[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2022
[விலை : ரூ. 4.80 காசு
| îI›ï£´ ÜóCî› ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 18] சென்னை, புதன்கிழமை, மே 4, 2022 சித்திரை 21, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053
ð°F III—HK¾ 1(a) Þ¡ ެ특
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
அறிவிக்கை
1968ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லிகள் சட்டத்தின் (சட்டம் 46/1968) 37ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் மத்திய பூச்சிக்கொல்லி வாரியத்துடன் கலந்தாலோசித்து பின்வரும் விதிகளை இதனால் இயற்றுகிறார்:-
1. குறுந்தலைப்பு:- இந்த விதிகள் ''தமிழ்நாடு 2022ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லிகள் (மேல்முறையீடு) விதிகள்'' என்று அழைக்கப்படும்.
2. வரையறை:-இந்த விதிகளில், சந்தர்ப்பம் வேறுபொருள் குறித்தாலன்றி, மற்றபடி 'சட்டம்' என்பது ''1968ஆம் ஆண்டு (46/1968) பூச்சிக்கொல்லிகள் சட்டம்'' என்று பொருள்படும்.
3. மேல்முறையீட்டு அதிகாரிகள்:-இச்சட்டதின் 15ஆம் பிரிவின்கீழ் பின்வருபவர்களிடம் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும்.
(அ) மாநில அளவில் யாதொரு பூச்சிக்கொல்லியை தயாரிப்பதற்கும், பூச்சிக்கொல்லி மருந்தை விற்பனை செய்வதற்கும், மாநில அளவில் உரிமம் வழங்கக்கூடிய அதிகாரம் பெற்ற மாநில உரிமம் வழங்கும் அதிகாரியின் ஆணைகளால், பாதிக்கப்பட்ட ஒருவர் வேளாண்மை ஆணையர்/வேளாண்மை இயக்குநர் அவர்களிமும், மற்றும் (ஆ) யாதொரு பூச்சிக்கொல்லி சில்லறை விற்பனை, அல்லது விநியோகம் அல்லது இருப்பில் வைப்பதற்கு அல்லது வணிகரீதியாக பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, உரிமம் வழங்குவதற்கு. அதிகாரமளிக்கப்பட்ட மாவட்ட உரிமம் வழங்கும் அதிகாரி அல்லது வட்டார உரிமம் வழங்கும் அதிகாரியின் ஆணைகளால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், வேளாண் கூடுதல் இயக்குநரிடமும் (விதைகள்) மேல் முறையீடு செய்ய வேண்டும்.
4. மேல்முறையீட்டு உள்ளடக்கம்:-ஒவ்வொரு மேல் முறையீட்டிலும், மேல்முறையீட்டாளரின் பெயர், முகவரி மற்றும் மின்னஞ்சல், எத்தகைய குறைபாடுகளுக்காக மேல்முறையீடு செய்யப்பட்டது என்ற விவரங்கள், எந்த ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதோ அந்த ஆணையின் நாள் மற்றும் செலுத்தப்பட்ட கட்டண விவரங்கள், ஆதார ஆவணங்களுடன் கூடிய முழுமையான உண்மை அறிக்கை. துணை ஆவணங்கள், மேல்முறையீட்டிற்கான காரணங்கள், கோரப்படும் நிவாரணம் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
5. மேல்முறையீட்டைத் தீர்மானிப்பதற்கான நடைமுறை:- (1) மேல்முறையீட்டைப் பெற்றவுடன், மேல்முறையீட்டு அதிகாரி, மேல்முறையீட்டைப் பெற்றவுடன், மேல்முறையீட்டு அதிகாரி, மேல்முறையீட்டாளருக்கு ஒரு வாய்ப்பு அளித்தப் பின்னர், மேல்முறையீடு பெறப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள், மேல்முறையீட்டிற்கு தீர்வு காண வேண்டும்.
(2) மேல்முறையீட்டு அதிகாரியின் முடிவே இறுதியானதாகும்.
6. கட்டணம் செலுத்துதல்:-
(1) ஒவ்வொரு மேல்முறையீடும், எந்த ஆணைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படவுள்ளதோ, அந்த அசல் ஆணையுடன் ரூ.1000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) கட்டணத்தொகைக்கான கேட்புக் காசோலையுடன் சேர்த்து அளிக்கப்பட வேண்டும்.
[ 1 ]
III-1a-(18) (T Sup)—12 (2) மேல்முறையீட்டிற்கான கட்டணம், ஆணையர் / வேளாண்மை இயக்குநர், வேளாண்மைத் துறை, சேப்பாக்கம், சென்னை-5 என்ற பெயரில் சென்னை சேப்பாக்கம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் செலுத்தத்தக்க கேட்பு காசோலை வாயிலாக "0401 00-பயிர் வளர்ப்பு, 107 பயிர்ப் பாதுகாப்பு பணிகளிலிருந்து வரவினங்கள், AA- பயிர்ப் பாதுகாப்புப் பணிகள் (0502) - 227 வரி அல்லாத கட்டணம் - 22 உரிமம் (IFHRMS DPC: 0401 00 107 AA 22722) என்ற கணக்குத் தலைப்பின் கீழ் செலுத்தப்பட வேணடும்.
