Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification of Government - Tamil Translation

Published 21 July 2021

Type
Ordinary
Gazette no.
29
Part
Part II
Notifications
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT--Notification
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-07-21.Ordinary_29_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2021

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 3.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 29] சென்னை, புதன்கிழமை, ஜூலை 21, 2021 ஆடி 5, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2052

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 67, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (I2)த் துறை, 6 மே 2021.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலைவாய்பபை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு 1994 ஆம் ஆண்டு உடலுழைப்பு தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். அவையாவன:-

திருத்தங்கள்.

மேற்சொன்ன திட்டத்தில்,-

(1) பகுதி 2 இன், உட்பகுதி (C) இல், "அணைகள், பாலங்கள், சாலைகள் கட்டுமானம் அல்லது பராமரிப்பு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "அணைகள், பாலங்கள், சாலைகள் கட்டுமானம் அல்லது பராமரிப்பு அல்லது இடிப்பு" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

(2) விவர அட்டவணை I இல், தொடர் எண் 53 மற்றும் அது தொடர்பான வகைப்பாட்டிற்கு பின்னர், பின்வருவன சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் அதாவது:-

"54. அணைகள், பாலங்கள், சாலைகள் அல்லது ஏனைய யாதொரு கட்டிட இடிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழி பெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (நிலை) எண். 70, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (K2)த் துறை, 10 மே 2021.] 1926 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 16/1926) 29 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1927 ஆம் ஆண்டு தொழிற்சங்க ஒழுங்குமுறை விதிகளில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 30 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

[ 1 ]

DTP-II-2-(29) (T Sup)—12

திருத்தம்.

மேற்சொன்ன ஒழுங்குமுறை விதிகளில் 3 ஆம் ஒழுங்குமுறை விதிக்குப் பின்னர் பின்வரும் ஒழுங்குமுறை விதி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:-

3-A. பதிவு செய்தல் தொடர்பாக, இந்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகள் மற்றும் இந்த ஒழுங்குமுறை விதிகளுக்கிணங்க, பதிவு செய்வதற்கான விண்ணப்பம் உள்ளது என தொழிற்சங்கங்களுக்கான பதிவாளர் மனநிறைவடைவராயின், அந்த விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் அவர் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்து, பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழி பெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2ப) எண். 20, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 7 ஜூன் 2021.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 17-09-2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II - பிரிவு 2-இல் 640 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா/557/2014 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், கீழே விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் கையால் தயாரிக்கப்படும் காகிதம் தொழிலகத்துடன் தொடர்புடைய காகிதம் மற்றும் ஏனைய இடைநிகழ்வு செய்முறைகள் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

விவர அட்டவணை

கையால் தயாரிக்கப்படும் காகிதம் தொழிலகத்துடன் தொடர்புடைய காகிதம் மற்றும் ஏனைய இடைநிகழ்வு செய்முறைகள்

தொழிலில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( மாதமொன்றுக்கு) ( ரூ . காசு)
( 1 ) ( 2 )
(1) பயிற்சி பெறாதோர் 5587.00 vi
(i) வகைப்டுத்துபவர்
(ii) அழுத்துபவர்
(iii) அடிப்பவர்
(iv) காகிதத்தை உருளை இயந்திரத்தில் அழுத்தி மெருகேற்றுபவர்
(v) தூக்குபவர்
(vi) வெட்டுபவர்
(vii) சீராக்குபவர்
(viii) சிப்பமாக்குபவர்
(2) ஓரளவு பயிற்சி பெற்றோர்: 5791.00
(i) மின் பணியாளர்
(ii) பொருத்துநர்
(iii) பற்றவைப்பவர்
(3) பயிற்சி பெற்றவர்கள்
(i) மேலாளர் 6199.00
(ii) மேற்பார்வையாளர் / கணக்காளர் 5995.00
(4) பொது வகையினர்:
(i) ஓட்டுநர் 5791.00
(ii) ஏவலாள் / காவலாள் 5741.00
3

விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியானது திங்கள் ஒன்றுக்கு ரூ. 34.70 (முப்பத்து நான்கு ரூபாய் மற்றும் எழுபது காசுகள் மட்டும்) கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாளில் கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.

(3) நாள் ஊதியத்தை கணக்கிட மாத ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.

