© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2022 [விலை : ரூ. 16.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 26] சென்னை, புதன்கிழமை, ஜூன் 29, 2022 ஆனி 15, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்
அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 15/2022.
குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டம்.
இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் வழக்கத்திலிருந்தவை அல்லது மற்றபடி வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற அல்லது குறித்த வகையில் மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன் மூலம் தவிர பிறவாறு நடைமுறையில் இருக்கக்கூடியது அற்றுபோகக் கூடியவையான இருப்பவை கட்டாயமாக நீக்கறவு செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதாலும்;
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்டம்
என்று வழங்கப்பெறும்.
குறித்த சில இயற்றுச் 2. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள்
சட்டங்களின் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்பட்டுள்ளது.
நீக்கறவு.
காப்புரைகள்.
3. இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படும் இயற்றுச் சட்டம் எதுவும் பிற இயற்றுச் சட்டம் எதனையும் பாதிக்காது. அதில் நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிற போதும் சேர்க்கப்பட்டிருக்கிற போதும் அல்லது சுட்டப்படும் போதும்;
IV-2(26)(T-Sup)-1
[1]2 மற்றும் இந்தச் சட்டம் செல்லுந்தன்மையையோ, செல்லாத் தன்மையையோ அல்லது செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும் அல்லது பாதிக்கப்பட்டதை அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையையோ அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டினைஅதிகப்படியானதையோ அல்லது ஏற்படுத்தப்பபட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும் அல்லது தொடர்பான நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும் அல்லது பற்றினை விடுவிப்பதை, தண்டம், உதவியையோ, கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும் கடந்தகால செயல் அல்லது விசயம் எதனையும் பாதிக்காது;
கொள்கை எதனையும் அல்லது சட்டத்தின் ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட அதிகாரவரம்பை அல்லது அமைவுமுறையையோ அல்லது வாதுரையின் போதோ, வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும் பழக்கவழக்கத்தையோ, வழக்காறையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அலுவலகத்தையோ அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும் அவை முறையே எந்த முறையிலும் ஈங்கிதனால் இயற்றுச் சட்டத்தில் அல்லது இயற்றுச் சட்டம் எதிலிருந்தும் எந்த முறையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதன்மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றிருக்கிற எதுவும் பாதிக்காத வகையில் இருக்கும்;
இயற்றுச் சட்டம் எதுவும் புத்துயிரளித்தல் அல்லது அதிகாரவரம்பு எதனையும் மீட்டெடுத்தல், அலுவலகம், பழக்கவழக்கம், பொறுப்பு, உரிமை, உரிமை மூலம், சலுகை, தடை, விலக்கு, பயன்படுத்துதல், செய்தொழில், நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது தற்பொழுது இல்லாமல் இருக்கும் பொருள் அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகாது.
இணைப்புப் பட்டியல்.
நீக்கறவுகள்.
(2ஆம் பிரிவைக் காண்க)
ஆண்டு எண் குறுந்தலைப்பு
(1) (2)
(3)
குடியரசுத் தலைவரின் சட்டங்கள்
1976 13 1976 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1976 20 1976 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை 1976 28
நியமித்தல்) சட்டம்.
1976 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை 1976 29
நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1976 42 1976 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
தமிழ்நாடு சட்டங்கள்
1878 VIII 1878 ஆம் ஆண்டு தமிழ்நாடு காப்பிக் கொட்டை திருட்டுத் தடுப்புச் சட்டம்.
1922 VII 1922 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி (திருத்தச்) சட்டம்.
1930 X 1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
3ஆண்டு எண் குறுந்தலைப்பு
(1) (2)
(3)
1949 XVII 1949 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
1950 XXIII 1950 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1951 XXII 1951 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி (திருத்தச்) சட்டம்.
1952 VIII 1952 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்குதல் மற்றும் தகுதிக்கேடுகளை நீக்குதல் (திருத்தச்) சட்டம்.
1953 VI 1953 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச் ) சட்டம்.
1953 XIII 1953 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
1953 XVI 1953 ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) திருத்தச் சட்டம்.
1954 I 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
1954 XIII 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்குதல் மற்றும் தகுதிக்கேடுகளை நீக்குதல் (திருத்தச்) சட்டம்.
1954 XIV 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு விபசாரத் தொழில் ஒடுக்குதல் (திருத்தச்) சட்டம்.
1954 XX 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1954 XXXII 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
1954 XXXV 1954 ஆம் ஆண்டு இந்திய வழக்குரைஞர் மன்றங்கள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
1954 XL 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
1955 IV 1955 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி (திருத்தச்) சட்டம்.
1955 VIII 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
1955 XIII 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி மற்றும் தமிழ்நாடு புகையிலை (விற்பனை வரி விதிப்பு மற்றும் பதிவு செய்தல்) திருத்தச் சட்டம்.
1955 XVIII 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1955 XX 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1955 XXI 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு உந்து வண்டித் திரவகம் விற்பனை வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
1955 XXVI 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) திருத்தச் சட்டம்.
1955 XXXI 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1956 III 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
1956 VII 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1956 IX 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் (திருத்தச்) சட்டம்.
1956 XV 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
4ஆண்டு எண் குறுந்தலைப்பு
(1) (2)
(3)
1956 XXXII 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு புகையிலை (விற்பனை வரி விதித்தல் மற்றும் பதிவு செய்தல்) திருத்தச் சட்டம்.
1956 XXXIII 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்) சட்டம்.
1956 XLIII 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம்.
1957 I 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி, உந்து வண்டித் திரவகம் விற்பனை வரி விதிப்பு மற்றும் கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
1957 II 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு உந்து வண்டித் திரவகம் விற்பனை வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
1957 III 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி மற்றும் உந்து வண்டித் திரவகம் விற்பனை வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
1957 VII 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்குதல் மற்றும் தகுதிக்கேடுகளை நீக்குதல் (திருத்தச்) சட்டம்.
1957 XII 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) திருத்தச் சட்டம்.
1957 XVII 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்குதல் மற்றும் தகுதிக்கேடுகளை நீக்குதல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1958 II 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (அவசரநிலை வகைமுறைகள்) சட்டம்.
1958 V 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
1958 VII 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு உந்து வண்டித் திரவகம் விற்பனை வரி விதிப்பு (திருத்தச்) சட்டம்.
1958 XII 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு உந்து வண்டித் திரவகம் விற்பனை வரி விதிப்பு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1958 XXI 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
1958 XXIV 1958 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி (திருத்தச்) சட்டம்.
1958 XXV 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1958 XXVIII 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுச் சுகாதார (திருத்தச்) சட்டம்.
1959 19 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1959 27 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (விற்பனை அளவு மற்றும் வரி மதிப்பீடு) விதிகள் செல்லத்தக்கதாக்குதல் சட்டம்.
1960 15 1960 ஆம் ஆண்டு தமிழ்நாடு உந்து வண்டித் திரவகம் விற்பனை வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
1960 19 1960 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
1961 2 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
1961 8 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1961 21 1961 ஆம் ஆண்டு இந்திய முத்திரைவில்லை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
5ஆண்டு எண் குறுந்தலைப்பு
(1) (2)
(3)
1961 34 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்குதல் மற்றும் தகுதிக்கேடுகளை நீக்குதல் (திருத்தச்) சட்டம்.
1961 44 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
1961 56 1961 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி (திருத்தச்) சட்டம்.
1962 5 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
1962 13 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்குதல் மற்றும் தகுதிக்கேடுகளை நீக்குதல் (திருத்தச்) சட்டம்.
1963 6 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
1963 10 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1963 16 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) திருத்தச் சட்டம்.
1964 6 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்குதல் மற்றும் தகுதிக்கேடுகளை நீக்குதல் (திருத்தச்) சட்டம்.
1964 7 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
1964 11 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) திருத்தச் சட்டம்.
1964 15 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1965 15 1965 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1967 6 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1967 7 1967 ஆம் சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1967 17 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1970 30 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1972 1 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தம் மற்றும் பதவிக்காலத்தினை நீட்டித்தல்) சட்டம்.
1972 22 1972 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1972 25 1972 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1973 5 1972 ஆண்டு ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1973 17 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1974 21 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1974 42 1974 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1975 13 1975 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1975 38 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்கள் (பதவிக்காலத்தை நீட்டித்தல்) சட்டம்.
6ஆண்டு எண் குறுந்தலைப்பு
(1) (2)
(3)
1975 39 1975 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகராட்சி மன்ற (தனி அலுவலரை நியமித்தல்) சட்டம்.
1977 2 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1977 3 1977 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகராட்சி மன்ற (தனி அலுவலரை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1978 9 1978 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1978 12 1978 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகராட்சி மன்ற (தனி அலுவலரை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1978 14 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1978 23 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1978 36 1978 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
1979 6 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1979 7 1979 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகராட்சி மன்ற (தனி அலுவலர்களை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1979 8 1979 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1979 57 1979 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1979 58 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை நியமித்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
1979 59 1979 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகராட்சி மன்ற (தனி அலுவலரை நியமித்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
1980 19 1980 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1980 25 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1980 31 1980 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகராட்சி மன்ற (தனி அலுவலரை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1981 15 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1981 16 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகராட்சி மன்ற (தனி அலுவலரை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1981 17 1981 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1982 16 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1982 17 1982 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1982 18 1982 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
7ஆண்டு எண் குறுந்தலைப்பு
(1) (2)
(3)
1983 12 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1983 13 1983 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1983 14 1983 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1983 24 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1983 43 1983 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1984 10 1984 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1985 5 1985 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1985 6 1985 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1985 7 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1985 8 1985 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1985 25 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1986 2 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1986 5 1986 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1986 6 1986 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1986 7 1986 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1986 8 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை நியமித்தல்) திருத்தச் சட்டம்.
1986 32 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சி சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
1986 62 1986 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1986 63 1986 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1986 64 1986 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1987 15 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1987 23 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1989 4 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1989 16 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1990 17 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1990 33 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (இரண்டாம் திருத்தம் மற்றும் சிறப்பு வகைமுறைகள்) சட்டம்.
1990 34 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
8ஆண்டு எண் குறுந்தலைப்பு
(1) (2)
(3)
1990 35 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (நான்காம் திருத்தச்) சட்டம்.
1991 1 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (இரண்டாம் திருத்தம் மற்றும் சிறப்பு வகைமுறைகள்) திருத்தச் சட்டம்.
1991 14 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள் (தனி அலுவலர்களை நியமித்தல்) சட்டம்.
1991 19 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1992 26 1992 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
1992 58 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1994 25 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1998 9 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
1998 10 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் ( இரண்டாம் திருத்தச்) சட்டம்.
2002 4 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
2003 41 2003 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
2004 23 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
2004 24 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
2005 8 2005 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
2006 35 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
2007 1 2007 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
2011 17 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
2015 18 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
9தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம்
ஆண்டு மார்ச் திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 16/2022.
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்யவதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டமானது 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்
மற்றும் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) திருத்தச் சட்டம் என்று அழைக்கப்படும்.
தொடக்கம்.
(2) (a) 2-ஆம் பிரிவின் (1)ஆம் கூறு, 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள்
15-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(b) 2 ஆம் பிரிவின் (2)ஆம் கூறு, 2017-ஆம் ஆண்டு மார்ச்
திங்கள் 2-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல்
வேண்டும்.
(3) 3 ஆம் பிரிவானது 2019-ஆம் ஆண்டு மே திங்கள் 30-ஆம்
நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(4) 4 ஆம் பிரிவானது 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள்
19 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
20 ஆம் 2. (இதில் இதன் பின்பு முதன்மைச் சட்டமென்று
தமிழ்நாடு சட்டம்
பிரிவிற்கான குறிப்பிடப்படுவதான) 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்
14/2016.
திருத்தம்.
(பணி நிபந்தனைகள்) சட்டத்தின் 20-ஆம் பிரிவின், (2) ஆம் உட்பிரிவில்,-
(1) "தேர்விற்கான பாடம்", எனும் தலைப்பின் கீழ், "(1) ஆங்கிலம்" எனும்
சொற்றொடருக்காக, "(1) பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) "மதிப்பெண்களின் குறைந்தபட்ச விழுக்காடு" எனும் தலைப்பின் கீழ்,
"35" எனும் பதிவிற்காக, அது காணப்படுகின்ற இரு இடங்களில், "45" எனும்
பதிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
25 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 25 ஆம் பிரிவானது (1) ஆம் உட்பிரிவாக மறு
பிரிவிற்கானத் எண்ணிடப்படுதல் வேண்டும், மற்றும் -
திருத்தம்.
