Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

COLLECTORS AND LOCAL AUTHORITIES--Madurai District Magistrate and Inspector of Village Panchayats--Notice of Dismissal--Alanganallur Panchayat Board President, Kottaimedu Panchayat Union, Madurai District

Published 05 July 2022

Type
Extraordinary
Gazette no.
377
Part
Part VI
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Heads of Departments, etc
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2022-07-05.Extraordinary_377_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2022 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 377] CHENNAI, TUESDAY, JULY 5, 2022 Aani 21, Subakiruthu, Thiruvalluvar Aandu–2053

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டைமேடு கிராம ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம் செய்தல் பற்றிய திருத்த அறிவிக்கை

(ந.க. அ4உ.இ(ஊ)/664/2020)

No. VI(2)/66(d)/2022.

2022 ஆம் ஆண்டு மே திங்கள் 31 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு எண். 313, பாகம் VI பிரிவு 2ல் பக்கம் 1-2, எண் No. VI(2)/48(a)/2022 வெளியான அறிவிப்பிற்கு கீழ்கண்ட திருத்தம் வெளியிடப்படுகிறது.

திருத்தம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கோட்டைமேடு ஊராட்சியின் ஊராட்சி மன்றத்தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 06.01.2020 தேதி முதல் திருமதி.ஏ.ஜி.சர்மிளாஜி, என்பவர் பதவி ஏற்பு செய்து பணியாற்றி வந்தார். இவர் பணியாற்றிய குறுகிய காலத்தில் இவர் மீது அதே ஊராட்சியை சேர்ந்த திரு.கருப்பசாமி என்பவர் உட்பட பல்வேறு புகார் மனுக்கள் வரப்பெற்றது. புகார் மனுக்களை தொடர்ந்து கடந்த 17.04.2020 அன்று உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அவர்களால் மேற்படி ஊராட்சியில் மேலோட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆய்வுக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்ட முறைகேடுகளை உறுதி செய்வதற்காக ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் தொழில்நுட்ப ரீதியான இழப்புகளை கண்டறியும் பொருட்டு உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) தலைமையில் 3 நபர்கள் கொண்ட ஆய்வுக்குழு ஒன்றை கடந்த 06.05.2021 அன்று மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்து ஊராட்சி மன்றத்தலைவரால் செய்யப்பட்ட பராமரிப்பு பணிகளின் ஸ்தல ஆய்வு செய்யப்பட்டது. ஸ்தல ஆய்வு செய்யப்பட்டதில் உண்மை தன்மை குறித்து ஆதார ஆவணங்களுடன் தொழில்நுட்ப குழுவினரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில், ஊராட்சி மன்றத்தலைவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள செலவினங்கள் தொடர்பான பணிகளுக்கும் வேலை தளத்தில் உள்ள பொருட்களுக்கும் வேறுபாடு, வேலை தளங்கள் சரியாக காண்பிக்க இயலாதது, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் அங்கன்வாடி மையம் பழுது பார்த்தது போன்ற பணிகளின் தேவையைவிட அதிகமாக செலவினம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு கடந்த 17.06.2021 அன்று தொழில்நுட்ப குழுவினரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோட்டைமேடு ஊராட்சி மன்றத்தலைவர் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 உட்பிரிவு 1-ன்படி நடைமுறைகளை பின்பற்றி குற்றச்சாட்டு அறிவிப்பு கடந்த 02.07.2021 அன்று பிறப்பிக்கப்பட்டது. பிறபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.ஏ.ஜி.சர்மிளாஜி என்பவர் 23.07.2021-அன்று விளக்கம் அளித்துள்ளார். இவர் மீது பிறப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளித்துள்ள விளக்கம் திருப்திகரமாகவும், ஏற்புடையதாகவும் இல்லை VI-2 Ex. (377)—1 [ 1 ] 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

