[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2021
[விலை : ரூ. 4.00 காசு[விலை : ரூ. 4.00 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 34] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 25, 2021 ஆவணி 9, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2052
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைதொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கைஅறிவிக்கை
[அரசாணை (ப) எண். 269 , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, நாள்: 12-07-2021] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11 / 1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கொண்டு வெளியிடக் கருதியுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம்பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக, அதனால்பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், அது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து பெறப்படும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை – 600 006 இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11 / 1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 21-03-2017 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் பாகம் II, பிரிவு 2 - இல் 6 மற்றும் 7 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/(தொ.வே)/184(g-3)/2017 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் அச்சகத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.
[ 1 ]
DTP-II-2-(34) (T Sup)—12
விவர அட்டவணைவிவர அட்டவணை
அச்சகத் தொழிலில் வேலைவாய்ப்புஅச்சகத் தொழிலில் வேலைவாய்ப்பு
| பணியாளர் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( மாதமொன்றுக்கு) | ||
| ( 1 ) | ( 2 ) | ||
| மண்டலம் - A | மண்டலம் - B | மண்டலம் - C | |
| ( ரூ . காசு) | ( ரூ . காசு) | ( ரூ . காசு) | |
| ( i ) | ( ii) | ( iii) | |
| தொகுதி – I கணக்காளர், முதலாள் மற்றும் மேற்பார்வையாளர் | 6522.00 | 6219.00 | 6092.00 |
| தொகுதி – II எழுத்தர், காசாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேரக்காப்பாளர், மோனோ – ஆபரேட்டர், மோனோ – காஸ்டர், லைன் ஆபரேட்டர், மறுதோன்றி அச்சிடுபவர், கலைஞர், கேமராமேன், அச்சுப் பதிப்பவர் மற்றும் தானியங்கி இயந்திரத்தை இயக்குபவர். | 6348.00 | 6055.00 | 5905.00 |
| தொகுதி – III எழுத்துப்பிழை சரிசெய்பவர், உருளை மிதியச்சு இயந்திரத்தை இயக்குபவர், பிளேட்மேக்கர், மின் கம்மியர், அச்சுக் கோப்பவர், கட்டுநர், கோடு வரைபவர், கடைபவர் மற்றும் ஃ பீடர். | 6174.00 | 5880.00 | 5740.00 |
| தொகுதி – IV வீலர், உதவியாள், அலுவலக வேலையாள், ஏவலாள், காவலாள், சிப்பம் செய்பவர் மற்றும் தொழில் பழகுநர் | 5940.00 | 5633.00 | 5600.00 |
விளக்கங்கள் :- (1) மண்டலங்களின் வகைப்பாடுகள் விளக்கங்கள் :- (1) மண்டலங்களின் வகைப்பாடுகள் :-- A, B மற்றும் C மண்டலங்கள் கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டிருக்கும்..
மண் டலம் – Aமண் டலம் – A : அனைத் து மாநகராட் சிகள் , சி றப்பு நிலை நகராட் சிகள்
மண் டலம் – Bமண் டலம் – B : சி றப் பு நி லை நகராட் சிகள் நீ ங் கலான அனைத்து நகராட் சிகள்
மண் டலம் – Cமண் டலம் – C : மண் டலம் – A மற் று ம் மண் டலம் – B இல் கு றி ப்பிடப் பட் டுள் ளவை நீ ங் கலாக ஏனைய அனைத்துப் பகு தி கள்
(2) அகவிலைப்படி:அகவிலைப்படி:-- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் கூடுதலாக பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்களொன்றுக்கு ரூ.34.75/- ) முப்பத்து நான்கு ரூபாய் மற்றும் எழுபத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
3(ii) அகவிலைப்படியானது முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளில் அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்கவேண்டும்.
