Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances

Published 13 October 2021

Type
Ordinary
Gazette no.
41
Part
Part IV
Notifications
Act No. 13 of 2021 and 14 of 2021
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-10-13.Ordinary_41_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

click here for IIIF manifest

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2021 [விலை : ரூ. 2.40 காசு

îI›ï£´ ÜóCî› ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 41] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 13, 2021 புரட்டாசி 27, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052

ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2021 ஆம் ஆண்டு ü¨¬ô திங்கள் 24 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

ê†ì ⇠13/2021

2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமைச்

சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில்

மற்றும் பொறுப்புடைமை (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

4ஆம் பிரிவிற்கான 2. 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமைச்

16/2003.

திருத்தம்.

சட்டத்தின் 4 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,-

(1) (a) ஆம் கூறில், "2021 2022" எனும் சொற்றொடருக்காக, "2023-2024"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (b) ஆம் கூறில், "2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதி" எனும் சொற்றொடருக்காக, "2024 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ê. "è£H óM'°ñ£˜,

(தமிழாக்கம்)

è. ïóC‹ñ¡,[1] IV-2(41)(T-Sup)-1 2 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 30 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

ê†ì ⇠14/2021.

பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கானதொரு சட்டம்.

பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் சட்டம் தொடர்பான தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கையானது கடந்த சில ஆண்டுகளாக குறைந்துள்ளதால் அவர்களின் பிரதிநிதித்துவத்தை முன்னேற்றும் வேண்டுகோளுடன் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடமிருந்து அரசு பல முறையீடுகளை பெற்றுள்ளது என்பதாலும்;

மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூக பொருளாதார நிலைகள், அத்தகைய மாணவர்கள் அனுபவித்த குறைபாடுகள், ஏதேனும் இருப்பின், மற்றும் பல்வேறு வகைகளிலான தொழிற்கல்வி படிப்புகள்/கல்வி நிறுவனங்களில் அவர்களின் முந்தைய சேர்க்கை தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்து மற்றும் அவர்களது குறைந்த பிரதிநிதித்துவத்திற்கு கூறப்பட்ட சிக்கல்கள் வழிவகுத்திருந்தால் பொறியியல்,

வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற

அத்தகைய தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசுப்

பள்ளி மாணவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான தீர்வு

நடவடிக்கைகளை அறிவுறுத்த மாண்புமிகு நீதியரசர் திரு. த. முருகேசன்

(டில்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி) அவர்களின்

தலைமையில், மூத்த அலுவலர்களைக் கொண்ட ஓர் ஆணையமானது

உருவாக்கப்பட்டது என்பதாலும்;

மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோரின் வறிய

சமூக-பொருளாதார நிலைகள், அத்தகைய மாணவர்களால்

அனுபவிக்கப்பட்ட குறைபாடுகள் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில்

அத்தகைய மாணவர்களின் மிகக்குறைந்த சேர்க்கை ஆகியவற்றை

கருத்தி்ல் கொண்டு, குறிப்பிலுள்ள பொருட்கூறில் செய்யப்பட்ட

மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையில், அவர்களின் கல்வித்

தரத்தினை முன்னேற்ற/மேம்படுத்த பல அறிவுறுத்தலை செய்ததைத்

தவிர மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு விதியினை

பாதிக்காமல், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, சேர்க்கையில் முன்னுரிமை

வழங்குவதற்கு பல்கலைக்கழகங்கள், சுயநிதிக் கல்லுாரிகள் மற்றும்

அரசுக் கல்லுாரிகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம்,

மீன்வளம், சட்டம் மற்றும் தொழிற்கல்வி துணைப் படிப்புகளில் 10% க்கு

குறையாத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படலாம், என ஆணையமானது

பரிந்துரைத்துள்ளது என்பதாலும்;

3

மற்றும் புரிந்து கொள்ளத்தக்க வேறுபாட்டினாலான நியாயமான

வகைபாட்டினை அரசியலமைப்பின் 14 மற்றும் 15 ஆம் உறுப்புகள்

அனுமதித்து மற்றும் அதன்மூலம் சமமற்றவர்களுக்கு வேறுபாடான

நடத்து முறையை அனுமதிக்கிறது என்பதாலும்;

அரசானது, கூறப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை கவனமாக

கருத்தில் கொண்ட பின்பு, மாநில அரசுப்பள்ளிகளின் மாணவர்களுக்கு

முன்னுரிமையின் அடிப்படையில், இளநிலை தொழிற்கல்வி

படிப்புகளுக்கான சேர்க்கையில் ஏழரை விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு

செய்ய முடிவு செய்துள்ளது என்பதாலும்;

இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும்

தொடக்கம்.

1. (1) இந்தச் சட்டம் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பொருள் வரையறைகள்.

2. இச்சட்டத்தின் தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி.-

குடியரசுத் தலைவரின்

சட்டம் 19/1976

(a) "உதவி பெறும் நிறுவனம்" என்பது 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் அரசிடமிருந்து மானியம் பெறும் ஒரு கல்வி நிறுவனம் என்று பொருள்படும்.