(i) அவ்வாறு மறு எண்ணிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவில், (b) கூறுக்காக,
பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது: -
"(b) இணைக்கல்வி குழுவுடன் கலந்தாலோசித்து அரசால் கூறப்பட்ட
சிறப்புத் தகுதிகள் அல்லது சிறப்பு தேர்வுகளுக்கு அதிகமான அல்லது அதற்கு
இணையான அறிவிக்கப்பட்ட பிற தகுதிகளைப் பெற்றிருந்தாலோ.";
(ii) அவ்வாறு மறுஎண்ணிடப்பட்ட மற்றும் திருத்தம் செய்யப்பட்ட
(1) ஆம் உட்பிரிவிற்கு பிறகு பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல்
வேண்டும், அதாவது: -10 " (2) (a) இணைக்கல்விக் குழுவானது -
(i) உயர்க்கல்வித் துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அரசுச் செயலாளர். — தலைவர்.
(ii) பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறையைப்
பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர். — உறுப்பினர்.
(iii) பள்ளிக்கல்வித் துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அரசுச் செயலாளர். — உறுப்பினர்.
(iv) தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்றத்தின்
துணைத் தலைவர். — உறுப்பினர்.
(v) சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர். — உறுப்பினர்.
(vi) அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர். — உறுப்பினர்.
(vii) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர். — உறுப்பினர்.
(viii) தொழில்நுட்பக் கல்வியின் இயக்குநர். — உறுப்பினர்.
(ix) கல்லூரிக் கல்வியின் இயக்குநர். — உறுப்பினர்.
(x) தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்றத்தின் — உறுப்பினர்.
உறுப்பினர்—செயலர். — செயலர்.
ஆகியோரைக் கொண்டிருத்தல் வேண்டும்.
(b) இணைக்கல்விக் குழுவின் தலைவரானவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் தலைவர் அல்லது செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் தலைவர் அல்லது உறுப்பினர்-செயலர் அல்லது வேறு அலுவலர்
எவரையும், சிறப்பு அழைப்பாளராக குழுவின் கூட்டம் எதிலும் கலந்துக் கொள்ளத்
தேவையெனக் கருதினால், அழைக்கலாம்".
4. முதன்மைச் சட்டத்தின் VI-ஆம் இணைப்புப்பட்டியலில்,-
VI-ஆம் இணைப்புப்
பட்டியலுக்கான
திருத்தம்.
(1) "கண்பார்வையற்ற மற்றும் கண் பார்வைத்திறன் குறைந்த" எனும்
இனத்தின் கீழ்,-
(i) "பொதுச்சுற்று" எனும் தலைப்பின் கீழ், "37" எனும்
இனச்சுழற்சிக்கு எதிராகக் குறிப்பிடப்பட்டுள்ள "121" எனும் சுற்றுக்காக, "125"
எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) "பொதுச்சுற்று பெண்கள்" எனும் தலைப்பின் கீழ், "3"
எனும் இனச்சுழற்சிக்கு எதிராகக் குறிப்பிடப்பட்டுள்ள "125" எனும் சுற்றுக்காக,
"121" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(iii) "பிற்பட்ட வகுப்பினர்கள் (பிற்பட்ட வகுப்பினரான
இஸ்லாமியர்களைத் தவிர்த்து) எனும் தலைப்பின் கீழ்,-
(a) "6" எனும் இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள "117"
எனும் சுற்றுக்காக, "118" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) "86" எனும் இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள "22"
எனும் சுற்றுக்காக, "20" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(iv) "மிகவும் பிற்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்கள் எனும்
தலைப்பின்கீழ், "48" எனும் இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள "117"
எனும் சுற்றுக்காக, "113" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) "காது கேளாதோர் மற்றும் வருந்திக் கேட்போர்" எனும்
இனத்தின் கீழ்,-11 (i) "பிற்பட்ட வகுப்பினர்கள் (இஸ்லாமிய பிற்பட்ட வகுப்பினரை
தவிர்த்து)" என்ற தலைப்பின்கீழ், "18" எனும் இனச்சுழற்சிக்கு எதிராக
குறிப்பிடப்பட்டுள்ள "72" எனும் சுற்றுக்காக, "74" எனும் சுற்றானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) "பட்டியலில் கண்ட சாதியினர்கள்" எனும் தலைப்பின் கீழ், "22"
எனும் இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள "173" எனும் சுற்றுக்காக,
"172" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(iii) "பட்டியலில் கண்ட சாதியினர்கள்-பெண்கள்" எனும் தலைப்பின்
கீழ், "94" எனும் இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள "11" எனும்
சுற்றுக்காக, "162" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) "மூளைச்சீர் குலைவு, குணப்படுத்தப்பட்ட தொழுநோய், மிகவும்
குள்ளமாக இருத்தல், அமிலம் வீசப்பட்டு பாதிக்கப்பட்டோர் மற்றும் தசை திசு
இறப்பு உள்ளடங்களாக உடல் இயக்குத் திறன் குறைவு " எனும் இனத்தின்
கீழ்",-
(i) "பொதுச் சுற்று பெண்கள்" எனும் தலைப்பின் கீழ் "11" எனும்
இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள "148" எனும் சுற்றுக்காக, "145"
எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) "மிகவும் பிற்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்கள்" எனும்
தலைப்பின் கீழ் "37" எனும் இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள "34"
எனும் சுற்றுக்காக, "37" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(iii) "பட்டியலில் கண்ட சாதியினர்கள்" எனும் தலைப்பின் கீழ், "93"
எனும் இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள "149" எனும் சுற்றுக்காக,
"126" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(iv) "பட்டியலில் கண்ட சாதியினர்கள் (முன்னுரிமை அடிப்படையில்
அருந்ததியர்கள்) எனும் தலைப்பின் கீழ், "31" எனும் இனச்சுழற்சிக்கு எதிராக
குறிப்பிடப்பட்டுள்ள "31" எனும் சுற்றுக்காக, "32" எனும் சுற்றானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(4) "தற்புனைவு ஆழ்வு, அறிவுத்திறனின்றி இருத்தல், குறித்திட்ட கல்வி
கற்றலில் குறைபாடு மற்றும் மன நோய்/பல்வகையான ஊனங்கள்" எனும்
இனத்தின் கீழ்,-
(i) "பொதுச்சுற்று பெண்கள்" எனும் தலைப்பின் கீழ்,-
(a) "62" எனும் இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள
"200" எனும் சுற்றுக்காக, "195" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(b) "72" எனும் இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள
"78" எனும் சுற்றுக்காக, "98" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(c) "82" எனும் இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள
"100" எனும் சுற்றுக்காக, "98" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
(ii) "பிற்பட்ட வகுப்பினரான பெண்கள்" (இஸ்லாமிய பிற்பட்ட
வகுப்பினரை தவிர்த்து) எனும் தலைப்பின் கீழ்,-
(a) "9" எனும் இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள
"181" எனும் சுற்றுக்காக, "180" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(b) "13" எனும் இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள
"93" எனும் சுற்றுக்காக, "97" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(c) "48" எனும் இனச்சுழற்சிக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள
"195" எனும் சுற்றுக்காக, "194" எனும் சுற்றானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
12செல்லத்தக்க தாக்குதல் 5. முதன்மைச் சட்டத்தில் அடங்கியது எவ்வாறிருப்பினும் -
(1) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட
முதன்மைச் சட்டத்தின் 20-ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட
எஸ்.எஸ்.எல்.சி தரநிலையின் தேர்விற்காக, முன்னிலைப்படுத்தப்பட்ட, ஏற்கனவே
ஒரு பணியில் உறுப்பினராக உள்ள மற்றும் குறைந்தபட்ச பொதுக் கல்வித்
தகுதியை பெற்றிராத நபர் எவரும்,-
(i) பொது அறிவுடன் கூடிய பொதுத் தமிழை ஒரு பாடமாகத்
தேர்தெடுப்பதன் மூலம் 2016-ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 15ஆம் தேதி
முதல் மற்றும் தொடங்கும் காலத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் விழுக்காட்டினைப்
பெற்றார்; அல்லது
(ii) பொது அறிவுடன் கூடிய பொதுத் தமிழையோ
அல்லது பொது ஆங்கிலத்தையோ தேர்தெடுப்பதன் மூலம்
2017-ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 2ஆம் தேதி முதல் மற்றும் தொடங்கும்
காலத்தில் ஒவ்வொரு பாடத்திலும் 45 மதிப்பெண் விழுக்காட்டினைப் பெற்றார்;
மற்றும் இந்தச் சட்டத்தால் திருத்தப்பட்டபடி, தமிழ்நாடு அரசிதழில் இச்சட்டம்
வெளியிடப்பட்ட தேதியுடன் முடிவுடையும், முதன்மைச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச
பொதுக் கல்வித் தகுதியைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் ;
.
(2) முதன்மைச் சட்டத்தின் 25ஆம் பிரிவில் இணைக்கல்விக்
குழுவானது குறிப்பிட்டுள்ள மற்றும் 2019 ஆம் ஆண்டு
மே 30ஆம் நாளன்று தொடங்கக்கூடிய அத்தகைய காலத்தில் தொடரக் கூடியதும்,
தமிழ்நாடு அரசிதழில் இச்சட்டம் வெளியிடப்பட்டு முடிவுடையும் தேதியன்று
நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் கூறப்பட்ட
தேதியிலிருந்தும் கூறப்பட்ட கால அளவில் கூறப்பட்ட குழுவினால் செயல்படுத்தப்பட்ட
அதிகாரம் அல்லது செயலாற்றப்பட்ட கடமை எதுவும், சட்டத்தின்படி தொடரப்பட்ட
எதுவும் செல்லத்தக்கதாக செயல்படுத்தப்பட்டது அல்லது செயலாற்றப்பட்டது
எனக் கொள்ளப்படுதல் வேண்டும். இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு
முதன்மைச் சட்டமானது அனைத்து தேவையான நேரங்களில் நடைமுறையில்
இருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும்
(3) முதன்மைச் சட்டத்தின் இணைப்பு பட்டியல் - VI-ல் குறிப்பிடப்பட்டுள்ள
இணைச் சுற்றிற்கு எதிராக மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனங்களில்
இடஒதுக்கீடு வழங்குவது 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாளன்று
தொடங்கக்கூடிய அத்தகைய காலத்தில் தொடரக்கூடியதும், தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்பட்ட முடிவடையும் தேதியன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாகக்
கொள்ளப்படுதல் வேண்டும். இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு
முதன்மைச் சட்டமானது அனைத்து தேவையான நேரங்களில் நடைமுறையில்
இருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசு செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
13தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம்
ஆண்டு ஏப்ரல் திங்கள் 22 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது: -
சட்ட எண். 19/2022.
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்
மற்றும் தொடக்கம்.
மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல்
(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது அரசு அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும், அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2 ஆம் பிரிவிற்கானத் தமிழ்நாடு சட்டம்
2. (இதன்பின்பு இதில் 'முதன்மைச் சட்டம்' எனக் குறிப்பிடப்படுவதான)
திருத்தம். 42/2017.
