Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances

Published 27 October 2021

Type
Ordinary
Gazette no.
43
Part
Part IV
Notifications
Tamil Nadu Act 18 of 2018 - Act No. 17 of 2021 and Act No. 18 of 2021
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-10-27.Ordinary_43_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2021 [விலை : ரூ. 15.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 43] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 27, 2021, ஐப்பசி 10, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018.

பிரிவுகளின் வகைப்பாடுகள்.

அத்தியாயம் - I.

முன்னுரை.

1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

2. பொருள் வரையறைகள்.

அத்தியாயம் - II.

லோக் ஆயுக்தாவினை நிறுவுதல் மற்றும் கட்டமைத்தல்.

3. லோக் ஆயுக்தாவினை நிறுவுதல் மற்றும் கட்டமைத்தல்.

4. தெரிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அமர்த்துதல்.

5. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அலுவலக பதவிக்காலம்.

6. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஊதியம், படித்தொகைகள் மற்றும் பிற பணிவரைக்கட்டுகள்.

7. தலைவர் மற்றும் உறுப்பினர்களினால் பதவிக்காலம் முடிவுற்ற பின்னர், நியமனம் செய்யப்படுவதற்குத் தடை.

8. குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் உறுப்பினர் தலைவராக செயல்படுதல் அல்லது தலைவருடைய செயற்பணிகளை ஆற்றுதல்.

9. லோக் ஆயுக்தாவின் செயலாளர், பிற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்.

அத்தியாயம் - III.

விசாரணைப் பிரிவு.

10. விசாரணைப் பிரிவு.

[1]

IV-2(43)(T-Sup)-12 அத்தியாயம் - IV.

லோக் ஆயுக்தாவின் செலவினங்கள் மாநில தொகு நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படுதல்.

11. லோக் ஆயுக்தாவின் செலவினங்களை மாநிலத் தொகு நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படுதல்.

அத்தியாயம் - V.

லோக் ஆயுக்தாவின்அதிகார வரம்பு.

12. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளடங்கலாக லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பு.

13. விசாரணைக்கு உட்படாத பொருட்பாடுகள்.

14. நீதிமன்றம் அல்லது குழுவின் அல்லது அதிகார அமைப்பின் முன்பு விசாரணைக்கு நிலுவையில் உள்ள பொருட்பாடுகள் பாதிக்கப்படாதிருத்தல்.

15. லோக் ஆயுக்தாவின் ஆயங்களை அமைத்துருவாக்குதல

16. ஆயங்களுக்கிடையே பணிகளை பகிர்ந்தளித்தல்.

17. வழக்குகளை மாறுதல் செய்வதற்கு தலைவரின் அதிகாரம்.

18. பெரும்பான்மையினரால் முடிவு செய்யப்படுதல்.

அத்தியாயம் - VI.

முதல்நிலை விசாரணை மற்றும் விரிவான விசாரணை தொடர்பான நடைமுறை.

19. புகார்கள் மற்றும் முதல்நிலை விசாரணை மற்றும் விரிவான விசாரணை தொடர்பான வகைமுறைகள்.

20. மனச்சாய்வினால் பாதிக்கப்படக்கூடும் நபர்களின் கூற்றினைக் கேட்டறிதல்.

21. லோக் ஆயுக்தாவானது, தகவல் முதலியவற்றை அளிக்குமாறு பொது பணியாளர் அல்லது பிற நபர் எவரையும் வேண்டலாம்.

22. விசாரணைக்கு, முன் அனுமதி தேவையில்லை.

அத்தியாயம் - VII.

லோக் ஆயுக்தாவின் அதிகாரங்கள்.

23. லோக் ஆயுக்தாவின் மேற்பார்வையிடும் அதிகாரங்கள்.

24. குறிப்பிட்ட சில நேர்வுகளில் லோக் ஆயுக்தாவானது உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரங்களை பெற்றிருக்கும்.

25. லோக் ஆயுக்தாவானது அரசு அலுவலர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு அதிகாரம்.

26. ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பொது ஊழியரை, பணிமாறுதல் அல்லது தற்காலிகப் பணிநீக்கம் செய்யவேண்டும் என்று பரிந்துரைப்பதற்கு லோக் ஆயுக்தாவிற்கு உள்ள அதிகாரம்.

27. முதல் நிலை விசாரணையின் போது ஆவணங்களை அழிப்பதை தடை செய்வதற்கு, பணிப்புரைகள் பிறப்பிப்பதற்கு லோக் ஆயுக்தாவிற்குள்ள அதிகாரம்.

28. ஒப்படைவு செய்வதற்கான அதிகாரம்.

3

அத்தியாயம் - VIII.

லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கெதிரான புகார்கள்.

29. லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பணி நீக்கம் செய்தல் மற்றும் தற்காலிக பணி நீக்கம் செய்தல்.

30. லோக் ஆயுக்தாவின் அலுவலர்களுக்கு எதிரான புகார்கள்.

அத்தியாயம் - IX.

நிதி, கணக்குகள் மற்றும் தணிக்கை.

31. வரவு செலவுத் திட்டம்.

32. அரசால் அளிக்கப்படும் மானியங்கள்.

33. கணக்குகளின் ஆண்டறிக்கை.

34. அரசுக்கு விவர அறிக்கைகள் முதலியவற்றை அனுப்புதல்.

அத்தியாயம் - X.

பொய் புகாரின் மீதான நடவடிக்கை.

35. பொதுப் பணியாளருக்கு எதிராக பொய் புகார் அளித்ததற்காக மற்றும் இழப்பீடு வழங்குதல் முதலியவற்றிற்காக வழக்கு தொடருதல்.

36. சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக் கட்டளையால் செய்யப்படும் பொய் புகார்.

அத்தியாயம் - XI.

பல்வகைப்பட்டவை.

37. பொதுப் பணியாளர் எவராலும் நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.

38. பிற நபர்களால் நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.

39. லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொது பணியாளர்களாக கருதப்படுவர்.

40. காலவரம்பின் பொருந்துகை.

41. அதிகார வரம்பிற்குத் தடை.

42. சட்ட உதவி.

43. சட்டத்தின் மீதூர்ந்தியங்கும் தன்மை.

44. விதிகளைச் செய்வதற்கு அதிகாரம்.

45. ஒழுங்குமுறை விதிகளைச் செய்வதற்கு அதிகாரம்.

46. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.

4 5

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 2018 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 13 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது, அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 33/2018

பொதுப் பணியாளர்கள் சிலருக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு தமிழ்நாடு மாநிலத்திற்காக, லோக் ஆயுக்தாவினை நிறுவுவதற்காக மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதனுடன் இணைந்த பொருட்பாடுகளுக்கு வகை செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

அத்தியாயம்-I.

முன்னுரை.

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டமானது, 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு லோக்

தொடக்கம்.

ஆயுக்தா சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இச்சட்டமானது அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பொருள் 2. (1) இந்தச் சட்டத்தில் தறுவாயின் தேவை வேறானாலன்றி,

வரையறைகள்.

(a) "ஆயம்" என்பது லோக் ஆயுக்தாவின் ஆயம் என்று

பொருள்படும்;

(b) "தலைவர்" என்பது லோக் ஆயுக்தாவின் தலைவர்

என்று பொருள்படும்;

(c) "தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு" என்பது,-

(i) முதலமைச்சருக்கு, ஆளுநர்;

(ii) அமைச்சர்களுக்கு, முதலமைச்சர்;

(iii) அமைச்சரைத் தவிர்த்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, சட்டமன்ற பேரவைத் தலைவர்.

(iv) துறை எதனின் அலுவலர்களுக்கு, அரசு;

(v) நாடாளுமன்றத்தில் அல்லது மாநில சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி நிறுவப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட அல்லது அரசால் முழுவதுமாக அல்லது பகுதியளவில் நிதியளிக்கப்பட்ட அல்லது கட்டாளுகை செய்யப்பட்ட அமைப்பு அல்லது வாரியத்தின் அல்லது நிறுவனம் அல்லது அதிகார அமைப்பு அல்லது நிறுமம் அல்லது சங்கம் அல்லது தன்னாட்சி அமைப்பின் (எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும்) தலைவர் அல்லது உறுப்பினர்களுக்கு, அத்தகைய அமைப்பு அல்லது வாரியத்தின் அல்லது நிறுவனம் அல்லது அதிகார அமைப்பு அல்லது நிறுமம் அல்லது சங்கம் அல்லது தன்னாட்சி அமைப்பில் நேர்விற்கேற்ப பொறுப்பிலுள்ள அமைச்சர் அல்லது முதலமைச்சர்;

6

(vi) நாடாளுமன்றத்தில் அல்லது மாநிலச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி நிறுவப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட அல்லது அரசால் முழுமையாக அல்லது பகுதியளவில் நிதியளிக்கப்பட்ட அல்லது அதனால் கட்டாளுகை செய்யப்பட்டுள்ள அமைப்பின் அல்லது வாரியத்தின் அல்லது நிறுவனத்தின் அல்லது அதிகார அமைப்பின் அல்லது நிறுமத்தின் அல்லது சங்கத்தின் அல்லது தன்னாட்சி அமைப்பின் (எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும்) அலுவலருக்கு, அத்தகைய அமைப்பின் அல்லது வாரியத்தின் அல்லது கழகத்தின் அல்லது அதிகார அமைப்பின் அல்லது நிறுமத்தின் அல்லது சங்கத்தின்அல்லது தன்னாட்சி குழுமத்தின் தலைமை;

(vii) மேற்சொன்ன (i) முதல் (vi) வரையிலான உட்கூறுகளின் கீழ் வராத பிற நேர்வு எதிலும், அரசானது அறிவிக்கையில் குறித்துரைக்கப்படலாகும், அத்தகைய துறை அல்லது அதிகார அமைப்பு; என்று பொருள்படும்.

வரம்புரையாக,- (v) ஆம் உட்கூறில் அல்லது (vi) ஆம் உட்கூறில் சுட்டப்பட்டுள்ள நபர் எவரும் மாநில சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராகவும் இருப்பாரானால், தகுதி வாய்ந்த அதிகார அமைப்பாக, சட்டமன்ற பேரவைத் தலைவர் இருத்தல் வேண்டும்;

மையச் சட்டம்

49/1988 (d) "புகார்" என்பது 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை, பொதுப் பணியாளர் ஒருவர் செய்ததாக சாட்டப்பட்டு, வகுத்துரைக்கலாகிற அத்தகைய படிவத்தில், அளிக்கப்பட்டுள்ள புகார் என்று பொருள்படும்.

(e) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;

(f) "நீதித் துறை உறுப்பினர்" என்பது லோக் ஆயுக்தாவின் நீதித்

துறையைச் சார்ந்த உறுப்பினர் என்று பொருள்படும்;

(g) "லோக் ஆயுக்தா" என்பது 3 ஆம் பிரிவின்படி நிறுவப்பட்டுள்ள

ஒரு அமைப்பு என்று பொருள்படும்;

(h) "உறுப்பினர்" என்பது லோக் ஆயுக்தாவின் உறுப்பினர் என்று

பொருள்படும்;

(i) "அமைச்சர்" என்பது அரசின் அமைச்சர் என்று பொருள்படும்

மற்றும் முதலமைச்சரை உள்ளடக்கும்;

(j) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது இந்தச் சட்டத்தின்படி

செய்யப்பட்ட விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்;

(k) "பொதுப் பணியாளர்" என்பது 12 ஆம் பிரிவின் உட்பிரிவு (1)ன் (a) முதல் (e) வரையிலான கூறுகளில் சுட்டப்பட்டுள்ள ஒரு நபர் என்று பொருள்படும்;

(l) "ஒழுங்குமுறை விதிகள்" என்பது இந்தச் சட்டத்தின்படி

செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதிகள் என்று பொருள்படும்;

(m) "மாநிலம்" என்பது தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்;

மையச் சட்டம்

49/1988 மையச்

சட்டம்

2/1974 (2) இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டு ஆனால் பொருள்வரையறை செய்யப்படாத ஆனால் 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தில் மற்றும் 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ள சொற்களும் சொற்றொடர்களும் அந்தச் சட்டங்களில் அவைகளுக்கு முறையே குறித்தளிக்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

அத்தியாயம்-II.

லோக் ஆயுக்தாவினை நிறுவுதல் மற்றும் கட்டமைத்தல்.

லோக் ஆயுக்தாவின்

நிறுவுதல் மற்றும்

3.(1) இதன் பொருட்டு அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள தேதியன்று மற்றும் தேதியிலிருந்து "லோக் ஆயுக்தா" என்று அழைக்கப்படுகின்ற ஒரு அமைப்பானது நிறுவப்படுதல் வேண்டும்.

கட்டமைத்தல்.

7

(2) லோக் ஆயுக்தாவானது –

(a) உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கின்ற அல்லது இருந்துள்ள அல்லது ஊழல் தடுப்புக் கொள்கை, பொது நிருவாகம், விழிப்புப் பணி, நிதி மற்றும் சட்டம் ஆகியவற்றில் இருபத்தைந்து ஆண்டுகள் முன் அனுபவத்தை பெற்றுள்ள நபர், தலைவராக; மற்றும்

(b) நீதித்துறையின் உறுப்பினர்கள் இருவரை உள்ளடக்கிய

நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

(3) நபர் ஒருவர்,-

(a) அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பாரானால் அல்லது இருந்துள்ளாரானால் அல்லது மாநில நீதித்துறையில் குறையற்ற பதிவுறுவினைக் கொண்டு இருபத்தைந்து ஆண்டுகள் முன் அனுபவத்தைக் கொண்டிருப்பாரானால், நீதித்துறை உறுப்பினராக;

(b) அவர் ஊழல் தடுப்பு கொள்கையில், பொது நிருவாகத்தில், விழிப்புப் பணியில், நிதியில் மற்றும் சட்டத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் முன் அனுபவத்தைக் கொண்டிருப்பாரானால், நீதித்துறை சாரா உறுப்பினராக,-

பணியில் அமர்த்தப்படுவதற்கு தகுதியுடையவர் ஆவார்.

(4) தலைவர் அல்லது உறுப்பினர்,-

(a) நாடாளுமன்றத்தின் ஒரு உறுப்பினராகவோ அல்லது மாநிலம் அல்லது மைய அரசின் ஆட்சிப் பகுதி ஒன்றின் சட்டமன்ற உறுப்பினராகவோ;

(b) குற்றம் எதற்காகவும் தண்டிக்கப் பெற்ற நபராகவோ;

(c) தலைவர் அல்லது உறுப்பினராக பணி ஏற்றுக் கொள்ளும்

தேதியன்று நாற்பத்தைந்து வயதிற்கு குறைவாக இருக்கின்ற நபராகவோ;

(d) ஊராட்சி அல்லது நகராட்சி எதனின் ஒரு உறுப்பினராகவோ;

(e) மைய அல்லது மாநில பணியிலிருந்து அகற்றப்பட்ட

அல்லது நீக்கம் செய்யப்பட்ட நபராகவோ; மற்றும்

(f) பொறுப்புக் கட்டளை அல்லது (தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ இருப்பதைத் தவிர்த்து) பிற ஆதாயம் தரும் பதவி எதையும் வைத்திருக்கும் அல்லது அரசியல் கட்சி எதனுடனும் தொடர்பு வைத்திருக்கும் அல்லது வணிகம் எதையும் செய்யும் அல்லது பதவி எதையும் ஆற்றும் நபரொருவராகவோ இருத்தல் கூடாது.

