Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments

Published 20 July 2022

Type
Ordinary
Gazette no.
29
Part
Part II
Notifications
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT - Notifications
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2022-07-20.Ordinary_29_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14.

தமிழ்நாடு அரசு

2022

[R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 6.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 29] சென்னை, புதன்கிழமை, ஜூலை 20, 2022 ஆனி 4, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (ப) எண் 151, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 05 ஏப்ரல் 2022.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதிய பின்வரும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து, இரண்டு திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், யாதொரு நபரிடமிருந்தும் பெறப்படும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது, மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, சென்னை-600 006, மருத்துவப் பணிகள் இயக்கக (DMS) வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையாளர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 09-01-2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 23 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா/21/2019 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள, சோப்புத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் நெடும்பத்தி (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (3) ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

சோப்பு தயாரிப்புத் தொழிலில் வேலைவவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள்

தொடர் எண்

குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு.)

(1) (2)

(3)

1. முதலாள்/மேற்பார்வையாளர்/வேதியியலர் 419.00 நாளொன்றுக்கு

2. கொதிகலன் இயக்குபவர்/சோப்பு தயாரிப்பு 409.00 நாளொன்றுக்கு

பொருட்களை கலக்குபவர்/வேதியியலர்

3. சோப்பு வெட்டுபவர் 400.00 நாளொன்றுக்கு

4. முத்திரையிடுபவர் 396.00 நாளொன்றுக்கு

[ 1 ]

DTP-II-2-(29) (T Sup)—12 பணியாளர்களின் வகைகள்

தொடர் எண்

குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு.)

(1) (2)

(3)

5. சிப்பமிடுபவர்

(அ) சோப்புகள் அடங்கிய பெட்டி ஒன்றுக்கு (ஆ) பெயர்சீட்டு ஒட்டுதல்

394.50 நாளொன்றுக்கு 11.29 கிராஸ் ஒன்றுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 394.50 என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட காலவரையறை வீதத்திற்கு உட்பட்டு

6. பல்வகைப் பணியாளர்கள்:

(அ) உட்பகுதி (ஆ) வெளிப்பகுதி 394.50 நாளொன்றுக்கு

7. அலுவலகப் பையன்

8. வேன் ஓட்டுநர்கள் 10824.00 மாதமொன்றுக்கு

9. எழுத்தர்

10570.00 மாதமொன்றுக்கு

10. கணக்காளர்

10824.00 மாதமொன்றுக்கு

11. தட்டச்சர்

12. காசாளர்

13. விற்பனையாளர்

10570.00 மாதமொன்றுக்கு

விளக்கங்கள்:— (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது அதாவது 161 புள்ளிகள் (2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், அகவிலைப்படி திங்களொன்றுக்கு ரூ. 65.65 (அறுபத்தைந்து ரூபாய் மற்றும் அறுபத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(4) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களில், அதே ஊதியங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (நிலை) எண் . 55, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I2)த் துறை, 30 மே 2022.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பினை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு 1994 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத்திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார்.

திருத்தம்

மேற்சொன்ன திட்டத்தில், பகுதி 17இல் உட்பகுதி (1)-இல் இனம் (1)க்கு பதிலாக, பின்வரும் இனம் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது:-

(1) கர்ப்பகாலம் - ரூ. 18,000/- (கர்ப்பகாலத்தின் ஏழாவது மாதத்திற்கும் ஒன்பதாவது மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்திற்கு ரூ. 9,000/- மற்றும் பேறுகாலத்திற்குப் பின்னர் இரண்டாவது மாதத்திற்கும் ஐந்தாவது மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எஞ்சியுள்ள ரூ. 9,000/- வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (நிலை) எண். 56, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I2)த் துறை, 30 மே 2022.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு 1994 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத்திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அதாவது:-

3

திருத்தம்

மேற்சொன்ன திட்டத்தில், பகுதி 15 இன் உட்பகுதி (1)-இல், அட்டவணையின் நெடும்பத்திகள் 4 மற்றும் 5இல் தொடர் எண் (10) மற்றும் அவை தொடர்பான நிகரான பதிவுகளில் "1,000" "1,000" "1,200" மற்றும் "1,200" என்ற பதிவுகளுக்குப் பதிலாக, முறையே "3,000" "3,000" "3,000" மற்றும் "3,000" என்ற பதிவுகள் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.

