© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2021 [விலை : ரூ. 8.00 காசுவிலை : ரூ. 8.00 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 49] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 8, 2021 கார்த்திகை 22, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 26/2021.
2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு.
1. இந்த சட்டம், 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும்
நிறுவனங்கள் (திருத்தம்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
தமிழ்நாடு சட்டம்
3ம் பிரிவிற்கு 27/2018.
மாற்றான பிரிவு.
2. (இதன் பின்பு இதில் திருத்தச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2018- ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் 3-ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
தமிழ்நாடு சட்டம்
27/2018.
"3. கடைகள் மற்றும் நிறுவனங்களைப் பதிவு செய்தல்:- (1) 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்தும் மற்றும் அது முதற்கொண்டும் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வேலையாட்கள் பணிபுரிகின்ற ஒவ்வொரு நிறுவனத்தின் பணிக்கு அமர்த்துநர், தன்னுடைய வணிகம் தொடங்கிய தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் பதிவிற்காக விண்ணப்பித்து பதிவுச் சான்றிதழைப் பெறுதல் வேண்டும்.
(2) (1)–ஆம் உட்பிரிவின்படி பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய படிவம் மற்றும் அத்தகைய முறையில் இருத்தல் வேண்டும்.
(3) (2)-ஆம் உட்பிரிவின்படி ஆய்வாளர், விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதன் பேரில் நிறுவனங்களைப் பதிவு செய்தல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கலாகிற அத்தகைய படிவத்தில் பணி அமர்த்துநருக்கு இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் பதிவுச் சான்றிதழை வழங்குதல் வேண்டும். அவ்வாறு ஆய்வாளரால் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட தேதியிலிருந்து இருபத்தி நான்கு மணி நேர கால அளவிற்குள் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்றிதழானது வழங்கப்பட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
IV-2(49)(T-Sup)-1
[1]2 (4) ஆய்வாளர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில்,
நிறுவனங்களின் பதிவேட்டை பராமரித்தல் வேண்டும்.
(5) பதிவுச் சான்றிதழானது, பணி அமர்த்துநரால் நிறுவனத்தில்
முக்கியமான இடத்தில் காட்சிக்கு வைக்கப்படுதல் வேண்டும்.
(6) பணி அமர்த்துநர், (2) ஆம் உட்பிரிவின்படி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் எதிலும் செய்த மாற்றம் எதையும் அத்தகைய மாற்றம் செய்ததிலிருந்து முப்பது நாட்கள் காலத்திற்குள் ஆய்வாளருக்கு தகவல் அளித்தல் வேண்டும். ஆய்வாளர் அத்தகைய தகவலைப் பெற்றுக் கொண்டதன் பேரில் பதிவுச் சான்றிதழை திருத்தம் செய்தல் வேண்டும் அல்லது புதிய பதிவுச் சான்றிதழை வழங்குதல் வேண்டும்.
(7) பணி அமர்த்துநர், நிறுவனம் மூடப்பட்ட முப்பது நாட்கள் கால அளவிற்குள் அத்தகைய மூடப்பட்ட தகவலை ஆய்வாளருக்கு தெரிவித்தல் வேண்டும் மற்றும் அத்தகைய தகவலைப் பெற்றுக் கொண்டதன் பேரில், அவர் பதிவுச் சான்றிதழை ரத்து செய்தல் வேண்டும்.
வரம்புரையாக, நிறுவனம் மூடப்பட்ட அத்தகைய தகவலை பெற்றுக் கொண்டதல்லாது, பிறவாறு ஆய்வாளர் மனநிறைவடைகிறவிடத்து அவர் அத்தகைய பதிவுச் சான்றிதழை ரத்து செய்தல் வேண்டும்.
மேலும் வரம்புரையாக, பணி அமர்த்துநருக்கு முறையிடுவதற்கான ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலன்றி முதலாம் வரம்புரையின் கீழ் ரத்து செய்யப்படுதல் கூடாது.
தமிழ்நாடு சட்டம்
27/2018.
(8) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியன்று பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வேலையாட்கள் பணிபுரிகின்ற தற்போதுள்ள நிறுவனத்தின் பணி அமர்த்துநர் வகுத்துரைக்கலாகிறவாறான அத்தகைய படிவத்தில் தானே செய்யப்பட்ட விளம்புகையுடன் நிறுவனத்தின் விவரங்களை 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து ஓர் ஆண்டிற்குள் ஆய்வாளருக்கு அளித்தல் வேண்டும். ஆய்வாளர் பணி அமர்த்துநரால் அளிக்கப்பட்ட தகவலை நிறுவனத்தின் பதிவேட்டில் பதிவு செய்த பின்பு பதிவுச் சான்றிதழ் வழங்கப்படுதல் வேண்டும்.".
6-ஆம் பிரிவிற்கான
3. திருத்தச் சட்டத்தின் 6 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது மாற்றாக
மாற்றீடு.