என்பதால் கூடுதல் விளக்கம் கேட்டு ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.ஏ.ஜி.சர்மிளாஜி என்பவரிடம் 22.11.2021 அன்று கடிதம் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோட்டைமேடு ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.ஏ.ஜி.சர்மிளாஜி என்பவர் தனது குற்றச்சாட்டுகள் மீதான தமது கூடுதல் விளக்கத்தினை 06.12.2021 அன்று சமர்ப்பித்தார்.மேலும் மற்றொரு கூடுதல் விளக்கத்தினை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் 25.01.2022 சமர்ப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கோட்டைமேடு ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.ஏ.ஜி. சர்மிளாஜி என்பவர் குற்றச்சாட்டுகளின் மீதான தமது விளக்கம் மற்றும் கூடுதல் விளக்கத்தினை மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக தெரிவிக்க அழைப்பு விடுத்து கடந்த 28.03.2022 அன்று கடிதம் அனுப்பப்பட்டது. இதனடிப்படையில் கோட்டை மேடு ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.ஏ.ஜி.சர்மிளாஜி என்பவர் கடந்த 01.04.2022 அன்று மாவட்ட ஆட்சியரின் நேரடியான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் முன்பு ஆஜராகி குற்றச்சாட்டுகள் மீதான தமது மேல் விளக்கத்தினை நேரிடையாக தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, கோட்டைமேடு ஊராட்சி மன்றத்தலைவர் மீது ஏற்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கருத்து அறிவதற்கு கூட்டம் நடத்தி அக்கூட்டம் தொடர்பாக அறிக்கை அளித்திட வாடிப்பட்டி வட்டாட்சியருக்கு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 83, 110 மற்றும் 205 உட்பிரிவு 3-ன்படி கடந்த 01.04.2022 கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் கடந்த 22.04.2022 அன்று கோட்டை மேடு ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. மேற்படி, கூட்டத்தில் கோட்டைமேடு ஊராட்சி மன்றத்தலைவர் மீது ஏற்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களின் கருத்து கேட்கப்பட்டது.

வாடிப்பட்டி வட்டாட்சியர், ஊராட்சி மன்றத்தலைவர் மீதான குற்றச்சாட்டுகளின் பேரில் பதவி நீக்கம் செய்வது குறித்து ஊராட்சி மன்றத்தலைவரின் விளக்கத்தினை வாசித்து கருத்து கேட்டறிந்தார். கோட்டைமேடு ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் கருத்து கேட்டறிந்தததில், ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி .ஏ.ஜி.சர்மிளாஜி என்பவர் மீது ஏற்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதவி நீக்கம் செய்வதற்கு எதிராக 5 உறுப்பினர்களும், ஆதரவாக 4 உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர். மேற்படி சிறப்பு கூட்டத்தில் விவாதங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கூட்டம் முடிவுற்ற பின் வாடிப்பட்டி வட்டாட்சியர் கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்களின் ஆதரவு, எதிர்ப்பு விவரங்களை பதிவு செய்து 22.04.2022 அன்று தேவையான அனைத்து ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டம் 205 பிரிவு 2 முதல் 10 வரையிலான நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டது.

வட்டாட்சியரின் மேற்படி கூட்ட அறிக்கை அடிப்படையில் கடந்த 09.05.2022 அன்று தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 205 உட்பிரிவு 1-10-ன்படி விளக்கம் கோரி காரணம்கோரும் அறிவிப்பு கோட்டை மேடு ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.ஏ.ஜி.சர்மிளாஜி என்பவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கோட்டைமேடு ஊராட்சி மன்றத்தலைவர் தமது விளக்கத்தினை கடந்த 12.05.2022 அன்று சமர்ப்பித்துள்ளார்.

இதனடிப்படையில் கோட்டைமேடு ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.ஏ.ஜி.சர்மிளாஜி என்பவர் மீது ஏற்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் விளக்கங்களை பரிசீலித்ததில் ஊராட்சி மன்றத்தலைவர் தமது பதவியை தவறாக பயன்படுத்தி அரசு நிதியை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், இவர் தனது விளக்கத்தில் குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை. வட்டாட்சியர் நடத்திய சிறப்பு கூட்டத்திற்கு உறுப்பினர்கள் ஆதரவு கூடுதலாக இருப்பினும் இவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டதால், இவரது முகாந்திரங்கள் நிராகரிக்கப்பட்டது. இவரது செயல்பாடுகளால் மிகை செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு ஊராட்சி நிதியில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்படுகிறது.

கோட்டைமேடு ஊராட்சிமன்றத் தலைவர் மீது பிறப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், அதற்கான அன்னாரின் விளக்கங்கள் மற்றும் கூடுதல் விளக்கங்கள், வாடிப்பட்டி வட்டாட்சியரால் நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் ஆகியவை ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உளத்தேர்வின்படி கூர்ந்தாய்வு செய்யப்பட்டதன்படியும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் WP(MD)No.11531/2022, நாள்.14.06.2022 உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ன் கீழ் திருமதி. ஏ.ஜி. சர்மிளாஜி என்பவரை கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து இதன் மூலம் அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

மரு. எஸ். அனீஷ் சேகர், மதுரை, 2022 ஜூலை 5.

மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்.

ஊராட்சிகளின் ஆய்வாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 05 July 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-07-05.Extraordinary_377_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2022-07-05.Extraordinary_377_Part-VI_Section-2.