Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Government Notification and Tamil Translation

Published 16 February 2022

Type
Ordinary
Gazette no.
7
Part
Part III
Notifications
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT - Government Notifications and Tamil Translations
Section
1a-T- Sup
Identifier
in.gazette.tamilnadu.2022-02-16.Ordinary_7_Part-III_1a-T--Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2022

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 3.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 7] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 16, 2022 மாசி 4, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2053

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

[அரசாணை (நிலை) எண் 107, தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (M2)த் துறை, 18 ஆகஸ்ட் 2021.]

அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச்சட்டம் 63/1948) 87 ஆம் பிரிவு மற்றும் 112 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 115 ஆம் பிரிவின் உட்பிரிவு (1)இன் கீழ் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தங்கள்

மேற் சொன்ன விதிகளில், விதி 95 இல்,-

(1) துணைவிதி (1) இல், இனம் 20-க்குப் பதிலாக, பின்வரும் இனம் அமைத்துக் கொள்ளப்படவேண்டும், அதாவது :-

"20 கல்நார்களைக் கையாளுதல் மற்றும் செயலாக்குதல், கல்நார் தொடர்புடைய யாதொரு பகுதி அல்லது பொருளை உருவாக்குதல் மற்றும் யாதொருவடிவில் பயன்படுத்தப்படுகிற அத்தகைய கல்நார்களின் ஏனைய யாதொரு தயாரிப்பு செய்முறை அல்லது ஏனையவை"

(2) விவரஅட்டவணை XX - ற்குப் பதிலாக பின்வரும் விவர அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-

"விவர அட்டவணை XX

கல்நார்களைக் கையாளுதல் மற்றும் செயலாக்குதல், கல்நார் தொடர்புடைய யாதொரு பகுதி அல்லது பொருளை உருவாக்குதல்

மற்றும் யாதொரு வடிவில் பயன்படுத்தப்படுகிற அத்தகைய கல்நார்களின் ஏனைய யாதொரு தயாரிப்பு செய்முறை அல்லது ஏனையவை.-

1. பயன்பாடு,-இச்சட்டத்தின் 2(k) ஆம் பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள கல்நார் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் / அல்லது கல்நார்களைக் கொண்டுள்ள பொருட்களை உற்பத்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் தொழிற்சாலைகளின் அனைத்து உற்பத்தி செயல்பாடுகளுக்கும் இந்த அட்டவணையானது பொருந்தும்.

(2) இந்த துறையில் சிறப்பு வாய்ந்த நிறுவனம் அல்லது வல்லுநர்களிடமிருந்து பெறப்படும் விஞ்ஞானம் சார்ந்த சான்றுகளை செயல்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசிதழில் உரிய அறிவிக்கையை வெளியிடுவதன் வாயிலாக மேற்சொன்ன அட்டவணையில் உரிய திருத்தங்களை யாதொரு நேரத்திலும் மாநில அரசு மேற்கொள்ளலாம்.

(3) தொழிற்சாலையில் கல்நார் தொழிலில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த அட்டவணையின் விதித்துறைகள் பொருந்தும். தொழிலாளர்களைப் பொறுத்த நேர்வுகளில் இந்த விதிகளுக்கு இணங்க வேலைசெய்வது அந்தந்த தொழிற்சாலையின் உரிமையாளர்களின் பொறுப்பு ஆகும்.

(4) (a) கல்நார் அல்லது கல்நார் கொண்ட பொருட்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தலைமை ஆய்வாளரால் ஒப்புதலளிக்கப்பட்ட அறிவியல் ஆய்வு மற்றும் தொழில்நுட்பமுறைகளை பின்பற்றி பணி வழி முறைகள் மற்றும் செயல்முறைகளை செய்யவேண்டும்.

III-1a-(7) (T Sup)—1

[ 1 ]2 (b) துணைப் பத்தி (1) இல் என்ன சொல்லியிருப்பினும், இது தொடர்பாக மாநில அரசால் அறிவிக்கையிடப்பட்டவாறாக, தயாரிப்பு செய்முறைகளில் கல்நார்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்படுகிறது.

(c) (i) அனைத்து வகையிலான தெளிக்கும் வகையில் கல்நார்களை தொழிற்சாலைகளில் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.

(ii) கல்நார்களை தெளிக்கும் வகையில் பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாக இருப்பதாகவும் அதற்காக தொழிலாளர்களுக்கான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் தேவையான கூடுதல் ஏற்பாடுகளை மேற்கொள்வதாக பணியிட நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகிப்பவர் தெரிவித்து அதில் தலைமை ஆய்வாளர் திருப்தியடையும் நேர்வுகளில் மேற்கண்ட இனம் (c) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள கல்நார்களை தெளிக்கும் பயன்பாடுகளுக்கான தடைகளில் இருந்து தலைமை ஆய்வாளர் விலக்களிக்கலாம்.

2. விளக்கங்கள்.-

--இந்த விவர அட்டவணையின் நோக்கங்களுக்காக

(a) "கல்நார்" என்பது யாதொரு பைபரஸ் சிலிகேட் மினரல் மற்றும் அக்டினோலைட், அமோசைட், அந்த்ரோபைலைட், கிறிஸ்டோலைட், க்ரோசிடோலைட், டெர்மோலைட் ஆகியவற்றின் கலவை அல்லது இவற்றில் ஏதேனும் கலந்து கச்சாவாக, பொடியாக்கப்பட்டதாக அல்லது மடிக்கப்படாது இருப்பது ஆகும்;

(b)"கல்நார் ஆடைகள்" என்பது கல்நார்களை அல்லது கல்நார் கலந்துள்ள யாதொரு பிற பொருட்களினாலான நூல் அல்லது துணிகள் என பொருள்படும்;

(c) "ஒப்புதல்" என்பது தலைமை ஆய்வாளர் எழுத்துப்பூர்வமாக குறிப்ப்பிட்ட காலத்திற்கு வழங்கிய ஒப்புதல் என பொருள்படும்;

