©GOVERNMENT OF TAMIL NADU 2022 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Rs. 6.40 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 209A] சென்னை, வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 8, 2022 பங்குனி 25, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2053
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 8ஆம் நாளன்று தமிழ்நாடு
சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,
நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவை விதிகளின் 130 ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக
வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 23/2022
1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச்
சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட
முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம்
ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால்
பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு
மற்றும் தொடக்கம்.
நகர் மற்றும் ஊரமைப்பு (இரண்டாம் திருத்தச்) சட்டம் என
வழங்கப்பெறும்.
(2) (i) 6 ஆம் பிரிவானது உடனடியாக
நடைமுறைக்கு வருதல் வேண்டும்; மற்றும்
(ii) இந்தச் சட்டத்தின் எஞ்சியுள்ள
வகைமுறைகள் அனைத்தும் அரசு அறிவிக்கையின்
வாயிலாக குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
256-1-URBAN-BILL-T—hp40
1
[ 1 ]
Ex-IV-1-209A-T—12 2-ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் 2. (இதன்பின்பு முதன்மைச் சட்டம்
திருத்தம்.
35/1972 எனக் குறிப்பிடுவதான) 1971 ஆம் ஆண்டு
தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச்
சட்டத்தின் 2 ஆம் பிரிவில்,-
(1) (30) ஆம் கூறில், "அல்லது புதிய நகரத்திற்கான
ஒரு இடம்" எனும் சொற்றொடருக்கு பின்பு, "அல்லது
சென்னை பெருநகர திட்டப் பகுதி அல்லது நகர்ப்புர
திட்டப் பகுதி எதுவும்" எனும் சொற்றொடரானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(2) (31) ஆம் கூறுக்கு பின்பு, பின்வரும் கூறானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(31-a) 'வகுத்துரைக்கப்பட்ட' என்பது இந்தச்
சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளால்
வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்." ;
(3) (46) ஆம் கூறுக்கு பின்பு, பின்வரும்
கூறுகளானவை சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(47) 'நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம்' என்பது 9-F ஆம்
பிரிவின் கீழ் நிறுவப்பட்ட ஒரு நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம்
என்று பொருள்படும்;
(48) "நகர்ப்புர திட்டப் பகுதி" என்பது அரசானது, தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையினால், அவ்வப்போது
குறித்திடலாகும் நகர்ப்புரப்பகுதி எதுவும் என்று
பொருள்படும்.".
9-D ஆம் பிரிவிற்கான
3. முதன்மைச் சட்டத்தின் 9-D ஆம் பிரிவில், (18) ஆம்
திருத்தம்.
கூறில், (b) உட்கூறுக்காக, பின்வரும் உட்கூறானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(b) (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும்
உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்,
அதாவது:-
(1) 49 ஆம் பிரிவு அல்லது 54 ஆம் பிரிவின் (1) ஆம்
உட்பிரிவின் கீழ் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முடிவு
அல்லது ஆணை எதனாலும் பாதிக்கப்பட்ட நபர் எவரும்
அரசிடம் மேல்முறையீடு செய்யலாம்.".
II-B எனும் புது
4. முதன்மைச் சட்டத்தின் அத்தியாயம் 11-A-க்குப்
அத்தியாயத்தை பின்பு, பின்வரும் அத்தியாயமானது உட்புகுத்தப்படுதல்
உட்புகுத்துதல்.
வேண்டும், அதாவது:-
3"அத்தியாயம்—II-B.
நகர்ப்புர திட்டப் பகுதிக்கான நகர்ப்புர வளர்ச்சிக்
குழுமத்தின் அமைத்துருவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு
மற்றும் அது தொடர்பான சிறப்பு வகைமுறைகள்.
நகர்ப்புர வளர்ச்சிக்
குழுமத்தை 9-F. (1) தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வாயிலாக அரசானது, இதன்பொருட்டு குறித்திடலாகும்
நிறுவுதல்.
அத்தகைய தேதி முதற்கொண்டு அதில் குறித்திடலாகும்
பெயரால், நகர்ப்புர திட்டப் பகுதி எதற்கும் குழுமம்
ஒன்று நிறுவப்படுதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின் கீழ் நிறுவப்பட்ட ஒரு
நகர்ப்புர வளர்ச்சிக் குழுமமானது, பின்வரும் நபர்களைக்
கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
(a) அரசால் நியமிக்கப்பட்ட எட்டு நபர்களில்-
(i) ஒருவர் தலைவராக இருத்தல்
வேண்டும்;
(ii) ஒருவர் துணைத் தலைவராக இருத்தல்
வேண்டும்;
(iii) மூவர் அரசு அலுவலர்களாக இருத்தல்
வேண்டும்;
(iv) ஒருவர் மாநிலச் சட்டமன்ற
உறுப்பினராக இருத்தல் வேண்டும்;
(v) ஒருவர் நகர்ப்புர திட்டப் பகுதியில்
வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் சார்பாளராக
இருத்தல் வேண்டும்; மற்றும்
(vi) ஒருவர் உறுப்பினர்-செயலாளராக
இருத்தல் வேண்டும்.