7. மேல்முறையீடு செய்யும் முறை,- மேல்முறையீடு ஏழுத்துப்பூர்வமாக இரு படிகளுடன், மேல்முறையீட்டாளரால் உரியவாறு கையொப்பமிடப்பட்டு அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மேல்முறையீடும் இது தொடர்பான எழுத்துப்பூர்வமான விவரங்களும் மேல்முறையீட்டாளரால் நேரடியாக அல்லது உரிய மேல்முறையீட்டாளரால் இது தொடர்பாக எழுத்துமூலமாக உரியவாறு அதிகாரமளிக்கப்பட்ட முகவர் ஒருவர் வாயிலாக அல்லது பதிவு அஞ்சல் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்.
C. êñò͘ˆF,
(தமிழாக்கம்)
ï. ܼœ,
தொழில் துறை
அறிவிக்கைகள்
(MMC.1
1957ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்படுத்தலும் முறைப்படுத்தலும்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 67/1957) 15ஆம் பிரிவைச் சேர்ந்த (1) மற்றும் (1-A) உட்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு 1959ஆம் ஆண்டு சிறு கனிமச் சலுகை விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.
அவையாவன:-
திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்.-
(1) விதி 2-இல், பகுதி (2)-க்குப் பின்னர், பின்வரும் பகுதி சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-
"(2-A)" தொல்லியல் பகுதி அல்லது அல்லது எஞ்சிய சின்னங்கள் மற்றும் புராதன நினைவுச் சின்னங்கள் என்றால், 1958ஆம் ஆண்டு தொன்மையான நினைவுச் சின்னங்கள், தொல்லியல் ஆய்விடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டம் (மத்தியச் சட்டம் 24/1958) மற்றும் தமிழ்நாடு 1966ஆம் ஆண்டு தொன்மையான மற்றும் வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்லியல் ஆய்விடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) கீழ் தொல்லியல் பகுதி அல்லது எஞ்சிய சின்னங்கள் மற்றும் புராதன நினைவுச் சின்னங்கள் என குறிப்பிடப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட யாதொரு பகுதி அல்லது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஆணையரால் தொல்லியல் முக்கியத்துவமிக்க இடமாகக் கண்டறியப்பட்ட யாதொரு பகுதி அல்லது அவ்வப்போது, தொல்லியல் ரீதியாக அல்லது வரலாற்று ரீதியாக முக்கியத்துவமிக்க எஞ்சிய சின்னங்கள் உடைய பகுதியாகக் கண்டறியப்பட்ட யாதொரு பகுதி என பொருள்படும்,";
(2) விதி 19-A-இன், துணை விதி (18)-இல், பின்வரும் வரம்பு நிபந்தனை சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
" ஆனால், குத்தகைதாரர் விதி 36-இல் வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவு செய்தாலன்றி மற்றபடி, குத்தகை புதுப்பித்தலுக்கு அனுமதிக்கப்பட கூடாது."
(3) விதி 20-இன், துணை விதி (2)-இன், பகுதி (b)-இல், பின்வரும் வரம்பு நிபந்தனை சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
"ஆனால், விதி 36-இல் வரையறுக்கப்பட்டுள்ள சுரங்க செயல்பாடுகள் குறித்த பொதுவான கட்டுப்பாட்டிற்குட்பட்டு, கற்களை வெட்டியெடுக்கும் பணிக்காகக் குத்தகை நீட்டிக்கப்பட வேண்டும்.";
(4) விதி 36-இன், துணை விதி (1-A)-இல்,-
(i) பகுதி (C)-க்குப் பின்னர் பின்வரும் பகுதிகள் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும், அவையாவன,-
"(d) தற்போது செயலிலுள்ள யாதொரு சட்டத்தில், என்ன சொல்லியிருப்பினும், தொல்லியல் பகுதி அல்லது எஞ்சிய சின்னங்கள் மற்றும் புராதன நினைவுச் சின்னங்களின் எல்லைப்பகுதிகளிலிருந்து 500 மீட்டர் ஆர தொலைவிற்குள் யாதொரு கனிமத்தையும் வெட்டி எடுப்பதற்கான குத்தகை அல்லது உரிமம் வழங்கப்படக் கூடாது;
3(e) தற்போது செயலிலுள்ள யாதொரு சட்டத்தில், என்ன சொல்லியிருப்பினும், தேசிய பூங்காக்கள், வன உயிரின சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்கள் மற்றும் காப்பு வனங்கள் போன்ற சுற்றுச்சூழல் ரீதியாகவும் சூழல் ரீதியாகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் கூருணர்வுப் பகுதிகளின் எல்லைப்பகுதிகளிலிருந்து மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தால் அவ்வப்போது அறிவிக்கையிடப்பட்டவாறான பாதுகாக்கப்பட்ட தொலைவில் அல்லது ஒரு கிலோ மீட்டர் ஆர தொலைவிற்குள், (இவற்றுள் எது அதிகமோ அந்த தொலைவிற்குள்) யாதொரு வெட்டியெடுக்கும் அல்லது சுரங்கத் தொழில் அல்லது உடைத்து நொறுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படகூடாது".
N. º¼è£ù‰î‹,
(தமிழாக்கம்)
ï. ܼœ,
(MMC.1
1957ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்படுத்தலும் முறைப்படுத்தலும்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 67/1957) 15ஆம் பிரிவைச் சேர்ந்த (1) (1-A) உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு 1959 ஆம் ஆண்டு சிறு கனிமச் சலுகை விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.