(5) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
ஆர். கிர்லோஷ் குமார் , ஆர். கிர்லோஷ் குமார் ,
அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந, அருள்அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (ப) எண். 270, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை நாள் : 12-07-2021] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள கீழ் காணும் அறிவிக்கையின் வரைவு, இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழின் தமிழ்நாடு அரசிதழின் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை – 600 006 இல் உள்ள தொழிலாளர் துறை ஆணையாளர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 21-03-2017 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு 2 - இல் 7, 8 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே/184(ஜி-4)/2017 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் இரசாயன உரத் தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3)ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
4விவர அட்டவணைவிவர அட்டவணை
இரசாயன உரத் தொழிற்சாலைகளில் (Chemical Fertilizer Industry) வேலைவாய்ப்பு. இரசாயன உரத் தொழிற்சாலைகளில் (Chemical Fertilizer Industry) வேலைவாய்ப்பு.
| பணியாளர்களின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு) ( ரூ . பை.) |
| (1) | (2) |
| 1. நிருவாகப் பணியாளர் : | |
| (1) மேற்பார்வையாளர் | 9022.00 |
| (2) எழுத்தர் / தட்டச்சர் / கணக்காளர் | 7600.00 |
| (3) ஓட்டுநர் / பண்டகக் காப்பாளர் | 7395.00 |
| (4) அலுவலக உதவியாள் | 6990.00 |
| 2. தொழிலாளர்கள் வகை : | |
| (1) உயரளவு பயிற்சி பெற்றோர் : தொழில்நுட்ப மேற்பார்வையாளர் /வேதியியலர் | 8514.00 |
| (2) பயிற்சி பெற்றோர் : இயக்குபவர் / தொழில்நுட்பவியலர்/மின்னியலர்/ பொருத்துநர் | 7803.00 |
| (3) பயிற்சி பெறாதோர் : பொதுப் பணியாளர்கள் / உதவியாளர் / நிரப்புனர் | 7394.00 |
விளக்கங்கள்: :- (1) அகவிலைப்படி :விளக்கங்கள்: :- (1) அகவிலைப்படி :- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ. 43.40/- (நாற்பத்து மூன்று ரூபாய் நாற்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்கவேண்டும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
5(5) இரசாயன உரத் தொழில் வேலைவாய்ப்பில் பாதுகாப்புப் பணிகளைச் சேர்ந்த வகைகளுக்கு, பாதுகாப்புக் காவலர்களுக்கான வேலைவாய்ப்பில் நிர்ணயிக்கப்பட்ட / திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியங்கள் பொருந்தும்.
ஆர். கிர்லோஷ் குமார்,ஆர். கிர்லோஷ் குமார்,
அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந, அருள்அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (ப) எண். 271, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1) த் துறை, நாள் : 12-07-2021] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள அறிவிக்கையின் கீழ்க்காணும் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை, சென்னை- 600 006 இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11 / 1958) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 03-01-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் தமிழ்நாடு அரசிதழில் பாகம் II பிரிவு 2 இல் 15 மற்றும் 16 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II (2)/LE/16/2018 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் பருத்தியில் கொட்டை நீக்குதல், பஞ்சு அடித்தல் மற்றும் கழிவுப் பஞ்சினை அகற்றும் பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