(b) இயக்குநர் அல்லது அவரால்
நியமிக்கப்பட்டவர்;
(c) நகர்ப்புர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை
திட்டமிடலாளர்;
(d) நகர்ப்புர திட்டப் பகுதியின் மாநகராட்சி
ஆணையர்;
(e) கீழே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளாட்சி
அதிகார அமைப்பின் பிரதிநிதிகள்:-
(i) நகர்ப்புர திட்டப் பகுதியில் செயல்படும்
உள்ளாட்சிக் குழுமம், ஒன்று மட்டுமே இருப்பின்,
உள்ளாட்சி அதிகார அமைப்பால் நியமிக்கப்பட்ட இரண்டு
பிரதிநிதிகள்;
4(ii) நகர்ப்புர திட்டப் பகுதியில், இரண்டு
அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளாட்சி அதிகார
அமைப்புகள் செயல்பட்டால், அத்தகைய உள்ளாட்சி
அதிகார அமைப்புகளின் உறுப்பினர்களாக இருக்கும்,
அரசால் அமர்த்தப்படும், நான்கிற்கும் மிகாத அத்தகைய
நபர்கள்.
நகர்ப்புர வளர்ச்சிக்
9-G. நகர்ப்புர வளர்ச்சிக் குழுமமானது,
குழுமத்தினை
ஒரு கூட்டமைப்பாக இருத்தல் வேண்டும் மற்றும்
ஒருங்கிணைத்தல். தொடர்ந்திருக்கும் வழியுரிமை மற்றும் பொது
இலச்சினையையும் பெற்றிருத்தல் வேண்டும், மற்றும்
இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது பிறச் சட்டம் எதிலும்,
விதிக்கப்படலாகும் அத்தகைய வரையறைக்கு அல்லது
தகுதிக்கு உட்பட்டு, அதன் கூட்டமைப்பின் பெயரில்
வழக்கிடலாம் அல்லது வழக்கிடப்படலாம் அல்லது
அசையும் அல்லது அசையா சொத்துக்களை ஈட்டலாம்,
வைத்திருக்கலாம் அல்லது அதற்கு வகை செய்யலாம்,
அல்லது ஒப்பந்தங்களை நிறைவேற்றலாம் மற்றும் அதன் அமைத்துருவாக்கத்தின் நோக்கத்திற்காக, தேவையான,
முறையான அல்லது உகந்ததான அனைத்து
பொருட்கூறுகளையும் செய்யலாம்.
நகர்ப்புர வளர்ச்சிக்
9-H. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகள்
குழுமத்தின்
மற்றும் அதன் கீழ் செய்யப்பட்ட விதிகளுக்குட்பட்டு, ஒரு
செயற்பணிகளும் நகர்ப்புர வளர்ச்சிக் குழுமத்தின் செயற்பணிகளானவை-
அதிகாரங்களும்
(i) நகர்ப்புர திட்டப் பகுதியின்
மதிப்பாய்வினை மேற்கொள்ளுதல் மற்றும்
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வுகள் பற்றிய
அறிக்கைகளைத் தயாரித்தல்;
(ii) 17 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ்
அல்லது 18 ஆம் பிரிவின் கீழ் அல்லது 20 ஆம் பிரிவின்
கீழ் குறிப்பிட்டுள்ள, நகர்ப்புர திட்டப் பகுதிக்காக ஒரு
முழுமைத்திட்டம் அல்லது ஒரு புதிய நகர வளர்ச்சித்
திட்டம் அல்லது ஒரு விரிவான வளர்ச்சித் திட்டத்தினை
தயாரித்தல்;
(iii) வளர்ச்சித் திட்டம் எதையும் தயாரிப்பதன்
நோக்கத்திற்காக, தேவைப்படலாகும் நில பயன்பாட்டு
வரைபடம் மற்றும் அத்தகைய பிற வரைபடங்கள் தயார்
செய்தல்;
(iv) வளர்ச்சித் திட்டம் எதிலும்
கருதுகிறவாறான அத்தகைய பணிகளை மேற்கொள்ளச்
செய்தல்;
(v) நகர்ப்புர திட்டப் பகுதி முழுவதையும்
அல்லது அதன் அதிகார வரம்பிற்குள் உள்ள பாகம்
எதையும் புதிய நகரம் ஒன்றாக பெயர்குறித்து அழைத்தல்
மற்றும் பின்வரும் செயற்பணிகளைச் செய்தல், அதாவது:-
(a) தொடர்புடைய பகுதிக்கான புதிய நகர
வளர்ச்சித் திட்டம் ஒன்றினைத் தயார் செய்தல்; மற்றும்5 (b) புதிய நகர வளர்ச்சித் திட்டத்திற்கு
இணங்கிய வகையில் புதிய நகரத்தின் நில வரைபடம்
மற்றும் வளர்ச்சியினைப் பாதுகாத்தல்;
(vi) அரசால், அதனிடம் ஒப்படைக்கப்படலாகும்
அத்தகைய பிற செயற்பணிகளைச் செய்தல்.
