© [Regd. No. TN/CCN/467/2012-14.
தமிழ்நாடு அரசு
2022
[R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 2.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 22] சென்னை, புதன்கிழமை, ஜூன் 1, 2022 வைகாசி 18, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வீட்- -டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 44, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4-(2)]த் துறை, 6 ஏப்ரல் 2022.] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 28.10.1992 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2இல் 601 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை துறையின் II(2)/HOU/5145/92 ஆம் எண் அறிவிக்கையில் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு வள்ளியூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளை சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.
| வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர் | |||
| ராதாபுரம் வட்டம் | |||
| 4. | தெற்கு வள்ளியூர் பாகம்-I | ||
| 4. | தெற்கு வள்ளியூர் பாகம்-II | ||
| 11. | அச்சம்பாடு | ||
| நாங்குநேரி வட்டம் | |||
| 62. | தளபதி சமுத்திரம் பாகம்-I | ||
| 62. | தளபதி சமுத்திரம் பாகம்-II |
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியான நாளிலிருந்து இரண்டு திங்களுக்குள், மேற்சொன்ன பகுதியிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனம், கூடுதலாக சேர்க்கக் கருதப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பாக, மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்துப்பூர்வமாக அரசுக்கு அளிக்கலாம் என்றும் மேற்சொன்ன கால அளவிற்குள் வரப்பெறும் அவற்றை மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் நிபந்தனைகளின்படி மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அவற்றை சென்னை-600 009 இல் உள்ள அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
[ 1 ]
DTP-II-2-(22) (T Sup)—12 [அரசாணை (நிலை) எண் 47, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4-(2)]த் துறை, 6 ஏப்ரல் 2022] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 24.4.1985 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2இல் 316 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி்த் துறையின் II(2)/HOU/2010/85 ஆம் எண் அறிவிக்கையில் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள சின்னமனூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளை சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.
வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
11. புலாந்தபுரம்
18. முத்துலாபுரம்
13. உத்தமபாளையம்
12. மார்க்கையன்கோட்டை
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், மேற்சொன்ன பகுதியிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனம் கூடுதலாக சேர்க்க கருதப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பாக, மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்துப்பூர்வமாக அரசுக்கு அளிக்கலாம் என்றும் மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் நிபந்தனைகளின்படி மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசு அவற்றை பரிசீலிக்கும் என்றும் இதனால், அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அவற்றை சென்னை-600 009 இல் உள்ள 'அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஹிதேஷ் குமார் -எஸ். மக்வானா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கை
[அரசாணை (ப) எண் 148, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J-1)]த் துறை, 5 ஏப்ரல் 2022] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியவாறாக, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு மாதங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்றும் மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக எவரிடமிருந்தேனும் வரப்பெறும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006, டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக, அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 26.12.2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2 இல், 1178 மற்றும் 1179 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர்3 மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா./1091/2018 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் பட்டு முறுக்கேற்றும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணி / தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்:-
விவர அட்டவணை
- -பட்டு முறுக்கேற்றும் தொழிலில் வேலைவாய்ப்பு
| தொடர் எண் | பணி/தொழிலாளர் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு) |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1. | நூல் இழைத்தல் | நாளொன்றுக்கு 305.00 |
| 2. | மடித்தல் | நாளொன்றுக்கு 306.50 |
| 3. | சுற்றுதல் | |
| 4. | முறுக்கேற்றுதல் | |
| 5. | பாவுபோடுதல் | நாளொன்றுக்கு 317.50 |
| 6. | மேலாள்/எழுத்தர் | மாதமொன்றுக்கு 9289.00 |
| 7. | நிருவாக உதவியாளர் | மாதமொன்றுக்கு 9946.00 |
வி்ளக்கங்கள்: (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது 2001=100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிககள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூ. 186 (ஒரு ரூபாய் எண்பத்து ஆறு காசு மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழக்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான, அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சாராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) ஒரே தன்மையுடைய பணியைச் செய்யும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(4) மாதாந்திர ஊதியங்களைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் ெபருக்க வேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிெளல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
[அரசாணை (ப) எண் 170, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J-1)]த் துறை, 11 ஏப்ரல் 2022] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக4 மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு உரியவாறு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை சென்னை-600 006 டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 6.6.2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2 இல், 528ஆம் பக்கத்தில் ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா./514/2018 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் சலவையகங்கள் மற்றும் துணிகள் துவைத்தல் (கம்பளி உட்பட) தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த பணிகளுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்:-
விவர அட்டவணை
- -சலவையகங்கள் மற்றும் துணிகள் துவைத்தல் (கம்பளி உட்பட) தொழிலில் வேலைவாய்ப்பு
| தொடர் எண் | பணியின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( 8 மணி நேர பணிக்கு நாளொன்றுக்கு) ரூ. காசு |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| (1) | 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/48) அல்லது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் சலவையகங்களில் துணிகள் துவைத்தல் | 418.00 |
| (2) | 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/48) அல்லது தொழிலாளர் மாநில காப்புறுதித் திட்டத்தின் அல்லது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் சலவையகங்களில் துணிகளுக்கு பெட்டி போடுதல் | 425.50 |
| (3) | மேற்சொன்ன இனம் (1) இல் குறிப்பிடப்பட்டவை நீங்கலாக சலவையகங்களில் துணிகளைத் துவைத்தல். | 424.00 |
| (4) | மேற்சொன்ன இனம் (2) இல் குறிப்பிடப்பட்டவை நீங்கலாக சலவையகங்களில் துணிகளுக்கு பெட்டி போடுதல். | 433.00 |
வி்ளக்கங்கள்: (1) குறைந்தளவு ஊதிய வீதங்கள் ரொக்கமாக செலுத்தப்பட வேண்டும்.
(2) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படி, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி நாள் ஒன்றுக்கு ரூ.2.55 (இரண்டு ரூபாய் ஐம்பத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) நுகர்வோர் விலை குறியீடுகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான ஜனவரி முதல் டிசம்பர் வரையில் நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இத்திருத்தம் செயலுக்கு வரும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
5 (4) தினப்படி ஊதிய வீதங்கள் மற்றும் அகவிலைப்படியில் விடுமுறை ஊதியங்களும் அடங்கும்.(5) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(6) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிெளல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
இரா. கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.