(d) "சுவாச உபகரணங்கள்" என்பது தொழிலாளர்கள் தூசுகள் அற்ற காற்றினை மட்டும் சுவாசிக்கும் வகையில் உரிய இணைப்புகளைக் கொண்டிருக்கும் தலைக்கவசம் அல்லது முகக்கவசம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட யாதொரு உபகரணங்கள் என பொருள்படும்;

(e) "திறன்மிகு காற்று வெளியேற்றி" என்பது பணிகள் மேற்கொள்ளப்படும் யாதொரு இடத்தில் இருந்தும் காற்றினை தூய்மையாக்குவதுடன் அங்குள்ள தூசுகள் காற்றில் கலக்காதவாறு வடிகட்டும் இயந்திர அமைப்பு ஆகும். தூசுகள் உருவாகும் இடத்தில் அதனை கட்டுப்படுத்த தவறும் யாதொரு காற்று வெளியேற்றிகளும் திறன்மிக்கவை என்று கருதப்படக்கூடாது என பொருள்படும்;

(f) "தயாரிப்பு" என்பது கல்நாரினை தயாரிப்பதற்காக அதனை நொறுக்குதல், சிதைத்தல் அல்லது யாதொரு பிறமுறைகள் என பொருள்படும்;

(g) "பாதுகாக்கப்பட்ட உடை" என்பது தலைப்பகுதியுடன் சேர்த்து உடல் முழுவதையும் மூடும் வகையில் அணியும் ஆடை ஆகும். இது (இரண்டு இனங்களிலும்) கல்நார் தூசுகளையும் நீக்கும் வகையிலானது.

(h) "கல்நார் தூசுகள்" என்பது தொழிற்சாலையில் காற்றில் படிந்திருக்கும் கல்நார் துகள்கள் அல்லது காற்றில் பறந்து கலந்திருக்கும் கல்நார் துகள்கள் என பொருள்படும்;

(i) "காற்றில் பறக்கும் கல்நார் தூசுகள்" என்பது அளவீடு செய்யும் நோக்கத்திற்காக புவியீர்ப்பு முறையில் அல்லது அதற்கு இணையான வேறு முறையில் அளவீடு செய்யப்படும் தூசுத் துகள்கள் என பொருள்படும்;

(j) "பழுது பார்க்கத்தக்க கல்நாரிழைகள்" என்பது விட்டம் 3 மைக்ரோ மீட்டருக்கு குறைவாகவும், 3:1 என்ற விகிதத்திற்கு அதிகமாக விட்டத்தின் நீளம் கொண்டதாகவும் உள்ள கல்நாரிழைகள் என பொருள்படும்;

(k) "கல்நார் வெளியேற்றம்" என்பது பழுது பார்க்கத்தக்க கல்நாரிழை அல்லது கல்நாரிலிருது வெளியேறி காற்றில் பரவும் தூசுகள் என பொருள்படும்; இவை தொழிற்சாலையில், கல்நார்களிலிருந்தோ அல்லது கல்நார் அடங்கிய கனிமங்களிலிருந்தோ, பொருட்கள் அல்லது தயாரிப்புகளிலிருந்து உருவானவை ஆகும்.

3. தளவாடங்கள் அல்லது கட்டமைப்புகளைத் தகர்த்தல்.-தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளர் அவர்களால் அத்தகைய பணிகளை மேற்சொன்ன விவர அட்டவணையின் விதிதுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளும் திறன் உள்ளது என்று ஒப்புதலளித்து அதிகாரத்தினை வழங்கியிருந்தாலன்றி, எளிதில் தகர்ந்துவிடக் கூடிய கல்நாரிழைகளைக் கொண்டுள்ள தளவாடங்கள் அல்லது கட்டமைப்புகளைத் தகர்த்தல் மற்றும் காற்றில் பரவக்கூடிய வகையிலான கல்நார்துகள்களை கட்டடம் அல்லது அமைப்புகளிலிருந்து நீக்குதல் ஆகிய செயல்களை யாதொரு நபரும் மேற்கொள்ளக்கூடாது.

4. கருவிகள் மற்றும் உபகரணங்கள்.-இந்த விவர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்களுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் அல்லது உபகரணங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தூசுகளை வெளியேற்றும் வகையில் இருத்தல் கூடாது. மேலும், அவை தூசுகளை வடிகட்டுவதில் திறன்மிக்கவையாக இருத்தல் வேண்டும்.

5. காற்று வெளியேற்றி : (1) பின்வரும் செயல்முறைகளிலிருந்து தூசுகளை கட்டுப்படுத்தவும் பராமரிக்கவும் திறன்மிகு காற்று வெளியேற்றி அமைக்கப்பட வேண்டும். அந்த இயந்திரங்கள் இந்தியதர நிர்ணய ஆணையத்தால் வரையறுக்கப்பட்டவாறான தரத்தில் இருத்தல் வேண்டும்:-

(a) தயாரிப்பு மற்றும் அனுப்புகை இயந்திரம், அதாவது -

(i) தயாரித்தல், கடைதல் அல்லது உலர்கலவை இயந்திரங்கள்;

(ii) கார்டிங் இயந்திரம், அதன் கழிவு மற்றும் வளைய நூற்பு இயந்திரம் மற்றும் தறிகள்;

(iii) இயந்திரங்கள் அல்லது கல்நாருடன் கூடிய ஏனைய தளவாடங்கள்;

3

(iv) வறண்ட நிலையில் உள்ள முழுமையாக கல்நார்களைக் கொண்ட பொருட்கள் அல்லது பகுதியளவு கல்நார்களை கொண்ட பொருட்களை அறுத்தல், அரைத்தல், கடைதல், துளையிடுதல், தேய்த்தல் அல்லது பளபளப்பாக்குதல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள்;

(b) கார்டிங் இயந்திரங்களின் பிற பாகங்கள் அல்லது உருளைகளை சுத்தம் செய்தல் மற்றும் அரைத்தல்;

(c) தளர்வான கல்நார் துகள்களை வெளியேற்றும் அல்லது கடத்தும் அறைகள், கூரைகள்;

