©
GOVERNMENT OF TAMIL NADU 2022
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Rs. 3.20 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 14] CHENNAI, WEDNESDAY, APRIL 6, 2022 Panguni 23, Pilava, Thiruvalluvar Aandu–2053
Part VI—Section 2
Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை
2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்கட்டணங்கள் மற்றும்
அபராதங்கள் ஒழுங்குமுறை விதிகள் .. .. .. .. .. 34-38 GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS
Loss of Certificates .. .. .. .. .. .. .. 39
[33]
DTP—VI-2 (14)34 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை
2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்
கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் ஒழுங்குமுறை விதிகள்
(Lr. No.TNERC/Legal/50/D.No. 351/2022)
(அறிவிக்கை எண் த.மி.ஒ.ஆ./க மற்றும் அ-1/2022)
No. VI(2)/32/2022.
2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (சட்ட எண் 36/2003) 86 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (எ) உட்கூறினால் வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மற்றும் இதன்பொருட்டு அதனை இயல்விக்கும் அதிகாரங்கள் அனைத்தையும் செலுத்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதன்மூலம் பின்வரும் ஒழுங்குமுறை விதிகளைச் செய்கிறது:-
இந்த ஒழுங்குமுறை விதிகள், 8.1.2004 நாளிட்ட அறிவிக்கை எண் த.மி.ஒ.ஆ./க & அ/4/2 – ல் வெளியிடப்பட்டதும், அதன் பின்பு, 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டதுமான, 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் ஒழுங்குமுறை விதிகளையும், அதன்படி மேற்சொன்ன அரசிதழில் வெளியிடப்பட்ட திருத்தங்கள் அனைத்தையும் ரத்து செய்கிறது.
1. (i) இந்த ஒழுங்குமுறை விதிகள் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் ஒழுங்குமுறை விதிகள் என்று வழங்கப் பெறும்.
(ii) இவை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.
2. இந்த ஒழுங்குமுறை விதிகளில் பயன்படுத்தப்பட்ட சொற்களும், சொற்றொடர்களும், 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தில் அல்லது ஆணையத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிற ஒழுங்குமுறை விதிகளிலுள்ள அதே பொருள்களை உடையனவாகும்.
3. (i) ஆணையத்திடம் அளிக்கப்படும் மனு, விண்ணப்பம், குறையீடு ஒவ்வொன்றும், இந்த ஒழுங்குமுறைவிதிகளில் குறித்துரைக்கப்பட்ட உரிய கட்டணங்களைச் செலுத்திய பின்பு ஏற்கப்படுதல் வேண்டும்.
(ii) இந்த ஒழுங்குமுறை விதிகளின்படி அல்லது அலுவல் நடத்துமுறை ஒழுங்குமுறை விதிகளின்படி வகுத்துரைக்கப்பட்டவாறு செலுத்தத்தக்க கட்டணங்கள் அல்லது அபராதங்கள், சென்னையில் செலுத்தத்தக்க வங்கி வரைவோலை அல்லது வங்கிக் காசோலை வாயிலாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் பெயரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ செலுத்தப்படுதல் வேண்டும். ரூ.1000/-க்கு மேற்படாத தொகைகளை, செயலாளர் பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். உரிமதாரர்கள், சென்னையில் செலுத்தத்தக்க காசோலைகளை வழங்க அனுமதிக்கப்படலாம்.
(iii) ஆணையத்தின் செயலாளரால் மேலேயுள்ளவாறு பெறப்பட்ட பணச்செலுத்துகைகள், ஆணையத்தினால் அவ்வப்போது பணிக்கலாகும் வங்கிக் கிளைகளில், ஆணையத்தினால் வைத்து வரப்படும் வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்யப்படுதல் வேண்டும்.
(iv) இதன் பொருட்டு வெளியிடப்படும் ஆணையின் மூலமாக இந்த ஒழுங்குமுறைவிதிகளில் வகைசெய்யப்பட்டவாறு செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தொகைகளுடன் அல்லது அபராதத்தொகைகளுடன், சேர்க்க, அவற்றை திருத்த, மாற்ற அல்லது கைவிட ஆணையம் உரிமையுடையது ஆகும்.
4. பொதுமக்கள் வசதி மற்றும் தகவல் ஆகிய நோக்கங்களுக்காக ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுதல் வேண்டும்.
