[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2021
[விலை : ரூ. 4.80 காசு[விலை : ரூ. 4.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 45] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 10, 2021 ஐப்பசி 24, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழில் துறைதொழில் துறை
அறிவிக்கைகள்அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண் 205, தொழில் (MMD.1)த் துறை, 25 ஆகஸ்ட் 2021.]
1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடும் முறைப்படுத்தலும்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 67/1957) 23-(C) ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு 2011 ஆம் ஆண்டு கனிமங்களை சட்டவிரோதமாக வெட்டியெடுத்தல், கொண்டு செல்லுதல் மற்றும் இருப்பு வைத்தலை தடுத்தல் மற்றும் கனிம வணிகர்கள் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளன்றிலிருந்து செயலுக்கு வரும்.
திருத்தங்கள்திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்,
(1) விதி 2 இல்,
(i) பகுதி (iii)க்குப் பின்னர், பின்வரும் பகுதி சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்; அதாவது:
(iii-a) "சிசிடிவி" என்பது, ஒரு சுற்று மூட்டத் தொலைக்காட்சி அமைப்பு ஆகும். இது, கனிமங்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதை கண்காணிப்பதற்காக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காமிராக்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணினி திரைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
(ii) பகுதி (iv)க்குப் பின்னர், பின்வரும் பகுதி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்; அதாவது:
(iv-a) "கட்டுப்பாட்டு அறை" என்பது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட அறையாகும். இங்கு மாவட்ட ஆட்சியரால் போதுமான கணினி திரைகளுக்கும் பணியாளர்களுக்கும் வகை செய்யப்பட்டு, 24 மணி நேரமும் சிசிடிவி காமிராக்கள் கண்காணிக்கப்படுகின்றன.
(2) விதி 9க்குப் பின்னர், பின்வரும் விதி சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்; அதாவது:
"9"9A கண்காணிப்பு காமிராக்களை (சிசிடிவி காமிரா) நிறுவுதல்,-
(1) மாவட்ட ஆட்சியர், மாவட்ட எல்லைகளில் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில், அவசியமென கருதுவாராயின் அவர், எழுத்துப்பூர்வமான ஆணையின் பேரில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருடன் கலந்தாலோசித்து, யாதொரு இடத்திலும் கண்காணிப்பு காமிராக்களை (சிசிடிவி காமிரா) நிறுவலாம்.
III-1a-(45) (T Sup)—1
[ 1 ]2 (2) கண்காணிப்பு காமிராவில் (சிசிடிவி) இருந்து ஒளிக்காட்சிகளை நேரலையாக ஒளிபரப்புவதற்காக, மாவட்ட ஆட்சியர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பெற்ற ஏனைய யாதொரு அலுவலரால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறை ஒன்றை நிறுவுவதன் வாயிலாக, நிறுவப்பட்ட அத்தகைய அனைத்து கண்காணிப்பு காமிரா (சிசிடிவி) பிரிவுகளும் கண்காணிக்கப்படும்.
(3) கட்டுப்பாட்டு அறைக்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர்கள், ஒளிப்படக் காட்சிகளை கண்காணித்து, கனிமங்களின் போக்குவரத்து ஏதேனுமிருப்பின் அவற்றைக் கண்காணிக்க வேண்டும். கனிமங்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக கண்டறியப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட அத்தகைய அனைத்து இனங்களிலும் கட்டுப்பாட்டு அறைக்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர்கள் அத்தகைய நிகழ்வு குறித்து சட்டத்தின் 21ஆம் பிரிவின் உட்பிரிவு (4) மற்றும் 24ஆம் பிரிவின் கீழ் உடனடி நடவடிக்கை எடுப்பதற்காகவும் எதிர்கால குறிப்புக்கு பதிவு செய்வதற்காகவும் செயலாக்க அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். நேரலை வாயிலாக பெறப்பட்ட அனைத்து தரவுகளும், எதிர்கால குறிப்பிற்காக முதன்மைக் கணினியில் (சர்வரில்) சேமிக்கப்பட வேண்டும்.
(4) செயலாக்க அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, ஒருமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் பெறப்பட்ட இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அளிப்பார்.
(5) மாவட்ட ஆட்சியர், ஒருமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்படும் ஒரு கட்டுரமிக்க வாடிக்கையாளர் சேவை மையத்தை ஏற்படுத்த வேண்டும்.
என். முருகானந்தம், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண் 213, தொழில் (எம்.எம்.சி.1)த், துறை, 3 செப்டம்பர் 2021.]
1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்படுத்தலும் முறைப்படுத்தலும்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 67/1957) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (1), 1(A) ஆகிய உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1959 ஆம் ஆண்டு சிறு கனிமச் சலுகை விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.