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"6. முதன்மைச் சட்டத்தின் 45 ஆம் பிரிவில் "பிரிவுகள் 7 முதல் 11 வரை, 13 முதல் 23 வரை, 25, 26, 29 முதல் 41 வரை மற்றும் 47" எனும் சொற்றொடருக்காக "பிரிவுகள் 3, 7 முதல் 11 வரை, 13 முதல் 23 வரை, 25, 26, 29 முதல் 41 வரை, 47, 47-A மற்றும் 50-A" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்."
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
3தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு
அக்டோபர் திங்கள் 4 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 27/2021.
2017ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம். வரிச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்
இந்தியக் குடியரசின் எழுபத்து இரண்டாம் ஆண்டில், தமிழ்நாடு மாநில
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும்
தொடக்கம்.
சேவைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம் என அழைக்கப்பெறும்.
(2) (i) 2, 6 மற்றும் 15ஆம் பிரிவுகளானது 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்;
(ii) 4 மற்றும் 5ஆம் பிரிவுகளானது 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும்
(iii) இந்தச் சட்டத்தின் பிற பிரிவுகளானது, மாநில அரசினால் அறிவிக்கையின் வாயிலாகக் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
7ஆம் பிரிவிற்கானத் 19/2017.
திருத்தம்.
2. 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 7ஆம் பிரிவில், (1)ஆம் உட்பிரிவில், (a)ஆம் கூறுக்கு பின்பு, பின்வரும் கூறு மற்றும் விளக்கமானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:
(aa) ரொக்கப்பணத்திற்காக, காலதாமதமாக செலுத்தப்படும் செலுத்துகைக்காக அல்லது பிற மதிப்புமிக்க மறுபயனுக்காக, தனிநபரல்லாத, நபர் ஒருவரால், அதன் உறுப்பினர்கள் அல்லது அங்கத்தினர்களுக்கு அல்லது நிலைஎதிர்மாறாகவோ, செய்யப்படும் செயற்பாடுகள் அல்லது பரிவர்த்தனைகள்.
விளக்கம். விளக்கம்.இந்தக் கூறின் நோக்கங்களுக்காக, ஈங்கிதனால் தெளிவுபடுத்தப்படுவது யாதெனில், தற்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதிலும், அல்லது நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது அதிகார அமைப்பு எதனின் தீர்ப்பு, தீர்ப்பாணை அல்லது ஆணை ஆகியவற்றில் என்ன அடங்கியிருப்பினும், நபர் மற்றும் அதன் உறுப்பினர்கள் அல்லது அங்கத்தினர்கள் இரண்டு தனிப்பட்ட நபர்களாக கருதப்படுதல் வேண்டும் மற்றும் அவர்களுக்கிடையேயான செயற்பாடுகள் அல்லது நடவடிக்கைகளின் வழங்குகையானது அத்தகைய ஒரு நபரிடமிருந்து மற்றவருக்கு, நடைபெறுவதாக கருதப்படுதல் வேண்டும்;".
16ஆம் பிரிவிற்கானத் . 3. முதன்மைச் சட்டத்தின் 16ஆம் பிரிவில், (2)ஆம் உட்பிரிவில், (a)
திருத்தம் ஆம் கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:
(aa) (a)ஆம் கூறில் குறிப்பிடப்பட்டுள்ள பற்றுக்குறிப்பு அல்லது வரிவிலைப்பட்டியலின் விவரங்களானது வெளிப்புற வழங்குகையின் விவர அறிக்கையில் வழங்குநரால் அளிக்கப்பட்டுள்ளது மற்றும் அத்தகைய விவரங்களானது, 37ஆம் பிரிவின் கீழ் குறித்துரைக்கப்பட்டுள்ள முறையில் அத்தகைய பற்றுக்குறிப்பு அல்லது வரிவிலைப்பட்டியலின் பெறுநருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது;".
435ஆம் பிரிவிற்கானத்
4. முதன்மைச் சட்டத்தின் 35ஆம் பிரிவில், (5)ஆம் உட்பிரிவானது
திருத்தம்.
விட்டுவிடப்படுதல் வேண்டும்.
44ஆம் பிரிவிற்கான
5. முதன்மைச் சட்டத்தின் 44ஆம் பிரிவிற்காக, பின்வரும்
மாற்றீடு.
பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:
44. ஆண்டறிக்கை. 44. ஆண்டறிக்கை.ஓர் உள்ளீட்டு சேவை விநியோகிப்பவராகவோ, 51ஆம் பிரிவு அல்லது 52ஆம் பிரிவின் கீழ் வரி செலுத்தும் ஒரு நபராகவோ, ஒரு தற்செயல் வரி விதிக்கத்தக்க நபராகவோ மற்றும் ஒரு குடியிராத வரிவிதிக்கத்தக்க நபராகவோ அல்லாத பிற, பதிவுபெற்ற நபர் ஒவ்வொருவரும், மின்னணு வாயிலாக ஒவ்வொரு நிதியாண்டிற்காகவும் தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு நிதியறிக்கையுடனான, நிதியாண்டிற்காக அளிக்கப்பட்ட அறிக்கையில் விளம்புகை செய்யப்பட்ட வழங்குகைகளின் மதிப்பினை சரிசெய்யும், ஒரு சுய சான்றிட்ட சரிசெய்யும் அறிக்கையினை உள்ளடங்கலாகும் ஓர் ஆண்டு அறிக்கையினை, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள்ளாகவும் அத்தகைய படிவத்திலும் மற்றும் அத்தகைய முறையிலும் அளித்தல் வேண்டும்:
வரம்புரையாக, ஆணையரானவர், மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அறிவிக்கையின் வாயிலாக, இந்தப் பிரிவின் கீழ் ஆண்டறிக்கை தாக்கல் செய்வதிலிருந்து பதிவுபெற்ற நபர்களின் எந்த வகையினரையும் விலக்களிக்கலாம்:
மேலும் வரம்புரையாக, இந்தப் பிரிவில் அடங்கியுள்ள எதுவும், வரவு-செலவு பேரேடு, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரால் அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்புகளின் கணக்குகளைத் தணிக்கை செய்வதற்காக அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதனின் படியும் நியமிக்கப்பட்ட ஒரு தணிக்கையாளர் தணிக்கை செய்வதற்குட்படுத்தப்படும், மைய அரசு அல்லது ஒரு மாநில அரசின் துறை எதற்கும் அல்லது ஓர் உள்ளாட்சி அதிகார அமைப்பிற்கும், பொருந்தாது
50ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 50ஆம் பிரிவில், (1)ஆம் உட்பிரிவில், வரம்புரைக்காக, பின்வரும் வரம்புரையானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:
வரம்புரையாக, ஒரு வரிக்கால அளவின்போது மேற்கொள்ளப்பட்ட வழங்குகைகளைப் பொறுத்த வரை, மற்றும் 39ஆம் பிரிவின் வகைமுறைகளுடன் இணங்கிய உரிய தேதிக்குப் பின்பு அளிக்கப்பட்ட, கூறப்பட்ட காலத்திற்கான கணக்கு விவர அறிக்கையில் விளம்புகை செய்யப்பட்ட வரியின் மீதான வட்டியானது, கூறப்பட்ட காலத்தைப் பொறுத்த வரையில் 73ஆம் பிரிவு அல்லது 74ஆம் பிரிவின் கீழ் நடவடிக்கைகள் எதனின் தொடக்கத்திற்குப் பின் அத்தகைய கணக்கு விவர அறிக்கையானது அளிக்கப்பட்டிருந்தாலன்றி, மின்னணு பணப்பேரேட்டில் பற்று வைத்தலின் மூலம் செலுத்தப்படும் வரியின் அந்தப்பகுதியின் மீது செலுத்தப்படுதல் வேண்டும்.".
74ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
7. முதன்மைச் சட்டத்தின் 74ஆம் பிரிவில், 1ஆம் விளக்கத்தில், (ii)ஆம் கூறில், பிரிவுகள் 122, 125, 129 மற்றும் 130" எனும் சொற்கள் மற்றும் எண்களுக்காக, பிரிவுகள் 122 மற்றும் 125" எனும் சொற்கள் மற்றும் எண்களானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
575ஆம் பிரிவிற்கானத் 8. முதன்மைச் சட்டத்தின் 75ஆம் பிரிவில், (12)ஆம் உட்பிரிவில்,
திருத்தம்.
பின்வரும் விளக்கமானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:
விளக்கம்.விளக்கம்.இந்த உட்பிரிவின் நோக்கங்களுக்காக, சுய வரிக்கணிப்பு" எனும் சொற்றொடரானது 37ஆம் பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட, ஆனால் 39ஆம் பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட கணக்கு விவர அறிக்கையில் உள்ளடங்காத, வெளிப்புற வழங்குகைகளின் விவரங்களை பொறுத்து செலுத்தலாகும் வரித்தொகையினை உள்ளடக்குதல் வேண்டும்.".
83ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
9. முதன்மைச் சட்டத்தின் 83ஆம் பிரிவில், (1)ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:
(1) அத்தியாயம் XII, அத்தியாயம் XIV அல்லது அத்தியாயம் XV-ன்கீழ் நடவடிக்கை எதுவும் தொடங்கப்பட்டதன் பின்பு, ஆணையர், அரசு வருவாயின் நலனை பாதுகாக்கும் நோக்கத்திற்காக, அவ்வாறு செய்வது அவசியமென கருதுகிறவிடத்து, அவர் எழுத்து வடிவிலான ஆணையின் வாயிலாக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், வரிவிதிக்கத்தக்க நபருக்கு அல்லது 122ஆம் பிரிவின் (1A) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட நபரெவருக்கும் சொந்தமான வங்கிக் கணக்கு உள்ளடங்கலான, சொத்து எதையும் தற்காலிகமாக பற்றுகை செய்யலாம்.".
107ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
10. முதன்மைச் சட்டத்தின் 107ஆம் பிரிவில், (6)ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரையானது இணைக்கப்படுதல் வேண்டும், அதாவது:
வரம்புரையாக, 129ஆம் பிரிவின் (3)ஆம் உட்பிரிவின் படியான ஓர் ஆணைக்கு எதிராக மேல்முறையீடு எதுவும், தண்டத்தொகையின் இருபத்தைந்து விழுக்காட்டளவிற்கு ஈடான தொகையானது, மேல்முறையீட்டாளரால் செலுத்தப்பட்டாலன்றி, தாக்கல் செய்யப்படுதல் கூடாது.".