(d) கைகளினால் கல்நார் கழிவுகளை பிரிப்பதற்கான அல்லது ஏனைய கையாளும் பணிகளுக்கான பணிமேடைகள்;

(e) சாக்குகள் அல்லது பைகள் நிரப்புதல் அல்லது காலியாக்குதல் அல்லது சிறிய புட்டிகளை எடையிடுதல் அல்லது ஏனைய செயல்பாடுகள் கைகளினால் மேற்கொள்ளப்படும்பணிகள்;

(f) சாக்குப் பைகளை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள்;

(g) கல்நாரினை கைகளால் கலக்குதல் மற்றும் ஒன்று சேர்த்தல்; மற்றும்

(h) பணிபுரியும் சூழல்களில் தூசுகள் உருவாகும் வகையிலான யாதொரு ஏனைய செயல்பாடுகள்;

(2) யாதொரு இயந்திரங்களை அல்லது உபகரணங்களை அல்லது ஏனையதளவாடத்தை பராமரித்தல் அல்லது பழுதுபார்க்கும் போது துணை பத்தி (1) இல் வழங்கப்பட்டுள்ளவாறு காற்று வெளியேற்றும் சாதனம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனை பயன்படுத்துவதன் வாயிலாக தூசுகள் பணிபுரியும் இடத்தின் பிறபகுதிகளில் படியாதவாறு தடுக்கப்படும்.

(3) காற்று வெளியேற்றும் சாதனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கல்நார்தூசுகள், யாதொரு பணி அறையின் காற்றினால் ஈர்க்கப்படாதவகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

(4) யாதொரு பணி அறைகளில் இருந்தும் காற்று வெளியேற்றும் அமைப்பு வாயிலாக அகற்றப்பட்ட கல்நார்தூசுகளை அதற்குரிய பெட்டிகளில் அல்லது வடிகட்டும் பைகளில் முறையாக சேகரித்து அதனை பணிபுரியும் இடத்திலிருந்து தனியாக வைத்தல் வேண்டும்.

(6) காற்றோட்ட அமைப்புகளை சோதனை மற்றும் ஆய்வு செய்தல்.- (1) இந்த விவர அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறாக தூசுகளை பிரிப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் அனைத்து காற்றோட்ட அமைப்புகளும் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் வரைமுறைகளுக்குட்பட்டு இருத்தல் வேண்டும். அவை வாரம் ஒரு முறை பொறுப்புடைய நபர்களால் சோதனை செய்யப்பட வேண்டும். மேலும் 12 மாதங்களுக்கு ஒரு முறை அவற்றை தகுதிவாய்ந்த நபரால் சோதனை செய்தல் வேண்டும். அத்தகைய சோதனையின் போது ஏதேனும் குறைகள் கண்டறியப்படுமாயின் அவை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.

(2) அத்தகையஆய்வுகள் மற்றும் சோதனைகள் மற்றும் தளவாடத்தின் நிலையை மற்றும் பழுது நீக்கம் மற்றும் மாற்றங்கள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் அதற்கான விவரங்களை கொண்ட பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். அது ஆய்வாளர் சோதனை மேற்கொள்ளவரும் போது பார்வையிடும் வகையில் இருத்தல் வேண்டும்.

(7) சில செயல்முறைகளை பிரித்தல் :கைகளால் கல்நார்களை கலக்குதல் அல்லது ஒன்றாக்கும் செயல்பாடுகள் அல்லது முழுவதுமாக அல்லது பகுதியாக கல்நாரினால் ஆன விரிப்புகளை உருவாக்குதல் அல்லது பழுது பார்க்கும் பணிகளை, வேறு பணிகளை மேற்கொள்ளும் அறைகளில் மேற்கொள்ளுதல் கூடாது.

(8) தளர்வான கல்நார்களை சேமித்தல் மற்றும் வழங்குதல்.-தளர்வான கல்நார்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாத போது அவற்றை காற்றில் பரவாதவகையில் உரியவாறு மூடிய பெட்டிகளில் வைத்து வருதல் வேண்டும். இதனால் கல்நார் தூசிகள் அங்கிருந்து வெளிவருவது தடுக்கப்படும். அத்தகைய கல்நார்களை மூடிய பெட்டிகளில் வைத்து அல்லது முற்றிலும் மூடப்பட்ட பட்டை நகர்விகளில் மட்டுமே இடமாற்றம் செய்தல் வேண்டும்.

(9) கல்நார் சாக்குப்பைகள்.-தொழிற்சாலைகளுக்குள் கல்நார்களை இடமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் அனைத்து சாக்குப்பைகளும் கசிவுகள் ஏற்படாத பொருட்களினால் தயாரித்து இருக்கவேண்டும் அவை உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.

(2) பத்தி 4-க்கு இணங்க கல்நார்களைக் கொண்டிருந்த சாக்குப்பைகளை கைகளால் சுத்தம் செய்யாமல் இயந்திரங்களால் சுத்தம் செய்தல் வேண்டும்

(3) கல்நார்களை கொண்டிருந்த சாக்குப்பைகள் அல்லது பெட்டிகள் உரிய முறையில் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

10. தளங்கள் மற்றும் பணியிடங்களை பராமரித்தல்.- (1) இந்த விவர அட்டவணையில் கோரப்படுகின்ற யாதொன்றும் ஒவ்வொரு அறையிலும் பயன்படுத்தக் கூடியதாகும் -

(a) தளங்கள், பணி-இருக்கைகள், இயந்திரங்கள் மற்றும் தளவாடம் சுத்தமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். கல்நார் கழிவுகளில்லாமல் இருக்க வேண்டும் .உடனடியாக பயன்படுத்த தேவையில்லாத கல்நாரை வைத்திருப்பதற்காக பொருத்தமான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்: மற்றும்

(b) அறையின் தரையில் உரியமுறையில் தூய்மைப்படுத்தும் செயலை மேற்கொள்ளும் வகையில் பணியை மேற்கொள்வதற்கு உடனடியாக தேவைப்படாத யாதொரு பொருட்கள், அல்லது ஏனைய பொருட்கள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும்.