அவையாவன:-
திருத்தங்கள்திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளின்,-
(1) விதி 43 க்குப் பின்னர், பின்வரும் விதி 44 சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-
44. வேளாண் நிலங்களை செம்மைப்படுத்துவதற்காக மண் அகற்றுதல் (1) "44. வேளாண் நிலங்களை செம்மைப்படுத்துவதற்காக மண் அகற்றுதல் (1)
விதி 18 மற்றும் விதி 19இன் துணை விதி (2) இல் என்ன சொல்லியிருப்பினும், நேர்விற்கேற்ப, புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரால் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநரால் குறிப்பிடப்படும் நில அமைப்பு நிலை அடிப்படையில் உரிய ஆழத்திற்கு, வேளாண்மைக்கு பொருந்தாத / வேளாண் நிலங்கள் அல்லது நிலங்களை செம்மைப்படுத்துவதற்காக, ரயத்வாரி நிலங்களில் ஒன்றரை மீட்டருக்கு மிகாமல் பணியாட்களைப் பயன்படுத்தி மண் அகழ்தல் அல்லது மண் அகற்றுவது சுரங்கத் தொழில் செயல்பாடுகளாக கருதப்படமாட்டாது:
ஆனால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரால் மூன்று மாதங்களுக்கு மேற்படாத கால அளவிற்கு வழங்கப்பட்ட அனுமதியின் கீழ், அத்தகைய மண் அகழ்வு பணி மேற்கொள்ளப்பட வேண்டும்:
மேலும், கரிம உரங்களை/இயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் பல ஆண்டுகளாக தொடர்ந்து சாகுபடி மேற்கொள்ளப்படுகின்ற மற்றும் மண்ணின் சத்துக்கள் குறைந்து மகசூல் குறைகின்ற போதும், மண்ணின் தரத்தை அல்லது நிலங்களின் வளத்தை செம்மைபடுத்துவதற்கு நிலத்தின் மேற் பரப்பிலிருந்து சுமார் ஒரு அடி ஆழம் வரையில் தோண்டியெடுக்கப்பட்ட மண் பயன்படுத்தப்படலாம் / இடப்படலாம்.;
3மேலும், ஒன்றரை மீட்டர் ஆழத்திற்கு மிகாமல் ஒரு அடி ஆழத்திற்கு அகழ்வுசெய்யப்பட்ட அல்லது அகற்றப்பட்ட மண், செங்கல் சூளைகளுக்கும், பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் சீர்குலைந்த மண் அடுக்கமைவை சரிசெய்து மீண்டும் தாவரங்களை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படலாம்.
மேலும், அகற்றப்பட்ட செம்மண் பதிவு பெற்ற செங்கல் சூளை பிரிவுக்கு கொண்டு செல்லப்படுமாயின், அனுமதி பெற்றவர், இந்த விதிகளின் பிற்சேர்க்கை - II-இல் நிர்ணயிக்கப்பட்ட வீதத்தில் அனுமதிக்கப்பட்ட பகுதியிலிருந்து அகற்றப்பட்ட செம்மண் அளவிற்கு, உரிய உரிமைக் கட்டணங்களை/கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மேலும், அனுமதி பெற்றவர் அவரது சொந்த நிலத்தை செம்மைப்படுத்துவதற்கு அல்லது ஏனைய யாதொரு நோக்கத்திற்காக அவ்வாறு அகற்றப்பட்ட மண்ணை சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்:
மேலும், அனுமதி பெற்றவர், அனுமதி காலம் முடிவடைந்த பின்னர் மண்ணை அகற்றக்கூடாது.
(2) வேளாண் நிலத்தை மேம்படுத்துவதற்கு, நிலத்தின் உரிமையாளர், மண்ணை அகற்றுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இந்த நோக்கத்திற்கான, விண்ணப்பம் ஒன்று, மண் அகற்றுவதற்கான திட்ட வரைபடத்துடன் பிற்சேர்க்கை- XXV- இல் வரையறுக்கப்பட்ட படிவத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட வேண்டும்.
(3) மண்ணை அகற்றுவதற்கான திட்ட வரைபடத்தில் பின்வரும் விவரங்கள் இடம்பெற வேண்டும், அதாவது:
(i) நிலத்தின் தன்மை மற்றும் பரப்பளவைக் காட்டும் பகுதி:
(ii) மண் அகழாய்விற்கு கருதப்பட்ட நிலத்தின் அளவும், கால அளவும்:
(iii) நிலம் அகழ்ந்த பின்னர், சாகுபடிக்கு ஏற்றவாறாக நிலத்தை ஆக்குவதற்கான செயற்குறிப்பு என வேளாண் இணை இயக்குநரிடமிருந்து பெறப்பட்ட ஒரு சான்றிதழ்.
(4) அத்தகைய ஒவ்வொரு விண்ணப்பத்துடன், நூறு ரூபாய் விண்ணப்பக் கட்டணத்துடன் கணினிமயமாக்கப்பட்ட சி்ட்டா நகல் அல்லது கிராமக் கணக்குகளின் பகுதி நகலுடன் விண்ணப்பதாரரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அண்மைகால விற்பனை பத்திர நகல் இணைக்கப்பட வேண்டும்.