[அரசாணை (ப) எண் 259, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 1 ஜூன் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் வரைவு, அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை சென்னை-600 006 (DMS) வளாகத்திலுள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 23-1-2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2-ல் 115 முதல் 116 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா/98/2019 ஆம் எண் அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யும் தொழிலில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகை மாதாந்திர குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் தொடர் எண்

(ரூ. காசு)

(1)

(2)

(3)

மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C மண்டலம்-D (1) மேலாளர்

8339.00 8216.00 8110.00 7994.00 (2) இயந்திர கம்மியர்/காசாளர்/

7764.00 7658.00 7562.00 7455.00 எழுத்தர்/விற்பனையாளர்

(3) வணிகப் பயன்பாட்டிற்கான

7834.00 7420.00 7322.00 7225.00 இலகு ரக வாகன ஓட்டுநர்

(4) கிடங்குக் காப்பாளர் 7075.00 6986.00 6898.00 6809.00 (5) விநியோகிப்பவர்/உதவியாள் 6615.00 6536.00 6455.00 6377.00 விளக்கங்கள்:- 1. அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்படவேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 = 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி மாதமொன்றுக்கு ரூ.39.60 (முப்பத்தொன்பது ரூபாய் அறுபது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) விலைப் புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

4

(2) மண்டலங்களின் வகைபாடு பின்வருமாறு:

மண்டலம் - A - மாநகராட்சிகள் மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகள்.

மண்டலம் - B - சிறப்பு நிலை நகராட்சிகள் தவிர அனைத்து நகராட்சிகள்.

மண்டலம் - C - நகரியங்கள், பேரூராட்சிகள் மற்றும் பாளையங்கள்.

மண்டலம் - D - மண்டலங்கள் A, B மற்றும் C மண்டலங்களில் குறிப்பிடப்பட்டவை நீங்கலாக ஏனைய அனைத்து பகுதிகள்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்கவேண்டும்.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (ப) எண். 272, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 3 ஜூன் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) ஆம் உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் வரைவு, அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1)ஆம் உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

(2) இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தெடர்பாக எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை எதேனுமிருப்பின், அவற்றை சென்னை-600 006 (DMS) வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையாளர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 26-12-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு - 2 இல் 1176 மற்றும் 1177 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா/1089/2018 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு மாநிலத்தில் தகரக் கொள்கலன் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தி இல் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் மற்றும் தொழிலாளர் வகையினருக்கு அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

தகரக் கொள்கலன் தயாரிப்புத் தொழிலில் வேலைவாயப்பு

குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்

(மாதமொன்றுக்கு)

மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C தொடர்

பணிகள்/தொழிலாளர் வகைகள்

எண்

(ரூ. காசு) (ரூ. காசு) (ரூ. காசு) (1) (2)

(3)

1 நறுக்குதல் 7796.00 7637.00 7637.00 2 விளிம்புப் பட்டையிடுதல்/உருட்டுதல்/

7796.00 7637.00 7637.00 துளையிடுதல்/தறையாணியடித்தல்

3 சூட்டிணைப்பு செய்தல் 7796.00 7637.00 7637.00 4 சோதனையிடல்/பரிசோதித்தல் 7796.00 7637.00 7637.00 5 அச்சிடுதல் 7796.00 7637.00 7637.005 6 சுத்தப்படுத்தல்/மெருகேற்றல் 7796.00 7637.00 7637.00 7 சிப்பமிடுதல் 7796.00 7637.00 7637.00 8 உதவியாள் 7469.00 7469.00 7469.00 9 மேற்பார்வையாளர் 7968.00 7796.00 7796.00 10 மேலாளர்

8297.00 8124.00 8124.00 அலுவலகப் பணியாளர்கள்:

1 மேலாளர்

8297.00 8124.00 8124.00 2 கணக்காளர்

7637.00 7469.00 7469.00 3 எழுத்தர்

7637.00 7469.00 7469.00 4 தட்டச்சர்

7637.00 7469.00 7469.00 5 பண்டகக்காப்பாளர் 7637.00 7469.00 7469.00 6 ஓட்டுநர்

7637.00 7469.00 7469.00 7 காவலாள் 7469.00 7469.00 7469.00 வாளிகள், விசைக்குழாய்கள்,

296.00

295.50

290.00 பால் கலன்கள், பெட்டிகள்,

(நாளொன்றுக்கு)

(நாளொன்றுக்கு) (நாளொன்றுக்கு) உருள்கலங்கள், பீப்பாய்கள்,

குடம், நெல் அவிப்பான்களின்

இணைப்புகள் முதலியவற்றைக்

கைகளால் தயாரிப்பதற்கு

விளக்கங்கள்:- (1) மண்டலங்களின் வகைப்பாடு:- A, B மற்றும் C மண்டலங்களில் கீழ்க்காணும் பகுதிகள் அவையாவன:-

மண்டலம் - A : மாநகராட்சிகள் மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகள்;

மண்டலம் - B : ஏனைய நகராட்சிகள்;

மண்டலம் - C : A மற்றும் B மண்டலங்களில் குறிப்பிடப்பட்டவை தவிர ஏனைய பகுதிகள்

(2) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படி, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, (அதாவது 2001 ஆம் ஆண்டு 100 புள்ளிகள் என்பதன் அடிப்படையில் தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ. 46.39 (நாற்பத்து ஆறு ரூபாய் முப்பத்தொன்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்படவேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான, அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில் நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர் நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட அகவிலைப்படியின் முதல் கணக்கீடு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(3) ஒரே தன்மையுடைய பணியைச் செய்யும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(5) மாதாந்திர ஊதியவீதத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(6) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

6

[அரசாணை (2ப) எண். 39, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 10 ஜூன் 2022.]

வரைவு அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 03-01- 2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II. பிரிவு-2இல் 15 மற்றும் 16 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே./16/2018 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தபின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் பருத்தியில் கொட்டை நீக்குதல், பஞ்சு அடித்தல் மற்றும் கழிவுப் பஞ்சினை அகற்றும் பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சோர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிிவிக்கை தமிழ்நாடு அரசிதழின் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

பருத்தியில் கொட்டை நீக்குதல், பஞ்சு அடித்தல் மற்றும் கழிவுப் பஞ்சினை அகற்றும் பணிகளில் வேலைவாய்ப்பு