(2) நகர்ப்புர வளர்ச்சிக் குழுமமானது, அதனால்
தயாரிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டம் எதனையும்
நிறைவேற்றுவதற்கான வேலைகளை, ஆணையின்
மூலம், உள்ளாட்சிக்குழுமம் எதனிடம் அல்லது
அத்தகைய ஆணையில் குறித்திடலாகும் பிற அதிகார
அமைப்பிடம் ஒப்படைக்கலாம்.
(3) நகர்ப்புர வளர்ச்சிக் குழுமமானது, இந்தச்
சட்டத்தின் கீழ் அல்லது அதில் உற்றமைந்துள்ள
அதிகாரங்கள் எதையும் செயல்படுத்துவதற்கு,
ஆணையின் மூலம், உள்ளாட்சி அதிகார அமைப்பு
அல்லது அத்தகைய ஆணையில் குறித்திடலாகும் பிற
அதிகார அமைப்புகள் எதற்கும் அதிகாரமளிக்கலாம்
மற்றும் அத்தகைய அதிகாரத்தினை திரும்பப்பெறலாம்;
மற்றும் இதன் பொருட்டு ஒப்படைவு செய்யப்பட்ட
அதிகாரம் எதனின் செயல்பாடானது அத்தகைய
ஆணையில் குறிப்பிடலாகும் அத்தகைய கட்டுப்பாடுகள்
மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருத்தல்
வேண்டும்.
இந்தச் சட்டத்தின் 9-I. நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம் மற்றும் அதன்
வகைமுறைகள், மூலம் உருவாக்கப்பட்ட வளர்ச்சித் திட்டம் எதனின்
குறித்த சில தொடர்பாக, இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் பின்வரும்
மாற்றங்களுக் மாற்றங்களுக்குட்பட்டு பொருந்துதல் வேண்டும்,
குட்பட்டு நகர்ப்புர அதாவது,-
வளர்ச்சிக் (1) 2 ஆம் பிரிவில்,-
குழுமத்திற்கு
பொருந்துதல்.
(a) (3) ஆம் கூறில், " மற்றும் 9-F ஆம்
பிரிவின் கீழ் நிறுவப்பட்ட நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம்
ஒன்று உள்ளடங்கும்," எனும் சொற்றொடரானது
இறுதியில் சேர்க்கப்படுதல் வேண்டும்;
(b) (14) ஆம் கூறில், "புதிய நகர வளர்ச்சிக்
குழுமம்" எனும் சொற்றொடருக்காக, "அல்லது நகர்ப்புர
வளர்ச்சிக் குழுமம்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) (30) ஆம் கூறில், "அல்லது புதிய
நகரத்திற்கான ஒரு இடம்" எனும் சொற்றொடருக்கு
பின்பு "அல்லது ஒரு நகர்ப்புர திட்டப்பகுதி" எனும்
சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(2) 4 ஆம் பிரிவில், (c) கூறுக்கு பின்பு, பின்வரும்
கூறானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(d) நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம்."6 (3) 16 ஆம் பிரிவில்,-
(a) முதல் பத்தியில், "உள்ளூர் திட்டக் குழுமம்
ஒவ்வொன்றும்" எனும் சொற்றொடருக்காக, "ஒரு
நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம்" எனும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) வகைமுறையானது விட்டுவிடப்படுதல்
வேண்டும்;
(c) விளக்கத்தில், "உள்ளூர் திட்டக் குழுமம்"
எனும் சொற்றொடருக்காக, "நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம்"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(4) 17 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்காக,
பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(1) 9-F ஆம் பிரிவின் கீழ் நிறுவப்பட்ட ஒரு நகர்ப்புர
வளர்ச்சிக் குழுமமானது, வகுத்துரைக்கப்படலாகும்
அத்தகைய காலத்திற்குள் மற்றும் தொடர்புடைய
உள்ளாட்சி அதிகார அமைப்புகளுடன் கலந்தாலோசித்த
பின்பு, இதில் நகர்ப்புர திட்டப்பகுதி அல்லது அதன்
எந்தவொரு பாகத்திற்குமான "முழுமைத்திட்டம்" என்று
அழைக்கப்படும் ஒரு திட்டத்தை தயார் செய்தல் மற்றும்
அரசுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.".
(5) 18-ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்காக,
பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(1) கூறப்பட்ட குழுமமானது, ஒரு நகர்ப்புர
வளர்ச்சிக் குழுமத்தால் தயார் செய்யப்பட்ட
வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய நகரம் ஒன்றிற்கான
இடத்தின் தேர்விற்கு பிறகு, கூடிய விரைவில்,
வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள்,
இதன்பின்பு இதில், "புதிய நகரமாக நியமிக்கப்பட்ட
இடம்" அல்லது அதன் எந்தவொரு பாகத்திற்குமான
"புதிய நகர வளர்ச்சித் திட்டம்" என அழைக்கப்படும்
திட்டம் ஒன்றினைத் தயார் செய்து அரசுக்கு சமர்ப்பித்தல்
வேண்டும்."