(i) உரிமம் வழங்குவதற்கான மனு (L.P.) ஆகப் பதிவு செய்யப்படும்.
(ii) மின் கட்டண மனு (T.P.) மனுவாகப் பதிவு செய்யப்படும்.
(iii) தீர்மானப்பூசல் மனு (D.R.P.) ஆகப் பதிவு செய்யப்படும்.
(iv) மறு ஆய்வு மனு (R.P.) ஆகப் பதிவு செய்யப்படும்.
(v) பல்வகை மனு (M.P.) ஆகப் பதிவு செய்யப்படும்.
(vi) மின்கொள்முதல் ஒப்புதல் மனு (PPAP) ஆகப் பதிவு செய்யப்படும்.
(vii) மனுக்கள் செல்லத்தக்கவையா என்பதை விசாரிப்பதற்காக பட்டியலிடப்பட்ட அல்லது கேட்கப்பட வேண்டிய மனுக்கள் முன் பதிவு வழக்கு (P.R.C.) என பதிவு செய்யப்படும்.
Apr. 6, 2022] TAMIL NADU GOVERNMENT GAZETTE 35(viii) மறு விசாரணைக்காக அனுப்பப்படும் வழக்குகள் (R.A.) என பதிவு செய்யப்படும்.
(ix) மாற்றப்பட்ட வழக்குகள் (T.A.) என பதிவு செய்யப்படும்.
(x) மின்பயன்பாடு குறித்தும் அல்லது பொதுத்தன்மையுடையதும், பல்வகை மனுவின் கீழ் வராதவையுமான மின்நுகர்வோர் குறையீடுகள் வழக்கமான அலுவலக தீர்வு மனுவாக ஏற்கப்பட்டு தீர்வு செய்யப்படும்.
5. 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்படி குறிப்பிடப்பட்டவாறு மாநிலத்திற்குள் மின் செலுத்துகையில் ஈடுபட்டுள்ள உரிமதாரர்களும் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களால் மின்சுமை பகுப்பு மையத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள், அவ்வப்போது ஆணையத்தினால் முடிவு செய்யப்படுதல் வேண்டும்.
6. (அ) மின்கட்டமைப்பு, பெருமளவு அல்லது சில்லறை மின்சக்தி ஆகியவற்றிற்கு மின்கட்டண வீதத்தை தீர்மானித்தல், (ஆ) மின்செலுத்துகைக்கான மின்கட்டணவீதம் மற்றும் அந்த மின்கட்டணத்திற்கான மனு, (இ) மின்சக்தி வாங்கும் அல்லது கொள்முதல் செய்முறைக்கு ஒப்புதலளிப்பதற்கான மனுக்கள் / விண்ணப்பங்களுக்கான, (ஈ) பல்வகைப்பட்டவைகளுக்கான கட்டண கட்டமைப்பு ஆகியவை கீழேயுள்ள அட்டவணையில் அளிக்கப்பட்டுள்ளது.
அட்டவணை
| வரிசை எண் | விண்ணப்பம் / மனுவின் தன்மை | கட்டணங்கள் |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1. | மின்கட்டமைப்பு, பெருமளவு அல்லது சில்லறை மின்சக்தி கட்ணத்தை முடிவு செய்தல். | தற்போதுள்ள உரிமதாரரின் முந்தைய ஆண்டிலுள்ள வருவாய் வரவினம் அல்லது எதிர்பார்க்கப்படும் வருவாய் வரவினம் மற்றும் புதிய உரிமதாரரைப் பொறுத்தவரை ஆணையத்தினால் மின்கட்டணம் எந்த ஆண்டிற்காக முடிவு செய்யப்பட்டதோ அந்த ஆண்டிலுள்ள வருவாய்கள், இவற்றில் 0 . 0 2 % , ே ந ர் வு க் கே ற் ப அ தி க ப ட் ச வ ர ம் பு ரூ.2.25 கோடிகள். |
| 2. | மின்செலுத்தல் மின் கட்டணத்தை முடிவு செய்தல் | தற்போதுள்ள உரிமதாரரின் முந்தைய ஆண்டிலுள்ள வருவாய் வரவினம் அல்லது எதிர்பார்க்கப்படும் வருவாய் வரவினம் மற்றும் புதிய உரிமதாரரைப் பொறுத்தவரை ஆணையத்தினால் மின்கட்டணம் எந்த ஆண்டிற்காக முடிவு செய்யப்பட்டதோ அந்த ஆண்டிலுள்ள வருவாய்கள் இவற்றில் 0 . 0 2 % , ே ந ர் வு க் கே ற் ப அ தி க ப ட் ச வ ர ம் பு ரூ.25 லட்சங்கள். |