தொடர் எண் தொழிலாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்கள் ( ரூ . காசு)
( 1 ) ( 2 ) ( 3 )
I. உயரளவு பயிற்சி பெற்றவர்கள்:
1 தச்சர்
2 மின்கம்மியர்
3 இயந்திரக் கம்மியர் நாளொன்றுக்கு ரூ. 301.00
4 வில்லோ ஓட்டுநர்
5 அழுத்தப்பொறி ஓட்டுநர்
6 விதையகற்றுபொறி ஓட்டுநர்
II. பயிற்சி பெற்றவர்:
1 பெட்டி பணியாளர் நாளொன்றுக்கு ரூ.285.00
2 அழுத்தப்பொறி பொருத்துநர் / பொதுப் பொருத்துநர் / விதையகற்றுபொறி பொருத்துநர்
3 மேலாள்
4 அடையாளமிடுபவர் நாளொன்றுக்கு ரூ.284.00
5 வால்வுப் பணியாளர்
6 எண்ணெயிடுபவர் நாளொன்றுக்கு ரூ.281.00
7 மீள்வுறுத்துநர் (ரிவெர்ட்டர்)
8 எடையாளர்
9 உருளை உருட்டுபவர்
III. ஓரளவு பயிற்சி பெற்றவர்கள்:
1 லஸ்கர் (உதவியாளர்) நாளொன்றுக்கு ரூ.285.00
2 பொதி தைப்பவர் நாளொன்றுக்கு ரூ.281.50
3 விதையகற்று பொறியில் பருத்தி இடுபவர் நாளொன்றுக்கு ரூ.279.00
4 சாவி திறப்பாளர் நாளொன்றுக்கு ரூ.281.50
5 விதையகற்றுபொறி மற்றும் அழுத்தப்பொறி மஸ்தூர்கள் நாளொன்றுக்கு ரூ.277.00
IV. பயிற்சி பெறாதவர்:
1 மூட்டை எடுத்துச் செல்லுபவர் நாளொன்றுக்கு ரூ.286.50
2 போரா நிரப்புபவர் நாளொன்றுக்கு ரூ.284.00
3 போரா உருட்டுபவர் நாளொன்றுக்கு ரூ.279.00
4 பொதியாக்குபவர் நாளொன்றுக்கு ரூ.275.00
5 பருத்தியெடுப்பவர் நாளொன்றுக்கு ரூ.273.00
6 பருத்தியை சுத்தப்படுத்த அடிப்பவர்கள் நாளொன்றுக்கு ரூ.275.00
7 பருத்தி எடுத்துச் செல்பவர் நாளொன்றுக்கு ரூ.273.00
8 கேப்ஸ் பை திறப்பவர் நாளொன்றுக்கு ரூ.275.00
9 கேப்ஸ் எடுப்பவர் நாளொன்றுக்கு ரூ.273.00
10 லின்ட் சுத்தப்படுத்துபவர் நாளொன்றுக்கு ரூ.273.00
11 தைப்பவர்கள் (பொதி தைப்பவர் அல்லாதவர்கள்) நாளொன்றுக்கு ரூ.275.00
12 விதை அகற்றுபவர் அல்லது எடுத்துச் செல்லுபவர் நாளொன்றுக்கு ரூ.275.00
13 பெருக்குபவர் நாளொன்றுக்கு ரூ.277.00
14 பருத்தி சுத்தப்படுத்தும் இருக்கையாள் நாளொன்றுக்கு ரூ.275.00
15 அட்டியிடுபவர் (Staking) நாளொன்றுக்கு ரூ.282.00
16 போரா திறப்பவர் நாளொன்றுக்கு ரூ.273.00
17 பருத்திக் கழிவு சுத்தப்படுத்துபவர் நாளொன்றுக்கு ரூ.273.00
18 துடைப்பான் செய்பவர் நாளொன்றுக்கு ரூ.281.50
19 மேற்சொன்னவற்றில் சேராத ஏனைய யாதொரு வகையினர் நாளொன்றுக்கு ரூ.273.00
V. பல்வகை:-
1 கணக்காளர் மாதமொன்றுக்கு ரூ.7676.00
2 எழுத்தர்/தட்டச்சர் மாதமொன்றுக்கு ரூ.7502.00
3 காவலாள் மாதமொன்றுக்கு ரூ.7191.00
4 அலுவலகப் பையன்/ஏவலாள் மாதமொன்றுக்கு ரூ.7191.00
7

விளக்கங்கள்: (1) அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் ெ க ா ண் டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்.) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், மாதமொன்றுக்கு ரூ. 44.65 (நாற்பத்து நான்கு ரூபாய் அறுபத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது, முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டிணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிெலல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

8

[அரசாணை (2ப) எண். 40, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 10 ஜூன் 2022.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 21-03-2017 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் பாகம் II பிரிவு 2இல், 2 முதல் 6 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே/184/(g-2)/2017 ஆம் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர் தமிழ்நாடு மாநிலத்தில், கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பாலிதீன் தயாரிப்பு மற்றும் மிருதுவான ரப்பர் வகைகள் செய்முறைகள் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்பு பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கதக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சோர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

பாலிதீன் தயாரிப்பு மற்றும் மிருதுவான ரப்பர் வகைகள் செய்முறைகள் மற்றும்

பிளாஸ்டிக் தயாரிப்பு ஆகியவற்றில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை

ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு) (ரூ.காசு)

(1)

(2)