விவரவிவர அட்டவணைஅட்டவணை
பருத்தியில் பருத்தியில் கொட்டைகொட்டை நீக்குதல்நீக்குதல், , பஞ்சுபஞ்சு அடித்தல்அடித்தல் மற்றும்மற்றும் கழிவுப்கழிவுப் பஞ்சினைபஞ்சினை அகற்றும்அகற்றும் பணிகளில்பணிகளில் வேலைவாய்ப்புவேலைவாய்ப்பு
| தொடர் எண் | தொழிலாளர்களின் வகை | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு) |
| (1) | (2) | (3) |
| I. உயரளவு பயிற்சி பெற்றவர்கள் | ||
| 1 | தச்சர் | நாளொன்றுக்கு ரூ. 301.00 |
| 2 | மின்கம்மியர் | |
| 3 | இயந்திரக் கம்மியர் | |
| 4 | வில்லோ ஓட்டுநர் | |
| 5 | அழுத்தப்பொறி ஓட்டுநர் | |
| 6 II. பயிற்சி பெற்றவர் | விதையகற்றுபொறி ஓட்டுநர் | |
| 1 | பெட்டிப் பணியாளர் | நாளொன்றுக்கு ரூ.285.00 |
| 2 | அழுத்தப்பொறி பொருத்துனர் / பொதுப் பொருத்துனர் / விதையகற்றுபொறி பொருத்துனர் | |
| 3 | மேலாள் | |
| 4 | அடையாளமிடுபவர் | நாளொன்றுக்கு ரூ.284.00 |
| 5 | வால்வுப் பணியாளர் | |
| 6 | எண்ணெயிடுபவர் | நாளொன்றுக்கு ரூ.281.50 |
| 7 | மீள்வுறுத்துநர் (ரிவெர்ட்டர்) | |
| 8 | எடையாளர் | |
| 9 | உருளை உருட்டுபவர் | |
| III. ஓரளவு பயிற்சி பெற்றவர் | ||
| 1 | லஸ்கர் (உதவியாள்) | நாளொன்றுக்கு ரூ.285.00 |
| 2 | பொதி தைப்பவர் | நாளொன்றுக்கு ரூ.281.50 |
| 3 | விதையகற்றுபொறியில் பருத்தி இடுபவர் | நாளொன்றுக்கு ரூ.279.00 |
| 4 | சாவி திறப்பாளர் | நாளொன்றுக்கு ரூ.281.50 |
| 5 | விதையகற்றுபொறி மற்றும் அழுத்தப்பொறி மஸ்தூர்கள் | நாளொன்றுக்கு ரூ.277.00 |
| IV. பயிற்சி பெறாதவர் | ||
| 1 | மூட்டை எடுத்துச் செல்லுபவர் | நாளொன்றுக்கு ரூ.286.50 |
| 2 | போரா நிரப்புபவர் | நாளொன்றுக்கு ரூ.284.00 |
| 3 | போரா உருட்டுபவர் | நாளொன்றுக்கு ரூ.279.00 |
| 4 | பொதியாக்குபவர் | நாளொன்றுக்கு ரூ.275.00 |
| 5 | பருத்தியெடுப்பவர் | நாளொன்றுக்கு ரூ.273.00 |
| 6 | பருத்தியைச் சுத்தப்படுத்த அடிப்பவர்கள் | நாளொன்றுக்கு ரூ.275.00 |
| 7 | பருத்தி எடுத்துச் செல்பவர் | நாளொன்றுக்கு ரூ.273.00 |
| 8 | கேப்ஸ் பை திறப்பவர் | நாளொன்றுக்கு ரூ.275.00 |
| 9 | கேப்ஸ் எடுப்பவர் | நாளொன்றுக்கு ரூ.273.00 |
| 10 | லின்ட் சுத்தப்படுத்துபவர் | நாளொன்றுக்கு ரூ.273.00 |
| 11 | தைப்பவர்கள் (பொதி தைப்பவர் அல்லாதவர்கள்) | நாளொன்றுக்கு ரூ.275.00 |
| 12 | விதை அகற்றுபவர் அல்லது எடுத்துச்செல்லுபவர் | நாளொன்றுக்கு ரூ.275.00 |
| 13 | பெருக்குபவர் | நாளொன்றுக்கு ரூ.277.00 |
| 14 | பருத்தி சுத்தப்படுத்தும் இருக்கையாள் | நாளொன்றுக்கு ரூ.275.00 |
| 15 | அட்டியிடுபவர் (Staking) | நாளொன்றுக்கு ரூ.282.00 |
| 16 | போரா திறப்பவர் | நாளொன்றுக்கு ரூ.273.00 |
| 17 | பருத்திக் கழிவு சுத்தப்படுத்துபவர் | நாளொன்றுக்கு ரூ.273.00 |
| 18 | துடைப்பான் செய்பவர் | நாளொன்றுக்கு ரூ.281.50 |
| 19 | மேற்சொன்னவற்றில் சேராத ஏனைய யாதொரு வகையினர் | நாளொன்றுக்கு ரூ.273.00 |
| V. பல்வகை | ||
| 1 | கணக்காளர் | மாதமொன்றுக்கு ரூ 7676.00 |
| 2 | எழுத்தர் / தட்டச்சர் | மாதமொன்றுக்கு ரூ 7502.00 |
| 3 | காவலாள் | மாதமொன்றுக்கு ரூ 7191.00 |
| 4 | அலுவலகப் பையன் / ஏவலர் | மாதமொன்றுக்கு ரூ7191.00 |
விளக்கங்கள்விளக்கங்கள்: :- (1) அ :- (1) அகவிலைப்படிகவிலைப்படி : - மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
7(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ.44.65 (நாற்பத்து நான்கு ரூபாய் அறுபத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்கவேண்டும்..