(5) மாவட்ட ஆட்சியர், ரயத்வாரி நிலங்களில் மண் அகற்றுவதற்காக மறுப்புரைகள் ஏதேனுமிருப்பின், அதனை ஆராய்ந்து விண்ணப்பத்தை ஒரு வகை செய்யவேண்டும். மண் அகழ்வதற்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர், விண்ணப்பிக்கப்பட்ட நில பட்டாவின் உண்மைத் தன்மையை உறுதிசெய்வதற்கும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட யாதொரு அரசு நிலம் அல்லது அரசு நலன் சார்ந்த நிலத்தின் கீழ் வராத நிலம் என்பதை உறுதி செய்வதற்கும். அதிகார வரம்பிற்குட்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடமிருந்து தடையில்லா சான்றிதழை அவர் பெற வேண்டும். மாவட்ட ஆட்சியர் பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேற்படாத கால அளவிற்கு இந்த விதியின் கீழ் அனுமதி வழங்கலாம். அவையாவன:
(i) அருகிலுள்ள நில உரிமையாளர்களின் நலனைப் பாதிக்காமல் மண் அகழ்தல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ii) கிராம சாலை மற்றும் வண்டி பாதையில் இருந்து 10 மீட்டர் தொலைவிற்குள்ளும், நெடுஞ்சாலைகள், இரயில் பாதைகள், ஆறு, நீர்த்தேக்கம், ஏரிகள் மறறும் ஏனைய யாதொரு நிரந்தர கட்டமைப்புகளிலிருந்தும் 50 மீட்டர் தொலைவிற்குள்ளும் மண் அகழ்தல் கூடாது.
மாவட்ட ஆட்சியர், சட்டத்தின் விதித்துறைகள் மற்றும் இந்த விதிகள் அல்லது வழிகாட்டுகுறிப்புகளின் படி, வரையறை நிபந்தனைகளை அனுமதியில் குறிப்பிட வேண்டும்.
(6) நேர்விற்கேற்ப புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநர், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பகுதியை ஆய்வு செய்து, அனுமதிக்கத்தக்க உரிய நிலஅமைப்பு நிலை அடிப்படையில், ஒன்றரை மீட்டர் ஆழத்திற்கு மிகாமல், உரிய ஆழம் மற்றும் மண்ணை அகழ்வு அளவினை முடிவு செய்வார். புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரால் அனுமதிக்கப்பட்ட ஆய்வகங்களில் உரிய பரிசோதனைக்குப் பின்னர், அகற்றப்பட வேண்டிய பொருள், மணல் அல்லது சரளைக்கல் அல்ல என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் உறுதி செய்வார். இந்த விதியின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு அனுமதியும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநரால் இந்த நோக்கத்திற்காக வைத்துவரப்படும் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.
(7) அனுமதி பெற்றவர், தமிழ்நாடு 2017 ஆம் ஆண்டு மாவட்ட கனிம அடிப்படை விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வீதத்தில் மாவட்ட கனிம நிறுவன அறக்கட்டளை நிதியகத்திற்கும் பங்களிப்பு தொகையை வழங்குவார்.
(8) இந்த விதிகளின் பிற்சேர்க்கை-XXVI இல் வரையறுக்கப்பட்டவாறாக, புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநரால் வழங்கப்பட்ட போக்குவரத்து சீட்டுடன், அகழ்வு செய்யப்பட்ட செம்மண் செங்கல் தயாரிப்பு அலகுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
(9) இந்த விதியின் கீழ் வழங்கப்படும் அனுமதி ஒரு முறை பயன்படுத்தப்படக்கூடிய அனுமதியாகும். மேலும், எந்த காரணத்திற்காகவும் மீண்டும் செல்லுபடியாக்கப்படாது.
4(10) அரசால் அவ்வப்போது குறிப்பிடப்படும் "மலைப் பகுதிகள்" என்பதன் கீழ் வரும் பகுதியிலிருந்தும் வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களிலிருந்து 10 கிலோ மீட்டருக்குள் வரும் பாதுகாக்கப்பட்ட, பகுதிகள் என்பதன் கீழ் வரும் பகுதியிலிருந்தும் யானை நடமாடும் வழித்தடங்களிலும் மண் அகழ்வதற்கு இந்த விதியின் கீழ் அனுமதி வழங்கப்பட மாட்டாது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
(11) அனுமதிக்கப்பட்ட ஆழத்தில் மண் அகழ்வின்போது, மணல் அல்லது சரளைக்கல் போன்று மண் தவிர வேறு யாதொரு கனிமம் கண்டறியப்படுமாயின், அனுமதி பெற்றவர், உடனடியாக மண் அகழ்தல் பணியை நிறுத்திவிட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அது குறித்து தெரிவிக்க வேண்டும்.