(5) நேர்விற்கேற்ப, தலைவர் அல்லது உறுப்பினராக அமர்த்தப்பட்ட

நபர் ஒருவர் அவருடைய பணியில் சேருவதற்கு முன்பாக,-

(a) பொறுப்பு அல்லது ஆதாயம் தரும் பதவி எதையும் வைத்திருப்பாரானால், அத்தகைய பதவியிலிருந்து அவர் பதவி விலகுதல் வேண்டும்; அல்லது

(b) வணிகம் எதையும் அவர் செய்வாரானால், அத்தகைய வணிகம் மற்றும் மேலாண்மையின் தொடர்பிலிருந்து அவர் விலகிக் கொள்ளுதல் வேண்டும்; அல்லது

(c) அவர் தொழில் எதையும் செய்வாரானால் அத்தகைய

தொழில் புரிவதிலிருந்து நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

8

தெரிவுக் குழுவின்

4.(1) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆளுநரால் அமர்த்தப்படுதல்

பரிந்துரையின் பேரில் வேண்டும்.

தலைவர் மற்றும்

உறுப்பினர்களை

அமர்த்துதல்

(2) பணியமர்த்துதல், பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கிய

தெரிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில் இருத்தல் வேண்டும்:-

(a) முதலமைச்சர் - தலைவராக;

(b) சட்டமன்றப் பேரவைத் தலைவர் - உறுப்பினராக;

(c) எதிர்கட்சித் தலைவர் அல்லது சட்டமன்றத்தில் எதிரணியில் பெரும்பான்மை உறுப்பினர்களை உடைய கட்சியின் தலைவர் - உறுப்பினராக.

(3) தெரிவுக் குழுவானது, தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நோக்கங்களுக்காகவும், பணியமர்த்தத்திற்கு கருதப்படவேண்டிய, நபர்களின் பெயர்ப்பட்டியலை தயார் செய்வதற்காகவும், ஊழல் தடுப்பு கொள்கையில், பொது நிருவாகத்தில், விழிப்புப்பணியில், நிதியில் மற்றும் சட்டத்தில் சிறப்பு அறிவாற்றலும் நிபுணத்துவமும் பெற்றுள்ள மூன்று நபர்களை உள்ளடக்கிய தேடுதல் குழுவினை அமைத்துருவாக்குவதற்காக தேர்வு செய்யலாம்.

(4) தலைவர் மற்றும் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக தெரிவுக் குழுவானது அதன் சொந்த நடைமுறையை வெளிப்படையானதாக இருக்கும் வகையில் ஒழுங்கு முறைப்படுத்தலாம்.

(5) (3)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள தேடுதல் குழு அமைத்துருவாக்கப்பட்டால் அதன் பணிக்காலம், அதனுடைய உறுப்பினர்களுக்கு செலுத்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் படித்தொகைகள் மற்றும் பெயர்ப்பட்டியல்களை தெரிவு செய்யும் முறையானது வகுத்துரைக்கலாகிறவாறு இருத்தல் வேண்டும்.

தலைவர் மற்றும்

உறுப்பினர்களின்

அலுவலகப்

பதவிக்காலம்

5. தலைவர் மற்றும் உறுப்பினர் ஒவ்வொருவரும் தெரிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஆளுநரால், அவரது கையொப்பமிடப்பட்ட பணி ஆணை மற்றும் இலச்சினையினால் அமர்த்தப்படுதல் வேண்டும் மற்றும் அவர் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு அல்லது அவர் எழுபது வயதினை அடையும் வரை இதில் எது முந்தியதோ அதுவரை பதவி வகித்தல் வேண்டும்.

வரம்புரையாக அவர்,-

(a) தன் கைப்பட எழுத்துப் பூர்வமாக ஆளுநருக்கு

முகவரியிட்டு தெரிவிப்பதன் மூலமாக பதவி விலகலாம்; அல்லது

(b) இந்தச் சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ள முறையில்

அவருடைய பதவியிலிருந்து நீக்கப்படலாம்.

தலைவர் மற்றும்

6. ஊதியம், படித்தொகைகள் மற்றும் பிற பணிவரைக்கட்டுகளானது,-

உறுப்பினர்களின்

ஊதியம் படித்

தொகைகள்

மற்றும் பிற பணி

வரைக்கட்டுகள்

(a) தலைவருக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் படித்தொகைகளுக்கு நிகரானதாக இருத்தல் வேண்டும்;

(b) பிற உறுப்பினர்களுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் படித்தொகைகளுக்கு நிகரானதாக இருத்தல் வேண்டும்.

9

வரம்புரையாக,- தலைவர் அல்லது உறுப்பினர் இந்திய அரசின் கீழ் அல்லது மாநில அரசு எதனின் கீழ் முந்தைய பணி எதுவும் தொடர்பாக ஓய்வூதியத்தை (ஊனமுற்றோர் ஓய்வூதியத்தைத் தவிர்த்து) அவருடைய பணி அமர்த்தலின்போது பெறுவாரேயானால், நேர்வுக்கேற்ப தலைவராக அல்லது உறுப்பினராக அவரது பணி தொடர்பான அவருடைய ஊதியத்திலிருந்து,-

(i) அந்த ஓய்வூதியத் தொகையை; மற்றும்

(ii) அவர், அத்தகைய பணி அமர்த்தலுக்கு முன்பு அத்தகைய முந்தைய பணி தொடர்பாக, அவருக்கு நிலுவையாக உள்ள ஓய்வூதிய பகுதித் தொகையை மொத்தமாக பெற்றிருப்பாரானால் ஓய்வூதியத்தின் அப்பகுதித் தொகையை கழித்து விடுதல் வேண்டும்.

மேலும், வரம்புரையாக,- தலைவர் அல்லது உறுப்பினருக்கு செலுத்தக்கூடிய ஊதியம், படித்தொகைகள் மற்றும் பிற வரைக்கட்டுகள் அவருடைய பணி அமர்த்தலுக்கு பின்பு அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் மாற்றப்படுதல் ஆகாது.

தலைவர் மற்றும் 7. (1) பதவி காலம் முடிவுற்ற பிறகு தலைவர் மற்றும் உறுப்பினர்

உறுப்பினர்களினால் ஒவ்வொருவரும்,-

பதவிக்காலம் (a) லோக் ஆயுக்தாவிற்கு தலைவராக அல்லது உறுப்பினராக முடிவுற்ற பின்னர் மீண்டும் அமர்த்தப்படுவதற்கோ;

நியமனம்

செய்யப்படுவதற்கு (b) சட்டத்தின்படி ஆளுநரால் செய்யப்பட தேவையாகிற பிற

தடை.

செயல் அல்லது பணி அமர்த்தம் எதையும் செய்வதற்கோ;

(c) இந்திய அரசின் கீழ் அல்லது மாநில அரசின் எதனின் கீழ் ஆதாயம் தரும் பதவி எதிலும் மேலும் பணி அமர்த்தப்படுவதற்கோ,-

தகுதியற்றவர் ஆகிறார்.

(2) (1)-ஆம் உட்பிரிவில் உள்ளடங்கிய எது எவ்வாறிருப்பினும், உறுப்பினராக மற்றும் தலைவராக அவர் பணியாற்றிய மொத்தகாலம் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாது இருக்குமேயானால் அவ்வுறுப்பினர் தலைவராக அமர்த்தம் செய்வதற்கு தகுதியுடையவர் ஆவார்.

விளக்கம்,- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக உறுப்பினரை ஒரு தலைவராக அமர்த்தம் செய்கிறவிடத்து அவருடைய பதவிக்காலம் உறுப்பினராக மற்றும் தலைவராக செயல்படுவதற்கு மொத்தத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாது இருத்தல் வேண்டும் என ஈங்கிதனால் தெளிவுபடுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட சில

சூழ்நிலைகளில்

உறுப்பினர்

தலைவராக

செயல்படுதல் 8. (1) தலைவருடைய இறப்பு பதவி விலகல் அல்லது பிறவாறான காரணத்தினால் அவரது பணியில் காலியிடம் எதுவும் ஏற்படுகின்ற நிகழ்வில், ஆளுநர், அறிவிக்கையின் வாயிலாக, அத்தகைய காலியிடத்தை நிரப்புவதற்கு புதிய தலைவரை அமர்த்தும்வரையில் மிகவும் மூத்த உறுப்பினரை தலைவராக செயல்படுவதற்கு அதிகாரமளிக்கலாம்.

அல்லது

தலைவருடைய

செயற்பணிளை

ஆற்றுதல்.

(2) விடுப்பு அல்லது பிறவாறான காரணத்தால் தலைவர், அவருடைய செயற்பணிகளை ஆற்றமுடியாது இருக்கும்போது, ஆளுநர், அறிவிக்கையின் வாயிலாக, இதன்பொருட்டு அதிகாரமளிக்கப்படலாகும் அப்போதுள்ள மிகவும் மூத்த உறுப்பினரானவர், தலைவர் அவருடைய கடமைகளை மீண்டும் ஆற்றும் வரையில், தலைவருடைய செயற்பணிகளை ஆற்றுதல் வேண்டும்.

10

லோக் ஆயுக்தாவின்

செயலாளர், பிற

அலுவலர்கள் மற்றும்

பணியாளர்கள்.

9. (1) அரசின் துணைச் செயலாளர் படி நிலைக்கு குறையாதவர் லோக் ஆயுக்தாவின் செயலாளராக இருத்தல் வேண்டும், மற்றும் அவர், அரசால் அனுப்பப்படும் பெயர்பட்டியலிலிருந்து தலைவரால் பணி அமர்த்தப்படுதல் வேண்டும்

(2) அரசின் துணைச் செயலாளர் நிலைக்கு குறையாதவர் விசாரணை இயக்குநராக இருத்தல் வேண்டும், மற்றும் அவர் அரசால் அனுப்பப்படும் பெயர்ப்பட்டியலிலிருந்து தலைவரால் பணி அமர்த்தப்படுதல் வேண்டும்.

(3) லோக் ஆயுக்தாவானது, தடையின்றி செயல்படுவதற்கு, தேவைப்படலாகும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணி அமர்த்தமானது அரசால் மற்றும் வகுத்துரைக்கலாகிறவாறு இருத்தல் வேண்டும்.

(4) லோக் ஆயுக்தாவின் செயலாளர் மற்றும் பிற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணிவரைக்கட்டுகளானது அவ்வப்பொழுது வகுத்துரைக்கலாகும் அத்தகையவாறு இருத்தல் வேண்டும்.

அத்தியாயம்-III.

விசாரணைப் பிரிவு.

விசாரணைப் பிரிவு. 10. (1) நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதிலும் எது எவ்வாறு இருப்பினும், பொதுப் பணியாளர் ஒருவர் செய்துள்ளதாக சாட்டப்பட்ட குற்றம் எதையும் விசாரணை செய்யும் நோக்கத்திற்காக விசாரணை இயக்குநரின் தலைமையிலான விசாரணைப்பிரிவு ஒன்றினை லோக் ஆயுக்தாவானது அமைத்துருவாக்குதல் வேண்டும்:

வரம்புரையாக,- லோக் ஆயுக்தாவானது விசாரணைப் பிரிவினை அமைக்கும் காலம் வரையில், அரசானது, இந்தச் சட்டத்தின்படி விசாரணையை நடத்துவதற்காக தேவைப்படலாகிற அத்தகைய எண்ணிக்கையிலான அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு அதனுடைய துறைகளில் இருந்து ஏற்பாடு செய்தல் வேண்டும்.

(2) இந்தச்சட்டத்தின்படி விசாரணையை நடத்துவதில் லோக் ஆயுக்தாவிற்கு உதவி செய்யும் நோக்கங்களுக்காக, விசாரணைப் பிரிவின் அலுவலர்கள் 24 ஆம் பிரிவின்படி லோக் ஆயுக்தாவிற்கு குறித்தளிக்கப்பட்டுள்ள அதே அதிகாரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

அத்தியாயம்-IV.

லோக் ஆயுக்தாவின் செலவினங்கள் மாநில தொகு நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படுதல்.

லோக் ஆயுக்தாவின்

செலவினங்கள்

மாநிலத் தொகு

நிதியத்திலிருந்து

பெற்றுக் கொள்ளப்

படுதல்.

11. லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்கள் அல்லது செயலாளர் அல்லது பிற அலுவலர்கள் அல்லது பணியாளர்களுக்கு செலுத்தக்கூடிய அனைத்து ஊதியங்கள், படித்தொகைகள் மற்றும் ஓய்வூதியங்கள் உள்ளடங்கலாக லோக் ஆயுக்தாவின் நிருவாகச் செலவினங்களை, மாநிலத் தொகு நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல் வேண்டும் மற்றும் லோக் ஆயுக்தாவினால் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் எதுவும் மற்றும் எடுத்துக் கொண்ட பிற பணங்களானது அந்நிதியத்தின் ஒரு பகுதியாக இருத்தல் வேண்டும்.

11

அத்தியாயம்-V.

லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பு.

மையச்

அமைச்சர்கள், சட்டம்

சட்ட மன்ற 49/1988

உறுப்பினர்கள், 12. (1) இந்தச் சட்டத்தின் பிற வகைமுறைகளுக்கு உட்பட்டு, லோக் ஆயுக்தாவானது, பின்வரும் அனைத்து இனங்களின் மீது அதிகார வரம்பினைக் கொண்டிருக்கும். அதாவது:-

அரசு அலுவலர்கள் (a) மாநிலத்தின் அமைச்சராக இருக்கின்ற அல்லது இருந்துள்ள மற்றும் பணியாளர்கள் நபர் எவரும்;

உள்ளடங்கலாக

லோக் ஆயுக்தாவின் (b) சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற அல்லது இருந்துள்ள

அதிகார வரம்பு நபர் எவரும்;

(c) 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 2-ஆம் பிரிவின் (c) கூறின் (i) மற்றும் (ii) ஆம் உட்கூறுகளில் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ள பொதுப் பணியாளர்களுக்கிடையேயிருந்து அரசின் விவகாரங்கள் தொடர்பாக பணியாற்றுகின்ற அல்லது பணியாற்றியுள்ள மாநில அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும்;

(d) (c) கூறில் சுட்டப்பட்டுள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சமமான, நாடாளுமன்றத்தில் அல்லது மாநில சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி நிறுவப்பட்ட அல்லது அரசால் முழுவதுமாக அல்லது பகுதியளவில் நிதியளிக்கப்பட்ட அல்லது அதனால் கட்டாளுகை செய்யப்பட்ட அமைப்பில் அல்லது வாரியத்தில் அல்லது நிறுவனத்தில் அல்லது அதிகார அமைப்பில் அல்லது நிறுமத்தில் அல்லது சங்கத்தில் அல்லது பொறுப்புக்கட்டளைக்கு அல்லது தன்னாட்சி அமைப்பில் (எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும்) உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும்;

வரம்புரையாக,- (c) மற்றும் (d) கூறுகளில் சுட்டப்பட்ட ஆனால் மைய அரசு அல்லது ஒன்றிய அரசின் கட்டாளுகையின் கீழ் உள்ள அமைப்பில் அல்லது வாரியத்தில் அல்லது நிறுவனத்தில் அல்லது அதிகார அமைப்பில் அல்லது நிறுமத்தில் அல்லது சங்கத்தில் அல்லது பொறுப்புக்கட்டளையில் அல்லது தன்னாட்சி அமைப்பின் அலுவல்கள் தொடர்பாக பணியாற்றுகின்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைப் பொறுத்த நேர்வில், மைய அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்பு மட்டுமே லோக் ஆயுக்தா மற்றும் அதனுடைய விசாரணைப் பிரிவின் அலுவலர்கள் இந்தச் சட்டத்தின்படி அத்தகைய அலுவலர்கள் தொடர்பாக அதிகார வரம்பினைக் கொண்டிருத்தல் வேண்டும்;

(e) அரசால் முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ நிதியளிக்கப்பட்ட அல்லது உதவி செய்யப்பட்ட மற்றும் அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்துரைக்கலாகிற அத்தகைய தொகைக்கும் அதிகமான ஆண்டு வருவாய் கொண்டுள்ள, (அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதனின்படி பதிவு செய்யப்பட்ட அல்லது செய்யபடாத) சங்கங்கள் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக்கட்டளை (எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும்) எதனின் இயக்குநர், மேலாளர், செயலாளர் மற்றும் பிற அலுவலர்கள் எவரும்.

