© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2021 [விலை : ரூ. 24.80 காசுவிலை : ரூ. 24.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 29] சென்னை, புதன்கிழமை, ஜூலை 21, 2021 ஆடி 5, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 25 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 1/2021.
1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம், 1888 ஆம்
ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம் மற்றும் 1859 ஆம் ஆண்டு
தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றை மேலும் திருத்தம்
செய்வதற்கான தொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
பகுதி–I.
முன்னுரை.
1. (1) இந்த சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும்
குறுந்தலைப்பு காவல் சட்டங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
மற்றும்
தொடக்கம்.
(2) (i) 2 மற்றும் 8ஆம் பிரிவுகளை தவிர்த்து பிற பிரிவுகள் அனைத்தும் 2020 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 21 ஆம் நாள் அன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
(ii) 2 மற்றும் 8ஆம் பிரிவுகள் உடனடியாக நடைமுறைக்கு
வருதல் வேண்டும்.
[1]
IV-2(29)(T-Sup)-12
பகுதி–II.
1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டத்திற்கான திருத்தங்கள்.
2 மற்றும் 3 ஆம்
தமிழ்நாடு சட்டம் பிரிவுகளுக்கான
III/1930.
மாற்றீடு.
2. 1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டத்தில், (இதன் பின்பு இந்தப் பிரிவில் 1930 ஆம் ஆண்டு சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 2 மற்றும் 3 ஆம் பிரிவுகளுக்காக, பின்வரும் பிரிவுகள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது : -
"2. அளாவுகை.அளாவுகை. - இந்தச் சட்டம், தமிழ்நாடு மாநிலம் முழுவதையும்
அளாவி நிற்கும்.
3. பொருள் வரையறைகள். - - இந்தச் சட்டத்தில், பொருளுக்கு
அல்லது சூழ்நிலைக்கு முரணாக எதுவும் இருந்தாலன்றி,-
(a) "பொது சூதாட்ட – விடுதி" என்பது, சூதாட்டக் கருவிகளை அல்லது வீட்டை, அறையை, கூடாரத்தை, அடைப்பினை, வாகனத்தை, கலத்தை, இணையக் கூடத்தை அல்லது இடத்தைப் பயன்படுத்துவதற்காக, கட்டணமின்றியோ அல்லது கட்டண வாயிலாகவோ அத்தகைய வீட்டை, அறையை, கூடாரத்தை, அடைப்பினை, வாகனத்தை, கலத்தை, இணையக் கூடத்தை அல்லது இடத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறவரின், நேரடி அனுபோகத்தில் கொண்டிருப்பவரின், பயன்படுத்துகிறவரின் அல்லது வைத்திருப்பவரின் இலாபத்திற்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ, சூதாட்டக் கருவிகள் வைத்து வரப்படுகிற அல்லது பயன்படுத்தப்படுகிற ஏதேனும் வீடு, அறை, கூடாரம், அடைப்பு, வாகனம், கலம், இணையக்கூடம் அல்லது வேறு இடம் எதுவாயினும் என்று பொருள்படும்; மற்றும் சூதாடும் நோக்கத்திற்காகத் திறந்து வைக்கப்பட்ட, வைக்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட, அல்லது திறந்து வைக்கப்படுவதற்காகவோ, வைக்கப்படுவதற்காகவோ அல்லது பயன்படுத்தப்படுவதற்காகவோ அனுமதிக்கப்பட்ட வீடு, அறை, கூடாரம், அடைப்பு, வாகனம், கலம், இணையக்கூடம் அல்லது இடம் எதனையும் உள்ளடக்கும்;
(b) "சூதாட்டம்" என்பது, பரிசுச் சீட்டை உள்ளடக்காது. ஆனால் நேரிலோ அல்லது இணையவெளியிலோ பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதலை உள்ளடக்கும்.
விளக்கம்.- (b) ஆம் கூறு மற்றும் 3-A ஆம் பிரிவின் நோக்கத்திற்காக, பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதலானது பந்தயப் பொருளை வசூலிப்பதையோ, கேட்டுப்பெறுவதையோ, பணயம் அல்லது பந்தயம் எதனையும் பொருத்து மின்னணு வழிப் பணப் பரிமாற்றம் உள்ளடங்கலான பணமாகவே மற்றபடியோ வெற்றிப்பொருட்களை அல்லது பரிசுகளைப் பெற்றுக் கொள்வதை அல்லது விநியோகம் செய்தலை அல்லது பணயம் வைப்பதற்கு அல்லது பந்தயம் கட்டுவதற்கு அல்லது அவ்வாறு வசூலிப்பதற்கு, கேட்டுப்பெறுவதற்கு, பெற்றுக் கொள்வதற்கு அல்லது விநியோகம் செய்வதற்கு உதவும், தூண்டும், வேண்டுகின்ற அல்லது அவற்றிற்கு வசதி செய்கின்ற கருத்தோடு செய்யப்பட்ட செயல் எதனையுமோ உள்ளடக்குவதாகக் கொள்ளுதல் வேண்டும்;
(c) "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்;
3(d) "சூதாட்டக் கருவிகள்" என்பது, சூதாட்டப் பொருளாக அல்லது சூதாடுவதற்கான உபாயமாகப் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக் கருதப்பட்ட ஆட்டச் சீட்டுகள், பகடைக் காய்கள், சூதாட்ட மேசை அல்லது துணி, பலகை, கணினிகள், கணினி அமைப்பு, கணினி வலையமைப்பு, கணினி வளம், தொடர்பு சாதனம் எதையும் அல்லது பிற பொருள் எதையும்,சூதாட்டம் எதற்குமான பதிவேடாக, பதிவுறு அல்லது சான்றாக பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக் கருதப்பட்ட பதிவேடு அல்லது மின்னணு பதிவுறு எதையும், சூதாட்டம் எதிலிருந்தும் கிடைக்கும் பணத் தொகையையும், சூதாட்டம் எதனையும் பொறுத்து விநியோகம் செய்யப்பட்ட அல்லது விநியோகம் செய்யக் கருதப்பட்ட பணமாகவோ, அல்லது மின்னணு வழிப்பணப்பரிமாற்றம் உள்ளடங்கலான மற்ற படியாகவோ உள்ள வென்ற பொருட்கள் அல்லது பரிசுகள் எவற்றையும் உள்ளடக்கும்;
மையச் சட்டம் 21/2000.
(e) இச்சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 'கணினி', 'தொடர்பு சாதனம்', 'கணினி வலையமைப்பு', 'கணினி வளம்', 'கணினி அமைப்பு', 'இணையக் கூடம்' மற்றும் 'மின்னணு பதிவுறு' ஆகிய சொற்கள், 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில் நுட்பச் சட்டத்தில் அவைகளுக்கு முறையே வழங்கப்பட்டிருக்கும் பொருளை கொண்டிருக்கும்.
3-A இணைய வெளியில் பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதல்- (1) கணினிகள், கணினி அமைப்பு, கணினி வலையமைப்பு, கணினி வளம், தொடர்பு சாதனம் எதுவும் அல்லது சூதாடுதலுக்கான பிற கருவி எதையும் பயன்படுத்தி, ரம்மி, போக்கர் அல்லது பிற சூதாட்டம் எதையும் இணையவெளியில் விளையாடுவதன் மூலம் நபரெவரும் பணயம் வைத்தலோ அல்லது பந்தயம் கட்டுதலோ கூடாது அல்லது இணைய வெளியில் அத்தகைய பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதல் எதையும் நபரெவரும் எளிதாக்குதல் அல்லது ஏற்பாடு செய்தல் கூடாது.
(2) கணினிகள், கணினி அமைப்பு, கணினி வலையமைப்பு, கணினி வளம், தொடர்பு சாதனம் எதுவும் அல்லது சூதாடுதலுக்கான பிற கருவி எதையும் பயன்படுத்தி, ரம்மி, போக்கர் அல்லது பிற சூதாட்டம் எதையும் இணையவெளியில் விளையாடுவதன் மூலம் பணயம் வைக்கும் அல்லது பந்தயம் கட்டும் நபரெவரும் அல்லது இணைய வெளியில் அத்தகைய பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதல் எதையும் எளிதாக்கும் அல்லது ஏற்பாடு செய்யும் நபரெவரும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் சிறைத்தண்டனையுடன் அல்லது பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாத தண்டத்தொகையுடன் அல்லது இவ்விரண்டுடனும் தண்டிக்கப்படுதல் வேண்டும்.".
4ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
3. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (b), (c) மற்றும் (d) கூறுகளில், "அடைப்பு, வாகனம், கலம்" என்ற சொற்றொடருக்கு பின்பு "இணையக் கூடம்" என்ற சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
5 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
4. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "இரண்டாம் வகுப்பு நீதித்துறை நடுவருக்கு கீழ்நிலையில்லாத, "அல்லது காவல் துணைக் கண்காணிப்பாளர் படிநிலைக்குக் குறையாத காவல் அலுவலர் எவரும்" என்ற சொற்றொடருக்காக, "அல்லது நேர்வுக்கேற்ப காவல் துணை கண்காணிப்பாளர் அல்லது காவல் உதவி ஆணையர் படிநிலைக்குக் குறையாத காவல் அலுவலர் எவரும்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
46 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
5. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில், "ஆட்டச்சீட்டுகள், பகடைக் காய்கள், சூதாட்ட மேசை அல்லது துணி, பலகை எதுவும்" என்ற சொற்றொடருக்கு பின்பு, "மின்னணு பதிவுறு, கணினிகள், கணினி அமைப்பு, கணினி வலையமைப்பு, கணினி வளம் அல்லது தொடர்பு சாதனம் எதுவும்" என்ற சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
8 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
6. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவில், "ஐநூறு ரூபாய்" மற்றும் "மூன்று மாதங்கள்" என்ற சொற்றொடர்களுக்காக, முறையே "பத்தாயிரம் ரூபாய்" மற்றும் "இரண்டு ஆண்டுகள்" என்ற சொற்றொடர்களாக மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
9 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
7. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 9 ஆம் பிரிவில், "இருநூறு ரூபாய்" மற்றும் "ஒரு மாதம்" என்ற சொற்றொடர்களுக்காக, முறையே "ஐந்தாயிரம் ரூபாய்" மற்றும் "ஆறு மாதங்கள்" என்ற சொற்றொடர்களானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
11 ஆம் பிரிவிற்கான
8. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 11 ஆம் பிரிவிற்காக பின்வரும்
திருத்தம்.
பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது;-
"11. வெறும் திறமை சார்ந்த விளையாட்டுகள்.-
11. வெறும் திறமை சார்ந்த விளையாட்டுகள்.- இச்சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும், பந்தயம் கட்டுதல், பணயம் வைத்தல், பணம் அல்லது இதரப் பணயம் ஆகியவற்றிக்காக விளையாடப்படும் போது, வெறும் திறமை சார்ந்த விளையாட்டுக்களின் மீது இச்சட்டத்தின் பிரிவு 3-A மற்றும் 5 முதல் 10 வரையிலுள்ள பிரிவுகள் பொருந்துதல் வேண்டும்".
12 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
9. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 12 ஆம் பிரிவில், "ஒரு நூறு ரூபாய்" மற்றும் "மூன்று மாதங்கள்" என்ற சொற்றொடர்களுக்காக, முறையே "ஐந்தாயிரம் ரூபாய்" மற்றும் "ஆறு மாதங்கள்" என்ற சொற்றொடர்களானது மாற்றாகமைக்கப்படுதல் வேண்டும்.
13 –B எனும்
10. 1930 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 13–A ஆம் பிரிவிற்கு பின்பு,
புதிய பிரிவினை பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது
உட்புகுத்துதல்.
"13"13–B நிறுமங்களால் செய்யப்படும் குற்றங்கள்.
நிறுமங்களால் செய்யப்படும் குற்றங்கள்.– (1) இந்தச் சட்டத்தின்படியான குற்றம் ஒரு நிறுமத்தினால் செய்யப்பட்டிருக்கிறவிடத்து, அந்த குற்றம் செய்யப்பட்ட நேரத்தில், அந்த நிறுமத்தின் அலுவலை நடத்தி வருவதற்கு அந்த நிறுமத்தின் பொறுப்பைக் கொண்டிருந்தவரும் அதற்குப் பொறுப்பாயிருந்தவருமான நபர் ஒவ்வொருவரும், அதோடு அந்த நிறுமமும், அந்தக் குற்றத்தினைச் செய்ததாகக் கருதப்படுதலும் அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படுதலும், தண்டிக்கப்படுதலும் வேண்டும்:
வரம்புரையாக-வரம்புரையாக- ஆனால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அந்தக் குற்றம் தமக்குத் தெரியாமல் செய்யப்பட்டதாக அல்லது அத்தகைய குற்றம் செய்யப்படாமல் தடுக்கத் தாம் உரிய முயற்சி அனைத்தையும் மேற்கொண்டதாக நபரெவரும் மெய்ப்பிப்பாரானால், அவரை தண்டனை எதற்கும் உள்ளாக்குதல் ஆகாது.
(2) (1)ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், குற்றம் எதுவும் ஒரு நிறுமத்தினால் செய்யப்பட்டிருந்து, அந்நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவருடைய இசைவுடனோ அல்லது மறைமுக ஆதரவுடனோ அந்தக் குற்றம் செய்யப்பட்டிருக்கிறது அல்லது அவர்பாலுள்ள கவனக்குறைவு எதற்கும் சாட்டத்தக்கதாக இருக்கிறது என்று மெய்ப்பிக்கப்படுகிறவிடத்து, அந்த இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் அந்தக் குற்றத்தைச் செய்திருப்பதாகக் கருதப்படுதலும், அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும் வேண்டும்.
5விளக்கம்- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக-
(a) "நிறுமம்" என்பது, கூட்டமைப்பு எதுவும், என்று பொருள்படும் மற்றும் ஒரு நிறுவகத்தை அல்லது பிற தனிநபர்களின் கழகத்தை உள்ளடக்கும்; மற்றும்
(b) "இயக்குநர்" என்பது, ஒரு நிறுவகத்தைப் பொறுத்தவரையில், அந்த நிறுவகத்திலுள்ள ஒரு கூட்டாளி என்று பொருள்படும்.".
பகுதிபகுதி – III.
1888 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டத்திற்கான திருத்தங்கள். 1888 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டத்திற்கான திருத்தங்கள்.
தமிழ்நாடு சட்டம்
3ஆம் பிரிவிற்கான III/1888.
திருத்தம்.
11. (இதன் பின்பு இப்பகுதியில் 1888ஆம் ஆண்டுச் சட்டமெனக் குறிப்பிடப்படுவதான) 1888 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டத்தின் 3 ஆம் பிரிவிலுள்ள, 'குற்றத் தீர்ப்பு', 'சிறைப்படுத்தல்', 'பொது சூதாட்ட விடுதி', சூதாடுதல், 'சூதாட்டக் கருவிகள்' ஆகியவற்றின் பொருள் வரையரைகள் விட்டுவிடப்படுதல் வேண்டும்.
குறிப்பிட்ட சில பிரிவுகளை 12. 1888 ஆம் ஆண்டுச் சட்டத்தின், 40–A, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 49–A, 49–B, 50, 51 மற்றும் 52 ஆம் பிரிவுகள் விட்டுவிடப்படுதல் வேண்டும்.
விட்டுவிடுதல்.
79 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
13. 1888 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 79 ஆம் பிரிவில், "ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்துஸ்தானி" என்ற சொற்றொடருக்காக, "ஆங்கிலம் மற்றும் தமிழ்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
80 –A எனும் 14. 1888 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 80 ஆம் பிரிவிற்கு பின்பு,
புதிய பிரிவினை பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது ;-
உட்புகுத்துதல்.
"8080 A. நிறுமங்களால் செய்யப்படும் குற்றங்கள்
நிறுமங்களால் செய்யப்படும் குற்றங்கள்—."(1) இந்தச் சட்டத்தின்படியான குற்றம் ஒரு நிறுமத்தினால் செய்யப்பட்டிருக்கிறவிடத்து, அந்த குற்றம் செய்யப்பட்ட நேரத்தில், அந்த நிறுமத்தின் அலுவலை நடத்தி வருவதற்கு அந்த நிறுமத்தின் பொறுப்பைக் கொண்டிருந்தவரும் அதற்குப் பொறுப்பாயிருந்தவருமான நபர் ஒவ்வொருவரும், அதோடு அந்த நிறுமமும், அந்தக் குற்றத்தினைச் செய்ததாகக் கருதப்படுதலும் அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படுதலும், தண்டிக்கப்படுதலும் வேண்டும்.
வரம்புரையாக- ஆனால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அந்தக் குற்றம் தமக்குத் தெரியாமல் செய்யப்பட்டதாக அல்லது அத்தகைய குற்றம் செய்யப்படாமல் தடுக்கத் தாம் உரிய முயற்சி அனைத்தையும் மேற்கொண்டதாக நபரெவரும் மெய்ப்பிப்பாரானால், அவரை தண்டனை எதற்கும் உள்ளாக்குதல் ஆகாது.
(2) (1)ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், குற்றம் எதுவும் ஒரு நிறுமத்தினால் செய்யப்பட்டிருந்து, அந்நிறுமத்தின் எவரேனும் இயக்குநரின், மேலாளரின், செயலாளரின் அல்லது பிற அலுவலரின் இசைவுடனோ, மறைமுக ஆதரவுடனோ அந்தக் குற்றம் செய்யப்பட்டிருக்கிறது அல்லது அவர்பாலுள்ள கவனக்குறைவு எதற்கும் சாட்டத்தக்கதாக இருக்கிறது என்று மெய்ப்பிக்கப்படுகிறவிடத்து, அந்த இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் அந்தக் குற்றத்தைச் செய்திருப்பதாகக் கருதப்படுதலும், அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும் வேண்டும்.
6விளக்கம்- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக-
(a) "நிறுமம்" என்பது, கூட்டமைப்பு எதுவும், என்று பொருள்படும் மற்றும் ஒரு நிறுவகத்தை அல்லது பிற தனிநபர்களின் கழகத்தை உள்ளடக்கும்; மற்றும்
(b) "இயக்குநர்" என்பது, ஒரு நிறுவகத்தைப் பொறுத்தவரையில், அந்த நிறுவகத்திலுள்ள ஒரு கூட்டாளி என்று பொருள்படும்.".
பகுதிபகுதி – IV.
1859 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்திற்கான திருத்தம்.ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்திற்கான திருத்தம்.
குறிப்பிட்ட சில
மையச் சட்டம் XXIV/1859.
சொற்றொடர்களை
விட்டுவிடுதல்.
15. 1859 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்தின் இணைப்புப்பட்டியலில், "3 ஆம் பிரிவில் உள்ள சொற்றொடர்களான 'சிறைப்படுத்துதல்', 'சூதாடுதல்', 'சூதாட்டக் கருவிகள்', 'பொது சூதாட்ட விடுதி' மற்றும் 'குற்றத்தீர்ப்பு' ஆகியவற்றிற்கான பொருள் வரையறைகள்" மற்றும் "48, 50" ஆகியவை விட்டுவிடப்படுதல் வேண்டும்.
நீக்கறவு மற்றும்
தமிழ்நாடு அவசரச் காப்புரை.
சட்டம் 11/2020 16. (1) 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் (திருத்த) அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.
தமிழ்நாடு சட்டம்
III/1930
தமிழ்நாடு சட்டம்
III/1888 மையச் சட்டம் XXIV/1859 (2) அத்தகைய நீக்கறவு இருந்த போதிலும், மேற்சொன்ன அவசர சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறான, 1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம், 1888 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம் மற்றும் 1859 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகிய சட்டங்களின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறான மேற்சொன்ன அவசரச் சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாக கொள்ளப்பட வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
7தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 25 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 2/2021.
1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தை
மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்
தொடக்கம்.
சங்கங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
81-ஆம் பிரிவிற்கான 30/1983.
திருத்தம்.
2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 81 ஆம் பிரிவில் (4) ஆம் உட்பிரிவில், —
(i) "மூன்று மாதங்களுக்கு மிகாமல்" என்ற சொற்றொடருக்காக, "ஒரு மாதத்திற்கு மிகாமல்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) "ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்" என்ற சொற்றொடருக்காக "மூன்று மாதங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
3. முதன்மைச் சட்டத்தின் 82 ஆம் பிரிவில், (4) ஆம் உட்பிரிவில், — 82-ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
(i) "மூன்று மாதங்களுக்கு மிகாமல்" என்ற சொற்றொடருக்காக, "ஒரு மாதத்திற்கு மிகாமல்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) "ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்" என்ற சொற்றொடருக்காக "மூன்று மாதங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
87-ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 87 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் இரண்டாம் வரம்புரைக்காக பின்வரும் வரம்புரையானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது :-
"மேலும், வரம்புரையாக இந்த உட்பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை, தொடங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத கால அளவுக்குள் அல்லது அடுத்த நிலை உயர் அலுவலர் மேற்கொண்டும் அனுமதிக்கக்கூடிய ஒரே சமயத்தில் ஒரு மாதத்திற்கு மிகாத கால அளவு அல்லது கால அளவுகளுக்குள் முடிக்கப்படவேண்டும். ஆனால், அத்தகைய நீட்டிக்கப்பட்ட கால அளவுகள் மொத்தத்தில் மூன்று மாதங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்".
5. முதன்மைச் சட்டத்தின் 90 ஆம் பிரிவில், — 90-ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவில், (d) ஆம் கூறில், "ஏதேனும் பிற பதிவுசெய்யப்பட்ட சங்கம்" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது சங்கம் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் கலைப்பு அதிகாரிக்கிடையே அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் கலைப்பு அதிகாரி மற்றும் மற்றொரு பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் கலைப்பு அதிகாரிக்கிடையே" என்ற சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்;
8(2) (9) ஆம் உட்பிரிவில், (a) ஆம் கூறில், (i) ஆம் உட்கூறில், "ஒரு தனி அலுவலர்" என்ற சொற்றொடருக்காக, "ஒரு செயலாட்சியர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
9தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 25 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 3/2021.
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்
தொடர்பான சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
பகுதி-I.
முன்னுரை.
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச்
தொடக்கம்.
சட்டங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
பகுதி-II.
1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
414-B ஆம் IV/1919.
பிரிவிற்கான
திருத்தம் 2. 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்தின் 414- B ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-III.
1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கான
திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
375-B ஆம் V/1920.
பிரிவிற்கான
திருத்தம்.
3. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 375-B ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாகஅமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-IV.
1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
15/1971. .
510-AAA ஆம் பிரிவிற்கான
திருத்தம் 4. 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 510-AAA ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-V.
1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
511-AAA ஆம் 25/1981.
பிரிவிற்கான
திருத்தம்.
5. 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின் 511- AAA ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
10பகுதி-VI.
1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்திற்கான
திருத்தம்.
10-A ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
27/1994.
6. 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-VII.
1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
10-A ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
28/1994.
7. 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-VIII.
1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
10-A ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
29/1994.
8. 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-IX.
2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
9-A ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
7/2008.
9. 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-X.
2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
9-A ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
8/2008.
10. 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-XI.
2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
9-A ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
26/2008.
11. 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-XII.
2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
9-A ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
27/2008.
12. 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
11பகுதி-XIII.
2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
9-A ஆம் பிரிவிற்கான 24/2013.
திருத்தம்.
13. 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-XIV.
2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
9-A ஆம் பிரிவிற்கான 25/2013.
திருத்தம்.
14. 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-XV.
2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
10 ஆம் பிரிவிற்கான 10/2019.
திருத்தம்.
15. 2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின்,(4) ஆம் உட்பிரிவில் ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-XVI.
2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
10 ஆம் பிரிவிற்கான 11/2019.
திருத்தம்.
16. 2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின்,(4) ஆம் உட்பிரிவில் ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி-XVII.
2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
10 ஆம் பிரிவிற்கான 24/2019.
திருத்தம் 17. 2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின்,(4) ஆம் உட்பிரிவில் ''2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அவசரச்
நீக்கறவு மற்றும் 18.(1) 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் (நான்காம்
சட்டம் 13/2020.
காப்புரை.
திருத்தம்) அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.
12தமிழ்நாடு சட்டம்
IV/1919.
தமிழ்நாடு சட்டம்
V/1920.
தமிழ்நாடு சட்டம்
15/1971.
தமிழ்நாடு சட்டம்
25/1981.
தமிழ்நாடு சட்டம்
27/1994.
தமிழ்நாடு சட்டம்
28/1994.
தமிழ்நாடு சட்டம்
29/1994.
தமிழ்நாடு சட்டம்
7/2008.
தமிழ்நாடு சட்டம் (2) அத்தகைய நீக்கறவு இருந்த போதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டம், 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டம், 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டம், 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டம், 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டம், 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டம், 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டம், 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டம், 2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டம், 2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சிச் சட்டம் மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டம் ஆகியவற்றின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
8/2008.
தமிழ்நாடு சட்டம்
26/2008.
தமிழ்நாடு சட்டம்
27/2008.
தமிழ்நாடு சட்டம்
24/2013.
தமிழ்நாடு சட்டம்
25/2013.
தமிழ்நாடு சட்டம்
10/2019.
தமிழ்நாடு சட்டம்
11/2019.
தமிழ்நாடு சட்டம்
24/2019.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
13தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 25 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 4/2021.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
தொடக்கம்.
(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாளன்று நடைமுறைக்கு
வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
261-A ஆம் 21 / 1994.
பிரிவிற்கான
திருத்தம்.
2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 261-A ஆம் பிரிவில், "2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" எனும் சொற்றொடருக்காக, "2021ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அவசரச்
நீக்கறவு மற்றும் 3. (1) 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (நான்காம் திருத்த)
சட்டம் 12/2020.
காப்புரை.
அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகின்றது.
தமிழ்நாடு சட்டம்
21/1994.
(2) அத்தகைய நீக்கறவு செய்யப்பட்டிருந்த போதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறான 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான மேற்சொன்ன அவசரச் சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
142021 - ஆம் ஆண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகச் சட்டம்
பிரிவுகளின் வரிசை அமைப்புபிரிவுகளின் வரிசை அமைப்பு
அத்தியாயம் I.
முன்னுரை.
1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துகை மற்றும் தொடக்கம். 2. வரையறைகள்.
அத்தியாயம் II. பல்கலைக்கழகம்.
3. பல்கலைக்கழகம். 4. பல்கலைக்கழகத்தின் நோக்கங்களும், அதிகாரங்களும். 5. கல்லூரிகள் பிற பல்கலைக்கழகம் எதனுடனும் இணைக்கப்படாதிருத்தல் மற்றும் கல்வி நிலையங்கள் பல்கலைக்கழகத்தால் ஏற்பிசைவளிக்கப் பெறுதல். 6. பல்கலைக்கழகத்தில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளுதல். 7. மேற்பார்வை அதிகாரம்.
அத்தியாயம் III.
பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள்.
8. பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள். 9. வேந்தர். 10. இணை வேந்தர். 11. துணை வேந்தர். 12. துணைவேந்தரின் அதிகாரங்களும், கடமைகளும். 13. பதிவாளர். 14. புலத் தலைவர். 15. நிதி அலுவலர். 16. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர். 17. நூலகர்.
அத்தியாயம் IV. பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகள்.
18. பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகள். 19. உறுப்பினர் பதவிக்கான தகுதிக்கேடு. 20. ஒரு சில நேர்வுகளில் கல்வி மன்றத்திற்கும், ஆட்சிக்குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அல்லது பெயர் குறித்து நியமிக்கப்படுவதற்கான தகுதிக்கேடுகள்.
21. ஆட்சிக்குழு. 22. ஆட்சிக்குழுவின் அதிகாரங்கள்.
23. ஆட்சிக் குழுவின் கூட்டங்கள். 24. கல்வி மன்றம். 25. கல்விமன்றத்தின் அதிகாரங்களும் அலுவல்களும். 26. கல்விமன்றத்தின் கூட்டங்கள். 27. நிதிக்குழு. 28. திட்டமிடும் குழு. 29. பாடக்குழுக்கள். 30. புலங்களை அமைத்துருவாக்குதலும், செயற்பணிகளும். 31. பிற அதிகார அமைப்புகளை அமைத்துருவாக்குதல்.
அத்தியாயம் V. நிலைவிதிகள், துணைமுறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள்.
32. நிலைவிதிகள். 33. நிலைவிதிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன. 34. துணைமுறை விதிகள். 35. துணைமுறை விதிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன. 36. ஒழுங்குமுறை விதிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன.
15அத்தியாயம் VI. மாணவர்களின் சேர்க்கை மற்றும் தங்குமிடம்.
37. பல்கலைக்கழக பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை. 38. பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு அனுமதித்தல். 39. பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான வருகைப் பதிவு குறித்த தகுதி. 40. தங்குமிடமும், மாணவர் விடுதியும்.
அத்தியாயம் VII.
பல்கலைக்கழக நிதியங்கள்
41. பொது நிதியங்கள். 42. பிற நிதியங்கள். 43. நிதியங்களை மேலாண்மை செய்தல். 44. ஆண்டறிக்கை. 45. ஆண்டுக் கணக்குகள்.