(12) சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அறிக்கை கிடைக்கப்பட்டதன் பேரில் அல்லது மண் தவிர மணல் அல்லது சரளைக்கல் போன்ற யாதொரு கனிமங்கள் கண்டறியப்பட்டிருப்பின் மண் அகழ்வதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
(13) அனுமதி நிபந்தனைகள் ஏதேனும் மீறப்படுமாயின், சட்டத்தின் விதித்துறைகள் மற்றும் இந்த விதிகளின் கீழ், அனுமதி பெற்றவர் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும்.
(14) அனுமதி பெற்றவர், அனுமதி நிபந்தனைகளை மீறும் நேர்வில், அத்தகைய மீறல் தொடர்பாக விதிக்கப்படக்கூடிய ஏனைய யாதொரு தண்டத்தொகைக்கு பாதகமின்றி மாவட்ட ஆட்சியர், அனுமதி பெற்றவருக்குக் விளக்கம் அளிக்கும் வாய்ப்பை அளித்த பின்னர், அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
(15) மாவட்ட ஆட்சியரின் ஆணையரால் பாதிக்கப்பட்ட யாதொரு நபர், அந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரிடம் அந்த ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
(16) கனிமங்களை சட்டவிரோதமாக வெட்டியெடுப்பதையும் / கொண்டு செல்வதையும் தடுப்பதற்காக அரசு ஏற்படுத்திய மாவட்ட அளவிலான பணிக்குழு, இந்த விதியின் கீழ் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணக்கமாக செயல்படுவதை உறுதி செய்வதற்கு, அனுமதிகள் வழங்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்கும்.
(2) பிற்சேர்க்கை-XXIV -க்குப் பின்னர், பின்வரும் பின் இணைப்புகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அவையாவன:
"பிற்சேர்க்கை-பிற்சேர்க்கை-XXV"XXV"
[44(2) ஆம் விதியைக் காண்க]
நில உரிமையாளர் மண் அகழ்வதற்கு குறுகிய காலத்திற்கு அனுமதி கோரும் விண்ணப்பம்
அனுப்புநர்
பெறுநர்
மாவட்ட ஆட்சியர்,
............................
ஐயா,
நான்/நாங்கள் தமிழ்நாடு 1959ஆம் ஆண்டு சிறு கனிம சலுகை விதிகளின் 44 ஆம் விதியின் கீழ், இந்த விண்ணப்பத்தை அளிக்கிறேன்/அளிக்கிறோம்.
2. நான்/நாங்கள் என்னுடைய/ எங்களுடைய பட்டா நிலங்களிலிருந்து மண் அகழ்வதற்கு குறுகிய காலத்திற்கு அனுமதி வழங்குமாறு கோருகிறேன் / கோருகிறோம்.
3. தேவையான விவரங்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளன :
1. விண்ணப்பதாரரின் பெயர் முழு முகவரியுடன் :
2. விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியதற்கான : செலுத்துச் சீட்டு விவரங்கள்.
3. விண்ணப்பதாரர், அனைத்து சுரங்கத் தொழில் நிலுவைத் தொகைகளையும் அரசுக்கு செலுத்தியுள்ளார் என குறிப்பிடுகின்ற உறுதிமொழிப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளாரா?
:
4. குறுகிய கால அனுமதிகோரி விண்ணப்பித்த பகுதியின் அமைவிடம் :
5| வட்டம் | கிராமம் | நில அளவை புல எண் | பரப்பளவு (ஹெக்டேரில்) |
5. விண்ணப்பதாரருக்கு கருதப்பட்ட நிலத்தின் மீது முழு உடைமையுரிமை / உரிமை உள்ளதா? (கணினிமயமாக்கப்பட்ட சிட்டா நகல்கள் இணைக்கப்பட வேண்டும்)
:
6. விண்ணப்பிக்கப்பட்ட கால அளவு :
7. விண்ணப்பித்த அளவு (க.மீ.) க்கு :
8. இணைக்கப்பட வேண்டிய அகழ்வு திட்ட வரைபடம். :
9. அரசால் அவ்வப்போது குறிப்பிடப்படும் "மலைப் பகுதிகள்" என்பதன் கீழ் அல்லது வனவிலங்கு சரணாலயங்களிலிருந்து அல்லது தேசிய பூங்காக்களிலிருந்து அல்லது யானை நடமாடும் வழித்தடங்களிலிருந்து 10 கிலோ மீட்டருக்குள் வரும் பகுதியில் கருதப்பட்ட நிலம் வரவில்லை என்பதற்கான உறுதிமொழி :
10. மண் அகழ்வதன் நோக்கம் மற்றும் அகற்றும் முறை :
11. அளிக்கப்பட்ட மண் அகழ்தல் திட்டவரைபடத்தின் படி, விண்ணப்பதாரர் ஒன்றரை மீட்டருக்கு மிகையாக மண் அகழமாட்டார் என்பதற்கான உறுதிமொழி. :
நான் / நாங்கள், மேலே அளிக்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை என்றும், இதனால் உறுதியளிக்கிறேன். மாவட்ட ஆட்சியர் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநரால் / உதவி இயக்குநரால் கேட்டுகொள்ளப்பட்ட ஏனைய யாதொரு விவரங்களையும் அளிப்பதற்கு நான் / நாங்கள் தயாராக உள்ளேன் / உள்ளோம் என்று இதனால் உறுதியளிக்கிறேன் / உறுதியளிக்கிறோம்.