(b) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;

(c) "அரசு இடங்கள்" என்பது,-

(i) பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளின் அனைத்து இடங்கள்;

(ii) உதவி பெறும் நிறுவனத்தில் அரசினால் பணிக்கலாகும்

அத்தகைய எண்ணிக்கையிலான இடங்கள்;

மற்றும்

(iii) சிறுபான்மையினர் அல்லாத கல்வி நிறுவனங்களில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 65 விழுக்காடு இடங்கள் மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் 50 விழுக்காடு இடங்கள் அல்லது அத்தகைய நிறுவனங்களுக்கும் அரசிற்கும் இடையேயான கருத்தொற்றுமையுடன் இணங்கிய வகையிலான இடங்கள் என்று பொருள்படும்;

(d) "அரசுப் பள்ளிகள்" என்பது அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்திருத்தப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் மற்றும் அரசு துறைகளினால் நிர்வகிக்கப்படும் பிற பள்ளிகள் ஆகியவற்றை உள்ளடக்கும் மற்றும் பொருள்படும்;

(e) "சிறுபான்மையினர் கல்வி நிறுவனம்" என்பது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வரையறைகளுக்குட்பட்டு, அரசின் இசைவுபெற்ற அல்லது அத்தகையவாறு அறிவிக்கப்பட்ட ஒரு கல்வி நிறுவனம் என்று பொருள்படும்;

IV-2(41)(T-Sup)—2 IV-2(41)(T-Sup)—2 4

(f) "தனியார் பள்ளி " என்பது ஓர் அரசுப் பள்ளி அல்லாத ஒரு

பள்ளி என்று பொருள்படும்;

(g) "அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்" என்பது ஓர் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் மேனிலைப் பள்ளிப்படிப்பு வரை பயின்ற குழந்தைகள் என்று பொருள்படும்.

மையச் சட்டம் 35/2009.

விளக்கம்.- இந்தப் பொருள் வரையறையின் நோக்கத்திற்காக, 2009 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் (c) ஆம் கூறின்படி ஒரு குறிப்பிட்ட வகையிலான பள்ளி அல்லது ஓர் உதவி பெறாத பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்ற நலிவுற்ற பிரிவினர் மற்றும் சாதகமற்ற பிரிவினைச் சார்ந்த குழந்தைகள் மற்றும் அரசுப் பள்ளியில் மேனிலைப் படிப்பு வரை மீதமுள்ள அனைத்து வகுப்புகளையும் பயின்றவர்கள், 'அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களாக' கருதப்படுதல் வேண்டும்;

(h) "இளநிலை தொழிற்கல்வி படிப்புகள்'' என்பது அரசால் அறிவிக்கப்பட்டவாறான பொறியியல், வேளாண்மை, கால்நடை அறிவியல், மீன்வள அறிவியல், சட்டம் உள்ளடங்கலான பிற தொழிற்கல்வி படிப்புகளின் இளநிலை படிப்பின் முதலாம் ஆண்டு என்று பொருள்படும்;

(i) "பல்கலைக்கழகம்" என்பது மாநில சட்டமன்றத்தின் ஒரு சட்டத்தினால் நிறுவப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் என்று பொருள்படும்.

முன்னுரிமை

அடிப்படையிலான

சேர்க்கை.

3. தற்போது நடைமுறையிலுள்ள சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும் மற்றும் 5 ஆம் பிரிவிற்குட்பட்டு, அரசு இடங்களின் ஏழரை விழுக்காடானது அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.

பிற இடங்களுக்காக

போட்டியிடும்

உரிமையை

பாதிக்கப்படாது.

4. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுடனிணைந்து, முன்னுரிமையின் அடிப்படையிலான ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களைத் தவிர, பிற அரசு இடங்களுக்காக மேலும் போட்டியிட உரிமையுடையவராகுதல் வேண்டும்.

இட ஒதுக்கீட்டிற்கான

பொருந்துகை.

5. 3ஆம் பிரிவின் கீழ் முன்னுரிமையின் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கையானது நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி இடஒதுக்கீட்டினை பின்பற்றி செய்தல் வேண்டும்.

முன்னுரிமை இடங்களை

நிரப்புதல்.

6. 3ஆம் பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கான சேர்க்கைக்காக, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கையானது போதுமானதாக இல்லாதவிடத்து அத்தகைய நிரப்பப்படாத இடங்களானது தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுதல் வேண்டும்.

விதிகளைச்

7. (1) அரசு, அறிவிக்கையின் வாயிலாக, இந்தச் சட்டத்தின்

செய்வதற்கான

ஏதேனும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.

அதிகாரம்.

(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட அந்த நாளன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

5

(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் அவை ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட அந்த நாளன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும், அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும், மற்றும், அது அவ்வாறு வைக்கப்பட்டக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அல்லது அடுத்தக் கூட்டத்தொடரில் அத்ததைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை ஏதொன்றிலும் மாறுதல் எதையும் சட்டமன்றப் பேரவை செய்யுமாயின் அல்லது அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்வுக்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும் என சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின் அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம் எதுவும் அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட எதனின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.

பணிப்புரைகளை

வழங்குவதற்கான

அதிகாரம்.

8. அரசு, அவ்வப்போது, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக, அது உகந்ததென்று கருதலாகும் அத்தகைய பணிப்புரைகளை பிறப்பிக்கலாம்.

இடர்பாடுகளை

நீக்குவதற்கான

அதிகாரம்.

9. இந்தச் சட்டத்தின் ஏதேனும் வகைமுறைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இடர்பாடு ஏதேனும் எழுமானால், அரசு, ஆணை ஒன்றினை வெளியிடுவதன் மூலமாக, கூறப்பட்ட இடர்பாட்டை நீக்கும் நோக்கத்திற்காக இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக அல்லாத தேவையானதாகும் அல்லது உகந்ததாகும் அத்தகைய வகைமுறைகளை செய்யலாம்.

வரம்புரையாக, அத்தகைய ஆணை எதுவும், இந்தச் சட்டம் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டாண்டுகள் முடிவடைந்ததற்குப் பின்பு செய்யப்படுதல் ஆகாது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ê. "è£H óM'°ñ£˜,

(தமிழாக்கம்)

è. ïóC‹ñ¡, தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 October 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-10-13.Ordinary_41_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-10-13.Ordinary_41_Part-IV_Section-2-T-Sup.