அத்தியாயம் VIII.
பணி நிபந்தனைகள்
46. ஓய்வூதியம், பணிக்கொடை முதலானவை. 47. பணி நிபந்தனைகள். 48. தெரிவுக்குழுக்கள்.
49. துறைத் தலைவர்களின் பணியின் வரையறைகளும், வரைக்கட்டுகளும்.
50. குழுக்களை அமைத்துருவாக்குதல்.
அத்தியாயம் IX. கல்லூரிகளை மாற்றுதல்.
51. ஒருசில கல்லூரிகளை பல்கலைக்கழகத்திற்கு மாற்றுதல். 52. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறித்த சில பணியாளர்களின் பணியை இப்பல்கலைக்கழகத்திற்கு மாற்றுதல்.
அத்தியாயம் X.
மாறுதல்கால வகைமுறைகள்
53. முதல் துணைவேந்தரின் நியமனம். 54. முதல் பதிவாளரின் நியமனம். 55. முதல் துணைவேந்தரின் மாறுதல்கால அதிகாரங்கள்.
அத்தியாயம் XI.
பல்வகைப்பட்டவை
56. தற்செயல் காலியிடங்களை நிரப்புதல். 57. பல்கலைக்கழகம் அதிகார அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகளின் நடவடிக்கைகள் காலியிடங்கள் காரணமாகச் செல்லாதவையாக ஆகாதிருத்தல்.
58. பல்கலைக்கழக உறுப்பினர் பதவி நீக்கல். 59. பல்கலைக்கழக அதிகார அமைப்புகளையும், பிற அமைப்புகளையும் அமைத்துருவாக்குதல் பற்றிய தகராறுகள்.
60. தகவல் பெறுவதற்கான அதிகாரம். 61. வருங்கால வைப்பு நிதியம் மற்றும் அது போன்ற நிதியங்களில் சேர்ந்துள்ள தொகைகளை மாற்றுதல் 62. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தினால் சில குறிப்பிட்ட தொகை வழங்கப்படுதல். 63. தமிழ்நாடு சட்டம் 32/2002 பொருந்தாதிருத்தல். 64. பட்டதாரிகளை பதிவு செய்தல். 65. சிறப்பு நியமன முறை. 66. இணைக்கப்பட்ட கல்லூரி மீதான அறிக்கை. 67. இடர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம். 68. பணிப்புரைகள் வழங்க அரசுக்கு உள்ள அதிகாரம். 69. ஐயங்களை அகற்றுதல். 70. 2002ஆம் ஆண்டு சட்டத்திற்கான திருத்தம்.
இணைப்புப் பட்டியல்16 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 25 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 5/2021.
விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி அமைப்பதற்கு வகை
செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
அத்தியாயம்-I.
முன்னுரை.
1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு டாக்டர். ஜெ. ஜெயலலிதா
பல்கலைக்கழகச் சட்டம் என வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துகை மற்றும் தொடக்கம்.
(2) இது, தமிழ்நாடு மாநிலத்தில் 2013 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகச்சட்டத்தின் (தமிழ்நாடுச் சட்டம் 20/2013) 1ஆம் பிரிவின் (2) உட்பிரிவின்படி குறிப்பிடப்பட்டுள்ள பரப்பிடங்கள் நீங்கலாக உள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியிருக்கின்ற பரப்பிடத்தை அளாவி நிற்கும்.
(3) இது, இப்பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்குள் அமைந்துள்ளவையும், பேணப்பட்டவையும், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட நிலை விதிகள், துணைமுறை விதிகள், ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றிற்கிணங்க, இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெறும் அல்லது அதனால் ஒப்பதலளிக்கப் பெறுபவையுமான அனைத்துக் கல்லூரிகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும் பொருந்துவதோடு, இந்தச் சட்டத்தின்படி, இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருப்பனவாக அல்லது அதனால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பனவாகக் கொள்ளப்படும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் கூடப் பொருந்தும்.
(4) இது, அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறிக்கக்கூடிய அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
வரையறைகள். 2. இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
(a) "இணைக்கப்பட்ட கல்லூரி" என்பது, இப்பல்கலைக்கழக பரப்பிடத்திற்குள் அமைந்துள்ளதும் இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதும் மற்றும் பல்கலைக்கழகத்தின் பட்டங்களுக்கான தேர்வுகளுக்கு அனுமதிப்பதற்கான பாடப்பிரிவு வகைகளுக்கு வகை செய்கின்றதுமான கல்லூரி அல்லது கல்வி நிலையம் எதுவும் எனப் பொருள்படும் மற்றும் இந்தச் சட்டத்தின்படி இப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்பட்ட கல்லூரி ஒன்றையும் அல்லது கல்வி நிலையத்தையும் மற்றும் தன்னாட்சி கல்லூரி ஒன்றையும் உள்ளடக்கும்;
(b) "குறிக்கப்பட்ட நாள்" என்பது 1 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின்படி,
அறிவிக்கையின் வாயிலாகக் குறிப்பிடப்பட்ட தேதி எனப் பொருள்படும்.
17(c) "ஒப்புதளிக்கப்பெற்ற கல்லூரி" என்பது, இப்பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்குள் அமைந்துள்ளதும், இப்பல்கலைக்கழகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதும் மற்றும் இப்பல்கலைக்கழகத்தின் விருதுகள் மற்றும் பட்டயங்களுக்கான தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படுவதற்கான பாடப்பிரிவுகளுக்கு வகை செய்கின்றதுமான கல்லூரி அல்லது கல்வி நிலையம் எதுவும் எனப் பொருள்படுவதோடு, இந்தச் சட்டத்தின்படி இப்பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்பெற்ற கல்வி நிலையம் ஒன்றையும் உள்ளடக்கும்;
(d) "தன்னாட்சி கல்லூரி" என்பது, நிலைவிதிகளினால் ஒரு தன்னாட்சி கல்லூரி எனப்பெயர் குறிக்கப்பெற்ற இணைக்கப்பட்ட கல்லூரி எதுவும் எனப் பொருள்படும்;
(e) "கல்லூரி" என்பது, இப்பல்கலைக்கழகத்தால் பேணிவரப்படும் அல்லது அதனால் ஒப்புதல் அளிக்கப்பெற்றுள்ள அல்லது அத்துடன் இணைக்கப்பட்டுள்ள மற்றும் இப்பல்கலைக்கழகத்தின் பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்புகளுக்கான தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படுவதற்கான பாடப்பிரிவுகளுக்கு வகை செய்கின்றதுமான கல்லூரி அல்லது கல்வி நிலையம் எதுவும் எனப் பொருள்படும்;
(f) "அரசுக் கல்லூரி" என்பது, இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
கல்லூரி மற்றும் கல்வி நிலையம் ஒவ்வொன்றும் எனப் பொருள்படும்;
(g) "அரசு" என்பது, மாநில அரசு எனப் பொருள்படும்.
(h) "மாணவர் விடுதி" என்பது, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கிணங்க, இப்பல்கலைக்கழகத்தால் பேணி வரப்பெறும் அல்லது ஏற்பிசைவு அளிக்கப்பெற்றுள்ள, இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தங்கியிருப்பதற்கான ஓரிடம் எனப் பொருள் பெறுவதோடு, இந்தச் சட்டத்தின்படி இப்பல்கலைக்கழகத்தால் ஏற்பிசைவு அளிக்கப்பெற்றிருப்பதாகக் கொள்ளப்பெறும் மாணவர் விடுதியொன்றையும் உள்ளடக்கும்;
(i) "பட்ட-மேற்படிப்பு கல்லூரி" என்பது, இப்பல்கலைக்கழக பரப்பிடத்திற்குள் அமைந்துள்ளதும், இப்பல்கலைக்கழகத்தின் பட்டமேற்படிப்பு பிரிவுகளுக்கு வகை செய்கின்ற பட்டமேற்படிப்புப் பிரிவுகளை வழங்குகின்றதுமான ஒரு பல்கலைக்கழக கல்லூரி அல்லது ஓர் இணைக்கப்பட்ட கல்லூரி எனப் பொருள்படும்;
(j) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது, நிலை விதிகள், துணைமுறை விதிகள்,
ஒழுங்குமுறை விதிகளினால் வகுத்துரைக்கப்பட்டது எனப்பொருள்படும்;
(k) "முதல்வர்" என்றால், கல்லூரி ஒன்றின் தலைவர் எனப்பொருள்படும்;
(l) "இணைப்புப் பட்டியல்" என்பது, இந்தச் சட்டத்திற்காக இணைக்கப்பட்டுள்ள
இணைப்புப் பட்டியல் எனப்பொருள்படும்;
(m) "நிலை விதிகள்", "துணை முறை விதிகள்" மற்றும் "ஒழுங்கு முறை விதிகள்" என்பது, இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்டு அல்லது தொடர்ந்து செயலாற்றல் பெற்றிருக்குமாறு செய்யப்பட்டுள்ள, முறையே இப்பல்கலைக்கழகத்தின் நிலை விதிகள், துணைமுறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் எனப் பொருள்படும்;
(n) "ஆசிரியர்கள்" என்றால், ஆசிரியர்களென என நிலை விதிகளால் விளம்பப்படக்கூடிய, பல்கலைக்கழக கல்லூரிகளில் அல்லது ஆய்வுக்கூடங்களில், இணைக்கப்பெற்ற அல்லது ஒப்புதல் அளிக்கப்பெற்ற கல்லூரிகளில் அல்லது மாணவ விடுதிகளில் கல்வி கற்பிக்கின்ற உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற நபர்கள் எனவும் மற்றும் நூலகர்கள் எனவும் பொருள்படும்;
(o) "பல்கலைக்கழக ஆசிரியர்கள்" என்றால், இப்பல்கலைக்கழகத்தின் சார்பாக கல்வி கற்பிப்பதற்காக, பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பெற்றுள்ளவர்கள் எனப் பொருள்படும்;
(p) "பல்கலைக்கழகம்" என்பது, டாக்டர். ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் எனப்
பொருள்படும்;
18(q) "பல்கலைக்கழகப்பரப்பிடம்" என்பது, தமிழ்நாடு மாநிலத்திலுள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பரப்பிடம் எனப் பொருள்படும்;
(r) "பல்கலைக்கழக மையம்" என்பது, உயர்கல்வி கற்பிப்பதிலும், ஆராய்ச்சிப் பணியிலும் ஈடுபடுத்திக் கொள்வதற்குத் தகுதி வாய்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டத் துறைகளை அல்லது கல்லூரிகளைக் கொண்டிருக்கிற பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்குள் அமைந்த பரப்பிடம் எதுவும் எனப் பொருள்படும்;
(s) "பல்கலைக்கழகக் கல்லூரி" என்பது, இப்பல்கலைக்கழகத்தால் நிறுவப்பெற்ற அல்லது பேணிவரப்பெற்ற மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கிணங்கியவாறு தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படுவதற்காக பாடப்பிரிவுகளுக்கு வகை செய்வதற்காக, பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே அல்லது வெளியே அமைந்துள்ள ஒரு கல்லூரி எனப் பொருள்படும்;
மையச் சட்டம்
30/1956.
(t) "பல்கலைக்கழக மானியக்குழு" என்பது, 1956 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் நிறுவி அமைக்கப்பட்டுள்ள குழு எனப் பொருள்படும்;
(u) "பல்கலைக்கழக ஆய்வுக்கூடம்" என்பது, இப்பல்கலைக்கழகத்தால் நிறுவப் பெற்றதாயினும் இல்லாவிடினும் அதனால் பேணிவரப்படுவதும், ஆராய்ச்சிப் பணியை செய்துவருவதற்காகவும் அதனை மேம்படுத்துவதற்காகவுமென்று கருதப் பெற்றுள்ளதுமான ஓர் ஆய்வுக்கூடம் எனப் பொருள்படும்;
(v) "பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்", "பல்கலைக்கழக இணைப் பேராசிரியர்" அல்லது "பல்கலைக்கழக பேராசிரியர்" என்றால், பல்கலைக்கழகத் துறைகளில், பல்கலைக்கழக கல்லூரிகளில் மற்றும் பல்கலைக்கழக மையங்களில் இப்பல்கலைக்கழகத்தால் அத்தகையவராக நியமிக்கப்பெற்றுள்ள அல்லது நியமிக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்பட்ட முறையே உதவிப் பேராசிரியர் அல்லது இணைப் பேராசிரியர் அல்லது பேராசிரியர் ஒருவர் எனப் பொருள்படும்;
(w) "பல்கலைக்கழக நூலகம்" என்பது, இப்பல்கலைக்கழகத்தால் நிறுவப் பெற்றதாயினும் இல்லாவிடினும், அதனால் பேணி வரப்பெறும் ஒரு நூலகம் எனப் பொருள்படும்;
அத்தியாயம் - II.
பல்கலைக்கழகம்.
பல்கலைக்கழகம். 3. (1) டாக்டர். ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்ற பெயரில்
பல்கலைக்கழகமொன்று நிறுவப்படுதல் வேண்டும்.
(2) இப்பல்கலைக்கழகம், ஒரு கூட்டமைப்பாக இருத்தல் வேண்டும் என்பதோடு, நிலையான தொடர் உரிமையையும் தனித்த ஓர் இலச்சினையும் பெற்றிருத்தலும் வேண்டும், மேலும் மேற்சொன்ன பெயரில், தான் வழக்கிடுதலும், வழக்கிடப்படுதலும் வேண்டும்.
(3) இப்பல்கலைக்கழகத்தின் தலைமையகம், விழுப்புரம் நகராட்சியின் எல்லைகளுக்குள்ளோ அத்தகைய எல்லைகளைச் சுற்றி இருப்பத்தைந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் உள்ள இடம் எதிலுமோ அமைந்திருக்கும்.
4. இப்பல்கலைக்கழகம் பின்வரும் நோக்கங்களையும் அதிகாரங்களையும்
பெற்றிருக்கும், அவையாவன:-
பல்கலைகழகத்தின் நோக்கங்களும் அதிகாரங்களும்.
(1) அது தீர்மானிக்கக்கலாகும் அத்தகைய கற்கும் பிரிவுகளில் கற்பிப்பதற்கும்
பயிற்சியளிப்பதற்கும் வகை செய்வது;
(2) ஆராய்ச்சி மற்றும் அறிவின் மேம்பாட்டிற்காகவும், பரப்புதற்காகவும் வகை
செய்வது;
19(3) பட்டங்கள், சிறப்பு பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் பிற கல்விச் சிறப்புகள்
ஆகியவற்றை தொடங்குவது,
(4) தேர்வுகள் வைத்து, பட்டங்கள், சிறப்புப்பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் பிற
கல்விச் சிறப்புகள் ஆகியவற்றை,-
(a) பல்கலைக்கழக கல்லூரி ஒன்றிலோ அல்லது ஆய்வுக் கூடம் ஒன்றிலோ அல்லது இணைக்கப்பெற்ற அல்லது ஒப்புதலளிக்கப்பெற்ற கல்லூரி ஒன்றிலோ, ஒப்புதலளிக்கப்பெற்ற படிப்புப் பிரிவைத் தொடர வேண்டியதில்லை என நிலைவிதிகளால் வகுத்துரைக்கப்பட்ட முறையில் விலக்களிக்கப்பட்டிருந்தாலொழிய, அத்தகைய படிப்பு பிரிவை தொடர்ந்துள்ளதோடு, இப்பல்கலைக் கழகத்தின் வகுத்துரைக்கப்பட்ட தேர்வுகளில் தேறியுள்ள நபர்களுக்கு; அல்லது
(b) வகுத்துரைக்கப்பட்டுள்ள வரையரைகளின்படி ஆராய்ச்சியைத்
தொடர்ந்து நடத்தியுள்ள நபர்களுக்கு வழங்குவது ;
(5) தன்னாட்சிக் கல்லூரியொன்றில் ஒப்புதல் அளிக்கப்பெற்ற படிப்புப் பிரிவை தொடர்ந்துள்ளவர்களுக்குப் பட்டங்கள், சிறப்புப்பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் பிற கல்விச் சிறப்புகள் ஆகியவற்றை வழங்குவது;
(6) இப்பல்கலைக்கழக பரப்பிடத்திற்குள் தங்கியிருப்பாரானாலும் அவ்வாறில்லை யாயினும், அஞ்சல் வழிக் கல்வியின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட படிப்புப் பிரிவு ஒன்றை தொடர்ந்துள்ளவர்களுக்கு தேர்வுகள் வைத்துப் பட்டங்கள், சிறப்புப் பட்டங்கள், பட்டயங்கள், பிற கல்விச் சிறப்புகள் ஆகியவற்றை வழங்குவதும் வகுத்துரைக்கப்பட்ட வரைக்கட்டுகளின்படி இப்பல்கலைக்கழக பரப்பிடத்திற்குள் தங்கியிருப்பவர்கள் அல்லாதவர்களுக்கு அத்தகைய விரிவுரைகளுக்கும் கல்வியளிப்பிற்கும் வகை செய்வது;
(7) வகுத்துரைக்கப்பட்ட வரைக்கட்டுகளின்படி, மதிப்புறு பட்டங்களையோ
அல்லது பிற கல்விச் சிறப்புகளையோ வழங்குவது;
(8) இப்பல்கலைக்கழகத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆராய்ச்சி நிலையங்கள், பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் ஆகியவற்றை நிறுவுவது, பேணுதல் மற்றும் மேலாண்மை செய்வது;
(9) வகுத்துரைக்கப்பட்ட வரைக்கட்டுகளின்படி, கல்லூரிகளை, பல்கலைக்கழகத்தில் இணைத்தல் மற்றும் கல்லூரிகளிலிருந்து இணைப்பை விலக்கிக் கொள்வது:
வரம்புரையாக, கல்லூரியொன்றை நிறுவுவதற்கு, அரசின் அனுமதி பெறப்பட்டு அவ்வாறு அனுமதிப்பதற்காக நிபந்தனைகளும் வரைக்கட்டுக்களும் எவையேனுமிருந்து அவை இணங்கி நடக்கப்பட்டாலன்றி அத்தகைய கல்லூரி எதுவும் இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுதல் ஆகாது;
(10) வகுத்துரைக்கப்பட்ட வரைக்கட்டுகளின்படி இப்பல்கலைக்கழகத்தின் சிறப்புப்பட்டங்கள் மற்றும் பட்டயங்களுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான படிப்புப் பிரிவுகளுக்கு வகை செய்கின்ற கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிப்பதும் அவ்வாறு அளிக்கப்பெற்ற ஒப்புதலை விலக்கிக்கொள்வது;
வரம்புரையாக, கல்வி நிலையமொன்றை நிறுவுவதற்கு, அரசின் அனுமதி பெறப்பட்டு அவ்வாறு அனுமதிப்பதற்காக நிபந்தனைகளும் வரைக்கட்டுகளும் எவையேனுமிருந்து அவை இணங்கி நடக்கப்பட்டாலன்றி அத்தகைய கல்வி நிலையம் எதுவும் இப்பல்கலைக்கழகத்தினால் அனுமதியளிக்கப்படுதல் ஆகாது;
(11) வகுத்துரைக்கப்பட்ட முறையிலும், வரைக்கட்டுகளின்படியும், கல்லூரி எதனையும் அரசின் இசைவுடன் தன்னாட்சிக் கல்லூரியென பெயரிட்டுக் குறிப்பிடுவது அவ்வாறு குறிப்பிடப்பட்டதை நீக்கிக் கொள்வது;
20(12) உதவிப்பேராசிரியர் பதவிகள், இணைப் பேராசிரியர் பதவிகள், பேராசிரியர் பதவிகள் மற்றும் இப்பல்கலைக்கழகத்திற்கு தேவைப்படும் பிற ஆசிரியர் பதவிகள் ஆகியவற்றை ஏற்படுத்துவது மற்றும் அத்தகைய உதவிப் பேராசிரியர் பதவிகள், இணைப்பேராசிரியர் பதவிகள், பேராசிரியர் பதவிகள் மற்றும் பிற ஆசிரியர் பதவிகள் ஆகியவற்றுக்கு நபர்களை நியமிப்பது;
(13) நிலை விதிகளுக்கிணங்க, உதவிப் தொகைகள், பயண உதவித் தொகைகள், படிப்புதவித் தொகைகள், மாணவ உதவித் தொகைகள், உதவிச் சம்பளங்கள், ஆதரவுப் படித்தொகைகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் ஆகியவற்றை ஏற்படுத்துவது மற்றும் வழங்குவது;
(14) மாணவர் விடுதிகளை நிறுவிப் பேணி மற்றும் நிர்வகித்து வருதல் இப்பல்கலைக்கழகத்தால் பேணிவரப்படாத மாணவர் விடுதிகளுக்கு ஏற்பிசைவளித்தல் மற்றும் அவ்வாறு அளிக்கப்பட்ட ஏற்பிசைவினை விலக்கிக்கொள்வது;
(15) மாணவர்களின் உடல்நலன், பொதுநலன், ஒழுங்குமுறை நடத்தை ஆகியவற்றை எய்தும் வகையில், கல்லூரிகளின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களின் மீது அத்தகைய கட்டுபாட்டினை செலுத்துவது;
(16) இப்பல்கலைக்கழகத்தின் நிலைக்கொடைகளையும் பிற சொத்துக்களையும்
மற்றும் நிதியங்களையும் வைத்திருத்தல் மற்றும் நிர்வகித்து வருவது;
(17) இப்பல்கலைக்கழகத்தின் நோக்கங்களுக்காக இப்பல்கலைக்கழகத்தின் சொத்துப் பிணையத்தின் மீது, அரசின் ஒப்புதல் அளிப்புடன் பணத்தைக் கடன் வாங்குவது;
(18) கட்டணங்களை நிர்ணயிப்பது வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய
கட்டணங்களைக் கோரிப் பெறுவது;
(19) தேசிய மாணவர்படையின் பேணுகைக்காக இப்பல்கலைக்கழக
நிதியங்களிலிருந்து, மானியங்களை அளிப்பது;
(20) பல்கலைக்கழக விரிவாக்கக்குழு ஒன்றை அமைத்துப் பேணி வருவது;
(21) (a) வெளியீட்டுப் பிரிவொன்றை;
(b) வேலை வாய்ப்புப் பிரிவொன்றை;
(c) மாணவர் சங்கங்களை;
(d) பல்கலைக்கழக உடற்பயிற்சி குழுக்கள்; மற்றும்
(e) அவை போன்ற பிற சங்கங்களை அமைத்து அவற்றின்
பேணுகைக்காக நிதியங்களுக்கு வகை செய்வது;
(22) இப்பல்கலைக்கழக பரப்பிடத்திற்குள் உள்ள கல்லூரிகள், கல்வி நிலையங்கள் மற்றம் ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றிற்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பது மற்றும் இப்பல்கலைக்கழகம் தீர்மானிக்கக்கூடிய முறையிலும் நோக்கங்களுக்காகவும் பிற பல்கலைக்கழகங்களுடனும் பிற அதிகார அமைப்புகளுடனும் ஒத்துழைப்பது;
(23) தேவைப்படும் கால இடைவெளிகளில் மதிப்பீடுகளையோ அல்லது ஆய்வுகளையோ செய்தலும் மற்றும் கல்லூரிகளின் கல்விச் சிறப்பினை மேம்படுத்த வகுத்துரைக்கப்பட்டவாறான தக்க நடவடிக்கையை எடுப்பது;
(24) உயர்வான கல்விச் சிறப்பினை எய்துவதற்காக கட்டுப்பாட்டு அமைப்பு முறையை வகுத்துரைப்பதன் பொருட்டு இணைக்கப்பட்ட கல்லூரிகளை கல்வி முறையில் கண்காணித்தல்; மற்றும்
(25) பொதுவாக, இப்பல்கலைக்கழகத்தின் நோக்கங்களை மேம்படுத்துவதற்கு தேவையாயிருக்கக்கூடிய அல்லது விரும்பத்தக்கதாக இருக்கக்கூடிய பிற செயல்கள் அனைத்தையும் செய்வது அல்லது நடவடிக்கைகள் அனைத்தையும் எடுப்பது;
21கல்லூரிகள் பிற
5. (1) டாக்டர். ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் தவிர பிற பல்கலைக்கழகம் எதனுடனும், இப்பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்குள்ளாக உள்ள கல்லூரி எதுவும் இணைக்கப்படுதல் கூடாது.
பல்கலைக்கழகம் எதனுடனும் இணைக்கப் படாதிருத்தல் மற்றும் கல்வி நிலையங்களுக்கு பல்கலைக் கழகத்தால் ஏற்பிசை வளிக்கப் பெறுதல்.
(2) தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பிற பல்கலைக்கழகம் எதனுடனும் இணைக்கப்பட்டுள்ள அல்லது அதனோடு தொடர்புடைய அல்லது அதனால் பேணி வரப்படும் கல்லூரி அல்லது கல்வி நிலையம் எதுவும் அரசின் மற்றும் தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் முந்திய ஒப்புதலளிப்புடனல்லாமல், எந்த நோக்கத்திற்காகவும் இப்பல்கலைக்கழகத்தால் ஏற்பிசைவு அளிக்கப்படுதலாகாது.
பல்கலைக்
6. (1) இந்தச் சட்டத்தின் மற்றும் நிலை விதிகளின் வகைமுறைகளுக்குட்பட்டு இப்பல்கலைக்கழகமானது அனைத்து நபர்களுக்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும்.
கழகத்தில் மாணவர்களைச் சேர்த்து கொள்ளுதல்
(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும்,-
(a) வகுத்துரைக்கப்பட்ட கல்வித் தகுதியை அல்லது தரத்தைப்
பெற்றிருக்காத நபர் எவரையும் படிப்புப் பிரிவு எதிலும் சேர்க்குமாறு;
(b) பட்டம், பட்டயம் அல்லது பிற கல்விச் சிறப்புகள் வழங்கத் தேவையான குறைந்த அளவு தரத்திற்குக் கீழே கல்விப் பதிவைப் பெற்றுள்ள எம்மாணவரையும் பல்கலைக்கழக பட்டியலில் வைத்திருக்குமாறு; அல்லது
(c) பல்கலைக்கழகத்தின் நலனுக்கு அல்லது பிற மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களின் உரிமைகளுக்கும் சிறப்புரிமைகளுக்கும் ஊறு விளைவிக்கும்
விதத்தில் நடந்து கொள்ளும் நபர் எவரையும் சேர்க்குமாறு அல்லது மாணவர் எவரையும் வைத்திருக்குமாறு; பல்கலைக்கழகத்தைக் கோருதல் கூடாது.
மேற்பார்வை அதிகாரம்.
7. (1) அரசானது, அது பணிக்கக் கூடியவரால் அல்லது பணிக்கக்
கூடியவர்களால், இப்பல்கலைக்கழகத்தை அதன் கட்டடங்களை, ஆய்வுக் கூடங்களை, நூலகங்களை, அருங்காட்சியங்களை, பட்டறைகளை மற்றும் தளவாடங்களையும்;
மற்றும் இப்பல்கலைக்கழகத்தால் பேணி வரப்படுகின்ற, ஏற்பிசைவு அளிக்கப்பட்டுள்ள
கல்வி நிலையம் ஏதொன்றையும், மேலும் இப்பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும்
அல்லது செய்யப்படும் பிற பணியையும், ஆய்வு அல்லது விசாரணை செய்யப்படுமாறு
ஆவன செய்வதற்கும், இப்பல்கலைக்கழகம் தொடர்புடைய பொருட்பாடு எதனையும்
பொறுத்து விசாரணை ஒன்று செய்யப்படுமாறு ஆவன செய்வதற்கும் அதிகாரம்
பெற்றிருத்தல் வேண்டும்.
(2) அரசு, அவ்வாறு ஆய்வு செய்யப்படுமாறு அல்லது விசாரணை
செய்ய ஆவன செய்வதற்கான அதன் எண்ணம் குறித்து ஒவ்வொரு நேர்விலும், இப்பல்கலைக்கழகத்திற்கு அறிவிப்பு கொடுத்தல் வேண்டும்; மற்றும்
இப்பல்கலைக்கழகம் அதில் தன்தரப்பை எடுத்துரைப்பதற்கு உரிமைத் தகுதிடையதாக
இருக்கும்.
22(3) அரசு, அத்தகைய ஆய்வு அல்லது விசாரணையின் முடிவுகள் குறித்து
அதன் கருத்துக்களை பல்கலைக்கழகத்திற்கு தெரிவித்தல் வேண்டும் என்பதுடன்,
அதன் பேரிலான பல்கலைக்கழகத்தின் கருத்தை கண்டறிந்த பின்பு, எடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கை என்னவென்பது குறித்து இப்பல்கலைக்கழகத்திற்கு
ஆலோசனை கூறலாம்; மேலும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக
காலவரம்பொன்றையும் நிர்ணயிக்கலாம்.
(4) பல்கலைக்கழகம் அத்தகைய ஆய்வு அல்லது விசாரணையின் முடிவுகளின்
மீது அல்லது அரசினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பேரில் எடுக்கக் கருதியுள்ள
அல்லது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஏதேனுமிருப்பின், அது குறித்து அவ்வாறு
நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள்ளாக அரசுக்கு அறிக்கை கொடுத்தல் வேண்டும்.