இடம் :
நாள் :
தங்கள் உண்மையுள்ள
(விண்ணப்பதாரரின் கையொப்பம்)
"பிற்சேர்க்கை-பிற்சேர்க்கை-XXV"XXV"
[44(8) ஆம் விதியைக் காண்க]
செம்மண்ணுக்கான போக்குவரத்துச் சீட்டு :
(1) தொடர் எண்
:
(2) அனுமதி பெற்றவரின் பெயரும் முகவரியும் :
(3) சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரால் வழங்கபட்ட குறுகிய கால அனுமதி வழங்கப்பட்ட ஆணை எண் மற்றும் நாள் :
(4) குறுகிய கால அனுமதியின் செல்திறன் கால அளவு : ............. முதல்
............. வரை
(5) அகழ்வதற்கான மனையின் அமைவிடம்
:
| வட்டம் | கிராமம் | நில அளவை புல எண் | பரப்பளவு (ஹெக்டேரில்) |
(6) வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழின் விவரங்கள் :
6(7) மாவட்ட வன அலுவலரால் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழின் விவரங்கள் :
(8) கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட செம்மண் அளவு :
(9) செம்மண் கொண்டு செல்லப்படுகின்ற செங்கல் சூளையின் அமைவிடமும் முகவரியும் :
(a) போக்குவரத்து முறை :
(b) சரக்குந்து / டிராக்டர் பதிவெண் :
(10) போக்குவரத்து வழித்தடம் மற்றும் இலக்கை சென்றடையும் தோராயமான தொலைவு.
(11) (a) மண் அகழ்ந்த இடத்திலிருந்து வாகனம் புறப்பட்ட நாளும் நேரமும் :
(b) போக்குவரத்து எதிர்பார்க்கப்படும் தோராயமான நேரம்
(c) செம்மண் கொண்டுச் செல்லும் வாகன ஓட்டுநரின் கையொப்பம் (மண் அகழ்வு நடைபெறும் இடத்திலிருந்து வாகனம் வெளியேறும் முன் கையொப்பமிட வேண்டும்)
| குறுகிய காலத்திற்கு அனுமதி பெற்றவரின் கையொப்பம் முத்திரையுடன் அல்லது மண் அகழ்வு நடைபெறும் இடத்தில் போக்குவரத்து சீட்டு வழங்கும் அதிகாரமளிக்கப்பட்ட நபரின் கையொப்பம். | புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரின் / புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநரின் அலுவலக முத்திரையுடன் கூடிய கையொப்பம் மற்றும் நாள் . |
நிபந்தனைகள்.
(1) இந்த போக்குவரத்து சீட்டு, செம்மண்ணை பதிவுபெற்ற செங்கல் சூளை பிரிவுகளுக்கு கொண்டுச் செல்வதற்கு மட்டுமே கருதப்படுகிறது.
(2) இந்த போக்குவரத்து சீட்டு மாற்றத்தக்கதல்ல.
(3) இந்த போக்குவரத்து சீட்டு மீண்டும் செல்திறனாக்க இயலாது.
(4) இந்த போக்குவரத்து சீட்டின் நகல், அகழ்வு நடைபெறும் இடத்தில் குறுகிய காலத்திற்கு அனுமதி பெற்றவர் அல்லது இது தொடர்பாக அவரால் அதிகாரமளிக்கபட்ட நபர் வைத்திருக்க வேண்டும்.
(5) வாகன ஒட்டுநர் போக்குவரத்து சீட்டை வைத்திருக்க வேண்டும். செம்மண் கொண்டு செல்லப்படும் வாகனத்தை சோதனையிடும் யாதொரு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரிடம் போக்குவரத்துச் சீட்டு காண்பிக்கப்பட வேண்டும்.