அ. பாலிதீன் தயாரிப்பில் வேலைவாய்ப்பு.&

I. பயிற்சி பெறாதோர்:

(1) இயக்குபவர்

7498.00

(2) உதவியாள்

7258.00

II. ஓரளவு பயிற்சி பெற்றோர்:

(1) இயக்குபவர்

(2) சுழற்றுபவர்

7743.00

(3) நெசவாளர்

(4) பாவு ஓட்டுபவர்

III. பயிற்சி பெற்றோர்:

(1) இயக்குபவர்

(2) உருவம் கொடுப்பவர்

(3) அச்சு இயக்குபவர்

8229.00

(4) இயந்திரம் இயக்குபவர்

(5) ஜாபர் (Jobber)

IV. உயரளவு பயிற்சி பெற்றோர்:

(1) முறைமாற்றுப் பணி பொறுப்பாளர்

(2) முதலாள்

9444.00

(3) மேற்பார்வையாளர்

V. பொதுவான வகையினர்:

(1) மேலாளர்

11634.00

(2) உதவி மேலாளர்

10714.00

(3) கணக்காளர்

8958.00

(4) பண்டகக் காப்பாளர் அல்லது கிடங்குக் காப்பாளர்

8715.00

(5) முதுநிலை உதவியாளர்9 பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை

(1)

(6) கணக்கு உதவியாளர்

(7) எழுத்தர் அல்லது அலுவலக உதவியாளர் (8) தட்டச்சர்

(9) சுருக்கெழுத்துத் தட்டச்சர்

(10) வரவேற்பாளர்

(11) துணையாள்

(12) விற்பனையாளர்

(13) அலுவலகப்பையன்/ஏவலாள்

(14) காவலாளி

ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு) (ரூ.காசு)

(2)

8472.00

8594.00

8715.00

8472.00

7498.00

7258.00

ஆ. மிருதுவான ரப்பர் வகைகள் தயாரிப்பு செய்முறைகளில் வேலைவாய்ப்பு:-

--

I. பயிற்சி பெறாதோர்:

(1) இயக்குபவர்

(2) தொழிலாளர் நிலை-(III)

(3) சுத்தம் செய்பவர்

(4) சிப்பமாக்குபவர்

(5) உதவியாள்

7743.00

7258.00

II. ஓரளவு பயிற்சி பெற்றோர்:

(1) இயக்குபவர்

(2) கொதிகலன் இயக்குபவர்

(3) தொழிலாளர் நிலை-II

7984.00

III. பயிற்சி பெற்றோர்:

(1) இயக்குபவர்

(2) தொழிலாளர் நிலை-I

8229.00

IV. உயரளவு பயிற்சி பெற்றோர்:

(1) இளநிலை செயல் அலுவலர்

(2) முதலாள்

(3) மேற்பார்வையாளர்

(4) பிரிவுத் தலைவர்

10660.00

9444.00

V. பொதுவான வகையினர்:

(1) மேலாளர்

(2) உதவி மேலாளர்

(3) கணக்காளர்

(4) பண்டகக் காப்பாளர் அல்லது கிடங்குக் காப்பாளர் (5) முதுநிலை உதவியாளர்

(6) கணக்கு உதவியாளர்

(7) எழுத்தர் அல்லது அலுவலக உதவியாள் (8) வரவேற்பாளர்

(9) தட்டச்சர்

(10) சுருக்கெழுத்து-தட்டச்சர்

11634.00

10174.00

8958.00

8715.00

8472.00

8594.00

8715.0010 பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை

ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு) (ரூ.காசு)

(1)

(2)