அத்தகைய அறிக்கையானது அரசு பணிக்கக் கூடிய அத்தகைய காலத்திற்குள்
அனுப்பப்படுதல் வேண்டும்.
(5) நியாயமான காலத்திற்குள்ளாக பல்கலைக்கழகமானது, அரசு
நிறைவேறும்படி நடவடிக்கை எதனையும் எடுக்காதவிடத்து, அரசானது,
பல்கலைக்கழகத்தால் கொடுக்கப்பட்ட விளக்கம் எதனையுமோ அல்லது செய்யப்பட்ட
முறையீடு எதனையுமோ பரிசீலனை செய்ததற்குப் பின்னர், தக்கதென கருதக்கூடிய பணிப்பாணைகளைப் பிறப்பிக்கலாம்; மற்றும் பல்கலைக்கழகமானது அத்தகைய
பணிப்பாணைகளுக்கு இணங்கி நடத்தல் வேண்டும். பல்கலைக்கழகமானது,
இது குறித்து அரசினால் நிர்ணயிக்கப்படக்கூடிய அத்தகைய காலத்திற்குள்ளாக
அத்தகைய பணிப்பாணைகளுக்கு இணங்கி நடக்காத நேரத்தில், அரசானது
அத்தகைய பணிப்பாணைகளுக்கு இணங்கி நடப்பதற்கு நபர் எவரையுமோ அல்லது
அமைப்பு எதையுமோ நியமிக்கவும் அதற்கான செலவுகளுக்காக தேவைப்படக் கூடிய
அத்தகைய ஆணைகளைச் செய்யவும் அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும்.
அத்தியாயம்-III.
பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள்.
பல்கலைக்கழகத்தின்
8. இப்பல்கலைக்கழகம் பின்வரும் அலுவலர்களை கொண்டிருக்கும்
அலுவலர்கள்
அவர்களானவர்:-
(1) வேந்தர்;
(2) இணைவேந்தர்;
(3) துணைவேந்தர்;
(4) பதிவாளர்;
(5) புலத் தலைவர்;
(6) நிதி அலுவலர்;
(7) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்;
(8) நூலகர்; மற்றும்
(9)இப்பல்கலைக்கழகத்தின் அலுவலர்களென நிலை விதிகளால்
விளம்பப்படக்கூடிய பிற நபர்கள்.
வேந்தர்.
9. (1) தமிழ்நாடு ஆளுநர், இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பார். அவர் தமது பதவியின் காரணத்தால் இப்பல்கலைக்கழகத்தின் தலைவராக இருப்பார் என்பதுடன், இப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா எதற்கும் வந்திருக்கும் போது அதற்கு தலைமை வகித்தலும், பட்டங்கள், விருதுகள், பட்டயங்கள் அல்லது பிற கல்விச் சிறப்புக்களை அவற்றைப் பெறுவதற்கு உரிமையுடையவர்களுக்கு வழங்குவார்.
23(2) அதிகார அமைப்புகளுக்கு நபர்களை பெயர்குறித்து நியமிப்பதற்கான அதிகாரம் வேந்தருக்கு வழங்கப்பட்டிருக்கிறவிடத்து, வேந்தர், துணைவேந்தருடன் கலந்தாய்வு செய்தும், தேவையான அளவுக்கும் மற்றபடி போதிய அளவு சார்பாண்மை பெற்றிராத பிரிவுகளை சேர்ந்தவர்களின் நலன்களுக்கு சார்பாளர்களாக அமையும் பொருட்டு அப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களைப் பெயர் குறித்து நியமிப்பார்.
(3) வேந்தர், தானே முற்பட்டோ அல்லது விண்ணப்பத்தின் மீதோ நடவடிக்கைகள் எவற்றையும் பொறுத்து, அத்தகைய நடவடிக்கைகளின் முறைமை குறித்தோ அவற்றில் எடுக்கப்பட்ட முடிவு அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை ஏதொன்றின் சீர்மை, சட்ட முறைமை அல்லது பொருத்தமுடைமை குறித்தோ, தெளிவுற உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, இப்பல்கலைக்கழத்தின் அலுவலர் எவரின் அல்லது அதிகார அமைப்பு ஏதொன்றின் பதிவுக் கட்டினையும் தருவித்து ஆய்வு செய்யலாம் மற்றும் எந்த நேர்விலும் அத்தகைய முடிவு அல்லது ஆணை எதுவும் திருத்தியமைக்கப்படவோ அறவு செய்யப்படவோ, எதிர் மாறாக்கப்படவோ அல்லது மறுபரிசீலனைக்காகத் திருப்பியனுப்பிவைக்கப்படவோ வேண்டும் என்று அவருக்குத் தோன்றுமானால் அவர் அதன்படியே ஆணைகளைப் பிறப்பிக்கலாம்.
வரம்புரையாக, இந்தப் பிரிவின்படியான அதிகாரங்கள் செலுத்தப்படுவதற்காக, வேந்தரிடம் செய்து கொள்ளப்படும் ஒவ்வொரு விண்ணப்பமும் அந்த விண்ணப்பம் தொடர்புடையதாகவிருக்கிற நடவடிக்கை முடிவு அல்லது ஆணை எந்தத் தேதியில் அவ்விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்பட்டதோ, அந்தத் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் செய்து கொள்ளப்படுதல் வேண்டும்.
மேலும் வரம்புரையாக, எவரொருவருக்கும், ஊறு விளைவிக்கத்தக்கதான ஆணை எதுவும் அத்தகைய நபர் தன் முறையீட்டினைச் செய்து கொள்வதற்கான வாய்ப்பொன்று அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, பிறப்பிக்கப்படுதலாகாது.
(4) நபர் எவருக்கும், வேந்தரின் முந்தைய ஒப்புதலளிப்பின்றி இப்பல்கலைக்கழகத்தால் மதிப்புறு பட்டம் அல்லது பிற சிறப்பு எதுவும் வழங்கப்படுதலாகாது.
(5) வேந்தர், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளாலோ அல்லது அதனை அடியொற்றியோ, தமக்கு வழங்கப்படக்கூடிய அதிகாரங்களை செலுத்தி வருவார்; மற்றும் பிற கடமைகளை புரிந்து வருவார்.
இணை வேந்தர்.
10. (1) உயர்கல்வித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அமைச்சர்,
இப்பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக இருந்து வருவார்.
(2) இணைவேந்தர், இந்தச் சட்டத்தின் மூலமாக அல்லது அதன்படி தமக்கு வழங்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச் செலுத்தி வருவார் மற்றும் பிற கடமைகளைப் புரிந்து வருவார்.
(3) வேந்தர் இல்லாதிருக்கும் போது அல்லது வேந்தர் செயற்பட இயலாதிருக்கும் போது, இணைவேந்தர், வேந்தரின் அனைத்து அதிகாரங்களையும் செலுத்தி அனைத்து கடமைகளையும் ஆற்றுதல் வேண்டும்.
துணை வேந்தர்.
11.(1) துணை வேந்தரின் ஒவ்வொரு நியமனமும், (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்படும் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பெயர்களைக் கொண்ட பெயர்ப் பட்டியல் ஒன்றிலிருந்து வேந்தரால் செய்யப்படும்; மற்றும் அத்தகைய பெயர்ப் பட்டியலில் மேற்சொன்ன குழுவின் உறுப்பினர் எவருடைய பெயரும் அடங்கியிருத்தல் ஆகாது;
24வரம்புரையாக, அக்குழுவினால் அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட பெயர்ப்பட்டியலில் உள்ள நபர்களில் எவரொருவருக்கும் வேந்தரானவர் ஒப்புதல் அளிக்கவில்லையாயின், (2) ஆம் உட்பிரிவிற்கிணங்கிய வகையில் மூன்று பெயர்களைக் கொண்ட புதிய பெயர்ப்பட்டியலைக் கொடுப்பதற்கு அவர் மற்றொரு குழுவினை அமைத்துருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம் மற்றும் அவர் புதிய பெயர்ப்பட்டியலில் பெயர்க்குறிப்பிட்டுள்ள நபர்களில் எவரொருவரையும் துணைவேந்தராக நியமிப்பார்.
(2) (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக் குழுவானது,-
(i) வேந்தரால் நியமிக்கப்படுபவரும் உச்ச நீதிமன்றத்தின் அல்லது உயர்நீதிமன்றத்தின் எதனின் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளராக இருக்கும் ஒருவரை;
(ii) அரசினால் நியமிக்கப்படுபவரும், அரசு முதன்மைச் செயலாளர் படிநிலைக்கு குறையாத மாநில அரசின் ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அலுவலராக இருப்பவருமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளராக இருக்கும் ஒருவரை; மற்றும்
(iii) ஆட்சிக் குழுவினால் நியமிக்கப்படுவரும், சிறந்த கல்வியாளராக
இருப்பவருமான ஒருவரைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
விளக்கம் . – இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த கல்வியாளர்" என்பது.-
(i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம்
எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள; அல்லது
(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து, குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக அனுபவம் பெற்றுள்ள புகழ் பெற்ற கல்வியாளராக இருக்கிற; அல்லது
(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக
அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்.
வரம்புரையாக, அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.
(3) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்.-
(i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், அமைப்பு மூலமான பொறுப்புடைய
புகழ்பெற்ற கல்வியாளராக இருத்தல் வேண்டும்.
(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருத்தல் வேண்டும்.
(4) வேந்தரால், அரசு மற்றும் ஆட்சிக் குழுவினால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறு மாதங்களில் தொடங்குதல் வேண்டும் மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.
(5) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக் கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.
25(6) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்குத் தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர் அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு, மேலும் கால அவகாசம் அளிக்கலாம் அல்லது (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
(7) துணைவேந்தர், மூன்றாண்டு கால அளவிற்குப் பதவி வகிப்பார். மேற்கொண்டும் மற்றொரு மூன்றாண்டுக் கால அளவுக்கு மறு நியமனம் பெற உரிமைத் தகுதியுடைவராவார்.
வரம்புரையாக, துணைவேந்தர், வேந்தருக்கு முகவரியிட்டு தாம் கையொப்பமிட்டு எழுத்து வாயிலாகவும் இரண்டு மாதங்கள் கால அறிவிப்பு கொடுத்ததற்குப் பின்பும் பதவியை விட்டு விலகலாம்.
மேலும் வரம்புரையாக, துணைவேந்தராக நியமிக்கப்பெற்ற ஒருவர் தம்முடைய பதவிக்காலத்தின் போதோ அதன் நீட்டிப்பு எதனின்போதோ, எழுபது வயதினை அவர் நிறைவெய்துவாரானால், பதவியிலிருந்து ஓய்வு பெறுதல் வேண்டும்.
(8) துணைவேந்தரின் பதவியில் தற்காலிக காலியிடம் ஏதேனும் ஏற்படும் போது அல்லது அத்துணைவேந்தர், நோய், பணிக்கு வராமை என்ற காரணத்தாலோ அல்லது ஏதேனும் பிற காரணத்தாலோ, தம்முடைய பதவியின் அதிகாரங்களைப் புரிந்து வரவும், இயலாதிருப்பாரானால், ஆட்சிக் குழுவானது, துணைவேந்தரின் அதிகாரங்களைச் செலுத்தி வருவதற்கும், கடமைகளை புரிந்து வருவதற்கும் தேவையான ஏற்பாடுகளை செய்கிறவரையில், இப்பல்கலைக்கழகத்தின் மிக்க முதுநிலைப் பேராசிரியர், துணைவேந்தரின் அதிகாரங்களைச் செலுத்தி வருதலும், கடமைகளைப் புரிந்து வருதலும் வேண்டும்.
(9) துணைவேந்தர், இப்பல்கலைக்கழகத்தின் ஒரு முழுநேர அலுவலராக இருப்பார்; மற்றும் அவருடைய ஊதியங்களும் பணி குறித்த வரையறைகளும் வரைக்கட்டுகளும் பின்வருமாறு இருந்து வரும்;-
(a) துணைவேந்தருக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் மாதம் ஒன்றுக்கு ரூபாய் இரண்டு லட்சத்து பத்தாயிரம் அல்லது அரசால், அவ்வப்போது, நிர்ணயிக்கப்படக்கூடிய, அத்தகைய உயர்வான சம்பளம் கொடுக்கப்படுதல் வேண்டும். மற்றும் அவருடைய பதவிக் காலம் முழுவதும் அறைகலன்களுடனான குடியிருப்பொன்றை வாடகை செலுத்தமின்றிப் பயன்படுத்துவதற்கு அவர் உரிமைத் தகுதியுடையவராவார்; மேலும் அத்தகைய குடியிருப்பைப் பேணி வருவது பொறுத்த செலவுப் பொறுப்பு எதுவும் தனிப்பட்டு அத்துணைவேந்தரை சார்தல் ஆகாது. நிலைவிதிகளில் துணைவேந்தரானவர், வகை செய்யக்கூடிய அத்தகைய பிற இடை ஆதாயம் பெற உரிமையுடைவராவார்.
(b) துணைவேந்தர், அவ்வப்போது வேந்தரின் ஒப்புதலளிப்புடன், ஆட்சிக் குழுவால் தீர்மானிக்கப்படக் கூடிய பணிமுடிவு நிலை நன்மைகளுக்கும் படித்தொகைகளுக்கும் உரிமைத் தகுதியுடையவராவார்;
வரம்புரையாக,
(i) இப்பல்கலைக்கழகத்தின் ; அல்லது
(ii) வேறேதேனும் பல்கலைக்கழகத்தின் அல்லது பல்கலைக்கழகம் எதனாலும் பேணிவரப் பெறும் அல்லது அதனோடு இணைக்கப்பெற்றுள்ள கல்லூரி அல்லது கல்வி நிலையத்தின் பணியாளர் ஒருவர், துணைவேந்தராக நியமிக்கப்படுமிடத்து, அவர் தொகையளிப்புச் செய்பவராக உள்ள வருங்கால வைப்பு நிதியத்திற்கு தொடர்ந்து தொகையளிக்க அவர் அனுமதிக்கப்பெறுவார். மேலும், இப்பல்கலைக்கழகத்தின் பங்களிப்பானது, துணைவேந்தராக அவர் நியமிக்கப்படுவதற்கு அடுத்து முன்பு அவர் பங்களித்திருந்த அளவுக்கு மட்டுப்படுத்தப்படுதல் வேண்டும்;
(c) துணைவேந்தர், ஆட்சிக்குழுவினால் தீர்மானிக்கப்படக்கூடிய
வீதங்களில் பயணப்படிகளுக்கு உரிமைத் தகுதியுடைவராயிருப்பார்;
26(d) துணைவேந்தர், செயலார்ந்த பணியிலிருக்கையில் அவரால் பணியில் செலவழிக்கப்பட்ட கால அளவுகளில் பதினொன்றில் ஒரு பங்கு கால அளவுக்கு முழுச் சம்பளத்துடன் கூடிய ஈட்டிய விடுப்புக்கு அவர் உரிமைத் தகுதியுடைவராயிருப்பார்;
(e) துணைவேந்தரானவர், அவரது பதவிக் கால அளவின் போது மூன்று மாதங்களுக்கு மேற்படாத கால அளவு ஒன்றுக்கு சம்பளமின்றி மருத்துவக் காரணங்களுக்காக அல்லது பிறவாறாக விடுப்பு எடுத்துக் கொள்வதற்குத் தகுதி உடையவராவார்.
வரம்புரையாக, அவரது பதவிக் கால அளவு முடிவடைந்த தேதியன்று அவரது பதவிக் கால அளவின் முடிவடையும் தேதிக்கு முன்பாக ஈட்டிய விடுப்பானது அவரால் எடுக்கப்படாமல் இருந்தால் அவரது பதவியை விட்டு விலகியதற்குப் பின்னர் பெருமளவு இருநூற்று நாற்பது நாட்களுக்கு உட்பட்டு தம்முடைய கணக்கில் இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பைப் பொறுத்து, விடுப்பு சம்பளத்திற்கு சம மதிப்புள்ள பணத்தைப் பெறுவதற்கு அவர் உரிமைத் தகுதி உடையவராய் இருப்பார்.
மேலும் வரம்புரையாக, அத்தகைய விடுப்பானது (d) எனும் கூறின்படி எந்த அளவுக்கு ஈட்டிய விடுப்புக்கு அவர் உரிமைத் தகுதியுடையவராயிருக்கின்றாரோ, அந்த அளவுக்கு முழுச் சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கு மாற்றிக் கொள்ளப்படலாம்.
12. (1) துணைவேந்தர், இப்பல்கலைக்கழகத்தின் கல்வித் தலைவராகவும் முதன்மை
நிர்வாக அலுவலராகவும் இருந்து வருவார்.
துணை வேந்தரின் அதிகாரங்களும் கடமைகளும்.
(2) துணைவேந்தரானவர் வேந்தரும், இணைவேந்தரும் வருகை தராதவிடத்து, இப்பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா எதிலும் தலைமை வகித்து பட்டங்களை, சிறப்புப்பட்டங்களை, பட்டயங்களை அல்லது பிற கல்விச் சிறப்புகளை பெறுவதற்கு உரிமைத்தகுதிடைய நபர்களுக்கு அவற்றை வழங்குவார்.
(3) துணைவேந்தர், பல்கலைக்கழகத்தின் அலுவல்கள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்கும் பல்கலைக்கழகத்தில் உரிய முறையில் ஒழுக்கத்தினைப் பேணுவதற்கும் பொறுப்பினைக் கொண்டவராவார்.
(4) துணைவேந்தரானவர், இந்தச் சட்டத்தின் மற்றும் நிலைவிதிகள், துணைமுறை விதிகள் மற்றம் ஒழுங்குமுறை விதிகளின் வகைமுறைகளின் உண்மையிலேயான பின்பற்றுதலை உறுதி செய்தல் வேண்டும்
(5) துணைவேந்தர், பல்கலைகழகத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் நியமனம், தற்காலிக பணி நீக்கம் மற்றும் பணியறவு ஆகியவை தொடர்பாக, ஆட்சிக் குழுவின் முடிவிற்கு செயல்வடிவம் கொடுத்தல் வேண்டும்.
(6) நெருக்கடியான காலம் எதிலும், துணைவேந்தர் உடனடியாக நடவடிக்கை எடுப்பது தேவையெனக் கருதுவாராயின், அவர் ஆணையின் வாயிலாக அவசியமென அவர் கருதுகிற நடவடிக்கையை எடுத்தல் வேண்டும்; மற்றும் அவர் எடுத்த நடவடிக்கை பற்றிய அறிக்கையை, வழக்கமான முறையில் அந்தப் பொருட்பாட்டின் மீது நடவடிக்கை எடுக்கும் அத்தகைய அலுவலருக்கு அல்லது அதிகார அமைப்புக்கு அல்லது அமைப்புக்கு இயன்ற வரை விரைவில் அறிவித்தல் வேண்டும்;
வரம்புரையாக, அத்தகைய ஆணை எதுவும், பெரும்பாலும் பாதிக்கப்படக் கூடியவருக்கு கேட்கப்படுவதற்கான நியாயமானதொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, பிறப்பிக்கப்படுதலாகாது.
(7) (6) ஆம் உட்பிரிவின் படியான துணைவேந்தரின் ஆணை எதனாலும் குறையுற்ற நபர் எவரும் அவருக்கு அத்தகைய ஆணையானது தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்ளாக ஆட்சிக் குழுவிற்கு மேல்முறையீடு ஒன்றை தாக்கல் செய்யலாம். மற்றும் துணை வேந்தர் அத்தகைய மேல்முறையீட்டின் மீது ஆட்சிக் குழுவினால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்குச் செயல் வடிவம் கொடுத்தல் வேண்டும்.
27(8) துணைவேந்தரானவர் ஆட்சிக்குழு, கல்விமன்றம் மற்றும் நிதிக்குழு ஆகியவற்றின் பதவி வழித் தலைவராக இருப்பார். துணை வேந்தர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பு எதனின் கூட்டமெதிலும் வந்திருந்து உரை நிகழ்த்துவதற்கு உரிமைத் தகுதியுடையவராயிருப்பார்; ஆனால் அத்தகைய அதிகார அமைப்பின் அல்லது அமைப்பின் உறுப்பினர் ஒருவராக அவர் இருந்தாலன்றி அதில் வாக்களிக்க உரிமைத் தகுதியுடையவராகமாட்டார்.
(9) துணைவேந்தர், ஆட்சிக்குழு, கல்விமன்றம் மற்றும் நிதிக்குழு ஆகியவற்றின்
கூட்டங்களைக் கூட்டுவதற்கு அதிகாரம் பெற்றிருப்பார்.
(10) துணைவேந்தர், கற்பித்தல், ஆராய்ச்சி, விரிவாக்கக் கல்வி மற்றும் பாடத்திட்ட மேம்பாடு ஆகியவற்றிற்கான ஒத்திசைவிற்கும் ஒருங்கிணைப்பிற்கும் பொறுப்புடையவராயிப்பார்.
(11) துணைவேந்தர், நிலைவிதிகளின் மூலம் வகுத்துரைக்கப்படக்கூடிய பிற
அதிகாரங்களைச் செலுத்தி வருவார் மற்றும் பிற கடமைகளைப் புரிந்து வருவார்.
பதிவாளர்.
13. (1) பதிவாளர், துணைவேந்தரின் பரிந்துரையின் பேரில் ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்படும் இப்பல்கலைக்கழகத்தின் சம்பளம் பெறும் முழுநேர அலுவலராக இருத்தல் வேண்டும்; தகுதிகளும் நியமன முறையும் வகுத்துரைக்கப்படக்கூடியவாறு இருத்தல் வேண்டும். பதிவாளரின் பணி குறித்த வரையறைகளும் வரைக்கட்டுகளும் பின்வருமாறு இருத்தல் வேண்டும்;
(i) பதிவாளரின் பதவியை வகிப்பவர், பல்கலைக்கழக பேராசிரியர்
ஒருவரின் படிநிலைக்கு குறையாதவராக இருத்தல் வேண்டும்.
(ii) பதிவாளர், மூன்றாண்டுகால அளவுக்கு பதவி வகிப்பார்.
வரம்புரையாக, பதிவாளர், ஒரு கல்வியாளரான நேர்வில் அறுபது வயது எய்தியதின் பேரிலும், ஒரு கல்வியாளரல்லாத நேர்வில் ஐம்பத்தொன்பது வயதை எய்தியதன் பேரிலும் அல்லது இந்தக் கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள கால அளவு முடிவடைந்ததன் பேரில் இவற்றில் எது முந்தியதோ அதன் பேரில் ஓய்வு பெறுதல் வேண்டும்.
(iii) பதிவாளரின் ஊதியங்களும் பணி குறித்த வரையறைகளும்
வரைக்கட்டுகளும் வகுத்துரைக்கப்படக்கூடியவாறு இருத்தல் வேண்டும்;
(iv) பதிவாளரின், பதவி காலியாக இருக்கும் போது அல்லது பதிவாளர் நோய், பணிக்கு வராமை என்கிற காரணத்தால் அல்லது பிற காரணம் எதற்காகவேனும் தம்முடைய பதவிக் கடமைகளை ஆற்றுவதற்கு இயலாதவராக இருக்கும் போது பதிவாளரின் பதவிக் கடமைகள் அந்த நோக்கத்திற்காக துணைவேந்தர் நியமிக்கும் ஒருவரால் புரிந்துவரப்படும்.
2 (a) பதிவாளர், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை பணியாளர்கள் நீங்கலாக, பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும், விசாரணை நிலுவையில் இருக்கும் போது அவர்களை தற்காலிக வேலை நீக்கம் செய்வதற்கும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு அல்லது அவர்கள் மீது கண்டனத் தண்டனை விதிப்பதற்கு அல்லது ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பதற்குமான அதிகாரத்தை பெற்றிருப்பார்.
வரம்புரையாக, அத்தகைய தண்டனை எதுவும் தொடர்புடையவருக்கு, அவரை பொறுத்து எடுக்கக் கருதியுள்ள நடவடிக்கைக்கெதிராக காரணத்தை எடுத்துரைப்பதற்கான நியாயமானதொரு வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, விதிக்கப்படுதலாகாது.
(b) (a) எனும் கூறில், குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனைகளில் எதையும் விதிக்கின்ற பதிவாளரின் ஆணை எதற்கும் எதிராக துணைவேந்தரிடம் மேல்முறையீடு ஒன்றைச் செய்துகொள்வதற்கு உரிமை உண்டு.
28(c) பதிவாளரின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட பணத்தண்டனை தேவைப்படுகிறது என்று அந்த விசாரணை வெளிப்படுத்துகிற நேர்வு எதிலும், பதிவாளர் அந்த விசாரணை முடிவடைவதன் பேரில் அறிக்கை ஒன்றை, தம்முடைய பரிந்துரைகளோடு துணைவேந்தவருக்குக் கொடுத்தல் வேண்டும்.
வரம்புரையாக பணத்தண்டனை எதையும் விதிக்கின்ற துணைவேந்தரின் ஆணை ஒன்றுக்கு எதிராக ஆட்சிக் குழுவிடம் மேல்முறையீடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு உரிமை உண்டு.
(d) (b)எனும் கூறின்படி அல்லது (c) எனும் கூறின்படியான மேல்முறையீடுக்கு எதிரான ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்கள் முடிவடைந்த பின்பு எந்தவொரு மேல்முறையீடும் முன்னிடப்படுத்தலாகாது.
(3) பதிவாளரானவர், ஆட்சிக்குழு, கல்விக்குழு, புலங்கள், பாடக்குழுக்கள் ஆகியவற்றின் பதவிவழிச் செயலாளராக இருந்து வருவார். ஆனால், இந்த அதிகார அமைப்புகளில் ஏதொன்றின் உறுப்பினராகவும் கொள்ளப்படுதல் ஆகாது.
(4) (a)பதிவுக்கட்டுகளுக்கும் தனித்த இலச்சினைக்கும் தம்முடைய பொறுப்புக்கு ஆட்சிக்குழு அனுப்ப வேண்டிய இப்பல்கலைக்கழகத்தின் பிற சொத்துக்கும் பாதுகாவலராக இருப்பது;
(b) கல்விமன்றம், ஆட்சிக்குழு, புலங்கள், பாடக்குழுக்கள், தேர்வாளர் குழுக்கள் மற்றும் இப்பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அதிகார அமைப்புகளினால் நியமிக்கப்படும் குழு ஏதொன்றின் கூட்டங்களையும் கூட்டுகிற அறிவிப்பு அத்தனையும் அனுப்புவது;
(c) கல்விமன்றம், ஆட்சிக்குழு புலங்கள், பாடக்குழுக்கள், தேர்வாளர் குழுக்கள் மற்றும் இப்பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அதிகார அமைப்புகளினால் நியமிக்கப்படும் குழு ஏதொன்றின் கூட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் பற்றிய நடவடிக்கைக் குறிப்பேடுகளை வைத்து வருவது;
(d) ஆட்சிக்குழுவின் கடிதத் தொடர்பை நடத்தி வருவது;
(e) இப்பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புக் கூட்டங்களின் பொருள் நிரலின் படிகளை, அவை அனுப்பப்பட்டவுடன் அத்தகைய கூட்ட நடவடிக்கைகளின் குறிப்புரைகளையும் வேந்தருக்கு அனுப்பவது மற்றும்
(f) நிலைவிதிகளில், துணைமுறை விதிகளில் அல்லது ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்படக்கூடிய அல்லது ஆட்சிக் குழுவாலோ, துணைவேந்தராலோ, அவ்வப்போது கோரப்படக்கூடிய பிற அதிகாரங்களை செலுத்திவருவதும் பிற கடமைகளை புரிந்து வருவதும், பதிவாளரின் கடமையாக இருத்தல் வேண்டும்.
(5) இப்பல்கலைக்கழத்தினால் அல்லது அதற்கு எதிராகத் தொடரப்படும் உரிமை வழக்குகள் மற்றும் எடுக்கப்படும் பிற சட்ட நடவடிக்கைகள் அனைத்திலும் வாதுரைகள் பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு உண்மையென உறுதிமொழி அளிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தகைய உரிமை வழக்குகளில் மற்றும் நடவடிக்கைகளில் நீதிமுறைக் கட்டளைகள் அனைத்தும் பதிவாளருக்கு விடுக்கப்பட்டு, அவருக்குச் சார்பு செய்யப்படுதல் வேண்டும்;
புலத்தலைவர் 14. (1) புலத்தலைவர் ஒவ்வொருவரும், அந்தப் புலத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கிடையேயிருந்து மூன்றாண்டுக்கால அளவிற்குத் துணைவேந்தரால் பணியமர்த்தம் செய்யப் பெறுவர் மற்றும் அவர் மறு பணியமர்த்தத்திற்கு தகுதியுடையவராவார்;
வரம்புரையாக, ஒரு புலத்தலைவர் அறுபது வயது நிறைவெய்தியவுடன் அவர்
அப்பதவியை வகிப்பது அத்தகையவாறு அற்றுப்போகும்.