(6) 19 ஆம் பிரிவில்,-
(a) (1) ஆம் உட்பிரிவில், "உள்ளூர் திட்டக்
குழுமம்" எனும் சொற்றொடருக்காக, "நகர்ப்புர
வளர்ச்சிக் குழுமம்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (2) ஆம் உட்பிரிவில், "உள்ளூர்
திட்டக் குழுமம்" எனும் சொற்றொடருக்காக, "நகர்ப்புர
வளர்ச்சிக் குழுமம்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
7(7) 20 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவின் (f)
கூறில் மற்றும் (2) ஆம் உட்பிரிவின் (f) கூறில், "உள்ளூர்
திட்டக் குழுமம்" எனும் சொற்றொடருக்காக, "நகர்ப்புர
வளர்ச்சிக் குழுமம்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(8) 21 ஆம் பிரிவில், "உள்ளூர் திட்டக் குழுமம்"
மற்றும் "இயக்குநர்" எனும் சொற்றொடர்களுக்காக,
முறையே, "நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம்" மற்றும் "அரசு"
எனும் சொற்றொடர்களானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(9) 22 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்:-
"22. பகுதி எதனையும் பொறுத்த ஒரு
முழுமைத் திட்டம், ஒரு புதிய நகர வளர்ச்சித் திட்டம்
அல்லது ஒரு விரிவான வளர்ச்சித் திட்டத்தை தயார்
செய்வதற்கு ஒரு நகர்ப்புர வளர்ச்சிக் குழுமத்திடம்
வேண்டுவதற்கான அரசின் அதிகாரம்.- 17, 18, 19 மற்றும்
21 ஆம் பிரிவுகளில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்,
அரசானது அறிவிக்கையின் மூலம், பகுதி எதனையும்
பொறுத்து ஒரு முழுமைத் திட்டம், ஒரு புதிய நகர
வளர்ச்சித் திட்டம் அல்லது விரிவான வளர்ச்சி திட்டத்தை
குறித்த தேதிக்கு முன்னதாக தயார் செய்து மற்றும்
அரசுக்கு சமர்ப்பிப்பதற்கு நகர்ப்புர வளர்ச்சிக் குழுமத்திடம்
வேண்டலாம்.
(10) 24 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"24. திட்டங்களை தயார் செய்வதற்கான அறிக்கையை வெளியிடுவதற்கான அரசின் ஒப்புதல்.-
(1) அரசுக்கு ஒரு நகர்ப்புர வளர்ச்சிக் குழுமத்தினால்,
முழுமைத் திட்டம், புதிய நகர வளர்ச்சித் திட்டம் அல்லது
விரிவான வளர்ச்சித் திட்டமானது சமர்ப்பிக்கப்பட்டவுடன்,
ஆனால் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய
காலத்திற்கு பின்னர் அல்லாது கூடிய விரைவில்,
அரசானது முழுமைத் திட்டம், புதிய நகர வளர்ச்சித்
திட்டம் அல்லது விரிவான வளர்ச்சித் திட்டத்தில்,
நகர்ப்புர வளர்ச்சிக் குழுமமானது, அது பொருத்தமெனக்
கருதலாகும் அத்தகைய மாற்றங்களைச் செய்வதற்கு
கட்டளையிடலாம், மற்றும் அதன்பின், நகர்ப்புர வளர்ச்சிக்
குழுமமானது, அரசால் குறித்திடலாகும் அத்தகைய
காலத்திற்குள் மாற்றங்கள் செய்து மற்றும் மீண்டும்
அரசிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
(2) அரசானது, அதன் கட்டளைப்படி, மாற்றங்கள்
ஏதேனும் இருப்பின், அவை செய்யப்பட்ட பிறகு,
முழுமைத் திட்டம், புதிய நகர வளர்ச்சித் திட்டம் அல்லது
விரிவான வளர்ச்சித் திட்டம் தயாரிப்பின், 26-ஆம் பிரிவின்
கீழ் அறிக்கை ஒன்றினை வெளியிடுவதற்கு நகர்ப்புர
வளர்ச்சிக் குழுமத்திற்கு, அதன் ஒப்புதலை வழங்குதல்
வேண்டும்.
