Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances

Published 10 November 2021

Type
Ordinary
Gazette no.
45
Part
Part IV
Notifications
Tamil Nadu Act Nos. 19 of 2021 to 21 of 2021
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-11-10.Ordinary_45_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2021 [விலை : ரூ. 2.40 காசுவிலை : ரூ. 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 45] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 10, 2021 ஐப்பசி 24, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 19/2021.

1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தினை மேலும் 1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தினை மேலும்

திருத்தம் செய்வதற்கானதொரு திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம் . .

இந்தியக் குடியரசின் எழுபத்து இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டமானது, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்

மற்றும் வழங்கல் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) 2ஆம் பிரிவின் உட்பிரிவு (1) மற்றும் (4) மற்றும் 4ஆம் பிரிவானது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும் மற்றும் மீதமுள்ள பிரிவுகள் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

12 ஆம் பிரிவிற்கான 2. (இதன் பின்பு, இதில் முதன்மைச் சட்டம் எனக்குறிப்பிடப்படுவதான)

திருத்தம்.

1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தின், 12 ஆம் பிரிவில்,-

தமிழ்நாடு சட்டம் xx/1951

(1) (2-A) ஆம் உட்பிரிவானது, விட்டுவிடப்படுதல் வேண்டும்.

(2) (2-AA) எனும் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

[1]

IV-2(45)(T-Sup)-12 "(2AA) சட்டமன்றப் பேரவை உறுப்பினர் எவரும் அவருடைய பதவிக்காலம் முடியும் முன்னரே இறக்கிறவிடத்து, அவரது குடும்பத்திற்கு ஒட்டுமொத்த படித்தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படுதல் வேண்டும்.".

(3) (2-B) ஆம் உட்பிரிவிற்காக, அதன் கீழுள்ள விளக்கம் நீங்கலாக,

பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2-B). (2-AA) ஆம் உட்பிரிவின்படி வழங்கப்படலாகும் ஒட்டுமொத்த படித்தொகையானது குடும்ப உறுப்பினர்களுக்கு சமப் பங்காக வழங்கப்படுதல் வேண்டும்.".

(4) (4-A) ஆம் உட்பிரிவில், (a) எனும் கூறிற்கு பின்பு, பின்வரும்

வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"வரம்புரையாக, குளிரூட்டப்பட்ட படுக்கை வசதியுடைய பேருந்துகளாக இருக்கும் நேர்வில், அத்தகைய உறுப்பினரின் வாழ்க்கைத்துணை அல்லது உடனிருப்பவருக்கு இருக்கை வசதி மட்டுமே வழங்கப்படுதல் வேண்டும்.".

12-B ஆம்

3. முதன்மைச் சட்டத்தின் 12-B ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில்-

பிரிவிற்கான

"இருபதாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "இருபத்தைந்தாயிரம்

திருத்தம்.

ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

12-C ஆம்

4. முதன்மைச் சட்டத்தின் 12-C ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்கு பின்பு,

பிரிவிற்கான பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல் ண்ேடும், அதாவது:-

திருத்தம்.

"வரம்புரையாக, குளிரூட்டப்பட்ட படுக்கை வசதியுடைய பேருந்துகளாக இருக்கும் நேர்வில், அத்தகைய உறுப்பினரின் வாழ்க்கைத்துணை அல்லது உடனிருப்பவருக்கு இருக்கை வசதி மட்டுமே வழங்கப்படுதல் வேண்டும்.".

செல்லுந்தன்மை. 5. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2020 ஏப்ரல் 1 ஆம் நாளன்று தொடங்குகின்ற காலத்தின் போது மற்றும் இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட தேதி வரையிலும் ஒட்டுமொத்த படித்தொகை அல்லது ஓய்வூதியம் வழங்குவதற்காக, முதன்மைச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்லது செய்யப்பட்ட செயல் அனைத்தும் அத்தகைய செயல் அல்லது நடவடிக்கையை செய்யப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட அனைத்து நேரிய காலங்களிலும் இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டமானது செயல்முறையில் இருந்ததைப் போன்று அச்சட்டத்திற்கிணங்க செல்லத்தக்கதாக செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிகுமார்,

அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

3

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 28 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 20/2021.

1955ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்்கள் மற்றும் உரிமை வழக்குகள்

மதிப்பீட்டுச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின் வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு

மற்றும் தொடக்கம்.

1. (1) இந்தச் சட்டம், 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் (இரண்டாம் திருத்த) சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) இது, மாநில அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும்

அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

2. 1955ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை

XIV/1955

வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தின், IIஆம் இணைப்புப் பட்டியலில்,

II-ஆம் இணைப்புப் ப ட் டி ய லு க் க ா ன திருத்தம்.

(1) (1) ஆம் பத்தி நிரலில் 3 ஆம் உறுப்பில், அதன் (2) ஆம் பத்தி நிரலில் (ii) ஆம் இனத்திற்கு எதிராக உள்ள (3) ஆம் பத்தி நிரலில் "இரண்டாயிரம் ரூபாய்" என்ற உள்ளீட்டிற்காக, "ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்" என்ற உள்ளீடானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(2) (1) ஆம் பத்தி நிரலில் 11 ஆம் உறுப்பில், அதன் (2) ஆம் பத்தி நிரலில் (r) என்ற கூறிற்கு எதிராக உள்ள (3) ஆம் பத்தி நிரலில் "ஆயிரம் ரூபாய்" என்ற உள்ளீட்டிற்காக, "எழுநூற்று ஐம்பது ரூபாய்" என்ற உள்ளீடானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிகுமார்,

அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

4 5

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 21/2021.

குறுந்தலைப்பு 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம்

மற்றும் தொடக்கம்.

கையகப்படுத்துதல் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு கையகப்படுத்துதல் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

23-A-ஆம் 10/1999

2. 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 23-A-ஆம் பிரிவில், (1) ஆம் கூறானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

பிரிவிற்கானத் திருத்தம்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிகுமார்,

அரசுச் செயலாளர் ( சட்டமியற்றல்)

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 10 November 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-11-10.Ordinary_45_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-11-10.Ordinary_45_Part-IV_Section-2-T-Sup.