மேலும் வரம்புரையாக, ஒரு புலத்தில் எச்சமயத்திலேனும் பேராசிரியர் எவரும் இல்லாதிருப்பாராயின் புலத்தலைவரின் அதிகாரங்களை துணைவேந்தரே செலுத்தலாம்.
29(2) புலத்தலைவர் பதவி காலியாக இருக்கும் போது அல்லது பிற காரணம் எதனாலும் புலத்தலைவர், தம் பதவிக்கடமைகளைப் புரிவதற்கு இயலாதிருக்கும் போது, அவரது பதவிக் கடமைகளை அந்த நோக்கத்திற்காக துணைவேந்தரால் பணியமர்த்தம் செய்யப்படும் ஒருவரால் செய்யப்படுதல் வேண்டும்.
(3) ஒரு புலத்தின் தலைவராக இருந்துவரும் புலத்தலைவர், அந்தப் புலத்தின் பாடங்கற்பித்தல்/தரங்களை பராமரித்தல் மற்றும் ஆராய்ச்சியை நடத்துவதற்கு பொறுப்புடையவர் ஆவார். துணைமுறை விதிகளினால் வகுத்துரைக்கப்படும் பிற பதவிப் பணிகளையும் அப்புலத்தலைவர் ஆற்றி வருவார்.
(4) பாடத் திட்டக்குழுக்களின் அல்லது நேர்வுக்கேற்ப, குழுக்களின் புலத்தின் கூட்டம் எதற்கும் வந்திருக்கவும் அதில் உரையாற்றவும் புலத்தலைவர் உரிமை உடையவர் ஆவார். ஆனால் அவர் அதில் ஒர் உறுப்பினராக இருந்தாலன்றி அந்தக் கூட்டத்தில் வாக்களிப்பதற்கு உரிமை உடையவர் ஆகார்.
நிதி அலுவலர்.
15. (1) ஆட்சிக் குழுவால் நியமிக்கப்படும் நிதி அலுவலர் இதன் பொருட்டு ஆட்சிக் குழுவால் குறித்துரைக்கப்படக்கூடிய கால அளவுக்கு இப்பல்கலைக்கழகத்தின் ஊதியம் பெறும் முழுநேர அலுவலராக இருப்பார்.
(2) நிதி அலுவலரின் நியமனம் ஒவ்வொன்றும், அரசினால் மேற்குறித்து அனுப்பப்படும் மூன்று அலுவலர்களைக் கொண்ட பெயர்ப் பட்டியல் ஒன்றிலிருந்து துணைவேந்தரின் பரிந்துரையின் பேரில் ஆட்சிக்குழுவால் செய்யப்படும்.
(3) நிதி அலுவலரின் ஊதியங்களும் பணி குறித்த வரையறைகள் மற்றும்
வரைக்கட்டுகள் வகுத்துரைக்கப்படக்கூடியவாறு இருத்தல் வேண்டும்.
(4) நிதி அலுவலர், ஐம்பத்தொன்பது வயதினை எய்தியதின் பேரில் அல்லது (1) ஆம் உட்பிரிவின்படி ஆட்சிக் குழுவினால் குறித்துரைக்கப்படும் கால அளவு முடிவடைவதன் பேரில் இவற்றில் எது முந்தியதோ அதன் பேரில் ஓய்வு பெறுதல் வேண்டும்;
(5) நிதி அலுவலரின் பதவி காலியாக இருக்கும்போது அல்லது நிதி அலுவலர், நோய், பணிக்கு வராமை என்கிற காரணத்தால் அல்லது பிற காரணம் எதனாலேனும் தம்முடைய பதவிக் கடமைகளை ஆற்றுவதற்கு இயலாதவராக இருக்கும்போது நிதி அலுவலரின் பதவிக்கடமைகள் அந்த நோக்கத்திற்காக துணைவேந்தர் நியமிக்கக்கூடிய அத்தகைய நபரால் ஆற்றுதல் வேண்டும்
(6) நிதி அலுவலர், நிதிக்குழுவிற்கு பதவி வழிச் செயாலாளராக இருத்தல்
வேண்டும்;
(7) நிதி அலுவலர்,-
(a) இப்பல்கலைக்கழகத்தின் நிதியங்களின் மீது பொதுவான கண்காணிப்புச் செலுத்தி வருவார்; மற்றும் பல்கலைக்கழகத்தின் நிதிக்கொள்கை குறித்து அதற்கு ஆலோசனை வழங்குவார்; மற்றும்
(b) ஆட்சிக் குழுவினால் தமக்குக் குறித்தளிக்கப்படக்கூடிய அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய அதிகாரங்களைச் செலுத்தி வருவார் மற்றும் அத்தகைய பிற நிதி சார்ந்த அலுவல்களைப் புரிந்து வருவார்;
வரம்புரையாக, நிதிஅலுவலர், ஆட்சிக் குழுவின் முன் ஒப்புதலளிப்பின்றி செலவு எதையும் செய்தலோ, வகுத்துரைக்கப்படக்கூடிய தொகைக்கு மேற்படும் முதலீடு எதையும் செய்தலோ ஆகாது.
(8) ஆட்சிக்குழுவின் கட்டுபாட்டு அதிகாரத்திற்குட்பட்டு, நிதி அலுவலர்.-
(a) சொத்தினை வைத்திருக்கவும் மேலாண்மை செய்யவும் மற்றும் பொறுப்பாட்சி மற்றும் கொடையாக அளித்த சொத்து உள்ளடங்கலாக பல்கலைக்கழகத்தின் மீது முதலீடு செய்யவும்;
30(b) ஒராண்டிற்கான தொடர் மற்றும் தொடராச் செலவினங்களுக்காக ஆட்சிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகள் மேற்படாதவாறும் பணம் அனைத்தும் அவை வழங்கப்பட்ட அல்லது குறித்தொதுக்கப்பட்ட நோக்கங்களுக்காகச் செலவிடப்படுவதை உறுதி செய்யவும்;
(c) இப்பல்கலைக்கழகத்தின் ஆண்டுக் கணக்குகள், நிதி மதிப்பீடுகள் வரவு - செலவுத் திட்டம் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கும் ஆட்சிக் குழுவிடம் அவற்றை அளிப்பதற்கு பொறுப்புடையவராகவும்;
(d) பணம் மற்றும் வங்கி இருப்புகளையும் முதலீடுகளையும் இடைவிடாது
கண்காணிக்கவும்;
(e) வருவாய் வசூலின் வளர்ச்சியைக் கண்காணித்து வசூல் செய்வதற்குப்
பயன்படுத்தும் முறைகள் குறித்த ஆலோசனை வழங்குவதற்கும்;
(f) கட்டடங்கள், நிலங்கள், அறைகலன் சாதனங்கள் ஆகியவற்றின் பதிவேடுகள் நாளது தேதிவரை வைத்துப் பேணிவரப்படுவதையும், சிறப்பு மையங்கள், தனிசிறப்பு ஆய்வுக் கூடங்கள் , ஆகிய அனைத்திலுமுள்ள சாதனங்கள் மற்றும் பிற நுகரதக்க பொருள்களின் இருப்பு நிலையைச் சரிபார்க்கும் பணி நடத்தப்படுவதையும் உறுதி செய்து கொள்ளவும்.
(g) அதிகாரமளிக்கப்படாத செலவினம் எதுவும் பற்றி அல்லது பிற நிதிசார் முறைகேடு பற்றித் துணைவேந்தரின் கவனத்திற்குக் கொண்டு வருவார்; மற்றும் தவறு செய்துள்ளவர் மீது எடுக்கப்பட வேண்டிய உரிய நடவடிக்கை குறித்த கருத்தாலோசனை வழங்கவும்; மற்றும்
(h) தம்முடைய கடமைகளைப் புரிவதற்காகத் தாம் தேவையெனக் கருதக்கூடிய தகவல் அல்லது விவர அறிக்கைகள் எவற்றையும் இப்பல்கலைக்கழகத்தினால் பேணி வரப்படும் அலுவலகம், துறை, மையம், ஆய்வுக் கூடம், கல்லூரி ஆகிய எதிலிருந்தும் தருவிப்பார்.
(9) இப்பல்கலைக்கழகத்திற்கு செலுத்தத்தக்க பணம் எதற்காகவும் நிதி அலுவலரோ அல்லது ஆட்சிக் குழுவால் இதற்கென உரியவாறு அதிகாரமளிக்கப்பட்ட நபரோ, அதிகாரமளிக்கப்பட்ட நபர்களோ, அளிக்கும் பற்று சீட்டானது, அப்பணம் செலுத்தித் தீர்க்கப்பட்டதற்கான போதிய நிறைவேற்ற சான்றாகும்.
தேர்வுக்
கட்டுப்பாட்டு அலுவலர்.
16. (1) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், வகுத்துரைக்கப்படக்கூடிய கால அளவிற்கும், வரையறைகள் மற்றும் வரைக்கட்டுக்களின் பேரிலும், ஆட்சிக்குழுவால் நியமிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் ஒரு முழுநேர அலுவலராக இருத்தல் வேண்டும்.
(2) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய
அதிகாரங்களைச் செலுத்தி வருவார், மற்றும் அத்தகைய கடமைகளைப் புரிவார்.
நூலகர்.
17. (1) நூலகர், வகுத்துரைக்கப்படக்கூடிய கால அளவிற்கும் வரையறைகள் மற்றும் வரைக்கட்டுக்களின் பேரிலும், தெரிவுக்குழுவின் பரிந்துரையின் பேரிலும், ஆட்சிக்குழுவால் நியமிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் ஒரு முழுநேர அலுவலராக இருத்தல் வேண்டும்.
(2) நூலகர், ஆட்சிக்குழுவால் அவருக்கு குறித்தளிக்கப்படக் கூடிய அத்தகைய அதிகாரங்களைச் செலுத்தியும் அத்தகைய கடமைகளைப் புரிந்தும் வருவார்.
31அத்தியாயம் IV.
பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகள்.
பல்கலைக் கழகத்தின் 18. இப்பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகள் பின்வருவன ஆகும்.
அதிகார அமைப்புகள்.
அவையாவன;
(1) ஆட்சிக்குழு;
(2) கல்விமன்றம்;
(3) நிதிக்குழு;
(4) திட்டமிடும் குழு;
(5) பாடத்திட்டக் குழுக்கள்;
(6) புலங்கள்; மற்றும்
(7) நிலைவிதிகளால் இப்பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளென
விளம்புகை செய்யப்பட்ட அத்தகைய பிற அமைப்புகள்.
உறுப்பினர் பதவிக்கான 19. (1) நபரொவரும், தேர்தல் அல்லது பெயர் குறித்து நியமிக்கப்படும் தேதியன்று
தகுதிக்கேடு.
அவர்.-
(a) மனச்சீர்கேடுற்றவராகவோ; அல்லது
(b) நொடிப்பு நிலையரொருவராக நீதிமுறையில் தீர்மானிக்கப்பட வேண்டி விண்ணப்பித்துக் கொண்டுள்ள ஒருவராக அல்லது விடுவிக்கப்படாத நொடிப்பு நிலையரொருவராக இருப்பாராயின்; அல்லது
(c) ஒழுக்கக்கேட்டினை உள்ளடக்குகின்ற குற்றச்செயல் எதற்காகவும் குற்றவழக்கு நீதிமன்றமொன்றினால் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டவராக இருப்பாராயின், இப்பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகள் எதனின் உறுப்பினரொருவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அல்லது பெயர் குறித்து நியமிக்கப்படுவதற்கோ தகுதியுடையவராகமாட்டார்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி நபரொருவர் தகுதியற்றவரா என்பது குறித்து பூசல் அல்லது ஐயம் ஏற்படும் நேர்வில், ஆட்சிக்குழுவானது அதனைத் தீர்மானித்தல் வேண்டும் மற்றும் அதன் முடிவே இறுதியானதாகவும் இருக்கும்.
ஒரு சில 20. 21 மற்றும் 24 ஆம் பிரிவுகளில் என்ன அடங்கியிருந்த போதிலும், இப்பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவிலோ அல்லது கல்வி மன்றத்திலோ அல்லது இரண்டிலுமோ ஆறு ஆண்டுகள் என்பதான மொத்த கால அளவு ஒன்றுக்கு உறுப்பினரொருவராகப் பதவி வகுத்த நபரொவரும், மேற்சொன்ன இரண்டு அதிகார அமைப்புகளில் எதொன்றுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அல்லது பெயர் குறித்து நியமிக்கப்படுவதற்கோ தகுதியுடைவர் ஆகார்:
நேர்வுகளில் கல்வி மன்றத்திற்கும் ஆட்சிக் குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப் படுவதற்கான அல்லது பெயர் குறித்து நியமிக்கப் பவதற்கான தகுதிக்கேடுகள்.
வரம்புரையாக, இந்த உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள ஆறு ஆண்டு என்கிற மொத்தக் காலத்தினை கணக்கிடும் நோக்கத்திற்காக, ஒரு அதிகார அமைப்பில் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலமாகவோ அல்லது பெயர் குறித்து நியமிக்கப்படுவதன் மூலமாகவோ பதவி வகித்த மூன்றாண்டுக்கால அளவும் மற்றும் மற்றொரு அதிகார அமைப்பில் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலமாகவோ அல்லது பெயர் குறித்து நியமிக்கப்படுவதன் மூலமாகவோ பதவிவகித்த மூன்றாண்டுக்கால அளவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் அதற்கிணங்கிய வகையில் ஆட்சிக் குழுவிற்கோ அல்லது கல்வி மன்றத்திற்கோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது பெயர் குறித்து நியமிக்கப்படுவதற்கு அத்தகைய நபர் தகுதியுடையவர் ஆகார்.
32மேலும் வரம்புரையாக, இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, தற்காலிக காலியிடத்தில் இந்த உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள அதிகார அமைப்பு ஏதொன்றிலும் ஓராண்டிற்கு குறையாமல் பதவி வகித்திருக்கிற நபரொருவர், அந்த அதிகார அமைப்பில் மூன்று ஆண்டு கால அளவு ஒன்றிற்குப் பதவி வகித்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
மேலும் வரம்புரையாக, இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக நபர் ஒரு அதிகார அமைப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பின் அல்லது பெயர்குறித்து நியமிக்கப்பட்டிருப்பின் மற்றும் அத்தகைய நபர் முதலில் குறிப்பிடப்பட்ட அதிகார அமைப்பில் உறுப்பினராக இருந்ததன் விளைவாக மற்றொரு அதிகார அமைப்பிற்கு உறுப்பினராயிருப்பின், முதலில் குறிப்பிடப்பட்ட அதிகார அமைப்பில் பதவி வகித்த அந்தக்காலத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவில் உள்ள எதுவும்.-
(i) 21-ஆம் பிரிவில் சுட்டப்பட்டுள்ள பதவி வழி உறுப்பினர்கள்
தொடர்பாகவோ;
(ii) ஆனால் 24-ஆம் பிரிவில் சுட்டப்பட்டுள்ள பதவி வழி உறுப்பினர்கள்
தொடர்பாகவோ பொருந்தாது.
ஆட்சிக்குழு. 21. (1) வேந்தர், 53 ஆம் பிரிவின்படி முதல் துணைவேந்தர் நியமிக்கப்பட்டதற்குப் பின்பு, கூடிய விரைவில் ஆட்சிக் குழுவினை அமைத்தல் வேண்டும்.
(2) ஆட்சிக் குழுவானது துணைவேந்தருக்குக் கூடுதலாக, பின்வரும்
உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்; அதாவது;-
வகை - பதவி வழி உறுப்பினர்கள்.
(a) உயர்கல்வித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
(b) சட்டத்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
(c) கல்லூரி கல்வி இயக்குநர்;
வகை –II பிற உறுப்பினர்கள்.
(a) துணைவேந்தரின் பரிந்துரையின் பேரில் வேந்தரால் பெயர்குறித்த நியமிக்கப்படக்கூடிய மூன்று சிறந்த நபர்கள், மாநில அரசின் சமூக நீதி மற்றும் கொள்கைகளுடன் தொடர்புடைய சிக்கல்கள் ஏதேனும் உள்ளடங்கலான நிர்வாகம், கல்வி மற்றும் நிதி பொருட்பாடுகளில் துணைவேந்தருக்கு வழிகாட்டியாக இருப்பார்
(b) ஒற்றை மாற்று வாக்குமுறை வாயிலான விகிதாசார பிரதிநிதித்துவ அமைப்பிற்கிணங்க அவர்களுக்கிடையே இருந்து இணைக்கப்பட்ட கல்லூரிகளின் முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்;
(c) ஒற்றை மாற்று வாக்குமுறை வாயிலான விகிதாசார பிரதிநிதித்துவ அமைப்பிற்கிணங்க கல்விமன்றத்தின் உறுப்பினர்களான அவர்களுக்கிடையே இருந்து இணைக்கப்பட்ட கல்லூரிகளின் (முதல்வர்களைத் தவிர) ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்;
விளக்கம்.– இந்த இனத்தின் நோக்கத்திற்காக, "ஆசிரியர்கள்" என்பது அவர்களுக்கிடையே இருந்து இணைக்கப்பட்ட கல்லூரிகளின் ஆசிரியர்களால் கல்வி மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஆசிரியர்கள் என்று பொருள்படும்;
(d) துணைவேந்தரின் பரிந்துரையின் பேரில் வேந்தரால் பெயர் குறித்து
நியமிக்கப்பட்ட புலத்தலைவர் அல்லது இயக்குநர்;
(e) துணைவேந்தரின் பரிந்துரையின் பேரில் வேந்தரால் பெயர் குறித்து
நியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர்;
(f) பதவி மூப்பிற்கிணங்க சுழற்சிமுறையில் துணைவேந்தரால் பெயர்
குறித்த நியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக இணைப்பேராசிரியர்;
33(g) பதவி மூப்பிற்கிணங்க துணைவேந்தரால் பெயர் குறித்த நியமிக்கப்பட்ட
ஒரு பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்; மற்றும்
(h) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையினால் அதன் உறுப்பினர்களிடமிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் உறுப்பினர்.
(3) துணைவேந்தர், ஆட்சிகுழுவின் பதவி வழி தலைவராக இருப்பார்.
(4) (a) உயர்கல்வித்துறையை பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர் அல்லது சட்டத்துறையை பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர் ஏதேனும் காரணத்தினால் ஆட்சிக்குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு வர இயலாதிருக்கும் நேர்வில் அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு அவர், அவரது துறையைச் சேர்ந்த அரசு துணைச் செயலாளரின் படி நிலைக்குக் குறையாத எந்த ஒரு அலுவலரையும் அவருக்குப் பதிலாக அனுப்பலாம். அவ்வாறு பதிலாக அனுப்பப்பட்ட அலுவலர் அந்தக் கூட்டங்களில் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கு உரிமையுடையவராவார் மற்றும் வாக்களிப்பதற்கு உரிமையுடையவராவார்.
(b) கல்லூரிக் கல்வி இயக்குநர், ஏதேனும் காரணத்தினால் ஆட்சிக் குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு வர இயலாதிருக்கும் நேர்வில் அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு துணை இயக்குநரின் படிநிலைக்குக் குறையாத தன் துறையின் அலுவலர் எவரையும் பதிலாக அனுப்பலாம். அவ்வாறு பதிலாக அனுப்பப்பட்ட அலுவலர், அந்தக் கூட்டங்களின் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கு உரிமையுடையவராக இருப்பார் மற்றும் வாக்களிப்பதற்கும் உரிமையுடையவராக இருப்பார்.
(5) (a) பிறவாறு வகை செய்யப்பட்டிருப்பது நீங்கலாக ஆட்சிக்குழுவின் பதவி வழி உறுப்பினரல்லாத பிற உறுப்பினர்கள் மூன்றாண்டுக்கால அளவுக்கு பதவி வகித்து வருவர் மற்றும் அவ்வுறுப்பினர் மேற்கொண்டும் மூன்றாண்டுகளுக்கு மேற்படாத கால அளவுக்கு தேர்தெடுக்கப்படுவதற்கோ அல்லது பெயர் குறித்த நியமிக்கப்படுவதற்கோ தகுதியுடையவராவர்.
(b) உறுப்பினர் ஒருவர் ஆட்சிக்குழுவின் தற்செயல் காலியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறவிடத்து அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்டிருக்குமிடத்து அத்தகைய உறுப்பினர் எவரேனும் வகித்து வரும் பதவியின் கால அளவு ஒராண்டுக்கும் குறைவாக இருந்திருப்பின் அது மூன்றாண்டுகளைக் கொண்ட ஒரு முழு கால அளவாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்;
வரம்புரையாக, ஆட்சிக்குழுவின் உறுப்பினராக உள்ள ஒருவர், ஒரு குறிப்பிட்ட வாக்காளர் தொகுதியில் அல்லது அமைப்பின் அல்லது ஒரு குறிப்பிட்ட நியமனப் பதவியை வகிக்கிறார் என்ற தகுதியினால் அவர் பெயர் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்டு அல்லது நியமிக்கப்பட்டிருக்குங்கால், அவர் அந்த குறிப்பிட்ட வாக்காளர் தொகுதியில் அல்லது அமைப்பில் அல்லது நேர்விற்கேற்ப அப்பல்கலைக்கழகத்தில் உறுப்பினராக இருப்பது அற்றுப்போகும் அத்தேதியிலிருந்து ஆட்சிக்குழுவின் உறுப்பினராக இருப்பதும் அற்றுப்போகும்.
மேலும் வரம்புரையாக, ஆட்சிக்குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர், எந்தப் பதவியின் காரணமாக ஆட்சிக்குழுவின் பதவி வழி உறுப்பினராக இருப்பதற்கு அவர் உரிமைத் தகுதியுடையவராக இருக்கிறாரோ அந்தப் பதவிகள் எதற்கேனும் தற்காலிகமாக பணியமர்த்தம் செய்யப்படுகிறவிடத்து அவர், தாம் நியமன பொறுப்பை எடுத்துக் கொள்கிற தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள்ளாக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்டதன் காரணமாக ஆட்சிக்குழுவின் உறுப்பினராக இருக்கும் பதவியை விட்டு நீங்கி தம்முடைய நியமனத்தின் காரணமாகப் பதவி வழி உறுப்பினராக ஆவதற்கு விரும்புகிறாரா என்பதைத் தன்னுடைய கையொப்பமிடப்பட்டு துணைவேந்தருக்கு தெரிவிக்கப்பட்ட எழுத்துருவிலான அறிவிப்பின் மூலமாக தெரிவு செய்தல் வேண்டும் மற்றும் அந்த விருப்பத் தெரிவை செய்யத் தவறுவதின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினராக உள்ள தம்முடைய பதவியை விட்டு அவர் நீங்கியிருப்பதாகக் கொள்ளப்படுவார்.
34(6) ஒருவர் ஆட்சிக்குழுவின் உறுப்பினராக இருப்பது அற்றுப்போகும் போது, அவர் ஆட்சிக் குழுவில் தமக்கிருந்த உறுப்பினர் பதவியின் காரணத்தால் இப்பல்கலைக்கழக அமைப்புகளில் எதிலேனும் உறுப்பினராக அவர் இருப்பதும் அற்றுப்போகும்.
(7) ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள், வகுத்துரைக்கப்படக் கூடிய அமர்வு கட்டணம் மற்றும் பயணப்படிகள் தவிர, இப்பல்கலைக்கழகத்திடமிருந்து ஊதியம் எதையும் பெறுவதற்கு உரிமைத் தகுதியுடையவர்கள் ஆகமாட்டார்கள்;
வரம்புரையாக இந்தக் கூறில் அடங்கியுள்ள எதுவும், உறுப்பினர் எவரையும், தாம் வகிக்கிற பதவியின் காரணமாக தாம் உரிமைத் தகுதியுடையவராயிருக்கிற தம்முடைய இயல்பான ஊதியங்களைப் பெறுவதை தடை செய்தலாகாது.
(8) ஆட்சிக்குழுவின் பதவிவழி உறுப்பினர் அல்லாத பிற உறுப்பினர் ஒருவர், தமது பதவி முடிவடைகிற கால அளவிற்கு முன்பு எந்தச் சமயத்திலும் தம்முடைய உறுப்பினர் பதவியை விட்டு விலகலாம். அத்தகைய பதவி விலகலானது, வேந்தருக்கு அவ்வுறுப்பினரால் எழுத்துருவிலான கடிதம் ஒன்றின் மூலமாகத் தெரிவிக்கப்படுதல் வேண்டும் மற்றும், அப்பதவி விலகலானது வேந்தரால், அது ஏற்கப்படும் தேதியிலிருந்து செயல் விளைவு பெறுதல் வேண்டும்.
22. (1) ஆட்சிக் குழுவானது பின்வரும் அதிகாரங்களைக் கொண்டிருக்கும்
ஆட்சிக் குழுவின் அதிகாரங்கள்
அதாவது; –
(a) நிலைவிதிகளை இயற்றுதல் மற்றும் திருத்துதல் அல்லது அதனை
நீக்கறவு செய்தல்;
(b) துணைமுறை விதிகளை இயற்றுதல் மற்றும் திருத்தம் செய்தல் அல்லது
அவற்றை நீக்கறவு செய்தல்;
(c) ஆட்சிக்குழுவானது அது தீர்மானிக்கலாகும் அத்தகைய முறையிலும் மற்றும் நோக்கங்களுக்காகவும் பிற பல்கலைக்கழகங்களுடனும் பிற கல்வி அதிகார அமைப்புகளுடனும் கல்லூரிகளுடனும் ஒத்துழைத்தல்;
(d) ஆட்சிக்குழுவானது அது, தான் தக்கதெனக் கருதுகிற அத்தகைய
கல்வி கற்கும் பிரிவுகளில் கல்வி கற்பித்தலுக்கும் பயிற்சிக்கும் வகை செய்தல்;
(e) ஆராய்ச்சி செய்வதற்கும், மேம்பாடு அடைவதற்கும் அறிவைப்
பரப்புவதற்கும் வகை செய்தல்;
(f) பல்கலைக்கழகத்திற்குத் தேவைப்படும் உதவிப் பேராசிரியர் பதவிகள், இணைப்பேராசிரியர் பதவிகள், பேராசிரியர் பதவிகள் மற்றும் பிற ஆசிரியர் பதவிகளை ஏற்படுத்துதல்;
(g) பல்கலைக்கழகத்தோடு கல்லூரிகளை இணைப்பதற்கும், பல்கலைக்கழக பகுதிக்குள்ளான இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கும் மற்றும் இணைப்பினை விலக்கிக் கொள்வதற்குமான வரைக்கட்டுக்களை வகுத்துரைத்தல்;
(h) கல்லூரியொன்று எந்த முறையிலும் மற்றும் எந்த வரைக்கட்டுகளுக்குட்பட்டும் தன்னாட்சிக் கல்லூரியென பெயரிட்டுக் குறிப்பிடப்படலாம் என்பதையும், அவ்வாறு பெயரிட்டுக் குறிப்பிடுவதாவது அறவு செய்யப்படலாம் என்பதையும் வகுத்துரைத்தல்;
(i) பல்கலைக்கழக கல்லூரிகளின், கல்லூரிகளின் மற்றும் ஏற்பளிக்கப்பட்ட கல்லூரிகளின் மாணவர்களுக்காக கல்விமன்றமானது தீர்மானிக்கக்கூடிய விரிவுரைகளை வழங்குவதற்கும் மற்றும் கற்பிப்பதற்கும் வகை செய்தல் மேலும் கல்லூரிகளின் மாணவர்களாக இல்லாத நபர்களுக்கு விரிவுரை வழங்கவும் மற்றும் கற்பிப்பதற்கும் மற்றும் அவர்களுக்குப் பட்டயங்கள் வழங்கவும் வகை செய்தல்;
(j) பட்டங்கள், விருதுகள், பட்டயங்கள் மற்றும் பிற கல்விச் சிறப்புப்
பட்டங்களை ஏற்படுத்துதல்;
35(k) (i) பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்றில் அல்லது ஆய்வுக் கூடத்தில் அல்லது இணைக்கப்பட்ட அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரியொன்றில் ஒப்புதல் அளிக்கப்பட்ட குறித்தகால படிப்பொன்றைத் தொடர்ந்திருந்து, அல்லது வகுத்துரைக்கப்பட்ட முறையில் அதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்த மற்றும் பல்கலைக்கழகத்தின் வகுத்துரைக்கப்பட்ட தேர்வுகளில் தேறியுள்ளவர்களுக்கு;
(ii) வகுத்துரைக்கப்பட்ட வரைக்கட்டுகளின்படி ஆராய்ச்சியினை நடத்தியுள்ளவர்களுக்கு பட்டங்கள், விருதுகள், பட்டயங்கள் மற்றும் பிற கல்விச் சிறப்புகளை அளித்தல்.
(l) ஆட்சிக்குழுவின் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத உறுப்பினர்களின்
பரிந்துரையின் பேரில், கெளரவப்பட்டங்களை அல்லது கல்விச் சிறப்புகளை அளித்தல்.
