Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications by Government - Tamil Translations

Published 08 June 2022

Type
Ordinary
Gazette no.
23
Part
Part II
Notifications
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT--Notifications
Section
Section 2_T_Supp
Identifier
in.gazette.tamilnadu.2022-06-08.Ordinary_23_Part-II_Section-2_T_Supp
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14.

தமிழ்நாடு அரசு

2022

[R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 3.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 23] சென்னை, புதன்கிழமை, ஜூன் 8, 2022 வைகாசி 25, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (D) எண் 149, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 5 ஏப்ரல் 2022] 1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதப்பட்டுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த வரைவு அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், யாதொரு நபரிடமிருந்து இதுகுறித்து வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரையை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை எவையேனும் இருப்பின், அவற்றை டி.எம்.எஸ். வளாகம், சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் மூலமாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 9-1-2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு-2 இல், 23-25 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/தொ.வே./22/2019 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்கக் குறைந்த அளவு ஊதிய வீதங்களை கீழ்க்காணும் விவர அட்டவணைகள் I மற்றும் II இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

[ 1 ]

DTP-II-2-(23) (T Sup)—12 விவர அட்டவணை-I

தங்கத்தாலான பொருட்கள் தயாரிப்பு

தொடர்

பொருட்கள் தயாரிப்பதற்கான எண்

தங்கத்தின் எடை (1) (2)

A. செய்யும் வேலைக்கேற்ற ஊதியங்கள் குறைந்த அளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (கிராம் ஒன்றுக்கு)

(3)

கற்கள்

கற்கள் பொருத்தப்படும் பொருத்தப்படாத பொருட்கள்

பொருட்கள் (ரூ. காசு)

(ரூ. காசு) 1. 1 கிராம் முதல் 5 கிராம் வரை 120.17 300.40 2. 5 கிராமுக்கு மேல் 10 கிராமிற்குள் 84.15 240.34 3. 10 கிராமுக்கு மேல் 20 கிராமிற்குள் 58.09 180.23 4. 20 கிராமுக்கு மேல் 30 கிராமிற்குள் 54.06 120.17 5. 30 கிராமுக்கு மேல் 40 கிராமிற்குள் 48.07 96.14

6. 40 கிராமுக்கு மேல் 50 கிராமிற்குள் 42.09 84.15

7. 50 கிராமுக்கு மேல் 75 கிராமிற்குள் 36.07 72.12

8. 75 கிராமுக்கு மேல் 30.03 60.07

B. நாள் அடிப்படையிலான ஊதியங்கள் : நாளொன்றுக்கு ரூ.399.50

விவர அட்டவணை-II

வெள்ளிப் பொருட்கள் தயாரிப்பு

A. கொலுசு தயாரிப்பு

தொடர்

பணியின் வகை குறைந்த அளவு அடிப்படை ஊதிய வீதங்கள் எண்

(1) (2)

1. கம்பி இழுத்தல்

2. ஜதை வளைத்தல்

3. பூக்கள் தயாரிப்பு

(a) கெட்டி

(b) மெல்லியது

4. அரும்பு

5. சங்கிலி

6. சலங்கை

7. முகப்பு

(கிலோ ஒன்றுக்கு)

(ரூ. காசு)

(3)

48.07

600.83

360.52

300.40 72.12

120.17

300.40

480.69

8. திருகாணி 420.55

9. ஒன்று சேர்த்தல் (முழுவடிவம்) B. இதர வெள்ளிப் பொருட்கள்:

தொடர்

பொருட்கள் தயாரிப்பதற்கான எண்

வெள்ளியின் எடை (1) (2)

540.74

குறைந்த அளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ஒவ்வொரு 10 கிராம் மற்றும் அதன்

பகுதிக்கு) (3)

சாதா அல்லாத சாதா உருப்படிகளுக்கு உருப்படிகளுக்கு (ரூ. காசு)

(ரூ. காசு) 1. 1 கிராம் முதல் 10 கிராம் வரை 72.12 96.14

2. 10 கிராமுக்கு மேல் 20 கிராமிற்குள் 70.08 90.143 3. 20 கிராமுக்கு மேல் 30 கிராமிற்குள் 66.13 84.15