8(11) 26 ஆம் பிரிவில்,-
(a) ஓரத் தலைப்பிற்காக, பின்வரும்
ஓரத் தலைப்பானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"முழுமைத் திட்டம், புதிய நகர வளர்ச்சித்
திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டத்தினை
தயாரித்தலுக்கான அறிக்கை." ;
(b) "தகுதிவாய்ந்த திட்டக் குழுமம்" எனும்
சொற்றொடருக்காக, அது காணப்படுகின்ற மூன்று
இடங்களில், "நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) "மண்டலத் திட்டம், முழுமைத்திட்டம்
அல்லது புதிய நகர வளர்ச்சித் திட்டம்" எனும்
சொற்றொடருக்காக, அது காணப்படுகின்ற இரு
இடங்களில், "முழுமைத் திட்டம், புதிய நகர வளர்ச்சித் திட்டம் அல்லது விரிவான வளர்ச்சித் திட்டம்" எனும்
சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(12) 28-ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது;-
"28. அரசின் ஒப்புதல்.- நகர்ப்புர வளர்ச்சிக்
குழுமத்தால் முழுமைத் திட்டம், புதிய நகர வளர்ச்சித்
திட்டம் அல்லது விரிவான வளர்ச்சித் திட்டமானது
சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில், ஆனால்
வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்கு
முன்பு அரசானது இயக்குநருடன் கலந்தாலோசித்த
பின்பு, கூறப்பட்ட திட்டத்தை அங்கீகரிக்கலாம் அல்லது
தேவையெனக் கருதலாகும் அத்தகைய மாற்றங்களுடன்
அதனை அங்கீகரிக்கலாம் அல்லது இதன்
பொருட்டு அரசினால் வெளியிடலாகும் அத்தகைய
பணிப்புரைகளுக்கு இணங்கி திட்டத்தை மாற்றியமைக்க
அல்லது ஒரு புதிய திட்டத்தை தயாரிப்பதற்காக மற்றும்
அதன் பொருட்டு அரசினால் குறிப்பிடலாகும் அத்தகைய
காலத்திற்குள் ஒப்புதலுக்காக அரசுக்கு மீண்டும்
சமர்ப்பிப்பதற்காக நகர்ப்புர வளர்ச்சி அதிகார அமைப்பிற்கு
திருப்பியனுப்பலாம்.".
(13) 30 ஆம் பிரிவில், -
(a) ஓரத் தலைப்பில், "மண்டலத் திட்டம்,
முழுமைத் திட்டம் மற்றும் புதிய நகர வளர்ச்சித் திட்டம்"
எனும் சொற்றொடர்களுக்காக, "முழுமைத் திட்டம்,
புதிய நகர வளர்ச்சித் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித்
திட்டம்" எனும் சொற்றொடர்களானவை மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்.
9(b) (1) ஆம் உட்பிரிவில், "மண்டலத் திட்டம்,
முழுமைத் திட்டம் அல்லது புதிய நகர வளர்ச்சித் திட்டம்"
எனும் சொற்றொடர்களுக்காக, "முழுமைத் திட்டம்,
புதிய நகர வளர்ச்சித் திட்டம் அல்லது விரிவான
வளர்ச்சித் திட்டம்" எனும் சொற்றொடர்களானவை
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) (2) ஆம் உட்பிரிவில், "மண்டலத் திட்டம்,
முழுமைத் திட்டம் அல்லது புதிய நகர வளர்ச்சித் திட்டம்"
எனும் சொற்றொடர்களுக்காக, "முழுமைத் திட்டம், புதிய
நகர வளர்ச்சித் திட்டம் அல்லது விரிவான வளர்ச்சித்
திட்டம்" எனும் சொற்றொடர்களானவை மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(14) 32 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"32. முழுமைத்திட்டம், புதிய நகர வளர்ச்சித் திட்டம்
மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றினை
மாற்றியமைத்தல், திரும்பப்பெறுதல் மற்றும் திருத்தம்
செய்தல்.- (1) 28 ஆம் பிரிவின் கீழ் ஒப்புதலளிக்கப்பட்ட
நகர்ப்புர வளர்ச்சிக் குழுமத்தின், ஒரு முழுமைத் திட்டம்,
ஒரு புதிய நகர வளர்ச்சித் திட்டம் அல்லது ஒரு விரிவான
வளர்ச்சித் திட்டமானது, நேர்விற்கேற்ப இந்தச் சட்டத்தின்
கீழ் தயார் செய்யப்பட்ட மற்றும் ஒப்புதலளிக்கப்பட்ட ஒரு
அடுத்த முழுமைத் திட்டம், புதிய நகர வளர்ச்சித் திட்டம்
அல்லது விரிவான வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றினால்
எந்நேரத்திலும் மாற்றியமைக்கப்படலாம் அல்லது திரும்பப்
பெறப்படலாம்.
(2) நகர்ப்புர திட்டப் பகுதிக்கான முழுமைத் திட்டம்
செயல்பாட்டிற்கு வரும் தேதிக்குப் பின்பு ஒவ்வொரு
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, நகர்ப்புர வளர்ச்சி
வளர்ச்சிக் குழுமமானது மற்றும் அரசால் அவ்வாறு
கட்டளையிடப்படுமாயின், தேவையெனக் கருதலாகும்
அத்தகைய புதிய நில அளவைகளை மேற்கொண்ட பின்பு
மற்றும் தொடர்புடைய உள்ளாட்சி அதிகார அமைப்பின்
ஆலோசனையுடன் முழுமைத் திட்டத்தினை சீராய்வு
செய்து மற்றும் அத்தகைய திட்டத்தில் தேவையான
இடங்களில் அத்தகைய திருத்தங்களைச் செய்து
மற்றும் அரசின் ஒப்புதலுக்காக திருத்தப்பட்ட
முழுமைத் திட்டத்தினை சமர்ப்பிக்கலாம்.
(3) தேவைப்படும் அத்தகைய திருத்தங்களுடன்
மேற்கொள்ளப்படும் 26, 28 மற்றும் 30 ஆம் பிரிவுகளின்
வகைமுறைகளானவை அத்தகைய திருத்தப்பட்ட
முழுமைத் திட்டத்திற்கு பொருந்துதல் வேண்டும்.
(4) அரசானது, எந்த நேரத்திலும்
தமிழ்நாடு அரசிதழில், அறிவிக்கையின் வாயிலாக
இந்தச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மற்றும்
ஒப்புதலளிக்கப்பட்ட, முழுமைத் திட்டம், புதிய நகர
வளர்ச்சித் திட்டம் அல்லது விரிவான வளர்ச்சித்
திட்டத்தை நேர்விற்கேற்ப, மாற்றியமைக்கலாம் அல்லது
திரும்பப்பெறலாம்." ;
10(15) (V) ஆம் அத்தியாயத்தில்,-
(a) "புதிய நகர வளர்ச்சிக் குழுமம்", "ஒரு
புதிய நகர வளர்ச்சிக் குழுமம்", "புதிய நகர வளர்ச்சிக்
குழுமம்" மற்றும் "ஒரு புதிய நகர வளர்ச்சிக் குழுமம்"
எனும் சொற்றொடர்களுக்காக, அவை காணப்படுகின்ற
இடங்களிலெல்லாம், முறையே "நகர்ப்புர வளர்ச்சிக்
குழுமம்", "ஒரு நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம்", "நகர்ப்புர
வளர்ச்சிக் குழுமம்" மற்றும் "ஒரு நகர்ப்புர வளர்ச்சிக்
குழுமம்" எனும் சொற்றொடர்களானவை மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) 40 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில்
"இந்தச் சட்டத்தின் கீழ் அரசினால் ஒப்புதலளிக்கப்பட்ட
புதிய நகர வளர்ச்சித் திட்டத்துடன் இணங்கி புதிய
நகரத்தின் வளர்ச்சியினை பாதுகாப்பதற்காக", எனும்
சொற்றொடருக்காக, "நகர்ப்புர வளர்ச்சிக்குழுமத்தின்
வளர்ச்சித்திட்டங்கள் எதனின் பயனுள்ள
நடைமுறைப்படுத்துதலை பாதுகாப்பதற்காக" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(c) 41 ஆம் பிரிவில், "புதிய நகரத்தின்
பகுதிக்குள்" எனும் சொற்றொடருக்காக, "நகர்ப்புர
திட்டப் பகுதிக்குள்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(d) 42 ஆம் பிரிவில், "புதிய நகர வளர்ச்சிக்
குழுமம் எதுவும்" மற்றும் "புதிய நகரம் தொடர்பாக" எனும்
சொற்றொடர்களுக்காக, முறையே "நகர்ப்புர வளர்ச்சிக்
குழுமம்" மற்றும் "நகர்ப்புர திட்டப் பகுதி தொடர்பாக" எனும்
சொற்றொடர்களானவை, மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(e) 44 ஆம் பிரிவில், (1) மற்றும் (3) ஆம்
உட்பிரிவுகளில், "இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட
புதிய நகர வளர்ச்சித் திட்டத்தில் பணிகளை
மேம்படுத்துவதற்காக மற்றும் செயல்படுத்துதலுக்காக"
எனும் சொற்றொடருக்காக அது வருகிற இரு
இடங்களில், "இந்தச் சட்டத்தின் கீழ் அதற்கு ஒப்படைவு
செய்யப்பட்ட செயற்பணிகளை நிறைவேற்றுதலுக்காக"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(f) 46 ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல்
வேண்டும்;
11(16) 76 ஆம் பிரிவில்,-
(16) 76-ஆம் பிரிவில்,-
(a) "இயக்குநர்" மற்றும் "திட்டக் குழுமம்"
எனும் சொற்றொடர்களுக்காக அவை காணப்படுகின்ற
இடங்களிலெல்லாம் முறையே, "அரசு" மற்றும் "நகர்ப்புர
வளர்ச்சிக் குழுமம்" எனும் சொற்றொடர்களானவை
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (1) ஆம் உட்பிரிவில், முதல்
வகைமுறையில், "அவர் மனநிறைவடைந்தால்" எனும்
சொற்றொடருக்காக, "அவர்கள் மனநிறைவடைந்தால்"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(c) (3) ஆம் உட்பிரிவில், (a) கூறில் (iii) ஆம்
இனத்தில், "அவர் பொருத்தமெனக் கருதலாகும்" எனும்
சொற்றொடருக்காக, "அவர்கள் பொருத்தமெனக்
கருதலாகும்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(d) (5) ஆம் உட்பிரிவில், வகைமுறையில்,
" அவரது விருப்பப்படி", "அவர் பொருத்தமெனக்
கருதலாகும்" மற்றும் " அவரது மனநிறைவுக்கு" எனும்
சொற்றொடர்களுக்காக முறையே, "அவர்களின்
விருப்பப்படி", "அவர்கள் பொருத்தமெனக் கருதலாகும்",
மற்றும் "அவர்கள் மனநிறைவுக்கு" எனும்