(m) மாணவர் விடுதிகளை நிறுவியமைத்துப் பேணிவருதல் மற்றும்
பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்ட மாணவர் விடுதிகளை மேலாண்மை செய்தல்;
(n) பட்டதாரி உதவித் தொகைகள், பயண உதவித் தொகைகள், படிப்புதவித் தொகைகள், மாணவ உதவித் தொகைகள், உதவி சம்பளங்கள், ஆதரவுப்படித் தொகைகள், பதக்கங்கள், பரிசுகள் ஆகியவற்றை ஏற்படுத்துதல்;
(o) கல்லூரிகளுக்கு ஒப்புதலளிப்பதற்காகவும், இணைப்பதற்காகவும், இப்பல்கலைக்கழகத்தின் தேர்வுகள், பட்டங்கள், விருதுகள், பட்டயங்கள் ஆகியவற்றிற்கு அனுமதிக்கப்படுவதற்காகவும், பட்டதாரிகளைப் பதிவு செய்வதற்காகவும், அத்தகைய பதிவினைப் புதுப்பிப்பதற்காகவும் மற்றும் 4 – ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்கள் அனைத்திற்காகவும் அல்லது அவற்றுள் எதற்காகவும் விதிக்கப்பட வேண்டிய கட்டணங்களை வகுத்துரைத்தல்;
(p) ஆண்டறிக்கை, ஆண்டுக் கணக்குகள், நிதிநிலை மதிப்பீடுகள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்தலும், அவற்றின் மீது தான் பொருத்தமெனக் கருதக்கூடிய நடவடிக்கையை எடுத்தலும்;
(q) பல்கலைக்கழக விரிவாக்கக்குழு ஒன்றை ஏற்படுத்தி அதைப் பேணிவருதல்;
(r) நூல் வெளியீட்டுப் பிரிவு, மாணவர் சங்கங்கள், வேலைவாய்ப்புப் பிரிவு, பல்கலைகக்கழக உடற்பயிற்சிக் கழகங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தி அவற்றைப் பேணிவருதல்;
(s) நிறுவனங்களில் ஏதொன்றின் மேலாண்மையை மேற்கொள்வதற்காகவும் அதன் சொத்துக்களையும் கடப்பாடுகளையும் எடுத்துக் கொள்வதற்காகவும் அல்லது இந்தச்சட்டத்தின் வகைமுறைகளுக்கு முராணாயிராத பிற நோக்கங்கள் எவற்றிற்காகவும் மைய அரசு அல்லது மாநில அரசு எதனுடன் அல்லது தனியார் மேலாண்மை நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை எதையும் செய்து கொள்ளுதல்;
(t) பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளுக்கான தேர்தல் முறையையும், கல்வி மன்றம், ஆட்சிக்குழு மற்றும் பல்கலைக்கழகத்தின் பிற அதிகார அமைப்புகள் ஆகியவற்றின் கூட்ட நடைமுறையையும், பல்கலைக்கழகத்தின் கல்விமன்றம் அல்லாத பல்கலைக்கழகத்தின் பிற அதிகார அமைப்புகளினால் அலுவல் நடத்தப்பெறுவதற்குத் தேவைப்படும் உறுப்பினர்களின் குறைவெண் வரம்பினையும் முறைப்படுத்துகின்ற நிலை விதிகளைச் செய்தல்;
(u) பல்கலைக்கழக மையமாக, பல்கலைக்கழக பகுதிக்குள் ஒரு பகுதியை
அங்கீகரிக்க அரசிடம் பரிந்துரை செய்தல்;
(v) பல்கலைக்கழகத்தின் சொத்துக்களையும் நிதியங்களையும் வைத்து வருதல்,
கட்டுப்பாடு செய்தல், நிருவகித்து வருதல்;
(w) பல்கலைக்கழகத்தின் தனித்த இலச்சினையின் வடிவம், அதைப் பாதுகாப்பில்
வைத்திருப்பது, பயன்படுத்துவது ஆகியவை குறித்து பணித்தல்;
(x) இந்தச் சட்டத்திற்கும், நிலை விதிகளுக்கும், துணை முறை விதிகளுக்கும், ஒழுங்குமுறை விதிகளுக்கும் இணங்கிய வகையில், பல்கலைக்கழகம் தொடர்பான அனைத்துப் பொருட்பாடுகளையும் முறைப்படுத்துதலும் முடிவு செய்தலும்;
36(y) திட்டவட்டமான நோக்கங்ளுக்காக, இப்பல்கலைக் கழகத்தின் பொறுப்பில்
விடப்பட்டுள்ள சொத்துக்கள் நிதியங்கள் ஆகிய அனைத்தையும் நிருவகித்தல்;
(z) (i) பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை நியமித்தல், அவர்களுடைய ஊதியங்கள் எவையேனும் இருப்பின் அவற்றை நிர்ணயம் செய்தல். அவர்களுடைய கடமைகளையும் அவர்களது பணிகள் குறித்த வரைக்கட்டுகளையும் வரையறுத்தல் மற்றும் தற்காலிக காலியிடங்களை நிரப்புவதற்கு வகை செய்தல்;
(ii) நிருவாக மற்றும் அது போன்ற பிற பதவிகளுக்கான நியமன முறையை வகுத்துரைத்தல்; மற்றும் அவற்றின் ஊதியங்கள் எவையேனும் இருப்பின் அவற்றை நிர்ணயித்தல், அவற்றினுடைய கடமைகளையும் அவற்றின் பணிவரைக்கட்டுகளையும் வரையறுத்தல் மற்றும் தற்காலிகக் காலியிடங்களை நிரப்புவதற்கு வகை செய்தல்;
(aa) உதவிப் பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், பேராசிரியர்கள், ஆசியர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் பிற பணியாளர்கள் ஆகியோரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தல் மற்றும் பணி நீக்கம் செய்தல்;
(ab) பல்கலைக்கழகத்திடம், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் எவையேனும், நிலைக்கொடைகள், விருப்ப ஆவண வழிக்கொடைகள், நன்கொடைகள், மானியமளிப்புகள் மற்றும் உரிமை மாற்றங்கள் மூலமாக அளிக்கப்படும்போது அவற்றை பல்கலைக்கழகத்தின் சார்பாக, ஏற்றுக் கொள்ளுதல்;
வரம்புரையாக அத்தகைய அனைத்து நிலைக்கொடைகள், விருப்ப ஆவண வழிக்கொடைகள், நன்கொடைகள், மானியமளிப்புகள் மற்றும் உரிமை மாற்றங்களானது, கல்வி மன்றத்தின் அடுத்த கூட்டத்தில் அறிவித்தல் வேண்டும்;
(ac) (i) மைய அல்லது மாநில அரசு எதனிடமிருந்தும் அல்லது பொது மக்களிடமிருந்து அல்லது மைய அல்லது மாநில அரசு எதற்கேனும் சொந்தமான அல்லது அதன் கட்டுபாட்டிலுள்ள கழகம் எதனிடமிருந்தும், பல்கலைக்கழகத்தின் சார்பாக கடன்களைப் பெறுதல்;
(ii) பல்கலைக்கழகத்தின் நோக்கங்களுக்காக பல்கலைக்கழகச் சொத்தின் பிணையத்தில் பேரில், அரசின் ஒப்புதலளிப்புடன் பணத்தைக் கடன்வாங்குதல்;
(ad) ஏற்பளிக்கப்பட்ட கல்லூரிகளாக அங்கீகாரம் செய்தல்;
(ae) கல்லூரி எதனையும் அரசின் இசைவுடன் தன்னாட்சிக் கல்லூரியாகப்
பெயரிட்டுக் குறிப்பிடல்;
(af) பல்கலைக்கழகத்தால் பேணி வரப்படாத மாணவர் விடுதிகளுக்கு ஏற்பிசைவளித்தல் மற்றும் துணை முறை விதிகளுக்கிணங்கவும் அதன்படி விதிக்கப்பட்ட வரைக்கட்டுகளுக்கிணங்கவும் நடத்தப்பெறாத மாணவர் விடுதி எதனின், ஏற்பிசைவையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் அல்லது விலக்கிக் கொள்ளுதல்;
(ag) பல்கலைக்கழகக் கல்லூரிகள், இணைக்கப்பட்ட மற்றும் ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரிகள், மாணவர் விடுதிகள் ஆகிய அனைத்தையும் ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்தலும் ஆய்வு செய்யப்பணித்தலும்;
(ah) பல்கலைக்கழகக் கல்லூரிகள், இணைக்கப்பட்ட மற்றும் ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரிகள், மாணவர் விடுதிகள் ஆகியவற்றிலுள்ள ஆசிரியர்களின் தகுதிப்பாடுகளை வகுத்துரைத்தல்;
(ai) பட்டதாரி உதவித் தொகைகள், பயண உதவித் தொகைகள், படிப்பு உதவித் தொகைகள், மாணவ உதவித் தொகைகள், உதவிச் சம்பளங்கள், ஆதரவுப் படித்தொகைகள், பதக்கங்கள், பரிசுகள் ஆகியவற்றை நிலை விதிகளுக்கிணங்க வழங்குதல்;
(aj) வகுத்துரைக்கப்படக்கூடிய கட்டணங்களை விதித்தலும் வசூலித்தலும்;
37(ak) பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்துதலும் அவற்றின் முடிவுகளுக்கு
ஒப்புதலளித்து வெளியிடுதலும்;
(al) பல்கலைக்கழகத்தின் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது தொடர்பாக மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குச் சமமாய் இருப்பதாக ஏற்பிசைவு அளிக்கப்படுவதற்கான தேர்வுகளை வகுத்துரைக்கின்ற துணை முறை விதிகளைச் செய்தல்;
(am) பாடக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமித்தல்;
(an) பாடக்குழுக்களின் பரிந்துரைகளை பரிசீலனை செய்ததற்குப் பின்பு,
தேர்வாளர்களை நியமிப்பது மற்றும் அவர்களுடைய ஊதியங்களை நிர்ணயித்தல்;
(ao) பல்கலைக்கழகத் துறைகளை மற்றும் உறுப்பமைக் கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் தங்கயிருக்கும் இடத்தையும் மாணவர்களின் ஒழுங்கு நடத்தையும் கண்காணித்துக் கட்டுப்பாடு செய்தல், அவர்கள் உடல் நலமும் பொது நலமும் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்;
(ap) பல்கலைக்கழக மையங்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகள் மற்றும் ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தால் அமைக்கப்படும் அல்லது பேணிவரப்படும் பிற நிறுவனங்கள் ஆகியவற்றை நிறுவதலும், மேலாண்மை செய்தலும்;
(aq) பல்கலைக்கழக விரிவாக்கக் குழுவின் செயற்பாட்டை முறைப்படுத்துதல்;
(ar) பல்கலைக்கழகத்தால் ஏற்படுத்தப்பட்ட நூல் வெளியீட்டுப் பிரிவு, மாணவர் சங்கங்கள், வேலைவாய்ப்புப் பிரிவு, பல்கலைக்கழக உடற்பயிற்சிக் கழகங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்தல்;
(as) பல்கலைக்கழகத்தில் பயிற்றுவித்தலையும் கற்பித்தலையும் மறு ஆய்வு
செய்தல்;
(at) பல்கலைக்கழகத்திற்குள் ஆராய்ச்சியை வளர்த்தலும், அத்தகைய
ஆராய்ச்சி பற்றி அவ்வப்போது அறிக்கைகளைக் கோருதலும்;
(au) சட்டத்தினாலோ, அல்லது நிலைவிதிகளினாலோ, துணைமுறை விதிகளினாலோ அல்லது ஒழுங்குமுறை விதிகளினாலோ தனக்கு வழங்கப்படக்கூடிய அல்லது விதிக்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச் செலுத்துதலும் பிற கடமைகளைப் புரிந்து வருதலும்; மற்றும்
(av) தன் அதிகாரங்களில் எதையும் துணை வேந்தருக்கோ தன் உறுப்பினர்களிடையேயிருந்து அமைந்த குழுவொன்றிற்கோ அல்லது நிலை விதிகளுக்கிணங்க நியமிக்கப்பட்ட குழுவொன்றிற்கோ ஒப்படைவுசெய்தல்;
(2) ஆட்சிக்குழு, பொருட்பாடு எதனைப் பொறுத்தும் கல்விமன்றத்தை கலந்தாய்வு செய்வது தேவையானதென்று தான் கருதுகிறவிடத்து அவ்வாறு கலந்தாய்வு செய்யலாம்.
ஆட்சிக்குழுவின் கூட்டங்கள்.
23. (1) ஆட்சிக்குழுவானது குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையேனும் வகுத்துரைக்கப்படக்கூடிய காலங்களிலும், இடங்களிலும் கூடுதல் வேண்டும்; மற்றும் (2), (3) ஆகிய உட்பிரிவுகளின் வகைமுறைகளுக்குட்பட்டு, தன் கூட்டங்களின் குறைவெண் வரம்பு உள்ளடங்கலாக, அக்கூட்டங்களில் அலுவல் நடத்துவது தொடர்பாக, வகுத்துரைக்கப்படக்கூடிய நடைமுறை விதிகளைக் பின்பற்றுதல் வேண்டும்.
(2) துணைவேந்தர் அல்லது அவர் வராத போது, வந்திருக்கும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எவரும், ஆட்சிக்குழுவின் கூட்டமொன்றுக்குத் தலைமை வகித்தல் வேண்டும்;
38(3) ஆட்சிக்குழுவின் கூட்டம் எதிலும் எழும் அனைத்துக் கேள்விகளும், வந்திருந்து வாக்களிக்கின்ற உறுப்பினர்களின் வாக்குகளின் பெரும்பான்மையினால் முடிவு செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் வாக்குகள் சமமானவையாக அமைகின்ற நேர்வில்; துணைவேந்தரோ அல்லது நேர்விற்கேற்ப தலைமை வகிக்கும் உறுப்பினரோ, இரண்டாவது அல்லது அறுதி வாக்கு ஒன்றைப் பெற்றிருத்தலும் அதை செலுத்துதலும் வேண்டும்;
(4) (a) ஆட்சிக்குழு, கலந்தாய்வு செய்யும் நோக்கத்திற்காக, பரிசீலனையில் உள்ள பொருள் எதிலும் சிறப்பு அறிவையோ அல்லது நடைமுறைப் பட்டறிவையோ பெற்றிருக்கின்ற எவரையும் கூட்டம் எதற்கும் வருகை தருமாறு அழைப்பு விடுக்கலாம். அத்தகையவர் அத்தகைய கூட்டங்களில் உரையாற்றலாம்; மற்றும் மற்றபடி நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்; ஆனால் வாக்களிக்கும் உரிமைத் தகுதியுடையவராகமாட்டார்;
(b)அவ்வாறு அழைக்கப்பட்டவர் ஆட்சிக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு அனுமதிக்கத்தக்கதான, தினப்படி மற்றும் பயணப்படிகளுக்கு உரிமைத் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்;
கல்வி மன்றம். 24. (1) கல்வி மன்றமானது பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல்
வேண்டும், அதாவது;
வகை-I-பதவிவழி உறுப்பினர்கள்.
(a) துணைவேந்தர்;
(b) புலங்களின் தலைவர்கள்;
(c) பல்கலைக்கழக நூலகர்;
(d) பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர்;
வகை-IIபிற உறுப்பினர்கள்.
(a) துணைவேந்தரின் பரிந்துரையின்பேரில் சுழற்சி முறையில் வேந்தரால்
நியமிக்கப்பட வேண்டிய அரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுள் ஐவர்;
(b) துணைவேந்தரின் பரிந்துரையின் பேரில் வேந்தரால் நியமிக்கப்படும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பிற ஆசிரியர்களுள் பதினைந்து உறுப்பினர்கள்;
(c) ஒற்றை மாற்று வாக்கு முறை வாயிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவ அமைப்பிற்கிணங்க இணைக்கப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் அவர்களுக்குள் தேர்ந்தெடுத்த பத்து நபர்களுக்கு மிகாமல்;
(d) ஒற்றை மாற்று வாக்கு முறை வாயிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவ அமைப்பிற்கிணங்க, இணைக்கப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களைத் தவிர பிற இணைக்கப்பட்ட மற்றும் ஏற்பிசைவுப்பெற்ற கல்லூரிகளின் ஆசிரியர்கள் அவர்களுக்கிடைய தேர்ந்தெடுத்த ஆசிரியர்களுள் பத்து நபர்களுக்கு மிகாமல்;
(e) துணைவேந்தரால் சுழற்சி முறையில் நியமிக்கப்பட வேண்டிய
பாடக்குழுவின் தலைவர்களுள் பத்து நபர்களுக்கு மிகாமல்;
(f) வேந்தரால் நியமிக்கப்பட வேண்டிய ஐந்து நபர்கள்;
(g) இணைவேந்தரால் நியமிக்கப்பட வேண்டிய ஐந்து நபர்கள்;
(h) சட்டமன்ற பேரவையின் உறுப்பினர்களிலிருந்து அவர்களுக்கிடையே
தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள்;
(i) ஒற்றை மாற்று வாக்குமுறை வாயிலாக விகிதாசார பிரதிநிதித்துவ அமைப்பிற்கிணங்க தனியார் கல்லூரிகளின் செயலாளர்கள் அவர்களுக்கிடையே தேர்ந்தெடுக்கப்படும் இருவர்;
39(j) இணைவேந்தரால் நியமிக்கப்பட வேண்டிய பல்கலைக்கழக பகுதியிலுள்ள
உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்களுள் இருவர்;
(k) இணைவேந்தரால் நியமிக்கப்படும் பல்கலைக்கழகப் பகுதியுள்ள மேல்நிலைப்
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுள் இருவர்;
(l) அரசின் பரிந்துரையின் பேரில் வேந்தரால் நியமிக்கப்பட வேண்டிய தனியார் தொழிலகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து நான்கு உறுப்பினர்கள்;
(m) அரசின் பரிந்துரையின் பேரில் வேந்தரால் நியமிக்கப்படும் தொழில்சார் சங்கங்கள் அல்லது, நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் அல்லது கழகங்களில் இருந்து நான்கு நபர்கள்;
(n) துணைவேந்தரின் பரிந்துரையின் பேரில் இணைவேந்தரால் நியமிக்கப்படும்
முன்னாள் மாணவர்களுள் இருவர்; மற்றும்
(o) வேறெந்தவாறும் கல்விக்குழுவின் உறுப்பினரல்லாத ஆட்சிக்குழு
உறுப்பினர்கள்:
வரம்புரையாக (c), (d) மற்றும் (e) கூறுகளில் தேர்ந்தெடுக்க அல்லது நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் சரியான எண்ணிக்கை நிலைமுறை விதிகளில் வகுத்துரைக்கப்பட்டவாறாகும்.
மேலும் வரம்புரையாக, வேந்தரால் செய்யப்படும் நியமனமானது சமுக நீதியின் தேவைகள் மற்றும் பிரதிநிதியற்று எஞ்சியுள்ள பகுதிகளையும் கருத்தில் கொண்டிருக்கலாம்.
(2) (i) (1) ஆம் உட்பிரிவில் வகை II பிற உறுப்பினர்கள் என்பதன் கீழ் (o) இனத்தின் பொருட்டு கல்வி மன்றத்தின் உறுப்பினராக உள்ள உயர்கல்வித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசின் செயலாளரோ அல்லது சட்டத்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசின் செயலாளரோ, கல்வி மன்றத்தின் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாது இருக்கும் நேர்வில் அவர் அரசின் துணைச் செயலாளரின் படிநிலைக்குக் குறையாத அலுவலர் எவரையும் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுப்பி வைக்கலாம்;
(ii) (1) ஆம் உட்பிரிவில் வகை II பிற உறுப்பினர்கள் என்பதன் கீழ் (o) இனத்தின் பொருட்டு, கல்வி மன்றத்தின் உறுப்பினராக உள்ள கல்லூரிக் கல்வியின் இயக்குநர், காரணம் எதற்காகவும், கல்வி மன்றத்தின் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாது இருக்கும் நேர்வில், அவர் துணை இயக்குநர் படிநிலைக்குக் குறையாத துறை அலுவலர் எவரையும் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுப்பி வைக்கலாம்.
(3) (a) பிறவாறு வகைசெய்யப்பபட்டிருந்தால் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்ட கல்வி மன்றத்தின் உறுப்பினர், மூன்றாண்டுக்கால அளவு ஒன்றுக்குப் பதவி வகித்தல் வேண்டும் மற்றும் அத்தகைய உறுப்பினர் மற்றுமொறு மூன்றாண்டுகள் கால அளவிற்கு தேர்ந்தெடுக்க அல்லது நியமிக்கப்படுவதற்கு உரிமைத் தகுதியுடையவராகுதல் வேண்டும்.
(b) உறுப்பினர் ஒருவர் கல்விமன்றத்தின் தற்செயல் காலியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய உறுப்பினர் எவராலும் ஓராண்டுக்கு குறையாமல் வகித்து வரப்பட்ட பதவிக்கால அளவானது, ஒரு முழுமையான மூன்று ஆண்டுகளைக் கொண்ட கால அளவாகக் கருதப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக, குறிப்பிட்ட வாக்காளர் தொகுதியில் அல்லது அமைப்பில் உறுப்பினர் அல்லது ஒரு குறிப்பிட்ட, நியமனப் பதவியை வகிக்கிறார் என்ற தகுதியினைக் கல்விமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு உறுப்பினரானவர், அந்தக் குறிப்பிட்ட வாக்காளர் தொகுதியில் அல்லது அமைப்பில் அல்லது நேர்வுக்கேற்ப அந்த நியமனப் பதவியில் உறுப்பினராக இருப்பது அற்றுப்போகும் தேதியிலிருந்து கல்வி மன்றத்தின் உறுப்பினராக இருப்பதும் அற்றுப்போதல் வேண்டும்.
40மேலும் வரம்புரையாக, கல்வி மன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர், எந்தப் பதவியின் காரணமாக கல்விமன்றத்தின் பதவி வழி உறுப்பினராக இருப்பதற்கு அவர் உரிமைத் தகுதியுடையவராக இருக்கிறாரோ அந்தப் பதவிகள் எதற்கேனும் தற்காலிகமாக நியமிக்கப்படுகிறவிடத்து, அவர்தாம் நியமன பொறுப்பை எடுத்துக் கொள்கிற தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள்ளாக தாம் தேர்ந்து எடுக்கப்பட்டதன் அல்லது பெயர்குறித்து நியமிக்கப்பட்டதன் காரணமாக, கல்விமன்றத்தின் உறுப்பினராகத் தாம் தொடர்ந்து இருப்பதற்கு விரும்புகிறாரா அல்லது அத்தகைய உறுப்பினராக இருக்கும் பதவியை விட்டு நீங்கி தம்முடைய நியமனத்தின் காரணமாகப் பதவி வழி உறுப்பினராவதற்கு விரும்புகிறாரா என்பதைத் தம்மால் கையொப்பமிடபட்டு துணைவேந்தருக்கு தெரிவிக்கப்பட்ட எழுத்துருவிலான அறிவிப்பின் மூலமாக தேர்வு செய்தல் வேண்டும் மற்றும் அத்தகைய விருப்பத்தெரிவானது, அறுதியானதாக இருத்தல் வேண்டும். அந்த விருப்பத்தெரிவைச் செய்யத் தவறுவதன் பேரில், தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினராக உள்ள தம்முடைய பதவியை விட்டு அவர் நீங்கியிருப்பதாகக் கொள்ளப் பெறுவார்.
(4) நபரொருவர் கல்வி மன்றத்தின் உறுப்பினராக இருப்பது அற்றுபோகும் போது, அவர் கல்விமன்றத்தில் தமக்கிருந்த உறுப்பினர் பதவியின் காரணத்தால் இப்பல்கலைக்கழக அதிகார அமைப்புகள் எவற்றிலும் உறுப்பினராக அவர் இருப்பதும் அற்றுபோதல் வேண்டும்.
(5) கல்விமன்றத்தின் உறுப்பினர்கள் வகுத்துரைக்கப்படலாகிற தினப்படிகள் மற்றும் பயணப்படிகள் தவிர, இப்பல்கலைகழகத்திலிருந்து ஊதியம் எதனையும் பெறுவதற்கு உரிமையுடையவர்கள் ஆகார்.
வரம்புரையாக, இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், உறுப்பினர் எவரும் தாம் வகிக்கிற பதவியின் காரணமாகத் தாம் உரிமைத் தகுதியுடையவராயிருக்கும் தன்னுடைய இயல்பான ஊதியங்களைப் பெறுவதைத் தடைசெய்தல் கூடாது.
(6) பதவி வழி உறுப்பினர் அல்லாத கல்விமன்றத்தின் ஓர் உறுப்பினர், தமது பதவிக்காலம் முடிவதற்கு முன்பு எந்த நேரத்திலும், தமது உறுப்பினர் பதவியிலிருந்தான பதவி விலகலைக் கொடுக்கலாம் அத்தகைய பதவி விலகலானது, அவ்வுறுப்பினரால் எழுத்துருவிலான கடிதமொன்றின் வாயிலாக வேந்தருக்குத் தெரிவிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அப்பதவி விலகலானது, வேந்தரால் அது ஏற்கப்படும் தேதியிலிருந்து செயல் விளைவு பெறுதல் வேண்டும்.
கல்விமன்றத்தின்
அதிகாரங்களும் அலுவல்களும்.
25. (1) கல்விமன்றமானது, பல்கலைக்கழகத்தின் முதன்மையான கல்வி அமைப்பாக இருந்துவரும்; மற்றும் இந்த சட்டத்தின் வழிவகைகளுக்கும் மற்றும் நிலைவிதிகளுக்கும் உட்பட்டு இப்பல்கலைக்கழகத்தில் பயிற்றுவித்தலுக்கும் தேர்வுக்குமான கட்டுப்பாட்டினையும் பொது ஒழுங்குமுறைகளையும் கொண்டிருத்தல் வேண்டும். அவற்றின் தரநிலைகள் பேணிவரப்படுவதற்குப் பொறுப்பினை உடையதாக இருத்தல் வேண்டும். மேலும் இப்பல்கலைக்கழகத்தின் விரிவான கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் மறு ஆய்வு செய்யும் அமைப்பாகவும் கூட செயற்படுதல் வேண்டும்.
(2) கல்விமன்றமானது, இப்பல்கலைக்கழகத்தின் முதன்மைக் கல்வி அமைப்பாக
பின்வரும் அதிகாரங்களையும் செயற்பணிகளையும் கொண்டிருத்தல் வேண்டும்:-
(a) கற்பித்தல் மற்றும் பிற கல்வித் திட்டங்கள் மீது பொதுவான ஆளுகை
அதிகாரத்தைச் செலுத்தி, அதன் தரங்களைப் பேணுதலும், உயர்த்துதலும்;
(b) ஒழுங்குமுறை விதிகளைச் செய்தல்; அவற்றைத் திருத்துதல் அல்லது
நீக்கம் செய்தல்;
(c)(i) பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் மற்றும்
அனுமதிக்கப்படவிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாக;
41(ii) பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் பிற கல்விச் சிறப்புப் பட்டங்கள்,
ஆகியவற்றுக்கான பாடப் பிரிவு தொடர்பாக;
(iii) தேர்வுகளை நடத்துதல், கல்வித் தரங்களைப் பேணுதல் மற்றும்
உயர்த்துதல் தொடர்பாக;
(iv) பிற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் குழுமங்களின் சமமான பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் சான்றிதழ்களை வகுத்துரைத்தல் தொடர்பாக;
(v) மாணவர் செயல்திறனை மதிப்பீடு செய்தல், சீர்தூக்கிப் பார்த்தல் மற்றும்
தரப்படுத்துதல் தொடர்பாக;
(d) நூலகங்களைக் கட்டுப்பாடு செய்து பேணுதல் உள்ளிட்ட அனைத்து கல்வி
சார்ந்த பொருள்களிலும், ஆட்சிக் குழுவிற்கு அறிவுரை கூறுதல்;
(e) துணைப்பேராசிரியர், இணைப்பேராசிரியர், பேராசிரியர், பதவிகளுடன் ஆய்வு ஆசிரியர் உள்ளடங்களான பிற ஆசிரியப் பதவிகளை நிறுவுவதற்கும், அப்பதவிகளுக்குரிய கடமைகள் மற்றும் ஊதியங்கள் குறித்து ஆட்சிக்குழுவுக்கு பரிந்துரை செய்தல்;
(f) கற்பித்தல் மற்றும் ஆய்வுத் துறைகளை அமைக்கவும், மாற்றியமைக்கவுமான
திட்டங்களை உருவாக்குதல், மாற்றியமைத்தல், திருத்தியமைத்தல்;
(g) முதுநிலைக் கல்விக் கற்பித்தல் மற்றும் ஆய்வு குறித்து ஆட்சிக்குழுவுக்கு
பரிந்துரைகளைச் செய்தல்;
(h) ஆசிரியர்களுக்காக வகுத்துரைக்கப்பட வேண்டிய கல்வித் தகுதிகள் குறித்து
ஆட்சிக் குழுவுக்கு பரிந்துரைகளைச் செய்தல்;
(i) கெளரவ பட்டங்கள் மற்றும் இதர சிறப்பு பட்டங்கள் வழங்குவது குறித்து
ஆட்சிக் குழுவுக்கு பரிந்துரை செய்தல்;
(j) விதிகள், ஒழுங்கு விதிமுறைகள், பாடத்திட்டம் வகுத்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகள், புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்தல், இருக்கின்ற பாடங்களை மாற்றியமைத்தல் ஆகியவை குறித்த பாடக்குழுவின் கருத்துருக்களை மறு ஆய்வு செய்து செயல்படுத்துதல்;
(k) பட்டதாரி உதவித் தொகைகள் மற்றும் படிப்பு உதவித் தொகைகள் ஆகியவை
நிறுவுவது குறித்து ஆட்சிக்குழுவிற்கு பரிந்துரை செய்தல்;
(l) தொழில் நிறுவனங்களும் அரசுப்பணி தருநர்களும் ஒருபுறமும் மறுபக்கத்தில் பல்கலைக்கழகத்திற்கும் இடையே கூட்டு முயற்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆட்சிக் குழுவிற்கு பரிந்துரை செய்தல்;
(m) துணைவேந்தருக்கோ அல்லது கல்வி மன்றத்தின் ஏதேனும் ஒரு குழுவிற்கோ
அதன் அதிகாரங்களில் எதனையும் ஒப்படைவு செய்தல்; மற்றும்
(n) ஒவ்வொரு துறைக்கும் தேவையான இட வசதி, கருவிகள், சாதனங்கள், நூலகம் பேணுகை மேலும் பிற இயற்பொருள் சார்ந்த வசதிகள் குறித்த தரத்தினை மதிப்பீடு செய்து பரிந்துரைத்தல்.