(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
இரா. கிர்லோஷ் குமார், . கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந, அருள்அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (ப) எண், 276 , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, நாள்: 20-07-2021] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள அறிவிக்கையின் கீழ்காணும் வரைவு, அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால்பா திக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இதன் வரைவு அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை டிஎம்எஸ் வளாகம், சென்னை – 600 006 இல் உள்ள தொழிலாளர் துறை ஆணையாளர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
8வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) ஆம் பிரிவைச் சேர்ந்த 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 03-01-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு 2 இல் 12 மற்றும் 13ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/(தொவே)/14/2018 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் அப்பளம் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
விவரவிவர அட்டவணை அட்டவணை
அப்பளம் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்புஅப்பளம் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு
| தொழிலாளர் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | |
| மண்டலம் – 1 ( ரூ . காசு) | மண்டலம் – 2 ( ரூ . காசு) | |
| (1) (2) | ||
| (1) சிப்பம் செய்பவர் | 7352.00 மாதம் ஒன்றிற்கு | 7191.00 மாதம் ஒன்றிற்கு |
| (2) கணக்காளர் | 7502.00 மாதம் ஒன்றிற்கு | 7352.00 மாதம் ஒன்றிற்கு |
| (3) எடையிடுபவர் / உதவியாளர் | 7352.00 மாதம் ஒன்றிற்கு | 7191.00 மாதம் ஒன்றிற்கு |
| (4) நறுக்குதல் (100 கிலோ கிராம் ஒன்றுக்கு) | 604.75 | 455.86 |
| (5) கலவை (100 கிலோ கிராம் ஒன்றுக்கு) | 707.09 | 521.01 |
| (6) அப்பளம் தயாரித்தல் (i) அப்பளங்கள் (3அங்குலம்) அல்லது 7.6 செ.மீ (விட்டம்), 100 எண்ணிக்கை (300 கிராம்) | 11.72 | 8.42 |
| (ii) அப்பளங்கள் (4அங்குலம்) அல்லது 10.2 செ.மீ (விட்டம்), 100 எண்ணிக்கை (400 கிராம்) | 14.97 | 11.04 |
| (iii) அப்பளங்கள் (5அங்குலம்) அல்லது 12.7 செ.மீ (விட்டம்), 100 எண்ணிக்கை (500 கிராம்) | 22.15 | 16.29 |
| (iv) அப்பளங்கள் (6அங்குலம்) அல்லது 15.2 செ.மீ (விட்டம்), 100 எண்ணிக்கை (700 கிராம்) | 24.74 | 18.28 |
விளக்கங்கள்:விளக்கங்கள்:- - (1) மண்டலம் - I மற்றும் மண்டலம் – II இல் பின்வரும் பகுதிகள் அடங்கும்.
மண்டலம் – I : அனைத்து மாநகராட்சிகள் மற்றும் சிறப்பு நிலை மற்றும் தெரிவுநிலை நகரியங்கள் உட்பட சிறப்பு நிலை மற்றும் தெரிவுநிலை நகராட்சிகள்.
மண்டலம் – II : ஏனைய பகுதிகள்.
(2) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியானது திங்கள் ஒன்றுக்கு ரூ.44.65 (நாற்பத்து நான்கு ரூபாய் அறுபத்து ஐந்து காசு மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
9(ii) அகவிலைப்படியானது, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாளிலிருந்து கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டில் சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும் போது, ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.
(4) நாள் ஊதியத்தை கணக்கிட மாத ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(5) இங்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
இரா. கிர்லோஷ் குமார், . கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந, அருள்அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2ப) எண். 34, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1) த் துறை, நாள் : 22-07-2021] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11 / 1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியின் கீழ் நியமிக்கபட்ட குழுவின் ஆலோசனையைக் கருதிப்பார்த்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் மட்பாண்டத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அதன் (3) நெடும் பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் நிர்ணயிக்கிறார்.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்த நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
மட்பாண்டத் தொழில்களில் வேலைவாய்ப்பு
மட்பாண்டத் தொழில்களில் வேலைவாய்ப்பு
| தொடர் எண் ( 1 ) | பணியாளர்களின் வகை ( 2 ) | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( மாதமொன்றுக்கு) ( ரூ . காசு) ( 3 ) |
| (1) | பயிற்சி பெற்றோர் | 12505.00 |
| (2) | பயிற்சி பெறாதோர் | 6443.00 |
விளக்கங்கள்விளக்கங்கள்: :- (1) அ :- (1) அகவிலைப்படிகவிலைப்படி:: - மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது , 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ.40.00 (ரூபாய் நாற்பது மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
10(ii) அகவிலைப்படியானது முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட அகவிலைப்படியின் முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்கவேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
இராஇரா. கிர்லோஷ் குமார், . கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந, அருள்அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.