(11) துணையாள்

7498.00

(12) விற்பனையாளர்

(13) அலுவலகப் பையன்/ஏவலாள்

7258.00

(14) காவலாளி

இ. பிளாஸ்டிக் தயாரிப்பில் வேலைவாய்ப்பு:&

I. பயிற்சி பெறாதோர்:

(1) இயக்குபவர்

7498.00

(2) உதவியாளர்

(3) பணி முடிவாக்குபவர்

7258.00

(4) சிப்பமாக்குபவர் அல்லது அனுப்புகை உதவியாளர்

II. ஓரளவு பயிற்சி பெற்றோர்:

(1) இயக்குபவர்

(2) பட்டறை இயக்குபவர்

(3) இயந்திர உதவியாளர்

(4) கடைசலாள்

(5) அச்சிடுபவர்

(6) பற்றவைப்பவர்

7743.00

(7) ஒருங்கிணைப்பவர்

(8) வெட்டுபவர்

(9) இயந்திரம் இயக்குபவர்

(10) தையற்காரர்

(11) ஆய்வுக்கூட உதவியாளர்

III. பயிற்சி பெற்றோர்:

(1) இயக்குபவர்

(2) அமைப்பவர் மற்றும் இயக்குபவர்

8229.00

(3) அச்சு வார்ப்பவர்

(4) மின் கம்மியர்

(5) அச்சு தயாரிப்பவர்

IV. உயரளவு பயிற்சி பெற்றோர்:-

(1) முதலாள்

9444.00

(2) மேற்பார்வையாளர்

V. பொதுவான வகையினர்:

(1) மேலாளர்

11634.00

(2) உதவி மேலாளர்

10174.00

(3) கணக்காளர்

8958.00

(4) கணினி நிரல் தயாரிப்பவர்

8715.00

(5) பண்டகக் காப்பாளர் அல்லது கிடங்குக்காப்பாளர்

(6) முதுநிலை உதவியாளர்11

பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை

ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு) (ரூ.காசு)

(1)

(2)

(7) கணக்கு உதவியாளர்

8472.00

(8) எழுத்தர் அல்லது அலுவலக உதவியாள்

(9) வரவேற்பாளர்

(10) தட்டச்சர்

8594.00

(11) சுருக்கெழுத்து-தட்டச்சர்

8715.00

(12) துணையாள்

7498.00

(13) விற்பனையாளர்

(14) அலுவலகப் பையன்/ஏவலாள்

7258.00

(15) காவலாளி

விளக்கம்:- (1) அகவிலைப்படி:-- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது 2001 ஆம் ஆண்டில் = 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியாக மாதமொன்றுக்கு ரூ. 45.00 (ரூபாய் நாற்பத்தைந்து மட்டும்) கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில்) விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து இந்த திருத்தம் செயலுக்கு வரும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு இந்த அறிவிக்கை தமி்ழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும் போது, ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) நாள் ஊதிய வீதத்தைக் கணக்கிடுவதற்கு, மாதந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள் இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும், அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (2ப) எண். 43, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 10 ஜூ்ன் 2022.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 21-03-2017 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் பாகம் II, பிரிவு - 2இல் 7 மற்றும் 8ஆம் பக்கங்களில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா/184 (g-4)/2017ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் இரசாயன உரத் தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

12

2. இந்த அறிவிக்கை தமி்ழ்நாடு அரசிதழில் வெளியான நாளன்றும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

இரசாயன உரத் தொழிற்சாலையில் (Chemical Fertilizer Industries) வேலைவாய்ப்பு.

பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை

ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு) (ரூ. பை)

(1) (2)

1. நிருவாகப் பணியாளர்கள்:

(1) மேலாளர்

9022.00

(2) எழுத்தர்/தட்டச்சர்/கணக்காளர்

7600.00

(3) ஓட்டுநர்/பண்டகக் காப்பாளர்

7395.00

(4) அலுவலகப் பையன் 6990.00

2. தொழிலாளர்கள் வகை:

8514.00

(1) உயரளவு பயிற்சி பெற்றோா்: தொழில்நுட்ப மேற்பார்வையாளர்/வேதியியலர்

7803.00

(2) பயிற்சி பெற்றோர்: இயக்குபவர்/தொழில்நுட்பவியலர்/மின்னியலர் பொருத்துநர்

7394.00

(3) பயிற்சி பெறாதோா்: பொதுப் பணியாளர்கள்/உதவியாளர்/நிரப்புனர்

விளக்கங்கள்: (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்டவாறான குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன், பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர, நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு 43.40/- ரூபாய் (நாற்பத்து மூன்று ரூபாய் நாற்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள் இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிெலல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

(5) இரசாயன உரத் தொழிற்சாலை வேலைவாய்ப்பில் பாதுகாப்புப் பணிகளைச் சேர்ந்த வகையினருக்கு, பாதுகாப்புக் காவலர்களுக்கான வேலைவாய்ப்பில் நிர்ணயிக்கப்பட்ட/திருத்தியமைக்கப்பட்ட குறைந்தளவு ஊதியங்கள் பொருந்தும்.