(2) துணைப் பத்தி (1)இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி யாதொரு பணியிடத்திலும் கல்நார் தூசு வெளியேறி விடாமல் அல்லது காற்றில் கலந்துவிடாது வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட வெற்றிட துப்புரவு உபகரணத்தின் மூலம் எந்தளவு இயலுமோ அந்தளவு தூய்மையாக்கும் பணி மேற்கொள்ளப்படவேண்டும்.

4

(3) துணைப் பத்தி (2)இல் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர வேறு யாதொரு முறையிலும் துப்புரவுப் பணியை மேற்கொள்ளும்போது, துப்புரவுப் பணிகளைச் செய்யும் நபர்களுக்கும் அந்த அறையில் பணிபுரியும் வேறு நபர்களுக்கும் சுவாச பாதுகாப்பு உபகரணங்களையும் பாதுகாப்பு உடைகளையும் வழங்க வேண்டும்

(4) துணை பத்தி (2)இன் விதிகளுக்கிணங்க பயன்படுத்தப்படும் வெற்றிடச் சுத்திகரிப்பு உபகரணங்கள், முறையாக பராமரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சுத்திகரிப்பு செயல்பாட்டிற்கு பின்னரும், அதன் பகுதிகள் கல்நார் கழிவுகள் மற்றும் தூசி இன்றி சுத்தமாக வைக்கப்பட வேண்டும்.

(5) பணிச்சுழற்சி நேரம் நிறைவடையும்போது பணியிடத்தில் உள்ள தளங்கள் அல்லது ஏனைய மேற்பரப்புகளில் கல்நார்கழிவுகள் இருப்பதை அனுமதிக்ககூடாது. அவற்றை தாமதமின்றி பொருத்தமான சேகரிப்பு இடங்களுக்கு இடமாற்றிவிட வேண்டும். எந்த நேரத்திலும் பணியின் போது உருவாகும் யாதொரு கல்நார் கழிவும் அகற்றப்பட்டு, சேகரிப்பு நோக்கத்திற்காக பராமரிக்கப்படுகின்ற சேகரிப்பிடத்திற்கு தாமதமின்றி மாற்றப்பட வேண்டும்.

(6) (1) சாத்தியமான இடங்களில் ஏனையபொருட்கள் அல்லது உற்பத்திப் பொருட்கள் மூலமாக அல்லது தீங்கற்ற அல்லது குறைவான தீங்கினை விளைவிக்கும் என அறிவியல் ரீதியாக மதிப்பிடப்பட்டமாற்று தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சில வகை கல்நார் அல்லது கல்நாரினாலான தயாரிப்புகளை தொழிற்சாலை உரிமையாளர் மாற்றிவிட வேண்டும்.

(2) கல்நார் துகள்காற்றில் வெளியிடப்படுவதைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தொழிற்சாலையின் உரிமையாளர் எடுக்க வேண்டும். வெளியேற்றல் அளவுகள் அல்லது பிற வெளியேற்றல் அளவுகோல்களுக்கிணங்க செயல்படுவதை உறுதிசெய்வதோடு நியாயமான நடைமுறைக்கேற்றவாறான குறைந்த அளவிற்கு வெளியேற்றலை குறைக்கவேண்டும்.

11. சுவாசக் கருவி, தனிநபர்பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் உடைகள்.- (1) இந்த அட்டவணையில் பொருந்தக்கூடிய ஒவ்வொரு தொழிற்சாலை உரிமையாளரும், இந்திய தர நிர்ணய அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட பொருத்தமான தரத்தின்படி கையுறைகள், காலணிகள், தலைக்கவசங்கள், பாதுகாப்பு கண்கண்ணாடிகள், செவிகாப்பான், மார்புகவச உடைகள், பாதுகாப்பு பட்டை, முழுபாதுகாப்பு உடை போன்ற தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டும். தொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து, பின்வருவனவற்றில் பணியமர்த்தப்பட்ட ஒவ்வொரு நபரின் பயன்பாட்டிற்கும் இந்திய தர நிர்ணய நிறுவனம் பரிந்துரைத்த பொருத்தமான தரத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட சுவாசக் கருவி மற்றும் பொருத்தமான பணிஆடைகள் நல்ல நிலைமைகளில் பராமரிக்கப்பட்டு, வழங்கப்பட வேண்டும்.-

(a) தளர்வான கல்நாரைக்கொண்ட அறைகளில்;

(b) தூசி படியக்கூடிய அல்லது வடிகட்டுகின்ற எந்திரத்தின்அறைகளை சுத்தம் செய்யும்பணியில்;

(c) தள்ளுஉருளைகள் அல்லது ஒரு கார்டிங் எந்திரத்தின் பிற பகுதிகள் உள்ளிட்ட உருளைகள் கையால் சுத்தப்படுத்துவதன் மூலம் சுத்தம் செய்வதில்;

(d) காப்பு உறையினாலான மெத்தைகளின் உற்பத்தியில் அல்லது அவைகளை பழுதுபார்ப்பதில் நிரப்புதல், அடித்தல் அல்லது சமன் செய்யும்பணிகளில் மற்றும்

(e) அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குட்பட்ட பணி சூழலில் கல்நார் தூசியைக் கட்டுப்படுத்த தொழில்நுட்ப வழிகளைப் பின்பற்றுவதற்கு சாத்தியமற்ற சூழ்நிலைகளின் ஏனைய செயல்பாடுகளில்.

(2) இந்த விவர அட்டவணையுடன் இணக்கமான முறையில் வழங்கப்பட்ட சுவாசக் கருவி மற்றும் பாதுகாப்பு ஆடைகளை தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்காக அணிந்து கொள்ளும்போதும் அல்லது எடுக்கும்போதும் மற்றும் பயன்பாட்டில் இல்லாதபோதும் அத்தகைய கருவிகள் மற்றும் ஆடைகளை வைத்துக்கொள்வதற்கு வசதியாக அணுகக்கூடிய நிலையில் பொருத்தமான இடவசதிக்கு வகை செய்யப்படவேண்டும்.