சொற்றொடர்களானவை மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(17) 77 ஆம் பிரிவில் ,-
(a) "இயக்குநர்" மற்றும் "தொடர்புடைய
திட்டக் குழுமம்" எனும் சொற்றொடர்களுக்காக, அவை
காணப்படுகின்ற இடங்களிலெல்லாம் முறையே, "அரசு"
மற்றும் "தொடர்புடைய நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம்" எனும்
சொற்றொடர்களானவை மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(18) 79 ஆம் பிரிவில்,-
(a) "வகுத்துரைக்கப்பட்ட குழுமம்"
எனும் சொற்றொடருக்காக, அது காணப்படுகின்ற
இடங்களிலெல்லாம், "அரசு" எனும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும்
உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்,
அதாவது:-
"(1) 49 ஆம் பிரிவு அல்லது 54 ஆம் பிரிவின் (1) ஆம்
உட்பிரிவின் கீழ் ஒரு நகர்ப்புர வளர்ச்சிக் குழுமத்தின்
முடிவு அல்லது ஆணை எதனாலும் பாதிக்கப்பட்ட நபர்
எவரும் அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம்." ;
12(c) (2) ஆம் உட்பிரிவில், "அது
மனநிறைவடைந்திருந்தால்" எனும் சொற்றொடருக்காக
"அவர்கள் மனநிறைவடைந்திருந்தால்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(19) 80 ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல்
வேண்டும்;
(20) 81 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில் "மற்றும் 80"
எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(21) 91 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "விதிகளை
உருவாக்குவதற்கான அரசின் அதிகாரம் தவிர" எனும்
சொற்றொடருக்காக, " 76 ஆம் பிரிவின்கீழ்மேல்முறையீடு
எதையும் விசாரிப்பதற்கான அரசின் அதிகாரம் மற்றும்
விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரம் தவிர"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
தமிழ்நாடு குடிநீர்
9-J. (1) இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எது
வழங்கல்
எவ்வாறிருப்பினும், ஒரு நகர்ப்புர வளர்ச்சிக் குழுமமானது,
மற்றும் வடிகால் குடிநீர் வழங்கல் அல்லது வடிகால் சேவைகள்
வாரியத்துடனான மற்றும் நகர்ப்புர திட்டப் பகுதி அல்லது அதன் பகுதி
தொடர்பு.
எதற்காகவும், இந்தச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட
அல்லது தயாரிக்கப்படக்கூடிய வளர்ச்சித் திட்டம்
எதனையும் உள்ளடங்கலான, அதனுடன் தொடர்புடைய
பொருட்பாடுகள் பற்றிய வகைமுறைகள் எதனைப்
தமிழ்நாடு சட்டம் பொறுத்தும் 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர்
4/1971.
வழங்கல் மற்றும் வடிகால் வாரியச் சட்டத்தின் கீழ்
அமைத்துருவாக்கப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வழங்கல்
மற்றும் வடிகால் வாரியத்துடன் முழுவதுமாக
கலந்தாலோசித்து மற்றும் அதனுடன் இணைந்து
செயல்படுதல் வேண்டும்.
(2) அத்தகைய வளர்ச்சித் திட்டம் எதன்
தொடர்பாகவும், அத்தகைய திட்டத்தின் கீழ்
பணி எதனையும் நிறைவேற்றுதல் அல்லது
மேற்கொள்ளுதலானது, இதுவரை குடிநீர் வழங்கல்
மற்றும் வடிகால் சேவை அல்லது அதனுடன்
தொடர்புடைய பொருட்பாடுகள் பொறுத்தவரையில்
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திடம்
ஒப்படைத்தல் மற்றும் அதன் தனி பொறுப்பாகுதல்
வேண்டும் மற்றும் இந்தப் பிரிவு நடைமுறைக்கு
வருகின்ற தேதியன்று அத்தகைய திட்டத்தின் கீழ் பணி
எதுவும் நிறைவேற்றுதல் அல்லது மேற்கொள்ளுதல்
செயல்பாட்டிலிருந்தால், நகர்ப்புர வளர்ச்சிக் குழுமமானது
தமிழ்நாடு சட்டம் 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும்
4/1971.
வடிகால் வாரிய சட்டத்திற்கு இணங்கிய வகையில்
அத்தகைய பணிகளைத் தொடர்தல் மற்றும் செய்து
முடித்தல் வேண்டும்.
1363-A ஆம் 5. முதன்மைச் சட்டத்தின் 63-A ஆம் பிரிவானது,
பிரிவிற்கான அந்தப் பிரிவின் (1) ஆம் உட்பிரிவாக மறுஎண்ணிடப்படுதல்
திருத்தம்.