129ஆம் பிரிவிற்கானத் 11. முதன்மைச் சட்டத்தின் 129ஆம் பிரிவில்,
திருத்தம்.
(i) (1)ஆம் உட்பிரிவில், (a) மற்றும் (b) கூறுகளுக்காக, பின்வரும்
கூறுகள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:
(a) சரக்குகளின் உரிமையாளரானவர் அத்தகைய தண்டத்தொகையினை செலுத்த முன்வருவாரேயானால், அத்தகைய சரக்குகள் மீது செலுத்தப்பட வேண்டிய வரியின் இருநூறு விழுக்காட்டளவிற்கு இணையான தண்டத்தொகை மற்றும், விலக்களிக்கப்பட்ட சரக்குகளின் நேர்வில், சரக்குகளின் மதிப்பில் இரண்டு விழுக்காட்டளவிற்கு இணையானதொரு தொகை அல்லது ரூபாய் இருபத்தைந்தாயிரம், இதில் எது குறைவோ, அதனை செலுத்துகையில்;
(b) சரக்குகளின் உரிமையாளர் அத்தகைய தண்டத் தொகையினை செலுத்த முன்வரவில்லையெனில், சரக்குகளின் மதிப்பில் ஐம்பது விழுக்காட்டளவிற்கு அல்லது அத்தகைய சரக்குகளின் மீது செலுத்தப்பட வேண்டிய வரியின் இருநூறு விழுக்காட்டளவிற்கு, இதில் எது அதிகமோ, அதற்கு இணையான தண்டத்தொகையினை செலுத்துகையில், மற்றும் விலக்களிக்கப்பட்ட சரக்குகளின் நேர்வில், சரக்குகளின் மதிப்பில் ஐந்து விழுக்காட்டளவிற்கு இணையானதொரு தொகை அல்லது ரூபாய் இருபத்தைந்தாயிரம், இதில் எது குறைவோ, அதனை செலுத்துகையில்;";
(ii) (2)ஆம் உட்பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
6(iii) (3)ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:
(3) சரக்குகள் அல்லது வாகனத்தை நிறுத்தி வைக்கும் அல்லது கைப்பற்றுதல் செய்யும் உரிய அலுவலர்,அவ்வாறு நிறுத்திவைக்கப்பட்ட அல்லது கைப்பற்றப்பட்டதிலிருந்து ஏழு நாட்களுக்குள் செலுத்தவேண்டிய தண்டத்தொகையை குறிப்பிட்டு ஓர் அறிவிப்பை வழங்குதல் வேண்டும், மற்றும் அதன் பின்பு, (1)ஆம் உட்பிரிவின் (a) கூறு அல்லது (b) கூறின் கீழ் தண்டத்தொகையை செலுத்துவதற்காக, அத்தகைய அறிவிப்பு சார்பு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஏழு நாட்கள் கால அளவிற்குள் ஓர் ஆணையினைப் பிறப்பித்தல் வேண்டும்.";
(iv) (4)ஆம் உட்பிரிவில், வரி, வட்டி அல்லது தண்டத்தொகை" எனும் சொற்றொடருக்காக தண்டத்தொகை" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(v) (6)ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும்
உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:
(6) சரக்குகள் எதையும் இடம்பெயர்வு செய்யும் நபர் அல்லது சரக்குகளின் உரிமையாளரானவர், (3)ஆம் உட்பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணை நகலை பெற்றுக் கொண்டதன் தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் (1)ஆம் உட்பிரிவின் கீழ் தண்டத்தொகையினை செலுத்தத் தவறுகையில், அவ்வாறு நிறுத்திவைக்கப்பட்ட அல்லது கைப்பற்றுதல் செய்யப்பட்ட சரக்குகள் அல்லது வாகனங்களானவை (3)ஆம் உட்பிரிவின் கீழ் செலுத்தப்பட வேண்டிய தண்டத்தொகையை மீட்டெடுப்பதற்காக வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய காலத்திற்குள் விற்கப்படுதல் அல்லது பிற வகையில் தீர்வுக்கு உள்ளாகுதல் வேண்டும்:
வரம்புரையாக, (3)ஆம் உட்பிரிவின் கீழ் தண்டத்தொகை அல்லது ரூபாய் ஒரு இலட்சம், இதில் எது குறைவோ, இடம்பெயர்வு செய்பவரால் செலுத்தப்பட்டவுடன் வாகனமானது விடுவிக்கப்படுதல் வேண்டும்:
மேலும் வரம்புரையாக, நிறுத்திவைக்கப்பட்ட அல்லது கைப்பற்றுதல் செய்யப்பட்ட சரக்குகள் அழுகக்கூடியதாகவோ அல்லது ஆபத்து விளைவிக்கக்கூடியதாகவோ அல்லது காலம் செல்ல மதிப்பில் தேய்மானம் அடையக்கூடியதாகவோ இருந்தால், மேற்சொன்ன பதினைந்து நாட்கள் கால அளவை உரிய அலுவலர் குறைத்திடலாம்.".