12

(2) (1)-ஆம் உட்பிரிவில் உள்ளடங்கிய எது எவ்வாறிருப்பினும் இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின் 194 ஆம் உறுப்பின் (2)-ஆம் கூறில் உள்ளடங்கிய வகைமுறைகளின்படி மாநில சட்டமன்றத்தில் அல்லது அதனுடைய குழு எதிலும் சட்டமன்ற உறுப்பினரால் கூறப்பட்ட எதுவும் அல்லது அவரால் அளிக்கப்பட்டுள்ள வாக்கு தொடர்பாக அவருக்கு எதிராக அத்தகைய ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ள அல்லது அதிலிருந்து எழுகின்ற அல்லது அதனுடன் தொடர்புடைய பொருட்பாடு எதையும் லோக் ஆயுக்தாவானது விசாரணை செய்தல் ஆகாது.

மையச் சட்டம்

49/1988 (3) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் சுட்டப்பட்ட நபருக்கு எதிராக 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான ஊழல் குற்றச்சாட்டு எதுவும் தொடர்பாக ஊழலுக்கு தூண்டுதல் அல்லது கையூட்டு அளித்தல் அல்லது கையூட்டு பெறுதல் அல்லது கூட்டுச்சதி ஆகிய செயல்களில் அத்தகைய நபர் ஈடுபட்டிருந்தால் (1)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட அந்த நபர்களைத் தவிர நபர் எவரின் செயல் அல்லது நடத்தை எதிலும் லோக் ஆயுக்தாவானது விசாரணை செய்யலாம்;

வரம்புரையாக,- ஒன்றிய அரசின் அலுவல்கள் தொடர்பாக பணிபுரியும் நபரைப் பொறுத்த நேர்வில் மைய அரசின் இசைவின்றி இந்தப் பிரிவின்படி நடவடிக்கை எடுத்தல் ஆகாது.

விசாரணைக்கு உட்படாத

பொருட்பாடுகள்.

13. (1) இதில் இதற்கு பின்பு வகை செய்யப்பட்டவாறு தவிர, பின்வரும் பொருட்பாடு எதனின் தொடர்பான நடவடிக்கை எதுவும் இருக்குமானால் லோக் ஆயுக்தாவானது, விசாரணை எதையும் நடத்துதல் ஆகாது:-

(a) அரசின் பாதுகாப்பு தொடர்பான குற்றத்தை புலன் விசாரணை

செய்யும் நோக்கத்திற்காக எடுக்கப்படும் நடவடிக்கை;

(b) பொருட்பாட்டை நீதிமன்றமானது விசாரணை செய்யுமா அல்லது செய்யாதா என்பதை தீர்மானிப்பது தொடர்பான அதிகாரங்களை செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை;

(c) புகார்தாரர் ஒப்பந்த கடமையை நிறைவு செய்வதில் அலைக்கழிக்கப்படுதல் அல்லது மிகையான காலதாமத குற்றச்சாட்டை வைப்பதைத் தவிர வாடிக்கையாளர்களுடன் அல்லது வழங்குநர்களுடன் நிருவாகத்தின் முழுமையான வணிகத் தொடர்பை கட்டுப்படுத்தும் செய்கின்ற ஒப்பந்தத்தின் வரையறைகளிலிருந்து எழுகின்ற பொருட்பாடுகளில் எடுக்கப்படுகின்ற நிருவாக நடவடிக்கை;

(d) பொதுப் பணியாளர்களின் பணி நியமனம், பணி மாறுதல் மற்றும் பணி அமர்த்தம், பணி நீக்கம், சம்பளம், நடத்தை, பணி ஓய்வு, ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதிக்கான உரிமைக் கோரிக்கை அல்லது பணி ஓய்வின், பணி நீக்கத்தின் அல்லது பணி அறவின் அல்லது பொது ஊழியர்கள் பணி நிபந்தனைகள் தொடர்பான பிற பொருட்பாடுகள் பேரில் எழும் உரிமை கோரிக்கைகள் அல்லது அவர்களது பணி நிபந்தனைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்;

(e) வழங்கப்படும் வெகுமதிகள் மற்றும் பரிசுகள்;

(f) லோக் ஆயுக்தாவின் முந்தைய ஒத்திசைவுடன் முறையான மற்றும்

பொது விசாரணைக்கு ஆணையிடப்பட்ட நடவடிக்கை எதுவும்;

மையச் சட்டம்

60/1952 (g) 1952 ஆம் ஆண்டு விசாரணை ஆணையச் சட்டத்தின்படி விசாரணைக்கு சுட்டியனுப்பப்பட்ட அந்த பொருட்பாடு தொடர்பான நடவடிக்கை எதுவும்;

13

(தமிழ்நாடு சட்டம்

27/2014)

(h) 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டத்தின் 3 ஆம் பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட முறைமன்ற நடுவரின் அதிகார எல்லையின் கீழ் உள்ள நபர் அல்லது உள்ளாட்சி அமைப்பு தொடர்பான நடவடிக்கை எதுவும்;

(2) புகார் எதனின் நேர்வில் லோக் ஆயுக்தாவானது உளத் தேர்வினை பயன்படுத்துதல் உள்ளான கருத்துருக்கள், உளத் தேர்வினை முதல் நோக்கில் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படும் அத்தகைய அளவிற்கு இல்லாமல் இருப்பதைத் தவிர்த்து, உளத் தேர்வினை பயன்படுத்தியதில் உள்ளான நிருவாக நடவடிக்கை எதையும் வினவ லோக் ஆயுக்தாவுக்கு இந்தச் சட்டத்தில் எதுவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக கொள்ளப்படுதல் ஆகாது.

விளக்கம்: ஐயங்களை அகற்றுவதற்காக பொது ஊழியர் என்ற நிலையில் தான் செயல்படுகின்ற அல்லது செயலாற்றுகின்ற காலம் தொடர்பானவற்றில் மட்டுமே இந்தச் சட்டத்தின்படி புகாரானது இருத்தல் வேண்டும் என ஈங்கிதனால் விளம்புகை செய்யப்படுகிறது.

மையச் சட்டம்

நீதிமன்றம் அல்லது 49/1988

குழுவின் அல்லது

அதிகார அமைப்பின்

முன்பு விசாரணைக்கு

நிலுவையில் உள்ள

பொருட்பாடுகள்

பாதிக்கப்

படாதிருத்தல்.

14. 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான பொருட்பாடு அல்லது நடவடிக்கை எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு முன்பு அல்லது இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்குப் பின்பு விசாரணையின் தொடக்கத்திற்கு முன்பு, நீதிமன்றம் அல்லது சட்டமன்றக் குழு அல்லது பிற அதிகார அமைப்பு எதிலும் நிலுவையில் இருக்கின்ற நேர்வில், அத்தகைய பொருட்பாடு அல்லது நடவடிக்கையானது அத்தகைய நீதிமன்றத்தில், குழுவில் அல்லது அதிகார அமைப்பில் தொடர்ந்திருத்தல் வேண்டும்.

லோக் 15.(1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு,-

ஆயுக்தாவின்

ஆயங்களை

அமைத்துருவாக்குதல்.

(a) லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பினை அதனுடைய

ஆயங்களால் செயல்படுத்தலாம்;

(b) தலைவர், தான் பொருத்தமெனக் கருதலாகிறவாறு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் ஆயமானது தலைவரால் அமைத்துருவாக்கப்படலாம்.

(c) ஆயம் ஒவ்வொன்றும் சாதாரணமாக குறைந்தது ஒரு நீதித்துறை உறுப்பினரை உள்ளடக்கியிருத்தல் வேண்டும் மற்றும் அந்த ஆயத்தின் மூத்த உறுப்பினர் ஆயத்திற்கு தலைமை வகித்தல் வேண்டும்.

(d) ஆயமானது தலைவரை உள்ளடக்கியிருக்கிறவிடத்து அந்த

ஆயத்தை தலைவரால் தலைமை வகித்தல் வேண்டும்.

(2) லோக் ஆயுக்தாவானது, லோக் ஆயுக்தாவின் ஆயமானது அதிகார வரம்பினை செலுத்தலாகும் பரப்பிடங்களை அறிவிக்கை செய்தல் வேண்டும்.

(3) (2)-ஆம் உட்பிரிவில் உள்ளடங்கிய எது எவ்வாறிருப்பினும் தலைவர், அவ்வப்பொழுது ஆயங்களை அமைத்துருவாக்குவதற்கு அல்லது மீண்டும் அமைத்துருவாக்குவதற்கான அதிகாரத்தை கொண்டிருத்தல் வேண்டும்.

14

(4) வழக்கு அல்லது பொருட்பாடு எதனின் விசாரணையின் எந்த நிலையிலும், வழக்கு அல்லது பொருட்பாடானது, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆயத்தால் விசாரணை செய்யப்பட வேண்டிய அத்தகைய தன்மையுடையது என்று தலைவருக்கு அல்லது உறுப்பினருக்கு தோன்றுமேயானால், மாறுதல் செய்வதற்காக அவருக்கு சுட்டியனுப்பப்பட்ட வழக்கு அல்லது பொருட்பாடானது நேர்விற்கேற்ப தலைவர், பொருத்தமென கருதலாகிற, அத்தகைய ஆயத்திற்கு தலைவரால் மாற்றம் செய்யப்படலாம்.

ஆயங்களுக்கிடையே

பணிகளை

பகிர்ந்தளித்தல்.

16. ஆயங்களை அமைத்துருவாக்குகிறவிடத்து, தலைவர் அவ்வப்பொழுது, அறிவிக்கையின் வாயிலாக ஆயங்களுக்கிடையே லோக் ஆயுக்தாவின் பணிகளை பகிர்ந்தளித்தல் குறித்து வகைமுறைகளைச் செய்யலாம் மற்றும் ஒவ்வொரு ஆயத்தால் கையாளப்பட வேண்டிய பொருட்பாடுகளுக்காக மேலும் வகைமுறை செய்யலாம்.

வழக்குகளை மாறுதல்

செய்வதற்கு

தலைவரின் அதிகாரம்.

17. புகார்தாரர் அல்லது பொதுப் பணியாளரால் மாறுதலுக்காக செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பேரில், தலைவர், நேர்விற்கேற்ப புகார்தாரருக்கு அல்லது பொது ஊழியருக்கு கேட்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றினை அளித்த பின்பு, ஒரு ஆயத்தில் நிலுவையில் உள்ள வழக்கு எதையும் முடிவிற்காக பிற ஆயம் எதற்கும் மாற்றம் செய்யலாம்.

பெரும்பான்மையினரால்

முடிவு செய்யப்படுதல்

18. இரட்டைப்படை எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும், ஆயத்தின் உறுப்பினர்களுக்கு பொருட்கூறு எதுவும் குறித்து கருத்து வேறுபாடு இருக்குமேயானால், அவர்கள் மாறுபடுகின்ற அந்த பொருட்கூறு அல்லது பொருட்கூறுகள் குறித்து குறிப்பிடுதல் மற்றும் தலைவருக்கு சுட்டியனுப்புதல் வேண்டும். தலைவர், தானே பொருட்கூறு அல்லது பொருட்கூறுகளை விசாரணை செய்யலாம் அல்லது அத்தகைய பொருட்கூறு அல்லது பொருட்கூறுகள் குறித்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட லோக் ஆயுக்தாவின் பிற உறுப்பினர்களுக்கு வழக்கினை சுட்டியனுப்பலாம் மற்றும் அத்தகைய பொருட்கூறு அல்லது பொருட்கூறுகளை முதலில் விசாரணை செய்த உறுப்பினர் உள்ளடங்கலாக வழக்கினை விசாரணை செய்த லோக் ஆயுக்தாவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்திற்கு இணங்கியவாறு முடிவு செய்தல் வேண்டும்.

அத்தியாயம் - VI.

முதல்நிலை விசாரணை மற்றும் விரிவான விசாரணை தொடர்பான நடைமுறை.

புகார்கள் மற்றும்

முதல்நிலை

விசாரணை மற்றும்

விரிவான விசாரணை

தொடர்பான

19. (1) லோக் ஆயுக்தாவானது, புகாரை பெற்றுக் கொண்டதன் பேரில், முதலில் பொருட்பாட்டின் விசாரணையை தொடரலாமா அல்லது அதை முடித்து விடலாமா என்பதை முடிவு செய்தல் வேண்டும் மற்றும் லோக் ஆயுக்தாவானது மேலும் விசாரணை தொடர முடிவு செய்யுமானால் அது,-

வகைமுறைகள்.

(a) பொருட்பாட்டில் நடவடிக்கைக்காக முதல்நோக்கு வழக்கு உள்ளதா என்பதை உறுதிசெய்வதற்கு விசாரணைப் பிரிவில் அல்லது அரசின் முகவாண்மை எதனாலும் 12 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (a),(b) மற்றும் (e) கூறுகளில் சுட்டப்பட்டுள்ள பொதுப் பணியாளர் எவருக்கும் எதிராக முதல்நிலை விசாரணைக்காக ஆணையிடுதல் வேண்டும்;

15

(b) பொருட்பாட்டில் நடவடிக்கைக்காக முதல்நோக்கு வழக்கு இருக்கின்றதா என்பதை உறுதி செய்வதற்கு 12 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (c) மற்றும் (d) கூறுகளில் உள்ள A, B, C மற்றும் D தொகுதிகளைச் சார்ந்த பொதுப் பணியாளர்கள் தொடர்பாக முதல்நிலை விசாரணையை நடத்துவதற்காக விழிப்புப்பணி ஆணையத்திற்கு புகாரினை அனுப்புதல் வேண்டும்;

வரம்புரையாக,- விழிப்புப் பணி ஆணையமானது இந்தக் கூறின்படி அதற்கு சுட்டப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக A மற்றும் B தொகுதிகளைச் சார்ந்த பொதுப் பணியாளர்கள் தொடர்பாக முதல்நிலை விசாரணை செய்தபின் (2) ஆம் உட்கூறில் உள்ளடங்கிய வகைமுறைகளுக்கு இணங்கியவாறு அதனுடைய அறிக்கையை லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பித்தல் வேண்டும் மற்றும் C மற்றும் D தொகுதிகளைச் சார்ந்த பொதுப் பணியாளர்களைப் பொறுத்த நேர்வில், ஆணையமானது நடைமுறையில் உள்ள நெறிமுறைகள் மற்றும் ஆணைகளுக்கு இணங்கியவாறு நடவடிக்கை தொடருதல் வேண்டும்.