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின்
உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டத்தின் 2 ஆம் பிரிவில்-
(1) (c) ஆம் கூறிற்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(c) நில உரிமையாளர் அல்லது குத்தகைதாரர் அல்லது வேறு எந்தப்
பெயரால் அழைக்கப்பட்டாலும், "சொத்து உரிமையாளர்" என்பது வளாகமானது
வாடகைதாரர் ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்குமானால், அவர்தம்
பொருட்டு, வளாகம் எதனின் வாடகையை பெறுகிற அல்லது பெறுவதற்கு
உரிமையுடையவராய் இருக்கிற நபர் ஒருவர் என்று பொருள்படும், மற்றும்-
(i) அவரின் வாரிசு உரிமையர்;
(ii) ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபடமுடியாத இளவர் அல்லது
மனச்சீர்கேடுற்றவர் போன்ற அத்தகைய பிற நபர் எவரின் பொருட்டு அல்லது
அவர் சார்பாக அல்லது அவரின் நலனுக்காக, வளாகம் எதனின் வாடகையை
பெற்றுவருகிற அல்லது பெறுவதற்கு உரிமையுடையவராய் இருக்கிற
பொறுப்புக்கட்டளையர் அல்லது காப்பளர் அல்லது சொத்தைப் பேணுநர் ஒருவரை
உள்ளடக்குதல் வேண்டும்;";
(2) (f) கூறில், "அல்லது கல்விக்காக" எனும் சொற்றொடரானது
விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(3) (m) கூறிற்கு பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்,
அதாவது:-
"(mm) "உள் வாடகைதாரர்" என்பவர் வாடகைதாரர், தற்போதுள்ள
வாடகையுரிமை உடன்பாட்டிற்கான துணை உடன்பாடொன்றில் ஈடுபட்டிருந்து
அவரின் கைவசமுள்ள வளாகத்தின் முழுமை அல்லது அதன் பகுதியினை அவரால்
உள் வாடகைக்கு விடப்பட்டிருக்கும் அல்லது வாடகை உடன்பாட்டின் கீழ் அவர்
அடைந்த உரிமைகள் அல்லது அதன் பகுதி எதனையும் ஒப்படைக்கப்பட்டிருக்கும்
நபரொருவர் என்று பொருள்படும்;".
147 ஆம் பிரிவிற்கான
3. முதன்மைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
மாற்றீடு.
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"7. உள்வாடகை மீதான கட்டுப்பாடு.- (1) இந்தச் சட்டத்தின்
தொடக்கத்திற்கு பின்பு, வாடகைதாரர் எவரும், தற்போதுள்ள வாடகை உரிமை
உடன்பாட்டிற்கு ஒரு துணை உரிமை உடன்பாட்டினை செய்தாலன்றி,-
(a) வாடகைதாரர் ஒருவர் என்ற முறையில் அவர் கைவசம் வைத்து
வரும் வளாகம் முழுவதையும் அல்லது அதன் பகுதியை உள்வாடகைக்கு விடுதல்
ஆகாது;
(b) வாடகை உரிமை உடன்பாட்டில் அல்லது அதன்பகுதி எதிலும்
உள்ள தம்முடைய உரிமைகளை உரிமை மாற்றம் செய்தல் அல்லது குறித்தளித்தல்
ஆகாது.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி குறித்துரைக்கப்பட்டவாறான தற்போதுள்ள
வாடகையுரிமை உடன்பாட்டிற்கு ஒரு துணை உடன்பாட்டில் ஈடுபட்டு,
வளாகங்களை உள்வாடகைக்கு விடுமிடத்து, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய
படிவத்தில் அத்தகைய உடன்பாட்டினை நிறைவேற்றும் தேதியிலிருந்து இரண்டு
மாதங்கள் காலத்திற்குள் உள்வாடகையைப் பற்றி வாடகை அதிகாரியிடம் சொத்து
உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் இணைந்து தெரிவித்தல் வேண்டும்.".
15 ஆம் பிரிவிற்கான
4. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவில், (5) ஆம் உட்பிரிவிற்கு
திருத்தம்.
பின்பு, பின்வரும் உட்பிரிவு மற்றும் விளக்கமானது சேர்க்கப்படுதல் வேண்டும்,
அதாவது:-
"(6) வாடகைக்கு விடப்பட்ட வளாகமானது பேரிடர் நிகழ்வு ஒன்றின்
காரணமாக, வாடகைதாரருக்கு வாழத்தகுதியற்றதாகும்போது அல்லது அத்தகைய
நிகழ்வின் காரணமாக வாடகைதாரரால் வசிக்க இயலவில்லையெனில்,
இந்தப்பிரிவின் வகைமுறைக்குட்பட்டு, கூறப்பட்ட வளாகமானது
வாழத்தகுதியுடையதாக சொத்துரிமையாளரால் மீண்டும் உருவாக்கும் வரை
வாடகைதாரரிடமிருந்து சொத்துரிமையாளர் வாடகை வசூலிக்கக்கூடாது:
வரம்புரையாக, (5) ஆம் உட்பிரிவில் அல்லது இந்த உட்பிரிவில்
குறித்துரைக்கப்பட்டவாறு வாடகைக்கு விடப்பட்ட வளாகமானது
வாழத்தகுதியற்றதாயாகும் போது மற்றும் அதனை வாழத்தகுதியுடையதாகச்
செய்வதற்கு தேவையான பழுது பார்த்தலை சொத்துரிமையாளர்
செய்யத்தவறிவிட்டாரானால் அல்லது கூறப்பட்ட வளாகம் வாழத்தகுதியானதாக
மாற்ற முடியவில்லையெனில், பிணைய வைப்பீடு மற்றும் முன்பணமானது,
வாடகைதாரரின் கடப்பாடு ஏதேனுமிருப்பின் அதனை உரியவாறு கழித்தப்பின்பு,
அறிவிப்பு காலம் முடிவடைந்ததின் பதினைந்து நாட்கள் காலஅளவிற்குள்
வாடகைதாரருக்கு, சொத்துரிமையாளரால் திருப்பி அளிக்கப்படுதல் வேண்டும்.
விளக்கம்.- இந்தப்பிரிவின் நோக்கத்திற்காக, "பேரிடர்" என்பது வாடகைக்கு
விடப்பட்ட வளாகத்தில் வாடகைதாரரின் வாழ்விடத்தை பாதிக்கும், போர் நிலைமை,
வெள்ளம், வறட்சி, தீ, புயல், நில நடுக்கம் அல்லது இயற்கையால் ஏற்படுகிற வேறு
ஏதேனும் பேரிடர் என்று பொருள்படும்.".
17 ஆம் பிரிவிற்கான
5. முதன்மைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில்,
திருத்தம்.
"வாடகைதாரருக்கு எழுத்து வடிவில் வழங்கிய அறிவிப்புக்கு இணங்கிய
வகையில் வளாகம் ஒன்றினுள் நுழையலாம்", எனும் சொற்றொடருக்காக, "எழுத்து
வடிவிலோ அல்லது மின்னணு முறையின் மூலமாகவோ வாடகைதாரருக்கு
அறிவிப்பு ஒன்றை வழங்கியதன் பின்பு வாடகைக்கு விடப்பட்ட வளாகத்தினுள்
நுழையலாம்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
1519 ஆம் பிரிவிற்கான 6. முதன்மைச் சட்டத்தின் 19 ஆம் பிரிவிற்காக பின்வரும் பிரிவானது
மாற்றீடு.
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"19. சொத்து மேலாளரின் கடமைகள் மற்றும் கடமைகளை மீறுவதனால்
ஏற்படும் விளைவுகள்.- (1) சொத்து மேலாளரின் கடமைகளானவை
பின்வருவனவற்றை உள்ளடக்கும், அதாவது:-
(a) பற்றுச் சீட்டின் பெயரில் வாடகை வசூலித்தல்;
(b) சொத்து உரிமையாளரின் சார்பாக தேவையான பழுதுகளை சரி
செய்தல்;
(c) அவ்வப்போது வளாகங்களை ஆய்வு செய்தல்;
(d) வாடகைதாரருக்கு.-
(i) வளாகங்களை முறையாகப் பராமரித்தல்;
(ii) வாடகையை கொடுப்பதில் தாமதம்;
(iii) வாடகையை திருத்தியமைத்தல்;
(iv) வளாகங்களை காலி செய்தல்; மற்றும்
(v) வாடகை உரிமையை புதுப்பித்தல்;
ஆகியவற்றிற்கான அறிவிப்புகளை வழங்குதல்.
(e) வாடகைதாரர் மற்றும் சொத்துரிமையாளர்களுக்கு இடையேயான
மற்றும் வாடகைதாரர்களுக்குள் ஏற்படும் பூசல்களைத் தீர்த்துவைக்க உதவுதல்;
(f) சொத்துரிமையாளரின் அறிவுரைகளின்பேரில் மட்டுமே
செயல்படக்கூடிய வாடகை தொடர்பான பிற பொருட்பாடுகள் எதுவும்.
(2) (1) ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கு முரணாக அல்லது
சொத்துரிமையாளரின் அறிவுரைகளுக்கு எதிராக சொத்து மேலாளர்
செயல்படும்போது, வாடகை அதிகாரியானவர், அதன் பொருட்டு சொத்துரிமையாளர்
அல்லது வாடகைதாரரினால் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பேரில், சொத்து
மேலாளரை நீக்கலாம் அல்லது அத்தகைய முரண்பாட்டின் காரணமாக
சொத்துரிமையாளர் அல்லது வாடகைதாரருக்கு ஏற்பட்ட இழப்பு எதனையும்
ஈடுசெய்வதற்காக சொத்து மேலாளர் மீது அத்தகைய செலவுகளை விதிக்கலாம்.".
21 ஆம் பிரிவிற்கான 7. முதன்மைச் சட்டத்தின் 21 ஆம் பிரிவில்,
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவில், "வாடகையுரிமை உடன்பாடு தொடருதல்" எனும்
சொற்றொடருக்காக, "வாடகையுரிமை தொடருதல்" எனும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (2) ஆம் உட்பிரிவில்,-
(a) (g) கூறானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(b) (h) கூறிற்கு பின்பு, பின்வரும் கூறுகளாவை சேர்க்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(i) 8-ஆம் பிரிவின் கீழ் செலுத்தப்பட வேண்டிய வாடகையினை
செலுத்த அந்த வாடகைதாரர் ஒப்புக்கொள்ளவில்லை என்று;
(j) சொத்துரிமையாளரின் எழுத்துவடிவிலான ஒப்புதலின்றி
வாடகைக்கு விடப்பட்ட வளாகங்களில், கட்டமைப்பு மாற்றங்கள் எதனையும்
அல்லது நிரந்தர கட்டமைப்பு எதனையும் வாடகைதாரர் அமைத்துள்ளார் என்று.",16 22 ஆம் பிரிவிற்கான
8. முதன்மைச் சட்டத்தின் 22-ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
மாற்றீடு.
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"22. சொத்துரிமையாளர் இறக்கும் நேர்வில் வெளியேற்றுதல் மற்றும்
வளாகங்களின் உடைமையை மீண்டும் பெறுதல்.- (1) இந்தச் சட்டத்தில் அல்லது
தற்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது
எவ்வாறிருப்பினும், சொத்துரிமையாளர் இறப்பின் நேர்வில், வாடகை
காலத்தின் போது வாடகைக்கு விடப்பட்ட வளாகத்தின் ஒரு உண்மையான
தேவை சொத்துரிமையாளரின் வாரிசுகளுக்கு இருக்குமிடத்து, அத்தகைய
வாரிசுரிமைதாரர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் படிவத்திலும்
வாடகையுரிமை நீதிமன்றத்தின் முன்பு கூறப்பட்ட வளாகங்களிலிருந்து
வெளியேற்றுதலுக்காக மற்றும் உடைமையை மீண்டும் பெறுதலுக்காக
அதன்பொருட்டு ஒரு விண்ணப்பத்தினை தாக்கல் செய்யலாம்.
(2) (1)ஆம் உட்பிரிவின் கீழ் செய்யப்பட்ட விண்ணப்பத்தின்
பேரில், இறந்துபோன சொத்துரிமையாளரின் வாரிசுரிமைதாரர்ககளுக்கு,
வாடகைக்கு விடப்பட்ட வளாகங்களின் உண்மையான தேவை இருப்பதாக
அது மனநிறைவடைந்தால், வாடகையுரிமை நீதிமன்றமானது இறந்துபோன
சொத்துரிமையாளரின் வாரிசுதாரர்களுக்கு கூறப்பட்ட வளாகத்தின் காலி
உடைமைகளை ஒப்படைப்பதற்காக வாடகைதாரருக்கு எதிராக தேவையான
ஆணைகளை பிறப்பிக்கலாம்.".
31 ஆம் பிரிவிற்கான
9. முதன்மைச் சட்டத்தின் 31 ஆம் பிரிவில், "மற்றும் சட்டத்தின் 20" என்ற
திருத்தம்.
சொற்றொடருக்காக, "சட்டத்தின் 19 அல்லது 20" எனும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசு செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத்்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
17தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம்
ஆண்டு ஏப்ரல் திங்கள் 22 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது: -
சட்ட எண். 20/2022.
1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதிகள் (மேம்படுத்துதல் மற்றும்
அகற்றுதல்) சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதிகள்
மற்றும் (மேம்படுத்துதல் மற்றும் அகற்றுதல்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 1 ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் 2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)
11/1971.
பிரிவிற்கானத் 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதிகள் (மேம்படுத்துதல் மற்றும்
திருத்தம்.