என். முருகானந்தம், என். முருகானந்தம்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
[அரசாணை (நிலை) எண் 117, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (K2)த் துறை, 3 செப்டம்பர் 2021.] 1966 ஆம் ஆண்டு பீடி மற்றும் சுருட்டுத் தயாரிக்கும் தொழிலாளர்கள் சட்டத்தின் (வேலைவாய்ப்பு நிலைமைகள்) (மத்தியச் சட்டம் 32/1966) 44 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு 1968 ஆம் ஆண்டு பீடி மற்றும் சுருட்டுத் தயாரிக்கும் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு நிலைமைகள்) விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். மேற்சொன்ன சட்டத்தின் 44 ஆம் பிரிவைச் சேர்ந்த (3) ஆம் உட்பிரிவில் கோரியுள்ளவாறு இதன் வரைவு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளின்,-
(1) 26 ஆம் விதியில், துணை விதி (2) விட்டுவிடப்பட வேண்டும்:
(2) விதி 28 விட்டுவிடப்பட வேண்டும்:
(3) 36 ஆம் விதியில்,-
(i) துணை விதி (1)க்கு பதிலாக பின்வரும் துணை விதி அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அவையாவன:-
7(1) (a) வேலையளிப்பவர் ஒவ்வொருவரும் கீழ்காணும் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும்:
(i) படிவம் XIX–இல் பணியாளர் பதிவேடு ஒன்று.
(ii) படிவம் XX–இல் வேலைவாய்ப்புப் பதிவேடு ஒன்று.
(iii) படிவம் XXI–இல் ஊதியங்களுக்கான பதிவேடு ஒன்று.
(iv) படிவம் XXII–இல் விடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பயன்கள் பதிவேடு ஒன்று.
(b) பகுதி (a) இல் குறிப்பிடப்பட்ட பதிவேடுகள் மின்னணு வடிவில் அல்லது கையேடு வடிவில் பராமரிக்கப்படவேண்டும்.
(c) பகுதி (a) இல் குறிப்பிடப்பட்ட பதிவேடுகள் மின்னணு வடிவில் பராமரிக்கப்படும் போது, பதிவேட்டின் நெடும்பத்திகளின் பிரிவு, தொடர் எண் மற்றும் பொருளடக்கங்களின் முழுமை மாறாமல் பதிவேடுகளின் வடிவமைப்பு மற்றும் அளிக்கும் முறை பின்பற்றப்படலாம்.
(ii) துணை விதி 2A-இல்,-
(a) பகுதி (ii) விட்டுவிடப்பட வேண்டும்;
(b) பகுதி (iii)-க்கு பதிலாக பின்வரும் பகுதி அமைத்துக் கொள்ளப்படவேண்டும்,
அவையாவன:-
''(iii) பணியாளர் ஒருவர் தன்னுடைய பணிப்பதிவேட்டினை தொலைத்திருப்பாராயின், அவர் ரூ.10 செலுத்துவதன் பேரில், அதற்கான விண்ணப்பம் அவரிடமிருந்து பெறப்பட்ட நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் பணிப்பதிவேட்டின் மற்றொரு நகலை வேலையளிப்பவர் அவருக்கு அளிப்பதுடன், படிவம் XIX- இல் பணியாளர் பதிவேட்டிலிருந்து அந்நகலில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். பணிப்பதிவேட்டில் ஒட்டப்பட வேண்டிய பணியாளரின் புகைப்படத்துக்கான செலவுத்தொகை, வேலையளிப்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
(c) துணை விதிகள் (3) மற்றும் (5) விட்டுவிடப்பட வேண்டும்.
(4) ''V'', ''VI'', ''VII'', ''XIII'', ''XIV-B'', "XV"- மற்றும் "XVI"ஆம் எண் படிவங்கள் விட்டுவிடப்பட வேண்டும்.
(5) படிவம் எண் XVIII-க்கு பின்னர், பின்வரும் படிவங்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-
8| குறிப்புரைகள் | 28 | ||
| பணியிலிருந்து வெளியேற்றத்திற்கான காரணம் | 27 | ||
| பணியிலிருந்து வெளியேறிய நாள் | 26 | ||
| மாதிரி கையொப்பம்/பெருவிரல் கைரேகை | 25 | ||
| அலைபேசி எண் | 24 | ||
| புகைப்படம் | 23 | ||
| வங்கி கணக்கு எண் வங்கியின் பெயர், கிளை (IFSC) | 22 | ||
