவிட்-19 நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தோன்றலின் காரணமாக மக்களின் துன்பத்தினை தணிப்பதற்காக, போர்க்கால அடிப்படையில் தடுப்பு, பாதுகாப்பு, துயர் தணிப்பு மற்றும் நலன் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஈடுபட்டது. எனவே, புதியதாக உருவாக்கப்பட்ட மேற்சொன்ன ஒன்பது மாவட்டங்களில் மூன்றடுக்கு ஊராட்சிகளின் வட்டார எல்லைக்குட்பட்ட தொகுதிகளை வரையறை செய்வதற்கான அறிவிக்கையையும் முன்னேற்பாடான பணிகளையும் திட்டமிடப்பட்ட நடவடிக்கை பட்டியலின்படி நிறைவு செய்ய இயலவில்லை.

5. மேலும், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் வட்டார எல்லைக்குட்பட்ட தொகுதிகளை மறுவரையறுப்பதற்கான அறிவிக்கைக்குப் பின்னர், அனைத்து மூன்றடுக்கு ஊராட்சிகளிலும் பட்டியலின வகுப்பினர், பட்டியலின பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான தொகுதி இட ஒதுக்கீடானது, அறிவிக்கப்படுதல் வேண்டும். அதன்பின்பு, அனைத்து மூன்றடுக்கு ஊராட்சிகளிலும் பட்டியலின வகுப்பினர், பட்டியலின பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான பதவியின் ஒதுக்கீடானது, மேலும் அரசால் அறிவிக்கப்படுதலும் வேண்டும். அதன் பின்பு மட்டுமே தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமானது, இடையூறு ஏதும் இல்லாமல் தேர்தல் செயல்பாட்டில் திறம்பட பங்கேற்பதற்காக மக்கள் / வாக்காளர்கள் / வேட்பாளர்கள் / தேர்தல் இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொள்வதற்கு உகந்த சூழ்நிலையை உறுதி செய்த பின்னர், மாண்பமை உச்ச நீதிமன்றத்தினால் ஆணையிடப்பட்டவாறு, மறு உருவாக்கம் செய்யப்பட்ட புதிய ஒன்பது மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தல்களை நடத்துவதற்கான அட்டவணையை அறிவிப்பு செய்திட முடியும். மேற்சொன்னதன் காரணமாக, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக முன்னேற்பாடான பணிகளை முடிப்பதற்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் கால அவகாசமானது தேவைப்படுகிறது.

6. மேலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமானது, அரசினால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக தற்போது நிலவும் சூழ்நிலையின் விளைவாக, தேர்தலுக்கு முந்தைய பணிகள், அதாவது, வாக்குச் சாவடிகளை அடையாளம் காணுதல், வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல், வாக்குப்பதிவு அலுவலர்களின் தோராயப்படுத்துதலுக்கான மென்பொருள்களை உருவாக்குதல் போன்றவை ஆணையத்தின் செயல்பாட்டு அட்டவணையின்படி நிறைவேற்ற இயலவில்லை. இதனால், ஆணையமானது மாண்பமை உச்சநீதிமன்றம் 2019 டிசம்பர் 11 ஆம் தேதியிட்ட, அதன் ஆணையை நிறைவேற்ற வழங்கிய கால அவகாசமானது 2021 ஜூன் 3 ஆம் தேதியுடன் காலாவதி ஆகியுள்ளதால், 2021 ஜூன் 4 ஆம் தேதியிலிருந்து மேலும் ஆறு மாதங்கள் நீட்டிப்புக் கோரி ஓர் இடைக்கால மனுவினை மாண்பமை உச்சநீதி மன்றத்தில் 2021 ஜூன் 3 தேதியிட்ட குறிப்பேடு எண்.12959/2021-இல் தாக்கல் செய்துள்ளது. எனவே, அதுவரை உள்ளாட்சி அமைப்புகளை நிருவகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

9 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

7. மேற்கண்ட சூழ்நிலைகளில் புதியதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் அதாவது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 2021 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 30 தேதியன்று முடிவடைய உள்ளது. அதன் காரணமாக தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31 ஆம் தேதி வரை மேலும் ஆறு மாத காலத்திற்கு அல்லது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான சாதாரண தேர்தல்களுக்குப் பின்பு நடத்தப்படும் முதல் கூட்டம் வரை, இதில் எது முந்தையதோ அது வரையில் நீட்டிப்பதற்காக, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 21/1994) திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது.

8. இந்தச் சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

கேஆர். பெரியகருப்பன்,

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்.

கி. சீனிவாசன், சென்னை-600 009, 2021 ஜூன் 23.

செயலாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 23 June 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-06-23.Extraordinary_285_Part-IV_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2021-06-23.Extraordinary_285_Part-IV_Section-1.