அகற்றுதல்) சட்டத்தின் 2 ஆம் பிரிவில், (a) கூறிற்காக, பின்வரும் கூறானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(a) "வாரியம்" என்பது 34 ஆம் பிரிவின் கீழ் நிறுவப்பெற்ற தமிழ்நாடு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பொருள்படும்.".
அத்தியாயம் VIII-இன் 3. முதன்மைச் சட்டத்தின் அத்தியாயம் VIII-இல், "குடிசைப்பகுதி
தலைப்பிற்கான மாற்று வாரியம்" எனும் தலைப்பிற்காக, "நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்"
மாற்றீடு.
எனும் தலைப்பானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
34 ஆம் பிரிவிற்கான 4. முதன்மைச் சட்டத்தின் 34 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) "குடிசைப்பகுதி மாற்று வாரியத்தினை நிறுவுதல்" எனும்
ஓரத்தலைப்பிற்காக, "நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினை நிறுவுதல்"
எனும் ஒரத்தலைப்பானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (1) ஆம் உட்பிரிவில், "தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்"
எனும் சொற்றொடருக்காக, "தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
சொற்றொடருக்கான 5. முதன்மைச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் விதிகள் அல்லது
மாற்றீடு.
அறிவிக்கைகள் எதிலும் காணப்படுகிற "தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று
வாரியம்" எனும் சொற்றொடருக்காக, "தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு
வாரியம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசு செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத்்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
18 19தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம்
ஆண்டு ஏப்ரல் திங்கள் 22 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது: -
சட்ட எண். 21/2022.
மாநிலத்தில் பத்திர எழுத்தர்களின் பயனுக்காக நலநிதியமொன்றை
அமைத்துருவாக்க வகை செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பத்திர எழுத்தர்களின்
தொடக்கம்.
நலநிதியச் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாக
குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய நாளன்று நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
2. இந்தச் சட்டத்தின் தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி,- பொருள்
வரையறைகள்.
(a) "குழு" என்பது 4 ஆம் பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட
தமிழ்நாடு பத்திர எழுத்தர்களின் நலநிதியக் குழு என்று பொருள்படும்:
(b) "சார்ந்து வாழ்பவர்" என்பது, இறந்த நிதிய உறுப்பினர்
ஒருவரின் பின்வரும் உறவினர்கள் எவரேனும், அதாவது:-
(i) விதவை அல்லது மனைவியை இழந்தவர், உரிய வயதுவராத மகன்,
திருமணமாகாத மகள் அல்லது விதவைத் தாய்;
(ii) உறுப்பினர் இறந்தபோது, அவ்வுறுப்பினரின் வருமானங்களை
முழுக்கச்சார்ந்து வாழ்ந்து வரும் நலிந்த நிலையிலுள்ள மற்றும் பதினெட்டு
வயதை அடைந்துள்ள மகன் அல்லது திருமணமான மகள் ஆகியோர் என்று
பொருள்படும்;
(c) "பத்திர எழுத்தர்" என்பது, 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு
பத்திர எழுத்தர்களின் உரிம விதிகளின் படி உரிமம் வழங்கப்பட்ட நபர் ஒருவர்
என்று பொருள்படும்;
(d) "பத்திர எழுத்தர்கள் சங்கம்" என்பது 17 ஆம் பிரிவின்கீழ்
அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற பத்திர எழுத்தர் சங்கம் என்று
பொருள்படும்;
(e) "நிதியம்" என்பது, 3-ஆம் பிரிவின்படி
அமைத்துருவாக்கப்பட்ட தமிழ்நாடு பத்திர எழுத்தர்களின் நலநிதியம் என்று
பொருள்படும்;
(f) "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்;
(g) "நிதிய உறுப்பினர்" என்பது, இந்த சட்டத்தின்
வகைமுறைகளின் படி நிதியத்தின் உறுப்பினராக நீடிக்கின்ற நிதியத்தின்
பலன்களைப் பெற சேர்க்கப்பட்ட பத்திர எழுத்தர் ஒருவர் என்று பொருள்படும்;
(h) "வகுத்துரைக்கப்பட்டது" என்பது இந்தச் சட்டத்தின் கீழ்
செய்யப்பட்ட விதிகள் என்று பொருள்படும்;
(i) "மாநிலம்" என்பது தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்.
பத்திர 3. (1) அரசானது, அறிவிக்கை வாயிலாக, தமிழ்நாடு பத்திர எழுத்தர்களின்
நல நிதியம் என்று அழைக்கப்பெறும் நிதியமொன்றை அமைத்துருவாக்குதல்
எழுத்தர்களின் நல நிதியம்.
வேண்டும்.
(2) பின்வருவன நிதியத்திற்கு வரவு வைக்கப்படுதல் வேண்டும்,-20
(a) 19ஆம் பிரிவின்படி நிதியத்தின் உறுப்பினராக ஒருவரைச்
சேர்ப்பதற்கு, பத்திர எழுத்தர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகைகள்
அனைத்தும்;
மையச் (b) 1908 ஆம் ஆண்டு பதிவுச்சட்டத்தின் கீழ் பதிவிற்காக
சட்டம் XVI/1908.
சார்பதிவாளர் அலுவலகம் எதிலும் முன்வைக்கப்பட்ட ஆவணத்தின் படி,
வகுத்துரைக்கலாகும், ஐம்பது ரூபாய்க்கு மிகாத வீதத்தில் வசூலிக்கப்படும்
தொகை அனைத்தும்;
தமிழ்நாடு சட்டம் வரம்புரையாக, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார
20/2017.
அமைப்புகள் கேளிக்கை வரிச்சட்டத்தின் 2-ஆம் பிரிவின் (11)-ஆம் கூறில்
வரையறுக்கப்பட்டபடி மைய அரசு அல்லது மாநில அரசு அல்லது உள்ளாட்சி
அமைப்பின் பொருட்டு பதிவிற்காக முன்வைக்கப்பட்ட ஆவணம் எதற்கும்
இந்த கூறானது பொருந்துதல் ஆகாது;
பத்திர
4. (1) அரசானது, அறிவிக்கையின் வாயிலாக, இதன்பொருட்டு
குறிப்பிடலாகும் அத்தகைய தேதியன்றும், அது முதற்கொண்டும், 'தமிழ்நாடு
பத்திர எழுத்தர்களின் நல நிதியக் குழு' என்கிற பெயரில் குழுவொன்றினை
நிறுவுதல் வேண்டும்.
எழுத்தர்களின் நலநிதியக் குழுவை நிறுவுதல்.
(2) குழுவானது, நிலையான தொடர்பாட்டையும் பொது
இலச்சினையொன்றையும் கொண்டுள்ள, சொத்தினை ஈட்டுவதற்கும்
வைத்திருப்பதற்கும் உரிமை மாற்றம் செய்வதற்குமான அதிகாரத்துடன்
கூடிய ஒரு கூட்டமைப்பாக இருத்தல் வேண்டும் மற்றும் அதன் பெயரினால்
வழக்கிடுதல் அல்லது வழக்கிடப்படுதல் வேண்டும்.
(3) குழுவில் பின்வருபவர்களை கொண்டிருத்தல் வேண்டும்,-
(a) பதிவுத்துறை தலைவர், பதிவுத்துறை-பதவி வழித் தலைவர்;
(b) கூடுதல் பதிவாளர் (சீட்டு) - பதவி வழிச் செயலாளர்;
(c) நேர்முக உதவியாளர் (சீட்டு ) - பதவி வழிச் பொருளாளர்;
(d) இயக்குநர், பதிவு பயிற்சி நிலையம் – பதவி வழிச் உறுப்பினர்;
(e) கணக்கு அலுவலர், பதிவுத்துறை தலைவர் அலுவலகம் -
பதவி வழி உறுப்பினர்;
(f) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மற்றும்
அத்தகைய அதிகார அமைப்பால் பத்திர எழுத்தர்களின் சங்கத்திலிருந்து,
நியமிக்கப்படக்கூடிய நான்கு உறுப்பினர்கள்.
(4) (3)ஆம் உட்பிரிவின் (f) கூறின் படி நியமனம் செய்யப்பட்ட
உறுப்பினர் ஒருவர், மூன்று ஆண்டுகள் கால அளவிற்கு அல்லது அவர் பத்திர
எழுத்தர்களின் சங்கத்தின் உறுப்பினராக இருப்பது அற்றுப்போகும் வரையில்
இதில் எது முந்தியதோ அதுவரை பதவி வகித்தல் வேண்டும்.
குழுவின் நியமன
5. (1) 4ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் (f) கூறின் படி நியமனம்
செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர், பின்வரும் காரணங்களால் குழுவின்
உறுப்பினராக தொடர்வதற்கு தகுதியற்றவராகக் கருதி நீக்கம் செய்யப்பட
வேண்டும். அவர்,-
உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தல் மற்றும் நீக்குதல்.
(a) மனச்சீர்கேடுற்றவரானால்; அல்லது
(b) நொடித்த நிலையராகத் தீர்ப்பளிக்கப்பட்டவரானால்; அல்லது
(c) குழுவின் தொடர்ச்சியான மூன்று கூட்டங்களுக்கும் அதிகமாக
குழுவின் அனுமதியின்றி வராதிருப்பாரானால்:
வரம்புரையாக, இந்தக் கூறின் படி, பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்,
தாம் வராமையை பிழைபொறுக்கக் கோரி விண்ணப்பம் அளித்தால் அத்தகைய
உறுப்பினர் குழுவினால் மீண்டும் பதவியில் அமர்த்தப்படலாம்; அல்லது
21(d) நிதியத்திற்கு பணம் செலுத்தத் தவறியவர் அல்லது குழுவிற்கு
நம்பிக்கைக்கேட்டை செய்திருப்பாரானால்; அல்லது
(e) ஒழுக்கக்கேட்டை உள்ளடக்குகின்ற குற்றம் எதற்காகவும்,
குற்றவியல் நீதிமன்றத்தினால் தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பவரானால்.
(2) அரசானது, (1)ஆம் உட்பிரிவின்படி தகுதியற்றவர் அல்லது
தகுதியற்றவராகிற உறுப்பினர் எவரையும் குழுவின் உறுப்பினர் தகுதியிலிருந்து
நீக்கலாம்:
வரம்புரையாக, அவரது தரப்பினை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பொன்றை
வழங்கினால் அன்றி, உறுப்பினர் எவரையும் நீக்குவதற்கான ஆணை
வழங்கப்படுதல் ஆகாது.
6. (1) 4ஆம் பிரிவின் (3)ஆம் உட்பிரிவின் (f) கூறின்படி நியமனம் குழுவின் நியமன செய்யப்படும் உறுப்பினர் எவரும், குழுவின் தலைவருக்கு எழுத்துருவில்
மூன்று மாத கால அறிவிப்பினை வழங்கி மற்றும் அத்தகைய பதவி விலகல்
உறுப்பினர்கள் பதவி அத்தலைவரால் ஏற்றுக் கொள்ளப்படுவதன் பேரில், அவர் பதவி விலகியதாகக்
விலகுதல் மற்றும் கொள்ளப்படுதல் வேண்டும்.
தற்காலிக காலியிடங்கள் நிரப்புதல்.
(2) (1)ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர் ஒருவரின்
பதவியில் ஏற்படும் தற்காலிக காலியிடமானது இயன்ற விரைவில் நிரப்பப்படுதல்
வேண்டும் மற்றும் அத்தகைய காலியிடத்திற்கு நியமனம் செய்யப்பட்ட
உறுப்பினர் அவரது பதவியில் முன்னிருந்தவரின் எஞ்சிய பதவிக் காலத்திற்கு
பதவியில் இருப்பார்.
குறைபாடு முதலான 7. குழுவினால் இந்தச் சட்டத்தின்படியோ அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட
விதிகளின் படியோ செய்யப்பட்ட செயல் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை
எதுவும்,
வற்றினால் குழுவின் செயல் எதுவும்
செல்லாததாக
ஆக்கப்படுத- லாகாது.
(a) குழுவில் உள்ள காலியிடம் அல்லது அமைப்பில் உள்ள
குறைபாடு எதனின்; அல்லது
(b) அதன் நபரொருவரை உறுப்பினராக நியமித்ததில் குறைபாடு
அல்லது முறைகேடு எதனின்; அல்லது
(c) நேர்வின் தகுதிகளை பாதிக்காமல் அத்தகைய செயல் அல்லது
நடவடிக்கையிலுள்ள குறைபாடு அல்லது முறைகேடு எதனின் காரணத்தினால்
மட்டுமே, செல்லாததாக ஆக்கப்படுதலாகாது.
