©
GOVERNMENT OF TAMIL NADU 2021
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Rs. 4.00 Paise.
| îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´ ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 402A] சென்னை, ªêšõ£Œ'Aö¬ñ, செப்டம்பர் 7, 2021 ÝõE 22, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052
ð°F IV—HK¾ 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
பொருளடக்கம்
ê†ìº¡õ®¾èœ:
⇠31/2021—தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள்
மதிப்பீட்டுச் (இரண்டாம் திருத்தம்) சட்டம் .. .. 2-4 ⇠32/2021—தமிழ்நாடு
5-9 Ex-IV-402A—1
[ 1 ]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 1955 M" M©L jäœehL ÚÂk‹w¡ f£lzƒfŸ k‰W" cçik tH¡FfŸ kÂ¥Õ£L¢ r£l¤Âid nkY" ÂU¤j" brŒtj‰fhdbjhU r£lK‹toÎ.
இந்தியக் குடியரசின் எழுபத்து இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின் வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு
மற்றும் தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் (இரண்டாம் திருத்தம்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(தமிழ்நாடு சட்டம் 2. 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை
XIV/1955 ) வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தின், II ஆம் இணைப்புப்பட்டியலில்,
II ஆம் இணைப்புப் பட் டியலு க் க ான திருத்தம்.
(1) (1) ஆம் பத்தி நிரலில் 3 ஆம் உறுப்பில், அதன் (2) ஆம் பத்தி நிரலில் (ii) ஆம் இனத்திற்கு எதிராக உள்ள (3) ஆம் பத்தி நிரலில் "இரண்டாயிரம் ரூபாய்" என்ற உள்ளீட்டிற்காக, "ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்" என்ற உள்ளீடானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) (1) ஆம் பத்தி நிரலில் 11 ஆம் உறுப்பில், அதன் (2) ஆம் பத்தி நிரலில் (r) என்ற கூறிற்கு எதிராக உள்ள (3) ஆம் பத்தி நிரலில் "ஆயிரம் ரூபாய்" என்ற உள்ளீட்டிற்காக, "எழுநூற்று ஐம்பது ரூபாய்" என்ற உள்ளீடானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
3 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுneh¡f¡ fhuz és¡fÎiu
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் K. சம்பத் அவர்களின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 6/2017) மூலம் 1955ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் XIV/1955) திருத்துவதனால் நீதிப்பேராணை மனுவிற்கு தாக்கல் செய்யும் நீதிமன்றக் கட்டணமானது ரூ. 1000/-ஆகவும் நீதிப்பேராணை மேல்முறையீட்டிற்கு தாக்கல் செய்யும் நீதிமன்றக் கட்டணமானது ரூ. 2000/- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீதிப்பேராணை மனு மற்றும் நீதிப்பேராணை மேல்முறையீட்டு மனுவைப் பொறுத்த நீதிமன்றக் கட்டணங்களின் மறு சீராய்வுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு நீதிப்பேராணை மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றமானது நீதிப்பேராணை மனு எண். 10233/2020ன் 31.03.2021 தேதியிட்ட இடைக்கால ஆணையில் மேற்சொன்ன நீதிமன்றக் கட்டணத்தின் அதிகரிப்பின் அளவானது மாநில அரசால் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய அளவு அதிகமாக உள்ளது என கருத்துரை தெரிவித்துள்ளது. அரசானது, உயர்நீதிமன்றத்தின் கருத்துரையைக் கருத்தில் கொண்டு, நீதிப்பேராணை மனுவினை தாக்கல் செய்வதற்காக, ரூ. 750/- மற்றும் நீதிப்பேராணை மேல்முறையீடு தாக்கல் செய்வதற்காக ரூ. 1500/- என நீதிமன்றக் கட்டணத்தை குறைக்கவும், 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் XIV/1955) மேற்கண்ட நோக்கத்திற்காக திருத்துவதெனவும் முடிவு செய்துள்ளது.
2. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
v°. uFgÂ,
A. YQõ£ê¡, சென்னை-600 009, செப்டம்பர் 7, 2021.
4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 7 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 9 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுA. YQõ£ê¡, சென்னை-600 009, செப்டம்பர் 7, 2021.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.