4. 30 கிராமுக்கு மேல் 40 கிராமிற்குள் 62.07 78.11

5. 40 கிராமுக்கு மேல் 50 கிராமிற்குள் 60.07 74.13

6. 50 கிராமுக்கு மேல் 100 கிராமிற்குள் 58.09 72.12

7. 100 கிராமுக்கு மேல் 200 கிராமிற்குள் 54.06 72.12

8. 200 கிராமுக்கு மேல் 500 கிராமிற்குள் 48.07 62.07

9. 500 கிராமுக்கு மேல் 1000 கிராமிற்குள் 36.07 48.07

10. ஒரு கிலோ கிராமுக்கு மேல் 30.03 38.03

C. நாள் அடிப்படையிலான அடிப்படை ஊதியங்கள்: நாளொன்றுக்கு ரூ.386.00

விளக்கங்கள்:—(1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001=100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ. 2.36 (இரண்டு ரூபாய் முப்பத்தாறு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரி முதல் டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொர் ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) மாதாந்திர ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதிய வீதத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, அல்லது ஒரே பணியைச் செய்யும்போது ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த அளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (ப) எண் 165, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 8 ஏப்ரல் 2022] 1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடுவதற்கு கருதப்பட்டுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக, இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவு அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை தொழிலாளர் ஆணையர், டி.எம்.எஸ். வளாகம், சென்னை-600 006 வாயிலாக, அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 12-12-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு-2 இல், 1113 மற்றும் 1114 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே./1027/2018 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் திரைப்படத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்:-

4 விவர அட்டவணை

-திரைப்படத் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண் பணியாளர் வகைகள் திங்களொன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
( 1 ) ( 2 ) ( 3 )
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C
வகை-I
1. மேலாளர் 11606.00 10896.00 10277.00
வகை-II
(1) உதவி மேலாளர் 10896.00 10449.00 10034.00
(2) மேற்பார்வையாளர்
(3) திரையரங்கில் படம் திரையிடுபவர்
(4) கணக்காளர்
(5) காசாளர்/ எழுத்தர்
(6) மின் கம்மியர்
வகை-III
(1) திரைப்படம் இயக்கும் பயிற்சி பெறுபவர் 10224.00 9929.00 9929.00
(2) நுழைவுச் சீட்டு வழங்குபவர்
(3) வாயிற் காப்பாளர்
(4) நுழைவுச் சீட்டு சேகரிப்பவர்
(5) இயந்திரக் கம்மியர்/சீர்வளி சாதனம் இயக்குபவர்
(6) காவலாள்/வழிகாட்டுபவர்
வகை-IV
(1) துடைப்பவர் 10089.00 9929.00 9929.00
(2) அலுவலகப் பையன்
(3) சிப்பமாக்கும் உதவியாள்
(4) மிதிவண்டிப் பையன்
(5) துப்புரவுப் பணியாளர்
(6) தோட்டக்காரர்
(7) பெருக்குபவர்
(8) மேற் குறித்தவற்றில் சேராத ஏனைய யாதொரு பணியாளர் வகையினர்

விளக்கங்கள்:— (1) மண்டலங்களின் வகைப்பாடு: A, B மற்றும் C மண்டலங்களில் பின்வரும் பகுதிகள் அடங்கும்:-

(1) மண்டலம்-A : மாநகராட்சிகள் நிலை-I, நகராட்சிகள், தெரிவு நிலை மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகள்.

(2) மண்டலம்-B : நிலை-II மற்றும் நிலை-III, நகராட்சிகள், நகரியங்கள், பாளையங்கள் மற்றும் பேரூராட்சிகள்.

(3) மண்டலம்-C : கிராம ஊராட்சிகள்.

5 (2) அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், பணியாளர்களுக்கு

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ. 61.65 (ரூபாய் அறுபத்தோரு ரூபாய் அறுபத்து ஐந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்படும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து அகவிலைப்படியின் முதல் கணக்கீடு செயலுக்கு வரும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை 2(ப) எண் 23, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J-1)]த் துறை, 11 ஏப்ரல் 2022] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 21-11-2012 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு-2-இல், 667-672 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா./782/2012 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியின் கீழ் நியமனம் செய்யப்பட்ட குழுவின் ஆலோசனையை கருதிப்பார்த்த பின்னர், கீழ்க்காணும் விவர அட்டவணையின் நெடும்பத்தி (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள, தமிழ்நாடு மாநிலத்தில் பட்டாசு தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, இதன் (3) ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் நிர்ணயிக்கிறார்.