அவையாவன:-
திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில் 12ஆம் விதியின், உட்பிரிவு (2), பகுதி (b)-இல்.-
(i) "சம்பந்தப்பட்ட வட்டத்தின் வட்டாட்சியரிடமிருந்து அனுமதி பெற்ற பின்னர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி பெற்ற பின்னர்" என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
(ii) மூன்றாவது வரம்பு நிபந்தனையில், "சம்பந்தப்பட்ட வட்டத்தின் வட்டாட்சியர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மாவட்ட ஆட்சியர்" என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
S. A¼wí¡,
(தமிழாக்கம்)
ï. ܼœ,
(MMC.1
1957ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்படுத்தலும் முறைப்படுத்தலும்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 67/1957) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (1), (1-A) ஆகிய உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு 1959 ஆம் ஆண்டு சிறு கனிமச் சலுகை விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். அவையாவன:-
திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்,- "பிரிவு IV" என்பதற்குப் பின்னர், பின்வரும் "பிரிவு" சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் அதாவது.-
"HK¾ IV A"
பசுமை நிதியம்.
35. A. பசுமை நிதியம்.-
(1) கைவிடப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கல் வெட்டி எடுக்கும் இடங்களை சீராக்கம், மீள்நிலைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பசுமை நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
(2) இந்த பசுமை நிதியம், 35-Cஆம் விதியின் கீழ் அமைக்கப்பட்ட சீராக்கம், மீள்நிலைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் குழுவின் நிலைபெற்றிருக்கும்.
435. B. பசுமை நிதியத்துக்கான பங்களிப்பு.-
(1) யாதொரு கனிமத்தின் கனிவள ஆய்வு உரிமம் அல்லது கல் வெட்டி எடுக்கும் இடங்களை குத்தகை வைத்திருக்கும் ஒவ்வொருவரும், சுரங்கம் அல்லது கல்வெட்டி எடுக்கும் இடங்களின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற மாவட்டத்தின் பசுமை நிதியத்திற்கு உரிமக் கட்டணத்துடன் உரிமக் கட்டணத்தின் பத்து விழுக்காடு வீதத்திலான தொகையை பங்களிக்க வேண்டும்.
ஆனால், கனிமங்கள் மாநிலத்திற்கு வெளியே உள்ள ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுமாயின், பசுமை நிதியத்திற்கான பங்களிப்பு, உரிமக் கட்டணத்தில் இருபது விழுக்காடு அளவாக இருக்க வேண்டும்.
35. C. சீராக்கம், மீள்நிலைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் குழு அமைத்தல்.-
(1) ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், அவரின் தலைமையின் கீழ்காணும் அலுவல் நிலை உறுப்பினர்களைக் கொண்ட சீராக்கம், மீள்நிலைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் என அழைக்கப்படும் குழு ஒன்றினை ஏற்படுத்த வேண்டும்.
(a) மாவட்ட ஆட்சியர் - தலைவர்
(b) மண்ணியல் மற்றும் சுரங்கங்கள் உதவி இயக்குநர் - உறுப்பினர் - செயலாளர்
(c) மாவட்ட வன அலுவலர்
(d) செயற்பொறியாளர், நீர்வளத்துறை
(e) மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
(f) தலைமை செயல் அலுவலர், மாவட்ட பேரிடம் மேலாண்மை ஆணையம்
(g) மாவட்ட தீயணைப்பு அலுவலர்
35. D. குழுவின் கூட்டங்கள்.-
(1) குழு, தலைவரால் முடிவெடுக்கப்பட்டவாறாக, அத்தகைய நேரம் மற்றும் இடத்தில் அடிக்கடி கூட்டங்களை நடத்தி, நடைமுறைகளின் அத்தகைய விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், குழு ஓராண்டில் குறைந்தது இரு முறை கூட்டங்களை நடத்த வேண்டும்.
(2) கூட்டம் நடைபெறுவதற்கு தேவையான நிர்ணயிக்கப்பட்ட நபர்களின் குறைந்தளவு எண்ணிக்கை, மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்காக இருக்க வேண்டும்.
(3) குழுவின் கூட்டம் குறித்த அறிவிப்பு, கூட்டம் நடைபெறுவதற்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னதாக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் - செயலாளரால் தெரிவிக்கப்பட வேண்டும்.