நிதியத்தின் 8. நிதியமானது அரசிடம் உற்றமைந்திருத்தல் மற்றும் அதனால்
வைத்து வரப்படுதல் வேண்டும். அரசானது, நிதியத்திலிருந்து அத்தகைய
ஒப்படைப்பும் பயன்பாடும்.
தொகைகளை ஆண்டொன்றிற்கு இருமுறை, வகுத்துரைக்கலாகும் முறையில்
குழுவிற்கு விடுவித்தல் வேண்டும். குழுவானது, அத்தகைய தொகைகளை
இச்சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு மற்றும் அதன் நோக்கங்களுக்காக
பயன்படுத்துதல் வேண்டும்.
9. (1) குழுவினால், அந்நிதியமானது நிருவகிக்கப்படுதல் வேண்டும். நிதியத்தினை
நிருவகித்தல்.
(2) நிதியத்தின் நிர்வாகத்தில், குழுவானது, இந்தச் சட்ட
வகைமுறைகளுக்கும் அதன் கீழ் செய்யப்படும் விதிகளுக்கும் உட்பட்டு,-
(a) நிதியத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான அல்லது மீண்டும்
சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட பதிவாளர்
(நிருவாகம்) மூலம் பெற்றுக் கொண்டு, அவற்றைப் பெற்றுக் கொண்ட
தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் அத்தகைய விண்ணப்பங்களை
முடிவு செய்தல் வேண்டும்;
22(b) நிதியத்திலிருந்து பணம் வழங்கப்படுவதற்காக நேர்விற்கேற்ப,
நிதிய உறுப்பினர்கள் அவர்களால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டவர்கள் அல்லது
அவர்களுடைய சட்டப்படியான வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்களைப்
பெற்றுக்கொண்டு தான் தேவையென கருதுகின்ற விசாரணையை நடத்தி
அவ்விண்ணப்பங்கள் பெறப்பட்ட தேதியிலிருந்து ஐந்து மாதங்களுக்குள்
அவற்றை முடிவு செய்தல் வேண்டும்;
(c) விண்ணப்பங்களின் மீதான தமது முடிவுகளைக் குழுவின்
நடவடிக்கைக் குறிப்பேட்டில் பதிவு செய்தல் வேண்டும்;
(d) குழுவானது, வகுத்துரைக்கலாகும் உரிய சரிபார்த்தலுக்குப்
பிறகு, பின்வரும் பலன்களை வழங்குதல் மற்றும் அத்தகைய
விண்ணப்பதாரர்களுக்கு இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
விகிதங்களில், பின்வருவனவற்றிற்காக நிதியின் இருப்பிற்குட்பட்டு
தொகையினை செலுத்துதல் வேண்டும்-
(i) நிதிய உறுப்பினரின் விபத்து கால மரண பலன் அல்லது நிரந்தர
ஊனம் அல்லது பிற பகுதி ஊன பலன்;
(ii) நிதிய உறுப்பினரின் இயற்கை மரண பலன்;
(iii) உறுப்பினரின் திருமணம் அல்லது அவரது மகன் அல்லது
மகளின் திருமணத்திற்கு திருமண உதவி;
(iv) நிதியத்தின் ஒரு பெண் உறுப்பினருக்கு மகப்பேறு பலன்;
(v) நிதியத்தின் உறுப்பினருக்கான மூக்குக் கண்ணாடி பலன்;
(vi) நிதியத்தின் உறுப்பினருடைய குழந்தைகளுக்கான கல்வி பலன்;
(vii) நிதியத்தின் முன்னாள் உறுப்பினர்க்கு ஓய்வூதிய பலன்; மற்றும்
(viii) நிதியத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அல்லது அவரது
வாழ்க்கை துணைவருக்கு ஈமச்சடங்கு உதவி.
(e) வகுத்துரைப்படலாகும் அத்தகைய பருவ இதழ்கள் மற்றும் ஆண்டு
அறிக்கைகளை குழுவானது அரசுக்கு அனுப்புதல் வேண்டும்;
(f) நிதியத்தில் இணைய அல்லது மீண்டும் இணைவதற்கான
விண்ணப்பங்கள் அல்லது நிதிய நலனுக்காக உரிமைக் கோரிக்கைகள் தொடர்பாக
குழுவின் முடிவுகளை, பதிவஞ்சலின் மூலம் அவ்விண்ணப்பதாரர்களுக்கு
தெரிவித்தல் வேண்டும்; மற்றும்
(g) இந்தச் சட்டத்தின் படி மற்றும் அதன் கீழ் செய்யப்படும் விதிகளின்
படி செய்ய தேவையானதாகிற அல்லது தேவைப்படக்கூடிய பிற செயல்களைச்
செய்தல் வேண்டும்.
குழுவின்
10. குழுவானது, அரசின் முன் ஏற்பளிப்புடன், இச்சட்டத்தின் அல்லது
அதன் கீழ் செய்யப்பட்ட விதிகளின் படி, அது தேவையென கருதலாகும்
செயற்பணிகளின் ஒப்படைவு.
அத்தகைய அதன் செயற்பணிகளை, அது பொருத்தமென கருதலாகும்
அத்தகைய தடைக்கட்டுகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, நிதியத்தின்
பயனுறு மேலாண்மைக்காக, தலைவர் அல்லது செயலாளருக்கு ஒப்படைவு
செய்யலாம்.
கணக்குகள் மற்றும்
11. (1) குழுவானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கணக்குகள்
தணிக்கை.
மற்றும் புத்தகங்களை பேணி வருதல் வேண்டும்.
(2) குழுவின் கணக்குகள், குழுவினால் பணியமர்த்தப்பட்ட பட்டயக்
கணக்கரொருவரால் ஆண்டு தோறும் தணிக்கை செய்யப்படுதல் வேண்டும்.
(3) பட்டையக் கணக்கரால் சான்றளிக்கப்பட்டவாறான கணக்குகள்,
அதன் மீதான தணிக்கை அறிக்கையுடனிணைந்து, அந்நிதியாண்டின்
இறுதியிலிருந்து ஆறு மாத காலஅளவிற்குள் குழுவின் செயலாளரால்
அரசுக்கு மேலனுப்பப்படுதல் வேண்டும்.
23(4) அரசானது, தணிக்கையாளரின் அறிக்கையினை ஆய்வு
செய்ததன் பேரில், அது வழங்க பொறுத்தமென கருதலாகும் அத்தகைய
பணிப்புரைகளை குழுவானது நிறைவேற்றுதல் வேண்டும்;
செயலாளரின் 12. குழுவின் செயலாளரானவர்,-
அதிகாரங்களும் கடமைகளும்.
(a) குழுவின் தலைமைச் செயல் அலுவலராக இருத்தல்
மற்றும் அதன் முடிவுகளை நிறைவேற்றுவதற்குப் பொறுப்புடையவராயிருத்தல்
வேண்டும்;
(b) குழுவிற்காகவும் எதிராகவும் உரிமை வழக்குகளிலும் அதன்
நடவடிக்கைகளுக்காக அனைத்திலும் குழு சார்பாளராயிருத்தல் வேண்டும்;
(c) குழுவின் முடிவுகள் மற்றும் நெறிமுறைக் கட்டளை அனைத்திற்கும்
தம் கையொப்பம் மூலமாக சான்றளிக்க வேண்டும்;
(d) குழுவின் வங்கிக் கணக்குகளைப் பொருளாளருடன் சேர்ந்து
கூட்டாக இயக்குதல் வேண்டும்;
(e) குழுவின் கூட்டங்களைக் கூட்டுவதோடு அதன் நடவடிக்கைக்
குறிப்புகளைத் தயாரித்தலும் வேண்டும்;
(f) குழுவின் கூட்டங்களுக்குத் தேவையான எல்லாப்
பதிவேடுகளுடனும் தகவலுடனும் வருகை தருதல் வேண்டும்;
(g) அவ்வப்போது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவங்கள்,
பதிவேடுகள் மற்றும் பிற பதிவுறுகள் ஆகியவற்றைப் பேணி வருதலோடு குழு
தொடர்புடைய கடிதத் தொடர்பு அனைத்தையும் செய்து வருதலும் வேண்டும்;
(h) ஒவ்வொரு நிதியாண்டின் போதும், குழுவினால் நடத்தப்பட்ட
அலுவல் பரிமாற்றங்களின் ஆண்டு விவர அறிக்கை ஒன்றைத் தயாரித்தல்
வேண்டும்; மற்றும்
(i) குழுவினால் பணிக்கப்படக்கூடிய அத்தகைய பிற செயல்களைச்
செய்தல் வேண்டும்.
குழுவின் 13. (1) குழுவானது, அதனின் அலுவல் நடத்துவதற்கு குறைந்தது மூன்று
கூட்டங்கள்.
மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவையென்று கருதினால் அதற்கு
அதிகமாக கூடுதல் வேண்டும்.
(2) குழுவின் ஐந்து உறுப்பினர்கள், குழுவின் கூட்டமொன்றுக்கான
குறைவெண் வரம்பெல்லையாக அமைதல் வேண்டும்.
(3) தலைவர் அல்லது அவர் வருகை தாராதிருந்த நிலையில்,
கூட்டத்திற்கு வருகை தந்த உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஓர்
உறுப்பினர், குழுவின் கூட்டம் ஒன்றிற்கு தலைமை வகித்தல் வேண்டும்.
(4) குழுவின் கூட்டமொன்றில் வருகின்ற பொருட்பாடு எதுவும்,
அக்கூட்டத்தில் வந்திருந்து மற்றும் வாக்களிக்கின்ற உறுப்பினர்களின்
பெரும்பான்மையினரால் முடிவு செய்யப்படுதல் வேண்டும் மற்றும் வாக்குகள்
சமமாக அமைகின்ற நேர்வில், தலைவர் அல்லது அக்கூட்டத்திற்குத் தலைமை
வகிக்கின்றவர் அறுதிவாக்கொன்றினை அளித்தல் வேண்டும்.
14. குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள், வகுத்துரைக்கப்படலாகும்
அத்தகைய பயணப்படியும் நாள் படியும் பெறுவதற்குத் தகுதியுடைவர்களாக
இருத்தல் வேண்டும்.
குழு உறுப்பினர் களுக்கான பயணப் படியும் நாள் படியும்.
24மறு ஆய்வு. 15. குழுவானது, எந்நேரத்திலும் தானாக முன்வந்து அல்லது உரித்தமுள்ள
நபர் எவரிடமிருந்தும் பெறப்பட்ட விண்ணப்பத்தின் மீது, அதனால்
பிறப்பிக்கப்பட்ட ஆணைஎதனின் தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள்,
அத்தகைய ஆணை எதனையும் மறு ஆய்வு செய்யலாம்:
வரம்புரையாக, குழுவானது பாதிக்கப்பட்ட நபர் எவருக்கும் அவரது
தரப்பினை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பொன்றை நல்கினாலன்றி, அத்தகைய
நபருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாதிக்கின்ற ஆணை எதையும்
பிறப்பித்தலாகாது.
சாட்சிகளை
16. குழுவானது, இந்தச் சட்டத்தின்படி விசாரணை எதனின் மையச் சட்டம் V/1908.
நோக்கங்களுக்காக, 1908ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறைத் தொகுப்புச்
எடுப்பதற்கும் மற்றும்
சட்டத்தின் படி உரிமை வழக்கொன்றை விசாரணை செய்கையில், உரிமையியல்
சான்றுகளை
நீதிமன்றமொன்றில் உற்றமைந்துள்ள அதே அதிகாரங்களைப் பின்வரும்
பொருண்மைகளைப் பொறுத்துப் பெற்றிருத்தல் வேண்டும், அதாவது:-
தருவிப்பதற்கும் அழைப்பாணை அனுப்ப அதிகாரம்.
(a) நபரெவரையும், முன்னிலையாவதை வலியுறுத்துதல் அல்லது
ஆணையுறுதியின் பேரில் விசாரணை செய்தல்;
(b) ஆவணங்களை வெளிக்கொணர மற்றும் தாக்கல் செய்யக் கோருதல்;
(c) உறுதிமொழி ஆவணத்தின் பேரில் சான்று பெறுதல்; மற்றும்
(d) சாட்சிகளை விசாரணை செய்வதற்காக ஆணையம் அமைக்க
ஆணை பிறப்பித்தல்.