| 3. | 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் 32 (3) ஆம் பிரிவின்படி மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தும் மாநிலத்திற்குள் மின் செலுத்துகை பணியில் ஈடுபட்டுள்ள உரிமதாரர்களிடமிருந்தும் மாநில மின்சுமை பகுப்பு மையத்தினால் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்கள் மற்றும் செலவு கட்டணங்களுக்கான ஒப்புதலளிப்பு | முந்தைய ஆண்டின் வருவாய் வரவினத்தில் 0.02%. |
| 4. | மேலேயுள்ள (1), (2),(3) இல் உள்ள ஆணைக்கான மறு ஆய்வு- | |
| (அ) மூல மின்கட்டணவீத மனுதாரர்களால் தாங்களாகவே செய்யப்படும் கோரிக்கை | மூல மின்கட்டணவீத மனு தாக்கல் செய்யப்படும் சமயத்தில் செலுத்தப்பட்ட கட்டணங்களில் 5% | |
| (ஆ) 1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின்படி (சட்ட எண் 1/1956) பதிவு செய்யப்பட்ட கழகம் / குழுமம் / அமைப்புகள் / கூட்டாண்மை அமைப்பு அல்லது பிற நிறுவனங்களால் செய்யப்படும் கோரிக்கை | ரூ.15,000/- | |
| (இ) தனிப்பட்ட மின் நுகர்வோரால் செய்யப்படும் கோரிக்கை | ரூ.1000/- | |
| 5. | ஆ ை ண ய த் தி ன ா ல் மி ன் ச க் தி வ ா ங் கு ை க உ ட ன் ப ா ட் டி ற் கு ஒப்புதலளிக்கப்படாது இருக்கையில், மூலதனச் செலவுகளை முடிவு செய்தல் | மெகாவாட் ஒன்றுக்கு அல்லது அதன் பகுதிக்கு ரூ.2000/- |
| 6. | மின் சக்தி வாங்குகை அல்லது மின்சக்தி கொள்முதல் செய்முறை தொடர்பான உடன்பாட்டிற்கான ஒப்புதலளிப்பு:- | |
| (i) அந்த உடன்பாடு எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக ஓராண்டு மற்றும் அதற்கு மேலுமான கால அளவிற்கு இருக்குமானால் | மெகாவாட் ஒன்றுக்கு அல்லது அதன் பகுதிக்கு ரூ.2500/- | |
| (ii) அந்த உடன்பாடு இணை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளடங்கலாக மரபுசாரா மற்றும் எரிசக்தி வளங்கள் தொடர்பாக ஓராண்டு மற்றும் அதற்கு மேலுமான கால அளவிற்கு இருக்குமானால் | மெகாவாட் ஒன்றுக்கு அல்லது அதன் பகுதிக்கு ரூ.2000/- |
| வரிசை எண் | விண்ணப்பம் / மனுவின் தன்மை | கட்டணங்கள் | ||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ||
| (iii) அந்த உடன்பாடு எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக ஓராண்டுக்குக் குறைவான கால அளவிற்கு இருக்குமானால் | மெகாவாட் ஒன்றுக்கு அல்லது அதன் பகுதிக்கு ரூ.1250/- | |||
| (iv) அந்த உடன்பாடு இணை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளடங்கலாக மரபுசாரா மற்றும் எரிசக்தி வளங்கள் தொடர்பாக ஓராண்டுக்குக் குறைவான கால அளவிற்கு இருக்குமானால் | மெகாவாட் ஒன்றுக்கு அல்லது அதன் பகுதிக்கு ரூ.1000/- | |||
| குறிப்பு : ஆணையம் மின் கொள்முதல் உடன்பாடிற்கு ஒப்புதலளிப்பதற்கு மறுக்கின்ற போது மேற்சொன்ன விண்ணப்பத்தினை தாக்கல் செய்யும் நேரத்தில் செலுத்தப்பட்ட கட்டணங்கள், மேற்சொன்ன மனு அல்லது விண்ணப்பத்தினை செயல்முறைப் படுத்துகையில், ஆணையத்தினால் முடிவுசெய்யப்படலாகும், செய்ய நேர்ந்த நியாயமான செலவுகள் எதையும் கழித்த பின்பு திருப்பி அளிக்கப்படுதல் வேண்டும். | ||||
| 7. | மின்சக்தி வாங்குகை அல்லது மின்சக்தி கொள்முதல் பேரில் பிறப்பிக்கப்பட்ட மறு ஆய்வு ஆணை | ரூ.50,000/- | ||
| 8. | (அ) பிற பட்டியலிடப்பட்ட வகைகளில் உள்ளடங்காததும், தனி நபர்களால் தாக்கல் செய்யப்படுபவையுமான பல்வகைப்பட்ட மனுக்கள் | ரூ.1000/- | ||
