© தமிழ்நாடு அரசு 2022
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 7] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 16, 2022 மாசி 4, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு–2053
பகுதி II—பிரிவு 1 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 113 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 1 செப்டம்பர் 2021.] அரசின் சேவைகள் வழங்கல் செயல்முறைகள் எளிமையாக்கப்படுவதற்காகவும், அத்தகைய சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் கொண்டு வருவதற்காகவும், ஒருவரின் அடையாளத்தை மெய்பிப்பதற்காக பல்வேறு ஆவணங்களை அளிக்கவேண்டியத் தேவையினை தவிர்ப்பதன் வாயிலாக ஒரு எளிய மற்றும் தடையற்ற முறையில் பயனாளிகள் நேரடியாக தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு வகை செய்வதற்காகவும் அரசின் சேவைகள் அல்லது பயன்கள் அல்லது மானியங்களை வழங்குவதற்கான ஒரு அடையாள ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுவதாலும்;
மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை (இதன்பின்னர் துறை என குறிப்பிடப்படும்) தமிழ்நாட்டின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு (இதன்பின்னர் திட்டங்கள் என குறிப்பிடப்படும்) தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் மற்றும் ஏனைய 15 நல வாரியங்கள் வாயிலாக (இதன்பின்னர் செயல்படுத்தும் முகமை என குறிப்பிடப்படும்) நலத்திட்டங்களை கவனித்து செயல்படுத்தி வருவதாலும்;
மற்றும், தற்போதுள்ள திட்ட வழிகாட்டுதல்களின்படி செயல்படுத்தும் முகமையால், பதிவு செய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு (இதன்பின்னர் பயனாளிகள் என குறிப்பிடப்படும்) நலத்திட்டங்களின் கீழ், உதவித் தொகைகள் வழங்கப்படுவதாலும்;
மேற்சொன்ன திட்டங்கள் தமிழ்நாடு அரசின் தொகுப்பு நிதியிலிருந்து தொடர் செலவினமாக மேற்கொள்ளப்பட்டவற்றுடன் தொடர்புடையது என்பதாலும்;
எனவே, தற்போது 2016 ஆம் ஆண்டு ஆதார் (நிதி மற்றும் ஏனைய மானியங்கள் பயன்கள் மற்றும் சேவைகளின் நிர்ணயிக்கப்பட்ட வழங்கல்கள்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2016) (இதன் பின்னர் மேற்சொன்ன சட்டம் என குறிப்பிடப்படும்) 7 ஆம் பிரிவின்படி, தமிழ்நாடு அரசு பின்வருவனவற்றை இதனால் அறிவிக்கின்றது, அவையாவன;
1. (1) மேற்சொன்ன திட்டங்களின் கீழ் பயன்களைப் பெறத் தகுதியுள்ள நபர் ஒருவர் ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும் அல்லது ஆதார் உள்ளதை மெய்பிக்க வேண்டும்.
(2) நலத்திட்டங்களின் கீழ் கிடைக்கக்கூடிய பயன்களைப் பெற விரும்புகின்ற ஆதார் எண் இல்லாத அல்லது இதுவரை ஆதார் பதிவு செய்யாத யாதொரு நபரும், நலத்திட்டத்திற்காக பதிவு செய்வதற்கு முன்னர், ஆதார் அட்டை பெறுவதற்காக பதிவு செய்ய வேண்டும்:
DTP-II-2-(7) (T Sup)—1
[ 1 ]2 ஆனால், மேற்சொன்ன சட்டத்தின் 3 ஆம் பிரிவின்படி ஆதார் பெறுவதற்கு அவர் தகுதியுடையவராக இருந்தால், அத்தகைய நபர்கள் ஆதார் பதிவு செய்வதற்காக ஏதேனும் ஆதார் பதிவு செய்யும் மையத்திற்கு (விவரங்களின் பட்டியல் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வலைதளத்தில் (www.uidai.gov.in.) கிடைக்கும்) செல்ல வேண்டும்.
