©
GOVERNMENT OF TAMIL NADU 2021
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Rs. 12.00 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 32] CHENNAI, WEDNESDAY, AUGUST 11, 2021 Aadi 26, Pilava, Thiruvalluvar Aandu–2052
Part VI—Section 2
Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.Pages.
GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS
GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS
Loss of Certifi cates .. .. .. .. .. .. .. 110110 Loss of Certifi cates .. .. .. .. .. .. ..
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை
.. .. .. .. 110-138110-138 தமிழ்நாடு மின் வழங்கல் விதித்தொகுப்பிற்கான திருத்தம் .. .. .. ..
[ 109 ]
DTP—VI-2 (32)[Part VI—Sec. 2 110 TAMIL NADU GOVERNMENT GAZETTE
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS
LOSS OF CERTIFICATES
It is hereby notifi ed that the Original Higher Secondary Certifi cates / Matriculation Certifi cates / Diploma Certifi cates / School Certifi cates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certifi cates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:
மாணவர்/மாணவி பெயர்,
பதிவு /
பள்ளியின் பெயர் மற்றும்
தேர்வின் விவரம்.
சி.என்.சி. எண்.
மாதம் மற்றும் வருடம்.
கடித எண்ணும், தேதியும்.
சான்றிதழ் எண்.
கல்வி மாவட்டம்.
(1) (2) (3) (4) (5) (6) No. VI(2)/75/2021.
தஞ்சாவூர்:
002703 August 2002 தொழில் நுட்பத் தேர்வு ந.க. எண் 011710/டி/2021, கலைவாணி, சா.
23-07-2021 No. VI(2)/76/2021.
தருமபுரி:
சசிரேகா, சி. 002168 August 2002 தொழில் நுட்பத் தேர்வு ந.க. எண் 215416/டி/2021,
23-07-2021
பொன். குமார்,
இணை இயக்குநர் (பணியாளர்), அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை
தமிழ்நாடு மின் வழங்கல் விதித்தொகுப்பிற்கான திருத்தம்
அறிவிக்கை எண் த.மி.ஒ.ஆ/SC/7-44, நாள் 24-12-2020
Lr. No. TNERC/Legal/3145/D.No.387/2021
No. VI(2)/77/2021.
2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 36/2003) 50 ஆம் பிரிவுடன் சேர்த்துப் படிக்கப்படும் 181 ஆம் பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களையும், இதன் பொருட்டு இயல்விக்கும் அனைத்துப் பிற அதிகாரங்களையும் செலுத்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதன்மூலம் தமிழ்நாடு மின் வழங்கல் விதித் தொகுப்பில் பின்வரும் திருத்தங்களை செய்கிறது. அதன் வரைவு மேற்கொள்ள 181 ஆம் பிரிவின் (3) ஆம் உட் பிரிவின்படி வேண்டுறுத்தப்பட்டவாறு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
1. மின்வழங்கல் விதித்தொகுப்பில், 6 ஆம் ஒழுங்குமுறை விதியில் பின்வரும் சொற்றொடர்களுக்குப் பதிலாக, "6. சிறுமக் கட்டணங்கள் (Minimum Charges) – நுகர்வோர், உரிமதாரருக்கு கீழே விவரமாகத் தந்துள்ளபடி ஒவ்வொரு மின்னிணைப்புக்கும் சிறுமக் கட்டணத்தைக் கட்ட வேண்டும். மின்சாரம் நுகரப்படாவிட்டாலும், நீதிமன்ற ஆணையால் மின்னிணைப்பு துண்டிப்பில் இருந்தாலும், வழங்கப்பட்ட மின்சாரக் கட்டணம் சிறுமக் கட்டணத்தை விடக் குறைவாக இருந்தாலும், சிறுமக் கட்டணத்தை கட்டியே ஆக வேண்டும்." பின்வரும் இந்தச் சொற்றொடர் அமைக்கப்படும்:
"6. சிறுமக் கட்டணங்கள் (Minimum Charges) - மின்நுகர்வோர், உரிமதாரரிடம் கீழே விவரிக்கப்பட்டவாறு மின்னிணைப்பு ஒவ்வொன்றையும் பொறுத்து சிறுமக் கட்டணங்கள் / நிலைக் கட்டணங்கள் செலுத்துதல் வேண்டும்:
Aug. 11, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 111மின்சாரம் எதுவும் நுகரப்படாதிருக்கிற போதும் கூட அல்லது நீதிமன்றத்தின் ஆணைகளின் காரணங்கள் உள்ளடங்கலான எந்த காரணங்களுக்காகவும், மின்னிணைப்புகள் துண்டிக்கப்படுகிற போதோ அல்லது வழங்கப்படும் மின்சாரத்தின் விலையானது குறைந்தபட்ச கட்டணங்களுக்கும் குறைவாக இருக்கிற போதோ, மாதாந்திர சிறுமக் கட்டணங்கள் / நிலைக் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டியதாகும்.
விளக்கம் "மாதாந்திர சிறுமக் கட்டணங்கள் / நிலைக் கட்டணங்கள்," தமிழ்நாடு மின்வழங்கல் விதித்தொகுப்பில் / மின்பகிர்மான விதித்தொகுப்பில் காணப்படும் இடங்களிலெல்லாம் அவ்வப்போது ஆணையத்தின் மின் கட்டண ஆணைகளில் நிர்ணயிக்கப்பட்ட சிறுமக் கட்டணங்கள் / நிலைக் கட்டணங்களைச் சுட்டுவதாகும். 112 கிலோ வாட்டிற்கு மேற்பட்ட மின்தேவையுடன் ஒப்பளிக்கப்பட்ட தாழ்வழுத்த மின்னிணைப்புகளுக்கு, மாதாந்திர சிறுமக் கட்டணங்கள் / நிலைக் கட்டணங்கள், உயர் அழுத்த மின்னிணைப்புகளுக்கு ஏற்ப பொருந்தத்தக்கதாகும். ஆனால், அவை ஒப்பளிக்கப்பட்ட முழுமையான மின் தேவைக்கானதாகும்".
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சு. சின்னராஜலு, சென்னை 600 032, 2021 ஜூலை 26.
செயலாளர்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
விளக்கவுரை
தாழ்வழுத்த மின்நுகர்வோருக்குப் பொருந்தத்தக்க குறைந்தபட்ச கட்டணங்கள், அவ்வப்போது ஆணையத்தினால் மின்கட்டண ஆணையில் குறித்துரைக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணங்களின் விளைவுடையதாகும் மற்றும் தெளிவாக்கத்தின் பொருட்டு மின்வழங்கல் விதித் தொகுப்பின் 6 ஆம் ஒழுங்குமுறை விதியினை திருத்தம் செய்தல் அவசியமாகிறது.
உத்தேசிக்கப்பட்ட திருத்தம், இக்கருத்துருவை அமல்படுத்த விழைகிறது.
சென்னை 600 032, 2021 ஜூலை 26.
சு. சின்னராஜலு, செயலாளர்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
பின்னிணைப்பு
தமிழ்நாடு மின்வளங்கல் விதித்தொகுப்பு
| வரிசை எண் | இருந்து வரும் வகைமுறை | திருத்தப்பட்ட வகைமுறை |
| "6. சிறுமக் கட்டணங்கள் (Minimum Charges) – நுகர்வோர், உரிமதாரருக்கு கீழே விவரமாகத் தந்துள்ளபடி ஒவ்வொரு மின்னிணைப்புக்கும் சிறுமக் கட்டணத்தைக் கட்ட வேண்டும். மின்சாரம் நுகரப்படாவிட்டாலும், நீதிமன்ற ஆணையால் மின்னிணைப்பு துண்டிப்பில் இருந்தாலும், வழங்கப்பட்ட மின்சாரக் கட்டணம் சிறுமக் கட்டணத்தை விடக் குறைவாக இருந்தாலும், சிறுமக் கட்டணத்தை கட்டிஆக வேண்டும்." | 6. சிறுமக் கட்டணங்கள் (Minimum Charges) - மின்நுகர்வோர், உரிமதாரரிடம் கீழே விவரிக்கப்பட்டவாறு மின்னிணைப்பு ஒவ்வொன்றையும் பொறுத்து சிறுமக் கட்டணங்கள் / நிலைக் கட்டணங்கள் செலுத்துதல் வேண்டும்: மின்சாரம் எதுவும் நுகரப்படாதிருக்கிற போதும் கூட அல்லது நீதிமன்றத்தின் ஆணைகளின் காரணங்கள் உள்ளடங்கலான எந்தக் காரணங்களுக்காகவும், மின்னிணைப்புகள் துண்டிக்கப்படுகிற போதோ அல்லது வழங்கப்படும் மின்சாரத்தின் விலையானது குறைந்தபட்ச கட்டணங்களுக்கும் குறைவாக இருக்கும் போதோ, மாதாந்திர சிறுமக் கட்டணங்கள் / நிர்ணயிக்கப்பட்ட நிலைக் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டியதாகும். விளக்கம் "மாதாந்திர சிறுமக் கட்டணங்கள் / நிலைக் கட்டணங்கள்," தமிழ்நாடு மின்வழங்கல் விதித்தொகுப்பில் / மின்பகிர்மான விதித்தொகுப்பில் காணப்படும் இடங்களிலெல்லாம் அவ்வப்போது ஆணையத்தின் மின் கட்டண ஆணைகளில் நிர்ணயிக்கப்பட்ட சிறுமக் கட்டணங்கள் / நிலைக் கட்டணங்களைச் சுட்டுவதாகும். 112 கிலோ வாட்டிற்கு மேற்பட்ட மின் தேவையுடன் ஒப்பளிக்கப்பட்ட தாழ்வழுத்த மின்னிணைப்புகளுக்கு, மாதாந்திர சிறுமக் கட்டணங்கள் / நிலைக் கட்டணங்கள், உயர் அழுத்த மின்னிணைப்புகளுக்கு ஏற்ப பொருந்தத்தக்கதாகும். ஆனால், அவை ஒப்பளிக்கப்பட்ட முழுமையான மின் தேவைக்கானதாகும்". |
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சு. சின்னராஜலு, சென்னை 600 032, 2021 ஜூலை 26.
செயலாளர்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
[Part VI—Sec. 2 112 TAMIL NADU GOVERNMENT GAZETTEதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை
தமிழ்நாடு மின் வழங்கல் விதித்தொகுப்பிற்கான திருத்தம்
அறிவிக்கை எண் த.மி.ஒ.ஆ/DC/8-28, நாள் 24-12-2020
Lr. No. TNERC/Legal/3145/D.No.387/2021
No. VI(2)/78/2021.
2003ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 36/2003) 46ஆம் பிரிவுடன் சேர்த்துப்படிக்கப்படும் 181ஆம் பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களையும் இதன் பொருட்டு இயல்விக்கும் அனைத்துப்பிற அதிகாரங்களையும் செலுத்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதன்மூலம் தமிழ்நாடு மின்பகிர்மான விதித்தொகுப்பில் பின்வரும் திருத்தங்களைச் செய்கிறது. அதன் வரைவு மேற்சொன்ன 181 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்படி வேண்டுறுத்தப்பட்டவாறு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்
மேற்சொன்ன மின்பகிர்மான விதித்தொகுப்பில் :-
1. 2 ஆம் ஒழுங்குமுறை விதியில், (a) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறுபுகுத்தப்படும், அதாவது :-
(aa) "அதிகார அமைப்பு" என்பது, 2003ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் 70ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட மத்திய மின்சார அதிகார அமைப்பு என்று பொருள்படும்";
2. 16ஆம் ஒழுங்குமுறை விதியில், (2)ஆம் உள்-ஒழுங்குமுறை விதிக்குப் பின்பு, பின்வரும் உள் – ஒழுங்குமுறை விதி புகுத்தப்படும், அதாவது ;-
(2A) மின்கசிவு பாதுகாப்புச் சாதனம் / மின்கசிவை உணரும் சாதனம் (ELPD/RCD) :
i. தற்காலிக மின்வழங்கல் நிறுவுகைகள் உள்ளடங்கலாக தாழ்வழுத்த மின்வழங்கல் உள்ள ஒவ்வொரு நிறுவுகையும் மின் கசிவை உணரும் சாதனத்தினால், கட்டுப்படுத்தப்பட வேண்டும். மின் பழுது அல்லது மின் கசிவு ஏற்படுவதன் பேரில் மின்வழங்கல் துண்டிப்பதன் பொருட்டு மின் அதிர்ச்சிக்கு எதிராக பாதுகாப்பதற்காக மின் கசிவை உணரும் சாதனத்தின் வரையளவிட்ட இயக்க மின்சாரம், 30 மில்லி ஆம்பியர்க்கு மேல் இருக்கக்கூடாது.
ii. நிறுவுகைகளைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையிலான மோட்டார்கள், சாதனம், பயன்கருவிகள் ஆகியவற்றின் மொத்த மின் சுமைகள் 10 கிலோவாட்டுக்கு மேல் இருக்கும்போது, மின் அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் 30 மில்லி ஆம்பியர் RCDயுடன் கூடுதலாக, மின்பழுதினால் ஏற்படும் தீ விபத்திலிருந்து பாதுகாப்பதற்காக மின்வழங்கல் தொடங்கும் இடத்தில் ஒரு பொதுவான RCD 300 மில்லி ஆம்பியர் இயக்கத்துடன் பொருத்தப்பட வேண்டும்.
iii. அதிக எண்ணிக்கையிலான மின்சுமைகள் இருக்கும் நிறுவுகையில் அவைகளின் மொத்த அனுமதிக்கத்தக்க மின் கசிவு 30 மில்லி ஆம்பியருக்கு மேற்படுகையில், திறப்புத் தொல்லையை தவிர்க்கும் பொருட்டு சுற்றுவழிகள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுதல் வேண்டும் மற்றும் பிரிக்கப்பட்ட சுற்று வழி ஒவ்வொன்றிலும் உரிய இடங்களில் 30 மில்லி ஆம்பியருக்கு மேற்படாத மின் கசிவில் இயங்கக்கூடிய தனித்தனியான RCD பொருத்தப்பட வேண்டும்.
விளக்கம்: RCD என்பது RCCBs (மின்கசிவினால் இயங்கும் பிரிகலன்) RCBOs (மின் கசிவினால் இயங்கும் பிரிகலனுடனான ஒருங்கிணைந்த மிகை மின்னோட்டப் பாதுகாப்பு) முதலிய பல்வேறு வகைகளை உள்ளடக்கிய பொதுவான வார்த்தை. RCCB என்பது வசதிக்காக RCB என்றும்கூட அழைக்கப்படும் (RCCB/RCB). ELCB என்ற வாசகம் (நிலக் கசிவு சுற்று வழி பிரிகலன்) தர நிலைகளில் பயன்படுத்தப்படுவதில்லை;
3. 27ம் ஒழுங்குமுறை விதியில்,
(அ) (3) ஆம் உள்- ஒழுங்குமுறை விதிக்குப் பதிலாக, குறிப்பு நீங்கலாக, பின்வரும் உள்- ஒழுங்குமுறை விதி அமைக்கப்படும், அதாவது :-
"(3) உயர் அழுத்த மின்னிணைப்பிற்கான விண்ணப்பம், படிவம் - 4 இல் இருத்தல் வேண்டும். தற்காலிக மின் வழங்கல், வேளாண் மற்றும் குடிசை அல்லாத பிற தாழ்வழுத்த மின்னிணைப்பிற்கான விண்ணப்பம், தற்காலிக மின்னிணைப்பு, தாழ்வழுத்த வேளாண் மின்னிணைப்பு, மற்றும் தாழ்வழுத்த குடிசை மின்னிணைப்பு முறையே படிவம் - 1, 1A, 2, 3ன் படி இருத்தல் வேண்டும்." ;
(ஆ) 11 ஆம் உள் – ஒழுங்குமுறை விதிக்குப் பின்பு பின்வரும் உள்-ஒழுங்குமுறை விதிகள் புகுத்தப்படுதல் வேண்டும், அவை யாவன:-
" (11A) மின் வழங்கலுக்கான கோரிக்கை பலமாடி கட்டிடங்களுக்கானதாக இருக்கிறவிடத்து விண்ணப்பதாரர், விண்ணப்பத்துடன் சேர்த்து கட்டிட வரைபட ஒப்புதலளிப்பையும் திட்ட அனுமதியையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். உரிமதாரர், விண்ணப்பதாரரால் இணைத்தனுப்பப்பட்ட திட்ட அனுமதி / கட்டிட வரைபட ஒப்புதலளித்ததிலிருந்து கட்டிடத்தின் உயரத்தை சரிபார்த்தல் வேண்டும். வெளிப்படையான அளவீடு தேவையில்லை. பலமாடி கட்டிடத்தின் உயரமானது திட்ட அனுமதி / வரைபட ஒப்புதலளிப்பில் கொடுக்கப்பட்ட 15 மீட்டருக்கு அதிகமாக இருக்குமானால், மத்திய மின் அதிகார அமைப்பின் (CEA) திருத்தம் செய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் மின் வழங்கல் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விதிகள் 2010க்கிணங்க, மின் ஆய்வாளரிடமிருந்து தேவையான ஒப்புதலளிப்பு விண்ணப்பதாரரால் அளிக்கப்படுதல் வேண்டும்.
Aug. 11, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 113(11 B) தற்காலிக மின்வழங்கல் நிறுவுகைகள் உள்ளடங்கலான தாழ்வழுத்த மின்னழுத்தம் (240 V) மற்றும் இடைநிலை மின்னழுத்த நிறுவுகை ஒவ்வொன்றிற்குமான மின் வழங்கல், இந்த விதித் தொகுப்பின் 16 ஆம் ஒழுங்குமுறை விதியின் (2A) உள் – ஒழுங்குமுறை விதியில் குறித்துரைக்கப்பட்டவாறு, மின் அதிர்ச்சி மற்றும் நெருப்பு வழியான ஆபத்துக்கு எதிரான பாதுகாப்பு உள்ளது என்பதை உறுதி செய்யும் பொருட்டு, மின் கசிவை உணரும் சாதனத்தினால் (RCD) கட்டுப்படுத்தப்பட வேண்டும்." ;
4. 29 ஆம் ஒழுங்குமுறை விதியில், -
(அ) உள் –ஒழுங்குமுறை விதிகள் (11) மற்றும் (12)க்குப் பதிலாக, பின்வரும் ஒழுங்குமுறை விதிகள் அமைக்கப்படும், அவையாவன ;- "(11) பன்மாடி கட்டிடத்தில் (a) (சாய்வுத்தளம் / அடித்தளம் நீங்கலாக) மொத்தத் தளப்பரப்பு 900 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேலும் கொண்டிருக்கிற தாழ்வழுத்த மின்னிணைப்புகள் கோருகிற கட்டிடம் / வளாகம் எதுவும் அல்லது (b) அந்தக் கட்டிடத்திலுள்ள தாழ்வழுத்த மின்னிணைப்புகள் அனைத்தின் மொத்த தேவை 112 கிலோவாட்டிற்கு அதிகமாக இருக்குமானால், கீழே குறிப்பிடப்பட்டவாறு மின்மாற்றிகள், இணைப்பமைப்புகள் முதலியவற்றை நிறுவுவதற்காக போதுமான இடத்தை உரிமதாரருக்கு விலையின்றி கீழ்வருமாறு ஏற்பாடு செய்து தர வேண்டும்:
(a) பூட்டக்கூடிய வசதி, காற்றுப் போக்கிகள், போதுமான அளவுள்ள மின்வடக் கால்வாயுடன், 2.75 மீட்டர் செங்குத்தான தடையகற்றலுடன் 6 மீட்டர் x 4 மீட்டர் அளவுள்ள வலுவூட்டிய சிமெண்ட் கான்கிரீட்டிலான (RCC) மேற்கூரையுடைய மின்சார அறையானது மின்பகிர்மான மின்மாற்றி மற்றும் அதனுடன் இணைந்த இணைப்பமைப்புகளுடனானவற்றை நிறுவுவதற்காக பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பலமாடிக் கட்டிடங்களின் மின்நுகர்வோர் வளாகங்களுக்குள் தரை தளத்தில் வழங்க வேண்டும்.