35. E. குழுவின் பணிகள்.-குழு பின்வரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அவையாவன.
(i) சீராக்கம், மீள்நிலைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் மற்றும் அவை தொடர்பான பணிகளுக்கான கொள்கைகளை பரிந்துரைத்தல் (ii) பசுமை நிதியத்தின் செலவினங்களை குறித்த கால இடைவெளியில் நிருவகித்தல், செயற்படுத்துதல், மேற்பார்வையிடுதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பாய்வு செய்தல்;
(iii) மேற்சொன்ன பகுதிகளில் சீராக்கம், மீள்நிலைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் திட்டப்ணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குதல் ஆகியவற்றிற்காக மாவட்டத்தில் கைவிடப்பட்ட சுரங்கங்கள் அல்லது கல் வெட்டி எடுக்கப்படும் இடங்களின் முன்னுரிமை பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தல்;
(iv) விரிவான திட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சீராக்கம், மீள்நிலைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் நடவடிக்கைகளுக்கு அல்லது திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல்;
(v) கல்வெட்டி எடுக்கப்பட்ட இடங்களை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த முறையிலான பயன்பாட்டிற்கு உதவுதல் மற்றும் இந்த விதிகளின் விதித்துறைகளுக்கு இணக்கமாக இருப்பதை உறுதிசெய்வதற்குத் தேவையான ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ளுதல்;
(vi) அரசு உத்தரவிட்டவாறாக, அத்தகைய யாதொரு பணிகளை மேற்கொள்ளுதல்5 35. F. சீராக்கம், மீள்நிலைப்படுத்துதல் மற்றும் மறு சீரமைத்தலுக்கான நடைமுறை
(1) உறுப்பினர் செயலாளர், சீராக்கம், மீள்நிலைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் ஆகியவற்றுக்கான விரிவான ஆய்வுகளை நடத்துவதற்கு மாவட்டத்தில் கைவிடப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கல்வெட்டி எடுக்கப்படும் இடங்களின் பட்டியலை தயாரித்து, ஆய்வு செய்து, முன்னுரிமை அளிக்க வேண்டும்.
(2) குழு, உறுப்பினர் செயலாளரால் முன்னுரிமை அளிக்கப்பட்ட நிலங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் பேரில், இது தொடர்பாக மத்திய அரசு அல்லது மாநில அரசால், அதன் சார்பில், ஏற்பளிக்கப்பெற்ற ஏதேனும் ஒரு முகமையிடம் விரிவான ஆய்வு நடத்துவதற்கான பணியை வெளிப்பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அதற்கான செலவுத் தொகை பசுமை நிதியத்திலிருந்து செலவிடப்படும்;
ஆனால், இந்த விதியின் கீழ் ஆண்டொன்றுக்கு புறப்பணி முகமைகளுக்கான மொத்த செலவினம், ஆண்டொன்றுக்கு பசுமை நிதியத்தின் மொத்த வரவினத்தில் ஒரு விழுக்காடுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
(3) புறப்பணிகளுக்கான முகமை, தேவையான கள ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், கைவிடப்பட்ட சுரங்கங்கள் அல்லது குவாரிகளின் சீராக்கம், மீள்நிலைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் ஆகியவற்றுக்கான திட்டங்கள் அடங்கிய விரிவான திட்ட அறிககையை அளிக்க வேண்டும். இந்த அறிவிக்கை, ஏனையவற்றுக்கிடையே, பின்வரும் நடவடிக்கைகளை கொண்டதாக வேண்டும்.
அவையாவன,-
(a) கல் வெட்டி எடுக்கப்பட்ட இடத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வகை செய்தல்;
(b) கல் வெட்டி எடுக்கப்பட்ட இடத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலைப் பாதுகாத்தல்;
(c) கல் வெட்டி எடுக்கப்பட்ட இடம் / சுரங்கச் சரிவு நிலப்பகுதிகள், குவிக்கப்பட்ட சரிவு நிலப்பகுதிகளை திடப்படுத்துதல் மற்றும் மண்அரிப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துதல்;
(d) மண் வளத்தை மேம்படுத்துதல்;
(e) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, போதிய நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் கால்வாய்கள் போன்ற பயனுறுதியுடைய மழைநீர் சேகரிப்பு வழிமுறைகளை உருவாக்கி, நீர்வள ஆதாரங்களை பெருக்குதல்;
(f) பொதுமக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு உரிய நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக, குடிக்கக்கூடிய வகையில் குடிநீரை சேகரித்தல்;
(g) கல்வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில் உள்ள பள்ளங்களில் இருந்து நீரை எடுத்து நுண்ணீர் பாசனம் உட்பட வேளாண்மைக்கு ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்துதல்;
(h) மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் செயற்கை இழையைப் பயன்படுத்தி கட்டுமான தொழில்நட்பம், மண்ணில்லா நீர்ம தோட்டக்கலை, படித்தள விவசாயம், மீன் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல்;
(i) உள்நாட்டு தாவரங்களைப் பயன்படுத்தி கல் வெட்டி எடுக்கப்பட்ட பகுதியில் வேளாண் வனவியல் மற்றும் சமூக வனவியலில் காடு வளர்ப்பை ஊக்குவித்தல்;
(j) பூங்காக்கள், தோட்டங்கள், பொழுதுபோக்கு மையங்கள், வணிக மையங்கள், வாகன நிறுத்தப் பகுதிகள், நீர் விளையாட்டு வசதிகள், விளையாட்டுத் திடல்கள், வேளாண் விளை பொருட்களுக்கான சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் கனிம பதப்படுத்தும் பிரிவுகள் / தொகுப்புகள் போன்ற நிலப்பயன்பாட்டு கட்டமைப்புகளை ஏற்படுத்தி, உள்ளூர் மக்களுக்கும் அரசுக்கும் கூடுதல் வருமானம் கிடைப்பதற்கு வகை செய்தல்;
(k) சீராக்கம், மீள்நிலையப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் ஆகியவற்றுக்கு உதவி புரிதல்
(j) தகுந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக கல் வெட்டி எடுக்கும் பள்ளங்களை திடக்கழிவுகளுக்கான கழிவுகளைக் கொட்டும் இடமாக மாற்றியமைத்தல்
(m) மறுசீரமைக்க முடியாத ஆழமான கல் வெட்டி எடுக்கும் இடங்களைப் பொறுத்த நேர்வில், விபத்துகளில் இருந்து பொதுமக்கள் கால்நடைகளைப பாதுகாத்தல்;
இருப்பினும் அறிக்கையில் உள்ள அனைத்து சீராக்கம், மீள்நிலைப்படூத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் திட்டங்களும், சுற்றுப்புறப் பகுதியுடன் கைவிடப்பட்ட சுரங்கங்கள் அல்லது கல் வெட்டி எடுக்கப்படும் பகுதிகளின் சுற்றுச்சூழல் சூழலியல் மற்றும் நில வடிவ கட்டமைப்பில் அழகியல் ஆகியவற்றின் தடையற்ற வகையிலான ஒருங்கிணைந்த உறுதிசெய்யும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.