| (ஆ) பிற பட்டியலிடப்பட்ட வகைகளில் உள்ளடங்காததும் 1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின்படி (சட்டம் 1/1956) பதிவு செய்யப்பட்ட அமைப்பு எதனாலும் அல்லது நிறுவனம் அல்லது பிற கூட்டாண்மை அமைப்பு / அரசு உறுப்பு நிறுவனங்கள் எவையாலும் தாக்கல் செய்யப்படுபவையுமான பல்வகைப்பட்ட மனுக்கள் | ரூ.25,000/- | |||
| (இ) தனிநபர் எவராலும் ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்யப்பட்ட முதன்மை மனு எதிலும் வழக்கிடை மனு (I.A.) எதற்காகவும் | ரூ.500/- | |||
| (ஈ) 1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட அல்லது பிற இயற்றுச் சட்டங்களின் படி பதிவு செய்யப்பட்ட பிற நிறுவனம் அல்லது பிற கூட்டாண்மை அமைப்பு எதனாலும் தாக்கல் செய்யப்படும் (I.A.) வழக்கிடை மனுவிற்காக | ரூ.1000/- | |||
| (உ) மின்நுகர்வோரின் அல்லது மின் உற்பத்தியாளர்களின் பிற சங்கம் எதனாலும் தாக்கல் செய்யப்படும் (I.A.) வழக்கிடை மனு | ரூ.1000/- | |||
| 9. | (அ) பிற பட்டியலிடப்பட்ட வகைகளில் உள்ளடங்காத சங்கங்கள் அல்லது குழுமங்களால் தாக்கல் செய்யப்பட்ட பல்வகைப்பட்ட மனுக்கள் | ரூ.2,50,000/- | ||
| (ஆ) பிற பதிவு செய்யப்பட்ட சங்கங்களால் தாக்கல் செய்யப்படும் பல்வகை மனுக்கள் | ரூ.10,000/- | |||
| இந்த ஒழுங்குமுறை விதிகளின் 6 (8) மற்றும் 6(9) ஒழுங்குமுறை விதிகளின் நோக்கத்திற்காக, 1. பல்வகைப்பட்ட மனுக்கள் என்பது பொருள்தந்து உள்ளடக்குவதாவது, பின்வருவனவாகும். (அ) ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட, ஆணையத்தின் முந்தைய ஆணைகளைச் செயல்படுத்துவதற்கான மனு அல்லது 142 ஆம் பிரிவின்படியான மனுக்கள் உள்ளடங்கலாக மின் நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றத்தினால், மின்குறைதீர்ப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட ஒழுங்குமுறைவிதி எதனையும் அல்லது ஆணை எதனையும் நிறைவேற்றுவதற்கான மனு. (ஆ) முதல் நேர்வில் கருத்து கேட்கும் தன்மையதாக இராததும் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டதுமான ஆணைகள் / ஒழுங்குமுறை விதிகள் பற்றி விளக்கம் கோரும் மனுக்கள் (இ) பட்டியலிடப்பட்ட வகைகளில் உள்ளடங்காத மனுக்கள் அனைத்தும். (ஈ) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அல்லது சட்ட மாற்றத்தினாலோ பணக்கோரிக்கைக்குரியதாக இராத விளம்புகைக்குரிய நிவாரணம், ஆனால் தனி நபரின் மின்நுகர்வோர் பூசல், மின்நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றத்தினால் அல்லது மின்குறை தீர்ப்பாளரால் தீர்க்கப்படக்கூடிய மனுக்களில் உள்ளடக்காதவையும் மற்றும் துறை நடவடிக்கைகள் அல்லது கண்காணிப்புக்குழுவின் விசாரணை கோரும் உரிமதாரரின் அலுவலகப் பணியாளர்களின் அலுவல்முறை தவறான நடத்தையின் பேரிலுமான மனுக்கள் மற்றும் அனுமதியில்லாமல் பயன்படுத்தும் மின்சாரம் அல்லது மின் திருட்டு தொடர்பான மனுக்கள் ஆகியவற்றை உள்ளடக்காது. |