130ஆம் பிரிவிற்கானத்
12. முதன்மைச் சட்டத்தில் 130ஆம் பிரிவில்,
திருத்தம்.
(i) (1)ஆம் உட்பிரிவில் இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும்" எனும் சொற்றொடருக்காக எங்கு" எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) (2)ஆம் உட்பிரிவில், இரண்டாம் வரம்புரையில், 129ஆம் பிரிவில் (1)ஆம் உட்பிரிவின் கீழ் விதிக்கத்தக்க தண்டத்தொகைக்கு" எனும் சொற்றொடருக்காக, அத்தகைய சரக்குகளின் மீது செலுத்த வேண்டிய வரியில் நூறு சதவீதத்திற்கு இணையான தண்டத்தொகைக்கு" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(iii) (3)ஆம் உட்பிரிவு விட்டுவிடப்படுதல் வேண்டும்.
151ஆம் பிரிவிற்கான
.
13. முதன்மைச் சட்டத்தில் 151ஆம் பிரிவிற்காக, பின்வரும்
மாற்றீடு
பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:
7151. தகவலை கோருவதற்கான அதிகாரம்.
151. தகவலை கோருவதற்கான அதிகாரம்.ஆணையர் அல்லது அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஓர் அலுவலர், ஓர் ஆணை மூலம் இந்தச் சட்டத்துடன் இணைந்த பொருட்கூறு எதற்கும் தொடர்புடைய தகவலை, அதில் குறிப்பிடப்படலாகும் அத்தகைய காலத்திற்குள், அத்தகைய படிவத்தில் மற்றும் அத்தகைய முறையில் அளிக்குமாறு நபர் எவருக்கும் கட்டளையிடலாம்.".
152ஆம் பிரிவிற்கானத் 14. முதன்மைச் சட்டத்தின் 152ஆம் பிரிவில்,
திருத்தம்.
(i) (1)ஆம் உட்பிரிவில்,
(a) தனிப்பட்ட நபரின் அறிக்கையின் அல்லது அதனுடைய
பகுதி எதனின்" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(b) இந்தச் சட்டத்தின் நடவடிக்கைகள் எதனின்" எனும் சொற்றொடருக்குப் பிறகு தொடர்புடைய நபருக்கு கேட்டறியும் வாய்ப்பினை வழங்காமல்" எனும் சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்;
(ii) (2)ஆம் உட்பிரிவு விட்டுவிடப்படுதல் வேண்டும்.
IIஆம் அட்டவணையிற்கானத் 15. முதன்மைச் சட்டத்தின் IIஆம் அட்டவணையில் 7ஆம்
திருத்தம்.
பத்தியானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
8 9தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2021-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 28/2021.
குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டம்.
குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டம்.
இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் வழக்கத்திலிருந்தவை அல்லது மற்றபடி வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற அல்லது குறித்த வகையில் மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன் மூலம் தவிர பிறவாறு நடைமுறையில் இருக்கக்கூடியது அற்றுப்போகக் கூடியவையாக இருப்பவை கட்டாயமாக நீக்கறவு செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதாலும்;
இந்தியக் குடியரசின் எழுபத்து இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:
குறுந்தலைப்பு.
1. இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல்
(இரண்டாம்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
குறித்த சில 2. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள்
ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்பட்டுள்ளது.
இயற்றுச் சட்டங்களின் நீக்கறவு.
காப்புரைகள்.
3. இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படும் இயற்றுச் சட்டம் எதுவும் பிற இயற்றுச் சட்டம் எதனையும் பாதிக்காது. அதில் நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிற போதும் சேர்க்கப்பட்டிருக்கிற போதும் அல்லது சுட்டப்படும் போதும்;
மற்றும் இந்தச் சட்டம் செல்லுந்தன்மையையோ, செல்லாத் தன்மையையோ அல்லது செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும் அல்லது பாதிக்கப்பட்டதை அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையோ அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டினை அதிகப்படியானதையோ அல்லது ஏற்படுத்தப்பட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும் அல்லது தொடர்பான நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும் அல்லது பற்றினை விடுவிப்பதை, தண்டம், உதவியையோ, கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும் கடந்தகால செயல் அல்லது விசயம் எதனையும் பாதிக்காது;
கொள்கை எதனையும் அல்லது சட்டத்தின் ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட அதிகாரவரம்பை அல்லது அமைவுமுறையையோ அல்லது வாதுரையின் போதோ, வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும் பழக்கவழக்கத்தையோ, வழக்காற்றையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அலுவலகத்தையோ அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும் அவை முறையே எந்த முறையிலும் ஈங்கிதனால் இயற்றுச் சட்டத்தில் அல்லது இயற்றுச் சட்டம் எதிலிருந்தும் எந்த முறையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதன்மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றிருக்கிற எதுவும் பாதிக்காத வகையில் இருக்கும்;
இயற்றுச் சட்டம் எதுவும் புத்துயிரளித்தல் அல்லது அதிகாரவரம்பு எதனையும் மீட்டெடுத்தல், அலுவலகம், பழக்கவழக்கம், பொறுப்பு, உரிமை, உரிமை மூலம், சலுகை, தடை, விலக்கு, பயன்படுத்துதல், செய்தொழில், நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது தற்பொழுது இல்லாமல் இருக்கும் பொருள் அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகாது.