(4) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

ஆர். கிர்லோஷ் குமார்,

அரசு செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழி பெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2ப) எண். 22, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 7 ஜூன் 2021.] 1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம்) 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 13-08-2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு-2இல் 539 மற்றும் 540 ஆகிய பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/தொவெவா/481/2014 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் கோணித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்த அளவு ஊதிய வீதங்களை அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக முன்னரே வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

கோணித் தொழிலில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு)
( 1 ) ( 2 )
(1) கோணிப்பை தைப்பவர் 334.00 (நாளொன்றுக்கு)
(2) மேஸ்திரி 346.00 (நாளொன்றுக்கு)
(3) செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் பெறுபவர்கள் 4.07 (கோணிப்பை ஒன்றுக்கு)

விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு ஊதியங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

4

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ. 2.07 காசுகள் (இரண்டு ரூபாய் மற்றும் ஏழு காசுகள் மட்டும்) கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல்நாளில் அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கிடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.

(3) மாதந்திர ஊதியத்தை கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களில் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

ஆர். கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழி பெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2D) எண். 23, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 7 ஜூன் 2021.] 1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம்) 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 17-09-2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு-2இல் 639 பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/556/2014 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் காலணி தயாரிப்பு தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்த அளவு ஊதிய வீதங்களை அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

காலணி தயாரிப்பு தொழிலில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள் ( 1 ) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு) ( 2 )
மண்டலம்&A ( ரூ . காசு) மண்டலம்&B ( ரூ . காசு)
I. நிருவாகப் பணியாளர்கள்:
(1) கணக்காளர் (உயரளவு பயிற்சி பெற்றவர்கள்) 6348.00 6258.00
(2) கண்காணிப்பாளர் / பண்டகக் காப்பாளர் 5993.00 5904.00
(3) எழுத்தர் / காசாளர் / தட்டச்சர் / நேரங்குறிப்பவர் / கணினி இயக்குபவர் 5640.00 5550.00
(4) ஓட்டுநர் / இயந்திரக் கம்மியர் / மின்கம்மியர் 5640.00 5550.00
(5) காவலாள் / உதவியாள் / பெருக்குபவர் / தோட்டக்காரர் (பயிற்சி பெறாதவர்கள்) 4933.00 4843.00
II. தொழில்நுட்பப் பணியாளர்கள்
(1) பயிற்சி பெற்றவர்கள் 5640.00 5550.00
(2) ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் 5286.00 5197.00
(3) பயிற்சி பெறாதவர்கள் 4933.00 4843.00
5

விளக்கங்கள்:- (1) மண்டலம் A மற்றும் மண்டலம் B ஆகியவை பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.

மண்டலம் A - அனைத்து மாநகராட்சிகள்

மண்டலம் B - மாநகராட்சிகள் தவிர ஏனைய அனைத்துப் பகுதிகள்

(2) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகளாகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் அகவிலைப்படி மாதமொன்றுக்கு ரூ. 30.00 (முப்பது ரூபாய் மற்றும் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) செயலிலுள்ள அண்மைக் கால நுகர்வோர் விலைக்குறியீட்டு புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு திங்களும் அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதிய வீதங்களை கணக்கிட மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

ஆர். கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழி பெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2ப) எண். 24, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 10 ஜூன் 2021.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 26-11-2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II - பிரிவு 2-இல் 758 முதல் 760 வரையிலான பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா/710/2014 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தச்சுத் தொழிலில் மற்றும் கருமான் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் 3 ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளன்றிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

