Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications by Government--Tamil Translation

Published 06 July 2022

Type
Ordinary
Gazette no.
27
Part
Part II
Notifications
Notifications by Labour Welfare and Skill Development Department
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2022-07-06.Ordinary_27_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14.

தமிழ்நாடு அரசு

2022

[R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 27] சென்னை, புதன்கிழமை, ஜூலை 6, 2022 ஆனி 22, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (ப) எண். 587, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(J1)த் துறை, 28 டிசம்பர் 2021.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் மத்தியச் சட்டம் 11/1948 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள பின்வரும் வரைவு, அறிவிக்கை, இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக, இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை --600 006. டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையாளர் வாயிலாக ஏதேனுமிருப்பின், அதனை சென்னை- அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை--- -600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 28-02-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல், 232 மற்றும் 233 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/189/2018 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில், சாயமேற்றுதல் அல்லது வெளுத்தல் அல்லது இரண்டு தொழில்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு/பணிகளுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்:- --

விவர அட்டவணை

வெளுத்தல் அல்லது சாயமேற்றுதல் அல்லது இரண்டு தொழில்களிலும் வேலைவாய்ப்பு

பணியாளர்கள்/பணியின் வகைகள்

தொடர் எண்.

குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ரூ.காசு.

(1)

(2)

(3)

மாதமொன்றுக்கு

A. அலுவலகப் பணியாளர்

(1) மேலாளர் 9617.00 (2) கணக்கர் 7157.00 (3) எழுத்தர் 6696.00 (4) கணினி இயக்குபவர் 7157.00 [ 1 ] DTP-II-2-(27) (T Sup)—1 2

பணியாளர்கள்/பணியின் வகைகள்

தொடர் எண்.

(1)

(2)

குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ரூ.காசு.

(3)

B. தொழிற்சாலைப் பணியாளர்

(1) சாயமேற்றும் பணியாளர்

(2) கொதிகலன் இயக்குபவர்

(3) ஆய்வுக்கூட தொழில்நுட்பப் பணியாளர் (4) மேற்பார்வையாளர்

(5) கொதிகலனுக்கு தீ பற்றவைப்பவர் (6) மின் கம்மியர்

(7) பொருத்துநர்

(8) இயந்திரத்தை இயக்குபவர்

(9) ஓட்டுநர்

(10) உதவியாள்

(11) காவலாள்

(12) பெருக்குபவர்

(13) துப்புரவுப் பணியாளர்

9464.00

8695.00

8234.00

8234.00

8234.00

7926.00

7926.00

7772.00

7772.00

6696.00

6696.00

6696.00

6696.00

C. வெளுத்தல் மற்றும் சாயமேற்றுதல்‑—பணியாளர்களால் மேற்கொள்ளப்படுபவை (நூலிழை)

(5 கிலோ கிராம் கட்டு)

(i) அ. நெப்தால் மற்றும் காரம்

ஆ. நேரடி வண்ணம்

இ. வாட் வண்ணம்

(ii) அ. பாதியளவு வெளுத்தல்

ஆ. முழுவதுமாக வெளுத்தல்

15.56 மிதியல் கூலி மற்றும் 3 சுற்றுக்கு

3.35 (1 சுற்றுக்கு)

8.38 (3 மாற்று மற்றும் 2 இழுவை)

4.79

7,77

D. வெளுத்தல் மற்றும் சாயமேற்றும் நிலையான நாரிழை‑

(a) நெப்தால் வண்ணம்

(b) அடர் வண்ணம்

(c) இளம் வண்ணம்

(d) வாட் வண்ணம்

‑ ‑ (5 கிலோ கிராம் கட்டு)

11.97

15.56

15.56

13.17

E. I (வெளுத்தல் மட்டும்) நூலிழை (100 கிலோ கிராம் கொண்ட பொதி ஒன்றுக்கு)

(1) நெப்தால் வண்ணம் I. தரம் II. தரம்

(2) அடர் மற்றும் இளம் வண்ணம் I. தரம் II. தரம்

(3) வாட் வண்ணம்

I. தரம் II. தரம்

538.47 538.47

598.30 550.44

550.44 538.47

II (சாயமேற்றுதல் மட்டும்) நூலிழை (100 கிலோ கிராம் கொண்ட பொதி ஒன்றுக்கு)

(1) நெப்தால் வண்ணம்

I. தரம் II. தரம்

(2) அடர் மற்றும் இளம் வண்ணம் I. தரம் II. தரம்

837.62 801.72

873.52 837.623 பணியாளர்கள்/பணியின் வகைகள்

தொடர் எண்.

குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ரூ.காசு.

(1)

(2)

(3)

(3). வாட் வண்ணம்

I. தரம் II. தரம்

550.44 538.47

F. பனியன் துணி மற்றும் நூலிழையை வெளுத்தல்— (5 கிலோ கிராம் ஒன்றுக்கு)

(I) அ. பனியன் கட்டு ஒன்றுக்கு (20 எண் நூலிழை)

15.56

ஆ. பனியன் கட்டு ஒன்றுக்கு (40 எண் நூலிழை)

16.75

(II) துணி- --100 கிலோ கிராம் பொதி / பொதியுறை 350.00 (நாளொன்றுக்கு)

G. வின்ச் மூலம் வெளுத்தல் 296.50 (நாளொன்றுக்கு)

H. முறுக்குதல், காயவைத்தல் மற்றும் கட்டுகளாக

6696.00 (மாதமொன்றுக்கு) கட்டுதல்

565.50 (நாளொன்றுக்கு)

I. துண்டுகளை வெளுத்தல் 100 துண்டுகள் கொண்ட கட்டு ஒன்றுக்கு (ஒவ்வொரு துண்டும் 10 மீட்டர்கள்)

J. (வெளுத்தல் மற்றும் சாயமேற்றுதல்) பட்டு

1. வெளுத்தல்

143.59 (கிலோ ஒன்றுக்கு) 2. சாயமேற்றுதல்

191.46 (கிலோ ஒன்றுக்கு) (2) வண்ணங்களுக்காக - உடல் வண்ணத்திற்காக மட்டும்) - ஆடையில் கரையமைப்பதற்காக—கிலோ ஒன்றுக்கு ரூ. 239.32/- கூடுதல் கூலி)

(3) வண்ணங்களுக்காக-உடல் வண்ணத்திற்காக மட்டும்)-ஆடையில் கரையமைப்பதற்காக-கிலோ ஒன்றுக்கு ரூ. 238.32/- கூடுதல் கூலி)

K. கழிவு நீர் சுத்திகரிப்பு தளவாடம்

1. வேதியியலாளர்

7157.00 (மாதமொன்றுக்கு) 2. தளவாடம் இயக்குபவர்

7772.00 (மாதமொன்றுக்கு) 3. உதவியாள்

6696.00 (மாதமொன்றுக்கு) L. ஏற்றுதல்/இறக்குதல்

6696.00 (மாதமொன்றுக்கு) M. வளரிளம் பருவத்தினர் (யாதொரு வகையிலான

6388.00 (மாதமொன்றுக்கு) பணிக்காக)

விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியானது திங்கள் ஒன்றுக்கு ரூ. 39.65 (முப்பத்தி ஒன்பது ரூபாய் அறுபத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்படவேண்டும்.

(ii) அகவிலைப்படியானது, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாளிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டில் சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.

(3) நாள் ஊதியத்தைக் கணக்கிட மாத ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(4) மாத ஊதியத்தைக் கணக்கிட நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(5) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிெலல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

DTP-II-2-(27) (T Sup)—2 DTP-II-2-(27) (T Sup)—2 4

[அரசாணை (ப) எண். 20, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 12 ஜனவரி 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 9 மற்றும் 7ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 19.12.2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 - இல் 1139 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/தொ.வே)/1057/2018 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை இரத்து செய்துவிட்டும், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் துணைக்குழுக்களின் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் குறைந்தளவு ஊதிய வீதங்களை நிர்ணயித்தல் மற்றும் திருத்தியமைத்தல் தொடர்பான விவகாரங்களில் பொதுவாக அரசுக்கு ஆலோசனை வழங்க பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை இதனால் அமைக்கிறார் அதாவது:—

தனி உறுப்பினர்கள் (அரசுப் பிரதிநிதிகள்)