(3) இச்சட்டத்தின் பிற வகைமுறைகளுக்குட்பட்டு, மறு ஆய்வு செய்யும் திறன் கொண்ட குழு என்ற வகையில் கல்விமன்றம் பின்வரும் அதிகாரங்களையும், செயற் பணிகளையும் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
(a) பல்கலைக்கழகத்தின் விரிவான கொள்கைகளையும் செயல்பாடுகளையும் அவ்வப்போது மறு ஆய்வு செய்து பல்கலைக்கழக முன்னேற்றம், மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குதல்;
42(b) ஏதாவது பொருள் குறித்து பல்கலைக்கழக வேந்தருக்கு ஆலோசனை
அளிக்கக் கோரும்போது அவ்வாறு ஆலோசனை அளித்தல்; மற்றும்
(c) நிலைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய பிற
அதிகாரங்களை செலுத்துதல் மற்றும் அலுவற்பணிகளை ஆற்றுதல்.
கல்விமன்றத்தின் கூட்டங்கள்.
26. (1) கல்விமன்றம் துணைவேந்தரால் நிர்ணயிக்கப்படும் தேதிகளில் ஆண்டு ஒவ்வொன்றிலும் குறைந்தது இருமுறையாவது கூடுதல்வேண்டும். அவற்றில் ஒன்று ஆண்டுக் கூட்டமென வழங்கப்படுதல் வேண்டும். கல்விமன்றமானது அது, அவ்வப்போது தீர்மானிக்கக்கூடிய அத்தகைய பிற காலங்களிலும்கூட கூடலாம்.
(2) கல்விமன்றக் கூட்டமொன்றுக்குத் தேவைப்படக்கூடிய கோரெண் என்பது, கல்விமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றிலொரு பங்காக இருத்தல் வேண்டும்.
வரம்புரையாக அத்தகைய கோரெண் இப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பிற்கோ அல்லது பட்டங்கள் விருதுகள் பட்டயங்கள் அல்லது பிற கல்விச் சிறப்புகளை வழங்கும் நோக்கத்திற்காக நடத்தப்படும் கல்விமன்றக் கூட்டமொன்றிற்கோ தேவையாக இருத்தல் கூடாது.
(3) துணைவேந்தர் பொருத்தமென்று தாம் கருதும் போதெல்லாம், கல்விமன்றத்தின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் நூற்றுக்கு ஐம்பது விழுக்காட்டிற்கு குறையாத உறுப்பினர்களால் கையொப்பமிட்ட எழுத்துருவிலான கோரிக்கை ஒன்றின்பேரில், கல்விமன்றத்தின் சிறப்பு கூட்டமொன்றைக் கூட்டலாம்.
நிதிக்குழு.
27. (1) நிதிக்குழு, பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்,
அதாவது:-
a) துணைவேந்தர்;
b) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
c) உயர்கல்வித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
d) ஆட்சிக் குழுவினால் தன்னுடைய உறுப்பினர்களுக்கிடையே இருந்து நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்களில் ஒருவர் பேராசிரியராகவும், ஒருவர் வேந்தரால் ஆட்சிக்குழுவிற்கு பெயர்குறித்து நியமிக்கப்படுபவராகவும் இருத்தல் வேண்டும்.
(2) காரணங்கள் எதற்காகவும் நிதித்துறையின் அரசுச் செயலாளர் அல்லது உயர்கல்வித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுக் செயலாளரானவர், நிதிக்குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்ள இயலவில்லையானால் அவர் அரசின் துணைச் செயலாளரின் படிநிலைக்குக் குறையாத தன்னுடைய துறையின் அலுவலர் எவரையும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அனுப்பி வைக்கலாம். அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட அலுவலர் கூட்டத்தின் கலந்துரையாடலில் பங்கெடுத்துக்கொள்ளும் உரிமை கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் வாக்களிக்கும் உரிமை கொண்டிருத்தல் வேண்டும்.
(3) நிதிக்குழுவிற்குத் துணைவேந்தர், பதவி வழித்தலைவராகவும் நிதி
அலுவலர் பதவிவழிச் செயலாளராகவும் இருந்துவருதல் வேண்டும்;
(4) பதவிவழி உறுப்பினர்கள் தவிர, நிதிக்குழுவின் மற்ற அனைத்து
உறுப்பினர்களும், மூன்றாண்டு காலஅளவிற்குப் பதவி வகித்தல் வேண்டும்;
(5) நிதிக்குழுவானது, கணக்குகளை ஆய்வு செய்வதற்கும் செலவினத்திற்காக கருத்துருக்களைக் கூர்ந்தாய்வு செய்வதற்குமென ஒவ்வோர் ஆண்டிலும் குறைந்தது இருமுறையாவது கூடுதல் வேண்டும்;
(6) நிதி அலுவலரால் தயாரிக்கப்பட்ட பல்கலைக்கழக ஆண்டுக் கணக்குகள், பரிசீலனைக்காகவும் கருத்துரைகளுக்காகவும் நிதிக்குழுவின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்; அதன்பின்னர் ஒப்புதலளிப்புக்காக ஆட்சிக்குழுவிற்கு பணிந்தனுப்புதல் வேண்டும்;
43(7) நிதிக்குழுவானது, ஆக்கப்பணிகளின் நேர்வில், கடன்களின் வருவாய் உள்ளடங்கலான இப்பல்கலைக்கழகத்தின் வருமானம் மற்றும் வள ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், ஆண்டிற்கான மொத்த தொடர் செலவினம், மொத்த தொடராச் செலவினம் ஆகியவற்றின் வரம்புகளைப் பரிந்துரைத்தல் வேண்டும்;
(8) நிதிக்குழுவானது,-
(a) அவ்வப்போது பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமையை மறு ஆய்வு
செய்தல்;
(b) ஆண்டு நிதி மதிப்பீடுகளில் வகைமுறை எதுவும் செய்யப்பட்டிராத முதலீடு அல்லது செலவினத்தை உள்ளடக்கியுள்ள, அல்லது ஆண்டு நிதிமதிப்பீடுகளில் வகை செய்யப்பட்டுள்ள தொகைக்கும் மிகையாக உள்ள செலவினத்தை உள்ளடக்குகிற, கருத்துரு ஒவ்வொன்றின் பேரிலும், ஆட்சிக்குழுவுக்குப் பரிந்துரை செய்தல்;
(c) பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் கணக்குகளை வைத்து பேணி வருவதற்கான முறைகளையும், நடைமுறைகளையும் படிவங்களையும் வகுத்துரைத்தல்;
(d) பல்கலைக்கழகத்தின் நிதிகள் தொடர்பான அனைத்துப்
பொருட்பாடுகளின்பேரிலும், ஆட்சிக் குழுவிற்குப் பரிந்துரை செய்தல்; மற்றும்
(e) வகுத்துரைக்ககூடிய பிற செயற் பணிகளைப் புரிந்துவருதல் வேண்டும்.
(9) நிதி அலுவலரால் தயாரிக்கப்பட்ட பல்கலைக்கழக நிதி மதிப்பீடுகள் பரிசீலனைக்காகவும் கருத்துரைகளுக்காகவும் நிதிக்குழுவின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்; நிதிக்குழுவினால் மாற்றியமைக்கப்பட்ட அவ்வாறான மேற்சொன்ன மதிப்பீடுகள், அதற்குப் பின்னர், பரிசீலனைக்காக ஆட்சிக்குழுவின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும். ஆட்சிக்குழுவானது நிதிக்குழுவினால் செய்யப்பட்ட மாறுதல்களை ஏற்றுக் கொள்ளலாம்.
திட்டமிடும் குழு.
28. (1) இப்பல்கலைக்கழகத்திற்கென திட்டமிடும் குழு ஒன்று அமைக்கப்படுதல் வேண்டும்; அது பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சி குறித்து பொதுவாக ஆலோசனை நல்குதல்; மற்றும் பல்கலைக்கழகக் கல்வித்தரம் மற்றும் ஆராய்ச்சியை ஆய்வு செய்துவருதல் வேண்டும்;
(2) திட்டமிடும்குழு, பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்,
அதாவது:-
(a) துணைவேந்தரானவர் அக்குழுவின் பதவி வழித் தலைவராக
இருத்தல் வேண்டும்; மற்றும்
(b) உயர்கல்வி தரத்தில் எட்டு நபர்களுக்கு மேற்படாத நபர்கள்;
(3) திட்டமிடும் குழுவின் உறுப்பினர்கள் துணைவேந்தரின் பரிந்துரையின்பேரில் வேந்தரால் நியமிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் வேந்தர் தீர்மானிக்கக்கூடிய அத்தகைய கால அளவுக்குப் பதவி வகித்தல் வேண்டும்;
(4) திட்டமிடும் குழுவானது, இந்தச்சட்டத்தினால் அதனிடம் உற்றமைந்துள்ள பிற அதிகாரங்கள் அனைத்தினோடும்கூட, கல்வி அலுவல்கள் எதனையும் குறித்து ஆட்சிக்குழுவிற்கும், கல்விமன்றத்திற்கும் ஆலோசனை கூறுவதற்கும் உரிமை கொண்டிருத்தல் வேண்டும்.
பாடக் குழுக்கள்.
29. கற்பிக்கின்ற துறை ஒவ்வொன்றுடனும் இணைக்கப்பட்ட பாடக்குழுக்கள் இருத்தல் வேண்டும். பாடக்குழுக்களின் அமைப்பும் அதிகாரங்களும்; வகுத்துரைக்கபடக்கூடியனவாக இருத்தல் வேண்டும்;
புலங்களை
அமைத்துரு வாக்குதலும் 30. (1) பல்கலைக்கழகமானது நோக்கங்கள் மற்றும் அதனுடைய அலுவற் பணிகளைக் கருத்தில் கொண்டு நிலைவிதிகளால் வகுத்துரைக்கப்படகூடிய அத்தகைய புலங்களை அமைத்துருவாக்கலாம்.
செயற் பணிகளும்.
44(2) புலங்களின் அமைத்துருவாக்கவும் அலுவற்பணிகளும், நிலைமுறை
விதிகளின் மூலம் வகுத்துரைக்கப்படக்கூடியனவாக இருத்தல் வேண்டும்.
(3) புலம் ஒவ்வொன்றும், நிலை விதிகளின் மூலமாக வகுத்துரைக்கப்படக்கூடிய
கற்பிக்கின்ற துறைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
பிற அதிகார
31. பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளென நிலைவிதிகளின் மூலம் விளம்பப்படக்கூடிய பிற அமைப்புகளைஅமைத்துருவாக்குதலும் அவற்றின் அதிகாரங்களும், வகுத்துரைக்கப்படக் கூடியனவாக இருத்தல் வேண்டும்.
அமைப்புகளை அமைத்துரு வாக்குதல்.
அத்தியாயம் - V.
நிலை விதிகள், துணைமுறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள்.
நிலை விதிகள். 32. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு, நிலைவிதிகள், பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்குமோ அல்லது அவற்றுள் ஏதொன்றுக்குமோ, வகை செய்யலாம்; அதாவது:-
(i) பட்டங்களை வழங்குவதற்காக, பட்டமளிப்பு விழாவை நடத்துதல்;
(ii) மதிப்புறு பட்டங்களையும் கல்விச் சிறப்புப் பட்டங்களையும் வழங்குதல்;
(iii) இப்பல்கலைக்கழக அதிகார அமைப்புகளின் அமைப்பு, அதிகாரங்கள்
மற்றும் செயற்பணிகள்;
(iv) அதிகார அமைப்புகளின் உறுப்பினர்களிடையே எழும் காலியிடங்களை
நிரப்புகின்ற முறை;
(v) அதிகார அமைப்புகளின் மற்றும் அவற்றில் குழுக்களின்
உறுப்பினர்களுக்குச் செலுத்தப்படத்தக்க படித் தொகைகள்;
(vi) அதிகார அமைப்புகளின் கூட்டங்களில் அலுவல் நடத்துவதற்கான கோரண் உள்ளடங்களாக; அத்தகைய கூட்டங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்;
(vii) அதிகார அமைப்புகளின் ஆணைகள் அல்லது முடிவுகளுக்கு
உறுதியொப்பமளித்தல்;
(viii) இப்பல்கலைக் கழகத்திலும், பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளிலும்
கற்பிக்கின்ற துறைகளை உருவாக்குதல்;
(ix) வேந்தர் மற்றும் இணைவேந்தர் அல்லாத இப்பல்கலைக்கழகத்தின் பிற அலுவலர்களின் பதவிக்கால அளவும் அவர்களின் நியமன முறைகளும் மற்றும் பணி பற்றிய வரைக்கட்டுகளும்;
(x) இப்பல்கலைக்கழகத்தினால் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் மற்றும்
ஏனையோரின் தகுதிப்பாடுகள்;
(xi) இப்பல்கலைக்கழகத்தினால் பணியமர்த்தப்படும் ஆசிரியர்களையும் ஏனையோரையும் வகைப்படுத்துதல், அவர்களின் நியமனமுறை மற்றும் அவர்களின் பணி பற்றிய வரையறைகளையும் வரைக்கட்டுக்களையும் தீர்மானித்தல்;
(xii) இப்பல்கலைக்கழகத்தினால் பணியமர்த்தப்படும் அலுவலர்கள், ஆசிரியர்களையும் மற்றும் ஏனையோரின் நன்மைக்காக ஓய்வூதியம், பணிக்கொடை, காப்பீடு அல்லது வருங்கால வைப்பு நிதியத்தை ஏற்படுத்துதல்;
(xiii) பட்டதாரி உதவித் தொகைகள், பயண உதவித் தொகைகள், படிப்புதவித் தொகைகள், மாணவ உதவித் தொகைகள், உதவிச் சம்பளங்கள், ஆதரவுப் படிப்புத் தொகைகள், பதக்கங்கள், பரிசுகள் ஆகியவற்றை ஏற்படுத்துதலும் அவற்றை அளிப்பதற்கான வரைக்கட்டுகளும்;
(xiv) கூடங்கள், மாணவர் விடுதிகள், ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றை
நிறுவியமைத்தலும், பேணி வருதலும்;
45(xv) கூடங்களிலும், மாணவர் விடுதிகளிலும், இப்பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருப்பதற்கான வரைகட்டுகளும் அவ்வாறு தங்கியிருப்பதற்கான கட்டணங்களையும் பிற தொகைகளையும் விதித்தலும்;
(xvi) பட்டதாரிகளைப் பதிவு செய்வதற்கான வரைக் கட்டுகளும் மற்றும்
அதற்கான பதிவேட்டினை பேணி வருதலும்
(xvii) ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரிகளுக்கு ஏற்பிசைவு அளிப்பதற்கான மற்றும் இப்பல்கலைக்கழகத்தோடு கல்லூரிகளை இணைப்பதற்கான வரைக்கட்டுகள்;
(xviii) கல்லூரியொன்று தன்னாட்சிக் கல்லூரியாக பெயர் குறித்தழைக்கப்படுதலோ அல்லது அத்தகைய கல்லூரியை அவ்வாறு பெயர் குறித்து அழைக்கப்படுதலை நீக்குதலோ என்ற முறையிலும் மற்றும் எந்த வரைக்கட்டுக்களுக்கும் உட்பட்டும் செய்யப்பட வேண்டும் என்பதும் மற்றும் கல்விக்குழு, பணியாளர்கள்குழு, பாடக்குழுக்கள், தேர்வாளர் குழுக்கள் ஆகியவற்றை அமைத்துருவாக்குதல் அல்லது மாற்றி அமைத்துருவாக்குதல், அவற்றின் அதிகாரங்கள், பணிகள் ஆகியவை உள்ளடங்கலான தன்னாட்சிக் கல்லூரிகளை நிருவகித்தல் தொடர்பான பொருட்பாடுகள்
(xix) இப்பல்கலைக்கழக அதிகார அமைப்புகளிடம் அல்லது அலுவலர்களிடம்
உள்ளமைந்துள்ள அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்; மற்றும்
(xx) நிலைவிதிகளின் மூலம் வகுத்துரைக்கப்பட வேண்டுமெனக்
கோரப்படுகின்ற அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற பொருட்பாடு எதுவும்;
நிலை விதிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன.
33. (1) ஆட்சிக்குழு, அவ்வப்போது, நிலைவிதிகளைச் செய்யலாம் மற்றும் இந்தப்பிரிவில் இதன் பின்பு வகை செய்யப்பட்டுள்ள முறையில் அந்நிலை விதிகளைத் திருத்தலாம் அல்லது நீக்கலாம்.
(2) கல்விமன்றம், ஆட்சிக் குழுவிற்கு, அவ்வாட்சிக்குழுவால் நிறைவேற்றப்படவேண்டிய நிலைவிதி எதனின் அல்லது நிலைவிதியொன்றின் திருத்தம் அல்லது நீக்கம் எதனின் வரைவையும், முன்மொழியலாம், மற்றும் அத்தகைய வரைவானது ஆட்சிக்குழுவினால் அதன் அடுத்த கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக, கல்விமன்றம், கல்விஅலுவல்பாடுகள் தவிர பிற பொருட்பாடுகள் தொடர்பான நிலைவிதி எதனின் அல்லது நிலைவிதி ஒன்றின் திருத்தம் அல்லது நீக்கம் எதனின் வரைவினை முன்மொழிதலாகாது.
(3) ஆட்சிக்குழு, (2)-ஆம் உட்பிரிவின்படி கல்விமன்றத்தினால் முன்மொழியப்பட்ட வரைவைப் பரிசீலனை செய்யலாம்; மற்றும் அவ்வரைவை நிறைவேற்றலாம் அல்லது ஏற்க மறுத்துவிடலாம் அல்லது திருத்தங்களுடனோ இல்லாமலோ அதை மறுபரிசீலனைக்காகக் கல்விமன்றத்திற்கு திருப்பியனுப்பலாம்;
(4) (a) ஆட்சிக் குழுவின் உறுப்பினர் எவரும் நிலைவிதியொன்றின் அல்லது நிலைவிதியொன்றின் திருத்தம் அல்லது அதன் நீக்கம் எதனின் வரைவையும் ஆட்சிக்குழுவிற்கு முன்மொழியலாம்; மற்றும் ஆட்சிக்குழுவானது அவ்வரைவை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது அது கல்விமன்றத்தின் அதிகாரவரம்பு எல்லைக்குள் வாராத பொருட்பாடு ஒன்றைப் பற்றியதாக இருக்குமானால், அதை ஏற்க மறுத்துவிடலாம்.
(b) அத்தகைய வரைவு, கல்விமன்றத்தின் அதிகார வரம்பு எல்லைக்குள் இருக்கிற பொருள் ஒன்றைப்பற்றியதாக இருக்கிற நேர்வில், ஆட்சிக்குழு, அதைப் பரிசீலனை செய்வதற்காகக் கல்விமன்றத்திற்குக் குறித்தனுப்புதல் வேண்டும்; அம்மன்றமானது அவ்வரைவிற்குத் தான் ஒப்புதலளிக்கவில்லை என்று ஆட்சிக்குழுவிற்கு அறிவிக்கலாம்; அல்லது கல்விமன்றம் ஒப்புதலளிக்கக்கூடிய வடிவில் ஆட்சிக் குழுவிற்கு அவ்வரைவைப் பணிந்தனுப்பலாம்; மேலும், அவ்வாட்சிக் குழு அவ்வரைவைத் திருத்தங்களுடனோ, இல்லாமலோ நிறைவேற்றலாம் அல்லது அதை ஏற்க மறுத்துவிடலாம்.
46(5) ஆட்சிக்குழுவினால் நிறைவேற்றப்பட்ட நிலைவிதி ஒன்று அல்லது நிலைவிதியொன்றின் திருத்தம் அல்லது நீக்கமானது, வேந்தருக்குப் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும். அவர் அதற்கு இசைவு அளிக்கலாம் அல்லது தாம் இசைவு அளிப்பதை மறுத்து நிறுத்தி வைக்கலாம். ஆட்சிக் குழுவினால் நிறைவேற்றப்பட்ட நிலைவிதி ஒன்று அல்லது நிலைவிதியொன்றின் திருத்தம் அல்லது நீக்கமானது, வேந்தரால் அதற்கு இசைவளிக்கப்படுகிற வரையிலும், செல்லுந்தன்மையைப் பெறாது இருத்தல் வேண்டும்.
துணைமுறை விதிகள்.
34. இந்தச் சட்டத்தின் மற்றும் நிலை விதிகளின் வகை முறைகளுக்குட்பட்டு, துணைமுறை விதிகள், பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்கும் அல்லது அவற்றில் எதற்கேனும் வகை செய்யலாம் அதாவது:-
(i) இப்பல்கலைக்கழகத்திற்கும் அதனோடு இணைக்கப்பட்ட மற்றும் ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரிகளுக்கும் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கும் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளுதல்;
(ii) இப்பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பட்டங்கள், சிறப்பு பட்டங்கள், பட்டயங்கள், பிற கல்விச் சிறப்புப் பட்டங்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கு வழி செய்கின்ற குறித்தகாலப் படிப்புப் பிரிவுகள்;
(iii) பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தங்குமிடம் குறித்த வரைக்கட்டுகள் மற்றும் பல்கலைக்கழகத்தால் பேணிவரப்படும் மாணவர் விடுதிகளில் தங்குமிடத்திற்கான கட்டணங்களை விதித்தல்;
(iv) பல்கலைக்கழகத்தால் பேணிவரப்படாத விடுதிகளின்
ஏற்பிசைவளிப்பதற்கான வரைக்கட்டுகள்;
(v) எந்த வரைக்கட்டுகளின்படி, இப்பல்கலைக்கழகப் பட்டங்கள், சிறப்பு பட்டங்கள், பட்டயங்கள், பிற கல்விச் சிறப்புப் பட்டங்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கு வழி செய்கின்ற குறித்த காலப் பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுதல் வேண்டும் என்பதும்;
(vi) இப்பல்கலைக்கழகத்தின் தேர்வுகளை நடத்துதலும் எந்த வரைக்கட்டுகளின் பேரில் அத்தகைய தேர்வுகளுக்கு மாணவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும்;
(vii) தேர்வுகளுக்கு மாணவர்களை ஏற்றுக் கொள்வது தொடர்பாக எந்த
முறையில் விலக்கு அளிக்கப்படலாம் என்பது:-
(viii) தேர்வு அமைப்புகளின் மற்றும் தேர்வாளர்களின் வரைக்கட்டுகள்
மற்றும் நியமன முறை; அவர்களுடைய கடமைகள்;
(ix) இப்பல்கலைக்கழக மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணி வருதல்;
(x) குறித்த காலப் பாடப் பிரிவு, ஆராய்ச்சி பரிசோதனை மற்றும் நடைமுறைப்பயிற்சி ஆகியவற்றிற்காகவும் இப்பல்கலைக்கழகத்தின் பட்டங்கள், சிறப்பு பட்டங்கள், பட்டயங்கள், பிற கல்விச் சிறப்புகள் ஆகியவற்றிற்கான தேர்வுகளுக்கு ஏற்றுக் கொள்வதற்காகவும் விதிக்கப்பட வேண்டிய கட்டணங்கள்;
(xi) பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் ஊதியங்கள்;
(xii) எந்த வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு, இதன் பின்பு நிரந்தரமாகப் பணியமர்த்தப்படுபவர்கள் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்ட மற்றும் ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரிகளிலும் மாணவர் விடுதிகளிலும் கற்பிப்பதற்கு தகுதியுடையவரென ஏற்பிசைவு அளிக்கப்படலாகும் என்பது மற்றும்
(xiii) இந்தச் சட்டத்தினாலோ, நிலைவிதிகளினாலோ, செய்யப்பட வேண்டியதாகவுள்ள அல்லது துணைமுறை விதி ஒன்றினால் வகுத்துரைக்கப்படக் கூடிய பிற பொருட்பாடு எதுவும்.
4735. (1) இந்தப் பிரிவில் பிறவாறு வகை செய்யப்பட்டவாறு தவிர, துணைமுறை விதிகளை கல்விமன்றத்தினால் துணை முறை விதிகள் செய்யப்படுதல் வேண்டும்.
எவ்வாறு செய்யப் படுகின்றன.
(2) கல்வி மன்றத்தால் செய்யப்பட்ட துணைமுறை விதிகள் அனைத்தும், கல்வி மன்றத்தால் நிர்ணயிக்கப்படக்கூடிய அத்தகைய தேதியிலிருந்து செயல் விளைவு கொள்ளுதல் வேண்டும்; ஆனால் அவ்வாறு செய்யப்பட்ட துணைமுறைவிதி ஒவ்வொன்றும், அது செய்யப்பட்டதற்குப் பின்னர் கூடிய விரைவில் ஆட்சிக் குழுவிற்கு பணிந்தனுப்பப்பட வேண்டும்; மற்றும் ஆட்சிக்குழு தனது அடுத்தக் கூட்டத்தில் அதனை பரிசீலனை செய்தல் வேண்டும்.
(3) ஆட்சிக்குழுவானது, அத்தகைய கூட்டத்தில் வருகை தந்திருக்கும் மூன்றில் இரண்டு பங்குங்கு குறையாத பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால், அத்தகைய துணைமுறைவிதியை மாற்றியமைக்கவோ, அல்லது நீக்கவோ அதிகாரம் கொண்டதாகும் மற்றும் அவ்வாறான துணைமுறைவிதி, அவ்வாறான தீர்மானத்தின் தேதியிலிருந்து அவ்வாறு மாற்றியமைக்கப்பட்டவாறான வடிவத்தில் செயல்விளைவு கொள்ளுதல் வேண்டும், அல்லது நேர்வுக்கேற்ப அத்தகைய அவ்வாறு செயல்விளைவு கொள்வது அற்றுப்போதல் வேண்டும்.
36. (1) கல்வி மன்றமானது, இந்தச் சட்டம், நிலைவிதிகள் மற்றும் துணைமுறைவிதிகளுக்கிணங்க, அவற்றின் கீழ் அதற்கு குறித்தளிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்வதற்கு ஒழுங்கு முறை விதிகளை செய்யலாம்.
ஒழுங்குமுறை விதிகள் எவ்வாறு செய்யப் படுகின்றன.
(2) அத்தகைய ஒழுங்கு முறை விதிகள் அனைத்தும், கல்விமன்றத்தால் குறிக்கக்கூடிய அத்தகையத் தேதியிலிருந்து செயல்திறம் பெறும். ஆனால் அவ்வாறு செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதி ஒவ்வொன்றும் கூடியவிரைவில் அதனுடைய அடுத்துவரும் கூட்டத்தில் அதனுடைய பரிசீலனைக்காக ஆட்சிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
அத்தியாயம் - VI
மாணவர்களின் சேர்க்கை மற்றும் தங்குமிடம்.
பல்கலைக்கழக பாடப் பிரிவுகளுக்கான 37. (1) பல்கலைக்கழகத்தின் பட்டங்கள், சிறப்புப் பட்டங்கள் அல்லது பட்டயங்களின் தேர்வுகளுக்கான அனுமதிக்காக இப்பல்கலைக்கழகத்திலுள்ள குறித்த கால படிப்பு பிரிவு ஒன்றிற்கு நபரெவரும்:-
சேர்க்கை.
(a) அதற்கென வகுத்துரைக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி
பெற்றிருந்தாலன்றி ; மற்றும்
(b) இப்பல்கலைக்கழகத்தால் வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய பிற கல்வி வரைக்கட்டுகளை நிறைவேற்றியிருந்தாலன்றி அனுமதிக்கப்படுதல் கூடாது.