பத்திர
17. (1) (a) மாவட்டம் எதிலும் செயல் பட்டு வரும் பத்திர எழுத்தர்களின்
எழுத்தர்
சங்கங்கள் அனைத்திலும், குழுவினால் இதன்பொருட்டு அறிவிக்கை
சங்கத்தின்
செய்யப்படுதல் வேண்டிய தேதிக்கு முன்னர்; மற்றும்
ஏற்பிசைவும்
பதிவும்.
(b) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்குப் பின்னர்
அமைத்துருவாக்கப்பட்ட பத்திர எழுத்தர்களின் அத்தகைய சங்கம் எதுவும்,
வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய படிவத்தில்
இந்த சட்டத்தின்படி பத்திர எழுத்தர்களின் சங்கம் என ஏற்பிசைவளிக்க
மற்றும் பதிவு செய்வதற்காக குழுவிற்கு விண்ணப்பிக்கலாம்.
(2) ஏற்பிசைவிற்கான மற்றும் பதிவிற்கான விண்ணப்பம்
ஒவ்வொன்றும் சங்கத்தின் விதிகள் அல்லது துணை விதிகள், சங்கத்தில்
பதவி வகிப்பவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் மற்றும் அத்தகைய
உறுப்பினர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் வழக்கமாகத் பணிபுரியும் இடம்
ஆகியவற்றைக் கொண்டுள்ள உறுப்பினர்களின் நாளது தேதி வரையிலான
பட்டியல் ஆகியவற்றுடன் இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும்.
(3) குழுவானது, அவசியமென கருதுகின்ற அத்தகைய விசாரணையைச்
செய்த பின்பு, அத்தகைய பத்திர எழுத்தர் சங்கத்திற்கு ஏற்பிசைவு அளிக்கலாம்
மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் ஏற்பிசைவு மற்றும்
பதிவுச் சான்றிதழ் ஒன்றினை வழங்கலாம்.
(4) சங்கத்தின் ஏற்பிசைவு மற்றும் பதிவு தொடர்பான குழுவின் முடிவே
இறுதியானதாக இருக்க வேண்டும்.
பத்திர எழுத்தர்கள் 18. (1) பத்திர எழுத்தர்களின் சங்கம் ஒவ்வொன்றும், ஒவ்வொரு
ஆண்டின், ஏப்ரல் 15ஆம் நாளன்றோ அல்லது முன்போ அந்த ஆண்டின்
சங்கத்தின் கடமைகள்.
மார்ச் 31ஆம் நாளன்று உள்ளவாறு அதன் உறுப்பினர்களின் பட்டியல் ஒன்றை
குழுவிற்கு தெரிவித்தல் வேண்டும்.
25(2) பத்திர எழுத்தர் சங்கம் ஒவ்வொன்றும் பின்வருவனவற்றை
குழுவிற்கு தெரிவித்தல் வேண்டும்,-
(a) பத்திர எழுத்தர் சங்கத்தின் பதவி வகிப்பவர்களில் ஏற்பட்ட
மாற்றம் எதையும் அத்தகைய மாற்றத்திலிருந்து பதினைந்து நாட்களுக்குள்;
(b) சேர்த்தல் மற்றும் மீண்டும் சேர்த்தல் உள்ளடங்கலாக
உறுப்பினர்களின் எண்ணிக்கையின் மாற்றம் எதனையும் பற்றி அத்தகைய
மாற்றத்திலிருந்து முப்பது நாட்களுக்குள்;
(c) அதன் உறுப்பினர் எவரொருவரின் இறப்பு அல்லது ஓய்வு
குறித்து அவை நிகழ்ந்த தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்; மற்றும்
(d) அவ்வப்போது, குழுவினால் கோரப்படக்கூடிய அத்தகைய
பிற பொருண்மைகள்.
நிதியத்தில் 19. (1) பத்திர எழுத்தர் ஒவ்வொருவரும், நிதியத்தில் உறுப்பினரொருவராகச்
உறுப்பினர் தகுதி.
சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய
படிவத்திலும் அத்தகைய முறையிலும் குழுவிற்கு விண்ணப்பிக்கலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவின் படி விண்ணப்பமொன்றைப்பெற்றதன் பேரில்,
குழுவானது, அது பொருத்தமெனக் கருதுகின்ற விசாரணையைச் செய்தல்
வேண்டும் மற்றும் அவ்விண்ணப்பதாரரை நிதியத்தில் சேர்த்துக் கொள்ளலாம்
அல்லது எழுத்துருவில் காரணங்களை பதிவு செய்து அவ்விண்ணப்பத்தை
மறுக்கலாம்:
வரம்புரையாக, விண்ணப்பமொன்றை மறுக்கும் ஆணை எதுவும்,
விண்ணப்பதாரருக்கு அவரது தரப்பை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பொன்றினை
நல்கினாலன்றி பிறப்பிக்கப்படுதல் ஆகாது.
(3) விண்ணப்பதாரர் ஒவ்வொருவரும், சேர்ப்பு மற்றும் மறு சேர்ப்பின்
போது நிதியத்திற்கு ரூ.1000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) விண்ணப்பக்
கட்டணமொன்றைச் செலுத்த வேண்டும்.
(4) நிதியத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், சேர்க்கையின் போது,
தாம் இறக்கும் நேர்வில், அந்நிதியத்திலிருந்து தொகையினைப் பெறுவதற்கு
உரிமையுடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சார்ந்திருப்போரை
பெயர்குறிப்பிட்டு அளித்தல் வேண்டும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
நபர்கள் பெயர்குறித்து நியமிக்கப்பட்டால், பெயர்குறித்து நியமிக்கப்பட்ட
ஒவ்வொருவருக்கும் செலுத்த வேண்டிய பங்குத்தொகையானது, அந்த
பெயர்குறித்து நியமித்தலில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
(5) நிதியத்தின் உறுப்பினரொருவர், எந்த நேரத்திலும், குழுவிற்கு
புதிய நியமனத்துடன் எழுத்துப்பூர்வமான அறிவிப்பினை அனுப்புவதன் மூலம்
ஒரு நியமனத்தை ரத்து செய்யலாம்.
(6) குழுவானது, பத்திர எழுத்தர் தவறாகக் கூறியோ, மோசடியாகவோ
அல்லது தகாதச் செல்வாக்கினாலோ நிதியத்தின் உறுப்பினர் பதவியைப்
பெற்றுள்ளார் என்ற முறையீட்டின் பேரிலோ அல்லது மற்ற படியோ, நம்புவதற்கான
தகவல் காரணமிருக்குமிடத்து, அந்நிதியத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து
அத்தகைய பத்திர எழுத்தர் பெயரை நீக்குவதற்குக் குழு தகுதியுடையதாகும்:
வரம்புரையாக, இந்த உட்பிரிவின்படி ஆணை எதுவும் அதனால் தீங்கு
விளைவிக்கும் வகையில் பாதிக்கப்படக்கூடிய நபருக்கு தனது முறையீட்டை
வழங்குவதற்கான வாய்ப்பொன்றினைக் நல்கினாலன்றி, பிறப்பிக்கப்படுதல்
ஆகாது.
26(7) நிதியத்தின் உறுப்பினர் தன்னுடைய விருப்பத்தின் பேரில் நிதியத்தின்
உறுப்பினர் தகுதியை திரும்பப் பெறலாம்.
உறுப்பினர்
20. நிதிய உறுப்பினரொருவர்,-
தகுதியின் இடை
நிறுத்தம்.
(i) அவருடைய உறுப்பினர் தகுதியை தன் விருப்பத்தின் பேரில்
திரும்பப் பெறுதலினால்;
(ii) 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு பத்திர எழுத்தர்களின் உரிமம்
விதிகளின் படி அவரது உரிமத்தை ஒப்புவிப்பு அல்லது ரத்து செய்தலினால்;
அல்லது
(iii) குழுவினால் அவரது உறுப்பினர் தகுதியை நீக்கம் செய்தலினால்
நிதியத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து நிறுத்தப்பட வேண்டும்.
21. (1) உறுப்பினர் தகுதி நிறுத்தத்தின் பேரில், நிதியத்திலிருந்து
உறுப்பினர் தகுதி இடை
ஓய்வூதியம் அளிப்பதற்கான விண்ணப்பமானது வகுத்துரைக்கப்படலாகும்,
அத்தகைய படிவத்தில் குழுவிற்கு அளிக்கப்படுதல் வேண்டும்.
நிறுத்தத்தின் போது ஓய்வூதியம் கொடுத்தல்.
(2) (1) ஆம் உட்பிரிவின் படி பெறப்பட்ட விண்ணப்பமானது அது
தேவையெனக் கருதும் அத்தகைய விசாரணையின் பின்னர், குழுவால் முடிவு
செய்யப்படுதல் வேண்டும்.
(3) பதினைந்து ஆண்டுகளுக்குக் குறையாத காலத்திற்கு
நிதியத்தின் உறுப்பினராகவுள்ள அல்லது பத்தாண்டுகளுக்கு குறையாத காலம்
உறுப்பினராக இருந்து மற்றும் அறுபது ஆண்டு வயது நிறைவடைந்துள்ள
நபரெவரும், 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு பத்திர எழுத்தர்களின் உரிமம்
விதிகளின் படி வழங்கப்பட்ட உரிமத்தினை ஒப்புவிப்பதன் பேரில்
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தில் நிதியத்திலிருந்து
ஓய்வூதியத்தைப் பெற உரிமையுடையராவர்:
வரம்புரையாக, நிரந்தர ஊனத்தின் காரணமாக எந்த நேரத்திலும்
நிதியத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து நிறுத்தப்பட்ட நபர் ஒருவர் ஓய்வூதியம்
பெற உரிமையுடையவராவார்.
(4) 1982ஆம் ஆண்டு தமிழ்நாடு பத்திர எழுத்தர்களின்
உரிமம் விதிகளின் படி உரிமம் ரத்து செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர்
அல்லது குழுவினால் நிதியத்தின் உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கம்
செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் நிதியத்திலிருந்து ஓய்வூதியம் பெறுவதற்கு
உரிமையுடையவராகார்.
நிதியத்தில்
22 (1) நிதியத்தின் உறுப்பினர் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்
அல்லது சட்டப்படியான வாரிசுகள் நிதியத்திலிருந்து தொகை எதையும்
பெறுவதற்குள்ள உரித்தம் அல்லது உரிமையானது ஒப்படைப்பு, உடைமை
மாற்றம் அல்லது பிணயமாக வைத்தல் ஆகாது மற்றும் நீதிமன்றம், தீர்ப்பாயம்
அல்லது பிற அதிகார அமைப்பின் தீர்ப்பாணை அல்லது ஆணை எவற்றின்
கீழும் அவற்றை பற்றுகை வைக்கப்படுவதற்கு பொறுப்பாகுதல் கூடாது.
உறுப்பினர் நலனின் உடைமை மாற்றம், பற்றுகை போன்ற- வற்றிற்கான
கட்டுப்பாடு.
(2) எந்தவொரு கடனளிப்பவரும், நிதிய உறுப்பினர் அல்லது
அவரால் நியமிக்கப்பட்டவர் அல்லது சட்டப்படியான வாரிசுகளின் நிதியம்
அல்லது அதன் நலனுக்கெதிராக வழக்குத் தொடர உரிமையுடையவராகுதல்
கூடாது.
விளக்கம்.- இந்த பிரிவின் நோக்கத்திற்காக, "கடனளிப்பவர்" என்பது
அரசு அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள நொடிப்பு நிலை தொடர்பான
சட்டத்தின் படி நியமிக்கப்பட்ட அலுவல் முறை சொத்துரிமை மாற்றம் பெற்றவர்
அல்லது சொத்து பேணுநர் ஆகியோரை உள்ளடக்கும்.
2723. அரசானது, அறிவிக்கை வாயிலாகக் குழுவின் பரிந்துரையின் பேரில், இணைப்புப் பட்டியலைத் இணைப்புப் பட்டியலைத் திருத்தம் செய்யலாம்.
திருத்துவதற்கான அதிகாரம்.
24. (1) இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன் கீழ் செய்யப்படும் விதி நல்லெண்ணத்தில் எடுக்கப்படும் எதனையும் நல்லெண்ணத்தில் செய்த அல்லது செய்யக் கருதிய செயல்
எதற்காகவும் அல்லது எவருக்கெதிராகவும் உரிமை வழக்கு தொடரப்படுதல்
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு ஆகாது.