10இணைப்புப் பட்டியல்.
நீக்கறவுகள்.
(2-ஆம் பிரிவைக் காண்க)
வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
குடியரசுத் தலைவரின் சட்டம்
1. 1976 32 1976-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (பதவிக்காலத்தை நீட்டித்தல்)
சட்டம்.
2. 1976 33 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் (பதவிக்காலத்தை
நீட்டித்தல்) சட்டம்.
3. 1977 5 1977-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் (தனி
அலுவலர்களை நியமித்தல்) சட்டம்.
தமிழ்நாடு சட்டங்கள்
4. 1876 I 1876-ஆம் ஆண்டு தமிழ்நாடு நில வருவாய் மதிப்பீட்டுச் சட்டம்.
5. 1886 IV 1886-ஆம் ஆண்டு இருப்புப்பாதை பாதுகாப்புச் சட்டம்.
6. 1888 I 1888-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்புகள் கடனளிப்புச்
சட்டம்.
7. 1904 II 1904-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிக்கமுடியா உடைமைகள் சட்டம்.
8. 1914 VIII 1914-ஆம் ஆண்டு தமிழ்நாடு பன்முகப்படுத்தல் சட்டம்.
9. 1930 IX 1930-ஆம் ஆண்டு செவ்வல்பட்டி பிரிக்கமுடியா உடைமைச் சட்டம்.
10. 1931 VI 1931-ஆம் ஆண்டு கிழக்கு மற்றும் மேற்கு தஞ்சாவூர் அமர்வு நீதிமன்றப்
பிரிவுகள் (செல்லத்தக்கதாக்குதல்) சட்டம்.
11. 1933 IX 1933-ஆம் ஆண்டு வெள்ளியகுண்டம் பிரிக்கமுடியா உடைமைச் சட்டம்.
12. 1935 VII 1934-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடனீட்டாளர்கள் பாதுகாப்புச் சட்டம்.
13. 1936 XI 1936-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடன் இணக்கப்படுத்தல் சட்டம்.
14. 1937 III 1936-ஆம் ஆண்டு தமிழ்நாடு குற்றவாளிகள் கண்காணிப்புச் சட்டம்.
15. 1938 XIV 1938-ஆம் ஆண்டு சிறைச்சாலைகள் மற்றும் இந்திய மனநிலை குறைபாடு
(தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
16. 1947 XXIX 1947-ஆம் ஆண்டு தமிழ்நாடு குற்றவாளிகள் கண்காணிப்பு (திருத்தச்)
சட்டம்.
17. 1947 XXXIV 1947-ஆம் ஆண்டு அபின் மற்றும் தீங்குவிளைவிக்கும் போதைப்பொருள்கள்
(தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
18. 1948 V 1948-ஆம் ஆண்டு தமிழ்நாடு காலாவதிச் சட்டங்கள் (ஐயப்பாடுகளை
நீக்குதல்) சட்டம்.
19. 1948 VII 1948-ஆம் ஆண்டு தமிழ்நாடு மறு இயற்று மற்றும் நீக்கறவுச் (எண். I ) சட்டம்.
20. 1948 VIII 1948-ஆம் ஆண்டு தமிழ்நாடு மறு இயற்றுச் (எண். II ) சட்டம்.
11வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
21. 1948 IX 1948-ஆம் ஆண்டு தமிழ்நாடு மறு இயற்றுச் (எண் III) சட்டம்.
22. 1949 X 1949-ஆம் ஆண்டு தமிழ்நாடு மறு இயற்றுச் சட்டம்.
23. 1949 XXI 1949-ஆம் ஆண்டு கைதிகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
24. 1949 XXIV 1949-ஆம் ஆண்டு தமிழ்நாடு குத்தகைதாரர்கள் மற்றும் வரி செலுத்தும்
உழவர்கள் பாதுகாப்புச் சட்டம்.
25. 1949 XXXV 1949-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒன்றிணைக்கப்பட்ட மாநிலங்கள் (சட்டங்கள்)
சட்டம்.
26. 1950 III 1950-ஆம் ஆண்டு தமிழ்நாடு மறு இயற்றுச் சட்டம்.
27. 1951 XXXII 1951-ஆம் ஆண்டு அபின் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
28. 1953 VII 1953-ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டவர் நலன் (பிரிவினை) தமிழ்நாடு
துணைச் சட்டம்.
29. 1953 XI 1953-ஆம் ஆண்டு தமிழ்நாடு பழுப்பு நிலக்கரி (நிலம் கையகப்படுத்துதல்)
சட்டம்.
30. 1957 XXI 1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள் பதிவுச் சட்டம்.
31. 1958 VIII 1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
32. 1959 6 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு கிராமதான கிராமங்கள் (கடன்களை திருப்பிச்
செலுத்துதல்) சட்டம்.
33. 1959 8 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார (திருத்தச்) சட்டம்.
34. 1961 3 1961-ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டவர் நலன் (பிரிவினை) தமிழ்நாடு
துணைச் சட்டம்.