(b) 10 மீட்டர் x 4 மீட்டர் அல்லது 5 மீட்டர் x 5 மீட்டர் அளவுள்ள, இரட்டை மின்கம்ப அமைப்பிற்கான திறந்தவெளியுடன் அல்லது 4 மீட்டர் x 4 மீட்டர் அளவுள்ள, ஒற்றை மின் கம்ப அமைப்பிற்கான, மனையிடம் மற்றும் மின்சுமை நிலைமைகளுக்கு ஏற்ப திறந்த வெளியிடமானது, மின்பகிர்மான மின்மாற்றி மற்றும் அதனுடன் இணைந்த இணைப்பமைப்புகள்/ அமைப்பு கொண்ட அல்லது அடிப்பீடம் / கான்கிரீட் அமைப்பு பீடத்தில் நிறுவுவதற்காக பிரதான நுழைவாயில் அருகில் மேம்பட்ட இடத்தில் மின் நுகர்வோர் ஏற்பாடு செய்து தர வேண்டும். அடிப்பீட கான்கிரீட் அமைப்பு ஏற்பாட்டை பொறுத்தவரையில், அத்தகைய பணியானது விண்ணப்பதாரரால் அவருடைய செலவில் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
(c) மின்பகிர்மான மின்மாற்றி, அதனுடன் இணைந்த சாதனம் / துணைக் கருவிகள் அதாவது இணைப்பில் காற்றுத் திறப்பான், கொம்பு இடைவெளி எரியிழை, மின்மாற்றி கோபுர அமைப்பு / கம்பம் அமைக்கும் பணியானது, உரிமதாரரின் செலவில் உரிமதாரரால் நிறைவேற்றப்படுதல் வேண்டும். மின்நுகர்வோர் வளாகத்தினுள் மின்பகிர்மான மின்மாற்றி நிறுவப்படும் போது, மின்நுகர்வோரின் வளாகத்தினுள் உயர் அழுத்த மின்தொடரின் எந்த ஒரு பகுதி உள்ளடங்கலாக மின்பகிர்மான மின்மாற்றியிலிருந்து மின்நுகர்வோரின் மின்னளவி வரையுள்ள நிறுவுதல் பணிகளுக்கான செலவுகள் விண்ணப்பதாரரால் ஏற்கப்படுதல் வேண்டும்.
(d) அப்பணிகளைச் செய்கையில், பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டவாறு, நிலத்திலிருந்து மற்றும் கிடைமட்டமான/ செங்குத்தான தடையகற்றல் பாதுகாப்பு இடைவெளி, பணி செய்வதற்கான பாதுகாப்பு இடைவெளி போன்றவை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
(12) (a) பின்வரும் வரன்முறைகளின்படியான வெளியிடமானது, (தகவல் தொழில்நுட்பம் தொடர்புடைய நோக்கங்கள் அல்லாத பிற தொழில்களுக்கான மின்னிணைப்புகள் தவிர) மின்னிணைப்புகள் தேவைப்படுகிற இடங்களில், ஒன்று (a) எதிர்காலத்தையும் சேர்த்து நேரிடக்கூடிய 5 மெகா வோல்ட் ஆம்பியருக்கு மேற்படுகிற / மேற்படும் மின் தேவை அல்லது (b) மொத்த தரைப்பரப்பு 30,000 சதுர மீட்டர் மற்றும் சாய்வுத்தளம் / அடித்தளம் நீங்கலாக அதற்கு மேல் கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டுமானம், போன்ற மொத்த தேவைக்கு துணை மின்நிலையம் / இணைப்பு மின் நிலையம் அமைப்பதற்கு இலவசமாக விண்ணப்பதாரரால் இடம் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.
(b) துணை – மின் நிலையங்களை நிறுவுவதற்கான நிலத் தேவையானது, கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்புடன் குறைந்தபட்ச வரம்பாக இருத்தல் வேண்டும்.
| துணை-மின் நிலையத்தின் மின்னழுத்தம் | தேவைப்படும் நிலம் சதுர மீட்டர்களில் | |
| வழக்கமான துணை மின் நிலையம் | அடக்கமான துணை மின் நிலையம் | |
| 33 கிலோவோல்ட் துணை-மின்நிலையம் | 850 (உட்புறம்) 3160 (வெளிப்புறம்) | 400 (20x20) அல்லது (10 x 40) அளவுடன் அணுகக் கூடிய அருகிலுள்ள ஏதேனும் இரண்டு பக்கங்கள் |
| 110 கிலோவோல்ட் துணை-மின் நிலையம் | 4000 (வெளிப்புறம்) | 1050 |
| 230 கிலோவோல்ட் துணை-மின் நிலையம் | 16000 (வெளிப்புறம்) | 1750 |
வளாகங்களின் மேம்பாட்டாளர்கள் / உரிமையாளர்கள் கூடுதல் மின் சுமைக்காக விண்ணப்பிக்கும் போதும் ஒவ்வொரு நிலையங்கள் முதலியவற்றில் கூடுதல் கட்டுமானங்கள் கட்டி மேம்படுத்தும்போதும் துணை-மின் நிலையம் நிறுவுவதற்காக மேலேயுள்ள நிலத் தேவை, தற்போதுள்ள மற்றும் கூடுதல், மின்சுமை /கட்டுமானப் பகுதி இரண்டையும் சேர்த்து, மொத்த மின்சுமை/மொத்த கட்டுமானப் பகுதிக்குப் பொருந்தத்தக்கதாகும்.
[Part VI—Sec. 2 114 TAMIL NADU GOVERNMENT GAZETTE(c) கட்டுமான நோக்கங்களுக்காக தற்காலிக மின்னிணைப்பிற்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் மேம்பாட்டாளர்களால் / உரிமையாளர்களால் துணை- மின் நிலையம் நிறுவுவதற்காக குறிப்பெடுக்கப்பட்ட பகுதி கட்டப்பட்ட பகுதிகள்; அணுகு சாலை, எதிர்காலத்திற்கான மனை மேம்பாட்டு திட்டம், ஏதேனுமிருப்பின் அதனுடன் வளாகங்களின் பிற வசதிகள் உள்ளடங்கலாக அனைத்தும் வரைபடத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு மின்பகிர்மான உரிமதாரரிடம் அளித்தல் வேண்டும்.
(d) மொத்தத் தேவையானது 5 மெகா வோல்ட் ஆம்பியருக்கு மேற்படுகிறவிடத்து / மேற்படக்கூடிய விடத்து அல்லது மொத்தத் தரைப்பரப்பு 30,000 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேலும் (சாய்வுதளம் / அடித்தளம் நீங்கலாக) கட்டப்பட்டிருக்கிறவிடத்து / கட்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறவிடத்து விண்ணப்பதாரர் வழக்கமான வெளிப்புற காற்று காப்பு இணைப்பமைப்பு (AIS) துணை-மின்நிலையம் நிறுவுவதற்குப் பொருத்தமான நிலத்தை ஒதுக்க வேண்டும். விண்ணப்பதாரர் வழக்கமான வெளிப்புற காற்றுகாப்பு துணை மின்நிலையம் அல்லாத பிற அடக்கமானஅல்லது உள்புற துணை – மின்நிலையத்திற்கு பொருத்தமான நிலத்தை ஒதுக்குவதற்குத் தெரிவு செய்யும் நேர்வில், விண்ணப்பதாரர் அடக்கமானஅல்லது உள்புற துணை-மின் நிலையம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட இடத்திற்கானதும் வழக்கமான வெளிப்புற காற்று காப்பு துணை-மின் நிலையத்திற்குமானதும் இடையே உள்ள வேறுபாட்டு தொகையை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கப்பட்ட மின் தேவையின் அளவு அல்லது உரிமதாரரால் மதிப்பிடப்பட்ட மின் தேவையின் அளவு, இவற்றில் எது உயர்ந்த அளவோ அந்த அளவுக்குச் சமமான துணை- மின் நிலையம் அமைப்பதற்காக நிலத்தை ஒதுக்க வேண்டும்.
விளக்கம் : (i) அடக்கமான மற்றும் வெளிப்புற வகையான மின் நிலையங்களுக்கிடையேயான அல்லது உட்புற மற்றும் வெளிப்புற வகையான மின்நிலையங்களுக்கிடையேயான செலவில் ஏற்படும் வேறுபாட்டுத் தொகையைக் கணக்கிடுகையில் பின்வரும் முறை பின்பற்றப்படும்:
(ii) உயர் மின்னழுத்த சாதனங்கள் சம்பந்தமான பகுதி, விண்ணப்பதாரர்களுக்கு மின்சாரம் ஊட்டப்படுகிற ஒரே ஒரு மின்மாற்றி, அதன் தாழ்வழுத்த மின்னூட்டி, அதனைச் சார்ந்த தாழ்வழுத்த பிரிகலன், மின்னோட்ட மின் மாற்றிகள், இணைப்பிகள், கட்டுப்பாட்டு சாதனங்கள் விண்ணப்பதாரருக்கு மின்சாரம் ஊட்டப்படுகிற தாழ்வழுத்த மின்னூட்டிகளின் எண்ணிக்கை, அவைகளின் மின்னூட்ட சாதனம், கட்டுபாட்டு சாதனங்கள், மின்வடங்கள், துணைக் கருவிகள், முதலியவற்றை வெளிப்புற துணை-மின் நிலையத்தின் இதே போன்ற ஒத்தப் பகுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவற்றிற்கிடையேயான செலவுத்தொகை வேறுபாட்டினைக் கணக்கிட வேண்டும்.
(iii) எஞ்சிய மின்மாற்றிகள், அதனுடன் தொடர்புடைய உயர்மின்னழுத்த மின்னிணைப்பிகள், தாழ்வழுத்த பிரிகலன்கள், மின்னோட்ட மின்மாற்றிகள், மின்னிணைப்பிகள், கட்டுப்பாட்டு சாதனங்கள், மற்ற பகுதிகளுக்கு மின்னூட்டம் அளிக்கின்ற தாழ்வழுத்த மின்னூட்டிகள், அவைகளின் மின்னூட்டி சாதனம், கட்டுப்பாட்டு சாதனங்கள், மின் வடங்கள், துணைக்கருவிகள் முதலியவற்றின் தொடர்பான செலவுத் தொகை உரிமதாரரால் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(e) உரிமதாரர், கீழேயுள்ளவாறு, மின் தேவையின் அளவைப் பொறுத்து பல்வேறு மின்னழுத்த அளவுகளில் இயங்கும் துணை-மின் நிலையங்களை நிறுவுவதற்கு பரிசீலனை செய்யலாம்.
| மொத்த மின் தேவை | து ை ண - மி ன் நி ை ல ய த் தி ன் மின்அழுத்த அளவு |
| 5 மெகா வோல்ட் ஆம்பியருக்கு மிகையாக ஆனால் 10 மெகா வோல்ட் ஆம்பியருக்குள் | 33 கிலோ வோல்ட் |
| 10 மெகா வோல்ட் ஆம்பியருக்கு மிகையாகவுள்ள, ஆனால், 50 மெகா வோல்ட் ஆம்பியருக்குள் | 110 கிலோ வோல்ட் |
| 50 மெகா வோல்ட் ஆம்பியருக்கு மிகையாக | 230 கிலோ வோல்ட் |
(ஆ) உள்- ஒழுங்குமுறை விதி (14) இல் (b) கூறுக்குப் பதிலாக பின்வரும் கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது ;- "(b) திறந்த வெளிமுறையில் மின்னளவு செய்ய 10 மீட்டர் x 4 மீட்டர் அல்லது 5 மீட்டர் x 5 மீட்டர் அளவுக்கு குறையாத இடத்தைத் திறந்த வெளியில் ஏற்பாடு செய்து தரவேண்டும். இத்தகைய அமைப்பு, வளாகத்தின் பிறபகுதிகளிலிருந்து தீக்காப்புச் சுவர்களால் பிரிக்கப்பட்டு கட்டிடத்தின் புற எல்லையில் அமைத்தல் வேண்டும். இந்தப் பகுதிகள் திட்ட வரை படத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு காட்டப்பட வேண்டும். ஒப்புதலளிப்பிற்காக உரிய அதிகாரம் கொண்ட அலுவலருக்கு அந்த திட்ட வரைபடம் அனுப்பப்படும் முன்பு அது பொறியாளருக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதல் பெற வேண்டும். மின் வழங்கல் முனையமானது, பொது சாலையிலிருந்து சுமை ஊர்தியின் (Lorry) மூலம் எளிதில் அணுகத்தக்கதாகவும் சாலையிருந்து தெளிவாகப் பார்வையிடக் கூடியதாகவும், பாதுகாப்புக் கூறுகள் திருப்தியளிக்கும் வகையிலும், பிரதான நுழைவாயிலிருந்து 30 மீட்டருக்குள்ளும் இருக்க வேண்டும். மின்னளவைப்பெட்டி, மின்னளவைப்பெட்டியின் உள்வருகிற மற்றும் வெளியே செல்கிற உயர்அழுத்த மின்கடத்தி முதலியவை நுழைவு வாயில் மூடியிருக்கும் நிலையிலும் பொதுச் சாலையிலிருந்து தெளிவாகத் தெரியும்படி இருக்க வேண்டும். ஆனால் தலைமை நிர்வாக அலுவலர் அல்லது தலைமைப் பொறியாளர் படிநிலைக்குக் குறையாத தலைமை நிர்வாக அலுவலரால் அதிகாரமளிக்கப்பட்ட பிற அலுவலர் எவரும், விண்ணப்பதாரருக்கு மேலேயுள்ளவாறு பிரதான நுழைவு வாயிலிருந்து 30 மீட்டருக்குள் மின்னளவை முனையத்தை நிறுவுவதற்கு இயலவில்லை என்றாலோ அல்லது 30 மீட்டருக்குள் மின்னளவை முனையத்தை நிறுவுவதற்கு இயலும் நிலையில் ஆனால் பிரதான நுழைவு வாயில் அல்லாத பிற வாயிலில் மட்டுமே நிறுவ இயலும் எனில், கீழ்வரும் நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கலாம்:
(i) விண்ணப்பதாரரின் வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள சாலையிலிருந்து சுமை ஊர்தியின் மூலம் எளிதில் அணுகத்தக்கதாகவும், நுழைவு வாயில் மூடி இருக்கும் போது கூட அந்த இடம் தெளிவாகப் பார்வையிட ஏதுவாகவும் இருக்க வேண்டும்;
(ii) பாதுகாப்பாகவும், சேதத்திற்கு உட்படாத வகையிலும் இருக்க வேண்டும்.
Aug. 11, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 115(iii) ஒழுங்கீன செயல்களினால் பாதிப்பிற்குள்ளாகக் கூடியதாக இருக்கக் கூடாது.
(iv) விண்ணப்பதாரரின் வளாகத்தின் வெளிப்புறத்தில் சரிபார்ப்பு மின்னளவை முனையத்தை நிறுவுவதற்கு இயலக் கூடியதாக இருக்க வேண்டும்.
(c) தூரத்தையும், அமைவிடத்தையும் தளர்வு செய்கையில், தொழில் நுட்ப ரீதியாக சமரசம் ஏதும் செய்யக்கூடாது. மின்னளவை முனையத்தை, பிரதான நுழைவுவாயிலிருந்து 30 மீட்டருக்குள் நிறுவுவதற்கு இயலாதிருக்கும் அல்லது 30 மீட்டருக்குள் மின்னளவை முனையத்தை நிறுவுவதற்கு இயலும் நிலையில் ஆனால் பிரதான நுழைவு வாயில் அல்லாத பிறவாயிலில் நிறுவ இயலும் விண்ணப்பதாரர்கள் உரிமதாரரால் முடிவு செய்யப்பட்ட இடத்தில் அந்த வளாகத்திற்கு வெளிப்புறத்தின் சரிபார்ப்பு மின்னளவு முனையத்தை நிறுவுவதற்கான செலவினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேலேயுள்ள தேவைகளுக்கு இணங்க தவறுதல், மின் வழங்கலை மறுக்கும் விளைவுகளுக்குட்படும்.
5. 31ஆம் ஒழுங்குமுறை விதியில், (3)ஆம் உள்-ஒழுங்குமுறை விதி அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது;-
(3) கோரும் நுகர்வோர், மேற்குறிப்பிட்ட காலத்துக்குள் தனது மின் வழங்கலைப் பெறத் தவறினால் அம்மின்வழங்கலைப் பெற்றுக் கொள்ளும்படி உயரழுத்த வகையில் மேலும் 3 மாதகாலமும், தாழ்வழுத்த வகையில் மேலும் ஒரு மாத காலமும் உள்ள அறிவிப்பு, நீட்டிக்கப்படும் கால அளவு உட்பட, அறிவிப்பு கால அளவிற்கான மாதாந்திர சிறுமக் கட்டணத்தை வசூலித்த பின்பு, கோரும் நுகர்வோருக்கு அனுப்பப்படும். இந்த அறிவிப்புக் காலத்துக்குள்ளும் அவர் மின்வழங்கலைப் பெறாவிட்டால் தாழ்வழுத்த வகையில் விண்ணப்பம் கெடு முடிந்ததாகக் கொள்ளப்பட்டு தள்ளுபடி செய்யப்படும். உயர் அழுத்தவகையில் இசைவுப் பத்திரத்தை முடித்து, விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கொள்ளப்படும். மின்னளவி காப்பு வைப்புத் தொகையைத் தவிர, மற்றபிற மின்னிணைப்புக் கட்டணம், காப்பு வைப்புத் தொகை, மேம்பாட்டுத் தொகை, மாதாந்திர சிறுமக் கட்டணம் போன்ற யாவும் இழப்புக்கு ஈடாகக் கழித்துக் கொள்ளப்படும். கோரும் நுகர்வோர், தனக்கேற்பட்ட அவரது கட்டுப்பாட்டில் இல்லாத நிலைமைகளால் மின் வழங்கல் பெற இயலாமல் போய்விட்டால், அத்தகையவருக்குக் காப்பு வைப்புத் தொகை, மேம்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் மின்னளவி காப்பு வைப்புத் தொகை ஆகியவை திரும்பத் தரப்படும்."
6. III ஆம் பின்னிணைப்பில்;-
(அ) 1 ஆம் படிவத்திற்குப் பதிலாக பின்வரும் படிவம் அமைக்கப்படும், அதாவது;-
"படிவம் 1
(தற்காலிக மின்வழங்கல், வேளாண்மை மற்றும் குடிசை மின்னிணைப்பு தவிர) தாழ்வழுத்த மின்னிணைப்பு விண்ணப்ப படிவம் (ஒரு முனை / மும் முனை) தாழ்வழுத்த மின்வழங்கல் கோரும் படிவம்
[விதித்தொகுப்புத் தொடர் 27(3) பார்க்க]
பெறுநர்
குறிப்பிட்ட பதவிப் பொறியாளர்
விண்ணப்பதாரரின் புகைப்படம் (உரிமதாரரின் முகவரி)
அய்யா,
1. நான்/நாங்கள், திரு/திருமதி......................
தந்தை / கணவர் பெயர்...............................
இதன்மூலம் தாங்களை.....................................................................................................................
இதன் பின்பு விவரிக்கப்பட்ட வளாகத்தில் ...........................................................................
நோக்கத்திற்காக மின்னிணைப்பு வழங்குமாறு இதனால் கேட்டுக் கொள்கிறேன்(றோம்).
2. நான் / நாங்கள் மேற்சொன்ன மின்னாற்றலுக்காக தமிழ்நாடு மின் பகிர்மான விதித் தொகுப்பு, மின் வழங்கல் விதித்தொகுப்பு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இது தொடர்பாக வெளியிடும் அறிவிப்புகள், ஆணைகள் ஆகியவற்றின்படி விதிக்கப்படும் விலை வீதத்திற்கு இணங்கக் கோரப்படும் மின் ஆற்றல், மின்னிணைப்புக் கட்டணங்கள், காப்பு வைப்புத் தொகை, மின்னளவி வாடகை, மேம்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்துவதற்கு ஒப்புக் கொள்கிறேன்(றோம்).
3. நான்/நாங்கள், நடைமுறையிலுள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண அட்டவணை பட்டியல் ........................ கீழ் விதித்துள்ள மின் கட்டணத்தின்படி விதிக்கப்பட விரும்புகிறேன்(றோம்).
