Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments

Published 13 October 2021

Type
Ordinary
Gazette no.
41
Part
Part II
Notifications
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT - Notifications
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-10-13.Ordinary_41_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

click here for IIIF manifest

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2021

[விலை : ரூ. 2.40 காசு

îI›ï£´ ÜóCî› ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 41] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 13, 2021 புரட்டாசி 27, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2052

ð°F II—HK¾ 2 Þ¡ ެ특

Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கைகள்

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள கீழ்காணும் அறிவிக்கையின் வரைவு, இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, இதனால் வெளியிடப்படுகிறது.

(2) இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை - 600 006-இல் உள்ள தொழிலாளர் துறை ஆணையர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 03-01-2018 ஆம் நாளிட்ட பாகம் II, பிரிவு 2 - இல் 9, 10-ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே/11/2018-ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் காப்பிக் கொட்டையைப் பதப்படுத்தும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவரஅட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3)ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். [ 1 ]

DTP-II-2-(41) (T Sup)—12 விவர அட்டவணை

காப்பிக் கொட்டையை பதப்படுத்தும் தொழிலில் வேலைவாய்ப்பு

தொகுதி-I
(1) உதவி மேலாளர் மாதமொன்றுக்கு ரூ. 7182.00
(2) கணக்காளர் மாதமொன்றுக்கு ரூ. 6794.00
(3) எழுத்தர்கள்/தட்டச்சர்கள்/காசாளர்கள் மாதமொன்றுக்கு ரூ. 6698.00
(4) ஏவலர் மாதமொன்றுக்கு ரூ. 6455.00
(5) காவலாள் மாதமொன்றுக்கு ரூ. 6455.00
(6) குழந்தைகள்காப்பகத்தின் பணிப்பெண் மாதமொன்றுக்கு ரூ. 6417.00
தொகுதி-II
(1) மின்கம்மியர் மாதமொன்றுக்கு ரூ. 6942.00
(2) தச்சர் மாதமொன்றுக்கு ரூ. 6698.00
(3) பொருத்துநர் மாதமொன்றுக்கு ரூ. 6604.00
(4) எஞ்ஜின் ஓட்டுநர் மாதமொன்றுக்கு ரூ. 6942.00
(5) இயந்திரக் கம்மியர் மாதமொன்றுக்கு ரூ. 6887.00
தொகுதி-III
(1) ்பணியிட ( Yard ) கண்காணிப்பாளர் மாதமொன்றுக்கு ரூ. 7182.00
(2) மேஸ்திரி மாதமொன்றுக்கு ரூ. 6604.00
பதப்படுத்தாத காப்பிக் கொட்டையை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் இருப்பு வைக்கும் பணிகள்
(1) லாரியிலிருந்து காப்பிக்கொட்டையை இறக்கி குவித்து வைத்தல் டன் ஒன்றுக்கு ரூ. 53.73
(2) முதல் நாள் உலர வைப்பதற்கு டன் ஒன்றுக்கு ரூ. 35.27
(3) மேலும் ஒரு நாள் உலர வைப்பதற்கு டன் ஒன்றுக்கு ரூ. 19.85
(4) சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் செல்வதற்கு டன் ஒன்றுக்கு ரூ. 17.20
(5) மீண்டும் ஓரிடத்தில் குவித்து வைப்பதற்கு டன் ஒன்றுக்கு ரூ. 18.54
(6) ஒரு சேமிப்புக் கிடங்கிலிருந்து மற்றொரு கிடங்கிற்கு எடுத்துச் சென்று குவித்து வைப்பதற்கு டன் ஒன்றுக்கு ரூ. 37.06
(7) சேமிப்புக் கிடங்கு (எடைபோடுதல்) டன் ஒன்றுக்கு ரூ. 1.54