(3) பயன்பாட்டில் இல்லாத அனைத்து சுவாசக் கருவிகளும் பாதுகாப்பு ஆடைகளும் மேற்சொன்ன துணை பத்தி (2) இன்படி வகை செய்யப்பட்ட இடத்தில் வைத்து வரப்படவேண்டும்.

(4) பயன்பாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு உறைகளும் திறன்மிகு காற்று வெளியேற்றி அல்லது வெற்றிட சுத்தமாக்குதல் முறைமூலம் தூசி நீக்கம் செய்யப்பட்டு உரியகால இடைவெளியில் சுத்தம் செய்யப்படவேண்டும். அவற்றை அணிபவருடைய பாதுகாப்பு செயல்திறனை உறுதி செய்யும்வகையில் தூய்மைப்பணி அட்டவணையும்செயல் முறையும்இருக்க வேண்டும்.

(5) அனைத்து சுவாசக் கருவிகளும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் பொறுப்பான ஒரு நபரால் முழுமையாக பரிசோதிக்கப்பட வேண்டும்.

(6) ஆய்வாளர் ஒருவரால் ஆய்வு செய்யப்படுவதற்கு தயாராக, சுவாசக் கருவியின் சுத்தம், பராமரிப்பு மற்றும் அதன்நிலை குறித்து அந்நோக்கத்திற்கான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும்.

(7) துணை-பத்தியின் (1)-ன்கீழ் சுவாசக் கருவி வழங்கப்பட வேண்டியது அவசியமாயிருந்து அக்கருவியை முறையாக பயன்படுத்துவது எந்தவொரு நபருக்கும் முழுமையாக அறிவுறுத்தப்படவில்லை எனில், துணைப் பத்தி (1)இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பணியையும் செய்ய எந்தவொரு நபரும் பணியமர்த்தப்படக்கூடாது.

(8) துணைப் பத்தி (1)ன்படி வழங்கப்பட்ட ஒரு சுவாசக் கருவியை தொழிலாளர் பயன்படுத்திய பின்னர் அவர்கடைசியாக அணிந்ததை தொடர்ந்து அக்கருவி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டு அக்கருவியை முறையாக பயன்படுத்துவது குறித்து மற்றொரு தொழிலாளர் முழுமையாக அறிவுறுத்தப்பட்டால் தவிர அம்மற்றொரு நபர் அணியக்கூடாது,5 (9) கல்நார் துகள் வெளிவருவதிலிருந்து தொழிலாளரை பாதுகாப்பதற்காக ஒரு தொழிலாளருக்கு வழங்கப்பட்டயாதொரு தொழில் சார்ந்த ஆடை அல்லது சிறப்பு பாதுகாப்பு உடை அல்லது அவருக்கு வழங்கப்பட்ட சுயபாதுகாப்பு உபகரணத்தை எந்தவொரு தொழிலாளரும் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது.

12. தனிப்பட்ட ஆடைகளைவைப்பதற்கானவைப்பிடம்.-இந்த விவர அட்டவணைக்கு பொருந்தும் செயல்பாடுகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வசதியாக அணுகக்கூடிய நிலையில் தனிப்பட்ட ஆடைகளை வைத்துக்கொள்வதற்கு ஒரு தனி வைப்பிடம்வழங்கப்பட வேண்டும். தனிப்பட்ட ஆடைகள் மாசுபடுவதைத் தடுக்க, பத்தி 11 இன் துணை பத்தி (2) இன் கீழ் வகை செய்யப்பட்ட இடங்களிலிருந்து இது தனியாக இருக்கவேண்டும்.

13. தூய்மைப்படுத்திக்கொள்வது மற்றும் குளிப்பதற்கான வசதிகள்.-

(1) தூய்மையான நிலையிலும் நல்லபராமரிப்பிலும் தூய்மைப்படுத்திக்கொள்வதற்காகவும் குளிப்பதற்காகவும் போதுமான அளவில் இடங்களை பணியிலிலுள்ள ஒவ்வொரு 15 நபர்களுக்கும் அத்தகைய ஒரு இடம் என்ற வீதத்தில் சீரான தண்ணீர் விநியோகத்துடன் இந்த விவர அட்டவணையில் அடங்கியுள்ள செயல்பாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் பயன்படுத்துவதற்காக ஏற்படுத்தித்தர வேண்டும்.

(2) தூய்மைப்படுத்திக்கொள்வதற்கான இடங்களில் ஒரு மீட்டருக்கும் குறையாத இடைவெளியில் குழாய்கள் பொருத்தப்பட வேண்டும்.

(3) தூய்மைப்படுத்திக்கொள்வதற்கான மொத்த இடங்களின் எண்ணிக்கையில் ஒரு பாதிக்கும் குறையாமல் குளியலறைகள் ஏற்படுத்தித்தர வேண்டும்.

(4) தகுந்த பொருட்களால் உருவாக்கப்பட்ட சுத்தமான துண்டுகள் போதுமான அளவில் வழங்கப்பட வேண்டும்: அத்தகைய துண்டுகளை ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனித்தனியாக வழங்க வேண்டுமென ஆய்வாளர் உத்தரவிட்டால், அவ்வாறே வழங்கவேண்டும்.

(5) சோப்பு மற்றும் நகச்சுத்திகரிப்பு தூரிகைகள் போதிய அளவில் வழங்கப்பட வேண்டும்.

14. உணவருந்தும் அறை.-.

