Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances

Published 01 December 2021

Type
Ordinary
Gazette no.
48
Part
Part IV
Notifications
Tamil Nadu Act No. 22 of 2021, 23 of 2021, 24 of 2021
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2021-12-01.Ordinary_48_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2021 [விலை : ரூ. 4.00 காசுவிலை : ரூ. 4.00 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 48] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 1, 2021 கார்த்திகை 15, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 22/2021.

1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நலநிதியச் சட்டத்தை மேலும் 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நலநிதியச் சட்டத்தை மேலும்

திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம். திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நலநிதிய குறுந்தலைப்பு (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

மற்றும்

தொடக்கம்.

(2) இது, மாநில அரசால், அறிவிக்கை வாயிலாக குறிக்கலாகும் அத்தகைய

தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

2. 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதியச் சட்டத்தின் 15

தமிழ்நாடு

15-ஆம் சட்டம்

பிரிவிற்கானத் ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்காக பின்வரும் உட்பிரிவானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

36/1972.

திருத்தம்.

(1) ஒவ்வொரு பணியாளரும் ஆண்டொன்றுக்கு ஐம்பது ரூபாய்க்கு மிகாமல் அவ்வப்போது நிர்ணயிக்கப்படலாகும் ஒரு தொகையினை நிதியத்திற்கு பங்களித்தல் வேண்டும் மற்றும் ஒவ்வொரு பணியமர்த்துநரும் அத்தகைய ஒவ்வொரு பணியாளரைப் பொருத்தும் ஆண்டொன்றுக்கு நூறு ரூபாய்க்கு மிகாமல் அவ்வப்போது நிர்ணயிக்கப்படலாகும் ஒரு தொகையினை நிதியத்திற்கு பங்களித்தல் வேண்டும் மற்றும் அரசானது அத்தகைய ஒவ்வொரு பணியாளரைப் பொருத்தும் ஆண்டொன்றுக்கு ஐம்பது ரூபாய்க்கு மிகாமல் அவ்வப்போது நிர்ணயிக்கப்படலாகும் ஒரு தொகையினை நிதியத்திற்கு பங்களித்தல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிகுமார்,

அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

[1]

IV-2(48)(T-Sup)-12 3 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 23/2021.

1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு

பல்கலைக்கழகம், சென்னை சட்டத்தினைபல்கலைக்கழகம், சென்னை சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்

மற்றும் பல்கலைக்கழகம், சென்னை (இரண்டாம் திருத்தச்) சட்டம் என வழங்கப் பெறும்.

தொடக்கம்.

(2) இது, 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 26 ஆம் நாள் அன்று நடைமுறைக்கு வந்து விட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

67 ஆம் 2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டமென வழங்கப் பெறுவதான) 1987 37/1987.

பிரிவின் ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்,

திருத்தம்.

சென்னைச் சட்டத்தின் 67 ஆம் பிரிவில், (4) ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

(4A) இந்தச் சட்டம் 2013 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகச் தமிழ்நாடு சட்டம்

சட்டத்தின்படி நடைமுறையில் இருக்கும் அல்லது இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட 20/2013

நிலை விதிகள், துணை முறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் உள்ளடங்கிய எது எவ்வாறிருப்பினும், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 26 ஆம் நாளுக்கு முன்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த அல்லது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல், பல் மருத்துவ அல்லது செவிலியர் பயிற்சியின் தேர்வுகள் எதையும் எழுத தகுதியுடைய நபர் ஒவ்வொருவரும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தன் குறித்தகால படிப்பினை முடிக்க அனுமதிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் குறித்தகால படிப்பிற்கிணங்க தமிழ்நாடு டாக்டர்.

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தினால் தீர்மானிக்கப்படலாகும், அத்தகைய மாணவர்களுக்கு, அத்தகைய கால அளவிற்கு மற்றும் அத்தகைய முறையில் அறிவுறுத்தல், கற்பித்தல் மற்றும் பயிற்றுவித்தலுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னையானது, செய்தல் வேண்டும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு அத்தகைய மாணவர்கள் அத்தகைய காலத்தின் போது அனுமதிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொடர்புடைய, பட்டம், பட்டயம் அல்லது பிற கல்விச் சிறப்புகளானவை அத்தகைய தேர்வுகளின் முடிவில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுதல் வேண்டும்.