4. நான்/நாங்கள், என்னுடைய / எங்களுடைய உண்மையான பயன்பாட்டிற்கு இதன் கீழ் விவரிக்கப்பட்ட வளாகத்தில் / இருப்பிடத்தில் தற்காலிக மின் வழங்கலைப் பயன்படுத்தவும் அவற்றின் மின்னாற்றலை உபயோகப்படுத்தவும் ஒப்புக் கொள்கிறேன்(றோம்).
5. நான்/நாங்கள் மின் வழங்கல் தொடரும் காலத்தில், சொத்தினை விற்பனை செய்யும் நேர்வில் அல்லது பிறவாறு தீர்வு செய்யும் நேர்வில் / வளாகத்தினை காலி செய்யும் நேர்வில் நான் / நாங்கள் எழுத்து வடிவிலான ஒரு மாத கால அறிவிப்பு கொடுக்கவும், உரிமதாரரிடம் நிலுவைத் தொகைகள் அனைத்தையும் செலுத்துவதற்கும் ஒப்புக்கொள்கிறோம். அவ்வாறு அறிவிப்பு கொடுக்கத் தவறுகையில், நான் / நாங்கள், மின்நுகர்வுக் கட்டணங்களின் நிலுவைத் தொகை, பிறவகையில் செலுத்த வேண்டிய தொகை, ஏதேனுமிருப்பின், அதையும் மற்றும்[Part VI—Sec. 2 116 TAMIL NADU GOVERNMENT GAZETTE உடன்பாடு முடிவுறுங்கால் எழக்கூடிய உரிமைக் கோரிக்கைகளையும் மற்றும் என்னுடைய / எங்களுடைய பெயரிலுள்ள பிற மின்னிணைப்புகளில் மேற்கண்ட நிலுவைகளையும் கட்டணங்களையும் சேர்த்து செலுத்துவதற்கு நானே / நாங்களே கட்டுப்படுகிறேன்(றோம்).
6. வளாகத்தின் விவரங்கள் :
(a) கதவு எண். மற்றும்/அல்லது வீட்டின் அல்லது வளாகத்தின் பெயர் :
(b) தெரு :
(c) நகரம் / கிராமம் மற்றும் வட்டம் :
(d) உரிமையாளரின் பெயர் :
(e) குடியிருப்பவரின் பெயர் :
(f) விண்ணப்பதாரரின் கடிதத் தொடர்பு முகவரி :
(g) தொடர்பு கொள்ளக் கூடிய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி :
7. என்னுடைய / எங்களுடைய மின் தேவைகள் பின்வருவன:
| (A) விளக்கு | முனைகளின் எண்ணிக்கை | முனைகளின் வாட்டளவு | மொத்த வாட்டளவு |
| (i) விளக்குகள் | - | - | - |
| (ii) மின்விசிறிகள் | - | - | - |
| (iii) தேவையான சுவர் செருகமைப்புகள் | - | - | - |
| (B) வீட்டு உபயோக மின் கருவிகள்: | - | - | - |
| (i) சமையல் கலன்கள் (Cookers) | - | - | - |
| (ii) தண்ணீர் சூடூட்டிகள் | - | - | - |
| (iii) குளிர்சாதனப் பெட்டி | - | - | - |
| (iv)காற்றுப் பதனிகள் (Air Conditioners) | - | - | - |
| (v) மின்தூக்கிகள்/ மின்னுயர்த்தி / இயங்குபடி (Lifts / Elevator / Escalator) | - | - | - |
| (vi) பிற பயன்பாடுகள் | |||
| (vii) தேவைப்படும் சுவர் செருகமைப்புகள் | |||
| (C) மின் திறன் சுமைகள் | |||
| 1. வீட்டு உபயோகம் | |||
| 2. தொழிற்பயன்பாடு | |||
| 3. பற்றவைப்பு (Welding) | |||
| 4. பிறபயன்பாடுகள் | |||
| 5. தேவைப்படும் சுவர் செருகமைப்புகள் |
8. விண்ணப்பிக்கப்பட்ட மின் தேவை, கிலோ வாட்டில் :
9. விண்ணப்பிக்கப்பட்ட நிறுவுகையில் தமிழ்நாடு மின்பகிர்மான விதித்தொகுப்பின் படி மின் கசிவு பாதுகாப்பு சாதனம் (RCD) அமைக்கப்பட்டுள்ளதா?
10. கம்பியமைப்பு பணி முடிவடைந்த நாள்:
11. விண்ணப்பதாரர்(கள்) பெயர் / பெயர்களில் தற்போதுள்ள மின்னிணைப்பு(கள்), எவையேனுமிருப்பின், அவற்றின் விவரங்கள் :
12. விண்ணப்பதாரர்(களின்) பெயர்களிலோ அல்லது அவர்களது பெயர்(களில்) உள்ள வளாகத்திலோ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்திற்கு செலுத்த வேண்டிய மின்நுகர்வுக் கட்டணங்கள் அல்லது பிற கட்டணங்கள் எவையேனும் பாக்கியுள்ளதா?
ஆம் எனில், விவரங்கள் (மின்இணைப்பு எண்ணுடன், பிரிவின் பெயர் / வட்டம் முதலியன ) அளிக்கவும்:
Aug. 11, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 117மின்நுகர்வோர், உரிமையாளர்கள், அனுபவிப்பவர்கள், மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் மற்றும் மின் வளங்குபவர்கள்
ஆகியோரால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை:
மின் விளக்குகள், மின்விசிறிகள், எரியிழைகள், இணைப்புகள், 250 வோல்டிற்கு மேற்படாத வீட்டு உபயோக மின் சாதனங்கள் மற்றும் துணைக்கருவிகள் போன்றவை தவிர, நிறுவுகையின் மின் திறன் அல்லது இயல்பை எந்த வழியிலும் மாற்றம் ஏற்படத்தக்கூடிய கூடுதல் பணிகள், மாற்றுப்பணிகள், பழுது பார்ப்புகள், நேரமைவு செய்தல்கள் உள்ளடங்கலான மின் நிறுவுகைப் பணி எதுவும் மின்நுகர்வோர், மின்வழங்குநர், உரிமையாளர் அல்லது அனுபோகதாரர் ஆகியோருக்கு அல்லது அவர்கள் சார்பாக, மாநில அரசால் இதன் பொருட்டு உரிமம் வழங்கப்பட்ட மின் ஒப்பந்ததாரரால், தகுதியுடைமைச் சான்றிதழ் வைத்திருக்கிற நபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மற்றும் மாநில அரசால் வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு வைத்திருக்கிற நபரால் அன்றி பிற நபர்கள் மூலம் நிறைவேற்றக்கூடாது.
நான் / நாங்கள் மேற்சொன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிந்துள்ளோம் மற்றும் அதனை கடைப்பிடிக்க ஒப்புக்கொள்கிறோம்.
நான் / நாங்கள் அவ்வப்போது ஆணையத்தினால் விதிக்கப்படும் பொருந்தத்தக்க மின் கட்டணம் / சிறுமக் கட்டணங்கள் / நிலையான கட்டணங்கள் / மேல் கட்டணம் முதலியவற்றை உரிமதாரருக்கு செலுத்துவதற்கு ஒப்புக்கொள்கிறேன்(றோம்).
நான் / நாங்கள் தமிழ்நாடு மின் வழங்கல் விதித்தொகுப்பு, மின்பகிர்மான விதித்தொகுப்பு மற்றும் பொருந்தத்தக்க சட்டம், தொகுப்புச் சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றில் வகுத்தமைக்கப்பட்டுள்ள விவரக்குறிப்பீடுகள், நிபந்தனைகள் மற்றும் வகைமுறைகள் அனைத்திற்கும் மற்றும் அப்போதைக்கு நடைமுறையிலுள்ள அதன் மாற்றமைவுகள் எவற்றிற்கும் அல்லது அவ்வப்போது ஒப்புதலளிக்கப்படும் திருத்தியமைத்தல்கள், திருத்தங்களுக்கு உட்பட்டும், இணங்கி ஒப்புக் கொள்கிறேன்(றோம்).
(குறிப்பு : இந்த ஏற்புறுதியானது, உரிமதாரருடன் செய்யப்பட்ட எழுத்து வடிவிலான தனிப்பட்ட ஒப்பந்தத்திற்கு தடையேற்படுத்தாது.) இடம் :
விண்ணப்பதாரர்(களின்) கையொப்பம் நாள் :
பெயர்(கள்)
குறிப்பு : இந்த விண்ணப்பமானது பின்வரும் ஆவணங்களுடன் சேர்ந்து விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
(i) சுய சான்றொப்பமிட்ட விற்பனை ஆவணம் (அல்லது) பாகப்பிரிவினை ஆவணம் (அல்லது) கொடை அறுதியாவணம் (அல்லது) ஒதுக்கீட்டுக் கடிதம் (அல்லது) கணினி பட்டா (அல்லது) வருவாய்த் துறை அலுவலர்கள் வழங்கப்பட்ட உடைமைச் சான்றிதழ் (அல்லது) நீதிமன்றத் தீர்ப்பு அல்லது அண்மையில் செலுத்தப்பட்ட சொத்துவரி ரசீது போன்ற ஆவணத்தின் நகல்.
(ii) கூட்டுச் சொத்தாக இருக்கும் நேர்வில், மேலேயுள்ள குறிப்பு (i) இல் குறித்துரைக்கப்பட்ட தாய்பத்திரங்களின் நகலுடன் சேர்த்து உடைமையை நிரூபிப்பதற்கான ஆவணத்தின் மற்றும் உடன்-உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட சம்மதக் கடிதத்தில் சுய சான்றொப்பமிட்ட நகல்கள். சம்மதக் கடிதம் அளிக்காத பட்சத்தில் காப்புறுதி பத்திரம், உயர்த்தப்பட்ட காப்பு வைப்புத் தொகையுடன்.
(iii) விண்ணப்பதாரர் உரிமையாளராக இல்லாதிருப்பாரானால் 5ஆம் எண் படிவத்தில் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட சம்மதக் கடிதம் அல்லது குடியிருப்பதற்கான செல்லத்தக்க நிரூபணம் மற்றும் 6ஆம் எண் படிவத்தில் காப்புறுதி பத்திரம்.
உரிமதாரரின் பயன்பாட்டிற்கு மட்டும்
ஒப்புகை
விண்ணப்பதாரர்(களின்) பெயர் :
முகவரி :
பெறப்பட்ட தேதி :
சுட்டுகை எண் :
மின்வழங்கல் வகை :
மின்பகிர்மான உரிமதாரரின் கையொப்பம் மற்றும் முத்திரை பெயர் மற்றும் பதவிப் பெயர்.
(ஆ) அவ்வாறு பதிலாக அமைக்கப்பட்ட படிவம் I க்குப் பின்பு பின்வரும் படிவம் புகுத்தப்படும், அதாவது:-
[Part VI—Sec. 2 118 TAMIL NADU GOVERNMENT GAZETTE"படிவம் 1 A
தற்காலிக மின்னிணைப்பு விண்ணப்ப படிவம்
(ஒருமுனை / மும்முனை) தற்காலிக மின்னிணைப்பு கோரும் படிவம்
(விதித்தொகுப்புத் தொடர் 27(3) பார்க்க)
பெறுநர்
விண்ணப்பதாரரின் புகைப்படம் குறிப்பிட்ட பதவிப் பொறியாளர்
(உரிமதாரரின் முகவரி)
அய்யா,
1. நான் / நாங்கள், /திரு / திருமதி ............................................
தந்தை / கணவர் பெயர்............................................................
இதன்மூலம் தாங்களை இதன்பின்பு விவரிக்கப்பட்ட வளாகத்தில் (அல்லது) இருப்பிடத்தில் ………. நோக்கத்திற்காக தற்காலிக மின்னிணைப்பு வழங்குமாறு இதனால் கேட்டுக்கொள்கிறேன்(றோம்).
2. நான் / நாங்கள் மேற்சொன்ன மின்னாற்றலுக்காக, தமிழ்நாடு மின்பகிர்மான விதித்தொகுப்பு, மின்வழங்கல் விதித் தொகுப்பு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இது தொடர்பாக வெளியிடும் அறிவிப்புகள், ஆணைகள் ஆகியவற்றின்படி விதிக்கப்படும் விலை வீதத்திற்கு இணங்கக் கோரப்படும் மின் ஆற்றல், மின்னிணைப்புக் கட்டணங்கள், காப்பு வைப்புத்தொகை, மின்னளவி வாடகை, மேம்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்துவதற்கு ஒப்புக்கொள்கிறேன்(றோம்).
3. நான்/ நாங்கள், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடைமுறையிலுள்ள மின்கட்டண அட்டவணை பட்டியல் ....................... கீழ் விதித்துள்ள மின் கட்டணத்தின் படி விதிக்கப்பட விரும்புகிறேன்(றோம்).
4. நான்/நாங்கள், என்னுடைய /எங்களுடைய உண்மையான பயன்பாட்டிற்கு இதன்கீழ் விவரிக்கப்பட்ட வளாகத்தின் இருப்பிடத்தில் தற்காலிக மின் வழங்கலைப் பயன்படுத்தவும், அவற்றில் மின்னாற்றலை உபயோகப்படுத்தவும் ஒப்புக்கொள்கிறேன்(றோம்).
5. நான்/நாங்கள் மின்வழங்கல் தொடரும் காலத்தில், சொத்தினை விற்பனை செய்யும் நேர்வில் அல்லது பிறவாறு தீர்வு செய்யும் நேர்வில் / வளாகத்தினை காலி செய்யும் நேர்வில், நான்/நாங்கள் எழுத்து வடிவிலான ஒரு மாத கால அறிவிப்புக் கொடுக்கவும், உரிமதாரரிடம் நிலுவைத் தொகைகள் அனைத்தையும் செலுத்துவதற்கும் ஒப்புக்கொள்கிறேன்(றோம்). அவ்வாறு கொடுக்கத் தவறுகையில் நான் / நாங்கள் தாற்காலிக மின்வழங்கலைப் பயன்படுத்திய முழுக்கால அளவிற்கு வளாகத்தில் நுகரப்பட்ட மின்னாற்றலுக்கு நானே/ நாங்களே பொறுப்புடையவராவோம். இந்த மின்னிணைப்பில் ஏதேனும் பிறவகையில் செலுத்த வேண்டிய பாக்கித் தொகை இருக்குமானால், நான் / நாங்கள் எனது / எங்களது பெயரிலுள்ள மின்னிணைப்புகளின் எண்களில்....................... (இருக்கும் பட்சத்தில்) அத்தகைய பாக்கித் தொகைகளை சேர்த்துக் கொள்வதற்கு ஒப்புக்கொள்கிறேன்(றோம்).
6. தற்காலிக மின்னிணைப்பு கோரப்படுகிற வளாகத்தின் / இருப்பிடத்தின் உடைமை :
a. நிலத்தின் புல எண் (S.F.No.) / கதவு எண் :
b. தெரு :
c. நகரம் / கிராமம் :
d. வளாகத்தின் இட அடையாளம் :
e. வட்டம் :
f. மாவட்டம் :
g. உரிமையாளரின் பெயர் :
h. குடியிருப்பவரின் பெயர் :
i. விண்ணப்பதாரரின் கடிதத் தொடர்பு முகவரி :
j. தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் :
7. வளாகத்தின் விவரம் :
a. மனையின் பரப்பு :
b. கட்டிடத்தின் மொத்தப் பரப்பு / அனைத்துத் தளங்களின் தளப் பரப்பு :
c. கட்டப்பட வேண்டிய தளங்களின் எண்ணிக்கை :
(அடித்தளம் (Basement) / சாய்வுத்தளம் (Stilt) / தரை தளம் (Ground fl oor) / பிற தளங்கள் (Other fl oors) என விவரமாக அளிக்கப்பட வேண்டும்)Aug. 11, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 119 d. மேலே குறிப்பிடப்பட்ட தளங்களுக்காகவும் கட்டிடங்கள் கட்டுவதற்காகவும் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பிடமிருந்து கட்டிட வரைபடத்தின் ஒப்புதலளிப்புடன் திட்ட அனுமதி பெறப்பட்டிருக்கிறதா?:
e. ஒப்புதலளிக்கப்பட்ட கட்டிட வரைபடத்துடன் திட்ட அனுமதியின் நகல் இணைக்கப்பட்டுள்ளதா? :
f. திட்ட அனுமதியின்/திட்ட வரைபட ஒப்புதலளிப்பின்படி கட்டிடத்தின் உயரம் :
(திட்ட வரைபட அனுமதியில் காட்டப்பட்டவாறு கட்டிடத்தின் உயரம் 15 மீட்டருக்கு மேற்படுமானால், மின் ஆய்வாளரிடமிருந்து ஒப்புதலளிப்பு பெறப்பட வேண்டும்.)
g. மின்னாக்கி / மின்தூக்கி நிறுவப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதா? (ஆம் எனில், மின் ஆய்வாளர் அலுவலகத்திலிருந்து ஒப்புதலளிப்பு பெறப்பட வேண்டும்.)
h. உயர் அழுத்த / தாழ்வழுத்த மின்தொடர் எதுவும் வளாகத்தினுள் அல்லது அதனருகில் செல்கிறதா? (ஆம் எனில், நடைமுறையிலுள்ள பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளின்படி போதிய பாதுகாப்பு தூரத்துடன் கட்டிடம் கட்டப்பட வேண்டும் அல்லது இயலும் தன்மையின் நிபந்தனைக்கு உட்பட்டு, விண்ணப்பதாரரின் செலவில் அந்த மின் தொடர்கள் வழி மாற்றப்பட வேண்டும்.) 8. தற்காலிக மின்னிணைப்புக்கால அளவு முடிவடைந்த பின்பு அந்த மின்னிணைப்பு நிரந்தரமாகத் தேவைப்படுகிறதா?
இல்லை எனில், (i) தற்காலிக மின் வழங்கல்தேவைப்படக்கூடிய குறிப்பிட்ட நோக்கம்:
1. தாற்காலிக மின் வழங்கல் தேவைப்படும் கால அளவு:
9. மின்னிணைப்பு செய்யப்பட வேண்டிய சுமைகளின் விவரங்கள் :
| (A) | மின்விளக்கு | முனைகளின் எண்ணிக்கை | முனைகளின் வாட்டளவு | மொத்த வாட்டளவு |
| (i) | மின்விளக்குகள் | - | - | - |
| (ii) | மின்விசிறிகள் | - | - | - |
| (iii) | தேவையான செருகமைப்புகள் | - | - | - |
| (B) | மின்திறன் சுமைகள் | - | - | - |
| (i) | இயக்கிகள் (Motors) | - | - | - |
| (ii) | பற்றவைப்பு (Welding) | - | - | - |
| (iii) | வெட்டும் இயந்திரம் (Cutting Machines) | - | - | - |
| (iv) | எடுத்துச் செல்லத்தக்க துணைக் கருவிகள் (Portable Appliances) | - | - | - |
| (v) | மின்தூக்கிகள் (Lifts) / மின்னுயர்த்திகள் (Elevators) | - | - | - |
| (vi) | பிற கருவிகள் | - | - | - |
| (vii) | தேவையான செருகமைப்புகள் | - | - | - |
10. விண்ணப்பிக்கப்படும் மின் தேவை, கிலோ வாட்டில் :
11. விண்ணப்பிக்கப்பட்ட நிறுவுகையில் மின்பகிர்மான விதித்தொகுப்பின் படி மின்கசிவு பாதுகாப்பு சாதனம் (RCD) அமைக்கப்பட்டுள்ளதா?:
12. கம்பியமைப்பு பணி முடிவடைந்த நாள் :
13. விண்ணப்பதாரர்களின் பெயர்களில் உள்ள மின்னிணைப்புகள் எவையேனுமிருப்பின், அவற்றின் விவரங்கள்:
14. விண்ணப்பதாரர்களின் அல்லது வளாகத்தின் பெயர்களில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு பிறவகையில் செலுத்த வேண்டிய மின்நுகர்வுக் கட்டணங்கள் அல்லது பிற கட்டணங்கள் எவையும் பாக்கியுள்ளதா?