(2) (1)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள முதல்நிலை விசாரணையை, நேர்விற்கேற்ப, விசாரணைப் பிரிவு அல்லது அரசின் முகவாண்மை அல்லது விழிப்புப் பணி ஆணையமானது மேற்கொள்ளுதல் வேண்டும் மற்றும் சேகரிக்கப்பட்ட பொருள்கள், தகவல் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் பொதுப் பணியாளர்கள் மற்றும் தகுதிவாய்ந்த அதிகார அமைப்பிடமிருந்து புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்புரைகளை கோருதல் வேண்டும் மற்றும் தொடர்புடைய பொதுப் பணியாளர் மற்றும் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பிடமிருந்து குறிப்புரைகளை பெற்ற பின்பு, குறிப்புரையினை பெற்றுக் கொண்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் லோக் ஆயுக்தாவிற்கு அறிக்கையினை தாக்கல் செய்தல் வேண்டும்;

(3) விழிப்புப்பணி ஆணையமானது, முதல்நிலை விசாரணை செய்யும் நோக்கத்திற்காக நடைமுறையில் உள்ள நெறிமுறைகள் மற்றும் ஆணைகளுக்கு இணங்கியவாறு உரிய முகவாண்மையின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

(4) லோக் ஆயுக்தாவின் மூன்று உறுப்பினர்களுக்கு குறையாத நபர்களை கொண்டுள்ள ஆயமானது, விசாரணைப் பிரிவு அல்லது அரசின் முகவாண்மை அல்லது விழிப்புப் பணி ஆணையத்திடமிருந்து, (2)-உட்பிரிவின் படி பெற்றுக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு அறிக்கையையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும் மற்றும் பொதுப் பணியாளருக்கு கேட்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றினை வழங்கிய பின்பு, முதல்நோக்கு வழக்கு இருக்கிறதா என்பது குறித்து முடிவு செய்து மற்றும் பின்வரும் நடவடிக்கைகளை தொடருதல் வேண்டும். அதாவது:-

(a) 12-ஆம் பிரிவின், (1)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள பொதுப் பணியாளர்கள் தொடர்பாக (C மற்றும் D தொகுதிகளைச் சார்ந்த பொதுப் பணியாளர்களைத் தவிர்த்து) அதனுடைய விசாரணைப் பிரிவால் அல்லது அரசு முகவாண்மையால் விரிவான விசாரணைக்காக ஆணையிடலாம்;

(b) A மற்றும் B தொகுதிகளைச் சார்ந்த பொதுப் பணியாளர்கள்

தொடர்பாக துறை நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யலாம்;

(c) பொதுப் பணியாளருக்கு எதிரான நடவடிக்கைகளை முடிவுறுத்தலாம் மற்றும் 35-ஆம் பிரிவின் படி புகார்தாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்.

16

(5) புகாரின் மீது விரிவான விசாரணையை தொடர வேண்டுமென்று லோக் ஆயுக்தா முடிவு செய்கிற நேர்வில், அதனுடைய ஆணையின் தேதியிலிருந்து ஆறுமாத காலத்திற்குள் கூடிய விரைவில் விசாரணை மேற்கொள்ள அது விசாரணைப் பிரிவு அல்லது அரசு முகவாண்மை எதற்கும் பணிப்புரை பிறப்பித்தல் வேண்டும்.

வரம்புரையாக,- எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக ஒரு சமயத்தில் ஆறுமாத காலங்களுக்கு மிகாத மேலுமான காலமொன்றினால் மேற்சொன்ன காலத்தை லோக் ஆயுக்தாவானது நீட்டிக்கலாம்.

(6) அவ்வாறு பணிக்கப்பட்ட விசாரணைப்பிரிவு அல்லது அரசு முகவாண்மையானது லோக் ஆயுக்தாவால் அதற்கு குறித்தளிக்கப்பட்ட வழக்குகள் தொடர்பாக லோக் ஆயுக்தாவிற்கு விரிவான விசாரணை அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்தல் வேண்டும்.

(7) லோக் ஆயுக்தாவின் மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஆயமொன்று 6-ஆம் உட்பிரிவின்படி அவ்வாறு பணிக்கப்பட்ட விசாரணைப் பிரிவு அல்லது முகவாண்மையிடமிருந்து அதனால் பெறப்பட்ட ஒவ்வொரு அறிக்கையையும் கருத்தில் கொள்ளவேண்டும் மற்றும்,-

(a) 12-ஆம் பிரிவின், (1)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள பொதுப் பணியாளர்கள் தொடர்பாக (C மற்றும் D தொகுதிகளைச் சார்ந்த பொது ஊழியர்களைத் தவிர) உரிய நடவடிக்கைக்காக தகுதி வாய்ந்த அதிகார அமைப்பிற்கு அறிக்கையை அனுப்பலாம்;

(b) புகாரை முடிவுறுத்துவதற்காக ஆணை பிறப்பிக்கலாம்.

(8) லோக் ஆயுக்தாவானது நேர்விற்கேற்ப முதல்நிலை விசாரணை அல்லது விரிவான விசாரணையின் போது அதற்கு பொருத்தமென கருதலாகிறவாறான நேர்விற்கேற்ப முதல்நிலை விசாரணை அல்லது விரிவான விசாரணைக்கு தொடர்பான ஆவணங்களின் காப்பு பொறுப்புக்காக உரிய ஆணைகளைப் பிறப்பிக்கலாம்.

(9) லோக் ஆயுக்தாவின் வலைதளமானது அவ்வப்போது மற்றும் ஒழுங்குமுறை விதிகளால் குறிப்பிடப்படலாகும் அத்தகைய முறையில் அதனிடம் நிலுவையிலுள்ள அல்லது அதனால் முடிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கையின் நிலை குறித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுதல் வேண்டும்.

(10) லோக் ஆயுக்தாவானது, முதல்நிலை விசாரணையை அல்லது விரிவான விசாரணையின் நடவடிக்கையில் தேவைப்படக்கூடிய அசல் பதிவுருக்களை மற்றும் சான்றுகளை இறுத்தி வைத்துக்கொள்ளலாம் அல்லது இறுத்தி வைத்துக்கொள்வதற்கு விழைவிக்கலாம்.

(11) பிறவாறு வகைசெய்யப்பட்டாலன்றி இந்தச் சட்டத்தின்படி முதல்நிலை விசாரணையை அல்லது விரிவான விசாரணையை நடத்தும் முறை மற்றும் நடைமுறையானது (பொது பணியாளருக்கு கிடைக்கக்கூடிய அத்தகைய சான்றுப்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கலாக) குறித்துரைக்கலாகிறவாறு இருத்தல் வேண்டும்.

மனச்சாய்வினால் 20. நடவடிக்கையின் எந்த நிலையிலும் லோக் ஆயுக்தாவானது ,-

பாதிக்கப்படக்

கூடும் நபர்களின்

கூற்றிணக் (a) யார் மீது புகார் செய்யப்பட்டிருக்கிறதோ அந்த நபரைத் தவிர பிற நபர் எவரையும் விசாரிக்க வேண்டிய தேவையாக இருக்கிறது என்று அது கருதுகின்றதென்றால், அல்லது

கேட்டறிதல்17 (b) எந்த நபருக்கு எதிராக புகார் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதோ அந்த நபரைத் தவிர பிற நபர் விசாரணையினால் அவருடைய புகழ் பாதிக்கப்படும் எனக் கருதப்படுகையில், லோக் ஆயுக்தாவானது அந்த நபருக்கு விசாரணையில் அவர் தரப்பு வாதத்தைக் கேட்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றினை இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு இணங்கியவாறு அளிக்க வேண்டும் மற்றும் அவர் தரப்பு சான்றுகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.

லோக்

ஆயுக்தாவானது

தகவல்

முதலியவற்றை

அளிக்குமாறு

பொது ஊழியர்

அல்லது பிற நபர்

எவரையும்

வேண்டலாம்.

21. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு, நேர்விற்கேற்ப முதல்நிலை விசாரணை அல்லது விரிவான விசாரணை எதனின் நோக்கத்திற்காகவும் லோக் ஆயுக்தா அல்லது விசாரணை இயக்குநர், அத்தகைய தகவலை அனுப்புவதற்கு அல்லது அத்தகைய ஆவணம் எதனையும் முன்னிலைப்படுத்துவதற்கு அத்தகைய முதல்நிலை விசாரணைக்கு அல்லது விரிவான விசாரணைக்கு தொடர்புடைய தகவலை அளிப்பதற்கு அல்லது ஆவணங்களை முன்னிலைப்படுத்துவதற்கு பிற நபர் எவரும் தகுதியுடையவராயிருக்கிறார் என்று அதற்கு தோன்றுகிற பொதுப் பணியாளரை அல்லது பிற நபர் எவரையும் கோரலாம்.

விசாரணைக்கு,

முன்அனுமதி

தேவையில்லை.

22. பொதுப் பணியாளர் எவருக்கும் எதிராக லோக் ஆயுக்தாவிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் எதன் பேரில் விசாரணைப் பிரிவால் அல்லது விழிப்புப்பணி ஆணையத்தால் அல்லது அரசின் முகவாண்மை எதனாலும் முதல்நிலை விசாரணையை அல்லது விரிவான விசாரணையை செய்யும் நோக்கத்திற்காக லோக் ஆயுக்தாவால் அதிகார அமைப்பு எதனிடமும் அனுமதி அல்லது ஒப்புதல் எதுவும் வேண்டப்படுதலாகாது.

அத்தியாயம் - VII.

லோக் ஆயுக்தாவின் அதிகாரங்கள்.

லோக்

ஆயுக்தாவின்

மேற்பார்வையிடும்

அதிகாரங்கள்.

23. அப்போதைக்கு செயலாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இந்தச் சட்டத்தின்படி விசாரணைக்கு எந்த அளவிற்கு தொடர்புடையதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த பொருட்பாடுகள் தொடர்பாக விசாரணை இயக்குநரை கண்காணிக்கவும் மற்றும் அறிவுறுத்தலை வழங்குவதற்கும் லோக் ஆயுக்தாவானது அதிகாரங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

(மையச் சட்டம்

குறிப்பிட்ட V/1908)

சில நேர்வுகளில்

லோக்

ஆயுக்தாவானது

உரிமையியல்

நீதிமன்றத்தின்

அதிகாரங்களை 24. (1) இந்தப் பிரிவின் வகைமுறைகளுக்குட்பட்டு, விசாரணையின் எந்த நோக்கத்திற்காகவும், லோக் ஆயுக்தாவின் விசாரணைப் பிரிவானது பின்வரும் பொருட்பாடுகள் தொடர்பாக உரிமை வழக்கொன்றை விசாரணை செய்யும் பொழுது, 1908 ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறை தொகுப்புச் சட்டத்தின்படி ஓர் உரிமையியல் நீதிமன்றம் கொண்டிருக்கும் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது,-

பெற்றிருக்கும்.

(a) நபர் எவருக்கும் அழைப்பாணை விடுத்தல் மற்றும் அவரது வருகையை கட்டாயப்படுத்துதல் மற்றும் அவரை உறுதிமொழியின் பேரில் விசாரணை செய்தல்;

(b) ஆவணம் எதனையும் கண்டறிதல் மற்றும் முன்னிலைப்படுத்துமாறு

கோருதல் ;

(c) உறுதி மொழி ஆவணங்களின் பேரில் சான்றினைப் பெறுதல் ;

(d) பொது பதிவுறு அல்லது அதனின் நகல் எதனையும் நீதிமன்றம்

அல்லது அலுவலகம் எதனிடமிருந்தும் கேட்டுப் பெறுதல்;

18

(e) சாட்சியங்கள் அல்லது ஆவணங்களை ஆய்வு செய்வதற்கான

பணிப்பாணைகளை வழங்குதல்:

வரம்புரையாக லோக் ஆயுக்தாவின் நடவடிக்கையில் வருகை தரமுடியாத நிலையில், சாட்சி இருக்கின்றார் என்று லோக் ஆயுக்தா கருதுகின்ற நேர்வில், அத்தகைய ஆணையத்தை அமைக்கலாம்; மற்றும்

(f) வகுத்துரைக்கப் படலாகிறவாறான அத்தகைய பிற

பொருட்பாடுகள்.

(மையச் சட்டம்

XLV/1860) (2) லோக் ஆயுக்தாவின் முன்புள்ள நடவடிக்கை எதுவும் இந்திய தண்டனை தொகுப்புச் சட்டத்தின் 193-ஆம் பிரிவின் பொருளின்படி ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

லோக் ஆயுக்தாவானது

அரசு அலுவலர்களின்

சேவையை

பயன்படுத்திக்

25. (1) லோக் ஆயுக்தாவானது முதல்நிலை விசாரணை அல்லது விரிவான விசாரணை எதனையும் நடத்தும் நோக்கத்திற்காக, அரசின் ஒப்புதலுடன் அரசின் அலுவலர் எவரின் அல்லது அரசு முகவாண்மை எதனின் சேவையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கொள்வதற்கு

அதிகாரம்.

(2) முதல்நிலை விசாரணை அல்லது விரிவான விசாரணையின் நோக்கத்திற்காக (1)-ஆம் உட்பிரிவின்படி அலுவலர் அல்லது முகவாண்மை எதனின் சேவையைப் பயன்படுத்தப்படுபவை லோக் ஆயுக்தாவின் பணிப்புரை மற்றும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, (1)-ஆம் உட்பிரிவின்படி பயன்படுத்தப்படுகின்ற முதல் நிலை விசாரணை அல்லது விரிவான விசாரணையை நடத்தும் நோக்கத்திற்காக, அலுவலர் எவரின் அல்லது முகவாண்மை எதனின் சேவையை லோக் ஆயுக்தாவின் பணிப்புரை மற்றும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு பயன்படுத்தலாம்.

(a) நபர் எவருக்கும் அழைப்பாணை விடுத்தல் மற்றும் அவரது

வருகையை கட்டாயப்படுத்துதல் மற்றும் அவரை விசாரணை செய்தல் ;

(b) ஆவணம் எதனையும் கண்டறிதல் மற்றும் முன்னிலைப்

படுத்துவதற்கு வேண்டுதல் மற்றும்,

(c) அலுவலர் எவரிடமிருந்தும் பொது ஆவணங்களை அல்லது

அதனின் நகலைத் தருமாறு கோருதல்;

(3) (1)-ஆம் உட்பிரிவின் படி பயன்படுத்தப்படுகின்ற அலுவலர் அல்லது முகவாண்மை எவரின் சேவைகளும் முதல்நிலை விசாரணை அல்லது விரிவான விசாரணை தொடர்பான பொருட்பாடு எதனையும் விசாரிக்க வேண்டும் மற்றும் இது சம்பந்தமாக அதனால் குறிப்பிடப்படலாகிறவாறான அத்தகைய காலத்திற்குள் லோக் ஆயுக்தாவிற்கு அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்ய வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டுடன்

.

தொடர்புடைய

பொது பணியாளரை

பணிமாறுதல் அல்லது

26. (1) லோக் ஆயுக்தாவானது குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முதல்நிலை விசாரணை ஒன்றைச் செய்கின்றவிடத்து சான்றின் அடிப்படையில் முதல் நோக்கில் ஆதாரம் இருக்கிறது என்று மனநிறைவடைகிறவிடத்து, அதாவது, -

தற்காலிகப் பணி

நீக்கம் செய்ய

வேண்டும் என்று

பரிந்துரைப்பதற்கு

லோக் ஆயுக்தாவிற்கு

(a) முதல்நிலை விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது 12-ஆம் பிரிவின், (1) – ஆம் உட்பிரிவின் (c) கூறில் அல்லது (d) கூறில் சுட்டப்பட்டுள்ள பொதுப் பணியாளர் அவருடைய பதவியில் தொடர்ந்திருக்கையில் அத்தகைய முதல்நிலை விசாரணை பாதிக்கப்படக்கூடும் என்றால்; அல்லது

உள்ள அதிகாரம்19 (b) மேலே (a) கூறில் சுட்டப்பட்டுள்ள பொது ஊழியர் சான்றினை எந்த வகையிலும் அழிக்கக்கூடும் அல்லது எந்த வகையிலும் மறைக்கக்கூடும் அல்லது சாட்சிகளை தன்வசப்படுத்தக்கூடும் என்றால்,

அதன்பின்பு லோக் ஆயுக்தாவானது, ஆணையில் குறித்துரைக்கலாகிறவாறான அத்தகைய காலம் வரை அத்தகைய பதவியிலிருக்கும் அத்தகைய பொதுப் பணியாளரை பணி மாறுதல் செய்வதற்கு அல்லது தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்வதற்காக அரசுக்கு பரிந்துரை செய்யலாம்.