இணைப்புப்

பட்டிய

லுக்கான 3. முதன்மைச் சட்டத்தின் இணைப்புப் பட்டியலில்.- (1) I மருத்துவக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகள் என்ற தலைப்பின்கீழ்,

திருத்தம்.

8. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு என்ற உள்ளீட்டிற்குப் பிறகு பின்வரும் உள்ளீடானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:- 9. இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, அண்ணாமலை நகர், சிதம்பரம்.

4

(2) III. அரசு பல்மருத்துவக் கல்லூரி-, என்ற தலைப்பின்கீழ், சென்னை பல் மருத்துவக்கல்லூரி, சென்னை என்ற உள்ளீட்டிற்காக, பின்வரும் உள்ளீடுகளானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். அதாவது:-

1. சென்னை பல் மருத்துவக் கல்லூரி, சென்னை.

2. இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை,அண்ணாமலை நகர், சிதம்பரம்;

(3) V. அரசு செவிலியர் கல்லூரி-என்ற தலைப்பின் கீழ், சென்னை மருத்துவக்கல்லூரி, சென்னை என்ற உள்ளீட்டிற்காக, பின்வரும் உள்ளீடுகளானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

1. சென்னை மருத்துவக்கல்லூரி, சென்னை.

2. இராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி, அண்ணாமலை நகர், சிதம்பரம்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிகுமார்,

அரசு செயலாளர் (சட்டமியற்றல்),

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

5

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 24/2021.

குறித்த சில இயற்றுச் சட்டகுறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு களை நீக்கறவு செசெய்வதற்கானதொரு சட்டம்ய்வதற்கானதொரு சட்டம்

இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் வழக்கத்திலிருந்தவை

அல்லது மற்றபடி வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற அல்லது குறித்த வகையில்

மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன் மூலம் தவிர பிறவாறு நடைமுறையில்

இருக்கக்கூடியது அற்றுப்போகக் கூடியவையாக இருப்பவை கட்டாயமாக நீக்கறவு

செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதாலும்;

இந்தியக் குடியரசின் எழுபத்து இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்

பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு.

1. இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்டம் என்று

வழங்கப்பெறும்.

குறித்த சில 2. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் ஈங்கிதனால்

இயற்றுச் நீக்கறவு செய்யப்பட்டுள்ளது.

சட்டங்களின்

நீக்கறவு.

3. இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படும் இயற்றுச் சட்டம் எதுவும் பிற காப்புரைகள்.

இயற்றுச் சட்டம் எதனையும் பாதிக்காது. அதில் நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச் சட்டம்

பயன்படுத்தப்பட்டிருக்கிற போதும் சேர்க்கப்பட்டிருக்கிற போதும் அல்லது சுட்டப்படும் போதும்;

மற்றும் இந்தச் சட்டம் செல்லுந்தன்மையையோ, செல்லாத் தன்மையையோ அல்லது

செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும் அல்லது

பாதிக்கப்பட்டதை அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையோ

அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டினை அதிகப்படியானதையோ அல்லது

ஏற்படுத்தப்பட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும் அல்லது தொடர்பான நடைமுறையை

அல்லது பற்று எதனலிருந்தும் அல்லது பற்றினை விடுவிப்பதை, தண்டம், உதவியையோ,

கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ

அல்லது நிரூபிக்கப்படும் கடந்தகால செயல் அல்லது விசயம் எதனையும் பாதிக்காது;

கொள்கை எதனையும் அல்லது சட்டத்தின் ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட

அதிகாரவரம்பை அல்லது அமைவுமுறையையோ அல்லது வாதுரையின் போதோ,

வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும் பழக்கவழக்கத்தையோ,

வழக்காற்றையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அலுவலகத்தையோ

அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும் அவை முறையே எந்த முறையிலும்

ஈங்கிதனால் இயற்றுச் சட்டத்தில் அல்லது இயற்றுச் சட்டம் எதிலிருந்தும் எந்த முறையிலும்

உறுதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதன்மூலம்

பெறப்பட்டிருக்கலாம் என்றிருக்கிற எதுவும் பாதிக்காத வகையில் இருக்கும்;

இயற்றுச் சட்டம் எதுவும் புத்துயிரளித்தல் அல்லது அதிகாரவரம்பு எதனையும்

மீட்டெடுத்தல், அலுவலகம், பழக்கவழக்கம், பொறுப்பு, உரிமை, உரிமை மூலம், சலுகை, தடை,

விலக்கு, பயன்படுத்துதல், செய்தொழில், நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது

தற்பொழுது இல்லாமல் இருக்கும் பொருள் அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச் சட்டத்தால்

நீக்கறவு செய்யப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகாது.

6

இணைப்புப் பட்டியல்

நீக்கறவுகள்

வரிசை எண் ஆண்டு எண் குறுந்தலைப்பு
(1) (2) (3) (4)
குடியரசுத் தலைவரின் சட்டம்.
1. 1976 2 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
மையச் சட்டம்.
2. 1858 I 1858-ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டாய தொழிலாளர் சட்டம்.
தமிழ்நாடு சட்டங்கள்.
3. 1866 II 1866-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை நோய் சட்டம்.
4. 1953 XIX 1953-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (திருத்தச்) சட்டம்.
5. 1954 XXVII 1954-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் (திருத்தச்) சட்டம்.
6. 1958 XX 1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு எடைகள் மற்றும் அளவைகள் (நடைமுறைப்படுத்துதல்) சட்டம்.
7. 1959 14 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) திருத்தச் சட்டம்.
8. 1959 32 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மேம்பாடு (நிலம் கையகப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
9. 1960 3 1960-ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) திருத்தச் சட்டம்.
10. 1960 8 1960-ஆம் ஆண்டு குற்றாலம் நகரியம் (வரிகள் மற்றும் நூலக மேல்வரி செல்லுந்தன்மையாகுதல்) சட்டம்.
11. 1961 19 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு வக்ஃபு (துணைச்) சட்டம்.
12. 1961 37 1961-ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் (திருத்தச்) சட்டம்.
13. 1962 6 1962-ஆம் ஆண்டு தமிழ்நாடு பந்தய வரி (திருத்தச்) சட்டம்.
14. 1963 7 1963-ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிகப் பயிர்கள் சந்தைகள் (மேல்வரி செல்லுபடியாகுதல்) சட்டம்.
15. 1963 18 1963 -ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்டக் காவல் (திருத்தச்) சட்டம்.
16. 1964 19 1964-ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டாய தொழிலாளர் (திருத்தச்) சட்டம்.
17. 1964 23 1964-ஆம் ஆண்டு தமிழ்நாடு மகப்பேறு பலன் (நீக்கறவுச்) சட்டம்.
18. 1964 37 1964-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரிச் (சிறப்பு வகைமுறைகள்) சட்டம்.
19. 1965 7 1965-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரித் (திருத்தச்) சட்டம்.
20. 1965 20 1965-ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள் (குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு) திருத்தச் சட்டம்.
21. 1965 21 1965-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைகள் (திருத்தச்) சட்டம்.
22. 1965 27 1965-ஆம் ஆண்டு தமிழ்நாடு உந்து வண்டித் திரவக விற்பனை வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
23. 1965 28 1965-ஆம் ஆண்டு தமிழ்நாடு உந்து வண்டித் திரவக விற்பனை வரிவிதிப்பு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
24. 1965 30 1965-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
25. 1965 36 1965-ஆம் ஆண்டு குதிரைச்சயம் மற்றும் குதிரைத் தொற்று நோய் (தமிழ்நாடு திருத்த) சட்டம்.
26. 1966 3 1966-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
27. 1966 8 1966-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (திருத்தச்) சட்டம்.
28. 1966 18 1966-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
29. 1967 5 1967-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
30. 1967 11 1967-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
31. 1967 18 1967-ஆம் ஆண்டு தமிழ்நாடு உந்து வண்டி திரவக விற்பனை வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
32. 1967 19 1967-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
33. 1968 2 1968-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
34. 1968 7 1968-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
35. 1968 12 1968-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
36. 1968 17 1968-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு நில அடைமான வங்கிகள்(திருத்தச்) சட்டம்.
37. 1969 2 1969-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
38. 1969 3 1969-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
39. 1969 14 1969-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு நில அடைமான வங்கிகள் (திருத்தச்) சட்டம்.
40. 1969 20 1969-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
41. 1970 2 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
42. 1970 3 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு உந்துவண்டி திரவக விற்பனை வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
43. 1970 4 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு நில மேம்பாடு வங்கிகள் (திருத்தச்) சட்டம்.
44. 1970 12 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு உந்துவண்டி திரவக விற்பனை வரிவிதிப்பு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
45. 1970 13 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