[அரசாணை (2ப) எண். 46, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 10 ஜூன் 2022.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 07-03-2018ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு-2 இல் 252 மற்றும் 253 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா/215/2018 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசித்தப் பினனர், தமிழ்நாடு மாநிலத்தில் கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அரிசி ஆலை, மாவு ஆலை அல்லது பருப்பு ஆலையில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்கக் குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த அட்டவணையின் (3) நெடும்பத்திக்கு நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிவிக்கை தமி்ழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளன்றும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

13

விவர அட்டவணை

யாதொரு அரிசி ஆலை, மாவு ஆலை அல்லது பருப்பு ஆலையில் வேலைவாய்ப்பு

தொடர் எண் தொழிலாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( நாளொன்றுக்கு) ( ரூ . காசு.)
( 1 ) ( 2 ) ( 3 )
1 ஹமாலிஸ் (மூட்டை சுமந்து செல்பவர்கள்) 270.50
2 மூட்டையை எடையிடும் கட்டா மஸ்தூர் 267.00
3 மூட்டைகள் தைப்பவர்கள் 267.00
4 உமி சுமந்து செல்பவர்கள் 261.00
5 பலவகைத் தொழிலாளர்கள் உட்பட மஸ்தூர்கள் 261.00
6 அரிசி சுமந்து செல்பவர்கள் 261.00
7 பொதி (இ்ஞ்சின்) ஓட்டுநர் 279.00
8 மின்கம்பியர் 279.00
9 தீயணைப்பவர் 262.00
10 பொருத்துநர் 267.00
11 உமிநீக்குபவர் 262.00
12 மேலாட்கள் (Maistries) 270.50
13 இயந்திரக்கம்மியர் 270.50
14 எண்ணெய் இடுபவர்கள் 261.00
15 நெல் கொதிகலன் பணியாளர் 267.00
16 நெல் இயந்திர ஓட்டுநர்கள் 261.00
17 நெல் அரைவையாளர்கள் 261.00
18 பெருக்குபவர்கள் 261.00
19 தோடு நீக்குபவர் 261.00
20 புடைப்பவர்கள் 261.00
21 நெல் ஊறவைப்பவர்கள் 261.00
22 நீர் எடுத்துச்செல்பவர்கள் 261.00
23 காவலாள் 261.00
24 அரிசியை மெருகேற்றும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள மஸ்தூர்கள் 261.00
25 அரிசியை அளப்பவர் 262.00
26 தானியம் அரைப்பதற்கு பணியமர்த்தப்பட்டுள்ள மஸ்தூர் 261.00
27 பருப்பு உற்பத்தியாளர்கள் 261.00
28 சுமைதூக்குபவர் 261.00
29 ஏவலாட்கள் 261.00
30 தச்சர்கள் 267.00
31 வறுகடலைத் தொழிலாளர்கள் 270.50
32 எழுத்தர் 7632.00 திங்களொன்றுக்கு
33 துணையாள் 7363.00 திங்களொன்றுக்கு

விளக்கங்கள்: (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், நாளொன்றுக்கு ரூ. 1.60 (ஒரு ரூபாய் அறுபது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

14

(ii) அகவிலைப்படியானது, முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில்) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படியின் முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) (i) நாட்கூலி ஊதிய வீதங்களிலும் அகவிலைப்படியிலும் விடுமுறை ஊதியங்களும் அடங்கும்.

(ii) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதிய வீதத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(iii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் தற்போது வழங்கப்பட்டு வரும் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (2ப) எண். 49, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 10 ஜூன் 2022.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 09-03-2016 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-II, பிரிவு -2 இல் 171 மற்றும் 172 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/தொ.வே/186/2016 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் ஆலோசனைக் குழுவுடன் கலந்தோசித்தபின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், காளான் வளர்ப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

(2) இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

காளான் வளர்ப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள்

தொடர் எண்

குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு)

(1) (2)

(3)

மண்டலம்-1 (ரூ. காசு)

மண்டலம்-2 (ரூ. காசு)

மண்டலம்-3 (ரூ. காசு) வகைப்பாடு எண். 1

மேற்பார்வையாளர்கள் 11678.00 11596.00 11514.00

வகைப்பாடு எண். 2

(1) கணக்காளர்

(2) மின்கம்மியர்

10041.00 9959.00 9878.00 (3) போப்காட் (Bobcat) இயக்குபவர்கள்

(4) வளர்ப்பவர்கள்

}

வகைப்பாடு எண். 3

(1) ஓட்டுநர்கள்

(2) ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்

8895.00 8814.00 8732.00 (3) பயிற்சி பெற்ற பணியாளர்கள்

வகைப்பாடு எண். 4

(1) பயிற்சி பெறாத பணியாளர்கள்

6849.00 6654.00 6572.00 (2) காவலாள்

} }15 குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (நாளொன்றுக்கு)

தொடர் எண்.

பணியின் வகைகள் மற்றும் பணியாளர்களின் வகைப்பாடு

(ரூ.காசு)

(1) (2)

(3)

(1) அடுக்கு அமைக்கும் தொழிலாளர்கள்

(டர்னிங்-I, டர்னிங்-II, டர்னிங்-III)

(2) பங்கர் இயக்குதல்

(பங்கர்-I, பங்கர்-II, பங்கர்-III)

(3) காளான் கருவிழையைக் கலக்குதல்

(4) பிளஸ்சிங் (Flussing) செயல்முறை

(5) பெட்டியில் அடைத்தல்

(6) பறித்தல்

253.00

(7) சிப்பம் செய்தல்

(8) நீர்ப் பாய்ச்சுதல்

(9) நிரப்புதல்

(10) ஏனைய பொதுவான தொழிலாளர்கள்

(மேற்சொன்ன யாதொரு வகைப்பாட்டின் கீழும் இடம்பெறாத தொழிலாளர்கள்)

}

விளக்கங்கள்: (1) அகவிலைப்படி (i) அகவிலைப்படியானது 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகளாகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் மாதமொன்றுக்கு ரூ 40.80 (நாற்பது ரூபாய் எண்பது காசு மட்டும்) கூடுதலாக அகவிலைப்படியாக வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அகவிலைப்படியின் முதல் கணக்கீடு. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) மண்டலங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.

(i) மண்டலம்-1- அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளைக் கொண்டிருக்கும்.

(ii) மண்டலம்-2- அனைத்து நகரியங்கள், மூன்றாம் தரநிலை நகராட்சிகள் மற்றும் பாளையங்கள் (படைவீரர் குடியிருப்புகள்) ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும்.

(iii) மண்டலம் 3- மேலே குறிப்பிடப்பட்டுள்ள மண்டலம்-1, மண்டலம்-2, பகுதிகளின் கீழ் வராத பிற பகுதிகள் இதில் அடங்கும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிட, மாதாந்திர ஊதிய வீதங்களை 26ஆல் வகுக்க வேண்டும்.

(5) மாதாந்திர ஊதிய வீதங்களைக் கணக்கிட நாள் ஊதிய வீதங்களை 30ஆல் பெருக்க வேண்டும்.

(6) மொத்த ஊதியத் தொகுப்பானது, (அதாவது அடிப்படை ஊதியங்கள், அகவிலைப்படி) இந்த அறிவிக்கைக்கு இணக்க செயல்நோக்கத்திற்கான, அளவுகோலாக இருக்கும்.

(7) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழஙகப்படவேண்டும்.

இரா. கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், மொ.பெ (மு.கூ.பொ.)

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 20 July 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-07-20.Ordinary_29_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2022-07-20.Ordinary_29_Part-II_Section-2-T-Sup.