1. தொழிலாளர் நல ஆணையர், டி.எம்.எஸ் வளாகம், சென்னை-600 006 தலைவர்
2. தொழிலாளர் நல இணை ஆணையர், (குறைந்தளவு ஊதியங்கள்) தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம், சென்னை-600 006 செயலாளர்
3. இணை இயக்குநர் (சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு) தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கு்நரகம், சென்னை-600 032. உறுப்பினர்
4. துணை இயக்குநர் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், குறளகம், சென்னை-600 104. உறுப்பினர்
1. திரு. P. அனீஸ் அஹமது தென்னிந்திய ஷூ/காலணி உற்பத்தியாளர்கள் சங்கம் (SISMA) ஆம்பூர். 19-ஆசிரியர் நகர், காதர்பேட்டை, வாணியம்பாடி-635 751. உறுப்பினர்
2. திரு. பிரதீப் சுகுமார் தமிழ்நாடு பயிரிடுவோர் சங்கம், 42, எ.டி.டி. காலனி, கோயம்புத்தூர்-641 018. உறுப்பினர்
3. திரு. K. மாணிக்கம், தென்னிந்திய கூட்டமைப்பு, 2-D, எல்டொரோடோ கட்டடம் (இரண்டாவது தளம்) எண். 112, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600 034. உறுப்பினர்
4. டாக்டர் P. முருகதாஸ், எண்.18, மேல்கோட்டை வீதி, விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்-606 001. உறுப்பினர்
1. திரு. M. பேச்சிமுத்து தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு, எண்.3/527 ஜே.ஜே. நகர், முகப்பேர் கிழக்கு, திருவள்ளூர்-600 037 உறுப்பினர்
2. திரு. V. வேலுசாமி, தொழிலாளர் முன்னேற்றக் கூட்டமைப்பு, எண். 5, வை.கோ. தெரு, ராஜீவ் காந்தி நகர், பட்டாபிராம் அஞ்சல், சென்னை-600 072. உறுப்பினர்
3. திரு. T.M. மூர்த்தி, அனைத்திந்திய வணிகர் சங்கப் பேரவையின் தமிழ்நாடு பிரிவு, 'KTK தங்கமணி இல்லம், 2/1 கோவூர் வைத்தியநாதன் தெரு, சிந்தாதிரிபேட்டை, சென்னை-600 002. உறுப்பினர்
4. திரு. G. சுகுமாரன், இந்திய வணிக சங்க மையம், 27, மசூதி தெரு, சேப்பாக்கம், சென்னை-600 005. உறுப்பினர்

[அரசாணை ( 2 ப ) எண். 22, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 11 ஏப்ரல் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 24-04-2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல், 288 முதல் 289 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாப்புத் துறையின் II(2)/தொவே/331/2013ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனையைக் கருதிப்பார்த்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலில், பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் நிர்ணயிக்கிறார்.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்த நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

5

விவர அட்டவணை

தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு

தொழிலாளர் வகை

தொடர் எண்.

குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூபாய்) (1)

(2)

(3) 1. வகை-I

9550/- -- தோய்ப்பவர்/வேதிப்பொருளினை தோய்ப்பவர்/மெழுகு தோய்ப்பவர், வெண்மெழுகு இடுபவர்கள், முதலாள், தையலிடுபவர், நறுக்குபவர்கள் மற்றும் உரிப்பவர்கள்.

2. வகை-II

9500/- -- பக்க வண்ணம் தீட்டுபவர்கள், 10 எண்ணிக்கைகள் மற்றும் 100 எண்ணிக்கைகள், சிப்பமாக்குபவர் சுற்றுபட்டை உருட்டுபவர், சரிபார்ப்பவர்கள், பெட்டி நிரப்புதலை சரிபார்ப்பவர்கள் மற்றும் தாள் வெட்டுபவர்கள்.

3. வகை-III

9450/- -- வேதிப்பொருள் அரைப்பவர்கள், சட்டம் மற்றும் பெட்டி சமன்படுத்துபவர்கள் வண்டி ஓட்டுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், வேதிப்பொருளை சமன்படுத்துபவர்கள், அடுக்குச் சட்டத்தில் சீர்படுத்துபவர்கள் மற்றும் மூட்டை கட்டுபவர்.

4. வகை-IV

9400/- -- சுத்தம் செய்பவர்கள்/காவலாள்/ஏவலாள்/அலுவலகப் பையன், விளிம்புச் சட்டத்தில் பொருத்துபவர்கள் (Frame Takers)/ விளிம்புச் சட்டத்தில் அளிப்பவர்கள் (Frame Givers) மற்றும் ஏனைய பயற்சி பெறாத மஸ்தூர்கள் மற்றும் ரோடமைன் தோய்ப்பவர்.

9800/- -- 5. எழுத்தர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள்

விளக்கங்கள்: (1) அகவிலைப்படி:-மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் தொழிலார்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்படவேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் மாதமொன்றுக்கு ரூ. 58.00 (ரூபாய் ஐம்பத்தெட்டு மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட அகவிலைப்படியின் முதல் கணக்கீடு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்கவேண்டும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள் இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

`

இரா. கிர்லோஷ்குமார்,

அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 06 July 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-07-06.Ordinary_27_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2022-07-06.Ordinary_27_Part-II_Section-2-T-Sup.