| வரிசை எண் | விண்ணப்பம் / மனுவின் தன்மை | கட்டணங்கள் |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 10. | இந்தச் சட்டத்தின் 86(1)(ஊ) பிரிவின்படி உரிமதாரர்களுக்கும் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையேயான பூசல்களை நீதிமுறையில் தீர்ப்பதற்கு அல்லது 2003 ஆம் ஆண்டு மின்சார சட்டத்தின் பிற வகைமுறை எதனின் அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதிகள், விதிகள் மற்றும் ஆணைகளின்படியான பூசல்களை நீதிமுறையில் தீர்ப்பதற்காக | படி முறை வீதம் (i) ரூ.100 கோடிகள் வரை கோரிக்கை / பூசலிலுள்ள தொகையின் 1% (ii) கோரிக்கையின் / பூசலிலுள்ள தொகையின் ஒரு பகுதி ரூ.100 கோடிக்கு அதிகமாகவும் ரூ.150 கோடிகள் வரையில் – அத்தகைய பகுதியின் 0.75% (iii) கோரிக்கையின் / பூசலிலுள்ள தொகை / ஒரு பகுதி ரூ.150 கோடிகளுக்கு மேலானால் – அத்தகைய பகுதியின் 0.50%/ இவை அனைத்தும் குறைந்தபட்சம் ரூ.75,000/- க்கு உட்பட்டு |
| 11. | மறு ஆய்வு மனுவிற்கான கட்டணங்கள் | |
| (ii) பல்வகை மனுவில் ஆணையத்தின் ஆணைகளுக்கு எதிராக தனிநபரால் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு | ரூ.500/- | |
| (iii) 1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின்படி (சட்ட எண் 1/1956) பதிவு செய்யப்பட்ட நிறுவனம் எதனாலும் அல்லது நிறுமம் அல்லது பிற கூட்டாண்மை அமைப்பு / அரசு உறுப்பு நிறுவனங்கள் எவையாலும் பல்வகை மனுவில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு. | ரூ.6000/- | |
| (iv) பல்வகை மனுவின் ஆணைகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மின் நுகர்வோர் அல்லது மின் உற்பத்தியாளர்களின் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு | ரூ.25,000/- | |
| (v) பூசல்களைத் தீர்க்கும் மனுவில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு | மூல பூசல்களை தீர்க்கும் மனுவில் செலுத்தப்பட்ட கட்டணங்களில் 12% | |
| இந்த ஒழுங்குமுறைவிதிகளின் 10 ஆம் ஒழுங்குமுறை விதியின் நோக்கத்திற்காக பூசல் மற்றும் கோரிக்கை குறித்த வரையுரைகள் பொருள் தந்து உள்ளடக்குவதாவது: (அ) மனுவின் கோரிக்கையிலோ அல்லது மனுவின் பகுதி எதிலும் வெளிப்படையாக விவரிக்கப்பட்ட அல்லது அதோடு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் காணப்படும் அனைத்துப் பணக்கோரிக்கைகள். (ஆ) கேட்புத்தொகை அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்ட கோரிக்கை (இ) செயற்படுத்த தடைகோரும் வங்கிப் பொறுப்புறுதி அல்லது செயலாக்கல் பொறுப்புறுதி அல்லது இழப்பீடுகளின் மதிப்பு (ஈ) பணக் கோரிக்கை தொடர்பானதாக இராத பூசல் எதுவும், ஆனால், குறைந்தபட்ச கட்டணம் செலுத்துவதற்கு உட்பட்டு ஆணையத்தினால் நீதி முறைத்தீர்ப்பினை வேண்டுறுத்தல். | ||
| 12. | ஆணையத்தின் ஆணைகள் அல்லது பதிவுருக்களின் ஆய்வு | (2 மணி நேரம் வரம்பிற்குட்பட்டு) நாள் ஒன்றுக்கு ரூ.250/- |
| 13. | ஆணையத்தின் ஆவணங்கள் / ஆணைகளின் நகல்களை வழங்குதல் | பக்கம் ஒன்றுக்கு ரூ.5/- |
| 14. | மின் பணி நிறுவனத்தின் செயற்பாட்டிற்கு எதிராக பயன்படுத்துபவரால் / மின் நுகர்வோரால் கொடுக்கப்படும் முறையீடு | கட்டணம் இல்லை |
7. வெவ்வேறு குற்றங்கள், சட்டத்தின் வகைமுறைகள் மற்றும் ஆணையத்தின் உத்தரவுகளுக்கு இணங்கி நடக்காமை முதலியவற்றிற்கான அபராதங்கள் மற்றும் பணத்தண்டங்கள், சட்டத்தில் மற்றும் அலுவல் நடத்துமுறை ஒழுங்குமுறை விதிகளிலுள்ள அந்தந்த வகைமுறைகளின் வரம்புக்குட்பட்டதாகும்.