| பணி இடைநீக்கம் கால அளவு (ஏதேனுமிருப்பின்) | 21 | ||
| பணி நிரந்தரம் செய்யப்பட்ட நாள் | 20 | ||
| பணியில் சேர்ந்து 480 நாட்கள் நிறைவடையும் நாள் | 19 | ||
| பணப்பதிவேடு வழங்குதல் | இரண்டாம்படி வழங்கப்பட்ட நாள் இரண்டாம் படிக்கான விண்ணப்பம் பெறப்பட்ட நாள் மற்றும் | 18 | |
| நாள் மற்றும் திருப்பியளிக்கப்பட்ட நாள் பதிவுகளை மேற்கொள்வதற்காக பணிப்பதிவேடு பெறப்பட்ட | 17 | ||
| பணியாளருக்கு வழங்கப்பட்ட நாள் | 16 | ||
| ஆதார் எண் | 15 | ||
| ESIC எண் | 14 | ||
| பணியாளரின் வருங்கால வைப்பு நிதி எண் | 13 | ||
| நிரந்தர முகவரி | 12 | ||
| தற்போதைய முகவரி | 11 | ||
| தொழிலகப் பணியாளர் / வீட்டிலிருந்தே பணிப்புரிவோர் | 10 | ||
| பதவிப் பெயர் | 9 | ||
| பயிற்சி பெற்றோர்/பயிற்சி பெறாதோர்) வகை (உயரளவு பயிற்சி பெற்றோர் / பயிற்சி பெற்றோர் / ஓரளவு | 8 | ||
| பணியில் சேர்ந்த நாள் | 7 | ||
| பிறந்த நாள் | 6 | ||
| தந்தை / கணவன் / மனைவி பெயர் | 5 | ||
| பாலினம் | 4 | ||
| பணியாளர் அடையாள எண் | 3 | ||
| பணியாளரின் பெயர் | 2 | ||
| தொடர் எண் | 1 | ||
| குறிப்புரைகள் | 12 | ||
| (**) பண்டிகை விடுமுறையில் வேலை செய்ததற்காக பெறப்பட்ட ஆதாயம் | 11 | ||
| தேசிய விடுமுறையில் வேலை செய்ததற்காக பெறப்பட்ட ஆதாயம் (**) | 10 | ||
| ஊதியமில்லா விடுப்பெடுத்த மொத்த நாட்கள் | 9 | ||
| வேலை செய்த மொத்த நேரங்கள் | 8 | ||
| வேலை செய்த மொத்த நாட்கள் | 7 | ||
| செய்யப்பட்டபீடி / சுருட்டுகளின் எண்ணிக்கை. மிகைப்பணி நேரம் உட்பட நாள்தோறும் வேலை செய்த நேரங்கள் (ஏதேனுமிருப்பின்)* வீட்டிலிருந்து பணிபுரிவோர் குறித்த நேர்வில் உற்பத்தி | 31 | 6 | |
| 30 | |||
| 29 | |||
| 28 | |||
| 27 | |||
| 26 | |||
| 25 | |||
| 24 | |||
| 23 | |||
| 22 | |||
| 21 | |||
| 20 | |||
| 19 | |||
| 18 | |||
| 17 | |||
| 16 | |||
| 15 | |||
| 14 | |||
| 13 | |||
| 12 | |||
| 11 | |||
| 10 | |||
| 9 | |||
| 8 | |||
| 7 | |||
| 6 | |||
| 5 | |||
| 4 | |||
| 3 | |||
| 2 | |||
| 1 | |||
| வேலை முடிவடையும் நேரம் | 5 | ||
| ஓய்வு இடைவேளை | 4 | ||
| வேலையை தொடங்கும் நேரம் | 3 | ||
| பணியாளரின் பெயர் | 2 | ||
| பணியாளரின் பதிவேட்டில் தொடர் எண் | 1 |
| 5 | |
| 4 | |
| 3 | |
| 2 | |
| 1 |
:
ள் க டு யீ றி கு
பு ப்
டு வி
ய டி
ற ை மு டு வி
க் க க் ரு சு
பு ப்
கூ
பு ப்
பு ப் ல
ா
டு வி
ன்
ய டி
பு ப்
ற ை மு டு வி
டு வி
டு வி
று ண்
ர
ற ை மு டு வி
டு வி
தி
வ ே
க க் க ை டி
ய் ச ெ
ட து த் ய தி
ப ே ப் க ம ண்
ந் ா ர ா
ப
ய சி த ே
ஊ
வ து த் ரு ம
ய டி ட் ஈ
வ
டு ஈ
- -
-
-
-
- –
–
L
ட ப ப் த த் டு
H
ப
W H
L B M
H S
P S H F
H N
L E M
ன் ய ப
*
க
:
க
ா
ா
க
ா
,
க க்
ல்
ளு
னி ள் க டு யீ றி கு
க ற் த த ய் ச ெ
க ற் த த ய் ச ெ
எ
க ட் ா ந
ணி
ப
ல ை வ ே
க் க க் ரு சு
பு ப்
று ன் அ ய டி
ற ை மு டு வி
ல ை ல் யி தி கு த
ள் டு வி ண்
ல் தி த் ய தி
ா
ா ந வ ே
ஊ
ற ப ெ
ம் க க் நீ ட ை யி
ம் ய தி ல ல் மி ய தி
ட ட் ப ப் க க் தி ம
ட ை ட் ர
ற ை மு டு வி ஊ ட ப ப் த த் டு
ஊ
இ
ணி ப
ப
-
-
னு அ
-
-
'
-
-
E
/
/ ன் ய ப
/ P O L
H
D W
H W * *
N
'11
| குறிப்புரைகள் | 30 | |||
| எண் / நாள் பணியாளரின் இரசீது / வங்கி பரிவர்த்தனை | 29 | |||
| மற்றும் வழங்கப்பட்ட தொகை கணக்கிடப்பட்ட பிழைப்பூதியப் படியின் விகிதம் | 28 | |||