(4) குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிகாரமளிக்கப்பட்ட அரசுத் துறைகள், அரசு முகமைகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட வேண்டும்.
(5) இந்தப் பிரிவில் என்ன சொல்லியிருப்பினும், எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படுவதற்கான காரணங்களுக்காக, குழுவானது அதன் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதலுடன், ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலம் போன்ற செயல்முறைகள் வாயிலாக யாதொரு ஏனைய பொருத்தமான முகமைக்கு பணியை செயல்படுவதற்கான ஆணையை வழங்கலாம். இத்தகைய அனைத்து6 நேர்வுகளிலும், அரசு திட்டங்களை நிலைவேற்றுவதற்கு பொருத்தக்கூடியவாறான நெறிமுறைகள் நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
(6) தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் பணியின் மேற்பாவை ஆகியவை சம்பந்தப்பட்ட துறையின் உரிய அதிகாரியால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
35G உறுப்பினர் செயலரின் கடமைகள்
(1) உறுப்பினர் செயலரின் கடமைகள் பின்வருமாறு,-
(a) பசுமை நிதியத்திற்கு வழங்கப்படும் அனைத்து தொகைகளுக்கும் பொறுப்புடையவராக இருத்தல்;
(b) பசுமை நிதியத்தின் பரிவர்த்தனையை பொறுத்தமட்டில், வரவு செலவு பேரேடுகள் ஆவணங்கள் மற்றும் பதிவுருக்கள் ஆகியவற்றின் முறையாக பராமரித்தல்;
(c) பசுமை நிதியத்திற்கான வரவு செலவுகள் தொடர்பான மாதாந்திர ஒருங்கிணைந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்ணியல் மற்றும் சுரங்க இயக்குநருக்கு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்கு முன்னர் அளித்தல் (2) உறுப்பினர் செயலர் பின்வரும் விவரங்களை பராமரிக்க வேண்டும். அவையாவன,-
(i) குழு உறுப்பினர்களின் விவரங்கள்
(ii) கைவிடப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கல் வெட்டி எடுக்கப்படும் இடங்களின் பட்டியல்
(iii) குத்தகைதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பங்களிப்புத் தொகையின் மாதாந்திர விவரங்கள்
(iv) குழுவின் அனைத்து கூட்ட நிகழ்ச்சி நிரல், கூட்ட குறிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கைகள்.
(v) கைவிடப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கல் வெட்டி எடுக்கப்படும் இடங்கள் ஒவ்வொன்றுக்கான விரிவான திட்ட அறிக்கைகள்.
(vi) வலைதளத்தில் பசுமை நிதியத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டப்பணிகள் மற்றும் திட்டங்களின் செயல்பாட்டின் நிலை குறித்த இணையவழி பதிவேட்டானது, பணி விவரம், மதிப்பிடப்பட்ட செலவு, செயல்படுத்தும் முகமைகளின் பெயர், எதிர்நோக்கப்படும் பணி தொடங்கப்படும் மற்றும் முடிக்கப்படும் நாள், இறுதிக் காலாண்டு வரையில் நிதி மற்றும் குறிப்பிடப்பட்ட நாளதுவரையில் முடிக்கப்பட்ட பணி முன்னேற்றம் ஆகியவற்றை கொண்டதாக இருக்கும்.
(vii) கைவிடப்பட்ட ஒவ்வொரு சுரங்கம் மற்றம் கல் வெட்டி எடுக்கப்படும் இடத்திற்கான திட்டப்பணி இறுதி அறிக்கை.
(viii) ஆண்டு அறிக்கைகள்
36H குழுவின் முத்திரை குழுவுக்கென ஒரு முத்திரை இருக்க வேண்டும். அம்முத்திரை உறுப்பினர் செயலரின் பாதுகாப்பில் இருக்கப்பட வேண்டும்.
விளக்கம்,-இந்தப்பிரிவின் செயல்நோக்கங்களுக்காக.
(a) கைவிடப்பட்ட சுரங்கங்கள் அல்லது கல் வெட்டி எடுக்கப்படும் இங்கள் என்பதற்கு சுரங்கங்கள் அல்லது கல் வெட்டி எடுக்கப்படும் இடங்கள்.