ஆம் எனில், விவரங்கள் (மின் இணைப்பு எண்ணுடன், பிரிவின் பெயர் / வட்டம் முதலியவை ) அளிக்கவும் :
விண்ணப்பதாரர்களால் வழங்கப்பட வேண்டிய இடம்:
1. பன்மாடிக் கட்டிடத்தில் மற்றும் (அ) சாய்வுத் தளம் / அடித்தளம் நீங்கலாக மொத்த தரைப் பரப்பு 900 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேலும் கொண்டிருக்கிற தாழ்வழுத்த மின்னிணைப்பு கோருகிற கட்டிடம் / வளாகம் எதுவும் அல்லது (ஆ) அந்தக் கட்டிடத்திலுள்ள தாழ்வழுத்த மின்னிணைப்புகள் அனைத்திலும் மொத்த மின் தேவை 112 கிலோ வாட்டிற்கு மேற்படுமாயின் போதிய இடத்தை, தமிழ்நாடு மின்பகிர்மான விதித் தொகுப்பின் 29 (11) ஆம் ஒழுங்குமுறை விதியில் கூறப்பட்டவாறு மின் மாற்றிகள், இணைப்பமைப்புகளை நிறுவுவதற்கு உரிமதாரருக்கு விலையின்றி ஏற்பாடு செய்து தர வேண்டும்.
[Part VI—Sec. 2 120 TAMIL NADU GOVERNMENT GAZETTE2. தமிழ்நாடு மின்பகிர்மான விதித் தொகுப்பின் 29(12) ஆம் ஒழுங்குமுறை விதியில் குறித்துரைக்கப்பட்ட வரன்முறைகளின் படி இடமானது (தகவல் தொழில் நுட்பம் தொடர்புடைய நோக்கங்கள் அல்லாத பிற தொழில்களுக்காக மின்னிணைப்புகள் தவிர), மின்னிணைப்புகள் தேவைப்படுகிற இடங்களில், ஒன்று (அ) எதிர்காலத்தில் நேரிடக்கூடிய 5 மெகா வோல்ட் ஆம்பியருக்கு மேற்படுகிற விடத்து / மேற்படக்கூடிய விடத்து அல்லது மொத்த தரைப் பரப்பு 30,000 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேலும் (சாய்வு தளம் / அடித்தளம் நீங்கலாக) கட்டப்படுகிற விடத்து அல்லது கட்டப்படுவதற்கு உத்தேசிக்கப்படுகிற விடத்து துணை மின் நிலையம் / இணைப்பு மின் நிலையம் அமைப்பதற்கு இலவசமாக விண்ணப்பதாரர் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.
3. உயர் அழுத்த மின்னிணைப்புகளுக்கான உள்ளக மின்னளவி அமைக்கப் போதுமான அளவுடைய மின்வடக் கால்வாயும், வெளியேற்றும் மின்விசிறியும் பூட்டும் ஏற்பாடும், தரைவிட்டத்தில் தளங்களுக்கு இடையில் 3.7 மீட்டருக்கும் குறையாத குத்துயரமும் 5 மீட்டர் X 6 மீட்டர் அளவுக்கும் குறையாத தளப்பரப்பும் வலுவூட்டிய சிமெண்ட்டுக் கற்காரைக் கூரையும் அமைந்த மின்சார அறையைத் தரைத்தளத்தில், உரிமதாரர் சாதனங்களை நிறுவுவதற்காக, ஏற்பாடு செய்து தரவேண்டும். இந்த அறை தீக்காப்பும், வானிலைக்காப்பும் கொண்டதாக அமையவேண்டும். திறந்த வெளிமுறையில் மின்னளவு செய்ய 10 மீட்டர் X 4 மீட்டர் அல்லது 5 மீட்டர் X 5 மீட்டர் அளவுக்கு குறையாத இடத்தைத் திறந்த வெளியில் ஏற்பாடு செய்து தரவேண்டும். இத்தகைய அமைப்பு, வளாகத்தின் பிறபகுதிகளிலிருந்து தீக்காப்புச் சுவர்களால் பிரிக்கப்பட்டு கட்டிடத்தின் புற எல்லையில் அமைத்தல் வேண்டும். இந்தப் பகுதிகள் திட்ட வரை படத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு காட்டப்பட வேண்டும். ஒப்புதலளிப்பிற்காக உரிய அதிகாரம் கொண்ட அலுவலருக்கு அந்த திட்ட வரைபடம் அனுப்பப்படும் முன்பு அது பொறியாளருக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதல் பெற வேண்டும். மின் வழங்கல் முனையமானது, பொது சாலையிலிருந்து சுமை ஊர்தியின் (Lorry) மூலம் எளிதில் அணுகத்தக்கதாகவும் சாலையிருந்து தெளிவாகப் பார்வையிடக் கூடியதாகவும், பாதுகாப்புக் கூறுகள் திருப்தியளிக்கும் வகையிலும், பிரதான நுழைவாயிலிருந்து 30 மீட்டருக்குள்ளும் இருக்க வேண்டும்.
மின்நுகர்வோர், உரிமையாளர்கள், அனுபவிப்பவர்கள், மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் மற்றும்
மின் வளங்குபவர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை:
மின் விளக்குகள், மின்விசிறிகள், எரியிழைகள், இணைப்புகள், 250 வோல்டிற்கு மேற்படாத வீட்டு உபயோக மின் சாதனங்கள் மற்றும் துணைக்கருவிகள் போன்றவை தவிர, நிறுவுகையின் மின் திறன் அல்லது இயல்பை எந்த வழியிலும் மாற்றம் ஏற்படத்தக்கூடிய கூடுதல் பணிகள், மாற்றுப்பணிகள், பழுது பார்ப்புகள், நேரமைவு செய்தல்கள் உள்ளடங்கலான மின் நிறுவுகைப் பணி எதுவும் மின்நுகர்வோர், மின்வழங்குநர், உரிமையாளர் அல்லது அனுபோகதாரர் ஆகியோருக்கு அல்லது அவர்கள் சார்பாக, மாநில அரசால் இதன் பொருட்டு உரிமம் வழங்கப்பட்ட மின் ஒப்பந்ததாரரால், தகுதியுடைமைச் சான்றிதழ் வைத்திருக்கிற நபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மற்றும் மாநில அரசால் வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு வைத்திருக்கிற நபரால் அன்றி பிற நபர்கள் மூலம் நிறைவேற்றக்கூடாது.
நான் / நாங்கள் மேற்சொன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிந்துள்ளேன்(ளோம்) மற்றும் அதனை கடைப்பிடிக்க ஒப்புக்கொள்கிறேன்(றோம்).
நான் / நாங்கள் அவ்வப்போது ஆணையத்தினால் விதிக்கப்படும் பொருந்தத்தக்க மின் கட்டணம் / சிறுமக் கட்டணங்கள் / நிலையான கட்டணங்கள் / மேல் கட்டணம் முதலியவற்றை உரிமதாரருக்கு செலுத்துவதற்கு ஒப்புக்கொள்கிறேன்(றோம்).
நான் / நாங்கள் தமிழ்நாடு மின் வழங்கல் விதித்தொகுப்பு, மின்பகிர்மான விதித்தொகுப்பு மற்றும் பொருந்தத்தக்க சட்டம், தொகுப்புச் சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றில் வகுத்தமைக்கப்பட்டுள்ள விவரக்குறிப்பீடுகள், நிபந்தனைகள் மற்றும் வகைமுறைகள் அனைத்திற்கும் மற்றும் அப்போதைக்கு நடைமுறையிலுள்ள அதன் மாற்றமைவுகள் எவற்றிற்கும் அல்லது அவ்வப்போது ஒப்புதலளிக்கப்படும் திருத்தியமைத்தல்கள், திருத்தங்களுக்கு உட்பட்டும், இணங்கி ஒப்புக் கொள்கிறேன்(றோம்).
(குறிப்பு : இந்த ஏற்புறுதியானது, உரிமதாரருடன் செய்யப்பட்ட எழுத்து வடிவிலான தனிப்பட்ட ஒப்பந்தத்திற்கு தடையேற்படுத்தாது.) இடம் :
விண்ணப்பதாரர்(களின்) கையொப்பம் நாள் :
பெயர்(கள்)
குறிப்பு : இந்த விண்ணப்பமானது பின்வரும் ஆவணங்களுடன் சேர்ந்து விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
(i) சுய சான்றொப்பமிட்ட விற்பனை ஆவணம் (அல்லது) பாகப்பிரிவினை ஆவணம் (அல்லது) கொடை அறுதியாவணம் (அல்லது) ஒதுக்கீட்டுக் கடிதம் (அல்லது) கணினி பட்டா (அல்லது) வருவாய்த் துறை அலுவலர்களால் வழங்கப்பட்ட உடைமைச் சான்றிதழ் (அல்லது) நீதிமன்றத் தீர்ப்பு அல்லது அண்மையில் செலுத்தப்பட்ட சொத்துவரி ரசீது போன்ற ஆவணத்தின் நகல்.
(ii) கூட்டுச் சொத்தாக இருக்கும் நேர்வில், மேலேயுள்ள குறிப்பு (i) இல் குறித்துரைக்கப்பட்ட தாய்பத்திரங்களின் நகலுடன் சேர்த்து உடைமையை நிரூபிப்பதற்கான ஆவணத்தின் மற்றும் உடன்-உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட சம்மதக் கடிதத்தில் சுய சான்றொப்பமிட்ட நகல்கள். சம்மதக் கடிதம் அளிக்காத பட்சத்தில் காப்புறுதி பத்திரம், உயர்த்தப்பட்ட காப்பு வைப்புத் தொகையுடன்.
(iii) விண்ணப்பதாரர் உரிமையாளராக இல்லாதிருப்பாரானால் 5ஆம் எண் படிவத்தில் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட சம்மதக் கடிதம் அல்லது குடியிருப்பதற்கான செல்லத்தக்க நிரூபணம் மற்றும் 6 ஆம் எண் படிவத்தில் காப்புறுதி பத்திரம்.
(iv) தாழ்வழுத்த மின்னிணைப்புகள் இருக்கும் நேர்வில், தரையின் பரப்பு 900 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் இருந்தாலோ அல்லது மின் தேவை 112 கிலோவாட்டிற்கு மேல் இருந்தாலோ, தமிழ்நாடு மின் பகிர்மான விதித்தொகுப்பின் 29 (11) ஆம் உள் ஒழுங்குமுறை விதியின்படி மின்மாற்றியை நிறுவுவதற்காக ஒதுக்கிவைக்கப்பட்ட பரப்பிடத்தின் ஒப்புதலளிக்கப்பட்ட திட்ட வரைபடம்Aug. 11, 2021] TAMIL NADU GOVERNMENT GAZETTE 121 அல்லது
தமிழ்நாடு மின்பகிர்மான விதித்தொகுப்பின் 29 (12) ஆம் உள் ஒழுங்குமுறை விதியில் நிபந்தனைகளுடன் குறித்துரைக்கப்பட்டவாறான வரம்பிற்கு மிகையான மின் தேவை / பரப்பிடமாக இருக்கும் நேர்வில், துணை மின் நிலையம் நிறுவுவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட பரப்பிடத்தின் மற்றும் அணுகு சாலையின் ஒப்புதலளிக்கப்பட்ட திட்ட வரை படம்.
அல்லது
உட்புறத்தில் / வெளிப்புறத்தில் மின்னளவி வைப்பதற்காகவும், தமிழ்நாடு மின்பகிர்மான விதித்தொகுப்பின் 29(14) ஆம் உள் ஒழுங்குமுறை விதியில் நிபந்தனைகளுள் குறித்துரைக்கப்பட்டவாறான உயர்அழுத்த மின்னிணைப்பாக இருக்கும் நேர்வில் அணுகு சாலையுடன் மின்னளவி அமைவிடத்திற்காகவும் மின்னளவி முனையம் ஒதுக்கிவைக்கப்பட்ட பரப்பிடத்தின் ஒப்புதலளிக்கப்பட்ட திட்ட வரை படம்.
உரிமதாரரின் பயன்பாட்டிற்கு மட்டும்
ஒப்புகை
விண்ணப்பதாரரின் பெயர் :
முகவரி :
ரசீதின் நாள் :
சுட்டுகை எண் :
மின்வழங்கல் வகை :
மின்பகிர்மான உரிமதாரரின் கையொப்பம் மற்றும் முத்திரை பெயர் மற்றும் பதவிப்பெயர் (தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சு. சின்னராஜலு,
செயலாளர், சென்னை&600 032, 2021 ஜூலை 26.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
விளக்கவுரை
மின்நுகர்வோரின் வளாகத்திற்கு உள்ளே அமைக்கவேண்டிய மின்கசிவு பாதுகாப்பு சாதனம் மற்றும் மின் ஆய்வாளரிடமிருந்து பெறப்பட வேண்டிய அவசியமான ஒப்புதல் போன்ற மத்திய மின்சார அதிகார அமைப்பின் ஒழுங்குமுறை விதிகளில் ஆணையிடப்பட்ட பாதுகாப்பு வரன் முறைகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் சம்பந்தமாக மின்நுகர்வோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மின் அதிர்ச்சி மற்றும் தீவிபத்துகளுக்கு எதிராக பொதுப் பாதுகாப்பு திறம்பட செயற்படுத்தப்பட, குறிப்பான விதிமுறைகளை பகிர்மான விதித்தொகுப்பில் சேர்க்க வேண்டியுள்ளது. மேலும் "அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் தெளிவாக பொருள் வரையறை செய்யப்பட வேண்டியுள்ளது.
தாழ்வழுத்த விண்ணப்பமானது, ஒரே விண்ணப்பதாரருக்காக மட்டுமே பொருந்தக் கூடிய தற்போதைய வடிவத்தில் உடன் உரிமையாளர்களால் செய்யப்படும் கூட்டு விண்ணப்பத்திற்காக வகை செய்ய வேண்டியுள்ளது.
உரிமதாரர் திடீர் ஆய்வின்போது எளிதாக அந்த அமைப்பிடத்திற்குச் செல்ல முடிவதை உறுதி செய்யும் பொருட்டும், உயர் அழுத்த மின்னிணைப்பில் மின்னளவி முனைய அமைவிடத்திற்கான உகந்த நிபந்தனைகளை நடைமுறைக்கேற்றவாறு வரையறுத்தல் மற்றும் தலைமை வாயில் அல்லது முதன்மை அமைவிடத்திலிருந்து குறித்துரைக்கப்பட்ட தூரத்திற்குள் மின்னளவி முனையத்தை நிறுவுவதற்கு சாத்தியமில்லாதிருக்கிறவிடத்து மாற்று தீர்வு ஏற்படுத்துதல்.
மரபுப்படியான இரட்டை கம்ப வகை மின் மாற்றியை நிறுவுவதற்காக இருந்து வரும் வரைமுறைக்குக் கூடுதலாக மின்நுகர்வோரின் வளாகத்திற்குள்ளே ஒற்றைக்கம்ப வகை மின்மாற்றியை நிறுவுவதற்கான வகைமுறையைச் சேர்த்தல்
தற்காலிக மின்னிணைப்பிற்காகத் தனிப்பட்ட நிபந்தனைகள் இருக்கையில், மின்மாற்றி அல்லது துணை மின் நிலையத்தின் நிறுவுகைக்காக இடம் மற்றும் பிற வகைமுறைகளுக்கு ஏற்பாடு செய்வதற்கான குறித்தவகைத் தேவைகள், தொடக்க நிலையிலேயே விண்ணப்பதாரருக்கு மிகவும் தெளிவாகக் குறிப்பிடுவது தேவையாகிறது; மற்றும் அந்த நோக்கத்திற்காக மேற்சொன்ன வகைக்கு தனிப்பட்ட படிவத்தை வகுத்துரைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உரிமதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வகை அல்லாத பிற துணை மின்நிலையத்தின் வகைக்காக அளிக்கப்பட்ட இடத்தினை விண்ணப்பதாரர் முடிவெடுக்கிற போது துணை மின் நிலையத்தின் வகைகளுக்கு இடையேயான செலவுத்தொகை வேறுபாட்டினை கணக்கிடுகையில் தெளிவான முறையை ஏற்படுத்துதல்.
மின் வழங்கல் பெறுவதற்கான அறிவிப்புக் காலத்தில் செலுத்த வேண்டிய மாதந்திர சிறுமக் கட்டணத்தை, ஐயப்பாட்டை தவிர்க்கும் வகையில் தெளிவாக குறிப்பிட வேண்டியுள்ளது.
இந்தத் திருத்தம் மேலேயுள்ள பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்க விழைகிறது.
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சு. சின்னராஜலு, சென்னை&600 032, 2021 ஜூலை 26.
