Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Noification of Government - Tamil Translations

Published 18 May 2022

Type
Ordinary
Gazette no.
20
Part
Part II
Notifications
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT - Notification
Section
Section_2T_Supp
Identifier
in.gazette.tamilnadu.2022-05-18.Ordinary_20_Part-II_Section_2T_Supp
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14.

தமிழ்நாடு அரசு

2022

[R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 20] சென்னை, புதன்கிழமை, மே 18, 2022 வைகாசி 4, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வீட்- -டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி- -த் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 48, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4-2]த் துறை, 6 ஏப்ரல் 2022] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர - நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல் 207 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2009/74 ஆம் எண் அறிவிக்கையில் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள சத்தியமங்கலம் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளை சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-

" வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்

57. ஹரியப்பம்பாளையம்

55. புதுக்கலையனூர்

ஹரியப்பம்பாளையம் பேரூராட்சி

56. பழைய கலையனூர்

35. பட்டவர்த்தி அய்யம்பாளையம்

32. சிக்கரசம்பாளையம்

26. தாசரிபாளையம்

28. மலையடிபுதூர்

59. கொமாரபாளையம்

33. இக்கரை நெகமம்

52. அக்கரை நெகமம்

53. கோணமூலை

60. ஆலத்துக்கோம்பை

61. சதுமுகை

62. மாக்கினாங்கோம்பை

64. அரசூர்

63. இண்டியம்பாளையம்

54. செண்பகபுதூர்

65. உக்கரம்.",

DTP-II-2-(20) (T Sup)—12 (2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பவர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனத்திடமிருந்து கூடுதலாக சேர்க்கக் கருதப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பாக வரப்பெறுகிற மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்துப்பூர்வமாக அரசுக்கு அளிக்கலாம் என்றும், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் நிபந்தனைகளின்படி மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசு அவற்றை பரிசீலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின் அவற்றை சென்னை-600 009 இல் உள்ள 'அரசு முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (ப) எண். 150, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு (J1)த் துறை, 5 ஏப்ரல் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், வெளியிடக் கருதப்பட்டுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதிக்கு கீழ் கோரப்பட்டவாறு அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த வரைவு அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு, முடிவடையும் நாளன்று அல்லது அதன் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படும் என்றும், மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை சென்னை-600 006இல் டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் ஆணையாளர் வாயிலாக அரசு செயலாளர், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

வரைவு அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 26.12.2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல், 1177 மற்றும் 1178 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா./1090/2018 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் காடு வளர்ப்பில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

காடு வளர்ப்பில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்கள்

தொழிலாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய

வீதங்கள் (ரூ. காசு)

(1)

(2)

(1) நாற்றுப்பண்ணை மசூதூர்/

நாற்றுப்பண்ணை தொழிலாளர்

(2) மனை மசூதூர் / மனைக்காவலர்

நாளொன்றுக்கு 311.00

(3) தீத்தடுப்பு ரோந்து காவலாள்

(4) சந்தன மரப்பாதுகாப்பு / சுற்றிவரும் காவலாள்3 தொழிலாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)

(1)

(2)

(5) மசூதூர்களின் நாள் ஊதியங்கள்:

நிலை-I

நாளொன்றுக்கு 327.00

நிலை-II

நாளொன்றுக்கு 321.00

நிலை-III

நாளொன்றுக்கு 311.00

குறிப்பு:-

1. நிலை-I/வகை-A-சென்னை, திருவள்ளூர்,

காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள்.

2. நிலை-II/ வகை-B-சேலம், கோயம்புத்தூர் மற்றும்

மதுரை மாவட்டங்கள்.

3. நிலை-III/ வகை-C-ஏனைய மாவட்டங்கள்

(6) சந்தன மர கிடங்கில் மசூதூர்:

வகை-I (இறுதி தூய்மையாக்கல்)

நாளொன்றுக்கு 327.00

வகை-II (ஓரளவு தூய்மையாக்கல்)

நாளொன்றுக்கு 321.00

வகை-III (ஏனையப் பணி)

நாளொன்றுக்கு 311.00

(7) வேலிப்படல் அமைத்தல்:

பட்டை உரித்தல்

மெட்ரிக் டன் ஒன்றுக்கு 4297.00 சுமை ஏற்றுதல்

மெட்ரிக் டன் ஒன்றுக்கு 1283.00 பட்டைகளை வெட்டி அடுக்குதல் 3 கன மீட்டர்களுக்கான கட்டு ஒன்றுக்கு 990.00 (8) நீலகிரி மலைத் தைல மரம்:

வெட்டுதல் மற்றும் அடுக்குதல் 3 கன மீட்டர்களுக்கான கட்டு ஒன்றுக்கு 899.00 விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், பணியாளர்களுக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படி, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது 2001 = 100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூ. 1.92 (ஒரு ருபாய் தொன்னூற்று இரண்டு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான, அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில் நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) ஒரே தன்மையுடைய பணியைச் செய்யும் போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) தினப்படி ஊதியவீதங்களும் அகவிலைப்படியும் வார விடுமுறை ஊதியங்களில் அடங்கும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலொல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (ப) எண் . 164, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 8 ஏப்ரல் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரப்பட்டவாறு அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு, முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு உரியவாறு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அவற்றை சென்னை-600 006 டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் ஆணையாளர் வாயிலாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

4 வரைவு அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 02.01.2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல் 2 மற்றும் 3 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா./5/2019 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய

வீதங்கள் (ரூ. காசு.)

(1)

(2)

I. பொதுவான வகையினர்:

1. மேலாளர்

மாதமொன்றுக்கு 10410.00

2. ஆய்வாளர்

மாதமொன்றுக்கு 10234.00

3. இயக்குபவர்

மாதமொன்றுக்கு 10234.00

4. முதலாள் மாதமொன்றுக்கு 10234.00

5. எழுத்தர்

மாதமொன்றுக்கு 9409.00

II. பட்டுப்புழு வித்தகம்:

1. கலப்பினச் சேர்க்கைப் பட்டுப்புழுக் கூடுகளை நாளொன்றுக்கு 310.00

இனம் பிரித்தல்

2. பாலின வகைபிரித்தல் தொடர்பான பணிகள்

3. இணை சேர்த்தல்

4. முட்டையிடுதல் தொடர்பான பணிகள்

5. இணை பிரித்தல்

6. முட்டை சேகரத் தட்டுகளை சுகாதாரமாகப்

பராமரிப்பதற்கான வேதிமுறைச் செயற்பாடு

III. சக்கி வளர்த்தல் மற்றும் கவனித்தல் நாளொன்றுக்கு 310.00

1. வளர்ப்பு அறையைத் தொற்றுநீக்கம் செய்தல்

2. குறுக நறுக்குதல், வேதிப்பொருள் ஊட்டமிட்டுப்

பேணி வளர்த்தல்

3. கட்டளைச் சட்டமிடுகின்ற கூருணர்வுப்பணி

4. மூங்கில் சேகரிப்பு தட்டுகளில் புழுக்களை

சேர்த்தல்

IV. ஏனைய வகைகள்

1. பட்டு நூலிழை பிரித்தல் (நூலிழை பிரிப்பவர்) நாளொன்றுக்கு 310.00

2. ஸ்ட்ரிஃப்லிங் (Striffling)

3. வகை பிரித்தல் (Sorting)

4. தரநிலை காத்தல் (Preservation)

5. வேகவைத்தல்

6. நூலிழை பிரித்தல் (Reeling)

7. மீள நூலிழை பிரித்தல் (Re-reeling)5

பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய

வீதங்கள் (ரூ. காசு.)

(1)

(2)

V. பட்டுப்புழுக் கூடு சந்தைப்படுத்தல்

1. சந்தையில் புழுக்கூட்டுக் கூடைகளை இறக்குதல் நாளொன்றுக்கு 305.00

2. ஏலம் நிகழ்ந்த பின்னர் கூடைகளை நிரப்புதல் மற்றும் எடை இயந்திரத்திற்குக் கொண்டு செல்லுதல்

3. எடையிடுதல் அல்லது ஏற்றி இறக்குதல்

4. ஏனைய யாதொரு ஒத்த பணி

VI. ஏனைய வகைகள்

1. மஸ்தூர் அல்லது காவலாள் அல்லது

நாளொன்றுக்கு 306.00

தோட்டக்காரர்

2. துணையாள் (Attender)

VII. பட்டுப் பண்ணை அல்லது முசுக்கட்டை மரத்

(மல்பெரி) தோட்டம்

1. குழி தோண்டுதல்

2. நாற்றங்கால்

3. பரம்படித்தல் (கட்டிகள் உடைத்தல்)

4. செடி நடுதல்

5. மேடு அணைத்தல் (Mounting)

6. ஊடு சாகுபடி

7. களையெடுத்தல் (களைபிடுங்குதல்) Up-rooting)

8. இலை பறித்தல்

9. வேதிப்பொருட்கள் மற்றும் உரங்கள்

நாளொன்றுக்கு 305.00

கலக்கும் வேதிச் செயற்பாடுகள்

10. வேதிப்பொருட்கள் மற்றும் உரங்கள்

தெளித்தல் மற்றும் வேதிச்

செயற்பாடுகள்

11. தழை வெட்டுதல் (Prown-Cutting)

12. நாற்றங்கால் பாத்தி அமைத்தல்

13. பாத்தி அமைத்தல்

14. நீர் மேலாண்மை

15. களையெடுத்தல்

16. ஏனைய யாதொரு பணி

VIII. கால்நடை மற்றும் கலப்பை கொண்டு உழுபவர் நாளொன்றுக்கு 305.00

விளக்கங்கள்:—(1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், அகவிலைப்படி நாள் ஒன்றுக்கு ரூ. 1.88 (ஒரு ரூபாய் எண்பத்தெட்டு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

6 (3) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (நிலை) எண் 35, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 11 ஏப்ரல் 2022.] பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஏனைய செய்தித்தாள் பணியாளர்கள் (பணிநிலைமைகள்) மற்றும் பல்வகை வழிவகைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 45/1955) 17 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், அவ்வாறு நீக்கம் செய்வதற்கு, முன்னர் மேற்கொள்ளப்பட்ட அல்லது மேற்கொள்ளாமல் விட்டு விடப்பட்டவை நீங்கலாக, 31.08.1994 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல் 810 மற்றும் 811 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே./3313/94 ஆம் எண் அறிவிக்கையை இதனால் இரத்து செய்கிறார்.

இரா. கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 May 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-05-18.Ordinary_20_Part-II_Section_2T_Supp/. Archive identifier in.gazette.tamilnadu.2022-05-18.Ordinary_20_Part-II_Section_2T_Supp.