(2) பல்கலைக்கழகத் தேர்வு ஒன்றிற்காக நபர் ஒவ்வொருவரும் கல்வி மன்றப் பரிந்துரையின்பேரில் செய்யப்பட்ட ஆட்சிக்குழுவின் தனி ஆணை ஒன்றினால் இந்த உட்பிரிவின் வகைமுறைகளிலிருந்து அவர் விலளக்களிக்கப்பட்டிருந்தாலன்றி பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் ஒருவராக பதிவு செய்யப்படுதல் வேண்டும். அத்தகைய விலக்களிப்பு எதுவும் ஆட்சிக்குழு பொருத்தமென கருதலாகிறவாறான அத்தகைய வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு செய்யப்படலாம்.
(3) (2)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாணவர்களும் பட்டமொன்றுக்கான குறித்த காலப் பாடப் பிரிவு அல்லாத பிற குறித்த காலப் பாடப் பிரிவுகளுக்கு வகுத்துரைக்கப்படும் வரைக்கட்டுகளுக்கிணங்க சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களும், பல்கலைக்கழகத்தின் கல்லூரி சாரா மாணவர்களாக இருத்தல் வேண்டும்.
48பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு அனுமதித்தல்.
38. தேர்வு எழுதுபவர் எவரும் பல்கலைக்கழகக் கல்லூரி, அல்லது ஆய்வுக்கூடமொன்றின் அல்லது இணைக்கப்பட்ட கல்லூரி அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரியொன்றின் உறுப்பினரொருவராக அவர் பதிவுசெய்யப்பட்டிருந்தாலன்றி மற்றும் அதற்கான ஒழுங்குமுறை விதிகளின்படி தேவைப்படும் வருகைப் பதிவுகுறித்த தேவைப்பாடுகளை நிறைவு செய்திருந்தாலன்றியும், அல்லது வகுத்துரைக்கப்பட்ட ஒழுங்கு முறை விதிகளின்படி செய்யப்பட்ட கல்விமன்றத்தின் பரிந்துரையின் பேரில் பிறப்பிக்கப்பட்ட ஆட்சிக் குழுவின் ஆணை ஒன்றின் மூலமாக, அவ்வாறு பதிவுசெய்யப்படுவது அல்லது வருகைப்பதிவு குறித்த அல்லது இரண்டையும் குறித்த தேவைப்பாடுகளிலிருந்து அவருக்கு விலக்களிக்கப்பட்டிருந்தாலன்றி, பல்கலைக்கழகத் தேர்வு எதற்கும் ஏற்றுக்கொள்ளப்படுதல் கூடாது. இந்தப் பிரிவின்படி வழங்கப்படும் விலக்களிப்புகளானவை, ஆட்சிக்குழு பொருத்தமென கருதக்கூடிய வரைக்கட்டுகளுக்கு உட்பட்டவையாயிருத்தல் வேண்டும்.
பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான வருகைப் பதிவு குறித்த தகுதி.
39. இப்பல்கலைக்கழகத்தினால் நிறுவப்பெற்ற மற்றும் பேணப்பட்ட, அதனுடன் இணைக்கப்பட்ட அல்லது அதனால் ஒப்புதல் அளிக்கப்பட்டதல்லாத பிற கல்லூரி எதிலும் கல்வி கற்பிக்கப்படுவதன் போதான வருகைப் பதிவு எதுவும், பல்கலைக்கழகத் தேர்வு எதற்கும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்குத் தகுதியுடையதாக ஆக்காது.
தங்குமிடமும் மாணவர் விடுதியும்.
40. இப்பல்கலைக்கழகத்தின், கல்லூரி சாரா மாணவரில்லாத பிற மாணவர், ஒவ்வொருவரும், மாணவர் விடுதியொன்றிலோ அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய பிற வரைக்கட்டுகளின்படியோ தங்குமாறு கோரப்படுதல் வேண்டும்.
அத்தியாயம் - VII.
பல்கலைக்கழக நிதியங்கள்.
41. இப்பல்கலைக்கழகம், பொது நிதியம் ஒன்றைப் பெற்றிருக்கும், அந்நிதியத்தில்,
பொது நிதியங்கள்.
(a) கட்டணங்கள், மானியங்கள், நன்கொடைகள், கொடைகள் ஆகியவை
எவையேனும் இருப்பின் அவற்றிலிருந்து பெறப்படும் அதன் வருமானத்தை;
(b) மைய அரசு அல்லது மாநில அரசு, பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அதுபோன்ற அதிகார அமைப்பு, உள்ளாட்சி அதிகார அமைப்பு எதுவும் அல்லது அரசுக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழுள்ள கூட்டு நிறுவனம் எதனாலும் வழங்கப்பட்ட பங்களிப்பு அல்லது மானியம் எதையும்;
(c) நிலைக் கொடைகளையும் பிற வரவுகளையும் வரவு வைத்தல் வேண்டும்.
பிற நிதியங்கள். 42. பல்கலைக்கழகம் நிலைவிதிகளினால் வகுத்துரைக்கப்படலாகும் பிற
நிதியங்களைக் கொண்டிருக்கலாம்.
நிதியங்களை
43. பல்கலைக்கழக நிதியங்களும் அனைத்துப் பணங்களும்
வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில் மேலாண்மை செய்யப்படுதல் வேண்டும்.
மேலாண்மை செய்தல்.
ஆண்டறிக்கை. 44. பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையானது ஆட்சிக் குழுவால் தயாரிக்கப்படுதல் வேண்டும், மற்றும் அது வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய தேதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ கல்வி மன்றத்திற்கு பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்; மற்றும் அது கல்வி மன்றத்தால் அதன் அடுத்த ஆண்டு கூட்டத்தில் பரிசீலனைச் செய்யப்படுதல் வேண்டும். கல்வி மன்றமானது அதன்பேரில் தீர்மானங்களை நிறைவேற்றலாம். அதனை ஆட்சிக் குழுவிற்குத் தெரியப்படுத்தலாம்; மற்றும் அது அதற்கிணங்கியவகையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். ஆட்சிக் குழுவானது, அதனால் எடுக்கப்பட்ட நடவடிக்கையினை கல்வி மன்றத்திற்கு தெரிவித்தல் வேண்டும். ஆண்டு அறிக்கையின் படியொன்றும், அதன்பேரிலான தீர்மானம் ஏதேனும் இருப்பின் அதன் படி ஒன்றும் தகவலுக்காக அரசுக்கு பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்.
49ஆண்டுக் கணக்குகள்.
45. (1) இப்பல்கலைக்கழகத்தின் ஆண்டுக்கணக்குகள் அரசு பணிக்கக்கூடிய அத்தகைய ஆய்வுக்கும் தணிக்கைக்கும் உட்படுத்தப்படுதல் வேண்டும் மற்றும் ஆண்டுக் கணக்குகளின் மற்றும் தணிக்கை அறிக்கையின் நகலொன்று அரசுக்குப் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்.
(2) இப்பல்கலைக்கழகம், அத்தகைய தணிக்கையில் எழுப்பப்பட்ட மறுப்புரைகளைத் தீர்த்து வைத்தல் வேண்டும் மற்றும் அந்தத் தணிக்கை அறிக்கையின்பேரில் அரசினால் பிறப்பிக்கப்படக்கூடிய அத்தகைய அறிவுறுத்தல்களை நிறைவேற்றுதல் வேண்டும்.
(3) கணக்குகள், தணிக்கை செய்யப்பட்டவுடன் ஆட்சிக்குழுவால் வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய முறையில் வெளியிடப்படுதல் வேண்டும்; மற்றும் அதனுடைய நகல்களை கல்விமன்றத்திற்கு அதன் அடுத்தக் கூட்டத்தில் வைப்பதற்காகப் பணிந்தனுப்புவதோடு அவற்றை அத்தகைய வெளியீட்டிலிருந்து மூன்று மாதத்திற்குள் அரசுக்கு பணிந்தனுப்புதல் வேண்டும்.
(4) அரசு, ஆண்டுத் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளையும் ஆண்டு அறிக்கையும் அதன் கருத்துரைகளோடுகூட சட்டமன்றப் பேரவையின் முன்பு வைப்பதற்கு ஆவண செய்தல் வேண்டும்.
அத்தியாயம் - VIII.
பணி நிபந்தனைகள்.
ஓய்வூதியம், பணிக்கொடை முதலானவை.
46. (1) இப்பல்கலைக்கழகம், இப்பல்கலைக்கழகத்தால் பணியமர்த்தப்பட்டுள்ள தன் அலுவலர்கள், ஆசிரியர்கள், மற்ற நபர்கள், ஆகியோரின் நலனுக்காக, வகுத்துரைக்கப்படக்கூடிய முறையிலும் மற்றும் அத்தகைய வரைகட்டுகளுக்குட்பட்டும், தான் பொருத்தமெனக் கருதக்கூடிய அத்தகைய ஓய்வூதியம், பணிக்கொடை, காப்பீடு, வருங்கால வைப்பு நிதியம் ஆகியவற்றை ஏற்படுத்துதல் வேண்டும்.
மையச் சட்டம் XIX/1925.
(2) இப்பல்கலைக்கழகம் (1)ஆம் உட்பிரிவின்படி வருங்கால வைப்பு நிதியம் ஒன்றை அவ்வாறு ஏற்படுத்தியுள்ளவிடத்து, இப்பல்கலைக்கழகம் ஓர் உள்ளாட்சி அதிகார அமைப்பாகவும், அந்நிதியம் ஓர் அரசு வருங்கால வைப்பு நிதியமாகவும் இருந்தாற் போன்றே, 1925-ஆம் ஆண்டு வருங்கால வைப்பு நிதியங்கள் சட்டத்தின் வகைமுறைகள் அந்நிதியத்திற்குப் பொருந்துதல் வேண்டும் என்று அரசு விளம்பலாம்.
(3) இப்பல்கலைக்கழகம், நிதிக்குழுவை கலந்தாய்வு செய்து; தான் தீர்மானிக்கலாகும் முறையில் அவ்வருங்கால வைப்பு நிதியத் தொகையை முதலீடு செய்யலாம்.
பணி நிபந்தனைகள்.
47. இந்தச் சட்டத்தின் வகை முறைகளுக்குட்பட்டு, இப்பல்கலைக்கழகத்தில் பணியிலமர்த்தப்பட்டுள்ள அலுவலர்கள், ஆசிரியர்கள், மற்ற நபர்கள் ஆகியோரின் நியமனம், அவர்களை தெரிவு செய்வதற்கான நடைமுறை, அவர்களின் சம்பளம் மற்றும் படித் தொகைகள் மற்றும் பிற பணி நிபந்தனைகள் ஆகியன, வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.
விளக்கம்.- இந்த பிரிவின் நோக்கத்திற்காக, அலுவலர்கள் என்னும்
சொல்லானது வேந்தரையும், இணைவேந்தரையும் உள்ளடக்குதல் கூடாது.
தெரிவுக் குழுக்கள்.
48. (1) இப்பல்கலைக்கழகத்தினால் பேணி வரப்படும் கல்வி நிலையங்களின் உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர், நூலகர் மற்றும் இதர ஆசிரியர் பதவிகளுக்கு நியமனஞ் செய்வதற்காக ஆட்சிக் குழுவிற்குப் பரிந்துரைகளைச் செய்வதற்காகத் தெரிவுக் குழுக்கள் இருத்தல் வேண்டும்.
(2) (1)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு நியமனம் செய்வதற்கான தெரிவுக் குழுவானது, துணைவேந்தரையும், வேந்தரால் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவரையும், அரசால் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவரையும் வகுத்துரைக்கப் படக்கூடிய அத்தகைய பிற நபர்களையும் கொண்டிருத்தல் வேண்டும்;
50வரம்புரையாக, தெரிவுக் குழுவால் செய்யப்படும் அத்தகைய நியமனங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவினால் அல்லது அத்தகைய நியமனம் தொடர்பான பிற முகவாண்மைகளால் பிறப்பிக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு இணங்கிய வகையில் இருத்தல் வேண்டும்.
(3) துணைவேந்தர், தெரிவுக்குழுவின் கூட்டங்களுக்கு தலைமை வகிப்பார்.
(4) தெரிவுக்குழு ஒன்றின் கூட்டங்கள் துணைவேந்தரால் கூட்டப்படும்.
(5) பரிந்துரைகளைச் செய்வதில் தெரிவுக்குழுவினால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை என்னவென்று, துணை முறை விதிகளின் மூலம் விதிக்கப்படுதல் வேண்டும்.
(6) தெரிவுக்குழு ஒன்றினால் செய்யப்படும் பரிந்துரைகளை ஆட்சிக்குழு ஏற்றுக் கொள்வதற்கு இயலாதிருக்குமானால், அது தன் காரணங்களைப் பதிவு செய்து, இறுதி ஆணைகளுக்காக, அதை வேந்தருக்குப் பணிந்தனுப்புதல் வேண்டும்.
(7) தற்காலிகப் பதவிகளுக்கான நியமனங்கள், கீழே குறித்துக்
காட்டப்பட்டுள்ள முறையில் செய்யப்படுதல் வேண்டும்:-
(i) அத்தற்காலிகக் காலியிடமானது ஒரு கல்விக்காலத் தொடருக்கும் அதிகமானதொரு கால அளவிற்கானதாக இருக்குமானால், அது முன்சென்ற வகைமுறைகளில் குறித்துக் காட்டப்பட்டுள்ள நடைமுறைக்கிணங்கத் தெரிவுக் குழுவின் ஆலோசனையின் பேரில் நிரப்பப்படுதல் வேண்டும்;
வரம்புரையாக, துணைவேந்தர், பணி நலனை முன்னிட்டு அக்காலியிடத்தை நிரப்புவது தேவையாயிருக்கிறது என்று தெளிவுறக் காண்பாரானால் ()ைை-ஆம் உட்கூறில் குறிப்பிடப்படும் உள்ளமை தெரிவுக்குழு ஒன்றினால், ஒரு தற்காலிக அடிப்படையின் பேரில் ஆறு திங்களுக்கு மேற்படாத ஒரு கால அளவிற்கு அந்த நியமனம் செய்யப்படலாம்.
(ii) அத்தற்காலிக காலியிடமானது, ஓராண்டுக்கு குறைவானதொரு கால அளவுக்கானதாக இருக்குமானால், தொடர்புடைய புலத்தின் தலைவரையும், துறைத் தலைவரையும், துணைவேந்தரால் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவரையும் உள்ளடக்கிய உள்ளமை தெரிவுக் குழு ஒன்றின் பரிந்துரையின்பேரில், அத்தகைய காலி இடத்திற்கு நியமனம் செய்யப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக, ஒருவரே புலத்தலைவர் பதவியையும் மற்றும் துறைத்தலைவர் பதவியையும் சேர்த்து வகிப்பாரானால், அத்தெரிவுக் குழு துணைவேந்தரால் பெயர் குறிப்பிடப்பட்ட இருவரை உள்ளடக்கியதாக இருக்கலாம்;
மேலும் வரம்புரையாக, கற்பிக்கின்ற பதவிகளில் இறப்பினாலோ, பிற காரணம் எதனாலுமோ எதிர்பாராத தற்செயல் காலியிடங்கள் ஏற்படும் நேர்வில், புலத்தலைவர் தொடர்புடைய துறையின் தலைவரைக் கலந்தறிந்து ஒரு திங்களுக்குத் தற்காலிகப் பணி நியமனம் ஒன்றைச் செய்து, அத்தகைய நியமனம் குறித்துத் துணைவேந்தருக்கும் பதிவாளருக்கும் அறிவிக்கலாம்;
(iii) தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர் எவரும், இந்தச்ச்சட்டத்தின்படி நியமிக்கப்படுவதற்காக முறையான தெரிவுக்குழு ஒன்றினால் அவர் பரிந்துரைக்கப்படவில்லையானால், அவர் தற்காலிக அல்லது நேர்விற்கேற்ப, நிலையான நியமனத்திற்காக ஒரு உள்ளமை தெரிவுக் குழுவினாலோ அல்லது ஒரு முறையான தெரிவுக் குழுவினாலோ பின்னர் தெரிந்தெடுக்கப்பட்டாலன்றி, அத்தகைய தற்காலிக வேலை வாய்ப்பின்பேரில் பணியில் தொடர்ந்து இருத்தல் கூடாது.
துறைத்
49. (1) இப்பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் ஒரு பேராசிரியர் அல்லது இயக்குநரை தலைவராகக் கொண்டிருக்கும்: மற்றும் அவருடைய கடமைகளும் அலுவற்பணிகளும், நியமனத்திற்கான வரையறைகளும் வரைக்கட்டுகளும் துணைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்படுதல் வேண்டும்:
தலைவர்களின் பணியின் வரையறைகளும் வரைக்கட்டுகளும்.
51வரம்புரையாக, துறை எதிலேனும் ஒருவருக்கு மேற்பட்ட பேராசிரியர்கள் இருப்பார்களானால், அந்தத் துறையின் தலைவர், துணைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்பட்ட முறையில் நியமிக்கப்படுதல் வேண்டும்:
மேலும் வரம்புரையாக, பேராசிரியர் எவரும் இல்லாத துறையொன்றில், இணைப் பேராசிரியர் ஒருவர் அல்லது உதவிப் பேராசிரியர் ஒருவர் துணைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்பட்ட முறையில் துறையின் தலைவராக நியமிக்கப்படலாம்.
(2) துறைத் தலைவராக நியமிக்கப்பட முன்வந்ததை ஏற்க மறுத்துவிடுவதற்கு ஒரு பேராசிரியர் அல்லது இணைப் பேராசிரியர் அல்லது உதவிப் பேராசிரியருக்கு உரிமையுண்டு.
(3) துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஒருவர், மூன்றாண்டுக் கால அளவிற்கு அத்தகையவராகப் பதவி வகித்தல் வேண்டும் மற்றும் மீண்டும் நியமிக்கப்படுவதற்குத் தகுதியுடையவராவார்.
(4) துறைத் தலைவரொருவர், தம்முடைய பதவிக்கால அளவின்போது, எந்த
நேரத்திலும் தம்முடைய பதவியை விட்டு விலகலாம்.
(5) துறைத் தலைவரொருவர், துணைமுறை விதிகளால்
வகுத்துரைக்கப்படக்கூடிய அலுவற்பணிகளைப் புரிந்து வருவார்.
குழுக்களை
அமைத்துரு வாக்குதல்.
50. பல்கலைக்கழக அதிகார அமைப்புகள் அனைத்தும், குழுக்களை அமைத்துருவாக்குவதற்கும் அல்லது மாற்றியமைத்துருவாக்குவதற்கும் மற்றும் தங்களுடைய அதிகாரங்களுக்குள் தாங்கள் பொருத்தமென கருதுகின்றவற்றை, அவற்றிடம் ஒப்படைவு செய்வதற்கும் அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும். அத்தகைய குழுக்கள், பிறவாறு வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர, தொடர்புடைய அதிகார அமைப்பின் உறுப்பினர்களையும், அவ்வதிகாரஅமைப்பு ஒவ்வொரு நேர்விலும் பொருத்தமென கருதக்கூடிய பிற நபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.
அத்தியாயம் - IX.
கல்லூரிகளை மாற்றுதல்.
தமிழ்நாடு சட்டம்
ஒரு சில 32/2002
கல்லூரிகளைப் பல்கலைக் கழகத்திற்கு மாற்றுதல்.
51. (1) 2002-ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி (இதன்பின்பு, 2002-ஆம் ஆண்டுச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) செய்யப்பட்ட, நிலை விதிகள், துணைமுறை விதிகள், ஒழுங்குமுறை விதிகள் ஆணைகள் ஆகியவற்றில் என்ன அடங்கியிருந்த போதிலும் குறிக்கப்பட்ட தேதியன்றும் அதுமுதற்கொண்டும், பல்கலைக்கழக பரப்பிடத்தில் உள்ள கல்லூரிகள் அத்தகைய தேதிக்கு முன்னதாக உள்ள குறிக்கப்பட்ட தேதியன்று 2002-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலிருந்து இணைக்கப்படாதிருத்தல் வேண்டும்.
(2) அரசு, குறிக்கப்பட்ட தேதிக்குப் பின்னர் எந்நேரத்திலும், தாம் பொருத்தமெனக் கருதக்கூடிய அத்தகைய வரையறைகள் மற்றும் வரைக்கட்டுகளின் பேரில், அதன் பயன்பாட்டிற்காக உள்ள அதனுடைய நிலங்கள் எதனையும் பல்கலைக்கழகத்திற்கு மாற்றலாம்.
(3) அரசு, குறிக்கப்பட்ட தேதிக்குப் பின்னர், எந்நேரத்திலும், தாம் பொருத்தமெனக் கருதக்கூடிய அத்தகைய வரையறைகள் மற்றும் வரைக்கட்டுகளின்பேரில், இப்பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்குள் அமைந்துள்ள அதன் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் எவற்றையும் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை செய்வதை இப்பல்கலைக்கழகத்திற்கு மாற்றலாம்.
52(4) இம்மாநிலத்தில், பல்கலைக்கழகமொன்றை நிறுவுவது தொடர்பான பிறச்சட்டம் எதிலுமோ, அல்லது அதன்படி செய்யப்பட்ட நிலைவிதிகள், துணை முறை விதிகள், ஒழுங்குமுறை விதிகளில் என்ன அடங்கியிருந்தபோதிலும் குறிக்கப்பட்ட தேதியன்றும் அதுமுதற் கொண்டும் (3)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட கல்லூரிகள் அல்லது நிறுவனங்கள் குறிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக உள்ள தேதியன்று, அவை எந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கட்டிருந்தனவோ அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து பிரிக்கப்பட்டு இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுதல் வேண்டும்.
திருவள்ளுவர்
52. (1) நியமிக்கப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர் விழுப்புரத்திலுள்ள பல்கலைக்கழக மையத்தில், திருவள்ளுவர் பல்கலைக்கழக அலுவல் தொடர்பாகப் பணியாற்றி வருகின்ற ஒவ்வொரு நபரும், கூறப்பட்ட தேதியிலிருந்து அவர் திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பணியாளராய் இருத்தல் அற்றுப் போதல் வேண்டும் மற்றும் இப்பல்கலைக்கழகத்தின் பணியாளரொருவராகுதல் வேண்டும்.
பல்கலைக்கழகம் குறித்த சில பணியாளர்களின் பணியை இப்பல்கலைக் கழகத்திற்கு மாற்றுதல்
(2) (a) நியமிக்கப்பட்ட தேதிக்குப் பின்பு கூடிய விரைவில் அரசு, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் இப்பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் கலந்தறிந்த பின்பு, பொது அல்லது சிறப்பு ஆணையின் மூலம், அத்தகைய ஆணையில் குறித்துரைக்கப்படும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் அத்தகைய பணியாளர்கள், அவ்வாணையின் குறித்துரைக்கப்படலாகும் அந்தேதியினின்றும் அது முதற்கொண்டும், இப்பல்கலைக்கழகத்தின்அலுவலர்கள் தொடர்பாகப் பணியாற்றுவதற்கு ஒதுக்கியளிக்கப்பட்டவராகுதல் வேண்டும்.
வரம்புரையாக, அத்தகைய பணிப்பாணை எதுவும், அத்தகைய பணியாளர் எவரையும் பொறுத்து, அத்தகைய ஒதுக்கீட்டிற்கு அவருடைய இசைவில்லாமல் பிறப்பிக்கப்படுதல் ஆகாது.
(b) (a)-கூறின் படியான ஆணையில் குறிப்பிடப்படும் தேதியிலும், அது முதற்கொண்டும், அத்தகைய ஆணையின் குறித்துரைக்கப்படுபவர்கள் பல்கலைக்கழகத்தின் பணியாளர்களாக ஆகுதல் வேண்டும் மற்றும் அவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பணியாளர்களாய் இருத்தல் அற்றுப் போதல் வேண்டும்.
(3) (1) ஆம் உட்பிரிவு அல்லது (2)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்படும் நபர் ஒவ்வொருவரும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிராதது போன்ற நியமிக்கப்பட்ட தேதியன்று அல்லது நேர்விற்கேற்ப (2) ஆம் உட்பிரிவின் படியான ஆணையில் குறித்துரைக்கப்பட்ட தேதியன்று அவர் பெற்றிருக்கக்கூடிய அதே பதவிக்கால அளவு, அதே ஊதியம், மற்றும் அதே வரையறைகள் மற்றும் வரைக்கட்டுகளின் பேரிலும், ஓய்வூதியம் அல்லது பணிக்கொடை என்று ஏதேனுமிருப்பின் அது மற்றும் பிற பொருட்பாடுகள் குறித்து அதே உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளுடனும் பல்கலைக்கழகத்தின் கீழ் பதவி வகித்து வருவார்.
(4) (1) மற்றும் (2) –ஆம் உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவற்றை வழங்குவதற்கான கடப்பாடானது, பல்கலைக்கழகத்தின் கடப்பாடாக இருத்தல் வேண்டும்.
அத்தியாயம் - X.
மாறுதல்கால வகைமுறைகள்.
முதல் துணை வேந்தரின்
நியமனம்.
53. (11)-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும் இந்தச் சட்டமானது தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் தேதியில் இருந்து மூன்று திங்களுக்குள்ளாக, முதல் துணை வேந்தரானவர் அரசினால் மூன்றாண்டுகளுக்கு மேற்படாததொரு கால அளவிற்கு அதனால் நிர்ணயிக்கப்படும் சம்பளத்தின் பேரிலும் அது பொருத்தமெனக் கருதலாகும் பிற வரைக்கட்டுகளின் பேரிலும் நியமிக்கப்படுவார்:
53வரம்புரையாக, முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர், அவருடைய பதவிக் காலத்தின்போது எழுபது வயதை நிறைவுசெய்வாரானால், பதவியிலிருந்து ஓய்வு பெறுவார்.
முதல் பதிவாளரின் நியமனம்.
54. 13-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், இந்தச் சட்டமானது தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து மூன்று திங்களுக்குள்ளாக, முதல் பதிவாளரானவர், அரசினால் மூன்றாண்டுகளுக்கு மேற்படாததொரு கால அளவிற்கும் அதனால் நிர்ணயிக்கப்படும் சம்பளத்தின் பேரிலும் மற்றும் அது பொருத்தமெனக் கருதலாகும் பிற வரைக் கட்டுகளின்பேரிலும் நியமிக்கப்படுவார்.
வரம்புரையாக, முதல் பதிவாளராக நியமிக்கப்பட்டவர், அவருடைய பதவி காலத்தின்போது அவர் பல்கலைக்கழக பேராசிரியராக இருக்கும் நேர்வில் அறுபது வயதை நிறைவுசெய்யும் போதும், மற்றும் அரசுக் கல்லூரிப் பேராசிரியராக இருக்கும் நேர்வில், ஐம்பத்தொன்பது வயதை அவர் நிறைவுசெய்யும் போதும் பதவியிலிருந்து ஓய்வு பெறுவார்.
முதல் துணை வேந்தரின் மாறுதல்கால அதிகாரங்கள்
55. (1) நியமனம் செய்யப்பட்ட தேதிக்கு பின்பு ஆறு திங்களுக்குள் அல்லது அறிவிக்கையின் மூலம் அரசு குறித்துரைக்க கூடிய ஓராண்டுக்கு மேற்படாத அத்தகைய அதிகமான கால அளவிற்குள், ஆட்சிக்குழு மற்றும் கல்வி மன்றம் ஆகியவற்றையும் இப்பல்கலைக்கழகத்தின் பிற அதிகார அமைப்புகளையும் அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டியது முதல் துணைவேந்தரின் கடமையாகும்.
(2) முதல் துணைவேந்தர் அரசைக் கலந்தறிந்து, இப்பல்கலைக்கழகம்
செயற்படுவதற்கு தேவையாயிருக்கக்கூடிய விதிகளைச் செய்தல் வேண்டும்.
(3) (1)-ஆம் உட்பிரிவின்படி அமைந்து உருவாக்கப்பட்ட அதிகார அமைப்புகள், அரசு இதன்பொருட்டு அறிவிக்கையின் மூலம் குறித்துரைக்கக் கூடிய தேதியில் அவற்றின் செயற்பணிகளைச் செலுத்தத் தொடங்குதல் வேண்டும்.
(4) தேவைப்படலாகும் நிலைவிதிகள், துணை முறை விதிகள், ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றை வரைந்து அவற்றை முடிவு செய்வதற்காக, அவை பற்றி நடவடிக்கை எடுக்கத் தகுதி வாய்ந்த அந்தந்த அதிகார அமைப்புகளுக்கு அவற்றைப் பணிந்தனுப்ப வேண்டியது முதல் துணைவேந்தரின் கடமையாகும். அத்தகைய நிலைவிதிகள், துணை முறை விதிகள், ஒழுங்குமுறை விதிகள் ஆகியவை, உருவாக்கப்பட்டவுடன் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்.