(2) இந்தச் சட்டத்தை அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதி
எதனையுமொட்டி நல்லெண்ணத்தில் செய்த அல்லது செய்யக் கருதிய செயல்
எதனாலேனும் விளைவிக்கப்பட்ட அல்லது விளைவிக்கப்படக்கூடிய சேதம்
எதற்காகவும், குழு அல்லது அரசுக்கெதிராக உரிமை வழக்கு அல்லது பிற
சட்ட நடவடிக்கை எதுவும் தொடரப்படுதல் ஆகாது.
25. இந்த சட்டத்தின் வகைமுறைகளைச் செயல்படுத்துவதில் இடர்பாடு
ஏதேனும் எழுமானால், தருவாயானது கோருகின்றவாறு தமிழ்நாடு அரசிதழில்
இடர்டுப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
ஆணை மூலமாக இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத
அந்த இடர்பாட்டை நீக்கும் நோக்கத்திற்குத் தேவையானதென அல்லது
உகந்ததெனத் தோன்றும் எதையும் செய்யலாம் என அரசு ஆணை ஒன்றின்
வாயிலாக வெளியிடலாம்:
வரம்புரையாக, ஆனால் அத்தகைய ஆணை எதுவும் இந்தச் சட்டத்தின்
தொடக்கத் தேதியிலிருந்து இரண்டாண்டு கால அளவு முடிவடைந்த பின்னர்
செய்யப்படுதலாகாது.
விதிகளைச் 26. (1) அரசானது அறிவிக்கை வாயிலாக, இந்தச் சட்டத்தின்
நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.
செய்வதற்கான அதிகாரம்.
(2) இந்தச் சட்டத்தின் படி செய்யப்பட்ட விதி அல்லது அறிவிக்கை
அல்லது அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட
அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின்
முன்பு வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட
கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன் அல்லது அடுத்த கூட்டத்தொடர்
முடிவடைவதற்கு முன்பு சட்டமன்றப் பேரவை அத்தகைய விதி அல்லது
அறிவிக்கை அல்லது ஆணை ஏதொன்றிலும் மாற்றம் எதையும் செய்யுமானால்
அல்லது சட்டமன்றப் பேரவை அல்லது அந்த விதியோ அல்லது அறிவிக்கையோ
அல்லது ஆணையோ செய்யப்படவோ அல்லது பிறப்பிக்கப்படவோ கூடாது
என்று சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமானால் அதற்குப் பின் அந்த
விதியோ அல்லது அறிவிக்கையோ அல்லது ஆணையோ அவ்வாறு
மாற்றியமைக்கப்பட்ட வடிவில்தான் நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது
நேர்விற்கேற்ப அது செல்திறன் அற்றதாதல் வேண்டும். எனினும் அத்தகைய
மாற்றமோ அல்லது செல்திறன் அற்றுப்போவதோ அந்த விதியின்படியோ
அல்லது அறிவிக்கையின்படியோ அல்லது ஆணையின்படியோ முன்னதாகச்
செய்யப்பட்ட ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் பாதகம் இல்லாமல் இருத்தல்
வேண்டும்.
28இணைப்புப் பட்டியல்
[ 9 (2) மற்றும் 23 ம் பிரிவுகளைக் காண்க.]
| வரிசை எண் | பலன்கள் | தொகை (ரூபாய்) | |
| 1. | (a) விபத்துக்கால மரண பலன். | 1,00,000 | |
| (b) நிரந்தர ஊன பலன். | |||
| (c) பகுதி ஊன பலன். | 20,000 | ||
| 2. | இயற்கை மரண பலன். | 20,000 | |
| 3. | திருமண உதவி- (a) ஆண்:- (b) பெண்:- | 8,000 10,000 | |
| 4. | மகப்பேறு பலன் | 6,000 | |
| 5. | மூக்குக்கண்ணாடி பலன் | 1,500 | |
| 6. | கல்வி பலன்- (a) இடைநிலைக் கல்வி நிறைவுச் சான்றிதழ் படிப்பிற்கான உதவித்தொகை. | 1,000 | |
| (b) இடைநிலைக் கல்வி நிறைவுச் சான்றிதழ் தேர்ச்சிக்காக. | 1,000 | ||
| (c) மேனிலைப் பள்ளி சான்றிதழ் படிப்பிற்கான உதவித்தொகை. | 1,500 (ஆண்டிற்கு) | ||
| (d) மேனிலைப் பள்ளி நிறைவு சான்றிதழ் தேர்ச்சிக்காக. | 1,500 | ||
| விடுதியில் தங்காதோர் (ஆண்டிற்கு) | விடுதியில் தங்கிப் படிப்பவர் (ஆண்டிற்கு) | ||
| (e) தொழிற்பயிற்சி மாணவர் | 2,000 | 2,500 | |
| (f) பட்டயம் | 2,000 | 2,500 | |
| (g) பட்டப்படிப்பு | 3,000 | 3,500 | |
| (h) முதுகலைப் பட்டம் அல்லது தொழிற்கல்விப் பட்டம் பெற்ற மாணவர்கள். | 10,000 (ஆண்டிற்கு) | ||
| 7. | ஓய்வூதியப் பலன். | 1,500 (மாதத்திற்கு) | |
| 8. | ஈமச்சடங்கு உதவி. | 5,000 |
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
29தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு
ஏப்ரல் திங்கள் 22 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 22/2022.
2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள்
நலச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு.
1. இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்
தமிழர்கள் நல (திருத்தச்) சட்டம் என வழங்கப்படும்.
2 ஆம் பிரிவிற்கானத் தமிழ்நாடு சட்டம் 2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான), 2011 ஆம்
திருத்தம். 4/2011.
ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச் சட்டத்தின் 2 ஆம்
பிரிவில்,-
(1) (b) கூறுக்காக பின்வரும் கூறுகளானவை மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(aa) "தலைவர்" என்பது வாரியத்தின் தலைவர் என்று
பொருள்படும்;
(b) "நிறுமம்" என்பது 2013 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின் (மையச்
சட்டம் 18/2013) 2 ஆம் பிரிவின் (20) ஆம் கூறில் வரையறுக்கப்பட்டவாறான ஒரு நிறுமம்
என்று பொருள்படும்;";
(2) (e) கூறில், "5 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவிற்கான வரம்புரையின்
படி" எனும் சொற்றொடருக்காக, "5 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவின் படி" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (g) மற்றும் (k) கூறுகளானவை விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(4) (I) கூறுக்கு பின்பு, பின்வரும் கூறுகளானவை உட்புகுத்தப்படுதல் வேண்டும்,
அதாவது:-
"(la) "வாரியத்தின் உறுப்பினர்" என்பது வாரியத்தின் தலைவரை உள்ளடக்கும்;"
(lb) "உறுப்பினர்–செயலாளர்" என்பது வாரியத்தின் உறுப்பினர் செயலாளர்
என்று பொருள்படும்;".
5ஆம் பிரிவிற்கானத் 3. முதன்மைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், "அவர்களுள்,
திருத்தம்.
ஒருவர் மேலாண்மை இயக்குநராக" எனும் சொற்றொடருக்காக, "அவர்களுள் ஒருவர்
உறுப்பினர் செயலாளராக" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
10-ஆம் 4. முதன்மைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கானத் (1) (3), (4) மற்றும் (5) ஆம் உட்பிரிவுகளுக்காக பின்வரும் உட்பிரிவுகளானவை
திருத்தம் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(3) வாரியமானது, இதில் இதன்பின்பு வகை செய்யப்பட்டவாறு, அரசால்
அவ்வப்போது, பெயர் குறித்து நியமிக்கப்படும் பதினைந்து உறுப்பினர்களைக்
கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
(a) தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாமல் தமிழர்களின் நலனில்
ஈடுபாடுடைய சிறந்த நபர் ஒருவர், தலைவராக;
30. (b) தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாமல் (வெளிநாட்டில் வாழும்)
தமிழர்களைச் சார்பாற்றம் செய்கிற ஐந்து உறுப்பினர்கள்;
(c) தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாமல் (இந்தியாவில் வாழும்)
தமிழர்களைச் சார்பாற்றம் செய்கிற இரண்டு உறுப்பினர்கள்;
(d) அரசைச் சார்பாற்றம் செய்கிற ஐந்து உறுப்பினர்கள்;
(e) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அல்லது 1983 ஆம்
ஆண்டு குடியேற்றச் சட்டத்தின் கீழ் (மையச் சட்டம் 31/1983) பதிவுசெய்யப்பட்ட ஆட்சேர்ப்பு
முகமை எதையும் சார்பாற்றம் செய்கிற உறுப்பினர் ஒருவர்;
(f) மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல
ஆணையரகத்தைச் சார்பாற்றம் செய்கிற உறுப்பினர் ஒருவர்.
(4) மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையர்,
வாரியத்தின் பதவி வழி உறுப்பினர்-செயலாளராக இருத்தல் வேண்டும்.
(5) வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களையும் பெயர்குறித்து நியமனம்
செய்தபின்பு, அரசானது, அவர்தம் பெயர்களை அறிவிக்கையின் வாயிலாக வெளியிடுதல்
வேண்டும்.".
(2) (7) ஆம் உட்பிரிவில், "வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் அல்லது
இயக்குநர் எவரிடமும்" எனும் சொற்றொடருக்காக, "வாரியத்தின் தலைவர் அல்லது
உறுப்பினர்-செயலாளர் அல்லது உறுப்பினர் எவரிடமும்" எனும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
11 ஆம்
5. முதன்மைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கானத்
(1) ஓரத் தலைப்புக்காக, பின்வரும் ஓரத் தலைப்பானது மாற்றாக
திருத்தம்.
அமைக்கப்படுதல் வேண்டும். அதாவது:-
"வாரிய உறுப்பினர்களின் பதவிக் காலம்";
(2) (1) ஆம் உட்பிரிவில், "பதவி வழி இயக்குநர்கள் அல்லாத
பிற இயக்குநர்கள்" எனும் சொற்றொடருக்காக, "வாரியத்தின் உறுப்பினர்கள்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (2) ஆம் உட்பிரிவில், "பதவி வழி இயக்குநர் அல்லாத பிற இயக்குநர்
எவரையும்" எனும் சொற்றொடருக்காக, "உறுப்பினர் எவரையும்" எனும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
13 ஆம்
6. முதன்மைச் சட்டத்தின் 13 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கானத்
(1) (1) ஆம் உட்பிரிவில், "இயக்குநர்" எனும் சொற்றொடருக்காக, "உறுப்பினர்"
திருத்தம்
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (2) உட்பிரிவில், "இயக்குநர்" எனும் சொற்றொடருக்காக, "வாரியத்தின்
உறுப்பினர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (3) மற்றும் (4) ஆம் உட்பிரிவுகளுக்காக, பின்வரும் உட்பிரிவுகளானவை
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(3) (2) ஆம் உட்பிரிவின் (a) கூறின்படி நீக்கப்பட்ட வாரியத்தின் உறுப்பினர் ஒருவர், அரசால் பிறவாறு ஆணையிடப்பட்டாலன்றி, அவ்வாறு அவர் நீக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் காலஅளவுக்கு வாரியத்தின் உறுப்பினராக மீண்டும் பெயர்குறித்து நியமிக்கப்படுவதற்குத் தகுதிக் கேடுடையவராதல் வேண்டும்.
(4) (2) ஆம் உட்பிரிவின் (b) கூறின்படி நீக்கப்பட்ட வாரியத்தின் உறுப்பினர் ஒருவர், அவர் இனியும் தகுதியற்றவரல்லர் என அரசின் ஆணையொன்றின் வாயிலாக விளம்பப்படும் வரையில் மீண்டும் பெயர் குறித்து நியமிக்கப்படுவதற்குத் தகுதியுடையவர் ஆகார்.".
3114 ஆம் 7. முதன்மைச் சட்டத்தின் 14 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கானத் (i) ஓரத் தலைப்புக்காக, பின்வரும் ஓரத்தலைப்பானது மாற்றாக அமைக்கப்படுதல்
திருத்தம்.
வேண்டும், அதாவது:-
"வாரியத்தின் உறுப்பினர்கள் பதவி விலகல்";
(ii) பதவி வழி இயக்குநர் அல்லாத பிற இயக்குநர் எவரும்," எனும்
சொற்றொடருக்காக, "உறுப்பினர் எவரும்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும் .