(2) இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

அட்டவணை

பட்டாசு தயாரிப்பு தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண் பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள் மாதமொன்றுக்கு (ரூபாயில்)
( 1 ) ( 2 ) ( 3 )
(1) மேலாளர் / முதலாள் 15,000
(2) கண்காணிப்பாளர் 12,000
(3) எழுத்தர்
(4) ஓட்டுநர் 10,000
(5) காவலாள் 9,400
(6) ஏவலர்
(7) துப்புரவுப் பணியாளர்
(8) பெருக்குபவர்
தொடர் எண் பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள் மாதமொன்றுக்கு (ரூபாயில்)
( 1 ) ( 2 ) ( 3 )
I வகை I பணியாளர்கள்
(1) வேதிப்பொருளை கலப்பவர் 12,000
(2) வேதிப்பொருளுக்குள் அமிழ்த்துபவர்
(3) சாம்பல் & வேதிப்பொருளை நிரப்புவர்
(4) வேதிப்பொருளை வார்ப்படஞ் செய்பவர்/அச்சில் வார்ப்பவர்
II வகை II பணியாளர்கள்
(1) உருக்குக் கம்பி பொருத்துநர் & தயாரிப்பவர் 11,100
(2) வேதிப்பொருள் நிரப்பப்பட்ட குழாயை வெட்டுபவர்
(3) அடிப்பாகத்தை சிப்பமிட்டு முத்திரையிடுபவர்
III வகை III பணியாளர்கள்
(1) காகிதத்தை சுருட்டுபவர்/மெல்லிய தகட்டினை ஒட்டுபவர் 10.950
(2) சுற்றுபவர்
(3) ஒட்டுச்சீட்டு/அடையாளச் சீட்டு ஒட்டுபவர்
(4) முடிவாக்க பணியை மேற்கொள்பவர்
(5) சிப்பமிடுபவர்
(6) கட்டு கட்டுபவர்
IV வகை IV பணியாளர்கள்
(1) சாயம் பூச்சுபவர்/நிறமேற்றுபவர் 10,950
(2) அடிப்பாகம் & மேல்பாகத்தில் மண் பூசுதல்/குச்சி ஒட்டுதல்/ மெல்லிழைத்தாள் ஒட்டுதல் & துளைத்தல் பணிகளை மேற்கொள்பவர்
(3) உலர்த்துபவர்
(4) உதவியாளர்கள்
(5) சணல் சுற்றுபவர்/சக்கரம் சுற்றுபவர்
(6) சட்டத்தை நிரப்புபவர் (அடைப்புச் சட்டத்திற்குள் நிரப்புபவர்)
(7) பெட்டி செய்பவர்/நிரப்புபவர்
(8) சரம் செய்பவர் (சரமாக சுற்றுபவர்)
(9) துளையிடுபவர்
(10) வெட்டுபவர்
(11) பசை ஒட்டுபவர்
(12) காகிதம் /அட்டைத்தாள் குழாய்கள் & தாள் செய்பவர்
(13) வளையம் செய்பவர்
(14) குழாய் வகை பட்டாசின் கழுத்துப்பகுதியை அழுத்தி அடைப்பவர்
(15) மடிப்பவர்
V இதர பணியாளர்கள் மற்றும் பொதுப் பணியாளர்கள் 10,950

(2) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, 161 புள்ளிகள் (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டது) மற்றும் 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் மாதமொன்றுக்கு ரூ. 58.00 (ரூபாய் ஐம்பத்தெட்டு மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழக்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான, (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளில் அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

7 (iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட

அகவிலைப்படியின் முதல் கணக்கீடு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(3) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிட மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(4) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிெளல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

இரா. கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 08 June 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-06-08.Ordinary_23_Part-II_Section-2_T_Supp/. Archive identifier in.gazette.tamilnadu.2022-06-08.Ordinary_23_Part-II_Section-2_T_Supp.