தச்சுத் தொழில் மற்றும் கருமான் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண் பணியின் / தொழிலாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
( 1 ) ( 2 ) ( 3 )
மண்டலம் A ( ரூ . காசு) மண்டலம் B ( ரூ . காசு) மண்டலம் C ( ரூ . காசு)
1. தச்சுத் தொழில் நாளொன்றுக்கு
(A) உயரளவு பயிற்சி பெற்றோர்
(1) மேற்பார்வையாளர் 464.00 410.50 382.00
(2) மாதிரி படிமத் தயாரிப்பாளர்
(PATTERN MAKER)
(3) உள் அலங்கார வல்லுநர்
(4) மெத்தை--திண்டு வேலை செய்பவர்
(5) மரம் செதுக்குபவர்
(B) பயிற்சி பெற்றோர்
(1) தச்சர் / மரக்கடைசல் தொழிலாளர் / தேய்த்து வழவழப்பாக்குதல் (மெல்லொட்டுப் பலகைப் பணிகள்) 435.00 396.00 370.00
(C) ஒரளவு பயிற்சி பெற்றோர்
(1) உதவி தச்சர் 410,50 382,00 356,00
(2) சிப்பமாக்குபவர்
(3) மெருகிடுபவர்
(4) மேற்பூச்சு செய்தல் அழுத்துதல் (மெல்லொட்டுப் பலகைப் பணிகள்)
(D) பயிற்சி பெறாதோர்
(1) கற்பவர் 370.00 356.00 342.00
(2) உதவியாளர்
(3) மெல்லொட்டுப் பலகைப் பணிகளில் ஏனைய தொழிலாளர் வகையினர்
(E) மேற்சொன்னவற்றின் கீழ் இடம்பெறாத ஏனைய யாதொரு வகையினர் 370.00 356.00 342.00
II கருமான் தொழில்
(A) பயிற்சி பெற்றோர்
(1) மேற்பார்வையாளர் 435.00 396.00 370.00
(2) பூட்டு தயாரிப்பவர்கள் உட்பட கருமான்
(3) பற்றவைப்பவர்
(4) மென்னுருக்குப் பாத்திரங்கள் செய்பவர்
(5) வேளாண் கருவிகள் செய்பவர் (கால்நடைகளுக்கான லாடம் தயாரிப்பவர் உட்பட)
(B) ஒரளவு பயிற்சி பெற்றோர்
(1) வெட்டுபவர் 410.50 382.00 356.00
(2) வளைப்பவர்
(3) வண்ணம் பூசுபவர்
(C) பயிற்சி பெறாதோர் 370.00 356.00 342.00
(D) மேற்சொன்னவற்றின் கீழ் இடம்பெறாத ஏனைய யாதொரு வகையினர் 370.00 356.00 342.00
II அலுவலகப் பணியாளர்கள் (மாதமொன்றுக்கு)
(1) மேலாளர் 13478.00 12669.00 11864.00
(2) கணக்காயர் / காசாளர் 12402.00 12669.00 11864.00
(3) எழுத்தர் / தட்டச்சர்
(4) பண்டகசாலைக் காப்பாளர்
(5) அலுவலக உதவியாள் 10790.00 10250.00 9981.00
(6) காவலாள்
(7) துப்புரவுத் தொழிலாளர் / பெருக்குபவர் 9981.00 9714.00 9443.00
(8) மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய யாதொரு வகையினர்
6

விளக்கங்கள்:- மண்டலங்களின் வகைப்பாடு A, B மற்றும் C மண்டலங்களில் கீழ்க்காணும் பகுதிகள் அடங்கும்.

மண்டலம் A - அனைத்து மாநகராட்சிகள்

மண்டலம் B - அனைத்து நகராட்சிகள்

மண்டலம் C - ஏனைய பகுதிகள்7 (2) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியானது திங்கள் ஒன்றுக்கு ரூ.58,65(ஐம்பத்தொட்டு ரூபாய் மற்றும் அற்பத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான விலைப்புள்ளியின் சராசரியை

அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாளிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டில் சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு,

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.

(4) நாள் ஊதியத்தை கணக்கிட மாத ஊதியத்தை 26-&ஆல் வகுக்க வேண்டும்.

(5) மாத ஊதியத்தை கணக்கிட நாள் ஊதியத்தை 30-&ஆல் பெருக்க வேண்டும்.

(6) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள்,

அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

ஆர். கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழி பெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2D) எண். 28, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 18 ஜூன் 2021.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள அறிவிக்கையின் கிழ்காணும் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு மாத கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இதன் வரைவு அறிக்கை கருதிப்பார்க்கப்படும் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை டிஎம்.எஸ் வளாகம, சென்னை-600 006 இல் உள்ள தொழிலாளர் துறை ஆணையாளர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 07.03.2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II - பிரிவு 2-இல் 253 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே./216/2018 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு மாநிலத்தில் வடிசாலை (Distillery Industry ) தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

8

விவர அட்டவணை

வடிசாலைகளில் (Distillery Industry ) வேலைவாய்ப்பு

தொடர் எண் பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு)
( 1 ) ( 2 ) ( 3 )
(1) மேற்பார்வையாளர் / வேதியியலர் 10763
(2) பயிற்சி பெற்றவர் / இயக்குபவர் 9982
(3) தொழிற்பயிற்சி நிறுவனச் (ITI) சான்று வைத்திருப்பவர் 9982
(4) உதவியாளர் / இளநிலை தொழில்நுட்பப் பணியாளர் 9722
(5) பொறியாளர் / பட்டறை பொறியாளர் 9722
(6) மேலாளர் 10416
(7) கணக்காளர் 10416
(8) விற்பனை நிருவாகி 10416
(9) பணி அலுவலர் 10416
(10) உதவியாளர் 10156
(11) எழுத்தர் 9982
(12) ஓட்டுநர் 9982
(13) அலுவலக உதவியாளர் / ஏவலாள் 9722
(14) காவலாள் 9722

விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூ. 60.35/- (அறுபது ரூபாய் மற்றும் முப்பத்து ஐந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது, முந்தைய 12 மாதங்களுக்கான (ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலை குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

ஆர். கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழி பெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 21 July 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-07-21.Ordinary_29_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-07-21.Ordinary_29_Part-II_Section-2-T-Sup.