(3) 2016 ஆம் ஆண்டு ஆதார் (பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் / நாளது வரையாக்குதல்) விதிமுறைகளின் 12 ஆம் விதிமுறையின் படி, துறையானது தன்னுடைய செயல்படுத்தும் முகமை வாயிலாக, இதுவரை ஆதார் பதிவினை செய்யாத பயனாளிகளுக்கு ஆதார் பதிவிற்கான வசதிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அந்த வட்டாரம் அல்லது வட்டத்தில் யாதொரு ஆதார் பதிவு மையமும் இல்லாத நேர்வில், துறையானது அதனை செயல்படுத்தும் அதன் முகமை வாயிலாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உரிய பதிவாளர்களுடன் ஒருங்கிணைந்து அல்லது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உரிய பதிவாளர் அவர்களாகவே ஆதார் பதிவு செய்வதற்கான வழிவகையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்:
ஆனால், தனிநபருக்கு ஆதார் பதிவெண் வழங்கப்படும் வரை, பின்வரும் அசல் ஆவணங்களை அளிப்பதன் பேரில், அத்தகைய நபருக்கு, நலத்திட்டங்களின் கீழ் கிடைக்கக்கூடிய பயன்களை வழங்க வேண்டும். அவையாவன:-
(அ) அவர் பதிவு செய்திருப்பாராயின், அவருடைய ஆதார் பதிவு அடையாள சீட்டு; மற்றும்
(ஆ) பின்வரும் ஆவணங்களில் ஏதேனுமொன்று, அதாவது;
(i) புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக கணக்குப் புத்தகம்; அல்லது
(ii) நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை; அல்லது
(iii) கடவுச்சீட்டு; அல்லது
(iv) குடும்ப அட்டை; அல்லது
(v) வாக்காளர் அடையாள அட்டை; அல்லது
(vi) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் அட்டை; அல்லது
(vii) புகைப்படத்துடன் கூடிய விவசாய கடன் அட்டையின் வங்கி கணக்குப் புத்தகம்; அல்லது
(viii) 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 59/1988) கீழ் உரிமம் வழங்கும் அதிகார அமைப்பினால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிம அடையாள அட்டை; அல்லது
(ix) அரசிதழில் பதிவுபெற்ற அலுவலரால் அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட அரசு முத்திரையுடனான அத்தகைய நபரின் புகைப்படத்துடன் கூடிய அலுவல் முறையிலான கடிதத்தில் அடையாளச் சான்றிதழ்; அல்லது
(x) துறையால் குறிப்பிடப்பட்ட ஏனைய யாதொரு ஆவணம்
ஆனால், துறையால் இந்நோக்கத்திற்காக குறிப்பிட்டு நியமிக்கப்பட்ட ஒரு அலுவலரால் மேற்சொன்ன ஆவணங்கள் சரிபார்க்கப்படலாம்.
2. உரிய நலத்திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்குரிய பயன்களை எளிதில் வழங்கும் வகையில், மேற்சொன்ன தேவையான ஏற்பாட்டு முறைகள் குறித்து பயனாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஊடகம் வாயிலாக பரந்த அளவிலான விளம்பரம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை அதன் செயல்படுத்தும் முகமை வாயிலாக துறை மேற்கொள்ளவேண்டும்.
3. அனைத்து நேர்வுகளிலும் உரிய வகையில், பயனாளிகளுடைய செயல்படாத பயோமெட்ரிக் (உயிரளவையியல்) அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஆதார் அட்டையை உறுதிப்படுத்துவதில் தவறு ஏற்படும் போது அதனை தீர்வு செய்வதற்கும் பின்வரும் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதாவது:-
(a) கைவிரல் ரேகை பதிவு தெளிவாக இல்லாத நேர்வில், ஆதார் உறுதிப்படுத்துவதை உறுதி செய்யும் பொருட்டு, கருவிழி ஊடுகதிர் அல்லது முகத்தினை உறுதிப்படுத்தும் வசதி மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால், தடையின்றி பயன்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, கைவிரல் ரேகை உறுதிப்படுத்துதலுடன், முகத்தினை உறுதிப்படுத்துதல் அல்லது கருவிழி ஊடுகதிர்களுக்கான வழிவகைகளை துறையானது அதனுடைய செயல்படுத்தும் முகமை வாயிலாக மேற்கொள்ளவேண்டும்.
(b) கைவிரல் ரேகைகள் அல்லது கருவிழி ஊடுகதிர் அல்லது முக அடையாள உறுதிப்படுத்துதல் மூலம் பயோமெட்ரிக் (உயிரளவையியல்) உறுதிப்படுத்துதல் முழுமையடையாத நேர்வில், சாத்தியமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடங்களில் உறுதிப்படுத்துதலுக்காக, நேர்விற்கேற்ப ஆதார் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் கடவுச்சொல் அல்லது நேர அடிப்படையிலான ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் கடவுச்சொல் வழங்கப்படலாம்.
(இ) பயோமெட்ரிக் (உயிரளவையியல்) அல்லது ஆதார் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் கடவுச்சொல் அல்லது நேர அடிப்படையிலான ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் கடவுச்சொல் வாயிலாக உறுதிப்படுத்துவது சாத்தியமில்லாத மற்ற அனைத்து நேர்வுகளிலும், அசல் ஆதார் கடிதத்தில் அச்சிடப்பட்ட QR குறியீடு வாயிலாக உறுதிப்படுத்துவது சரிபார்க்கப்படக் கூடியவர்களுக்கான நேரடி ஆதார் கடிதத்தின் அடிப்படையில், இத்திட்டத்தின் கீழ் உள்ள பயன்கள் அளிக்கப்படும். மேலும், அவசியமான இடங்களில் QR குறியீடு உணர் கருவிகளை அமைப்பதற்கான போதிய ஏற்பாடுகள் துறையின் செயல்படுத்தும் முகமை வாயிலாக துறையால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
34. மேற்சொன்னவற்றுடன், கூடுதலாக, நலத்திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகள் அவருக்கு உரிய பயன்களை எவரும் இழக்கவில்லை என்பதை உறுதி செய்யும் பொருட்டு, 19.12.2017 ஆம் நாளிட்ட இந்திய அரசின், அமைச்சரவை செயலகத்தின், நேரடி பயன் பரிமாற்றத் திட்ட (DBT) அலுவலக குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு விதிவிலக்கை கையாளும் வழிமுறையைப் துறையானது அதன் செயல்படுத்தும் முகமை வாயிலாக பின்பற்ற வேண்டும்.
5. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயல்பாட்டிற்கு வரும்.
இரா. கிர்லோஷ் குமார்,
அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.