(5) இந்தச் சட்டத்திலும் நிலைவிதிகளிலும், என்ன அடங்கியிருந்தபோதிலும், மற்றும் அதிகார அமைப்பு ஒன்று உரியவாறு அமைக்கப்படும் காலம் வரையிலும், முதல் துணைவேந்தர், இந்தச் சட்டம் மற்றும் நிலைவிதிகளின்படி அத்தகைய அதிகார அமைப்பின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளில் எதனையும் செலுத்தி வருவதற்கும் புரிந்து வருவதற்கும் தற்காலிகமாக அலுவலர் எவரையும் நியமிக்கலாம் அல்லது குழு எதையும் அமைத்துருவாக்கலாம்.
அத்தியாயம் - XI.
பல்வகைப்பட்டவை.
தற்செயல் காலியிடங்களை நிரப்புதல்.
56. இப்பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு எதனின் அல்லது பிற அமைப்பு எதனின் பதவி வழி உறுப்பினர்களல்லாத பிற உறுப்பினர்களுக்கிடையேயும் எழும் தற்செயல் காலியிடங்கள் அனைத்தும், எந்த உறுப்பினருடைய பதவியிடம் காலியாக ஆகியுள்ளதோ அந்த உறுப்பினரைப் பெயர் குறித்து நியமனம் செய்தவரால் அல்லது தேர்ந்தெடுத்தவரால் அல்லது அமைப்பினால் வசதிக்கேற்றபடி எவ்வளவு விரைவில் கூடுமோ அவ்வளவு விரைவில் நிரப்பப்படுதல் வேண்டும் மற்றும் தற்செயல் காலியிடமொன்றுக்கு பெயர் குறித்து நியமிக்கப்பட்டவர் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர் எவருடைய பதவியிடத்தை அவர் நிரப்புகிறாரோ அவர் ஓர் உறுப்பினராக இருந்திருக்கக்கூடிய காலஅளவின் எஞ்சிய பகுதிக்கு அத்தகைய அதிகார அமைப்பு அல்லது அமைப்பின் உறுப்பினராக இருந்து வருவார்.
54வரம்புரையாக, இப்பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு எதனின் அல்லது பிற அமைப்பு எதனின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கிடையேயும் காலக்கழிவினால் எழுகின்ற காலியிடங்கள் அந்தக் காலியிடங்கள் ஏற்படும் தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முந்தியதல்லாத, துணைவேந்தர் பொருத்தமென நினைக்கின்ற நாட்களில் நடைபெற வேண்டுமென்று அவரால் தீர்மானிக்கப்படக்கூடிய தேர்தல்கள் மூலம் நிரப்பப்படலாம்.
மேலும் வரம்புரையாக, தற்செயல் காலியிடம் எதுவும் இப்பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு எதனின் அல்லது பிற அமைப்பு எதனின் உறுப்பினரின் பதவிக் காலமும் முடிவடையும் தேதிக்குமுன், ஆறு மாதங்களுக்குள்ளாக அத்தகைய காலியிடம் ஏற்படுமானால், நிரப்பப்படுதலாகாது.
பல்கலைக் கழகத்தின் அதிகார அமைப்புகளின் மற்றும் பிற அமைப்புகளின் நடவடிக்கைகள் காலியிடங்கள் காரணமாகச் செல்லாதவையாக ஆகாதிருத்தல்.
57. இப்பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு எதனின் அல்லது பிற அமைப்பு எதனின் செயல் அல்லது நடவடிக்கை எதுவும் காலியிடம் ஏதேனும் இருக்கின்ற காரணத்தால் மட்டுமே, அல்லது இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின் அல்லது பிற அமைப்பு எதனின் உறுப்பினர் ஒருவரின் தேர்தலில் அல்லது நியமனத்தில் குறைபாடு அல்லது முறைகேடு ஏதேனும் உள்ள காரணத்தால் மட்டுமே, அல்லது நேர்வுக்கான தகுதிகளை ஊறுபடுத்தாத அத்தகைய செயல் அல்லது நடவடிக்கையில், குறைபாடு அல்லது முறைகேடு ஏதேனும் உள்ள காரணத்தால் மட்டுமே, அல்லது பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பானது இந்தச் சட்டம் கோருகிறவாறு அத்தகைய இடைவெளிகளில் கூடவில்லை என்னும் காரணத்தால் மட்டுமே செல்லாததாக ஆக்கப்படுதலாகாது.
பல்கலைக்கழக உறுப்பினர் பதவி நீக்கல்.
58. (1) ஆட்சிக் குழுவானது, இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின் உறுப்பினர் எவரேனும், ஆட்சிக் குழுவின் கருத்தின்படி, ஒழுக்கக்கேட்டை உள்ளடக்கியதாகவுள்ள ஒரு குற்றச் செயலுக்காக குற்றவியல் வழக்கு நீதிமன்றமொன்றினால் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பாரானால், அல்லது கடுந்தவறான நடத்தை இழைத்த குற்றவாளியாக இருப்பாரானால், ஆட்சிக் குழுவின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மையரால் கூட்டத்திற்கு வருகை தந்து வாக்களிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைந்ததல்லாத பெரும்பான்மையாராலும் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலமாகவும் இதன் பொருட்டுப் பிறப்பிக்கப்பட்ட எழுத்துருவிலான ஆணை ஒன்றின் மூலம் அத்தகைய நபரை, இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கம் செய்யலாம் மற்றும் அதே காரணத்திற்காக, இப்பல்கலைக்கழகத்தால் அந்த நபருக்கு அளிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட பட்டம் அல்லது பட்டயம் எதனையும் திரும்பப் பெறலாம்.
(2) நபர் எவரும், மனச் சீர்கேடுற்றவராகவோ அல்லது நொடித்த ஒருவராக நீதித் தீர்ப்பு பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தால் அல்லது நொடித்த ஒருவராக நீதித் தீர்ப்பு அளிக்கப் பெற்றிருந்தால், இதன் பொருட்டுப் பிறப்பிக்கப்பட்ட எழுத்துருவிலான ஆணையொன்றின் மூலம் ஆட்சிக் குழுவானது, இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின் உறுப்பினர் பதவியிலிருந்தும் அவரை நீக்கம் செய்யலாம்.
(3) நபரொருவரின் மீதும் எடுக்கக் கருதியுள்ள நடவடிக்கைக்கு எதிராகக் காரணங்காட்டுவதற்கு, அவருக்கு நியாயமான வாய்ப்பொன்று கொடுக்கப்பட்டிருந்தாலன்றி இந்தப் பிரிவின்படி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுதல் கூடாது.
(4) (1)-ஆம் உட்பிரிவு அல்லது நேர்விற்கேற்ப (2)-ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றின் படி ஒன்றினை, அது அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில், ஒழுங்குமுறை விதிகளால் வகுத்துரைக்கப்பட்ட முறையில் தொடர்புடைய நபருக்குத் தெரிவிக்கப்படுதல் வேண்டும்.
55பல்கலைக்கழக
அதிகார அமைப்புகளையும் பிற அமைப்புகளையும் அமைத்துரு வாக்குதல் 59. இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின் அல்லது இப்பல்கலைக்கழக பிற அமைப்பு எதனின் உறுப்பினர் ஒருவராக எவரேனும் உரியவாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா அல்லது பெயர் குறித்து நியமனம் செய்யப்பட்டுள்ளாரா அல்லது உறுப்பினராயிருப்பதற்குத் தகுதி உடையவராயிருக்கின்றாரா என்பது குறித்து வினா ஏதேனும் எழுமானால், அவ்வினா, வேந்தருக்குக் குறித்தனுப்பப்படுதல் வேண்டும். அதன் மீதான அவருடைய முடிவே இறுதியானதாகும்.
பற்றிய தகராறுகள்.
தகவல்
பெறுவதற்கான அதிகாரம்.
60. இந்தச் சட்டத்திலோ அப்போதைக்கு செல்லாற்றல் பெற்றுள்ள பிற சட்டம் எதிலுமோ என்ன அடங்கியிருந்தபோதிலும், அரசு எழுத்துருவிலான ஆணையின் மூலமாக, இப்பல்கலைக்கழக அலுவல்கள் தொடர்பான பொருட்பாடு எதையும் பற்றி, இப்பல்கலைக்கழகத்திடமிருந்து தகவல் எதையும் கேட்டுப் பெறலாம், மற்றும் இப்பல்கலைக்கழகம் அத்தகைய தகவல் தன்னிடம் இருக்குமானால், அத்தகைய தகவலை நியாயமானதொரு கால அளவுக்குள் அரசுக்கு அளித்தல் வேண்டும்:
வரம்புரையாக, இப்பல்கலைக்கழகம் கமுக்கமானதெனக் கருதுகிற தகவலைப் பொறுத்தவரையில், இப்பல்கலைக்கழகமானது அதை வேந்தர் மற்றும் இணைவேந்தர் ஆகியோர் முன்பு வைக்கலாம்.
வருங்கால வைப்பு நிதியம் மற்றும் அது போன்ற நிதியங்களில் சேர்ந்துள்ள தொகைகளை மாற்றுதல் 61. (1) நியமனம் செய்யப்பட்ட நாளன்று 52ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் மற்றும் 52ஆம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவின் (ய) கூறின்படி ஆணையில் குறித்துரைக்கப்பட்ட நாளன்று அந்தப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் வருங்கால வைப்பு நிதியக் கணக்குகளின் வரவு, இருப்பில் உள்ள தொகைகள், இப்பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்படுதல் வேண்டும் மற்றும் மேற்சொன்ன வருங்கால வைப்பு நிதியக் கணக்குகளைப் பொறுத்த கடப்பாடானது, இப்பல்கலைக்கழகத்தின் கடப்பாடாக இருக்கும்.
(2) திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வயது முதிர்வு ஓய்வு நிதியம் மற்றும் அதே போன்ற பிற நிதியங்கள் எவையேனுமிருப்பின் அவற்றில் சேர்ந்துள்ள தொகைகளிலிருந்து, 52ஆம் பிரிவின் (1) மற்றும் (2)ஆம் உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட நபர்களின் சார்பாக வயது முதிர்வு நிதியம் அல்லது அதுபோன்ற பிற நிதியங்கள் எவையேனுமிருப்பின், அவற்றின் வரவு வைக்கப்பட்டிருக்கின்ற தொகைகளை பல்கலைக்கழகத்திற்கு வழங்குதல் வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்ட தொகையானது பல்கலைக்கழகத்தால் அதன் பணியாளர்களின் நலனுக்காக நிறுவப்படக்கூடிய வயது முதிர்வு ஓய்வு நிதியம் அல்லது அதுபோன்ற பிற நிதியங்கள் எவையேனுமிருப்பின் அவற்றின் பகுதியாக அமைத்தல் வேண்டும்.
62. (1) திருவள்ளுவர் பல்கலைக்கழகமானது, நியமனஞ்செய்யப்பட்ட தேதியன்று உள்ள தனது நிதியங்களிலிருந்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் கலந்தறிந்து, அரசு குறித்துரைக்கக்கூடிய தொகையினை, பல்கலைக்கழகத்திற்கு வழங்குதல் வேண்டும்.
திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தினால் சில குறிப்பிட்ட தொகை வழங்கப்படுதல்.
(2) (1)-ஆம் உட்பிரிவின்படி வழங்கப்படவேண்டிய தொகையானது, 52 ஆம் பிரிவின்படி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தால் இப்பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தொகைகளுடன் கூட அமைந்ததாக இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம் 32/2002 பொருந்தாதிருத்தல்.
63. (1) (2) முதல் (8) வரையிலான உட்பிரிவுகளின் வகைமுறைகளுக்குட்பட்டு 2002 ஆம் ஆண்டு சட்டமானது குறிக்கப்பட்ட தேதியன்றும் அது முதற்கொண்டும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் பொருந்துகிற பரப்பிடங்களைப் பொறுத்த அளவில், பொருந்துவது அற்றுப் போதல் வேண்டும்.
(2) அவ்வாறு அற்றுப்போவதானது,-
(a) இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் பொருந்துகின்ற பரப்பிடங்களைப் பொறுத்த அளவில், 2002 ஆம் ஆண்டுச் சட்டம், முந்தைய செயற்பாட்டில் இருந்ததையோ; அல்லது56 (b) 2002 ஆம் ஆண்டு சட்டத்திற்கெதிராகப் புரியப்பட்ட குற்றச் செயல் எதனையும் பொறுத்த அளவில் ஏற்க நேரிட்ட தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை எதனையுமோ; அல்லது
(c) அத்தகைய தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை தொடர்பான புலனாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி எதையும் பாதிக்கலாகாது; இந்தச்சட்டம் நிறைவேற்றப்படாதது போன்றே, அத்தகைய புலனாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி எதுவும் தொடுக்கப்படலாம், தொடர்ந்து நடத்தப்படலாம், அல்லது நிறைவேற்றப்படலாம்; மற்றும் அத்தகைய தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை எதுவும் விதிக்கப்படலாம்.
(3) (1) ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், 2002-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் செய்யப்பட்டவையும், மற்றும் அமர்த்துகை செய்யப்பட்ட தேதியில் செல்லாற்றல் பெற்றுள்ளவையுமான நிலைவிதிகள், துணை முறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் அனைத்தும், அவற்றிற்குப் பதிலாக இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்படக்கூடிய நிலைவிதிகள், துணை முறை விதிகள் மற்றும் ஒழுங்கு முறை விதிகள் ஆகியவை அமைக்கின்ற வரையிலும், அவை எந்த அளவிற்கு இந்தச் சட்டத்துடன், வகைமுறைகளுடன் ஒவ்வாதவாக இல்லாதிருக்கின்றனவோ அந்த அளவுக்கு இப்பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்குள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருதல் வேண்டும்.
(4) இந்தச் சட்டத்தில் அல்லது (3)-ஆம் உட்பிரிவின்படி தொடர்ந்து செல்லாற்றல் பெறச் செய்யப்பட்டுள்ள அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட நிலை விதிகள், துணை முறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் என்ன அடங்கியிருந்த போதிலும், நியமனஞ்செய்யப்பட்ட தேதிக்கு முன்னர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அல்லது அதனால் ஒப்புதல் அளிக்கப்பெற்ற இப்பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்குள் இருக்கின்ற கல்லூரி ஒன்றின் மற்றும் அந்தப் பல்கலைக்கழகத் துறைகளில் மாணவராய் இருந்திருக்கின்ற அல்லது திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வுகளில் எதையும் எழுதுவதற்குத் தகுதி வாய்ந்தவராக இருந்திருக்கின்ற ஒவ்வொரு நபரும் இப்பல்கலைக்கழகத்தில் தனது குறித்த காலப் படிப்பிற்கிணங்க திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தால் தீர்மானிக்கப்படக்கூடிய மாணவர்கட்கு, தீர்மானிக்கப்படக்கூடிய கால அளவுக்கு மற்றும் தீர்மானிக்கப்படக்கூடிய பயிற்றுவித்தல், கற்பித்தல் மற்றும் பயிற்சிக்கு இப்பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்தல் வேண்டும். மேலும் அத்தகைய மாணவர்கள் அந்தக் கால அளவின் போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தால் வைக்கப்படும் அல்லது நடத்தப்படும் தேர்வுகளுக்கு ஏற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தகைய தேர்வுகளின் முடிவின் பேரில் தகுதி பெற்ற மாணவர்கட்கு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் நேரிடையான பட்டம், பட்டயம் அல்லது பிற கல்விச் சிறப்புகள், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தால் அளிக்கப்படுதல் வேண்டும்.
(5) அமர்த்துகை செய்யப்பட்ட தேதிக்கு முன்னர்,-
(a) திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தால் இணைக்கப்பட்டவையாய் இருக்கின்ற அல்லது அதனால் ஏற்பிசைவு அளிக்கப்பட்டவையாக இருக்கின்றவையும்; மற்றும்
(b) திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பட்டத் தேர்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான குறித்த காலப்படிப்பிற்கு வகை செய்கின்றவையுமான இந்தச்சட்டத்தின்படி, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் இந்தச்சட்டத்தின் வகைமுறைகள் எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு அதன்படியே பொருத்துதல் வேண்டும்.
(6) நியமிக்கப்பட்ட தேதிக்கு முன்னர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பட்டங்கள் மற்றும் பட்டயங்களுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளபடுவதற்கான குறித்த காலம் படிப்பிற்கு வகை செய்கின்ற அந்த பல்கலைக்கழகத்தினால் தொடர்ந்து ஏற்பிசைவளிக்க பெறுகின்ற, இப்பல்கலைக்கழக பரப்பிடத்திற்குள் உள்ள அனைத்து கல்லூரிகளும், இந்தச் சட்டத்தின் படி பல்கலைக்கழகத்தால் ஒப்புதலளிக்கப்பெற்ற கல்லூரிகளாக கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு அதன்படியே பொருந்துதல் வேண்டும்.
57(7) நியமிக்கப்பட்ட தேதிக்கு முன்னர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தால் தொடர்ந்து ஏற்பிசைவளிக்க பெற்று வருகின்ற இப்பல்கலைக்கழக பரப்பிடத்திற்குள் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் இந்தச் சட்டத்தின் படி பல்கலைக்கழகத்தால் ஏற்பிசைவளிக்க பெற்ற தங்கும் விடுதிகளாக கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு அதன்படியே பொருந்துதல் வேண்டும்.
(8) (2)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்குட்பட்டு, ஆனால் (3) முதல் (7) வரையிலான உட்பிரிவுகளின் வகைமுறைகளுக்கு ஊறில்லாமல், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் பொருந்துகின்ற பரப்பிடங்கள் எதனையும் பொறுத்து, 2002-ஆம் ஆண்டு சட்டத்தின் வகைமுறை எதனின்படியும் அமர்த்துகை குறிக்கப்பட்ட தேதிக்கு முன்னர் செய்யப்பட்ட செயல் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தின் நேரிணையான வகைமுறையின்படி செய்யப்பட்டிருப்பதாகவோ அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் இந்தச்சட்டத்தின் நேரிணையான வகைமுறையின்படி செய்யப்பட்ட செயல் எதனாலும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலும் தள்ளி வைக்கப்பட்டாலன்றியும் தள்ளி வைக்கப்படுகின்ற வரையிலும் அதன்படி தொடர்ந்து செயல் விளைவு பெற்றிருத்தலும் வேண்டும்.
பட்டதாரிகளை
64. (1) குறிக்கப்பட்ட நாளன்றும் அது முதற்கொண்டும்,
பதிவுசெய்தல்.
(a) இந்திய எல்லைப் பரப்பிடத்திற்குள் பல்கலைக்கழகம் எதனின்
பட்டதாரியாக மூன்று ஆண்டுகளுக்குக் குறையாமல் இருந்து வந்திருக்கிற; அல்லது
(b) இந்திய எல்லைப் பரப்பிடத்திற்குள், உள்ள பல்கலைக் கழகம் எதனின் பதிவுபெற்ற பட்டதாரியாக இருக்கிற இப்பல்கலைகழக பரப்பிடத்திற்குள் சாதாரணமாக வசிக்கும் நபரெவரும் நிலைவிதிகளால் வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய வரைகட்டுகளுக்கு உட்பட்டு அத்தகையக் கட்டணத்தை செலுத்துவதன்பேரில், ஐந்து ஆண்டு கால அளவிற்கு இந்தச் சட்டத்தின்படி பேணிவரப்படும் பட்டதாரிகள் பதிவேட்டில் தன்னுடைய பெயரை பதிவு செய்ய உரிமைத் தகுதியுடையவராவார்.
(2) (1)-ஆம் உட்பிரிவின்படி பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் வகுத்துரைக்கப்பட்ட கட்டணத்துடனும், நிலைவிதிகளினால் வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய தகுதிகளின் நிரூபணங்களுடனும் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
(3) பதிவாளர் (2)-ஆம் உட்பிரிவின்படி விண்ணப்பம் பெற்றுக்கொண்டதன்பேரிலும் தாம் தக்கதெனக் கருதுகிற அத்தகைய விசாரணையை மேற்கொண்டதற்குப் பின்பும் விண்ணப்பதாரருடைய பெயரை பட்டதாரிகளுடைய பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும்.
(4) (3)-ஆம் உட்பிரிவின்படி பட்டதாரிகளுடைய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு நபரும், நிலை விதிகளால் வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய காலத்திற்குள்ளும் அத்தகைய முறையிலும் மற்றும் அத்தகைய கட்டணத்தைச் செலுத்துவதன்பேரிலும் இதன்பொருட்டு பதிவாளருக்கு விண்ணப்பிப்பதன் பேரில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அத்தகைய பதிவினை புதுப்பித்துக்கொள்ள உரிமைத் தகுதியுடையவராவார்.
சிறப்பு நியமன முறை.
65. (1) ஆட்சிக் குழு தான் பொருத்தமெனக் கருதுகிற அத்தகைய வரையறைகள் மற்றும் வரைக்கட்டுகளின் பேரில், இப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பதவி ஒன்றை ஏற்றுக் கொள்ளுமாறு, உயர்கல்வி சிறப்பையும் தொழில்முறைத் தேர்ச்சிப் பேறுகளையும் பெற்றுள்ள நபரொருவரை அழைக்கலாம்; மற்றும் அவர் ஏற்றுக் கொண்டதன் பேரில், அவரை அப்பதவிக்கு நியமிக்கலாம்.
58(2) ஆட்சிக்குழு, துணை முறை விதிகளில் விதிக்கப்பட்டுள்ள முறைக்கிணங்க கூட்டுச் செயல் திட்டமொன்றை மேற்கொள்வதற்காக, பிற பல்கலைக்கழகம் அல்லது அமைப்பு எதிலேனும் பணிபுரிகின்ற ஆசிரியர் ஒருவரையோ கல்விப் பணியாளர் தொகுதியின் பிற உறுப்பினர் எவரையுமோ நியமிக்கலாம்.
இணைக்கப்பட்ட
கல்லூரி மீதான அறிக்கை.
66. ஆட்சிக்குழுவானது குறிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு மூன்றாண்டுகளின் முடிவிலும், இப்பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்குள் உள்ள இணைக்கப்பட்ட மற்றும் ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரிகளின் நிலையைப் பற்றி அரசிற்கு அறிக்கையொன்றை பணிந்தனுப்புதல் வேண்டும். அரசு, அவ்வறிக்கையின் மீது தான் பொருத்தமெனக் கருதும் நடவடிக்கையினை எடுத்தல் வேண்டும்.
இடர்பாடுகளை
நீக்குவதற்கான அதிகாரம்.
67. (1) குறிக்கப்பட்ட தேதிக்குப் பின்னர் இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதையேனும் முதல் முதலில் அமைத்துருவாக்குதல் குறித்தோ அல்லது மீண்டும் அமைத்துருவாக்குதல் குறித்தோ, அல்லது பிறவாறு இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயல்படுத்துதல் குறித்தோ இடர்பாடு ஏதேனும் எழுமானால், அரசு, அறிவிக்கையின் மூலமாக அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்காக தேவையானதென்று அல்லது உகந்ததென்று தனக்குத்தோன்றக் கூடிய, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு ஒவ்வாதவையாயிராத வகைமுறையைச் செய்யலாம்;
வரம்புரையாக, அத்தகைய அறிவிக்கை எதுவும் 3-ஆம் பிரிவின்படி பல்கலைக்கழகம் நிறுவியமைக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகள் முடிவடைந்ததற்கு பின்பு, பிறப்பிக்கப்படுதலாகாது.
(2) (1)-ஆம் உட்பிரிவின்படியோ இந்தச் சட்டத்தின் பிறவகை முறைகள் எவற்றின்படியுமோ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும் அது பிறப்பிக்கப்பட்ட பின்பு, நடைமுறைக்கு இயன்ற விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது, அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடர் அல்லது அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பு, அத்தகைய அறிவிக்கை எதிலும் மாறுதல் எதையேனும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமானால், அல்லது அந்த அறிவிக்கை பிறப்பிக்கப்படலாகாது என்று சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமானால், அந்த அறிவிக்கையானது அதன் பின்பு அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே செல்லாற்றல் பெறுதல் வேண்டும்; அல்லது நேர்விற்கேற்ப, செல்லாற்றல் பெறாதுபோதல் வேண்டும்; எனினும், அத்தகைய மாறுதல் அல்லது நீக்கம் எதுவும் அந்த அறிவிக்கையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
பணிப்புரைகள்
வழங்க அரசுக்கு உள்ள அதிகாரம்.
68. அரசானது அவ்வப்பொழுது இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக தான் தக்கதெனக் கருதுகிற அத்தகைய பணிப்புரைகளை பல்கலைக்கழகத்திற்கு பிறப்பிக்கலாம்; மற்றும் அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடப்பது பல்கலைக்கழகத்தின் கடமையாகும்.
ஐயங்களை
அகற்றுதல்.
69. ஐயங்களை அகற்றுவதற்காக அது ஈங்கிதனால் விளம்புகை செய்யப்படுகிறது. அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்குறித்து நியமனஞ்செய்யப்பட்ட அல்லது பிறவாறு 2002-ஆம் ஆண்டு சட்டத்தின்படி, இந்தச் சட்டத்தின் 63-ஆம் பிரிவின் (5)- ஆம் உட்பிரிவின்படி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக கருதப்படும் கல்லூரிகளிலிருந்து அத்தகையவாறு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளின் உறுப்பினர்களாக இருப்பவர்கள், இந்தச் சட்டம் தொடங்கப்பட்ட தேதிக்கு முன்புவரை அத்தகைய உறுப்பினர்களாகவே இருப்பர்.
70. (1) 2002-ஆம் ஆண்டு சட்டத்தின் 1-ஆம் பிரிவில், (2) -ஆம் உட்பிரிவிற்காக
பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்:-
2002-ஆம் ஆண்டு சட்டத்திற்கான திருத்தம்.
"(2) இது தமிழ்நாடு மாநிலத்திலுள்ள வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கின்ற பரப்பிடத்தை அளாவி நிற்கும்."
(2) 2002-ஆம் ஆண்டு சட்டத்தின் இணைப்பு பட்டியலுக்கு, பின்வரும் இணைப்புப்
பட்டியலானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்:-
59இணைப்பு பட்டியல்
[பிரிவுகள் 2(e) மற்றும் 60-Aஐ காண்க]
1. அரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை.
2. அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.
3. முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, வேலூர்.
4. அரசு திருமகள் ஆலைக் கல்லூரி, குடியாத்தம்.
5. அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி, வாலாஜாப்பேட்டை.
இணைப்பு பட்டியல்
[பிரிவுகள் 2(f) மற்றும் 2(l) ஐ காண்க]
1. பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்.
2. அரசு கலைக் கல்லூரி, சிதம்பரம்.
3. திருக்கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருத்தாச்சலம்.
4. அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம்.
5. திரு. ஏ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி, திண்டிவனம்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
60தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 25 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 6/2021.
2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்
சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—
குறுந்தலைப்பு
1. (1) இந்த சட்டம் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள்
மற்றும்
மற்றும் சேவைகள் வரி (திருத்தச்) சட்டம் என அழைக்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
173-ஆம்
தமிழ்நாடு சட்டம் பிரிவிற்கானத்
19/2017.
திருத்தம்.
2. 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின், 173-ஆம் பிரிவில், (v)-ஆம் கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:—
தமிழ்நாடு சட்டம்
XX/ 1949.
"(vi) 1949-ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்கரை ஆலைகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 14-ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
61தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 26 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 7/2021.
2013 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் 2013 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் மற்றும் 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை சட்டங்களை மேலும் திருத்தம் பல்கலைக்கழகம், சென்னை சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக்குடியரசின் எழுபத்து இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:--
பகுதி – I.
முன்னுரை.
குறுந்தலைப்பு மற்றும்
தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம் 2021 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை (திருத்தச்) சட்டம் என வழங்கப் பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பகுதி–II.
2013 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தங்கள்.
தமிழ்நாடு சட்டம்
1-ஆம் பிரிவிற்கான 20/2013.
திருத்தம்.
2. (இதன் பின்பு இந்தப் பகுதியில் 2013 ஆம் ஆண்டுச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2013 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தின் 1 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், "கடலூர் மாவட்டம்" எனும் சொற்றொடருக்காக, "இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இராஜா முத்தையா பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் இராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி ஆகியவை அமைந்துள்ள 113.21 ஏக்கர், பரப்பிடம் நீங்கலாக கடலூர் மாவட்டம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
35–ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
3. 2013 ஆம் ஆண்டு சட்டத்தின் 35 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், "மருத்துவம், பல்மருத்துவம்" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
பகுதி-III.
1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப்மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னைபல்கலைக்கழகம், சென்னை சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் பிரிவிற்கான 37/1987.
திருத்தம்.
4. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை சட்டத்தின் 2 ஆம் பிரிவில், (r) ஆம் கூறிலுள்ள "1928 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் I /1929) 2 ஆம் பிரிவின் (a) ஆம் கூறின்படி வரையறுக்கப்பட்டதான அண்ணாமலை நகர் தவிர" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.