46. 1970 19 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
47. 1970 20 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள் (குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாட்டு) திருத்தச் சட்டம்.
48. 1970 23 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
49. 1970 26 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
50. 1970 27 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்) சட்டம்.
51. 1971 7 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
52. 1971 13 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
53. 1971 25 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
54. 1971 35 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்) சட்டம்.
55. 1971 44 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு பந்தயம் மற்றும் கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
56. 1971 45 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
57. 1971 46 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை (தகுதியிழப்பு தடுத்தல்) திருத்தச் சட்டம்.
58. 1971 47 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
59. 1972 8 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு உந்துவண்டி திரவக விற்பனை வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
60. 1972 9 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு பந்தய வரி (திருத்தச்) சட்டம்.
61. 1972 11 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
62. 1972 19 1972-ஆம் ஆண்டு பொது வக்ஃபு (கால வரம்பினை நீட்டித்தல்) தமிழ்நாடு திருத்தச் சட்டம்.
63. 1972 31 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
64. 1973 3 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு பந்தய வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
65. 1973 9 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம்.
66. 1973 16 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
67. 1973 21 1973-ஆம் ஆண்டு பொது வக்ஃபு (கால வரம்பினை நீட்டித்தல்) தமிழ்நாடு திருத்தச் சட்டம்.
68. 1973 26 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு உந்துவண்டி திரவக விற்பனை வரிவிதிப்பு மற்றும் கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
69. 1973 28 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
70. 1973 39 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
71. 1973 40 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
72. 1974 1 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
73. 1974 23 1974-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
74. 1974 24 1974-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
75. 1974 35 1974-ஆம் ஆண்டு தமிழ்நாடு உந்துவண்டி திரவக விற்பனை வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
76. 1974 36 1974-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
77. 1974 37 1974-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
78. 1974 43 1974-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
79. 1975 45 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி மற்றும் விற்பனை வரி (மேல்வரி) திருத்தச் சட்டம்.
80. 1981 7 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி சட்டங்கள் (திருத்தம் மற்றும் நீக்கறவு) சட்டம்.
81. 1986 35 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
82. 1989 21 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
83. 1993 23 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
84. 1996 31 1996-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
85. 1998 23 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
86. 1999 37 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
87. 2001 13 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
88. 2002 23 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
89. 2005 14 2005-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
7 8

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிகுமார்,

அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

9

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

சட்ட எண் 25/2021.

1947-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவன1947-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் ங்கள் சட்டத்தை மேலும்சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள்

(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

22-A எனும் தமிழ்நாடுச் சட்டம் XXXVI/1947.

2. 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் 22 ஆம் பிரிவுக்கு பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

புதிய பிரிவினை உட்புகுத்துதல்.

"22-A. இருக்கை வசதிகள்.- அனைத்து வேலையாட்களும் தங்களது வேலையின் போது நேரிடும் அமரும் வாய்ப்பு எதையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்காகவும் வேலை நேரம் முழுவதும் அவர்கள் 'நின்றுகொண்டே இருக்கும்' நிலைமையை இதனால் தவிர்க்கலாம் என்பதற்காகவும் அவர்களுக்கான தகுந்த இருக்கை ஏற்பாடுகளை ஒவ்வொரு நிறுவனத்தின் வளாகங்களும் கொண்டிருத்தல் வேண்டும்."

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிகுமார்,

அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 01 December 2021. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2021-12-01.Ordinary_48_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2021-12-01.Ordinary_48_Part-IV_Section-2-T-Sup.