(2) அரசு, நிர்வாகக் காரணங்களுக்காக, அவ்வாறு செய்வதற்கு அது உகந்ததாக இல்லாமல் இருக்கின்றவிடத்து, எழுதி பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக தவிர (1) ஆம் உட்பிரிவின் படி செய்யப்பட்ட பரிந்துரையை அரசு சாதாரணமாக ஏற்க வேண்டும்.

முதல் நிலை

விசாரணையின்

போது

ஆவணங்களை 27. லோக் ஆயுக்தாவானது, இந்தச் சட்டத்தின்படி அதனுடைய செயற்பணிகளை ஆற்றுகையில் ஆவணம் அல்லது பதிவுரு எதனையும் தயார் செய்வதற்கு அல்லது வைத்துவருவதற்கு ஒப்படைக்கப்பட்ட பொதுப் பணியாளர் ஒருவருக்கு, -

அழிப்பதை

தடை செய்வதற்கு,

பணிப்புரைகள் (a) அத்தகைய ஆவணம் அல்லது பதிவுருவினைப் அழிக்கப்படுவதிலிருந்து அல்லது சேதப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கு; அல்லது

பிறப்பிப்பதற்கு

லோக்

ஆயுக்தாவிற்குள்ள

அதிகாரம்.

(b) பொதுப் பணியாளர் அத்தகைய ஆவணம் அல்லது பதிவுருவினை திருத்தம் செய்வதிலிருந்து அல்லது மறைத்து வைப்பதிலிருந்து தடுப்பதற்கு; அல்லது,

(c) ஊழல் மூலம் அவரால் தவறான வழியில் பெறப்பட்டதாகக் கருதப்படும் சொத்துக்கள் எதனையும் உரிமை மாற்றம் செய்வதிலிருந்து அல்லது பாராதீனம் செய்வதிலிருந்து தடுப்பதற்கு,

உரிய பணிப்புரைகளை வழங்கலாம்.

ஒப்படைவு

செய்வதற்கான

அதிகாரம்.

28. லோக் ஆயுக்தாவானது, எழுத்துபூர்வமாக பொதுவான அல்லது சிறப்பு ஆணை வாயிலாக மற்றும் அதில் குறிப்பிடப்படலாகிறவாறான அத்தகைய நிபந்தனைகளுக்கு மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு அதனிடம் வழங்கப்பட்டுள்ள நிர்வாகம் அல்லது நிதி அதிகாரம் எதனையும், அந்த ஆணையில் குறித்துரைக்கப்பட்டுள்ள அத்தகைய உறுப்பினர்களால் அல்லது அலுவலர்களால் அல்லது பணியாளர்களால் பயன்படுத்தப்படலாம் அல்லது செய்து முடிக்கப்படலாம் என்று பணிப்புரை பிறப்பிக்கலாம்.

அத்தியாயம் - VIII.

லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கெதிரான புகார்கள்.

லோக் ஆயுக்தாவின் 29. (1) லோக் ஆயுக்தாவானது, தலைவர் அல்லது உறுப்பினர்களுக்கு

தலைவர் மற்றும் எதிராக அளிக்கப்பட்ட புகார் எதனையும் விசாரித்தல் கூடாது.

உறுப்பினர்களை

பணி நீக்கம்

செய்தல் மற்றும்

தற்காலிகப் பணி

நீக்கம் செய்தல்.

(2) (4)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்குட்பட்டு, சட்டப்பேரவையின் நாற்பத்தைந்து உறுப்பினர்களுக்கு குறையாதவர்களால் கையொப்பமிட்ட மனுவின் பேரில், ஆளுநரால் அதற்கு செய்யப்பட்ட சுட்டுகையின் பேரில், இதன் பொருட்டு உயர்நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட விசாரணையில், நேர்வுக்கேற்ப தலைவர் அல்லது அத்தகைய உறுப்பினர் அத்தகைய காரணத்தினால் நீக்கப்பட வேண்டுமென உயர்நீதிமன்றமானது அறிவித்த பின்பு, நடத்தைக்கேட்டின் காரணத்தினால் தலைவர் அல்லது உறுப்பினர் எவரும், ஆளுநரின் ஆணைப்படி பதவியிலிருந்து நீக்கப்படுதல் வேண்டும்.

20

(3) இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் செய்யப்பட்ட பரிந்துரை அல்லது இடைக்கால ஆணையினை பெற்றுக்கொண்டதன் பேரில், அத்தகைய சுட்டுகையின் மீது உயர்நீதிமன்றத்தின் இறுதி அறிக்கையை பெற்று ஆளுநரானவர் ஆணையினை பிறப்பிக்கும் வரையில் (2)- ஆம் உட்பிரிவின்படி உயர்நீதிமன்றத்திற்கு செய்யப்பட்ட சுட்டுகையுடன் தொடர்புடைய தலைவர் அல்லது உறுப்பினர் எவரையும் ஆளுநரானவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யலாம்.

(4) (2)-ஆம் உட்பிரிவில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும்,

தலைவர் அல்லது உறுப்பினர்,-

(a) நொடிப்புநிலையர் என்று தீர்ப்பளிக்கப்பட்டவராக

இருக்கின்றாரென்றால், அல்லது

(b) அவருடைய அலுவலகக் காலத்தின்போது அவருடைய அலுவலகக் கடமைகளை தவிர, சம்பளம் பெறும் வேறு பணியில் ஈடுபட்டு அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறாரென்றால், அல்லது

(c) ஆளுநரின் கருத்தின்பேரில் மூளைக் குறைபாடு அல்லது உடல் நலக்குறைபாடு காரணங்களினால் அவர் அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்கு பொருத்தமற்றவரானால், ஆளுநர் தனது ஆணை வாயிலாக நேர்விற்கேற்ப தலைவர் அல்லது உறுப்பினரை பதவி நீக்கம் செய்யலாம்.

(5) தலைவர் அல்லது உறுப்பினர் எவரும் இந்திய அரசால் அல்லது தமிழ்நாடு அரசால் அல்லது அதன் பொருட்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை எதிலும் எந்த வகையிலும் தொடர்புடையவராக அல்லது உரித்தமுடையவராக இருக்கிறார் அல்லது ஆனார் என்றால் அல்லது உறுப்பினராக அல்லாமல் பிறவாறு மற்றும் கூட்டுருவான நிறுமத்தின் பிற உறுப்பினர்களுடன் பொதுவாக பிறவாறு அதிலிருந்து கிடைக்கும் இலாபம் எதிலும் அல்லது ஆதாயம் அல்லது ஊதியம் எதிலும் எந்த வகையிலும் பங்கெடுத்துக் கொள்பவராக இருக்கிறாரென்றால் (2)-ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக அவர் தவறான செயலைச் செய்திருக்கிறார் என்று கொள்ளப்படுதல் வேண்டும்.

லோக் ஆயுக்தாவின்

மையச் சட்டம் அலுவலர்களுக்கு

49/1988 எதிரான புகார்கள்.

30. (1) 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தண்டிக்கக்கூடிய குற்றம் ஒன்றிற்காக, லோக் ஆயுக்தாவுடன் இணைக்கப்பட்ட அல்லது அதன் கீழுள்ள அலுவலர் அல்லது பணியாளர்கள் அல்லது முகவாண்மை எதற்கும் எதிராக செய்யப்பட்ட குற்றச்சாட்டு அல்லது தவறான செயலின் புகாரானது இந்தப் பிரிவின் வகைமுறைகளுக்கிணங்கி நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

(2) லோக் ஆயுக்தாவானது, புகார் பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் செய்யப்பட்ட புகார் அல்லது குற்றச்சாட்டை விசாரணை செய்து முடிக்க வேண்டும்.

(3) லோக் ஆயுக்தாவின் அலுவலர் அல்லது பணியாளர், எவருக்கும் அல்லது லோக் ஆயுக்தாவுடன் இணைக்கப்பட்ட அல்லது ஈடுபடுத்தப்பட்ட முகவாண்மை எதற்கும் எதிரான புகாரின் மீதான விசாரணை ஒன்றை மேற்கொள்ளும்போது, கிடைக்கக்கூடிய அந்த சான்றின் அடிப்படையில் முதல்நோக்கிலேயே மனநிறைவு அடையுமானால், அதாவது,-

(a) விசாரணையை நடத்தும் போது லோக் ஆயுக்தாவின் அத்தகைய அலுவலர் அல்லது பணியாளர் அல்லது அவரின் பணியில் இணைக்கப்பட்ட அல்லது ஈடுபடுத்தப்பட்ட முகவாண்மையானது தொடர்ந்து பணியாற்றுவது அத்தகைய விசாரணையை எதிர்மறையாக பாதிக்கப்படக்கூடுமோ; அல்லது21 (b) லோக் ஆயுக்தாவின் அலுவலர் அல்லது பணியாளர் அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட அல்லது ஈடுபடுத்தப்பட்ட முகவாண்மையானது சான்றினை எந்த வகையிலும் மாற்றுவதில் அல்லது அழித்தலில் அல்லது சாட்சிகளை தன்வசப்படுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றை செய்யக்கூடுமானால்.-

லோக் ஆயுக்தாவானது ஆணையொன்றினால், லோக் ஆயுக்தாவின் அத்தகைய அலுவலர் அல்லது ஊழியர் தற்காலிக பணிநீக்கம் செய்யலாம் அல்லது லோக் ஆயுக்தாவுடன் இணைக்கப்பட்ட அல்லது ஈடுபடுத்தப்பட்ட அத்தகைய முகவாண்மையின் அனைத்து அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளையும் அதனால் செயல்படுத்தப்படுவதற்கு முன் திரும்பப்பெறலாம்.

மையச் சட்டம்

49/1988

(4) விசாரணை முடிக்கப் பட்டதன்பேரில், 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி குற்றமொன்று அல்லது தவறான செயல் செய்யப்பட்டிருப்பதற்கான முதல் நோக்குச் சான்று இருப்பதாக லோக் ஆயுக்தா மனநிறைவடைந்தால் அத்தகைய விசாரணை முடிவடைந்து பதினைந்து நாட்களுக்குள், லோக் ஆயுக்தாவின் அத்தகைய அலுவலர் அல்லது பணியாளர் அல்லது அதனுடன் ஈடுபடும் அல்லது இணைந்திருக்கும் அத்தகைய அலுவலர் அல்லது பணியாளர் அல்லது முகவாண்மை மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாநிலத்தின் விழிப்புப்பணி ஆணையத்திற்கு அதனுடைய அறிக்கையை அனுப்புதல் வேண்டும் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்:

வரம்புரையாக,- அத்தகைய ஆணை எதுவும் அவ்வாறு ஈடுபட்டுள்ள அல்லது இணைந்து செயல்பட்டுள்ள லோக் ஆயுக்தாவின் அத்தகைய அலுவலருக்கு அல்லது பணியாளருக்கு அல்லது முகவாண்மைக்கு அவர்களுடைய தரப்பு வாதத்தை கேட்பதற்கான வாய்ப்பொன்றை கொடுக்காமல் பிறப்பிக்கப்படுதலாகாது.

அத்தியாயம்-IX. நிதி, கணக்குகள் மற்றும் தணிக்கை.

வரவு செலவுத் திட்டம்.

31. லோக் ஆயுக்தாவின் மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவுகளைக் காட்டும் அடுத்த நிதி ஆண்டிற்கான அதனுடைய வரவு செலவு திட்டத்தினை வகுத்துரைக்கப்படலாகிறவாறு ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அத்தகைய படிவத்தில் மற்றும் அத்தகைய காலத்தில் தயார் செய்தல் வேண்டும்.

அரசால் அளிக்கப்படும்

மானியங்கள்.

32. அரசானது, இது தொடர்பாக மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையினால் சட்டப்படி ஒப்பளிக்கப்பட்ட நிதி ஒதுக்கத்திற்குப் பின்பு, லோக் ஆயுக்தாவின் அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தொடர்பாக செலுத்தத் தக்கதாக இருக்கக்கூடிய சம்பளங்கள், படிகள் மற்றும் ஓய்வூதியம் உள்ளடங்கலாக அதனின் தலைவருக்கு மற்றும் உறுப்பினர்களுக்கு செலுத்தத் தக்கதாக உள்ள சம்பளங்களுக்காக மற்றும் படிகளுக்காக தேவைப்படலாகிறவாறான அத்தகைய தொகைகளை லோக் ஆயுக்தாவிற்கு வழங்கலாம்.

கணக்குகளின்

ஆண்டறிக்கை.

33. (1) லோக் ஆயுக்தாவானது தமிழ்நாட்டின் தலைமைக் கணக்காயரின் ஆலோசனையுடன் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய படிவத்தில் கணக்குகளின் ஆண்டறிக்கையொன்றினை தயார் செய்ய வேண்டும் மற்றும் உரிய முறையில் கணக்குகளை மற்றும் பிற தொடர்புடைய பதிவுருக்களை பராமரிக்க வேண்டும்;

(2) லோக் ஆயுக்தாவின் கணக்குகளானது தமிழ்நாட்டின் தலைமைக் கணக்காயர் மூலம் அவரால் குறித்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய கால இடைவேளைகளில் தணிக்கை செய்யப்படுதல் வேண்டும்;

22

(3) தமிழ்நாட்டின் தலைமை கணக்காயர், அல்லது இந்தச் சட்டத்தின்படி லோக் ஆயுக்தாவின் கணக்குகளை தணிக்கை செய்வது தொடர்பாக அவரால் பணியமர்த்தம் செய்யப்பட்ட நபர் எவரும், அரசின் கணக்குகளை தணிக்கை செய்வது தொடர்பாக தமிழ்நாட்டின் தலைமை கணக்காயர் பெற்றிருக்கும் அதே உரிமைகளை, சலுகைகளை மற்றும் அதிகாரங்களை கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் குறிப்பாக லோக் ஆயுக்தாவின் புத்தகங்களை, கணக்குகளை, தொடர்புடைய செலவுச் சீட்டுகளை மற்றும் பிற ஆவணங்களை கேட்டுப் பெறுவதற்கான உரிமை மற்றும் அலுவலகங்கள் எதனையும் ஆய்வு செய்வதற்கும் உரிமையும் கொண்டிருத்தல் வேண்டும்;

(4) லோக் ஆயுக்தாவின் கணக்குகள் தமிழ்நாட்டின் தலைமை கணக்காயரால் சான்றளிக்கப்பட்டவாறு அல்லது இது சம்பந்தமாக பணியமர்த்தம் செய்யப்பட்ட பிற நபர் எவரும் தணிக்கை அறிக்கையுடன் சேர்த்து அரசுக்கு ஆண்டுதோறும் அனுப்பப்படுதல் வேண்டும் மற்றும் அரசானது மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையின் முன்பு அதனை வைப்பதற்கு விழைதல் வேண்டும்;

அரசுக்கு விவர

அறிக்கைகள்

முதலியவற்றை

அளித்தல்.

34. லோக் ஆயுக்தாவானது வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய நேரத்தில் மற்றும் அத்தகைய படிவத்தில் அல்லது அரசால் கோரப்படுகிறவாறு, அரசால் அவ்வப்பொழுது தேவைப்படலாகும் லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பின்படியான பொருட்பாடு எதற்கும் தொடர்பான அத்தகைய அறிக்கைகளை மற்றும் விவர அறிக்கைகள் மற்றும் குறிப்புகளை அரசுக்கு அளித்தல் வேண்டும்;

அத்தியாயம்-X.

பொய் புகாரின் மீதான நடவடிக்கை.

பொதுப்

பணியாளருக்கு

எதிராகப்

பொய் புகார்

அளித்ததற்காக

மற்றும் இழப்பீடு

35. (1) இந்தச் சட்டத்தில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும் இந்தச் சட்டத்தின்படி பொய்யான, அற்பமான அல்லது அலைக்கலைக்கும் வகையில் புகார் செய்கிறவர் எவராக இருப்பினும், தண்டனைத் தீர்ப்பின் பேரில் ஓர் ஆண்டு காலத்திற்கு நீட்டிக்கப்படலாகும் ஒரு காலத்திற்கு சிறை தண்டனையுடன் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் பணத்தண்டமும் விதித்துத், தண்டிக்கப்படுதல் வேண்டும்.

வழங்குதல்

முதலியவற்றிற்காக

வழக்கு தொடருதல்.

(2) பொய்யான, அற்பத்தனமான அலைக்கழிக்கும் வகையில் தனக்கெதிராக புகார் செய்யப்பட்ட நபரொருவரால் அல்லது லோக் ஆயுக்தாவால் அதிகாரமளிக்கப்பெற்ற நபரொருவரால் தவிர, குற்றமொன்றினை 1ஆம் உட்பிரிவின் படி நீதிமன்றம் எதுவும் நடவடிக்கை எடுத்தல் ஆகாது.

(3) (1) ஆம் உட்பிரிவின்படி குற்றம் ஒன்று தொடர்பாக வழக்கானது அரசு குற்ற வழக்குரைஞரால் நடத்தப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய வழக்கு தொடருதல் தொடர்பான அனைத்து செலவுகளும் அரசால் எற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும்;

(4) இந்தச் சட்டத்தின்படி தவறான புகாரை அளித்ததற்காக தனி நபர் அல்லது சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக் கட்டளையாக (பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத) உள்ள நபரெவரும் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நேர்வில், பொய்ப்புகாரானது எவர்மீது அளிக்கப்பட்டதோ அத்தகைய பொதுப் பணியாளரால் வழக்கினை எதிர் கொள்வதற்கான வழக்கு செலவுகளுடன் சேர்த்து நீதிமன்றமானது தீர்மானிக்கலாகும் அத்தகைய இழப்பீட்டினையும் பொதுப் பணியாளருக்கு செலுத்துவதற்கு பொறுப்புடையராகுதல் வேண்டும்.

(5) இந்தப் பிரிவில் அடங்கியிருப்பது எதுவும் நல்லெண்ணத்தில்

செய்யப்பட்ட புகார்கள் என்கின்ற நேர்வில் பொருந்தாது.

23

மையச் சட்டம்

XLV/1860

விளக்கம்: இதில் உட்பிரிவின் நோக்கத்திற்காக "நல்லெண்ணம்" என்கின்ற சொற்றொடர் என்பது உரிய கவனம், எச்சரிக்கை மற்றும் பொறுப்புணர்வுடன் அல்லது 1860 ஆம் ஆண்டு இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 79 ஆம் பிரிவின் கீழான சட்டத்தின் படி அவர் தாம் சரியென நம்பி தவறுதலாக நல்லெண்ணத்தில் நபரொருவரால் செய்யப்பட்ட அல்லது செய்யப்பட்டதாக கருதப்பட்ட செயல் எதுவும் என்று பொருள்படும்.

சங்கம் அல்லது

நபர்களின்

குழுமம் அல்லது

பொறுப்புக்

கட்டளையால்

செய்யப்படும்

பொய் புகார்.

36. (1) சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக் கட்டளை (பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத) எதனாலும் 35 ஆம் பிரிவு (1) ஆம் உட்பிரிவின்படி குற்றமொன்று செய்யப்பட்டிருக்கின்றவிடத்து, குற்றம் செய்யப்பட்டிருந்த நேரத்தில் நேரடியாக அந்தக் குற்றத்தை செய்ததற்கான பொறுப்புக்குள்ளானவராக மற்றும் செய்திருந்த ஒவ்வொரு நபரும், பொறுப்புடையவராக இருந்திருக்கும் அந்த சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக்கட்டளையின் தொழில் அல்லது அலுவல்கள் அல்லது அலுவற்பணிகள் அல்லது நடவடிக்கைகளுக்காக சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக்கட்டளைக்கு நேரடி பொறுப்பிலுள்ள மற்றும் பொறுப்புடையவராயிருக்கும் ஒவ்வொரு நபரும் மற்றும் அத்தகைய சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொருப்புக் கட்டளையானது அந்த குற்றச் செயலை செய்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் அவற்றிற்கெதிராக நடவடிக்கைக்கும் அதற்கிணங்கிய வகையில் தண்டனைக்கும் உள்ளாக்குதல் வேண்டும்.

வரம்புரையாக,- நபர் எவரும், குற்றம் அவருடைய அறிவுக்கு எட்டாத வகையில் நடந்திருக்கிறது அல்லது அத்தகைய குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்கான அனைத்து உரிய முயற்சிகளை மேற்கொண்டதாக நிரூபித்தால் இந்த உட்பிரிவில் அடங்கியிருப்பது எதுவும் இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளபடி தண்டனை எதற்கும் அவரை உள்ளாக்குதல் ஆகாது.

(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும் சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக்கட்டளையால் (அது பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத) இந்தச் சட்டத்தின்படி குற்றமானது செய்யப்பட்டிருக்கிறவிடத்து மற்றும் அத்தகைய சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக்கட்டளையின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின் இசைவுடன் அல்லது மறைமுக ஆதரவுடன் அல்லது கவனமின்மை காரணமாய் இருந்ததென நிரூபிக்கப்பட்டால் அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் அந்தக் குற்றத்தைச் செய்துள்ளவராகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கிணங்க தண்டணைக்குள்ளாக்குதல் வேண்டும்.

அத்தியாயம்-XI.

பல்வகைப்பட்டவை.

பொதுப் பணியாளர்

எவராலும்

நல்லெண்ணத்தில்

எடுக்கப்பட்ட

நடவடிக்கைக்கு 37. பொதுப் பணியாளர் எவரும் அவரது செயற்பணிகளை நிறைவேற்றும் போது நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட எதையும் பொருத்து, அவருக்கெதிராக இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடரப்படுதல் ஆகாது.

பாதுகாப்பு.

பிற நபர்களால்

நல்லெண்ணத்தில்

எடுக்கப்பட்ட

நடவடிக்கைக்கு

பாதுகாப்பு.

38. இந்தச் சட்டத்தில் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகள் அல்லது ஒழுங்குமுறை விதிகளின் கீழ் நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட எதனையும் பொருத்து லோக் ஆயுக்தாவிற்கு எதிராக அல்லது அலுவலர், பணியாளர், முகவாண்மை எதற்கும் அல்லது நபரெவருக்கும் எதிராக வழக்கு, குற்ற வழக்கும் அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடரப்படுதல் ஆகாது.

24

லோக் ஆயுக்தாவின்

மையச்சட்டம் உறுப்பினர்கள்,

XLV/1860 அலுவலர்கள் மற்றும்

பணியாளர்கள்

பொது

பணியாளர்களாகக்

39. லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்கள் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதற்கும் இணங்க செயல்படும்போது அல்லது செய்வதற்கு கருதும்பொழுது 1860 ஆம் ஆண்டு இந்தியத் தண்டை தொகுப்புச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் பொருளிபணியாளர்கன்படி பொதுப் பணியாளர்களாகக் கருதப்படுவர்.

கருதப்படுவர்.

காலவரம்பின்

பொருந்துகை

40. அத்தகைய புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றம் நடைபெற்றதாகக் சாட்டப்பட்டுள்ள தேதியிலிருந்து நான்கு ஆண்டுகள் கால அளவிற்குள் புகாராக இல்லையென்றால், அந்தப் புகார் செய்யப்படவில்லையென்றால், லோக் ஆயுக்தாவானது அத்தகைய புகாரின் மீது விசாரணை செய்தல் ஆகாது.

அதிகார வரம்பிற்குத்

தடை

41. இந்தச் சட்டத்தினால் அல்லது அதன்படி லோக் ஆயுக்தாவிற்கு அதிகாரமளிக்கப்பட்டதன் பொருட்டு எதனின் தொடர்பாகவும், தீர்மானிக்க உரிமையியல் நீதிமன்றம் எதுவும் அதிகார வரம்பினைக் கொண்டிருக்காது.

சட்ட உதவி. 42. லோக் ஆயுக்தாவானது இந்தச் சட்டத்தின்படி அதன் முன்பு எவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருக்கின்றதோ அந்த நபர் ஒவ்வொருவருக்கும் லோக் ஆயுக்தாவின் முன்பு அவர் தரப்புக்காக வாதாடுவதற்காக சட்ட உதவியானது வேண்டப்பட்டால் அத்தகைய உதவிக்கு வகை செய்தல் வேண்டும்.

சட்டத்தின்

மீதூர்ந்தியங்கும்

தன்மை.

43. மாநில சட்டமன்றப் பேரவையினால் இயற்றப்பட்டு அப்போது நடைமுறையில் உள்ள பிறச் சட்டங்கள் எதிலும் அடங்கியுள்ள எவற்றுடனும் முரணாக எது எவ்வாறிருப்பினும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் செயல்திறம் பெற்றிருத்தல் வேண்டும்.

விதிகளைச்

44. (1) அரசானது இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை

செய்வதற்கு

நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.

அதிகாரம்.

(2) குறிப்பாக மற்றும் முந்தைய அதிகாரங்களின் பொதுப்பாங்கிற்கு குந்தகமின்றி அத்தகைய விதிகள் பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்காகவும் அல்லது எதற்காகவும் வகை செய்யலாம். அதாவது:-

(a) (2) ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் (d) கூறில்

சுட்டப்பட்டுள்ள புகாரின் படிவம்;

(b) தேடுதல் குழுவின் காலம் மற்றும் 4ஆம் பிரிவின், (5)ஆம் உட்பிரிவின்படி பெயர்களின் பட்டியலின் தெரிவு முறை மற்றும் அதனுடைய உறுப்பினர்களுக்கு செலுத்தத்தக்க கட்டணம் மற்றும் படிகள்;

(c) 9ஆம் பிரிவின், (3)ஆம் உட்பிரிவின் வரம்புரையின்படி

பதவி அல்லது பதவிகள் தொடர்பான பணியமர்த்தம்;

(d) 9ஆம் பிரிவின், (4) ஆம் உட்பிரிவின்படி லோக் ஆயுக்தாவின் செயலாளர் மற்றும் பிற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணி நிபந்தனைகள்;

(e) 24ஆம் பிரிவின், (1)ஆம் உட்பிரிவின் (f) கூறின்படி எந்த பிற பொருட்பாடுகளுக்காக உரிமையியல் நீதிமன்றமொன்றின் அதிகாரங்களை லோக் ஆயுக்தாவானது பெற்றிருக்கிறதோ, அந்த பிற பொருட்பாடுகள்;

25

(f) 31 ஆம் பிரிவின்படி லோக் ஆயுக்தாவின் மதிப்பிடப்பட்ட வரவுகளை மற்றும் செலவினைக் காட்டும் அடுத்த நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தயாரிப்பதற்கான படிவம் மற்றும் காலம் ;

(g) 33 ஆம் பிரிவின், (1)-ஆம் உட்பிரிவின்படி கணக்குகள் மற்றும் பிற தொடர்புடைய பதிவுருக்களை பராமரிப்பதற்கான படிவம் மற்றும் கணக்குகளின் ஆண்டறிக்கையின் படிவம் ;

(h) 34ஆம் பிரிவின்படி குறிப்புகளுடனான விவர அறிக்கை

மற்றும் அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான படிவம், முறை மற்றும் காலம்;

(i) வகுத்துரைக்கப்படலாகிற அல்லது வகுத்துரைக்கலாகும்

பிற பொருட்பாடு எதுவும்.

(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அனைத்து விதிகளும் மற்றும் அறிவிக்கைகளும் அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்ட நாளன்று செயலாற்றலுக்கு வரும் என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்று செயலாற்றலுக்கு வருதல் வேண்டும்.

(4) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட விதி, அறிவிக்கை அல்லது செய்யப்பட்ட ஆணை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை ஏதொன்றிலும் மாறுதல் எதையும் சட்டமன்றப் பேரவை செய்யுமானால் அல்லது அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை செய்யப்படுதல் ஆகாது அல்லது பிறப்பிக்கப்படுதல் ஆகாது என சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமானால் அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை அதன் பின்னர் அவ்வாறு மாற்றமைவு செய்யப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும் அத்தகைய மாற்றமைவு அல்லது நீக்கம் எதுவும் அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட செயல் எதனின் செல்லுந்தன்மைக்குக் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.

ஒழுங்குமுறை

விதிகளைச்

செய்வதற்கு அதிகாரம்.

45. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் மற்றும் அதன்படி செய்யப்பட்ட விதிகளுக்குட்பட்டு லோக் ஆயுக்தாவானது அறிவிக்கையினால் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை நிறைவேற்றுவதற்கான ஒழுங்குமுறை விதிகளைச் செய்யலாம்.

(2) குறிப்பாகவும், மற்றும் முந்தைய அதிகாரங்களின் பொதுப்பாங்கிற்குக் குந்தகமின்றியும் பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்காகவும் அல்லது எதற்காகவும் வகை செய்யப்படலாம். அதாவது,-

(a) 19 ஆம் பிரிவின், (9) ஆம் உட்பிரிவின் படியான சுட்டுகையுடன் நிலுவையில் உள்ள அனைத்து புகார்களின் நிலை அல்லது பதிவுருக்கள் மற்றும் சான்றுடன் முடிவு செய்யப்பட்டதை லோக் ஆயுக்தாவின் வலை தளத்தில் காட்சிப்படுத்துவதற்கான முறை; மற்றும்

(b) இந்தச் சட்டத்தின்படி வேண்டக்கூடிய அல்லது குறித்துரைக்கப்பட்ட பிற பொருட்பாடு எதுவும்.

26

இடர்ப்பாடுகளை

நீக்குவதற்கான

அதிகாரம்.

46. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால், அரசு, அரசிதழில் வெளியிடப்படும் ஆணை ஒன்றின் மூலமாக இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில், அத்தகைய இடர்ப்பாட்டை நீக்குவதற்கு தேவையானவையென்றோ உகந்தவையென்றோ தனக்குத் தோன்றுகின்ற அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:

வரம்புரையாக,- ஆனால் அத்தகைய ஆணை எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் செய்யப்படுதலாகாது.

(2) இந்தப் பிரிவின்படி செய்யப்பட்ட ஆணை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட பின்பு கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சு.ச. பூவலிங்கம், 1 அரசுச் செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், உதவி இயக்குநர், சட்ட(தமிழ்ப்பிரிவு)த்துறை.

127 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 17/2021

தமிழ்நாடு மாநிலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தமிழ்நாடு மாநில ஆணையம் ஒன்றை அமைத்துருவாக்குவதற்கும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்கு வகை செய்வதற்குமானதொரு சட்டம்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் ஒன்றினை அமைத்துருவாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்கு வகைசெய்தல் உகந்தது என்பதாலும்;

இந்தியக் குடியரசின் எழுபத்து இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

அத்தியாயம்-I.

முன்னுரை.

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர்

அளாவுகை மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையச் சட்டம் என வழங்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.

(3) இது அரசு அறிவிக்கையின் மூலம் குறிக்கக் கூடிய

அத்தகைய தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

2. இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,- பொருள் வரையறைகள் (a) "தலைமையாளர்" என்பது 3 ஆம் பிரிவின் படி நியமிக்கப்பட்ட

ஆணையத்தின் தலைமையாளர் என்று பொருள்படும்;

(b) "குடிமை உரிமைகள்" என்பது இந்திய அரசியலமைப்பின் 17 ஆம் உறுப்பின் மூலம் தீண்டாமை ஒழிப்பின் காரணமாக நபர் ஒருவர் அடைந்த உரிமை எதுவும் என்று பொருள்படும்;

(c) "ஆணையம்" என்பது 3ஆம் பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் என்று பொருள்படும்;

(d) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;

(e) "உறுப்பினர்" என்பது ஆணையத்தின் ஓர் உறுப்பினர் என்று பொருள்படும் மற்றும் தலைமையாளர், துணைத் தலைமையாளர் மற்றும் உறுப்பினர் செயலாளரை உள்ளடக்கும்;

(f) "வகுத்துரைக்கப்பட்டது" என்பது இந்தச் சட்டத்தின்படி

உருவாக்கப்பட்ட விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்;

(g) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் என்பது முறையே இந்திய அரசியலமைப்பின் 366 ஆம் உறுப்பின் (24) மற்றும் (25) ஆம் கூறுகளில் அவற்றிற்கு அளிக்கப்பட்ட அந்த பொருளை கொண்டிருத்தல் வேண்டும்;

(h) "மாநிலம்" என்பது தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்.

28

அத்தியாயம்–II.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம்.

ஆணையத்தினை

அமைத்துரு

வாக்குதல்.

3. (1) மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பை, இந்தச் சட்டத்தின்படி அதற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை செலுத்துவதற்கும் அதற்கு குறித்தளிக்கப்பட்ட செயற்பணிகளை ஆற்றுவதற்கும் அமைத்துருவாக்குதல் வேண்டும்.

(2) ஆணையமானது,-

(i) அரசால் நியமனம் செய்யப்பட்ட பின்வரும் உறுப்பினர்களைக்

கொண்டிருத்தல் வேண்டும். அதாவது :-

(a) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான பொருட்கூறுகளில் சிறந்த அறிவு கொண்டுள்ள உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர், தலைமையாளராக;

(b) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திற்காக பணியாற்றியுள்ள ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் எவரையும் சார்ந்த சிறப்புமிக்க நபர் ஒருவர் துணைத் தலைமையாளராக;

(c) ஆதிதிராவிடர் எவரையும் சார்ந்த மூன்று உறுப்பினர்கள், பழங்குடியினர் எவரையும் சார்ந்த ஒருவர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான பொருட்கூறுகளில் சிறந்த அறிவு கொண்டுள்ள சிறப்புமிக்க நபர் ஒருவர் உள்ளடங்கிய ஐந்து உறுப்பினர்கள்:

வரம்புரையாக,- உறுப்பினர் ஒருவர் மகளிராக இருத்தல்

வேண்டும்; மற்றும்

(ii) அரசு கூடுதல் செயலாளரின் படிநிலைக்கு குறையாத இந்திய ஆட்சிப் பணியின் அலுவலர்களிலிருந்து அரசினால் அமர்த்தப்பட்ட உறுப்பினர் செயலாளர் ஒருவர்.

தலைமையாளர்,

துணைத்

தலைமையாளர்

மற்றும்

உறுப்பினர்களின்

4. (1) ஆணையத்தின் தலைமையாளர், துணைத் தலைமையாளர் மற்றும் உறுப்பினர் ஒவ்வொருவரும் அரசின் விருப்பத்திற்குட்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு மிகாது அத்தகைய காலத்திற்கு பதவி வகித்தல் வேண்டும் மற்றும் இரண்டாவது முறைக்காக மறுபணியமர்த்தத்திற்கு தகுதியுடையவராயிருத்தல் வேண்டும்:

பதவிக் காலமும் பணி

நிபந்தனைகளும்.

வரம்புரையாக, தலைமையாளரானவர் எழுபது ஆண்டுகள் வயது நிறைவடையும் தேதிவரை மற்றும் துணைத் தலைமையாளர் மற்றும் பிற உறுப்பினர்களானவர் அறுபத்து ஐந்து ஆண்டுகள் வயது நிறைவடையும் தேதி வரை பதவி வகித்தல் வேண்டும்.

மேலும், வரம்புரையாக, தலைமையாளர் ஒருவர் வராதிருத்தல் காரணமாக அல்லது பிற காரணம் எதற்காகவும் அவரது அலுவல் பணிகளை நிறைவேற்ற இயலாதிருப்பின் அத்தகைய பணிகளானவை, நேர்விற்கேற்ப 3 ஆம் பிரிவின்படி தலைமையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு மற்றும் அப்பணிகளில் ஈடுபடும் வரையில் அல்லது அந்தத் தலைமையாளரானவர் அவர் பணிகளை மேற்கொள்ளும் வரையில், துணைத் தலைமையாளர் அல்லது அரசினால் பணித்துரைக்கப்பட்ட அத்தகைய பிற உறுப்பினரால் நிறைவேற்றப்படுதல் வேண்டும்:

29

இன்னும் வரம்புரையாக, அவ்வாறு நியமிக்கப்பட்ட பின்னவர், அவர் எவரது இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளாரோ அவ்வுறுப்பினரின் எஞ்சியுள்ள பதவி காலத்திற்காக மட்டுமே பதவி வகித்தல் வேண்டும்.

(2) தலைமையாளர், துணைத் தலைமையாளர் அல்லது உறுப்பினர் ஒருவர், எந்த நேரத்திலும், அரசுக்கு முகவரியிட்டு தன் கைப்பட எழுத்து மூலம் தெரிவித்து, நேர்விற்கேற்ப தலைமையாளர், துணைத் தலைமையாளர் அல்லது உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளலாம். ஆனால் இவரது பதவி விலகல் அரசினால் ஏற்றுக் கொள்ளப்படும் வரை அவரது பதவியில் தொடருதல் வேண்டும்.

(3) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்,

நபரொருவர்,-

(a) அவர், தீர்க்கப்படாத நொடிப்பு நிலையராயிருக்கிறவராயின்;

அல்லது

(b) அரசின் கருத்தில் ஒழுக்கக்கேட்டினை உள்ளடக்கிய குற்றச் செயல் ஒன்றிற்காக குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டுச் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளவராக இருப்பாராயின்; அல்லது

(c) அவர், மனச் சீர்கேடுற்றவராக, ஒரு தகுதிவாய்ந்த

நீதிமன்றத்தால் அவ்வாறு விளம்புகை செய்யப்பட்டிருப்பாராயின்; அல்லது

(d) அவர் செயல்பட மறுப்பாராயின் அல்லது செயல்படத்

திறனற்றுப் போவாராயின்; அல்லது

(e) அவர், ஆணையத்தின் அனுமதி பெறாமல் ஆணையத்தின்

அடுத்தடுத்த மூன்று கூட்டங்களுக்கு வராதிருப்பாராயின்; அல்லது

(f) அரசின் கருத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு கேடுவிளைவிக்கும் வகையில் பதவியில் தம்மை அந்நபர் தொடர்ந்திருக்குமாறு செய்யும் பொருட்டு, நேர்விற்கேற்ப தலைமையாளர், துணைத் தலைமையாளர் அல்லது உறுப்பினரின் பதவி நிலையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளாராயின், அரசானது தலைமையாளர், துணைத் தலைமையாளர் அல்லது உறுப்பினர் எவரின் பதவியிலிருந்தும் நபர் ஒருவரை நீக்கம் செய்தல் வேண்டும்:

வரம்புரையாக, அந்த உறுப்பினருக்கு கேட்பதற்கு நியாயமான வாய்ப்பொன்று வழங்கப்படும் வரையில், உறுப்பினர் எவரும் பதவியிலிருந்து நீக்கப்படுதல் ஆகாது.

(4) தலைமையாளர், துணைத் தலைமையாளர் மற்றும் உறுப்பினர்களுக்கென செலுத்த வேண்டிய மதிப்பூதியம் மற்றும் படித்தொகைகள் மற்றும் அவர்களின் பணிநிபந்தனைகளும் வரையறைகளும் வகுத்துரைக்கப்படலாகும். அத்தகையவாறு இருத்தல் வேண்டும்.

ஆணையத்தினால்

செயல்முறைகளை

ஒழுங்கு

முறைப்படுத்துதல்.

5. (1) ஆணையமானது, குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேவைப்படும்போது கூடுதல் வேண்டும் மற்றும் தலைமையாளர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய நேரத்திலும் இடத்திலும் கூடுதல் வேண்டும்.

(2) ஆணையம் அதன் சொந்த செயல்முறையை ஒழுங்குப்

படுத்துதல் வேண்டும்.

(3) ஆணையத்தின் அனைத்து ஆணைகளும் முடிவுகளும் உறுப்பினர் செயலாளர் அல்லது இதன் பொருட்டு உறுப்பினர் செயலாளரால் உரிய அதிகாரமளிக்கப்பட்ட ஆணையத்தின் பிற அலுவலர் எவராலும் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.

30

காலியிடங்கள்

முதலானவை

ஆணையத்தின்

நடவடிக்கைகளைச்

செல்லத்தகாததாக

ஆக்குதல் கூடாது.

6. ஆணையத்தின் செயல் அல்லது நடவடிக்கை எதுவும் பொருட்பாட்டின் தகுதிப்பாடுகளைப் பாதிக்காத நிலையில் ஆணையத்தில் காலியிடம் அல்லது அதன் அமைப்பில் குறைபாடு அல்லது தலைமையாளராக அல்லது ஓர் உறுப்பினராகச் செயல்படுகின்ற நபர் ஒருவரை நியமிப்பதில் குறைபாடு அல்லது ஒரு கூட்டத்தை நடத்துவதற்காக வழங்கப்படும் அறிவிப்பு உள்ளடங்கலாக, ஆணையத்தின் செயல்முறையில் முறைகேடு எதுவும் உள்ளது என்ற காரணத்தினால் மட்டுமே, வினவப்படுதல் அல்லது செல்லத்தகாதது ஆகாது.

ஆணையத்தின்

அலுவலர்கள் மற்றும்

பிற பணியாளர்கள்.

7. (1) அரசு, இந்தச் சட்டத்தின்படி ஆணையத்தின் அலுவற்பணிகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்குத் தேவைப்படக்கூடிய அத்தகைய எண்ணிக்கையிலான அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஆணையத்தில் வகை செய்தல் வேண்டும்.

(2) ஆணையத்தின் அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சம்பளங்களும் படித் தொகைகளும் மற்றும் பிற பணிவரையறைகளும் நிபந்தனைகளும் வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.

(3) (1)ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட அலுவலர்களும், பணியாளர்களும் தலைமையாளரின் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருதல் வேண்டும்.

அத்தியாயம்–III.

ஆணையத்தின் செயற்பணிகள்.

ஆணையத்தின்

8. ஆணையத்தின் செயற்பணிகள் பின்வருவனவாக இருத்தல்

செயற்பணிகள்.

வேண்டும்,-

(a) தன்னிச்சையாக அல்லது பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது அவரின் பொருட்டு நபரெவராலும் அளிக்கப்பட்ட மனுவின் பேரிலான புகாரினை விசாரித்தல்,-

மையச் சட்டம் 22/1955. மையச் சட்டம் 33/1989.

(i) 1955 ஆம் ஆண்டு குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1989 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் அவற்றின் படி செய்யப்பட்ட விதிகளில் வழங்கப்பட்ட உரிமைகள் எவற்றையும் மீறல் அல்லது அதற்கு உடந்தையாயிருத்தல்;

(ii) பொதுப்பணியாளர் ஒருவரால் அத்தகைய உரிமை

மீறல் தடுப்பில் கவனக்குறைவு;

(b) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்களை பாதுகாப்பது தொடர்பான அவரது கடமைகளை நிறைவேற்றுதல் குறித்து பொதுப் பணியாளர் எவரும் முழுமையான கவனக்குறைவாக அல்லது முழுமையாக அக்கறையின்றி செயல்பட்டுள்ளாரென ஆணையமானது, கருதுகிற நேர்வில் அதனை விசாரித்து மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கை தொடங்குமாறு அரசுக்கு பரிந்துரைத்தல்;

மையச் சட்டம் 22/1955.

மையச் சட்டம் 33/1989.

(c) 1955 ஆம் ஆண்டு குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1989 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் அல்லது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களிலும் தீர்மானங்களிலும் பிற ஆணைகள் எதிலும் வரையறுக்கப்பட்ட நபர் ஒருவருக்கு உரித்தான பல்வகையான காப்புக்கூறுகள் மற்றும் குடிமை உரிமைகளின் செயலாற்றத்தை மதிப்பிடுதல் மற்றும் அரசியலமைப்பின்படி அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதன் படியும்31 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக வழங்கப்பட்ட காப்புக்கூறுகள் தொடர்பான பொருட்கூறுகள் அனைத்தையும் புலனாய்வு செய்தல் மற்றும் கண்காணித்தல்;

மையச் சட்டம் 22/1955.

மையச் சட்டம் 33/1989.

(d) 1955 ஆம் ஆண்டு குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1989 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் அப்போது நடைமுறையிலுள்ள பிற சட்டங்களின் அனைத்து காப்புக் கூறுகளின் பயனுடைய செயலாக்கம் மற்றும் நிறைவேற்றத்தை உறுதி செய்யும் நோக்குடன் பரிந்துரைகள் செய்தல்;

(e) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடர்பாக ஒன்றியம் மற்றும் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகளின் செயலாக்கத்தின் மறு ஆய்வினை மேற்கொள்ளுதல்;

(f) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமைகள் மற்றும்

காப்புக்கூறுகள் மறுப்பு தொடர்பான குறிப்பிட்ட புகார்களை விசாரித்தல்;

மையச் சட்டம் 22/1955

மையச் சட்டம் 33/1989.

(g) 1955ஆம் ஆண்டு குடியியல் உரிமைகள் சட்டம் மற்றும் 1989 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் தொடர்பான கல்வியறிவினை சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கிடையே பரப்புதல் மற்றும் வெளியீடுகள், ஊடகம், கருத்தரங்குகள் மற்றும் கிடைக்கக்கூடிய வழிவகைகள் மூலம் இவ்வுரிமைகளின் பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்;

(h) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான பாகுபாட்டினை தவிர்க்கும் எழுவினாவின் மீதான ஆய்வு, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வினை மேற்கொள்ளுதல்;

(i) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடர்பாக அரசானது மேற்கொள்ள வேண்டிய தகுந்த சட்ட மற்றும் நல நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குதல்;

(j) சட்டங்களின் நிறைவேற்றமானது செயலற்றதாயிருக்கிற அல்லது நெறிப்படுத்தப்படாதிருக்கிற பகுதிகளை அடையாளம் காணும் நோக்கத்துடன் ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியினர் பெண்கள் தொடர்பாக நடைமுறையிலுள்ள சட்டங்களின் செயல்பாட்டை கண்காணித்தல் மற்றும் மேற்கொள்ள வேண்டிய செயலாட்சி அல்லது சட்ட நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்;

(k) மனித உரிமைகள் துறையில் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் செயல்படும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சிகளை ஊக்குவித்தல்;

(l) காலமுறையிலான அறிக்கைகளை வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய கால இடைவெளியில் அரசுக்கு அனுப்புதல்; மற்றும்

(m) இந்தச் சட்டம் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளினால் அதற்கு அளிக்கப்படலாகும் அல்லது விதிக்கப்படலாகும் அத்தகைய பிற செயற்பணிகளை நிறைவேற்றுதல்:

வரம்புரையாக, அரசியலமைப்பின் 338ஆம் உறுப்பின்படி நிறுவப்பட்ட ஆதிதிராவிடருக்கான தேசிய ஆணையம் அல்லது அரசியலமைப்பின் 338-Aஆம் பிரிவின்படி நிறுவப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடமிருந்து, பொருட்பாடு எதையும் மிஞ்சி கருத்துரைக்குமாயின் அத்தகைய பொருட்பாடு32 தொடர்பாக ஆணையத்தின் அதிகார வரம்பானது அற்றுப் போதல் வேண்டும் மற்றும் முரண்பாடான பரிந்துரைகளின் நேர்வில் இவ்வாணையத்தின் பரிந்துரையானது நேர்விற்கேற்ப ஆதிதிராவிடருக்கான தேசிய ஆணையம் அல்லது பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் பரிந்துரையானது மேலோங்கி நிற்கும்.