(8) காப்பிக் கொட்டைகளில் தோல் நீக்குதல் டன் ஒன்றுக்கு ரூ. 76.79
(9) தோல் நீக்கிய நிலையில் அரைக்கப்பட்ட காப்பி டன் ஒன்றுக்கு ரூ. 46.12
(10) மலைத் தோட்டத்திலிருந்து (Estate) அரைக்கப்பட்ட காப்பிக் கொட்டைகளை லாரியிலிருந்து இறக்குதல் மற்றும் குவித்து வைத்தல் டன் ஒன்றுக்கு ரூ. 42.88
பதப்படுத்தப்பட்ட காப்பிக்கொட்டை
(1) மாற்றப்பட்ட மொத்த அளவு (பதப்படுத்தும் கிடங்கிலிருந்து) (From Gardling Shed) 50 கிலோ ஒன்றுக்கு ரூ.1.80
(2) வழங்கப்பட்ட மொத்த அளவு (முழுமையாக பதப்படுத்துதல்) பை ஒன்றுக்கு ரூ. 4.53
(3) கலக்கப்பட்ட காப்பிக்கொட்டையின் மொத்த அளவு (பெருமளவு) டன் ஒன்றுக்கு ரூ. 18.54
(4) மொத்தமாக ஓரிடத்தில் சேர்த்து வைத்தல் டன் ஒன்றுக்கு ரூ. 84.44
(5) மாதிரி வகைகளைப் பெறுதல் (Samples Drawing) மாதிரி ஒன்றுக்கு ரூ. 3.09
(6) தோல் நீக்கப்பட்ட காப்பிக்கொட்டைகளை விற்பனை செய்வதற்காக சிப்பம் செய்து வழங்கல் (சந்தைப்படுத்துதல் நீங்கலாக) சிப்பம் செய்தல் மற்றும் எடை போடுதல் மூட்டைகளைத் தைத்தல் சுமை ஏற்றுதல் ரூ.61.42 ரூ.23.01 டன் ஒன்றுக்கு ரூ.115.14 ரூ.30.71
(7) ஏற்றுமதி செய்யப்படும் காப்பிக் கொட்டைகளை சிப்பம் செய்தல் மற்றும் வழங்குதல் (சிப்பம் செய்தல் நீங்கலாக) (60 கிலோ கிராம் கொண்டவையாக சிப்பம் செய்தல்) சிப்பம் செய்தல் மற்றும் எடைபோடுதல் மூட்டைகளைத் தைத்தல் சுமை ஏற்றுதல் ரூ.69.11 ரூ.30.11 டன் ஒன்றுக்கு ரூ.130.53 ரூ.30.71
(8) ஏற்றுமதி செய்யப்படும் காப்பிக் கொட்டைகளைச் சிப்பம் செய்தல் மற்றும் வழங்குதல் (சந்தைப்படுத்துதல் நீங்கலாக) 75 கிலோ கிராம் கொண்டவையாக சிப்பம் செய்தல் சிப்பம் செய்தல் மற்றும் எடைபோடுதல் மூட்டைகளைத் தைத்தல் சுமை ஏற்றுதல் ரூ.69.11 ரூ.30.71 டன் ஒன்றுக்கு ரூ.130.53 ரூ.30.71
(9) வகை வாரியாக ஒதுக்கி வைத்தலுக்கான(Set apart) கட்டணங்கள் டன் ஒன்றுக்கு ரூ.130.52
(10) குறியிடல் மூட்டை ஒன்றுக்கு ரூ.2.28
(11) சாதாரண குறியிடல் மூட்டை ஒன்றுக்கு ரூ.1.54
(12) `ஜோட்டா (Jotta) கட்டணங்கள் ரூ.46.12 (100 மூட்டைகளுக்கு)
(13) பணிமனையில் சிப்பம் செய்தல் (Depot Packing) டன் ஒன்றுக்கு ரூ.130.52
(14) நான்கு முனைகளிலும் தைத்தல் மற்றும் கயிறு கொண்டு கட்டுதல் (R.C) கயிறு கொண்டு கட்டுதல் ரூ.30.68 ரூ.46.12 டன் ஒன்றுக்கு ரூ.76.80
(15) காப்பிக் கொட்டையை ஏற்றுமதி செய்ய முத்திரையிடுவதற்கான கட்டணங்கள் டன் ஒன்றுக்கு ரூ.15.38
எடுத்துச் செல்வோர்
மலைத்தோட்டம்-A மற்றும் C கிலோ ஒன்றுக்கு ரூ.1.54
மலைத்தோட்டம்-B மற்றும் ப்பீபரி காப்பிக்கொட்டை கிலோ ஒன்றுக்கு ரூ.1.80
ரொபெஸ்ட்டா A, B மற்றும் C கிலோ ஒன்றுக்கு ரூ.1.54
அரேபியச் செர்ரி மற்றும் ஏனைய தர வகைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.2.36
காப்பிக்கொட்டை மூட்டைகள், சாக்கு மூட்டைகள் ஆகியவற்றை எடுத்துச்செல்லுதல், காப்பிக்கொட்டைகளைக் குவித்தல், தோல் நீக்குதல், எடைபோடுதல் மற்றும் ஆபத்தான ஏனைய பணிகளில் ஈடுபடுத்தப்படுகிற நபர்கள் நாளொன்றுக்கு ரூ. 215.00
காப்பிக்கொட்டைகளைப் பரப்புதல், பெருக்குதல், உலர்த்துதல், சேர்த்து குவித்து வைத்தல், தைத்தல் ஆகியவற்றிலும் பணியிடத்திலுள்ள பதப்படுத்தப்படாத காப்பிக்கொட்டை மூட்டைகளைச் சிப்பம் செய்தல், எடை போடுதல் ஆகியவற்றிலும், காப்பிக்கொட்டை சாக்கு மூட்டைகளைக் கட்டுதல், காப்பிக்கொட்டைகளைப் பக்குவமாக உடைத்தலிலும் ஈடுபடுகிற நபர்கள் நாளொன்றுக்கு ரூ. 213.50
3 4