15 ஆம் 8. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவில், அதன் வரம்புரை உள்ளடங்கலாக,
பிரிவிற்கானத் "இயக்குநர்" மற்றும் "இயக்குநர்கள்" எனும் சொற்றொடர்களுக்காக, முறையே "வாரியத்தின்
திருத்தம்.
உறுப்பினர் "மற்றும் "வாரியத்தின் உறுப்பினர்கள்" எனும் சொற்றொடர்களானவை
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
18 ஆம் 9. முதன்மைச் சட்டத்தின் 18 ஆம் பிரிவில், "1956 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டம்
பிரிவிற்கானத் (மையச் சட்டம் 1/1956)" எனும் சொற்றொடருக்காக, "2013 ஆம் ஆண்டு நிறுமங்கள்
திருத்தம்.
சட்டம் (மையச் சட்டம் 18/2013)" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
20 ஆம் 10. முதன்மைச் சட்டத்தின் 20 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "மேலாண்மை
பிரிவிற்கானத் இயக்குநர்" எனும் சொற்றொடருக்காக, "உறுப்பினர் செயலாளர்" எனும் சொற்றொடரானது
திருத்தம்.
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
21 ஆம் 11. முதன்மைச் சட்டத்தின் 21 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கானத்
திருத்தம்.
(i) ஓரத் தலைப்பில், "வாரியத்தின் இயக்குநர்கள்" எனும் சொற்றொடருக்காக,
"வாரியத்தின் உறுப்பினர்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும் ;
(ii) "மேலாண்மை இயக்குநர் உள்ளடங்கலாக வாரிய இயக்குநர் ஒவ்வொருவரும்"
எனும் சொற்றொடருக்காக, "உறுப்பினர்-செயலாளர் உள்ளடங்கலாக வாரிய உறுப்பினர்
ஒவ்வொருவரும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
22 ஆம் 12. முதன்மைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கானத் (1) (2) ஆம் உட்பிரிவில், "முதல் வகுப்பு நீதித்துறை குற்றவியல் நடுவரின்
திருத்தம்.
நீதிமன்றத்தில்" எனும் சொற்றொடருக்காக, "நீதித்துறை குற்றவியல் நடுவரின்
நீதிமன்றத்தில்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (3) ஆம் உட்பிரிவில், "மேலாண்மை இயக்குநர்" எனும் சொற்றொடருக்காக,
"வாரியத்தின் தலைவர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
24 ஆம் 13. முதன்மைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவில், "மேலாண்மை இயக்குநர்"
பிரிவிற்கானத் எனும் சொற்றொடருக்காக, " தலைவர் அல்லது உறுப்பினர் – செயலாளர்" எனும்
திருத்தம் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
3226 ஆம்
14. முதன்மைச் சட்டத்தின் 26 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கானத்
(1) (1) ஆம் உட்பிரிவில், "22 ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்காக, "25 ஆம்
திருத்தம்.
பிரிவு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (3) ஆம் உட்பிரிவில், (a) கூறில், "வாரியத்தின் இயக்குநர்கள்" எனும்
சொற்றொடருக்காக, "வாரியத்தின் உறுப்பினர்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்.
28 ஆம்
15. முதன்மைச் சட்டத்தின் 28 ஆம் பிரிவில், "மேலாண்மை இயக்குநர்"
பிரிவிற்கானத் எனும் சொற்றொடருக்காக, "தலைவர் அல்லது உறுப்பினர் - செயலாளர்" எனும்
திருத்தம்.
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
இணைப்புப்
16. முதன்மைச் சட்டத்தின் இணைப்புப் பட்டியலில், (4) ஆம் இனத்தில், "மேலாண்மை
பட்டியலு
இயக்குநர் மற்றும் இயக்குநர்கள்" எனும் சொற்றொடருக்காக, "வாரியத்தின் தலைவர்,
க்கானத்
உறுப்பினர்–செயலாளர் மற்றும் உறுப்பினர்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக
திருத்தம்
அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
33தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம்
ஆண்டு மே திங்கள் 10 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 23/2022.
1981 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழக சட்டத்தை மேலும் திருத்தவதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழக
மற்றும் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
24ஆம் பிரிவிற்கான 2. 1981 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகச் சட்டத்தின்
தமிழ்நாடு
திருத்தம்.
24 ஆம் பிரிவில், (b) கூறில், "வகை II-பிற உறுப்பினர்கள்", என்ற தலைப்பின்
சட்டம்
கீழ், (7) வது இனத்திற்குப் பிறகு, பின்வரும் இனமானது சேர்க்கப்படுதல்
1/1982.
வேண்டும், அதாவது:-
"(8) இணைக்கப்பெற்ற தனியார் கல்லூரிகளின் (உதவிபெறும்
மற்றும் சுயநிதி) கல்லூரி குழுக்களின் செயலாளர்களுக்கிடையே இருந்து அரசால்
நியமிக்கப்படும் ஐந்து உறுப்பினர்கள்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசு செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
34 35தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம்
ஆண்டு மே திங்கள் 7 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்
அது பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது: -
சட்ட எண். 24/2022.
1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தை தமிழ்நாடு மாநிலத்திற்கு
பொருந்தும் வகையில், மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு, 1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு பதிவு (தமிழ்நாடு திருத்தச்)
அளாவுகை மற்றும் சட்டம் என அழைக்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.
(3) இது மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாக, குறித்திடலாகும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
மையச் சட்டம்
32 ஆம் 2. (இதன் பின்பு முதன்மைச் சட்டமென குறிப்பிடப்படுவதான) 1908 - ஆம்
XVI / 1908.
பிரிவிற்கானத் ஆண்டு பதிவுச் சட்டத்தின் 32 ஆம் பிரிவிற்கு, பின்வரும் வரம்புரையானது
திருத்தம்.
சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"வரம்புரையாக, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக, மின்னணு
முறைகள் மூலம் முன்னிலைப்படுத்தப்படலாகும் அத்தகைய ஆவணங்களைக்
குறிப்பிடலாம்.".
32-A மின்னணு 3. முதன்மைச் சட்டத்தின் 32-A ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவுகள்
எனும் பிரிவினை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
மாற்றியமைத்தல்.
"32.-A. மின்னணு முறையிலான பதிவு.- ஆவணமானது மின்னணு
முறை வாயிலாக பதிவுக்காக தாக்கல் செய்யப்படும் நேர்வில், அதனை
தாக்கல் செய்வதற்கான வழிமுறை, ஏற்புக்காக வருகை தருதல், ஏற்பிசைவுகள்,
கையொப்பம் மற்றும் முத்திரையிடுதலுக்கான முறை, பதிவுக் கட்டணங்கள்
மற்றும் பிற கட்டணங்கள் செலுத்துவதற்கான வழிமுறை மற்றும் அத்தகைய பிற
செயல்முறைகளானவை, இதன் பொருட்டு உருவாக்கப்படலாகும் விதிகளின்படி
வகுத்துரைக்கப்பட்டவாறு இருத்தல் வேண்டும்."
32-AA. புகைப்படத்தை கட்டாயமாக பதித்தல் போன்றவை.- முறையான
பதிவு அலுவலகத்தில் ஆவணம் எதையும் தாக்கல் செய்யும் நபர் ஒவ்வொரும்,
32-ஆம் பிரிவின் கீழ் அந்த ஆவணத்தில் தனது கடவுச் சீட்டளவு புகைப்படம்
மற்றும் விரல்ரேகையினை பதித்தல் வேண்டும்:
வரம்புரையாக, அத்தகைய ஆவணம் அசையா சொத்தின் உரிமை மாற்றத்திற்கு
தொடர்பு இருக்குமிடத்து, அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட அத்தகைய சொத்தின்
வாங்குபவர் மற்றும் விற்பவர் ஒவ்வொருவரின் கடவுச்சீட்டளவு புகைப்படம் மற்றும்
விரல்ரேகைகள் அந்த ஆவணத்தில் பதிக்கப்படுதல் வேண்டும்."
52 ஆம் 4. முதன்மைச் சட்டத்தின் 52 - ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவின், (a)
பிரிவிற்கானத் கூறில், "32-A ஆம் பிரிவின் கீழ்" எனும் சொற்றொடருக்காக, "32-A ஆம்
திருத்தம்.
பிரிவின் கீழ்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும் .
69 ஆம் 5. முதன்மைச் சட்டத்தின் 69 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில், (gg)
பிரிவிற்கானத் கூறுக்கு பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும். அதாவது:-
திருத்தம்.
36"(ggg) ஆவணமானது மின்னணு முறை வாயிலாக பதிவுக்காக
தாக்கல் செய்யப்படும் நேர்வில், ஆவணங்களை தாக்கல் செய்வதற்கான
வழிமுறை, ஏற்புக்காக வருகை தருதல், ஏற்பிசைவுகள், கையொப்பம் மற்றும்
முத்திரையிடுதலுக்கான முறை, பதிவுக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள்
செலுத்துவதற்கான வழிமுறை மற்றும் அத்தகைய பிற செயல்முறைகளுக்கான
நடைமுறையை ஒழுங்குபடுத்துதல்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
37தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம்
ஆண்டு மே திங்கள் 26 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது: -
சட்ட எண். 25/2022.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு
மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினருக்கான மாநில ஆணைய (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும். தொடக்கம்.
(2) இது, 2021 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13 ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான) 2021 17 ஆம் பிரிவிற்கானத் 17/2021.
ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில திருத்தம்.
ஆணையச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும்
உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) அரசானது இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும்
அல்லது அவற்றில் எவற்றையும் நிறைவேற்றுவதற்காக, பின்தேதியிட்ட அல்லது
முன்தேதியிட்ட விதிகளைச் செய்யலாம்."
3. முதன்மைச் சட்டத்தில், "மதிப்பூதியம் மற்றும் படித்தொகைகள்" எனும் சொற்றொடருக்கான சொற்றொடருக்காக அவை காணப்படுகின்ற மூன்று இடங்களில், "ஊதியங்கள் மாற்றீடு.
மற்றும் படித்தொகைகள்" எனும் சொற்றொடர்களானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
38 39தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம்
ஆண்டு மே திங்கள் 26 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது: -
சட்ட எண். 26/2022.
1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சட்டத்தை மேலும்
திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு
மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால்
தொடக்கம்.
வாரிய (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடனடியாக வருதல் வேண்டும்.
4 ஆம் பிரிவிற்கானத் தமிழ்நாடு சட்டம்
2. 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சட்டத்தின்
திருத்தம். 4/1971.
4-ஆம் பிரிவில், 1 ஆம் உட்பிரிவில் (c) கூறிலுள்ள (iv) மற்றும் (v) ஆம்
இனங்களுக்காக, பின்வரும் இனங்களானவை மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
(iv) ஊரக வளர்ச்சி;
(v) நீர் வளங்கள்;".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
40 41தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம்
ஆண்டு மே திங்கள் 25 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது: -
சட்ட எண். 27/2022.
1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
தொடக்கம்.
(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
104 ஆம் பிரிவிற்கானத் தமிழ்நாடு சட்டம்
2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் என சுட்டப்படுவதான)
திருத்தம், 21/1994.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 104 ஆம் பிரிவின்,
(1) ஆம் உட்பிரிவில்-
(1) "ஆய்வாளரால்" எனும் சொற்றொடருக்காக, "ஆய்வாளரால்
அல்லது இதன் பொருட்டு அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட பிற அலுவலர்
எவரினாலும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) முதலாம் மற்றும் இரண்டாம் வரம்புரைகளுக்காக, பின்வரும்
வரம்புரையானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். அதாவது:-
"வரம்புரையாக, இந்த உட்பிரிவின் கீழ் பணியிட மாற்றம் செய்தலில்,
ஆய்வாளர் அல்லது அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட பிற அலுவலர்
எவரினாலும், அவரது கருத்திலுள்ள, அத்தகைய பணியிட மாறுதலுக்கு உரிய
விளைவை அளிக்கும் நோக்கத்திற்காக தேவைப்படலாகும் அத்தகைய பொது
அல்லது சிறப்பு ஆணையினை வழங்கலாம்.".
106 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 106 ஆம் பிரிவில், பின்வரும் வரம்புரையானது
பிரிவிற்கானத் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
திருத்தம்.
"வரம்புரையாக, கிராம ஊராட்சியின் செயலாளரைப் பொறுத்த நேர்வில்,
இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரமானது இதன்பொருட்டு அரசால்
அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் செயல்படுத்தப்படுதல் வேண்டும்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசு செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.