வேண்டும், மற்றும் அவ்வாறு மறுஎண்ணிடப்பட்ட
(1) ஆம் உட்பிரிவிற்குப் பிறகு, பின்வரும் உட்பிரிவானது
சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது,-
"(2) நகர்ப்புர திட்டப் பகுதி ஒன்றில் நிலம் அல்லது
கட்டடத்தின் பயன்பாடு அல்லது பயன்பாட்டின் மாறுதல்
அல்லது நிலம் அல்லது கட்டடம் எதனின் மேம்பாட்டினை
பொறுத்த நேர்வில், இந்த அத்தியாயத்தின் வகை
முறைகளின் கீழ் வளர்ச்சிக் கட்டணங்கள் எதுவும்,
விதிக்கப்பட்ட அல்லது மீட்கப்படுமிடத்தில் மற்றும் குடிநீர்
வழங்கல் அல்லது வடிகால் சேவையை ஏற்பாடு செய்தல்
அல்லது முன்னேற்றுதல் தொடர்பான அத்தகைய
கட்டணம் எதுவும் அல்லது அதன் பகுதி எதுவும்
பொருந்துமானால் நகர்ப்புர வளர்ச்சிக் குழுமமானது
அத்தகைய கட்டணம் அல்லது அதன் பகுதியினை
தமிழ்நாடு சட்டம்
1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியச் சட்டத்தின் கீழ் அமைத்துருவாக்கப்பட்ட
4/1971.
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு
செலுத்துதல் வேண்டும்.
வரம்புரையாக, செலுத்த வேண்டிய மொத்தத்
தொகை குறித்த சந்தேகம் அல்லது பூசல் ஏதேனும்
இருந்தால், அதன் பொருட்டு முடிவானது அரசுக்கு
குறித்தனுப்பப்படுதல் வேண்டும் மற்றும் அதன் முடிவே
இறுதியானது".
79 ஆம் பிரிவிற்கான 6. முதன்மைச் சட்டத்தின் 79 ஆம் பிரிவில்
திருத்தம்.
(1) ஆம் உட்பிரிவில், "வகுத்துரைக்கப்பட்ட
அதிகார அமைப்பு" எனும் சொற்றொடருக்காக,
"வகுத்துரைக்கப்படலாகும் ஓர் அதிகார அமைப்பு"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
111 ஆம் பிரிவிற்கான 7. முதன்மைச் சட்டத்தின் 111 ஆம் பிரிவில்,
திருத்தம்.
(1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளானவை,
சென்னை பெருநகர திட்டப் பகுதி மற்றும் நகர்ப்புர
தமிழ்நாடு சட்டம்
திட்டப் பகுதிகள் ஆகியவற்றை பொறுத்து, முறையே,
28/1978.
1978 ஆம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்
மற்றும் கழிவுநீரகற்றல் சட்டம் மற்றும் 1970 ஆம் ஆண்டு
தமிழ்நாடு சட்டம்
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியச்
4/1971.
சட்டம் ஆகியவற்றின் வகைமுறைகளுக்கு உட்பட்டு
படிக்கப்படுதல் வேண்டும்.".
14நோக்கக் காரண விளக்கவுரை.
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில், மக்கள் தொகையின் 48.45 விழுக்காடு மக்கள் நகர்ப்புர பகுதிகளில் வசிக்கின்றனர். நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். வளர்ந்து வரும் நகர்ப்புர பகுதியினை கருத்தில் கொண்டு, வளர்ச்சித் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் மாநகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதனை செயற்படுத்துதலும் தேவையானதாகிறது. மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஓசூர் நகர திரட்சிக்கான நகர்ப்புர வளர்ச்சிக் குழுமங்களானவை நிறுவப்பட்டுள்ளன.
மேற்சொன்ன நகர்ப்புர வளர்ச்சிக் குழுமங்களுக்கும், பிற்காலத்தில் நிறுவப்படலாகும் நகர்ப்புர வளர்ச்சிக் குழுமங்களுக்கும் சட்டப்பூர்வமான தகுதிநிலையினை வழங்குதல் தேவையானதாகிறது.
2. எனவே, 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 35/1972) மேற்சொன்ன நோக்கங்களுக்காக திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது .
3. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
சு. முத்துசாமி,
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர்.
15சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.
இந்தச் சட்ட முன்வடிவின் கூறுகள் 1 (2), 2 (3), 4 மற்றும் 6 ஆகியவை இதில் குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக, நேர்விற்கேற்ப அறிவிக்கைகள் வெளியிடுவதற்கும் அல்லது ஆணைகளை பிறப்பிப்பதற்கும் அல்லது விதிகளை உருவாக்குவதற்கும் அரசு அதிகாரமளிக்கின்றது.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
சு. முத்துசாமி,
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன், தலைமைச் செயலகம், சென்னை, 2022 ஏப்ரல் 8.
செயலாளர்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.