செயலாளர்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
[Part VI—Sec. 2 122 TAMIL NADU GOVERNMENT GAZETTEபின்னிணைப்பு
தமிழ்நாடு மின்பகிர்மான விதித்தொகுப்பு
| வரிசை எண். | இருந்துவரும் வகைமுறை | திருத்தப்பட்ட வகைமுறை |
| 1. | 2. வரையறைகள் (1) *** *** (a) *** *** (b) *** | 2. வரையறைகள் (1) *** (a) *** (aa) "அதிகார அமைப்பு" என்பது, 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் 70ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட மத்திய மின்சார அதிகார அமைப்பு என்று பொருள்படும். (b) *** |
| 2. | 16. பணிப்பாதுகாப்புக் கூறுபாடுகள் (Safety aspects) (1) *** (2) *** | 16. பணிப்பாதுகாப்புக் கூறுபாடுகள் (Safety aspects) (1) *** (2) *** (2a) மின்கசிவு பாதுகாப்பு சாதனம் / மின்கசிவை உணரும் சாதனம் (ELPD/RCD) : (i) தற்காலிக மின்வழங்கல் நிறுவுகைகள் உள்ளடங்கலாக தாழ்வழுத்த மின்வழங்கல் உள்ள ஒவ்வொரு நிறுவுகையும் மின் கசிவை உணரும் சாதனத்தினால், கட்டுப்படுத்தப்பட வேண்டும். மின் பழுது அல்லது மின் கசிவு ஏற்படுவதன் பேரில் மின்வழங்கல் துண்டிப்பதன் பொருட்டு மின் அதிர்ச்சிக்கு எதிராக பாதுகாப்பதற்காக மின் கசிவை உணரும் சாதனத்தின் வரையளவிட்ட இயக்க மின்சாரம், 30 மில்லி ஆம்பியர்க்கு மேல் இருக்கக்கூடாது. (ii) நிறுவுகைகளைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையிலான மோட்டார்கள், சாதனம், பயன்கருவிகள் ஆகியவற்றின் மொத்த மின் சுமைகள் 10 கிலோவாட்டுக்கு மேல் இருக்கும்போது, மின் அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் 30 மில்லி ஆம்பியர் RCDயுடன் கூடுதலாக, மின்பழுதினால் ஏற்படும் தீ விபத்திலிருந்து பாதுகாப்பதற்காக மின்வழங்கல் தொடங்கும் இடத்தில் ஒரு பொதுவான RCD 300 மில்லி ஆம்பியர் இயக்கத்துடன் பொருத்தப்பட வேண்டும். (iii) அதிக எண்ணிக்கையிலான மின்சுமைகள் இருக்கும் நிறுவுகையில் அவைகளின் மொத்த அனுமதிக்கத்தக்க மின் கசிவு 30 மில்லி ஆம்பியருக்கு மேற்படுகையில், திறப்புத் தொல்லையை தவிர்க்கும் பொருட்டு சுற்றுவழிகள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுதல் வேண்டும் மற்றும் பிரிக்கப்பட்ட சுற்று வழி ஒவ்வொன்றிலும் உரிய இடங்களில் 30 மில்லி ஆம்பியருக்கு மேற்படாத மின் கசிவில் இயங்கக்கூடிய தனித்தனியான RCD பொருத்தப்பட வேண்டும். விளக்கம் : RCD என்பது RCCBs (மின்கசிவினால் இயங்கும் பிரிகலன்) RCBOs (மின் கசிவினால் இயங்கும் பிரிகலனுடனான ஒருங்கிணைந்த மிகை மின்னோட்டப் பாதுகாப்பு) முதலிய பல்வேறு வகைகளை உள்ளடக்கிய பொதுவான வார்த்தை. RCCB என்பது வசதிக்காக RCB (RCCB/RCB). என்றும்கூட அழைக்கப்படும் ELCB என்ற வாசகம் (நில கசிவு சுற்று வழி பிரிகலன்) தர நிலைகளில் பயன்படுத்தப்படுவதில்லை. (3) *** |
| 3(அ) | 27. மின் ஆற்றால் வழங்கலுக்கான கேட்புகள் (3) உயர் அழுத்த மின்வழங்கலுக்கான விண்ணப்பம் படிவம் 4இல் தரப்பட வேண்டும். குடிசை மின்னிணைப்பு மற்றும் வேளாண்மை மின்னிணைப்பு தவிர மற்ற தாழ்வழுத்த மின்னிணைப்பு, தாழ்வழுத்த வேளாண்மை மின்னிணைப்பு, தாழ்வழுத்த குடிசை மின்னிணைப்பு ஆகியவற்றிற்கான விண்ணப்பம் முறையே படிவம் -1, 2, 3ன் படி இருக்க வேண்டும். குறிப்பு: *** | 27. மின் ஆற்றால் வழங்கலுக்கான கேட்புகள் (3) உயர் அழுத்த மின்னிணைப்பிற்கான விண்ணப்பம், படிவம் - 4 இல் இருத்தல் வேண்டும். தற்காலிக மின் வழங்கல், வேளாண் மற்றும் குடிசை அல்லாத பிற தாழ்வழுத்த மின்னிணைப்பிற்கான விண்ணப்பம், தற்காலிக மின்னிணைப்பு, தாழ்வழுத்த வேளாண் மின்னிணைப்பு, மற்றும் தாழ்வழுத்த குடிசை மின்னிணைப்பு முறையே படிவம் - 1, 1A, 2, 3ன் படி இருத்தல் வேண்டும். குறிப்பு : *** |
| 3(ஆ) | 27. மின் வழங்கலுக்கான கோரிக்கைகள் (11) *** | 27. மின் வழங்கலுக்கான கோரிக்கைகள் (11) *** (11A) மின் வழங்கலுக்கான கோரிக்கை பலமாடி கட்டிடங்களுக்கானதாக இருக்கிறவிடத்து விண்ணப்பதாரர், விண்ணப்பத்துடன் சேர்த்து கட்டிட வரைபட ஒப்புதலளிப்பையும் திட்ட அனுமதியையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். உரிமதாரர், விண்ணப்பதாரரால் இணைத்தனுப்பப்பட்ட திட்ட அனுமதி / கட்டிட வரைபட ஒப்புதலளித்ததிலிருந்து கட்டிடத்தின் உயரத்தை சரிபார்த்தல் வேண்டும். வெளிப்படையான அளவீடு தேவையில்லை. பலமாடி கட்டிடத்தின் உயரமானது திட்ட அனுமதி / வரைபட ஒப்புதலளிப்பில் கொடுக்கப்பட்ட 15 மீட்டருக்கு அதிகமாக இருக்குமானால், மத்திய மின் அதிகார அமைப்பின் (CEA) திருத்தம் செய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் மின் வழங்கல் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விதிகள் 2010க்கிணங்க, மின் ஆய்வாளரிடமிருந்து தேவையான ஒப்புதலளிப்பு விண்ணப்பதாரரால் அளிக்கப்படுதல் வேண்டும். 11(B) தற்காலிக மின்வழங்கல் நிறுவுகைகள் உள்ளடங்கலான தாழ்வழுத்த மின்னழுத்தம் (240 V) மற்றும் இடைநிலை மின்னழுத்த நிறுவுகை ஒவ்வொன்றிற்குமான மின் வழங்கல், இந்த விதித் தொகுப்பின் 16 ஆம் ஒழுங்குமுறை விதியின் (2A) உள் – ஒழுங்குமுறை விதியில் குறித்துரைக்கப்பட்டவாறு, மின் அதிர்ச்சி மற்றும் நெருப்பு வழியான ஆபத்துக்கு எதிரான பாதுகாப்பு உள்ளது என்பதை உறுதி செய்யும் பொருட்டு, மின் கசிவை உணரும் சாதனத்தினால் (RCD) கட்டுப்படுத்தப்பட வேண்டும். |
| 4(அ) | 29. மின்னிணைப்புத் தொடர்கள்: (11) கீழ்வரும் இடத்தேவைகளோடு, உரிமதாரர் மின்மாற்றிகளையும் இணைப்பமைப்புகளையும் நிறுவுவதற்கான இடத்தையும் விலையேதுமின்றி தகுந்த இடத்தில் போதுமான அளவுக்குப் பன்மாடிக்கட்டிடங்களில் தரவேண்டும். (12) சாய்வுத் தளம் / அடித்தளம் நீங்கலாக (a) மொத்த கட்டடப்பரப்பு 900 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேலாகவுள்ள அல்லது (b) அந்த கட்டடத்திலுள்ள அனைத்து தாழ்வழுத்த மின்னிணைப்புகளின் மின்தேவை 150 கிலோ வாட் அளவுக்கு மேலாக உள்ள தாழ்வழுத்த மின்னிணைப்பு கோருகிற கட்டடம் / வளாகம் எதற்காகவும். (i)(a) போதுமான அளவுள்ள மின்வடக் கால்வாயும் வெளியேற்றும் மின்விசிறியும் அமைந்த பூட்டும் ஏற்பாடும் 2.75 மீ குத்து இடைவெளியும் 6 மீ x 4 மீ அளவுக்கு முழுவதும் தடங்கலேதும் இல்லாத தரைப்பரப்பும் வலுவூட்டிய சிமெண்ட்டுக் கற்காரையாலான கூரையும் உள்ள மின்சார அறை, பன்மாடிக் கட்டிடத் தலைமை நுழை வாசல் அருகில் தரைத்தளத்தில் நுகர்வோரது இருப்பிடத்தில் பகிர்மான மின்மாற்றியையும் உடனமைந்த இணைப்பமைப்பையும் உரிய கட்டமைப்பு மீது நிறுவிட ஏற்பாடு செய்து தர வேண்டும் அல்லது b) 10 மீ x 4 மீ அல்லது 5 மீ x 5 மீ அளவுள்ள தடங்கலேதும் இல்லாத பரப்புடைய திறந்தவெளியை நுகர்வோரின் இருப்பிடத்தில் மின்மாற்றியையும் உடனமைந்த இணைப்பமைப்பையும் நிறுவும் கட்டமைப்பு, தலைமை வாசலுக்கருகில் அமையும்படி ஏற்பாடு செய்துதர வேண்டும். மேலும், | 29. மின்னிணைப்புத் தொடர்கள்: (11) பன்மாடி கட்டிடத்தில் (a) (சாய்வுத்தளம் / அடித்தளம் நீங்கலாக) மொத்தத் தளப்பரப்பு 900 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேலும் கொண்டிருக்கிற தாழ்வழுத்த மின்னிணைப்புகள் கோருகிற கட்டிடம் / வளாகம் எதுவும் அல்லது (b) அந்தக் கட்டிடத்திலுள்ள தாழ்வழுத்த மின்னிணைப்புகள் அனைத்தின் மொத்த தேவை 112 கிலோவாட்டிற்கு அதிகமாக இருக்குமானால், கீழே குறிப்பிடப்பட்டவாறு மின்மாற்றிகள், இணைப்பமைப்புகள் முதலியவற்றை நிறுவுவதற்காக போதுமான இடத்தை உரிமதாரருக்கு விலையின்றி கீழ்வருமாறு ஏற்பாடு செய்து தர வேண்டும்: (a) பூட்டக்கூடிய வசதி, காற்றுப் போக்கிகள், போதுமான அளவுள்ள மின்வடக்கால்வாயுடன், 2.75 மீட்டர் செங்குத்தான தடையகற்றலுடன் 6 மீட்டர் x 4 மீட்டர் அளவுள்ள வலுவூட்டிய சிமெண்ட் கான்கீரீட்டிலான (RCC) மேற்கூரையுடைய மின்சார அறையானது மின்பகிர்மான மின்மாற்றி மற்றும் அதனுடன் இணைந்த இணைப்பமைப்புகளுடனானவற்றை நிறுவுவதற்காக பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பலமாடிக் கட்டிடங்களின் மின்நுகர்வோர் வளாகங்களுக்குள் தரை தளத்தில் வழங்க வேண்டும். (b) 10 மீட்டர் x 4 மீட்டர் அல்லது 5 மீட்டர் x 5 மீட்டர் அளவுள்ள, இரட்டை மின்கம்ப அமைப்பிற்கான திறந்தவெளியுடன் அல்லது 4 மீட்டர் x 4 மீட்டர் அளவுள்ள, ஒற்றை மின் கம்ப அமைப்பிற்கான, மனையிடம் மற்றும் மின்சுமை நிலைமைகளுக்கு ஏற்ப திறந்த வெளியிடமானது, மின்பகிர்மான மின்மாற்றி மற்றும் அதனுடன் இணைந்த இணைப்பமைப்புகள்/ அமைப்பு கொண்ட அல்லது அடிப்பீடம் / கான்கிரீட் அமைப்பு பீடத்தில் நிறுவுவதற்காக பிரதான நுழைவாயில் அருகில் மேம்பட்ட இடத்தில் மின் நுகர்வோர் ஏற்பாடு செய்து தர வேண்டும். அடிப்பீட கான்கிரீட் அமைப்பு ஏற்பாட்டை பொறுத்தவரையில், அத்தகைய பணியானது விண்ணப்பதாரரால் அவருடைய செலவில் நிறைவேற்றப்படுதல் வேண்டும். (c) மின்பகிர்மான மின்மாற்றி, அதனுடன் இணைந்த சாதனம் / துணைக் கருவிகள் அதாவது இணைப்பில் காற்றுத் திறப்பான், கொம்பு இடைவெளி எரியிழை, மின்மாற்றி கோபுர அமைப்பு / கம்பம் அமைக்கும் பணியானது, உரிமதாரரின் செலவில் உரிமதாரரால் நிறைவேற்றப்படுதல் வேண்டும். மின்நுகர்வோர் வளாகத்தினுள் மின்பகிர்மான மின்மாற்றி நிறுவப்படும் போது, மின்நுகர்வோரின் வளாகத்தினுள் உயர் அழுத்த மின்தொடரின் எந்த ஒரு பகுதி உள்ளடங்கலாக மின்பகிர்மான மின்மாற்றியிலிருந்து மின்நுகர்வோரின் மின்னளவி வரையுள்ள நிறுவுதல் பணிகளுக்கான செலவுகள் விண்ணப்பதாரரால் ஏற்கப்படுதல் வேண்டும். (d) அப்பணிகளைச் செய்கையில், பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டவாறு, நிலத்திலிருந்து மற்றும் கிடைமட்டமான / செங்குத்தான தடையகற்றல் பாதுகாப்பு இடைவெளி, பணி செய்வதற்கான பாதுகாப்பு இடைவெளி போன்றவை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். |
| 29. மின்னிணைப்புத் தொடர்கள்: 12(ii)(a) விரிவாக்கங்கள் உள்ளடங்கலாக, திட்டங்களின் மொத்த மின்தேவை, அண்மைக்கால மின்சுமை 5 மெகா வோல்ட் ஆம்பியர் அளவைவிட மிகுதியானால்/ மிகுதியாகவிருக்கும் நிகழ்வுகளில் அல்லது (ii) (சாய்வுத் தளம் / அடித்தளம் நீங்கலாக) மொத்த கட்டுமான பரப்பளவு / அண்மை காலத்தில் கட்டுமானம் செய்யப்படலாகும் பரப்பளவு 30,000 சதுர மீட்டர் அல்லது அதற்குமேல் மிகையாகும்போது (தொழிற்சாலை சார்ந்த மின்னிணைப்புகள் தவிர) மின்னிணைப்புகள் தேவைப்படும் இடங்களில் இந்த உள் ஒழுங்குமுறைவிதியின் (b) கூறில், குறித்துரைக்கப்பட்டுள்ள அளவுகோலின்படி துணை மின் நிலையம் / மின் நிலை மாற்றும் நிலையம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும். (b) துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கு தேவைப்படும் நிலம் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள வரம்புக்கு மிகையாகாமல் இருத்தல் வேண்டும். (c) கட்டுமான நோக்கத்திற்காக மின் வழங்கலுக்கு விண்ணப்பிக்கும்போது, மேம்பாட்டாளர்களால்/ உரிமையாளர்களால் துணை மின்நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதி வரைபடத்தில் குறிப்பாக காண்பிக்கப்பட்டு மின்பகிர்மான உரிமதாரருக்கு அளிக்கப்படுதல் வேண்டும். | 29. மின்னிணைப்புத் தொடர்கள்: (12) (a) பின்வரும் வரன்முறைகளின்படியான வெளியிடமானது, (தகவல் தொழில்நுட்பம் தொடர்புயை நோக்கங்கள் அல்லாத பிற தொழில்களுக்கான மின்னிணைப்புகள் தவிர) மின்னிணைப்புகள் தேவைப்படுகிற இடங்களில், ஒன்று (a) எதிர்காலத்தையும் சேர்த்து நேரிடக்கூடிய 5 மெகா வோல்ட் ஆம்பியருக்கு மேற்படுகிற/மேற்படும் மின் தேவை அல்லது (b) மொத்த தரைப்பரப்பு 30,000 சதுர மீட்டர் மற்றும் சாய்வுத்தளம்/ அடித்தளம் நீங்கலாக அதற்கு மேல் கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டுமானம், போன்ற மொத்த தேவைக்கு துணை மின்நிலையம்/ இணைப்பு மின் நிலையம் அமைப்பதற்கு இலவசமாக விண்ணப்பதாரரால் இடம் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும். (b) துணை – மின் நிலையங்களை நிறுவுவதற்கான நிலத்தேவையானது, கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்புடன் குறைந்தபட்ச வரம்பாக இருத்தல் வேண்டும். வளாகங்களின் மேம்பாட்டாளர்கள் / உரிமையாளர்கள் கூடுதல் மின் சுமைக்காக விண்ணப்பிக்கும் போதும் ஒவ்வொரு நிலையங்கள் முதலியவற்றில் கூடுதல் கட்டுமானங்கள் கட்டி மேம்படுத்தும்போதும் துணை-மின் நிலையம் நிறுவுவதற்காக மேலேயுள்ள நிலத்தேவை, தற்போதுள்ள மற்றும் கூடுதல், மின்சுமை /கட்டுமானப் பகுதி இரண்டையும் சேர்த்து, மொத்த மின்சுமை /மொத்த கட்டுமானப் பகுதிக்குப் பொருந்தத்தக்கதாகும். (c) கட்டுமான நோக்கங்களுக்காக தற்காலிக மின்னிணைப்பிற்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் மேம்பாட்டாளர்களால் / உரிமையாளர்களால் துணை- மின் நிலையம் நிறுவுவதற்காக குறிப்பெடுக்கப்பட்ட பகுதி கட்டப்பட்ட பகுதிகள்; அணுகு சாலை, எதிர்காலத்திற்கான மனை மேம்பாட்டு திட்டம், ஏதேனுமிருப்பின் அதனுடன் வளாகங்களின் பிற வசதிகள் உள்ளடங்கலாக அனைத்தும் வரைபடத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு மின்பகிர்மான உரிமதாரரிடம் அளித்தல் வேண்டும். | |||||||
| துணை மின் நிலையத்தின் மின்னழுத்த அளவு | சதுர மீட்டரில் நிலத்தேவை | துணை-மின் நிலையத்தின் மின்னழுத்தம் | தேவைப்படும் நிலம் சதுர மீட்டர்களில் | |||||
| வழக்கமான துணை மின் நிலையம் | அடக்கமான துணை மின் நிலையம் | வழக்கமான துணை மின் நிலையம் | அடக்கமான துணை மின் நிலையம் | |||||
| 33 கிலோவோல்ட் துணை-மின்நிலையம் | 850 (உட்புறம்) 3160 (வெளிப்புறம்) | 400 (20 x20) அல்லது (10 x 40) அளவுடன் அணுகக் கூடிய அருகிலுள்ள ஏதேனும் இரண்டு பக்கங்கள் | ||||||
| 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் | 850(உட்புறம்) 3160 (வெளிப்புறம்) | 400 | ||||||
| 110 கிலோவோல்ட் துணை-மின் நிலையம் | 4000 (வெளிப்புறம்) | 1050 | ||||||
| 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் | 4000 (வெளிப்புறம்) | 1050 | ||||||
| 230 கிலோவோல்ட் துணை-மின் நிலையம் | 16000 (வெளிப்புறம்) | 1750 | ||||||
| 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் | 16000 (வெளிப்புறம்ம் | 1750 | ||||||
| (d) மேம்பாட்டாளர் / விண்ணப்பதாரர் அடக்கமான துணை மின் நிலையத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்வதற்கு தேர்வு செய்யும்போது, இயல்பான துணை மின் நிலையம் அமைப்பதற்கும் மற்றும் அடக்கமான துணை மின் நிலையம் அமைப்பதற்கான செலவின் வித்தியாசத் தொகையினை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். குறிப்பு : (a) பெருநகர / மாநகர வரம்பின் புற எல்லையிலிருந்து 60 கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ள இடங்களில் உரிமம்தாரர், அடக்கமான துணை-மின் நிலையத்தை நிறுவலாம் ; (b) நகராட்சி வரம்பின் புற எல்லையிலிருந்து 30 கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ள இடங்களில் உரிமம்தாரர், அடக்கமான துணை-மின் நிலையத்தை நிறுவலாம் ; (c) பேரூராட்சி வரம்பின் புற எல்லையிலிருந்து 10 கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ள இடங்களில், உரிமம்தாரர், அடக்கமான துணை-மின் நிலையத்தை நிறுவலாம் ; (d) பிற இடங்களில், உரிமம்தாரர், தம்முடைய விருப்பப்படி துணை-மின் நிலையத்தை நிறுவலாம் ; (e) அந்த நிலப்பகுதியானது, திறன் மின்மாற்றியை எளிதாகக் கொண்டு செல்வதற்கு நிலத்தின் ஏதாவதொரு பகுதியில் மட்டுமாவது உரிய அணுகுசாலையுடையதாக இருத்தல் வேண்டும் ; (f) நிலப்பகுதியின் அளவுகள், உரிமம்தாரர் நுகர்வோருக்கு, அளிக்கும் குறிப்புரைகளின்படி இருத்தல் வேண்டும் | (d) மொத்தத் தேவையானது 5 மெகா வோல்ட் ஆம்பியருக்கு மேற்படுகிறவிடத்து / மேற்படக்கூடிய விடத்து அல்லது மொத்தத் தரைப்பரப்பு 30,000 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேலும் (சாய்வுதளம் / அடித்தளம் நீங்கலாக) கட்டப்பட்டிருக்கிறவிடத்து / கட்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறவிடத்து விண்ணப்பதாரர் வழக்கமான வெளிப்புற காற்று காப்பு இணைப்பமைப்பு (AIS) துணை-மின்நிலையம் நிறுவுவதற்குப் பொருத்தமான நிலத்தை ஒதுக்க வேண்டும். விண்ணப்பதாரர் வழக்கமான வெளிப்புற காற்றுகாப்பு துணை மின்நிலையம் அல்லாத பிற அடக்கமானஅல்லது உள்புற துணை – மின்நிலையத்திற்கு பொருத்தமான நிலத்தை ஒதுக்குவதற்குத்தெரிவு செய்யும் நேர்வில், விண்ணப்பதாரர் அடக்கமான அல்லது உள்புற துணை-மின் நிலையம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட இடத்திற்கானதும் வழக்கமான வெளிப்புற காற்று காப்பு துணை-மின் நிலையத்திற்குமானதும் இடையே உள்ள வேறுபாட்டு தொகையைஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கப்பட்ட மின் தேவையின் அளவு அல்லது உரிமதாரரால் மதிப்பிடப்பட்ட மின் தேவையின் அளவு, இவற்றில் எது உயர்ந்த அளவோ அந்த அளவுக்குச் சமமான துணை- மின் நிலையம் அமைப்பதற்காக நிலத்தை ஒதுக்க வேண்டும். குறிப்பு: (i) அடக்கமான மற்றும் வெளிப்புற வகையான மின் நிலையங்களுக்கிடையேயான அல்லது உட்புற மற்றும் வெளிப்புற வகையான மின்நிலையங்களுக்கிடையேயான செலவில் ஏற்படும் வேறுபாட்டுத் தொகையைக் கணக்கிடுகையில் பின்வரும் முறை பின்பற்றப்படும்: (ii) உயர் மின்னழுத்த சாதனங்கள் சம்பந்தமான பகுதி, விண்ணப்பதாரர்களுக்கு மின்சாரம் ஊட்டப்படுகிற ஒரே ஒரு மின்மாற்றி, அதன் தாழ்வழுத்த மின்னூட்டி, அதனைச் சார்ந்த தாழ்வழுத்த பிரிகலன், மின்னோட்ட மின் மாற்றிகள், இணைப்பிகள், கட்டுப்பாட்டு சாதனங்கள் விண்ணப்பதாரருக்கு மின்சாரம் ஊட்டப்படுகிற தாழ்வழுத்த மின்னூட்டிகளின் எண்ணிக்கை, அவைகளின் மின்னூட்ட சாதனம், கட்டுபாட்டு சாதனங்கள், மின்வடங்கள், துணைக் கருவிகள், முதலியவற்றை வெளிப்புற துணை-மின் நிலையத்தின் இதே போன்ற ஒத்தபகுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவற்றிற்கிடையேயான செலவுத்தொகை வேறுபாட்டினைக் கணக்கிட வேண்டும். (iii) எஞ்சிய மின்மாற்றிகள், அதனுடன் தொடர்புடைய உயர்மின்னழுத்த மின்னிணைப்பிகள், தாழ்வழுத்த பிரிகலன்கள், மின்னோட்ட மின்மாற்றிகள், மின்னிணைப்பிகள், கட்டுப்பாட்டு சாதனங்கள், மற்ற பகுதிகளுக்கு மின்னூட்டம் அளிக்கின்ற தாழ்வழுத்த மின்னூட்டிகள், அவைகளின் மின்னூட்டி சாதனம், கட்டுப்பாட்டு சாதனங்கள், மின் வடங்கள், துணைக்கருவிகள் முதலியவற்றின் தொடர்பான செலவுத் தொகை உரிமதாரரால் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும். (e) உரிமதாரர், கீழேயுள்ளவாறு, மின் தேவையின் அளவைப் பொறுத்து பல்வேறு மின்னழுத்த அளவுகளில் இயங்கும் துணை-மின் நிலையங்களை நிறுவுவதற்கு பரிசீலனை செய்யலாம். குறிப்பு: (a,b,c,d,e and f) நீக்கப்பட்டுள்ளது | ||||
| மொத்த மின் தேவை | துணை-மின் நிலையத்தின் மின்அழுத்த அளவு | ||||
| 5 மெகா வோல்ட் ஆம்பியருக்கு மிகையாக ஆனால் 10 மெகா வோல்ட் ஆம்பியருக்குள் | 33 கிலோ வோல்ட் | ||||
| 10 மெகா வோல்ட் ஆம்பியருக்கு மிகையாகவுள்ள, ஆனால், 50 மெகா வோல்ட் ஆம்பியருக்குள் | 110 கிலோ வோல்ட் | ||||
| 50 மெகா வோல்ட் ஆம்பியருக்கு மிகையாக | 230 கிலோ வோல்ட் | ||||
| 4(ஆ) | 29. மின்னிணைப்பு தொடர்கள்: 14(b) வெளிப்புற மின்னளவிக்காக, 10 மீட்டர் X 4 மீட்டர் அல்லது 5 மீட்டர் X 5 மீட்டர் திறந்த வெளியிடத்தின் தடையற்ற இடம் அளிக்கப்படுதல் வேண்டும். இந்த அடைப்பு கட்டிடத்தின் புற எல்லையில் இருத்தல் வேண்டும் மற்றும் இத்தடுப்பு சுவர்களால் வளாகத்தின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இந்தப் பரப்பிடங்கள் திட்ட வரை படத்தில் திட்டவட்டமாகக் காட்டப்படுதல் வேண்டும். அந்தத் திட்ட வரை படம் ஒப்புதலளிப்பிற்காக தகுதி வாய்ந்த அதிகார அமைப்பிற்கு அனுப்பப்படும் முன்பு அது பொறியாளருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்படுதல் வேண்டும். மின்வழங்கல் முனையமானது எளிதில் அணுகத்தக்க பிரதான வாயிலிருந்து 30 மீட்டருக்குள் இருத்தல் வேண்டும் மற்றும் எளிதில் கரையக்கூடியதாகவும் பாதுகாப்பு கூறுகள் பொறுத்து திருப்தியளிக்கக் கூடிய வகையிலும் இருத்தல் வேண்டும். மேலேயுள்ள தேவைகளுக்கு இணங்கி நடக்கத்தக்கவகையில், மின்வழங்கல் மறுக்கப்படும். வரம்புரையாக: வரம்புரையாக தலைமை நிருவாக அலுவலர் அல்லது தலைமைப்பொறியாளர் படி நிலைக்குக் குறையாதவரும், தலைமை நிருவாக அலுவலரால் அதிகாரமளிக்கப்பட்டவருமான பிற அலுவலர் எவரும், அத்தகைய இடம் - (அ) உரிமம்தாரரின் அலுவலர்கள் எளிதாக அணுகத்தக்கதாகவும் எளிதில் காணக்கூடியதாகவும் இருக்கிறது என்று, (ஆ) பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என்று, (இ) கெடுசெயலால் பாதிக்கப்பட கூடிய நிலையில் இல்லை என்று திருப்தி அடைவாரானால், பிரதான வாயிலிருந்து30 மீட்டருக்கு அப்பாலுள்ள ஒரு இடத்தில் மின்வழங்கல் முனையம் அமைக்க ஒப்புதலளிக்கலாம். அதோடு தூர அளகோலை தளர்வு செய்யுங்கால் தொழில்நுட்ப காரணங்களின் பேரில் சமரசம் எதுவும் செய்து கொள்ளுதல் ஆகாது. | 29. மின்னிணைப்பு தொடர்கள்: 14(b)*** திறந்த வெளிமுறையில் மின்னளவு செய்ய 10 மீட்டர் X 4 மீட்டர் அல்லது 5 மீட்டர் X 5 மீட்டர் அளவுக்கு குறையாத இடத்தைத் திறந்த வெளியில் ஏற்பாடு செய்து தரவேண்டும். இத்தகைய அமைப்பு, வளாகத்தின் பிறபகுதிகளிலிருந்து தீக்காப்புச் சுவர்களால் பிரிக்கப்பட்டு கட்டிடத்தின் புற எல்லையில் அமைத்தல் வேண்டும். இந்தப் பகுதிகள் திட்ட வரை படத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு காட்டப்பட வேண்டும். ஒப்புதலளிப்பிற்காக உரிய அதிகாரம் கொண்ட அலுவலருக்கு அந்த திட்ட வரைபடம் அனுப்பப்படும் முன்பு அது பொறியாளருக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதல் பெற வேண்டும். மின் வழங்கல் முனையமானது, பொது சாலையிலிருந்து சுமை ஊர்தியின் (Lorry) மூலம் எளிதில் அணுகத்தக்கதாகவும் சாலையிருந்து தெளிவாகப் பார்வையிடக் கூடியதாகவும், பாதுகாப்புக் கூறுகள் திருப்தியளிக்கும் வகையிலும், பிரதான நுழைவாயிலிருந்து 30 மீட்டருக்குள்ளும் இருக்க வேண்டும். மின்னளவைப்பெட்டி, மின்னளவைப்பெட்டியின் உள்வருகிற மற்றும் வெளியே செல்கிற உயர்அழுத்த மின்கடத்தி முதலியவை நுழைவு வாயில் மூடியிருக்கும் நிலையிலும் பொதுச் சாலையிலிருந்து தெளிவாகத் தெரியும்படி இருக்க வேண்டும். ஆனால் தலைமை நிர்வாக அலுவலர் அல்லது தலைமைப் பொறியாளர் படி நிலைக்குக் குறையாத தலைமை நிர்வாக அலுவலரால் அதிகாரமளிக்கப்பட்ட பிற அலுவலர் எவரும், விண்ணப்பதாரருக்கு மேலேயுள்ளவாறு பிரதான நுழைவு வாயிலிருந்து 30 மீட்டருக்குள் மின்னளவை முனையத்தை நிறுவுவதற்கு இயலவில்லை என்றாலோ அல்லது 30 மீட்டருக்குள் மின்னளவை முனையத்தை நிறுவுவதற்கு இயலும் நிலையில் ஆனால் பிரதான நுழைவு வாயில் அல்லாத பிற வாயிலில் மட்டுமே நிறுவ இயலும் எனில், கீழ்வரும் நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கலாம்: (i) விண்ணப்பதாரரின் வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள சாலையிலிருந்து சுமை ஊர்தியின் மூலம் எளிதில் அணுகத்தக்கதாகவும், நுழைவு வாயில் மூடி இருக்கும் போது கூட அந்த இடம் தெளிவாகப் பார்வையிட ஏதுவாகவும் இருக்க வேண்டும்; (ii) பாதுகாப்பாகவும், சேதத்திற்கு உட்படாத வகையிலும் இருக்க வேண்டும். (iii) ஒழுங்கீன செயல்களினால் பாதிப்பிற்குள்ளாகக் கூடியதாக இருக்கக் கூடாது. (iv) விண்ணப்பதாரரின் வளாகத்தின் வெளிப்புறத்தில் சரிபார்ப்பு மின்னளவை முனையத்தை நிறுவுவதற்கு இயலக் கூடியதாக இருக்க வேண்டும். (c) தூரத்தையும், அமைவிடத்தையும் தளர்வு செய்கையில், தொழில் நுட்ப ரீதியாக சமரசம் ஏதும் செய்யக்கூடாது. மின்னளவை முனையத்தை, பிரதான நுழைவுவாயிலிருந்து 30 மீட்டருக்குள் நிறுவுவதற்கு இயலாதிருக்கும் அல்லது 30 மீட்டருக்குள் மின்னளவை முனையத்தை நிறுவுவதற்கு இயலும் நிலையில் ஆனால் பிரதான நுழைவு வாயில் அல்லாத பிறவாயிலில் நிறுவ இயலும் விண்ணப்பதாரர்கள் உரிமதாரரால் முடிவு செய்யப்பட்ட இடத்தில் அந்த வளாகத்திற்கு வெளிப்புறத்தின் சரிபார்ப்பு மின்னளவு முனையத்தை நிறுவுவதற்கான செலவினை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலேயுள்ள தேவைகளுக்கு இணங்க தவறுதல், மின் வழங்கலை மறுக்கும் விளைவுகளுக்குட்படும். |
| 5. | 31. ஆய்வுகள், சோதனை செய்தல் மற்றும் மின் வழங்கல் செயற்படுத்துகை: (3) கோரும் நுகர்வோர், மேற்குறிப்பிட்ட காலத்துக்குள் தனது மின் வழங்கலைப் பெறத் தவறினால் அம்மின்வழங்கலைப் பெற்றுக் கொள்ளும்படி உயரழுத்த வகையில் மேலும் 3 மாதகாலமும், தாழ்வழுத்த வகையில் மேலும் ஒரு மாத காலமும் உள்ள அறிவிப்பு, கோரும் நுகர்வோருக்கு அனுப்பப்படும். இந்த அறிவிப்புக் காலத்துக்குள்ளும் அவர் மின்வழங்கலைப் பெறாவிட்டால் தாழ் வழுத்த வகையில் விண்ணப்பம் கெடு முடிந்ததாகக் கொள்ளப்பட்டு தள்ளுபடி செய்யப்படும். உயர் அழுத்த வகையில் இசைவுப் பத்திரத்தை முடித்து, விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கொள்ளப்படும். மின்னளவி பிணைய வைப்புத் தொகையைத் தவிர, மற்றபிற மின்னிணைப்புக் கட்டணம், காப்பு வைப்புத் தொகை / மேம்பாட்டுத் தொகை போன்ற யாவும் இழப்புக்கு ஈடாகக் கழித்துக் கொள்ளப்படும். கோரும் நுகர்வோர், தனக்கேற்பட்ட அவரது கட்டுபாட்டில் இல்லாத நிலைமைகளால் மின் வழங்கல் பெற இயலாமல் போய்விட்டால், அத்தகையவருக்குக் காப்பு வைப்புத் தொகை மற்றும் மின்னளவி பிணைய வைப்புத் தொகை ஆகியவை திரும்பத் தரப்படும். | 31. ஆய்வுகள், சோதனை செய்தல் மற்றும் மின் வழங்கல் செயற்படுத்துகை: (3) கோரும் நுகர்வோர், மேற்குறிப்பிட்ட காலத்துக்குள் தனது மின் வழங்கலைப் பெறத் தவறினால் அம்மின்வழங்கலைப் பெற்றுக் கொள்ளும்படி உயரழுத்த வகையில் மேலும் 3 மாதகாலமும், தாழ்வழுத்த வகையில் மேலும் ஒரு மாத காலமும் உள்ள அறிவிப்பு, நீட்டிக்கப்படும் கால அளவு உட்பட, அறிவிப்பு கால அளவிற்கான மாதாந்திர சிறுமக் கட்டணத்தை வசூலித்த பின்பு, கோரும் நுகர்வோருக்கு அனுப்பப்படும். இந்த அறிவிப்புக் காலத்துக்குள்ளும் அவர் மின்வழங்கலைப் பெறாவிட்டால் தாழ்வழுத்த வகையில் விண்ணப்பம் கெடு முடிந்ததாகக் கொள்ளப்பட்டு தள்ளுபடி செய்யப்படும். உயர் அழுத்தவகையில் இசைவுப் பத்திரத்தை முடித்து, விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கொள்ளப்படும். மின்னளவி காப்பு வைப்புத் தொகையைத் தவிர, மற்றபிற மின்னிணைப்புக் கட்டணம், காப்பு வைப்புத் தொகை, மேம்பாட்டுத் தொகை, மாதாந்திர சிறுமக் கட்டணம் போன்ற யாவும் இழப்புக்கு ஈடாகக் கழித்துக் கொள்ளப்படும். கோரும் நுகர்வோர், தனக்கேற்பட்ட அவரது கட்டுப்பாட்டில் இல்லாத நிலைமைகளால் மின் வழங்கல் பெற இயலாமல் போய்விட்டால், அத்தகையவருக்குக் காப்பு வைப்புத் தொகை, மேம்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் மின்னளவி காப்பு வைப்புத் தொகை ஆகியவை திரும்பத் தரப்படும். |
| 6. | பின்னிணைப்பு – III படிவங்கள் படிவம் -1 தாஅ மின்னிணைப்பு விண்ணப்பப்படிவம் (வேளாண்மை மற்றும் குடிசை வகை தவிர) படிவம் - 2 வேளாண்மை மின்னிணைப்பு விண்ணப்பப் படிவம் படிவம் - 3 குடிசை மின்னிணைப்பு விண்ணப்பப் படிவம் படிவம் - 4 உயர் அழுத்த மின்னிணைப்பு விண்ணப்பப் படிவம் (கூடுதல் தேவை உட்பட) படிவம் - 5 புது மின் வழங்கல் பெற வேண்டப்படும் உரிமையாளர் சம்மதக் கடிதம் படிவம் - 6 உரிமையாளர் சம்மதக் கடிதம் கிடைக்கா விட்டால் தரப்பட வேண்டிய உறைபவரின் காப்புறுதிப் பத்திரம் படிவம் - 7 தாஅ தொழிலக மற்றும் வேளாண்மை மின்னிணைப்பு இசைவுப் பத்திரம் படிவம் - 8 உயர் அழுத்த மின்னிணைப்பு இசைவுப் பத்திர படிவம் | பின்னிணைப்பு – III படிவங்கள் படிவம் -1 (தற்காலிக மின் வழங்கல், வேளாண் மற்றும் குடிசை தவிர) தாழ்வழுத்த மின்னிணைப்பிற்கான விண்ணப்ப படிவம் படிவம் 1 A தற்காலிக தாழ்வழுத்த மின்னிணைப்பிற்கான விண்ணப்ப படிவம் *** படிவம் - 2 *** படிவம் - 3 *** படிவம் - 4 *** படிவம் - 5 *** படிவம் - 6 *** படிவம் - 7 *** படிவம் - 8 |
| படிவம் 1 தாழ்வழுத்த மின்னிணைப்பு விண்ணப்பப் படிவம் (வேளாண் மற்றும் குடிசை வகையினங்கள் தவிர) தாழ்வழுத்த மின் ஆற்றல் வழங்க கோரும் படிவம் (ஒருமுனை / மும்முனை) [27ஆம் ஒழுங்குமுறை விதியின் (3)ஆம் உள் ஒழுங்குமுறை விதியைப் பார்க்கவும்] பெறுநர் விண்ணப்பதாரரின் புகைப்படம் குறிப்பிட்ட பதவிப் பொறியாளர் (உரிமதாரரின் முகவரி) அய்யா, 1. திரு/திருமதி.............த/பெ/க/பெ..........ஆகிய நான் ... இதன் பின்னால் விவரிக்கப்பட்டுள்ள வளாகத்திற்கு ...................................நோக்கத்திற்காக மின் ஆற்றல் வழங்குமாறு இதனால் கேட்டுக் கொள்கிறேன். (குறிப்பு: இந்த உறுதியேற்பு, உரிமதாரரோ அல்லது நுகர்வோரா விரும்பி தனியாக எழுத்து வடிவில் ஒப்பந்தமேதும் செய்து கொள்வதைத் தடை செய்யாது). 2. நான், தமிழ்நாடு மின் பகிர்மான விதித்தொகுப்பு, மின் வழங்கல் விதித்தொகுப்பு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இது தொடர்பாக வெளியிடும் அறிவிக்கைகள் மற்றும் ஆணைகள் ஆகியவற்றின்படி விதிக்கப்படும் கட்டண வீதத்தில் கோரப்படும் மின் ஆற்றல் கட்டணங்கள், மின்னிணைப்புக் கட்டணங்கள், பிணை வைப்பு தொகை, மின்னளவி வாடகைத் தொகை, மேம்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் செலுத்த இசைகிறேன். 3. நான்........... நாளிட்ட த.நா.மி.ஒ.ஆ கட்டணவீத ஆணையின்படியான அட்டவணையின்படி கட்டணவீதம் .............இன்படி கட்டணம் விதிக்கப்பட விரும்புகிறேன். 4. நான்........... ஆண்டுகளுக்கு மின் வழங்கல் பெறவும் மற்றும் இதனடியில் விவரிக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள்ளும் அல்லது வளாகத்தின் வெளியிலும் என்னுடைய உண்மையான நோக்கத்திற்காக மின் ஆற்றலைப் பயன்படுத்தவும் இசைகிறேன். 5. மின் வழங்கல் தொடர்கின்ற நிலையில் நான் சொத்தினை விற்பனை செய்தாலோ அல்லது மற்ற வகையில் மாற்றம் செய்தாாலா / வளாகத்தை காலி செய்துவிட்டுச் சென்றாலோ, நான், எழுத்து மூலமாக ஒரு ஆங்கில மாத அறிவிப்பு தந்துவிட்டு, உரிமதாரருக்கான அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்தவும் அத்தகைய அறிவிப்பைத் தரத் தவறினால், அத்தகைய அறிவிப்பை உரிமதாரருக்குத் தருகின்ற வரையில் அந்த வளாகத்தில் நுகரப்படும் மின் ஆற்றலுக்கான பொறுப்புகளை வகிக்கவும் இசைகிறேன். 6. வளாகத்தின் விவரிப்பு கதவிலக்க எண் மற்றும் / அல்லது வீடு அல்லது வளாகத்தின் பெயர் : தெரு : நகரம் / கிராமம் மற்றும் வட்டம் உரிமையாளர் (பெயர் பெரிய எழுத்துகளில்) : வாடகைதாரர் (பெயர் பெரிய எழுத்துகளில்) : விண்ணப்பதாரரின் தொடர்பு முகவரி : தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் : | "படிவம் 1 (தற்காலிக மின்வழங்கல், வேளாண்மை மற்றும் குடிசை மின்னிணைப்பு தவிர) தாழ்வழுத்த மின்னிணைப்பு விண்ணப்ப படிவம் (ஒரு முனை / மும் முனை) தாழ்வழுத்த மின்வழங்கல் கோரும் படிவம் [விதித்தொகுப்புத் தொடர் 27(3) பார்க்க] பெறுநர் விண்ணப்பதாரரின் குறிப்பிட்ட பதவிப் பொறியாளர் புகைப்படம் (உரிமதாரரின் முகவரி) அய்யா, 1. நான்/நாங்கள், திரு/திருமதி...................... தந்தை / கணவர் பெயர்............................... இதன்மூலம் தாங்களை............................................................................................................. இதன் பின்பு விவரிக்கப்பட்ட வளாகத்தில் ........................................................................ நோக்கத்திற்காக மின்னிணைப்பு வழங்குமாறு இதனால் கேட்டுக் கொள்கிறேன்(றோம்). 2. நான் / நாங்கள் மேற்சொன்ன மின்னாற்றலுக்காக தமிழ்நாடு மின் பகிர்மான விதித் தொகுப்பு, மின் வழங்கல் விதித்தொகுப்பு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இது தொடர்பாக வெளியிடும் அறிவிப்புகள், ஆணைகள் ஆகியவற்றின்படி விதிக்கப்படும் விலை வீதத்திற்கு இணங்கக் கோரப்படும் மின் ஆற்றல், மின்னிணைப்புக் கட்டணங்கள், காப்பு வைப்புத் தொகை, மின்னளவி வாடகை, மேம்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்துவதற்கு ஒப்புக் கொள்கிறேன்(றோம்). 3. நான்/நாங்கள், நடைமுறையிலுள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண அட்டவணை பட்டியல் ........................ கீழ் விதித்துள்ள மின் கட்டணத்தின்படி விதிக்கப்பட விரும்புகிறேன்(றோம்). 4. நான்/நாங்கள், என்னுடைய / எங்களுடைய உண்மையான பயன்பாட்டிற்கு இதன் கீழ் விவரிக்கப்பட்ட வளாகத்தில் / இருப்பிடத்தில் தற்காலிக மின் வழங்கலைப் பயன்படுத்தவும் அவற்றின் மின்னாற்றலை உபயோகப்படுத்தவும் ஒப்புக் கொள்கிறேன்(றோம்). 5. நான்/நாங்கள் மின் வழங்கல் தொடரும் காலத்தில், சொத்தினை விற்பனை செய்யும் நேர்வில் அல்லது பிறவாறு தீர்வு செய்யும் நேர்வில்/ வளாகத்தினை காலி செய்யும் நேர்வில் நான் / நாங்கள் எழுத்து வடிவிலான ஒரு மாத கால அறிவிப்பு கொடுக்கவும், உரிமதாரரிடம் நிலுவைத் தொகைகள் அனைத்தையும் செலுத்துவதற்கும் ஒப்புக்கொள்கிறேன்(றோம்). அவ்வாறு அறிவிப்பு கொடுக்கத் தவறுகையில், நான் / நாங்கள், மின்நுகர்வுக் கட்டணங்களின் நிலுவைத் தொகை, பிறவகையில் செலுத்த வேண்டிய தொகை, ஏதேனுமிருப்பின், அதையும் மற்றும் உடன்பாடு முடிவுறுங்கால் எழக்கூடிய உரிமைக் கோரிக்கைகளையும் மற்றும் என்னுடைய / எங்களுடைய பெயரிலுள்ள பிற மின்னிணைப்புகளில் மேற்கண்ட நிலுவைகளையும் கட்டணங்களையும் சேர்த்து செலுத்துவதற்கு நானே / நாங்களே கட்டுப்படுகிறேன்(றோம்). 6. வளாகத்தின் விவரங்கள் : (a) கதவு எண். மற்றும்/அல்லது வீட்டின் அல்லது வளாகத்தின் பெயர் : (b) தெரு : (c) நகரம் / கிராமம் மற்றும் வட்டம் : (d) உரிமையாளரின் பெயர் : (e) குடியிருப்பவரின் பெயர் : (f) விண்ணப்பதாரரின் கடிதத் தொடர்பு முகவரி : (g)தொடர்பு கொள்ளக் கூடிய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி |
| 7. எனது மின்தேவைகள் பின்வருமாறு புள்ளிகளின் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை வாட்டளவு வாட்டளவு 8. விண்ணப்பித்த மின்தேவை கி.வா இல் : 9. மின்கம்பியமைத்தல் முடிக்கப்பட்ட தேதி : 10. விண்ணப்பதாரருக்கு தற்போது மின்னிணைப்புகள் எதாவது இருந்தால், : அவற்றின் விவரங்கள் 11. இந்த விண்ணப்பத்தில் மின்னிணைப்பு கோரப்படும் வளாகம் தொடர்பான : நிலுவையிலுள்ள பெற வேண்டிய தொகை, ஏதாவது இருப்பின், அவற்றின் விவரங்கள். இடம் : விண்ணப்பதாரர் கையொப்பம் நாள்: பெயர் (பெரிய எழுத்துக்களில்) குறிப்பு – விண்ணப்பம் பின்வரும் ஆவணங்களுடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும் : | 7. என்னுடைய / எங்களுடைய மின் தேவைகள் பின்வருவன: (A) 8. விண்ணப்பிக்கப்பட்ட மின் தேவை, கிலோவாட்டில் : 9. விண்ணப்பிக்கப்பட்ட நிறுவுகையில் தமிழ்நாடு மின்பகிர்மான விதித்தொகுப்பின் படி மின்கசிவு பாதுகாப்பு சாதனம் (RCD) அமைக்கப்பட்டுள்ளதா? 10. கம்பியமைப்பு பணி முடிவடைந்த நாள்: 11. விண்ணப்பதாரர்(கள்) பெயர் / பெயர்களில் தற்போதுள்ள மின்னிணைப்பு(கள்), எவையேனுமிருப்பின், அவற்றின் விவரங்கள் : 12. விண்ணப்பதாரர்(களின்) பெயர்களிலோ அல்லது அவர்களது பெயர்(களில்) உள்ள வளாகத்திலோ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்திற்கு செலுத்த வேண்டிய மின்நுகர்வுக் கட்டணங்கள் அல்லது பிற கட்டணங்கள் எவையேனும் பாக்கியுள்ளதா? | ||||||||
| (A) ஒளியூட்டல் | விளக்கு | முனைகளின் எண்ணிக்கை | முனைகளின் வாட்டளவு | மொத்த வாட்டளவு | |||||
| (i) விளக்குகள் | - - - | ||||||||
| (ii) மின்விசிறிகள் | - - - | (i) விளக்குகள் | - | - | - | ||||
| (iii) தேவையான சுவர்ச் செருகமைப்புகள் | - - - | ||||||||
| (ii) மின்விசிறிகள் | - | - | - | ||||||
| (iii) தேவையான சுவர் செருகமைப்புகள் | - | - | - | ||||||
| (B) வீட்டு மின் கருவிகள்: | |||||||||
| (i) அடுகலன்கள் (Coookers) | - - - | ||||||||
| (B) வீட்டு உபயோக மின் கருவிகள்: | - | - | - | ||||||
| (ii) தண்ணீர்ச் சூடூட்டிகள் (Water Heaters) | - - - | ||||||||
| (i) சமையல் கலன்கள் (Cookers) | - | - | - | ||||||
| (iii) குளிர் சாதனப் பெட்டி | - - - | ||||||||
| (iv) காற்றுப் பதனிகள் (Air Conditioners) | - - - | (ii) தண்ணீர் சூடூட்டிகள் | - | - | - | ||||
| (iii) குளிர்சாதனப் பெட்டி | - | - | - | ||||||
| (v) பிறபயன்பாடுகள் | - - - | ||||||||
| (iv) காற்றுப் பதனிகள் (Air Conditioners) | - | - | - | ||||||
| (vi) தேவைப்படும் சுவர்ச் செருகமைப்புகள் | - - - | ||||||||
| (v) மின்தூக்கிகள்/ மின்னுயர்த்தி / இயங்குபடி (Lifts / Elevator / Escalator) | - | - | - | ||||||
| (C) மின்திறன் சுமைகள் (Power Loads) | - - - | ||||||||
| (i) வீட்டு உபயோகம் | - - - | ||||||||
| (vi) பிற பயன்பாடுகள் | |||||||||
| (ii) தொழிற்சாலை சார்ந்தது | - - - | ||||||||
| (vii) தேவைப்படும் சுவர் செருகமைப்புகள் | |||||||||
| (iii) பற்றவைப்பு | - - - | ||||||||
| (iv) பிறபயன்பாடுகள் | - - - | ||||||||
| (C) மின் திறன் சுமைகள் | |||||||||
| (v) தேவைப்படும் சுவர்ச் செருகமைப்புகள் | - - - | ||||||||
| 1. வீட்டு உபயோகம் | |||||||||
| 2. தொழிற் பயன்பாடு | |||||||||
| 3. பற்றவைப்பு (Welding) | |||||||||
| 4. பிறபயன்பாடுகள் | |||||||||
| 5. தேவைப்படும் சுவர் செருகமைப்புகள் | |||||||||
| (i) விற்பனை ஒப்பாவணம் / பிரிவினை ஒப்பாவணம் / கொடை ஒப்பாவணம் /ஒதுக்கீடு கடிதம் / கணினி பட்டா/ வருவாய்த்தறை அலுவலர்களால் வழங்கப்பட்ட உடைமைச் சான்றிதழ்கள் / நீதிமன்றத் தீர்ப்புரை அல்லது அண்மையிலான சொத்துவரி பற்றுச் சீட்டு ஆகிய உடைமை சான்றுகளின் சான்றளிக்கப்பட்ட நகல். (ii) கூட்டு சொத்து உடைமைகளைப் பொறுத்தமட்டில் சட்டப்படியான வாரிசு சான்றிதழ், அதனோடு குறிப்பு (i)இல் கூறப்பட்டிருந்கும் மூல ஆதாரங்கள், மற்றும் கூட்டுரிமையாளர்களின் இசைவுக் கடிதங்கள் ஆகிய உடைமை சான்றுகளின் சான்றளிக்கப்பட்ட நகல், கூட்டுரிமையாளர்களின் இசைவுக் கடிதங்கள் இல்லையென்றால், ஈட்டுறுதி பினைமுறியோடு மிகுதிப்படுத்தப்பட்ட பிணை வைப்புத் தொகை. (iii) விண்ணப்பதாரர் உரிமையாளர் இல்லையென்றால், படிவம் எண்.5-இல் உரிமையாளரின் இசைவுக் கடிதம் அல்லது குடியிருப்பதற்கான செல்லத்தக்க மெய்ப்பு மற்றும் படிவம் எண்.6இல் ஈட்டுறுதிப் பிணைமுறி. உரிமதாரரின் உபயோகத்திற்கு மட்டும் விண்ணப்பம் எண்.............ஆக............நாளில் பதிவு செய்யப்பட்டது. குறிப்பு: 1. மின்னிணைப்பு உரிமை மாற்றப்படும்போது, புதிய விண்ணப்பம், உரிமை மாற்றம் பெறுபவரால் கையொப்பமிடப்பட வேண்டும். 2. இணைந்த மின் சுமையில் ஏதாவது கூடுதலோ அல்லது விடுபாடோ வேண்டுமென்றால் அதை மின்னிணைப்புகள் வழங்குவதற்கு முன்னர் உரிமதாரருக்கு அறிவிக்க வேண்டும். நுகர்வோர், உரிமையாளர், மின் ஒப்பந்தக்காரர், மின் பணியாளர் மற்றும் பிற மின் ஆற்றல் வழங்குவோர் ஆகியோர் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் விளக்குகள், மின் விசிறிகள், உருகிழைகள், திறப்பிகள் மற்றும் பிற நிறுவல் அமைப்புகளின் உறுப்புப் பாகங்கள் ஏதாவது மாற்றுதல் தொடர்புடைய பணிகள் மற்றும் மின்னிணைப்பின் நிறுவல் திறனையும் தன்மையையும் மாற்றாத வண்ணம் உள்ள பணிகள் தவிர்த்து மின் நிறுவல் அப்ைைபுகளில் கூடுதலாகவோ, மாற்றமாகவோ, பழுதுபார்த்தலாகவோ, வேறு சரிசெய்தலுக்காகவோ எந்த ஒரு பணியையும் நுகர்வோரின் அல்லது உரிமையாளரின் சார்பில் அத்தகைய நுகர்வோர் அல்லது உரிமையாளருக்கு மின் வழங்கல் நோக்கத்திற்காக உரிய அதிகார அமைப்பால் குறித்துரைக்கப்பட்ட் அதிகாரம் தரப்பட்டவர்களன்றி வேறு யாரும் செய்யக்கூடாது. -------------------------------------------------------------- ஒப்புகை விண்ணப்பதாரர் பெயர் : முகவரி : பெறப்பட்ட நாள் : கடித எண் : மின் வழங்கல் வகையினம் : மின்பகிர்மான உரிமதாரரின் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை பெயர் மற்றும் பதவிப் பெயர் | ஆம் எனில், விவரங்கள் (மின்இணைப்பு எண்ணுடன், பிரிவின் பெயர் / வட்டம் முதலியன ) அளிக்கவும்: மின்நுகர்வோர் உரிமையாளர்கள், அனுபவிப்பவர்கள், மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் மற்றும் மின் வழங்குபவர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்படவேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை: மின் விளக்குகள், மின்விசிறிகள், எரியிழைகள், இணைப்புகள், 250 வோல்டிற்கு மேற்படாத வீட்டு உபயோக மின் சாதனங்கள் மற்றும் துணைக்கருவிகள் போன்றவை தவிர, நிறுவுகையின் மின் திறன் அல்லது இயல்பை எந்த வழியிலும் மாற்றம் ஏற்படத்தக்கூடிய கூடுதல் பணிகள், மாற்றுப்பணிகள், பழுது பார்ப்புகள், நேரமைவு செய்தல்கள் உள்ளடங்கலான மின் நிறுவுகைப் பணி எதுவும் மின்நுகர்வோர், மின்வழங்குநர், உரிமையாளர் அல்லது அனுபோகதாரர் ஆகியோருக்கு அல்லது அவர்கள் சார்பாக, மாநில அரசால் இதன் பொருட்டு உரிமம் வழங்கப்பட்ட மின் ஒப்பந்ததாரரால், தகுதியுடைமைச் சான்றிதழ் வைத்திருக்கிற நபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மற்றும் மாநில அரசால் வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு வைத்திருக்கிற நபரால் அன்றி பிற நபர்கள் மூலம் நிறைவேற்றக்கூடாது. நான் / நாங்கள் மேற்சொன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிந்துள்ளோம் மற்றும் அதனை கடைப்பிடிக்க ஒப்புக்கொள்கிறேன்(றோம்). நான் / நாங்கள் அவ்வப்போது ஆணையத்தினால் விதிக்கப்படும் பொருந்தத்தக்க மின் கட்டணம் / சிறுமக் கட்டணங்கள் / நிலையான கட்டணங்கள் / மேல் கட்டணம் முதலியவற்றை உரிமதாரருக்கு செலுத்துவதற்கு ஒப்புக்கொள்கிறேன்(றோம்). நான் / நாங்கள் தமிழ்நாடு மின் வழங்கல் விதித்தொகுப்பு, மின்பகிர்மான விதித்தொகுப்பு மற்றும் பொருந்தத்தக்க சட்டம், தொகுப்புச் சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றில் வகுத்தமைக்கப்பட்டுள்ள விவரக்குறிப்பீடுகள், நிபந்தனைகள் மற்றும் வகைமுறைகள் அனைத்திற்கும் மற்றும் அப்போதைக்கு நடைமுறையிலுள்ள அதன் மாற்றமைவுகள் எவற்றிற்கும் அல்லது அவ்வப்போது ஒப்புதலளிக்கப்படும் திருத்தியமைத்தல்கள், திருத்தங்களுக்கு உட்பட்டும், இணங்கி ஒப்புக் கொள்கிறேன்(றோம்). (குறிப்பு : இந்த ஏற்புறுதியானது, உரிமதாரருடன் செய்யப்பட்ட எழுத்து வடிவிலான தனிப்பட்ட ஒப்பந்தத்திற்கு தடையேற்படுத்தாது.) விண்ணப்பதாரர்(களின்) கையொப்பம் இடம் : நாள் : பெயர்(கள்) | |
| குறிப்பு : இந்த விண்ணப்பமானது பின்வரும் ஆவணங்களுடன் சேர்ந்து விண்ணப்பிக்கப்பட வேண்டும். (i) சுய சான்றொப்பமிட்ட விற்பனை ஆவணம் (அல்லது) பாகப்பிரிவினை ஆவணம் (அல்லது) கொடை அறுதியாவணம் (அல்லது) ஒதுக்கீட்டுக் கடிதம் (அல்லது) கணினி பட்டா (அல்லது) வருவாய்த் துறை அலுவலர்கள் வழங்கப்பட்ட உடைமைச் சான்றிதழ் (அல்லது) நீதிமன்றத் தீர்ப்பு அல்லது அண்மையில் செலுத்தப்பட்ட சொத்துவரி ரசீது போன்ற ஆவணத்தின் நகல். (ii) கூட்டுச் சொத்தாக இருக்கும் நேர்வில், மேலேயுள்ள குறிப்பு (i) இல் குறித்துரைக்கப்பட்ட தாய்பத்திரங்களின் நகலுடன் சேர்த்து உடைமையை நிரூபிப்பதற்கான ஆவணத்தின் மற்றும் உடன்-உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட சம்மதக் கடிதத்தில் சுய சான்றொப்பமிட்ட நகல்கள். சம்மத கடிதம் அளிக்காத பட்சத்தில் காப்புறுதி பத்திரம், உயர்த்தப்பட்ட காப்பு வைப்புத் தொகையுடன். (iii) விண்ணப்பதாரர் உரிமையாளராக இல்லாதிருப்பாரானால் 5ஆம் எண் படிவத்தில் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட சம்மதக் கடிதம் அல்லது குடியிருப்பதற்கான செல்லத்தக்க நிரூபணம் மற்றும் 6 ஆம் எண் படிவத்தில் காப்புறுதி பத்திரம். உரிமதாரரின் பயன்பாட்டிற்கு மட்டும் ஒப்புகை விண்ணப்பதாரர்(களின்) பெயர் : முகவரி : பெறப்பட்ட தேதி : சுட்டுகை எண் : : மின்வழங்கல் வகை மின்பகிர்மான உரிமதாரரின் கையொப்பம் மற்றும் முத்திரை பெயர் மற்றும் பதவிப் பெயர். | ||