(i) முறையான மறுசீரமைப்பு இல்லாமல் இயக்கப்பட்டு, பின்னர் மூடப்பட்டவை: அல்லது
(ii) ஆறு மாத கால அளவிற்குக் குறையாமல் மேல் அடுக்கு மண்ணை நீக்கிய பின்னரும் தாதுக்கள் உற்பத்தி செய்யப்படாமல் இருப்பவை; அல்லது
(iii) குத்தகை அல்லது உரிமத்தின் அனைத்துத் தேவைகளுக்கும் இணங்காமல் குத்தகைக்கு உட்பட்ட இடத்தை குத்தகைதாரர் அல்லது உரிமைதாரர் காலி செய்துள்ளார்;
மற்றும் இந்தப் பிரிவின் விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் இயக்கப்பட்டு கைவிடப்பட்ட அத்தகைய சுரங்கங்களும், கல் வெட்டி எடுக்கப்படும் இடங்களும் அடங்கும்.
மேலும், கைவிடப்பட்ட சுரங்கங்கள் அல்லது கல் வெட்டி எடுக்கப்படும் இடங்கள் என்பதற்கு, பின்வருவனவற்றை பொருள் கொள்ளக்கூடாது. அவையாவன,-
(i) செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட அல்லது செயல்படாத ஆனால் உரிமம் அல்லது குத்தகைக்கு செல்லுபடியாகும் காலத்தை உடைய சுரங்கங்கள் அல்லது கல் வெட்டி எடுக்கப்படும் இடங்கள்: அல்லது
(ii) அதன் செயல்பாடு நிறுத்தப்பட்டு, நிலைப்படுத்தப்படும் மற்றும் மீட்டெடுக்கும் செயல்பாட்டில் உள்ள சுரங்கங்கள் அல்லது கல் வெட்டி எடுக்கப்படும் இடங்கள்:
7(b) "குவித்து வைத்தல்" என்பதற்கு வெட்டி எடுக்கும் கருவிகள் அல்லது ஏனைய வழிமுறைகளால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்ட மேல் அடுக்கு மண் மற்றும் கழிவுப் பொருட்கள், நிலத்தில் குவிக்கப்பட்டது என பொருள்படும்
(c) சீரமைத்தல் என்பதற்கு கைவிடப்பட்ட சுரங்கங்கள் அல்லது கல் வெட்டி எடுக்கப்படும் இடங்களில் பள்ளங்களை நிரப்புதல், நிலைப்படுத்தும் நடவடிக்கைகள், மண் அரிப்பினைக் கட்டுப்படுத்துதல், மேலடுக்கு பாதுகாப்புல், காடு வளர்ப்பு மற்றும் நீர்த்தேக்கத்தை அமைத்தல் ஆகியவை அடங்கும் என பொருள்படும்;
(d) மறுசீரமைத்தல் என்பதற்கு கைவிடப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கல் வெட்டி எடுக்கப்படும் இடங்களில் நில அமைப்பு அல்லது தோற்றம், தாவர இனங்களை தெரிவு செய்தல், தாவர வளர்ப்பு முறையைப் பயன்படுத்தி மண்ணை வளப்படுத்துதல், வேதியயில் முறையில் வளப்படுத்துதல், உயிரியல் முறையில் வளப்படுத்துதல் விலங்கினங்களின் மறுகுடியேற்றம் மற்றும் மறுசீரமைத்தல் மறுவாழ்வு மேலாண்மை ஆகியவை அடங்கும் என பொருள்படும்;
(e) மீள்நிலைப்படுத்துதல் என்பதற்கு கைவிடப்பட்ட சுரங்கங்கள் அல்லது கல் வெட்டி எடுக்கப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பொறியியல் சார்ந்த நடவடிக்கைகள், உயிரி பொறியியல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும் என பொருள்படும்.
ê. A¼wí¡,
(தமிழாக்கம்)
ï. ܼœ,
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
K2
தமிழ்நாடு 1947ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 36/1947) 49ஆம் பிரிவைச் சேர்ந்த 1ஆம் உட்பிரிவின் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1948ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். மேற்சொன்ன சட்டத்தின் 49ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு (3)-இன் கீழ் கோரப்பட்டுள்ளவாறாக 17-02-2021ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் பாகம் III பிரிவு 1(a)-இல் 8-12 வரையிலான பக்கங்களில், இதன் வரைவு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் எண் SRO A-4/2021 ஆம் அறிவிக்கையாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்.-
(1) 11ஆம் விதியைச் சேர்ந்த துணை விதிகள் (4) மற்றும் (5) விட்டுவிடப்பட வேண்டும்
(2) விதி 16இல் துணைவிதி (1)க்குப் பதிலாக பின்வரும் துணை விதி அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-
(1) (a) வேலையளிப்பவர் ஒவ்வொருவரும் கீழ்க்காணும் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும்.
(i) படிவம் U-இல் பணியமர்த்தப்பட்டவர்களுக்கான பதிவேடு
(ii) படிவம் V-இல் வேலைவாய்ப்புப் பதிவேடு.
(iii) படிவம் W-இல் ஊதியங்களுக்கான பதிவேடு; மற்றும்
(iv) படிவம் X-இல் விடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பயன்களுக்கான பதிவேடு.
(b) பகுதி (a) இல் குறிப்பிடப்பட்ட பதிவேடுகள் மின்னணு வடிவில் அல்லது கையேடு வடிவில் பராமரிக்கப்பட வேண்டும்
(c) பகுதி (a) இல் குறிப்பிடப்பட்ட பதிவேடுகள் மின்னணு வடிவில் பராமரிக்கப்படும் போது, பதிவேட்டின் நெடும்பத்திகளின் பிரிவு தொடர் எண் மற்றும் பொருளடக்கங்களின் முழுமை மாறாமல் பதிவேடுகளின் வடிவமைப்பு மற்றும் அளிக்கும் முறை பின்பற்றப்படலாம்.
(3) படிவங்கள் P,Q மற்றும் R விட்டுவிடப்பட வேண்டும்.
(4) படிவம் Tக்குப் பின்னர் பின்வரும் படிவங்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அவையாவன:-
8"படிவம்.- U
பணியாளர் பதிவேடு
[16ஆம் விதியைச் சேர்ந்த துணை விதி (1)ஐ காண்க]
நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி:
பதிவு சான்றிதழ் எண்:
| தொடர் எண் | பணியாளரின் பெயர் | பணியாளர் அடையாள எண் | பாலினம் | தந்தை / கணவன் / மனைவி பெயர் | பிறந்த நாள் | பணியில் சேர்ந்த நாள் | பதவிப்பெயர் | தற்போதைய முகவரி | நிரந்தர முகவரி | பணியாளர் வருங்கால வைப்பு நிதி எண் | தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக எண் | ஆதார் எண் | பணியில் சேர்ந்து 480 நாட்கள் நிறைவடைந்த நாள் | பணி நிரந்தரமாக்கப்பட்ட நாள் | பணி இடைநீக்கக் கால அளவு (ஏதேனுமிருப்பின்) | வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், கிளை (இந்திய நிதி அமைப்பு குறியீடு (IFSC) குறியீடு | புகைப்படம் | அலைப்பேசி எண் | மின்னஞ்சல் முகவரி | மாதிரி கையொப்பம் / பெருவிரல் கைரேகை | பணியிலிருந்து வெளியேறிய நாள் | பணியிலிருந்து வெளியேற்றத்திற்கான காரணம் | குறிப்புரைகள் |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
"படிவம்.- V
வேலைவாய்ப்புப் பதிவேடு
[16ஆம் விதியைச் சேர்ந்த துணை விதி (1)ஐ காண்க]
________________லிருந்து______________கால அளவிற்காக
நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி:
வேலையளிப்பவரின் பெயர் மற்றும் முகவரி: ஒப்புதலளிக்கப்பட்ட பண்டிகைக்கால நாட்களுக்கான செயல்முறை
ஆணை எண் & நாள்:
மேலாளர்/ பொறுப்பாளரின் பெயர்: ஒப்புதலளிக்கப்பட்ட பண்டிகை விடுமுறைகள்
| 1 | 2 | 3 | 4 | 5 |
பதிவுச் சான்றிதழ் எண்:
9| தொடர் எண் | பணியாளரின் பெயர் | பணியாளரின் அடையாள அட்டை எண் | வேலையை தொடங்கும் நேரம் | ஓய்வு இடைவேளை | வேலை முடிவடையும் நேரம் | மிகைப்பணி நேரம் உட்பட நாள்தோறும் வேலை செய்த நேரங்கள் (ஏதேனுமிருப்பின்)* | வேலை செய்த மொத்த நாட்கள் | வேலை செய்த மொத்த நேரங்கள் | ஊதியமில்லா விடுப்பெடுத்த மொத்த நாட்கள் | தேசிய விடுமுறையில் வேலை செய்ததற்காக பெறப்பட்ட ஆதாயம் (**) | பண்டிகை விடுமுறையில் வேலை செய்ததற்காக பெறப்பட்ட ஆதாயம் (**) | குறிப்புரைகள் | ||||||||||||||||||||||||||||||
| 1 2 3 4 5 6 7 8 9 1 | 0 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | ||||||||||||||||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | ||||||||||||||||||||||||||||||
*பயன்படுத்தப்பட்ட வேண்டிய சுருக்கக் குறியீடுகள்:
H – வாராந்திர விடுமுறை
FH – பண்டிகைக்கால விடுமுறை
NH - தேசிய விடுமுறை
EL - ஈட்டிய விடுப்பு
ML - மருத்துவ விடுப்பு
HW - ஊதியத்துடன் கூடிய விடுப்பு
MBL - மகப்பேறு விடுப்பு
SH - ஈடு செய் விடுப்பு
SP - பணியிடைநீக்கம்
LOP - ஊதியமில்லா விடுப்பு
**பயன்படுத்தப்பட வேண்டிய சுருக்கக் குறியீடுகள்:
H - அனுமதிக்கப்பட்ட விடுமுறை நாட்களுக்காக
W/D - இரட்டை ஊதியத்தில் வேலை செய்ததற்காக
W/H - விடுமுறை நாள் அன்று பணிசெய்ததற்காக
'N/E' - ஊதியம் பெற தகுதியில்லை எனில்,10 படிவம் - W
ஊதியங்கள் பதிவேடு
[16ஆம் விதியைச் சேர்ந்த துணை விதி (1)ஐ காண்க]
| ஆண் | பெண் | உரிய வயதையடையாத ஆடவர் | உரிய வயதையடையாத மகளிர் |
நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி:
வேலையளிப்பவரின் பெயர் மற்றும் முகவரி:
மேலாளர் / பொறுப்பாளரின் பெயர்:
பதிவு சான்றிதழ் எண்:
-------------- லிருந்து ---------------- காலம் அளவு வரைக்கான ஊதியம்
(மாதாந்திரம் / இரண்டு வாரங்களுக்கொரு முறை வாராந்திர ஊதியம்/ அன்றாட ஊதியம் செய்யும் வேலைக்கேற்ற ஊதியம்)
