Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specifi c character or of particular interest to the public issued by Secretariat Departments

Published 16 February 2022

Type
Ordinary
Gazette no.
7
Part
Part II
Notifications
HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT - Physically Challanged persons Multipurpose Health Worker-Male - Appointment Order Issued
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2022-02-16.Ordinary_7_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2022 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 7] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 16, 2022 Maasi 4, Pilava, Thiruvalluvar Aandu–2053

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை Pages பணியமைப்பு-பொது சுகாதாரம்-பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பணியிடம் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நிரப்பிட பொருத்தமான மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தல்-ஆணை வெளியிடப்படுகிறது. .. .. .. .. 22[21] DTP—II-1—7 22 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

NOTIFICATIONS BY GOVERNMENT

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

No.II(1)/MSW/18/2022.

[பணியமைப்பு-பொது சுகாதாரம்-பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பணியிடம் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நிரப்பிட பொருத்தமான மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தல்-ஆணை வெளியிடப்படுகிறது.] கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:—

[அரசாணை (நிலை) எண் 42, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு (எல்1)த் துறை, 29 ஜனவரி 2022,

தை 16, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2053.]

படிக்க:

1. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் கடித எண் 828/மபதே/இ5/2019,

நாள் 20-11-2019, 01-07-2020 மற்றும் 22-03-2021

2. மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் கடித ந.க. எண் 3908/பணியமர்த்தல்/2021,

நாள் 16-08-2021,

3. பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்குநர் அவர்களின்

கடித எண் 69080/பநோ1/எஸ்1/2016, நாள் 01-10-2021

ஆணை: எண் 42, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, 29 ஜனவரி 2022.

மேலே ஒன்றில் படிக்கப்பட்ட கடிதத்தில் மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்களிக்குமாறும், பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடம் நிரப்புவது தொடர்பாக அனுப்பப்பட்ட அறிவிக்கைக்கு ஒப்புதல் வழங்குமாறும் கோரியது.

2. மேலே இரண்டில் படிக்கப்பட்ட கடிதத்தில் மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் அரசாணை (நிலை) எண் 51, மாற்றுத் திறனாளிகள் நலத் (மா.தி.ந 3.2) துறை, நாள் 26-12-2017 அனைத்துத் துறைகளிலும் உள்ள C மற்றும் D தொகுதியில் உள்ள அனைத்து பதவிகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்க ஏற்ற பதவிகள் என மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016, சட்ட பிரிவு 33(1)-ன்படி கண்டறியப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது மற்றும் அரசாணை (நிலை) எண் 294, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (எண் 2) துறை, நாள் 13-10-2010-ல் பல்நோக்கு சுகாதார பணியாளர் நிலை-2 (ஆண்) (Multipurpose Health Worker-Male) பதவிக்கு பல்வேறு பொறுப்புகள் குறித்து ஆணையிடப்பட்டுள்ளது எனவும் அவ்வாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளால் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே, குள்ளத்தன்மை, ஒரு கால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு கை பாதிக்கப்பட்டவர்கள், அமிலவீச்சு தன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற மாற்றுத் திறனாளிகளால் இப்பணிகளை மேற்கொள்ள இயலும் என்ற நிலையில் பல்நோக்கு சுகாதார பணியாளர் நிலை-2 (ஆண்) (Multipurpose Health Worker-Male) என்ற பதவிக்கு மேற்காணும் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளார்.

3. மேலே மூன்றில் படிக்கப்பட்ட கடிதத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்குநர் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) (Multipurpose Health Worker-Male) என்ற பதவிக்கு குள்ளத்தன்மை, ஒரு கால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு கை பாதிக்கப்பட்டவர்கள், அமில வீச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்யலாம் என்று மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் பரிந்துரைக்கு தனது இசைவினை அளித்துள்ளார்.

4. மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) (சுகாதார ஆய்வாளர் நிலை-2) பதவிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டில் எவ்வகையான மாற்றுத் திறனாளிகளை பணியமர்த்தலாம் என அரசு கவனமுடன் பரிசீலித்து ஒரு கால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு கை பாதிக்கப்பட்டவர்கள், அமிலவீச்சு தன்மையால் பாதிக்கப்பட்டவர்கள், குள்ளத்தன்மை (LD, OA, OL) (AC, DF) ஆகிய வகையிலான மாற்றுத் திறனாளிகளை பணியமர்த்தலாம் என முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.

5. இவ்வாணை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அ.சா.எண் 14967/ மாதிந-2/2021, நாள் 05-01-2022ல் அளித்த ஒப்புதலின்படி வெளியிடப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 16 February 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-02-16.Ordinary_7_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2022-02-16.Ordinary_7_Part-II_Section-1.