| "படிவம் 1 A தற்காலிக மின்னிணைப்பு விண்ணப்ப படிவம் (ஒருமுனை / மும்முனை) தற்காலிக மின்னிணைப்பு கோரும் படிவம் (விதித்தொகுப்புத் தொடர் 27(3) பார்க்க) பெறுநர் விண்ணப்பதாரரின் புகைப்படம் குறிப்பிட்ட பதவிப் பொறியாளர் (உரிமதாரரின் முகவரி) அய்யா, 1. நான் / நாங்கள், /திரு / திருமதி ............................................ தந்தை / கணவர் பெயர்................................................. இதன்மூலம் தாங்களை இதன்பின்பு விவரிக்கப்பட்ட வளாகத்தில் (அல்லது) இருப்பிடத்தில் ………. நோக்கத்திற்காக தற்காலிக மின்னிணைப்பு வழங்குமாறு இதனால் கேட்டுக்கொள்கிறேன்(றோம்). 2. நான் / நாங்கள் மேற்சொன்ன மின்னாற்றலுக்காக, தமிழ்நாடு மின்பகிர்மான விதித்தொகுப்பு, மின்வழங்கல் விதித் தொகுப்பு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இது தொடர்பாக வெளியிடும் அறிவிப்புகள், ஆணைகள் ஆகியவற்றின்படி விதிக்கப்படும் விலை வீதத்திற்கு இணங்கக் கோரப்படும் மின் ஆற்றல், மின்னிணைப்புக் கட்டணங்கள், காப்பு வைப்புத்தொகை, மின்னளவி வாடகை, மேம்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்துவதற்கு ஒப்புக்கொள்கிறேன்(றோம்). 3. நான்/ நாங்கள், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடைமுறையிலுள்ள மின்கட்டண அட்டவணை பட்டியல் ....................... கீழ் விதித்துள்ள மின் கட்டணத்தின் படி விதிக்கப்பட விரும்புகிறேன்(றோம்). 4. நான்/நாங்கள், என்னுடைய /எங்களுடைய உண்மையான பயன்பாட்டிற்கு இதன்கீழ் விவரிக்கப்பட்ட வளாகத்தின் இருப்பிடத்தில் தற்காலிக மின் வழங்கலைப் பயன்படுத்தவும், அவற்றில் மின்னாற்றலை உபயோகப்படுத்தவும் ஒப்புக்கொள்கிறேன்(றோம்). 5. நான்/நாங்கள் மின்வழங்கல் தொடரும் காலத்தில், சொத்தினை விற்பனை செய்யும் நேர்வில் அல்லது பிறவாறு தீர்வு செய்யும் நேர்வில் / வளாகத்தினை காலி செய்யும் நேர்வில், நான்/நாங்கள் எழுத்து வடிவிலான ஒரு மாத கால அறிவிப்புக் கொடுக்கவும், உரிமதாரரிடம் நிலுவைத் அனைத்தையும் தொகைகள் செலுத்துவதற்கும் ஒப்புக்கொள்கிறோம். அவ்வாறு கொடுக்கத் தவறுகையில் நான் / நாங்கள் தாற்காலிக மின்வழங்கலைப் பயன்படுத்திய முழுக்கால அளவிற்கு வளாகத்தில் நுகரப்பட்ட மின்னாற்றலுக்கு நானே/நாங்களே பொறுப்புடையவராவோம். இந்த மின்னிணைப்பில் ஏதேனும் பிறவகையில் செலுத்த வேண்டிய பாக்கித் தொகை இருக்குமானால், நான் / நாங்கள் எனது / எங்களது பெயரிலுள்ள மின்னிணைப்புகளின் எண்களில்....................... (இருக்கும் பட்சத்தில்) அத்தகைய பாக்கித் தொகைகளை சேர்த்துக் கொள்வதற்கு ஒப்புக்கொள்கிறேன்(றோம்). | ||
| 6. தற்காலிக மின்னிணைப்பு கோரப்படுகிற வளாகத்தின் / இருப்பிடத்தின் உடைமை : a. நிலத்தின் புல எண் (S.F.No.) / கதவு எண் : b. தெரு : c. நகரம் / கிராமம் : d. வளாகத்தின் இட அடையாளம் : e. வட்டம் : f. மாவட்டம் : g. உரிமையாளரின் பெயர் : : h. குடியிருப்பவரின் பெயர் i. விண்ணப்பதாரரின் கடிதத் தொடர்பு முகவரி : j. தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் : 7. வளாகத்தின் விவரம் : a. மனையின் பரப்பு : b. கட்டிடத்தின் மொத்த பரப்பு / அனைத்துத் தளங்களின் தளப் பரப்பு : c. கட்டப்பட வேண்டிய தளங்களின் எண்ணிக்கை : (அடித்தளம் (Basement) / சாய்வுத்தளம் (Stilt) / தரை தளம் (Ground fl oor) / பிற தளங்கள் (Other fl oors) என விவரமாக அளிக்கப்பட வேண்டும்) d. மேலே குறிப்பிடப்பட்ட தளங்களுக்காகவும் கட்டிடங்கள் கட்டுவதற்காகவும் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பிடமிருந்து கட்டிட வரைபடத்தின் ஒப்புதலளிப்புடன் திட்ட அனுமதி பெறப்பட்டிருக்கிறதா?: e. ஒப்புதலளிக்கப்பட்ட கட்டிட வரைபடத்துடன் திட்ட அனுமதியின் நகல் இணைக்கப்பட்டுள்ளதா? : f. திட்ட அனுமதியின் / திட்ட வரைபட ஒப்புதலளிப்பின்படி கட்டிடத்தின் உயரம் : (திட்ட வரைபட அனுமதியில் காட்டப்பட்டவாறு கட்டிடத்தின் உயரம் 15 மீட்டருக்கு மேற்படுமானால், மின் ஆய்வாளரிடமிருந்து ஒப்புதலளிப்பு பெறப்பட வேண்டும்.) g. மின்னாக்கி / மின்தூக்கி நிறுவப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதா? (ஆம் எனில், மின் ஆய்வாளர் அலுவலகத்திலிருந்து ஒப்புதலளிப்பு பெறப்பட வேண்டும்.) h. உயர் அழுத்த / தாழ்வழுத்த மின்தொடர் எதுவும் வளாகத்தினுள் அல்லது அதனருகில் செல்கிறதா? (ஆம் எனில், நடைமுறையிலுள்ள பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளின்படி போதிய பாதுகாப்பு தூரத்துடன் கட்டிடம் கட்டப்பட வேண்டும் அல்லது இயலும் தன்மையின் நிபந்தனைக்கு உட்பட்டு, விண்ணப்பதாரரின் செலவில் அந்த மின் தொடர்கள் வழி மாற்றப்பட வேண்டும். |
| 8. தற்காலிக மின்னிணைப்புக்கால அளவு முடிவடைந்த பின்பு அந்த மின்னிணைப்பு நிரந்தரமாகத் தேவைப்படுகிறதா? இல்லை எனில், (i) தற்காலிக மின் வழங்கல்தேவைப்படக்கூடிய குறிப்பிட்ட நோக்கம்: (ii) தாற்காலிக மின் வழங்கல் தேவைப்படும் கால அளவு: 9. மின்னிணைப்பு செய்யப்பட வேண்டிய சுமைகளின் விவரங்கள் : | ||||||
| (A) மின் விளக்கு | முனைகளின் எண்ணிக்கை | முனைகளின் வாட்டளவு | மொத்த வாட்டளவு | |||
| (i) மின் விளக்குகள் | - | - | - | |||
| (ii) மின்விசிறிகள் | - | - | - | |||
| (iii) தேவையான செருகமைப்புகள் | - | - | - | |||
| (B) மின்திறன் சுமைகள் | ||||||
| (i) இயக்கிகள் (Motors) | ||||||
| (ii) பற்றவைப்பு (Welding) | ||||||
| (iii) வெட்டும் இயந்திரம் (Cutting Machines) | ||||||
| (iv) எடுத்துச் செல்லத்தக்க துணைக் கருவிகள் (Portable Appliances) | ||||||
| (v) மின்தூக்கிகள் (Lifts) / மின்னுயர்த்திகள் (Elevators) | ||||||
| (vi) பிற கருவிகள் | ||||||
| (vii) தேவையான செருகமைப்புகள் | ||||||
| 10. விண்ணப்பிக்கப்படும் மின் தேவை, கிலோவாட்டில் : 11. விண்ணப்பிக்கப்பட்ட நிறுவுகையில் மின்பகிர்மான விதித்தொகுப்பின் படி மின்கசிவு பாதுகாப்பு சாதனம் (RCD) அமைக்கப்பட்டுள்ளதா?: 12. கம்பியமைப்பு பணி முடிவடைந்த நாள் : 13. விண்ணப்பதாரர்களின் பெயர்களில் உள்ள மின்னிணைப்புகள் எவையேனுமிருப்பின், அவற்றின் விவரங்கள்: 14. விண்ணப்பதாரர்களின் அல்லது வளாகத்தின் பெயர்களில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு பிறவகையில் செலுத்த வேண்டிய மின்நுகர்வுக் கட்டணங்கள் அல்லது பிற கட்டணங்கள் எவையும் பாக்கியுள்ளதா? ஆம் எனில், விவரங்கள் (மின் இணைப்பு எண்ணுடன், பிரிவின் பெயர் / வட்டம் முதலியவை ) அளிக்கவும் : விண்ணப்பதாரர்களால் வழங்கப்பட வேண்டிய இடம்: 1. பன்மாடிக்கட்டிடத்தில் மற்றும் (a) சாய்வுத் தளம் / அடித்தளம் நீங்கலாக மொத்த தரைப் பரப்பு 900 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேலும் கொண்டிருக்கிற தாழ்வழுத்த மின்னிணைப்பு கோருகிற கட்டிடம் / வளாகம் எதுவும் அல்லது (b) அந்தக் கட்டிடத்திலுள்ள தாழ்வழுத்த மின்னிணைப்புகள் அனைத்திலும் மொத்த மின் தேவை 112 கிலோவாட்டிற்கு மேற்படுமாயின் போதிய இடத்தை, தமிழ்நாடு மின்பகிர்மான விதித் தொகுப்பின் 29 (11) ஆம் ஒழுங்குமுறை விதியில் கூறப்பட்டவாறு மின் மாற்றிகள், இணைப்பமைப்புகளை நிறுவுவதற்கு உரிமதாரருக்கு விலையின்றி ஏற்பாடு செய்து தர வேண்டும். 2. தமிழ்நாடு மின்பகிர்மான விதித் தொகுப்பின் 29(12) ஆம் ஒழுங்குமுறை விதியில் குறித்துரைக்கப்பட்ட வரன்முறைகளின் படி இடமானது (தகவல் தொழில் நுட்பம் தொடர்புடைய நோக்கங்கள் அல்லாத பிற தொழில்களுக்காக மின்னிணைப்புகள் தவிர), மின்னிணைப்புகள் தேவைப்படுகிற இடங்களில், ஒன்று (a) எதிர்காலத்தில் நேரிடக்கூடிய 5 மெகா வோல்ட் ஆம்பியருக்கு மேற்படுகிற விடத்து / மேற்படக்கூடிய விடத்து அல்லது (b) மொத்த தரைப் பரப்பு 30,000 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேலும் (சாய்வு தளம் / அடித்தளம் நீங்கலாக) கட்டப்படுகிற விடத்து அல்லது கட்டப்படுவதற்கு உத்தேசிக்கப்படுகிற விடத்து துணை மின் நிலையம் / இணைப்பு மின் நிலையம் அமைப்பதற்கு இலவசமாக விண்ணப்பதாரர் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். | ||
| 3. உயர் அழுத்த மின்னிணைப்புகளுக்கான உள்ளக மின்னளவி அமைக்கப் போதுமான அளவுடைய மின்வடக் கால்வாயும், வெளியேற்றும் மின்விசிறியும் பூட்டும் ஏற்பாடும், தரைவிட்டத்தில் தளங்களுக்கு இடையில் 3.7 மீட்டருக்கும் குறையாத குத்துயரமும் 5 மீட்டர் X 6 மீட்டர் அளவுக்கும் குறையாத தளப்பரப்பும் வலுவூட்டிய சிமெண்ட்டுக் கற்காரைக் கூரையும் அமைந்த மின்சார அறையைத் தரைத்தளத்தில், உரிமதாரர் சாதனங்களை நிறுவுவதற்காக, ஏற்பாடு செய்து தரவேண்டும். இந்த அறை தீக்காப்பும், வானிலைக்காப்பும் கொண்டதாக அமையவேண்டும். திறந்த வெளிமுறையில் மின்னளவு செய்ய 10 மீட்டர் X 4 மீட்டர் அல்லது 5 மீட்டர் X 5 மீட்டர் அளவுக்கு குறையாத இடத்தைத் திறந்த வெளியில் ஏற்பாடு செய்து தரவேண்டும். இத்தகைய அமைப்பு, வளாகத்தின் பிறபகுதிகளிலிருந்து தீக்காப்புச் சுவர்களால் பிரிக்கப்பட்டு கட்டிடத்தின் புற எல்லையில் அமைத்தல் வேண்டும். இந்தப் பகுதிகள் திட்ட வரை படத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு காட்டப்பட வேண்டும். ஒப்புதலளிப்பிற்காக உரிய அதிகாரம் கொண்ட அலுவலருக்கு அந்த திட்ட வரைபடம் அனுப்பப்படும் முன்பு அது பொறியாளருக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதல் பெற வேண்டும். மின் வழங்கல் முனையமானது, பொது சாலையிலிருந்து சுமை ஊர்தியின் (Lorry) மூலம் எளிதில் அணுகத்தக்கதாகவும் சாலையிருந்து தெளிவாகப் பார்வையிடக் கூடியதாகவும், பாதுகாப்புக் கூறுகள் திருப்தியளிக்கும் வகையிலும், பிரதான நுழைவாயிலிருந்து 30 மீட்டருக்குள்ளும் இருக்க வேண்டும். மின்நுகர்வோர், உரிமையாளர்கள், அனுபவிப்பவர்கள், மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் மற்றும் மின் வளங்குபவர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை: மின் விளக்குகள், மின்விசிறிகள், எரியிழைகள், இணைப்புகள், 250 வோல்டிற்கு மேற்படாத வீட்டு உபயோக மின் சாதனங்கள் மற்றும் துணைக்கருவிகள் போன்றவை தவிர, நிறுவுகையின் மின் திறன் அல்லது இயல்பை எந்த வழியிலும் மாற்றம் ஏற்படத்தக்கூடிய கூடுதல் பணிகள், மாற்றுப்பணிகள், பழுது பார்ப்புகள், நேரமைவு செய்தல்கள் உள்ளடங்கலான மின் நிறுவுகைப் பணி எதுவும் மின்நுகர்வோர், மின்வழங்குநர், உரிமையாளர் அல்லது அனுபோகதாரர் ஆகியோருக்கு அல்லது அவர்கள் சார்பாக, மாநில அரசால் இதன் பொருட்டு உரிமம் வழங்கப்பட்ட மின் ஒப்பந்ததாரரால், தகுதியுடைமைச் சான்றிதழ் வைத்திருக்கிற நபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மற்றும் மாநில அரசால் வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு வைத்திருக்கிற நபரால் அன்றி பிற நபர்கள் மூலம் நிறைவேற்றக்கூடாது. | ||
| நான் / நாங்கள் மேற்சொன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிந்துள்ளேன்(ளோம்) மற்றும் அதனை கடைப்பிடிக்க ஒப்புக்கொள்கிறேன்(றோம்). நான் / நாங்கள் அவ்வப்போது ஆணையத்தினால் விதிக்கப்படும் பொருந்தத்தக்க மின் கட்டணம் / சிறுமக் கட்டணங்கள் / நிலையான கட்டணங்கள் / மேல் கட்டணம் முதலியவற்றை உரிமதாரருக்கு செலுத்துவதற்கு ஒப்புக்கொள்கிறேன்(றோம்). நான் / நாங்கள் தமிழ்நாடு மின் வழங்கல் விதித்தொகுப்பு, மின்பகிர்மான விதித்தொகுப்பு மற்றும் பொருந்தத்தக்க சட்டம், தொகுப்புச் சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றில் வகுத்தமைக்கப்பட்டுள்ள விவரக்குறிப்பீடுகள், நிபந்தனைகள் மற்றும் வகைமுறைகள் அனைத்திற்கும் மற்றும் அப்போதைக்கு நடைமுறையிலுள்ள அதன் மாற்றமைவுகள் எவற்றிற்கும் அல்லது அவ்வப்போது ஒப்புதலளிக்கப்படும் திருத்தியமைத்தல்கள், திருத்தங்களுக்கு உட்பட்டும், இணங்கி ஒப்புக் கொள்கிறேன்(றோம்). (குறிப்பு: இந்த ஏற்புறுதியானது, உரிமதாரருடன் செய்யப்பட்ட எழுத்து வடிவிலான தனிப்பட்ட ஒப்பந்தத்திற்கு தடையேற்படுத்தாது.) விண்ணப்பதாரர்(களின்) கையொப்பம் இடம் : நாள் : பெயர்(கள்) குறிப்பு : இந்த விண்ணப்பமானது பின்வரும் ஆவணங்களுடன் சேர்ந்து விண்ணப்பிக்கப்பட வேண்டும். (i) சுய சான்றொப்பமிட்ட விற்பனை ஆவணம் (அல்லது) பாகப்பிரிவினை ஆவணம் (அல்லது) கொடை அறுதியாவணம் (அல்லது) ஒதுக்கீட்டுக் கடிதம் (அல்லது) கணினி பட்டா (அல்லது) வருவாய்த் துறை அலுவலர்களால் வழங்கப்பட்ட உடைமைச் சான்றிதழ் (அல்லது) நீதிமன்றத் தீர்ப்பு அல்லது அண்மையில் செலுத்தப்பட்ட சொத்துவரி ரசீது போன்ற ஆவணத்தின் நகல். (ii) கூட்டுச் சொத்தாக இருக்கும் நேர்வில், மேலேயுள்ள குறிப்பு (i) இல் குறித்துரைக்கப்பட்ட தாய்பத்திரங்களின் நகலுடன் சேர்த்து உடைமையை நிரூபிப்பதற்கான ஆவணத்தின் மற்றும் உடன்-உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட சம்மதக் கடிதத்தில் சுய சான்றொப்பமிட்ட நகல்கள். சம்மதக் கடிதம் அளிக்காத பட்சத்தில் காப்புறுதி பத்திரம், உயர்த்தப்பட்ட காப்பு வைப்புத் தொகையுடன். | ||
| (iii) விண்ணப்பதாரர் உரிமையாளராக இல்லாதிருப்பாரானால் 5ஆம் எண் படிவத்தில் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட சம்மதக் கடிதம் அல்லது குடியிருப்பதற்கான செல்லத்தக்க நிரூபணம் மற்றும் 6 ஆம் எண் படிவத்தில் காப்புறுதி பத்திரம். (iv) தாழ்வழுத்த மின்னிணைப்புகள் இருக்கும் நேர்வில், தரையின் பரப்பு 900 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் இருந்தாலோ அல்லது மின் தேவை 112 கிலோவாட்டிற்கு மேல் இருந்தாலோ, தமிழ்நாடு மின் பகிர்மான விதித்தொகுப்பின் 29 (11) ஆம் உள் ஒழுங்குமுறை விதியின்படி மின்மாற்றியை நிறுவுவதற்காக ஒதுக்கிவைக்கப்பட்ட பரப்பிடத்தின் ஒப்புதலளிக்கப்பட்ட திட்ட வரைபடம் அல்லது தமிழ்நாடு மின்பகிர்மான விதித்தொகுப்பின் 23 (12) ஆம் உள் ஒழுங்குமுறை விதியில் நிபந்தனைகளுடன் குறித்துரைக்கப்பட்டவாறான வரம்பிற்கு மிகையான மின் தேவை / பரப்பிடமாக இருக்கும் நேர்வில், துணை மின் நிலையம் நிறுவுவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட பரப்பிடத்தின் மற்றும் அணுகு சாலையின் ஒப்புதலளிக்கப்பட்ட திட்ட வரை படம். அல்லது உட்புறத்தில் / வெளிப்புறத்தில் மின்னளவி வைப்பதற்காகவும், தமிழ்நாடு மின்பகிர்மான விதித்தொகுப்பின் 29(14) ஆம் உள் ஒழுங்குமுறை விதியில் நிபந்தனைகளுள் குறித்துரைக்கப் பட்டவாறான உயர் அழுத்த மின்னிணைப்பாக இருக்கும் நேர்வில் அணுகு சாலையுடன் மின்னளவி அமைவிடத்திற்காகவும் மின்னளவி முனையம் ஒதுக்கிவைக்கப்பட்ட பரப்பிடத்தின் ஒப்புதலளிக்கப்பட்ட திட்ட வரை படம். உரிமதாரரின் பயன்பாட்டிற்கு மட்டும் ஒப்புகை விண்ணப்பதாரரின் பெயர் : முகவரி : ரசீதின் நாள் : சுட்டுகை எண் : மின்வழங்கல் வகை : மின்பகிர்மான உரிமதாரரின் கையொப்பம் மற்றும் முத்திரை பெயர் மற்றும் பதவிப்பெயர் |
சென்னை&600 032, 2021 ஜூலை 26.
சு. சின்னராஜலு, செயலாளர்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU