Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Government Notification--Tamil Translations

Published 03 November 2021

Type
Ordinary
Gazette no.
44
Part
Part II
Notifications
Housing and Urban Development--Notifications
Section
Section 2-T
Identifier
in.gazette.tamilnadu.2021-11-03.Ordinary_44_Part-II_Section-2-T
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2021

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 3.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 44] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 3, 2021 ஐப்பசி 17, சார்வாரி, திருவள்ளுவர் ஆண்டு–2052

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 106, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 6 செப்டம்பர் 2021.] தமிழ்நாடு 1971—ஆம் ஆண்டு நகர மற்றும் நாட்டுப்புறத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழே விவரிக்கப்பட்டவாறாக சியாமா பிரசாத் முகர்ஜி நகரூர் (Rurban) இயக்கத்தின் கீழ் நகரூர் தொகுப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில், சடையமங்கலம் தொகுப்பைக் குறிப்பிடுவதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.

''விவர அட்டவணை''

மாவட்டத்தின் பெயர் நகரூர்

வட்டத்தின் பெயர் வருவாய் கிராமத்தின் பெயர் மற்றும் எண் தொகுப்பின் பெயர்

(1) (2) (3)

(4)

கன்னியாகுமரி சடையமங்கலம் கல்குளம் 1. அத்திவிளை

2. சடையமங்கலம்

3. கல்குறிச்சி

4. முத்தலக்குறிச்சி

5. நுள்ளிவினை.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்களுக்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகாரி அல்லது நிறுவனம் சேர்ப்பதற்கு கருதப்பட்டுள்ளவை குறித்த ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை அரசுக்கு எழுத்துமூலமாக அளிக்கலாம். மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சோந்த (4) உட்பிரிவின் கீழ் மேற்கொண்டும் நடவடிக்கையை தொடர்வதற்கு முன்னர் மேற்சொன்ன கால அளவிற்குள் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரை கருதிப்பார்க்கப்படும் என்று இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அவற்றை, அரசு முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா,

அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர்,தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை. [ 1 ] DTP-ii-2-(44) (T Sup)—12 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (ப) எண் 277 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 2 ஜூலை 2021.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதிய பின்வரும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும், என்றும்் இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், யாதொரு நபரிடமிருந்து பெறப்படும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 14-02-2018-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் ii பிரிவு-2இல், 162 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா/140/2018 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில், கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அடுமனைகள் மற்றும் பிஸ்கெட் தயாரிப்பு தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (3) நெடும்பத்தியில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

அடுமனைகள் மற்றும் பிஸ்கெட் தயாரிப்புத்தொழிலில் பணியமர்த்தப்பட்டோர்

தொடர் எண் பணியாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)

(1) (2)

(3)

1 பொது வகைப்பாடுகள்:

1. மேலாளர்

8251.00 மாதமொன்றுக்கு 2. உதவி மேலாளர் 7836.00 மாதமொன்றுக்கு 3. காசாளர் / எழுத்தர் 7311.00 மாதமொன்றுக்கு 4. தட்டச்சர்

7311.00 மாதமொன்றுக்கு 5. விற்பனையாளர் 7311.00 மாதமொன்றுக்கு 6. பண்டக சாலை உதவியாளர் 7176.00 மாதமொன்றுக்கு 7. ஓட்டுநர்

7176.00 மாதமொன்றுக்கு 8. காவலாள் / ஏவலாள் 6826.00 மாதமொன்றுக்கு 2 ஏனைய பொது வகைப்பாடுகள்:

உயரளவு பயிற்சி பெற்றோர்:

1 அடுமனை மேலாள் 275.50 நாளொன்றுக்கு 2. ஏதேனும் பிற உயரளவு பயிற்சி பெற்ற வகையினர்3 தொடர் எண் பணியாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ((ரூ. காசு)

(1) (2)

(3)

பயிற்சி பெற்றோர்:

1. மேற்பார்வையாளர் 259.00 நாளொன்றுக்கு 2. தலைமை அடுமனையாளர்

3. மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய யாதொரு பயிற்சி பெற்ற வகையினர்

ஓரளவு பயிற்சி பெற்றோர்:

1. அடுமனையாளர் 244.50 நாளொன்றுக்கு 2. அடுப்பை பராமரிப்பவர்

3. மேசைப்பணியாளர்

4. மாவு தயாரிப்பவர்

5. பன்னை வட்டமாக்குபவர்

6. ரொட்டி வார்ப்பவர்

7. மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய யாதொரு ஓரளவு பயிற்சி பெற்ற வகையினர்

பயிற்சி பெற்றோர்:

1. உதவி அடுமனையாளர் 228.00 நாளொன்றுக்கு 2. உதவி செய்பவர் / உதவியாளர்கள்

3. அனைத்து வகையைச் சேர்ந்த தூய்மை செய்பவர்

4. அனைத்து வகையைச் சேர்ந்த உதவியாளர்

5. மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய யாதொரு பிற பயிற்சி பெறாத வகையினர்

விளக்கங்கள்:—(1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும், நாளொன்றுக்கு ரூ. 1.40 (ஒரு ரூபாய் நாற்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) (i) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.

(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள் இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

இரா. கிர்லோஷ்குமார், அரசு செயலாளர்.

(தமிழாக்கம்)ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை. 4 [அரசாணை (ப) எண் 331 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 30 ஜூலை 2021.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதிய பின்வரும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும், என்றும் இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், யாதொரு நபரிடமிருந்து பெறப்படும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரையை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 03-01-2018-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் ii-பிரிவு-2-இல், 11 மற்றும் 12 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா/13/2018 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில், கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தோங்காய் உரித்தல் பணியில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளார் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (3) நெடும்பத்தியில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

தேங்காய் உரித்தல் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண் பணிகளின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (1) (2)

(3)

1. தேங்காய் உரித்தல்:

(i) காலத்திற்கேற்ற ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 288.00 (ii) செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் 1000 தேங்காய்களுக்கு ரூ. 364.56 2. மரம் ஏறுதல் மற்றும் தேங்காய் பறித்தல்:

(i) காலத்திற்கேற்ற ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 288.00 (ii) செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் மரம் ஒன்றிற்கு ரூ. 5.11 3. தேங்காய்களை தரம் பிரித்தல்

(i) காலத்திற்கேற்ற ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 241.00 (ii) செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் 1000 தேங்காய்களுக்கு ரூ. 38.28 4. தேங்காய்களை ஏற்றி இறக்குதல் 1000 தேங்காய்களுக்கு ரூ. 364.56 5. பயிற்சி பெறாத தொழிலாளர்கள் நாளொன்றுக்கு ரூ. 234.50 6. மரங்களை சுத்தப்படுத்துதல், உரமிடுதல் மற்றும் மரம் ஒன்றுக்கு ரூ. 12.15 பூச்சிக்கொல்லியிடுதல்

விளக்கங்கள்: (1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய விதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், நாள் ஒன்றுக்கு ரூ.1.45 (ஒரு ரூபாய் நாற்பத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில்) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து முதல் கணக்கீடு, செயலுக்கு வரும்.

5

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

இரா. கிர்லோஷ்குமார், அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (ப) எண் 364 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 16 ஆகஸ்ட் 2021.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதிய பின்வரும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும், என்றும் இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், யாதொரு நபரிடமிருந்து பெறப்படும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவுவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 07-03-2018-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் ii-பிரிவு-2-இல், 252 மற்றும் 253 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா/215/2018 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாட்டு மாநிலத்தில், கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அரிசி ஆலை, மாவு ஆலை அல்லது பருப்பு ஆலையில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளார் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (3) நெடும்பத்தியில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

யாதொரு அரிசி ஆலை, மாவு ஆலை மற்றும் பருப்பு ஆலையில் வேலைவாய்ப்பு

தொடர் எண் தொழிலாளர்களின் வகைகள் நாளொன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்

(ரூ. காசு.)

(1) (2)

(3)

1 ஹமாலிஸ் (மூட்டை சுமந்து செல்பவர்கள்) 270.50

2 மூட்டையை எடையிடும் கட்டா மஸ்தூர் 267.00

3 மூட்டையை தைப்பவர்கள்

267.00

4 உமியை சுமந்து செல்பவர்கள் 261.00

5 பல்வகைத் தொழிலாளர்கள் உட்பட மஸ்தூர்கள் 261.00

6 அரிசியை சுமந்து செல்பவர்கள் 261.007 இஞ்சின் ஓட்டுநர் 279.00 8 மின்கம்மியர் 279.00 9 தீயணைப்பவர் 262.00 10 பொருத்துனர் 267.00 6 தொடர் எண் தொழிலாளர்களின் வகைகள் நாளொன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு.)

(1) (2)

(3)

11 உமிநீக்குபவர்

262.00

12 மேஸ்திரிகள்

270.50

13 இயந்திர கம்மியர்

270.50

14 எண்ணெய் இடுபவர்

261.00

15 நெல் கொதிகலன் பணியாளர் 267.00

16 நெல் இயந்திர ஓட்டுநர்கள்

261.00

17 நெல் அரைவையாளர்கள்

261.00

18 பெருக்குபவர்கள்

261.00

19 தோடு நீக்குபவர்

261.00

20 புடைப்பவர்

261.00

21 நெல் ஊறவைப்பவர்

261.00

22 நீரை எடுத்துச்செல்பவர்

261.00

23 காவலாள்

261.00

24 அரிசியை மெருகேற்றும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள மஸ்தூர் 261.00

25 அரிசியை அளப்பவர்

262.00

26 தானியம் அரைப்பதற்கு பணியமர்த்தப்பட்டுள்ள மஸ்தூர் 261.00

27 பருப்பு உற்பத்தியாளர்கள்

261.00

28 சுமைதூக்குபவர்

261.00

29 ஏவலாள்

261.00

30 தச்சர்கள்

267.00

31 வறுகடலைத்தொழிலாளர்கள்

270.50

32 எழுத்தர்

7632.00 திங்களொன்றுக்கு 33 துணையாள்

7363.00 திங்களொன்றுக்கு விளக்கங்கள்:—(1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், நாளொன்றுக்கு ரூ. 1.60 (ஒரு ரூபாய் அறுபது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில்) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) (i) நாட்கூலி ஊதிய வீதங்களிலும் மற்றும் அகவிலைப்படியிலும் விடுமுறை ஊதியங்களும் அடங்கும்.

(ii) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(iii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

இரா. கிர்லோஷ்குமார், அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை. தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 03 November 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-11-03.Ordinary_44_Part-II_Section-2-T/. Archive identifier in.gazette.tamilnadu.2021-11-03.Ordinary_44_Part-II_Section-2-T.