35. 1961 9 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு (இணைக்கப்பட்ட ஆட்சிப்பகுதி) சட்டங்களை
நீட்டித்தல் சட்டம்.
36. 1961 11 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் வருமான வரி (இணைக்கப்பட்ட
ஆட்சிப்பகுதிக்கு நீட்டித்தல்) சட்டம்.
37. 1961 20 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி (திருத்தச்) சட்டம்.
38. 1961 28 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட மேம்பாட்டுக் குழுக்கள் மற்றும்
ஊராட்சிகள் (இணைக்கப்பட்ட ஆட்சிப்பகுதிக்கு நீட்டித்தல்) சட்டம்.
39. 1961 52 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்புகள் நிதிச் சட்டம்.
40. 1962 16 1962-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும்
விழாக்கால விடுமுறைகள்) திருத்தச் சட்டம்.
41. 1966 23 1966-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவனங்கள்
(ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம்.
42. 1967 4 1967-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
43. 1968 16 1968-ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் (சிறப்பு வகைமுறைகள்)
சட்டம்.
12வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
44. 1968 20 1968-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியுரிமை சொத்துக்களின் கிராம சேவை
மற்றும் தமிழ்நாடு மரபுரிமையான கிராம பதவிகள் (நீக்கறவுச்) சட்டம்.
45. 1970 16 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும் உள்ளாட்சி அதிகார
அமைப்புகள் நிதி (திருத்தச்) சட்டம்.
46. 1970 33 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
47. 1971 36 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த மருத்துவ பணியாற்றுபவர்களின்
பதிவு (திருத்தச்) சட்டம்.
48. 1972 18 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட ஆட்சிப்பகுதி) சட்டங்களை
நீட்டித்தல் சட்டம்.
49. 1972 21 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்களின் குத்தகை
நிலுவைத் தொகை (நிவாரணச்) சட்டம்.
50. 1972 26 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆயத்தீர்வை (திருத்தச்) சட்டம்.
51. 1973 29 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்பு நிதி (திருத்தச்)
சட்டம்.
52. 1973 37 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (செயல்பாட்டினை நிறுத்தி
வைத்தல்) திருத்தச் சட்டம்.
53. 1973 38 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆயத்தீர்வை (திருத்தச்) சட்டம்.
54. 1973 42 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்பு நிதி (இரண்டாம்
திருத்தச்) சட்டம்.
55. 1974 34 1974-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (செயல்பாட்டினை மீட்டுயிற்பித்தல்
மற்றும் திருத்தச்) சட்டம்.
56. 1974 38 1974-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும் உள்ளாட்சி அதிகார
அமைப்பு நிதி (திருத்தச்) சட்டம்.
57. 1975 32 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும் உள்ளாட்சி அதிகார
அமைப்பு நிதி (திருத்தச்) சட்டம்.
58. 1975 34 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியக்
குழுக்கள் (பதவிக் காலத்தை நீட்டித்தல்) சட்டம்.
59. 1978 5 1978-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும் உள்ளாட்சி அதிகார
அமைப்பு நிதி (திருத்தச்) சட்டம்.
60. 1979 51 1979-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும் உள்ளாட்சி அதிகார
அமைப்பு நிதி (திருத்தச்) சட்டம்.
61. 1979 60 1979-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தனி அலுவலர்களை நியமித்தல்)
சட்டம்.
62. 1980 15 1980-ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்களின் குத்தகை
நிலுவைத் தொகை (நிவாரணச்) சட்டம்.
13வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
63. 1980 16 1980-ஆம் ஆண்டு தமிழ்நாடு புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
பகுதிகளில் பயிரிடும் குத்தகைதாரர்களின் குத்தகை நிலுவைத் தொகை
(நிவாரண) சட்டம்.
64. 1981 3 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு பகுதிநேர கிராம அலுவலர்களின் பதவிகளை
ஒழித்தல் சட்டம்.
65. 1982 27 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (உள்ளூர் மேல்வரியை
செல்லத்தக்கதாக்குதல்) சட்டம்.
66. 1983 26 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்கள்
(வெளியேற்றத்திலிருந்து பாதுகாத்தல்) சட்டம்.
67. 1984 25 1984-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும் உள்ளாட்சி அதிகார
அமைப்பு நிதி (திருத்தச்) சட்டம்.
68. 1984 29 1984-ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்கள் (சிறப்பு
வகைமுறைகள்) சட்டம்.
69. 1984 32 1984-ஆம் ஆண்டு தமிழ்நாடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
பயிரிடும் குத்தகைதாரர்கள் (தற்காலிக நிவாரண) சட்டம்.
70. 1986 53 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
பயிரிடும் குத்தகைதாரர்கள் (தற்காலிக நிவாரண) சட்டம்.
71. 1986 60 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
பகுதிகளில் பயிரிடும் குத்தகைதாரர்கள் (சிறப்பு வகைமுறைகள்) சட்டம்.
72. 1989 40 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும் உள்ளாட்சி அதிகார
அமைப்பு நிதி (திருத்தச்) சட்டம்.
73. 1989 41 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்கள்
(வெளியேற்றத்திலிருந்து பாதுகாத்தல்) சட்டம்.
