Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc., issued by Secretariat Departments

Published 13 July 2022

Type
Ordinary
Gazette no.
28
Part
Part III
Notifications
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT - Notification
Section
Section 1a-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2022-07-13.Ordinary_28_Part-III_Section-1a-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ் நாடு அரசு 2022

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 28] சென்னை, புதன்கிழமை, ஜூலை 13, 2022 ஆனி 29, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 62, தொழிலாளர் நலன்் மற்றும் திறன் மேம்பாட்டு (M2)த் துறை, 3 ஜூன் 2022.] 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 87 ஆம் பிரிவு மற்றும் 112 ஆம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிட கருதப்பட்ட தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகளின் பின்வரும் வரைவுத் திருத்தம், மேற்சொன்ன சட்டத்தின் 115 ஆம் பிரிவால் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நாற்பத்தைந்து நாட்கள் முடிவடைந்த பின்னர் இந்த வரைவுத் திருத்தம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், யாதொரு நபரிடமிருந்தும் பெறப்படும் யாதொரு மறுப்புரையை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அவற்றை, 47/1 திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியிலுள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு இருபடிகளில் அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவுத் திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,-

(1) விதி 63-B இல் "புனித ஜான் அவசர ஊர்தி அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்னர், "அல்லது தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்-சுகாதார நலன்" என்ற சொற்றொடர் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்:

(2) விதி 95-இல் அட்டவணை XVII-இல், பத்தி 4-இல் "புனித ஜான் அவசர ஊர்தி அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்னர் "அல்லது தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்-சுகாதார நலன்" என்ற சொற்றொடர் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

(3) விதி 95-இல் அட்டவணை XXIV-இல், பத்தி 12-இன் துணைப்பத்தி (c)-இல், "புனித ஜான் அவசர ஊர்தி அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்னர் "அல்லது தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்-சுகாதார நலன்" என்ற சொற்றொடர் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

இரா. கிர்லோஷ் குமார், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ.), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை. தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

III-1a-(28) (T Sup)—1

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 July 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-07-13.Ordinary_28_Part-III_Section-1a-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2022-07-13.Ordinary_28_Part-III_Section-1a-T-Sup.