| செலுத்தப்படாத திரண்ட தொகை | 27 | |||
| தொகை வழங்கிய நாள் | 26 | |||
| நிகர ஊதியம் | 25 | |||
| பிடித்தங்கள் | மொத்த பிடித்தங்கள் | 24 | ||
| ஏனைய யாதொரு பிடித்தங்கள் | 23 | |||
| சேதங்கள் /அபராதங்கள் | வேண்டிய தொகை நிலுவையிலுள்ள வசூலிக்கப்பட | 22 | ||
| அபராதங்கள் வகையில் பிடித்தம் சேதங்கள், இழப்புகள் அல்லது | 21 | |||
| தொகை நிலுவையிலிருந்த பிடித்தம் செய்ய வேண்டிய மாதத்தின் தொடக்கத்தில் வசூலிக்காமல் | 20 | |||
| வகையில் விதிக்கப்பட்ட பிடித்தம் சேதங்கள், இழப்புகள் அல்லது அபராதங்கள் | 19 | |||
| முன்பணங்கள் | வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை | 18 | ||
| வசூலிக்கப்பட்ட முன்பணம் | 17 | |||
| நிலுவையிலிருந்த முன்பணம் மாத தொடக்கத்தில் வசூலிக்காமல் | 16 | |||
| வழங்கப்பட்ட முன்பணம் | 15 | |||
| சம்பளமில்லா நாட்கள் | 14 | |||
| தொழிலாளர் நல நிதி | 13 | |||
| பணியாளர்களின் மாநில காப்புறுதி | 12 | |||
| வருங்கால வைப்பு நிதி | 11 | |||
| மொத்த ஊதியங்கள் | 10 | |||
| விடுப்பு ஊதியங்கள் | 9 | |||
| மிகைப்பணி நேர ஊதியங்கள் | 8 | |||
| ஏனைய படிகள் (தன்மையை குறிப்பிடவும்) | 7 | |||
| வீட்டு வாடகைப்படி | 6 | |||
| அகவிலைப்படி | 5 | |||
| அடிப்படை ஊதியம் | 4 | |||
| பணி செய்த மொத்த நாட்கள் | 3 | |||
| பணியாளரின் பெயர் | 2 | |||
| பணியாளர் பதிவேட்டில் தொடர் எண் | 1 |
| வீட்டிலிருந்து பணிபுரிவோர் | ||
| தொழிலக வளாகம் | இளையவர் | |
| உரிய வயதடைந்தோர் | ||
| எண்ணிக்கை பணியாளர்களின் |
| பயன்கள் பணிக்கொடை | வழங்கப்பட்ட தொகை குறித்த நேர்வில் பணிக்கொடையாக பணியாளரின் வெளியேற்றம் அல்லது இறப்பு | 20 | |
| குறிப்பீடு பெறப்பட்டதா பணியாளரிடமிருந்து நியமன பெயர்க் | 19 | ||
| மகப்பேறு பயன்கள் | பிரிவின் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுப்பு தொகை சட்டத்தின் 9 அல்லது 10 ஆம் 1961 ஆம் ஆண்டு மருத்துவ ஊக்கத் | 18 | |
| தொகை மற்றும் வழங்கப்பட்ட நாள் மருத்துவ ஊக்கத் தொகையாக வழங்கப்பட்ட | 17 | ||
| வழங்கப்பட்ட நாள் உதவித் தொகை மற்றும் தொகை அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மகப்பேறு | 16 | ||
| வழங்கப்பட்ட நாள் மகப்பேறு உதவித் தொகை மற்றும் தொகை அடிப்படையில் முன்னதாகவே வழங்கப்பட்ட மகப்பேறினை எதிர்ப்பார்த்து அதன் | 15 | ||
| அளிக்கப்பட்ட நாள் கருவுற்ற நிலை / பிரசவம் குறித்த அறிவிப்பு | 14 | ||
| ஏனைய விடுப்பு | மாதத்தின் முடிவில் நிலுவையிலிருந்த விடுப்பு | 13 | |
| அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு | 12 | ||
| மாதத்தின் தொடக்கத்திலிருந்த விடுப்பு | 11 | ||
| மருத்துவ விடுப்பு | மாதத்தின் முடிவில் நிலுவையிலிருந்த விடுப்பு | 10 | |
| அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு | 9 | ||
| மாதத்தின் தொடக்கத்திலிருந்த விடுப்பு | 8 | ||
| ஈட்டிய விடுப்பு | விடுப்பு மாதத்தின் இறுதியில் நிலுவையிலிருந்த | 7 | |
| அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு | 6 | ||
| அந்த கால அளவில் ஈட்டிய விடுப்பு | 5 | ||
| மாதத்தின் தொடக்கத்திலிருந்த விடுப்பு | 4 | ||
| பணிபுரிவோர் தொழிலகப் பணியாளர் / வீட்டிலிருந்து | 3 | ||
| பணியாளரின் பெயர் | 2 | ||
| பணியாளர் பதிவேட்டில் தொடர் எண் | 1 |