8. சட்டத்தின் 127 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி மதிப்பீட்டு அலுவலரின் ஆணைகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவிற்காக செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் ஆணையத்தினால் தனித்தனியாக குறித்துரைக்கப்படுதல் வேண்டும்.
9. (1) இந்தக் கட்டணங்கள் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் உரிமம் வழங்குதலின்படி உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பத்துடன் செலுத்தப்பட வேண்டும்.
(2) 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (உரிமம் வழங்குதல்) ஒழுங்குமுறை விதிகளின்படி உரிமதாரரால் செலுத்தப்பட வேண்டிய உரிமக்கட்டணம்38 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE
அட்டவணை
உரிமக்கட்டணங்கள் செலுத்துகை
| வரிசை எண் | விவரங்கள் | கட்டணங்கள் |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| (அ) | தொடக்க நிலை உரிமக் கட்டணங்கள் | |
| (i) மின் செலுத்தல் | குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் மற்றும் அதிகபட்சம் ரூ.20 லட்சத்திற்குட்பட்டு, திட்ட மதிப்பீட்டில் காட்டப்படும் திறன் ரூ.1000/- மெகாவாட் | |
| (ii) மின் பகிர்மானம் | குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் மற்றும் அதிகபட்சம் ரூ.10 ல ட் ச த் தி ற் கு ட் ப ட் டு , அ ந் த ஆ ண் டி ன் ே ப ா து விற்கப்படுவதற்கு மதிப்பிடப்பட்ட மின்சாரத்தின் யூனிட் ஒன்றுக்கு 0.002 காசுகள். | |
| (iii) வணிகம் | குறைந்தபட்சம் 1 லட்சத்திற்கு உட்பட்டு வணிகம் செய்யப்படுவதற்கு மதிப்பிடப்பட்ட மதிப்பின் 0.02% | |
| (ஆ) | ஆண்டு உரிமக்கட்டணங்கள் | |
| (i) மின் செலுத்தல் | முந்தைய ஆண்டின் கடைசியில் உள்ள மிகுதியுள்ள மெகாவாட் ஒன்றுக்கு ரூ.500/- குறைந்தபட்சம் ரூ.50000/- வரையில் | |
| (ii) மின் பகிர்மானம் | இந்த வருடத்தில் விற்கப்படும் மின்சாரத்தின் அளவில் ஒரு யூனிட்டுக்கு 0.02 பைசா வீதம் குறைந்தபட்சம் ரூ. 20 இலட்சம் அதிகபட்சம் ரூ.2 கோடிகள் | |
| (iii) வணிகம் | குறைந்தபட்சம் 2 லட்சத்திற்கு வணிகம் செய்யப்படுவதற்கு மதிப்பிடப்பட்ட மதிப்பின் 0.02% | |
| (இ) | 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் படி விலக்கு வழங்குதல் | ரூ.10,000/- |
| (ஈ) | 18 ஆம் பிரிவின்படி உரிமத்திற்கான வரையுரைகள் மற்றும் வரைக்கட்டுகளில் திருத்தங்கள் / மாற்றங்கள் செய்தல் | ரூ.20,000/- |
| (உ) | சட்டத்தின் 17 ஆம் பிரிவின்படி முன் ஒப்புதலளிப்பு வழங்குதல் | ரூ.10,000/- |
10. (1) மனுதாரர் ஒரு மனுவை கோப்பில் சேர்ப்பதற்காக எடுப்பதற்கு மற்றும் அதற்கு எண் கொடுப்பதற்கு முன்பு மனுவை திரும்பப் பெறும் நிலையில், தனிநபர்களால் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் தவிர மனுவை செயல்முறைப்படுவதற்குரிய நியாயமான செலவுகளுக்காக ஆணையம் வழங்கலாகும் செலவுத்தொகையை அவர் செலுத்துவதற்கு கடப்பாடுடையவராவார். மற்றும் அதனைக் கழித்த பின்பு மனுதாரரால் செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணத்தின் எஞ்சிய தொகையானது மனுதாரருக்குத் திருப்பியளிக்கப்படுதல் வேண்டும்.