ஆணையத்தின்

அதிகாரங்கள்.

மையச் சட்டம் V/1908.

9. ஆணையமானது, 8ஆம் பிரிவின் படியான செயற்பணிகளை நிறைவேற்றுகையில், 1908ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறை தொகுப்புச் சட்டத்தின் படி, உரிமை வழக்கு ஒன்றை விசாரணை செய்யும் உரிமையியல் நீதிமன்றமொன்றின், குறிப்பாக, பின்வரும் பொருட்பாடுகள் தொடர்பான, அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-

(a) நபரெவருக்கும் அழைப்பாணை விடுத்தல் மற்றும் அவரது வருகையை கட்டாயப்படுத்துதல் மற்றும் அவரை உறுதிமொழியின் பேரில் விசாரித்தல்;

(b) ஆவணம் எதனையும் வெளிக்கொணர்ந்து முன்னிலைப்

படுத்துமாறு கோருதல்;

(c) உறுதிமொழி ஆவணங்களின் பேரில் சான்றினைப் பெறுதல்;

(d) பொதுப் பதிவுறு அல்லது அதன் நகல் எதனையும்

நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதிலிருந்தும் கோருதல்;

(e) சாட்சிகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக

பணிப்பாணைகளை பிறப்பித்தல்; மற்றும்

(f) வகுத்துரைக்கப்படலாகும் பிறப் பொருட்பாடுகள் எதுவும்.

ஆணையத்தை அரசு

கலந்தாலோசித்தல்.

10. அரசானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களை பாதிக்கும் முக்கியமான கொள்கை பொருட்பாடுகளின் பேரில் ஆணையத்தை கலந்தாலோசிக்கலாம்.

அத்தியாயம்-IV.

நிதி, கணக்குகள் மற்றும் தணிக்கை.

அரசினால் வழங்கப்படும்

மானியங்கள்.

11. (1) அரசானது, இதன் பொருட்டு சட்டத்தின் மூலம் மாநில சட்டப் பேரவையினால் தக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு, அரசு பொருத்தமெனக் கருதலாகிறவாறான அத்தகைய பணத் தொகையை மானியங்கள் மூலமாக ஆணையத்திற்கு வழங்குதல் வேண்டும்.

(2) ஆணையமானது இந்தச் சட்டத்தின்படியான செயற் பணிகளை நிறைவேற்றுவதற்காக, அது பொருத்தமெனக் கருதக்கூடிய அத்தகைய தொகைகளை மானியங்களிலிருந்து செலவு செய்யலாம், மற்றும் அத்தகைய தொகையானது 1ஆம் உட்பிரிவில் குறிக்கப்பட்ட மானியங்களிலிருந்து செலுத்தப்பட்ட செலவீனமாக கருதப்படுதல் வேண்டும்.

(3) தலைமையாளருக்கும், துணைத் தலைமையாளருக்கும் உறுப்பினர்களுக்கும் வழங்கப்படத்தக்க மதிப்பூதியமும் படித் தொகைகளும், மற்றும் உறுப்பினர் செயலாளர், அலுவலர்கள் மற்றும் ஆணையத்தின் பிற பணியாளர்களுக்கு வழங்கப்படத்தக்க சம்பளங்கள் மற்றும் படித்தொகைகள் உள்ளிட்ட நிருவாகச் செலவினங்களானவை, (1)ஆம் உட்பிரிவில் குறிக்கப்படலாகும் மானியங்களிலிருந்து வழங்கப்படுதல் வேண்டும்.

33

கணக்குகள் மற்றும்

தணிக்கைகள்.

12. (1) ஆணையத்தின் கணக்குகளானவை, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் படிவத்திலும் பேணி வரப்படுதல் வேண்டும். ஆணையமானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் ஆண்டுக் கணக்கு விவர அறிக்கையொன்றைதயாரித்தல் வேண்டும்.

(2) ஆணையத்தின் கணக்குகளானது அரசு, இதன் பொருட்டு நியமிக்கக்கூடிய அத்தகைய தணிக்கையாளரால் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படுதல் வேண்டும்.

(3) (2)ஆம் உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட தணிக்கையாளரானவர், தணிக்கையின் நோக்கங்களுக்காக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய உரிமைகள், சிறப்புரிமைகள் மற்றும் அதிகார உரிமையைக் கொண்டிருக்கும்.

(4) உறுப்பினர் செயலாளரானவர், தணிக்கை அறிக்கையை அச்சிடுவதற்கும் அதன் அச்சுப்படியை அதன் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அனுப்பி வைப்பதற்கும், அத்தகைய அறிக்கையை அதன் அடுத்தக் கூட்டத்தில், பரிசீலனைக்காக, ஆணையத்தின் முன் வைத்தல் வேண்டும்.

(5) ஆணையம், தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்படக் கூடிய குறைபாடு அல்லது முறைகேடு எதனையும் உடனே களைவதற்கு உரிய நடவடிக்கையை எடுத்தல் வேண்டும்.

(6) தணிக்கையாளரால் சான்றளிக்கப்பட்ட, ஆணையத்தின் கணக்குகள், தணிக்கை அறிக்கையுடன் சேர்த்து ஆணையம் அதன் மீது வழங்கும் குறிப்புகளுடன், வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய காலத்திற்குள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வெளியிடப்படுதல் வேண்டும்.

(7) அரசு, தணிக்கை அறிக்கையில் குறைபாடுகள் எவையேனும் தெரிவிக்கப்பட்டிருக்குமேயாயின், எழுத்து வாயிலான ஆணை மூலமாக, அந்த ஆணையில் குறித்துரைக்கப்பட்ட அத்தகைய கால அளவிற்குள், அக்குறைபாடுகளைக் களைவதற்கு அந்த ஆணையில் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய நடவடிக்கையை எடுக்குமாறு ஆணையத்தைப் பணிக்கலாம் மற்றும் ஆணையம் அத்தகைய பணிப்புரைக்கு இணங்கி நடத்தல் வேண்டும்.

ஆண்டறிக்கை 13. ஆணையம், நிதி ஆண்டு ஒவ்வொன்றிற்கும் அதன் தணிக்கை அறிக்கையில், முந்தைய நிதியாண்டின் போதான அதன் நடவடிக்கைகள் முழுவதையும் விவரமாக அளித்து, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் அத்தகைய நேரத்திலும் தயாரித்து, அரசிற்கு அதன் நகல் ஒன்றினை அனுப்புதல் வேண்டும்.

ஆண்டறிக்கையும்

தணிக்கை

அறிக்கையும்

சட்டமன்றப் பேரவை

முன்பு வைக்கப்படுதல்

வேண்டும்.

14. ஆண்டறிக்கையை, அதில் அடங்கிய பரிந்துரைகளில் அரசு தொடர்பானவற்றின் மீது எந்த அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற குறிப்புடனும் மற்றும் அந்த தணிக்கை அறிக்கையையும் சேர்த்து அந்த அறிக்கைகள் பெறப்பட்டவுடன் எவ்வளவு விரைவில் கூடுமோ, அவ்வளவு விரைவில் அந்த அறிக்கையை சட்டமன்றப் பேரவை முன்பு வைப்பதற்கு அரசு ஆவன செய்தல் வேண்டும்.

34

அத்தியாயம்-V.

பல்வகை.

ஆணையத்தின்

மையச் சட்டம் XLV/1860.

தலைமையாளர், துணைத் தலைமையாளர், உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முதலானோர் பொது ஊழியர்கள் ஆவர்.

15. இந்தச் சட்டத்தின் வகை முறைகள் எதனையும் அல்லது இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட விதி அல்லது ஆணை அல்லது பணிப்பாணை எதனையும் ஒட்டி செயல்படுகின்ற அல்லது செயல்படுவதாகப் புலப்படுகின்றபோது, ஆணையத்தின் தலைமையாளர், துணைத் தலைமையாளர், உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் பொருளின்படி, பொது ஊழியர்களாகக் கருதப்படுதல் வேண்டும்.

நல்ல எண்ணத்தில்

எடுக்கப்பட்ட

நடவடிக்கைக்குப்

பாதுகாப்பு.

16. இந்தச் சட்டம் அல்லது இதன்படி செய்யப்பட்ட, அல்லது பிறப்பிக்கப்பட்ட விதி, ஆணை அல்லது பணிப்பாணையினை ஒட்டி நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட செயல் எதற்காகவும், ஆணையத்தின் உறுப்பினர் எவருக்கும் அல்லது அலுவலர் அல்லது பிற பணியாளர் எவருக்கும் எதிராக, அல்லது அரசின் அல்லது ஆணையத்தின் பணிப்பாணையின்படிச் செயல்படுகின்ற நபர் எவருக்கும் எதிராக, உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும் தொடரப்படுதல் ஆகாது.

விதிகளைச்

செய்வதற்கான

அதிகாரம்.

17. (1) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையுமோ அல்லது அவற்றில் எவற்றையுமோ நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.

(2) குறிப்பாகவும் முன் சென்ற அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்கு ஊறின்றியும் அத்தகைய விதிகள், பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்குமோ அல்லது அவற்றில் எவற்றிற்குமோ வகை செய்யலாம்; அதாவது:-

(a) தலைமையாளர், துணைத் தலைமையாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படத்தக்க மதிப்பூதியம் மற்றும் படித்தொகைகள் மற்றும் 4 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின்படி தலைமையாளர் மற்றும் உறுப்பினர்களின் பணி பற்றிய வரையறைகளும், நிபந்தனைகளும் மற்றும் 7 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்படி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படத்தக்க ஊதியங்களும், படித்தொகைகளும்; மற்றும் பிற பணி வரையறைகளும் நிபந்தனைகளும்;

(b) 12ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின்படி கணக்குகள் எந்த படிவத்திலும் முறையிலும் மற்றும் ஆண்டு கணக்குகளின் விவர அறிக்கை எந்த படிவத்தில் தயாரிக்கப்படுதல் வேண்டும் என்பதும்;

(c) 13ஆம் பிரிவின்படி ஆண்டறிக்கை எந்தப் படிவத்தில்

மற்றும் எந்த நேரத்தில் தயாரிக்கப்படுதல் வேண்டும் என்பதும்;

(d) அரசிற்கு ஆணையத்தினால் அனுப்பப்படும் கால முறையிலான அறிக்கையின் அத்தகைய முறை மற்றும் கால இடைவெளிகள்;

(e) இந்தச் சட்டத்தின்படி வேண்டுறுத்தப்படக் கூடிய அல்லது

வகுத்துரைக்கப்படக்கூடிய பிறப் பொருட்பாடு எதுவும்.

35

(3) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்; மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்படும் தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்படும் விதிகள், அறிவிக்கைகள் அல்லது ஆணைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்டதொரு நாளில் அவை நடைமுறைக்கு வருதல் வேண்டுமென்று வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்படும் தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(4) இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதி அல்லது அறிவிக்கை அல்லது பிறப்பிக்கப்படும் ஆணை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத் தொடரோ அதை அடுத்து வரும் கூட்டத் தொடரோ முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அந்த விதியோ, அறிவிக்கையோ அல்லது ஆணையோ செய்யப்படுதலோ பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்ற பேரவை முடிவு செய்யுமாயின், அதன் பின்பு அந்த விதியோ அறிவிக்கையோ அல்லது ஆணையோ அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே செயல் வடிவம் பெறுதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப செயல் வடிவம் பெறாது போதல் வேண்டும். எனினும் அவ்வாறு மாற்றியமைப்பது அல்லது செயல் வடிவம் பெறாது போகச் செய்வது எதுவும், அந்த விதியின்படியோ அறிவிக்கையின்படியோ அல்லது ஆணையின்படியோ முன்னதாகச் செய்யப்பட்ட ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.

ஆணையத்திடம்

நபர்களால் செய்யப்பட்ட

அறிக்கைகள்.

18. ஆணையம் அல்லது 9 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட அலுவலர் அல்லது முகமை அல்லது நபரெவரின் முன் சான்று வழங்கும் போது நபரொருவரால் செய்யப்பட்ட அறிக்கை எதுவும், அத்தகைய அறிக்கையினால் பொய் சான்று வழங்கப்பட்டதற்கான சட்ட நடவடிக்கையைத் தவிர, உரிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கை எதற்கும் அவரை உள்ளாக்குதல் அல்லது அவை எதிலும் அவருக்கெதிராக பயன்படுத்துதல் ஆகாது:

வரம்புரையாக, அறிக்கையானது-

(a) ஆணையத்தினால் அல்லது அத்தகைய அலுவலர் அல்லது முகமை அல்லது அத்தகைய நபரினால் விடையளிப்பதற்காக கோரப்பட்ட வினாவிற்கான அளிக்கப்பட்ட பதில் அல்லது

(b) விசாரணையின் கீழ் உள்ள பொருட்பாடுடன் தொடர்புடையது

ஆகும்.

பிறச் சட்டங்களின்

பொருந்துகையை தடை

செய்தல் ஆகாது.

19. இந்தச் சட்டத்தில் வேறு விதமாக வகை செய்யப்பட்டவாறல்லாமல், இந்தச் சட்டங்களின் வகையங்களானது, கூடுதலாக இருக்குமேயன்றி, அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிறச் சட்டம் எதனையும் மதிப்புக்குறைவு செய்தலாகாது.

36

இடர்ப்பாடுகளை

நீக்குவதற்கான

அதிகாரம்.

20. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயல்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால், அரசு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணை ஒன்றின் மூலமாக, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு ஒவ்வாதனவாயிராத வகையில், அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையானவையென்றோ உகந்தவையென்றோ அதற்கு தோன்றுகின்ற வகைமுறைகளைச் செய்யலாம்:

வரம்புரையாக, அத்தகைய ஆணை எதுவும், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டு ஆண்டுக்கால அளவு முடிவடைந்த பின்னர் செய்யப்படுதலாகாது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட(தமிழ்ப்பிரிவு)த்துறை.

37

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 23 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 18/2021

1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின் வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும்

தொடக்கம்.

1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டு (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(தமிழ்நாடு சட்டம்

I ஆம் இணைப்புப்

பட்டியலுக்கான XIV/1955 )

திருத்தம் 2. 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டு சட்டத்தில், I ஆம் இணைப்புப்பட்டியலில், அதன் (1) ஆம் வரிசையில் 7 ஆம் உறுப்பிற்கெதிராக (2) மற்றும் (3) ஆம் வரிசைகளில் உள்ள பதிவுகளுக்காக, பின்வரும் பதிவுகளானது, முறையே, மாற்றாக அமைப்படுதல் வேண்டும், அதாவது :-

"1925 ஆம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் சான்று

இருபத்தைந்தாயிரம் ரூபாய் என்ற மேல்வரை ஒன்றுக்குட்பட்டு, வாரிசுரிமைச் சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள கடன் மற்றும் கடனீடு அல்லது கடன்கள் மற்றும் கடனீடுகளின் மொத்தத்தொகை அல்லது மதிப்பின் மீது மூன்று விழுக்காடு".

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட(தமிழ்ப்பிரிவு)த்துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 27 October 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-10-27.Ordinary_43_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-10-27.Ordinary_43_Part-IV_Section-2-T-Sup.