ஓய்வு இடைவேளைகளின்போது உணவருந்துவதற்காக பின்வரும் அறைகலன் வசதிகளை கொண்ட ஒரு அறை இந்த அட்டவணைக்கு பொருந்தும் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக தொழிற்சாலை வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வரவேண்டும்; அவையாவன

(a) போதுமான மேசைகள் மற்றும் சாய்மான வசதியுடனான இருக்கைகள்;

(b) உணவை சூடுபடுத்திக் கொள்வதற்வதற்கு போதுமான வழிவகைகள்

15. இளம்பருவத்தினர்களை பணியமர்த்துவதற்கான தடை.-

இந்த விவர அட்டவணையின் கீழ்வரும் எந்தவொரு செய்முறையிலும் யாதொரு இளம்பருவத்தினரையும் பணியமர்த்தப்பட கூடாது.

16. புகைபிடித்தல் தொடர்பான தடை.-இந்த விவர அட்டவணையின் கீழ் வரும் செய்முறைகள் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பகுதியிலும் யாதொரு நபரும் புகைபிடிக்கக்கூடாது. அத்தகைய தளவாடப்பகுதிகளில் புகைபிடிப்பதைத் தடைசெய்யும் அறிவிப்பு பலகை தமிழிலும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலும் வைக்கப்படவேண்டும்.

17. படங்களுடனான எச்சரிக்கை அறிவிப்புகள்.-பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்திலுள்ள எச்சரிக்கை அறிவிப்புகள் தமிழிலும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் எளிதில் படித்து புரிந்துகொள்ளும் மொழியிலும் அச்சிட்டு கல்நார் அல்லது கல்நாரால் ஆனபொருட்களை உற்பத்தி செய்கின்ற, கையாளுகின்ற அல்லது பயன்படுத்துகின்ற பணியிடங்களின் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

18. காற்றின் அளவு கண்காணிப்பு.-தொடர்ச்சியான அல்லது மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படுகிற செய்முறைகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் செயல்திறனை உறுதி செய்வதற்கு, காற்றில் உள்ள கல்நார் இழைத்துகள்களைக் கண்காணித்து மற்றும் தொழிலாளர்களை தனிப்பட்டவாறு கண்காணிக்கவேண்டும். இது ஒவ்வொரு பணிசுழற்சியிலும் ஒரு முறையாவது மேற்கொள்ளப்பட்டு, அதில் பெறப்பட்ட முடிவு பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும், மற்றும்

(a) பணியிட நிலைமைகளில் கணிசமான அளவில் மாற்றம் இருக்ககூடாது;

(b) இரண்டு (2) முந்தைய அளவீடுகளின் முடிவுகள் தொடர்புடைய கட்டுப்பாட்டு வரம்பில் பாதி அளவுக்குமேற்ப்பட்டு இருக்கக்கூடாது.

(c) அனைத்து தொழிற்சாலைகளும் இந்திய தர நிர்ணய அமைப்பு வரையறை செய்தபொருத்தமான தர அளவின்படி, சவ்வு வடிகட்டி சோதனையை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

விளக்கம்.- "சவ்வுவடிகட்டி சோதனை" என்பது ஒளியியல்நுண்ணோக்கி (சவ்வுவடிகட்டி முறை) மூலம் பணிச்சூழலில் காற்றில்கல்நார் இழைத்துகள்களின் செறிவை நிர்ணயிக்கும் முறையாக வரையறுக்கப்படுகிறது.

(19) மருத்துவக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்:

(1) பத்தி 1-இன் துணைப்பத்தி (1) -இல் குறிப்பிடப்பட்டுள்ள செய்முறையில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர் பணிபுரிகிற ஒவ்வொரு தொழிற்சாலையிலும், தொழிற்சாலை உரிமையாளர், தொழிலாளர் முதல் முறையாக பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள்,6 சான்றளிக்கும் அறுவை மருத்துவரால் பரிசோதனை செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும். அத்தகைய மருத்துவ பரிசோதனையில், நுரையீரல் செயல்பாட்டு சோதனை அடங்கும். முன்பக்கம், பின்பக்க மார்பக எக்ஸ்ரே படம், நியுமோகோனியாசிஸ் குறித்த நிலையான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் கதிர் வரைப்படத்துடன் ஒப்பிடப்படும். தொழிற்சாலையின் சான்றளிக்கும் அறுவை மருத்துவரால், தொழிற்சாலையில் அவ்வாறு பணிபுரிவதற்கு தகுதியானவர் என்று சான்றளிக்கப்பட்டிருந்தாலன்றி மற்றபடி தொழிற்சாலையில் தொழிலாளர் முதலில் பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குப் பின்னர் பணிபுரிவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்.

(2) மேற்சொன்ன செய்முறையில் பணியமர்த்தப்பட்ட ஒவ்வொரு தொழிலாளருக்கும், பன்னிரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் தொழிற்சாலையின் சான்றளிக்கும் அறுவை மருத்துவரால் மறுபரிசோதனை செய்யப்பட வேண்டும். அத்தகைய மறுபரிசோதனை தேவையென சான்றளிக்கும் அறுவை மருத்துவர் கருதினால், துணைபத்தி (1)-இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக முன்பக்க, பின்பக்க மார்பக எக்ஸ்ரே படம் நீங்கலான, அனைத்து நுரையீரல் செயல்பாட்டு சோதனைகளும் அதில் அடங்கும். இந்த நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனையானது, நியுமோகோனியாசிஸ் குறித்த நிலையான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் கதிர் வரைபடத்துடன் ஒப்பீடு செய்யப்பட்டு, நியுமோகோனியாசிஸ் குறித்த நிலையான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் கதிர் வரைபடங்களை பார்த்தறியும் துறையில் நிபுணத்துவம் பயிற்சி பெற்ற ஊடுகதிர் மருத்துவரால் பார்த்தறியப்படவேண்டும். மார்பக எக்ஸ்ரே பரிசோதனை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையேனும் மேற்கொள்ளப்படவேண்டும்.

(3) இந்த விவர அட்டவணை செயலுக்கு வரும் நாளன்று, மேற்சொன்ன யாதொரு செய்முறையில் பணியமர்த்தப்பட்ட ஒவ்வொரு தொழிலாளருக்கும், தொழிற்சாலை உரிமையாளரின் செலவில், நிர்ணயிக்கப்பட்ட நிலையான அளவு எக்ஸ்ரே தகடுகள் மற்றும் 300 மில்லி ஆம்பியருக்கு அதிகமான ஆற்றலுடைய எக்ஸ்ரே இயந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தகுதி வாய்ந்த கதிரியக்க வல்லுநரால் கதிரியக்க பரிசோதனை செய்யப்படவேண்டும். அத்தகைய எக்ஸ்ரே குறித்த அறிக்கை, மேற்சொன்ன நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் சான்றளிக்கும் அறுவை மருத்துவரிடம் அளிக்கப்படவேண்டும்.

(4) ஒரு தொழிலாளரை பரிசோதனை செய்த பின்னர், சான்றளிக்கும் அறுவை மருத்துவர் படிவம் எண் 27இல் உடற்தகுதி சான்றிதழை வழங்க வேண்டும். மேற்கொள்ளப்பட்ட மறு பரிசோதனைகளின் பதிவு, சான்றிதழில் பதிவுசெய்யப்பட வேண்டும். அச்சான்றிதழ் தொழிற்சாலை மேலாளரின் பொறுப்பில் வைத்து வரப்பட வேண்டும். மேலும், பரிசோதனைகளின் தன்மை மற்றும் முடிவுகள் உட்பட துணை பத்திகள் (1) மற்றும் (2) ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு பரிசோதனையின் முடிவும் படிவம் எண் 17இல் ஒரு சுகாதாரப் பதிவேட்டில் சான்றளிக்கும் அறுவை மருத்துவரால் பதிவு செய்யப்படவேண்டும். உடற்தகுதி சான்றிதழும் சுகாதாரப் பதிவேடும் ஆய்வாளரால் ஆய்வு செய்யப்படுவதற்கும் கேட்கும்போது அளிப்பதற்கும் தயாராக வைத்து வரப்பட வேண்டும்.

(5) தொழிலாளர் ஒருவர் மேற்சொன்ன பணிகளை தொடர்ந்து செய்து வந்தால் அவரின் உடல் நலனிற்கு மிகுந்த ஆபத்து ஏற்படும் என்னும் காரணத்தினால், அவர் பணியில் தொடர்வதற்குத் தகுதியற்றவர் என, யாதொரு காலத்தில் சான்றளிக்கும் அறுவை மருத்துவர் கருதும் நேர்வில், அவரது பரிசோதனை முடிவுகள் குறித்த விவரங்கள் மேற்சொன்ன சான்றிதழிலும் உடல்நலம் குறித்த பதிவேட்டிலும் பதிவு செய்வதோடு, மேற்சொன்ன நபர், மேற்சொன்ன பணிகளில் பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என அவர் கருதும்கால அளவையும் அந்த ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்படும் நபருக்கு, சான்றளிக்கும் அறுவை மருத்துவரின் கூற்றுப்படி, அவர் முழுமையாக பணியாற்ற திறனற்றவராக இருந்தாலன்றி, அவருக்கு மாற்றுப் பணிவசதிகள் ஏற்படுத்திக் கொடுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு, அவ்வாறு பொருத்தமான மறுவாழ்வு அமைத்துத்தரப்பட வேண்டும்.

(6) துணைப் பத்தி (5)-இல் கூறப்பட்டுள்ளவாறாக பணிபுரிவதற்குத் தகுதியற்றவராகக் கண்டறியப்பட்டுள்ள யாதொரு நபரும், சான்றளிக்கும் அறுவை மருத்துவர் பரிசோதித்த பின்னர், அத்தகைய செய்முறைகளில் பணியமர்த்துவதற்குத் தகுதிபெற்றிருப்பதாக அவருக்கு மீண்டும் சான்றளித்தாலன்றி, மற்றபடி மேற்சொன்ன செய்முறைகளில் மீண்டும் பணியமர்த்தப்படக் கூடாது அல்லது பணிபுரிவதற்கு அனுமதிக்கப்படக்கூடாது.

(7) ஏற்கெனவே பணியில் இருந்து சான்றளிக்கும் அறுவை மருத்துவரால் பணிபுரிவதற்கு தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்ட தொழிலாளர் ஒருவர், தொழிற்சாலை உரிமையாளரின் செலவில் தகுதிவாய்ந்த ஊடுகதிர் மருத்துவரால் ஒருமுறை பரிசோதிக்கப்பட்டு, மேற்சொன்ன செய்முறையில் மீண்டும் பணிபுரிவதற்கு தகுதியுடையவராக சான்றளிக்கப்பட்டிருந்தாலன்றி, மற்றபடி, பத்தி 1-இல் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செய்முறைகளில் பணிபுரிவதற்கு அனுமதிக்கப்படக்கூடாது.

(8) தொழிற்சாலை உரிமையாளரால் நியமிக்கப்பட்ட தொழிற்சாலையின் மருத்துவ அலுவலரால் மருத்துவ மேற்பார்வை செய்யும் நோக்கத்திற்காக, அவரின் பயன்பாட்டிற்காக தொழிற்சாலை வளாகத்தில் அறை அமைக்கப்பட்டு, முறையாக சுத்தம் செய்யப்பட்டு, போதுமான வெளிச்சத்துடனும், காற்றோட்டத்துடனும், திரைச் சீலையுடன், அலுவலக எழுதுபொருட்களுடன் கூடிய மேசை, நாற்காலிகள் மற்றும் ஏனைய வசதிகள் மற்றும் அத்தகைய பரிசோதனைகளுக்கான எக்ஸ்ரே ஏற்பாடுகள் உட்பட ஏனைய உபகரணங்கள் மற்றும் அவ்வப்போது தலைமை ஆய்வாளரால் வரையறுக்கப்பட்டவாறான அத்தகைய யாதொரு கருவிகள் ஆகியவற்றுக்கு வகை செய்யப்படவேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்ட தொழிற்சாலை மருத்துவ அலுவலர் பின்வரும் கடமைகளைச் செய்யவேண்டும். அவையாவன;

(அ) சுகாதார பதிவேட்டினை பராமரித்தல்

(ஆ) தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் மருத்துவ கண்காணிப்பை மேற்கொள்ளுதல்.