விளக்கங்கள்.-(1) அகவிலைப்படி.- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக்கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.1.30 (ஒரு ரூபாய் முப்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட, முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களிடையே எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) (i) ஒரு நாள் ஊதியத்தைக் கணக்கிட, மாத ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(ii) மாத ஊதியத்தை கணக்கிட, ஒரு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள் இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறவிடத்து அதே ஊதியங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

இரா.கிர்லோஷ் குமார்,

(தமிழாக்கம்)

ந. அருள்,

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11 / 1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

(2) இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் அது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து பெறப்படும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006 இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

5

வரைவு அறிவிக்கை

(b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 13-8-2014 ஆம் நாளிட்ட பாகம் II, பிரிவு 2 - இல் 537 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே/479/2014 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் தோல் பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

I. நிர்வாகப் பணியாளர்கள்
(1) மேலாளர் 8208.00 8102.00
(2) கணக்காளர் 7576.00 7470.00
(3) மேற்பார்வையாளர்/பண்டகக் காப்பாளர் 7153.00 7046.00
(4) தட்டச்சர்/நேரக்காப்பாளர்/கணினி இயக்குபவர்/காசாளர் 6731.00 6624.00
(5) ஓட்டுநர்/இயந்திரக் கம்மியர்/மின்கம்மியர் 6731.00 6624.00
(6) தூய்மைப் பணியாளர்/துணையாள்/தோட்டக்காரர் 5887.00 5781.00
II. தொழில்நுட்பப் பணியாளர்
(1) தேர்ச்சி பெறாதோர் 5887.00 5781.00
(2) ஓரளவு தேர்ச்சி பெற்றோர் 6309.00 6203.00
(3) தேர்ச்சி பெற்றோர் 6731.00 6624.00

விளக்கங்கள்: (1) A மற்றும் B மண்டலங்கள் கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டிருக்கும்:-

மண்டலம்-A : அனைத்து மாநகராட்சிகள்

மண்டலம்-B : மாநகராட்சிகள் நீங்கலாக ஏனைய அனைத்துப் பகுதிகள்

(2) அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் கூடுதலாக பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்களொன்றுக்கு ரூ.35.90/-) முப்பத்து ஐந்து ரூபாய் தொண்ணூறு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

அண்மைய நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும் போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(5) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள், அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

ஆர். கிர்லோஷ் குமார்,

(தமிழாக்கம்)

ந. அருள், தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 October 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-10-13.Ordinary_41_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-10-13.Ordinary_41_Part-II_Section-2-T-Sup.