74. 1990 38 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்களின் குத்தகை
நிலுவைத் தொகை (நிவாரணச்) சட்டம்.
75. 1993 35 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள் பதிவு (திருத்தச்)
சட்டம்.
76. 1997 20 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்கள்
(வெளியேற்றத்திலிருந்து பாதுகாத்தல்) சட்டம்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசு செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
14 15தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2021 -ஆம் ஆண்டு
சட்ட எண் 29/2021.
மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அக்டோபர் திங்கள் 4-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தினை மேலும் பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது. 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தினை மேலும் 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தினை மேலும் 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட அறநிலைக்கொடைகள் சட்டத்தினை மேலும் முன்வடிவு. அறநிலைக்கொடைகள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தினை முன்வடிவு. திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு. முன்வடிவு. முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம்
ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு
சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2021-ஆம் ஆண்டு
தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்
மற்றும் தொடக்கம்.
கொடைகள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு
வருதல் வேண்டும்.
தமிழ்நாடு
79-B-ஆம் 2. 1959(cid:16)ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய
மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின்
சட்டம் 22/1959.
பிரிவிற்கானத் திருத்தம்.
79-B-ஆம் பிரிவில், (3) மற்றும் (4)-ஆம்
உட்பிரிவுகளுக்காக, பின்வரும் உட்பிரிவானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(3) (2)-ஆம் உட்-பிரிவின் படி
தண்டனைக்குரிய குற்றச்செயலானது, கைது
செய்தலுக்குரிய மற்றும் பிணையில்
விடத்தக்கதல்லாததாக இருத்தல் வேண்டும்
மற்றும் கைது செய்தலுக்குரிய மற்றும் பிணையில்
விடத்தக்கதல்லாத குற்றங்கள் தொடர்பான
1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை
தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் 2/1974)
வகைமுறைகளானவை அந்த குற்றச் செயலுக்கும்
பொருந்துதல் வேண்டும்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசு செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
16 17தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு
அக்டோபர் திங்கள் 4ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 30/2021.
1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தினை அறநிலைக்கொடைகள் சட்டத்தினை மேலும் திருத்தம் அறநிலைக்கொடைகள் சட்டத்தினை மேலும் திருத்தம் மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு செய்வதற்கானதொரு சட்டம்.செய்வதற்கானதொரு சட்டம். சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம்
ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு
சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2021-ஆம் ஆண்டு
மற்றும் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்
தொடக்கம்.
கொடைகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம் என
வழங்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு
வருதல் வேண்டும்.
தமிழ்நாடு
7-A-ஆம் 2. 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய
சட்டம்
பிரிவிற்கானத் மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின்
22/1959.
திருத்தம். 7-A-ஆம் பிரிவில்,-
(1) (2)-ஆம் உட்பிரிவில், "மூன்று
ஆண்டுகள்" என்ற சொற்றொடருக்காக,
"இரண்டு ஆண்டுகள்" என்ற சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (2)-ஆம் உட்பிரிவின் பின்பு,
பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(2-A) 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு
இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள்
(இரண்டாம் திருத்தச்) சட்டம் தொடங்கப்பட்ட
நாளன்று, இரண்டு ஆண்டுகள் பதவிக்கால
அளவை நிறைவு செய்திருக்கிற,
மாவட்டக்குழுவின் உறுப்பினராக பதவி
வகிக்கும் ஒவ்வொரு நபரும், பதவி வகிப்பது
உடனடியாக அற்றுப்போதல் வேண்டும் மற்றும்
அத்தகையத் தேதிக்குப் பின்பு, இரண்டு
ஆண்டுகள் பதவிக்கால அளவை நிறைவு
செய்திருப்பவர், அத்தகைய நிறைவின் போது
பதவி வகித்தல் அற்றுப்போதல் வேண்டும்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசு செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
18 19தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2021 -ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 31/2021.
1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்செய்வதற்கானதொரு சட்டம்
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு
மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) திருத்தச்சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, 2020-ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 30-ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
33-ஆம் தமிழ்நாடு சட்டம் 27/1989.
பிரிவிற்கான திருத்தம்.
செல்லுந் தன்மை
யுடைய- தாகுதல்.
2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் 33-ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில் உள்ள வரம்புரையில் ஒன்பது ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" எனும் சொற்றொடருக்காக பத்து ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். 3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2020 நவம்பர் 30-ஆம் தேதியிலிருந்தும் மற்றும் அது முதற்கொண்டும் சந்தைக் குழுவின் ஒரு தனி அலுவலரின் அதிகாரங்களை செலுத்தும் மற்றும் செயற்பணிகளை நிறைவேற்றும் நபர் ஒவ்வொருவரும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டதான முதன்மைச் சட்டத்தின் 33-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி அத்தகைய தனி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் 2020 நவம்பர் 30-ஆம் நாள் தொடங்கி மற்றும் தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்தச் சட்டம் வெளியிடப்படும் நாள் முடிவடையும் கால அளவு வரை கூறப்பட்ட தனி அலுவலர்களால் செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டதான, முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.