(இ) உடல் நலம் குன்றிய, காயமுற்ற அல்லது பாதிக்கப்பட்ட தொழிலாளரின் உடல்நலன், கல்வி மற்றும் மறுவாழ்வு குறித்து கவனம் செலுத்துதல்

(ஈ) ஆபத்தான பணிகள் மேற்கொள்ளப்படும் பணி அறைகளை ஆய்வு செய்தல் மற்றும் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் உடல்நலனை பாதுகாப்பதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்குதல் (9) கல்நார் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல்நலம் குறித்த அறிக்கை, அவர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து குறைந்தது 40 ஆண்டுகள் வரையில் அல்லது பணியிலிருந்து ஓய்வு பெற்ற அல்லது நிறுத்தப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரையில், இவற்றில் எது பிந்தையதோ அதுநாள் வரையில் வைத்து வரப்படவேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் அல்லது அவர்களது பிரதிநிதிகள் பார்வையிடக்கூடிய வகையில் அது இருக்கப்பட வேண்டும்7 (10) மேற்சொன்ன தொழிற்சாலை மருத்துவ அலுவலரால் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அறிக்கை மற்றும் உரிய பரிசோதனைகள் தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளரால் ஒப்புதல் அளித்த தனி பதிவேட்டில் வைத்து பராமரிக்கப்படவேண்டும். இந்த பதிவேடு ஆய்வாளர் ஒருவரால் ஆய்வு மேற்கொள்வதற்காக எப்பொழுதும் தயாராக வைத்திருக்கப்படுவதுடன் தேவைப்படும்பொழுது அளிக்கப்பட வேண்டும்

20. விதிவிலக்குகள்:- (1) யாதொரு தொழிற்சாலை குறித்த நேர்வில், விதிவிலக்கான சூழல்களுக்கு அல்லது நடைமுறைகளின் எண்ணிக்கைக்கு உட்படுதல் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால், இந்த விவரஅட்டவணையின் அனைத்து அல்லது ஏதேனும் விதிகள் தொழிற்சாலையின் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு தேவையற்றது என தலைமை ஆய்வாளர் மனநிறைவடைவாராயின், எழுத்து வடிவிலான சான்றிதழை அவர் அளிக்கலாம். அவரது விருப்பத்தின்பேரில், அந்த சான்றிதழை எந்த நேரத்திலும் அவர் திரும்பப்பெறலாம். மேலும், இது குறித்து அவர் ஏதேனும் நிபந்தனைகள் குறிப்பிட்டிருந்தாரெனில், அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு அத்தகைய அனைத்து அல்லது ஏதேனும் விதிகளிலிருந்து அத்தொழிற்சாலைக்கு அவர் விலக்களிக்கலாம்.

(2) தலைமை ஆய்வாளர் சம்பந்தப்பட்ட வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரதிநிதி அமைப்புகளுடன் ஆலோசித்த பின்னர், நிபந்தனைகளின் பேரிலும் தீர்மானிக்கப்பட்ட காலவரம்பிற்குட்பட்டும் இந்த விவர அட்டவணையில் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளிலிருந்து தற்காலிகமாக குறைத்துக் கொள்வதற்கு அரசிதழில் ஒரு அறிவிக்கை வாயிலாக அனுமதிக்கலாம்.

பிற்சேர்க்கை

படங்களுடனான எச்சரிக்கை அறிவிப்பு

(a) இந்த தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகிற அல்லது கையாளப்படுகிற கல்நார் / அதனால் ஏற்படும் கல்நார்தூசு உடல்நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியதாகும்.

(b) நீண்டகாலமாக கல்நார் தூசிகளை சுவாசிப்பது நுரையீரல் சிதைவுநோய் (Asbestosis) மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும்.

(c) பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.

(d) உங்கள் உடல்நலனை பாதுகாக்க பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொள்ளுங்கள்.

(e) இந்த பகுதிக்கு உணவு பொருட்கள் அல்லது பானங்கள் எதுவும் கொண்டு வரக்கூடாது.

(f) இந்த பகுதியில் புகைபிடிப்பதற்கு, உணவு உண்பதற்கும் அல்லது அருந்துவதற்கு மற்றும் புகையிலை மெல்லுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

(g) இந்த பகுதியில் குறைபாடேதுமின்றி தூய்மை தன்மையைப் பராமரித்து வரவேண்டும்.

(h) இந்த பகுதியில் உலர் துடைப்பத்தை பயன்படுத்தி தூய்மை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கல்நாரிலிருந்து வெளிவரும் யாதொரு தூசியையும் தூசு நீக்கி கருவியைப் (Vacuum Cleaner) பயன்படுத்தியே சுத்தம் செய்யவேண்டும் .

(i) கல்நாரால் அசுத்தமான ஒரு கோணிப்பை அல்லது கொள்கலனை கையால் சுத்தம் செய்யக்கூடாது; பொருத்தமான சுத்திகரிப்பு முறையால் அகற்றப்பட வகை செய்யப்பட வேண்டும்.

(j) அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் ஆடைகளும் தூசு நீக்கி கருவியால் தூசு நீக்கம் செய்யப்பட்டு அந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பொருத்தமான ஒரு இடத்தில் வைத்து வரப்பட வேண்டும்.

(k) முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அதிகாரமளிக்கப்படாத நபர்கள் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட நபர்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.

(l) உங்களுடைய உடல்நலப்பாதுகாப்பிற்குரிய குறிப்பிடப்பட்ட வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் குறித்து தெரிவித்தல்

(m) தொடர்ந்து மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம் அல்லது இருமலால் நீங்கள் அவதிப்பட்டால் உடனடியாக உங்களுடைய மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

ஆர். கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 16 February 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-02-16.Ordinary_7_Part-III_1a-T--Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2022-02-16.Ordinary_7_Part-III_1a-T--Sup.