(2) அவ்வாறு திரும்பப்பெற்றதன் பேரில், மனுதாரர் அத்தகைய நுதல் பொருள் பொறுத்து அல்லது அத்தகைய நுதல் பொருளில் உள்ளடங்காத கோரிக்கையின் பகுதி பொறுத்து புதிய மனு எதனையும் தாக்கல் செய்வதிலிருந்து தடைசெய்யப்படுவார்.
(3) நீதிப் பேராணை மனு உயர் நீதிமன்றத்தினால், சட்டத்திற்கு இணங்கச் செய்வதற்காக ஆணையத்திற்கு மாற்றப்படுகிறவிடத்து அல்லது மறு விசாரணைக்கு அனுப்பப்படுவிடத்து, அல்லது அந்த மனுதாரர் ஆணையத்தின் முன்பு ஒரு மனுவை தாக்கல் செய்கிறவிடத்து, அந்த ஒழுங்குமுறை விதிகளின்படி அந்தந்தவகையான மனுவிற்குப் பொருந்தக்கூடிய கட்டணங்கள் மனுதாரரால் செலுத்தப்பட வேண்டும்.
இந்த ஒழுங்குமுறைவிதிகளில் பிறவாறு வகை செய்யப்பட்டவாறல்லாமல், 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய கட்டணங்கள் அபராதங்கள்-ஒழுங்குமுறை விதிகள், இந்த ஒழுங்குமுறை விதிகளின் தொடக்கத் தேதியிலிருந்து நீக்கறவு செய்யடுதல் வேண்டும்.
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சென்னை-600 032 2022 மார்ச் 22.
சு. சின்னராஜலு, செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
Apr. 6, 2022] TAMIL NADU GOVERNMENT GAZETTE 39GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS
LOSS OF CERTIFICATES
It is hereby notified that the Original Higher Secondary Certificates / Matriculation Certificates / Diploma Certificates / School Certificates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certificates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:–
Register
Month Name of the
Details of
Reference
Number and
C.N.C.
and Year
Candidate and
Examination
Number and Date
Certificate
Number
Institution
Number
(1) (2)
(3) (4) (5)
No. VI(2)/33/2022.
Saravanakumar. G
505180
(18-09-1995)
SC 774052
February 2015 No. VI(2)/34/2022.
Anuradha. K 043634
May 1992
SB 077333 No. VI(2)/35/2022.
Nishabanu. S
220937
February (29-03-1991)
GTE 469551 2018
220937
February
GTE 545153 2018
75645
December
COA 016819 2017
(6)
Typewriting English கடித எண். 102854/ட்டி3/2021, Senior
1-03-2022.
Second Class
Typewriting
கடித எண். 106734/ட்டி3/2022, English Senior
8-03-2022.
Second Class
Typewriting
கடித எண். 102556/ட்டி3/2022, Tamil Senior
14-03-2022.
First Class
Typewriting
English Senior
First Class
Do.
with
Distinction
Computer on
Office Automation
Do.
First Class
K. பிரபாகரன், கூடுதல் இயக்குநர் (தேர்வுகள்) (மு.கூ.பொ),
தேர்வு வாரியம்,
தொழில் நுட்பக் கல்வி இயக்ககம்,
சென்னை-600 025.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU