| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 313] CHENNAI, TUESDAY, MAY 31, 2022 Vaikasi 17, Subakiruthu, Thiruvalluvar Aandu–2053
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் கிராம ஊராட்சிகளின் ஆய்வாளர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டைமேடு கிராம ஊராட்சித் தலைவர்
பதவி நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை
(ந.க. அ4உ.இ(ஊ)/664/2020)
No. VI(2)/48(a)/2022.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டைமேடு ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி. ஏ.ஜி. சர்மிளாஜி என்பவர் அவ்வூராட்சியின் நிர்வாக அலுவலர் என்ற முறையில் செயல்படும்போது ஊராட்சியில் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டு 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205-ன் கீழ் அன்னாருக்கு விளக்கம் கோரும் அறிவிப்பு வழங்கப்பட்டது.
ஊராட்சிமன்றத் தலைவர் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தனித்தனியே தனது விளக்கத்தினை அளித்துள்ளார். ஊராட்சிமன்றத் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள், அவற்றிற்கு அவர் அளித்துள்ள விளக்கங்கள் மற்றும் அலுவலக ஆவணங்கள் ஆகியன விதிமுறைகளுடன் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் அவரது விளக்கங்கள் ஏற்கக்கூடியதாக இல்லை. எனவே, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205-ன்படி கோட்டைமேடு கிராம ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி. ஏ.ஜி. சர்மிளாஜி என்பவரின் நிர்வாகத்தில் காணப்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பாக அவரை கோட்டைமேடு ஊராட்சிமன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டு, இது குறித்து அந்த கிராம ஊராட்சியின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக கோட்டைமேடு கிராம ஊராட்சி உறுப்பினர்களின் கூட்டத்தினை அவ்வூராட்சி மன்ற அலுவலகத்தில் நடத்திட வாடிப்பட்டி வட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வாடிப்பட்டி வட்டாட்சியரால் 22.04.2022 அன்று நடத்தப்பட்ட கோட்டைமேடு ஊராட்சியின் கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது அன்னார் அளித்துள்ள விளக்கங்கள், ஊராட்சி மன்றத் தலைவரை பதவிநீக்கம் செய்யும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர் அவர்களின் செயற்குறிப்பு ஆகியவற்றை முன்வைத்து ஊராட்சிமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டன. ஊராட்சியின் செயல் அலுவலராகிய ஊராட்சிமன்றத் தலைவர் தனது கட்டாய மற்றும் அடிப்படை கடமைகளிலிருந்து தவறி, அரசினால் ஊராட்சி வளர்ச்சிக்கு வழங்கப்படும் நிதிகளில் முறைகேடுகள் செய்தும், அரசின் விதிமுறைகளை மீறி மிகைச் செலவினங்கள் செய்தும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. எனவே, ஊராட்சிகளின் ஆய்வாளர் அவர்களின் செயற்குறிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்த ஊராட்சிமன்ற உறுப்பினர்களின் கருத்து ஏற்புடையதாக இல்லை.
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYகோட்டைமேடு ஊராட்சிமன்றத் தலைவர் மீது பிறப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், அதற்கான அன்னாரின் விளக்கங்கள் மற்றும் கூடுதல் விளக்கங்கள், வாடிப்பட்டி வட்டாட்சியரால் நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் ஆகியவை ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உளத்தேர்வின்படி கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, கோட்டைமேடு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. ஏ.ஜி. சர்மிளாஜி என்பவரை ஊராட்சிமன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
மதுரை, 2022, மே 25.
மரு. எஸ். அனீஷ் சேகர், ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்.