| தொடர் எண் | பணியாளரின் பெயர் | பணியாளரின் அடையாள அட்டை எண் | பணி செய்த மொத்த நாட்கள் | அடிப்படை ஊதியம் | அகவிலைப்படி | வீட்டு வாடகைப்படி | ஏனைய படிகள் (தன்மையை குறிப்பிடவும்) | மிகைப்பணி நேர ஊதியங்கள் எடுக்கப்பட்ட ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் / பண்டிகைக்கால விடுப்புக்கான இரட்டிப்பு ஊதியம் / கொண்ட விடுமுறைக்கான ஊதியங்கள் | விடுப்பு ஊதியங்கள் (ஈட்டிய விடுப்பிற்காக பெறப்பட்ட ஊதியம் / NFH க்கான இரட்டை ஊதியம் / திரண்ட விடுப்பிற்கான ஊதியம்) | மொத்த ஊதியங்கள் | பிடித்தங்கள் | ||||||||||||||||||
| வருங்கால வைப்பு நிதி எண் | மிகை நேர பணிக்கான ஊதியகள் | தொழிலாளர் நல நிதி | முன்பணங்கள் | சேதங்கள் / அபராதங்கள் | |||||||||||||||||||||||||
| வழங்கப்பட்ட முன்பணம் | மாத தொடக்கத்தில் வசூலிக்காமல் நிலுவையிலிருந்த முன்பணம் | வÅலிக்கப்பட்ட முன்பணம் | வÅலிக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை | சேதங்கள், இழப்புகள் அல்லது அபராதங்கள் வகையில் விதிக்கப்பட்ட பிடித்தம் | மாதத்தின் தொடக்கத்தில் வசூலிக்காமல் நிலுவையிலுருந்த பிடித்தத் தொகை | சேதங்கள், இழப்புகள் அல்லது அபராதங்கள் வகையில் பிடித்தம் | நிலுவையிலுள்ள வÅலிக்கப்பட வேண்டிய தொகை | ஏனைய யாதொரு பிடித்தங்கள் | மொத்த பிடித்தங்கள் | நிகர ஊதியம் | தொகை வழங்கப்பட வேண்டிய நாள் | செலுத்தப்படாத திரண்ட தொகை | கணக்கிடப்பட்ட பிழைப்பூதியப் படியின் விகிதம் மற்றும் செலுத்தப்பட்ட தொகை | பணியாளரின் இரசீது / வங்கி பரிவர்த்தனை எண் / நாள் | குறிப்புரைகள் | ||||||||||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
படிவம் - X
விடுப்பு மற்று,ம் சமூக பாதுகாப்புப் பயன்கள் பதிவேடு
[16ஆம் விதியைச் சேர்ந்த துணை விதி (1)ஐ காண்க]
நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி:
வேலையளிப்பவரின் பெயர் மற்றும் முகவரி:
மேலாளர் / பொறுப்பாளரின் பெயர்:
பதிவு சான்றிதழ் எண்:
------------- ஆம் ஆண்டு---------------- மாதத்திற்காக
| தொடர் எண் | பணியாளரின் பெயர் | பணியாளர் அடையாள அட்டை எண் | ஈட்டிய விடுப்பு | மருத்துவ விடுப்பு | ஏனைய விடுப்பு | மகப்பேறு பயன்கள் | பணிக்கொடை பயன்கள் | |||||||||||||
| மாதத்தின் தொடக்கத்திலிருந்த விடுப்பு | அந்த கால அளவில் ஈட்டிய விடுப்பு | அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு | மாதத்தின் இறுதியில் நிலுவையிலிருந்த விடுப்பு | மாதத்தின் தொடக்கத்திலிருந்த விடுப்பு | அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு | மாதத்தின் முடிவில் நிலுவையிலிருந்த விடுப்பு | மாதத்தின் தொடக்கத்திலிருந்த விடுப்பு | அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு | மாதத்தின் முடிவில் நிலுவையிலிருந்த விடுப்பு | கருவுற்ற நிலை / பிரசவம் குறித்த அறிவிப்பு அளிக்கப்பட்ட நாள் | மகப்பேறினை எதிர்ப்பார்த்து அதன் அடிப்படையில் முன்னதாகவே வழங்கப்பட்ட மகப்பேறு உதவித் தொகை மற்றும் தொகை வழங்கப்பட்ட நாள் | அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மகப்பேறு உதவித் தொகை மற்றும் தொகை வழங்கப்பட்ட நாள் | மருத்துவ ஊக்கத் தொகையாக வழங்கப்பட்ட தொகை மற்றும் வழங்கப்பட்ட நாள் | 1961 ஆம் ஆண்டு மகப்பேறு ஊக்கத் தொகை சட்டத்தின் 9 அல்லது 10 ஆம் பிரிவின் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுப்பு | பணியாளரிடமிருந்து நேமகதரர் பெயர் விவரம்பெறப்பட்டதா | பணியாளரின் வெளியேற்றம் அல்லது இறப்பு குறித்த நேர்வில் பணிக்கொடையாக வழங்கப்பட்ட தொகை | குறிப்புரைகள் | |||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
Þó£. A˜"ô£w °ñ£˜,
(தமிழாக்கம்)
ï. ܼœ,
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.